மூர்க்கன் 74
நிலாவின் அம்மாவிடம் பேசிவிட்டு போனை வைத்த கர்ணன் கட்டிலில் தோய்ந்து போய் அமர்ந்து இருந்தவளைப் பார்த்தான்.
விஜேஷ் கொடுத்த மாத்திரையின் விளைவு அவள் உடல் முழுதும் ஒருவித வித்தியாசமான உணர்வும், தன்னிலை மறக்கும் நிலையிலும் தான் அவள் இருந்தாள்.
எப்படியோ சமாளித்து சரோஜினியிடம் அவளை பேச வைத்தவன் அவளை தலை சாய்த்துப் பார்த்தான். கையில் ட்ரிப்ஸ் போட்ட இடத்தில பஞ்சை வைத்து ஒட்டி இருந்தார்கள்.
காலையில் நிலா இருந்த நிலையில் கர்ணனின் கற்பை அவள் வசமாக்கி இருப்பாள். அத்தனை மோகம் அவளுக்கு.. அத்தனை போதை அவளுக்கு..
நளினி கர்ணனிடம் போன் செய்து நிலாவை பார்த்துக்கொள்ள சொன்ன பின் அவள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்க நிலாவுக்கு போன் செய்து இருந்தான். அவள் எடுக்காமல் போகவும் ஆபீஸ் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று குளிக்க சென்றுவிட்டான்.
குளித்து ஆபீஸ் கிளம்பியவன் மனம் ஏனோ நிலாவைப் பற்றிய சிந்தனையிலேயே ஓடியது. காரில் ஏறியவன் மறுபடியும் ஒரு முறை அவளுக்கு அழைத்தான். இந்த முறை அவள் போன் சுவிட்ச் ஆப் என்று வரவும் அவன் புருவம் சுருங்கியது.
“ஏன் போன் ஆப் பண்ணி வெச்சிருக்கா? உடம்புக்கு எதுவும் முடியலையா? ” என்று தோன்ற.. ஆபீஸ் போகும் வழியில் அவளைப் பார்க்கலாம் என்று கிளம்பி இருந்தான்.
நேராக அவள் வீட்டு வாசல் முன் வந்து காரை நிறுத்தியவன் கண்களில் பைக் ஒன்று தென்பட்டது. அதை பார்த்தவன் “இந்த பைக்கை எங்கையோ பார்த்திருக்கேனே ..” என்று யோசித்தபடி காரில் இருந்து இறங்கியவன் அந்த பைக்கை யோசனையோடு பார்த்தபடி நடந்தான்.
கேட்டை திறந்து உள்ளே சென்றவன் காலிங் பெல்லை அழுத்தினான்.
அழுத்திவிட்டு மீண்டும் பைக்கை திரும்பிப் பார்த்தான் யோசனையுடன்.
அதே சமயம் ஹாலில் லேசான மயக்கத்தில் இருந்தவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டு விஜேஷ் கீழே இருந்த அறைக்குள் அவள் பாரத்தை தாங்க முடியாமல் கஷ்டப்பட்டு அவளை அழைத்து சென்று கட்டிலில் கிடத்தியவன் அவள் சுடிதாரை கழட்ட முற்பட..
அது அவள் உடலில் கசித்தமாக பொருந்தி இருந்தது. “குண்டச்சி.. இப்படி டைட்டா டிரஸ் போட்டா மட்டும் ஒல்லியாகிடுவேன்னு நினைப்போ உனக்கு.. ” என்று அவளை திட்டிக்கொண்டே அந்த சுடிதாரை கழட்ட போராடிப் பார்த்தவன் பொறுமை இழந்து அந்த சுடிதாரை மொத்தமாக கிழித்திருந்தான்.
“டேய்!.. விஜ்.. விஜேஷ்.. ம்ம்.. ” என்று போதையில் அவனை தடுக்க முயன்றாள் நிலா. ஆனால் அவளால் முடியவில்லை. அவள் உடல் மொத்தமாக செயலற்றுப் போயிருந்தது,
அவன் சட்டையைப் பற்றி தன்னிடம் இருந் அவனை தள்ளிவிட முயன்றாள் நிலா. அவளால் அவனை அந்த நிலையில் எதிர்க்கவும் முடியவில்லை. தற்காத்துக் கொள்ளவும் முடியவில்லை.
அவள் கையைத் தட்டிவிட்டவன் அவள் ஆடையை மொத்தமாக களைய முற்பட.. அந்த நேரம் தான் வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
இதை எதிர்பார்த்திராத விஜேஷ் “யாரா இருக்கும் ” என்று நினைத்தவன் வேகமாக அறைக்குள் இருந்து வெளியே வந்தவன் கதவு பக்கம் இருந்த ஜன்னல் வழியே திரை சீலையை லேசாக ஒதுக்கிவிட்டு பார்த்தான்.
அங்கே கேட்டிற்கு வெளியே கர்ணனின் கார் நிற்க..
“இவனா? இவன் எதுக்கு இந்த நேரம் இங்க வந்திருக்கான் ” என்று யோசித்தவன் அப்படியே தலையை சாய்த்து வாசலை பார்க்க..
அங்கே வாசலில் நின்று இருந்த கர்ணன் திரும்பி தன் பைக்கைப் பார்ப்பதை கவனித்தான் விஜேஷ்.
“ஓஹ்! ஷிட்! இவனுக்கு நான் இங்க இருக்குறது தெரிஞ்சிருக்குமே .. இப்போ என்ன பண்றது ” என்று யோசித்தபடி கர்ணனைப் பார்க்க..
விஜேஷின் பைக்கையே பார்த்துக்கொண்டிருந்த கர்ணனுக்கு ஏதோ புலப்படுவது போல இருக்க.. சட்டென அவன் சுருங்கிய முகம் பிரகாசமானது . “இது விஜேஷ் பைக் தானே.. ” என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டவன் ‘அவன் பைக் இங்க எப்படி?” என்று யோசித்தவனுக்கு ஏதோ புரிவது போல இருக்க..
நிலாவும் , அவனும் அடிக்கடி ஆபிஸில் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை தான் பார்த்திருக்கிறான். ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவன் இங்கு இருக்கிறான் என்றாள் அவர்கள் இருவருக்குள்ளும்.. என்று யோசித்தவன் முகம் இறுகியது,
கை முஷ்டியை இருகப் பிடித்தவன் “விஜேஷை வீட்டுக்கு யாரும் இல்லாத அப்போ கூப்பிட்டிருக்கான்னா.. அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ கிளோஸ்னு தானே அர்த்தம். அப்போ இவன் கூட இருக்க தான் அவ அம்மாகிட்டே உடம்பு முடியாலையின்னு பொய் சொல்லி இருக்கா ” என்று அவன் மூளை சரியாக யோசித்தது,
அவள் மேல் அவனுக்கு லேசான ஈர்ப்பு இந்த சில மாதங்களாக இருந்தது உண்மை தான். ஆனால் நிலா விஜேஷை விரும்புகிறாள் என்று தெரிந்ததுமே அவள் மேல் இருந்த ஈர்ப்பு குறைவது போல தோன்றியது அவனுக்கு.
இதையெல்லாம் யோசித்தபடியே காலிங் பெல்லை மீண்டும் அழுத்தப் போனவன் “அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்க அப்போ எனக்கு இங்க என்ன வேலை வேண்டி இருக்கு. இவளுக்கு உடம்பு சரி இல்லேனு நினைச்சு நான் இங்க வந்தது தான் தப்பு ” என்று திரும்பி நடந்தான்.
அதை எல்லாம் ஜன்னல் திரை சீலையோடே பார்த்த விஜேஷ். “ஹப்பா! கிளம்பிட்டான். ” என்று நிம்மதியானான்.
வாசலில் இருந்து ஒரு அடி தூரம் தான் சென்றிருப்பான் கர்ணன் அப்போது வீட்டிற்குள் ஏதோ உடையும் சத்தம் கேட்க..
அந்த சத்தத்தில் கர்ணன் வேகமாக திரும்பிப் பார்க்க.. சரியாக அப்போது ஜன்னலில் நின்று தன்னையே பார்த்திருந்த விஜேஷைப் பார்த்துவிட்டான்.
கர்ணன் தன்னைப் பார்த்ததும் “ச்சே!.. ” என்று வேகமாக திரை சீலையை மூடியவன் திரும்பிப் பார்த்தான்.
அங்கே நிலா கிழிந்த தன் சுடிதாரை ஒரு கையில் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்தவள் மற்றொரு கையில் பூஜாடியை தனது பாதுகாப்பிற்காக உயர்த்திப் பிடித்திருந்தாள். அவளால் சரியாக நிற்க்கக் கூட முடியவில்லை. தட்டுத்தடுமாறி தன்னை நிதானித்து நின்றவள் “வெ.. வெளிய யாராவது இருக்கீங்களா?”என்று தன் பலம் மொத்தமும் சேர்த்து கத்தினாள்.
“காப்பாத்.. ” என்று அடுத்து அவள் கத்துவதற்கு முதல் ஓடிவந்து அவள் கையில் இருந்த பூஜாடையை பிடுங்கி வீசியவன் அவள் வாயை பொத்தி இருந்தான் விஜேஷ்,
நிலா அவனிடம் இருந்து தப்பிக்க திமிறினாள். ஆனால் அவளால் முடியவில்லை. உடல் சோர்ந்து அப்படியே மயங்கி அவன் மீதே சரிந்திருந்தாள்.
அவள் பாரம் தாங்காமல் விஜேஷ் கீழே விழுந்திருக்க..
வெளியே இருந்த கர்ணனுக்கோ.. எதுவோ சரி இல்லை என்று உள்ளுணர்வு சொன்னது. உள்ளே இருந்த நிலாவின் குரல் அவனுக்குக் கேட்டது. ஆனால் தெளிவாக இல்லை.
அடுத்து என்ன என்று கர்ணன் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. வேகமாக திரும்பி வந்தவன் வாசல் கதவை தன் பலம் மொத்தமும் சேர்த்து உதைத்திருக்க.. கதவு உடைந்து அவனுக்கு வழி விட்டிருந்தது.
உள்ளே வந்தவன் விழிகள் தரையில் விழுந்திருநத நிலாவும், அவளை தூக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த விஜேஷும் தான்.
கீழே மயங்கி இருந்தவளைப் பார்த்தான். அவள் உடை விலகி உள்ளாடை வரை வெளியே தெரிந்திருக்க.. வேகமாக அவர்களை நோக்கி கர்ணன் சென்றான்.
கர்ணன் கதவை உடைக்கவும் அதைப் பார்த்த விஜேஷ் அவளை அப்படியே தரையில் விட்டுவிட்டு அவனிடம் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில் கர்ணன் கையில் மாட்டிக்கொள்ளாமல் அவனுக்கு போக்குக் காட்டி ஓட முற்பட..
ஆனால் கர்ணனோ இரண்டே எட்டுக்களில் அவனைத் தாவிப் பிடித்து தரையில் தள்ளியவன் . விஜேஷின் கை பற்றி அவன் முதுகுக்குப் பின்னால் வளைத்துப் பிடித்தவன் அவன் மேல் ஏறி அமர்ந்து “என்ன டா பண்ணி வெச்சிருக்க அவள .. ” என்று ஆக்ரோஷமாக அவன் முதுகில் குத்தினான்.
“சார்.. வலிக்குது” என்று கத்திய விஜேஷ் கஷ்டப்பட்டு தன் மேல் இருந்தவனை கீழே தள்ளிவிட்டு அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து ஓடி இருந்தான்.
அவனை வாசல் வரை துரத்திக்கொண்டு ஓடிய கர்ணன் அப்டியே அவனை விட்டுவிட்டு வேகமாக நிலாவிடம் வந்தான் .
அவல் மயங்கித் தரையில் படுத்திருக்க.. அவள் கிழிந்த உடையும், அவள் நிலையும் கண்டவனுக்கு நடக்கவிருந்த சம்பவம் புரிந்திருந்தது,
அவள் அருகே மண்டி இட்டு அமர்ந்தவன் “நிலா!.. நிலா! ” என்று அவள் கன்னத்தில் அடித்தான்.
அவளோ லேசாக பிதற்றியபடி,. “டேய் விஜேஷ்.. என்கிட்ட வராத டா.. ” என்று கையை தரையில் துளாவியவள் , வீசி எறிந்த பூஜாடி அவள் கையில் பட அதை சட்டென எடுத்து யசோதிக்காமல் தன் முன் மண்டி இட்டு அமர்ந்து இருந்த கர்ணனை விஜேஷ் என்று நினைத்து அவன் நெற்றியில் ஓங்கி அடித்து இருந்தாள்.
கர்ணனுக்கே அவள் அடியில் தலை சுற்றியது. அடுத்த அடி அவள் முடிப்பதற்குள் அந்த பூஜாடியை பிடுங்கி வைத்தவன் “நிலா!.. என்னைப் பாரு , நான் விஜேஷ் இல்ல கர்ணன்.. என்னை பாரு .. உனக்கு என்ன ஆச்சு.. ” என்று அவள் கன்னத்தில் அடித்து அவளை சுயநினைவுக்கு கொண்டுவர முயன்றான்.
அவன் குரலை ஓர் அளவுக்கு அந்த நிலையிலும் அவதானித்து இருந்த நிலா சட்டென அவன் சட்டையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவள் “கா.. காப்பாத்துங்க.. ‘ என்றவள் ஒரு கையால் தன் உடையை இறுக்கிப் பிடித்தபடி மீண்டும் மயங்கி தரையில் சரிந்திருக்க..
அவளை அப்படியே அள்ளி மிக சாதாரணமாக அவள் மொத்த எடையை தூக்கிக்கொண்டவன் உள்ளே இருந்த பெட்ரூமிற்கு கொண்டு சென்று அவளை படுக்க வைத்தவன் தன் மொபைலை எடுத்து தனக்கு தெரிந்த டாக்டரிடம் விபரம் சொல்லி அழைத்திருந்தான்.
அவரும் உடனே கிளம்பி வந்தவர் நிலாவின் கோலத்தையும், அவள் நிலையையும் பார்த்தவர் “ஒரு பொண்ணை இந்த நிலைக்கு தள்ளி அவளை நாசம் பண்ண நினைச்சவனை சும்மா விடக்கூடாது சார். அவளுக்கு உணர்வுகளைத் தூண்டுற மருந்து கொடுத்திருக்காங்கனு பார்த்தாலே தெரியுது. அவங்க ப்ளட் சாம்பிள் எடுத்திருக்கேன். இதை டெஸ்ட் பண்ணின பிறகு தான் அது எந்த மாதிரியான மருந்து. அடுக்கு எப்படி டிரீட்மென்ட் கொடுக்கிறதுனு தெரியும் ” என்றார்.
டாக்டர் சொன்னதைக் கேட்ட கர்ணனின் முகம் இறுகியது. “அப்போ இப்போ என்ன டாக்டர் பண்றது? ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாமா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.
“இப்போதைக்கு வேண்டாம் சார். ட்ரிப்ஸ் போட்டிருக்கேன், தூக்க மருந்தும் கொடுத்திருக்கேன். ஆனா அந்த மருந்தோட வீரியம் அதிகம். அவங்க உடம்புல ஹீட் அதிகமாகும், ரொம்ப அன்-ஈஸியா ஃபீல் பண்ணுவாங்க. சுயநினைவு இல்லாம ஏதாவது பண்ணுவாங்க. நீங்க பக்கத்துலயே இருந்து அவங்க உடம்பு சூட்டைக் குறைக்க ஐஸ் வாட்டர் வச்சுத் துடைச்சு விடுங்க. அதுவே அவங்க உணர்வுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். அப்படியும் மீறி அவங்க ரொம்பப் போராடினா, உடனே எனக்குக் கால் பண்ணுங்க, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடலாம்” என்று சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பினார்.
கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்த கர்ணன், கட்டிலில் கிடந்த நிலாவைப் பார்த்தான். மருந்தின் தாக்கத்தால் அவள் உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியிருந்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. “எனக்கு உடம்பெல்லாம் எரியுது .. தாகமா இருக்கு.. தண்ணி.. தண்ணி வேணும் ” என்று தன் வறண்ட இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டே எழ முற்பட்டாள்,
“ஏய் நிலா ” என்று அவள் தோளைப் பற்றி மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் ட்ரிப்ஸ் கலந்து போகாமல் பார்த்துக்கொண்டவன் அருகே இருந்த நீரை எடுத்து அவளுக்கு புகட்ட..
அந்த பாட்டிலை வேகமாகப் பற்றியவள் அவசர அவசரமாக அந்த தண்ணீர் முழுவதும் குடித்து முடித்தவள் இன்னும் வேணும்.. ‘என்று கையில் இருந்த பாட்டிலை தூக்கி வீசிவிட்டு கட்டிலில் இருந்து இறங்க முயன்றாள்.
அவள் நிலை அறிந்து பொறுமையாக அவளைப் பிடித்து மீண்டும் கட்டிலில் படுக்க வைத்து அவளுக்கு போர்த்தி விட்டவன் அவளை அசையாமல் பிடித்துக்கொண்டு இருக்க.. மருந்தின் வீரியத்தில் சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.
உறங்கியவள் விழித்தாள் ஒரு பெரிய ரகளையே அங்கு அரங்கேறப் போகிறது . நாளை என்ன நடக்கும் என்று பார்க்கலாம் .
