தப்பு 43
வாசலில் நின்று இருந்த யுவனைப் பார்த்ததுமே காவேரிக்குத் தெரிந்து விட்டது, அது அவர் உத்திரத்தில் பிறந்த மகன் என்று. ஆனால் அவனை ஆராதனாவுடன் பார்க்கவும் தான் கொஞ்சம் குழப்பமாகிப் போனது அவருக்கு.
அந்த சந்தேகத்தோடு திரும்பி யுகேனைப் பார்க்க..
“உங்க புள்ள தான் ம்மா.. யுவஜிஸ் ” என்றான் யுகேன்.
அதைக் கேட்டதும் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள.. திரும்பி யுவனைப் பார்க்க..
அவனோ அவரை நோக்கி வேகமாக வந்தவன் காவேரியை இருக அணைத்துக்கொண்டு “அம்மா!.. ‘ என்று உருக்கமாக அழைத்தான்.
அவன் அம்மா எண்ணும்போதே அவர் உள்ளம் நிறைந்து போனது. எவ்வளவு வருடம் கழித்து அவன் குரலைக் கேட்கிறார். அந்த குரலில் தன்னை அம்மா என்று அழைத்து எவ்வளவு வருடம் ஆகிப்போனது என்று நினைத்தவருக்கு கண்ணீர் நிறக்காமல் வழிந்து அவன் மார்பை நனைத்தது.
அவரை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்திய யுவன் “அழாதம்மா நீங்க அழறதை பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு ” என்றான் யுவன்.
“எப்படிப்பா என்னால அழாம இருக்க முடியும். உன்னைப் பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு. நீ எங்க இருக்க ? என்ன பண்ணிட்டு இருக்க? நல்லா இருக்கியா? நான் இல்லாம நீ எவ்ளோ கஷ்டப்படுவ இப்படி தினம் தினம் உன்னை பத்தி நினைச்சு நினைச்சு நான் எவ்ளோ கவலைப் பட்டிருக்கேன் தெரியுமா? ” என்று அவன் முகத்தை ஆசையாகத் தழுவினார்.
“எனக்கு உங்க கஷ்டம் எல்லாம் புரியுதும்மா.. நீங்க நினைக்குற அளவுக்கு நான் கஸ்டப்படல படிப்பு இருக்க இடம் எல்லாமே நல்ல வசதியான இடம் தான் அதுல எனக்கு எந்த குறையும் வைக்கல அவர். ஆனா ஒரே ஒரு குறை மட்டும் தான் “என்று தன் கன்னத்தில் இருந்த அவர் கைகளை பற்றிக்கொண்டான்.
அவரோ என்ன என்பது போலப் பார்க்க..
“நீங்க என்கூட இல்லாதது மட்டும் தான் எனக்கு பெரிய குறையே “என்றான்.
“இனி அந்த மாதிரி எதுவும் நடக்காது. நீங்களும், யுவனும் ஒண்ணா ஒரே வீட்ல சந்தோஷமா இருக்கலாம் ” என்று காவேரியின் அருகே வந்த யுகேன் அவர் தோள்களைப் பற்றி ஆறுதல் கூறினான்.
“அவங்க ரெண்டு பேரும் தான் ஒரே வீட்ல இருப்பாங்களா? அப்போ நானு.. ” என்று அருகே வந்த ஆராவோ யுவனின் கையை இழுத்து தன் கைக்குள் கோர்த்துக்கொள்ள..
அவளை புரியாமல் பார்த்த காவேரி “ஆரா பாப்பா , இது என் பையன் இவ்ளோ நாள் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியாம பிரிஞ்சு இருந்தோம். இப்போதான் என் மகனை பாக்குற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. அதுவும் யுகேன் தம்பி மூலமா. ” என்றவர் “என் மகனும் நானும் இனிமேல் ஒண்ணா இறுக்கப் போறோம். நீ எதுக்கு பாப்பா எங்ககூட வந்து இருக்குறேனு சொல்ற.. ‘என்றார் காவேரி.
“ம்ம்.. அம்மாவும், புள்ளையும் எங்க வேணா போங்க.. ஆனா போற அப்போ உங்க மகனோட பொண்டாட்டி என்னையும் , என் வயித்துல உங்க பேரபுள்ளையையும் உங்க கூடவே கூட்டிப் போறேன்னு சொல்லுங்க..” என்று காவேரியைப் பார்த்தார்,
அவள் சொன்னது கேட்டு “என்ன பாப்பா சொல்ற!” என்று அதிர்ந்த காவேரி யுவனையும், அவளையும் மாறி மாறிப் பார்க்க..
“அவனை எதுக்கு பாக்குறீங்க அத்தை. நீங்க இப்படி வாங்க நடந்த எல்லாமே நான் சொல்றேன் உங்களுக்கு “என்று காவேரியின் கையைப் பற்றிக்கொண்டு அருகே இருந்த இருக்கையில் அவரை அமரவைத்த ஆரா. அவர் அருகில் அமர்ந்து யுவனுக்கும், அவளுக்கு அறிமுகமான நாள் முதல் இன்று காலை நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தாள் .
இங்கே யுகேந்திரனை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்த யுவஜிஷ் “பூவிழி யாரோட பொண்ணுன்னு தெரிஞ்சுக்க எனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு ” என்று பூவிழியின் பிறப்பு சான்றிதழை எடுத்து யுகேனிடம் நீட்டினான்.
யுவன் கொடுத்த கவரை வாங்கி வேகமாகப் பிரித்தவன் அதில் போட்டிருந்த விபரங்களை படித்தவன் “அப்போ காவேரிக்கும், கார்த்திகேயன் மாமாவுக்கும் பிறந்த பொண்ணு தான் பூவிழியா ?” என்றான் அதிர்ந்து போய்.
“ம்ம்.. இது தெரிஞ்சா அத்தை வாழ்க்கையில் ஒரு பிரளயமே வரும்னு தான் நம்ம அப்பா இவ்ளோ வருசமா யார்கிட்டேயும் சொல்லாம இப்போவரை மறைச்சு இருந்திருக்கார். இந்த விஷயம் தெரிஞ்சா பர்வதம் அத்தை. அப்பறோம் ஆரா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியல” என்றான் யுவன்.
“இந்த விஷயம் பூவிழிக்குத் தெரிஞ்சா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியலையே..” என்று யுகேன் கவலைப்பட்டான்.
“இப்போ என்ன பண்றது யுகேன் ” என்றான் யுவன் புரியாமல்.
“யோசிக்கணும் டா.. எப்படியும் இந்த விஷயம் ஒருவழியா வெளியே வந்திருக்கு . இதை முழுசா எக்ஸ்போஸ் பண்ணி தானே ஆகணும் ” என்றான்.
“எப்படி?” என்றான் யுவன் சற்று பதற்றமாக.,
“பிளான் பண்ணிட்டு உன்கிட்டே சொல்றேன் “என்றான் யுகேன்.
“ம்ம்ம் சரி வா உள்ள போலாம். அவ என்னைப் பத்தி அம்மாகிட்ட என்ன எல்லாம் வத்தி வெச்சிருக்கான்னு தெரியல ” என்ற யுவன் அறைக்குள் செல்ல..
அவனைப் பார்த்ததும் எழுந்து வந்த காவேரி “என்ன காரியம் டா பண்ணி வெச்சிருக்க.. உனக்கு பலி வாங்க ஆரா பாப்பா தான் கிடைச்சுதா, பாவம் டா அவ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா” என்று அவன் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டு யுவனை அதட்ட..
“யாரு பாவம் இவளா? இவ கூட இருந்த அந்த ஆறு மாசமும் என்னை ஒரு நாள் கூட தூங்க விட்டதே இல்ல.. யுவன் பேபி,, யுவன் பேபின்னு தோன்ற நேரம் எல்லாம் என்னை ஒரு வழி பண்ணிட்டா. நான் இவளை வெச்சு செய்யப் போனேனா இல்ல இவ என்னை ராத்திரி பகல் பார்க்காம வெச்சு செஞ்சாளான்னு தான் எனக்கு சந்தேகமே” என்று நினைத்தவன் “நான் பழிவாங்க தான் அவகூடப் பழகுனேன். அவளை கர்ப்பமாக்கி அவளை அலைய விடணும்னு அவகூட இருந்தா. இவ என்ன எல்லாம் பண்ணி என்னை அவ பின்னாடி அலைய விட்டானு உங்களுக்குத் தான் தெரியாது ” என்றான்.
“அப்படி என்ன டா பண்ணினா ” என்று காவேரி புரியாமல் கேட்க.
“ஐயோ! இவனுக்கு எதை எங்க பேசுறதுனு விவஸ்தை இல்லாம போயிருச்சு ” என்று புலம்பியவள் வேகமாக அவர்கள் இருவருக்கும் நடுவே வந்து நின்றவள் “ஆஹ் அத்தை.. அது அது ஒண்ணுமில்ல.. என்னை இவர் பழிவாங்குறாருனு தெரிஞ்சதும் போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்து உள்ளே தள்ளி கலி தின்ன விட்ருவேன்னு மிரட்டினேன். அதுக்கு அப்பறோம் தான் என் கழுத்துல தாலியே கட்டினார்” என்று எதையோ சொல்லி சமாளித்தாள்.
“நீ அப்படி பன்னிருக்கணும் பாப்பா . அப்போதான் இவனுக்கு தான் பண்ணினது தப்புனு உரைக்கும் ” என்றவர் “பாக்குறான் பாரு திருதிருன்னு . அபப்டியே அவங்கப்பனைக் கொண்டு உரிச்சு வெச்சிருக்கான் “என்று ராஜேந்திரனுக்கு திட்டுவிழ.
அதை அருகே இருந்து கேட்ட யுகேனுக்கு சிரிப்பு தான் வந்தது. நல்லவேளை நான் கொஞ்சம் என் அம்மாஜாடைல இருக்கேன். இல்லேன்னா எனக்கு இதே திட்டு தான் ” என்று நினைத்துக்கொண்டான் யுகேன்.
“சரி விடுங்க அம்மா. அவரைப் பத்தி என்ன பேச்சு வேண்டி இருக்கு ” என்று அவர் கவனத்தை திசை திரும்பியவன் ” இவ எப்போ தான் எழுந்துக்கப் போறா. இந்த தூக்கம் தூங்குறாளே.. ‘என்று பூவிழி அருகே வந்த யுகேன் “பூவிழி.. பூவிழி.. ” என்று அவள் கன்னம் தட்டி மெல்ல எழுப்பிவிட்டான்.
“ம்ம்.. டையர்டா இருக்குங்க , கொஞ்ச நேரம் தூங்குறேனே.. ‘ என்று அவன் கையை இழுத்து மார்போடு சேர்த்து கட்டிக்கொண்டு மீண்டும் உரங்கப் போக,,
அவள் செய்கையைப் பார்த்து மூவரும் தங்களுக்குள் சிரித்துக்கொள்ள. .
“ஹே! குழந்தைக்கு பசிக்கும் டி.. நீ அவனுக்கு பீட் பண்ணனும் மறந்துட்டியா “என்றான்.
குழந்தை என்றதும் பட்டென தூக்கம் கலைந்தவளாக கண்களை விரிக்க.
அவள் கண்ணெதிரே நின்று இருந்த ஆராதனாவைப் பார்த்தவள் “ஐயோ! இவங்க எங்க இங்க “என்று யோசனையாக எழுந்து அமர..
அவள் அருகே வந்த ஆராதனா பூவிழியின் உடல்நலன் குறித்து விஜாரித்தவள் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச..
அவளோ யுவனையும் பார்த்துவிட்டு ,ஆரா கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையும் பார்த்தவள் அவன் அருகே அமர்ந்து இருந்த யுகேனின் சட்டையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள்.
அவள் பக்கம் யுகேன் சாய “எண்ணாக ஆராவுக்கு கல்யாணம் ஆகிருச்சா ? என்கிட்டே நீங்க சொல்லவே இல்ல ” என்றவள் “அது தான் அவ புருஷனா?” என்றாள்.
“ம்ம்..ஆமா இது திடீர் கல்யாணம் அதான் சொல்ல முடியல ” என்று சமாளித்த யுகேன். “உனக்கு நான் அப்பறோம் விபரமா சொல்றேன் “என்றான்.
சற்று நேரத்தில் இருவரும் சொல்லிவிட்டு கிளம்ப.. காவேரி யுவனை பிரிய மனமில்லாமல் கவலையோடு அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அதை கவனித்த யுகேன் “சீக்கிரமே எல்லாரும் ஒண்ணா இருக்கப்போறோம் வருத்தப்படாதிங்க “என்று ஆறுதல் சொன்னான்.
யுவனும் காவேரியை கட்டி அணைத்து “அம்மா நான் போய்ட்டு வரேன் ‘ என்று அங்கிருந்து கிளம்பி இருக்க.
“இவர் என்ன என் அம்மாவை அம்மானு சொல்லி கட்டி எல்லாம் புடிச்சிட்டுப் போறாரு “என்று நினைத்தபடி பிள்ளையை வாங்கி முதல் முறை அவளாக பிள்ளைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்
இங்கே ஆராவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி இருந்த யுவனுக்கு எப்படி அவளிடம் அவள் அப்பா இன்னோரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் என்று சொல்வது என புரியாமல் தவித்தான்.
அவளோ யுகேனின் மகனைப் பார்த்துவிட்டு வந்த சந்தோசத்தில் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்.
“யுவன்! பூவிழி பாப்பா எவ்ளோ கியூட்டா இருக்கான் இல்ல! “என்றவள் . குட்டி கண்ணு.. துளியூண்டு மூக்கு… சின்னூண்டு வாய் அப்பறோம்.. அப்பறோம் அவன் கை கால் எல்லாம் பார்த்தியா எவ்ளோ குட்டி குட்டி விரல்னு..” என்று குதூகலித்தவள் கால்களை மடக்கி சீட்டில் அமர்ந்தவள் கார் ஓடிக்கொண்டிருந்தவனைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள்.
“ஹும்.. ஆமா டி… நமக்கு குழந்தை பொறந்தாலும் இதே போல தான் இருப்பான் ” என்று அவள் குதூகலம் அவனையும் தொற்றிக்கொண்டிருக்க.. கார்த்திகேயன் விஷயத்தை பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று அவளோடு சந்தோசமாக உரையாட ஆரம்பித்தான்.
“யுவா .. எனக்கு எப்போ டா குழந்தை பிறக்கும். எனக்கு அவனை இப்போவே பாக்கணும் போல இருக்கு.. அப்டியே நம்ம பாப்பாவை கையில் தூக்கி வெச்சு கொஞ்சமும் போல இருக்கு டா.. ‘என்று அவன் சட்டையைப் பற்றி இழுத்தாள்.
“ஹே ! இப்போதான் உனக்கு மூணு மாசம் முழுசா முடிஞ்சிருக்கு அதுக்குள்ள எப்படி டி குழந்தை பிறக்கும் . கொஞ்ச நாள் நீ வெய்ட் பண்ணி தானே ஆகணும் ” என்று சிரித்தான்.
“ஹும்.. ஆமா இல்ல..”என்று சோகமானவள் அவன் சட்டைக்காலரை பிடித்துத் திருகுவதும்.. அவன் காது மடலை திருகுவதுமாக இருக்க..
“ஹேய் சும்மா இரு. கார் ஓட்டிட்டு இருக்கேன் இல்ல.. நீ இப்படிப் பண்ணினா என்னால எப்படிக் கவனமா கார் ஓட்ட முடியும் ” என்றான்.
“கவனம் உன்னோட வேளையில் இருக்கனும். நான் என்னவேனா பண்ணுவேன் ” என்றவள் அவன் கூந்தலில் கையை நுழைத்து அவனை சீண்டிக்கொண்டே வந்தாள்,
அவன் சட்டைக்குள் கையை விட்டு அவன் உணர்வுகளை உசுப்பிவிட்டுக்கொண்டிருக்க..
“இவள .. ” என்று அவள் கையை பற்றி தன் கைக்குள் கோர்த்துக் கொண்டவன் “சும்மா வாடி .. வீட்டுக்குப் போய் இதெல்லாம் பாத்துக்கலாம் “என்று அப்போதும் அவள் கைகள் சும்மா இருக்காமல் அவன் கைக்குள் நெளிய..
“இதெல்லம்ன்னா எது? “என்று அவனை தலை சாய்த்துப் பார்த்தவள் “வீடு வரைக்கும் போக எனக்கு பொறுமை இல்லையே.. ” என்று அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
அவள் பேச்சில் அதிர்ந்தவன் திரும்பி ஆராவைப் பார்க்க..
“நைட் நேரம்…. நாம போற ரூட் வேற செம்மையா இருக்கு.. ” என்றவள் “காருக்குள்ள நீயும்.. நானும் தான் இருக்கோம்.. ” என்று தன் கைக்குள் இருந்த அவன் கையை தன் முகத்திற்கு நேரே கொண்டு வந்தவள் அவனைப் பார்த்துக்கொண்டே அவன் கையில் தன் ஈர இதழை அழுத்தமாகப் பதித்து அவன் கையை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.
அவளை அதிர்ந்து பார்த்தவன் உணர்வுகள் தாறுமாறாக ஓடத் துவங்கியது.
