News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் பொண்டாட்டி 16

by Sinamika Writes
437 views
A+A-
Reset

EPI 16

“மீரா! நீ ஏன் இன்னும் தூங்காம இருக்க?” என்றான் ஜீப்பை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றபடி.

என்னவோ தெரியவில்லை அவன் இத்தனை கோபத்தையும் அவளுடை  அழைப்பில் அடங்கிப்போனது தான் ஆச்சர்யமே.. அவனுக்கும் அது தெரியவேயில்லை.

“இல்ல எனக்குத் தூக்கம் வரல.. நீங்கவேற வெளிய இருக்கிங்களா? ரொம்ப கோபமா வேற இருந்திங்க.. அதான் நீங்க வீட்டுக்குப் போற வர இருக்கலாமேன்னு..” என்றாள்.

“அவ இவ்ளோ தூரம் என்னைப் பத்தி யோசிக்கிற அளவுக்கு நான் நடந்திருக்கேன். அவ்ளோ ஸ்ட்ரெஸ்ஸெட்டா இருந்திருக்கேன் நான் ” என்று நினைத்தவன்.

“ம்ம்..”என்றான்.

“சார்.. ஒன்னு கேக்கவா?’ என்றான் உள்ளே வந்து அவள் அறைக்கு நேரே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டே..

“ம்ம்.. கேளு ” என்றபடி சிகெரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்தான்.

“உங்க தம்பி காணாம போய்ட்டாரா? அதனால தான் நீங்க இப்படி தினமும் ..” என்று மேலும் கேட்க அவள் தயங்க,

“ம்ம்… அதுவும் ஒரு காரணம்னு சொல்லலாம்” என்றவன். “அதை விடு ” என்றான்.

“ம்ம்…” என்று மென்மையாக தலையை ஆட்டியவள் “இப்போ உங்களுக்கு கோபம் குறைஞ்சிருச்சா? எப்படி இருக்கு?” என்றாள் அக்கறையாக.

அவள் பேச்சில் இருந்த அக்கறையை கண்டு ஆச்சர்யப்பட்டவன். “என் மேல உனக்கு அக்கறை எல்லாம் இருக்கா?” என்றான்.

“ஏன் சார், இருக்கக்கூடாதா?” என்றாள் அதையே கேள்வியாக மாற்றி.

“இல்ல எனக்கும், உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல . அதுவுமில்லாம காசுக்காக நீ இந்த வேலை பாக்குற.. நான் என் தேவைக்காக உன்னை யூஸ் பண்ணிக்கிறேன். உனக்கும் எனக்கும் முறையா எந்த ஒரு உறவும் இல்ல . இன்னும் நாலு மாசத்துல இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சிரும், அப்பறோம் நமக்குள்ள இந்த போன் கால்ஸ் , லைவ் சேட் எதுவுமே இருக்காது . நீயும் அடுத்த கஸ்டமர் வந்தா அங்க போய்டுவியே,, அதான் எதுக்கு தேவையில்லாத அக்கறையை வளர்க்குற என் மேல “ என்று அவள் மனநிலையை அறிய பேச ஆரம்பித்தான்.

“சார் என்னோட அப்பா , அக்கா இவங்க ரெண்டு பேருக்கும் இருக்க பிரச்னையை சரி செய்ய தான் நான் இந்த வேலைக்கே வந்தேன், நீங்க என் அப்பாவுக்காக ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்கீங்க. மீதம் இருக்க நாலு மாசம் போதும் என் அக்கா வாழ்க்கையையும் நான் சரி பண்ணிருவேன் .. அதுக்கு அப்பறோம் நான் இந்த் வேலையை செய்ய மாட்டேன் ” என்றவள்,  தலையை குனிந்து கொண்டே “அதுவுமில்லாம நீங்க பாத்த இந்த உடம்பை வேற யாருகிட்டேயும் காட்ட எனக்கு விருப்பம் இல்ல” என்றாள்.

அவள் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் இனம்புரியாத ஒரு உணர்வு அவனையும் அறியாமால்  அவள் மேல் உருவாவதை அவனால் உணர முடிந்தது, ஒரு கர்வம், ஒரு இறுமாப்பு தோன்றியது அவனுக்கு.

“அப்படின்னா இதுக்கு அப்பறோம் நிஜமாவே இந்த வேலையை நீ செய்யப்போறது இல்லையா?” என்றான்.

“ம்ஹும் மாட்டேன் சார்  “என்று தலையை இடவலமாக ஆட்டினாள்,

“உனக்கு பணத்தேவை வந்தா அப்போ என்ன பண்ணுவ” என்றான்.

“அப்போ என்ன பண்ணுவேன்னு தெரியல சார் . ஆனா நிச்சயமா இந்த வேலைக்கு வரமாட்டேன் ” என்றாள் உறுதியாக.

“சரி நான் பார்த்த இந்த உடம்பை நீ வேற யார்கிட்டேயும் காட்டப்போறது இல்லன்னு சொல்றியே.. எதிர்காலத்துல உன் வீட்ல உன்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டா அப்போ என்ன பண்ணுவ.. கல்யாணம் பண்ணிட்டு உன் புருஷன் கூட ஒண்ணா இருந்து தானே ஆகணும். அவன்கிட்டே முடியாதுனு சொல்வியா?”என்றான் நக்கலாக,.

அவன் வேண்டுமென்றே இந்த கேள்வியைக் கேட்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது. நிமிர்ந்து திரையைப் பார்த்தாள் அது இருளாக இருந்தது. அந்தப்பக்கம் இருக்கும் மாறன் அவள் கண்களுக்குத் தெரியவுமில்லை.

“என்ன பாக்குற பதில் சொல்லு ” என்றான்.

“சார் நான் கிராமத்துல வளர்ந்த பொண்ணு. அப்படி இருக்க நான் எவ்ளோ இக்கட்டான சூழ்நிலைக்கு தலைப்பிட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன்னு புரிஞ்சுக்கோங்க. எனக்கு இந்த நாலு மாசம் போதும் நான் நினைச்ச போல எல்லாம் மாறினதும் நிற்க.. அதே போல நான் கண்டிப்பா கல்யாணம் செய்துக்க மாட்டேன் சார். உங்களுக்கு என்னைப் பிடிக்குமோ இல்லையோ தெரியல.. ஆனா எனக்கு ‘ என்று இடைவெளிவிட்டு நிறுத்தியவன் “இது நீங்க பார்த்த உடம்பு. எப்பவும் நீங்க பார்த்தாவே தான் இருக்கும். நான் யாரையும் கல்யாணம் பண்ணைக்கப் போறது இல்ல..  ”  என்று அழுத்தமாக சொல்லிவிட்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.

அவள் உறுதியைக் கண்டு அவனே ஆடி விட்டான். அந்த அளவுக்கு அவள் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழுந்தது.

அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. திரையில் தெரியும் அவள் பிம்பத்தை அவனையும் அறியாமல் அவன் விரல்கள் வருடியது.

மீரா! என்று அவன் உதட்டுக்குள் அவள் பெயரை அழைக்க..

அது அவளுக்கு கேட்டிருக்க வேண்டும் “சொல்லுங்க சார் ‘ என்று அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

அவனுக்கோ அதிர்ச்சி இதழ்களுக்குள் அவள் பெயரை உச்சரித்து அவளுக்கு கேட்டுவிட்டதா என்று நினைத்தவன் “சரி நேரம் ஆச்சு பாரு எப்பவும் ஆறுமணிக்கே கிளோஸ் பண்ணிடுவ இல்ல . இன்னிக்கு அந்த டைம் தாண்டிப் போயிருச்சு இல்ல. உன்னோட முதலாளி உன்னை எதுவும் சொல்லப்போறேன்” என்றான் வேண்டுமென்றே .

“அவனா!.. சார் அவன் எப்படியும் 10 மணி இல்லாம கீழ வர மாட்டான். காலைல சாப்பாடே 10 மணிக்கு மேல தான் சாப்பிடுவான். அதனால லேட்டா போனாலும் எந்த பிரச்னையும் இல்ல எனக்கு. நான் மெல்ல போய் சமைச்சு வெச்சிருவேன். அவனுக்குத் தெரியாது” என்றாள்.

“ம்ஹும்.. இதெல்லாம் சரியா கணக்கு வெச்சு நீ வேலை பார்த்துட்டு இருக்க. நானும் 10 மணி வரை தூங்கிடறேன் தினமும் ” என்று நினைத்தவன் “சரி பரவால்ல நான் போனைக் கட் பண்றேன். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போய் வேலை பாரு” என்றான்.

அவளும் சரி என்று தலையாட்ட.. அவன் காலை கட் செய்தபிறகு அப்டியே கட்டிலில் தன் உடலை சரிக்க ..

சரியாக அந்த நேரம் அவள் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது.

விருட்டென எழுந்தவள் “இந்த நேரத்தில யாரு ” என்று யோசனையோடு எழுந்து வந்து கதவைத் திறக்க..

அவள் முன் ஆறடி ஆண்மகன் தன் தோற்றத்திலேயே அவளை மிரட்டுபவன் நின்று இருக்க..

“ஹையோ! இவனா? இவன் எப்பவும் 10 மணிக்கு தானே வருவான். இன்னிக்கு என்ன இவ்ளோ சீக்கிரம் ” என்று அதிர்ந்தவள் மனதிற்குள் நினைத்துக் கொள்ள..

“மணி ஏழு ஆச்சு இன்னும் என்ன தூக்கம் வேண்டி இருக்கு உனக்கு ” என்று அதட்டலாக வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்.

“அது.. அது வந்து .. ” என்று திணறியவள் “நான் எழுந்துட்டேன் சார். யோகா பண்ணிட்டு இருந்தேன் அதான் வெளியே வரல  ‘ என்று சமாளித்தாள்.

“ஓ..ஹோ.. ” என்று அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவன் “நீ யோகா பண்ணும்போது இப்படி தான் டிரஸ் பண்ணுவியா? என்ன? அப்போ இந்த ட்ரஸோட நீ எப்படி யோகா பண்ணினேனேனு எனக்கும் செய்து காட்டு. பார்க்கவே கிளுகிளுப்பா இருக்கு “என்றான் மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டே..

“ஏன் இந்த ட்ரேஸ்க்கு என்ன?” என்று புரியாமல் கேட்டுக்கொண்டே தன்னைக் குனிந்து பார்த்தாள்.

“ஹையோ! ” என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு கதவின் பின்னால் போனவள் “கடவுளே இப்படியா இவன் முன்ன வந்து நிக்கணும். ” என்று வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவள் மீண்டும் தன்னைக் குனிந்து பார்த்தாள்.

மாறன் வாங்கிக் கொடுத்த இரவு உடையை அணிந்து இருந்தாள். வீடியோ காலில் பேசிவிட்டு அப்படியே படுத்தவன் கதவு தடவும் கவனிக்காமல் வந்து அப்டியே கதவை திறந்துவிட.. இப்போது இதுவே அவளுக்கு வினையாகிப் போனது.

“ஏய் ! என்ன பண்ற..  “என்று வெளியே இருந்து மாறன் குரல் கொடுக்க..

சட்டென கதவின் பின்னால் இருந்து தலையை மட்டும் நீட்டி அவனை எட்டிப் பார்த்தவள் “இ..ஹி.. ஹீ..” என்று சிரித்தவள் “அது ரூமுக்குள்ள நான் மட்டும்தானே இருக்கேன். அதான் இப்படியே செய்துட்டேன் சார்” என்று சமாளித்தாள்.

“அதான் எனக்கும் இதே டிரஸ் போட்டு செய்து காட்டு நானும் பார்க்கணும் ” என்றான் அவனும் விடாமல்,.

அவனை ஏகத்துக்கும் முறைத்தவள் “சார் உங்களுக்கு எதுக்கு நான் யோகா செய்து காட்டணும் ” என்றவள் “பொருக்கி..  பொருக்கி.. எப்படி எல்லாம் அலையுறான் பாரு. .சரியான காஜி புடிச்சவன் ” என்று திட்டிக்கொண்டாள் மனதில்.

“ஏன் கூடாதா ” என்றான் அவனும் விடாமல் சற்று அடிகாரத்தோணியில்

அதில் அதிர்ந்தவள் “இல்ல சார் அது வந்து..” என்று அவள் நெளிய..

“சும்மா சொல்லக்கூடாது அந்த ட்ரேஸ்ல நீ சும்மா கும்ம்னு இருக்க தெரியுமா?” என்றான் முகத்தை மோகம் கொள்ள வைத்துக்கொண்டே..

அவனை அதிர்ந்து பார்த்தவள் “சார் என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க. நான் உங்ககிட்டே வேலைக்கு இருக்கேன் . அவ்ளோ தான் உங்களுக்கும் எனக்கும். அதை தாண்டி இந்த மாதிரி எல்லாம் என்கிட்டே பேசுற வேலை வெச்சுக்காதீங்க  “என்று கோபமாக சொன்னவள் “இப்போ என்ன வேணும் உங்களுக்கு ” என்றாள்.

“ரொம்ப வாய் பேசுற நீ.. ” என்றவன் “இவ்ளோ வாய் பேசத் தெரியுற உனக்கு காசு கொடுக்கிற முதலாளிக்கு நேரமே எழுந்து வேலை பார்க்கணும்னு தோணல உனக்கு . காசு கொடுத்தா ஈன்னு வாங்கிட்டுப் போகத் தெரியுது இல்ல. அப்போ வேலையும் நேரத்துக்கு சரியா செய்யனுமனு தெரியனுமில்ல “என்று அதட்டினான்.

அவன் அதட்டலிலும், அவன் பேசும் பேச்சிலும் அதிர்ந்தவள் விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ள..

“சாரி சார் இனி சரியா செய்துடறேன் ” என்றாள் கண்களில் நீர் கோர்க்க..

“சீக்கிரம் காபி போட்டு என் ரூமுக்கு எடுத்துட்டு வா “என்று இறுக்கமாக சொன்னவன் திரும்பி விறுவிறுவென படிகளில் ஏற..

அவன் முதுகையே வெறித்திருந்தவள் “பொருக்கி.. திமிர் பிடிச்சவன்.. ராட்சசன் “என்று அவனை திட்டிக்கொண்டே கதவை அடைத்தாள்.

இங்கே அறைக்கு வந்த மாறனோ அவள் முகம் போன போக்கையும், அசடு வழிந்த சிரிப்பையும் நினைத்து வாய்விட்டே சிரித்துக்கொண்டவன் “நான் யாருன்னு உனக்கு தெரியுற வர.. இந்த முதலாளி வேஷம் இப்படி தான் உன்னைக் கஷ்டப்படுத்தப் போகுது ” என்று சொல்லிக்கொண்டான்.

“

You may also like

1 comment

Pavi Janu November 28, 2026 - 8:14 pm

Today episode semma sis… Cal la ava kita rest eduka sollitu nerla owner ha vantha paarunga ennaku semma siripu… Cal pesuravanum owner um onnunu theriyama ava vera romba pesura Avan Ivan nu… Nerla meet panrapo semmaiya irrukum… Sikiram meeting vainga sis…

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.