மூர்க்கன் 66
தனக்கு முன்னே வெறும் சுடிதார் டாப் மட்டும் போட்டு அதற்கு கீழே டவலை கட்டிக்கொண்டு நின்று இருந்த நிலாவைப் பார்த்தான் கர்ணன்.
அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவன் விழிகள் இடையைத் தாண்டி கீழே தெரிந்த அவள் பளிச்சிடும் கெண்டை கால்களில் வந்து நிலைத்தது. ஒரு நிமிடம் ஒரே நிமிடம் தான் அவன் மனம் தடுமாறியது . சட்டென தன்னை சுதாரித்துக்கொண்டவன் பார்வையை மேலே உயர்த்த..
நிலாவோ தான் இந்த கோலத்தில் இருப்பதை கர்ணன் பார்த்துவிட்டான் என்றதும் பதறியவள் “அக்கா, ஒரு நிமிஷம் நான் டிரஸ் மாத்திட்டு வந்துடறேன் ” என்றவள் கர்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே ஓடி இருந்தாள்.
அவள் சென்றதும் நிலாவை அவனுக்கு ஏற்கனவே தெரியுமா என்று மணிகண்டன் விசாரித்தார்.
அவனும் விபரத்தை சொல்ல.. உடை மாற்றிவிட்டு அறைய விட்டு வெளியில் வந்தாள் நிலா.
தின் சுருள் முடியை இருபக்கமும் முடியை எடுத்து பனானா கிளிப் போட்டு இருந்தாள்.
காதில் ஆக்ஸிடைஸ்ட் கம்மல் அழகாக தொங்கிக்கொண்டிருக்க.. லேசான ஒப்பனையும், கண்ணில் கண்மையும் போட்டு உதட்டிற்கு லிப் கிளாஸ் போட்டிருந்தாள்.
இடையில் இருந்து முழு நீளத்திற்கு பூவேலைப்பாடு கொண்ட ஏலக்காய் பச்சை நிறத்தில் ஸ்கர்ட் அணிந்து இருந்தாள் . அந்த ஏலக்காய் பச்சை ஸ்கர்ட்டில் அங்கங்கே சாம்பல் நிறப் பூ இருக்க.. அதற்கு மேட்சாக குட்டையாக சட்டை அணிந்து இருந்தாள்.
மேலே காலர் பட்டனும் அதற்குக் கீழே இருந்த பட்டனும் திறந்து இருக்க.. இடையில் தெரிந்த அவள் சந்தன நிற மேனியில் ஒரு சன்னமான தங்க செயின் அதில் பிறைநிலா டாலர் தொங்கிக்கொண்டு இருந்தது.
அவளை உச்சி முத்தம் தன் பார்வையால் அளந்தவன் கண்கள் அவள் லேசாக உப்பிய கன்னத்திலும் அந்த சட்டைக்கும், ஸ்கர்ட்டிற்கும் இடையில் தெரிந்த அவள் குட்டி தொப்பையையும் கண்டு இதழ்களுக்குள் சிரித்த கர்ணன் பார்வை அவள் கெண்டைக் காலிற்கு செல்ல..
அவள் தன் பாதம் கூடத் தெரியாத வண்ணம் கீழே தரையை உரசிக்கொள்ளும் அளவிற்கு ஸ்கர்ட் அணிந்திருக்க.. அவனுக்கு ஏமாற்றமாகிப் போனது . அந்த தவிப்பை ,ஏமாற்றத்தை கண்டு கர்ணனுக்கே தன்னை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது,
அவன் கவனத்தை கலைக்கும் விதமாக கர்ணன் கையில் இருந்த குழந்தை அவன் மார்பில் எட்டி உதைக்க..
“என்ன டா அவளை நான் பார்க்குறது உனக்கு பிடிக்கலையா..” என்று நினைத்தவன் “என்ன டா குட்டிப்பையா” என்று அவனைக் கொஞ்ச ஆரம்பித்தான்.
“ஏன் நிலா நம்ம கர்ணன் ஆபீஸ்ல தான் நீ வேலை பாக்கறியா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார் மணிகண்டன்.
“அ.. ஆமா மாமா” என்றவள் ஓரக்கண்ணால் கர்ணனைப் பார்க்க..
அவனோ குழந்தையைக் கொஞ்சியபடி அவளையே பார்த்திருந்தான்.
“ஹையோ! பாக்குறனே.. இவன் பார்வையே சரி இல்லையே. இன்னிக்கு ஆபீஸ்ல வெச்சு என்னை என்னென்ன கேள்வி கேக்கப் போறான்னு தெரியலையே . மண்டகசாயம்.. மண்டகசாயம். உன் கண்ணை புடிங்கி காக்காய்க்கு போற்றுவேன் டா..”என்று கர்ணனை மனதிற்குள் திட்டினாள் நிலா.
“ரொம்ப நல்லதா போயிருச்சு. அப்போ உன்னை பத்தி நாங்க இனி கவலைப் பட வேண்டியது இல்ல” என்று அங்கு வந்தார் சரோஜினி.
“ஆமா ஆமா உங்களுக்கு என்ன தெறியும் இவனைப் பத்தி . சரியான திமிர் புடிச்சவன் இந்த மண்டகசாயம்” என்று உள்ளுக்குள் புலம்பிய நிலா வெளியே சிரிப்பது போல காட்டிக்கொண்டாள்.
“சரி தம்பி வாங்க சாப்பிடலாம் ” என்றவர் குழந்தையை வாங்கப் போக.. சரியாக இளங்கிளியின் செல்ல மகன் கர்ணன் பேண்டில் உச்சா போய்விட்டான்.
அதைக் கண்டதும் சிரித்துவிட்டாள் நிலா. “அச்சோ .. மாமா மேல உச்சா போய்டியா டா.. என்னோட பேண்ட்ல போனது மாதிரியே அவர் பேண்ட்டையும் ஈரம் பண்ணிட்ட டா செல்லம் ” என்று கர்ணன் அருகில் வந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
அவளை முறைத்த கர்ணன் குழந்தையை அவளிடம் கொடுக்க..
“அண்ணா பேண்ட் எல்லாம் ஈரம் ஆகிருச்சு. வாங்க உங்களுக்கு வேற டிரஸ் எடுத்து தரேன் ” என்று அவனை அழைக்க..
கர்ணனும் இளங்கிளியுடன் அவள் அறைக்கு சென்றான். அவனுக்கு ராவணின் பேண்ட் ஒன்றை எடுத்து கொடுத்துவிட்டு வெளியே வந்தவள் “இவனுக்கு எந்த நேரமும் டயபர் போட்டா நல்லது இல்லேனு சும்மா விட்டா எல்லார் ட்ரெஸ்ஸையும் ஈரம் பண்ணிகிட்டே இருக்கான். ” என்று நிலாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டவள் .
நிலாவின் அறைக்குள் சென்று அவனுக்கு ட்ராயரை மாற்றி விட்டவள் குழந்தை பசியில் அழுகவும் அவனுக்கு பால் புகட்ட அந்த அறையிலேயே இருந்து கொண்டாள்.
இங்கே பேண்டை மாற்றிவிட்டு வெளியே வந்த கர்ணனைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் கையை வைத்துக்கொண்டாள் நிலா,.
அவன் கருப்பு நிற ஷர்டிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத நிறத்தில் பேண்ட் அணிந்து இருந்தான்.
“தம்பி வந்துட்டீங்களா? வாங்க சாப்பிடலாம் ” என்று அவனை அழைத்து சாப்பிட உக்கார வைத்தவர் அன்று செய்த சமையலை அவனுக்குப் பரிமாறத் துவங்கி இருந்தார்.
அவன் இல்லை முழுதும் நிறைந்திருந்த உணவுகளை பார்த்து அதிர்ந்தவன் “என்ன ஸ்பெசல் இன்னிக்கு இவ்ளோ ஐட்டம்ஸ் செஞ்சிருக்கீங்க. அதுவும் காலைலயே” என்றான் கர்ணன் உணவுகளை பார்த்தவாறே,
“இன்னிக்கு என் பொண்ணுக்கு பிறந்தநாள் தம்பி. அவ தான் இதெல்லாம் சாப்பிட வேணுன்னு கேட்டா . அவளுக்காக தான் இதெல்லாம் இன்னிக்கு செஞ்சிருக்கோம் ” என்றார் விசாலாட்சி.
“ஓ!.. அவளுக்கா, அவ ஏன் குண்டா இருக்கான்னு இப்போதான் புரியுது . இவ்ளோ சாப்பிட்டா இப்படி தானே இருப்பா “என்று நிலாவைப் பற்றி நினைத்தபடி இலையில் இருந்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்தான்.
அதற்குள் இளங்கிளியும் வந்துவிட குழந்தையை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு கர்ணனுக்கு அவளும் பரிமாறினாள் . அவன் வேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் உணவுகளை அவனுக்கு எடுத்து வைத்து பரிமாற..
இங்கே அவனை முறைத்தபடி அமர்ந்து இருந்தாள் நிலா.
“ஏய் என்ன டி சாப்பிடலையா? அப்டியே உட்கார்ந்திருக்க”என்றாள் கிளி.
“அக்கா இன்னிக்கு என்னோட பர்த்டே என்னை யாரும் கண்டுகிறதா இல்ல. இதெல்லாம் எனக்கு தானே செஞ்சீங்க. ஆனா பாருங்க எனக்கு தான் இலைல கம்மியா இருக்கு.. ‘என்று சிணுங்கியபடி கேட்டாள்.
“அடிப்பாவி இதுக்காடி பிறந்தநாளும் அதுவுமா மூஞ்சியை தூக்கி வெச்சிருக்க.. ” என்ற சரோஜினி. “வீட்டுக்கு வந்தவளை தானே டி முதல்ல கவனிக்கணும்” என்று சொன்னபடி அவளுக்கு அனைத்தையும் பரிமாற.
“ஆமா எனக்கு செஞ்சதல்லாம் அவன் இலைல இருக்க.. அங்க பாரு பெரிய பீஸ் எல்லாம் அவனுக்கு வெச்சிட்டு எனக்கு எலும்பு தான் இருக்கு. மண்டகசாயம் மண்டகசாயம் . என்னோடது எல்லாம் நீ சாபிட்றே இல்ல உனக்கு இன்னிக்கு வயிறு வலிக்கும் பாரு “என்று முணுமுணுத்தபடி தனக்கு வைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடியவும் “கிளி இங்க வா ” என்று அவளை கை பற்றி ஹாலுக்கு அழைத்து சென்றவன் சோபாவில் அமர்ந்து இருந்த விசாலாட்சியிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு “நம்ம ஆதி, அல்லி அப்பறோம் இவன் இவங்க மூணு பேருக்கும் சேர்த்து நான் ஒரு கிப்ட் கொண்டு வந்திருக்கேன் ” என்றான்.
“கிப்டா இவ்ளோ நேரம் இங்க தானே இருந்தான் ,. நான் அந்த மாதிரி எதையும் பாக்கலையை.. பொம்மை எதுவும் வாங்கிட்டு வந்தா இருந்திருக்குமே இங்க “என்ற ரீதியில் நிலா அவனைப் பார்க்க..
அவனோ சோபாவில் இருந்த அந்த பச்சை பைலை கையிலெடுத்தான்.
அந்த பைலைப் பார்த்ததும் “இது அந்த பிளாக் ஸ்டோன் அப்பார்ட்மெண்ட்டோட டாக்குமெண்ட் ஆச்சே.. இதை எதுக்கு இங்க எடுத்து வந்திருக்கான். எதுவும் தப்பு பண்ணிட்டேனா அதுல. அதை எடுத்துட்டு இங்க வெச்சு எல்லார் முன்னாடியும் என்னை திட்டப்போறானா ?” என்று அவள் மனம் யோசிக்க..
“இந்த இதை வாங்கிக்கோ ” என்று இளங்கிளியின் கையில் அந்த பச்சை பைலைக் கொடுத்தான் கர்ணன்.
“என்ன அண்ணா இது ?” என்றபடி அதை வாங்கிப் பார்த்த கிளி “அண்ணா இது ஏதோ டாக்குமெண்ட் மாதிரி இருக்கு “என்றாள்.
“ஆமா நான் புதுசா வாங்கின அபார்ட்மெண்ட் , இந்த அபார்ட்மென்ட்டை தான் நான் இவங்க மூணு பேருக்கும் கிப்ட் பண்ணிருக்கேன்” என்றான்.
“என்னது கோடிக்கணக்குல மதிப்பு இருக்க இந்த அபார்ட்மெண்டை நம்ம குட்டிஸ்க்கு கிப்ட் பன்றாரா “என்று என்று நினைத்தவள் வாயில் கையை வைத்துக்கொள்ள..
அவளை போன்ற அதிர்ச்சி தான் மற்றவர்களுக்கும்.
“அண்ணா என்ன இது நீங்க இப்போதான் உங்க பிஸிநெஸ்க்கு இன்வெஸ்ட் பண்ணிட்டு வரீங்க. இது அவர் வாங்குறதா இருந்த அபார்ட்மெண்ட் தானே . வேணம்னா இதை நீங்களே வெச்சுக்கோங்க “என்று அதை வேணாம் என்று மறுத்தாள் கிளி.
“இங்க பாரு பிசினஸ் வேற இது வேற.. நான் ஆசையா என் தங்கச்சி பசங்களுக்கு கிப்ட் கொடுக்கிறேன் அதை வேணாம்னு நீ சொல்லக்கூடாது “என்று அவன் அன்புக்கட்டளையாக சொல்லிவிட அதை மறுக்க முடியாமல் தடுமாறினாள் இளங்கிளி.
“சரி நான் கிளம்பறேன் இன்னும் ஒன் ஹௌர்ல ஒரு மீட்டிங் இருக்கு “என்று தன் கார் சாவியை எடுத்துக்கொண்டான்.
“ம்ம் சரிண்ணா ” என்றவள் “இன்னிக்கு ஈவினிங் நிலா பர்த்டேக்கு நம்ம வீட்லையே சிம்பிளா கேக் வெட்டுறோம் . நீங்க வந்திருங்க ” என்றாள்.
அவள் சொன்னதும்ட திரும்பி நிலாவைப் பார்த்த கர்ணன் “இந்த வயசுல கேக் வெட்டி பிர்த்டே கொண்டாடணுமா?” என்றான் .
“எனக்குத் தானே கொண்டாடுறோம். இவருக்கு என்ன வந்துச்சு ” என்று நினைத்தவள் “எனக்கு இதுல எல்லாம் விருப்பம் இல்ல. ஆதியும், அல்லியும் தான் எனக்கு பர்த்டே பார்ட்டி வெச்சே ஆகனும்னு அடம் பண்ணினாங்க” என்று தலையை தொங்கப்போட்டபடி சொன்னாள் நிலா.
“ம்ம்… “என்றவன் அனைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன் “நீ ஆபீஸ் வரல ” என்றான்.
“இதோ கிளம்பிட்டேன் சார். நீங்க ஆபீஸ்க்கு போறதுக்கு முன்ன நான் அங்க இருப்பேன்” என்று தன் கைப்பையையும் ஸ்கூட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள்.
அவள் செல்லும்வரை பார்த்த கர்ணன் “அப்போ ஈவினிங் பாக்கலாம் ” என்றான் .
“தம்பி ஒரு நிமிஷம் ” என்று அவன் பக்கம் வந்த சரோஜினி.
“தம்பி என் பொண்ணுக்கு வாய் மட்டும் தான் அதிகம். எல்லாரையும் சீக்கிரம் நம்பிருவா. ரோசக்காரி. ஆனா விபரம் பத்தாத புள்ள. என் கஷ்டத்துக்கு அவளை வேளைக்கு அனுப்பறேன்னு இருந்துச்சு . வேலை பாக்குற இடம் எப்படி, அங்க இருக்கவங்க இவகிட்டே நல்ல முறையா நடந்துக்கணும்னு யோசிச்சிட்டே இருப்பேன். ஒவ்வொரு முறையும் இவ வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வர வரைக்கும் என் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருப்பேன். ஆனா உங்ககிட்டே தான் அவ வேலை பாக்குறான்னு தெரிஞ்சதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு ” என்றவர் கர்ணன் கையை பற்றிக்கொண்டு “அவளைக் கொஞ்சம் பாத்துக்கோங்க தம்பி , வெளி உலகம் எப்படிப்பட்டது அதை எல்லாம் எப்படி சமாளிச்சு வரணும். யார் நல்லவங்க , யார் கெட்டவங்கனு அவளுக்கு கொஞ்சம் சொல்லிகொடுங்க ” என்றார்.
“அவளுக்கு நான் சொல்லித்தரணுமா?” என்று நினைத்தவன் “சரிங்க ஆன்டி நான் பார்த்துகிறேன் நீங்க கவலைப் படாதீங்க “என்றவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
