Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 208

உன் ரகசிய ரசிகை நான் 208

by Layas Tamil Novel
284 views

EPISODE 208

சிவுவிற்கு திருமணம் ஆன ஓரிரு நாட்களிலேயே செண்பகத்தின் காணாமல் போன மகளை பற்றி கண்டுபிடிப்பதற்காக அவளை தன்னோடு அழைத்து அவளுக்கு இன்னும் மறு வீடு அழைத்து விருந்து வைக்கவில்லை.

அதனால் ஷிவுவையும், ரூபேஷையும் விருந்திற்கு வரச் சொல்லலாம் என்று கனகா விசாலாட்சி இடம் பேசிக்கொண்டு இருந்தார்.

சங்கவியை பார்ப்பதற்காக அவள் அறைக்கு சென்று இருந்தவர் சங்கவியை அப்போதுதான் வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்தார்.

சங்கவியை பார்த்து கனகாவும், விசாலாட்சியும் சிரித்தவர்கள். வா சங்கவி ஏன் ரூமை விட்டு வரவே மாட்டேங்குற… நாங்க எல்லாம் உனக்கு புது ஆளுங்களா என்ன.

எங்க கிட்டே ஏன் பேச தயங்கிட்டு ரூமை விட்டு வெளியே வர மாட்டேங்குற என்றார் விசாலாட்சி.

உங்க கிட்டே எல்லாம் பேச தயங்கிட்டு நான் ஒன்னும் வராமல் இல்ல… இங்கே வந்தா எல்லா கிழவிங்களும் சேர்ந்துட்டு அட்வைஸ் பண்றது… இல்ல ஏதாவது பேசி கழுத்தை அருப்பிங்க… அதனால தான் வரலை என்று நினைத்துக் கொண்டவள்.

விசாலாட்சியை பார்த்து லேசாக சிரித்தவள் எனக்கு உங்களையெல்லாம் பார்க்க ரொம்ப சங்கடமா இருக்கு.

என்னை பார்த்தா உங்களுக்கு எல்லாம் நான் உங்களுக்கு இதுக்கு முன்னாள் செய்தது எல்லாம் ஞாபகம் வரும்.

அப்பறோம் உங்களுக்கு என்னை பார்த்து பேச பிடிக்காம போய்டுமோ என்றுதான் நான் வெளியே வரலை என்றாள் சங்கவி.

ஏன் சங்கவி இன்னும் பழசை எல்லாம் நினைச்ட்டு இருக்க… நாங்க அதை எல்லாம் எப்பவோ மறந்துட்டோம்.

நீயும் பழசை எல்லாம் மறந்துட்டு எங்க கூட சகஜமா இருக்க முயற்சி பண்ணு என்றார் விசாலாட்சி.

சங்கவி விசாலாட்சிக்கு சரி என்று தலையை ஆட்டியவள். என்ன ஆன்ட்டி பேசிட்டு இருக்கீங்க என்றாள்.

அதுவா சங்கவி நம்ம ஷிவுவுக்கு மறுவீடு இன்னும் அழைச்சிட்டு வரலையா அது பத்தி தான் பேசிட்டு இருந்தோம் என்றார் விசாலாட்சி.

அப்டியா ஆன்ட்டி ஷிவுவை வர சொல்லி சொல்லிட்டீங்களா என்று கேட்டாள்.

இன்னும் இல்லை சங்கவி அண்ணி கிட்டே கேட்டுட்டு ஷிவுவை வர சொல்லிக்கலாம்னு தான் பேசிட்டு இருந்தோம் என்றார் கனகா.

அவரை பார்த்த சங்கவி முதல்ல இந்த குரூப்பை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்று நினைத்தவள். ஏன் நாம நம்ம பிள்ளையார் சுழியை இந்த குடும்பத்துடன் கிட்டே இருந்து ஆரம்பிக்கலாமே… என்று யோசித்தவள்.

ஏன் ஆன்ட்டி உங்க பொண்ணுக்கு மறுவீடு அழைக்க விசாலாட்சி அத்தை கிட்டே கேட்டு தான் செய்விங்களா?

ஷிவு உங்க பொண்ணு தானே நீங்களே ஷிவு அப்பா கிட்டே பேசிட்டு பேசி முடிவு பண்ணி இருக்கலாமே என்றாள்..

அவள் சொன்னதை கேட்ட கனகாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கனகாவிற்கு ஒரு நிமிடம் சங்கவி சொல்வது சரி என்று தோன்றியது. என் பெண்ணை மாறு வீடு அழைக்க நான் யாரை கேட்க வேண்டும் என்று கனகா நினைத்தார்.

இருந்தும் தன் மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

அவர் அமைதியாக இருப்பதை பார்த்த சங்கவி … ஏன் ஆன்ட்டி நான் சொல்றது சரி தானே என்று திரும்பி விசாலாட்சியிடம் கேட்டாள்.

சங்கவி இப்படி சொல்வதை கேட்டதும் விசாலாட்சி நீ சொல்றதும் சரி தான் சங்கவி.

நானும் எவ்வளவோ முறை இவ கிட்டயையும் என் தம்பிகிட்டயும் சொல்லிட்டேன் ஒவ்வொன்னையும் என்னை கேட்டு ஏன் செயிரிங்கன்னு.

ஆனா நான் சொன்னா இவங்க ரெண்டு பேரும் எங்கே கேக்குறாங்க என்றார் விசாலாட்சி.

பின் கனகாவிடம் திரும்பி நீயே ஷிவுவை மறுவீட்டுக்கு அழைச்சுடு கனகா என்றவர் நீங்க பேசிட்டு இருங்க நான் போய் சமையல் வேலை கொஞ்சம் இருக்கு அதை போய் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.

அவர் எழுந்து சென்றதும் அண்ணி இருங்க நானும் வரேன் என்று சொல்லி விட்டு செண்பகமும் அவருடன் எழுந்து சென்றார்.

ஹாலில் கனகவம், சங்கவியும் மட்டும் இருக்க…

தன்னிடம் தனியாக மாட்டிக்க கொண்ட கனகாவின் மனதை கலைக்க இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தவள்.

அப்பறோம் ஆன்ட்டி ஷிவுவிற்கு என்ன எல்லாம் மாறு வீட்டுக்கு செய்ய்ய போறிங்க என்று கேட்டாள்.

எனக்கு எங்கே சங்கவி அது எல்லாம் தெறியும் எப்பவும் அவரும், அண்ணியும் தான் சேர்த்து பேசி முடிவு எடுப்பாங்க நான் இதை எல்லாம் பெருசா கண்டுக்கிறது இல்லை என்றார் கனகா.

ஆன்டி என்று சங்கவி ஏதோ சொல்ல வர…

சங்கவி ஏன் என்னை இனும் ஆன்ட்டின் கூப்பிடற… நானும் உனக்கு அம்மா முறை தான் வேணும் நீ என்னை அம்மான்னு சொல்லியே கூப்பிடு என்றார் கனகா.

அவர் சொன்னதை கேட்டு சிநேகமாக புன்னகைத்த சங்கவி சரிங்க அம்மா என்றவள்.

உங்க பொண்ணுக்கு என்ன செய்ய போறாங்கனு நீங்க தெரிஞ்சுக்காம வேற யாரு தெரிஞ்சுவாங்க.

உங்க பொண்ணுக்கு என்ன செய்யணும், எப்படி செய்ய்யணுமாங்குற உரிமை உங்களுக்கு தான் முதல்ல இருக்கு.

அதை ஏன் நீங்க யாருக்கோ வீட்டுக்கொடுக்கறீங்க…

பாருங்க இப்போ கூட நாம ஷிவுக்காக தான பேசிட்டு இருந்தோம். ஆனா நீங்க பேசிட்டு இருக்க அப்போ விசாலாட்சி ஆன்ட்டி எழுந்து வேலை இருக்குன்னு போய்ட்டாங்க.

அப்போ அவங்களுக்கு ஏதோ நாம பேசினத்துல பிடிக்காம போய் இருக்கு.

நீங்களும் பார்த்தீங்கள்ள… இனிமேல் நீங்க யாரை பற்றியும் எதுவும் யோசிக்காதீங்க…

உங்க குடும்பதுக்குள்ள என்ன நடந்தாலும், இல்ல என்ன முடிவு எடுத்தாலும் உங்க கிட்டே முதல்ல சொல்லி என்ன செய்யலாம்னு உங்களையும் கேட்டுட்டு உங்க முடிவு தெரிஞ்ச பிறகு தாநீ செய்யணும் என்று கனகவர்க்கு தூபம் போட ஆரம்பித்தாள் சங்கவி.

சங்கவி சொன்னதை எல்லாம் கேட்ட கனகாவிற்கு மனதிற்குள் அவள் சொன்னதை எல்லாம் அசை போட ஆரம்பித்தார்.

தான் போட்ட தூபம் கனகாவின் மூளைக்குள் பரவுவதை அவர் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டே கணித்து இருந்தாள் சங்கவி.

பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று நினைத்தவள் தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று.

விஷம் கக்க பாம்பு தன் புற்றை விட்டு வெளியே வந்து விஷத்தை கக்கி விட்டு மீண்டும் தன் புற்றுக்குள் அடை படுக் கொள்வது போல சங்கவி தன் ரூமிற்குள் மீண்டும் தஞ்சம் புகுந்தாள்.

கனகவிற்கு சங்கவி சொன்ன வார்த்தைகள் எல்லாம் மனதிற்குள் திரும்ப திரும்ப ஓடிக்கிட்டு கொண்டு இருக்க..

அப்போது வீட்டிற்குள் அக்கா… அக்கா… என்று அழைத்துக் கொண்டே துரை வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர் வீட்டிற்குள் வந்ததும் வராததும் விசாலாட்சியை அழைத்த படி வருவதை பார்த்த கனகா. ஊரில் இருந்த வரை எப்போதும் என் பின்னாலேயே சுற்றும் மனுஷன்.

எப்போ இங்கே வந்தாரோ அப்போ இருந்து எல்லாமே அவர் அக்காகான் அவருக்கு.

என்னை கண்டு கொள்வதே கிடையாது என்று நினைத்தவர்.

எழுந்து சென்று துரையிடம் என்ன உள்ளே வந்ததும் வராததுமா உங்க அக்காவை கூப்பிட்டுட்டே வரீங்க…

நான் இங்கே ஒருத்தி குத்துக் கல்லாட்டம் உக்கார்ந்து இருக்குறது உணங்கலுக்கு தேரியலையா என்று கேட்டார்.

இது என்ன டி… கனகா புதுசா கேட்குற… நான் எப்பவும் என் அக்காவை கூப்பிட்டுட்டே தான் உள்ள வருவேன் உனக்கு என்ன தெரியாத என்று கேட்டார் துரை.

அதெல்லாம் அல்லவே தெறியும் இன்னு எங்கே போய்ட்டு வந்தாலும், என்ன வேணும்னாலும் என்னை கேளுங்க… இல்ல கூப்பிடுங்க.

இத்தனை வருசம் ஆன பிறகும் இன்னும் உங்க அக்கா கூடவே சுததீங்க என்றார் கனகா.

ஏய்.. என்ன டி ஆச்சு உனக்கு இன்னிக்கு ஏன் ஒரு தினுசா பேசுற… என்றார் துரை.

எனக்கு எல்லாம் எதுவும் ஆகலை நீங்க வாங்க என்று துரையை கை பிடித்து அழைத்துக் கொண்டு அவர் அறைக்கு சென்றார்.

துரை விசாலாட்சியை அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் வரவும்.

வெளியே சென்று விட்டு களைப்பாக வரும் தம்பிக்கு மோர் எடுத்துக்க கொண்டு வந்த விசாலாட்சியும், அவர் பின்னால் வந்த செண்பகமும்.

துரையை இடையில் மறித்து பேசிய கனகாவை கண்டதும் அப்படியே நின்று விட்டார்.

கனகா பேசியதை எல்லாம் கேட்ட விசாலாட்சி ஏன் கனகா இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்று புரியாமல் போனது.

துரையும், கனகாவும் பேசிக் கொண்டு இருந்ததை மட்டும் தான் விசாலாட்சியும், அவருடன் நின்று இருந்த செண்பகமும் கேட்டு கனகாவை தவறாக புரிந்து கொண்டனர்.

திடீரென கனகாவிற்கு என்ன ஆயிற்று அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று இருவருக்கும் இவ்வளவு புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு எதுவும் பேசிக்கொள்ளாமல் திரும்பவும் கிச்சனுக்கும் சென்று விட்டனர்.

ஆனால் சங்கவி கனகாவிடம் பேசியதை எல்லாம் இவர்கள் இருவரும் கேட்டிருக்கவில்லை கேட்டிருந்தால் கண்டிப்பாக செண்பகமே சங்கவியை கண்டித்து இருப்பார்.

எப்படியோ சங்கவி நினைத்தது போல கனகாவின் மனதில் விஷத்தை கலந்து விட்டால் இந்த கொடிய விஷம் எவ்வளவு தூரம் மற்றவரை தாக்கும் என்று யாருக்கு தெரியும்.

❤️

இரவு உணவை முடித்துக் கொண்டு துர்கா தன் அறையில் ஆதி இன்னும் வராததால் அவனுக்காக காத்திருந்தாள்.

கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு கையில் போனை வைத்து அதில் ரிலீஸ் பார்த்துக் கொண்டு இருந்தால்.

நீண்ட நேரம் ஆகியும் ஆதி வராததால் மிகவும் சோர்வான துர்கா இரவு உடையை மாற்றிவிட்டு வந்து உறங்கலாம் என்று எழுந்து ட்ரெஸ்ஸிங் ரூம் இருக்கு சென்றால்.

அங்கே போய் உடைமாற்றலாம் என்று மூலங்கள் இரவு உடைய கையில் எடுத்து வைத்தவள்.

மிகவும் சோர்வாக இருக்கவும் அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தவள் அதன் மீது சாய்ந்து அப்படியே தூங்கிப் போனாள்.

வேலைக்கு என்ன முடித்துவிட்டு வந்த ஆதிக்கு ஆள் எல்லாம் இருக்காது அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கி விட்டார்கள் என்று நேராக தன் மனைவியை பார்க்க ஆவலாக அறைக்கு வந்தான்.

கதவை திறந்து கொண்டு உள்ளே கட்டிலை பார்க்க அங்கேயே துர்கா இல்லாததால். எங்கே போய் இருப்பாள் என்று யோசனையுடன் பெட்ரூம் கதைவை சாத்திவிட்டு உள்ளே வந்தான்.

துர்கா அங்கு இல்லாமல் போகவே ஸ்டடி ரூமில் இருக்கிறாளா என்று பார்த்த ஆதி அங்கும் துர்கா இல்லாமலிருக்க..

எங்கே போய் இருப்பா.. கீழயும் லைன்த் எல்லாம் அனைச்சிருக்கு யாரும் இருக மாதிரி தெரிர்யாளை என்று யோசித்துக்கொண்டே திரும்ப..

ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த சோபாவில் உட்கார்ந்தவாறு துர்கா உறங்கிக் கொண்டு இருப்பதை பார்த்தான்.

அவள் மெத்தையில் உறங்காமல் ட்ரெஸ்ஸிங் ரூமில் உறங்குவது பார்த்தவன் கையில் இருந்த லேப்டாப் பேக்கய் வைத்துவிட்டு சத்தம் எழுப்பாமல் ட்ரெசிங் ரூமிற்குள் சென்றான்.

கையில் மாற்றுவதற்காக எடுத்த உடையை கட்டிப்பிடிச்சு பிடித்துக்கொண்டு கொண்டு உறங்கயவளை பார்த்தவன்.

மெதுவாக அவ்வளவு கையில் இருந்த ஆடையை அவள் கையில் இருந்து எடுத்து வைத்தவன் குனிந்து துர்காவை மெதுவாக அவள் தூக்கம் கலையாதவாரு த்ன் கைகளில் ஏந்தியவன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து பெடடிற்கு அவளை கொண்டு வந்து படிக்க வைத்தான்.

துர்காவை மெத்தையில் படுக்க வைத்து விட்டு ஆதி எழுந்திருக்க போக… அவன் கழுத்தை சட்டென கட்டிக் கொண்டு நீயும் தூங்கு டா… என்றாள் அறை தூக்கத்தில்.

❤️

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured