மூர்க்கன் 73
“அப்பாடா! ஒரு வழியா ஊருக்கு வந்தாச்சு. எவ்ளோ நேரம் ட்ராவல் பண்ண வேண்டி இருக்கு ” என்று இடுப்பை வளைத்து நெளிந்தபடி கீழே முதல் ஆளாக இறங்கினர் வேல்ராஜன்.
மாலை ஆகிவிட்டது ரத்தினவேலுவின் ஊருக்கு வர..
அனைவரும் கீழே இறங்க.. .
அப்போது தான் அவர்கள் தங்க வசதியாக ஒரு வீட்டை ஏற்பாடு செய்துவிட்டு தன் புல்லட்டில் வந்திறங்கினார் ரத்தினவேலு.
“வாங்க.. வாங்க.. ஏன் எல்லாரும் வெளியேவே நிக்குறீங்க உள்ள வாங்க “என்று முன்னே வந்தவர் “கனகா .. உள்ள என்ன பண்ணிட்டு இருக்க? எல்லாரும் வந்துட்டாங்க பாரு” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தார்.,
“வந்துட்டேங்க.. உள்ள சேமிக்க சொல்லிட்டு இருந்தேன் ” என்று புடவை முந்தானையில் கைகளை துடைத்துக்கொண்டே வெளியே வந்தார் கனகா.
“அவ தான் வேலை செய்துட்டு இருக்கேன்னு சொல்றா இல்ல. அதுக்கு நீ அவளை கஷ்டப்படுத்திட்டு இருக்க? ” என்ற பரிமளா “உள்ள தானே எல்லாரும் வர போறோம் போலாம் வா.. ” என்று வேதவள்ளியை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டே உள்ளே நடக்க..
“ரத்தினவேலு விவசாயம் எல்லாம் எப்படிப் போகுது. இந்த வருசம் விளைச்சல் எல்லாம் நல்லபடியா நடக்குதா? ” என்று அவர் தோளில் கை போட்டார் வேல்ராஜன்.
“அதுக்கு என்ன மாமா நல்ல படியா தான் போயிட்டு இருக்கு. இந்த வருஷம் நல்ல மழை . அதனால விளைச்சல் கொஞ்சம் அதிகம் தான் “என்று சிரித்தார் அவர்.
“இதெல்லாம் கேட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க . நீங்களும் என் தம்பி கூட சேர்ந்து வயல்ல இறங்கி வேலை பார்க்கப் போறிங்களா? என்ன?” என்று கிண்டல் செய்தார் கமலா.
“அடியே இவங்களுக்கு வேலை இருந்தா தான் நமக்கு சோறு கிடைக்கும். இவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம விவசாயம், தண்ணி, கரெண்ட் ,வேண்டிய விதை கால நேரம் எல்லாம் சரியா அமைஞ்சா தான்., நமக்கு வேலா வேலைக்கு சாப்பிட சாப்பாடு, காய் கறின்னு எல்லாமே கிடைக்கும் . அதான் விசாரிச்சேன் ” என்றார்.
“உங்களுக்கு புரியுது மச்சான். இதே போல எல்லாருக்கும் புரிஞ்சா நல்லது தான் ” என்றவன் வரதராஜனையும் உள்ளே வர சொல்லி அழைத்தவன் அனைவருடனும் உள்ளே செல்ல.. கனகாவும் இளங்கிளி, கயல், மித்ரா என அனைவரிடமும் நலம் விசாரித்தவர் ஈஸ்வரைக் கண்டதும் அவன் கை பற்றிக் கொண்டவர் வாக்கிங் ஸ்டிக்குடன் நின்று இருந்தவனைக் கண்டு சந்தோஷமானார்.
“உன்னை பத்தி நான் பேசாத நாள் இல்ல ஈஸ்வர். உனக்கு உடம்பு குணமானது கேள்விப்பட்டதும் தான் நான் நிம்மதியா தூங்கினேன் “என்றார்.
“எல்லாம் சரி ஆகிருச்சு கனகா அம்மா. நீங்க பீல் பண்ணாதீங்க. இந்த முறை நான் இங்க வந்ததே உங்க சாப்பாட்டை சாப்பிடத் தான். கோவில் பூஜை முடிஞ்சதும் உங்க கையாள எனக்கு நான் வெஜ் சமைச்சுப் போடணும் ” என்றான் .
“அதுக்கென்ன ப்பா செய்துட்டா போகுது ” என்றவர் உள்ளே செல்ல..
ராவண் அவர்களை பார்த்தபடி ஆர்யாவை தூக்கிக் கொண்டு உள்ளே செல்லப் போக..
“அண்ணா ஒரு நிமிஷம் “என்றான் ராஜ்,
“என்ன ராஜ்?” என்ற ராவணன் ராஜ்ஜின் முகம் பதற்றத்தில் இருப்பதைக் கண்டு கொண்டவன் “என்ன டா ?” என்றான் சீரியஸாக.
“அண்ணா கொஞ்சம் அந்த பக்கம் வாங்க ” என்றான் சுற்றிலும் இருந்த உறவுகளை பார்த்தபடி . அதை கவனித்துவிட்டு இளங்கிளி நீங்க போயிட்டு வாங்க நான் ஆர்யாவை உள்ள கூட்டிப்போறேன்” என்று அவனிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல..
“வா டா ” என்று இருக்கியா முகத்தோடு ராவண் சென்றான்.
தனியே இருவரும் வந்தவுடன் “அண்ணா , அந்த மோகன் மறுபடியும் நம்மளை தேடி இங்க வந்திருக்கான். அவன்கூட நிறைய ஆட்கள் வந்து இந்த ஊருக்கு வெளியே தங்கிருக்குறதா செய்தி வந்திருக்கு ” என்றான்.
அவன் சொல்வதை பொறுமையாகக் கேட்ட ராவண் “நம்ம குடும்பத்தை மொத்தமா அழிக்க பிளான் பண்ணி தான் இங்க வந்திருக்கான்னு நினைக்கிறேன்” என்றான்.
அதைக் கேட்டு அதிர்ந்த ராஜ் “இப்போ என்ன பண்றது அண்ணா ” என்றான்.
“அனேகமா இன்னிக்கு நைட் நம்ம இருக்க இடத்தை தேடி அவன் வருவான்னு நினைக்குறேன் ” என்றான்.
“அண்ணா அப்போ எல்லாரையும் இங்கையே தங்க வெச்சிரலாமா?” என்றான் ராஜ்.
“ம்ஹும்.. வேணாம் ராஜ். அப்படிப் பண்ணினா மோகனுக்கு விஷயம் புரிஞ்சிரும் , அவனும் அவனோட ஆளுங்களும் அலெர்ட் ஆக வாய்ப்பு இருக்கு. சோ நாம பண்ணை வீட்டுக்குப் போகலாம். அதாவது பெரியவங்க நம்ம குட்டிஸ் எல்லாம் இங்கையே இருக்கட்டும். மத்தவங்க எல்லாம் அங்க போகலாம் சரியா?” என்றான் ராவண்.
“நீங்க சொல்றதும் சரி தான் அப்படியே செய்திருவோம். அவனுக்கும் , அவன் கூட வரவங்களுக்கும் இன்னிக்கு நைட் ஒரு முடிவு கட்டிரனும் ” என்றான்.
“அதுக்கு முன்ன நம்ம மருது பக்கத்துக்கு ஊர்ல தானே இருக்கான். அவனை வர சொல்லிடு . கூடவே கொஞ்ச பேரை நம்பிக்கையானவங்களை அழைச்சு வர சொல்லு “என்றான்.
“அவ்ளோ பேர் எதுக்குன்னா அவனை சமாளிக்க நாமளே போதுமே.. “என்றான்.
“இல்ல ராஜ், ஒரு வேலை அவங்க இங்கையும் அட்டாக் பண்ண வரதா இருந்தா என பண்றது. அதுக்கு தான் இங்க கொஞ்ச பேரை காவலுக்கு வெச்சுட்டா.. அவங்களுக்கு சேபா இருக்கும் ” என்று பின்னாளில் எதுவும் நாடாகும் என்று முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டான்.
“சரி அப்படியே பண்ணிட்றே ” என்று தன் போனை எடுத்து மருதுவிற்கு அழைத்து விஷயத்தை சொன்ன பிறகு இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“சரோஜா பதட்டப்படாத நிலாவுக்கு எதுவும் ஆகியிருக்காது. அவ உடம்பு முடிலேனு தூங்கிருக்கலாம் “என்று நிலவின் அம்மாவை சமாதானம் செய்து கொண்டிருந்தார் சகுந்தலா.
“இல்ல அண்ணி! என்ன ஆனாலும் அவ இவ்ளோ நேரம் எல்லாம் என்கிட்டே பேசாம இருக்க மாட்டா. போனையும் ஆப் பண்ணி வெச்சிருக்க மாட்டா” என்று அழுதுகொண்டே சொன்னார் சரோஜினி.
‘என்ன ஆச்சு?” என்று அவர்களிடம் வந்த ராஜிடம் “எங்க நிலாவுக்கு வந்ததுல இருந்து சரோ அம்மா போன் பண்ணிட்டே இருக்காங்க. அவ போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு. அதான் அவங்களுக்கு அவளை தனியா விட்டுட்டு வந்துட்டோமேன்னு பதற்றமா இருக்காங்க . அவளுக்கு எதுவும் ஹிருமோனு பயப்படுறாங்க ” என்றாள் கயல்.
“பக்கத்துல யாரும் இருந்தா நிலாவை போய் பார்க்க சொல்லலாமா ” என்றான் ராஜ்.
“நிலாவுக்கு எதுவுமில்ல அவ நல்லா தான் இருக்கா. கர்ணனும் அவளோட தான் இருக்கான். அவனுக்கு தான் போன் பண்ணி நிலாவை பார்க்க சொன்னேன். ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்காங்க “என்று கையில் போனுடன் வந்த நளினி “சரோ இந்தா நீயே உன் பொண்ணுகிட்டே பேசு ” என்று போனை அவளிடம் நீட்டினார்.
அவசரமாக போனை வாங்கி காதில் வாய்த்த சரோஜினி “ஹலோ நிலா!.. என்ன டி ஆச்சு? ஏன் போன் ஆப் பண்ணி வெச்சிருக்க?” என்று கேட்கும்போதே அவருக்கு அழுகை வெடித்து வந்துவிட..
அவர் அழும் குரலைக் கேட்டதுமே நிலாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது, “அம் … அம்மா! இப்போ எதுக்கு அழறீங்க .” என்றாள் லேசான நடுக்கத்தோடு.
“ஏன் டி போன் சுவிட்ச்னு வருது “என்றார் சற்றே கோபமாக,
“அம் …. ம்மா… நான்..நான் ” என்று அதற்கு மேல் பேச முடியாமல் அவள் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள…
அவளிடம் இருந்து போனை வாங்கிய கர்ணன் “ஆன்டி! நீங்க பயப்படற அளவுக்கு உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகல.. காலைல இருந்து ஒரு மீட்டிங்ல இருந்தோம் ரெண்டு பேருமே. அங்க போன் யூஸ் பண்ண முடியாது. அதான் அவ போன் சுவிட்ச் ஆப் பண்ணி வெச்சிருந்தா. உங்ககிட்ட சொல்லிட்டு போனை சுவிட்ச் ஆப் பண்ண சொன்னேன். அதை உங்க பொண்ணு செய்யல.. ” என்றவன் தன் மேல் மொத்தமாக சரிந்து இருந்தவளை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக்கொண்டே தள்ளாட்டத்துடம் பேசினான் கர்ணன்.
“சரிப்பா அவ பத்திரமா இருந்தா சரி தான் ” என்றவர் “அவளை முடிஞ்சா உங்க கூடவே வெச்சுக்கோங்க. தனியா எங்க வீட்ல விட வேணாம். நீங்க அவளை பத்திரமா பாத்துபிங்கன்னு நம்பிக்கையில்ல தான் இதை கேக்குறேன்’ என்றார்.
“நோ ப்ரோப்லேம் ஆன்டி நான் பாத்துக்கிறேன் ” என்றவன் அவரிடம் பேசிவிட்டு போனை வைக்க..
“இப்போ நிம்மதியா இருக்கியா சரோஜா நீ.. ஒரு நாள் பிரிஞ்சு இருந்ததுக்கே நீ இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்ட.. ; என்று சிரித்தார் நளினி.
“அதான் உங்க மகன் பத்திரமா எங்க வீட்டுப் பொண்ணை பாத்துக்கறேன்னு சொல்லிருக்காரே.. அப்பறோம் எங்களுக்கு என்ன பயம். இன்னும் கல்யாண பேச்சே பேசல.. அதுக்குள்ள மருமக மேல அவ்ளோ அக்கறை எங்க அம்மாவுக்கு ” என்று கிண்டலடித்தாள் கயல்.
“இங்க பாரு சரோ நாம் ஊருக்கு போனதும் முதல் வேலையா செய்ய வேண்டியது உன் பொண்ணுக்கிட்டேயும், என் பையன்கிட்டேயும் பேசி கல்யாண ஏற்பாடை பண்றது தான். ” என்றவர் “கயல்.. இதை நீ தான் முன்ன இருந்து நடத்தி வெக்கப் போற.. ” என்றார்.
“ஐயோ! நானா! ” என்று வாயை பிளந்தாள் கயல்,
“இவ்ளோ வாய் பேசுற இல்ல.. இதையும் செய் ” என்று நளினி தீர்க்கமாக சொல்லிவிட..
“சொல்லிட்டீங்க இல்ல பாருங்க என் சாமர்த்தியத்தை” என்று இல்லாத காலரை தூக்கி விட்டாள்.
சந்தோசமாக சிரித்துப் பேசும் தன் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பில் ராவணும் , ராஜ்ஜும் இருக்க. அவர்களின் இந்த சந்தோசப்பேச்சில் கவனம் செலுத்த முடியவில்லை.
“அது எல்லாம் இருக்கட்டும் . உன் பொண்ணு ரம்யாவும், அம்சவேணியும் எங்க ஆளையே காணோமே ” என்றார் பரிமளா .
“அண்ணி உங்களுக்கு தான் நடந்தது பத்தி தெரியுமே.. அவ கல்யாண பிரச்சனையில் இருந்து ஊர் பக்கமே ரம்யா வந்து 5 வருஷம் ஆச்சு. அவளுக்கு துணையா இருக்கேனு அம்சாவும் சென்னையிலேயே இருக்கா. அவ தான் அப்போ அப்போ வந்து எங்களைப் பார்த்துட்டுப் போறா. நாங்க ரம்யாவைப் பார்த்து வருஷம் ஆச்சு. நாங்க ஊருக்கு வரும்னு சொல்லும்போது எல்லாம் எங்களை வர வேண்டாம்னு சொல்லி பயங்கர ரகளை பண்றா ரம்யா. ” என்றார் வருந்திய குரலோடு.
“அத்தை நீங்க ரம்யாவைப் பத்தின கவலையை விடுங்க, ரம்யா என்னோட பொறுப்பு அவ பத்திரமா தான் இருக்கா ” என்று முடித்துக்கொண்டான் ராவண்.
“அந்த நம்பிக்கையில் தான் மாப்பிள்ளை நான் இப்போவரை அவளைப் பார்க்க போகாம இருக்கேன் ” என்றார் ரத்தினவேல்.
“அவருக்கு மட்டும் உண்மை தெரிஞ்சுது , இந்த தங்கமான மாப்பிள்ளையை என்ன பண்ணுவாருனு நான் பார்க்கணும்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் இளங்கிளி கிண்டல் செய்ய..
“மெதுவா பேசு டி.. அவங்க காதுல விழப்போகுது :” என்று குனிந்து அவளிடம் ரகசியமாக சொன்னவன் ஆர்யாவை அவளிடம் வாங்குகிறேன் என்ற பெயரில் இலகிலியின் மேனியை உரசிக்கொண்டே பிள்ளையை வாங்கி இருந்தான்.
அவளும் கள்ளச்சிரிப்போடு அவனை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டாள்.
