News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 69, PART-1

by Sinamika Writes
1.2K views
A+A-
Reset

மூர்க்கன் 69

“ஏன் டி என் மகனை விட்டுட்டு இருக்க முடியலையாக்கும் உனக்கு  ” என்று அவள் மனதை சரியாக படித்து இருந்தார் கமலா.

“ஆமா அத்தை ” என்று அவள் முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள..

“அதுக்கான ப்ரோஸெஸ் எல்லாம் செய்யணும் இல்ல கயல். அதை செய்ய தான் நான் போறேன். எப்படியும் அதை எல்லாம் முழுசா ஒருத்தருக்கு கொடுத்துட்டு எல்லாமே முடிச்சிட்டு வர கண்டிப்பா ஒரு ஆறு மாசமாகும் , அதுக்கு அப்பறோம் உன் புருஷனை நான் எங்கையும் கூப்பிட மாட்டேன் ” என்றார் .

“ஆறு மாசமா!” என்று அதிர்ந்து அவரைப் பார்த்தாள் கயல்,

“என்ன டி இப்படி வாயைப் பொளக்குற.. என் புருஷனை எல்லாம் நான் வருஷக்கணக்கா பிரிஞ்சிருக்கேனாக்கும் ” என்று கமலா அவளை கிண்டல் செய்ய.

“அத்தை, உங்களை மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது. கல்யாணம் ஆன நாள்ல இருந்து அவரை நான் விட்டுப் பிரிஞ்சு இருந்ததே இல்ல. “என்றவள் கோபித்துக்கொண்டு எழுந்து உள்ளே சென்றுவிட..

தன் மீது கயல் வைத்திருக்கும் காதலை எண்ணி பெருமையாக இருந்தது ராஜ்ஜிற்கு.

“அப்பா நாம போகலாம். அதுக்கான வேலையை நான் பாத்துக்கிறேன். இந்த மந்த் எண்ட் தானே ” என்றான் ராஜ்.

“டேய் கயல் கோவிச்சுட்டு போறா. நீ வேணா இருந்துக்கோ நானே கூட அங்க போய் வேலையை முடிச்சுகிறேன் ” என்றார் வேல்ராஜ்.

“இல்லப்பா அவளை நான் சமாதானம் பண்ணிக்குறேன். நாம போலாம் ” என்றவன் தான் போய் வரட்டுமா என்று பார்வையாலேயே சம்மதம் கேட்க ராவணைப் பார்த்தான்

“போயிட்டு வாடா ” என்று சிரித்தான் ராவண் .

அவனும் சிரித்தவன் “நீங்க பேசிட்டு இருங்க நான் போய் என் பொண்டாட்டிய சமாதானம் பண்ணிட்டு வரேன்” என்று எழுந்தான் ராஜ்.

“இவன் பொண்ணு கோவிச்சுகிட்டா கூட வந்து சமாதானம் பண்ண மாட்டான். பொண்டாடின்னதும் அவசரம் பாரு இவனுக்கு” என்று நக்கலடித்தார் கமலா.

‘என் தாய்குலமே , என் பொண்ணுக்கு நீங்க இத்தனை பேர் இருக்கீங்க. ஆனா என் பொண்டாட்டிக்கு நான் மட்டும் தானே இருக்கேன். அப்போ அவ தானே எனக்கு முக்கியம்” என்றான் ராஜ்.

“அதுவும் சரி தான் டா.. போ போ.. சமாதானப்படுத்து அவளை  ” என்று சிரித்துக்கொண்டே கமலா சொல்ல..

ராஜும் தன்னவளை கொஞ்சி.. கெஞ்சி சமாதானம் செய்ய உள்ளே சென்றான்.

இங்கே அறைக்குள் வந்த கயல் கோபமும், அழுகையுமாக வந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அவளை சமாதானம் செய்ய வந்த ராஜ் அறைக்குள் வந்தவளைப் பார்க்க.. அணுகு முதுகு  காட்டிப் படுத்திருந்தாள் அவள்.

“ரொம்பக் கோபம் போல.. ” என்று நினைத்தவன் கதவை சத்தமில்லாமல் சாற்றிவிட்டு அவள் அருகே தொப்பென கட்டிலில் விழ.

“அம்மாஆ! ஐயோ! “என்று பதறியபடி கயல் எழுந்து அமர்ந்தாள் .

“நான் தான் டி! எதுக்கு இப்படி பதப்படுற.. ” என்று அவள் கையைப் பற்றி இழுத்து தன் அருகே படுக்க வைத்தான்.

“ம்ஹும்.. விடு டா என்ன. அதான் உன் அப்பா கூட ஆறு மாசம் என்னை விட்டுட்டு போறே இல்ல. போயிட்டு வா.. இங்க எதுக்கு வந்த ” என்று முகத்தை சுளித்தாள் .

“நான் பிலிப்பைன்ஸை கிளம்ப இன்னும் ஆறு மாசம் இருக்கு டி.. இப்பவே நான் கிளம்பி போறது போல இல்ல பீல் பண்ற..” என்றான் அவள் இடையில் கை கொடுத்து நெருங்கிப் படுத்தபடி.

“ஆறு மாசம் டா.. நீ இல்லாம நான் மட்டும் எப்படி தனியா இருப்பேன் ” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள் .

“எனக்கு மட்டும் உன்னை இங்க விட்டுட்டுப் போக மனசு வருதா சொல்லு. எனக்கும் கஷ்டமா தான் டி இருக்கு. ஆனா என்ன செய்ய போகணுமே , ஒரு ஆறு மாசம் இப்படிங்கிறதுக்குள்ள போய்டும். அதுக்கு அப்பறோம் நான் எங்கையும் போகாம என் முயலுக்குட்டி கூட இங்கையே உன் பின்னாடியே சுத்துவேணாம் சரியா ” என்றான் அவள் தாடையைப் பிடித்து ஆட்டி.

“உண்மையாவா சொல்ற.. ” என்று அவனை முகம் சுருக்கிக் கேட்டாள்.

“ஆமா டி உண்மையை தான் சொல்றேன்” என்றவன் கைகள் இப்பொது அவள் சேலைக்குள் ஊடுருவப் பார்க்க..

“டேய் கையை எடு.. மணி என்ன தெரியுமா ஏழு தான் ஆச்சு. நைட் பாத்துக்கலாம்” என்றாள்.

“அதுவரை வெய்ட் பண்ணனுமா டி.. அப்டியே வெய்ட் பண்ணி உன் பொண்ணு வந்து தூங்குறதுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் தூங்கிருவோம் . அதனால ஒரு பேட்டரி ஃபுல் பண்ணனும் வா ஒரு ரொமான்ஸ் பண்ணிரலாம் வா டி.. ” என்றவன் அவள் சேலையை விளக்கி அவள் நெஞ்சுக்கூட்டுக்குள் முகம் புதைத்தான் .

“ஹே! கூசுது டா.. ” என்று சிணுங்கிய கயல் “அது என்ன பேட்டரி ஃபுல் பண்ணனும்” என்று சிரித்தாள்.

“ம்ம்.. கிடக்குற கேப்ல ரோமன்ஸ் பண்ணனும்னு சொன்னே இல்ல. அது இன்னியில் இருந்து ஸ்டார்ட் ஆகிருச்சு. ஊருக்கு போறதுக்குள்ள அந்த ஆறு மாசத்துக்கு சேர்த்து வெச்சு உன்னை ஒரு வழி பண்ணிட்டு தான் நான் போகப்போறேன். நான் யாரும் இருந்தா உன்கிட்டே பேட்டரின்னு சொல்வேன். நீ உடனே நம்ம ரூமுக்கு வந்துடனும் சரியா? ” என்றான்.

“ஹப்பா இப்போதான் என் புருசனுக்கு இதெல்லாம் தோணிருக்கு. ரொம்ப நன்றி பகவானே!..” என்று மேலே விட்டதை பார்த்து வேண்டிக்கொண்டாள்.

“அவர்கிட்டே அப்பறோம் வேண்டிக்கலாம் இப்போ வா பேட்டரி சார்ஜ் போட.. ” என்றான்.

“டேய் எல்லாரும் வெளியே இருக்காங்க டா.. யாரும் வந்துட்டா என்ன பண்றது” என்றாள்.

“அவங்க எல்லாம் கோவிலுக்கு போறது பத்தி பேசிட்டு இருக்காங்க. இப்போதைக்கு யாரும் வரபோறது இல்ல. நீ பேசி டைம் வேஸ்ட் பண்ணாத டி.. எனக்கு பேட்டரி சார்ஜ் போடணும்… ” என்று குழந்தை போல அடம் பிடித்தவன் அவள் ஸ்விட்ச்கள் இரண்டையும் ஆன் பண்ணும் வேளையில் ஈடுபட்டான்.

வேகமாக அவள் ஜாக்கெட் ஹூக்குகளை அவிழ்த்து அவள் உள்ஆடையை இருபுறமும் விலகிவிட்டவன் அவள் ஸ்விட்சை தன் இதழ் கொண்டு கவ்விக் கொள்ள…

அடுத்த நொடி அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

PART-2 மாலை ஐந்து மணிக்கு வரும்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.