EPISODE 75
நிலா கர்ணனின் கையைப் பிடித்துக் கொண்டே தூங்கி இருந்தாள்.
அவனும் அவள் அருகே அமர்ந்து ஒற்றைக்கையால் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரம் அவள் கைக்குள் இருந்த அவன் கை வளைக்கவும் அவளிடம் இருந்து தன் கையை இழுக்க முயன்றான். ஆனால், அவள் பிடி இறுகி இருந்தது.
தூக்கத்தில் கூட அவனை விடாமல் பிடித்தபடி உறங்கியவளுக்கு அது பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவன் கையை அவள் விடவே இல்லை.
அவள் சாதாரணமாக உறங்குவது போல தான் அவனுக்கு தோன்றியது. ஆனால் அந்த மருந்தின் வீரியம் சாதாரணமானதாக இல்லை. அவள் நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்த அந்த கொடிய மருந்து, அவள் மூளையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தது.
கண்மூடிக் கிடந்தவள், சில நிமிடங்களிலேயே மூச்சு வாங்கத் தொடங்கினாள். “ஆஹ்… தண்ணி.. தண்ணி வேணும்.. என்..என்னால முடியல… ரொம்ப எரியுது…” என்று புலம்பியபடியே திடீரெனக் கண் விழித்தாள் நிலா. அவள் கண்கள் இரண்டும் போதையிலும், மோகத்திலும் சிவந்து போயிருந்தன.
கர்ணன் சுதாரிப்பதற்குள், தன் கையில் ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ்ஸை ஒருவித ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தாள் நிலா. கையிலிருந்து ரத்தம் துளிர்ப்பதைக் கூட உணராதவள், விருட்டெனக் கட்டிலில் எழுந்து நின்றாள்.
“நிலா! என்ன பண்ற? ட்ரிப்ஸ ஏன் பிடுங்கின? கையில ரத்தம் வருது பாரு!” என்று கர்ணன் பதட்டத்துடன் அவளை நெருங்கினான்.
ஆனால் நிலாவோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை. “எனக்கு உடம்பெல்லாம் எரியுது… ஏனோ பண்ணுது… என்னால தாங்க முடியல…” என்று அழுதபடியே, தன் உடலில் இருந்த டாப்ஸை ஆவேசமாகக் கழட்ட முயன்றாள்.
“ஏய்! நிலா… வேண்டாம்… என்ன பண்ற நீ?” என்று கர்ணன் அவளை நெருங்கி அவள் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.
ஆனால், போதையின் வேகத்தில் இருந்த நிலாவிடம் அபாரமான பலம் வந்திருந்தது. கர்ணனின் பிடியிலிருந்து தன் கைகளை உதறியவள், அந்த உடையை உருவி எறிந்தாள். உள்ளாடையோடு கட்டிலில் நின்றவளைப் பார்த்த நொடி, கர்ணனின் மூச்சு நின்று தான் போனது . அவன் பார்வை இப்பொது தடுமாற, சட்டெனத் தன் முகத்தைத் திருப்பிக்கொள்ள முயன்றான்.
ஆனால் அவளோ அதற்கெல்லாம் நேரமே கொடுக்கவில்லை, கட்டிலுக்கு அருகில் நின்றிருந்த கர்ணன் மீது பாய்ந்தே விட்டாள் நிலா, தன் இரு கால்களாலும் அவனது இடையைச் சுற்றி வளைத்து, அவனோடு இறுக்கமாக ஒட்டிக்கொண்டாள்.
அவளது எதிர்பாராத அந்தத் தாக்குதலில் கர்ணன் நிலைதடுமாறிப் போனான். அவளது மென்மையான, ஆனால் அனலாய்க் கொதிக்கும் மேனி தன் மார்போடு அழுந்திய நொடி, கர்ணனின் ஒட்டுமொத்த நரம்புகளும் முறுக்கேறின. அவளைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அவன் கைகள் இயல்பாகவே அவளது வெற்று இடையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன.
அவளோ அவன் இடையில் அமர்ந்து அவன் கழுத்தை சுற்றி தன் கைகளை மாலையாகப் போட்டவள் அவன் இதழில் முத்தம் பதித்திருந்தாள் .
அவனுக்கோ பேரதிர்ச்சி.. உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகள் வேறு அவள் ஒற்றை இதழ் முத்தத்தில் கட்டவிழ்க்க காத்திருக்க.. அவளிடம் இருந்து தன் முகத்தை கஷ்டப்பட்டு பின்னிழுந்துகொண்டவன்
“நிலா… ப்ளீஸ்… கீழ இறங்கு…” என்று திணறினான். அவனது குரலிலேயே அவனது தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“முடியாது… எனக்கு வேணும் கர்ணா… எனக்கு உடம்பெல்லாம் நெருப்பா எரியுது … ப்ளீஸ்… ஏதாவது பண்ணு…” என்று உருகி குழைந்தாள், அவன் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவன் முகமெங்கும் முத்தங்களால் தன் உணர்வுகளை கொட்டத் துவங்கி இருந்தாள் நிலா.
போதை, மோகம், தாபம் என அனைத்தும் சேர்ந்து அவளைப் பாடாய்ப்படுத்த, அவளோ தன் செய்கைகளால் கர்ணனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் உடலின் சூடும், அவளது உதடுகளின் தீண்டலும், அவளது நெருக்கமும் கர்ணனின் ஆண்மையை உச்சக்கட்ட சோதனைக்கு உள்ளாக்கியது.
கர்ணனின் கைகள் அவளது முதுகிலும், இடையிலும் அழுத்தமாகப் பதிந்தன. அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தவன், தன்னை மறந்து அவள் சருமத்தில் தன் இதழ்களை அழுத்தினான். அவன் மூச்சுக்காற்று அனலாய்க் கொதித்தது. அவளை அப்படியே தூக்கிக்கொண்டு கட்டிலில் சாய்க்கலாமா என்று அவனது உணர்வுகள் அவனை உந்தித் தள்ளின.
“கர்ணா…” என்று நிலா அவன் காதோரம் தவிப்புடன் முனக, கர்ணனின் கட்டுப்பாடு நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தது.
அவனோ கண்கள் சிவக்க, அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதடுகளை நெருங்கியவன், அப்படியே அவள் போதை நிறைந்த கண்களைப் பார்த்தான். அங்கே காதல் இல்லை; தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் அளவிற்கான ஒரு வெறி மட்டுமே இருந்தது.
பல்லைக் கடித்துக்கொண்டு தன் மொத்த பலத்தையும் திரட்டிய கர்ணன், அவளை அப்படியே கட்டிலில் கிடத்தி, அருகிலிருந்த போர்வையை எடுத்து அவள் உடல் முழுவதையும் சுற்றி இறுக்கமாகப் போர்த்தினான். அவள் திமிறி எழ முடியாதபடி போர்வையோடு சேர்த்து அவளைத் தன் கைகளால் அணைத்துப் பிடித்தபடி, “நிலா… கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ… நான் டாக்டரை வர சொல்றேன்…” என்று தன் உணர்வுகளோடு போராடியபடி அவளைக் கட்டுப்படுத்த முயன்றான்.
போர்வையோடு சேர்த்துத் தன்னை இறுக்கிப் பிடித்திருந்த கர்ணனின் பிடியிலிருந்து நிலா ஆவேசமாகத் திமிறினாள்.
“விடுங்க… எனக்குத் தாகம் அடிக்குது… தொண்டையெல்லாம் வறண்டு போச்சு… தண்ணி வேணும்… ” என்று அவள் மறுபடியும் போதையில் பிதற்றத் தொடங்கினாள்.
கர்ணன் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே மேஜையில் இருந்த ஜக்கில் தண்ணீர் சுத்தமாக இல்லை. அவளை இந்த நிலையில் தனியாக விட்டுவிட்டுச் செல்ல அவனுக்குத் துளியும் மனமில்லை. மீண்டும் ஏதாவது செய்துகொள்வாளோ என்ற பயம் அவனுக்குள் இருந்தது.
ஆனால், அவளது வறண்ட உதடுகளையும், தாகத்தில் அவள் தவிப்பதையும் பார்த்தவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
“சரி, சரி… கத்தாத… ரெண்டு நிமிஷத்துல தண்ணி எடுத்துட்டு வர்றேன். இங்கேயே படுத்திரு, எங்கேயும் எழுந்து போகக் கூடாது” என்று அவளை எச்சரித்து, போர்வையை அவள் மேல் நன்றாகச் சுற்றியவன் , அவளைத் தனியே விட்டுவிட்டு வேகமாகச் சமையலறைக்கு ஓடினான் தண்ணீர் பிடிக்க..
சமையலறைக்குச் சென்றவன், பதட்டத்தில் ஃபிரிட்ஜைத் திறந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டே டாக்டருக்கு கால் செய்ய தன் போனை எடுத்தபடி திரும்ப..
அங்கே… போர்த்தியிருந்த போர்வையைக் களைந்துவிட்டு, வெறும் உள்ளாடையோடு தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தாள் நிலா!
அவளை அந்தக் கோலத்தில் மீண்டும் பார்த்ததும் கர்ணனுக்கு அதிர்ச்சியில் மூச்சே நின்று போனது போலிருந்தது. சட்டெனத் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டவன், “நிலா! என்ன பண்ற நீ? ஏன் எழுந்து வந்த?” என்று பதறினான்.
ஆனால் அவளோ எதையும் காதில் வாங்கவில்லை. கர்ணனின் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை ஆவேசமாகப் பிடுங்கியவள், கடகடவெனத் தண்ணீரைக் குடித்தாள். அப்படியும் உள்ளே எரிந்த நெருப்பு அடங்காததால், மீதமிருந்த குளிர்ந்த நீரை அப்படியே தன் தலையில் ஊற்றிக்கொண்டவள், “எரியுது… எனக்கு உடம்பெல்லாம் எரியுது…” என்று கத்தினாள்.
தண்ணீர் அவள் தலையில் வழிந்து, அவளது ஈரமான சருமத்தில் இறங்குவதை பார்த்த கர்ணனுக்கு அவளது நிலைமை முழுமையாகப் புரிந்தது. அந்த மருந்தின் உச்சக்கட்ட வெப்பத்தை அவளால் தாங்க முடியவில்லை.
இனியும் தாமதித்தால் அவள் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வாள் என்பதை உணர்ந்த கர்ணன், தன் தடுமாற்றத்தை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அவளை அப்படியே தன் கைகளில் அள்ளித் தூக்கிக்கொண்டு குளியலறைக்கு விரைந்தான்.
குளியலறைக்குள் சென்றவன், அவளைச் சுவரோடு சாய்த்து ஷவருக்குக் கீழே நிற்க வைத்து, சற்றும் யோசிக்காமல் குளிர்ந்த தண்ணீரரைத் திறந்து விட்டான்.
ஷவரிலிருந்து பீறிட்டு வந்த ஐஸ் போன்ற குளிர்ந்த நீர், நிலாவின் தலையில் கொட்டி அவள் உடல் முழுவதும் நனைக்கத் தொடங்கியது!
அவளை அந்த நிலையில் அவனால் பார்க்க முடியவில்லை. அவளை இப்படி அரைகுறை ஆடையோடு பார்க்கப் பார்க்க அவன் உணர்வுகள் தான் அவனை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.
அதனால் அவளை அங்கேயே விட்டுவிட்டு சிறிது நேரம் வெக்கியே நிற்கலாம், அவள் நிலை கொஞ்சம் சரியானதும் அவளை கூட்டி வரலாம் என்று நினைத்தவன் அங்கிருந்து செல்லப்போக..
“ப்ளீஸ்… போகாத… எனக்கு… எனக்கு ஒரு மாதிரி இருக்கு… என்னால முடியல…” என்று அழுதபடியே அவனது சட்டையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அவனோடு ஒன்றிப் போக முயன்றாள் நிலா. அவளது உதடுகள் தவிப்புடன் அவனது தாடையை உரசின.
கர்ணனுக்கு மூச்சு முட்டியது. அவள் இப்போது சுயநினைவில் இல்லை, இது அவள் இயல்பும் அல்ல, இது அந்த மருந்தின் வேலை என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால், நாளை
அவள் பார்வையில் தானும் ஒரு விஜேஷாகத்தான் தெரிவோம் என்ற எண்ணம் அவனை நிதானப்படுத்தியது.
அவன் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தியவன் “நிலா கொஞ்சம் பொறுத்துக்கோ.. சவர் கீழ கொஞ்சம் நில்லு. உடம்பு கொஞ்சம் இதமா இருக்கும். நான் … நான் போய் டாக்டரை வர சொல்றேன் ” என்று அவன் மீது மொத்தமாக சாய்ந்து அவனையும் சவருக்குள் இழுத்துவிட்டிருந்த நிலாவை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தினான்.
“கர்ணா!.. எனக்கு டாக்டர் எல்லாம் வேணாம். நீ தான் வேணும்.. ப்ளீஸ் ஏதாவது பண்ணு.. ” என்று அவனை இழுத்து மீண்டும் அவன் இதழில் முத்தம் பதித்தாள்.
இம்முறை அவன் கட்டுப்பாடுகள் எல்லாம் கரையத் துவங்கியது. இருந்தும் அவளை தன்னிடம் இருந்து விளக்கி விட்டு அவளைப் பார்த்தான்.
அவள் உள்ளாடைகள் நனைந்த மேனி முழுதும் அப்பட்டமாக நனைத்து என அவளை அந்த நிலையில் பார்த்தவனுக்கு தானாக போதை ஏறியது. அவள் மீதான போதை. கொலுக்கு மொழுக்கென்று அவள் இருக்க.. அது கூட ஒருவித அழகு தான் என்று அவன் கண்ணிற்கு அப்போது தோன்றியது, லேசான தொப்பையும், திரண்டிருந்த அவள் மார்பும்.. உடலில் இருந்த சதைப்பற்றுள்ள அவளை பார்க்க பார்க்க அவனுக்கு தான் உணர்வுகள் இப்பொது அவளை எடுத்துக்கொள்ள சொல்லி தூண்டிக்கொண்டே இருந்தது.
அவனால் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரவே கஷ்டமாக இருந்தது. அபப்டியே அவன் கஷ்டப்பட்டு தன்னை ஒருநிலைப் படுத்த முயன்றாலும் அவளோ அவன் மேல் உரசி .. அவனை முத்தமிட்டு என்று ஏதாவது செய்து கொண்டே இருந்தாள்.
“நிலா ப்ளீஸ் வேணாம் “என்று அவன் சொல்ல..
அவளோ அதை காதில் வாங்கும் நிலையை எல்லாம் தானியே விட்டிருந்தாள்.
வேக வேகமாக அவன் சட்டை பட்டன்களை அவள் கழட்ட..
அவனோ அவள் கையை வேகமாக பற்றி தன்னிடம் இருந்து விலகி இருந்தான்.
அவளோ அவன் கையை தட்டிவிட்டு திறந்திருந்த அவன் சட்டையினூடே தெரிந்த அவன் தேகத்தை மோகம் கொள்ளப் பார்த்தவள் குனிந்து அவன் மார்பில் ஆழ முத்தம் வைத்துக்கொண்டே அவன் சட்டையை அவிழ்த்து இருந்தாள்..
இவங்க பிரச்சனை இன்னும் முடியுற போல தெரியல அடுத்த எபியில பார்க்கலாம் வேற என்ன பண்ண 😁😁😁😁
