EPISODE 10
இனியாவை விஜய் அதட்டியதில் அவள் அழுகையை நிறுத்தவே இல்லை சொல்லி சொல்லி பார்த்தவன் அதற்கு மேலும் முடியாமல் “என்னவோ பண்ணு ” என்று எழுந்து தன் அறைக்கு சென்றான் .
அவன் மேலே ஏறி அவன் அறைக்குள் சென்று கதவடைத்தது வரை அழுதபடி பார்த்துக்கொண்டு இருந்த இனியா அவன் ரூமிற்குள் சென்று கதவை சாற்றியதும் தான் தாமதம் உடனே தன் அழுகையை நிறுத்தியவள் சென்று டிவியை ஆன் செய்தவள் நேராக கிச்சனுக்கு சென்று ஏற்கனவே பொறித்துவைத்து இருந்த பாப்கார்னை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்து இருந்தாள் .
சேனலை மாற்றி மாற்றி பார்த்தவள் கடைசியாக ஒரு படத்தை பார்த்ததும் அதை பார்க்கலாம் என்று முடிவெடுத்து அதை ஓடவிட்டாள் .
பாப்கார்னை சாப்பிட்டுக்கொண்டே படம் பார்க்க ஆரம்பித்தவள் சத்தத்தை அதிகம் செய்து கேட்டுக்கொண்டு இருந்தாள்.
இங்கே தன் அறைக்கு வந்த விஜய் உடை மாற்றி வடன்ஹாவான் அவன் அறைக்குள் இருந்த மற்றொரு அறைக்கு சென்று மதுபாட்டிலை எடுத்துவந்தவன் மெத்தையில் அமர்ந்து பாட்டிலை எடுத்த்து அப்படியே வாய்க்குள் சரித்தான் .
அவன் எவ்வளவு முயன்றாலும் தாமரை வம்சியை திருமணத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “ஏன் டி… ஏன் இப்படி பண்ணின.. அவங்க தான் முட்டாள் தனமா உன்னையும் , வம்சியையும் கல்யாணம் செய்துக்க சொல்லி கம்பெல் பண்ணினா நீயும் சரினு கழுத்தை நீட்டிருவியா டி… எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. நான் விஜய் மாமாவை தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லி இருக்கணுமா? இல்லையா ?” என்றவன் மீண்டும் மதுவை குடிக்க ஆரம்பித்தான் .
அவர்கள் இருவரும் பழகிய நாட்கள் பேசிய வார்த்தைகள் என்று ஒவ்வொன்றும் அவன் மனக்கண் முன் வந்து அவனை வாட்டி வதைக்க துவங்கியது .
தாமரையுடன் அவர்கள் காதல் செய்த நாட்கள் வந்து பழைய நினைவுகள் அவனை வாட்டி வதைக்க… அவனால் அதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை “தாமரை… தாமரை…. தாமரை….. ” என்று அவள் பெயரை அவன் மனம் ஓலமிட்டது .
“மாமா … ஊருக்கு எப்போ கிளம்பி வருவீங்க. சீக்கிரம் வந்திருங்க மாமா…” என்று அவள் பேசியது நினைவில் வர…
“நான் மட்டும் அப்போவே கிளம்பி இந்தியா வந்திருந்தா இந்த நேரம் தாமரையை நானே கல்யாணம் செய்திருப்பேனே… ச்சே… “என்று தன்னையே நொந்துகொண்டவன் பின் இனியாவை அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து அவன் காப்பாற்றியததாள் தான் தன்னால் சரியான நேரத்திற்கு இந்திய வரமுடியவில்லை என்று சிந்தனை இனியாவின் மீது திரும்பியது .
“எல்லாம் அவளால வந்தது . அவளை யாரு அந்த கும்பல்கிட்டே போய் மாட்டிக்க சொன்னது . நான் மட்டும் சரியான நேரத்துல போய் அவளை காப்பாத்தாம விட்டு இருந்தா இந்த் நேரம் அவளை அவங்க என்ன செய்து இருப்பாங்களோ தெரியல… ” என்று அவளை பற்றி ஓடிய தன மனதை “இப்போ எதுக்காக இனியாவை நினைச்சு நீ கவலை படுற… அவ தான் உன்கூட இப்போ உன்வீட்டுல பாதுகாப்பா இருக்காளே… உனக்கே இங்கே ஆயிரத்து எட்டு பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்க இப்போ இந்த நினைப்பு உனக்கு தேவையா “என்று மற்றொரு மணடது அவனிடம் கேள்வி கேட்டது .
“நீ சொல்றதும் சரிதான் இனி என்ன நடந்து என்ன பிரயோஜனம் அதுதான் எல்லாமே முடிஞ்சு போய்டுச்சே… என் வாழ்க்கையை விட்டு எண்ணைவிட்டுட்டு என் தாமரை தூரமா போய்ட்டாளே ” என்று அவன் மனம் அழுதது .
“அவ என்ன உன்னை விட்டுட்டு எங்கயாவது போய்ட்டாளா ? என்ன ? இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல … நீ வீட்டில் இருக்குறவங்ககிட்டே உங்க ரெண்டு பேரோட காதலை சொல்லி அவளை உனக்கு கல்யாணம் செய்த்துக்கொடுக்க சொல்லி பேசு” என்றது மற்றொரு மனம் அவனிடம் சூழ்நிலைக்கு எதிராக அவன் எண்ணங்களை தூண்டி விட துவங்கியது .
“உனக்கு அறிவு எதுவும் இருக்கா என்ன… தாமரைக்கு என் தம்பி கூட கல்யாணம் ஆகிருச்சு . அவ இப்போ என் தம்பியோட மனைவி அவளை எப்படி நான் மறுபடியும் கல்யாணம் செய்துக்க முடியும் ” என்று தூண்டிய மனதிடம் கேள்விகேட்டான் .
“உன் தம்பிகிட்ட நீங்க ரெண்டு பேரும் காதலிச்ச விஷயத்தை எடுத்துச் சொல்லி தாமரையை உனக்கே கொடுத்துட சொல்லி கேட்க வேண்டியதுதானே” என்றது அவன் மனம் .
அவன் மனம் சொன்ன விஷயத்தை யோசித்துப்படியே கையில் இருந்த மொத்த பாட்டிலையும் குடித்து முடித்து இருந்தான் விஜய்.
முழு பாட்டில் மதுவையும் குடித்ததால் போதை தலைக்கு இருந்தது விஜய்க்கு . அப்படியே மயக்கத்தில் மெத்தையில் சரிந்தான் .
பாவாடை தாவணி அணிந்து கையில் கண்ணாடி வளையல்கள் நெற்றி சுட்டி என்று பெரிய மனுஷியானதும் முதல் முறையாக தான் அணிந்திருந்த பாவாடை தாவணியில் விஜயிடம் கொண்டு வந்து காட்டி அவளிடம் “நல்லா இருக்கா விஜய் மாமா!!” என்று கண்களில் நம் காதல் வழிய வந்து கேட்டு தாமரையின் முகம் வந்து அவனை வதைத்தது .
இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை சொல்லிக்கொள்ளாமலேயே ஆனால் இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்றும் வீட்டுக்கு தெரியாமலேயே இத்தனை நாள் தங்கள் காதலை வளர்த்திருந்ததெல்லாம் விஜய்க்கு தோன்றவே தான் தப்பு செய்துவிட்டோம் என்று இருந்தது .
அவள் நினைவுகளிலேயே தூங்கியும் போனான். நள்ளிரவை தாண்டி ஏதோ சத்தம் கேட்டு கண்விழித்தான் விஜய் அவன் போன் தான் அலறிக்கொண்டு இருந்தது . வாட்சில் மணியை பார்க்க அது 1 என்று காட்டியது .
இந்த நேரத்த்தில் யார் போன் செய்திருப்பார்கள் என்று யோசனையிலேயே மெத்தையில் படுத்திருந்தவன் தன் கையை நீட்டி அருகில் இருந்த போனை எடுத்து திரையை பார்த்தான் தாமரை என்று வந்திருந்தது . அவள் பெயரை பார்த்ததும் வேகமாக எழுந்தவன் போனை அட்டென்ட் செய்து “தாமரை… என்ன இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க… எதுவும் பிரச்சனையா?” என்றான் அவசரமாக .
“விஜய் மாமா ஏன் இவ்ளோ நேரம் ஆகியும் நீங்க இன்னும் வீட்டுக்கு வரல.. என்ன ஆச்சு ?” என்றாள் ஒருவித அக்கறையோடு .
அவள் குரலில் இருந்த அக்கறையை உணர்ந்த விஜய் அதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் “நான் இப்போ வீட்டுக்கு வரலங்குறது தான் முக்கியமா. இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க.. வம்சி எதுவும் பார்த்தா உனக்கு தான் பிரச்சனை பேசாம போனை வை ” என்று அவளை திட்டிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தான்..
“ஹலோ.. ஹலோ… விஜய் மாமா..” என்று அழைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் விஜய் போனை கட் செய்துவிட்டது புரியவே தன் மீது கோபமாக இருக்கும் விஜய்யை நினைத்து கவலை பட்டவள் பாத்ரூமை விட்டு மெல்ல வெளியே வந்து வம்சியை பார்த்தாள் . அவன் வழக்கம் போல அறையில் இருந்த சோபாவில் உறங்கிக்கொண்டு இருந்தான்.
மெல்ல சத்தம் இல்லாமல் வந்து கட்டிலில் படுத்துகொண்டாள். போர்வையை இழுத்துபோர்த்தி படுத்தவள் விஜய்யின் நினைவுகளில் அபப்டியே தூங்கியும் விட்டாள் .
இங்கே சோபாவில் படுத்திருந்த வம்சி மெல்ல கண் திறந்து கட்டிலில் தாமரையை பார்த்தான் . அவள் உறங்குவது தெரிந்ததும் எழுந்து சென்று கட்டிலை படுத்திருந்தவளை பார்த்தான் . சாந்தமாக கண்கள் மூடி உறங்கிக்கொண்டு இருந்தவளை பார்த்து அவனுக்கு கோபம் தான் வந்தது “ஏன் தாமரை.. உனக்கு விஜய்யை இவ்ளோ பிடிக்கும்னா அப்போவே நம்ம கல்யாணத்தை நிறுத்தி இருக்க வேண்டியது தானே .. அதை விட்டுட்டு இப்படி உன் வாழ்க்கையையும் கெடுத்துட்டு என்னையும் நிம்மதி இல்லாமல் செய்துட்டியே. இப்படி நடு ராத்திரியில் எனக்கு தெரியாம பாத்ரூம்க்கு போய் அவன் கூட பேசிட்டு வர… நான் உன் கழுத்துல தாலி கடின மரியாதைக்காகவாவது இப்படி யாருக்கும் தெரியாம விஜய் கூட பேசுறதை நிறுத்த வேண்டியதுதானே . இதுக்கு ஒரு முடிவு கொண்டு வரணும் காலையில் எழுந்ததும் முதல் வேலையா நமக்கு டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணனும் ” என்று தீர்க்கமாக முடிவெடுத்தவன் பெருமூச்சுடன் வந்து படுத்துகொண்டான் .
“இவ தான் விஜய்க்கு போன் செய்து இந்த நேரத்தில் பேசினா . விஜய்யும் அவ கூப்பிட்டதும் போன் பேசணுமா . எனக்கும் அவளுக்கும் திருமணம் ஆகிடுச்சுன்னு அவனுக்கு தெரியும் தானே . தம்பி பொண்டாட்டிகிட்டே இந்த் நேரத்தில் பேசுறது சரி வருமான்னு அவனுக்கு புரிய வேணாம் . ” என்று அவன் மனது கேள்வியெழுப்பிக்கொண்டு இருந்தது .
உள்ளூக்குல் எரிமலையாய் தன் நிலை நினைத்து குமுறிக்கொண்டு இருந்தது அவன் மனம் . காலையில் வீட்டில் நடந்த விருந்தில் வந்திருந்தவர்கள் எல்லாம் தங்கள் இருவரின் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்கிறது என்று சொல்லும்போது ஒரு பக்கம் அவனையும் அறியாமல் சந்தோசமாக தான் இருந்தது . ஆனால் தன்னிடம் பெயருக்கு கூட முகம் கொடுத்தது பேச விரும்பாத தாமரையை நினைக்கும்போது எதற்கு இந்த திருமணம் என்றிருந்தது அவனுக்கு .
இப்பொது விஜய்யுடன் வேறு அர்த்த ராத்திரியில் பேசிவிட்டு வருகிறாள். இனியும் இப்படியே இருப்பது சரிவராது என்று அவனுக்கு தோன்றியது . அதே யோசனையோடு உறங்கியும் இருந்தான்.
காலை பரபரப்பாக எழுந்து தாமரை கிச்சனில் வேலை செய்துகொண்டு இருந்தாள் . அவளே இழுத்து போட்டு சமைப்பதும் வேறு மற்றவேலைகளை செய்வதுமாக இருக்க… அதிதிக்கு ஆச்சர்யமாக இருந்தது . இரண்டு நாட்களாக யாரிடமும் முகம் கொடுத்தும் பேசாதவள் இப்பொது வேலை செய்வதை பார்த்து சந்தோசமாக இருந்தது.
“என்ன மருமகளே இன்னைக்கு பம்பரம் சுழண்டுடு வேலை செய்யுற.. ஆச்சர்யமா இருக்கு ” என்றபடி சமையல் கட்டிற்குள் வந்தார் அதிதி .
“சும்மா தான் அத்தை காலையில் நேரமே எழுந்துட்டேன் என்ன செய்றதுன்னு தெரியல அதான் சரி எதுவும் சமைக்கலாமேன்னு வந்தேன் ” என்றவள் கையில் சுட சுட காபியுடன் வந்து அதிதியின் முன் நீட்டினாள்.
“ஓ! தேங்க்ஸ் மருமகளே ! ” என்று காபியை கையில் வாங்கிக்கொண்டு டைனிங் டேபிளில் சமைத்து எடுத்தது வைத்த உணவுகள் என்ன என்ன இருக்கிறியாது என்று பார்த்தார்.
“இட்லி, பொங்கல் , மெதுவடை , ரவா கேசரி , சாம்பார் , சட்னி, ஓ… என் மகனுக்கு பிடிச்ச வெங்காய சட்னி கூட செய்துருக்க… எல்லாமே என் மகனுக்கு பிடிச்சதாவே இருக்கே.. ” என்று வம்சியை நினைத்துக்கொண்டு அதிதி கூற..
“ஆமா அத்தை மாமாவுக்கு எதுபிடிக்கும்னு எனக்கு தெரியாதா . அதான் இதெல்லாம் செய்து வேகுறேன். முதல் முறையா நம்ம வீட்டில் நான் சமைக்கிறேனே அதான் அவருக்கு பிடிச்சத்தாவே எல்லாம் செய்யலாம்னு…” என்று தாமரை விஜய்யை மனதில் நினைத்துக்கொண்டு அதிதியிடம் கூறினாள்.
” இதெல்லாம் செய்து வெச்சே சரி எங்க என் மகன இன்னும் ஆளையே காணோமே எங்கே தூங்கிட்டு இருக்கானா ? இன்னும் எழுந்திருக்கலையா?” என்றார் அதிதி .
“இல்ல அத்தை மாமா நைட் வீட்டுக்கு வரலையே எப்படியும் காலையில் சாப்பிட வருவாங்கனு தான் அவருக்கு பிடிச்சதையா செய்து வெச்சிருக்கேன் ” என்றாள் சற்றும் யோசிக்காமல் .
“என்ன சொல்றே.. வம்சி ராத்திரி வீட்டுக்கு வரலையா ! நேத்து நைட் உங்க ரெண்டு பேருக்கும் நான் தானே டிபன் பரிமாறினேன். அவன் கூட சாப்பிட்டு ரூமுக்கு தானே போனான். நீ என்ன நேத்து அவன் நைட் வீட்டுக்கு வரலையின்னு சொல்றே..” என்றார் அதிதி புரியாமல் .
அப்போது தான் இவ்வளவு நேரம் அதிதி வம்சியை பற்றி பேசியதையும் , தான் விஜய்யை நினைத்து பதில் கூறியதையும் உணர்ந்தவள் அடுத்து என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கினாள்.
“என்ன தாமரை… நான் கேட்டுட்டே இருக்கேன் நீ ஏதும் பேசாம அமைதியா இருக்கே… ” என்று அதிதி கேட்டுக்கொண்டு இருக்கும்போது “அம்மா ஒரு காபி வேணும் எனக்கு ரொம்ப தலை வலிக்குது ” என்று வீட்டிற்குள் விஜய் வந்து கொண்டு இருக்க…
“அம்மா பிரேக் பாஸ்ட் ரெடியா ? எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு ” என்று மாடியில் இருந்து தன் ஷர்ட்டை சரிசெய்துகொண்டே படிகளில் இறங்கி வந்து கொண்டு இருந்தான் வம்சி.
ஒரே நேரத்தில் வரும் விஜய் , வம்சி இருவரையும் பார்த்த தாமரை அடுத்து என்ன சொல்லி அதிதியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் திறனறிக்கொண்டு இருக்க…
அதிதியோ ஒன்றும் புரியாமல் தாமரையை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
