EPISODE 441
இரவு ரிசப்ஷன் முடித்துவிட்டு மண்டபத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் மிருதி, சத்யா இருவரும்.
அவர்களோடு அர்ஜுன், ரசிகாவும், திருத்தியும் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட… வினய் மண்டபத்திலேயே இருந்து கொண்டான்.
ரோஜா மண்டபத்திலேயே வீணாவுடன் தங்கி கொண்டாள்.
கதவை திறந்து உள்ளே வந்ததும் மிருதி ரசிகா திருதி இருவரையும் பார்த்து இரண்டு பேரும் நேரமே படுத்து தூங்கிடுங்க காலையில சீக்கிரமே முகூர்த்தத்துக்கு போகணும் ஞாபகம் இருக்கு இல்ல என்றாள்.
அதெல்லாம் நீ கவலையே படாதம்மா ரசிகா ஷார்ப்பா கிளம்பி வந்துடுவா என்றான் அர்ஜுன் அவளுக்கு சப்போர்ட் ஆக…
டேய் அத நீ சொல்லாத தினமும் அவ உன்னால தான் காலையில லேட்டா எழுந்து வரா… இது எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டியா? ஒழுங்கா அவளை தூங்க விட்டுடு இல்ல ஏதாவது சொல்லிட போறேன் என்ற மிருதி.
இல்ல வேண்டாம் என்று யோசித்தவள் ரசிகா திருதி தனியா தான் இன்னைக்கு தூங்க போறா நீ பேசாம அவ கூட போய் தூங்கு. இவன் கூட போய் தூங்குனா உன்ன தூங்க விடமாட்டான் என்று தன் மகனின் சேட்டையை பற்றி மிருதி கூற.
அதைக் கேட்டு ஷாக் ஆனது அர்ஜுன் இல்லை ரசிகா தான். அவன் இல்லாமல் அவன் எடையைக் கட்டிக் கொண்டு தூங்காமல் அவளால் இரு தனியாக இருக்க முடியாது அவன் டியூட்டி முடித்துவிட்டு எவ்வளவு லேட் ஆக வந்தாலும் அர்ஜுன் வந்த பிறகுதான் ரசிகா தூங்கச் செல்வாள் அதுவரை அவனுக்காக காத்திருப்பது அவ்வளவு வணக்கம் ஆனால் நிரூபிக்க அது தெரியாது.
அத்தை அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் காலையில நேரமே எழுந்து கிளம்பி வந்துடுவேன் நீங்க அத பத்தி பீல் பண்ணாதீங்க. நீங்க போய் படுத்து தூங்குங்க நானும் போய் தூங்குறேன் என்றவள் அங்கே நின்றால் த்ரதியோடு தன்னை அவள் அறைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்று திரும்பியும் பார்க்காமல் வேகமாக அவள் அறைக்கு சென்று விட…
அர்ஜுன் மிருதியை பார்த்து நக்களாக சிரித்துவிட்டு தன் சட்டை காலரை உயர்த்தியவன் என் பொண்டாட்டிக்கு நான் இல்லாம தூக்கம் வராது. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் உன் மருமகளை நான் நைட்டு எல்லாம் டார்ச்சர் பண்ணல சரியா நான் அவதான் என்ன டார்ச்சர் பண்றா. நாங்க எவ்வளவு லேட்டா வந்தாலும் நான் வந்த பிறகுதான் உன் மருமகள் தூங்குறேன் அதனாலதான் அவ காலையிலிருந்து இருக்கு லேட் ஆகுது புரிஞ்சுக்கோ என்னமோ டெய்லி நான் அவளை இன்சர்ட் பண்ற மாதிரி எத்தனை பேருக்கு முன்னாடி என்ன அவமானப்படுத்தாத மம்மி என்று மிருதியின் கன்னத்தை கிள்ளிவிட்டு திரும்பி தன்னறைக்குச் சென்று விட்டான்
சரி சரிடா என்னவோ பண்ணுங்க ஆனா காலைல நேரமே கிளம்பி ஆளுக்கு வந்துடனும் எல்லாரும் நான் வந்து ரூம் கதவை கத்திக்கிட்டு இருக்க மாட்டேன் ஞாபகத்துல வச்சுக்கோங்க என்று மாமியாருக்கு வீட்டான அதிகாரத்தோடு சொல்லிவிட்டு தன்னறைக்குச் சென்று விட்டாள் மிருதி
சரி அத்தை சீக்கிரம் ரெடியாகி வந்திடுறேன் என்று தன்னறைக்கு வந்து கதவை தாளிட்டால் திருத்தி.
உள்ளே வந்ததும் கட்டிலை திரும்பிப் பார்க்க அது வெறுமையாக இருப்பதை உணர்ந்தால்ள் திருதி. ரசிகா அர்ஜுன் இல்லாமல் தூக்கம் வராது என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றுவிட…
இங்கே வினயில்லாமல் தான் எப்படி தனியே தூங்கப் போகிறோம் என்ற யோசனையில் வந்து கட்டிலில் பொதென விழுந்தாள் திருதி.
சிறிது நேரம் கட்டிலில் படுத்து வினயின் நினைவில் உருண்டவள் எழுந்து குளிக்கப் போனாள்.
திருதி குளித்துவிட்டு டவலை உடலில் சுற்றிக்கொண்டு பாத்ரூமில் விட்டு வெளியே வரவும் அவள் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.
போன் அடித்தது மணி பார்த்தாள் அது நள்ளிரவைத் தாண்டி மணி 2 என காட்டியது. இந்த நேரத்துல யார் எனக்கு போன் பண்றது என்று யோசனையோடு வந்து போனை பார்க்க வினய் தான் அவளுக்கு வீடியோ கால் செய்திருந்தான்.
அதானே இவன தவிர வேற யாரு எனக்கு போன் பண்ண போறாங்க என்று சிரித்துக் கொண்டே போனை அட்டென்ட் செய்தாள் த்ரிதி.
போனை அட்டென்ட் செய்ததும் உடலில் வெறும் டவலை சுற்றிக் கொண்டு இருந்த திருதியை பார்த்ததும் வினய் எதுவும் பேசாமல் வாயடைத்து நின்றிருந்தான்.
வீடியோ காலில் நான் செய்ததிலிருந்து அவன் எதுவும் பேசாமல் பயந்து போய் நின்று இருக்க அதை கவனித்தவள் … டேய் தினமும் பார்க்கிறது தானே இப்பதான் பார்க்கிறேன் என்னவோ காணாததை கண்டவன் மாதிரி இப்படி வாய் திறந்து கிட்டு அசையாம என்னையே பார்த்துக்கிட்டு இருந்தா என்னடா அர்த்தம் வாய மூடுடா மொதல்ல என்று வினயை அதட்டி சுயநினைவுக்கு கொண்டு வந்தாள் திருதி.
அது என்னவோ டி உன்ன தினமும் உரிச்ச கோழியா பார்த்துட்டு தான் இருக்கேன். இருந்தாலும் இன்னைக்கு இப்படி நீ அங்கே, நான் இங்கே என்று இருக்கிறப்போ உன்ன மிஸ் பண்ணிட்டேன்னு உனக்கு போன் பண்ணும் போது இப்படி தங்கரதம் மாதிரி உடம்ப டவலை சுத்திக்கிட்டு வீடியோ காலை நீ அட்டென்ட் பண்ணுனா எப்படி ஃப்ரீசாகாமல் நான் இருக்க முடியும் என்றான்.
அவன் தன்னை தங்கரதம் என்று சொல்லி வர்ணிக்க… அதில் உள்ளுக்குள் சந்தோசமாக உணர்ந்தாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் வந்த சிரிப்பை கீழே தட்டை கடித்து உள்ளுக்குள் மறைத்துக்கொண்ட திருதி இப்ப எதுக்கு இந்த நேரத்துல எனக்கு கால் பண்ணி இருக்க நான் காலையில சீக்கிரமா எழுந்திருக்க வேண்டும் போன் பண்ணுங்க விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரமா கால கட் பண்ணு என்றாள்.
என்னடி பொண்டாட்டி கிட்ட ஆசையா பேசணும்னு கால் பண்ணுனா ஏன் கால் பண்ணுனா எதுக்கு கால் பண்ணினேன்னு ஒரு பீலிங்கே இல்லாம பேசுற… உன்னை எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா? உன்ன பாக்காம இருக்க முடியலன்னு தான் உனக்கு கால் பண்ணினேன் நீ என்னடான்னா இப்படி என்கிட்ட பேசவே சடஞ்சுக்குரியே என்றான்.
ஓஹோ அப்படி என்ன மிஸ் பண்ணி இருந்திருந்தா என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி அவளை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிச்ச அப்புறம் தான் வீட்டுக்கு வருவேன்னு வீம்பா நான் வீட்டுக்கு வாடா நீ இல்லாம எனக்கு தூக்கம் வராதுன்னு கூப்பிட்டப்போ வரமாட்டேன்னு நின்னயே அப்பவே வந்திருக்கணும்.
அதெல்லாம் விட்டுட்டு நான் கூப்பிட்ட அப்போ வராம அங்கேயே இருந்துகிட்டு நான் கிளம்பி வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணி மிஸ் யூன்னு சொன்னா நான் நம்பிடுவேன்னு நினைச்சியா என்று முறைத்தாள் அவனை.
என்னடி இப்படி பேசுற என்ன தான் வீணா இப்போ வீரா வினு ஓட தங்கச்சியா இருந்தாலும் அவள சின்ன வயசுல இருந்து வளர்த்தது நான் தான்.
எனக்கு அவ கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தணும்னு ஆசை இருக்காதா.. அதனாலதான் நான் என் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு அவ மாப்பிள்ளை வீட்டுக்கு போற வரைக்கும் மண்டபத்தில் இருந்து எல்லா வேலையும் பார்த்து அனுப்பி வச்சிட்டு வரேன்னு சொன்னேன்.
ஒரு அண்ணன இந்த கடமையை கூட நான் செய்யக் கூடாதா என்றான் சீரியஸாக.
ஓ…செய்யலாமே தாராளமா செய்யலாமே யார் வேண்டாம்னு சொன்னது. அப்புறம் எதுக்குடா எனக்கு கால் பண்ணி என்ன டென்ஷன் பண்ற பேசாம போன வச்சுடு. ஏற்கனவே நீ இல்லாம இங்க நான் எப்படி தனியா தூங்குறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். இப்ப வேற கால் பண்ணி மிஸ் யூ ன்னு சொல்லி என்னை கடுப்பேத்தாத போனை வைடா என்றாள் கோபமாக.
த்ரிதி உண்மையாகவே தன்னை மிஸ் செய்கிறாள் என்பது அவள் கோபத்தில் தெரிந்து கொண்ட வினய் அதை உள்ளுக்குள் ரசித்தவன் தாண்டில்லாமல் தன் மனைவியால் இருக்க முடியவில்லை என்ற கர்வமும் அவனுக்குள் இருந்தது.
அவள் கஷ்டப்படுவதை பார்க்க அவனால் முடியவில்லை உடனே திருதியிடம் ஏய்…ஏய்.. செல்லம் ப்ளீஸ் டி… கோவிச்சுக்காத இன்னைக்கு ஒரே ஒரு நாள் இந்த ஒரு ராத்திரி மட்டும் பொறுத்துக்கோ… முகூர்த்தம் முடிஞ்சு வீணா அவ புருசனோட வீட்டுக்கு கிளம்பின அடுத்த நிமிஷம் உன்ன தூக்கிட்டு நான் நம்ம வீட்டுக்கு கிளம்பிடுறேன் ஓகேவா… இப்போ கோவிச்சுக்காம என் செல்ல குட்டி படுத்து தூங்கனும் சரியா என்றால் அவளை கொஞ்சிக் கொண்டு ..
போடா நீ இல்லாம எனக்கு என்னவோ போல இருக்கு உன் வாசம் இல்லாமல் எனக்கு தூக்கமே வராது என்றாள்.
அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் என்றவன் ஹங்கர்ல நான் போட்ட ஷர்ட்டை அப்படியே கழட்டி மாட்டிட்டு வந்து இருக்கேன். அதை எடுத்து நீ போட்டுக்கோ என்னோட வாசம் இல்லாம நீ தூங்க மாட்டேன்னு தெரியும் அதனால தான் ஈவினிங் போட்ட சட்டையை அப்படியே கழட்டி வைத்துவிட்டு வந்தேன்.
நீ அதை போட்டுட்டு இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணி தூங்கு செல்லம் நாளைக்கு உன் கூட நான் இருப்பேன் சரியா என்றான்.
சரி என்றவள் ஆங்கரில் மாட்டியிருந்த அவன் சட்டையை எடுத்து தன் மார்போடு அனைத்த படி வீடியோ காலில் தெரிந்த வினயை ஏக்கமாக பார்க்க..
அப்படி பாக்காத செல்லம் இனி இப்படி பார்த்து என்னால இங்க இருக்க முடியாது உடனே கிளம்பி வந்துடுவேன் வீட்டுக்கு என்றான். அவளுடைய ஏக்கம் தன்னிடம் தொற்றிக் கொண்டது போல வினய்.
அப்போ கிளம்பி வா டா ப்ளீஸ் என நான் த்ரிதி முகத்தை சுருக்கி அவனை பார்த்து கொஞ்ச…
இன்னைக்கு ஒரு ராத்திரி அட்ஜஸ்ட் பண்ணிகோ டி ப்ளீஸ் என்று அவளிடம் வீடியோ காலில் கெஞ்சினான் வினய்
சரி பிழைத்து போ… இன்னைக்கு ஒரு நாள் போனா போகட்டும்னு ஒரு ராத்திரி மட்டும் தான் வெளிய தங்க அனுமதிச்சிருக்கேன் அதை ஞாபகத்துல வச்சுக்க.
இனிமேல் இந்த மாதிரி அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்குன்னு ஏதாவது சாக் சொல்லிட்டு நைட்டு வெளியே தங்குறேன்னு சொன்னேன்னு வச்சுக்கோ அப்புறம் உனக்கும் எனக்கும் டைவர்ஸ் தான் ஞாபகத்துல வச்சுக்கோ என்றாள் திருத்தி.
ஐயோ டைவர்ஸ்ஸா…. வேணாண்டி இனிமேல் நைட் வெளியே தங்குற பிளான் நான் போட மாட்டேன். என் பொண்டாட்டி முந்தானைய பிடிச்சுக்கிட்டு அவ கூடவே இருந்துக்கிறேன் என்று சொல்லி சிரித்தான் வினய்.
த்ரிதியும் சிரித்தவள் சரி நான் போன வச்சுடறேன் தூக்கம் வருது அத்தை காலையில ரெடி ஆகி வரச் சொல்லி இருக்காங்க இன்று போனை வைக்க போனாள்.
ஏய் என்னடி அதுக்குள்ள போன வைக்கிற என்ன சொல்ற… உன்ன எவ்வளவு மிஸ் பண்றேன்னு உனக்கு வீடியோ கால் பண்ணுனேன் எனக்கு எதுவும் கிடையாதா அப்படியே போன பத்தியா என்றான் ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்து.
திருத்தி அவன எதற்காக அடி போடுகிறான் என்று புரிந்து ட்கப் புன்னகை சிந்தியவள் வீடியோ காலில் அவனுக்கு முத்தம் வைத்து போதுமா ஃபோனை வைக்கட்டுமா என்றாள்.
நான் வெறும் முத்தம் தானா வேற எதுவும் கிடையாதா என்றான்.
போன்ல வேற என்னடா தர கொடுக்கிறது முத்தம் மட்டும் தானே கொடுக்க முடியும் என்றாள் த்ரிதி.
போன்ல மொத்தம் மட்டும்தான் கொடுக்க முடியும் அது எனக்கும் தெரியும் என்றாலும் அவள் கட்டி இருந்த தொண்டையை தன் விரலால் சுட்டிக்காட்டி. என் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கல என்னோட சட்ட போட்டுட்டு தானே தூங்க போறேன் ஏன் சட்ட மாத்திக்க வேண்டியது தானே நான் வேணா வீடியோ கால்லயே வெயிட் பண்ணட்டுமா என்றான்.
ஓஹோ அவ இதுக்குத்தான் இவ்வளவு நேரம் பிட்டு போட்டியா நீ என்றவள் இந்த பிட்டு படம் பாக்குற வேலை எல்லாம் நேரம் வந்து வச்சுக்கோ போன்ல வீடியோ கால்ல எல்லாம் என்னால எதையும் காட்ட முடியாது என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.
நான் உன் புருஷன் தாண்டி என் பொண்டாட்டிய பாக்கத்தானே கேட்கிறேன் என்னமோ வேற யாரையோ காட்ட சொல்லி கேட்ட மாதிரி இல்ல முகத்தை தூக்கி வச்சிருக்க.. என்றான் வினய்
நீ என் புருஷன் தான்டா யார் இல்லை என்று சொன்னது. என்ன முழுசா பார்க்கிற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு இந்த மொபைல் வழியா என்ன அப்படி பார்க்கணும்னு நீ நினைக்காத என்றவள்.
கட்டின புருஷனாவே இருந்தாலும் இப்படி தூரத்தில் நீ இருந்து எனக்காக இயக்கப்படும் போது. நீயும் நானும் வீடியோ கால் பண்ணி ஒருத்தர ஒருத்தர சும்மா பார்த்துகிட்டு பேசிகிட்டு இருக்கலாம் அதுக்காக மொத்தத்தையும் உன்கிட்ட காட்ட முடியுமா இப்போ வீடியோ கால்ல நீயும் நானும் மட்டும்தான் இருக்கும் அது பிரச்சனை இல்ல ஆனா இந்த மொபைல் கனெக்சன் நெட் கனெக் நெட்வொர்க் எவ்வளவு தூரம் கனெக்ட் ஆகி எங்கெல்லாம் டிராவல் பண்ணனும்னு உனக்கு நல்லா தெரியும் இதுல நான் உரிச்ச கோழியை உன் முன்னாடி வீடியோ கால்ல நின்னா நீ பார்க்க வேண்டிய இந்த உடம்பு எங்கெங்க வீடியோவில் எப்படி எல்லாம் போகும் என்று யாருக்குடா தெரியும் இப்படி எல்லாம் நீ கேட்காத அப்புறம் நான் கோச்சுக்கவேன் என்றாள் .
சரி டி சாரி ஒரு ஆர்வத்துல அப்படி கேட்டுட்டேன் இனிமேல் அப்படி கேக்க மாட்டேன் என் மேல கோவமா இருந்தா ஐ அம் சாரி என்று மீண்டும் அவளிடம் மன்னிப்பு கேட்டவன் சரி நீ போய் தூங்கு நாளைக்கு கச்சேரியை வச்சுக்கலாம் என்றவன் அவளுக்கு முத்தம் வைத்துவிட்டு ஃபோனை கட் செய்தான்.
தான் சொன்னதும் புரிந்து கொண்டு தன்னை வற்புறுத்தாமல் வினய் நடந்து கொண்ட விதம் திருத்திக்க சந்தோஷமாக இருந்தது .
இந்த ஸ்டோரிய நிறைய பொண்ணுங்க படிச்சிட்டு இருப்பீங்க ஒரு சின்ன எக்ஸாம்பிள் காகத்தான் இந்த சீன நான் என்னோட ஸ்டோரில கொண்டு வந்து இருக்கேன் உங்களோட கணவன் ஆகவே இருந்தாலும் லவ்வராவே இருந்தாலும் உங்களை வீடியோ கால்ல பார்க்கணும். எங்களுக்கு அந்த உரிமை இருக்கு என்கிட்ட தானே காட்டுற என்கிட்ட காட்டவில்லை என்றால் நான் கோவிச்சிக்குவேன்னு எத்தன காரணம் சொன்னாலும் ஆயிரம் காரணம் சொன்னாலும் உயிரே போற நிலைமை வந்தாலும் வீடியோ கால்ல டிரஸ் இல்லாம வரச் சொல்லி எவ்வளவு வற்புறுத்தினாலும் அவங்க ரிலேஷன்ஷிப் வேண்டாம் என்று தலை சுற்றி தூர போட்டுட்டுங்க… உண்மையான காதல் வீடியோ கால்ல உடம்ப காட்டு அதனால வரது கிடையாது அது மனசு சம்பந்தப்பட்டது எவ்வளவோ வருஷம் ஆனாலும் உங்களுக்காக காத்திருக்கிற ஒரு நல்ல மனசு தான் வேணும் வீடியோ கால்ல நீங்க உடம்ப காட்டுங்க என்பதற்காக உங்க கூட பிரேக் அப் பண்ணிட்டு போறவங்கள போகட்டும்னு அப்படியே விட்டுடுங்க.
எனக்கு இந்த விஷயத்தை இன்னைக்கு சொல்லனும்னு தோணுச்சு அதனாலதான் இந்த மெசேஜ கன்வே பண்றேன் யாரையும் கூப்பிட்டு காட்டுவோம் சங்கடப்படுத்துவோ விரும்பல அதற்காக எல்லா ஆண்களும் தவறானவர்களும் கிடையாது சில ஆண்கள் செய்கிற தப்புனால எல்லாருக்கும் கெட்ட பேர் வருது அதனால தான் இதை சுட்டிக்காட்டினேன்.
யார் மனசையும் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிச்சிடுங்க. 🙏
த்ரிதியுடன் போனை பேசிவிட்டு கட் செய்த வினய் திரும்ப அவனுக்கு எதிரே நின்றிருந்த அசோக்கை பார்த்தவன் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு என்று சிரித்தான்.
நீ கரெக்டா உன் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு கால் பண்ணும் போது தான் நான் உள்ள வந்தேன் என்றவன்.
ஆமா இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற நான் உன்னை இங்கு எதிர்பார்க்கலையே என்று சொல்லி சிரித்தான் அசோக்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க நீங்க இந்த நேரத்துல இங்க வருவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும் அதனால தான் உங்கள தனியா யாருக்கும் தெரியாம மீட் பண்ணனும்னு இங்க வந்தேன் என்றான் வினய்..
நீ என்னோட வளர்ப்பு தானே எங்க எப்போ இருக்கனும்னு உனக்கு தெரியாதா என்று சொல்லி சிரித்த அசோக் வினயின் தோளை தட்டிக் கொடுத்தான்.
EPISODE 442
வினய் தனக்காக தான் காத்திருந்தான் என்று அசோக்கிடம் சொல்லவும் ஆச்சரியமானது அவனுக்கு.
தான் இங்கு இந்த நேரத்தில் வருவது இவனுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று யோசித்தவன் ஒருவேளை வீணாவை இங்கே தான் வர சொல்லி இருக்க அவள் வினயிடம் விஷயத்தை சொல்லி இருப்பாள் என்று யூகித்துக் கொண்டவன் வினயின் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்துக் கொண்ட அசோக்.
என் வளர்ப்பு தானே நீ இதெல்லாம் உனக்கு சொல்லித் தரணுமா என்ன என்று சிரித்தவன் சரி நீ மட்டும் வந்திருக்கு எங்கே உன் அருமை தங்கச்சி வீணா.
அவ குடும்பத்தோட சேர்ந்ததும் நம்மளை எல்லாம் மறந்துட்டா இல்ல… அவளும் சரி என் தங்கச்சி பொண்ணு அமலாவும் சரி ரெண்டு பேருமே நன்றி கெட்டவங்க.. ஜெயில்ல நானும் மாலினி கலாவும் இருந்தப்போ ஒரு முறை கூட எங்களை வந்து அவங்க ரெண்டு பேரும் பார்க்கவே இல்ல.
நீ தான் எங்க ரெண்டு பேரையும் கவனிச்சிகிட்ட எங்களுக்கு என்ன உங்களுக்கு வேணும்னு தெரிஞ்சுகிட்டு ஜெயில்ல கஷ்டப்படாமல் எங்கள பாத்துக்கிட்ட.. என்று வினயின் தோளை தட்டிக் கொடுத்தான் அசோக்.
அவன் தோளில் இருந்த அசோக்கின் கையை லாவகமாக தட்டிவிட்ட வினை அவனை விட்டு தள்ளி நின்றவன். இப்போ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்து இருக்கீங்க? அதுவும் வீணாவோட கல்யாணம் நாளைக்கு நடக்கிறப்போ அவளை எதுக்கு பயமுறுத்துற மாதிரி உங்கள வந்து மீட் பண்ணலைன்னா இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு எதுக்கு அவளை பிளாக்மெயில் பண்ணுனீங்க என்றான் வினய் கோபமாக.
அவன் கோபத்தை கண்டு புருவம் சுருக்கிய அசோக் என்ன வினை நம்ம பிளான் இல்ல மறந்து போச்சா உன்ன அடிச்சு கொடுமைப்படுத்தி ஜெயில்ல நிப்பாட்டுன அந்த அர்ஜுன் குடும்பத்தையும், என்னையும் உன் அம்மாங்க ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்தினவங்கைக்காய் நம்ம பலி வாங்க வேண்டாமா? அதையெல்லாம் மறந்துவிட்டு வீணாவும் அமலாவும் நம்மள ஏமாத்திட்டு போயிட்டாங்க. அவங்க கிட்ட பேசி நம்ம வழிக்கு கொண்டு வரத்தான் வீணாவை முதல்ல மீட் பண்ணி பேசணும்னு அவளை இங்கே வர சொன்னேன் என்றான் அசோக்.
அசோக் பேசியது எல்லாம் கேட்ட வினய் நீங்க என்ன வளத்த பாவத்திற்காக உங்கள அடிக்கடி ஜெயில்ல வந்து மீட் பண்ணி உங்களுக்கு வேணும்கிறத செஞ்சு கொடுத்துட்டு நீங்க பேசுனதே எல்லாம் கேட்டு கோபப்படாம அமைதியா சரி சரின்னு தலையாட்டி வந்துட்டேன்.
அதுக்காக நான் இன்னமும் நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு என் குடும்பத்தையும் மத்தவங்களையும் பழிவாங்குவேன்னு நீங்க நினைச்சுட்டு இருந்தா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.
வீணா உங்களை மீட் பண்ண இங்க வரமாட்டாள்.நான் அவளை இங்க வர வேண்டான்னு சொல்லிட்டேன். நான் சொல்லாம அவ இங்கே வரப்போவதும் இல்ல உங்க பிளான் எதுவுமே நடக்காது தயவுசெய்து இங்க இருந்து கிளம்புங்க.. நீங்களும் அம்மாவும் ஜெயில் இருந்து வந்துட்டீங்க இல்லையா இனிமேல் எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்கிற லைஃபை அமைதியா வாழப் பாருங்க என்று வினய் அசோக்கிற்கு அறிவுரை கூற
வினய் பேசியதை எல்லாம் கேட்டு அசோக்கால் நம்ப முடியவில்லை வேகமாக அவன் அருகில் வந்து வினயின் சட்டையை பிடித்து குலுக்கியவன்.
டேய் என்னடா நெனச்சிட்டு இருக்க இதுக்கு தான் உன் தெரியும் இவ்வளவு கஷ்டப்பட்டு நானும் உங்க அம்மாவையும் வளர்த்தோமா … உன் அம்மா அங்க ரெண்டு பேரையும் என்னையும் அந்த விக்ரமும் மீனும் அது அவனுடைய பிரண்ட்ஸ்களும் ஜெயில்ல தள்ளி எங்களை எவ்வளவு கொடுமை படுத்தினார்கள் என்று தெரியுமா உனக்கு…
நானும் உன் அம்மாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு தெரியுமா எத்தனை சொல்லி இருப்போம் நாங்க.. அதையெல்லாம் கேட்ட பிறகும் நாங்க உங்கள வளர்த்த நன்றி விசுவாசம் இல்லாம இப்படி ஒரேடியா பல்டி அடிச்சா என்னடா அர்த்தம் என்றான் அவன் சட்டையை பிடித்துக் கொண்டு..
தன் சட்டையில் இருந்த அசோக்கின் கையை பிரித்து விட்ட வினய் இங்க பாருங்க நீங்க எத்தனை வருஷமா என்கிட்ட சொன்னது எல்லாமே சுத்த பொய்யின்னு எனக்கு எப்பவோ தெரியும்.
என்னோட அப்பா சாட்சியும் ஆதாரத்தோட நீங்க பண்ணின தப்புகளை எல்லாம் என்கிட்ட ஒன்னும் விடாம என்கிட்ட காட்டிட்டாரு உங்க வயசுல நீங்க எந்த மாதிரி வேலை பண்ணிக்கிட்டு இருந்தீங்க நான் என்ன எல்லாம்… விக்ரம் அங்கிளையும் மீனு ஆண்டியையும் டார்ச்சர் பண்ணி நீங்க அவங்களுக்கு எவ்வளவு குடைச்சல் கொடுத்தீங்க என்கிற வரைக்கும் எல்லாமே எங்களுக்கு தெரியும்.
அது எப்படி வீணா அவ அம்மா அப்பாவுக்கு கஷ்டம் கொடுத்தவரோட கூட்டு சேர்ந்துட்டு அவங்களையே பழிவாங்க நினைப்பா இதெல்லாம் லாஜிக்கா நடக்குமான்னு கொஞ்சமாவது யோசித்து பார்த்திருக்கணும் நீங்க பரவால்ல வயசாயிடுச்சு இல்லையா மூளை மடங்கி இருக்கும் என்று நக்கலாக வினய் சிரிக்க…
அதை பார்த்த அசோக்கிற்கு மேலும் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. தன்னுடைய இத்தனை வருஷ பிளானும் மொத்தமாக சரிந்து விட்டது போல உணர்ந்தால் அசோக் யார் தன்னை நம்பினாலும் நம்பாவிட்டாலும் வினய் தனக்கு பக்கபலமாக இருக்கிறான் என்று இத்தனை நாள் அசோக் நினைத்திருக்க…
ஆனால் அவனும் தன்னை காலை வாரி விட்டான் என்று நினைக்கையில் ஆத்திரமாக வந்தது அசோக்கிற்கு.
டேய் என்னடா நெனச்சிட்டு இருக்க… உன்னை இத்தனை வருஷமா நான் வளர்த்த நன்றி விசுவாசம் கொஞ்சம் கூட இல்லாமல் பேசுற நீ என்று அசோக் அவனிடம் கேட்க.
நன்றி விசுவாசமா அத பத்தி நீங்க பேசுறீங்களா என்று அவனை எகத்தாளமாக பார்த்து சிரித்த வினய் உங்களுக்கு திரும்ப வாழறதுக்கு விக்ரம் அங்கிலும், மீனும் ஆண்டியும் எவ்வளவு வாய்ப்பு கொடுத்துட்டாங்க….
அவங்க கொடுத்த வாய்ப்ப சரியா யூஸ் பண்ணி இருந்தாலே நீங்க இந்த நேரம் இப்படி இப்ப ஜெயில்ல கிடந்து கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று அவன் வயதை காரணம் காட்டி மேலும் வினய் குத்தி காட்டி அசோக்கிடம் பேச..
யாருக்கு வாய்ப்ப யார் கொடுக்கிறது அவங்க உயிரோட வாழ்வதற்கே பிச்சை போட்டவன்டா நான் மீனும் இப்போ உயிரோடு இருக்குறதுக்கு காரணமே நான் போட்ட பிச்சைதான் என்று அசோக் திமிராக கூற…
யாருக்கு யாருடா பிச்சை போடுவது என் பொண்டாட்டிய வாழ வைக்க நீ யாருடா என கேட்டுக்கொண்டே அங்கே கோபமே உருவாக அசோக்கை நோக்கி வேகமாக விக்ரம் நடந்து வந்து கொண்டிருக்க…
அவனை இந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத இருவருமே அதிர்ச்சியாகி விக்ரமை பார்க்க கோபமாக அசோக்கை நோக்கி வந்த விக்ரம் தன் காலை அவன் மார்பின் உயரத்திற்கு தூக்கி அசோக்கை ஓங்கி மிதிக்க… இந்த வயதிலும் இவ்வளவு பலமாக வலுவாக தன்னை தாக்கிய விக்ரமின் அடியை தாங்க முடியாமல் சில அடி தூரம் பறந்து தரையில் போய் விழுந்திருந்தான் அசோக்.
தரையில் விழுந்திருந்த அசோக் தட்டு தடுமாறி எழுந்தவன் தன் மேல் இருந்த தூசியை தட்டி விட்டபடியே விக்ரமாய் பார்த்து பரவாயில்லையே இவ்வளவு வயசுலயும் நீ இன்னும் அதே உடற்கட்டோட நம்ம ஸ்ட்ராங்கா தான் இருக்க…
இப்படி ஸ்ட்ராங்கா இருக்கிற உன்கிட்ட சந்தோஷமா என்ஜாய் பண்றது விட்டுட்டு மீனு எப்படி என்கிட்ட வருவா நான் இப்பதான் இது எனக்கு புரியுது என்றால் இந்த வயதிலும் மீனுவின் மீது தனக்கு இருக்கும் ஆசையை வெளிக்காட்டிக் கொண்டு அசோக் கூற
அவன் மீது பேசியதை கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்த விக்ரம் என்னடா பேசுற என்று அவனை மீண்டும் அடிக்க வர அதற்குள் கொடுக்க புகுந்து விக்ரம் அசோக்கை அடிக்காமல் பிடித்துக் கொண்டுதான் விடுங்க இவர் பேசுவதை எல்லாம் கேட்டு நீங்க டென்ஷன் ஆகாதீங்க வயசான எல்லாருக்கும் நல்ல புத்தி வரும்னு சொல்லுவாங்க ஆனா இவருக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு ஏதோ உளறிக்கிட்டு இருக்காரு நீங்க இதையெல்லாம் பெருசா எடுத்துட்டு டென்ஷன் ஆகாதீங்க இவரை நான் பார்த்துக்கிறேன் என்றான்.
இல்ல வினய் இவன் லேசுப்பட்டவன் கிடையாது. இவனை இப்படியே விட்டோம்னா என்ன வேணா செய்வான் என்று விக்ரம் அவனை நோக்கி அசோக்கை நோக்கி மீண்டும் செல்ல…
அசோக்கிடம் விக்ரமின் செல்ல விடாமல் இறுக்கி பிடித்துக் கொண்ட வினய் அங்கிள் நான் சொல்றதை கேளுங்க… என்று விக்ரமை சமாதானப்படுத்த முயன்றான்.
பரவாயில்லையே என்ன பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்க விக்ரம். ஜெயில்ல இருந்து வந்ததும் நான் என்னோட வேலைய ஸ்டார்ட் பண்ணிடுவேன்னு கரெக்டா கெஸ் பண்ணிட்டியே என்று அசோக் சிரிக்க…
இவ்வளவு நேரம் விக்ரமை அசோக் அடிக்க வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருந்த வினய் இப்படி அசோக் கூறவும் அவனை புரியாமல் புருவம் இடுங்க பார்த்தான்.
வினய் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை கண்டு சிரித்த அசோக் என்ன அப்படி பாக்குற வினய் நான் இங்கே சும்மா வந்திருப்பேனு நினைச்சியா அதான் இல்ல. இங்க வீணா மட்டும் வந்திருந்தா இந்த நேரம் நடக்கிறதே வேற இந்த நேரம் அவளை இங்கிருந்து தூக்கிட்டு போயிருப்பேன்., இந்த கல்யாணத்தை முதல் வேலையா நிறுத்தி இருப்பேன்.
அவள வச்சு இவனையும் இவன் பொண்டாட்டியும் பிளாக்மெயில் பண்ணி இருக்கிற சொத்தை எல்லாம் எழுதி வாங்கலாம்னு பிளான் பண்ணி இருந்தேன். ஆனால் அதை எல்லாம் கெடுக்கிற மாதிரி நீ வந்து காரியத்துக்கு எடுத்துட்ட என்று அசோக் வினயிடம் கூற…
உங்களுக்கெல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தியே வராதா இன்னமும் இவங்கள பலி வாங்கனும்னு ஏன் கங்கணம் கட்டி சுத்திக்கிட்டு இருக்கீங்க…
இங்க பாருங்க இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல போனா போகுதுன்னு உங்கள விடறேன் பேசாம இங்கிருந்து கிளம்பி நீங்களும் அம்மாவும் கண்காணாத இடத்துக்கு போயிடுங்க என்ன வளர்த்து பாவத்துக்கு என்னால அதை மட்டும் தான் பண்ண முடியும் மறுபடியும் மறுபடியும் எங்க எல்லாருக்கும் குடைச்சல் கொடுத்துக்கிட்டு இருந்தீங்க அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று வினய் அசோக்கை எச்சரிக்க…
அவன் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு அசோக்கே ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டான் இத்தனை ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் வினையை இத்தனை வருடத்தில் அசோக் பார்த்ததே இல்லை அவனுடைய வார்த்தைகளில் இருந்த தீவிர தன்மையை உணர்ந்து கொண்டவன் இதற்கு மேலும் இங்கே இருந்தால் தனக்குத்தான் ஆபத்து என்று நினைத்துக் கொண்டவன் இப்போதைக்கு இங்கிருந்து தப்பிச் செல்வது தனக்கு சரியானது என்று யோசித்தவன் உடனே வினயிடம் நல்லவன் போல முகத்தை மாற்றிக் கொண்டு வினய் என்ன இத்தனை வருஷமா நானும் உன் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பாசம் கூட உனக்கு இல்லையா நான் எதுக்காக இப்படி எல்லாம் பண்றேன்னு உனக்கு புரியலையா என்றான் அசோக்.
இங்க பாருங்க உடனே முகத்தை மாத்தி நீங்க பேசினா நான் நம்பிடுவேன்னு நினைக்கிறீங்களா உங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும் இத்தனை வருஷம் உங்க கூட இருந்தேன் நீங்க எந்தெந்த நேரத்துல எப்படி எல்லாம் நடந்துக்குவீங்கன்னு கூடவா எனக்கு தெரியாம போயிருக்கும் என்று சிரித்த வினய் இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க…
எந்த பிரச்சனையும் பண்ணாம இங்கிருந்து கிளம்பி போயிட்டா உங்களுக்கு நல்லது இல்ல இவங்களையும் மத்தவங்களையும் பழிவாங்குவேன்னு நீங்க நினைச்சா அடுத்து உங்க சாவு என் கையால தான் இருக்கும் அதை மறந்துடாதீங்க என்று வினய் கர்ஜிக்க…
எத்தனை ஆண்டுகளாக தான் வளர்த்த சிங்கமும் தன்னையே குறி பார்த்து பாய தொடங்கி விட்டதை உணர்ந்த அசோக் எரிமலையாய் குமரிக் கொண்டிருந்தான்.
எரிந்து கொண்டிருந்த எரிமலையை பிரார்த்தனப்பட்டு தனக்குள் அடக்கிக் கொண்ட அசோக் எதுவும் பேசாமல் அங்கிருந்து விலகிச் செல்ல விக்ரமோ விடுவினை அவனை இப்படியே அனுப்புறது சரி இல்ல அவனுக்கு சரியான தண்டனை கொடுக்கணும் காலத்துக்கும் நம்ம வழிக்கே வரக்கூடாது என்று விக்ரம் அசோக்கை நோக்கி சிரிப்பாய..
நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க இவர் என்ன செய்யணும்னு நினைச்சாலும் அதை தவிடு பொடி ஆக்கிடுவேன் நான். இன்னிக்கி ஒரு ராத்திரி மட்டும் அமைதியா இருங்க நாளைக்கு வீணாக்கு கல்யாணம் நடந்து முடிஞ்ச அடுத்த நிமிஷம் இவங்கள நான் கவனிச்சிக்கிறேன் கவலைப்படாதீங்க என்று விக்ரமை சமாதானம் செய்தால் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்த அசோக்கை பார்த்துக்கொண்டே…
அசோக்கும் வினை பேசியது எல்லாம் கேட்டு கொண்டிருந்தவன் பார்க்கிறேன்டா நாளைக்கு எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு காலையில முகூர்த்தத்துக்காக மொத்த குடும்பமும் இந்த மண்டபத்துல தானே இருக்கும் இந்த மொட்ட குடும்பத்தையும் உன்னையும் கூண்டோட கைலாசத்துக்கு அனுப்பிட்டு தான் மறு வேலை என்று நினைத்தபடி அங்கு இருந்து தப்பிச் சென்றான் அசோக்.
EPISODE 443
சரியாக நான்கு மணிக்கு எல்லாம் குளித்து தயாராகி மணமகள் அறையில் வீணா ரெடியாக இருந்தாள்.
பயமும் பதட்டமும் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. கொஞ்சம் கூட திருமணம் ஆக போகும் புது பெண் போல அவள் முகம் பொலிவில்லாமல் இருந்தது.
நிதியும், ரோஜாவும் வீணாவிடம் விவரம் கேட்டு பார்த்து விட்டனர். ஆனால் அவள் ஒன்றும் இல்லை திருமணம் ஆகப்போவதில் சற்று பயமாக இருக்கிறது என்று ஏதோ சொல்லி சமாளித்து இருந்தாள்.
மீனு அவசரமாக வீணாக பார்ப்பதற்காக அவள் அறைக்குள் ள் வந்தவள் கையில் இருந்த நகை பெட்டியை ரோஜாவிடம் கொடுத்து அதை வீணாவிற்கு போட்டுவிட சொல்லிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.
வீணாவின் முகத்தில் ஏற்பட்டிருந்த பயத்தை மீனு கண்டு பிடிக்கவில்லை.. கல்யாண வேலைகளில் பரபரப்பில் மீனு அதை கவனிக்கத் தவறிவிட்டாள்.
இரவு தன்னை மொட்டை மாடியில் வந்து சந்திப்பதாக அசோக் அவளுக்கு பூங்கொத்தில் செய்தி அனுப்பி இருக்க…
ஆனால் வினய் சொன்னது போல வீணா மொட்டை மாடிக்கு செல்லாமல் அசோக்கை சந்திக்காமல் இருந்து விட்டாள். தான் சொன்னபடி வராமல் போனதால் அசோக் தன்னை எதுவும் செய்து விடுவானோ… தன் திருமணத்தை எதுவும் நிறுத்தி விடுவானோ… என்று அவளுக்கு பயம்.
ஏனென்றால் அசோக்கை பற்றி அவளுக்குத் தான் நன்றாக தெரியுமே அவன் சொன்னதை செய்யவில்லை என்றால் விளைவு நூறு மடங்கு ஆபத்தாக தான் இருக்கும்.
வினய்க்கு என்ன நடந்தது என்று கேட்கலாம் என்று பார்த்தால் இவளை சுற்றியே நிதியும், ரோஜாவும் கூடவே இருக்க… அவர்களைத் தாண்டி வினய்க்கு போன் பண்ணி விஷயம் கேட்க முடியாமல் வீணா தவித்தாள்.
யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வீணாவின் போன் திடீரென ஒழிக்கவும் அதிர்ந்து போனவள் அவளுக்கு அழைத்தது யார் என்று பார்ப்பதற்காக அருகில் இருந்த மேஜையில் வைத்திருந்த தன் போனை எட்டி எடுக்கப் போக…. அதற்குள்ளாக குறுக்கே புகுந்து ரோஜா அந்த போனை எடுத்துக் கொண்டாள்.
ஏய் ரோஜா என்ன பண்ற குடு டி என் போன என்று அவள் கையில் இருந்த தன் போனை பிடுங்க வீணா செல்ல…
போனை அவள் கையில் கொடுக்காமல் பின்னால் சென்ற ரோஜா இருடி யாரு உனக்கு இந்த நேரத்துல கால் பண்றாங்கன்னு நானும் பாக்குறேன். எப்படியும் அது லோகியா தான் இருக்கணும். அவரா இருந்தா கொஞ்சம் அவர்கிட்ட விளையாடலாம்னு தான்… என்றவள்.
வெயிட் பண்ணுடி என்று போனை பார்க்க அவள் நினைத்தது போல லோகிதான் வீணாவிற்கு அழைத்து இருந்தான்.
திரையில் தெரிந்த லோகியின் பெயரை வீணாவிடம் காட்டி… இங்க பாரு லோகி அண்ணாவுக்கு உன்னை விட்டு கொஞ்சம் நேரம் கூட பிரிஞ்சு இருக்க முடியல போல.. உனக்கு இந்த நேரத்துல கால் பண்ணி இருக்காரு இன்னும் கொஞ்ச நேரத்துல உன் கழுத்துல தாலி கட்ட போறாரு அதுக்குள்ள என்ன அவசரம் உன்கிட்ட பேசுறதுக்கு என்றாள் ரோஜா.
திரையில் தெரிந்த யோகியின் பெயரை பார்த்து வினாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது இந்த நேரத்தில் தனக்கு எங்கே அசோக்கிடமிருந்தோ அல்லது மாலினி, கலா யாரிடம் இருந்தோ போன் எதுவும் வந்து விடுமோ என பயந்து போய் இருந்தாள் வீணா.
ஏய் ரோஜா விளையாடாத போன முதல்ல கொடு பாரு ரிங் போயிட்டு இருக்கு அவன் எதுக்கு இந்த நேரத்துக்கு கால் பண்ணான்னு தெரியல குடு அட்டென்ட் பண்ணி பேசலாம் என்று அவள் கையில் இருந்த போனை வீணா பிடுங்கப் போக…
அவளிடம் போனை கொடுக்காமல் ரோஜா போக்குக் காட்டினாள். அதற்குள்ளாக போன் முழுவதுமாக ரிங் ஆகி கட் ஆகி இருந்தது.
அடடா அதுக்குள்ள போன கட் பண்ணிட்டாரா இப்போ என்ன பண்றது என்று போனையும் வீணாவையும் மாறி மாறி பார்த்து ரோஜா கூற…
அப்போது நிதி வெடுக்கென்று ரோஜாவின் கையில் இருந்த போனை பிடுங்கியவள் உனக்கு விளையாடறதுக்கு நேரமே இல்லையா டி… லோகி எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கார்ன்னு தெரிய வேண்டாமா? நீ இப்படி விளையாடிட்டு இருந்தா வீணா எப்படி அவர்கிட்ட பேசுறது என்று வீணாவிற்கு ஆதரவாக பேசிய நிதி தன் கையில் இருந்த சோனாவை அவளிடம் நீட்டினாள்.
தேங்க்ஸ் நிதி… இவள… என்று பல்லைக் கடித்தவள் இருடி போன் பேசிட்டு உன்ன கவனிச்சிக்கிறேன் என்ற வீணா ஃபோனை எடுத்துக்கொண்டு அந்த அறையில் இருந்த பால்கனிக்கு சென்றாள்.
ஏன் பால்கனிக்கு சென்றவள் அவள் பேசுவது இவர்களுக்கு கேட்டு விடக்கூடாது என்று பால் கனி கதவை சாற்றிவிட்டு லோகிக்கு கால் செய்யப் போக அதற்குள்ளாக அவனை திரும்ப அழைத்து இருந்தான்.
அவன் அழைத்த அடுத்த நொடி போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து ஹலோ என்றாள் வீணா சற்று பதட்டமாக…
வீணாவின் குரலில் இருந்த பதட்டத்தை கண்டுகொண்ட லோகி, வீணா என்ன ஆச்சு? உன் குரல் ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கு? எதுவும் பிரச்சனையா? என்றான் அக்கறையாக..
அதெல்லாம் ஒன்னும் இல்ல லோகி நீ கால் பண்ணின அப்போ ரோஜா போனை பிடுங்கி வச்சிட்டு தர மாட்டேன்னு விளையாடிட்டு இருந்தா அதான் ஃபர்ஸ்ட் என்னால போனை அட்டென்ட் பண்ண முடியல… சரி சொல்லு எதுக்காக இந்த நேரத்துக்கு கால் பண்ணி இருக்க என்றாள்.
என்னடி இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது நீயும் நானும் லவ்வர்ஸ் அப்படின்ற ஸ்டேஜ்ல இருந்து கணவன் மனைவி என்ற குடும்ப உறவு கொள்ள அதுக்கப்புறம் இந்த மாதிரியான ஒரு பறக்குற மொமண்ட்…. உள்ளுக்குள்ள ஒரு படபடப்பு… வயிதுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற தருணங்கள் … எதுவுமே கிடைக்காது. ரெண்டு பேருமே ஒளிஞ்சு.. ஒளிஞ்சு… பயந்து.. பயந்து பேச வேண்டிய அவசியம் இருக்காது. இதுல இருக்குற ஒரு திரில் இனிமேல் கிடைக்காது இல்லையா… அதனால தான் யாருக்கும் தெரியாம போனை எடுத்துட்டு பால்கனிக்கு வந்தேன் உன் கிட்ட பேசுறதுக்காக… என்றான் லோகி.
அவன் சொன்னதைக் கேட்டு மனதில் இருந்த பதட்டங்கள் எல்லாம் குறைந்து வெட்கத்தோடு ஆமா லோகி நீ சொல்றது சரி தான். இனிமேல் நம்ம ரெண்டு பேரும் பயந்து பயந்து காதலிக்க வேண்டிய அவசியம் இல்ல.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன்ன வெளியே போகணும்னா யாருக்கும் பயந்து யாராவது நம்மள பாத்துட்டு வாங்கன்னு பயந்து போக வேண்டிய அவசியம் இருக்காது இல்ல என்று சிரித்தாள்.
ம்ம்ம்… ஆமா… வீணா… சாதாரண இடுப்பு வேலை செஞ்சுகிட்டு இருந்த என்னை இன்னைக்கு இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டதுக்கு முதல் காரணம் உன்னோட அண்ணன் வினுவும், அதுக்கப்புறம் ரசிகா மேடம் தான்.
யாருமே பார்த்து பேச தயங்கின என்னோட தீஞ்சு போன முகத்தை சரி செய்து… அதுக்கான ட்ரீட்மெண்ட் அப்படி இப்படின்னு எல்லாம் முயற்சிகளையும் செய்து என்னை குணமாக்கியது உன்னுடைய அண்ணனோட முயற்சி தான். அதேபோல எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து உன்னோட அண்ணா அவர் நடிக்க இருந்து விளம்பர படத்துல என்ன முன்னிறுத்தி எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாரு… முதல் வாய்ப்பு அவர் தான் இருந்தாலும் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் ரசிகர் மேடம் எனக்கு கொடுத்த பரிசுன்னே சொல்லலாம்.
அந்த அளவுக்கு அவங்க என்ன அவங்களோட சொந்த தம்பியாகவே பாவிச்சு நிறைய உதவி செஞ்சிருக்காங்க….
எல்லாம் ஒரு படி மேலே போய் நீயும் நானும் காதலிக்கிறேன் விஷயத்தை தெரிஞ்சுகிட்டு நமக்கு குறுக்க நிக்காம உன்னோட அண்ணன் அவரைவிட வசதி வாய்ப்பில் குறையா இருந்த என்னை அவரோட தங்கச்சிக்கு… அதான் என் காதலியான உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முழு மனசோட சம்மதித்தது தான் எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமா இருக்கு என்றான் லோகி.
அவர் மட்டும் இல்ல உன் வீட்டில் இருக்கிற மொத்த ஆட்களும் ஏன் உன் குடும்பம் மொத்தமும் என்னையும் என் தங்கச்சியையும் உங்க குடும்பத்துல ஒரு தகவல் ஏத்துக்கிட்டாங்க. எனக்கு இப்படி ஒரு உறவு… இவ்வளவு பெரிய ஒரு குடும்பத்துக்குள்ள நானும் என் தங்கச்சியும் நான் இருக்கும் என்பதே பெரிய சந்தோஷம் எனக்கு என்றான்.
ஆமா லோகி எத்தனை வருஷம் எங்க அம்மா அப்பா கிட்ட இருந்து என்ன பிரிச்சு… அவங்களோட சுயநலத்துக்காக என்னையும் என் அண்ணன் வினய், அப்பறோம் அமலா எங்க எல்லாரையும் நான் எந்த ஊரு சந்தேகமும் இல்லாம முழு மனசோட அப்படியே எங்களை ஏத்துக்கிட்டாங்க இது எனக்கு எவ்வளவு பெரிய ஆச்சரியமான விஷயம் தெரியுமா.. பரவாயில்ல எனக்கும் ஒரு குடும்பம் உண்மையான குடும்பம் இருக்குன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடா அதேபோல உன்ன கல்யாணம் பண்ணிக்க போறதையும் நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன் என்றாள் வீணா.
எங்க நான் உனக்கு வீடியோ கால் பண்றேன் நீ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு நான் பாக்கணும் அட்டென்ட் பண்ணு என்று லோகி அடுத்து அவள் பேச வருவதற்குள் தன் போன் காலை கட் செய்தவன். தன் மொபைலில் இருந்து வீணாவிற்கு வீடியோ கால் செய்தான்.
என்ன அவசரம் பாரு இவனுக்கு என்ன கொஞ்சம் பேச விடுறானா பாரு… என்று புலம்பியவள் லோகியின் போன் காலை அட்டென்ட் செய்தாள் வீணா.
காலை அட்டென்ட் செய்ததும் அவளை பார்த்த லோகி வாயடைத்துப் போனான். வீணா அவ்வளவு அழகாக திருமணத்திற்கு தயாராக இருந்தாள்.
அறக்கு நிறத்தில் முகூர்த்த பட்டு அணிந்து இருக்க… பச்சை நிற வேலைபாடுகள் செய்த பிளவுஸும் தங்க, வைர நகைகளும் தலை முதல் இடைவரை ஆபரணங்களாலேயே வீணாவை இழைத்திருந்தார்கள்.
அவள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக… வீணா சிரித்த முகமாக வீடியோ காலில் தெரிய…. அவளை லோகி பார்த்துக் கொண்டிருக்க… தன் வாயில் கை வைத்து ஆச்சரியமாக அவளை பார்த்தவன் வீணா என்ன டி நீ… இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்க உன்னை பாக்குறப்போ… இப்பவே கிஸ் பண்ணனும் போல எனக்கு தோணுது என்றான்.
இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தத்தை வச்சுக்கிட்டு முத்தம் வேணுமா முத்தம் என்று போய் கோபம் கொண்டவள். சரி என்ன பாத்துட்டே இல்ல நான் போனை கட் பண்ணட்டுமா? என்றாள்.
ஏய் இருடி அதுக்குள்ள என்ன அவசரம் போன கட் பண்ற என்ன நினைக்கிற வருங்கால பொண்டாட்டிய ஆசை தீர நான் என் கண்ணுக்குள்ள நிறைச்சுக்க வேண்டாமா? கொஞ்ச நேரம் இருடி உன்ன ரசிச்சுக்கிறேன் என்றான் லோகி.
டேய்… பார்த்தது போதும் இங்கே ரோஜாவும், நிதியும் இருக்காங்க… இவ்வளவு நேரம் நாம பேசுறதை கேட்டுட்டு என்னை கிண்டல் பண்ண ரெடியா இருக்காங்க… நான் போனை வெக்குறேன் என்று அவசர பட்டாள் வீணா.
அப்போது லோகி இருந்த அறைக் கதவை யாரோ தட்ட… ஒரு நிமிஷம் வீணா ஒரே நிமிஷம் யாருனு பார்த்துட்டு வந்துறேன். அப்பறோம் நீ போனை கட் பண்ணிக்கோ என்றான்.
சரி… சரி.. போய் முதல்ல யாருனு பாரு என்றாள்.
லோகி பால்கணியில் இருந்து ரூமுக்குள் நுழைந்தவன் சென்று தன்னறை கதவை திறந்தான். அங்கு கையில் காப்பி ட்ரெயுடன் லோகியின் அறை வாசலில் ஒரு ஆள் நின்றிருந்தான்.
லோகி கதவை திறந்ததும் அந்த ஆள் சார் கீழே இருந்து உங்களுக்கு காபி கொடுத்துட்டு வரச் சொல்லி என்ன அனுப்பி வச்சாங்க என்று ட்ரையை அவனிடம் நீட்ட…
உள்ள வாங்க வந்து அந்த டேபிள்ல வச்சிட்டு போங்க என்று கதவை நன்றாக திறந்து அந்த வேலையாளை உள்ளே வர அனுமதித்தான் லோகி.
இங்கே லைனில் வீணா இருக்க அவளுடன் லோகி பேசிக் கொண்டிருக்க… அந்த வேலையாள் உள்ளே வந்து காபியை வைத்தவன் திரும்பி வெளியே செல்லப் போனான்.
வேலையாலே உள்ளே வரச் சொல்லிவிட்டு திரும்பி நின்று லோகி வீணாவிடம் வீடியோ கால் பேசிக் கொண்டிருக்க… காபி வைத்துவிட்டு அந்த அறையை விட்டு செல்லும் வேளையில் திரும்பி லோகி பேசிக் கொண்டிருந்த வீடியோ காலில் இருக்கும் வீணாவை எட்டிப் பார்த்து தன் முகத்தை காட்டி ஹாய் என்று கை காட்டிவிட்டு வெளியே சென்றான்.
இவ்வளவு நேரம் சிரித்து முகமாக பேசிக் கொண்டு இருந்த வீணா லோகுக்கு பின்னால் தன்னை பார்த்து கைகாட்டி விட்டு சென்றவனை பார்த்ததும் அதிர்ந்து போனாள்.
EPISODE 444
ஏனென்றால் லோகின் அறைக்கு காபி கொண்டு வந்தது அசோக்.அவன் தான் காபி டேபிளில் வைத்துவிட்டு வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த வீணாவை பார்த்து கைகாட்டி விட்டு வெளியே சென்றது.
அவனை இந்த நேரத்தில் அதுவும் லோகியின் அறையில் வீணா எதிர்பார்க்கவில்லை. அசோக்கை பார்த்த மாத்திரத்தில் அவள் முகம் என் பயத்தில் வெளிரிப் போய் விட… அதை கவனித்த லோகி வீணா என்னாச்சு உன் முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு என்றான்.
லோ… லோகி… உ… உன் ரூம்ல இருக்கிற அந்த ஆள் என்று வீணா திக்கித் திணறி பேச… அந்த ஆளா அந்த ஆளுக்கு என்ன அவர் காபி கொண்டு வந்தவர். நீ ஏன் இப்படி பயப்படுற அவரைப் பார்த்து நீ ஏன் இப்படி பயப்படுற என்ன ஆச்சு உனக்கு என்றான் லோகி எதுவும் புரியாமல் திரும்பி வெளியே பார்த்தான் .
வீடியோ காலில் லோகிக்கு பின்னால் தெரிந்த அசோக் அந்த அறையை விட்டு வெளியே சென்றிருக்க… அதை கவனித்து வீணா லோகி உடனே நீ உன்னோட ரூம் கதவை சாதிக்க… நான் சொல்ற வரை கதவை திறக்க கூடாது என்று அவனை அவசரப்படுத்தினாள்.
ஏய் வீணா என்ன டி ஆச்சு உனக்கு. அவர் சாதாரண வேலை ஆள். அவரை பார்த்து நீ ஏன் இப்படி பதட்டப்படுற… என்றான் லோகி.
ஐயோ!! லோகி நான் சொல்றதை இப்போ நீ கேக்க போறியா? இல்லையா? முதல்ல உன்னோட ரூமை லாக் பண்ணு என்று அவனை அவசர படுத்த… அவளை புரியாமல் பார்த்தவாறே… சென்று தன் அறைக் கதவை சாற்றினான்.
இங்க பாரு கதவை சாத்தி ஒரு பக்கமா கால் போட்டாச்சு இப்போ உனக்கு திருப்தியா என்று லோகி கேட்க…
ம்ம்ம்.. ஓகே.. நான் உனக்கு திரும்ப கால் பண்றவரை அந்த ரூம் விட்டு வெளியே வரக்கூடாது யார் வந்து கதவைத் தட்டினாலும் நீ கதவை திறக்க கூடாது. நான் சொன்ன பிறகு தான் கதவை திறக்கணும் புரிஞ்சுதா என்றவள்.
இவளுக்கு இப்போ என்ன ஆச்சு ஏன் இப்படி பதட்டப்படுறா என்று ஒன்றும் புரியாமல் லோகி அவள் சொன்னதற்கு தலையாட்ட…
சரி நான் இப்ப கால் கட் பண்றேன். திரும்ப நானே கால் பண்றேன் அதுவரை ரூம்குள்ளயே இரு வெளிய போயிடாத ப்ளீஸ் என்றவள் போனை வைத்தாள்.
லோகியிடம் பேசிவிட்டு போனை கட் செய்த வீணா அடுத்து வினய்க்கு தான் அழைத்திருந்தாள். பால்கனியில் இருந்து மிகவும் பதட்டமாக போனை காதில் வைத்த படி அறைக்குள் நுழைந்த வீணாவை ரோஜா, நிதி இருவரும் புரியாமல் பார்த்தனர்.
வினய்க்கு போன் போகவே இல்லை… இரண்டு மூன்று முறை வினய்க்கு அழைத்துப் பார்த்தவள் இந்த நேரத்துல தான் இப்படி நடக்கணுமா என்று பறியவள். அவள் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போக…
அவளை கைப்பிடித்து நிறுத்திய நிதி ஏய் எங்கடி போற இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது இந்த நேரத்தில் ரூமை விட்டு வெளியே போகக்கூடாது என்று தெரியாதா உனக்கு என்று அவளை நிப்பாட்டினாள்.
ஏய் ஒரு நிமிஷம் நான் லோகியை போய் பார்த்துட்டு வந்துறேன் என்று கதவை திறந்துகொண்டு வீணா அவள் அறையில் இரும்து வெளியேற…
இவளுக்கு எவ்ளோ அவசரம் பாரு லோகியை பார்க்க.. என்று கிண்டல் செய்த ரோஜா.. வா டி நிதி இந்த நேரத்துல அவளை தனியா அனுப்புறது சரி இல்லை நாம அவ கூடயே போவோம் என்று அதே முதல் மாடியில் அவர்கள் அறைக்கு நேர் எதிர் இருந்த லோகியின் அறைக்கு செல்ல போக… அதற்குள்ளாக வீணா லோகியின் அறையை அடைந்து கதவை படபடவென தட்டி லோகி கதவை திற… நான் தான் வீணா வந்து இருக்கேன் என்றாள்.
அவள் கதவை தட்டிக்கொண்டே இருக்க… ஆனால் உள்ளே இருந்து லோகியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வீணாவிற்கு அது மேலும் பயத்தை தர… மீண்டும் அவன் அறைக் கதவை தட்ட போக… அப்போது அவளுக்கு போன் வரவும் கையில் வைத்து இருந்த போனை பார்க்க லோகி தான் வீடியோ கால் செய்து இருந்தான் வீணாவிற்கு.
கதவை நான் தட்டிக்கிட்டே இருக்கேன் இவன் கதவை திறக்காம வீடியோ கால் பன்றானே என்று பதட்டமாக வீணா காலை அட்டென்ட் செய்து டேய் எவ்ளோ நேரம் கதவை தட்டுறது. வந்து கதவை திற… என்று வீடியோ காலில் லோகியை பார்த்து பேசிக்கொண்டு இருக்க… அப்போது லோகியின் கையில் இருந்த மொபைலை விடுகென்று பிடுங்கி… என்ன வீணா உன் வருங்கால புருஷனை பார்க்க அவ்ளோ அவசரமா என்று அசோக் பேச…
வீணா அதிர்ந்து போனாள். அசோக் எப்படி மீண்டும் லோகியின் அறையில் என்று புரியாமல் பார்த்தவள் அடுத்து அசோக் சொன்னதை கேட்டு வேணாம் வேணாம்…. என்று அலறினாள்.
அதுவரை வீணாவை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ரோஜாவும், நிதியும் வீணா யாரிடமோ மிகவும் பதட்டமாக பேசுவதை பார்த்து அவளை நோக்கி செல்லப்போக…
வீணா போன் திரையில் தெரிந்த அசோயை, லோகியையும் பார்த்தவள் வேணாம்… ப்ளீஸ்… என்று கெஞ்சிக்கொண்டே பின்னால் நகர்ந்தவள் அங்கே இருந்து அப்படியே பின்னால் சரிய.. அவள் முதல் மாடியில் இருந்து கீழே விலப்போவதை பார்த்து ரோஜா, நிதி இருவரும் ஏய் வீணா என்ன டி பண்ணிட்டு இருக்க… என்று அவளை நோக்கி வேகமாக ஓடினர். வீணாவை கீழ விழாமல் தடுப்பதற்கு…
அவர்கள் செல்வதற்குள் கையில் இருந்த மொபைலை தரையில் விட்டவள் அடுத்த நொடி தான் நின்று இருந்த முதல் மாடியில் இருந்து அப்படியே தலை குப்புற கீழே விழுந்தாள்.
வீணாஆஆ …. என்று பதறிக்கொண்டு அவளை நோக்கி ஓடி வந்த இருவரும் தங்கள் கண் முன் கீழே விழுந்த வீணாவை பார்த்து உறைந்து போயினர்.
அவர்கள் வெளியே எட்டி பார்க்க… கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் வீணா தரையில் விழுந்து கிடக்க.. அவளை நோக்கி மற்றவர்கள் ஓடி வந்து கொண்டு இருந்தனர்.
ரோஜா, நிதி இருவரும் கீழே செல்லப் போனவர்கள் காதில் அப்போது லோகி அம்மாஆஆ… என்று அலறும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவர்கள் திரும்பி தரையில் விழுந்து கிடந்த வீணாவின் மொபைலை பார்க்க.. அதில் தெரிந்த லோகியை பார்த்து இருவருக்கும் இதயமே நின்று விடும் போல ஆகிவிட்டது.
கழுத்தில் இருந்து ரத்தம் வழிய… சாரில் லோகி துடித்துக்கொண்டு இருக்க… ஐயோ… லோகி… என்று ரோஜா, நிதி இருவரும் பயத்தில் அந்த மண்டபமே அதிரும்படி அலற… அப்போது அந்த வீடியோ கால் கட் ஆனது..
இருவரும் லோகியின் அறையை நோக்கி செல்லப்போக… அப்போது லோகியின் அறைக் கதவு திறக்கப்பட்டது.
இருவரும் ஒருவித பயத்தோடு லோகியின் அறையை பார்க்க.. அவன் அறைக் கதவை திறந்து கொண்டு ஒரு கையில் கத்தியும், மறு கையில் துப்பாக்கியுமாக வெளியே வந்தான் லோகி.
அவனை கண்டதும் இருவரும் பின் வாங்க… அவர்களை பார்த்து சிரித்தபடி… நீ சத்யாவோட பொண்ணு ரோஜா தானே என்றான் ரோஜாவின் அருகில் வந்து நின்று
அவள் ஆமாம் என்று பயந்துகொண்டே தலையை ஆட்ட… அடுத்த நொடி அசோக்கின் கையில் இருந்த கத்தியை அவள் வயிற்றில் இறக்கி இருந்தான்.
ஆஹ்… ஹக்…. என்று வயிற்றை பிடித்துக்கொண்டு ரோஜா அசோக்கை பார்க்க.. அவள் கண்களில் தெரிந்த பயத்தையும், கண்ணீரையும் ரசித்தவன்.
ரோஜா வயிற்றில் அசோக் கத்தியால் குத்தி இருக்க. அதை பார்த்து விக்கித்துப்போய் நின்று இருந்த நிதியின் மீது அவன் பார்வை திரும்பியது.
அதை பார்த்ததும் நிதி… இல்லை… இல்லை… என்று தலையை ஆட்டியபடி பயந்து பின் வாங்கியவள் திரும்பி ஓடப் பார்க்க… தன் கையில் இருந்த துப்பாக்கியைக் கொண்டு அவளை குறி பார்த்தவன். இன்னிக்கு இந்த மண்டபத்துல இருந்து யாரும் உயிரோட போக மாட்டீங்க… என்று நிதியை நோக்கி சுட…
அவள் மேல் குண்டடி பட்டு அப்படியே ரத்தம் வழிய தரையில் சரிந்தாள் நிதி.
ரோஜா நிதி குண்டடி பட்டு தரையில் விழுவதை பார்த்தவள்…நி… நிதி… என்று பேசமுடியாமல் அவளை அழைக்க..
தன் கையில் இருந்த துப்பாக்கியை அவள் தாடையில் வைத்து தன்னை பார்க்குமாறு திருப்பியவன். அவள் தாடையில் இருந்து துப்பாக்கியை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கியவன் அவள் மார்பில் துப்பாக்கியை கொண்டு வந்து நிறுத்தி சுட போக… அப்போது மேலே துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்த அர்ஜுன்.
ரோஜா என்று அவளை பார்த்து கத்திக்கொண்டே ஓடி வந்தான். அவனை பார்த்தது வந்துட்டியா நீ… என்று அவனை பார்த்து ஏக்கத்தாளமாக சிரித்த அசோக் ரோஜாவின் மார்பில் சுட்டு இருந்தான்.
இதை சற்றும் எதிர் பாராத அர்ஜுன் அப்படியே நின்றுவிட… அவனை பார்த்து சிரித்தவாரே.. ரோஜாவை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டிருந்தான்.
ஏய்… ஏய்… என்று அலறிக்கொண்டு அவனை நோக்கி அர்ஜுன் வர.. நொடியும் தாமதிக்காமல் அவனை துப்பாக்கியால் சுட்டிருந்தான் அசோக்..
அர்ஜுனை சுட்டவன் ஒருவித கொலை வெறியோடுஅவன் நின்று இருந்த இடத்தில் இருந்து கீழே எட்டிப் பார்க்க.. அங்கே ரத்த வெள்ளத்தில் வீணா, ரோஜா இருவரும் இருக்க… அவர்களை சுற்றி மொத்த குடும்பமும் என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்று இருக்க… கையில் இருந்த துப்பாக்கியில் மேலே நோக்கி சுட்ட அசோக்கை அனைவரும் நிமிர்ந்து பார்க்க… இதோ… நான் அங்கே வரேன்… என்று சொல்லிக்கொண்டே கீழே கிளம்பினான்..
அவன் மாடியில் இருந்து கீழே இறங்கி வர நிலை துப்பாக்கி சத்தம் கேட்டதும் வினுவும், கிருஷ்ணாவும் படிகளில் அவன் எதிரே ஏறி வர… அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி கீழே இறங்கி வந்தான் அசோக்
EPISODE 445
திருட்டுத்தனமாக கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்திருந்த அசோக் அங்கே விக்ரமின் குடும்பமும் மொத்தமும் கூடி இருக்க அவர்கள் அனைவரையும் கூண்டோடு கொன்று புதைக்கும் நோக்கத்தோடு மண்டபத்திற்குள் நுழைந்திருந்தவன் லோகி வீணா ரோஜா நிதி என யோசிக்காமல் கையில் இருந்த துப்பாக்கியாலும் கத்தியாலும் அவர்களை தாக்கிவிட்டு கீழே மண்டபத்தில் கூடி இருந்த விக்கிரமின் குடும்பத்தை நோக்கி படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்க அப்போது மேலே துப்பாக்கி சத்தம் கேட்டு கிருஷ்ணாவும் வினுவும் படிகளில் ஏறி வந்து கொண்டிருக்க அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுப்படி அசோக் கீழே இறங்கினான் அவன் லாவகமாக அதிலிருந்து தப்பிய இருவரும் மாடிப்படி இருந்து எகிறி தரையில் குதித்தனர்.
மண்டபத்திற்குள் ஜியா தன்னுடைய தோழிகளோடு சிரித்து பேசியபடி உள்ளே வந்தவர்கள் அங்கே அதற்குள்ளாக தரையில் ரத்த வெள்ளமாக கிடந்த ரோஜாவையும் வீணாவையும் பார்த்து உறைந்து போயினர்.
அப்போது அங்கே மீண்டும் துப்பாக்கி சத்தம் கேட்கவும் அதில் சுயம் பெற்று அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க படிகளில் அசோக் கையில் துப்பாக்கியோடு சிரித்தபடி நான் கீழே இறங்கி வர அதற்குள்ளாக தியாவும் அவள் தோழிகளும் வேகமாக வீணா ரோஜாவிடம் ஓடியவர்கள் அவர்கள் நிலையைக் கண்டு மேலும் பதட்டம் அடைந்தவர்கள் அங்கே நின்றிருந்த விஷ்ணுவிடமும் ஆர்யாவிடமும் நீ என்னடா பாத்துட்டு இருக்கீங்க சீக்கிரமா இவங்களை தூக்கிட்டு வாங்க நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலைன்னா ரெண்டு பேருக்கும் ஆபத்து ஆகிடும் என்று அவர்களை வற்புறுத்த…
ஆஹ்… ஆமா ஆமா சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க இவங்க ரெண்டு பேர் மட்டும் இல்ல வேலை ஒன்னு பேரு இன்னும் கொஞ்ச நேரத்துல டெட் பாடி ஆகுற நிலைமையில இருக்காங்க அவங்களையும் சேர்த்து தூக்கிட்டு போங்க என்று சிரித்தபடி கீழே வந்தவன் உங்களையெல்லாம் கொன்னு புதைக்க வந்து இருக்கேன் யாரும் இந்த மண்டபத்தை விட்டு வெளியே போகவே முடியாது அசோக் அங்கே கண்கள் சிவப்பேரி ஆத்திரத்தோடு நின்றிருந்த விக்ரமை பார்த்து உனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் மண்டபத்துக்குள்ள விடச் சொல்லி இருக்கேன் மத்தவங்க யாரு வந்தாலும் ஒன்று விட மாட்டாங்க என்று அசோக் அந்த மண்டபமே அதிரும்படி சிரிக்க….
இப்படி தன் குடும்பம் மொத்தத்தையும் பழிவாங்க துடிக்கும் அசோக்கை கண்டு விக்ரம் இருக்கும் ஆத்திரம் அதிகமாக அவனை நோக்கி வேகமாக விக்ரம் முன்னேற தன் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு விக்ரமின் நோக்கி சுட்டான் அசோக்.
அதில் விக்ரமின் இடது பக்க தோளில் குண்டு பாய்ந்து இருக்க மீனு விக்ரம் என அலறியபடி ஓடி வந்து கீழே சரிந்தவனை தன் தோளில் தாங்கிப் பிடித்தாள்.
மண்டபத்திற்குள் கேட்ட குண்டடி சத்தமும், அலறல் சத்தமும் கேட்டு அவசரமாக மண்டபத்திற்குள் நுழைந்த வீராவும், வினயும் அங்கே கொலைவெறியோடு கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த அசோக்கை பார்த்து ஆத்திரம் வந்தது.
ஏற்கனவே அவன் மண்டபத்திற்குள் நுழைந்திருந்த விஷயம் இருவருக்கும் தெரிந்திருக்க.. எதுவும் செய்வதற்குள் அவனை பிடித்து விட வேண்டும் என்று இருவரும் மண்டபத்திற்கு வர நினைக்க ஆனால் அசோக் அங்கே நிறுத்தி வைத்திருந்த தன் இடம் வீரா வினய் இருவரையும் உள்ளே விடக்கூடாது அவர்களை பார்த்து இடத்தில் பிடித்து வைக்க சொல்லி கட்டளை இட்டு இருக்க…
மண்டபத்திற்கு பின்னால் ஏதோ வேலையாக சென்றவர்கள் விஷயம் கேள்விப்பட்டு உள்ளே வருவதற்குள் அசோக் நாட்கள் அவர்களை சூழ்ந்து நமக்குள்ள அவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டு இருவரும் மண்டபத்திற்குள் நுழைய அதற்குள்ளாக இங்கே அசோக் தன் வேலையை காட்டி இருந்தான்.
அவனைப் பார்த்த அடுத்த நொடி இருவரும் நொடியும் தாமதிக்காமல் புயல் வேகத்தில் அசோக்கை நெருங்கி இருக்க… இதை சற்றும் எதிர்பாராத அசோக் தன் கையில் இருந்த துப்பாக்கியை அவர்களை நோக்கி திருப்பினான்.
அதற்குள்ளாக வினய் அசோக் கையில் இருந்த துப்பாக்கியை நொடி பொழுதில் பிடுங்கி அவன் கையில் வைத்திருக்க வீராவோ அசோக்கை வளைத்துப் பிடித்து நிறுத்தி இருந்தான்.
தன் கையில் இருந்த துப்பாக்கியை அசோக்கை நோக்கி நீட்டி இருந்த வினய். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருப்ப.. போனாப் போகுதேன்னு என்னை வளர்த்த ஒரே காரணத்துக்காக உன்ன நான் உயிரோட விட்டது தான் பெரிய தப்பா போயிடுச்சு. இனி நீ என் உயிரோட இருக்கறதுக்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்று சொல்லி அவனை நோக்கி ட்ரிகரை அழுத்த முற்பட…
தன் உயிரைப் பறிக்க… வினய் தன் மார்பை நோக்கி துப்பாக்கியை அழுத்துவதற்காக தயாராக இருக்க அந்த நிலையில் கூட சிறிதும் பயமில்லாமல் அவனைப் பார்த்து சிரித்த அசோக் சுடு வினய் சூடு உன் கையால சாகுறதுல எனக்கு சந்தோசம் தான்.
உன்னையும் வீணா,அமலா மூணு பேரையும் என் சொந்த பிள்ளைங்க மாதிரி வளர்த்த பாவத்துக்கு உன் கையால சாகவும் நான் தயாராத்தான் இருக்கேன் என்று எமோஷனலாக அசோக் பேச ஆனால் அவன் அப்படி பேசக்கூடிய ஆள் இல்லை என்று வினய்க்கு நன்றாகவே தெரிய அது அவனை ஒன்றும் செய்யவில்லை.
தேவையில்லாம பேசாத வாய மூடு என்றான் வினய் சத்தமாக…
வினய் கோபமாக பேசுவதை பார்த்து சத்தமாக சிரித்த அசோக் பாத்தியா பாத்தியா நான் இப்படி பேசுறது உனக்கே கடுப்பாகுது இல்ல… என்ன பண்றது எனக்கும் அப்படி பேச பிடிக்கல ஏன்னா என்னோட கேரக்டர் அப்படி கிடையாது என்று சிரித்தான் அசோக்.
அசோக் பேசுவதை கேட்டு வினய் மட்டுமல்ல அங்கே நின்று இருந்து யாருக்குமே சுத்தமாக பிடிக்கவில்லை. அவனை பார்க்கவே ஆத்திரமாக வந்தது சந்தோஷமாக இருக்க வேண்டிய இந்த தருணத்தில் இப்படி உள்ளே புகுந்து அனைவர் நிம்மதியும் கெடுத்து அனைவரையும் ஆபத்தில் நிறுத்தி இருக்கும் அசோக்கை அப்போதே கொன்று புதைக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது .
அசோக்கை பார்க்க வினைக்கு ஆத்திரம் பற்றி கொண்டு வந்தது ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வீணாவையும் ரோஜாவையும் பார்த்து அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை ஒரே நேரத்தில் தான் தங்கைகள் இருவரும் இப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கே இருக்க இவன் என்னவோ இங்கே நக்கலாக பேசி சிரித்துக்கொண்டிருப்பதை கண்டு பொறுக்க முடியாமல் தன் கையில் இருந்த துப்பாக்கியின் டிகரை அழுத்தினான் அவன் அழுத்திய வேகத்தில் அசோக்கின் காலில் போய் துப்பாக்கி குண்டு பாய்ந்தது .
இதை சற்றும் எதிர்பாராத பார்க்கிறாத அசோக் அம்மா என்று கதறியவன் வழியில் துடித்திட…
எங்கே இருக்கிறவங்க எல்லாத்தையும் எல்லாரையும் வலியில் துடிக்க வச்சிட்டு நீ சந்தோசமா சிரிக்கிறத பாக்க எனக்கும் தான் பிடிக்கல அதான் என்று மற்றொரு காலை குறி வைத்து சுட்டான் வினய்.
என்னடா நீ எவ்வளவு பண்ணினாலும் நான் பேசாம பொறுமையா போயிட்டு இருப்பேன்னு நினைச்சியா என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எப்போ நீ என்னோட குடும்பம் இல்லைன்னு நான் முடிவு பண்ணினேனோ அன்னைக்கே உன் கூட இருந்த ஒட்டுமொத்த கனெக்ஷனையும் கட் பண்ணனும்னு நெனச்சேன்.
நான் தப்பு பண்ணிட்டேன் உன் கூட இருக்கிற கணேசன கட் பண்ணி இருக்க கூடாது உன்னையே கழுத்தறுத்து கொன்னு இருக்கணும் அப்படி பண்ணி இருந்தா இந்த நேரம் இங்கே இருக்கிறவங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு நிலைமை ஆகி இருக்குமா என்று கோபமாக பேசினான் வினய்.
வலி தாங்க முடியாமல் வீராவின் கையில் இருந்து நழுவி தரையில் விழுந்தான் அசோக் .
இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல இதோ இந்த துப்பாக்கியால சரியா உன் நெத்தி பொட்டுல குறி பார்த்து சுட்டேன்னு வை இங்கேயே நீ உள்ள துடிக்க செத்துப் போயிடுவ பாக்குறியா என்று அவன் நெற்றியை நோக்கி வினய் குறி வைக்க….
இவ்வளவு நேரம் அடுத்தவர் கண்களில் பயத்தை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்த அசோக் இப்போது வினய் உன்னை சுட்டு விடுவானோ என்று பயந்து அவனைப் பார்த்தான்.
வீராவும் உச்சகட்ட கோவத்தில் இருந்தான் தன் அம்மா மீனு குண்டடிப்பட்டு துடித்துக் கொண்டு இருக்க அதை பார்த்தவன் வேகமாக வினயிடும் வந்து என்னடா இவன்கிட்ட இந்த நாயை முதல்ல வீட்டுக்குள்ளனும் என்று வினய் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கி அசோக்கை நோக்கி குறி பார்த்தான் அவனை சுடுவதற்கு…
அப்போது அவர்கள் இருந்த மண்டபத்துக்குள் திடீர் என துப்பாக்கி சத்தம் எங்கோ ஒரு மூலையில் இருந்து கேட்டது அதைக் கேட்டதும் அங்கிருந்து அனைவரும் ஒரு நிமிடம் பதறி விட்டனர்.
இங்கே கையை பிடித்து வைக்கப்பட்டிருக்க வேறு யாரு மண்டபத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்துவது என்று அதிர்ந்து போய் சத்தம் வந்து திசையை நோக்கி அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கே மாலினி ஸ்ரேயாவையும், கலா பிரியாவையும் பிணை கைதிகளாக அவர்கள் முடியை கொத்தாக பிடித்து தர தர என இழுத்துக் கொண்டு அந்த மண்டபத்திற்கு நடுவில் வந்தனர்.
பிரியாவை பார்த்ததும் குருவும் ரிஷியும் பதற ஸ்ரேயாவை கண்டு கர்ணனும் அன்வி திருத்தி என பதறினர்.
வேகமாக அதற்கு நடுவில் வந்த மாலினியும் கலாவும் அதையும் பிரியாவையும் தங்கள் கைபிடிக்குள் இருந்து மற்றவர்களை நோக்கி வேகமாக இருவரையும் தள்ளிவிட அங்கே நின்றிருந்தவர்கள் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் விழாமல் தாங்கி பிடித்துக் கொண்டனர்.
அதைப் பார்த்து ஆச்சரியமான கலாவும் மாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு இத்தனை வருஷம் ஆகியும் உங்க எல்லாரோட பிரண்ட்ஷிப்பும் இன்னும் அப்படியே தான் இருக்கு இல்ல ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு சப்போட்டா இருக்கீங்க யாராவது ஒருத்தர் எதாவது எல்லாருமே துடிச்சு போறீங்களே எங்களால இத நம்பவே முடியல என்றால் கலா.
ஒரு பக்கம் மீனு குண்டடிப்பட்டு வழியில் துடித்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் கலாவும் மாலினியும் ஸ்ரேயாவையும் சித்திரவதை செய்திருந்ததில் முகம் கைகளில் எல்லாம் காயங்களோடு வீங்கிய கண்களோடு அங்கே நின்று இருக்க அவர்களைப் பார்த்த பார்வதிக்கு உள்ளம் வலித்தது.
கலா பேசியதை கேட்டு அவளை பார்த்த பார்வதி இதுதான் பிரண்ட்ஷிப் ஒருத்தருக்கு ஒருத்தர் கஷ்டம்னா சேர்ந்து நின்னு அவங்க கஷ்டத்தை பகிர்ந்துக்கிறது எனக்கு ஒருத்தர் சந்தோசம்னா அதையும் சேர்ந்து நின்னு அந்த சந்தோசத்தை அதிகமாகிக்குறது தான் ஃப்ரெண்ட்ஷிப் எங்களுக்கான அடையாளமே இதுதான் நாங்க எப்பவும் ஒன்னாதான் இருப்போம் என்று பார்வதி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்துக் கூற…
பிரியா என்ன சொன்ன கஷ்டம்தான் ஒண்ணா சேர்ந்து நின்னு அவங்க கஷ்டத்தை பங்கு போட்டுக்குவியா அப்போ இந்தா உன் பிரெண்ட்ஸ் மூணு பேரு மட்டும் கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்கும்போது நீ மட்டும் பெருசா இருக்கிறத பாத்தா எனக்கு பிடிக்கல என்ற மாலினி அடுத்த நிமிடம் துப்பாக்கியை பார்வதியை நோக்கி உயர்த்த….
ஐயோ இவ வேற எமோஷனலா பேசுறேனு சொல்லி எந்த நேரத்துல எது பேசறதுன்னு தெரியாம வான்டெட் இவளே போய் மாட்டிக்கிறாளே என்று புலம்பிய ஷாம் வேகமாக பார்வதியின் முன்னால் வந்து குறுக்கே நின்றவன் இங்க பாரு கலா உனக்கு என்ன பிரச்சனை எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் இப்படி இங்கு இருக்கிறவங்களை காயப்படுத்தறதுனால உங்களுக்கு என்ன கடைக்கு போகுது உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க அதை எல்லாத்தையும் நானும் என் பிரண்ட்ஸ்களும் தர தயாராக இருக்கும் முதல்ல இங்கிருந்து வெளியே போங்க என்று கோபமாக கூறினான்.
அடடே ஷியாம் நீயும் இங்கதான் இருக்கியா நான் உன்ன கவனிக்கல பாத்தியா பொண்டாட்டிக்கு ஒன்னுன்னா முதல் ஆள வந்துடுவியே… அப்படித்தானே நீங்க எல்லாம் ஒண்ணா ஹனிமூன் போனப்ப பார்வதி தலையில அடிபட்டு ரத்தத்தோட இருக்கிறப்போ எவ்வளவு துடிச்சு போன அந்த காட்சி இன்னும் என் கண்ணுக்குள்ள அப்படியே இருக்கு நீ துடிக்கிறது பார்த்து என்ன அவ்வளவு சந்தோஷப்பட்டேன் பாரு இன்னிக்கு கூட உன் பொண்டாட்டிய நான் எதுவும் செஞ்சுடுவேன்னு பயந்து அவளுக்காக உன் உயிரை கொடுக்கிறதுக்கு துணிஞ்சு முன்னாடி வந்து நிற்கிற பாரு யு ஆர் ரியலி கிரேட் என்றவள் திரும்பி தரையில் வலியில் துடித்துக் கொண்டிருந்த அசோக்கை பார்த்து டார்லிங்… நாம மூணு பேருமே இப்படித்தானே நமக்கு ஏதாவது ஒண்ணுன்னா பதறி போயிடுவோம் இல்ல என்றாள் சிரித்துக் கொண்டே கலா.
மாலினியும் ஆமா இல்ல டார்லிங் என்று அசோக்கை பார்த்து கேட்க அவன் அந்த வழியிலும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்து…
இவங்களையெல்லாம் அழிக்கணும்னு எத்தனை வருஷமா நம்ம காத்துட்டு இருக்கும் இப்படி கெட்ட எண்ணம் இருக்கிற நமக்கே இவ்வளவு பாண்டில் இருக்கும் போது…. உங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்களா தெரியிறாங்க அப்போ இவங்களுக்குள்ள வாண்டிங் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும் என்று சொல்லி அந்த வலியிலும் சிரித்தான்.
அவர்கள் மூவரையும் பார்த்து எரிச்சல் அடைந்த விக்ரம் ஏய் ச்சி…வாய மூடுங்க முதல்ல என்று கர்ஜித்தவன். வீரா இவங்க மூணு பேரையும் எங்கேயோ சுட்டு தள்ளு இவங்களோட மூச்சுக்காத்து கூட இந்த மண்டபத்தை விட்டு வெளியே போகக்கூடாது நம்ம குடும்பத்தையே இப்படி ரத்த வெள்ளத்துல பாக்குற சொல்லிட்டான் என்னால இதை தாங்கிக்கவே முடியல என்று தன் ஆத்திரம் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தான் தன் மகனிடம்.
விக்ரம் சொன்ன அடுத்த நிமிடம் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கலா, மாலினி இருவரையும் நோக்கி வீரா திருப்ப….
நான் அவர்கள் இருவரும் அந்த துப்பாக்கிய கண்டு பயப்பட்டதாக தெரியவில்லை … அதை கவனித்த விஷ்ணு என்ன இவளுங்க இவ்வளவு கூழா நின்னுட்டு இருக்காங்க எதுவும் சரி இல்லையே என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது கலாவும் மாலினியும் சத்தமாக சிரித்தனர் அவர்கள் சிரிப்பதை பார்த்து ஒன்றும் விளங்காமல் அனைவரும் நின்று இருக்க….
உங்க மொத்த ஃபேமிலியையும் எதிர்த்து நாங்க மூணு பேரும் அவ்வளவு சாதாரணமா மண்டபத்துக்குள்ள நுழைஞ்சோம்னு நினைக்கிறீங்களா அதுதான் இல்ல இந்த மண்டபத்தை சுத்தி டைம் பாம் வெச்சிருக்கோம் அது இன்னும் பத்து நிமிஷத்துல வெடிக்க போகுது… என்றவர்கள் தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை மற்றவர்களை நோக்கி சுடுவது போல உயர்த்தி பிடித்தவாரு அந்த வயதிலும் இருவரும் கம்பீரமாக நின்று இருந்தனர்.
அவர்கள் இருவரையும் மற்றவர்கள் இவரகள் சொல்வதை நம்பாமல் துச்சம் என பார்க்க…
ஏய் மாலினி இன்னும் என்ன டி பாத்துட்டு இருக்க… அந்த ரிமோட்டை எடுத்து இவங்களுக்கு ஒரு சின்ன டெமோ காட்டு.. அப்போதான் இதுங்க நமம்புங்க… என்றாள் கலா.
அவள் சொன்ன அடுத்த நிமிடம் மாலினி அதுவரை தன் பாக்கெட்டில் வைத்து இருந்த மண்டபத்தில் செட் செய்து இருந்த பாம்பை வெடிக்க வைக்கும் ரிமோட்டை தன் பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தவள் வாசலுக்கு வெளியே வீணா, லோகி இருவருக்கும் திருமண பரிசாக கொடுப்பதற்காக நிறுத்தப்பட்டு இருந்த bmw லேட்டஸ்ட் மாடேல் காரை நோக்கி ரிமோட்டை இயக்க…
அவள் இயக்கிய அடுத்த நொடி கார் விடுத்து அந்தரத்தில் பறந்து டிவேலு அடித்து தலைகீழாக வந்து தரையில் விழுந்து எரிந்துகொண்டு இருந்தது.
இதை பார்த்ததும் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாசலுக்கு வெளியே நின்று இருக்க… உள்ளே என்ன நடக்கிறது என்று புரியாமல்ல பயத்தில் அலறிக்கொண்டு அங்கிருந்து கார் வெடித்ததில் தெறித்து ஓடினர்.
இங்கே மண்டபத்திற்குள் இருந்தவர்கள் புதிதாக வாங்கிய கார் அவர்கள் கண் முன் அப்பளம் போல நொறுங்கி எரிந்து கொண்டு இருப்பதை பார்த்து அனைவர் முகத்திலும் பய ரேகை படற ஆரம்பித்து இருக்க… அதை பார்த்து அசோக், கலா, மாலினி மூவருக்கும் திருப்தியாக இருந்தது.
இப்போ நம்புறீங்கள்ல… என்ற மாலினி அடுத்த அடுத்தது வெடிக்க வைக்கலாமா என்றாள் சைக்கோ போல சிரித்து…
EPISODE 446
மாலினி தன் கையில் இருந்த ரிமோட்டை இயக்கப் போக அதை பார்த்து அனைவரும் அதில் இருந்தனர் மண்டபத்திற்குள் எங்கெல்லாம் செட் செய்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது இங்கே வீணாவும் ரோஜாவும் ரத்த வெள்ளமாக கிடக்க மாடியில் இருந்த மற்றவர்களுக்கு என்ன நிலை என்று புரியாமல் அனைவரும் தவிர்த்து போய் இருக்க …
அவர்களை நோக்கி துப்பாக்கி ஒரு கையில் உயர்த்திப் பிடித்திருந்த மாலினி மற்றொரு கையில் இருந்த ரிமோட்டை காட்டி மாலினி என்ன இந்த பட்டன அழுத்தவா இந்த மண்டபம் மொத்தமுமே தரைமட்டம் ஆகிடும் என்று சிரித்தாள் .
அது அப்போது அங்கு நடப்பதை எல்லாம் பார்த்து கொடுக்க மாட்டாமல் ஸ்ரேயா மாலினி நோக்கி குடும்பம் குட்டின்னு சந்தோஷமா வாழ வேண்டிய கடைசி காலத்துல இப்படி எங்களை பழிவாங்கணும்னு இந்த வயசுலயும் வெறியோட சுத்திக்கிட்டு இருக்குற நீ எல்லாம் ஒரு பொம்பளையா உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை வயசான காலத்துல மூளையில் முடங்கி கிடக்காம இப்படி பழி வாங்குகிறேன் என்று இந்த வயசுல அப்படி இருக்கிறது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை என்றால் .
யாரை பார்த்து வயசாயிடுச்சுன்னு சொல்லி காட்டுற உன்னைவிட நான் உடம்புலயும் மனசுலையும் ஸ்ட்ரோங் அது தெரிஞ்சுக்கோ அதனாலதான் இத்தனை வயசுலயும் நாங்க மூணு பேரும் சேர்ந்து உங்க குடும்பம் மொத்தத்தையும் எதிர்த்து நிற்கிறோம் அப்பவே உனக்கு தெரிய வேண்டாம் எங்களோட பலத்த பத்தி என்றால் மாலினி பெருமையாக …
மாலினி பேசுவதை கேட்கவே அங்கிருந்து யாருக்கும் பிடிக்கவில்லை . வினை முதல்ல அவளை சுட்டு தள்ளுங்க அவ கையில் இருக்கிற அந்த ரிமோட்டை எப்படியாவது பிடுங்குங்க என்று திருத்தி கோபமாக கூறினாள்
அவள் சத்தம் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்களை தேடி கண்டுபிடித்த மாலினி வாடி என் மருமகளே எப்படி இருக்க நீ வந்ததுனால தாண்டி என் பையன் இப்படி மாறிட்டான் அதுவரைக்கும் நாங்க சொன்ன பேச்சை கேட்டுட்டு நாங்க சொல்றத செஞ்சிட்டு நாய் மாதிரி நாங்க போட்ட எலும்பு தொண்டர் சாப்பிட்டு எங்கு கூட இருந்தான் நீ என்னைக்கு அவனை கல்யாணம் பண்ணிட்டு எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சையோ அன்னைக்கே எல்லாம் கெட்டுப் போச்சு நாங்க எத்தனை வருஷம் பட்ட கஷ்டமும் வீணா போச்சு முதல்ல உன்ன தான் போட்டு தள்ளி இருக்கணும் அத செய்யாம விட்டுட்டோம் என்றவள் தன் கையில் இருந்த துப்பாக்கியை திருதியை நோக்கி திருப்ப .
தன்னை நோக்கி வந்த துப்பாக்கியை கண்டு திருத்தி அதிர்ந்து போய் நிற்க இன்னைக்கு உயர்த்திய துப்பாக்கியை மாலினி சுடுவதற்காக ட்ரிகரை அழுத்த போக அப்போது அவளை நோக்கி கட்டிக் கொண்டே மாடியில் இருந்து அர்ஜுன் மாலினியின் மீது குதித்தான் .
இதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை தரையில் குதித்த அர்ஜுன் மாலினி கையில் இருந்த துப்பாக்கியையும் ரிமோட்டையும் கண நேரத்தில் அவள் கையில் இருந்து பறித்து இருந்தான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மாலினி தன் இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி பார்த்தவள் அர்ச்சனை நிமிர்த்து பார்க்க அவள் சரியாக அர்ச்சனை பார்க்கவும் கையில் இருந்த துப்பாக்கி வைத்து அவள் நெற்றி பொட்டில் குறிப்பாக சரியாக சுட்டு இருந்தான் அர்ஜுன் .
நொடி நேரத்தில் உயிர் பிரிந்து மாலினி தரையில் விழ அதைப் பார்த்த கலாவும் அசோக்கும் உறைந்து போயினர் . மாலினியின் இந்த நிலையை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை . காலில் குண்டடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த அசோக் தலையை பிடித்து ஊன்றிக்கொண்டே மாலினி நோக்கி வர கலாவும் மாலினி இடம் ஓடி வந்தாள் .
தலையில் குண்டடிப்பட்டு ரத்தம் வழிந்து கண்கள் திறந்தபடி உயிர் பிரிந்திருந்த மாலினியை பார்த்த கலாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது தன்னோடு இத்தனை வருடமாக ஒன்றாக இருந்தவள் இன்று பிணமாக தன் முன் இருப்பதை பார்க்க அவளால் முடியவில்லை அதே ஆத்திரத்தோடு ஆக்ரோஷத்தோடு அர்ஜுனை நோக்கி அவள் எழுந்து ஓட அடுத்த குண்டு அவள் நெற்றியில் குறி வைத்து சுட்டு இருந்தான் அர்ஜுன் .
அவனை நோக்கி ஓடிவந்த கலா அர்ஜுன் சுட்டதில் இறந்து அவன் மேலேயே விழுந்தால் . திடீரென கலா தன்மீது விலகும் தடுமாறிய அர்ஜுன் கையில் இருந்த துப்பாக்கியும் ரிமோட்டையும் கீழே போட்டு விட ..
கலா மாலினி இருவரும் தனக்கு இரு தூண்களாக இருந்தவர்கள் இப்போது உயிர்ப்பிலே பிரிந்து சடலங்கலாக தன் கண்முன்னாலேயே தரையில் விழுந்து கிடக்க இதை எல்லாம் பார்த்த அசோக்கினால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை .
மாலினி இடம் தரையில் விழுந்து கிடந்தவன் மண்டபத்திற்குள் வெடிப்பதற்காக வைத்திருந்த பாமின் ரிமோட்டை பார்த்தவன் அடுத்த நொடி ரிமோட்டை எடுப்பதற்காக தரையில் வேகமாக ஊர்ந்து கொண்டே ரிமோட்டை நோக்கி செல்ல அதற்குள்ளாக அங்கே ஓடி வந்த அமலா தன் கையில் அந்த ரிமோட்டை எடுத்துக்கொண்டு அசோக்கை பார்த்தாள் .
அவளை பார்த்ததும் இவ்வளவு நேரம் ஆக்ரோஷமாகவும் வஞ்சகத்தோடும் இருந்த அசோக்கின் முகம் மாறியது அமலாவை கண்டதும் தன் தங்கையின் மகள் என்ற பாசம் அவனையும் அறியாமல் எட்டிப் பார்க்க நீ எதுக்குமா இங்கே இருக்க முதலில் கிளம்பி இங்கே இருந்து போ இவங்க எல்லாருமே சாக வேண்டியவங்க இவங்களோடு சேர்ந்து நீயும் சாக நான் விரும்பல முதல்ல உன் புருஷனை கூட்டிகிட்டு இங்கிருந்து வெளியே போ அந்த ரிமோட்டை என் கையில் கொடுத்துவிட்டு கிளம்பு என்று அவள் தரையில் படுத்துவாரு கையை உயர்த்தி அமலாவை நோக்கி பேசினால் அசோக் .
அப்பா இத்தனை பட்டும் உங்களுக்கு புத்தி வரலையா உன் கண்ணு முன்னாடி தானே இவங்க ரெண்டு பேரும் செத்து போனாங்க இதை பார்த்துட்டு உங்களுக்கு பயம் வரல இன்னும் இவங்க எல்லாரையும் அழிக்கணும்னு நினைக்கிறீங்க அப்படி என்ன பண்ணிட்டாங்க அவங்க உங்களுக்கு … பழி வாங்குற குணம் இங்க இருக்கிற எத்தனை பேரோட உயிரை பறிச்சிட்டு போகப் போகுதுன்னு கொஞ்சம் மாதிரி யோசிச்சிங்களா என்றவள் நீங்கள் எல்லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கீங்கனே தெரியல சே என் அம்மா கூட பிறந்தவங்க தான் நீங்க உங்கள பாக்கவே எனக்கு பிடிக்கல என்று அமலா முகத்தை சுளித்துக்கொள்ள அவள் அருகில் வந்த விஷ்ணு அமலா கையில் இருந்த ரிமோட்டை வாங்கி வீராவின் கையில் கொடுத்தவன் அவளை தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னவாறு அங்கேயிருந்து அழைத்துச் சென்றான் .
அமலா இந்த பக்கம் வந்த குண்டடி பட்டு உடலில் ரத்தம் பலித்து கொண்டு இருக்க அந்த வலியையும் பொருட்படுத்தாமல் உருண்டு வந்து தரையில் கிடந்த துப்பாக்கியை எடுத்து அசோக்கின் உடலை நோக்கி சுட்டு அவன் உடலை சல்லடையாக்கினான் அர்ஜுன் .
அசோக் இறந்த மறு நொடி தரையில் விழுந்து கிடந்த வீணாகையும் ரோஜாவையும் நோக்கி ஓடி வந்தால் ஜியா ரத்த வெள்ளமாக இருவரும் மயங்கி தரையில் விழுந்திருக்க அவர்களின் கழுத்தில் கை வைத்து இருவருக்கும் உயிர் இருக்கிறதா என்று தான் முதலில் பரிசோதித்தாள் . இருவருக்கும் உயிர் இருப்பதை உறுதி செய்து கொண்டவள் அவசரமாக தன் மொபைலை எடுத்து ஆம்புலன்ஸ்க்கு கால் செய்தவள் தன் நண்பர்களுக்கு உதவியோடு அங்கிருந்தவர்களை அழைத்து காரில் தூக்கி ரோஜாவையும் வீணாவையும் போட்டவள் தன் நண்பர்களோடு அவர்கள் இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தவள் வேகமாக அர்ஜுனை நோக்கி ஓடிவந்தாள் அவன் எனக்கு ஒன்னும் இல்ல முதல்ல மேல இருக்கிறவங்களுக்கு என்ன ஆச்சுன்னு போய் பாரு என்று தட்டு தடுமாறி கூறியவன்
கையில் இருந்த துப்பாக்கியை கீழே நழுவ விட்டவன் குண்டடிப்பட்ட இடத்தை அழுத்தி பிடித்தவாரே வீராவையும் வினையையும் நோக்கி மேல என்று கையை காட்டினான்.
அடுத்த நொடி அவர்கள் இருவரும் மாடியை நோக்கி ஓடினர் அவர்கள் வரும்போது மணமகள் அறைக்கு எதிரே தரையில் நிதி தலைப்பு பெற தரையில் விழுந்திருக்க அவள் முதுகில் குண்டடி பட்டு ரத்தம் வழிந்து கிடந்தது அவள் துள்ளி துடிக்க வலியில் துடித்துக் கொண்டிருந்தவள் மேலே ஓடி வந்த வீராவையும் விடியையும் பார்த்து தன் கைகளை உயர்த்தி மணமகள் அறையை காட்டினாள் அங்கே வினை நிதியை நோக்கி ஓட வீரா மணமகன் அறையை நோக்கி ஓடினான் அங்கே லோகி மூச்சு பேச்சு இல்லாமல் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான் .
அவர்கள் பின்னால் ஓடி வந்த ஜியா நிதியை பார்க்க அவளோடு சேர்ந்து கிருஷ்ணாவும் மேலே வந்திருக்க நிதி தரையில் விழுந்திருப்பதை கண்டவன் அவளை நோக்கி பதறி கொண்டு ஓட ஜியா லோகியை கைகளில் ஏந்தியவாறு அவன் அறையில் இருந்து வெளியே வந்த வீராவை நோக்கி ஓடினாள் .
வேகமாக வந்தவள் லோகியின் நாடியை பிடித்துப் பார்க்க அவள் முகம் வெளி போனது அவள் முகத்தில் பயம் அப்பட்டமாக வீராவை துரிதப்படுத்த லோகியை தூக்கிக் கொண்டு விரைந்து மாடிப்படிகளில் இருந்து இறங்கி வர அமைப்பினால் நிதியை தூக்கிக் கொண்டு கிருஷ்ணாவும் படிகளில் இறங்கி வந்தான் வினை அதற்குள்ளாக காரை மண்டபம் வாசலில் எடுத்து வந்திருக்க அவன் பின்னாலயே ஆர்யாவும் மற்றொருவரை எடுத்து வந்திருந்தான் வினை வந்த காரில் வீராவும் அவன் பின்னால் வந்த காரில் கிருஷ்ணாவும் ஏறிக்கொள்ள மீனாவை தூக்கிக்கொண்டு விக்ரம் மற்றும் காரில் ஹாஸ்பிடலில் நோக்கி விரைந்தான் .
இங்கே பார்வதியும் குன்றடி பட்டு தரையில் விழுந்து கிடக்க அவளை தூக்க ஷாம் முயற்சிக்க அவள் உடல் பருமன் காரணமாக அவளை அவனால் தூக்க முடியவில்லை இதுக்கு தான் கம்மியா சாப்பிட்டு உடம்பை ஃபிட்டா வச்சுக்கோன்னு சொன்னேன் கேட்டியாடி இப்ப பாரு உனக்கு இப்படி இருக்கிற நிலைமையில அவங்கள மாதிரி உன்ன தூக்கிக்கிட்டு என்னால ஆஸ்பத்திரிக்கு ஓட முடியல என்று அந்த நிலையிலும் அவளை திட்டியவன் அம்மா யாராவது வந்து இவளை தூக்குவதற்கு உதவி செய்யுங்க என்று மற்றவர்களை அழைக்க அதித்தியும் யாராvயும் வந்து பார்வதியை ஆளுக்கு ஒரு புறமாக பிடித்து கஷ்டப்பட்டு தூக்க … பார்வதியும் அந்த வலியோடு அவர்களுக்கு ஒத்துழைத்து ஹாஸ்பிடலுக்கு அவர்களுடன் காரில் சென்றால்.
சத்யா அர்ஜுனை கைத்தங்கலாக தூக்கியவன் miruthi கிழித்து கொடுத்த அவள் புடவை முந்தானையை அவன் வயிற்றில் இருக்க கட்டி ரத்தம் மேலும் வலியாமல் பார்த்துக் கொண்டவன் அவனை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் நிறைய மற்றவர்களும் அவர்களோடு ஹாஸ்பிடல் நோக்கி கிளம்பினர் .\
சந்தோஷமாக திருமணம் நடந்திருக்க வேண்டிய இந்த தருணத்தை இப்படி ஆஸ்பத்திரியில் செலவழிக்க காரணமானவர்களை பிணமாக தரையில் விழுந்து கிடந்த மூவரையும் திரும்பி பார்த்தவாறு மண்டபத்தை விட்டு விக்ரமின் குடும்பம் மொத்தமும் ஹாஸ்பிடல் விரைந்து இருந்தது.
வீணா லோகி ரோஜா நிதி மீனு பார்வதி அர்ஜுன் என ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு கொண்டு இருந்தது .
நிதிக்கு முதுகில் குண்டடி பட்டு இருந்ததால் அவள் உயிருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை ஆனால் ரத்தம் அதிக சென்றிருப்பதால் அதற்கு சிகிச்சை பார்த்து அவளை காப்பாற்றி விட்டனர் .
மீனு விற்கும் பார்வதிக்கும் குண்டடி பட்டு இருக்க … இருவருக்கும் ஆபரேட் செய்து உடலில் பாய்ந்து இருந்த குண்டை அப்புறப்படுத்தி இருந்தனர் இருவருக்கும் பெரிதாக வேறு எந்த சேதமும் இல்லை இருவருமே வயதாகிவிட்டதால் உடல் தேடி வர சிறிது காலமாகும் என்று டாக்டர் சொல்லிவிட்டனர் .
வீணா லோகி ரோஜா மூவரும்தான் இப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தனர் .
ரோஜாவிற்கு வயிற்றில் கட்டி கொடுத்து ஏற்பட்டிருக்க இடது பக்க இதயத்திற்கு சற்று மேலாக குண்டடி பாய்ந்திருக்க இதையெல்லாம் தாண்டி அவள் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவள் தலை அடிபட்டு காயம் ஏற்பட்டிருக்க அவள் கை கால்களும் கீழே விழுந்ததில் எலும்புகள் உடைந்து உடல் மொத்தமும் காயங்களோடும் ரத்த வெள்ளத்தோடு ஹாஸ்பிடலில் அனுமதித்து இருந்த ரோஜாவை காப்பாற்ற ஆபரேஷன் தியேட்டருக்குள் போராடிக் கொண்டிருந்தனர் டாக்டர்கள் .
வீணாவும் இதே நிலையில் தான் இருந்தாள் ஆனால் ரோஜா அளவிற்கு அவள் உடலில் எந்த பாதிப்பும் இல்லாததால் இதயத்தில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டை நீண்ட நேர ஆபரேஷனுக்கு பின்பு அவள் இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளியே எடுத்திருந்தனர் . மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவள் இடது கால் எலும்பும் வலது தோள்பட்டையிலும் பிராக்சர் ஆகி இருக்க அதற்கான ட்ரீட்மென்ட் பார்த்திருந்தனர் .
இங்கே லோக்கியின் நிலை தான் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது . முதலில் கழுத்தறு பட்டு ரத்தம் வெள்ளமாக தரையில் விழுந்திருந்தது ஒரு லோகிதான் . ஜியா வந்து அவனை பார்க்கும் பொழுதே அவனின் நாடித்துடிப்பு குறைந்து இருந்தது ரத்தமும் அதிகமாக வெளியேறி இருந்ததால் அவள் முற்றிலும் உடல் வலுவிழந்து உயிருக்கு போராடிய நிலை என்ன ஹாஸ்பிடலில் அட்மின் செய்யப்பட்டிருந்தால் தங்களால் முடிந்த வரையில் முயற்சி செய்து அவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர் .
மாடியில் இருந்து தரையில் விழுந்திருந்த அர்ஜுனின் கால் மணிக்கட்டு உடைந்திருக்க துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்த இடமும் அவனுக்கு அதிகமாக ரத்த ரத்த போக்கை அதிகரித்திருக்க அதற்கான ட்ரீட்மென்ட் அவனுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது போலீசில் அவன் எடுத்த டிரெய்னிங் எல்லாம் மாடியில் இருந்து குதித்ததற்கு உதவி இருக்க வேண்டும் அதனால் தான் அதிக காயங்கள் இல்லாமல் அவன் தலையில் விழுந்திருந்தான். குண்டை வெளியே எடுத்து
குண்டடிப்பட்ட இடத்தை டாக்டர்கள் சுத்தமாக கிளீன் செய்து துப்பாக்கி தையல் போட்டு விட்டனர் காலை நொண்டிக் கொண்டே ரசிகாவின் தோளில் கையை போட்டபடி ஆபரேஷன் நடக்கும் இடத்திற்கு மிகவும் சிரமப்பட்டு அர்ஜுன் வந்திருந்தான் அங்கே உள்ளே இருப்பவர்கள் நிலை என்னவென்று அறியாமல் அவர்களுடைய சொந்த பந்தங்கள் என அனைவரும் வெளியே காத்திருக்க அவர்களோடு வந்து அமைதியாக அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அர்ஜுன் அமர்ந்து கொண்டான் .
EPISODE 447
யாராவிற்கு இப்போது பிரசவம் ஏற்படும் நிலை இருந்தது . அவள் தனக்கு வளைகாப்பு எதுவும் வைக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டால் தன் குடும்பத்தைச் சேர்ந்த இத்தனை பேர் உடல்நலம் சரியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கையில் தனக்கு இந்த நேரத்தில் வளைகாப்பு எதுவும் தேவையில்லை என்று அவள் மறுத்து விட்டால்
அனைவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் குணமடைந்து வந்த பிறகு தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடிக் கொள்ளலாம் என்று முடிவாக சொல்லிவிட்டதால் அதற்கு மேல் அவளை யாரும் வற்புறுத்தவில்லை .
அதிதி இப்போது தன் வயிற்றில் பீரோவின் வாரிசை சுமக்க ஆரம்பித்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது .. அன்வியும் , ஜீயாவும் ஒருசேர கர்ப்பம் தரித்திருந்தார்கள் இருவருக்கும் சரியாக இன்றோடு 60 நாட்களை கடந்திருந்தது.
திருதிக்கு ரசிகா ஏற்படுத்திய காயம் நன்றாக குணமான பிறகு தான் அவள் குழந்தை பற்றிய அடுத்த முயற்சிக்கு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருக்க ரசிகாவோ ப்ரீத்தி எப்பொழுது கர்ப்பம் ஆகிறார்களோ அதன் பிறகு தான் பிள்ளை பெற்றுக் கொள்ளப் போவதாக அர்ஜுனிடமும் மற்றவர்களிடமும் ஸ்ட்ரிட்டாக சொல்லிவிட்டால் திதியும் வினையும் கூட அவளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் முடிவில் ரசிகா உறுதியாக இருந்தால் தன்னால்தான் திருத்திக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது அதன் பிறகு தான் தான் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றிய யோசிக்க போவதாக தீர்க்கமாக சொல்லிவிட்டாள் .
வீணா ஓரளவுக்கு குணமடைந்து இருக்க வீணாவிற்கு கை கால்கள் எல்லாம் போடப் பிறந்த கட்டுக்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு அவள் மெல்ல நடக்க ஆரம்பித்திருந்தால் அவள் உடைந்திருந்த எலும்புகள் எல்லாம் சரியாக கிட்டத்தட்ட 4 , 5 மாதங்களுக்கு மேலாக இருந்தது .
அவள் திருமணத்தன்று அசோக்கால் காயம் ஆகி இருந்தவர்களுக்கும் குண்டடிப்பட்டவர்கள் என ஒவ்வொருவராக கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி பலகை நிலைமைக்கு திரும்பியிருந்தார்கள் .
வீணாவும் இப்போது ஓரளவிற்கு உடல்நலம் கேரி இருந்தால் . அவள் இடது பக்க மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ஆழம் சற்று அதிகமாக இருந்ததால் இந்த நான்கைந்து மாதம் ஓய்வும் அவளுக்கு ஓரளவிற்கு உடலை தேற்றி இருந்தது . இருந்தும் அவளை நிதானமாக அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லி டாக்டர் பரிந்துரைத்திருந்தார் .
இது வீணா எழுந்து நடக்க ஆரம்பித்ததும் முதலில் அவள் பார்க்கச் சென்றது ரோஜாவைத் தான் ஏனென்றால் அவளுக்கு உடலில் ஏற்பட்ட காயங்களும் வயிற்றில் ஏற்பட்ட கத்தி குத்தும் தலையில் அடிபட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியதும் என அதிகமாக பாதிப்படைந்தது ரோஜா தான் தன்னால் தான் அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது என்று வீணா ரோஜாவே நினைத்து மிகவும் கவலை பட்டால் தன் வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது .
ரோஜாவாவது சீக்கிரம் தேறி வந்து அவளுடைய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று அவள் வேண்டாத தெய்வங்கள் இல்லை ரோஜா இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறாள் அவளால் அனைவரிடமும் பேச முடியும் அது மட்டும் தான் அவளால் செய்ய முடியும் தானாக எழுந்து பாத்ரூம் செல்ல கூட முடியாத நிலையில் ரோஜா மிகவும் சிறந்த பட்டு கொண்டு இருக்கிறாள் மிருதி ரசிகா திருதி மூவரும் தான் ரோஜாவை மாற்றி மாற்றி அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறார்கள் மற்றவர்களும் அவ்வப்போது வந்து அவர்களுக்கு ஓய்வு கொடுத்து ரோஜாவை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் மெல்ல ரோஜாவின் அறைக்கு நடந்து வந்த வீணா கை கால்கள் எல்லாம் கட்டுப்போட்டு முகம் எல்லாம் பொலிவிழந்து வெளுத்துப் போய் இழைத்து போய் கட்டிலில் படுத்திருந்த ரோஜாவை பார்த்தாள் .
அவளை அப்படி பார்த்ததும் வீணாவின் கண்களில் மல மல என கண்ணீர் சொரிந்தது .
வேகமாக அழுத படியே வாக்கிங் ஸ்டிக் உதவியோடு ரோஜா படத்தில் இருந்து கட்டலுக்கு அருகில் வந்தவள் கையில் இருந்த ஸ்டிக்கை தூக்கிப்போட்டு ரோஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் முன்பு மண்டியிட்டு அமர்ந்த ரசிகா ரோஜா தயவுசெய்து என்ன மன்னிச்சிடுடி என்னால தான் உனக்கு இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சு எனக்கு என்ன சொல்லி உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறதுன்னே தெரியல என்ன மன்னிச்சிடுடி சீக்கிரமா நீ உடம்பு தேறி வரணும் நீ நல்லா வரத பார்த்தா தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் என்றால் வீணா .
தன்னுடைய நிலையை நினைத்து வீணா உண்மையாக வருத்தப்படுவதை பார்த்து ரோஜா கண்கலங்கினாள் . மெல்ல தன் வாயை திறந்து லூசு எதுக்காக இப்போ இப்படி அலற முதலில் எழுந்து விடுடி இப்படி என் முன்னாடி அழாத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று மிகவும் சிரமப்பட்டு மூச்சு வாங்கியபடி திக்கி திணறி ரோஜா பேசினாள்
அவளை அவசரமாக வந்து ரசிகாவும் மிரூதியும் சேர்ந்து தூக்கி விட்டவர்கள் வீணாவின் அருகில் சேர இழுத்து போட்டு அதில் அவளை அமர வைத்தனர். வீணாவின் தோளில் கட்டி அணைத்து அவளை ஆறுதல் படுத்திய மிருதி … ஏண்டி நீ மட்டுமா தனியா வந்த மீனு எங்கே அவளைக் காணோம் என்று கேட்டால் .
இல்ல அத்தை அம்மா மருந்து வாங்க போயிருந்தாங்க எனக்கு இப்போதான் ஓரளவுக்கு தனியா எடுத்து நடக்க முடியுது நான் கொஞ்ச நேரம் வராண்டாவில் நடந்து கொண்டு இருந்தேன் அப்படியே ரோஜாவையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்றால் .
நல்ல புள்ள போ நீ உன்னை காணவில்லை நான் போய் அவள அழைச்சுட்டு வரேன் என்று சொன்னவள் ரசிகாவை அழைத்து இவர்களை பார்த்துக்கொள்ள சொல்லியவள் மீனுவை தேடி சென்றாள் .
வீணாவிற்கு மருந்தை வாங்கிக் கொண்டு அவள் அறையை நோக்கி மிகவும் சோகமாக நடந்து வந்து கொண்டிருந்தால் மீனு.
மீனுவை வழியில் பார்த்துவிட்டு மிருதி அருகில் வந்தவள் மீனு என்னடி ஆச்சு ஏன் ரொம்ப சோர்வா இருக்க உடம்பு எதுவும் முடியலையா என்று அவள் நெற்றியில் கைவைத்து பார்த்தால்.
ஒன்னும் இல்லடி இந்த வீணாவ நெனச்சுட்டா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு அந்த அசோக் இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு போயிட்டான் அதுக்கு தண்டனையும் அவனுக்கு கிடைச்சிடுச்சு ஆனா அவளால தான் லோகி உயிர் போய் உயிர் வந்து இருக்கான்னு அவன் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் இவதான் காரணம்ன்னு இவளாவே இவளுக்கு தண்டனை கொடுத்துட்டு அந்த தம்பியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா . அவனும் பல தடவை வந்து இவர்கிட்ட பேசி பார்த்துட்டான் ஆனா இவ கொஞ்சம் கூட இறங்கி வர மாட்டேங்குற இவ வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று மனம் வருந்தி சொன்னால் மீனு .
எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வரணும் மீனு … நீ கவலைப்படாத உன் பொண்ணு சீக்கிரமாவே லோகியை கல்யாணம் பண்ணிக்குவா பாரு என்றால் .
நீ சொல்ற மாதிரி நடந்தால் சந்தோஷம்தான் என்றால் மீனு .
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கையில் ஒரு பெரிய பூங்கத்தோடு அவர்கள் முன்பு வந்து நின்றான் லோகி .
அவனைப் பார்த்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆச்சரியமாக லோகியை பார்த்து நீங்க என்ன தம்பி இங்க என்று ஒன்றாக அவனிடம் கேள்வி கேட்டனர் .
வீணாவை பார்க்கத்தான் வந்தேன் ஆன்ட்டி அவ எங்க ரூம்ல இருக்காளா என்றான் சிரித்த முகமாக .
மீனு ஆமாம் என்று தலையாட்ட…
உடனே மறுத்த mஇறுதி இல்ல தம்பி அவ ரோஜாவ பார்க்க அவ ரூம்ல இருக்கா .. அதை மீனுவ பார்த்து சொல்லலாம் என்று தான் சொல்லத்தான் நான் வந்தேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க என்றால் .
ஓ ஓ அப்படியா ஆன்ட்டி நான் போய் வீணாக பார்க்கிறேன் என்றான் சந்தோஷமாக .
என்ன தம்பி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க எதுவும் முக்கியமான விஷயமா சொன்னா நாங்களும் சந்தோஷப்படுவோமே என்றால் மீனு .
என்ன ஆன்ட்டி இப்படி கேட்டுட்டீங்க இன்னிக்கு வீணாவோட பர்த்டே மறந்துட்டீங்களா அவளுக்கு விஷ் பண்ணனும்னு தான் சீக்கிரமா எழுந்து ரெடியாகி வந்தேன் என்றான் .
வீணாவுக்கு இன்று பிறந்தநாள் என்று இருவருமே ஆச்சரியப்பட்டனர் தான் எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை மறந்தேன் என்றும் தன்னை நொந்து கொள்ள … மிருத்திக்கு அவள் நிலை புரிந்து மினுவின் கையை ஆதரவாக பற்றி கொண்டவள் விடு நீ என்ன வேணும்னா அவ பிறந்தநாள் மறந்த பரவாயில்லை அதான் அவளை கட்டிக்க போறவனுக்கு அவ பிறந்தநாள் ஞாபகம் இருக்கு இதுக்கு மேல என்ன வேணும் நம்ம புருஷங்க மாதிரியா என்று அந்த நேரத்தில் விக்ரமையும் சத்யாவையும் காலை வாரிய மிருதி யோகியிடம் நீங்க போங்க தம்பி அவ ரோஜா ரூம்ல தான் இருக்கா என்று அவனை அனுப்பப் போனால் .
லோகி திரும்பி ரோஜாவின் அறையை நோக்கி செல்ல போக தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க என்றால் மிருதி .
சொல்லுங்க ஆன்ட்டி என்று அவள் முன் நின்றான் லோகி .
நீங்க அங்க போக வேண்டாம் அங்க என் மருமக மக எல்லாரும் இருக்காங்க ஏற்கனவே வீணா உங்ககிட்ட சரியா பேசறது இல்லைன்னு இப்பதான் மீனும் சொல்லிக்கிட்டு இருந்தா உங்க கிட்ட வீணா முன்ன மாதிரி பேசணுமா வேண்டாமா என்றால் .
என்ன ஆன்ட்டி இப்படி பேச கேக்குறீங்க அவ எப்போ என்கிட்ட பேச முன்ன மாதிரி பேசுவான்னு நம்ம நான் ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கேன் என்றான் ஆர்வமாக …
அப்போ நீங்க போயி வீணாகூட ரூம்ல இருங்க நான் போய் அவளை அங்க அனுப்பி வைக்கிறேன் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ற சாக்குல எப்படியாவது அவளை பேசி கன்வின்ஸ் பண்ணி அவ கால்ல விழுந்தாவது உங்க கூட பழையபடி பேச வச்சிடுங்க நீங்களும் அவளும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க அவளை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க வையுங்க அப்பத்தான் என்னோட மீனும் சந்தோஷமா இருப்பா என்று மீனுவை பார்த்துச் சொன்ன இறுதி நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு வீணா அவ ரூமுக்கு போன பிறகு நீ ரோஜா ரூமுக்கு வந்துடு நான் முன்னால போய் அவளை இங்க அனுப்பி வைக்கிறேன் என்ற உறுதி நீங்க போங்க தம்பி என்று லோகியை வீணாவின் ரூமிற்கு அனுப்பி வைத்தாள்.
சொன்னது போலவே வீணாவிடம் வந்த நிறுத்தி அவள் அவளை பரிசோதிப்பதற்காக டாக்டர் வந்து அவள் அருகில் காத்திருப்பதாக சொல்லி அவசர அவசரமாக வீணாவை அவள் அறைக்கு அனுப்பி வைத்தாள்
வீணாகும் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் அவள் அறைக்கு உள்ளே வர அவள் உள்ளே வந்ததும் அரை கதவை சாற்றிய நோக்கி அவள் முன்பு மண்டியிட்டு பூங்கொத்தை வீணாவின் முன்பு நீட்டி ஹாப்பி பர்த்டே மை கேர்ள் என்றான் .
அவனை இங்கு சற்றும் எதிர்பாராத வீணா அதிர்ச்சியானவள் அவன் நீட்டிய பூங்கொட்டை பார்த்து சந்தோஷம் அடைந்தவள் தேங்க்யூ என்று சிரித்த மோகமாக சொல்லிக்கொண்டே அந்த பூங்கொத்தை வாங்க கையை நீட்டியவள் … அப்போதுதான் தான் லோகவியுடன் பேசுவதில்லை என்பதை உணர்ந்தவள் தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டு உன்னை யார் இங்கு வரச் சொன்னது எதுக்கு இவ்வளவு சீன் போட்டுட்டு இருக்க என்று வராத போகத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்து அவரோடு சண்டையிட்டால் .
இங்கே பாருடி இப்படி ஒன்னும் இல்லாத காரணத்த சொல்லி என்ன எவ்வளவு நாளைக்கு நீ ஒதுக்கி வைத்து இருப்ப இங்க பாரு இப்போ இல்ல இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன். அப்புறம் கிழவியான அதுக்கப்புறம் நீ மனசு மாதிரி என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்து நின்ன அதுக்கப்புறம் என்னால உன்னை கூட்டிட்டு ஹனிமூன் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்க முடியாது ஒழுங்கா இப்பவே என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என் கூட ஹனிமூன் வர வழியை பாரு அப்படி இல்ல வயசான காலத்துல நீயும் நானும் ஹனிமூன் போக முடியாது காசி ராமேஸ்வரம் தான் போகணும் அதை ஞாபகத்துல வச்சுக்க என்று அவளை பார்க்க ….
அவன் சொன்னதை கற்பனை செய்து பார்த்த வீனாவின் முகத்தில் தானாக சிரிப்பு வந்தது அதை பார்த்தவன் அப்படி சிரிச்சிட்டா என்று நினைத்தவன் அவள் கையில் பூந்தத்தை திணித்தவன் எழுந்து வந்து அவளை கட்டிக்கொண்டு வீணா சிறிதும் எதிர்பார்க்காத போது அவள் இதழில் நச்சென்று முத்தம் வைத்தான்.
அவளும் இதைத்தான் எதிர்பார்த்திருந்தால் போல லோகி முத்தம் வைப்பதை அவள் தடுக்கவே இல்லை நீண்ட நேரம் இருவரும் முத்தமும் கொடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு நின்று இருக்க அவளை முத்தமிட்டvன் அவளிடம் இருந்து பிரிந்து நின்ற லோகி .
நான் உன்கிட்ட வந்து எவ்வளவு தடவை நம்ம ரெண்டு பேரும் சமாதானம் ஆகிடலாம் சண்டை வேண்டாம் என்று கெஞ்சி இருப்பேன் அப்ப எல்லாம் முடியாது மாட்டேன்னு என்ன துரத்தி எடுத்துட்டு இப்ப என்னடி இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்ட என்னால நம்ப முடியலையே என்றான் .
டேய் நீ என்னோட அம்மாவையும் மிருதி அத்தையையும் வழியில் பார்த்தியா என்றாள் .
அய்யய்யோ அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணது இவளுக்கு தெரிஞ்சு போச்சா இனி அத வச்சு எதுவும் சண்டை போடுவாளோ என்று லோகி திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்க …
ரொம்ப முழிக்காத கண்ணு முழி குதிச்சு வெளிய வந்து விழுந்திட போகுது என்று சிரித்தவள் நீ வரதுக்கு முன்னாடி என் அம்மாவும் அத்தையும் பேசிக்கிட்டு இருந்ததை அவங்களுக்கு தெரியாம நான் நின்னு கேட்டுட்டு தான் இருந்தேன். என் அம்மா என்னை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருக்காங்க நான் இப்படியே இருந்து விடுவேன் உன் கூட சேர்ந்து வாழாமல் போயிடுவேன்னு என் அம்மா அத்தை கிட்ட சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தாங்க அதனாலதான் நான் இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டேன் உன்கிட்ட என்றால் .
ஓஹோ அப்போ உன் அம்மாவுக்காக தான் நீ என் கூட சேர்ந்து வாழணும்னு முடிவெடுத்து இருக்க உண்மையாவே உனக்கு என் கூட வாழனும்னு தோணல அப்படித்தானே என்றான் கோபமாக லோகி .
வீனா ஆமாம் என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற பதில் கூற… அதில் கோபமடைந்தவன் முறைத்து விட்டு திரும்பி அறையை விட்டு வெளியே செல்ல போக …
இப்போ நீ என்கிட்ட கோவிச்சுக்கிட்டு போறியா லூக்கி அப்போ நீ கோவிச்சுட்டு போனா நான் உன்ன சமாதானப்படுத்த முடியாது நீ சொன்ன மாதிரி நம்ம ரெண்டு பேரும் வயசானதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹனிமூன் போகாம ராசி இராமேஸ்வரம் போக போறோமா என்று அவனிடம் வீணா கேள்வி கேட்க …
கதவை திறக்க இருந்த யோகி காசி ராமேஸ்வரம் தானே போகலாம் ஆனால் ஹனிமூலம் இப்ப முடிச்சுட்டு வயசான பிறகு அங்க போகலாம் என்றவன் திரும்பி வந்து அவளை கட்டி அணைத்து முத்தமிட ஆரம்பித்தான் .
EPISODE 448
அந்த பார்ட்டி ஹால் மிகவும் பரபரப்பாக இருந்தது யாராவின் மகன் கௌதமிற்க்கு ஒரு வயதை பூர்த்தி செய்திருக்கையில் அவனுடைய பிறந்த நாளை தன்னுடைய குடும்பம் சொந்தங்கள் என அனைவரையும் அழைத்து மிகவும் பிரம்மாண்டமாக தேவ்வும் யாராவும் பிறந்தநாள் பார்ட்டியை அரேஞ்ச் செய்திருந்தனர் .
அதிதி தன் மகன்கள் விஜய் சக்ரவர்த்தியையும் , வம்சி சக்ரவர்த்தியையும் வாயில் விரலை வைத்து சாப்பிக் கொண்டு அவர்களை பார்க்க… வருபவர்களை எல்லாம் தங்கள் பார்வையால் ஈர்த்துக் கொண்டு இருந்தனர். அதிதியின் கைகளில் இருந்த இருவரும் .
அவள் இரண்டு குழந்தைகளையும் வைத்து சிரமப்பட்டு கொண்டிருப்பதை பார்த்து அவளிடம் வந்த வீரா வம்சியை கையில் வாங்கிக் கொள்ள .. அதை பார்த்த விஜய்யும் அவனிடம் செல்ல வேண்டும் என்று அதித்தியிடமிருந்து வீராவை நோக்கி தாவினான்.
அதைப் பார்த்து சிரித்த விக்ரம் ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர விட்டு தனியாக இருக்கிறது இல்ல…
எங்க போனாலும் யார்கிட்ட போனாலும் ஒன்னா தொத்திக்கிட்டே தான் போகணும் என்று சிரித்தவன் நீ விஜய்யை என்கிட்டே கொடு நான் அவனை கொஞ்ச நேரம் மண்டபத்தை சுத்தி காட்டிட்டு வரேன் என்று விக்ரம் விஜய்யை தன் கையில் வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
தன் அண்ணன் தன்னிடமிருந்து பிரிந்து செல்வதை பார்த்து வீராவின் கையில் இருந்த அன்சி ங்கயே… என்று தானும் அவனோடு செல்ல வேண்டும் என அழ ஆரம்பித்தான் .
வீரா சிரித்துக்கொண்டே விக்ரமின் பின்னால் சென்றவன் இங்க பாரு உன் அண்ணன் எங்கேயும் போகல உன் கூட தான் இருக்கான் என்று வந்தவன் அப்பா இந்தாங்க இவனையும் பிடிச்சுக்கோங்க இல்லனா இவன் அழுதுகிட்டே இருப்பான் என்று விக்ரம் கையில் வம்சியையும் கொடுக்க… இரு கைகளையும் சேர்த்து பிடித்துக் கொண்ட விக்ரம் கைகளில் ஒரு பக்கம் விஜய்யும் மற்றொரு பக்கம் வம்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து பொக்க வாயை காட்டி சிரித்துக்கொண்டிருக்க அதை பார்த்த விக்ரம் மிகவும் சந்தோஷப்பட்டான்.
தன் இரு பேரன்களையும் கையில் பெருமையாக சுமந்தபடி அந்த பார்ட்டி ஹாலை வலம் வந்தான் விக்ரம்.
அவர்கள் விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் விக்ரம் கையில் இருந்து குளுகுளு குழந்தைகளை வந்து கொஞ்சினர்.
அவர்களோடு மேடை ஏறினான் விக்ரம்.
மேடையில் இருந்த யாராவும், தேவ்வும் விஜய் வம்சியுடன் வந்த விக்ரமை பார்த்தவர்கள் அவனிடம் சென்று அப்பா குடுங்க என்று ஆளுக்கு ஒருவராக விஜய்யையும் வம்சியையும் தூக்கிக் கொண்டு மேடையில் போய் நிற்க…
அவர்கள் இருவருக்கும் இடையில் கேக்கை வெட்டுவதற்கு ஒரு வயது குழந்தை கௌதம் துருதுருவென நின்றிருந்தான்.
யாரா கையில் இருந்த விஜய்யை வாங்கிக் கொண்ட தேவ் நீ கேட்க விட்டு என்றான் அவளிடம்.
விஜயை தேவ் இடம் கொடுத்துவிட்டு கௌதமை கையில் தூக்கிக் கொண்டவள். அங்கே இருந்த கத்தியை எடுத்து அதை என் கௌதம் கையில் கொடுத்தவள் குனிந்து கேக்கை வெட்ட ஆரம்பித்தாள்.
அனைவரும் ஹாப்பி பர்த்டே டூ யூ பாட்டு பாடி கரகோஷம் எழுப்பி குழந்தையை கேக் வெட்ட உற்சாகப்படுத்தினர்.
கேக்கை வெட்டி அதை எடுத்து கவுதமிற்கு ஊட்டி விட்ட யாரா அனைவருக்கும் ஊட்டி விட்டவள் அவன் கையில் இருந்த தன் மருமகன்களை பார்த்து புன்னகைத்து லேசாக தன் கையில் ஒட்டி கிடந்த கேக்கின் கிரீமை அவர்கள் உதட்டில் தடவி விட பொக்கை வாய் தெரிய சிரித்துக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் உதட்டில் ஒட்டிய கேக்கை சப்புக்குட்டி ருசி பார்த்தது.
அதை ரசித்தவள் செல்லக்குட்டிங்களா கேக் நல்லா இருக்கா இன்னும் வேணுமா என்று கொஞ்ஜினாள்.
குழந்தைகளுக்கு கேக் வேண்டாமா அத்துக்கிட்ட சீக்கிரமே ஆளுக்கு ஒரு பொண்ணு பெத்து கொடுக்க சொல்லி கேக்குறாங்க என்றான் தேவ்.
குழந்தைங்க கேக்குறாங்களா இல்ல அவங்க ரெண்டு பேரையும் சாக்க வச்சுட்டு நீ கேக்குறியா என்றாள்.
என் மருமகனங்களுக்காக நான் கேட்கிறேன் எனக்காகவும் வச்சுக்கலாம் என்றான் சிரித்துக் கொண்டே…
அதில் சிரித்தவள் பொண்ணு தானே பெத்துக் கொடுத்துவிடலாம் இன்னும் ஒரு வருஷம் போகட்டும் என்று சிரித்தாள்.
ஒரு வருஷமா அதுவரை எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது எவ்வளவு சீக்கிரம் எனக்கு மகளை கொடுக்க போறியோ அவ்வளவு சீக்கிரம் உனக்கு நல்லது என்றான்.
ரொம்ப ஆர்வமா இருக்குடா பார்க்கலாம் என்றவள் மேடை ஏறிய அவர்களது உறவுகளை பார்த்து வரவேற்றுப்படி சிரித்தால்.
வந்திருந்தவர்கள் குழந்தைக்கு பரிசையும் வாழ்த்தையும் கொடுத்துவிட்டு விஜய் வம்சி இருவரையும் கொஞ்சி விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தவர்கள் மேடையை விட்டு கீழே இறங்க அடுத்தவர்கள் வரவும் அந்த பார்ட்டி முழுவதும் சரியாக இருந்தது மேடையில் இருந்தவர்களுக்கு…
பார்ட்டி முடிந்து வந்திருந்த நண்பர்கள் உறவுகள் எல்லாம் கிளம்பிச் சென்றனர்.
தேவ் யாரா கௌதமை வைத்திருக்க…
அவர்கள் அருகில் அடித்து வீரா இருவரும் விஜய் வம்சியை கையில் வைத்து படி தங்கள் பிள்ளைகளை கொஞ்சிக்கொண்டிருக்க…
அங்கே ரிஷியும் அன்வியும் அமர்ந்திருந்தனர்.
அன்வி வயிற்றை தள்ளிக்கொண்டு வயிற்றை தள்ளிக்கொண்டு சாரில் அமர்ந்திருக்க அவளை கவனமாக பார்த்துக் கொண்டு ரிஷி புள்ள புருஷனாக அவளிடம் அமர்ந்திருந்தான் பொறுப்புள்ள புருஷனாக அவளிடம் அமர்ந்திருந்தான்.
ரசிகாவின் த்ரித்தியும் மற்றவர்களோடு ஒன்று சேர்ந்திருக்க… அனைவருக்கும் இணைந்து சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
ரோஜாவிற்கு உடல் எல்லாம் ஓரளவுக்கு தேறி இருந்தது இருந்தும் அவளால் எழுந்து முன்பு போல சரியாக நடக்க முடிவதில்லை வீல் சாரில் வைத்து அவளை பார்ட்டிக்கு அழைத்து வந்திருந்தனர்.
இதைவிட அவள் இப்போது வேகமாக தேடி வந்திருக்கிறாள் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக நடைபயிற்சியும் மேற்கொண்டு இருக்க சீக்கிரமே அவள் பழையபடி பழைய ரோஜாவாக வலம் வருவாள் என்ற நம்பிக்கை அனைவரும் மனதிலும் இருந்தது.
வீணா இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லி இருக்க.. லோகி இன்னமும் அவளை சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்லி நற்சரித்துக் கொண்டிருக்கிறான்.
ஏய் அங்க பாரு எல்லாரும் குழந்தையும் கையுமாவும் வாயும் வயிறு மாவும் மண்டபத்தை சுத்தி வராங்க ஆனா நீ மட்டும் இப்படி குழந்தை வேண்டாம் என்று தள்ளி போட்டுக்கிட்டே போனா என்னடி அர்த்தம் எப்போது தான் நமக்கு பாப்பாவுக்கு ஏற்பட பண்ண போற என்றான்.
சாருக்கு குழந்தை மேல அவ்வளவு ஆசையா ரொம்ப அவசர படுறீங்க என்ற வீணா பரவால்ல ஏற்கனவே நீ ஒரு வருஷமா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு அதனால…. என்று அவள் நிறுத்த…
அதில் ஆர்வமான லோகி என்னடி சீக்கிரம் சொல்லு என்று அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு சென்றான்.
எனக்கும் இங்கே வந்த பிறகு குழந்தைகளை எல்லாம் பார்த்ததும் நமக்கும் இந்த மாதிரி ஒன்னு வேணும்னு தோணுது என்றவள் அவன் காதருகில் சென்று இன்னைக்கு நைட்டு பூஜை ஸ்டார்ட் பண்ணலாமா என்றாள்.
அதில் சிரிப்பவன் ஆச்சரியமாக அவளை நிமிர்த்து பார்த்து நான் ரெடி நான் எப்பவுமே ரெடி தான் என்றவன் சேரில் இருந்து வேகமாக எழுந்திருக்க….
அவன் திடீரென எழுந்திருக்கவும் அங்கே அமர்ந்திருந்தவர்களை கேள்வியாக லோகியை பார்த்தனர் .
என்ன லோகி கிளம்பிட்டீங்களா இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்ன அவசரம் என்றான் தேவ் .
அது அது ஒன்னும் இல்ல சகல மணி இப்பவே 9 ஆயிடுச்சு… சீக்கிரமா கிளம்பினால் தான் பூஜையை நேரத்தோட ஸ்டார்ட் பண்ண முடியும் என்றான்.
என்னது நைட் 9 மணிக்கு பூஜையா அப்படி என்ன சகல பூஜை நடக்குது எப்பவுமே உங்க படத்தோட ஷூட்டிங் காலையில் தானே பூஜை போடுவாங்க இது என்ன புதுசா நைட் என்றான் தேவ்.
அது அது வந்து என்று லோகி என்ன சொல்லி சமாளிப்பது என்று தயங்க… அதெல்லாம் மாடலங்கில் இருந்து முன்னேறி சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறான் லோகி அதனால் தான் தேவ்வும் அவன் சினிமா பற்றி தொடர்பு படுத்தி பேச…
என்ன சகல எப்படி முடிக்கிற எங்க எனக்கு தெரியாம வேற எதுவும் பூஜை போட போறியா என்று தன் கையை லேசாக உயர்த்தி காட்டி தனக்கு தெரியாமல் ட்ரிங்க்ஸ் அடிக்கப் போகிறான் என்று தேவ் கேட்டான்.
அய்யய்யோ அதெல்லாம் இல்ல சகல இதை ஏன் இப்போ கேக்குறீங்க என்று ஜாடை செய்து வீணாவை செய்கை காட்டினான்.
உங்க பூஜைய அப்புறம் வெச்சுக்கலாம் முதல்ல உட்காருங்க இன்னைக்கு எண்டு கார்டு போட போறாங்க நம்ம ரைட்டர். எல்லாரும் அதுவரைக்கும் இங்க இருப்போம்.
அதுக்கப்புறம் அவங்க அவங்க வேலையை பார்க்க வேண்டியதுதான் நீங்களும் போய் உங்க பூஜைய ஆரம்பிங்க யாரும் வேண்டாம் என்று சொன்னது என்ற தேவ் லோகியின் கையைப் பிடித்து சாரல் அமர வைத்தான்.
ஆமால்ல இத நான் மறந்தே போயிட்டேன் அவன் சேரில் அமர்ந்து கொண்டு வீணாவை பார்த்தவன் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ சீக்கிரம் போயிடலாம் என்று சைகை செய்தான்.
எனக்கு எந்த அவசரமும் இல்லை பொறுமையா போகலாம் என்றால் வீணா.
நீ என்னைக்கு தாண்டி அவசரப்பட்டு இருக்க என்றவன் நீ ஓகே சொன்னதே பெரிய விஷயம் உன்னோட மனசுகுள்ள பூஜையை ஸ்டார்ட் பண்ணிடனும். நானும் பாதுகாப்பாவே எத்தனை நாளைக்கு உன் கூட இருக்கிறது அதெல்லாம் இல்லாம உன் கூட பூஜை பண்ண நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் என்று லோகி கூற…
நான் இங்கே வைத்து எத்தனை பேர் முன்னிலையில் தன்னிடம் காதில் கிசுகிசுத்த விஷயத்தை கேட்டதும் வீணாவின் முகம் சிவந்துவிட்டது அவனை திரும்பி வெட்கப்பட்ட படி பார்த்தவள் இதையெல்லாம் எதுக்குடா இங்கு வந்து பேசிக்கிட்டு இருக்க அறிவு கெட்டவனே வாய மூடு யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க என்று அவனின் கைப்பிடித்து அடுத்த பேசவிடாமல் அமர்த்தினாள்.
மௌலி சக்ரவர்த்தி, செல்வி, சிரா இவர்கள் மூவரும் தங்கள் மகன்களின் வாரிசும் அவர்களின் வாரிசும் என அனைவரும் ஒரே குடும்பமாக அமர்ந்து நண்பர்களாக இருந்தவர்கள் குடும்பமாகி குடும்பம் உறவாகி என முழுமையான ஒரு சங்கமத்தை இங்கே பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
அனைவரும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை இப்போது வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
விக்ரமின் பிசினஸை வீரா பார்த்துக்கொள்ள மீனுவின் ஸ்டுடியோவை அதிதி பார்த்துக் கொள்கிறாள்.
தினமும் தனித்தனியே குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு ஆபீசுக்கு போவதற்கு சிரமமாக இருக்க இரண்டு தொழிலையும் ஒன்றுபடுத்தி தங்களுடைய கிங்ஸ் ஸ்டுடியோவை மேலும் விரிவுபடுத்தி இருந்தான் வீரா.
வினு ஏற்கனவே மாடலிங் துறையில் உச்சகட்டத்தில் இருந்ததால் அதிலிருந்து விலகி தனக்குப் பிறகு வரும் இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தவன். புதிதாக மாடல்களை உருவாக்குவதற்காக கிங் மேக்கர் என்ற கம்பெனியை உருவாக்கி அதில் மாடலிங் துறையில் கால் பதிக்க இளம் தலைமுறையினரை தேர்வு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற துடிப்பவர்களாக தேர்ந்தெடுத்து அவர்களின் பலரை இந்த துறையில் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
ஜியாவிற்கென்ற தனியாக ஒரு ஹாஸ்பிட்டலில் கட்டிக் கொடுத்து அதற்கு விஜே ஹாஸ்பிடல் என்று அவர்கள் பெயரின் முதல் எழுத்துக்களை சேர்த்து வைத்த திறந்து கொடுத்திருக்கிறான் அவளுடன் ஹாஸ்பிடலில் எப்போதுமே பிசியாக இருப்பாள். வாரத்தில் ஒரு நாள் இருவரும் கிளம்பி தனியே சென்று விடுவார்கள் தங்களுக்கான நேரத்தை அனுபவிக்க….ஜியா இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.
ஜியாவின் விஜே ஹாஸ்பிடலில் வீணாகும் வேலை செய்கிறாள் இருவரும் தனித்தனியாக வேறு பக்கம் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று இருவருக்குமாக இணைந்து இந்த ஹாஸ்பிடலை வினு பரிசளித்திருக்கிறான்.
ரிஷி போட்டோகிராபியில் அடுத்த நிலைக்கு சென்று இருக்கிறான் அவன் வேலை பார்த்த அவனுடைய குரு ரிஷியின் திறமைகளை பார்த்து அவனைப் பாராட்டியவர் அவனுக்கு நல்ல பயிற்சிகளை கொடுத்து மேலும் இந்த துறையில் அவனே ஜொலிக்கச் செய்ய அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
அன்வி லக் நடத்திக் கொண்டிருந்த அகாடமியை இப்போது எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறாள் அங்கே அவள் பயிற்சியும் அளித்து கொண்டிருக்கிறாள். லக்கிற்க்கு தன்மகன் விஷ்ணு தன்னை தொடர்ந்து வரவில்லை என்று ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும். அவனுடைய அடுத்த வாரிசாக அன்வி தன்னுடைய அகாடமியை கையில் எடுத்த சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
குருவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தன்னுடைய பிசினஸை முழு நேரமாக கவனம் செலுத்தி வருகிறான் தேவ்.
யாராவும் பிரியாவும் வீட்டை பார்த்துக் கொள்ள மற்றவர்கள் நிம்மதியாக தங்களுடைய வேலைகளில் தொழிலில் கவனம் செலுத்துகின்றனர்.
குரு கௌதமி பார்த்துக் கொள்வதில் தன்னுடைய முழு நேரத்தையும் செலவழிக்கிறான்.
கிங் மேக்கர் கம்பெனியில் வினுவிற்கு பிஏவாக ஆரியா தான் இன்னமும் இருக்கிறான் அவனுக்கு தனியாக தொழில் அமைத்துக் கொடுக்க வினு எவ்வளவோ முயன்றும் அதை மறுத்தவன் தன் நண்பனோடு தான் எப்போதும் இருப்பது விரும்புவதாக கூறவும் அவன் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் தன்னோடு வைத்துக் கொண்டான் வினு.
இதை நினைத்து ஷாம் பார்வதி இருவரும் இதுவரை வருத்தப்பட்டதே கிடையாது.
விக்ரம் ஓடு தன்னுடைய நட்பு தொடர்ந்து வருவதை போல தன் பிள்ளையும் அவன் மகனோடு நட்பு பாராட்டுவது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியே…
பார்வதிக்கும் கண்மணிக்கும் அடிக்கடி ஊடல் ஏற்படும். வழக்கம்போல மாமியார் மருமகள் பிரச்சனை தான் அவர்கள் இருவரையும் சமாளிப்பது அவனுக்கு நேரம் போய் விடுகிறது.
எந்த நேரத்தில் இருவரும் சண்டை போடுகிறார்கள் என்று பயந்து கொண்டிருப்பான் ஆனால் அவர்களோ தாய் பிள்ளை போல கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களே பேசி அவர்களே சமாதானம் ஆகி கொள்ளட்டும் என்று அவர்களே இப்போது கண்டு கொள்வதே இல்லை ஷியாம்.
கிருஷ்ணாவும் நிதியும் இனிமேல்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். நம்முடைய வசீகரனின் காதலியில் வீட்டில் அடுத்த விசேஷம் இவர்களுடைய திருமணம்தான்.
அதற்கான ஏற்பாடுகளில் வினித்தும் சுருதியும் தீவிரமாக இருந்தனர் தங்கள் ஒரே செல்ல மகளின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று இருவரும் முன் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு காவல்துறையில் அடுத்த உயர் பதவி காத்துக் கொண்டிருக்க ஆனால் அவனோ தான் எப்போது அப்பாவாகும் பதவியை எட்டி பிடிக்கிறானோ அதன் பிறகு தான் இந்த பதவியை எல்லாம் ஏற்றுக்கொள்ளப் போவதாக முடிவாக சொல்லிவிட…
ரசிகா விற்கோ இவனுடைய பிடிவாதம் நினைத்து சந்தோசம் தான். த்ரிதி என் உடல்நிலை இப்போது நன்றாக தேடி விட்டிருக்க டாக்டர் திருதியையும் வினையையும் அழைத்துப் பேசி திருதிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று பச்சைக்கொடி காட்டிவிட இரண்டு ஜோடிகளும் குழந்தை பெற்றுக் கொள்வதில் இப்போதெல்லாம் தீவிரமாகிவிட்டனர்.
அடிக்கடி இருவரும் தங்கள் மனைவிகளை அழைத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஹனிமூன் இருக்கு செல்வதே இவர்களுக்கு வேலையாகி விட்டது. சத்யாவும் மிருதியும் அவர்களை வற்புறுத்தி ஹனிமூன் அனுப்பி வைத்தனர் ரோஜாவே காரணம் காட்டி மீண்டும் அவர்கள் தங்கள் சந்தோஷத்தை தள்ளிப் போட்டு விடக்கூடாது என்று அவர்களின் ஏற்பாடு தான் இது.
கர்ணனும் ஸ்ரேயாவும் தங்கள் மகள்களை கட்டிக் கொடுத்துவிட்டு இப்போது நிம்மதியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் வருஷத்திற்கு இரண்டு வெளிநாடுகள் ட்ரிப் போய்விடுவார்கள்.
வயதான காலத்தில் காசி ராமேஸ்வரம் போகாமல் இப்படி ஊர் சுற்றுகிறார்கள் என்று கேட்டால் எங்களுக்கு இன்னும் அவ்வளவு வயது வரவில்லை என்று இருவரும் இப்போதும் இளம் தம்பதிகளை போல ஜோடி போட்டுக் கொண்டே வருவார்கள்.
END
