- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
தாரா செல்லவேண்டிய பிலைட்டில் இருந்து இறங்கியவள் நேராக அவள் அம்மா, அப்பா இருக்கும் எமெர்ஜென்சி அறையை நோக்கி சென்றவள் அங்கே குமரனும், மல்லியும் ஒரு சேரில் அமர்ந்து இருக்க... ஏர்போர்ட்டில் இருக்கும் போலீஸ் ஆட்கள் சுற்றி வளைத்து அவர்களை கைதி போல வைத்து இருந்தனர்.
அவர்களிடம் வேகமாக வந்த தாரா "அப்பா... உங்களுக்கு ஒன்னும் ஆகளையே... ஏன் இவங்க எல்லாம் உங்களை இப்படி உட்கார வெச்சிருக்காங்க " என்றாள் பதற்றமாக .
"தாரா நீ பதற்றப்பட வேண்டாம் . அவங்களுக்கு எதுவும் ஆகாது " என்று சொன்னபடி அங்கே தன் கார்ட்ஸ்கள் புடை சூழ லோகி வந்தான் .
அவனை அங்கு எதிர்பார்க்காத தாரா "லோகி !... நீயா! நீ... எப்போ... " என்று பேசமுடியாமல் அவனை பார்த்தாள் தாரா .
"ஏன் தாரா நீதானே உன்னை வழியனுப்ப வர சொன்னே... இப்போ என்னை பார்த்து ஏன் அதிர்ச்சி ஆகுற .." என்றான் லோகி மிக சாதாரணமாக .
"இல்ல லோகி நான் உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு தான் இருந்தேன் . கடைசி வர நீ வரலன்னு தான் நான் வேற வழியே இல்லாம கிளம்பி போனேன் '' என்றாள் தாரா வருத்தமாக .
"சாரி தாரா ஸ்ருதி ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் கிளம்பிட்டு இருந்தா . அவளை வழி அனுப்பிவெச்சிட்டு வர நேரம் ஆகிடுச்சு " என்றவன் .
"சாரி நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் . நீ சொன்ன விஷயத்தை முழுசா ஏத்துக்க என்னால முடியல... ஆனா உன் வைத்துள்ள வளர்ற நம்ம குழந்தைக்கு நான் தானே பொறுப்பு அதனால தான் நான் இங்கே வந்தேன் " என்றான் .
லோகி தாரா வயிற்றில் வளரும் குழந்தையை நம் குழந்தை என்று சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை . இவ்வளவு சீக்கிரத்தில் லோகி தன் குழந்தையை ஏற்றுக்கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை . அதிர்ச்சிமாறாமல் தாரா அவனையே பார்த்துக்கொண்டு இருக்க...
"என்ன தாரா அப்படி பாக்குற... என்ன ஆச்சு ?'" என்றான் அக்கறையாக .
லோகி தாராவிடம் பேசியதும் , அவளிடம் அவன் காட்டும் அக்கறையையும் பார்த்து சந்தோஷமான மல்லியும், குமரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் லோகியிடம் வந்தனர் .
அவர்களை பார்த்த லோகி "சாரி அங்கிள் உங்க பொண்ணை இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கொண்டு வந்து நான் நிறுத்தி இருக்கிறேன் . என்னை மன்னிச்சிடுங்க " என்று அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.
"ஐயோ ! தம்பி என்ன இதெல்லாம் . நீங்க என் பொண்ணு சொன்னதை கேட்டு அவ வயித்துல வளர்ற உங்க பிள்ளையையம், என் பொண்ணையும் வேணாம்னு ஒதுக்கிடுவீங்களோன்னு நினைச்சேன் . அதனால தான் அவளை வழியனுப்ப நீங்க வரலையின்னு நினைச்சோம் . ஆனா இப்படி என் பொண்ணை பார்க்க நீங்களே நேரில் வருவீங்கன்னு நாங்க நினைச்சு கூட பார்க்கலை " என்றார் குமரன்.
"அங்கிள் தப்பு என் மேல இருக்கு... நான் கொஞ்சம் கவனம் இல்லாம இருந்ததுனால தாராவை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டேன் . இதுக்கு நான் கண்டிப்பா பொறுப்பெடுத்து தான் ஆகணும் " என்றவன் .
"அங்கிள் இனி நாம எதையும் இங்கே பேச வேண்டாம் . எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாமா ?" என்றான் தன்மையாக .
"சரி தம்பி நீங்க சொல்றதும் சரிதான் . வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் . அங்கே போய் மற்றதை எல்லாம் பேசிக்கலாம் " என்றவர் . "மல்லி தாராவை அழைச்சிட்டு வா . நம்ம வீட்டுக்கு போகலாம் " என்றார்.
"அங்கிள் ஒரு நிமிஷம் இப்போ எதுக்காக உங்க வீட்டுக்கு போகணும் " என்றான் லோகி .
"என்ன தம்பி இது புரியாம கேட்குறீங்க . நீங்க எவ்ளோ பெரிய பதவியில் இருக்கீங்க... இப்படி தாரா வயித்துல உங்க வாரிசு நீங்க கல்யாணம் செய்துக்காம வளர்ற விஷயம் யாருக்கும் தெரிஞ்சா அப்பறோம் உங்களுக்கும் உங்க பதவிக்கும் பிரச்சனை ஆகிடும் . அதனால தான் எங்க வீட்டுக்கு போகலாம்னு சொன்னேன் " என்றார் குமரன் .
"அங்கிள் அதுக்காக என் குழந்தையை சுமக்குற தாராவை யாரோ மாதிரி உங்க வீட்டுல வெச்சு பார்த்துக்குறது நல்லா இருக்காது . இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தாராவை நான் பக்கத்துல இருந்து கவனிச்சுக்கணும்னு நினைக்குறேன் . வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் " என்றவன் . தாராவை பார்த்து " வா போகலாம் " என்று முன்னே நடக்க...
இத்தனை நாள் தான் கண்ட கனவு இன்று நனவானதை நினைத்து சந்தோஷமடைந்தவள் அவள் பெற்றோரை பார்த்து புன்னகைத்தபடியே அவள் பெற்றோருடன் லோகியின் வீட்டிற்கு குதர்க்கம் விளைவிக்க கிளம்பினாள்.
…
இங்கே சென்னையில் இருந்து காலை கிளம்பி இருந்த ஸ்ருதி இரவு தான் சென்று சேர்ந்திருந்தாள் தன் குழுவோடு . இது பனிக்காலம் என்பதால் முன்பைவிட கொடைக்கானலில் குளிர் அதிகமாக இருந்தது .
நடுங்கிக்கொண்டே காரில் இருந்து இறங்கிய ஸ்ருதி தன்னோடு வந்த சித்துவிடம் " ரொம்ப குளிருது இல்ல சித்து " என்றபடி அவர்கள் தாங்க இருந்த ஹோட்டலுக்கு நடந்து சென்றாள் .
"ஆமா ஸ்ருதி ரொம்ப குளிரடிக்குது . இந்த குளிருக்கு ஒரு பெக் போட்டா நல்லா இருக்கும் இல்ல... " என்றான் அவனை பார்த்து கண்ணடித்து .
"டேய் உனக்கு ரொம்ப கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு ஒரு அண்ணிகிட்டே பேசுற மாதிரியா நீ பேசுற... என்னவோ நான் உன் கேர்ள் பிரென்ட் மாதிரி இல்ல பேசுற.. " என்றாள் அவன் தோளில் ஓங்கி அடித்து .
"ஏய் ஸ்ருதி நீ என்னோட கேர்ள் பிரென்ட் தான் . அப்போ நான் உன்கிட்டே இப்படி எல்லாம் பேசலாம் தானே..." என்றான் சித்து சிரித்துக்கொண்டே ...
"என்ன டா சொன்னே... நான் உனக்கு கேர்ள் பிரெண்டா! என்னை பார்த்து எப்படி நீ அப்டி ஒரு வார்த்தையை சொல்லலாம் . உன் அண்ணன் மட்டும் நீ பேசினதை கேட்டான்னு வை உன்னை இங்கையே குழி தோண்டி புதைச்சிடுவான் . உன்மனசுல என்னை இப்படி நினைச்சு தான் இவ்ளோ நாள் பழகிட்டு இருந்தியா ?" என்று சித்துவிடம் கோபமாக அவனை அடிக்க சென்றாள் .
"ஏய் ஸ்ருதி... எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற... நீ நினைக்குற அர்த்தத்தில் நான் உன்னை சொல்லல... நீ எனக்கு ஒரு நல்ல பெண் தோழி அந்த அர்த்தத்துல தான் நான் உன்னை என்னோட பெண் தோழின்னு சொன்னேன் " என்றான் .
அவனை அடிக்க கை ஓங்கியவள் "ஓ... நீ அப்படி நினைச்சு சொன்னியா ... நான் கூட ஒரு நிமிஷம் உன்னை தப்பா நினைச்சுட்டேன் டா சாரி... " என்று தன் காதை பிடித்துக்கொண்டு சித்துவிடம் மன்னிப்பு கேட்டாள் .
"ம்ஹும்... என்னை பார்த்தா அவ்ளோ மோசமானவனாவா உனக்கு தெரியுது . என்னை பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது அவ்ளோதானா " என்று ஸ்ருதியின் மீது கோபம் கொண்டவன் அவளிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல..
"சித்து... சித்து... சித்து... ப்ளீஸ் .. என்னை மன்னிச்சிருடா . நான் ஏதோ ஒரு அவசரத்துல உன்னை அப்படி பேசிட்டேன் . ப்ளீஸ் டா... சாரி " என்று சித்துவிடம் கெஞ்சிக்கொண்டே அவன் பின்னால் ஹோட்டலுக்குள் ஓடினாள் ஸ்ருதி .
அங்கிருந்த லிப்ட்டில் எறியவன் லிபிட்டிற்கு வெளியே அவன் பின்னால் வந்த ஸ்ருத்தியை பார்த்ததும் மூட இருந்த லிப்ட் பட்டனை அழுத்தி பிடித்து கதவை மூடவிடாமல் செய்தவன் "போ... நீ எதுவும் பேசவேணாம் என்கிட்டே.. உன்னை நான் எந்த இடத்துல வெச்சிருக்கேன் . ஆனா நீ என்னை இவ்ளோ சீப்பா நினைச்சுட்டே இல்ல... என்கூட பேசாத " என்று கதவை மூட பட்டனை அழுத்தினான்.
அதை பார்த்த ஸ்ருதி வேகமாக லிப்ட் கதவு மூடுவதற்குள் உள்ளே ஏறியவள் "சித்து ப்ளீஸ் டா ... நான் தான் சாரி சொல்லிட்டேனே " என்று அவனிடம் கெஞ்சினாள்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது லிப்ட் கதவு மூடிக்கொள்ள...
இவர்கள் இருவரும் ஹோட்டலுக்கு வந்ததில் இருந்து பேசிக்கொண்டும் , கெஞ்சிக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும் பேசுவதை எல்லாம் அவர்களோடு வந்த படக்குழுவினர்களும், வருணும், அந்த ஹோட்டலில் வேலை செய்பவர்களும், அங்கு இருந்த சிலரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.
"என்ன அக்கா இது இந்த பொண்ணு அவங்க புருசனோட தம்பி கூட இவ்ளோ கிலோஸ்ஸா பேசிட்டு போகுது , ஷூட்டிங் ஆரம்பிச்ச அன்னிக்கு அமைதியா இருந்துச்சு.. ஆனா அதுக்கு அப்பறோம் நம்ம சித்து சார்கிட்டே பேசுறதே சரி இல்லையே ... அவ சிரிச்சு பேசி குழையுறதும் , அவரை தொட்டு தொட்டு பேசுறத பார்த்தா எனக்கு அப்படியே பத்திகிட்டு வருது " என்றாள் .
"ஏன் டி உனக்கு கண்ணுல எதுவும் கோளாறா என்ன... அவங்க பழகுறதை எல்லாம் பார்த்தா அப்படியா தெரியுது . இப்படி எல்லாம் பேசிகிட்டு சுத்திகிட்டு இருக்காதா . யாராவது காதுல விழுந்துச்சுன்னு வை அப்பறோம் அவ்ளோதான் . ஏதோ நமக்கு கிடைக்குற கொஞ்ச நஞ்ச வேலையும் கிடைக்காம போய்டும் " என்றார் மற்றொரு பெண் .
"அட போக்கா.. என்னவோ நான் மட்டும் தான் இவங்களை பத்தி தப்பா பேசுற மாதிரி சொல்ற... இவங்களை ஒண்ணா பாக்குற எல்லாருமே அவங்க ரெண்டு பேரையும் பத்தி பேசிட்டு தான் இருக்காங்க. எனக்கு மட்டும் இல்ல இவங்களை பாக்குற எல்லாருக்கும் நான் உன்கிட்டே என்ன சொன்னேனோ அப்படி தான் தோணும் " என்றாள் .
"ஏய் அவங்க என்னவோ நினைச்சிட்டு போகட்டும் . ஆனா அவங்க ரெண்டு பேரும் பழகுறதை பார்த்தா எனக்கு அபப்டி எதுவும் தோணல.." என்றார்.
"என்ன அக்கா நீ ... உனக்கு மட்டும் தான் இப்படி தோணுது " என்று அந்த பொண்ணு சலித்துக்கொண்டாள்.
"நீ பேசாம வா டி... வருண் சார் நம்மளையே குறுகுறுன்னு பாக்குறாரு பாரு அதுவும் சொல்லப்போறாரு வா " என்று அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு அங்கிருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார் .
இங்கே லிப்ட் சென்று நின்றதும் அதில் இருந்து வெளியே வந்த சித்துவிடம் இன்னமும் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் .
"சித்து ப்ளீஸ் டா ... நான் தான் இவ்ளோ தடவை உன்கிட்டே சாரி கேக்குறேனே . கொஞ்சம் இறங்கிவாயேன் டா.." என்று சென்றுகொண்டு இருந்தவனின் கையை பிடித்து நிறுத்த முற்பட.. அவள் திடீர் என்று சித்துவை பிடித்து நிறுத்தவும் தடுமாறியவன் கீழே விழப்போக... பின்பு சுதாரித்து நின்றவன் .
"ஏய் லூசு இப்படியா என்னை பிடிச்சு இழுப்ப... லூசு...லூசு... " என்று அவளை திட்டியவன் "விடு என் கையை " என்று ஸ்ருதியை பிடித்து தள்ள... அவள் தடுமாறி தரையில் பொத்தென்று கீழே விழுந்தாள் .
அதை பார்த்ததும் சித்து இவ்வளவு நேரம் கோபித்துக்கொண்டு இருந்தவன் சத்தம் போட்டு சிரித்தான் .
தன் உடையை சரிசெய்த ஸ்ருதி " டேய் கையை கொடுடா... கீழே விழுந்தவளை தூக்கி விடணும்னு தோணுதா உனக்கு . நான் விழுந்ததை பார்த்து சிரிச்சிட்டு நிக்குற.. உன்னை என்னோட பிரெண்டுன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு " என்று அவனை திட்டிக்கொண்டே கையை நீட்டினாள்.
"உன்னோட பிரெண்டா இருக்கிறதுனால தான் நீ விழுந்ததும் உரிமையை கிண்ட்ல் பண்ணி சிரிக்க தோணுது " என்று அவளை நோக்கி கையை நீட்டினான்.
அவனை முறைத்துக்கொண்டே சித்துவின் கையை பிடித்து எழுந்தவள் அவன் கையை பிடித்து நறுக்கென்று கிள்ளிவைத்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிச்சென்று அவள் அறைக்கதவை திறந்து கொண்டு இருந்த புதிதாக அப்பாயிண்ட் செய்திருந்த அஞ்சலி தாண்டி உள்ளே சென்றாள் .
"ஷ்... ஆ.... " என்று அவள் கிள்ளிய இடத்தை தேய்த்துவிட்டுக்கொண்டே ஸ்ருதி சென்ற திசையை பார்க்க...
அறைக்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி "நான் கீழே விழுந்தா நீ கிண்டல் பண்ணி சிரிச்சே இல்ல.. அதான் " என்று நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காட்டியவள் "ஏய் நீ ஏன் இன்னமும் இங்கே நின்னுட்டு இருக்க... உள்ளே வா... " என்று அஞ்சலியை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் .
அவள் பண்ணிய சேட்டையை பார்த்து சிரித்தவன் "இவளை திருத்தவே முடியாது . எப்படி தான் இவளை என் அண்ணா லவ் பண்ணி கல்யாணம் பண்ணினானோ தெரியலை " என்று புலம்பிக்கொண்டே தன் ரூமிற்குள் சென்றான்

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 28
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.