News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

 மூர்க்கன் 67

by Sinamika Writes
156 views
A+A-
Reset

 மூர்க்கன் 67

மாலை நிலாவின் பிறந்தநாளுக்காக அந்த வீடே கலை கட்டி இருந்தது. பெரிதாக யாரையும் அவர்கள் கூப்பிடவில்லை.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

ராவணின் மொத்த குடும்பமும் இங்கே வந்திருந்தது ஈஸ்வர், மித்ரா மட்டும் வரவில்லை.

அதே போல நிலாவுடன் வேலை செய்பவர்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தாள்.   

ஆதி, அல்லி, யஷ்வந்திகா என மூவரும் மணிகண்டனின் வீடு முழுவதும் ஓடித்திருந்து விளையாடிக் கொண்டிருக்க..

பெரியவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் , இளங்கிளியின் பின்னாலேயே ராவண் சுற்றித்திரித்திருக்க.. அவனை செல்லமாக கண்டித்தப்படி வேலை செய்து கொண்டிருந்தாள் இளங்கிளி.

“ஏங்க எல்லாரும் இருக்காங்க , எதுக்கு இப்படி என் பின்னாலேயே சுத்திட்டு இருக்கீங்க. கொஞ்ச நேரம் ஹால்ல போய் உக்காந்து எல்லார் கூடவும் பேசிட்டு இருங்க ” என்று அவனை அதட்டியடி தன் உறங்கிக்கொண்டிருந்த அவள் குட்டி மகனை என்ன செய்கிறான் என்று பார்க்க அறைக்குள் நுழைந்தாள்.

அது தான் சமயம் என்று கதவை தாளிட்ட ராவண் வேகமாக வந்து இளங்கிளியை அணைத்துக் கொண்டான்.

“ச்சோ.. என்னங்க இது.. எல்லாரும் வெளிய தான் இருக்காங்க . நீங்க கதவை சாத்தினா அவங்க என்ன நினைப்பாங்க ” என்று சிணுங்கினாள்.

“நினைச்சா நினைக்கட்டும் எனக்கு பிரச்சனையே இல்ல.. நீ இங்க வந்ததுல இருந்து என்னைக் கண்டுகிறதே இல்ல.. நம்ம ரெண்டு பேருக்கும் தனியா இருக்க நேரமே கிடைக்கவே மாட்டேங்குது டி.. நான் என்ன தான் செய்றது” என்றவன் அவள் கழுத்து வளைவில் இருந்து குட்டிக் குட்டி முத்தங்கள் வைத்துக்கொண்டே அவளை தன்னை நோக்கித் திருப்பியவன் இளங்கிளியின் இதழில் தஞ்சம் புகுந்து கொள்ள..

அவளுக்கும் அந்த முத்தம் தேவைப்படவும் ராவணை அணைத்துக்கொண்டு அவனுக்கு பதில் முத்தம் வழங்கினாள்.

அவன் கைகள் அவள் சேலைக்குள் நுழைந்து அத்துமீற..

அவளோ நீண்ட நாள் கழித்து அவள் உற்றவனின் தொடுகையில் உருகிக் கரைந்து போனாள்.

அவள் கண்கள் மோகத்தில் மூடிக்கொள்ள.. இருவரின் மேனியும் அந்த சிறிய தீண்டல்களுக்கே தகிக்கத் துவங்கியது.

இருவரின் நெருக்கத்தைக் கண்டு பொறாமை கொண்ட அவர்களது குட்டி ஜீவன் “ங்கே.. ‘ என்று குரல் கொடுத்து அழத் துவங்க,.

சட்டென ராவணை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டவள் “போங்க நீங்க.. “என்று சிணுங்களாக சொல்லிவிட்டு மகனிடம் சென்றாள்.

ராவணும் அவள் தவிப்பைக் கண்டு சிரித்தவன் “சரி நீ அவனை கவனிச்சிட்டு வா. நான் வெளிய இருக்கேன் “என்று வந்து அவள் இதழில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு வெளியேறி இருந்தான்.

இங்கே வெளியே நிலாவுடன் வேலை செய்த அனைவரும் வந்திருக்க..

“ஹேய்! வாங்க வாங்க!..  “என்று  அவர்களை வரவேற்க வாசலுக்கே சென்றாள்.

“ஹாப்பி பர்த்டே நிலா ” என்று அவள் தோழிகள் வாழ்த்துக்கூற..

அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே அனுப்பி வைத்தவள் அவர்கள் பின்னே செல்லப் போக,,

வீட்டின் வராண்டாவில்  திடீரென  ஒரு கை அவளைப் பிடித்து பலமாக வீட்டிற்கு வெளியே இழுத்தது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அதிர்ந்து போய் “அம்மா!” என்று கத்தப்போனவள் வாயில் தன் வாயை வைத்து அவள் சத்தத்தை அடக்கி இருந்தான் விஜேஷ். கர்ணனின் ஆபிசின் மேனஜர் விஜேஷ். யாருக்கும் தெரியாமல் இருட்டாக மறைந்திருந்த அந்த மூலையில், அவன் தொடுதலின் அதிர்ச்சி அவளுக்குள் மின்னலாய்ப் பாய்ந்தது.

முதலில் பதறிப்போய் விழித்தவள், எதிரே நிற்பது விஜேஷ் என்று தெரிந்ததும் அந்த இறுக்கம் உடனடியாகத் தளர்ந்தது. நிலாவும் அவனுக்கு அவசர முத்தம் வழங்கிவிட்டு அவனைவிட்டுப் பிரிந்தவள்.  கன்னங்கள் சிவக்க, தலை குனிந்து வெட்கத்தோடு அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அவன் கண்கள் அவளை மேலிருந்து கீழாகப் பார்வையால் அளந்தன டிசைனர்  லெகங்கா அணிந்து இருந்தாள். முத்து வண்ண நிறத்தில் அவள் ஆடை இருக்க.. அதில் பச்சை, பிங்க் , தங்க நிறைக்கற்களால் ஜர்தோசி வேலைப்பாடுகள் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த உடை. அவள் பூசினார் போன்ற தேகத்திற்கு கட்சிதமாகப் பொருந்தி  இருந்தது அந்த உடை. உடல் சற்று பருமன் தான் அவள் ஆனாலும் அழகாக இருந்தாள்.

பருத்திருந்தால் அழகாக இருக்க மாட்டார்கள் என்று விதி இருக்கிறதா என்ன. அந்த ஆடைக்கு எடுப்பாக வளையல், தோடு , செயின் என அனைத்தும் கற்கள் பதிக்கப்பட்டு தங்கத்தில் மின்னிக்கொண்டு இருந்தது,

“ஹாப்பி பர்த்டே செல்லக்குட்டி..” என்று முணுமுணுத்தவாறே அவளது கன்னம் பற்றிக் கிள்ளி முத்தம் வைத்தான் விஜேஷ்.

அவன் பார்வையின் உஷ்ணம் அவளை மேலும் நாணத்தில் ஆழ்த்தியது. அவள் அணிந்திருந்த உடை , அவளது தேகத்தின் அழகை அவனுக்குக் காட்டியது. அவசரமாக இழுத்து வந்ததில் கலைந்திருந்த அவள்  உடை கூட, அவனுக்குள் ஒருவித மயக்கத்தையே ஏற்படுத்தியது.

“என்ன இவ இன்னிக்கு இவ்ளோ அழகா இருக்கா? அதுவும் இல்லாம இவ போட்டிருக்க ட்ரஸ்ல இருந்து நகை வரைக்கும் எல்லாமே கோஸ்டலியா இருக்கே ” என்று யோசித்தவன் அவளது அழகை முழுமையாகப் பருகியவன் “ம்ஹும்.. இவ குண்டா இருந்தாலும் அழகா தான் இருக்கா. இவளை அனுபவிக்க எப்போ எனக்கு கொடுத்து வெச்சிருக்கோ தெரியல ” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவன் “என்ன நிலா இன்னிக்கு தேவதை மாதிரி ஜொலிக்குற.. ரொம்ப அழகா இருக்க டி நீ.. இந்த டிரஸ் , ஜ்வெல்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு உனக்கு ” என்று அவளை புகழ்ந்து தள்ளினான்.

“தேங்க்ஸ் டா , டிரஸ் ஜ்வெல்ஸ் எல்லாம் அக்கா வாங்கிக் கொடுத்தாங்க ” என்றவள் அவன் கையைப் பற்றிக்கொண்டு ஆபீஸ்ல வெச்சு உன்கிட்டே தனியா பேசவே முடியல. அந்த மண்டகசாயம் என்னை இன்னிக்கு வேலை வாங்கியே பெண்டை கழட்டிட்டான் . ஹிட்லர் டா அவன் எனக்கு பிறந்த  நாள்னு தெரிஞ்சும் கூட என்னை எப்படி வேலை வாங்குனான் தெரியுமா?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.

“அந்தாளை  பத்தி தான் உனக்குத் தெரியுமே.. புதுசா பிசினஸ் பண்றேன்னு வந்துட்டு. நம்ம உயிரை வாங்குவான் ”  என்று தன் முதலாளி என்றும் பார்க்காமல் கர்ணனை இழிவாகப் பேசினான் விஜேஷ்,

அவன் அப்படிப் பேசவும் நிலாவுக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது. கர்ணன் வேலை சொல்கிறானே என்று தான் அவள் புலம்பினாளே ஒழிய அவனை பற்றி விஜேஷ் போல எல்லாம் அவள் யோசித்ததே இல்லை . இத்தனை நாள் விஜேஷ் கர்ணனைப் பேசியபோது அவளுக்கு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் இன்று ஏனோ அவன் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவன் இளங்கிளியுடன் அண்ணன் என்ற உறவை வளர்த்துக் கொண்டதாள் அவனும் தங்களுக்குள் ஒன்று என்று அவள் மனம் நினைப்பது தான் காரணம். அதை அவளும் அறிந்திருக்கவில்லை.

“சரி விடு.. நீ வா நம்ம ஆபீஸ்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்க ” என்றவள் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு வீட்டிற்குள் செல்ல..

அவனும் சிரித்தபடியே அவள் பின்னால் சென்றான்.

“ஹாய் விஜேஷ், என்ன டா இவ்ளோ லேட்டா வர.. ‘ என்று அவன் ஆபீஸ் மெட் தரன் கையைக் குலுக்கினான்.

“அவளுக்கு கிப்ட் வாங்கப் போனேன் டா அதான் லேட் “என்றான்.

“சரி டா.. வா ” என்று அவனை அழைத்து சென்றான் தரன்.

கேக் வெட்ட எல்லா ஏற்படும் நடந்திருக்க “நிலா அத்தை வாங்க கேக் வெட்டலாம் ” என்று ஆதி தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தவள் கையைப் பற்றிக்கொண்டு தன்னோடு இழுத்தான்.

“ஆதி!.. இரு டா வந்துட்டேன் ” என்று அவன் இழுப்பிற்கு செல்ல,,

“அத்தை என் கையும் பிடிச்சுக்கோ.. ” என்று தேவதையாய் ஜொலித்தவள் கையை பற்றிக்கொண்டு அல்லி வர.. அவளோடு யசுவும் நிலாவின் கையைப் பற்றிக்கொண்டு சென்றாள்.

“எல்லாரும் வந்தாச்சா? கேக்கை வெட்டிரலாமா?” என்று மணிகண்டன் கேட்க..

“அப்பா ஒரு பைவ் மினிட்ஸ் கர்ணன் அண்ணா வந்துட்டு இருக்கார். அவர் வந்ததும் கேக் வெட்டிரலாம் ” என்று கையில் தன் மகனுடன் வெளியே வந்தாள் இளங்கிளி.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ம்ஹும்.. அவன் வரத்துக்காக கேக் வெட்டுறதை நிறுத்தி வெக்கணுமா ” என்று உள்ளுக்குள் கர்ணனை நினைத்து கருவிக்கொண்ட விஜேஷ் நிலாவைப் பார்க்க..

அவளும் அவனை சரியாகப் பார்த்தாள்.

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு மீண்டது.

சொன்னது போல ஐந்து நிமிடத்தில் கர்ணன் உள்ளே நுழைய..

அதுவரை நிலா அருகே நின்று இருந்த ஆதியும் , அல்லியும் அவனைக் கண்டதும் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டார்கள்.

“மாமா!.. கர்ணன் மாமா.. ” என்று அவர்கள் அணைத்துக்கொள்ள..

“ஹே .. ஆதி , அல்லி ” என்று அவனும் அவர்களோடு குழந்தையாக மாறி அணைத்து இருவரையும் கையில் தூக்கிக்கொண்டான்,

அவர்கள் முன்பு யசு இடையில் கையை வைத்து கர்ணனை முறைத்துக்கொண்டு நின்று இருக்க..

“உன்னையும் தூக்கிக்கணுமா ?” என்றான்,

அவளும் ஆம் என்று தலையை ஆட்ட..

“அப்படி இவங்களை பார்த்துக்க நீ கிடைச்சுட்ட . இந்தா இவளையும் தூக்கிக்கோ “என்று யசுவையும் தூக்கி கர்ணனிடம் நீட்ட..

“அதுக்கு என்ன டா பாத்துக்கிட்டா போச்சு “என்று சிரித்தபடி அவர்கள் மூவரையும் சேர்த்து அணைத்து தூக்கிக்கொண்டவன் “உங்க எல்லாருக்கும் மாமா பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன் ” என்றவன் திரும்பி பார்க்க..

அவன் டிரைவர் கை நிறைய பைகளோடு அங்கே வர..

மூவரையும் கீழே இறக்கிவிட்டவன் டிரைவரிடம் இருந்து பைகளை வாங்கி மூவரிடமும் நீட்டியவன் நிலாவிடம் வந்து “சாரி கொஞ்சம் லேட் ஆகிருச்சு ட்ராபிக் ” என்றவன் அவளிடம் கையை நீட்டி “ஹேப்பி பர்த்டே நிலா ‘ என்றான்.

“ம்கூம்.. நான் ஆபீஸ் லேட்டா வந்தா என்னை கிழிச்சு தொங்க போடா வேண்டியது,.  ஆனா இவன் மட்டும் லேட்டா வரலாம் மண்டகசாயம்.. மண்டகசாயம் ” என்று மனதிற்குள் கர்ணனை திட்டியவள் “ஹெஹெ … ” என்று சிரித்துக்கொண்டே “தேங்க்ஸ் சார்” என்று சிரித்தாள்.

அவள் இரண்டு கையையும் பற்றியவன் சிரித்துக்கொண்டே அவளை பார்க்க..

“ஓஹோ.. இந்த சிடுமூஞ்சி ரங்கனுக்கு என்னைப் பார்த்து சிரிக்கவெல்லாம் தெரியுது ” என்று மீண்டும் மனதிற்குள் நக்கலடித்தவள் அவனிடம் இருந்து தன் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்துக்கொண்டாள்.

தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து அவள் முன் நீட்டியவன் “என்னோட கிப்ட் ” என்றான்.

அதை சிறு தயக்கத்தோடு வாங்கியவள் அந்த பெட்டியை திறந்து பார்க்க உள்ளே ஒரு சிறிய வைர மோதிரம் இருந்தது.

அதைப் பார்த்ததும் அதிர்ந்தே விட்டாள் நிலா,

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“சார் என்ன இது டைமென்ட் போல இருக்கு ” என்றாள் .

“டைமென்ட் தான் நிலா ” என்று சிரித்தவன் “பிடிக்கும்னு நம்புறேன் ” என்று சிரித்தான்.

அவள் அதை கையில் வைத்துக்கொண்டு தயங்க. அவள் அருகே வந்த இளங்கிளி “நிலா எதுக்கு யோசிக்குற என் அண்ணா தானே வாங்கிக்கொடுத்த போட்டுக்கோ ” என்றாள்.

“இல்ல அக்கா, இவ்ளோ காஸ்டலியா எல்லாம் வேணாம் ‘ என்று அவள் தயங்க,

“உனக்காக வணங்கி கொடுத்த கிப்ட் வேணாம்னு சொல்லக்கூடாது ” என்றவள் அவளையில் இருந்த மோதிரத்தை வாங்கி அதை அவள் கையில் போட்டு விட்டாள்.

“அக்கா இல்ல.. ‘என்று அவள் தயங்கியபடி  தன் அம்மாவைப் பார்க்க..

அவரோ சகுந்தலாவை பார்த்தார் “நம்ம பையன் தான் சரோ வாங்கிக்கட்டும் விடு ” என்று சொல்லவும் அவரும் சரி என்று நிலாவிடம் தலையை அசைத்தார்.

“சரி சரி நேரம் ஆச்சு கேக் வெட்டலாமா?” என்று கேண்டிலை பற்ற வைத்தாள் நிலா.

அவள் இருபக்கமும் அல்லி, யசு , ஆதி நின்று குதூகலமாக நிலா கேக் வெட்டப் போவதை பார்க்க..

நிலாவும் விஜேசை ஒரு பார்வை பார்த்துவிட்டு கேண்டிலை ஊதி கேக் வெட்டினாள் .

வெட்டிய கேக்கை எடுத்து குழந்தைகள் மூவருக்கும் ஊட்டிவிட.. அவளுக்கு சரோஜினி ஊட்டிவிட்டார்.

வந்திருந்தவர்கள் அவரவர் வாங்கி வந்த பரிசுப்பொருளை கொடுத்து அவளுக்கு வாழ்த்து சொல்ல.. விஜேசும் தான் வாங்கி வந்த பரிசை அவளிடம் நீட்டினான்.

வந்திருந்தவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருக்க அனைவரும் சாப்பிட சென்றனர்.

இங்கே இரவு உணவை ஈஸ்வருக்கு ஊட்டிவிட்டு அவனுடன் சிறிது நேரம் கார்டனில் அமர்ந்து அவன் கோமாவில் இருந்த போது நடந்ததை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் சொல்லி அவன் தற்போது இருக்கும் மனநிலையை மாற்ற நினைத்தாள்.

அறைக்குள் அவன் வீல் சேரை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவள் வீல் சேரை கட்டிலுக்கு கொண்டு வர அவர்கள் வீட்டு வேலையாள் இருவர் வந்து அவனை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு சென்றனர்,

அவர்கள் சென்றதும் கதவை தாளிட்டவள் திரும்பி ஈஸ்வரைப் பார்த்தாள்.

அவனும் சிரித்துக்கொண்டே அவளையே பார்த்திருக்க..

“ஈஸ்வர்!.. ” என்று ஓடி வந்து கட்டிலில் ஏறி அமர்த்தவள் அவன் இதழோடு தன் இதழைப் பொருத்தி இருந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.