EPISODE 166
போதியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மாதவி ஒரு மாதிரியாகவே வகுப்பறையில் (Class) இருக்க, அதைக் கவனித்த லேகா, தன் அருகில் அமர்ந்திருந்த மாதவியின் தோளில் இடித்து, “என்னடி ஆச்சு… நானும் பார்க்கிறேன், நேத்து உன் காதலைப் போதி சார் கிட்ட சொன்னதுல இருந்து ஒரு மார்க்கமாவே சுத்திக்கிட்டு இருக்க… வகுப்பறைக்கு வரும்போது அவ்வளவு சந்தோஷமா வந்த… இன்னும் அந்த ஞாபகத்துலயே சுத்திக்கிட்டு இருக்கியா? கொஞ்சமாவது உனக்குப் பயமில்லையா?” என்று லேகா மாதவியைக் கிண்டல் செய்ய…
“ஏய் சும்மா இருடி,” என்று மாதவி தன் தோழியிடம் வெட்கப்பட…
மாதவியின் வகுப்பறையில் நடப்பது எல்லாம் தன் அறையில் இருந்தவாறு சிசிடிவி கேமராவில் மாதவியை மட்டும் பெரிதாக்கி (Zoom) அவள் வெட்கப்படுவதை ரசித்துக் கொண்டு இருந்தான் போதி. அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று போதிக்குத் தெரியவில்லை என்றாலும், தன்னைப் பற்றி ஏதோ பேசுகிறார்கள் என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது.
‘என்னை பத்தி அடுத்தவங்க கிட்ட எல்லாம் பேசுறா. ஆனா என்னைப் பார்த்தா மட்டும் எதுவுமே பேசாமப் போறாளே,’ என்று நினைத்தவன் தன் பியூனை அழைத்தான்.
சிறிது நேரத்தில் மாதவியின் வகுப்பறைக்கு வெளியே போதியின் அலுவலகத்தில் இருக்கும் பியூன் வந்து நிற்க… பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் (Professor) வகுப்பறைக்கு வெளியே நின்று இருந்த போதியின் அலுவலகத்தில் இருந்து பியூன் வந்ததும், ஏதோ முக்கிய செய்தி கொண்டு வந்திருக்கிறார் என்று அவரை உள்ளே வரச் சொல்ல…
வகுப்பறைக்குள் வந்த பியூன் பேராசிரியரிடம், “நம்ம கல்லூரி தாளாளர் (Correspondent) நேத்து பாட்டுப் போட்டியில் ஜெயிச்ச மாதவிங்குற பொண்ணை அவரோட அலுவலக அறைக்கு வரச் சொன்னாரு,” என்று சொல்ல…
‘தாளாளர் தன்னை அழைத்ததாகச் சொன்னதைக்’ கேட்ட மாதவிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘காலையில் தானே போதியைப் பார்த்துவிட்டு வந்தோம். இப்போ எதுக்கு என்னைக் கூப்பிடுறாரு? யாராவது எதுவும் நினைச்சுக்கிட்டா என்ன பண்றது?’ என்று மாதவி தயங்கியவாறு அமர்ந்திருக்க…
அவள் அருகில் அமர்ந்து பியூன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த லேகா மாதவியைப் பார்த்து, “என்னடி? உன் ஆளு உன்னை விட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாம, ஆளை விட்டு உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்றாரு,” என்று அவளிடம் வம்பு இழுக்க ….
“சும்மா இருடி. எனக்குப் பயமா இருக்கு. நீ வேற ஏதாவது சொல்லி என்னைப் பயமுறுத்தாதே…” என்ற மாதவி பேராசிரியரிடம் சொல்லிக்கொண்டு, அவளை அழைக்க வந்தவனுடன் தயங்கியவாறே போதியின் அலுவலகத்திற்குச் சென்றாள்.
அங்கே அலுவலக அறைக்கு வெளியே மாதவிக்காகக் காத்திருந்த போதி, அவள் வந்ததும் பியூனைப் போகச் சொல்லிவிட்டு, போதி முன்னே நடக்க… மாதவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போதியின் பின்னாலேயே சென்றாள்.
அலுவலக அறையில் இருந்து வந்த போதி, அவன் கார் நிறுத்தும் இடத்திற்கு வந்து கார் கதவைத் திறந்து மாதவியைப் பார்க்க…. அவள் புரியாமல் காரையும் போதியையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்று இருக்க…
“என்ன பார்க்குற? வந்து காரில் ஏறு,” என்றான் போதி.
“கார்லயா? உங்க கூடவா?… நான் எதுக்குக் கார்ல ஏறணும்? நான் எங்கேயும் வரல,” என்றால் மாதவி.
“உன்னை நான்…” என்றான் போதி.
“நான் வரமாட்டேன்,” என்று அவனிடமிருந்து பின்னால் நகரப் போக… “எங்க போற?” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து இழுத்தவன், காருக்குள் அவளை வலுக்கட்டாயமாக அமர வைத்து, கதவைச் சாற்றிவிட்டு, மறுபடியும் வந்து காரில் ஏறி, காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து சிட்டாகப் பறந்தான்.
காரில் ஏறியதிலிருந்து மாதவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… போதி மட்டும் சந்தோஷமாக மாதவியின் முகத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறு வந்தான்.
கல்லூரியில் இருந்து அரை மணி நேரம் பயணத்திற்குப் பிறகு, ஒரு பெரிய நட்சத்திர விடுதியின் (Star Hotel) முன்பு தன் காரை நிறுத்தினான் போதி. அதைப் நிறுத்திவிட்டு மாதவியைப் பார்க்க… அவள் ஒன்றும் புரியாமல், ‘எங்கே இருக்கிறோம்?’ என்று காரின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“இருங்கன்னு சொன்னாதான் வெளியே வருவியா டார்லிங்? வா…” என்று சொல்லி காரை விட்டு இறங்கியவன், அவள் அமர்ந்திருந்த காரின் கதவைத் திறந்து, அவளை வெளியே அழைக்க…
தயங்கியவாறே காரிலிருந்து வெளியே வந்த மாதவி, “இங்கே எதுக்குக் கூட்டிட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்ம்….இங்க அறை போட்டு நம்ம ரெண்டு பேருக்கும் முதல் இரவு (First Night) நடத்தத் தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்,” என்று சொன்னான் போதி… அவன் சொல்வதைக் கேட்டு அதிர்ந்த மாதவி, அவனை அதிர்ச்சியாகப் பார்க்க…
“பார்த்தது போதும் வா…” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து வைத்துக்கொண்டு அந்த விடுதிக்குள் சென்றான்.
சங்கவி யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவள், பேசி முடித்ததும் ஆத்திரத்தில் போனைத் தூக்கிச் சுவற்றில் விட்டெறிய, அது சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறியது.
இப்போதுதான் அவளைப் பார்ப்பதற்காக வேதாச்சலம் சங்கவியின் அறைக்குள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர… அவள் கோபமாக போனை விட்டெறிந்ததைப் பார்த்தவர் சங்கவியிடம் வந்து, “சங்கவி என்ன ஆச்சு? ஏன்? இப்படிப் போனைத் தூக்கி வீசற… கோபம் வருகிற அளவுக்கு என்ன விஷயம் நடந்துச்சு?” என்று கேட்டார் வேதாச்சலம்.
“இன்னும் என்னப்பா நடக்கணும்? அந்தத் துர்காவைக் ஆதியிடம் இருந்து பிரிப்பதற்காக நானும் என்னென்னவோ செஞ்சு பார்க்கிறேன். ஆனா எப்படியாவது அவ அதிலிருந்து தப்பிச்சிடுறா. இப்ப கூடப் பாருங்க, நேத்து அவளை நான் பார்க்கப் போயிருந்தேன்,” என்று சொன்ன சங்கவி.
துர்காவும் கடற்கரையில் வைத்துப் பேசப் போக…. துர்காவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டது என்று தெரிந்திருந்த சங்கவி, வேண்டுமென்றே ஆதிக்கும் தனக்கும் இடையில் உறவு இருக்கிறது என்று பொய்யைச் சொல்ல… நினைவுகள் எல்லாம் மறந்த நிலையில் கூட துர்கா ஆதியின் மீது சங்கவி சொன்ன குற்றச்சாட்டுகள் எதையுமே நம்பாமல், “என்னோட ஆதி ரொம்ப நல்லவன். நீ என்கிட்டப் பொய் சொல்ற,” என்று துர்கா ஆதிக்கு ஆதரவாகச் சங்கவியிடம் பேசி வாதிட…
அதில் கோவம் அடைந்த சங்கவி, கடற்கரையில் சக்கர நாற்காலியுடன் அவளைத் தள்ளிக் கொண்டு போய் துர்காவைக் கடல் நீருக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதும். கடற்கரையில் விளையாட வந்த சில இளைஞர்கள் துர்காவைக் காப்பாற்றியதும், அவள் இரவு சிகிச்சை முடிந்து பிழைத்து விட்டாள். அவளுக்குப் பழைய நினைவுகள் அனைத்தும் வந்துவிட்டது என்பதையெல்லாம் தான் இப்போதுதான் அவளைக் கண்காணிக்கத் தான் வைத்திருந்தவர்கள் சொன்னதாகச் சொல்லி, போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிட்டது என்று அவரிடம் புலம்பிக் கொண்டு இருந்தாள்.
அது எல்லாம் கேட்ட வேதாச்சலம், “சரி விடுமா. இப்போ இல்லைன்னா என்ன? இன்னொரு முறை நம்ம அவகிட்ட எதையும் சொல்லி, அந்த ஆதியிடம் இருந்து துர்காவைப் பிரிக்க ஏதாவது வழி பண்ணலாம்,” என்று சங்கவியின் அப்பா சொல்ல…
“பழைய ஞாபகம் எல்லாம் மறந்திருந்த போதே துர்கா ஆதியை விட்டுக் கொடுக்காமல் எப்படிப் பேசினால் தெரியுமாப்பா… இப்போ எல்லாமே ஞாபகம் வந்திருச்சு.. இனி அவ எனக்கு ஆதியைக் விட்டுக் கொடுப்பான்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்களா?.. அவ இந்த உலகத்தை விட்டுப் போனால் தான் நான் ஆதி பக்கத்துல நெருங்கியே போக முடியும். அந்தத் துர்கா இருக்கிற வரை என்னால ஆதியிடம் எந்த வழியிலும் நெருங்கிப் போகவே முடியாது,” என்று சங்கவி சொன்னாள்.
“அப்படி எல்லாம் நினைக்காத சங்கவி. ஏதாவது ஒரு வழி நமக்குக் கிடைக்கும். கண்டிப்பா அந்த ஆதி கூட நீ சேர்ந்து வாழத்தான் போற… அதுக்காக இந்த அப்பா என்ன வேணும்னாலும் செய்வேன்,” என்று சொன்னார்.
“எப்படிப்பா இவ்வளவு உறுதியாக சொல்றீஙக…. அந்தத் துர்கா பழசையெல்லாம் மறந்த நிலையில் கூட ஆதியைக் அவ விடாமல் பிடிச்சிட்டு இருக்கா. அப்படி இருக்கப்போ அவளை விட்டுட்டு ஆதி எப்படி என் கூட வருவான்?” என்று கேட்டாள் சங்கவி.
“நீ சின்னப் பொண்ணுமா. உனக்கு அந்தத் துர்காவை ஆதியிடம் இருந்து எப்படிப் பிரிக்கிறதுன்னு தெரியல… அவளே ஆதியைக் வேண்டாம்னு சொல்லி ஒதுங்கிப் போகணும். அப்படிப் போகுற மாதிரி நான் செய்றேன்,” என்றார் வேதாச்சலம்.
“என்னப்பா சொல்றீங்க? நிஜமாத்தான் சொல்றீங்களா? அந்தத் துர்கா ஆதியைக் வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிடுவாளா?” என்று கேட்டாள் சங்கவி.
“நிச்சயம் போயிடுவா. அதுக்கு நான் பொறுப்பு. அதுவரை நீ கொஞ்சம் இந்த மாதிரி எதுவும் செஞ்சு, நீ தான் துர்காவுக்கு இத்தனை ஆபத்தும் கொடுத்தேன்கிற விஷயத்தை யாருக்கும் இது தெரியாமப் பாத்துக்கோ. இனியும் எதுவும் செய்யாத. நான் சொல்ற வரைக்கும் அமைதியா இரு,” என்று சொன்னார் வேதாச்சலம்.
சங்கவியும் அதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அவர் சொல்லும் விதத்தைப் பார்த்தாலே, கண்டிப்பாகத் தன் அப்பா துர்காவை ஆதியிடமிருந்து பிரித்து விடுவார் என்ற நம்பிக்கை சங்கவிக்கு வந்தது.
துர்கா காலையில் எழுந்திருக்கும் போது பகல் 10 மணியைக் கடந்து இருந்தது. இரவு மருத்துவமனையிலிருந்து வந்து தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டதால், அவளுக்கு மருந்துகள் வேறு கொடுக்கப்பட்டதாலும், விடிந்தது கூடத் தெரியாமல் அசதியில் நன்கு துர்கா உறங்கி விட்டாள்.
எழுந்ததும் முதலில் அந்த அறையைச் சுற்றி ஆதியைத்தான் தேடியது அவள் கண்கள். அவன் அறையில் இல்லாமல் போகவே ஏமாற்றத்துடன் எழுந்தவள், ஊன்றுகோலின் (Walking Stick) உதவியுடன் நேராகக் குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு, சேலை கட்டி மின்தூக்கி (Lift) வழியாகக் கீழே வந்தாள்.
செண்பகம், துர்கா கீழே வந்ததும் துர்காவைப் பார்த்துச் சந்தோஷப்பட்டவர், அவளை அழைத்துக்கொண்டு போய் முதலில் துர்காவைச் சாப்பிட வைத்தார். செண்பகமும் அப்போதுதான் துர்காவுடன் சேர்ந்து சாப்பிட…. “என்னம்மா மணி 11 ஆகப் போகுது. இன்னும் சாப்பிடாம என்ன பண்றீங்க? உங்களுக்குத் தான் நேரத்துக்குச் சாப்பிடணுமே. அப்படிச் சாப்பிடலைன்னா இரத்த அழுத்தம் (Pressure) அதிகமாகிடும்னு மருத்துவர் சொல்லி இருக்காங்களே. ஏன் இப்படிப் பண்றீங்க…” என்று அவரைச் செல்லமாக கடிந்து கொண்டாள் துர்கா.
“நாளைல இருந்து நீங்க யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது சரியா? காலையில 9 மணி ஆனதும் நீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கணும் சரியா,” என்றால் துர்கா.
“அப்பா, இப்படி என் பொண்ணு என்கிட்ட உரிமையா பேசி எவ்வளவு நாள் ஆகுது,” என்று சொல்லிச் சந்தோஷப்பட்ட செண்பகம், “சரி துர்கா, நீ பொறுமையா சாப்பிட்டுட்டு வா…. நான் போய்க் கொஞ்ச நேரம் தூங்குறேன்,” என்று சொன்னவர், சாப்பிட்டு முடித்ததும் எழுந்து தன் அறைக்குச் சென்று விட்டார்.
அவர் சென்றதும் அங்கிருந்த வேலையாட்களுடன் பேசியும் சிரித்துப் பேசியபடியே துர்கா சாப்பிட்டு முடித்தவள், ஒரு கையால் ஊன்றுகோலை ஊன்றிக்கொண்டே மெதுவாக வரவேற்பறை (Hall) நோக்கி நடந்து வர…
இப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த ஆதி, துர்கா வரவேற்பறையில் இருப்பதைப் பார்த்தவன், “என்ன துர்கா, எழுந்துட்டியா?” என்று கேட்டுக் கொண்டே சிரித்தபடி அவளை நோக்கி ஆதி சந்தோஷமாக நடந்து வர….
அவனை அப்படிப் பார்த்ததும் துர்காவுக்கு ஆச்சரியமாகப் போனது. வரவேற்பறைக்கு நடந்து கொண்டிருந்தவள், ஆதியின் குரலைக் கேட்டு அவனைப் பார்த்து அப்படியே நின்று இருக்க… அருகில் வந்தவன் தன் கையில் இருந்த கோப்பைப் பெட்டியை (File) சோபாவில் தூக்கிப் போட்டுவிட்டு, தன் மேலங்கியை (Coat)க் கழற்றியவன், துர்காவின் அருகில் வந்து அப்படியே அவளைக் கையால் தன் கையில் ஏந்திக் கொண்டு தங்கள் அறை நோக்கி ஆதி நடந்த செல்ல….
“என்ன ஆதி பண்ணிக்கிட்டு இருக்க? என்னைக் கீழே இறக்கி விடு. எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க,” என்று சுற்றி அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களைப் பார்க்க… எல்லாம் ஆதி வந்ததிலிருந்து துர்காவைத் தூக்கிக்கொண்டு மேலே செல்வதைப் பார்த்துவிட்டுச் சிரித்தவர்கள், துர்காவையும் ஆதியையும் அங்கே இருப்பதையே கண்டுகொள்ளாதவர்கள் போலத் தங்கள் வேலையில் மூழ்கினர்.
“நம்ம வீட்டுக்குள்ள தானே இருக்கோம். இவங்களுக்கு நம்மள பத்தி நல்லா தெரியும். அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க,” என்று சொல்லியபடியே ஆதி துர்காவின் நெற்றியைத் தன் நெற்றியால் முட்ட…
ஆதியைச் சந்தோஷத்தோடு ஏறிட்ட துர்கா…. அவனைப் புரியாமல் பார்க்க…. “துர்கா, நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். என்னை ஒரு மாதிரியாவே பார்த்துட்டு இருக்க,” என்று கேட்டான் ஆதி.
“இல்ல ஆதி, நீ எனக்குத் தெரிஞ்ச ஆதி தானா? முடியைத் தாண்டித் தெரியிற உன் கண்ணுலேயே இவ்வளவு சந்தோஷம் தெரியுது. உன் முகத்தை நான் முழுசா இவ்வளவு சந்தோசத்தோட பார்த்தா எவ்வளவு நல்லா இருக்கும் அப்படின்னு யோசிச்சேன்,” என்றால் துர்கா.
“அதுக்கு என்ன… என் முகத்தை முழுசா தானே பாக்கணும்,” என்று சொல்லிவிட்டு அவளை அறைக்குள் வந்து மெத்தையில் அமர வைத்தவன், சென்று தன் அறையின் கதவைச் சாற்றிவிட்டு, துர்காவின் அருகில் மெத்தையில் விழுந்தான் ஆதி. அவன் விழுந்த வேகத்தில் துர்கா லேசாகத் தான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து திடீரென லேசாக மேலே சென்று கீழே வந்தது போல அவளுக்குத் தோன்றியது.
மெத்தையில் படுத்த வேகத்தில் ஆதி துர்காவின் மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, அவளின் இடுப்பில் தன் கையைப் கோர்த்துத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் ஆதி. ஆதி செய்வது எல்லாம் நம்ப முடியாமல் துர்கா பார்க்க… அவள் மடியில் முகம் புதைத்தவன், திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவாறு படுத்து அவள் கண்களைப் பார்க்க…
துர்காவும் ஆதியின் கண்களையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன துர்கா அப்படிப் பார்க்குற?” என்று கேட்டான் ஆதி. “ஆதி, உன் கூடப் பழகிய எத்தனை வருஷத்துல உன் கண்ணுல நான் இவ்வளவு சந்தோசத்தைப் பார்த்ததே இல்லை. இதெல்லாம் உண்மைதானா? என்னாலேயே என்ன நம்ப முடியல,” என்று கேட்டாள் துர்கா.
“**நீ பார்த்த அதே ஆதிதான். ஆனா ஒரே ஒரு வித்தியாசம். அப்போ நீ பார்த்தது உன்னோட நண்பன் (Friend) ஆதி. இப்போ நீ பார்க்கிறது உன்னோட புருஷன் ஆதி,” என்றான்.
தன்னுடைய புருஷன் என்று ஆதி உரிமையாக துர்காவிடம் சொன்னதும், துர்காவுக்கு உள்ளுக்குள் ஒருவித பரவச உணர்வு பரவியது. தன்னிச்சையாகத் தன் மடியில் படுத்திருந்த ஆதியின் கேசத்திற்குள் தன் கைவிரல்களை நுழைத்து அவன் தலையை வருடி கொடுக்க…
கண்கள் மூடித் துர்கா கேசத்தை வருடி கொடுப்பதை அனுபவித்தவாறு அவள் மடியில் படுத்து இருந்தான் ஆதி.
பிறகு சட்டெனக் கண்கள் திறந்து துர்காவைப் பார்க்க, துர்கா அவன் முகத்தையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவள், அவன் திடீரென்று கண்களைத் திறந்ததும் சற்று தடுமாறியவள், பின் “என்ன ஆதி,” என்று கேட்க…
“என் முகத்தைப் பார்க்கணும்னு சொன்னியே, பாக்கலையா?” என்று கேட்டான் ஆதி.
“நானும் அதைத்தான் உன்கிட்டக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்,” என்ற துர்கா, “உன் முகத்தை நான் பாக்கட்டுமா?” என்று கேட்டாள்.
வெளிநாட்டில் நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்திருந்த ஆதியின் உடல்நிலை ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்க…. துர்காவுக்கு டென்மார்க்கில் திடீரென்று விபத்து ஏற்பட்டதால், அவளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்ததன் பிறகு தன் நோயை அவன் கவனத்துக் கொள்ளவே இல்லை. அதன் பிறகு துர்காவுக்குப் பழைய ஞாபகங்கள் மறந்திருந்த நிலையில், அவள் அவன் முகத்தில் இருந்த தழும்புகளையும் காயங்களையும் பற்றிக் கேட்க, மருத்துவர் மருந்துகளைச் சரியாக எடுத்துக் கொண்டால் தன் உடல்நிலை சரியாகி விடும் என்று அவளிடம் சொல்லியிருந்தார். தினமும் துர்கா தூங்குவதற்கு முன்னால் ஆதியின் முகத்திலும் உடம்பிலும் உள்ள தழும்புகளுக்கு மருந்து போட்டுவிட்டுப் பிறகு தான் தூங்கச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தாள். அப்போது கூடத் துர்கா அவன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே அவன் முகத்திற்கு மருந்து பூசி விடுவாள். தினமும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொண்டதும், தன் முகத்திற்கு **பூச்சுக்களை (Ointments)**ச் சரியாகப் போட்டுப் பராமரித்து வந்ததாலும், ஆதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் வர ஆரம்பித்திருந்தது. அன்றிலிருந்து ஆதி, துர்காவைத் தவிர வேறு யாருக்குமே தன் முகத்தைக் காட்டாமல் இருந்தான்.
வழக்கம் போலவே முகக்கவசத்தை (Mask) அணிந்தபடி ஆதி அலுவலகத்திற்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்து கொண்டு இருந்தான். ‘நம் வீட்டில் இருப்பவர்கள் முன்புதான் தன் முகக்கவசத்தைக் கழட்டுவேன்’. ஆனால், இப்போது நல்ல முன்னேற்றம் வந்து இருப்பதால், தன்னுடைய முகத்தை முதன் முதலில் துர்கா தான் பார்க்க வேண்டும் என்ற ஒரே முடிவோடு ஆதி யாரிடமும் முகத்தைக் காட்டாமல் இவ்வளவு நாளும் சமாளித்து வந்திருந்தான்.
இதை எல்லாம் மனதில் நினைத்துப் பார்த்தவன், இப்போது துர்காவுக்குப் பழைய நினைவுகள் திரும்பி இருக்க…. இப்போது தான் துர்கா தன் முகத்தைப் பார்ப்பதற்குச் சரியான நேரம் என்று முடிவெடுத்தவன், அவளைத் தன் முகத்தைப் பார்க்க வேண்டாமா? என்று கேட்டான்.
ஆதியின் முகத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக துர்கா அவனிடம் ‘பார்க்கிறேன்’ என்று தலையை ஆட்ட… அவள் மடியில் படுத்து இருந்த ஆதி எழுந்து அவள் அருகில் அமர்ந்து தன் முகத்தைக் காட்டி, “நீயே முகக்கவசத்தைக் கழட்டு,” என்று சொன்னான் ஆதி.
துர்கா ‘சரி’ என்று சொன்னவள், வெட்கப்பட்டுக் கொண்டே ஆதியின் முகத்திற்கு அருகில் தன் கைகளைக் கொண்டு வந்தவள், அவன் அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழட்ட… அவன் முகத்தில் ஒரு சிறு தழும்பு கூட இல்லாமல் பளிச்சென்று பளிங்கு போல அவன் நிறத்திற்கு ஏற்ப பலபலவென்று ஆதியின் முகம் ஜொலிப்பதைப் கண்ட துர்காவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவனை அது ஆச்சரியத்தோடு கண்கள் விரிய துர்கா பார்க்க…
“என்ன துர்கா பார்க்கிற? இந்த முகத்தை உன் கிட்ட காட்டணும் என்பதற்காகத் தான் இத்தனை நாளும் நான் முகக்கவசம் போட்டு எல்லார் கிட்ட இருந்தும் மறைச்சிட்டு இருந்தேன். நீதான் நான் குணமான பிறகு முதன்முதலா என் முகத்தைப் பார்க்கணும்னு நான் இதுவரை யார்கிட்டயுமே என் முகக்கவசத்தைக் கழட்டி என் முகத்தைக் காட்டவே இல்லை,” என்று சொன்னான் ஆதி.
துர்காவின் இமைகள் இரண்டும் படபடக்க, அவன் முகத்தைத் தன் கைகள் இரண்டிலும் பிடித்தவாறு, அவன் கண்கள், மூக்கு, கன்னம், மீசை, உதடு என்று ஒவ்வொன்றாக துர்கா ரசித்துக் கொண்டு இருக்க….
அடுத்த நொடி ஆதி அவள் முகத்தைப் பிடித்துத் தன் முகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்தவன், அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
இதைச் சற்றும் எதிர்பாராத துர்கா, இமைகள் இரண்டும் படபடக்கத் தன் கண்களைத் திறந்து ஆதியைப் பார்க்க… துர்காவுக்கு முத்தம் கொடுத்தவாறே அவள் கண்களைப் பார்த்து, “என்ன,” என்று தன் புருவம் உயர்த்திக் கேட்டான்.
அவன் கண்களை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த துர்காவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன…. அவன் தந்த முத்தத்தில் கரைந்த அவள் கண்கள் தானாக மூடிக்கொள்ள…. தன் முத்தத்தை விரும்பி ஏற்கும் துர்காவைப் பார்த்து ரசித்த ஆதி, முத்தத்தை மேலும் தீவிரப்படுத்தினான். முத்தமிட்டுக் கொண்டே ஆதியின் கைகள் அவள் முகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கி அவள் கழுத்தை வருடிக் கொண்டே அதையும் தாண்டி கீழே இறங்கியது.
சட்டெனக் கண் விழித்த துர்கா ஆதியின் கையைப் பிடிக்க… அவளை விடாமல் முத்தம் கொடுத்துக்கொண்டே ஆதி அவள் கண்களைப் பார்த்துத் தன் கண்களாலேயே கெஞ்ச…. இத்தனை நாட்களாக இவனைக் காக்க வைத்தது போதும் என்று உணர்ந்த துர்கா அவனைப் பிடித்திருந்தத் தன் கைகளின் பிடியைத் தளர்த்த… கொஞ்சமாகத் துர்காவின் கழுத்தில் இருந்து தன் கைகளைக் கீழே இறக்கி ஆதி…
ஸ்ரீ ரியாவைக் காதலிப்பதை அவன் சொல்வதற்கு முன்பாகவே சங்கவி ரியாவின் முன்பு போட்டு உடைத்து விட… அதன் பிறகு அலுவலகத்திற்குள் ஸ்ரீயைப் பார்க்கும் போதெல்லாம் ரியா ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தாள். அவனிடம் சரியாக முகம் கொடுத்து ரியா பேசுவதே இல்லை. அலுவலக விஷயமாக ஏதாவது கேட்க வேண்டும் என்றால் மட்டுமே தானாகச் சென்று ஸ்ரீயிடம் பேசினால் ரியா.
இன்றும் அதுபோலத்தான், காலையில் வந்ததிலிருந்து ஸ்ரீ ரியாவின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்க…. ஆனால் ரியாவோ அவனைப் பொதுவாகவே கண்டுகொள்ளாமல் தன் பின்னால் சுற்ற விட்டாள் ஸ்ரீயை…
