தப்பு 50
“உனக்கு எப்பவும் விளையாட்டு தான் டா.. ” என்று யுகேனை கடிந்து கொண்டவள் “நீ சொல்லு பூவிழி “என்று சேரில் சாய்ந்து அமர்ந்தாள் பிரியா. பூவிழியால் தயங்கித் தயங்கித் திக்கித் திணறித்தான் அந்த விஷயத்தைச் சொல்ல முடிந்தது.
அவள் சொல்லி முடித்ததும் டாக்டர் பிரியா புன்னகையுடன் சேரில் இருந்து முன்னாள் வந்து இருக்கையில் கையை ஊன்றிய ப்ரியா.
“பூவிழி, நீ இவ்வளவு வெட்கப்படவே தேவையில்லை! குழந்தை வாய் வைத்துப் பால் குடிக்கும் போது, அந்தத் தூண்டுதலால் அம்மாவுக்கு இதுபோல உணர்வுகள் ஏற்படுவது மருத்துவ ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் நூறு சதவீதம் இயல்பான ஒன்றுதான். தாய் குழந்தையை நெஞ்சோட அணைச்சு பிடிச்சு பால் கொடுக்கிற அப்போ குழந்தையும் தாயும் இன்னும் நெருக்கமாவார்கள். இது தாய்மையின் இன்னொரு பரிமாணம். இதில் தப்புன்னோ அசிங்கமுன்னோ எதுவுமே இல்லை” என்று மிக இயல்பாகப் புரிய வைக்க.
பூவிழியின் முகத்தில் இருந்த பதற்றம் பறந்துபோய் லேசான நிம்மதி ஏற்பட்டது. அருகில் இருந்த யுகேனும் ஒரு புன்னகையுடன் பூவிழியின் தோள் மீது கை போட்டு ஆசுவாசப்படுத்தினான்.
தொடர்ந்து பேசிய பிரியா, “ஆனா பூவிழி, உன்னைப் பொறுத்தவரை அந்த உணர்வு இப்போதைக்கு ரொம்பவும் கூச்சத்தையோ அல்லது சமாளிக்க முடியாத நிலையையோ உண்டாக்குது. இதனால நீ குழந்தைக்குப் பால் கொடுக்குறதை ரொம்பவும் கஷ்டப்பட்டுத் தவிர்க்க வேண்டி வரும், அது உனக்கும் மன உளைச்சலைத் தரும், குழந்தையோட பசித் தேவைக்கும் தடைபடும். அதனால, இப்போதைக்கு இந்த மனநிலைக்குத் தகுந்த மாதிரி நாம ஒரு ஈஸியான வழியைப் பின்பற்றலாம்” என்றாள்.
“என்ன ப்ரியா அது?” என்று யுகேன் கேட்க, ப்ரியா விளக்கத் தொடங்கினார்.
“இப்போதைக்கு குழந்தைக்கு நேரடியாகப் பால் கொடுப்பதில் சிரமமா இருக்குறதால ஒரு பிரெஸ்ட் பம்ப்’ பயன்படுத்தலாம். இதன் மூலம் பாலை முன்கூட்டியே பம்ப் பண்ணி ஸ்டோர் பண்ணி வெச்சுக்கலாம் . அப்பறோம் அந்தப் பாலை பாட்டில்ல ஊத்தி குழந்தையோட பசியைப் போக்கிக்கொள்ளலாம். இது உனக்கும் அந்தத் தயக்கத்திலிருந்து ஒரு இடைவெளி தரும், குழந்தைக்கும் சரியான நேரத்தில் பால் கிடைக்கும்.” என்றாள்
“”அக்கா அப்படி எல்லாம் பண்ணலாமா? அதால இவனுக்கு எந்த தொந்தரவும் இருக்காதா?” என்றாள் பூவிழி
“எந்த பிரச்சனையும் வராது பூவிழி. நான் அதை உனக்கு எக்ஸ்பிலைன் பண்றேன் ” என்ற ப்ரியா நர்ஸிடம் சொல்லி பிரேஸ்ட் பம்ப் செய்யும் கருவியை எடுத்து வர சொல்லிவிட்டு “யுகேன் நீ கொஞ்சம் வெளிய இரு ” என்றாள் ப்ரியா.
“நான் எதுக்கு வெளிய போகணும் ” என்று சேரில் சாய்ந்து அமர்ந்தான்.
கையில் இருந்த குழந்தையை ஆட்டிய படி பூவிழி அவனை முறைக்க..
“சரி அவனைக் கொடு நான் வெளியே இருக்கேன் ‘ என்று எழுந்து பிள்ளையைக் குனிந்து வாங்கியவன் அவள் காதருகே வந்து “எப்படியும் என் முன்னாடி வீட்ல இதெல்லாம் பண்ணப் போற..அப்பறோம் என்ன எனக்கு தெரியாம இதெல்லாம் செய்றது ” என்றவன் குழந்தையை வாங்கிக்கொண்டு செல்ல..
ப்ரியாவோ “இவனை சமளிக்குறது உன்னால தான் முடியும் பூவிழி ” என்று சிரித்தவள் அந்த பம்பை எப்படி உபயோகிப்பது. பாலை எப்படி ஸ்டோர் செய்வது என அனைத்தையும் பொறுமையாக சொல்லிக்கொடுக்க..
பூவிழியும் ஒருவித கூச்சத்தோடு அதை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
வீட்டிற்கு அவர்கள் வருகையில் அப்போது தான் கார்த்திகேயனும் வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரிடம் வந்த யுகேன் “என்ன மாமா அத்தை சமாதானம் ஆகிட்டாங்க போல.. ” என்றான்.
அவனை மென்மையாகப் பார்த்து புன்னகைத்தவர் “அதனால தானே யுகேன் இவ்ளோ நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கேன். ஆரா போன் பண்ணி என்னை வர சொல்லி கூப்பிட்டா. ” என்றவர் பார்வை யுகேன் பின்னால் நின்று அவரையே பார்த்துக்கொண்டிருந்த பூவிழியின் பக்கம் திரும்பியது.
அவர் பார்த்ததும் சட்டென்று தன் பார்வையை அவள் தாழ்த்திக்கொள்ள..
“என்னைப் பார்க்க நீயென் பூவிழி கூச்சப்படணும்,. நான் தான் உன் முன்னாடி தலை குனிஞ்சு நிக்கணும். நீ இப்படி ஒரு நிலைக்கு இருக்க நானும் ஒரு காரணமாகிட்டேன் . என்னை மன்னிச்சிரும்மா “என்று அவளிடம் வந்தவர் அவள் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டார்.
“இல்ல சார் அப்படி எல்லாம் சொல்லாதீங்க. என் அம்மா தான்.. ” என்று பூவிழி அவசரமாக மறுக்க..
“அது என்ன சார்ர்ர்… அந்த கற்பகத்தை உன் அம்மானு உரிமையா சொல்ற.. அப்போ இவரு யாரு உனக்கு” என்றபடி அங்கு வந்தார் பர்வதம்.
அவரைப் பார்த்ததும் பயந்து போய் யுகேனின் கையைப் பற்றிக் கொண்டு அவன் பின்னால் மறைந்து கொள்ள முனைந்தாள்.
“ஏய்! இப்போ எதுக்கு அவன் பின்னாடி போற.. இங்க வா.. ” என்று பூவிழி கையைப் பற்றி முன்னே இழுத்த பர்வதம் “கற்பகம் உனக்கு அம்மான்னா இவரு சாரா உனக்கு ” என்று அவளை அதட்டினார்.
பூவிழியோ இல்லை என்ற ரீதியில் தயக்கமாக தலையை ஆட்ட..
“வாயைத் திறந்து பேசு..” என்று அதட்டினார்.
அவர் உரிமையாகப் பேசுவதை பார்த்து யுகேன் விலகி நிற்க..
“மாமா… ” என்று அவன் புறம் போக இருந்தவளை பற்றி தன் முன் மீண்டும் நிறுத்திய பர்வதமோ “என்ன மாமா.. நோமான்னு.. நான் கேட்டதுக்கு பதில் வரணும் இப்போ ” என்று அவளை அதட்ட.
அவள் விழிகளில் கண்ணீர் கோர்த்த்துக்கொண்டது,
அதைப் பார்த்ததும் வேகமாக முன்னே வந்த காவேரியோ “இப்போ எதுக்கு என் புள்ளைய அதட்டுற நீ.. ” என்று அவர் பற்றி இருந்த கையை பிரித்து பூவிழியை இழுத்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டார்.
“உன் புள்ளையா? இவ என்னோட பொண்ணு. உனக்கு புள்ளைங்க யுகேனும், யுவனும் தான் புரிஞ்சுதா. இனிமே இவ என் பொண்னு எனக்கு மூத்தவ ஆரா,,, இளையவ பூவிழி புரிஞ்சுதா இப்போ ” என்று சொன்தைக் கேட்டு அங்கிருந்த ராஜேந்திரன், கார்த்திகேயன், யுகேன் , யுவன், கஸ்தூரி , அவர்கள் வீடு ட்ரைவர் முதற்கொண்டு சந்தோஷமானார்கள்.
அவர்களை விட அதிர்ச்சியும், ஆனந்தமுமாக இருந்தது பூவிழியும், காவேரியும் தான். அவளை பர்வதம் ஏற்றுக்கொண்டதை நினைத்து சந்தோசம் அவர்களுக்கு.
ஆராவோ வேகமாக பர்வதத்திடம் வந்தவள் “உங்களுக்காக தான் நான் இவ்ளோ நாளா இவகிட்டே பேசாம இருந்தேன். எனக்கு முந்திட்டு நீங்க வந்து பேசினா என்ன அர்த்தம் ” என்றவள் “நீ வா பூவிழி நாம உள்ள போகலாம். துவங்க அடிச்சுக்கட்டும் ” என்று பூவிழி கையைப் பற்றி உள்ளே அழைத்து சென்றவள் சோபாவில் தன் அருகே அமர்த்திக்கொள்ள..
அவளோ அதில் உட்கார பயந்து கொண்டு ராஜேந்திரனைப் பார்த்தார்.
“இது உன் வீடும்மா.. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ” என்றார் அவர்.
இருந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்தது போல ஒரு நிம்மதி அனைவர் முகத்திலும் பரவியது.
கார்த்திகேயனும் நெகிழ்ச்சியாக பார்க்க..
பூவிழி அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து அப்பா! என்று குரல் தழு தழுக்க அவரை அழைத்தாள்.
அவரும் குழந்தையோடு அவளிடம் செல்ல,,
“என் மேல உங்களுக்கு வெறுப்பு இல்லையே.. ” என்று எழுந்தாள்.
“நிஜமா இல்லம்மா அப்டி எல்லாம் நான் நினைக்கவே இல்ல.. “என்றார்.
இப்பொது தான் அவளுக்கு த்ரிப்தியாக இருந்தது.
“சரி சரி முதல்ல நீ லேகியம் சாப்பிடணும். நான் உனக்காக செஞ்சு வெச்சிருக்கேன் நீ வா ” என்று அவள் கையைப் பற்றிக்கொண்டு டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்தவர் ஏற்கனவே செய்து வைத்திருந்த கருப்பட்டி லேகியத்தை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டு “நிறய சாப்பிடு அப்போ தான் பால் நல்லா ஊரும் ” என்றார்.
காவேரியும் அங்கு வந்தவர் “உனக்கு உடம்புக்கு தெம்பு எதுவும், என் பேரனுக்கு பசியாத்த பால் ஊறவும் நாங்க கொடுக்றவதையெல்லாம் மறக்காம சாப்பிடணும் சரியா?” என்றார்.
“அம்மா எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்ல. நான் இப்போதான் டாக்டர்கிட்டே போய் பேசிட்டு வந்தேன் “என்று ப்ரியாவை சந்தித்து வந்ததை பற்றி அவள் சொல்ல வர,.
அதற்குள் குறுக்கே புகுந்த யுகேன் “அ.. அது நம்ம ப்ரியா இருக்க இல்ல அத்தை அவளை தான் போய் பார்த்துட்டு வந்தோம். இவளுக்கு உடம்பு வலு குறைஞ்சிருச்சு. அதனால நல்லா ஹெல்த்தியா சாப்பிடணும். நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க” என்றான்.
அவனை புரியாமல் பார்த்த பூவிழி “அப்படி எல்லாம் ப்ரியா அக்கா சொல்லவே இல்லையே .. ” என்று யோசித்தவள் “அம்மா அது வந்து எனக்கு பால் நல்லா தான்… ” என்று மீண்டும் பூவிழி பேச வர..
“என்ன நல்லா தான் .. அதெல்லாம் இல்ல. இவ பேச்சைக் கேட்காதீங்க.. முதல்ல இவளைப் பேசவே விடாதீங்க” என்று கிண்ணத்தில் இருந்த லேகியத்தை ஸ்பூன் நிறைய எடுத்து அவள் வாயில் திணித்துவிட்டு..
“அஹ்.. அ.. “என்று அவன் வாயில் திணித்ததில் அதிர்ந்து போனாள் பெண்ணவள்.
“அவன் எதையோ மறைக்குற போல இருக்குல்ல செல்லம் ” என்று ஆராவின் காது கடித்தான் யுவன் .
“ம்ம்ம் ஆமா யுவன் , நானும் அதை தான் நினைச்சேன் ” என்றாள் அவர்களை பார்த்துக்கொண்டே.
யுகேன் பூவிழியைப் பேசவிடாமல் கிண்ணத்தில் இருந்த மொத்த லேகியத்தையும் சாப்பிட வைத்து தான் அவளையே விட்டான்.
அவளும் ஒன்றும் சொல்வதற்கு வழி இல்லாமல் சாப்பிட்டு முடித்தாள்.
“இங்க பாரு பூவு, நானும், காவேரியும் என்ன செய்து கொடுத்தாலும் சாப்டறனும். இந்த மாதிரி பச்சை உடம்பா இருக்க அப்போ இதெல்லாம் சரியா சாப்பிட்டு உடம்பை பாத்துக்கணும். அப்போதான் உன் உடம்பும் சீக்கிரம் குணமாகும் , இவனையும் நல்லா பாத்துக்க முடியும் சரியா?” என்றார்.
அவளும் சரி என்று லேகியத்தை விழுங்கிக்கொண்ட பூம் பூம் மாடு போல தலையை ஆட்டியவள் ஓரக்கண்ணால் யுகேனை முறைக்கத் தவறவில்லை.
இரவு வரை அவள் மேலே அறைக்கு செல்லவே இல்லை. கீழேயே காவேரிக்காக கொடுத்திருந்த அறையிலேயே குழந்தையை வைத்துக்கொண்டு பாலை பிரியா சொன்னது போல பம்ப்பை வைத்து எடுத்து அவனுக்கு சங்கில் ஊற்றி வார்க்க பழகி இருந்தாள்.
அவன் சென்றதும் விஷயத்தை காவேரியிடம் பொதுவாக சொல்லி நேரடியாக பால் கொடுக்க முடியாது என்று புரியவைத்தாள் பூவிழி.
“சரி பரவால்ல என்னவோ சொல்ற நீ.. எப்படியோ பையனுக்கு பசியாறினா போதும் ” என்றவர் விஷயத்தை பர்வதத்திடமும் சொல்லி இருந்தாள்.
இரவானதும் அனைவரும் சாப்பிட ஒன்று கூடி இருக்க.. காவேரி குழந்தையை பார்த்துக்கொள்ள..
பர்வதம் அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பறிமாறி சாப்பிட வைத்தார்.
ஆராவையும், பூவிழியையும் ஒன்று போல கவனிக்கவும் தவறவில்லை பர்வதம்.
ராஜேந்திரன் மட்டும் இன்னமும் கவலையிலேயே இருந்தார் அவருக்கு காவேரி அவரிடம் வந்த நாளில் இருந்து முகம் கொடுத்தும் பேசவில்லை என்று வறுத்தம் இருந்தது.
அவர் அருகே அமர்ந்து இருந்த யுகேனோ “எதுக்கு இவ்ளோ கவலையா இருக்கீங்க “என்றான் வேண்டுமென்றே.
“கவலையா? அதெல்லாம் எதுவுமில்லை. நான் இப்போதான் சந்தோசமா இருக்கேன். நான் பண்ணின தப்பை மன்னிச்சு எல்லாரும் என்கூட சகஜமா பேசுறதே எனக்கு பரம திருப்தியா இருக்கு” என்றார் .
“சரி ‘ என்றவன் அங்கு வைத்து எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்துவிட்டான்.
அவர் சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு ஹாலில் சோபாவில் குழந்தையை வைத்து கொஞ்சிக்கொண்டிருந்த காவேரியிடம் வந்தவர் கையில் இருந்த குழந்தையை கொஞ்சுவது போல அருகே சென்று அமர்ந்து கொள்ள.
சட்டென குழந்தையை அவர் கையில் கொடுத்துவிட்டு வெடுக்கென எழுந்து கொண்டார் அவர் . அதை கண்டதும் அவர் முகம் வாடிவிட்டது. அவரை பார்க்க முடியாமல் டைனிங் டேபிலுக்கு வந்தவர் சாப்பிட அமரப் போக..
“அம்மா இங்க வந்து உக்காருங்க ” என்று தன் அருகே அமர்த்திக்கொண்டான் யுகேன்.
அவனைப் பார்த்து சிரித்தவர் பர்வதம் “நீயும் வந்து உக்காரு சேர்ந்து சாப்பிடலாம் ” என்று அவரையும் அழைத்தார் காவேரி.
“ம்ம்.. சரி “என்று அவர் அருகே இருந்த சேரில் முறுக்கிக்கொண்டு வந்து அவர் அமர..
“அதான் எல்லாம் ராசி ஆயாச்சு இல்ல. அப்பறோம் எதுக்கு நீ முறுக்கிட்டு இருக்க.. ” என்றார் காவேரி.
“நீ மட்டும் என் அண்ணன்கிட்டே முறுக்கிட்டு இருக்கலாம் . நான் இருக்கக்கூடாதா?” என்றார் அவர்.
“ம்ம்.. அவர் பண்ணினத்துக்கு நான் எதுவும் சொல்லாம அமைதியா இருக்குறதே பெரிய விஷயம் . நீ பேசாம சாப்பிடு . உன்கிட்டே வாயைக் கொடுத்தது என்னோட தப்பு” என்று சாப்பிட ஆரம்பித்தார்.
“அம்மா நான் ஒன்னு சொன்னா கேப்பிங்க தானே நீங்க ” என்றான் யுவன் .
“சொல்லு டா ” என்று அவனைப் பார்த்தார்.
“அவர் ஏன் உங்களை இங்க கூடி வந்து பூவிழியை உங்க கைல கொடுத்தாருன்னு காரணம் தெரியும் தானே. ” என்றான்.
“தெரியும் தான். ஆனா உன்னையும், என்னையும் அவர் பிரிச்சு வெச்சாரு இல்ல. என்னை யாரோ மாதிரி இங்க வேளைக்கு வெச்ச மாதிரி உன்னையும் என் கூடவே தங்க விட்டிருக்கலாம் அதை பண்ணலையே அவரு “என்றார்.
“தப்பு தான் ஆனா அவருக்கு அப்போ அந்த சூழல்ல என்ன பண்றதுனு தெரியாம அப்படிப் பண்ணிட்டாரு மன்னிச்சிருங்களேன் ” என்றான்.
“சரி அந்த விஷயத்துக்கு மன்னிச்சுரலாம். ஆனா இவ என்ன டா பண்ணினா இவர் மகனை கல்யாணம் பண்ணி , குழந்தை பெத்து கொடுத்துட்டு இங்க இருந்து போறனும்னு இவளை எவ்ளோ பாடு படுத்தினார், அது மட்டுமா அவ பிரசவ வலியில் துடிச்சுட்டு இருக்க அப்போ உள்ள வெச்சு பூட்டிடுப் போனாரே அது என்ன தெரியாமையா பண்ணாரு ” என்று பொரிந்து தள்ளினார் காவேரி.
இதுவரை அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டே அமர்ந்து இருந்த ராஜரேந்திரன் வேகமாக எழுந்து காவேரியின் முன் வந்து நின்றவர் “டேய் நீ சாப்பிட்டியா? ” என்றார் யுகேனிடம்.
“ம்ம்.. சாப்பிட்டேன் ” என்று தட்டைக் காட்டினான் .
“இவனை கூட்டிட்டு நீயும், உன் பொண்டாட்டியும் ரூமுக்கு போங்க. நான் இவ கிட்டே கொஞ்சம் பேச வேண்டி இருக்கு” என்று காவேரியை அழுத்தமாக பார்த்தபடி சொல்ல..
“அப்போ நாங்க ” என்றனர் மற்றவர்கள் ஒன்று போல..
“சாப்பிட்டு முடிச்சா எல்லாரும் போகலாம். இவளைத் தவிர.. ” என்றார் ராஜேந்திரன் பழைய கம்பீரத்தோடும், அதட்டலுமாக.
அடுத்த நொடி எல்லோரும் சென்றுவிட..
“அண்ணா நான் இன்னும் சாப்பிடல.. ” என்று பர்வதம் கையில் தட்டை வைத்துக்கொண்டு அவரைப் பார்க்க..
காவேரியோ ராஜேந்திரனின் கம்பீரத்தையும் அதிகாரத்தையும் பார்த்து வாயைப் பிளக்க..
“அப்போ நீ சாப்பிடு , நான் இவளை என் ரூமுக்கு கூட்டிப் போறேன் ” என்று காவேரியின் கையைப் பற்றி “என்கூட வா பேசணும் ” என்று இழுத்தார்.
அவர் சொன்னதில் வாயில் வைத்திருந்த உணவு புரையேறிவிட,,
இருமிக்கொண்டே அவரை முறைத்த காவேரி ‘நான் வரல.. ” என்று அவர் கையை தட்டிவிட்டார்.
“இப்போ மட்டும் நீ வரல.. இவ முன்னாடியே உன்னை தூக்கிட்டுப் போயிருவேன் பார்த்துக்க..’ என்று தன் டி சர்ட்டின் கையை உயர்த்தி பளு காட்ட..
இப்பொது வாயடைத்து போனது என்னவோ பர்வதம் தான்.
அவரோ அதிர்ந்து அவரைப் பார்க்க..
“என்ன பாக்குற.. உன்னோட அண்ணி தானே இவ . .எனக்கு அந்த உரிமை இருக்கு தானே.. .’ என்றார்.
“ஆஹ்.. ” என்று மேலும் வாய்யைப் பிளந்தவர் இருக்கிறது என்ற ரீதியில் தலையை நாலாபக்கமும் ஆட்ட..
“வா .. ‘என்றார் காவேரியிடம்.
“நான் வரல.. எனக்கு சாப்பிடணும் ” என்று அவர் பிடிவாதம் செய்ய..
“அப்போ வரல அப்படி தானே ” என்றவர் நொடியும் தாமத்திக்காமல் காவேரியை இழுத்து நிறுத்தி அவரை தன் கையில் ஏந்திக்கொண்டு தன் அறை நோக்கி வேகமாக நடந்தார்.
இந்த காட்சியை பல ஜோடிகங்கள் அவரவர் அறையில் இருந்து ஒழிந்த படி பார்த்துக்கொள்ள..
பர்வதமோ பேய் அறைந்தது போல உட்கார்ந்திருந்தார்.
“சரி பார்த்தது போதும் முதல்ல சாப்பிடு நானும் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்று அவர் முன் வந்து நின்றார் கார்த்திகேயன்.
அவரோ கார்திகேயனைப் புரியாமல் பார்க்க..
“ஹா!” என்று பர்வதம் அதிர்ந்து பார்க்க..
“என்ன சாப்பிடலையா?” என்றார்
“ஹும்… பசி போயிருச்சு ” என்றார் ஒரே நேரத்தில் இரு அதிர்வுகளைத் தாங்க முடியாமல்.
“அப்போ வா போலாம் “என்று பர்வதத்தின் கையைப் பற்றி அழைக்க..
“கை கழுவனும் ” என்றார் அவர் அரண்டு போய்.
“ரூம்ல போய் கழுவிக்கலாம் வா டி “என்று அவர் பர்வதத்தை இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல..
“இது நம்ம லிஸ்டலையே இல்லையே ” என்ற ரீதியில் யுவன், யுகன், பூவிழி, ஆரா என அனைவரும் பார்த்தவர்கள் அவரவர் அறைக்கதவை சுற்றிவிட்டு தங்கள் ஜோடியுடன் சென்றுவிட்டனர்.
கிச்சனில் இருந்து ரோபோவைப் போல இந்த காட்சிகளை எல்லாம் கண்டு மிரண்ட படி டைனிங் டேபிளுக்கு வந்த கஸ்தூரி “ஹும்.. வயசான காலத்துல இவங்க எல்லாம் பொண்டாட்டிங்க கூட ஜாலியா இருக்காங்க . ஆனா நான் இந்த வயசுல தனியா கிடந்து அல்லாடுறேன் . யோவ் சாருகேசி.. வெளியூர்ல வேலை பார்ததேல்லாம் போதும் . வேலையை விட்டுட்டு வாயா. அனுபவிக்க வேண்டிய வயசுல எல்லாத்தையும் அனுபவிச்சா தான் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்று போனில் இருந்த தன் கணவனிடம் சொல்ல..
“சரி டி சீக்கிரமே வரேன் ‘ என்று அவரும் சிரித்துக்கொண்டே போனை வைத்தார்.
ஒருவழியாக எல்லோரும் மனநிலை மாரி அந்த வீடே இப்போது புதுப் பொலிவோடு மாறத்துவங்கி இருந்தது.
ரூமுக்குள்ள போன யுகேன் பூவிழியை படுத்துற பாட்டோட எபிலாக் வரும்.
அப்பறோம் தீபாவளி ஆப்பர் நம்ம மெம்பெர்ஷிப் ரீடேர்ஸ்க்காக லான்ச் பண்ணப்போறேன். சோ உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு. வெயிட் பண்ணுங்க
அடுத்த எபிலாக்குடன் இந்த கதை நிறைவடைகிறது. நாளை இரவு வரை தான் பிரீ இருக்கும் படிச்சுக்கோங்க டியெர்ஸ் அப்பறோம் பிரீமியம்க்கு மாத்திருவேன்.
டாடா…
