ஆன்லைன் 7
“சார்!.. சார்!” என்று மாறனின் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்தவன் எழுந்து வந்து கதவை திறந்தான்.
அங்கே அவன் அறை முன்பு கைகளை பிசைந்தபடி நின்று இருந்தால் மீரா.
அவளை புருவம் சுருக்கி என்ன? என்பது போல பார்த்தான்.
“ நான் இங்கே இருந்து வேலை பார்க்க ஒத்துக்கிறேன். ஆனா எனக்கு நீங்க தங்கி வேலை பாக்கணும்னா சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்று தயங்கித் தயங்கி அவனிடம் சொன்னாள்.
அவள் என்ன கேட்கப் போகிறாள் என்று ஏற்கனவே கணித்திருந்த மாறன் அதை காட்டிக் கொள்ளாமல் “என்ன கண்டிஷன்ஸ்? “ என்றவன். “ “சம்பளம் நான் தானே கொடுக்கிறேன். கண்டிஷன் நீ போடுற” என்றான் அழுத்தமாக அவளை பார்த்தபடி.
“அ.. அது சம்பளம் நீங்க தான் குடுக்குறீங்க. ஆனா நான் தான் ஈவினிங் ஒரு பார்ட் டைம் ஜாப் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேனே. அது தெரிஞ்சும் என்ன இங்க தங்கி தான் வேலை பார்க்கணும்னு சொல்றீங்க அப்போ அந்த வேலைக்கு எனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது இல்ல” என்றவள்
“எனக்கு இருக்கிற பிரச்சனைக்கு அந்த வேலையை என்னால விட முடியாது சார்” என்றாள் தைரியமாக அவன் முகத்தை நேரே பார்த்து.
“ சரி புரியுது மேல சொல்லு “ என்றான்.
“ நான் எங்க தங்கனும்னா ஈவினிங் 6:00 மணிக்கு மேல நான் வேலை பார்க்க மாட்டேன். காலைல 6 மணி வரைக்கும் நீங்களும் என்னை தொந்தரவு பண்ணக்கூடாது. எனக்கு ஜாப் ஈவினிங் 6 டு மோர்னிங் சிக்ஸ் சோ அந்த டைம்ல நீங்க என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாது” என்றாள்.
“ம்ம்.. அப்பறோம்” என்று கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றபடி அவளைப் பார்த்தான்.
அப்புறம் என்னோட விஷயத்துல நீங்க தலையிடவே கூடாது உங்க வேலையெல்லாம் சரியா நேரத்துக்கு நான் செஞ்சுருவேன். மூணு வேலையும் உங்களுக்கு வேணுங்கிறது உங்களுக்கு புடிச்சத எனக்கு முன்னமே சொல்லிடனும் அதை நான் செஞ்சு வச்சுட்டு என்னோட வேலையை பார்க்க போயிடுவேன். அப்புறம் தினமும் எனக்கு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் வேணும்” என்றாள்.
“தினம் இரண்டு மணி நேரம் பர்மிஷனா? எதுக்கு?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
“ என் அப்பா உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருக்காரு அம்மாவும் அவர் கூட தான் இருக்காங்க. வீட்ல இருக்குறவங்களுக்கு தேவையானது நான் தான் பண்ணனும். அதனால.. தினம் ரெண்டு மணி நேரம் அவங்கள மீட் பண்ண எனக்கு நீங்க பர்மிஷன் கொடுக்கணும்”என்றாள்
“ சரி எடுத்துக்கோ நீ இங்க பார்க்கிற வேலைக்கு பாதிப்பு இல்லாம அந்த ரெண்டு மணி நேரத்தை யூஸ் பண்ணிக்கோ. நீ சொன்னது போல நானும் ஈவினிங்ல இருந்து பிஸியா தான் இருப்பேன். எந்த காரணத்தைக் கொண்டும் என்ன நீ தொந்தரவு பண்ணக்கூடாது. எனக்கு வேணும்கிறது நான் உனக்கு லிஸ்ட் ஆப் பண்ணிடுவேன் அதை சரியா செஞ்சு வைக்கணும். உனக்கு சரியா ஒரு மாசம் தான் டைம் அதுக்குள்ள நீ சமையல்ல ஒழுங்கா செய்ய கத்துக்கிட்டு என்ன குறையும் இல்லாமல் செய்யனும். அப்படி இல்லன்னா அடுத்த நிமிஷமே உன்ன வேலைய விட்டு தூக்கிடுவேன் காட் இட்” என்றான் அதிகார குரலில்.
“ம்ம்.. சரி சார்” என்றாள்.
“ அப்புறமா வேற எதுவும் சொல்லணுமா? கண்டிசன்ஸ் இருக்கா?” என்றான் நக்களாக.
“இல்ல சார்” என்றாள் வேகமாக.
“ அப்புறம் ஏன் இங்கு நிக்கிற?” என்றவன் அறைக்குள் திரும்பி வாட்ச்சில் மணியை பார்க்க அது நாளரை என்று காட்டியது.
“ அது இந்த வாரம் மட்டும் நான் தினமும் வீட்டுக்கு போயிட்டு வரேன். அடுத்த வாரத்தில் இருந்து இங்கேயே இங்கையே வேலை பார்க்கிறேன் சார்” என்றாள் சிறிது தயக்கத்தோடு.
“ஏன்?” என்றான் புருவம் உயர்த்தி.
“ இல்ல நீங்க திடீர்னு என்னை இங்கு தங்கி வேலை பார்க்க சொல்லிட்டீங்க. என் வீட்ல இருக்கிறவங்ககிட்ட எல்லாம் சொல்லணும். அப்புறம் அவங்களுக்கு தேவையானது எல்லாம் நான் செய்து வச்சுட்டு வரணும். அதுக்காக தான்” என்றாள்.
“ ஏன் உன் வீட்டில் நீ போய் தான் எல்லாத்தையும் பாத்துக்கணுமா? வேற ஆளுங்களே கிடையாதா?” என்றான்.
“இல்ல சார் வீட்ட பாத்துக்க அக்கா இருக்கா. தம்பி காலேஜ் போறான்” என்றாள்.
“ அப்புறம் என்ன நீ எங்கேயும் போக வேண்டாம் எங்கே இரு” என்றான்.
“ இல்ல சார் அது வந்து” என்று அவள் பேச வர.
“ம்ப்ச்.. என்ன?” என்றான் நெற்றியை நீவியபடி.
“இன்னைக்கு ஒரு நாள் ஆச்சும் எனக்கு பர்மிஷன் கொடுங்க. நான் போய் அவங்கள எல்லாம் பாத்துட்டு என்னோட துணி எல்லாம் எடுத்துட்டு வரணும் மாத்திக்க வேணுமே” என்றாள் மிகவும் அடக்கமாக.
அவளையே சிறிது நேரம் அமைதியாக பார்த்தவன் “சரி கிளம்பு “ என்றான்.
அவன் போகச்சொன்னதும் அவள் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. ஓகே சார் என்று தலையை ஆட்டிவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்ப..
“டேய் நில்லு!” என்று அவன் அதட்டலாக குரல் கொடுத்தான்.
அப்படியே நின்றவள் திரும்பி அவனை பார்க்க..
“ இங்க வா!” என்று அவளை தன்னருகில் அழைத்தான்.
அவளும் மெல்ல எட்டுக்கள் வைத்து அவனிடம் வர..
அறைக்குள் சென்றவன் திரும்பி கையில் பணத்தை எடுத்து வந்து அவள் முன் நீட்டி “இந்த இதை உன் வீட்டில் இருக்கிறவர்களுக்கு செலவுக்கு கொடுத்திரு” என்று அவள் கையில் திணித்தான்.
“ ஐயோ இல்ல சார் வேணாம். இது வேண்டாம்” என்றாள்.
“ நீங்க வேலைக்கு சேர்ந்து எவ்வளவு நாள் ஆச்சு? “ என்றான்.
“ஒரு பத்து பதினஞ்சு நாள் இருக்கும் சார்” என்றாள் தயங்கிக் கொண்டே.
“ இது நான் ஒன்னும் உனக்கு ஓசில கொடுக்கல நீ இந்த 15 நாள் வேலை பார்த்து இல்லையா அதற்கான சம்பளம் இது வெச்சுக்கோ.. “ என்றவன். “ “நாளையிலிருந்து வீட்டுக்குள்ள இருக்குற எல்லா வேலையும் நீ தான் பாக்குற. மணிய கடைக்கு போயிட்டு வர மத்த வேலைக்கு ஒத்தாசைக்கும் வச்சுக்கோ. என்னோட வேலயிலிருந்து எல்லாமே நீ தான் பாக்கணும்” என்றான்.
“ எல்லா வேலையும் நானே பார்க்கணுமா? இவர் வேலையும் சேர்த்தா!” என்று நினைத்தவள் அதிர்ந்து அவனைப் பார்க்க..
“ என்ன இஷ்டம் இல்லையா? அப்படின்னா இப்பவே கிளம்பிடு உனக்கு சம்பளத்தை அதிகம் பண்ணி தரலாம்ணு நினைச்சேன்” என்றவன் அவள் விழிகளைப் பார்க்க..
அவளோ சம்பள உயர்வு என்றதும் முகம் பிரகாசமாக அவனை பார்த்து “சரி சார்!” என்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டவள் “அப்போ நான் நாளைக்கு வரேன் சார்” என சந்தோசமாக திரும்பி படிகளில் வேகமாக இறங்கி சென்று விட்டாள்.
அவள் கீழே செல்லும் வரை அவளையே பார்த்தவன் கதவை சாற்றி விட்டு உள்ளே வர அவன் போன் அலறியது.
ஆரியன் தான் அழைத்திருந்தான் எடுத்து காதில் வைத்தவன் சொல்லுடா என்றான்.
“ நீ எப்போ ஃப்ரீ டா மச்சான்” என்றான் ஆரியன்.
“ எதுக்கு?” என்றான் மாறன்
“ம்ம்ம்.. எங்க கல்யாணத்துக்கு நீ வந்தே ஆகணுமா.. உன் தங்கச்சி ஆர்டர் போடுறா. நீ இல்லாம கல்யாணம் நடக்காதுன்னு தான் உன்னோட அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு டேட் பிக்ஸ் பண்ண போறோம்” என்றான்.
அதைக் கேட்டு மென்மையாக சிரித்தவன் “நீங்க டேட்ட பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க நான் ஃப்ரீயாகிக்குறேன்”என்றான் இருக்கமாக.
“ சரிடா.. அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்.
“ சும்மா தான் இருக்கேன்” என்றான் மாறன்.
“ அப்போ என் ஆபீஸ் பக்கம் வந்துட்டு போலாமே” என்றான்.
“ஏன் எதுவும் முக்கியமான விஷயமா? “ என்றான் மாறன் மணியை பார்த்துக் கொண்டே..
“ஒன்னும் இல்ல சும்மாதான் ஏன் வரமாட்டியா?” என்றான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. உன்ன நாளைக்கு வந்து ஆபீஸ்ல மீட் பண்ணட்டுமா?” என்றான்.
“ சரி ஓகே நாளைக்கு ஒரு 11:00 ஓ கிளாக் ஆஃபீஸ் வந்துடு மச்சானுக்கு மோதிரம் போடணும் அதுக்கு அளவு எடுக்க?” என்றான் ஆரியன்.
“ம்ம்.. அப்போ மச்சான் சார்பில் உனக்கு கல்யாணத்துக்கு எதுவும் முறை செய்யணும் அதுதானே.. எனக்கு புரிஞ்சுது” என்று சிரித்தான் சட்டை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிய படி
“பரவாயில்லையே இந்த முறை செய்யறது எல்லாம் கூட உனக்கு தெரியுமா?” என்று சிரித்தவன் “புரிஞ்சா சரி கிளம்பி வாடா நாளைக்கு முதல்ல” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் ஆரியன்.
அவனிடம் பேசிவிட்டு வெளியே வர நான் கடைக்கு சென்று இருந்த மணி அப்போதுதான் உள்ளே வந்தார்.
“வீட்டை பார்த்துக்கோங்க நான் ஒரு ஹாப்னவர்ல வந்துடறேன்” என்று கிளம்பி நேராக அவன் வழக்கமாக செல்லும் பாருக்கு சென்றவன்.
அந்த பார் டெண்டரின் முன்பு வந்து அமர்ந்தான்.
மாறனை பார்த்ததும் டேபிளுக்கு அடியில் இருந்த ஒரு கவரை எடுத்து யாரும் பார்க்காத மனமும் தன் கைக்குள் வைத்தான்.
அதை வாங்கிய மாறன் அந்த க்ரீன் ஹாட் மாத்திரையை தன் போக்கெட்டுக்குள் புதைத்தவன் மொபைலை இடத்தில் அவனுக்கு அதற்கான பணத்தை ட்ரான்ஷாக்ஷன் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.
வீட்டிற்குள் வந்ததும் மீரா செய்து வைத்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு இந்த நேராக தன் அறைக்கு சென்று கதவை சாற்றியவன்
விஸ்கியுடன் அந்த மாத்திரையை கலந்து குடித்தவன் தன் டேப்பை ஆன் செய்துவிட்டு லைவ் சாட்டிற்கு அழைப்பு விடுத்தவன் அருகே இருந்த மாஸ்கை எடுத்து முகத்தில் போட்டுக் கொண்டான்.
அவன் அழைப்பு விடுக்கவும் மறுமுனையில் இருந்த மீரா காலை ஆன் செய்துவிட்டு நம்மளும் சோபாவில் அமர்ந்திருக்க..
அவளைப் பார்த்ததும் அவன் சொன்னது போலவே ஆடை அணிந்து வந்திருக்க அதை பார்த்து மெச்சுதளாக புருவத்தை உயர்த்தி இறக்கியவன்.
முறுக்கிய தன் புஜங்களையும் மாத்திரையால் உடலுக்குள் எழுந்த உணர்வுகளையும் கட்டுப்படுத்த முயன்றவன்.
தன் டீ சர்ட்டைக் கழட்டி போட்டுவிட்டு “ரிமூவ் யுவர் டிரஸ்” என்று அவளுக்கு ஆணையிட்டான்.
அவளும் நடுங்கிய கைகளோடு முதல் முறை ஒரு ஆணின் முன்னால் தன் உடலைக் காட்டத் தயாரானவள்.
மெல்ல அவள் அணிந்திருந்த கௌனை கழற்றத் துவங்கி இருந்தவள். அவன் முன் இப்போது வெறும் உள்ளாடை அணிந்து உடலை குறுக்கிக் கொண்டு வெட்கம்.. கூச்சம்.. இயலாமை என அனைத்தும் கலந்த உணர்வோடு நின்றிருந்தாள்.

1 comment
Super super ❤️❤️❤️❤️