EPISODE 12
வம்சி , தாமரை இருவரும் ஜோடி போட்டு செல்வதை பார்த்து விஜய்க்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் . வம்சி இருக்கும் போது தன்னை விழுந்து விழுந்து அவள் கவனிப்பது ஏனோ அவனுக்கு ஒரு வித அசௌகரியத்தை கொடுத்திருந்தது .
அவனோடு அமர்ந்து உணவு சாப்பிட ஆரம்பித்த அதிதி “விஜய் … விஜய்… என்ன டா பங்கிட்டு இருக்க சாப்பிடாம . சாப்பிடு முதல்ல ” என்று அவனை அழைக்கவும் தான் தாமரை பற்றிய யோசனையில் இருந்து வெளியே வந்தவன் .
“அம்மா எனக்கு போதும் என்னால இதுக்கு மேல சாப்பிட முடியல ” என்றான் .
“ஆமா விஜய், நம்ம வம்சி ரொம்ப கொடுத்து வெச்சவன் அவனுக்கு என்ன பிடிக்கும்னு தாமரை பார்த்து பார்த்து எவ்ளோ இதேம் சமைச்சு வெச்சிருக்கா பாரேன் ” என்று அவர்கள் இருவரையும் பற்றி அவனிடம் பேச..
அதிதி பேசுவதை கேட்டு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெறுமனே அமர்ந்து இருந்தான். அந்த நேரம் அர்ஷ் அவனுக்கு கால் செய்து “விஜய் எங்கே இருக்க” என்றான் சற்று பதட்டமாக .
“வீட்ல தான் இருக்கேன் அர்ஷ் சொல்லு ” என்றான் விஜய் .
“இல்ல நீ கொஞ்ச சீக்கிரம் ஆபீஸ் வரமுடியுமா ?” என்றான் சற்று தயங்கியபடி .
“ஏன் என்ன ஆச்சு ? எதுவும் பிரச்சனையா ?” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் எழுந்து கைகழுவ சென்றான் .
“ஆமா கொஞ்சம் பிரச்சனை தான் நீ சீக்கிரம் வாயேன் ” என்றான் அர்ஷ் .
” என்ன டா விஷயம் டென்ஷன் பண்ணாம விஷயத்தை சொல்லு ” என்றான் விஜய் சற்று கோபமாக .
“இது போன்ல பேசுற விஷயம் இல்லை . இனியாவை பத்தி சொல்லணும் அவளை பற்றின விஷயம் இது . நீ வேற வீட்ல இருக்க நம்ம கூட இனியாவை இந்தியாவுக்கு கூட்டிட்டு வந்தது தெரியாது இல்ல. அதனால தான் உன்னை ஆபீசுக்கு வர சொன்னேன் ” என்றான் .
இனியாவை பற்றிய செய்தி என்றதுமே “சரி வரேன் ” என்று அவசரமாக கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“டேய் டேய்… விஜய் இப்போதானே வீட்டுக்கு வந்தே அதுக்குள்ள கிளம்பிட்டே… ” என்று அவனை அழைக்க..
” அம்மா முக்கியமான வேலை வந்திருச்சு நான் போய் ஆகணும். ஈவினிங் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன் ” என்று அதிதியின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே வெளியே சென்றிருந்தான்.
….
இங்கே தாமரையை அழைத்துக்கொண்டு வக்கீல் ஆஃபீஸிற்கு வந்து இருந்த வம்சி தன் அருகில் அமர்ந்து அங்கே வைக்கப்பட்டு இருந்த தொட்டியில் இருந்த மீன்களை ரசித்துக்கொண்டு அமர்ந்து இருந்தவளை பார்த்தான் .
அழகான காட்டன் சேலை உடுத்தி கைகளில் தங்கமும், கண்ணாடி வளையல்களும் சேர்த்து அணிந்து கலகலத்துக்கொண்டு இருக்க… தலையில் மல்லிகை பூ சரம் வைத்து கழுத்தில் வம்சி கட்டிய புது மஞ்சள் கயிறு அவள் அழகை மேலும் மெருகூட்டி இருக்க.. புத்தம் புது பூத்த தாமரையாய் அவள் அமர்ந்து இருக்க… தன்னையும் அறியாமலே அவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான் வம்சி .
உள்ளே இருந்து ஒருவர் வந்து வம்சியை பெயர் சொல்லி அழைக்க… திரும்பிய தாமரை அருகில் இருந்தவனை பார்த்தாள் . அவள் பார்வையை எதிர்கொண்டதும் உள்ளுக்குள் மின்சாரம் பாய்வதை உணர்ந்தவன் சட்டென்று திரும்பிக்கொள்ள…
“சார் உங்களை உள்ளே கூப்பிட்றாங்க ” என்று அவர்கள் பார்க்க வந்த வக்கீலின் பிஏ அழைக்க…
“போலாம் ..” என்று தாமரையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அவர்கள் உள்ளே வந்ததும் தன் எதிரில் இருந்த சேரை காட்டி அமர சொன்னார் பிரபல வக்கீல் சிவாச்சலம் .
“சொல்லுங்க என்ன விஷயமா என்னை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கீங்க ” என்றார்.
” என் பெரு வம்சி … வம்சி சக்கரவர்த்தி ” என்று தன்னை வம்சி அறிமுகம் செய்துகொள்ள..
அவன் பெயரை கேட்டதும் எங்கேயோ அவன் பெயரை கேட்டது போல அந்த வக்கீல் உணர அவனை பார்த்தார். அவர் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்தவன் “என்னோட அப்பா வீரா சக்ரவர்த்தி , தாத்தா விக்ரம் சக்ரவர்த்தி கிங்ஸ் பாசன்ஸ் உடைய one of the ceo நான் ” என்று தங்கள் குடும்பத்தை பற்றி ஒரு சிறிய இன்ட்ரோ கொடுத்தான் .
அவன் சொன்னதை கேட்டு ஆச்சர்யமும் , அதிர்ச்சியுமாக சிவாச்சலம் வம்சியையும், அவன் அருகில் புது தாலி அணிந்தவண்ணம் அமர்ந்து இருந்த தாமரையை பார்த்தார் .
“இவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தின் ceo நீங்க . நீங்க எதுக்காக என்னை தேடி வரணும் அதுவும் நான் குடும்பநல வக்கீல் என்கிட்டே வருவாங்க முக்கால் வாசி பேர் டிவேர்ஸ் அப்ளை பண்ண தான் வருவாங்க . உங்க ரெண்டு பேரையும் பார்த்தா புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி தேறியது நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கிங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்றார் இருவரையும் குழப்பத்தோடு பார்த்து .
“நீங்க சொல்றது சரி தான் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது . என் தாத்தா மௌலி பண்ணின வேலையால விருப்பம் இல்லாத எங்க ரெண்டு பேரையும் பிடிச்சு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. எங்களுக்கு பிடிக்காத இந்த வாழ்க்கையை யாரோட வற்புறுத்தலுக்காகவும் வாழ விருப்படல. அதனால நாங்க ரெண்டு பெறும் பேசி முடிவு பண்ணி தான் இங்கே வந்திருக்கோம் ” என்றான்.
வம்சி சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்ட சிவாச்சலம் ” கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகிருக்குனு சொல்றிங்க . அதுக்குள்ள இந்த வாழ்க்கை பிடிக்கலையின்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்லை” என்றார் .
” இது சரியா வருமா வருதான்னு பார்க்க எங்க வாழ்க்கை கடையில் விற்கும் பொருள் அல்ல .. உபயோக படுத்தி பார்த்து அதுக்கு பிறகு அது சரியாய் வருமா ? வராதான்னு முடிவு செய்ய . நாங்க ரெண்டு பெரும் தெளிவா யோசிச்சு எடுத்த முடிவு இது . எங்க ரெண்டு பேரோட டிவேர்சையும் எந்த பிரச்னையும் இல்லம் அசுமுகம முடிச்சு கொடுப்பீங்கன்னு நம்புறேன்” என்றான் வம்சி .
வம்சி பேசுவதை கேட்டவர் அடுத்து அவனிடம் கேள்வி கேட்க விரும்பாதவர் “நீங்க சொன்னது போல உங்க ரெண்டு பேருக்கும் டைவேர்ஸ் அப்ளை பண்ணலாம் . ஆனா விவாகரத்து அப்ளை பண்ணின உடனே உங்களுக்கு டிவேர்ஸ் கிடைக்காது . எப்படியும் உங்க ரெண்டு பேரையும் 6 மாதம் ஒண்ணா சேர்ந்து வாழணும்னு சொல்லுவாங்க . அதே போல இதுக்கு இடையில் உங்க ரெண்டு பேருக்கும் கோர்ட் மூலமா கவுன்சிலிங் கொடுப்பாங்க . அதை நீங்கி ரெண்டு பெரும் அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கும் . ” என்றார் .
“அது எந்த பிரச்னையும் இல்லை நீங்க பார்மாலிட்டீஸ் என்னனு சொல்லுங்க எங்க டிவேர்ஸ் அப்ளை பண்ண ” என்றான் வம்சி .
வந்ததில் இருந்து வம்சி மட்டுமே பேசிக்கொண்டு இருக்க… தாமரை எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் இருவரும் பேசுவதை கவனித்துக்கொண்டு இருக்க… அவளை பார்த்த சிவாச்சலம் ” நான் இவங்க கிட்டே கொஞ்சம் பேசணும் ” என்று தாமரையை பார்க்க…
“சொல்லுங்க சார் ” என்றாள் அவளை பார்த்து .
“மிஸ்டர் வம்சி சொன்னதுபோல நீங்களும் இந்த விவாகரத்துக்கு சம்மதிக்கிறிங்களா ? இது உங்க விருப்பத்தோடு தான் நடக்குதா? உங்களை இவர் வற்புறுத்தி எதுவும் இங்கே கூட்டிட்டு வரலையே ?” என்று வரிசையாக அவளிடம் கேள்வி கேட்டார்.
அவள் பதில் பேச வருவதற்குள் இடைமறித்த வம்சி “சார் எதுக்காக அவங்க கிட்டே இப்படி எல்லாம் கேக்குறீங்க… நான் தான் சொன்னேனே எங்க ரெண்டு பேருக்குமே இந்த விவாகரத்தில் பரிபூரண சம்மதம்னு . இன்னும் என்ன பேசிட்டு இருக்கீங்க… இப்போ நான் கேட்டது போல செய்யப்போறீங்களா? இல்ல நான் வேற லாயரை பார்க்கட்டுமா ?” என்று சேரில் இருந்து கோபமாக எழுந்தான் வம்சி .
அவன் கோபத்தை பார்த்து தாமரை ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பின் நிதானித்து ” வம்சி மாமா எதுக்காக இப்படி டென்ஷன் ஆகுறீங்க . முதல்ல உக்காருங்க … அவர் அவரோட வேலையை தானே செய்யுறாரு . இதுக்காக ஏன் மாமா இவ்ளோ கோபப்படுறீங்க…” என்றவள் சிவாச்சலத்தை பார்த்து “சார் உண்மையை சொல்ல போனா என் மாமா என்னை இந்த விவாகரத்துக்கு வற்புறுத்தவெல்லாம் இல்லை . நான் தான் அவர்கிட்டே எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லி அவர்கிட்டே விவாகரத்து வேணும்னு சொன்னேன். நான் சொன்னதுக்காக தான் அவர் என்னை இப்போ இங்கே கூட்டிட்டு வந்திருக்காரு ” என்றாள் .
வம்சி கோப பட்டபோது அவனிடம் பொறுமையாக அதே சமயம் உரிமையோடு பேசி அவனை அமைதி படுத்திய விதமும், அவனை மாமா… மாமா… என்று வாய்க்கு வாய் அவள் கூப்பிடுவதை பார்த்த சிவாச்சலத்திற்கு ஒன்றும் புரியவில்லை . இதற்கு மேலும் எதையும் கேட்டு ஏற்கனவே தாமரையிடம் கேள்வி கேட்டதற்கு கோபத்தில் இருப்பவனை மேலும் பேசி கோபப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தவர் அடுத்தடுத்த வேலைகளை செய்து தன் பியேவிடம் இவர்கள் இருவரும் டிவேர்ஸ் அப்ளை செய்வதற்கான டாக்குமென்டுகளை கொண்டு வர சொல்லி வம்சி இடமும், தாமரையிடமும் கையெழுத்து போடா சொல்லி டாக்குமென்டுகளை அவர்கள் முன்பு வைத்தார் .
அவர் கொடுத்த டாக்குமெண்ட்டை வாங்கிய தாமரை ஒருமுறை அதை படித்துப்பார்த்து கையெழுத்து போட்டவள் வம்சியிடம் நகர்த்தினாள் அந்த டாக்குமென்டுகளை . அதை வாங்கியவன் தாமரையிடம் திரும்பி “எல்லாமே படிச்சு பார்த்துட்ட தானே . எல்லாம் சரியா இருக்கா ?” என்றான் அவளிடம் .
“ம்ம்ம்… சரியா இருக்கு மாமாஎன்று தாமரை மிகவும் சாதாரணமாக வருத்தம் ஏதும் இன்றி வம்சியிடம் பேசுவதை பார்த்த சிவாச்சலம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவர்களையே பார்த்தார் .
இருவரும் கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர் . அவர்கள் சென்றதை உறுதி செய்த அவரது பிஏ மணி அவரிடம் வந்தவன் “என்ன சார் இது இப்படி இருக்காங்க ரெண்டு பேரும் . காரணமே இல்லாம கல்யாணம் பண்ணின ரெண்டே நாளில் டிவேர்ஸ் வேணும்னு சொல்லிட்டு போறாங்க . அதுவும் இவ்ளோ பிரபலமான ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவங்க எப்படி இந்த மாதிரி ஒரு முடிவை மிக சாதாரணமா எடுக்குறாங்க” என்றான் .
“என்ன பண்றது மணி இந்த காலத்து பசங்களுக்கு ஏதாவது ஒரு சின்ன காரணம் போதும் உடனே அதை எடுத்துட்டு விவாகரத்து வேணும்னு வந்துடறாங்க . கணவன் மனைவிங்குற உறவு காலத்துக்கும் அழியாதது . ஆனா அதையே அவங்க பெருசா எடுத்துக்குற மாதிரி தெரியலை. காலம் போற போக்கை பார்த்தா எது இதுக்கெல்லாம் வந்து டிவேர்ஸ் வேணும்னு நிக்குறாங்களோ என்னவோ.. “‘ என்று தன் மனக்குமுறலை மணியிடம் கொட்டினார் சிவாச்சலம் .
இங்கே தாமரையை கொண்டு வந்து வீட்டில் வாயிலில் இறக்கிவிட்டு நேராக விஜய்யை பார்ப்பதற்கு கிளம்பி இருந்தான் வம்சி .
