News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

 ஆன்லைன் 11,நீ கேட்டதை செய்யலாமா? வேணாமா?

by admin
1.2K views
A+A-
Reset

  ஆன்லைன் 11

“ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்திருக்கும். உள்ளே இருந்து சற்று சோர்வாக பரந்தாமன் வெளியே வந்தவரை மூவரும் சூழ்ந்து கொண்டு வெங்கடாச்சலத்தின் நிலை குறித்து கேட்டனர்.

“மீரா, நீங்க சீக்கிரம் அந்த ப்ரோகரைப் பார்த்து அந்த டோனரை அரேஞ் பண்றது தான் சரியா இருக்கும். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அவருக்கு ஆபரேஷன் பண்ணியாகணும் ” என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட..

“ரோஜா நீ இன்னிக்கு வீட்டுக்கு போக வேணாம் அம்மா கூடவே இரு. அப்பாவுக்கு அதுவும் பிரச்சனையின்னா அவங்க சொல்றதெல்லாம் அம்மாவுக்கு புரியாது நீ கூட இருந்து அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க அதுவும் அவசரம்னா எந்த நேரமா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு ” என்றாள்.

“சரி டி நான் இங்கையே இருக்கேன். ஆனா டாக்டர் அப்பாவுக்கு ஒரு வாரத்துல ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லறாரு , உன்னை வேற யாரையோ பார்க்க சொன்னாரே என்ன டி அது.. ” என்றாள் .

“ரோஜா, அது அப்பாவுக்கு கிட்னி கொடுக்க டோனர் கிடைச்சுட்டார் அவரை தான் போய் பார்க்க சொல்லிருக்கார் ” என்றவள் அவர்கள் பணம் கேட்கும் விபரம் மட்டும் சொல்லவில்லை.

“என்ன டி சொல்ற! அப்போ அப்பாவுக்கு சீக்கிரம் ஆபரேஷன் பண்ணிரலாமா? அப்போ அவருக்கு உடம்பு சீக்கிரம் குணமாகிருமா?” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டார் சுமதி.

அவர் முகத்தில் தெரிந்த நம்பிக்கையைப் பார்த்த மீராவுக்கு உண்மையை சொல்ல மனமில்லை. “ஆமாம்மா ஆபரேஷன் பண்ணிரலாம் ” என்றவள் “நான் அவரைப் போய் பார்த்துட்டு மத்த வேலையைப் பாக்குறேன். நீ தைரியமா இரு” என்று அவருக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தவள் பரந்தாமன் கொடுத்த ப்ரோகருக்கு போன் செய்தாள்.

இங்கே வழக்கமாக தன் ஐ பேடை ஆன் செய்துவிட்டு மீராவிற்காக முன்பே காத்திருக்க ஆரம்பித்தான் மாறன்.

“எங்க போனா இவ டைம் ஆச்சு , நேரத்துக்கு வரணும்னு இருக்கா அவளுக்கு ” என்று போதையில் புலம்பியவன் பொறுமை இல்லாமல் தான் இருந்த டார்க் ரூம் அறையைத் திறந்து கொண்டு வெளியே  வந்தான். முகத்தில் இருந்த மார்க்கை கழட்டிவிட்டு தன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் மீராவைக் காண..

அவ்ளோ மாறனுக்கு சமைத்துவைத்துவிட்டு தன் தாவணியால் ஈரமான கையை துடைத்துக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள். அவள் முகம் சோர்வோடும், நடையில் ஒரு தளர்ச்சியும் இருந்தது. அதைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன் “என்ன இன்னிக்கு ரொம்ப டல்லா இருக்கா? என்னனு கேப்போமா?” என்று நினைத்து படிகளில் இறங்கியவன் ‘ம்ஹும்.. அவ பிரச்சனை அவளுக்கு நமக்கு என்ன ” என்று நினைத்தவன் “ஏய்! நில்லு ” என்று மீராவை நிறுத்தி இருந்தான்.

அவன் குரலில் திடுக்கிட்டு நெஞ்சில் கை வைத்தவள் திரும்பி பார்க்க.. படிகளில் இறங்கி அவளை நோக்கி நடந்து வந்தான் மாறன்.

அவனைக் குழப்பாகப் பார்த்தவள் “சார்..” என்றாள்.

“எங்க போற.. என்னோட வேலை எல்லாம் நீ தானே பாக்கணும்னு சொன்னேன் . சாப்பாடு எல்லாம் எடுத்து வெச்சியே.. என்னை சாப்பிடக் கூப்பிடணும்னு உனக்குத் தோணல..” என்றான்.

“இது என்ன புது பழக்கம் ” என்று நினைத்தவள் “சார், மணி ஆறு ஆகப் போகுது , நான் ஏற்கனவே உங்ககிட்டே சொன்னேனே.. ஆறு மணிக்கு அப்பறோம் நான் உங்களுக்கு வேலை செய்ய மாட்டேன்னு. சாப்பாடு உங்களுக்கு எடுத்து வெச்சிருக்கேன் சாப்பிடுங்க சார் .எனக்கு டைம் ஆச்சு ” என்று ஹாலில் இருந்த கடிகாரத்தை பார்த்தவள் அது மணி ஆறு ஆக இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கிறது என்று காட்டியது.

அவளை மேலிருந்து கீழாக பார்வையால் அளந்தவன் “இன்னும் பத்து நிமிஷம் இருக்கு.. இது என்னோட டைம் “என்று அவள் அருகே நெருங்கி வந்து அவன் பேச..

அவன் நெருங்கியதும் அவனிடம் இருந்து வந்த மது வாடை அவளுக்குக் குமட்டிக்கொண்டு வர..

முகத்தை சுளித்துக்கொண்டு அவனை விட்டு சற்று அவள் விலகி நிற்க..

அவள் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்து நெருக்கமாக நிறுத்தி வைத்தவன் “என்ன டி முகத்தை சுளிக்குற.. ” என்றான்.

“சார், கையை விடுங்க. உங்ககிட்டே என்னவோ கெட்ட வாசம் அடிக்குது. அது எனக்கு குமட்டிட்டு வர போல இருக்கு.. ‘ என்று அவனிடம் இருந்து திமிறினாள் .

“அப்படியா? .. கெட்ட வாசமா? ” என்று நக்கலடித்தவன் “இதை குடிச்சுப்பாரு அப்பறோம் உனக்குத் தெரியும் இது எவ்ளோ சொர்க்கம்னு  “என்றான் தள்ளாடிக்கொண்டே..

அவன் கோலமும், அவன் பேச்சும்  சரி இல்லை என்று உணர்ந்தவள் தன்னை கஷ்டப்பட்டு மாறனிடம் இருந்து விடுவித்துக் கொண்டவள் “எனக்கு அதெல்லாம் வேணாம். உங்களுக்கு என்ன இப்போ நான் சாப்பாடு எடுத்து வைக்கணும் அவ்ளோ தானே.. நான் எடுத்து வெச்சுட்டு போறேன், நீங்க சாப்பிடுங்க எனக்கு நேரம் ஆச்சு ” என்று அவசரமாக டைனிங் டேபிள் சென்றாள்.

அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “நான் கிட்ட வந்தா உனக்கு பிடிக்கலையா டி..” என்று நினைத்தவன் “இப்பொவேனா நான் சொல்றதை செய்ய உனக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சொல்றதை மட்டும் தான் நீ செய்ய போற.. நான் என்ன சொன்னாலும் செய்யப்போற.. ” என்று நினைத்தபடி அவளிடம் சென்றவன் அவளை வேண்டுமென்றே உடலை உரசிக்கொண்டு சேரில் போய் அமர்ந்தான்.

அவனின் இந்த செயல் மீராவை எரிச்சலடைய செய்தது . “விவஸ்தை கெட்டவன் இவன்கிட்டே வேலைக்கு இருந்தா இப்படி தான் உரசிட்டு இருப்பானா? ” என்று மனதிற்குள் மாறனைத் திட்டிக்கொண்டிருப்பவள் தான் அவன் முன்னே இன்னும் கொஞ்ச நேரத்தில் மொத்தமாக உடலின் மெல்லிய நூலிழையும் இன்றி நிற்கப் போகிறாள் என்பதை அவன் எண்ணம் மட்டுமே அப்போது அறிந்திருந்தான்.

போதையின் பிடி மாறனை இப்படி நடந்து கொள்ள செய்திருந்தது , அதுவுமில்லாமல் அவளிடம் மட்டுமே ஏன் இப்படி அத்துமீற துடிக்கிறது தன் மனம் என்று அவன் அறியவில்லை.

அவளை மொத்தமாக பார்த்ததால் வந்த நெருக்கமும், அவள் மீது அவனுக்கு இருந்த உரிமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அவனுக்கு உணவை பரிமாறிவிட்டு “சார், எனக்கு நேரம் ஆச்சு நான் போகணும் “என்று அவன் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் தன் அறைக்குள் சென்று கதைவடைத்துவிட..

மாறனோ அவள் சென்ற திசையை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

இங்கே அறைக்குள் வந்த மீராவுக்கோ மாறனின் செயல் கடுப்பை தந்திருக்க. அவனைத் திட்டிக்கொண்டே வேகமாக குளித்துவிட்டு டவளைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவள் , ஹாஸ்பிடலில் இருந்து வரும் வழியில்  வாங்கி வந்து கப்போர்டில் வைத்திருந்த அந்த பையை எடுத்து பிரித்துப் பார்த்தாள்.

அதில் அவள் போட்டுக்கொள்ள ஏற்கனவே மாதவியிடம் பிரகாஷ் கொடுத்துவிட்டுப் போன உடைகளையும், அதன் கூடவே ஒரு பாக்ஸும் இருக்க.. அந்த பாக்சில் எழுதி இருந்ததை எடுத்து பார்த்தாள்.

இதை லைவ் வீடியோவில் தான் திறக்க வேண்டும் என்று எழுதி இருக்க அந்த பாக்ஸை தள்ளி வைத்துவிட்டு உடைகளை எடுத்துப் பார்க்க..

அதில் இருந்த உடைகளைப் பார்த்து முகம் சுளித்தவள் பெருமூச்சை விட்டவள் “எல்லாம் பீச்ல போடுற ட்ரெஸாவே இருக்கு”  என்று அதில் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொள்ளவும் , வீடியோவில் மாறனின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

அவசரமாக தன் ஆடையின் மீது சுடிதார் ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டவள் காலை அட்டென்ட் செய்ய..

“என்ன இவ்ளோ நேரம்  கால் அட்டென்ட் பண்ண ” என்றான் வேண்டுமென்றே,..

“ஹா.. அது வந்து சார் ரெடியாகிட்டு இருந்தேன் ” என்றாள் .

“அப்படியா?” என்று அவளை பார்வையால் அளந்தவன் “சரி நான் போன முறை கேட்டதுக்கு என்ன பதில் சொல்லப் போற.. ” என்றான்.

“சார் அது வந்து ” என்று அவள் தயங்க..

“என்ன சொல்லு.. ” என்றான் சோபாவில் சாய்ந்து அமர்ந்த படியே.

“அது நீங்க சொல்றதை நான் செய்யணும்னா எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும் ” என்றாள் சற்று தயக்கத்தோடு.

“ஹெல்ப்! நான் உனக்கு பண்ணனுமா?” என்று சிரித்தவன் “சரி சொல்லு ” என்றான்.

அவள் தன் தந்தையின் ஆபரேஷன் விஷயத்தை சொல்லி புரோக்கர் அவளிடம் கேட்ட பெரும் தொகையை தனக்கு தருமாறு கேட்டாள்.

அவனோ அவளை அழுத்தமாகப் பார்த்துவிட்டு “இதை நினைச்சு தான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன கவலையா இருந்தாளா ?” என்று நினைத்தவன் “சரி உன்னோட முதலாளி தான் உனக்கு நிரைய சம்பளம் போட்டு உன்னை  அவன் வீட்டோடவே வேளைக்கு வெச்சிருக்கேன்னு சொன்னானே.. அவன்கிட்டே போய் பணம் கேட்காம என்கிட்டே ஏன் கேக்குற.. ” என்றான் அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

சற்று தயங்கியவள் ” அது சார்,, அந்த ஆள் சரி இல்ல.. அவன் பார்வையே சரி இல்ல என்னைத் தப்பு தப்பா பாக்குற போல எனக்கு இருக்கு” என்றாள்.

“ஆம்பளைங்க பாதி பேர் அப்படி தான் இருப்பாங்க. அவன் நீ அழகா இருக்கேன்னு சைட் அடிச்சிருப்பான் . ” என்றவன் “நான் என்ன ரொம்ப நல்லவனா? உன்னை மொத்தமா பாத்தவன் தானே நான். அவனை விட்டுட்டு என்கிட்ட பணம் ஏன் கேக்குற ” என்றான்.

“அது.. அது நீங்க செய்றது தப்பாவே இருந்தாலும் அதுல உண்மையா இருக்கீங்க.. இப்படி தான் இதுதான்னு உங்க விசயத்துல நீங்க நேர்மையா இருக்கீங்க” என்றவள் அவனை நேருக்கு நேராகப் பார்த்து சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு “உங்ககிட்டே எதுவும் மறைக்கக் கூடாதுனு சொன்னிங்க. நானும் நீங்க கேட்டது போல தான் இருக்கேன். என்னை முழுசா பார்த்த முதல் ஆள் நீங்க தான் , இது சரியா தப்பான்னு எனக்கு தெரியல.. என்னை முழுசா பார்த்த உங்கக்கிடையே எல்லாமும் கேக்கணும்னு தோணுச்சு. அதான் இந்த ஹெல்ப்பைக் கேட்டேன் ” என்றாள்.

அவள் தன் மீது வைத்திருக்கும் அபிப்ராயத்தைக் கேட்டவன் “நான் இல்லேனு சொல்லிட்டா வேற யார் பணம் தராங்களோ அவங்ககிட்டே போய்டுவியா என்ன?” என்றான் வார்த்தைகளில் விஷம் தடவி.

அவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தவள் “என்னோட கஷ்டத்துக்காக தான் இந்த மாதிரி ஒரு வேலைக்கு வந்திருக்கேன். என் அப்பா ஆபரேஷன் நல்லபடியா முடியணும் , அதுக்கு அப்பறோம் உங்ககிட்டே போட்டிருக்க இந்த காண்ட்ராக்ட் முடியுற வரை தான் இந்த வேலை அதுக்கு அப்பறோம் நான் வேலையை தொடர மாட்டேன். நீங்க எப்படிப்பட்டவர்னு எனக்கு தெரியாது , என்னை முழுசா பார்த்த உங்களைத் தவிர வேற வர யார்கிட்டேயும் என்னைக் காட்ட எனக்கு விருப்பம் இல்ல. சரியோ தபோ என் தப்பு உங்களோட முடிஞ்சிடனும் அவ்ளோ தான் ” என்றவள் விழிகளில் ஏனோ வலியும் அதன் கூடவே ஒரு எதிர்பார்ப்பும் இருப்பது போல அவனுக்கு தோன்றியது.

“என்கிட்டே தான் முதல் முறை காட்டுறேன்னு நான் எப்படி நம்புறது” இன்று மீண்டும் அவளை நோகடித்துவிட்டு “சரி அதை விடு உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைக்குறேன். அதுக்கு முன்ன இன்னிக்கு நைட் நீ என்னை த்ரிப்திப் படுத்து.. அதை வெச்சு நீ கேட்டதை செய்யலாமா? வேணாமான்னு நான் யோசிக்கிறேன் ” என்றான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.