News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

எனை மாயம் செய்யும் ராட்சசன் 28

by Layas Tamil Novel
191 views
A+A-
Reset

EPISODE 28

ஜனனியுடன் விளையாடிக் கொண்டே அவர் கைகளில் சிக்காமல் ஓடி வந்த மீனு அவள் எதிரே நின்றவர் மீது மோதி விட மோதிய வேகத்தில் தரையில் பொத்தென விழுந்தாள் .

கீழே விழுந்தவளை பார்த்து கைநீட்டி என்ன “மீனு பார்த்து வரமாட்டியா?” என கேட்டுக்கொண்டே அவளைப் பார்த்து சிரித்தபடி நின்று இருந்த நபரை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தால் மீனு .

அவள் மட்டுமல்ல அங்கே இருப்பவர்களும் அதே ஆச்சரியத்தோடு தான் ஜெயை

பார்த்தனர் .

“என்ன அப்படி பார்க்கிற மீனு இதுக்கு முன்ன என்ன நீ பார்த்ததே இல்லையா? என்ன?” என்றான் சிரித்தபடி அவளை தூக்கி விட்டு .

எப்போதும் வீழ்ச்சாரில் வளம் வரும் ஜெய் இன்று நடந்து வந்து அவள் முன் நிற்பதை பார்த்து அவள் மட்டும் இல்ல அவனைச் சேர்ந்த அனைவருமே அதிர்ச்சியாகினர் . ஆனால் ஜெய்யின் அப்பா கஜேந்திரன் மட்டும் தன் மகனை பார்த்து சிரித்தபடி நின்று இருந்தார் .

அவள் இன்னமும் ஆச்சரியம் மாறாமல் ஜெய்யை வாயை பிளந்து பார்த்துக் கொண்டு நின்றிருக்க .. அவள் தாடையில் கை வைத்து அவள் வாயை மூடிய ஜெய் சிரித்தபடி “என்ன எல்லாரும் என்ன அவ்வளவு அதிர்ச்சியா பாக்குறீங்க. என்னடா வீழ்ச்சார்ல சுத்திட்டு இருந்தவன் இப்போ நடந்து வரான்னு தானே பாக்குறீங்க” என்றான்.

மீனுவின் அருகில் இருந்த ஜனனி முதற்கொண்டு மற்றவர்கள் “ஆமாம்” என்பது போல மெல்ல தலையை ஆட்ட.

“டேய் ஜெய் என்ன டா!! இது நீ நடந்து வர.. என்னால இதை நம்ப முடியலையே நிஜமாவே இது நீதானா ? ” என்று சூர்யா ஜெய் அருகில் வந்து கட்டிக்க கொண்டான் சந்தோசமாக .

“அண்ணா எப்போ இருந்து நீ நடக்க ஆரம்பிச்சீங்க.. உங்க கூடவே நான் இருந்தேனே எனக்கு கூட இது தெரியலையே” என்று சந்தோஷ் செல்லமாக கோபித்துக் கொண்டான்.

அவர்களை பார்த்து சிரித்தவன் . எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. உங்க எல்லார்கிட்டயும் இவ்வளவு நாளா நான் ஊனமானவனா நடிச்சதுக்கு என்றான்.

அவன் அருகில் வந்த கஜேந்திரன் அனைவரையும் பார்த்து என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்னரே அவனுடைய உடைந்த காலிற்கு டிரீட்மென்ட் பார்க்க ஆரம்பித்து இருந்தான் அதற்கு முக்கிய காரணம் ரியா தான் . அவ தொடர்ந்து ஜெய்யை கால் உடைந்ததை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்துக்கொண்டே இருக்கவும் ஜெய் விரக்த்தியின் உச்சத்திற்கே சென்று விட்டான்.

“திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்த ஜெய்யை வலுக்கட்டாயமாக அவன் பின்னால் சுற்றித்திரிந்து காதலித்த ரியா அவன் நன்றாக ஆரோக்கியமாக இருந்த வேலையில் அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள் அவனுக்கு கால் உடைந்தது என்று தெரிந்ததும் அவனை வேண்டாம் என உதறித் தள்ளினாள் அது அவன் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது “என்ற கஜேந்திரன் தன் மகன் ஜெய்யை பார்த்தார் .

அவர் சொன்னதை கேட்ட ஜெய் “என்னப்பா சொல்றீங்க!! நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேனா? அப்புறம் எப்படி ரியாவை கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிச்சேன்” என்றான் புரியாமல் .

“அத நான் பிறகு சொல்றேன் பா இப்போ அது ரொம்ப முக்கியமே கிடையாது ” என்றவர் .

திரும்பி மீனுவை பார்த்த கஜேந்திரன் “அம்மா மீனு உனக்கு என் பையன் அவன் உன்ன ஏமாத்திட்டான் என்கிற நினைப்பு கண்டிப்பா இருக்கும். ஏன்னா ஜெய் இத்தனை நாள் உன்கிட்ட ஊனமா தானே நடிச்சிட்டு இருந்தான். கல்யாணமான பிறகு கணவன் மனைவிக்குள்ள எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு கண்டிப்பா எதிர்பார்ப்பு உன்கிட்ட இருந்திருக்கும் . அதை என் மகன் பூர்த்தி செய்யவில்லை என்கிறது எனக்கும் நல்லாவே தெரியுது . ஆனா அந்த சூழ்நிலையில அவனால உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்க முடியாது . ஏன்னா அவன் ட்ரீட்மென்ட் எடுத்து உடம்பு குணமான உடனேயே இந்த விஷயத்தை ரியாகிட்ட சொல்லலாம்னு ரியாவை பார்க்க அவள் வீட்டிற்கு புறப்பட்டேன் . ஆனால் ஜெய் என்னை தடுத்துட்டான். ஏன் ப்பா இந்த நல்ல விஷயத்தை நாம் ரியாகிட்டே சொன்னா ரொம்ப சந்தோசப்படுவான்னு நான் கேட்டேன் “

அதற்கு ஜெய் “நான் நல்லா இருந்த காரணத்தினால் தானே அவ என்ன துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான்னு சொன்னீங்க . இந்த நிலைமையில் இருக்கிற என்னை அவ முழு மனசோட ஏத்துக்கணும் அப்படி ஏற்றுக்கொள்வது தான் என்னை காதலிச்சாங்குறதுக்கு அர்த்தம்னு சொல்லி அவனோட தம்பிகிட்டயும் ரொம்ப வருஷமா கூட நட்ப பழகுற சூர்யாகிட்ட இருந்தும் கூட இந்த விஷயத்தை மறச்சிட்டான்”என்றவர் தன் மகனை பார்த்தார் .

அவர் சொன்னதில் இருந்த நியாயம் அனைவர்க்கும் சரி என்று தோன்றவே அனைவரும் ஜெய்யின் உடல் குணம் ஆகி விட்டதை நினைத்து சந்தோசத்தாய் அவனிடம் பகிர்ந்து கொண்டு இருக்க…

இங்கே அவனையே இன்னமும் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டு இருந்த மீனுவோ எதுவும் பேசாமல் நின்று இருந்தால்.

மற்றவர்களுடன் பேசி ஜெய் சந்தோஷப்பட்டாலும் மீனு மட்டும் தன்னிடம் எதுவம் பேசாமல் இருப்பது அவனுக்கு முழுமையான சந்தோசத்தை தரவில்லை . அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெய் .

ஜெய்யிடம் வந்த ஜனனி அவன் கைகளை பிடித்துக் கொண்டு “மாப்பிள்ளை எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு . என் மகள் வாழ்க்கையை நினைச்சு இல்ல ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து நீங்க இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் மனாவருத்தம் எல்லாம் மாறி நீங்க நல்லபடியா குணம் ஆனதை நினைச்சு எனக்கு இன்னிக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு” என்றவர் .

மீனுவிடம் திரும்பி ” ஏய் மீனு என்ன டி பாத்துட்டு நின்னுட்டு இருக்க…மாப்பிள்ளைக்கு குணம் ஆனது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம் . நீ மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு அன்னைக்கு பால்கோவா செய்து கொடுத்தே இல்ல அதே போல இணைக்கும் செஞ்சு மாப்பிள்ளைக்கு எங்க எல்லாருக்கும் கொடு” என்றார் .

“அம்மா எனக்கு காலேஜ் போக நேரம் ஆச்சு . இப்போ அதெல்லாம் செய்துட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை ” என்றால் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் .

” என்ன டி பொல்லாத காலேஜ் இன்னைக்கு ஒரு நாள் நீ லீவு போடு நாம் இந்த சந்தோசத்தை நல்லா விருந்து சாப்பாடு செய்து மாப்பிள்ளைக்கு கொடுக்கலாம் . நாம எல்லாரும் இன்னிக்கு சந்தோசமா எங்கயும் வெளியே போயிடு வரலாம் ” என்றார் ஜனனி .

அதற்கு மீனு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…ஜெய் அவள் மனதில் எழும் உணர்வுகளை ஓர் அளவுக்கு புரிந்தவனாக . ” அத்தை இப்போ என்ன உங்களுக்கு இந்த சந்தோசத்தை கொண்டாடணும் அது தானே ” என்றான் ஜெய் ஜனனியிடம் .

” ஆமா மாப்பிள்ளை ” என்றார் ஜனனி .

” அப்போ ஒன்னு பண்ணலாம் .இப்போ மீனு , பூஜா ரெண்டு பெரும் காலேஜ் போயிடு வரட்டும் . அவங்க ரொம்ப நாள் கழிச்சு திரும்ப காலேஜி போறதை நம்ம தடுக்க வேண்டாம். அவங்க காலேஜ் முடிஞ்சதும் நாம எல்லாரும் சேர்ந்து இன்னிக்கு ஈவினிங் வெளியே போலாம்” என்றான் .

அவன் சொல்வதும் சரியாக தான் என்று ஜனனி தலையை ஆடியவள் சரி அப்போ வாங்க எல்லாரும் சாப்பிடலாம் ஆறிட போகுது சாயங்காலம் எல்லாரும் வெளியே போகலாம் என்றவர் அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறினார்.

சாப்பிட்டு முடிக்கும் வரை மீனு திரும்பி ஜெய்யை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. ஆனால் அவனோ நொடிக்கு ஒரு முறை மீனுவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தான் . இதை மிருதுளா கவனித்துக் கொண்டு இருந்தால் அவளை போலவே சூர்யாவும் மீனு முகம் ஏதோ போல இருப்பதும் ஜெய் அவளை திரும்பி திரும்பி பார்ப்பதும் இருப்பதுமாக இருப்பதை கவனிக்க தவறவில்லை .

இப்பொது இதை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள வேண்டாம் . பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

அவசரமாக சாப்பிட்டு முடித்த மீனு ” ஏய் பூஜா இன்னும் என்ன டி சாப்பிட்டு இருக்க ..காலேஜ் போகணுமில்ல சீக்கிரமா சாப்பிட்டு வாடி” என்று தன் பையை எடுத்துக்கொண்டு பூஜாவை அவசர படுத்த ..

” அண்ணி நானும் பூஜாவும் ஒரே காலேஜ் தானே நான் அவளை கூட்டிட்டு போறேனே” என்றான் .

உடனே திரும்பி பூஜா சந்தோஷ முறைத்தவள் ” அக்கா நீ வெய்ட் பானு நான் வந்துடறேன் நம்ம ரெண்டு பேருமே போய்க்கலாம் ” என்று சாப்பிட்டுக்கொண்டு iruntha தட்டிலேயே கையை கழுவி விட்டு எழுந்தாள்.

” அட என்ன பூஜா நீ இவ்வளவு தத்தியா இருக்க,, என் அண்ணாவுக்கும் உன் அக்காவுக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு அவங்க ரெண்டு பெரும் ஒண்ணா இருக்கட்டும்னு நான் நாசூக்கா நீயும் நானும் ஒண்ணா கிளம்பி போலாம். அண்ணாவை கொண்டு போய் அண்ணியை காலேஜில் ட்ரோப் பண்ண சொல்லமானு நினைச்சேன் .இப்படி பிளானையே நீ கெடுக்குறியே ” என்றான் சந்தோஷ் .

அவனை முறைத்தவள் “நீ எதுக்கு இப்போ அவங்க ரெண்டு மேலையும் அக்கறை இருக்கறவன் மாதிரி பேசுறேன்னு எனக்கு நல்லாவே தெறியும் ” என்று நினைத்தவள் வேறு வழி இல்லாமல் அவனுடன் செல்ல சம்மதித்தாள்.

“அப்டியா நான் வெளியே கொஞ்சம் ஷாப்பிங் போகலாம்னு நினைச்சு இருந்தேன் மீனு, பூஜாவை கார்ல காலேஜில் ட்ரோப் பண்ணிட்டு அப்டியே போலாம்னு நினைச்சேன் . சரி பரவாயில்லை நீங்க அவங்க அவங்க வேலையை பாருங்க நான் மட்டும் தனியா ஷாப்பிங் போய்க்குறேன்” என்றால் மிருதுளா .

அவள் சொல்லி முடித்ததும் தான் தாமதம் ” அயோ என்னங்க நீங்க என்கிட்டே சொல்ல வேண்டியது தானே . நான் உங்களை கூட்டிட்டு போயிருப்பேனே. நானும் வீட்டில் சும்மா தானே இருக்கேன் .” என்றான் வழிந்துகொண்டே சூர்யா .

” உங்க கூடவா…” என்று அவனை ஒரு மாதிரியாக பார்த்த மிருதுளாவை I பார்த்தது

” என்னங்க இப்படி கேக்குறீங்க..அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன் “என்று அவள் கையில் வைத்து இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு பொய் அங்கே இருந்த காரை எடுக்க செல்ல..

அவனை பார்த்து மற்றவர்கள் சிரிக்க…சந்தோஷோ “ம்ம்..நான் என் ஆளை பிக்கப் பண்ண ஒரு பிளான் போட்டா ..நீ உன் ஆளை பிக்அப் பண்ண ஒரு பிளான் போடுற..நீ நடத்து சூர்யா ” என்று அவனோடு சென்று கொண்டே கூறினான் .

” டேய் சத்தமா சொல்லாத ட..யாரு காதுலயும் விழுந்துற போகுது ” என்றவன் காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்ய ..

சந்தோஷ் சென்று பைக்கை எடுத்து வந்தவன் பூஜாவை பார்க்க… அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷ் செல்வது சந்தோசமாக இருந்தாலும் . அவன் மீது ஏனோ அவளுக்கு சற்று கோபமும் வரத்தான் செய்தது .அனால் ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை யோசனையோடு கிளம்பி அவனுடன் காலேஜ் புறப்பட்டாள் .

ஹாலில் மீனு தயங்கியபடி நின்று இருக்க..மிருதுளாவும் அப்படியே நின்று இருந்தாள்.உடனே மீனு ” ஏய் ஏன் டி நிக்குற சூர்யா வெயிட் பண்ணுறாரு பாரு வா போலாம் அப்படியே அவரை காலேஜில் என்னை ட்ரோப் பண்ண சொல்லிறலாம் ” என்று அவள் கை பிடித்து அழைத்து செல்ல…

“ஏய் மீல்ஸ் நீ ஜெய் கூட வரலையிலா ? என்கூட வரேன்னு சொல்லிட்டு இருக்க..” என்றாள் .

” அவர் வரலையின்னு யார் சொன்னது . அவரும் தான் நம்ம கூட வருவாரு ” என்றவள் திரும்பி ஜெய்யை பார்த்து “நீங்க என்னை ட்ரோப் பண்ண காலேஜ் வரீங்க தானே ” என்றாள் .

தன்னோடு தனியாக வர பிடிக்காமல் எப்படி நேக்காக பேசி தன்னை அவளுடன் அவரவைக்கிறாள் எல்லாருடனும் சேர்ந்து என்று நினைத்த ஜெய் ” ம்ம்..போகாலாம் நானும் ஆபீஸ் பொய் ரொம்ப நாள் ஆச்சு .அப்டியே நனையும் ஆபீஸ் போயிடு வந்துடறேன் ” என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு .

“அத்தை நீங்க நைட் எதுவம் செய்ய வேணாம் நாம் எல்லாரும் வெளியே போறோம் என்ஜோய் பண்றோம் ஓக்கவா”என்றான் சிரித்த முகமாக .

” ஓகே மாப்பிள்ளை நானக் எல்லாரும் ஈவினிங் கிளம்பி ரெடி ஆஹ் இருக்கோம் நீங்க எங்கே வர சொல்றிங்களோ அங்கே வந்துடறோம் “என்றார் .

சரி என்று தலையாட்டிவிட்டு மீனுவுடன் கிளம்பி சென்றான்.

மிருதுளா முன்னாள் அமர்ந்து கொள்ள ஓன்னால் வேறு வழி இன்றி மீனு ஏறிக்கொள்ள… அவள் அருகில் வடன்னு சற்று நெருக்கமாகி ஜெய் வேண்டுமென்றே அமர்ந்து கொண்டான்.

“என் ஆளை உசார் பண்ண நான் போட்ட பிளான் எல்லாம் வீணா போயிருச்சே..இப்படி இவங்க ரெண்டு பெரும் தனியா போகாம எங்க கூட வந்துட்டாங்களே ” என்று முணுமுணுத்த படி சூர்யா காரை ஸ்டார்ட் செய்துகொண்டு கிளம்பினான் .

அவன் பேசியது அப்பட்டமாக காரில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த மிருதுளாவிற்கு நன்றாகவே கேட்டது . அவனை நினைத்து சிரித்தவள் அதை அவன் பார்த்துவிடக் கூடுது என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் .

இங்கே பின்னாள் ரொமான்ஸ் செய்ய வேண்டிய நம்ம ஹீரோ எப்படி மீனுவிடம் பேச்சை ஆரம்பிப்பது .இவர்கள் வேறு கூட இருக்கிறார்காளே என்று யோசனையில் அவளை திரும்பி பார்த்தான்.

மீனுவோ ஜெய் இருந்த பக்கமே திரும்பாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் .

அவளையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெய் அவள் கையை பிடித்து அவளை தன் பக்கம் திருப்பினான் .

தன் கையை ஜெய் பிடித்ததும் திரும்பி அவனை பார்த்தவள் அவனிடம் இருந்து தன் கையை எடுக்க போக.. அவள் கையைவிடமால் பிடித்துக்கொண்டு பார்வையாலேயே அவளை பார்த்து கெஞ்சினான்.

அவளும் அமைதியாக எதுவும் எதிர்ப்பு சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டால் மிருதுளாவும் , சூர்யாவும் வேறு அங்கு இருக்கிறார்களே என்று அமைதியாக இருந்துவிட்டாள்.

அவள் கையில் அழுத்தம் கூட்டி ஜெய் மீனுவை தன் பக்கம் திருப்ப…

அவனை திரும்பி முறைக்க போன மீனுவை சிறிதும் யோசிக்காமல் இழுத்து அவள் இதழில் முத்தம் வைத்தான் ஜெய்.

காருக்குள் இருந்த மற்ற இருவரும் முத்த சத்தம் தீவிரமாக கேட்க ஒரு நிமிடம் ஆடிப்போனவர்கள் திரும்பி பின்னால் பார்க்க… அங்கே மீனுவின் உதட்டில் சாறு பிழிந்து எடுத்தவன் போல உறிஞ்சி குடித்து முத்தம் வைத்தவன் அவளை விட்டு பிரிந்து இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்த சூர்யா, மிருதுளாவை பார்த்து. ஜூஸ் சூப்பரா இருக்கு அதன்… என்றான்.

“நீ நடத்து டா நடத்து… இங்கே ரெண்டு சிங்கள் இருக்கோம் அதை கொஞ்சம் ஞாபகம் வெச்சிட்டு நாங்க இல்லாத அப்போ இதை எல்லாம் செய் ராஜா..” என்றவன் திரும்பி காரை ஓட்டிக்கொண்டே… கொஞ்சம் விட்டா காருக்குள்ளையே கசமுசா பண்ணிருவான் போல.. என்று புலம்பினான் சூர்யா.

மீனுவோ அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளியவள் அவன் தோளில் அடித்தாள். அவள் கையை பிடித்தவன் பேசாம வா இல்லை மறுபடி னான் ஜூஸ் குடிச்சிருவேன் என்றான் குறும்பாக.

அவன் பிடித்திருந்த தன் கையை. உதறிவிட்டு விடுக்கென தன் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.