News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் 2 , part-2

by Sinamika Writes
1.6K views
A+A-
Reset

ஆன்லைன் 3

மீனுவிடம் பேசிவிட்டு நேராக நெடுமாறனைப் பார்க்க தான் வந்திருந்தான் ஆர்யன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

ஹாலில் அமர்ந்து இருந்தவன் இதழ்கள் லேசாக வளைந்தது. தலையை பின்னால் சாய்த்து கண்மூடி படுத்திருந்தவன் ஆர்யனின் காலடித் தடமருகே கேட்க்கவும் “என்ன டா என் தங்கச்சி அனுப்பிச்சாளா?” என்று சரியாகக் கேட்டான்.

“ம்ம்.. ஆமா ” என்று அவன் அருகே சோபாவில் நெருங்கி அமர்ந்தான்.

“சரி சொல்லு..” என்று  தலையை நிமிர்த்தியவன் டேபிளில் இருந்த சிகெரட் ஒன்றை எடுத்து பத்தவைத்து ஊதினான்.

“நீ தான் சொல்லணும், அங்கிள் கூட சண்டையா?” என்றான்.

“ம்ம்.. நேத்து கொஞ்சம் ஓவராகிடுச்சு.. பாட்டில் ஒடஞ்சு அம்மா கையை .. ” என்றவன் சிகெரெட்டை ஆழ இழுத்துவிட்டு புகையை வெளியேற்றியவன் அதை ஆரியன் கையில் கொடுத்தான்,

அதை வாங்கி ஊதிய ஆரியன் “என்ன பண்றதா ஐடியா.. ” என்றான்.

“இப்போதைக்கு அவர்களுக்கு டென்ஷன் கொடுக்காம இருக்கனும்னு நினைக்குறேன்” என்றான்.

“அப்போ ஓகே… ” என்றான்.

“ம்ம்.. அப்பறோம் உன்கிட்ட நான் ஒன்னு கேட்பேன் . அதுக்கு நீ ஓகே சொல்லணும் ” என்றான் அவன் வாயில் இருந்த சிகெரெட்டை எடுத்து ஊதிக்கொண்டே..

“என்ன?” என்றான்.

“என் தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணிக்கணும் ” என்றான் அவனைப் பார்க்காமலேயே..

மாறன் கையில் இருந்த சிகெரெட்டை வாங்கப் போன ஆர்யன் கை அப்படியே நின்றது.

“நான்.. ஏன்? ” என்றான்.

“ஏன்னா என்னைப் பத்தி தெறிஞ்சுட்டு யாரும் அவளைக் கல்யாணம் செய்துக்க மாட்டேங்குறாங்கனு என் அப்பா பீல் பண்றார். அவளுக்கும் வயசு ஏறிட்டே போகுது.. உனக்கு தான் என்னைப் பத்தி எல்லாமே தெரியுமே. சோ … ” என்று சிகெரெட்டை ஊத..

அவன் சொன்னதை சற்று யோசித்தவன் “உனக்கு என் விஷயம் தெரியும் தானே.. ‘ என்று அவனிடம் இருந்து சிகெரெட்டை வாங்கினான் .

மாறன் இதழ் பிரித்து சிரித்தவன் ஆர்யன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டான் என்று புரிந்து கொண்டவன் “அது பாஸ்ட் தானே.. இப்போ இல்லையே..” என்றான்,

“ஆனா அந்த காயம் இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு..” என்றான் ஆர்யன்.

“அது மெதுவா ஆறட்டும். நீ மீனுவை கல்யாணம் செய்துக்க.. ” என்றான்.

“ம்ம்.. ஓகே ரொம்ப சிம்பிளா ரேகிச்டேர் மேரேஜ் வெச்சுக்கலாம். உன் வீடு , என் வீடு போதும் ” என்று எழுந்தான்.

“அதை நீ ரெண்டு வீட்டுலையும் பேசி ஓகே வாங்குறது உன்னோட சாமர்த்தியம்.” என்று சோபாவில் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கழுத்தில் கையை கொடுத்து தலையை நிமிர்த்தியவன் ஆரியனைப் பார்க்க.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“என் வீட்ல ஓகே , நான் சொன்ன நோ சொல்ல ஆள் இல்லை. ஆனா அங்கிள்கிட்டே தான்.. ” என்று தயங்கியவன் “பேசிப்பாக்குறேன் ஓகேனா தான் கல்யாணம்னு சொல்லிட்டா அவரும் என் வழிக்கு வந்திருவர் ” என்றான்.

“அதை நீ அவர்கிட்டே பேசிட்டு வந்து சொல்லு. அவர் என் அப்பா அது நியாபகம் இருக்குல்ல..  ” என்றான்.

“நான் அந்த வீட்டு மாப்பிள்ளை ஆகப்போறேன் . அப்போ என் பேச்சுக்கு அவர் இறங்கி வந்து தான் ஆகணும் ” என்றவன்  சட்டையை படித்துவிட்டுக் கொண்டே மாறனைப் பார்த்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் பார்த்துக் கொண்டனர்.

இருவர் முகத்திலும் ஒரு மென்மையான சிரிப்பு “ஓகே நீ கல்யாணத்துக்கு வந்திரு அப்போவும் குடிச்சிட்டு இருக்காத அண்ட் கொஞ்சம் நீட்டா வா. கல்யாண போட்டோவை பின்னாடி பாக்குற அப்போ நீ நல்லா இருக்கனும் ஓகே..” என்றான்.

“ம்ம்.. ஓகே டேட் பிக்ஸ் பண்ணிட்டு மெசேஜ் பண்ணிரு நான் வரேன்  “என்றான்.

“ம்ம்.. சரி.. ” என்றான்.

“ஓகே  நான் கிளம்பறேன் ” என்றவன் மாறனை ஆழமாகப் பார்த்து “உன் உடம்பைப் பார்த்துக்க.. எல்லாமே அளவு தான் ஓகேவா.. ” என்றான்.

“ம்ம்ம்.. ஐ வில்.. ” என்றான் மாறன்.

அவனிடம் சொல்லிவிட்டு நேராக மீனுவை பார்க்கத் தான் கிளம்பி இருந்தான் ஆர்யன்.

ஆர்யன் சென்றதும் மணியைப் பார்த்தான் மாறன் மாலை ஆறுமணிக்கு நேரம் இன்னும் இருந்தது. மணி என்று அழைத்தான். வாசலில் இருந்து வேகமாக வந்தான் மணி. சமைக்க ஆள் கேட்டேனே என்ன ஆச்சு?” என்றான்.

“ஐயா! அந்த பொண்ணு காலைலயே வந்திருச்சு. நீங்க சொன்னது போல பின்னாடி தனியா இருக்க கிச்சேன்ல தான் சமைச்சிட்டு இருக்கு” என்றான்.

” சரி எனக்கு லஞ்ச் செய்ய சொல்லிரு. அந்த டின்னெரை செஞ்சு வெச்சிட்டு கிளம்ப சொல்லிரு.. ” என்றவன் தனக்கு என்ன வேணும் என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

“ஐயா!” என்று மணி அழைக்க..

“ம்ம்.. என்ன?” என்று திரும்பினான் .

“அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்ச வீட்ல இருந்து தான் வருது , அது அப்பாவுக்கு உடம்பு சுகமில்லேனு தான் வேளைக்கு வந்திருக்கு.. ” என்றான்.

“அதனால.. ” என்றான் புரியாமல் அவனைப் பார்த்து.

“சமையல் ஓரளவுக்கு தான் செய்யும் ” என்று தலையை சொரிந்தான்.

“ம்ம்.. ஓகே , கேவலமா இருந்தா ஆளை மாத்திருவேன். அதனால ஒழுங்கா சமைச்சு பழக சொல்லிரு ” என்றுவிட்டு எழுந்து நேராக மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றவன் கதவை சாற்றிவிட்டு பெட்டில் போய் படுத்துக்கொண்டான்.

அப்போது அவன் செல்போன் திரையில் ஒரு மெசேஜ் ஒளிர்ந்தது குப்புறப் படுத்திருத்தவன் எடுத்துப் பார்த்தான் “ஈவினிங் சிக்ஸ் ஓ க்ளோக்.. ” என்று போட்டு அதற்கு கீழே அவன்  லொகின் பண்ண வேண்டிய ID , பாஸ்வோர்ட் அனுப்பி இருந்தான் பிரகாஷ்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அதை பார்த்துவிட்டு போனை கவிழ்த்துப் போட்டு மூடியவன் உறங்க ஆரம்பித்தான் .

இங்கே மீனுவின் ஆபிஸிற்கு வந்த ஆர்யன் கனிஸ்காவிற்கு கால் செய்தவன் “உன் மேடமை அங்கிள் கேபினுக்கு வர சொல்லு..  ” என்று போனை வைத்தான்.

“ஐயோ இவன் பேச்சே ஒரு மாதிரி இருக்கே.. இவ என் வீட்ல வந்து புலம்பினதை அங்கிள்கிட்டே போட்டுக் கொடுத்திருவான் போல… “என்று பதற்றமான கனிஷ்கா நேராக மீனுவின் கேபினுக்குள் கதவை தட்டிவிட்டு திறந்தவள் “மேடம், என் அண்ணா உங்களை சார் கேபினுக்கு வர சொன்னார் ” என்றாள்.

“ஒரு பைலை பார்த்திருந்தவள், அங்கையா? எதுக்கு?” என்றாள்.

“தெரியல மேடம் ” என்று தோளைக் குலுக்க..

பைலை அப்படியே மூடி வைத்து எழுந்தவள் “சரி வா..” என்று கனிஸ்காவை அழைத்தாள்.

“நான் எதுக்கு மேடம்.. நீங்க பேசிட்டு வாங்க. எனக்கு வேலை இருக்கு ” என்றுஅவள் நழுவப்ப பார்க்க..

“வந்திருக்குறது உன் அண்ணன் . அவரைப் பார்த்தாலே எனக்கு உத்தரல் எடுக்கும். உன் அண்ணன் பேசுற பேச்சுக்கு நீ தான் வந்து பதில் சொல்லணும் சரியா?” என்று அவளை தன்னோடு இழுத்துக்கொண்டு சென்றாள் .

“நானா?” என்று அதிர்ச்சியாக அவளோடு விருதாச்சலத்தின் அறைக்குள் நுழைந்தாள்.

“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை. இதை நான் எதிர்பார்க்கவே இல்ல .. ” என்றவர் கேபின் கதவை திறந்து கொண்டு வந்த மீனுவைப் பார்த்தவர் ” என் பொண்ணுக்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடலாம் ” என்றவர்.

“மீனு ஆர்யன் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு கேக்குறார். எனக்கு ஓகே மா .. உனக்கு சம்மதமா  “என்று அவள் வந்ததும் சொல்ல..

அதை கேட்டு அதிர்ந்தவள் “கல்யாணமா?!..”என்ற ரீதியில் இருவரையும் பார்த்தாள்.

“அங்கிள் டபுள் ஓகே!” என்று தமஸ் அப் காட்டினாள் கனிஷ்கா.

“ஏய்! என்கிட்டே கேட்டார் அப்பா ” என்று அதிர்ந்து அவளைப் பார்த்தாள்.

“நீ தானே உள்ள என்ன கேட்டாலும் பதில் என்னை சொல்ல சொன்ன.. அதான் நானே சொல்லிட்டேன் ” என்றவள் “அண்ணா, கல்யாணம் எப்போ ” என்றாள்.

“இப்போத்தானே கனிஸ்கா உன் அண்ணா சொல்லிருக்கார். சீக்கிரம் ஒரு நல்ல நாள் பாத்துடலாம் ” என்றார் அவர் .

“ஓகே அங்கிள் அப்போ நான் கிளம்பறேன் “என்று எழுந்த ஆர்யன் மீனுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினான்.

அவனின் அந்த ஒற்றை பார்வையே மீனுவை நடுங்க வைத்து இருந்தது

அவனுடன் கல்யாணமா? என்று நினைக்கையில் அவள் உள்ளம் பதறியது.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.