அயோக்கியன் 39
“ராக்கி இதை சும்மா விடக் கூடாது. இவனுங்களை போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி கட்டி லாடம் கட்ட சொல்லணும்” என்று வேலு உணர்ச்சி போங்க பேசிக்கொண்டிருந்தான்.
ராக்கியையும், ராகவையும் ஒரே நேரத்தில் கொள்ள திட்டம் போட்ட அந்த கூட்டம் யார்? அவர்கள் எதற்காக இதை செய்கிறார்கள் என்று நேரடியாக தெரியவில்லை என்றாலும் இதற்கெல்லாம் கரணம் எதிர்க்கட்சி தலைவர் பரமசிவனும், அவரோடு சேர்ந்து இந்த வேலையை எல்லாம் பார்ப்பது உதயகிரிஷ்ணன் தன என்பதும் அனைவரும் அறிந்ததே இருந்தும் இதை உறுதி செய்யவே ராக்கியை தாக்கிய அந்த இரண்டு பேரையும் பிடித்து தன் குடோனில் அடைத்து வைத்திருந்தான் ராக்கி.
“முட்டிக்கு முட்டி தட்டினா இவனுங்க உண்மையை சொல்லிருவானுங்கன்னு நீ நினைக்குறியா? அதான் இல்ல. இவனுங்களை நம்ம ஸ்டைல்ல தான் டீல் பண்ணனும் ” என்றவன் மாரீஸ் .. என்று உறக்கக் கத்த..
“இதோ வந்துட்டேன் ராக்கி!.. ‘ என்று இரண்டு கையில் சூடான பழுக்க காய்ச்சிய கம்பியை எடுத்து வந்தான்.
“சொல்லு ராக்கி இவன் வாயையவே தொறக்கலையா? அப்போ இவன் நமக்குத் தேவையே இல்ல.. இவன் வாயிலையே இந்த கம்பியை சொருகிறட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே கட்டி வைத்திருந்த ஒருவனின் அருகே வந்த மாரீஸ் அந்த கம்பியை அவன் முன் காட்ட..
“ஏய் என்ன பண்ற.. வாயில சூடு வெக்குறேன்னு சொல்ற.. வேணாம்.. வேணாம்.. ‘ என்று பதறினான் அவன்.
“நீ தான் வாயவே திறக்க மாட்டெங்குறியே.. ” என்றவன் வேணும்னா உன்னோட தோஸ்து மேல இதை வெச்சு எப்படி இருக்குனு ட்ரையல் காட்டட்டுமா?” என்று அவன் அருகே இருந்தவன் பக்கம் அந்த சூடான கம்பியைத் திருப்ப..
“அவன் உண்மையை சொல்ல எனக்கு ஏன் சூடு வெக்குறிங்க.. ” என்று அந்த தணல் கக்கும் பழுக்க காய்ச்சிய கம்பியைப் பார்த்தவன் “நானே சொல்லிடறேன் என்னை எதுவும் செய்துராதிங்க ” என்று மற்றொருவன் வலிக்கு வர,,
“அப்படி வாங்கடா வழிக்கு ” என்ற மாரீசன் “எங்க ஒன்னுவிடாம கக்கு பாப்போம்” என்று அந்த கம்பியை அவன் வாய்க்கு முன் நீட்ட.
அதைக் கண்டு அரண்டவன் “சொல்லிடறேன்.. சொல்லிடறேன்.. ” என்று அவர்களிடம் அனைத்தையும் கூறி முடித்தான்,
அவன் சொல்வதை ஒன்றுவிடாமல் கேமராவில் ரெகார்ட் செய்து கொண்டான் வேலு.
“இப்போ இவங்களை என்ன பண்ணலாம் ராக்கி ” என்றான் மாரீசன்.
“கொஞ்ச நாள் நம்ம கஸ்டடியிலேயே இருக்கட்டும். இவனுங்க சொன்னது எல்லாம் உண்மையா என்னனு தெரிஞ்சுது அப்பறோம் இவனுங்களை வெளிய விடுறதைப் பத்தி யோசிக்கலாம் ” என்றவன் வேலுவுடன் அங்கிருந்து கட்சி ஆபிஸிற்கு கிளம்பி இருந்தான்.
ஒருவார ஓய்வுக்கு பின் ராகவ் ஸ்டேஷனுக்கு கிளம்ப. அவனை வெளியே அனுப்பவே மனமில்லாமல் தவித்தாள் ஓவியா.
முகத்தை உம்மென்று வைத்திருந்தவள் முன்னே வந்தவன் “இப்போ எதுக்கு டி நீ முகத்தை தூக்கி வெச்சிருக்க.. கொஞ்சம் சிரிச்சா தான் என்ன ” என்று அவள் முகம் பற்றி தன்னைப் பார்க்குமாறு நிமிர்த்தினான்.
“ராகவ் எனக்கு பயமா இருக்கு டா, உன்னை மறுபடி யாரும் எதுவும் செய்ய வந்திருவாங்களோ ” என்று பயந்தாள் ஓவியா,
“இங்க பாரு ஓவி, நான் பாக்குறது சாதாரண வேலை இல்ல. தினமும் பல கல்ப்ரிட்ஸை பார்க்குறேன். அதனால எனக்கு இந்த மாதிரி பிரச்சனை வரது எல்லாம் சகஜம் தான். அதுக்காக வேலைக்கே போகாம வீட்ல இருக்கணும்னா எப்படி டி.. ‘ என்றான்.
“நீ சொல்றது சரி தான் ,ஆனா உனக்கு எதுவும் ஆயிடுமோனு பயமா இருக்கு ” என்று அவள் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள ராகவ்வைப் பார்த்தாள்.
அவள் பயம் நியாயமானதே அதுவும் கர்ப்பமாக இருக்கும் இந்த வேளையில் இந்த பயம் நிச்சயம் அவளை பாதிக்கும் என்று நினைத்தவன் அவள் அருகே கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டவன் “இங்க பாரு உன்னோட பயம் புரியுது. ஆனா என்னோட வேலை அப்படி டி.. போலீசுக்காரனோட பொண்டாட்டியா இருந்துட்டு இப்படி நீ பயப்படலாமா ? சொல்லு ” என்றான்,.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது , நீ வேலைக்குப் போக வேணாம். நான் வேணா என் அண்ணாக்கிட்டே சொல்லி உனக்கு வேற வேலை வாங்கித்தரேன் . நீ இந்த வேலையை விட்டுடு ” என்றாள்.
அவள் அப்படி சொன்னதும் சுல்லென்று கோபம் அவனுக்கு தலைக்கு ஏறியது, விருட்டென எழுந்தவன் “நீ ஏதோ டென்ஷன்ல பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். உன்கிட்டே இதுக்கு மேல பேசினா நான் எதுவும் உன்னை ஹர்ட் பண்ற போல பேசிருவேன் ” என்றவன் தன் தொப்பியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு கீழே சென்றான்.
செல்லும் அவனையே அழுதுகொண்டே பார்த்தவள் “நான் டென்ஷன்ல பேசல ராகவ், உனக்கு ஏதும் ஆகிடக்கூடாது . அதுக்கு நீ இந்த வேலையில் இருக்கக்கூடாது ‘ என்று அவள் தனக்கு தானே பேசிக்கொண்டாள்.
கீழே வந்த ராகவை கண்டதும் “எங்க டா நீ மட்டும் வர. .அவ எங்க?” என்றார் சோபனா.
“அவ மேல இருக்கா ‘ என்றவன் ஸ்டேஷனுக்குக் கிளம்ப..
“டேய் சாப்பிடாம போற.. ” என்று அவன் பின்னால் சென்றார் சோபனா.
“எனக்கு வேணாம் .” என்றவன் அவர் பின்னே வந்து நின்ற ஓவியாவை பார்த்து முறைத்துவிட்டு “அதோ உங்க மருமகளே வந்துட்டா அவளுக்கு சாப்பாடு போடுங்க. அப்படியே அவளுக்கு புத்திமதி சொல்லி புரியவைங்க.. ” என்று கடுகடுத்துக்கொண்டே அவனுக்காக காத்திருந்த ஜீப்பில் ஏறி சென்றுவிட,..
“என்ன டி ஆச்சு அவனுக்கு . ரெண்டு பேருக்கும் எதுவும் சண்டையா? என்ன?” என்றார்.
“அதெல்லாம் எதுவுமில்லை அத்தை , உங்க புள்ளைக்கு என் மேல கோபம் “என்று அவர் பின்னே சென்றாள்.
“அவனுக்கு ஏன் டி உன் மேல கோபம் ” என்றார் சோபனா புரியாமல்.
“யாருக்கு யார் மேல கோபம் ” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் மூர்த்தி.
“உங்க மகனுக்கு இவ மேல கோவமாம் ” என்றார் சோபனா.
“ஏன்மா எதுக்கு கோபம் ” என்றார் அவர் ,
“நான் அவரை இந்த வேலையை விட சொன்னேன் மாமா அதுக்கு தான் என்கிட்டே கோச்சுட்டு கிளம்பி போறார் ” என்றவள் சோபாவில் போய் அமர்ந்து கொள்ள. .
சோபனாவும், மூர்த்தியும் அதிர்ந்து போனவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.
“ஏன் அத்தை நீங்களே சொல்லுங்க , இவருக்கு எதுவும் அங்கிருந்தா நமக்கு தானே கஷ்டம், இவ்ளோ ரிஸ்க்கான ஜாப் வேணாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குறார்” என்றாள் மிகவும் கவலையாக.
“ரிஸ்க் தான் மா.. அதுக்காக அவனுக்கு புடிச்ச வேலையை வேணாம்னு சொன்னா எப்படி ” என்றார் மூர்த்தி.
“மாமா நீங்களும் அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க. அவருக்கு நிறைய எதிரிங்க இருக்காங்கனு அவரே சொல்றார். அபப்டி இருக்க அப்போ எதுக்கு அந்த வேலைக்கு போகணும் . அதான் சொன்னேன் அவர்கிட்டே என் அண்ணாக்கிட்டே சொல்லி ஒரு வேலை வாங்கி தரேன். இல்லேனா சொந்தமா ஒரு பிசினெஸ் பண்ணலாம்னு சொன்னேன். அதுக்குப் போய் கோச்சுக்கிட்டார் ” என்றாள் ஓவியா.
அவள் பேச்சிற்கு பதில் பேச இருவருக்கும் தோன்றவில்லை. என்ன சொல்வது என்றும் புரியவில்லை.
“சரிம்மா இந்த ஒரு பிரச்னைக்காக எல்லாமே தப்பா நடக்கும்னு ஏன் முடிவு பண்ணனும் , எல்லாம் சரியாகிடும் அவன் பாத்துப்பான் ” என்றார் சோபனா.
“அத்தை நீங்களுமா அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க. நீங்களே இப்படி சொன்னா அப்பறோம் அவர்கிட்டே யார் பேசுறது ” என்று சேலைத்தலைப்பில் வாயை மூடி அழைத்துவங்கி இருந்தாள்.
“ஐயோ! ஓவியா இதுக்கு ஏன் நீ அழற நான் வேணும்னா அவன்கிட்டே பேசுறேன்மா “என்றார் சோபனா பதட்டமாக.
அதை மொதல்ல செய்யுங்க அத்தை என்றவள் ராகவ் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்று தன் மனதில் வேண்டிக்கொண்டிருந்தாள் . அவள் மனதில் இப்பொது ராகவ்வின் பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்று மட்டும் தான் அவளுக்கு தோன்றியது.
மலைகளுக்கு நடுவே மெல்லிய பனிப்படலம் விலகிக் கொண்டிருக்க, அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலிருந்த ஆர்.டி.ஓ அலுவலகம் மட்டும் வழக்கத்திற்கு மாறாகப் பரபரப்பாக இருந்தது.
காலை ஒன்பது மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிட்டாள் மாளவிகா. முதல் நாளே தாமதமாக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள், தனது அறைக்குள் நுழைந்து கோப்புகளைப் பார்வையிடத் தொடங்கினாள்.
அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் முத்துராமன்.
“குட் மார்னிங் மேடம்!”
“குட் மார்னிங் சார். உட்காருங்க.”
“மேடம், இன்னைக்கு உங்களைப் பார்க்க நிறைய பேர் வந்திருக்காங்க. வெளியே காத்திருக்காங்க.”
“எதுக்காக வந்திருக்காங்க?”
“ஒரு கிராமத்துல நிலப் பிரச்சனை மேடம். பல வருஷமா அரசு நிலத்தை ஒருத்தர் ஆக்கிரமிச்சு வச்சிருக்காரு. அந்த இடத்தைச் சுற்றியிருக்கிற ஏழை மக்களுக்குப் பொதுவான பாதை கூட இல்லாம பண்ணிட்டாரு. இதைப் பத்தி புகார் கொடுக்கத்தான் வந்திருக்காங்க.” என்றார்.
“அப்படியா? சரி அவங்க கொடுத்த புகார் மனுவை எடுத்துட்டு வாங்க.” என்றாள்.
சில நிமிடங்களில் ஒரு வயதான பெண்மணி உட்பட நான்கைந்து பேர் அவளது அறைக்குள் வந்தனர். “வாங்க” என்று அவர்களை இன்முகமாக அழைத்தவள் “என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க.” என்றாள்.
அந்த வயதான பெண்மணி கையில் வைத்திருந்த மனுவை நீட்டினார். “அம்மா… எங்க ஊர்ல இருக்கிற பொதுப் பாதையை ஒருத்தர் அடைச்சிட்டாரும்மா. எங்க வீட்டுக்குப் போகக்கூட அவர்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருக்கு. கேட்டா மிரட்டுறாரு. ” என்றார்.
“அது மட்டுமில்லம்மா அந்த ஆள் போட்டது தான் சட்டம், அவர் வெச்சது தான் நியாயம்னு சொல்லி எங்களை படா படுத்திட்டு இருக்கார் ” என்றார் மற்றொருவர்.
மாளவிகா அந்தப் புகார் மனுவைப் படித்தாள்.அதில் குறிப்பிடப்பட்டிருந்த பெயரைப் பார்த்ததும் முத்துராமனின் முகம் மாறியது.
“மேடம்… இந்தப் பிரச்சனை கொஞ்சம் பெரிய பிரச்சனை. அந்த ஆள் இந்த ஊர்ல செல்வாக்கு உள்ளவர். அரசியல்லயும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கு.” என்றார்.
மாளவிகா நிமிர்ந்து அவரைப் பார்த்தவள்.”அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் சார்? அரசு நிலம் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா, தனிப்பட்ட ஒருத்தருக்கா?”என்றாள்.
“அது வந்து மேடம்…”என்று அவர் இழுக்க..
“சரி. முதல்ல அந்த இடத்தோட ஆவணங்கள், சர்வே விவரங்கள் எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க. நானே நேர்ல வந்து பார்க்கிறேன்.” என்றவளின் உறுதியான குரலில் முத்துராமன் சற்றே வியந்து தான் போனார்..
“மேடம், நீங்க இப்போதான் இங்க வந்திருக்கீங்க. கொஞ்சம் பொறுமையா போகலாமே.”
“நான் இங்க வந்தது பொறுமையா வேடிக்கை பார்க்க இல்ல சார். எனக்குக் கொடுத்திருக்கிற பொறுப்பைச் சரியா செய்யத்தான் வந்திருக்கேன்.”
அவள் சொன்னதும் புகார் கொடுக்க வந்தவர்கள் நம்பிக்கையுடன் அவளைப் பார்த்தனர்.
சிறிது நேரத்தில் அரசு ஜீப் அந்தக் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டது.
மாளவிகா ஜீப்பில் அமர்ந்தபடியே அந்தக் கோப்புகளைப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் வந்திருப்பதை அறிந்த ஊர் மக்கள் பலரும் பாதையோரத்தில் கூடியிருந்தனர்.
அந்த இடத்தை அடைந்ததும் ஜீப்பிலிருந்து இறங்கியவள், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாதையைப் பார்த்தாள். பெரிய இரும்புக் கதவு போடப்பட்டு, அதன் முன்பாகப் பாதுகாவலர்கள் நின்றிருந்தனர்.
“யார் நீங்க? எதுக்கு இங்க வந்திருக்கீங்க?” என்று ஒருவன் அதிகாரமாகக் கேட்டான்.
“நான் இந்தப் பகுதியோட ஆர்.டி.ஓ மாளவிகா. எதுக்கு பொது வழியில பாதையை மறைச்சிருக்க போல செய்திருக்கிங்க. முதல்ல கதவைத் திறங்க.” என்றாள் அதிகாரமாக.
அவள் அடையாள அட்டையைக் காட்டியதும் அவன் சற்றே தயங்கினான்.
அந்த நேரத்தில் அங்கே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நடுத்தர வயதுடைய ஒருவர், அவளை ஏற இறங்கப் பார்த்தார்.
“நீங்கதான் புதுசா வந்திருக்கிற ஆர்.டி.ஓவா?”என்றான் திமிராக.
“ஆமாம். நீங்க யாரு?”என்றாள் அவள்.
“இந்த இடம் என்னோடது. இதுல தலையிட வேண்டாம். உங்களுக்கு இங்க புதுசு. அதனால சொல்றேன்.” என்று அவளை எச்சரிக்கும்விதமாக அவர் பேச..
அவருடைய மிரட்டல் கலந்த பேச்சைக் கேட்ட மாளவிகா “அரசு ஆவணத்துல இந்த இடம் பொதுப் பாதையா இருக்கும்போது, இது உங்களுடையதுன்னு எப்படி சொல்றீங்க?” என்றாள்.
“எனக்குத் தெரியாத சட்டமா? யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சு பேசுங்க.” என்று அவளை மிரட்டுவது போல அவர் பேச..
“நான் யார்கிட்ட பேசுறேன்னு எனக்குத் தெரியும். நீங்க யார்கிட்ட பேசுறீங்கன்னு புரிஞ்சுக்கோங்க. இது உங்களுடைய பட்டா நிலம்னா அதற்கான ஆவணத்தைக் காட்டுங்க. இல்லன்னா அரசு நிலத்தை ஆக்கிரமிச்சதற்கான நடவடிக்கையைச் சந்திக்கத் தயாராக இருங்க.” என்றாள் சிறிதும் யோசிக்காமல்.
அந்த மனிதர் கோபத்துடன் அவளைப் பார்த்தார்.
“உங்களை இங்க யாரு அனுப்பினாங்கன்னு எனக்குத் தெரியும். உங்க மேலிடத்துல பேசிக்கிறேன்.”
மாளவிகா மெதுவாகப் புன்னகைத்தாள். “தாராளமா பேசுங்க. ஆனா அதுக்கு முன்னாடி இந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாம தவிக்கிற மக்களோட பிரச்சனைக்கு பதில் சொல்லுங்க.” என்று பிடிவாதமாக நின்றாள்.
அந்த பெரிய ஆளோ அவளையே அதிர்ந்து பார்க்க..
“சார், உடனே சர்வே அதிகாரிகளை வரச் சொல்லுங்க. ஆவணங்களையும் நேர்ல சரிபார்க்கச் சொல்லுங்க. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுங்க.”
அவளது உத்தரவைக் கேட்டதும் அந்த பெரிய மனிதரின் முகம் இறுகியது.
“மேடம், நீங்க இதுக்கெல்லாம் வருத்தப்பட வேண்டியிருக்கும்!” என்று அவள் முகத்திற்கு நேராக கையை நீட்டி அவளை எச்சரிக்க..
“என் வேலையைச் சரியா செய்யறதுக்காக நான் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. தப்பு செய்றவங்கதான் அதுக்குப் பதில் சொல்லணும்.” என்றவள் “முத்துராமன் சார் இன்னிக்கு ஈவினிங்குள்ள.. இந்த இடம் பொது வழிப் பாதையா மாரி இருக்கனும். அப்படி எதுவும் இடைஞ்சல் பண்ணினா யோசிக்காம இவங்க மேல ஆக்சன் எடுக்கணும் “என்று சொலிவோடு அவள் நடக்க.
அவளுக்குப் பின்னால் நின்றிருந்த அந்த மனிதர் தனது மொபைலை எடுத்து டயல் செய்து அதை காதில் வைத்தவர் .
“ஹலோ… புதுசா வந்த ஆர்.டி.ஓ பொண்ணு நம்ம விஷயத்துல தலையிட ஆரம்பிச்சிட்டா. அவளை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு பாருங்க!”
அந்த அழைப்பின் மறுமுனையில் கேட்ட குரல் அவனையே அமைதியாக்கியது.
