News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 45

by Sinamika Writes
34 views
A+A-
Reset

தப்பு 45

“என்ன ஆச்சு இந்த யுகேனுக்கு ஒரு வாரத்துல வரேன்னு சொல்லிட்டு கிளம்பி போனவன் கிட்டத்தட்ட ஒரு மாசமே ஆகப்போகுது. இன்னும் வீட்டுக்கு வரல  போன் பண்ணா இன்னைக்கு வரை நாளைக்கு வரேன்னு சொல்றான் என்று புலம்பிய படி ஹாலில் வந்து அமர்ந்தவர் கஸ்தூரி எனக்கு ஒரு காபி கொண்டு வா என்றார் கிச்சனை நோக்கி குரல் கொடுத்து.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

 என்னம்மா ஆச்சு ஏன் காலையிலேயே புலம்பிட்டு இருக்கீங்க என்று தன் லேசான மேடிட்ட வயிற்றை தடவிக் கொண்டே  அவர் அருகில் வந்து அமர்ந்தாள் ஆராதனா.

வர வர இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது. உன் அப்பா  வீட்டுக்கு ஒழுங்கா வரதில்ல.. இந்த யுகேன் ஒரு வாரத்தில் வரேன்னு கிளம்பி போனவன் ஒரு மாசம் ஆச்சு வீட்டுக்கு வந்து என்று பெருமூச்சுவிட்டவர்.

இன்னுமா அவன் ஊரை சுத்தி பார்க்கிறான் சலிச்சு போகாது.. என்றவர். இதுல உன் மாமா வேற ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். நானா போய் வழிய பேசினாலும் பேச மாட்டேங்குறார். அவர் மகன் தானே அவன் எங்க போனான் எங்க இருக்கான் ஒரு போனாவது பண்ணி கேக்குறாரா பாரு எதுவும் கிடையாது என்றார்.

 அம்மா நான் ஆபீஸ்ல எதுவும் வேலை இருக்கும் நீ எதுக்கு சும்மா புலம்பிட்டே இருக்குற அவங்க அவங்க வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வர போறாங்க தேவையில்லாமல் புலம்பி நீ தான் உன்ன டென்ஷன் பண்ணிக்கிற என்றால் ஆராதனா உண்மையை மறைத்து.

ஆமா டி ஏன் சொல்ல மாட்டே நீ இங்க ஆளாளுக்கு அவங்க இஷ்டத்துக்கு தான் நடந்துக்கிறாங்க. என்ன நடக்குதுன்னு தெரியாம எனக்கு தான் தலை சுத்துது என்று புலம்பினார்.

 இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் யுவனின் கார் வந்து வாசலில் நின்றது.

 கொஞ்ச நேரம் முன்ன தானே ஆபீஸ்க்கு கிளம்பி போனாரு அதுக்குள்ள வந்தாச்சு என யோசித்தபடி எழுந்த ஆரா.

அம்மா அவர் வந்து இருக்காரு இருங்க நான் வரேன் என்று எழுந்து வாசலுக்கு ஓடினாள்.

ஆரா மெல்லப் போடி.. புருஷனை பார்த்ததும் அப்படியே பறந்திருவா.. என்று சிரித்தவர் வாசலைப் பார்க்க..

சடுதியில் அவர் முகம் அதிர்ந்து போனது. சட்டென எழுந்து நின்றவர் “பூவிழி!.. ” என்று அவளை நோக்கி ஓடி வந்தவர் ஆராவை தாண்டி பூவிழியிடம் சென்றார்.

கையில் குழந்தையுடன் பூவிழி நிற்க.. அவள் அருகே காவேரி நின்று இருந்தார்,

வாசலிற்கு வந்த பர்வதம் “பூவிழி என்ன டி இப்படிப் பண்ணிட்டே. வயித்துப்புள்ளைக்காரியா வீட்டை விட்டுப் போய்ட்டியே.. ஏன் டி இப்படிப் பண்ணின.. ” என்று குரல் தழுதழுக்கக் கேட்டார்.

அவர் பாசம் கண்டு பூவிழியின் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொள்ள.. வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு.

அவள் கையில் இருந்த குழந்தையை ஆசையாக வாங்கிக்கொண்டவர் “இவ்ளோ நாள் எங்க இருந்த நீ.. குழந்தை பிறந்திருக்கு அதை கூட எங்க யார்கிட்டேயும் சொல்லல நீ..'” என்று சற்று கோபமும், தட்டலுமாகக் கேட்டார்.

“அத்தை குழந்தை பிறந்து பதினஞ்சு நாள் ஆச்சு ” என்றான் யுவன்.

“ஆமா உங்களுக்கு எப்படி மாப்பிள்ளை தெரியும் பூவிழிக்கு குழந்தை பிறந்தது ” என்றார்.

“என் தங்கச்சிக்கு குழந்தை பிறந்த விஷயம் எனக்கு எப்படி அத்தை தெரியாம இருக்கும் ” என்றான்.

“தங்கச்சியா! ” என்று அவர் புரியாமல் விழிக்க..

“ஆமா அத்தை என்னோட அம்மா , அப்பா யாருன்னு உங்களுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு”என்றான்.

இங்கே வாசலில் பேச்சு சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திரன் வெளியே பூவிழி, கற்பகம் நின்று இருப்பதை பார்த்துவிட்டு திகைத்துப் போனார்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவர் உடல் நடுங்குவது போல ஒரு பிரம்மை ஏற்பட்டது இவர்கள் இருவரையும் பார்த்தவருக்கு, போதாததற்கு யுவன் சொன்ன விஷயம் இப்பொது அவருக்கு நெஞ்சில் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.

அவர் யுவனையே பார்த்திருக்க..

அவனோ அவரை சட்டை செய்யாமல்  பர்வதத்தை பார்த்தவன் “அத்தை இவங்க தான் என் அம்மா ” என்று காவேரியின் அருகே வந்து அவர் தோள்களில் கையைப் போட்டான்.

அவரோ அதிர்ந்து காவேரியைப் பார்த்தவர் “என் வீட்ல வேலை செய்யுற காவேரி மகனா நீங்க !” என்று நெஞ்சில் கையை வைத்துக்கொள்ள..

“ஆமா அத்தை உங்க வீட்டு வேலைக்காரி மகன் தான் இந்த யுவன். இந்த வேலைக்காரியோட மகனை தான் உங்க பொண்ணு காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கா. இப்போ என்னோட குழந்தையும் அவ வயித்துல வளருது” என்றான் பர்வதத்தின் அதிர்ச்சியை ஏளனமாகப் பார்த்து.

அவரும் மற்றவர்கள் போல தான் என்று நினைத்தவன் அவரை விரக்திப் புன்னகையோடு பார்க்க .

அது அவருக்கு புரிந்திருக்க வேண்டும் அவசரமாக தலையை இடவலமாக ஆட்டியவர்.

“ஐயோ! மாப்பிள்ளை நான் அந்த பார்த்ததுல சொல்லல.. பூவிழி காவேரியோட பொண்ணு, இப்போ நீங்களும் காவேரியோட பையன்னு சொன்னா உங்களுக்கு அவ தங்கச்சி ஆகுது. அப்போ உங்க தங்கச்சியை யுகன் கல்யாணம் பண்ணிருக்கானே.. இது எப்படி ? இதை எந்த முறை வெச்சு சொல்றது எனக்கு எதுவும் புரியல.. ஒரே குழப்பமா இருக்கு எனக்கு ” என்றார் .

“அத்தை முழுசா எல்லாம் கேட்டுட்டு அப்பறோம் மொத்தமா குழம்பிக்கலாம் ” என்றவன் “என்னோட அம்மா, தங்கச்சி பத்தி சொன்னேன். இன்னும் என் அப்பாவைப் பத்தி நான் சொல்லவே இல்லையே.. ” என்றான்.

அவரோ கேள்வியாக அவனையே பார்க்க..

“அதோ உங்க பின்னாடி எதுமே தெரியாதவர் போல இங்க நடக்குறதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்ற மாதிரி நிக்குறாரே.. உங்க அண்ணன் ராஜேந்திரன். அவரைக் கேளுங்க என்னோட அப்பா யாருன்னு சொல்லுவார் ” என்று ராஜேந்திரனை சரியாக இதற்குள் இழுத்து விட்டிருந்தான்.

ஏற்கனவே செய்வதறியாது நின்று இருந்த ராஜேந்திரனோ இப்பொது வசமாக தான் மாட்டிக்கொண்டது போல உணர்ந்தவர் பதட்டமாக பருவதத்தைப் பார்க்க..

அவரும் திரும்பி ராஜேந்திரனைப் பார்த்து “அண்ணா! என்ன அண்ணா மாப்பிள்ளை உங்ககிட்டே கேக்க சொல்றாரு. அப்போ உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் முன்னமே தெரியுமா? தெரிஞ்சு தான் நம்ம யுகேனுக்கும், பூவிழிக்கும் கல்யாணம் பண்ணி வெச்சீங்களா? யுகேன் உங்களுக்கு எப்படி மகனோ முறைப்படி பார்த்தா என் மாப்பிள்ளையும் உங்களுக்கு மகன் முறை தானே. அப்போ பூ.. பூவிழி!.. ” என்று அவர் பேசப் பேச ப்ரெஷர் தலைக்கு ஏறியது அவருக்கு.

பூவிழிக்கோ மிகவும் வருத்தமாக இருந்தது. அவளிடம் அனைத்து உண்மையையும் கூறி தான் யுகேன் இவளை முன்னாள் அனுப்பி இருந்தான். ராஜேந்திரன் வாயைத் திறந்து பேசும் வரை பூவிழியை பேசவே கூடாது என்று சொல்லி இருந்தான். அந்த காரணத்திற்க்காக பர்வதத்திடம் உண்மையை உடனே சொல்லாமல் அமைதி காத்துக்கொண்டிருந்தாள்.

கண்களை இருட்டிக்கொண்டு வருவது போல பர்வதம் நிற்க..

அவர் முன் உண்மையை சொல்ல முடியாமல் தடுமாரியபடி நின்றிருந்தார்,

காவேரியின் நிலையோ அதற்கும் மேல் இருந்தது,  தனக்கும், ராஜேந்திரனுக்குமான உறவை நஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொல்லவேண்டும் போல அவருக்கு இருந்தது.

“நான் இவரோட பொண்டாட்டி. எனக்கும் இவருக்கும் பிறந்தவன் தான் யுவன் என்னோட மகன் ” என்று சொல்லி அழவேண்டும் போல இருந்தது. ஆனால் அவரால் முடியவில்லை. அவருக்கு வலித்தது ராஜேந்திரனின் மௌனம். இத்தனை வருடங்களாக தன்னை ஆட்டிப்படைத்து ஒரு பொம்மை போல வைத்திருந்தது போல அவருக்கு வலிக்கவில்லை. இன்று வலித்தது. இத்தனை நடந்த பின்னும் இன்னமும் வாய் திறக்காமல் இருக்கும் ராஜேந்திரனை பார்க்க பார்க்க அவர் இதயத்தை இரண்டாகப் பிளப்பது போல வலித்தது அவருக்கு.

கலங்கிய விழிகளோடு ராஜேந்திரனையே அவர் பார்த்துக்கொண்டிருக்க..

ராஜேந்திரனோ பர்வதம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தவர் காவேரியைப் பார்த்தார்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவரையே பார்த்துக்கொண்டிருந்த காவேரி என்ன ஆனாலும் ராஜேந்திரன் வாயில் இருந்து உண்மை வராது என்று தெரிந்துவிட,.

வேக வேகமாக வாசலைக் கடந்து வீட்டிற்குள் வந்தவர் ராஜேந்திரன் முன்பு வந்து நிற்க..

ராஜேந்திரன் காவேரியை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் தலையை கவிழ்த்துக்கொள்ள..

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த பர்வதத்திற்கு ஏதோ புரிவது போல தோன்றியது,

“இல்ல.. இல்ல.. அப்படி மட்டும் இருக்கவே கூடாது ” கத்தினார்.

அவர் கத்துவதைப் பார்த்து ஆராவும், யுவனும் வேகமாக அவரிடம் வர..

“அம்மா!.. டென்ஷன் ஆகாத உனக்கு உடம்புக்கு ஏதாவது வந்துரப் போகுது” என்று பதறினாள் ஆரா.

“எப்படி டி.. எப்படி என்னால டென்ஷன் ஆகாம இருக்க முடியும். ஒரு வேலை நான் நினைச்சது தான் இங்க நடந்திருக்குன்னா.. அப்போ என் யுகேன் என் யுகேன் வாழ்க்கை இப்படி ஒரு சிக்கல்ல வந்து முடியணுமா? பாவம் டி அவன் தாயில்லாப் பிள்ளை.. அவன் அம்மாவுக்காக எவ்ளோ ஏக்கப்பட்டிருக்கான் தெரியுமா? எவ்ளோ அழுத்திருக்கான்னு தெரியுமா? அது உங்க யாருக்கும் தெரியாது. எனக்கு மட்டும் தான் அவனைப் பத்தி தெரியும். ” என்றவர்

“அண்ணா நீ தான் மாப்பிள்ளையோட அப்பாவா? காவேரிக்கு உனக்கும் பிறந்தவர் தான் மாப்பிள்ளையா?” என்று ராஜேந்திரன் முன்பு வந்து நின்றார்.

அப்போதும் அவர் மௌனம் காக்க..

இதற்கு மேலும் பொறுக்க முடியாத காவேரி ராஜேந்திரன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

இதை அங்கிருந்த யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“காவேரி! ” என்று பர்வதம் கத்த..

“பர்வதம் நீ இதுல தலையிடாத , இந்த மனுஷன் பண்ணுனதை எல்லாம் இவ்ளோ வருஷம் பொறுத்துகிட்டு தான் இருந்தேன். ஆனா இவ்ளோ நடந்த பிறகும் இன்னும் வரையே அவர் தொறக்ககாம இப்படி கல்லு மாரி நின்னுட்டு இருக்கார். இது உனக்கு சரின்னு படுதா?” என்றார் உரிமையாக பர்வதத்தின் பெயரை சொல்லி கூப்பிட்டு நியாயம் கேட்டார்.

காவேரியின் செயலிலும், பேச்சிலும் இருந்த துணிவை வைத்தே மற்றவர்கள் யூகித்து சரி என்று ஊர்ஜிதமாகி இருந்தது.

சமையல் கட்டில் பர்வதத்திற்கு காபி போட்டுக்கொண்டிருந்த கஸ்தூரி இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவர் “அப்போ காவேரி அக்கா புருஷன் நம்ம ராஜேந்திரன் சாரா  ” என்று நினைத்தவள் “ஆத்தி… இது என்ன புதுசா இருக்கு. அப்போ பூவிழி இவருக்கும் பொண்ணு முறை தானே வேணும். இவர் பொண்ணுன்னு  தெரிஞ்சும் எப்படி நம்ம யுகேன் ஐயாவுக்கு உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணி வெச்சாரு ” என்று எல்லாம் அவள் சிந்தையில் பலவாறாக ஓடியது.

“காவேரி.. அது.. அது வந்து “என்று ராஜேந்திரன் தடுமாற.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.