மூர்க்கன் 72
மறுநாள் காலை அனைவரும் கிளம்பி குலதெய்வம் கோவிலுக்கு சென்று இருக்க..
அவர்கள் சென்ற ஒரு மணி நேரத்தில் குளித்து உடை மாற்றி ரெடியான நிலா முதல் வேலையாக செய்ததுஹ் விஜேஷிற்கு அழைத்து வீட்டில் இருப்பவர்கள் கிளம்பிவிட்டதை பற்றி விபரம் சொன்னாள்,
“உன் வீட்டு முனையிலே தான் நிக்குறேன் நிலா அஞ்சு நிமிஷம் நான் அங்க இருப்பேன் “என்று தன் பிளான் நிறைவேறுவதை எண்ணி சந்தோசமாக கிளம்பி நிலாவின் வீட்டிற்கு சென்றான் விஜேஷ்.
இங்கே ஒரே வேனில் மொத்த குடும்பமும் ரத்தினவேலு , கனகாவின் ஊருக்கு சென்று இருந்தனர். வரதராஜனின் குலதெய்வம் பரிமளாவின் ஊரில் இருப்பதால் இவர்கள் வீட்டிலேயே தாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ராவண் . இளங்கிளி, ராஜ், கயல், ஈஸ்வர் மித்ரா என ஜோடிகள் மூவரும் ஜோடி ஜோடியாக அமர்ந்து இருக்க..
வரதராஜன் மடியில் யஷ்வந்திகா உறங்கிக்கொண்டிருக்க..
பரிமளாவுடன் ஆதி , அல்லி இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
பார்வதியம், கமலாவும் ஆர்யாவை பார்த்துக் கொள்வதாக சொல்லி குழந்தையை அவர்கள் இருவரும் வைத்திருந்தனர்,.
வேல்ராஜ் , இளங்கிளியின் தந்தை மணிகண்டன் ஒன்றாக அமர்ந்து இருக்க..
விசாலாட்சியும், சரோஜினியும் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.
“இந்த நிலா வீட்டுக்கு தூரம் ஆகாம இருந்திருந்தா அவளும் இந்த நேரம் நம்ம கூட கிளம்பி வந்திருப்பா , கோவில் போற நேரம் பார்த்தா தண்ணி ஊத்தணும் ” என்று கவலைப் போட்டுக்கொண்டார் சரோஜினி.
“அது என்ன நம்ம கையிலையா இருக்கு . விடு சரோ ” என்றார் விசாலாட்சி.
“அது எல்லாம் எனக்கு கவலை இல்ல அண்ணி, அவளை தனியா விட்டுட்டு வந்துட்டோம்னு தான் எனக்கு வருத்தமா இருக்கு ” என்று புலம்பினார் சரோஜினி.
“நீ எதுக்கு புலம்புர.. எப்படியும் அவ காலையில கிளம்பி ஆபீஸ் போய்டுவா. திரும்ப ராத்திரி தானே வீட்டுக்கு வருவா. நான் வேணா என் மகன்கிட்ட சொல்லி நிலாவுக்கு துணைக்கு இருக்க சொல்றேன் ” என்றார் அவர்கள் பின்னிருக்கையில் அமர்ந்து இருந்த கர்ணனின் அம்மா நளினி.
“அடேயப்பா! இன்னும் பொண்ணு கொடுக்றேன்னு எங்க அத்தை சொல்லவே இல்ல. அதுக்குள்ள உங்க மகனை துணைக்கு அனுப்பறேன்னு சொல்லி எங்க பொண்ணை வளைச்சு போடப் பாக்குறீங்களா?” என்றாள் கயல் .
தனக்கு வலது பக்க இருக்கையில் அமர்ந்து இருந்தவளை திரும்பி பார்த்த நளினி.
“நான் ஏன் உங்க வீட்டுப் பொண்ணை வளைச்சுப் போட சொல்றேன். என் மகன் ராஜா மாதிரி இருக்கான். உங்க பொண்ணு என் பையனை அவ கைக்குள்ள வலைலச்சு போடாம இருந்தா சரி ” என்று அவரும் கயலை வம்புக்கு இழுக்க..
“எங்க பொண்ணு ஒன்னும் அப்படி கிடையாது. ” என்றாள் கயல்.,
“என் மகனும் அப்படி பட்டவன் இல்ல “என்றார் நளினியும் விடாமல்.
“ஏய் கயல் சும்மா இரு டி.. எதுக்கு வாய்க்கு வாய் பேசி வம்பிழுக்குற.. ” என்று அவளை அதட்டினான் ராஜ்.
“அட விடுங்க தம்பி. இப்படி வாயாடி மாதிரி மல்லுக்கு நின்னு பேசுற போல பொண்ணு தானே நிலாவும் . இவகிட்டே பேசி ஜெயிச்சுட்டாளே என் வீட்டுக்கு வரப்போற மருமகளை நான் சமாளிச்சிருவேன் ” என்று சிரித்தார் நளினி.
“அதுவும் சரி தான் ” என்று சிரித்த ராஜ் கயலின் கையைப் பற்றி தன பக்கம் திருப்பி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து சிரிக்க..
“என்ன டா உன் முழியே சரி இல்லையே ” என்றாள்.
“ம்ம்.. ஆமா டி.. நேத்து நைட் வேற கோவிலுக்குப் போகணும்னு உன் பக்கமே என்னை விடலையே நீ..” என்றவன். “இந்த சேலையில் வேற நீ ரொம்ப அழகா இருக்க டி.. ” என்றான்.
“கோவில் போய் பொங்கல் வெச்சு பூஜை முடியுற வர உனக்கு எந்த வேலையும் இல்ல புரிஞ்சுதா “என்றவள் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்கள் மூடி தூங்குவது போல பாவனை செய்தாள்,
“ஐயோ அதுக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு மேல ஆகுமே , முப்பது நாளுல ரெண்டு மூணு நாள் இதுலையே போய்டும் போல. ” என்று நினைத்து பெருமுச்சுவிட்டான் ராஜ்.
“சரோஜினி என் பையனுக்கு உன் பொண்ணை கொடுக்கிறியோ இல்லையோ அதெல்லாம் அப்பறோம் பேசிக்கலாம். நான் என் பையன்கிட்டே சொல்லி நிலாவை பார்த்துக்க சொல்றேன் போதுமா?” என்றார் நளினி.
“உங்க பையனுக்கு என் பொண்ணை கல்யாணம் செய்து கொடுக்க எனக்கு சம்மதம் தான். ஆனா இன்னும் இதை பத்தி என் பொண்ணுகிட்ட பேசல,..” என்றார்.
“அதுக்கு என்ன அவசரம் சரோ. ஊருக்கு போயிடு வந்துட்டு இது பத்தி பேசிக்கலாம் “என்றவர் கர்ணனுக்கு நிலாவை கவனித்துக்கொள்ளும்படி அவளுக்கு உடல்நிலை சரி இல்லை என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.
இவர்கள் பயணம் இங்கே இருக்க..
காலையில் ஜிம்மிற்கு போய்விட்டு கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்த கர்ணனின் மொபைலில் மெசேஜ் சவுண்ட் கேட்க அதை எடுத்துக் பார்த்தவன் நளினியின் மெசேஜை கண்டவன் சிரித்துக்கொண்டே அதை திறந்து பார்த்தான்.
நிலாவின் உடல் நிலை சரி இல்லை என்று மட்டும் போட்டு அவளை கவனித்துக்கொள்ள நளினி அனுப்பி இருந்த மெசேஜை படித்தவன் “அவளுக்கு உடம்பு முடியலையா ?” என்று நினைக்கையில் ஏனோ அவன் மனதில் இப்போதே நிலாவின் அருகே இருக்க வேண்டும் போல தோன்றியது . இருந்தும் அதை ஓரம் தள்ளி வைத்தவன்.
அவன் அம்மாவிடம் பார்த்துக்கொள்வதாக மெசேஜ் அனுப்பிவிட்டு நிலாவிற்கு கால் செய்திருந்தான்.
அவளுக்கு கால் போய்க்கொண்டிருக்க.. முழு ரிங் போய் கட் ஆனது.
“உடம்பு சரி இல்லேனு அம்மா சொன்னாங்களே. ஒருவேளை டேப்லெட் போட்டு தூங்கிட்டு இருப்பாளோ.. ‘என்று நினைத்தவன் “சரி அவ ஆபீஸ் வருவா இல்ல அப்போ பேசிக்கலாம் ” என்று குளிக்க சென்றுவிட்டான்.
கர்ணன் இன்னோரு முறை அவளுக்கு போன் செய்திருந்தாள் ஒருவேளை நிலாவை காப்பாற்றி இருக்கலாமோ என்னவோ . அவள் விதி கர்ணன் நிலாவுக்கு செய்த போனை அவள் வீட்டில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த விஜேஷ் தான் பார்த்தான்.
போன் அடிக்கவும் திரும்பி சோபாவில் இருந்த அவள் போனை எடுத்துப் பார்த்தான்.
அதில் பாஸ் என்று சேவ் செய்திருந்த நம்பரைப் பார்த்ததும் புரிந்து போனது அவனுக்கு .
கிச்சனில் அவனுக்காக சமைத்துக்கொண்டிருந்த நிலா போன் சத்தம் கேட்டதும் “யாரு விஜேஷ் கால் பண்ணி இருக்கா? என் அம்மாவா?” என்று உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தாள்.
அது ப்ரோமோஷன் கால் தான் நிலா என்று குரல் கொடுத்தவன் போனை கட் செய்து அதை சுவிட்ச் ஆப் செய்திருந்தான்.
இங்கே சமைத்து முடித்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்தபடி டிவி பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் நிலாவும், விஜேஸும்.
சாப்பிட்டு முடித்து இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே பாத்திரங்களை உள்ளே எடுத்து வைத்துவிட்டு வர,,
“நிலா உன் கையாள சாப்பிட்டது செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு டி.. ‘ என்று அவள் கையைப் பற்றி முத்தம் வைத்தவன் அப்டியே அவள் இதழில் இதழ் பதிக்க வர..
“விஜேஷ் நோ.. இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறோம் தான் “என்று அவனை விட்டு விலகி தள்ளி நின்றான்.
“ம்ஹும்.. இவகிட்டே இப்படி எல்லாம் மூவ் பண்ணினா வேலை நடக்காது. இவளை மேட்டர் முடிச்சிட்டு தூக்கிப் போடலாம்னு பார்த்தா இவ என்ன கல்யாணம் , கருப்புமாதினு பேசிட்டு இருக்கா ” என்று நினைத்தவன்.
“இவளோட பெர்மிஷனோட என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சா இவ அதற்கு எல்லாம் ஒத்து வரைப்போல தெரியல.. பேசாம நம்ம வேலையை காட்டிய வேண்டியது தான் ” என்றவன்.
“ஹே சாரி டி.. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் ” என்று விலகி நின்றவன்.
“எனக்கு இவ்ளோ டேஸ்ட்டா சாப்பிடு செய்து கொடுத்த உனக்கு என் கையாலேயே நான் காபி போட்டுக் கொடுக்கிறேன் . ஓகேவா ” என்றான்.
நிலாவோ விஜேஷின் சூழ்ச்சி தெரியாமல் மிகவும் சந்தோசப்பட்டவள் “ஓகே விஜேஷ். உனக்கு காபி எல்லாம் போடத்தெரியுமா?” என்றாள் விழிகள் விரிய,,
“ம்ம்.. விட்டா உன்னையவே.. ‘ என்று நினைத்தவன் “அதெல்லாம் சூப்பரா போடுவேன் நிலா ” என்றவன் “நீ டிவி பாரு நான் போய் நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து காபி போட்டுட்டு வரேன் ” என்று கிச்சனுக்கு செல்ல,,
அவளும் நடக்கப்போகும் விளைவு தன் வாழ்க்கையையே புரட்டிபோடப் போகிறது என்று அறியாமல் டிவி பார்க்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் கையில் காபியுடன் வந்த விஜேஷ் நிலாவிடம் கொடுத்து “குடிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு ஹானஷ்டா சொல்லணும் , ஏன்னா நான் இப்போதான் காபியே போட்டிருக்கேன் “என்றான்.
“அடப்பாவி என்னவோ காபி போட்டு பழக்கம் ஆனவன் மாதிரி இல்ல நீ பேசிட்டு இருக்க?” என்றவள் அவனிடம் இருந்து காபியை வாங்கி ஒரு மிடறு குடித்துப் பார்த்தவள் மௌனமாக கண்மூடி அதன் ருசியை நாவில் வைத்து சுவைத்தவள் “சுகர் எல்லாம் ஓகே தான். ஆனா.. கொஞ்சம் கசக்குது . காபி தூள் அதிகம் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“காபி தூள் அதிகமா போடல பப்லி மாஸ், மாத்திரையோட அளவை தான் நான் அதிகம் போட்டிருக்கேன், இன்னும் ரெண்டு நாளைக்கு நீ போதையிலேயே தான் இறுக்கப் போற.. இன்னிக்கு முழுக்க.. நான்,. நாளைக்கு என்னோட பிரெண்ட்ஸ் ” என்று மனதிற்குள் வன்மம் கக்கப் பேசியவன் “நெக்ஸ்ட் டைம் சரி பண்ணிடலாம் ” என்று தனக்காக போட்டு வைத்திருந்த காபியை அவள் அருகே அமர்ந்து டிவி பார்த்தபடியே குடிக்க ஆரம்பித்தான்.
காபியை முழுவதும் குடித்து முடிக்கும் வேலையில் அவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர,..
“வி.. விஜேஷ்.. எனக்… தலை சுத்துற போல.. ” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் கையில் இருந்த காபி கப் நழுவி தரையில் விழுந்து உடைந்தது.
அவள் அரை மயக்கத்தில் உடலில் வலுவிழந்து சோபாவில் சரிந்திருக்க..
அவளை பார்த்து சிரித்துக்கொண்டே எழுந்தவன் நிலாவை இழுத்து தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தவன் அவளை அங்கிருந்த அறைக்குள் அழைத்து சென்றான் தன் காரியத்தை முடிக்க..
