மூர்க்கன் 65
எல்லோரும் ஹாலில் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்க, ராவண் மட்டும் அங்கே அமைதியாக இருக்கவே முடியாமல் அறைக்குள் நுழைந்தான். கதவைச் சாத்தியவன், தன் உடமைகளைச் எடுத்து வைத்துக்கொண்டு இருந்த இளங்கிளியைப் பார்த்தான்.
அவள் முகம் முழுவதும் தன் அம்மா வீட்டிற்குச் செல்லப் போகும் சந்தோசம் லேசாகத் தெரிந்தாலும், ராவணை விட்டுப் பிரியப் போகிறோமே என்ற சின்ன தயக்கமும் இருக்கத்தான் செய்தது.
அவள் அருகில் வந்த ராவண், பின்னால் இருந்து அவளை வளைத்துப் பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அந்த திடீர் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போன இளங்கிளி தன் கையில் இருந்த துணியை அப்படியே கீழே வைத்தாள்.
“ஏங்க.. என்ன பண்றீங்க? எல்லாரும் கீழ இருக்காங்க. இப்போ வந்தா என்ன நினைப்பாங்க?” என்று அவன் தோள்களில் கைவைத்து மெலிதாகப் புன்னகைத்தாள்.
அவள் கழுத்தடியில் முகத்தைப் புதைத்து, மூச்சுக் காற்றை இழுத்து விட்டவன், குரலில் அப்பட்டமான சோகத்துடன் முணுமுணுத்தான்.
“போகாத டி… உன்னை எங்கயும் அனுப்ப எனக்கு மனசே இல்ல. ஆறு மாசம் டி.. நீ அங்க போயிட்டா… நான் எப்படி இங்க தனியா இருக்கப் போறேன்? பிலீஸ் இங்கையே இருடி.. ” என்று கெஞ்சினான் அவள் கழுத்தில் முகம் புதைத்து
அவன் குரலில் இருந்த ஏக்கம் இளங்கிளிக்கு கவலையாக இருக்க… அவன் கைகளை மென்மையாகப் பற்றிக் கொண்டு, அப்படியே அவனுக்கு முன்பாகத் திரும்பி அவன் மார்பில் தலை சாய்த்தவள். “என்ன இப்படிப் பேசுறீங்க? நான் என்ன எங்கேயோவா போறேன்? என் அம்மா வீட்டுக்குத்தானே போறேன். அப்புறம் என்ன? எப்படியும் நீங்க தினம் ஒரு தடவையாவது என்னை பார்க்க வந்திருவிங்க தானே.. நானே அதை நினைச்சு தான் என்னை சமாதானம் பண்ணிக்கிறேன்” என்றாள்.
“தினமும் வர்றது இருக்கட்டும்… ஆனா ராத்திரி ஆனதும் நீ என் பக்கத்துல இல்லாம, நான் இந்த தலையணையைக் கட்டிட்டுத் தூங்கணுமா? அது என்னால முடியாது. நீ போற ஐடியாவை மாத்திக்கோ. வேணும்னா உன் அம்மாவையும் அப்பாவையும் இங்கயே வந்து தங்கச் சொல்லுவோம். நாமதான் எல்லாரும் ஒண்ணாதான் இருக்கோமே ” என்று கெஞ்சும் குரலில் சொன்னான் ராவண்.
ராவண் இப்படி பிடிவாதமும், காதலுமாக அவளிடம் கெஞ்சுவதைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், அவனது ஏக்கத்தைப் பார்த்து இளங்கிளிக்கு வருத்தமாகிப்போனது.. தன் இரு கைகளாலும் அவன் முகத்தைப் பற்றியவள்
” நீங்க இப்படிப் பிடிவாதம் பண்ணினா அப்புறம் எங்க வீட்ல என்ன நினைப்பாங்க? அவங்களுக்கும் அவங்க பொண்ணை பக்கத்துல வச்சுப் பார்க்க ஆசை இருக்கும்ல. கொஞ்ச நாள்தானே… சீக்கிரமே திரும்பி வந்துடுவேன்ல!” என்று அவன் கன்னத்தைத் தட்டிச் சமாதானம் செய்தாள்.
அவள் சமாதானம் எதையும் கேட்கும் மனநிலையில் ராவண் இல்லை. மெல்ல அவளைத் தூக்கி கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, அவள் மடியில் முகம் புதைத்து அவளது இடுப்பைச் சுற்றி கைகளைக் கோர்த்துக் கொண்டான்.
“உன் மேல எனக்கு இருக்கிற பாசம் உனக்குப்புரியல டி. என்னை இப்படித் தவிக்கவிட்டு உனக்கு எப்படி ஜாலியா போகத் தோணுது?” என்று கொஞ்சினான்.
அவன் பேசுவதைக் கேட்டுப் புன்னகைத்தவள், அவன் தலைமுடியை வாஞ்சையோடு கோதிவிட்டவள்.
“அச்சோ… என் புருசனுக்குத்தான் என் மேல எவ்ளோ பாசம்! இப்போ என்ன பண்ணனும் என் செல்லத்துக்கு? இப்படி முகத்தை வச்சுக்கிட்டா நான் எப்படிங்க கிளம்பிப் போறது?” என்றவள் குனிந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்து.
அவள் தன்னை விட்டுக் கொடுக்காமல் கொஞ்சுவதைப் பார்த்த ராவண், மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவன் கண்கள் அவளது இதழ்களின் மீது நிலை கொள்ள, “என்னை விட்டுட்டுப் போறதுக்கு நியாயமா நான் தான் உனக்கு தண்டனை கொடுக்கணும். ஆனா இப்போதான் உனக்கு டெலிவரி ஆகிறுக்குனு பாக்குறேன்” என்று அவள் இடையை மோகம் கொள்ள வருடியவன் “அதனால நீயே எனக்குத் தண்டனை கொடு… ஆனா சீக்கிரம் திரும்பி வரணும்” என்றான் ஆசையாக.
அவன் கண்களில் இருந்த காதலைப் பார்த்தவள் வெட்கப்பட்டுத் தலைகுனிந்தாள். உடனே அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்திய ராவண், அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான்.
“சீக்கிரம் வரணும்… இல்லன்னா நானே நேரா வந்து உன்னைத் தூக்கிட்டு வந்துருவேன்” என்று மிரட்டலாகச் சொன்னாலும், அவன் குரலில் அத்தனை கொஞ்சல் இருந்தது.
அவள் வெட்கச் சிவப்போடு ராவணைப் பார்க்க..
“என்ன டி இங்கையே இருக்கணும்னு தோணுதா?” என்றான்.
“ம்ம்.. ஆமா ” என்றாள்.
“அப்போ இருந்திரு ” என்று எழுந்தவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தான் .
“என்னங்க இது சின்ன புள்ள மாதிரி அடம் பண்றீங்க.. ” என்று அவன் முகத்தை பற்றி தன்னைப் பார்க்குமாறு நிமிர்த்தியவள் “இப்போ உங்களுக்கு தண்டனை கொடுக்கணும். அப்போதான் நான் சொல்ற பேச்சையே நீங்க கேப்பிங்க.. ‘ என்று அவன் இதழ்களின் அருகே நெருங்கினாள்.
ராவணும் அவள் நெருக்கத்தில் தானாக கண்களை மூடிக்கொள்ள..
அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள் அவன் இதழில் தன் இதழை மென்மையாகப் பொருத்தி இருந்தாள்.
இருவரும் இதழ்களும் உரசிய அந்த நொடி இருவருக்குள்ளும் மின்சாரம் பாயத் துவங்கியது. முத்தங்கள் தீவிரமானது. அப்படியே அவள் இடையில் கை கொடுத்து கட்டிலில் படுக்க வைத்த ராவண் அவள் இதழ்களில் இருந்து கீழ் இறங்கி அப்டியே அவள் மேனியில் தன் முத்த ஊர்வளத்தைத் துவங்கி இருந்தான்.
அவளும் அவன் கேசம் பற்றி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரப் போராடினாள்.
ஆடைகள் மட்டுமே இப்பொது அவர்களுக்குத் தடையானது.
அவன் கைகள் அவள் உருண்டு திறந்த மென்மைகளில் விளையாடியது. அவன் இதழ்களோ அவள் கழுத்து வளைவில் கவி பாடியது.
அடுத்த கட்டத்திற்கு போக முடியாத நிலை இருவருக்கும்.ஆனாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லாத நிலையில் இருவரும். அவனை அப்டியே தன்னோடது சேர்த்து அணைத்து அவனுக்குள் புதைந்து போக துடித்தது அவள் உணர்வுகள்.
அவளுள் மொத்தமாக தன்னைத் தொலைத்து உலகம் மறக்க நினைத்தது அவன் உணர்வுகள்.
சற்று நேரத்தில் அவர்களாகவே நிதானத்திற்கு வந்திருக்க..
அவளைவிட்டு பிரிந்து இளங்கிளியின் அருகே கட்டிலில் படுத்தவனுக்கு மூச்சு வாங்கியது. அவளுக்கும் தான் .
அப்படியே திரும்பி அவன் மார்பில் தலை வைத்துப் படுத்தவள் “தினமும் ரெண்டு வாட்டியாவது நீங்க அங்க வந்துடனும் “என்று கட்டளையிட்டாள்.
“சரி டி.. ” எண்று அவள் உச்சந்தலையில் காதலாக முத்தம் பதிக்க.. அதை கண் மூடி ஏற்றுக்கொண்டாள்.
சற்று நேரத்தில் இருவரும் தங்கள் உடைகளை சரி செய்து அனைத்தையும் சேர்ந்தே பேக் பண்ணியவர்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு கீழே வர..
“டேய் அங்க பாரு கிடைச்ச கேப்ல குட்டியா ஒரு ரொமான்ஸ் பண்ணிட்டு கீழ வர்ரதைப் பாரு” என்றாள் ராஜ்ஜிடம் கயல்.
“ம்ஹும்.. அவருக்கு கொடுத்து வெச்சிருக்கு அப்போ அப்போ கிடைக்குற கேப்ல என்ஜாய் பண்றாரு . இனிப் பாரு நானும் கிடைக்குற கேப்ல எல்லாம் உன் உடம்புல கவி படுறானா இல்லையான்னு பாரு” என்று அவள் காதருகே குனிந்து சொன்னான் ராஜ்.
அவர்கள் கீழே வரவும் அவளைவிட்டு தள்ளி நிடன்று கொண்டான் ராஜ்.
“ம்கூம்.. இவ்ளோ பேர் இருக்கும்போதே என்கிட்டே நிக்குறதுக்கே பயப்படறான். இதுல கிடைக்குற கேப்ல கவி பாடுறானாம் கவி.. பாக்குறேன் இவனை ” என்று நினைத்துக் கொண்டாள் கயல்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஆதி, அல்லி , குட்டிப் பையனுடன் கிளம்பி இருந்தாள் இளங்கிளி.
“எல்லாரும் அடிக்கடி எங்க அக்காவையும் பார்க்க கிளம்பி வந்திருங்க” என்றவள் கயலைப் பார்த்து “மறக்காம நீங்க வந்திருங்க . அப்போதான் எங்களுக்கும் நேரம் போகும் ” என்று சொல்லிவிட்டு நிலா கிளம்ப..
“வரேன் டி! வரேன் வந்து உன்னை ஒரு வழி பண்றேன் பாரு ” என்று கயலும் பதில் சொல்லிவிட்டு அவர்களை வழி அனுப்பினாள்.
அந்த மூன்றடுக்கு மாடியின் முன்னே வந்து விலை உயர்ந்த கார் வந்து வேகமாக நின்றது. அந்த காரைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்று தன் தொப்பியை சரி செய்தார் அந்த அட்லீ நிறுவனத்தின் வாட்ச்மென் .
காரில் இருந்து இறங்கிய கர்ணன் வேகமாக படிகளில் ஏறியவன் வாட்சமனைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்த்து தலையாட்டிவிட்டு உள்ளே சென்றான்.
நேராக தன் லிப்டில் ஏறியவன் மூன்றாம் தளத்தில் வந்து இறங்க.. எப்போதும் அவன் வருகையில் காத்திருக்கும் அவன் பிஏ இன்று வரவில்லை. உடனே தன் கைக்கடிகாரத்தை பார்த்தவன் “ஒன் டூ பெர்மிஸ்ஸன் கேட்டா ” என்று மணியைப் பார்க்க.. அவன் பிஏ வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது,
தன் கேபினுக்குள் வந்து அமர்ந்தவன் இன்டெர் காமை எடுத்து மேஜரை அழைத்தான்.
சற்று நேரத்தில் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தான் விஜேஷ் “சார் , குட் மோர்னிங் ” என்றவன் “நீங்க கேட்ட பைல் ” என்று ஒரு பச்சை நிற பைலை அவன் முன் வைக்க..
அதைத் திறந்து படித்துப் பார்த்தவன் “ஓகே இதுல வேற எந்த ப்ரோப்ளேமும் கிரீயேட் ஆகாது இல்லையா ? டாகுமெண்ட் எல்லாம் சரியா இருக்கு தானே.. ” என்றான் அந்த பைலை புரட்டிப் பார்துகொண்டே..
“நோ சார், எந்த ப்ரோப்லேமும் இல்ல. நேத்தே இந்த பைலை ரெடி பண்ணி உங்க பிஏ என்னோட டேபிள்ல சப்மிட் பண்ணிட்டாங்க” என்றான்.
“பரவால்லையே இன்னிக்கு பெர்மிஸ்ஸின் போடப்போறோம்னு முன்னமே எல்லா வேலையும் முடிச்சசாச்சு” என்று நினைத்தவன் “ஓகே யூ மே கோ ” என்று மேனேஜரை அனுப்பிவைத்தான்.
அந்த பைல்களை மீண்டும் ஒருமுறை பிரித்துப் படித்தவன் அதை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தான் கர்ணன்.
அவன் கிளம்புகையில் தன் மொபைலில் அழைத்து பேசியபடி சென்றவன் . மறுமுனையில் கூறிய விபரம் கேட்டவன் . தன் டிரைவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்தை லொகேஷன் அனுப்பிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.
சற்று நேரத்தில் அவன் வர வேண்டிய இடம் வந்ததும் தன் மொபைலை எடுத்துப் பேசிக்கொண்டே அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றான் கர்ணன்.
“ஓகே நான் வந்துட்டேன் , வெளிய தான் இருக்கேன் ” என்று விபரம் கூறிவிட்டு போனை வைக்க..
அந்த வீட்டின் கதவை வந்து சற்று நேரத்தில் கையில் குழந்தையோடு வந்து திறந்தாள் இளங்கிளி.
வாசலில் கர்ணனைப் பார்த்ததும் முகமெல்லாம் சந்தோசமாக சிரித்தவள் “அட்ரஸ் கண்டுபிடிக்க சிரமமா இருந்துச்சா அண்ணா ” என்றாள்.
“இல்லம்மா அதான் லொகேஷன் ஷேர் பண்ணுணியே சரியா கொண்டு வந்திருச்சு என்னை ” என்றவன் “உன்னைப் பார்க்க அம்மா வரேன்னு சொன்னாங்க. நான் ஆஃபீஸ்ல இருந்து நேரா இங்க வந்ததுனால அவங்களை அழைச்சிட்டு வர முடியல. ” என்றவன் வந்து சோபாவில் அமர்ந்தான்.
“சரி பரவால்ல இன்னோரு நாள் அவங்களை கண்டிப்பா அழைச்சிட்டு வாங்க ” என்றவள் குழந்தையை அவனிடம் கொடுத்தாள் .
கையில் இருந்த பைலை வைத்துவிட்டு எழுந்து குழந்தையை வாங்கியவன் உறங்கிக்கொண்டிருந்தவனை பார்த்து சிரித்தபடி நல்லா தூங்குறான் என்றான்.
“ம்ம்.. ஆமா தம்பி , இப்போ தூங்குவான் ராத்திரி முழுக்க எங்களை தூங்க விடறதே இல்ல ” என்று சொன்னபடி அங்கே வந்தார் மணிகண்டன் அவரோடு பின்னால் விசாலாட்சியும், சரோஜினியும் வர,,
“அண்ணா இவங்க சரோஜினி என் அத்தை, அப்பாவோட சிஸ்டர் ” என்று அவரை அறிமுகம் செய்து வைத்தாள்,
“இவங்களை நான் ஹாஸ்பிடல்லையே பார்த்தேனே கிளி ” என்றவன் சரோஜினியைப் பார்த்து தலையசைத்தான்.
“அவரும் சிரித்தவர் நீங்க பேசிட்டு இருங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ” என்று உள்ளே செல்ல.. விசாலாட்சியும் தம்பி இன்னிக்கு காலைலயே நல்லிகுளம்பு வெச்சிருக்கேன் . சாப்பிட்டு தான் போகணும் ” என்று கட்டளையாக சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட,.
“அக்கா, இங்க பாருங்க உங்க பையன் செய்து வெச்சிருக்க வேலையை. என் பேண்ட் எல்லாம் உச்சா ஊத்தி வெச்சிருக்கான். அவனை யாரு என் டிரஸ் மேல படுக்க வெச்சது” என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள் நிலா.
அவள் குரல் கேட்டு கர்ணன் நிமிர்ந்து பார்க்க..
அப்போது தான் அவனை நிலாவும் கவனித்தாள்.
“ஐயோ! மண்டகசாயமா! இவன் எங்க இங்க இருக்கான் ” என்று அதிர்ந்து அவனைப் பார்க்க..
கர்ணனோ “இவளா?” என்ற ரீதியில் நிலாவைப் பார்த்தவன் “நீ எங்க இங்க?” என்றான்.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டவர்கள் போல பார்த்துக்கொள்ள அங்கே இருந்த மணிகண்டனும், இளங்கிளியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
