Home Uncategorizedஅஸ்க..லஸ்கா..காதல் 14

அஸ்க..லஸ்கா..காதல் 14

by Layas Tamil Novel
331 views

EPISODE 15

வினித் இலக்கியாவை அழைத்துக் கொண்டு தமிழின் காலேஜிலேயே அவளை அட்மிஷன் போட கூட்டிச் சென்றான். அவனுடன் நானும் வருவேன் என்று அனுவும் அவர்களுடன் கிளம்பிச் சென்றாள். காரில் ஏறியதில் இருந்து ஒருவரும் பேசாமல் அமைதியாகவே வர… வினித் தன் அருகில் அமர்ந்திருந்த அனுவைப் பார்த்தவன், 

“ஏன் மேடம் அமைதியா வரீங்க… எதுவும் பேசமாட்டீங்களா?” என்றான். “உன் கிட்டே பேச எனக்கு ஒன்னும் இல்லை” என்றாள் அனு. “என்கிட்டே பேச எதுவும் இல்லைன்னா ஏன் என் கூட கிளம்பி வந்திருக்க?” என்று அவளை வம்பிழுத்தான். “நான் ஒன்னும் உன்கூட வரணும்னு ஆசைப்பட்டு ஒன்னும் வரலை. அண்ணி கூட ஷாப்பிங் போகணும்னுதான் வந்தேன்.” 

“அது கூட உன்கூட போறதா இல்லை. நானும் அண்ணியும் மட்டும் தனியாக போகலாம்னுதான் இருந்தோம்.” “ஆனா ஏன் அம்மா தான் வழுக்கட்டாயமா உன்கூட அனுப்பி வெச்சுட்டாங்க” என்றாள் எங்கோ பார்த்தபடி. இவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் ஏதோ வேண்டாதவர்கள் போல பேசிக்கொண்டதைப் பார்த்தபடி பின் சீட்டில் அமர்ந்திருந்தாள் இலக்கியா.

இலக்கியாவை அனு படிக்கும் டிபார்ட்மென்ட்டிலேயே சேர்த்து விட்டான் வினித். கார்டியன் என்ற இடத்தில் தமிழின் பெயரை எழுதினான். அதைப் பார்த்த இலக்கியா, “அண்ணா ஏன் தமிழ் பேரை எழுதுறீங்க… உங்க பேரை எழுதி இருக்கலாமே?” என்றாள். 

“எங்கும் என் தங்கச்சியோட கார்டியனா உன் பேரை எழுதணும்னுதான் ஆசை.” “ஆனா என்னமா செய்றது. நான் மட்டும் இந்த இடத்துல என் பேரைப் போட்டுட்டேன்னு அவனுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான். என்னை ரெண்டா வெட்டிருவான்” என்றான் வினித். “ஏன் அண்ணா இந்தச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் தமிழ் உங்களைத் திட்டுவாரா?” என்றாள் இலக்கியா.

இலக்கியாவின் அருகில் நின்றிருந்த அனுவைப் பார்த்துவிட்டு, “உனக்கு இவங்க அண்ணனைப் பற்றி இன்னும் முழுசா தெரியலம்மா.” “அவன் எதுக்கெல்லாம் கோவப்படுவான். எதுக்கெல்லாம் டென்ஷன் ஆவானு யாருக்கும் தெரியாது” என்றவன், 

“ஏன் அவனுக்கே சில நேரம் என்ன பண்றோம்னு தெரியாது” என்றான் வினித். “நீ இப்போதானே வந்திருக்கமா, போகப் போக உனக்கே அவனைப் பற்றி எல்லாம் தெரியும்” என்றவன், 

“அப்படி உனக்கு தமிழ் பற்றி எதுவும் தெரியலையின்னா, இதோ உன் பக்கத்துல நிக்கிறாளே தமிழின் தங்கச்சி… அனு.” “இவளக் கேளு, இவளுக்குத்தான் இவ அண்ணா தமிழ் பற்றி நிறைய தெரியும்” என்றான். 

அவனை முறைத்த அனு, “எங்க அண்ணாவைப் பற்றி எனக்குத்தான் நல்லா தெரியும். உனக்கு என்ன தெரியும்?” என்றவள், 

அனுவிடம் திரும்பி, “அண்ணி வாங்க நான் உங்களுக்கு காலேஜை சுத்தி காட்டுறேன். இவன் அட்மிஷன் போட்டுட்டு வரட்டும்” என்றாள். 

“ஆமாமா, நீ போய் இந்த அந்தமான் ஜெயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா இலக்கியா, அதுக்குள்ள நான் இங்க வேலையை முடிச்சிட்டு வரேன்” என்றான் வினித். 

“டேய்! எங்க காலேஜைப் பார்த்தா உனக்கு அந்தமான் ஜெயில் மாதிரியா தெரியுது?” என்று வினித்திடம் எகிறி குதித்தாள் அனு.

 “இது உங்க காலேஜ்ங்குறதால் உனக்கு எதுவும் தெரியாது. உள்ளே போய் மத்த ஸ்டூடண்ட்ஸ் கிட்டே கேட்டுப் பாரு, எல்லாரும் கதை கதையா சொல்லுவாங்க” என்றான்.

வினித் சொன்னதைக் கேட்ட இலக்கியா, “ஏன் அண்ணா இவங்க காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் தானா?” என்று கேட்டாள். “ஆமாம் இலக்கியா, உள்ள போன் கொண்டு போகக் கூடாது. தேவையில்லாம கிளாஸ் ரூம் போட்டு வெளியே யாரும் வரக்கூடாது. அதே போல பசங்க பொண்ணுங்ககிட்ட பேசக் கூடாது.” “கிளாஸ் கட் அடிச்சிட்டு வெளியே எங்கேயும் போகக் கூடாது. இது எல்லாத்தையும் விட ஒரு பெரிய கொடுமை இந்தக் காலேஜ்ல இருக்கு, அது என்ன தெரியுமா?” என்றான் வினித். 

“என்ன?” என்பது போல இலக்கியாவும் ஆர்வமாக வினித் என்ன சொல்லப் போகிறான் என்று அனுவும் அவனை எதிர்பார்க்க… “இந்த காலேஜ்லையாவது யூனிஃபார்ம் போட்ட ஸ்டூடண்ட் பார்த்திருக்கியா? இவங்க காலேஜ்ல எல்லாருக்கும் ஒரே யூனிஃபார்ம்தான். யாருமே மற்ற காலேஜ் மாதிரி புதுசு புதுசா கலர் டிரஸ் எல்லாம் போட்டுட்டு வர முடியாது” என்றான்.

 “அண்ணா… அப்போ இவங்களது காலேஜ் இல்லை, ஸ்கூல் என்று சொல்லுங்க….” என்றாள் இலக்கியா அனுவைப் பார்த்து சிரித்துக் கொண்டே. “கரெக்டா சொன்ன இலக்கியா. இதைச் சொன்னதுக்குத்தான் இவளுக்கு என் மேல கோவம்” என்று அனுவைப் பார்த்து சொன்ன வினித்.

இலக்கியாவை காலேஜில் சேருவதற்கான ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்துவிட்டு, அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செய்ய அழைத்துச் சென்றான். வினித் காரை பார்க் செய்துவிட்டு, தங்கள் சொன்ன குறிப்பிட்ட கடைக்கு வரச் சொல்லிவிட்டு அனுவும், இலக்கியாவும் சென்றனர்.

 அனு இலக்கியாவைத் தன் கைக்குள் கோர்த்துக் கொண்டு அவளை அவர்களுக்குச் சொந்தமான மாலுக்கு அழைத்துச் சென்றாள். இலக்கியா அந்த மாலுக்குள் வந்ததும் ஆச்சரியமாக அந்த இடத்தைப் புதிதாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இப்படிப் பார்ப்பதைக் கவனித்த அனு, “அண்ணி ஏன் இப்படிப் பாக்குறீங்க?” என்று கேட்டாள். 

“இந்த மாளை அழகா கட்டிருக்காங்க. இதோட கட்டிட அமைப்பு எல்லாம் பாக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமாக அழகாகவும் இருக்கு” என்றாள் இலக்கியா. 

“இது எங்களோட மால் தான் அண்ணி. என் அண்ணா தான் இந்த மாளை டிசைன் பண்ணினாரு” என்றாள் அனு பெருமையாக. “அப்படியா! இதுவும் உங்களோட மால்தானவா!!! எங்க போனாலும் எல்லாமே உங்களோடதுன்னு சொல்றீங்களே. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்றாள் இலக்கியா.

இலக்கியா சொன்னதைக் கேட்டு சிரித்த அனு, “அண்ணி நீங்க இந்த சிட்டில பார்க்குற முக்கால்வாசி பெரிய பில்டிங் எல்லாம் என்னோட அண்ணா டிசைன் பண்ணி கட்டினதுதான். அதில் பாதி பில்டிங் நம்மளோடது. மீதி மத்தவங்க ப்ராஜெக்ட்டுக்காக அவர் செஞ்சு கொடுத்தது” என்றாள் அனு. 

அனு இந்தச் சிட்டியில் பாதி கட்டிடம் தமிழுக்குச் சொந்தமானது என்று சொன்னதைக் கேட்டதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதை ஆச்சரியத்தோடு அனுவைப் பார்த்தவள், “ரொம்ப பணக்காரங்க போல நீங்க” என்றாள் இலக்கியா. 

அனுவும் சிரித்துக் கொண்டே “ஆமாம் அண்ணி” என்றாள். “அனு நான் ஒன்னு சொன்னா நீ என்ன தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றாள் இலக்கியா. 

“சொல்லுங்க அண்ணி, நான் எதுவும் நினைக்க மாட்டேன்” என்றாள் அனு. “நீ இனிமேல் என்ன அண்ணின்னு கூப்பிடாதே… உனக்கும் எனக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். என் பெயரைச் சொல்லியே நீ கூப்பிடலாமே” என்றாள் இலக்கியா. அனு சிரித்துக் கொண்டே “ஓகே இலக்கியா” என்றாள். 

“இன்னொன்னு உன்கிட்ட கேட்கலாமா?” என்றாள் இலக்கியா. “என்கிட்ட கேட்குறதுக்கு என்ன தயக்கம்? எதுவா இருந்தாலும் என் பர்மிஷன் கேட்காம தைரியமா கேளு” என்றாள் அனு. “உன் அண்ணா என்ன வேலை செய்துகொண்டிருக்கிறார்?” என்றாள் இலக்கியா.

இலக்கியா தன் அண்ணனைப் பற்றிக் கேட்டதை வாய்விட்டு சத்தமாக சிரித்தாள் அனு. அனு சத்தமாக சிரிக்கவும், அங்கே சென்று கொண்டிருந்த சிலர் அவர்கள் இருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்ல… அதை கவனித்த இலக்கியா அனுவின் கையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்தவள், “ஏய் அனு… இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படிச் சிரிக்கிற?” என்றாள். 

“அது ஒன்றும் இல்லை இலக்கியா. நீ இங்கே வந்து இப்போது சரியா ஒரு வாரத்துக்கு மேல இருக்குமா?” என்று கேட்டாள். “ஆமாம். ஏன்?” என்றாள் இலக்கியா. “இந்த ஒரு வாரத்துல என் அண்ணன் என்ன வேலை செய்கிறார் என்று கூட நீ தெரிந்து கொள்ளவில்லையா?” என்றாள் அனு. 

“ம்ஹும்… இல்லை” என்று தன் தலையை ஆட்டியவள், “அங்கே இருக்க உங்ககிட்ட நான் போய் பேசினால்தான் பேசுறாங்க. ஆனால் உங்க அண்ணனைப் பத்தி எது கேட்டாலும் என்கிட்ட யாரும் எந்தப் பதிலும் சொல்றதில்லை.” “எனக்கும் வேற யார்கிட்டயும் என் அண்ணாவைப் பத்தி கேட்கணும்னு தெரியல. அதனால்தான் உன்கிட்டயே கேட்டேன்” என்றாள் இலக்கியா. “சரி இலக்கியா, என் அண்ணா ஒரு ஃபேமஸ் ஆர்கிடெக்சர். அவர் இந்தியாவில் மட்டும் இல்லை, வேர்ல்டுல சில கண்ட்ரிஸ்களுக்குக் கட்டிடம் கட்ட டிசைன் செய்து கொண்டிருக்கிறார்.

” இலக்கியாவிடம், “நீ மலேசியாவில் இருந்துதானே வர்ற?” என்று சொன்ன அனு, அங்கே ஒரு புகழ்பெற்ற கட்டிடத்தின் பெயரைச் சொல்லி, “அந்தக் கட்டிடத்தை கூட என் அண்ணா தான் டிசைன் செய்து கட்டிக் கொடுத்தார்” என்றாள் அனு. 

அனு சொன்ன கட்டிடம் இலக்கியாவுக்கு நன்றாகவே தெரியும். அந்தக் கட்டிடத்தின் வழியாகத்தான் அவள் படித்துக் கொண்டிருந்த அகாடமிக்கு தினமும் சென்று வருவாள். தினமும் அந்தக் கட்டிடத்தைக் கடந்து போகும்போதெல்லாம், அதை யார் கட்டியிருப்பார்கள், இவ்வளவு அழகாக இந்தக் கட்டிடத்தை டிசைன் செய்திருக்கிறார்கள் என்று ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறாள். ஆனால் அந்தக் கட்டிடத்தைக் கட்டியவனுடன் தான் தனிப்போடு இருக்கிறோம் என்று நினைத்தாலே இலக்கியாவுக்கு மலைப்பாக இருந்தது.

“என் அண்ணாவைப் பத்தி என்ன தெரிஞ்சுக்கணும்னாலும் நீ தாராளமா என்கிட்ட கேட்கலாம்.” “முதல்ல நாம இப்ப போய் ஷாப்பிங் பண்ணலாம். அப்புறம் பொறுமையா வீட்டுக்குப் போய் மத்ததெல்லாம் பேசிக்கலாம்” என்ற அனு இலக்கியாவை அழைத்துக் கொண்டு அவளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க உள்ளே செல்ல, அவர்களுடன் வினித்தும் இணைந்து கொண்டான். இலக்கியாவுக்கு வினித்தும், அனுவும் அந்த மாளைப் பற்றிச் சொல்லி, ஒவ்வொரு இடமாக சுற்றிக் காட்டியபடி அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தனர். 

இவர்கள் வாங்கிக் கொடுத்த பொருட்கள் அனைத்துமே மிகவும் ஆடம்பரமாக இருந்தது. “இலக்கியா, எனக்கு இவ்வளவு காசு கொடுத்து தேவையில்லாம வாங்காதீங்க. என்னால் இதெல்லாம் போட்டுக்க முடியாது.” “வீணாகப் பணத்தைச் செலவு செய்யாதீங்க” என்று அவள் எவ்வளவு சொல்லியும், அவர்கள் இருவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இலக்கியாவுக்கு நிறைய ஆடைகளும், ஆபரணங்களும் வாங்கி குவித்தனர்.

 அனு சில ஆடைகளை எடுத்துக் கொண்டு வந்து இலக்கியாவிடம் கொடுத்து, “இதைப்போய் போட்டுப் பார்த்துட்டு வா இலக்கியா… உனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கணும்” என்றாள்.

 “இப்போ எதுக்கு அனு அதுதான் எல்லாமே என்னோட சைஸ்க்குத்தானே நீ கரெக்டா எடுத்து இருக்க. நான் வீட்டில போய் போட்டுப் பார்த்துக்குறேனே” என்றாள். “ப்ளீஸ் இலக்கியா…. எனக்காக ஒரே ஒரு டிரஸ் மட்டும் ஆவது போய் போட்டுப் பார்த்துட்டு வா…” என்று தான் தேர்ந்தெடுத்த ஆடைகளிலேயே மிகவும் அழகாக இருந்த ஒரு உடையை எடுத்து இலக்கியாவிடம் கொடுத்து, அதைப் போட்டுப் பார்த்து வரச் சொல்லி உள்ளே அனுப்பி வைத்தாள் அனு. 

தனக்காகப் பார்த்துப் பார்த்து உடைகளைத் தேர்ந்தெடுத்த அனுவின் மனம் கஷ்டப்படுத்தக் கூடாது என்று அவள் கொடுத்த உடையை வாங்கிக்கொண்டு அங்கே இருந்த உடை மாற்றும் அறைக்குச் சென்றாள் இலக்கியா.

உடை மாற்றச் சென்ற அறை மிகவும் பெரியதாக இருந்தது. அந்தக் கடையை போல இந்த உடை மாற்றும் அறை கூட பிரமாண்டமாகத்தான் இருந்தது. அதைச் சுற்றிப் பார்த்தபடி தன் கையில் வைத்திருந்த ஆடையை ஒரு ஹேங்கரில் மாட்டிய இலக்கியா. தான் அணிந்திருந்த ஆடையில் இருந்த ஜிப்பை முழுவதுமாக விலக்கிவிட… 

அவள் முதுகுப் பகுதி முழுவதும் அப்பட்டமாகக் கண்ணாடியில் இலக்கியாவுக்குத் தெரிந்தது. அதைப் பார்த்தவளுக்கு சற்று வெட்கம் வர… அந்தக் கண்ணாடியைப் பார்க்காமல் திரும்பி நின்று தன்னுடைய உடையைக் கழற்றப் போக… அப்போது அந்த அறையில் இருந்த வேறொரு கதவு மூலமாக, கதவைத் திறந்து கொண்டு வேகமாக தமிழ் அவள் அருகில் வந்தான். 

அவனை அங்கு இந்த நேரத்தில் எதிர்பார்க்காத இலக்கியா அதிர்ச்சியாகத் தன் அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்த தமிழையே பார்க்க… தமிழ் வந்த வேகத்தில் இலக்கியாவின் இடையைப் பற்றிய ண்ணோடு சேர்த்து இழுத்து அணைத்து நிற்க வைத்தவன். அடுத்த நொடி ஆண்மை நிறைந்த அவன் தடுத்த உதட்டுக்குள் பிஞ்சு இதழ் சிறைப்பட்டிருந்தது. எந்த ஆண்களின் வாடையும் இதுவரை இவ்வளவு நெருக்கத்தில் கண்டிராத இலக்கியா, தமிழின் இந்த நெருக்கமும், அவனிடம் இருந்து வந்த பிரத்யேக வாசனையும், அவன் முதல் முத்தமும் அவளை மெய் மறக்கச் செய்தது.

You may also like

1 comment

Pascal catherine July 20, 2025 - 3:11 am

How can l update my plan. Pls share the coupon code

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured