EPISODE – 18
“குமார்… இப்போ நாம எங்க போறது… என்ன பண்ணுறது… ஒன்னும் புரியல எனக்கு…” என்றான் பவித்ரன்.
“பவி… அந்த அட்டெண்டர… அவன் இருக்கிற இடம் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம் இல்ல.. ” என்றான்.
“அவனோட மொபைல் நம்பர் சொல்லு… நான் சைபர் கிரைம்ல சொல்லி ட்ராக் பண்ண சொல்றேன்” என்றான் குமார்.
பவித்ரன் அவனது நம்பர் சொல்ல…
குமார் சைபர் கிரைமில் அழைத்து “இந்த நம்பர் லொகேஷன் சீக்கிரம் ட்ராக் பண்ணி சொல்லுங்க” என்றான்.
“குமார்… விகாஷினி வீட்டுக்கு இரண்டு கான்ஸ்டபிள் போயாச்சு அதனால அங்க பயமில்லை…” என்றான்.
“ஆனா மகதி ஹாஸ்டல்ல இருக்கா… அது அவளுக்கு சேஃப் இல்ல… அவள உன்னோட வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கலாம் அங்க சேஃப் தான் அவளுக்கு…” என்றான் பவித்ரன்.
“ஆமா பவி… நான் இதை யோசிக்கவே இல்ல பாரு…” என்றவன் ஃபோனை எடுத்து மகதிக்கு அழைத்தான்.
ஒரு ரிங்… போனதுமே மகதி போனை எடுத்து விட்டாள்…
“ஹலோ என்ன இவ்ளோ காலையிலேயே கூப்பிட்டீங்க…” என்றாள்
“ஆமா மகதி… நீ என்ன பண்ணிட்டு இருக்க…” என்றான்.
“நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு நீங்க சொல்லுங்க பாக்கலாம் …” என்றாள் குலைந்து கொண்டே.
“டேய்… இந்த நேரத்துல இந்த ரொமான்ஸ் எல்லாம் தேவையா” என்று முனுமுனுதான் பவித்ரன்.
“நீ என்ன குளிச்சிட்டு இருந்தியா…” என்றான் குமார் ஆர்வமாக.
“இல்லையே ஏன் அப்படி சொல்ற…” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.
“இல்ல…. ஸ்மெல் இங்க அடிக்குது…” என்றான்.
“டேய்…” என்றாள் செல்ல கோபத்துடன்.
“ அங்கு ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்… அவன் இருக்கானா… இல்லையானான்னு கூட தெரியல… இங்கு என்னடான்னா இது ரெண்டும் இப்படி உயிரை வாங்குது…” என்று புலம்பினான்.
“சரி… இங்க ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு நான் சொல்றத மட்டும் கவனமா கேளு…” என்றவன்.
“நீ அங்கிருந்து கிளம்பி என்னோட வீட்டுக்கு இப்ப வந்துரு… நீ இப்போ ஹாஸ்டல்ல இருக்கிறது சேஃப் இல்ல…” என்றான்.
“என்ன… திடீர்னு என்ன உங்க வீட்டுக்கு வரச் சொல்றியே … எனக்கு பயமா இருக்கு… எதுக்கு வர சொல்ற… ஏதாவது ப்ளான் வச்சிருக்கியா…” என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள் மகதி.
“ஆமா அப்படியே உன்னை பொய் சொல்லி என் வீட்டுக்கு வர வச்சு உன்னை நான் அப்படியே ரேப் பண்ணிடப் போறேன்…” என்றவன் “வாடி… நான் சொல்றதை கேளு இப்ப எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டு இருக்க முடியாது. நீ ஒரு ஆட்டோ புடிச்சு கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்துரு…. நான் லொகேஷன் அனுப்பி விடுறேன்” என்றான்.
“நான் வரேன்… ஆனா என்னை அப்படியே முழுசா திருப்பி அனுப்பிரனும்…” என்றாள் .
“அடியே நான் போலீஸ்காரண்டி… ஏண்டி இப்படி யோசிக்கிற…” என்றான்.
“நீ போலீஸ் டா… அதனால்தான் நான் ரொம்ப யோசிக்கிறேன்… எல்லா தப்பையும் பண்ணிட்டு… ஈஸியா எஸ்கேப் ஆயிருவீங்கல்ல… என்ன மீறி மீறி போனா தப்பு பண்ணவங்கள டிரான்ஸ்ஃபர் பண்ணுவாங்க உங்க டிபார்ட்மெண்ட்ல… அவ்வளவு தானே” என்றாள் அவளும் விடாமல்
“ஏய்… நான் உனக்கு எதுவுமே தெரியாதுனு நினைச்சேன் … பரவால்ல நீ புத்திசாலி தான்…” என்றவன். “ஆனா எல்லா போலீஸ்காரங்களையும் அப்படி நினைக்கிற பாத்தியா அதுதான் தப்பு… எல்லா டிபார்ட்மெண்ட்லயும் தப்பான ஆட்கள் இருக்கிற மாதிரி எங்க டிபார்ட்மெண்ட்லயும் ஒரு சிலர் இருப்பாங்க… அத வச்சு எல்லாரையும் அப்படி நினைக்கக் கூடாது” என்றான் சற்று கோபமாக.
“பார்ரா சாருக்கு கோபத்தை” என்றாள்.
“பின்ன வராதா…” இது குமார்.
இவர்கள் பேசுவதை கேட்டு பொறுக்க முடியாமல் “டேய் போதும்டா சீக்கிரம் முடிச்சிட்டு வாங்கடா” என்றான் பவித்ரன் ஒரு பக்கம்
“சரி நீ லொகேஷன் அனுப்பு நான் உங்க வீட்டுக்கு போயிடுறேன்” என்றாள்.
சரி என்று போனை கட் செய்து லொகேஷனை மகதிக்கு அனுப்பிவிட்டு இருவரும் கிளம்பினர்.
“டேய் பவி… என்னடா இது… லவ் ஃபீலிங் இப்படி இருக்கு… அதுவும் நம்ம மனசுக்கு புடிச்சி இருந்தா கூட… பேசும்போது அப்படியே பட்டாம்பூச்சி பறக்குது டா…” என்றான்.
“டேய்… நீ போலீஸா போயிட்ட…. நான் டாக்டரா போய்ட்டேன்… இந்த பொசிஷனை நினைத்து நான் கெட்ட வார்த்தை பேசாம இருக்கேன்… மூடிகிட்டு வண்டி ஓட்டுறியா…” என்றான் கடுப்பாக.
குமார் சிரித்துக் கொண்டே வண்டி ஓட்டினான். இப்போது குமாரின் போன் அடிக்க சைபர் கிரைம்லிருந்து அழைப்பு வந்தது.
“சார் அந்த போன் சுவிட்ச் ஆஃப் ஆயிருக்கு” என்றது அந்த முனை.
இப்ப என்ன பண்ணலாம் என்று யோசித்த குமார்…
“டேய்… பவித்ரா உன்கிட்ட டாக்டர் சுரேந்திரன் நம்பர் இருக்கா…” என்றான்.
“இருக்குடா…” என்றான் பவித்ரா.
“அதை எனக்கு அனுப்பு… அவன் எங்கே எங்கே போனான்ன்னு பார்த்தா… நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும்…” என்றான்.
பவித்ரனும் அவனுக்கு நம்பரை அனுப்ப.. சுரேந்திரன் நம்பரை சைபர் செல்லுக்கு அனுப்பினான்… குமார்.
“சார்… சுரேந்திரனுடைய ஹாஸ்பிடல் தான் அந்த போன் லொகேட் ஆயிருக்கு…” என்றான்.
“ஓகே இந்த ரெண்டு நாள்ல அந்த போன் எங்கெங்க டிராவல் ஆயிருக்கு… யார் யாருக்கு கால் போயிருக்குன்னு எனக்கு ஒரு லிஸ்ட் கொடுக்குறீங்களா…” என்றான்.
“ஷ்யூர் சார்… ஆப் அன் ஹவர் ஐ வில் கான்டெக்ட் யூ…” என்றார் .
“ப்ளீஸ் டூ இட் பாஸ்ட்…” என்று சொல்லி ஃபோனை வைத்தான் குமார்.
இங்கே பவித்திரனின் ஹாஸ்பிடலில் இருந்து கொண்டு வந்த நோட்டை உதயாவும் ,சுரேந்திரனும் பார்த்துக் கொண்டிருந்தனர்…
“குப்பை மாதிரி ஒரு நோட்டு… இவனெல்லாம் ஒரு டாக்டர்… இந்த நோட்டை பார்க்கிறப்பவே எரிச்சலா வருது…” என்ற உதயா அந்த நோட்டை தூக்கி போடப் போக…
“உதயா ஒரு நிமிஷம்… எதுக்கும் இந்த நோட்டை முழுசா செக் பண்ணிடலாம்… ஏதாவது க்ளு கிடைக்குதான்னு…” என்றபடி சுரேந்திரன் அந்த நோட்டை புரட்டினான்.
முதல் 20 பக்கங்களுக்கு… மொத்தமாவே ஆறு ஏழு பேஷண்டுகள் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருந்தது…
“ஒரு நாளைக்கு வெறும் ஆறு பேஷண்ட் வராங்க…. இவனெல்லாம் பேசாம இந்த தொழிலை விட்டுட்டு வேற வேலைக்கு போயிடலாம்… என்னத்த சம்பாதிச்சற போறான்…” என்றபடி பக்கங்களை திருப்பிக் கொண்டிருக்க…
அடுத்தடுத்த பக்கங்களில்… 10 பேர், 15 பேர் என்று ஆட்கள் அதிகமாக்கிக் கொண்டே போக… சுரேந்திரன் புருவங்களை உயர்த்தினான்.
“உதயா… இந்த குறிப்பிட்ட டேட்ல இருந்து தான் இவனுக்கு பேஷண்ட்ஸ் அதிகமா வர ஆரம்பிச்சிருக்காங்க…” என்று சொல்ல…
உதயா அந்த தேதியில் இருந்து அடுத்தடுத்த தேதியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்களை பார்த்தான்…. அதில் சில பெயர்கள் ரிப்பீட் ஆகிக் கொண்டிருந்தது…
“இது என்னடா ஒன்னும் புரியல… இத வச்சு நம்ம எப்படி கண்டு பிடிக்கிறது…” என்றான் உதயா.
திடீரென்று யோசனை வந்தவனாக சுரேந்திரன்… “உதயா… நம்ம ரெண்டு ஹாஸ்பிட்டல்ல ஏற்கனவே பார்த்த பேஷன்ட்ஸ் தான் அங்க போயிருப்பாங்க… அதாவது நம்ம ஆர்கன்ஸ் திருடியிருப்போம் இல்ல… அந்த பேஷண்ட்ஸ் அங்க போயிருந்தா… அவங்க யாருன்னு கண்டுபிடிச்சா… நம்ம காரியத்தை முடிச்சிடலாம்” என்றான்.
“சரி… அப்போ எந்த தேதியில் இருந்து இந்த நோட்டுல பேஷண்ட்ஸ் அதிகமா இருக்காங்களோ… அந்த தேதியில் இருந்து நம்ம ரெண்டு பேரோட ஹாஸ்பிடல்லயும்… யார் யார் டிரீட்மென்ட் பார்த்து இருக்கா, யார் யார் ஆப்பரேஷன் பண்ணி இருக்கா… அப்படிங்கறத நம்ம செக் பண்ணிட்டோம்னா ஒரு ஐடியா கிடைக்கும்…” என்றான் உதயா.
ஓகே என்றவன்… அங்கிருந்த தனது அசிஸ்டன்ட்டை அழைத்து…
“எனக்கு நம்ம ஹாஸ்பிடலையும் டாக்டர் உதயாவோட ஹாஸ்பிடல்லயும்… இந்த தேதியிலிருந்து யார் யார் டிரீட்மென்ட் பார்த்து இருக்கா… யார் யார் ஆபரேஷன் பண்ணி இருக்கா… அப்படிங்கற மொத்த டீடெயிலும் இம்மீடியட்டா வேணும்” என்றான் சுரேந்திரன்.
இருவரும் டென்ஷனில் அமர்ந்திருக்க….
“அந்த மினிஸ்டர் ரவி இத பத்தி ஏதாவது பேசுனானா உன்கிட்ட…” என்றான் உதயா.
“இல்லை அவன் ஒரு போன் கூட பண்ணலை… திருட்டுப் பய… நீயும்… நானும் டாக்டர்ன்னு தான் பேரு… ஆனா இந்த அரசியல்வாதிங்க பண்ற தில்லாலங்கடிக்கு முன்னாடி நாமெல்லாம் ஒன்னும் இல்ல….” என்றார்.
“அவனுக்கு நம்மள விட கிரிமினல் மைண்ட்… இந்நேரம் இந்த பிரச்சினையில் இருந்து எஸ்கேப் ஆகுற எல்லா வேலையும் அவன் முடிச்சிருப்பான்”
“அது சரி… உன்னோட லேப்டாப் எப்படி காணாம போச்சு… கண்டிப்பா அது இப்போ அந்த பவித்ரன் கையில தான் இருக்கும்… ஆனா இந்த ஹாஸ்பிடல்ல இருக்கிற யாரோ தான் அவனுக்கு ஹெல்ப் பண்றாங்க”
“ஆமா அது மட்டும் யாருன்னு தெரிஞ்சா… அவனை இன்ச் இன்ச்சா நான் வெட்டி எறிஞ்சிடுவேன்” என்றான் கோபமாக சுரேந்திரன்.
“சரி… நாம பேஷண்ட்ஸ்க்கு துரோகம் பண்றோம்…. அதே மாதிரி நமக்கு பின்னாடி யாராவது துரோகம் பண்ண தான் செய்வாங்க… நாம மட்டும் தப்பு பண்ணலாம்… மத்தவங்க மட்டும் நம்மகிட்ட உண்மையா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கிறது தப்பு தானே…” என்றான் உதயா.
“பண்றது திருட்டுத்தனம்னாலும்… அப்பப்ப இவன் யோக்கியன் மாதிரி பேசுவானே” என்று மனதில் நினைத்துக் கொண்டான் சுரேந்திரன்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க அடுத்த அரை மணி நேரத்தில்…
சுரேந்திரனின் அசிஸ்டன்ட் அவர்கள் கேட்ட டீடைலை கொண்டு வந்து கொடுத்தான்.
இப்போது சுரேந்திரனும் உதயாவும்…
பவித்திரனின் ஹாஸ்பிடல் நோட்டை வைத்துக்கொண்டு, தங்களது ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்க்கு வந்தவர்கள் யாராவது அதில் இருக்கிறதா என்று கவனமாக பார்த்தனர்….
“என்ன இது… கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம இருக்கு… எனக்கு என்னமோ இத செக் பண்றது வேஸ்ட் என்று தோணுது… நம்ம ஹாஸ்பிடல் மல்டி ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடல்… இங்கே வந்து பழக்கப்பட்டவர்கள் திரும்ப அந்த மாதிரி ஹாஸ்பிடலுக்கு போக யோசிப்பாங்களே… என்ன நாம அவங்களை அப்படித்தானே நம்ப வச்சிருக்கோம்… நம்மகிட்ட வந்தா ஒண்ணுமே இல்லைன்னா கூட ஏ டு இசட் எல்லா செக்கப்பும் பண்ணிட்டு, அதுக்கப்புறம் தான் ட்ரீட்மென்ட் பாப்போம்… வர்ற பேஷண்ட்ஸ்க்கும்…அப்பாடா… எல்லா செக்கப்பும் பண்ணியாச்சு நமக்கு ஒன்னும் இல்லை அப்படிங்கிற திருப்தி கிடைச்சுருது… பேஷண்டுக்கு ஒண்ணுமே இல்லங்கிறது நமக்கு மட்டும் தான் தெரியும்… ஆனா அது இருக்குமோ இது இருக்குமோ… அப்படின்னு அவங்கள பிரஷர் ஏத்தி எல்லா டெஸ்டும் பண்ண வச்சு சம்பாதிக்கிறது தானே நம்ம ட்ரிக்கே… அப்படி பழக்கப்பட்ட ஜனங்கள் எப்படி அந்த மாதிரி சின்ன ஹாஸ்பிடலுக்கு போவாங்க…” என்றான் சுரேந்தர்.
“கரெக்டு தான் சுரேந்தர்… இந்த நோட்டு மட்டுமே ஃபைனல்ன்னு நம்ம நினைக்க கூடாது… வேற ஏதாவது வழி இருக்கும்” என்று நோட்டை தூக்கி போட்டவன்…
அந்த நாட்டின் பேப்பர்கள் காற்றில் அடுத்தடுத்த பக்கங்கள் திரும்ப…
ஏதோ ஒரே மாதிரி எழுத்துக்கள் அவன் கண்ணில் பட்டது… எடுத்துப் பார்க்க… இவர்கள் பார்த்த தேதிக்கு சில தினங்களுக்கு முன்னால்…
வினோவின் அம்மாவின் பெயரான சுசீலா பெயர் இருந்தது.
