Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 21

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 21

by Layas Tamil Novel
186 views

அயோக்கியன் 21

“ஏங்க புள்ள வந்தது வராதுமா அவனை ஏன் டென்ஷன் பண்ணிட்டு இருக்கீங்க. முதல்ல அவங்க எல்லாரும் போய் ரெஸ்ட் எடுக்கட்டும்.காலையில் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்றார் செல்வி இடையில் புகுந்து.

 “இரு செல்வி நான் நினைச்சத என் மகன்கிட்ட சொல்லிட்டா நான் நிம்மதியா போய் தூங்குவேன். அதுக்காகத்தான் இவ்வளவு நேரம் நான் முழிச்சிட்டு இருந்தது. நீ என்னடான்னா பசங்க வந்ததும் தூங்கட்டும்னு சொல்ற” என்றார் சிவராஜன்.

“என்ன ஐயா வந்ததிலிருந்து முக்கியமான விஷயம் பேசணும்.. முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு இருக்காரே ஒழிய. அது என்ன விஷயம்னு சொல்ல மாட்டேங்கிறாரே” என்று யோசித்தபடி  லக்கேஜ்களை உள்ளே கொண்டு வந்து வைத்துவிட்டு அங்கு நடப்பதையும் நோட்டமிட்டபடி இருந்திருந்தான் மாரிஸ் .

” அம்மா விடுங்க எப்படியும் எங்களுக்கு படுத்ததும் தூக்கம் வராது. அப்பா என்னதான் சொல்றாருன்னு கேட்டுட்டு அப்புறம் போறேனே” என்றான் ராக்கியும்.

“அப்பாவுக்கு தகுந்த புள்ள, சரியா தான் ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து இருக்கீங்க” என்று சிரித்தவர். ஏங்க சீக்கிரம்  சொல்லுங்களேன்” என்று அவரும் ஆர்வமாக கேட்க..

அங்கிருந்த அனைவரும் சிவராஜன் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலாக அவரையே பார்த்தனர்.

 அவர்களை எல்லாம் ஒரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு ஒரு நிமிஷம் இருங்க என்றவர் தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்து எல்லாம் ரெடியா என்றார்.

மறுமுனையில் ரெடி என்ற வார்த்தை வந்ததும். தான் அமர்ந்திருந்த சோபாவை விட்டு மெல்ல எழுந்தார்.

 அவர் இப்போதெல்லாம் தானாக எழுந்து எங்கும் செல்வதில்லை யாருடைய துணையாவது அவருக்கு தேவைப்படுகிறது பிரச்சாரத்தின் போது அவருக்கு ஏற்பட்ட உடல் பிரச்சனையும் அதற்கு ஒரு காரணம்.

அவர் எழுந்ததும் பதறிக்கொண்டு வேலுவும் ராக்கியும் சிவராஜனை நோக்கிச் செல்ல..

ராகவ் சென்று “மாமா இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா எழுதிருக்கீங்க. எதுவா இருந்தாலும் சோபாலயே உக்காந்து பேசுங்க ஸ்டெயின் பண்ணிக்காதீங்க” என்று அவனும் தன் பங்குக்கு அக்கறை காட்டினான் அவரிடம்..

அவர்கள் மூவரையும் நிமிர்ந்து பார்த்த சிவராஜன் “நீங்க மூணு பேரும் என்னோட தூண் மாதிரி, என்னோட அஸ்திவாரமே நீங்கதான். நீங்க எப்பவும் இதே போல ஒத்துமையா இணை பிரியாமல் இருக்கணும். அதான் என்னோட ஆசை” என்றார்.

” சரிங்க மாமா நீங்க சொன்ன மாதிரியே நாங்க இதே போல உன்னை ஒத்துமையா தான் இருப்போம் நீங்களும் அதைப் பார்க்கத்தான் போறீங்க” என்றான் வேலு.

அவரும் சிரித்துக்கொண்டே ராக்கியின் தோளில் கையை போட…

அவர் உயர்த்துக்கு குனிந்து வந்த ராக்கி “என்ன ஆச்சு? ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க” என்று கேட்டான்.

“சொல்றேன் வாப்பா” என்று அவர் மெல்ல நடக்க வேலு அவரை மற்றொரு பக்கம் கைத் தாங்களாக பிடித்துக் கொண்டான். 

அவர்கள் வீட்டு கதவை தாண்டும் வரை அமைதியாக இருந்தது. சிவராஜன் வாசலை விட்டு ராக்கி வேலுடன் வெளியே வர படவென நட்சத்திரங்கள் மின்னுவதுபோல வெளிச்சம் பளிச் பளிச் என்று அவர்கள் மீது விழுந்து கொண்டே இருந்தது.

கண்களை குறுக்கிக் கொண்டு வெளிச்சத்தை தாண்டி பின்னே என்ன என்று பார்க்க நினைத்தான் ராக்கி.

ஆனால் அவனால் பார்க்கவே முடியவில்லை அந்த அளவுக்கு  வெளிச்சம் விடாமல் ஒளிர்ந்து கொண்டே இருந்தது. கண்களை குறுக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தவன் அங்கு பத்திரிகையாளர்கள் மொத்தமாக ஒன்று கூடி  நிற்பதை கண்டு புரியாமல் திரும்பி சிவராஜனை பார்த்தான் ராக்கி.

அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த அனைவருமே வெளியே வந்திருக்க.. அவர்களுக்கும் எதற்காக இந்த நள்ளிரவு வேளையில் இவ்வளவு பேர் அங்கு வந்திருக்கிறார்கள் என்று புரியாமல் பார்த்தனர்.

“என்னப்பா இது?” என கேட்டுக்கொண்டே ராக்கி அவரை வெளியே அழைத்து வந்தான்.

 “எல்லாம் நல்ல விஷயமா தான் பா” என்றவர் திரும்பிப் பார்க்க..

அங்கே சுறா ஓடி வந்தவன் “ஐயா நீங்க சொன்ன மாதிரி எல்லா பத்திரிகைக்காரர்களையும் வரச் சொல்லிட்டேன்” என்றான்.

அங்கே அவர் அமர போடப்பட்டு இருந்த சோபாவில் மெல்ல  அவரை அமர வைத்தனர்.

பின் அவருக்கு முன் இருந்த மைக்குகளை ஒரு முறை பார்த்தார். “எல்லாம் சரியா தானே இருக்கு” என்றார் சுறாவிடம்.

 “எல்லாம் சரியா இருக்குங்க ஐயா. நீங்க சொன்னது போலவே எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. நீங்க பேசினா மட்டும் போதும்” என்றான் அவனும் 

பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் பார்த்து லேசாக சிரித்தபடி ” உங்க எல்லாரையும் இந்த நேரத்துல தொந்தரவு பண்ணிட்டேன்.  ஒரு முக்கியமான முடிவெடுத்து இருக்கேன் அதை உடனே எல்லாருக்கும் தெரியப்படுத்தனும்னு தான் இந்த ஏற்பாடு” என்றார்.

“பரவாயில்ல சொல்லுங்கையா நீங்களே இந்த நேரத்துல எங்களை வர சொல்லி இருக்கீங்கன்னா ரொம்ப முக்கியமான விஷயமா தான் இருக்கும்” என்றார் ஒரு மூத்த பத்திரிகையாளர் 

 என்ன நடக்கிறது என்று மற்றவர்களை போலவே குழப்பத்தோடு பார்த்தபடி நின்று இருந்தால் ரதி அப்போது அவள் மொபைல் வைப்ரேட் ஆனது கையில் வைத்திருந்த மொபைலை பார்க்க கமலி தான் அவளுக்கு அழைத்திருந்தாள்.

 அவர்களுடைய ஆஃபீஸிலிருந்து பத்திரிக்கை ஆபீஸிலிருந்தும் இங்கு வந்திருப்பார்கள் என்று ரதிக்கும் தெரியும் சுற்றிலும் அவளை தேடி அப்படியே மொபைலை ஆன் செய்து காதில் வைத்தவள் சொல்லுடி என்றாள்.

 எப்படி ஹனிமூன் முடிச்சுட்டு வந்த என்கிட்ட சொல்லவே இல்ல என்றால் கமலி 

 இப்ப அது ரொம்ப முக்கியமா நீ இங்கதான இருக்க எங்க உன்ன காணோமே என்று சுற்றிலும் தேடினால் 

 ஏய் உனக்கு லெப்ட் இல்ல பார்ட்டி நான் தான் முதல்ல உட்கார்ந்திருக்கிறேன் கண்ணு தெரியலையா என்று சிரித்தால் கமலி 

 அவள் சொன்னதுசையை திரும்பிப் பார்க்க முன்வரிசையில் முதலாவது ஆளாக கையில் மைக் உடன் அமர்ந்திருந்தவளை பார்த்து சிரித்த ரதி என்னடி இதெல்லாம் எதுக்கு இவ்ளோ பேரை கூப்பிட்டு இருக்காங்க எதுக்கு இந்த பிரஸ் மீட் என்றால் ரதி.

 அதைக் கேட்க தான் நானே உனக்கு கால் பண்ணினேன். நீ என்னடி எதுவும் தெரியாத மாதிரி என்கிட்ட கேக்குற அப்ப உனக்கு விஷயம் என்னன்னு தெரியாதா? என்றால் 

 சத்தியமா ஒரு ஐடியாவும் இல்லடி எங்க எல்லாருக்குமே இதே நிலைமைதான் மாமா என்ன விஷயம்னு எங்க யார்கிட்டயும் சொல்லாம இப்போ வரைக்கும் சஸ்பென்சாவே வெச்சிருக்கார். உனக்கு ஏதாவது க்ளுவாது தெரியுமா என்றால் ரதி 

 உனக்கே தெரியவில்லை என்றால் எனக்கு எப்படி டி வாய்ப்பே இல்லை என்றவள் சரி வெயிட் பண்ணு சார் அன்னான்ச் பண்ண போறாருன்னு நினைக்கிறேன் அதுக்கு அப்புறம் நான் உனக்கு கால் பண்றேன் என்று போனை கட் செய்தால் அவள் கட் செய்த சிறிது நேரத்தில் சிவராஜன் பேச ஆரம்பித்தார்.

“என்னோட உடல்நிலை முன்ன மாதிரி ஒரே போல இருக்கிறது இல்ல.. அதனால என்னோட கட்சி பொறுப்புகளை என்னால தொடர்ந்து பார்க்க முடியாது.  அதனால கட்சித் தலைவர் பொறுப்புல இருந்து நான் விலகிக்க போறேன். அதை சொல்ல தான் இந்த பிரஸ்மிட்ட ஏற்பாடு பண்ணி இருக்கேன்” என்றார்.

அதைக் கேட்டதுமே ராக்கி முதற்கொண்டு சிவராஜனின் குடும்பம் மொத்தமுமே அதிர்ச்சியானது. 

அவர்களைப் போலவே அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். முதல்வர் ஏன் இந்த திடீர் முடிவு எடுத்தார் என்று அனைவரும் அவரை கேள்வியாக பார்க்க…  இவர் அளிக்கும் பேட்டியை அந்த நள்ளிரவிலும் லைவில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் சிவராஜனின் இந்த அறிவிப்பில் சற்று அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தான் கொடுத்ரிருந்தது.

” ஐயா என்ன ஆச்சு? ஏன் இப்படி திடீர்னு முடிவு பண்ணிட்டீங்க உங்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது எங்களுக்கும் தெரியும் அதுக்காக இப்படி திடீர்னு முடிவு எடுக்கலாமா எலக்சன் வேற வரப்போகுது. இந்த நேரத்துல நீங்க இப்படி ஒரு முடிவை எடுத்தா அது எதிர்க்கட்சிக்கு சாதகமாக முடியுமே” என்றார் ஒருவர்.

“நீங்க சொல்றது வாஸ்து வந்தா இதையெல்லாம் யோசிக்காமையா நான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவேன்னு நீங்க நினைக்கிறீங்க” என்று சிரித்தார்.

அனைவரும் அவரையே பார்க்க…

“என்னோட இடத்திலிருந்து இந்த கட்சி பொறுப்பை எல்லாம் இனிமேல் என் மகன் ராக்கி தான்  பார்க்கப் போறான். அவன்கிட்ட என் கட்சியோட முழு பொறுப்பையும் ஒப்படைக்கலாம்னு நாம் முடிவு பண்ணிட்டேன்” என்றார்.

இந்த அறிவிப்பை யாரும் அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

 ராக்கி முதற்கொண்டு ஏற்கனவே அவர் பதவியில் இருந்து விலகுவதை கேட்டு அதிர்ச்சியில் இருக்க இப்போது இதுவும் அடுத்த இடியாக வந்து இறங்கியது என்ன ஆனது இவருக்கு என்று அனைவரும் யோசிக்க..

“பேசாம நான் முதலிலேயே வந்து இந்த ஆள்கிட்ட வேலைக்கு சேர்ந்து இருக்கலாம். கட்சியில் வேற ஏதாவது போஸ்டிங்காவது எனக்கு கிடைச்சிருக்கும். அந்த பரமசிவத்துக்கிட்ட இருந்து எந்த பிரயோஜனமும் எனக்கு இல்ல. இப்ப பாரு ரவுடியா சுத்திட்டு இருந்தாவனுக்கு எல்லாம்  கட்சித் தலைவர் பொறுப்பு” என்று சுறா நினைத்தபடி அங்கு அதிர்ச்சியில் இருந்து ராக்கி பார்த்தான் சற்று கடுப்பாக பார்த்தவன் “ம்ஹும்…  எல்லாம் நேரம். எனக்கு வாய்க்கால..” என்று பெருமூச்சு விட்டான்.

” சார் அப்போ அடுத்த முதல்வரா நீங்க ராக்கிய தான் நிக்க வைக்க போறீங்களா? முடிவு பண்ணிட்டீங்களா? ” என்றார் ஒருவர்.

 “என்ன சார் ஒரு கம்பெனியில தலைமை பொறுப்ப சாதாரணமா தூக்கிக் கொடுக்கிற மாதிரி இவ்வளவு பெரிய அரசியல் கட்சி பொறுப்பை மக்களை பாதுகாக்கிற அவங்களுக்காக சேவை செய்கிற ஒரு முக்கியமான பொறுப்பைத் தூக்கி கொடுக்கிறேன்னு சொல்றிங்க” என்றார் வேறொருவர்.

“ஏன் சார் உங்ககிட்ட தானே இத்தனை நாளா அடியால ரவுடியா வேலை செஞ்சுகிட்டு இருந்தார் ராக்கி. அப்பறோம் அவர்கிட்டே தூக்கி இவ்ளோ பெரிய பொறுப்பை கொடுக்கிறேன்னு சொல்றிங்க.. என்ன சார் வாரிசு அரசியல் பண்றீங்களா?  உங்க பையனுக்கு தூக்கி கட்சித் தலைவர் பொறுப்புல உக்கார வைக்க போறேன்னு சொல்றீங்க. ரௌடி கையில நாட்டையும், கட்சியியையும் தூக்கி கொடுக்கிறேன்னு சொல்றிங்க” என்றார் ஒருவர் நக்கலாக.

“அட அதான் சொல்லிட்டியே வாரிசு அரசியல்னு. அப்பறோம் என்ன இப்போ கட்சித் தலைவர் பதவி, அடுத்து 6 மாசத்துல எலெக்ஷன் வரப் போகுது.  அவர் கட்சி சார்புல இவரு மகனையே CM போஸ்டுக்கு கூட நிக்க வெக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு. படிக்காத அரசியல் கட்சித் தலைவர் பலர் வரிசையில இவர் பையனும் தலைவர் ஆகுறதுக்கும் வாய்ப்பு இருக்கு” என்றான் ஒருவன்.

இதையெல்லாம் கேட்கக் கேட்க ராக்கிக்கு கோபம் தலைக்கு ஏறியது. அங்கிருந்த அனைவரையும் கொல்லும் அத்திரத்துடன் ஏறிட்டான்.

அவன் பேச கையை உயர்த்த ராக்கியின் கையை பற்றிக்கொண்டார் சிவராஜன்.

அவரை குனிந்து பார்த்தவன் ” பாருங்க ஆளாளுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறாங்க இதெல்லாம் தேவையா எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் நான் எப்பவும் போல உங்க கூடவே இருக்கேன்” என்றான் ராக்கி.

” நீ அமைதியா இரு நான் பார்த்துக்கிறேன் என்று அவனை அமைதி படுத்தியவர். திரும்பி பத்திரிகையாளர்களை பார்த்து

 ” என்னோட கட்சித் தலைவர் பொறுப்ப என் மகன் ராக்கி தான் பார்க்கப் போறான் இதுக்கான வேலைகள் நடக்கப் போகுது, அதே போல கட்சி பொறுப்பு மொத்தத்தையும் என்னோட மருமகன் வேலு தான் பாத்துக்க போறார். இதுல யாருக்கும் என்ன ஆட்சேபனை இருந்தாலும் அதை நீங்க தாராளமா தெரிவிக்கலாம் நன்றி” என்று கை கூப்பியவர். மெல்ல எளிது உள்ளே செல்ல..

கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் அவர்களுக்கு தோன்றிய கேள்விகளை எல்லாம் கேட்க அது எதற்கும் பதில் சொல்லாமல்  உள்ளே சென்றுவிட்டார்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured