News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 36, PART-1

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

தப்பு 36

காவேரியை பரிசோதித்து வந்த டாக்டர் அறை வாசல் முன்பு அமர்ந்து இருந்த யுகேனிடம் வந்தார்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவரைப் பார்த்ததும் எழுந்த யுகேன் “டாக்டர் காவேரி அம்மாவுக்கு எப்படி இருக்கு? அவங்களுக்கு எதுவுமில்லையே?” என்றான்.

“அவங்க பிபி திடீர்னு ரைஸ் ஆகியிருக்கு. அது அதிகமானதுனால தான் அவங்களுக்கு சடேனா மயக்கம் வந்திருக்கு. அவர்களுக்கு பிபி குறைய மருந்து கொடுத்திருக்கோம். அவங்க ரொம்பவே ஸ்ட்ரெஸ் ஆகிருக்காங்க . கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண டைம் வேணும் அவங்களுக்கு” என்றார்.

“இப்போ எந்த பிரச்னையும் இல்லையே சார் ” என்றான் யுகேன்.

“நோ மிஸ்டர் யுகேந்திரன் ஒன்ஸ் பிபி கண்ட்ரோல் ஆகிருச்சுனா அவங்க பெர்பெக்ட்ல்லி பைன்” என்றார்.

அதை கேட்டு தான் அவனுக்கு சற்று நிம்மதியானது.

“அப்பறோம் மிச்செஸ் காவேரியோட வந்து அட்மிட் ஆன பேசென்ட் .. “என்றார்.

“என்னோட வைப் தான் டாக்டர். அவ எப்படி இருக்கா?” என்றான்.

“அவங்க மேண்டலி ஷாக் ஆகிருக்காங்க. அவங்க மனசு மூளை சொல்றதை ஏத்துக்குற பக்குவத்துல இல்ல. இவ்ளோ நாள் நம்மக்கிட்ட இருந்த ஒரு விஷயம் திடீர்னு இல்லமாப் போயிருச்சுன்னா எப்படி இருக்குமோ அந்த கண்டிசன்ல தான் அவங்க இப்போ இருக்காங்க” என்றார்.

அதற்கான காரணம் தான் அவனுக்குத் தெரியுமே.. இருந்தும் என்ன செய்வது இன்றில்லையேல் என்றாவது ஒரு நாள் அவள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தானே அது.. என்று நினைத்தவன் “டாக்டர் நான் அவங்க ரெண்டு பேரையும் போய் பார்க்கலாமா?” என்றான்.

“ரெண்டு பேருமே இப்போ அண்டர் டிரீட்மெண்ட்ல இருக்காங்க. காவேரி கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிருவாங்க ” என்றவர். “உங்க வைப்க்கு ரெஸ்ட் வேணும் , கர்ப்பமா இருக்குற நேரத்துல அவங்க எப்பவுமே ரொம்ப அழுத்தத்தோட இருந்திருக்காங்க, அதாவது ஒருவித இன்ஸெகியூரிட்டி பீலிங். அடுத்து என்ன நாம என்ன ஆவோம் , நம்ம குழந்தைக்கு என்ன ஆகும் இந்த மாதிரி பீல்னு வெச்சுக்கோங்க.. பொதுவா இது இந்த மட்டர்னிட்டி சமயத்துல எல்லா பொண்ணுங்களுக்கு வரது தான். ஆனா பூவிழி அதை எல்லாம் தாண்டி எதையோ யோசிச்சு யோசிச்சு அவங்களை அவங்களே டிப்ரெஸ்ஸன்ல தள்ளிருக்காங்க.” என்றார்.

அவர் சொல்வதை பொறுமையாகக் கேட்ட யுகேந்திரன் காவிரியையும், பூவிழியையும் இந்த நிலைக்கு தள்ளிய தன் அப்பாவை நினைத்து அவர் மீது ஆத்திரம் தான் வந்ததது அவனுக்கு. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் நின்றிருக்க..

” அவங்க தூங்குறதுக்காக ஐவி லைன்ல இன்ஜென்க்ஷன் கொடுத்திருக்கு. எப்படியும் அவங்க எழுந்திருக்க 3, 4 ஹௌர்ஸ் மேல ஆகிடும் ”  என்றார்.

“ஓகே டாக்டர் நான் வெய்ட் பண்றேன் ” என்றான்.

அவனிடம் விடை பெற்றுவிட்டு டாக்டர் சென்றதும்  அங்கே இருந்த இருக்கையில் மீண்டும் சோர்வுடன் சாய்ந்து அமர்ந்தான்.

உள்ளுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது., கோபம், குழப்பம், வலி என அனைத்தும் உண்டானது அவனுக்கு.

இப்போதே ராஜேந்திரனிடம் சென்று அவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று தான் தோண்டியது. ஆனால் இதை எல்லாம் அவ்ரிடம் சொல்லி நியாயம் கேட்டாள் அவர் என்ன மாதிரியான பதிலை தருவார் என்று அவன் அறிந்தது தானே..

முதலில் இருவரும் குணமாகட்டும் என்று அமைதியாக தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் யுகேந்திரன்.

அந்த நேரம் அங்கு வந்த நர்ஸ் “சார் காவேரி பேசென்ட் கண்விழிச்சுட்டாங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க ” என்று அவசரப் படுத்த..

எழுந்து முகத்தை துடைத்துக்கொண்டே உள்ளே சென்றான்.

யுகேன் உள்ளே வருவதை பார்த்ததும் “தம்பி , பூவு.. பூவு அவ என் பொண்ணு தான். நான் வயித்துல பெரலையினாலும்  அவளுக்கு நான் தான் அம்மா” என்று பதற்றமாக கட்டிலை விட்டு கீழே இறங்கப் போனார்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“மேடம் மேடம்.. உங்களுக்கு இன்னும் ட்ரிப்ஸ் போய்ட்டு இருக்கு. இப்படி சட்டுனு எழுந்துக்க முடியாது ” என்றார் அங்கே இருக்கும் நர்ஸ்.

“அம்மா பூவிழி நல்லா தான் இருக்கா. அவ உங்க பொண்ணு தான்.. நீங்க அவளை நினைச்சு கவலைப் படாதீங்க  ” என்றவன் அவரை சமாதானம் செய்ய முயல..

“தம்பி பூவிழி எங்க? அவ எதையாவது நினைச்சிட்டு அழுதுட்டு இருப்பா. அப்படி எல்லாம் இல்லேனு நான் சொல்றேன் அவகிட்டே. நீங்க கொஞ்சம் அவளைக் கூப்பிடுங்க ‘ என்று கட்டிலில் இருந்து இறங்க வழி இல்லாமல் அவனிடம் கெஞ்சினார் காவேரி.

“அம்மா அவ.. அவ.. நீங்க மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்து பயந்துட்டா. அவளை.. அவளை பக்கத்து ரூம்ல அட்மிட் பண்ணிருக்கு ” என்றான்.

“அட்மிட் பண்ணிருக்கீங்களா? ” என்று அவனை அதிர்ச்சியாகப் பார்த்தவர் “தம்பி அவளுக்கு எதுவும் உடம்பு முடியலையா? அதுக்குள்ள பிரசவ வலி வந்திருச்சா? ” என்று பூவிழியைப் பார்க்க கட்டிலை விட்டு கீழே இறங்க.

“ஐயோ நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. அவளுக்கு எதுவுமில்லை. உண்மை தெரிஞ்சு அவ கொஞ்சம் ஷாக் ஆகிட்டா.. அவளால நடக்குறது எதையும் நம்பமுடியல . அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைன்னு டாக்டர் அவளுக்கு மருந்து கடவுது தூங்க வெச்சிருக்காங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க.. ” என்று அவரை தோளைப் பற்றி கட்டிலில் அமரவைத்து சமாதானம் செய்தான்.

“அவளுக்கு வேற எதுவும் இல்லையே தம்பி ” என்று அழுத விழிகளோடு கேட்டார்.

“இல்லை” என்று யுகேன் தலையை ஆட்டினான்.

“மேடம், நீங்க இவ்ளோ எமோஷனல் ஆனா அப்பறோம் உங்க பிபி லெவல் தான் அதிகமாகமும். அப்பறோம் உங்களுக்கு தான் பிரச்சனை தயவு செய்து பிரச்சனை பண்ணாம உக்காருங்க ” என்றார் நர்ஸ்.

“அம்மா நீங்க இப்படி டென்ஷன் ஆகி உங்க உடம்புக்கு மறுபடியும் எதுவும் வந்தா என்ன பண்றது. அப்பறோம் பூவிழியை யார் பார்த்துப்பா.. அவளுக்குனு இருக்குற ஒரே சொந்தம் நீங்கதானே.. உங்களை நீங்க பார்த்துக்கிட்டா தானே அவளையும் கவனிச்சுக்க முடியும் ” என்று பூவிழியின் உடல் நலனை சொல்லி அவரை அமைதிப் படுத்த முயன்றான் யுகேந்திரன்,

“நீங்க சொல்றதும் சரி தான் தம்பி. அவ பாவம் அவளுக்குனு உங்களையும், என்னையும் தவிர இங்க யாரு இருக்கா?” என்று அழுதவர் “அவளை நான் தான் பார்த்துக்கணும். அதுக்கு நான் நல்லா இருக்கனும் ” என்று கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆனவர் அப்படியே சாய்ந்து படுத்திகொண்டு கண்களை மூடிகொண்டவர் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி அமைதியான மனநிலைக்கு வந்தார்.

அவரை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு வெளியே வந்த யுகேன் மேஜையில் அமரப் போக..

அங்கே வந்த நர்ஸ் “சார் பூவிழி கண் விழிச்சுட்டாங்க. எழுந்ததில் இருந்து  அழுதுட்டே இருக்காங்க” என்றார்.

பூவிழி எழுந்துவிட்டாள் என்றதுமே அவசரமாக அவள் அறையை நோக்கி ஓடினான் யுகேந்திரன்,

“மேடம் சொன்னாக் கேளுங்க. கொஞ்சம் அமைதியா இருங்க.. ” என்று உள்ளே ஒரு நர்ஸ் பூவிழியை சமாதானம் செய்து கொண்டு இருக்க..

“நான் என் அம்மாகிட்டே போகணும்.. என் அம்மாவைப் பார்க்கணும். என்னை விடுங்க.. நான் போறேன் ” என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள் பூவிழி.

அப்போது உள்ளே வந்த யுகேன் அவள் சிறுபிள்ளை போல பிடிவாதம் பண்ணிக்கொண்டிருப்பதை பார்த்தவன் “பூவிழி!” என்று அவளை நோக்கி செல்ல..

யுகேந்திரனின் குரல் கேட்ட அந்த நொடி வாசல் பக்கம் திரும்பியவள் “மாமா.. மாமா.. அம்மா எங்க ? அவங்களுக்கு ஒன்னும் இல்லையே.. அவங்க ஏன் மயங்கி விழுந்தாங்க.” என்று அவன் கையைப் பற்றிக்கொண்டு கேட்டாள்,

“அவங்களுக்கு எதுவும் இல்ல. பிபி தான் ரைஸ் ஆகி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. இப்போ அவங்க ஓகே நான் அவங்ககிட்டே பேசிட்டு தான் வரேன் . அவங்க நல்லா இருக்காங்க ” என்றான்.

“இல்ல நீங்க பொய் சொல்றிங்க . எனக்கு இப்போவே அம்மாவைப் பார்க்கணும்”என்று கட்டிலில் இருந்து கீழ் இறங்கப் போனாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.