Home UncategorizedMR.LOVER 5

MR.LOVER 5

by Layas Tamil Novel
149 views

தேவ், குருவைப் பயமுறுத்திய பிரியாவை, அவன் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குருவும் தேவ்வும் பேசுவதைக் கேட்டு அவர்கள் முன் வந்தாள் பிரியா.

“சின்ன வயசுல நீங்க செய்யாததையா என் மகன் செஞ்சுட்டான். நீங்க என்னவெல்லாம் செஞ்சீங்கன்னு நான் சொல்லட்டுமா?” என்று பிரியா குருவை மிரட்ட…

தன் மகன் முன் தான் செய்த லீலைகளை எல்லாம் பிரியா போட்டு உடைத்துவிடுவாளோ என்று பயந்த குரு, அப்படியே பிரியாவிடம் சரண்டர் ஆகிவிட்டான். இதைப் பார்த்த தேவ்விற்கு, இருவரிடமும் இருந்த புரிதலும், காதலும், பாசமும் அவனை சிலிர்க்க வைத்தது. தன் அம்மாவிடம் அடங்கிப் போகும் அப்பாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான் தேவ்.

“சரிடி பிரியா, இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற? நம்ம பையன்தானே, எடுத்து சொன்னா புரிஞ்சுக்க போறான். நான் அவனை எதுவும் சொல்ல மாட்டேன், சரியா? நீ எதுக்கு இப்போ தேவையில்லாம டென்ஷனாகி உன் ஹெல்த்தைக் கெடுத்துக்கிறே?” என்றான் குரு.

இதற்கு முன்பு ரிஷியை உண்டு இல்லை என்று செய்துவிட வேண்டும் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்த தன் அப்பா, தன் அம்மா பிரியாவிடம் இறங்கிப் போவதைப் பார்த்து, வாயில் விரலை வைத்துக்கொண்டு இவர்கள் இருவரையும் ஆச்சர்யமாகப் பார்த்தான் தேவ்.

“அப்பா… என்ன இப்படி பல்டி அடிச்சிட்டீங்க? அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கும்னு ஒரு அளவுக்கு தெரியும். ஆனா, இப்படி மொத்தமா கால்ல விழுந்திடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இனி நான் என் அம்மா கட்சியிலதான் இருக்கப்போறேன். நீங்க டம்மி பீஸ்னு எனக்கு இப்பதான் தெரியுது,” என்றான் தேவ்.

“டேய்… டேய்… இதை எல்லாம் வெச்சு அப்பாவை எடை போடாதேடா. நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லை. நான் சும்மா உங்க அம்மா வருத்தப்படுவான்னுதான் அப்படி நடிச்சேன்,” என்றான் குரு.

அதைக் கேட்ட பிரியா சிரித்தபடி, “டேய் தேவ், உன் அப்பா அப்படித்தான் எப்பவுமே. பார்க்கத்தான் டெரர் பீஸ். ஆனா, கூட இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும் இவர் ஒரு வெற்று வெட்டுன்னு,” என்று பிரியா ஏகத்திற்கும் வாரினாள்.

“அம்மாவும் பிள்ளையும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா? இனி என் பாடு திண்டாட்டம்தான்,” என்று குரு தலையில் கை வைத்துக்கொண்டு அமர…

“என்ன பிரச்சனை? இவங்க உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கலாய்க்கிறாங்களா? என்னன்னு சொல்லுங்க, இவங்க ரெண்டு பேரையும் நான் கவனிச்சுக்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டே ரிஷி குருவை நோக்கி வந்தான்.

ரிஷியின் குரலைக் கேட்டதும் மூவரும் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்க்க…

தனக்கு இருபுறமும் இரண்டு பெண்கள் வர, அவர்களின் தோளில் கையைப் போட்டபடி, காதில் ஐபாட் ஹெட்செட் மாட்டிக்கொண்டு, அந்தப் பெண்களைத் தன்னோடு சேர்த்து அழைத்துக்கொண்டு ரிஷி இவர்கள் மூவரையும் நோக்கி வந்தான்.

இத்தனை வருடங்களாக ரிஷி பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்திருக்கிறான். ஆனால், ஒரு நாள் கூட எந்த ஒரு பெண்ணையும் வீட்டிற்கு அழைத்து வந்தது இல்லை. ஆனால், இன்று நியூஸில் வந்ததைவிட மேலும் அதிர்ச்சியாக, தன் பெற்றோரின் முன்பு இரு பெண்களை அணைத்தபடி அழைத்துக்கொண்டு அவர்கள் முன்பு வந்து நின்றான். “ஹாய் மாம், ஹாய் பாப்ஸ்” என்று சொல்லி, “என்ன பிளஸ் பண்ணுங்க,” என்றவன் அவர்கள் காலில் விழுந்து எழுந்தான். நல்லவேளையாக, தன் இரு பக்கமும் இருந்த பெண்களோடு சேர்ந்து அவர்கள் காலில் விழுந்து ரிஷி ஆசீர்வாதம் வாங்கவில்லை. அந்த மட்டில் இருவரும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டனர்.

பிரியா தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய தன் செல்ல மகனைத் தூக்கி, அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள். “நல்லா இரு ரிஷி, எப்பவும் இதேபோல சந்தோஷமா இருக்கணும்,” என்று சொல்லி அவனை அணைத்துக்கொள்ள…

“எப்படி, இந்தப்பக்கம் ஒரு பொண்ணு, அந்தப்பக்கம் ஒரு பொண்ணுன்னு கூட்டிக்கிட்டு சுத்துறானே, அதுபோலவா?” என்று குரு கேட்க…

ரிஷியைக் கட்டிக்கொண்ட பிரியா, குரு பேசியதைக் கேட்டு பிரியாவின் வாய் முணுமுணுத்தது.

“அப்பா, அங்க பாருங்க. அம்மா ரிஷியைக் கட்டிப்பிடிச்சுட்டு, அவன் காதில் என்னமோ ரகசியமா சொல்றாங்க,” என்றான் தேவ்.

“டேய் மகனே… நல்லாப் பாரு. ரிஷி கிட்ட எந்த ரகசியமும் பேசல. அவ என்ன பார்த்துத்தான் திட்டிக்கிட்டு இருக்கா. நல்லாப் பாரு, அவ கண்ணு என்கிட்டதான் இருக்கு. அவ வாய் என்னதான் எதையோ சொல்லி திட்டுது,” என்று குரு சொல்ல…

குரு சொன்னதைக் கவனமாகக் கேட்ட தேவ், “ஆமாம் அப்பா, அம்மா அவங்க கிட்ட பேசல. உங்களை பார்த்துத்தான் ஏதோ சொல்லிட்டு இருக்காங்க,” என்றான்.

“சரி சரி விடு தேவ், இதெல்லாம் எனக்குப் பழக்கமான ஒன்றுதான். இவளை நான் நைட் போய் கவனிச்சுக்கிறேன்,” என்று சொன்ன குரு, ரிஷி அழைத்து வந்த இரண்டு பெண்களையும் பார்த்து, “ஏன்மா இப்படி ரெண்டு பேரும் நாடு விட்டு நாடு தனியா வந்திருக்கீங்க? உங்க வீட்டில எல்லாம் உங்களைக் கண்டிக்க மாட்டாங்களா?” என்று கேட்டான்.

அந்தப் பெண்கள் இருவரும் குரு பேசிய பாஷை புரியாமல் ரிஷியைப் பார்க்க… அவன், “ஒன்றும் இல்லை, என் அப்பா எப்போதுமே அப்படித்தான் பேசுவார்,” என்று கூறி, குரு என்ன சொன்னானோ அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல…

ரிஷி சொன்னதைக் கேட்டுச் சிரித்த அந்த இரு பெண்களும், “எதுவும் சொல்ல மாட்டாங்க,” என்றனர்.

“காலம் அப்படி கேட்டுப் போய்க் கிடக்கு,” என்று தலையில் அடித்துக்கொண்ட குரு, திரும்பி காருக்குச் செல்ல…

பிரியா குரு செய்ததைப் பார்த்துச் சிரித்தபடியே ரிஷியையும், தேவ்வையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.

ரிஷியுடன் வந்த பெண்கள் தங்கள் வீடு இங்கே இருப்பதாகக் கூறி, அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட, இவர்கள் நால்வர் மட்டும் ஒரே காரில் கிளம்பினர்.

பிரியா வந்த காரை டிரைவரை எடுத்துப்போகச் சொல்லிவிட்டு, தேவ் காரை ஓட்ட, நால்வரும் கிளம்பினர். காரின் முன்னால் ரிஷி அமர்ந்துகொள்ள, பின்னால் பிரியாவும் குருவும் அமர்ந்திருந்தனர்.

நால்வரும் அமைதியாகச் சென்று கொண்டிருக்க, திடீரென்று குரு பிரியாவிடம் திரும்பி, “ஆமாம், நீ எப்படி ஏர்போர்ட்டுக்கு வந்த? நாங்க வந்த அதே டைமுக்கு. அங்க ஏர்போர்ட்டுக்கு போய் ரிஷியை கூப்பிட போனது நாங்களே கடைசி நிமிஷத்தில்தான் முடிவு பண்ணினோம். அப்புறம் எப்படி உனக்குத் தெரிஞ்சது?” என்று கேட்டான் குரு.

“அதெல்லாம் அப்படித்தான், பேசாம வாங்க. இப்ப என்ன, நான் ஏர்போர்ட்டுக்கு வந்தது உங்களுக்குக் குத்தமா போய்விட்டதா?” என்று பிரியா கேட்க…

“அச்சோ… பிரியா குட்டி, அப்படி இல்லடா. நீ எப்படி வந்தேன்னுதான் கேட்டேன்,” என்றான் குரு அப்படியே மாடுலேஷனை மாற்றி.

ரிஷி வந்த பிறகு தன் அப்பா கிழித்து நாறாகத் தொங்க விட்டுவிடுவார், தங்களோடு ரிஷி வரும்போது பம்மிக்கொண்டு வருவான் என்று நினைத்திருந்த தேவ்விற்கு ஏமாற்றமே. இங்கு அப்படியே என்ன நினைத்து வந்தானோ அதற்கு நேர் எதிராக ஜாலியாக வண்டியில் முன்னால் அமர்ந்து வர, தன் அப்பா தான் அம்மாவிடம் சரண்டர் ஆகி இருந்தார்.


நக்ஷத்ரா பெயிண்டிங் கிளாஸிற்குச் சென்றுவிட்டு, தன் தோழிகளோடு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டே இருக்க, தோழிகள் ஒவ்வொருவரும் அவரவர் வீடு வந்ததும் அப்படியே சென்றுவிட, கடைசியாகத் தனியாக அவள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள்.

அவள் வந்துகொண்டிருப்பதை மரத்திற்குப் பின்னால் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சூர்யா. நக்ஷத்ராவின் வீட்டிற்கு அருகில் வந்ததும், அவளுக்குப் பின்னால் வேகமாகச் சென்றவன், நக்ஷத்ராவின் வாயைப் பொத்தி அப்படியே தூக்கித் தன் காரில் அமர வைத்து லாக் செய்தான்.

மிரண்டுபோய், தன்னை யார் இப்படிச் செய்தது என்று நக்ஷத்ரா அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க… அதற்குள் சூர்யா காரின் மறுபுறம் வந்து, காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து அவள் அருகில் அமர்ந்தான். இந்த நேரத்தில் சூர்யாவை நக்ஷத்ரா அங்கு எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டாலே ஓடி ஒளிபவள், இப்போது ஒளிந்து கொள்ள இடம் தெரியாமல் என்ன செய்வது என்று பயந்தபடி அமர்ந்திருந்தாள்.

சூர்யாவை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும், வேகமாக திரும்பி கார் கதவைத் திறக்கப் போக, அதை சூர்யா எப்போதோ லாக் செய்திருந்தான். செய்வதறியாது திரும்பி நக்ஷத்ரா சூர்யாவை பார்க்க… அவன் நன்றாகச் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன், நக்ஷத்ரா அவனைப் பார்க்கவும், “என்ன?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.

அவள் பயந்து கொண்டே, “வீ… வீ… வீட்டுக்குப் போகணும்,” என்றால் சிறுபிள்ளை போல…

“போகலாம்… போகலாம்… என்ன அவசரம்? இதோ அங்கதானே இருக்கு உன் வீடு,” என்று காரை விட்டு சற்றுத் தள்ளி இருந்த அவள் வீட்டைக் காட்டிச் சொன்னவன், “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும், அதுக்காகத்தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்,” என்றான்.

“என்னது கூட்டிட்டு வந்தானா? தூக்கிட்டு வந்துட்டு… எவ்வளவு அசால்ட்டா சொல்றான் பாரு,” என்று மனதுக்குள் நினைத்து அவனைத் திட்டிய நக்ஷத்ரா, எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…

காரில் சாய்ந்து அமர்ந்திருந்த சூர்யா, சற்று என்று நக்ஷத்ராவின் அருகில் வந்து அமர்ந்தவன், அவள் விழிகள் இரண்டையும் பார்க்க… அது, எங்கே ஓடிச் சென்று ஒளிந்துகொள்ளலாம் என்று தெரியாமல், அவள் பச்சை நிற விழிகள் இரண்டும் கண்களுக்குள் இங்கும் அங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவள் கண்களைப் பார்த்ததும், சூர்யாவிற்குள் எழுந்த உணர்ச்சிகளை அவனால் கட்டுப்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது.

சூர்யா இப்படி தன்னை நேருக்கு நேர் பார்த்ததும், பயத்தில் நக்ஷத்ரா தலையைக் கீழே குனிந்துகொள்ள… வேகமாக அவள் முகத்தைப் பிடித்துத் தன்னை பார்க்குமாறு சூர்யா உயர்த்த… அவன் கையை வேகமாகத் தட்டிவிட்ட நக்ஷத்ரா, காரில் எவ்வளவு தூரம் தன்னால் அவனை விட்டு ஒதுங்கி அமர முடியுமோ அவ்வளவு தூரம் ஒதுங்கி அமர்ந்தவள், அவனைப் பார்த்து பயந்து நடுங்கினாள்.

காரணமே இல்லாமல் தன்னைப் பார்த்துப் பயப்பவளைக் கண்டு எரிச்சலான சூர்யா, அவள் நகர்ந்து செல்ல முடியாமல் அவள் அருகில் வந்து அமர்ந்தவன், அவள் கன்னத்தைப் பிடித்து, “என்னை பார்த்தால் அவ்வளவு பயமா இருக்கா டி? ஏன் டி… இப்படிப் பயந்து நான் சாகுறேன்,” என்றான் சற்று கோபமாக.

தன் கோபத்தை அவளிடம் லேசாகத்தான் காட்டினான். அதற்கே நக்ஷத்ரா பயந்து கண்களில் கண்ணீர் வந்துவிட… “நான் வீட்டுக்குப் போகணும், என்னை விடுங்க ப்ளீஸ்,” என்று கெஞ்சினாள்.

ஒரு நிமிடம் தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு எடுத்துத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட சூர்யா, “நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறம் நீ எங்க வேணா போ… உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன்,” என்றவன், “பச்சை நிற விழியாளே… என்னை பார்த்தால் உனக்கு ஏன் அவ்வளவு பயமா இருக்கு? நான் உன் வீட்டுக்கு வந்தபோதும் அப்படித்தான் நடந்துகிட்ட. இப்போ இங்கேயும் அப்படித்தான் நடந்துக்கிற… உன்கிட்ட நான் இதுவரைக்கும் சரியாப் பேசினது கூட கிடையாது. சின்ன வயசுல நீயும் நானும் ஒன்றாக விளையாடி இருக்கோம், அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன் நீ எதார்த்தமா என்கிட்ட பேச மாட்டேங்குற? அப்படி என்னைப் பார்த்தால் உனக்குப் பயக்கும் அளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அடித்து, இடம் கேட்டான் சூர்யா.

கேள்விகளைக் கேட்டு முடித்துவிட்டு நக்ஷத்ரா எதுவும் பதில் சொல்வாள் என்று ஆர்வமாக அவள் முகத்தையே விழுந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவள் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.

“இப்படி வாயைத் திறந்து பேசாம அமைதியா இருந்து என்ன ரொம்ப டென்ஷன் பண்ற. ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு இறங்கி வீட்டுக்கு ஓடிடு. இல்லன்னா இப்படியே உன்னைக் கிட்னாப் பண்ணிட்டு போயிடுவேன்,” என்றான் கடுப்பாக.

இவ்வளவு நேரம் பயந்துபோய் சூர்யாவைப் பார்த்துக் கொண்டிருந்த நக்ஷத்ரா, “என்னை எதுவும் செய்து விடாதீங்க. எனக்கு எதுவும் தெரியாது. நான் வீட்டுக்குப் போகணும்,” என்று மறுபடியும் பழைய பாட்டைப் பாட…

அவள் கையைப் பிடித்து இழுத்தவன், அவள் இடையில் கையை வைத்து அப்படியே தூக்கித் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, அவளை இடுப்போடு சேர்த்து கட்டிக்கொண்டவனின் உடல் அவள் முதுகில் உரச… அவன் முகத்தை அவள் தோளில் வைத்து அழுத்தி, “இப்போ ஒழுங்கா சொல்லப்போறியா, இல்ல நான் இங்கேயே உன்னை…” என்று சூர்யா அவள் காதில் கிசுகிசுக்க…

அவன் மடியில் அமர்ந்திருந்த நக்ஷத்ராவிற்கு மிகவும் அசௌகரியமாக இருக்க, அவள் முகத்தைச் சுளித்தாள். முகத்தைச் சுளிப்பது காரில் முன்னாடி டேஷ்போர்டு கண்ணாடியில் நன்றாகத் தெரிந்தது. அதைப் பார்த்தவனுக்கு மேலும் கோபம் அதிகமாக… தன் மடியில் இருந்தவளை அப்படியே முகத்தைப் பிடித்துத் திருப்பியவன், அவள் இதழில் அழுந்த ஒரு முத்தம் வைத்து, “நீ என்னைப் பார்த்து ஏன் பயப்படுறேன்னு சொல்ற வரைக்கும் நான் உனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பேன். எப்படி வசதி?” என்று கேட்டான்.

அவன் முத்தம் கொடுத்ததில் அதிர்ச்சியான நக்ஷத்ரா, சூர்யாவை பயந்துபோய் பார்க்க…

“இப்படி பயந்து மறுபடியும் பார்க்காதே. நீ இப்படிப் பார்க்கிறப்போ எல்லாம் எனக்கு உனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணுது,” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவள் உதட்டில் முத்தம் வைத்தான்.

சூர்யா முத்தம் வைத்ததும், நக்ஷத்ரா ஆற்றாமையோடு அவனைப் பார்த்தவள், “ச்சீ…” என்று சொல்லி முகம் சுளித்துத் தன் உதட்டில் இருந்த அவன் எச்சிலைத் துடைத்தாள்.

தான் முத்தம் கொடுத்ததை அருவருப்பு போல முகம் சுளித்துப் பார்த்து நக்ஷத்ரா அதைத் துடைக்கவும், சூர்யாவிற்கு கோபத்தில் உச்சி நரம்புகள் எல்லாம் சூடேறிவிட்டது. இத்தனைக்கும் அவன் அவளுக்கு ஆழமாக முத்தம் வைக்கவே இல்லை. தன் உதட்டை ஈரப்படுத்தி அவள் உதட்டின் மேல் மட்டுமே லேசாக ஒட்டி எடுத்திருந்தான். அதற்கே இப்படி முகம் சுளிக்கிறாள் என்று கோபம் வர, மீண்டும் அவள் முகத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாகத் தன் முகத்திற்கு அருகில் இழுத்தவன், அவள் திமிரிக்கொண்டு பின்னால் செல்லவும், அதை எல்லாம் கருத்திலேயே கொள்ளாமல், அவள் இதழில் ஆழ முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.

சூர்யா கோபத்தோடு அவளுக்கு முத்தம் கொடுக்க, அவன் தந்த முத்தமே அவனுக்கு வினையாகிப் போனது. ஏற்கனவே அவனைக் கண்டு ஒதுங்கி இருந்தவள், இப்போது அவனைச் சுத்தமாக வெறுத்து ஒதுக்கினாள்.

இதுவரை சூர்யா நக்ஷத்ராவிடம் அதிகமாகப் பேசியதே கிடையாது. எங்கும் ஃபங்ஷனில் பார்த்தால் தூரத்திலிருந்து மட்டும் அவளை ரசித்துக்கொள்வான். அவனுக்கே தெரியாமல் நக்ஷத்ரா அவள் இதயத்திற்குள் என்றோ நுழைந்துவிட்டாள். அன்று உன் கனவில் வந்து நக்ஷத்ரா அவனை சூர்யா மாமா என்று ஆசையாக அழைத்ததுமே, சூர்யாவிற்கு அவளை அப்போதே பார்க்க வேண்டும் என்று தோன்றிதான் அவளைப் பார்க்க பிரியாவின் வீட்டிற்குச் சென்றான். இங்கே அவள் இவனைப் பார்த்துப் பயந்து ஒழிந்துகொள்ளவும், தான் அவள் மீது அவனுக்குக் கோபமாக வந்தது. தான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்பதற்கு என்று இவள் இப்படி என்னைக் கண்டு பயந்து போகிறாள் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதினால் தான், நேராக அவள் எங்கே செல்கிறாள் என்று விசாரித்துவிட்டு அவளுக்காகக் காத்திருந்தான். ஆனால், அவள் இப்படித் தன்னை நடத்துவாள் என்று சூர்யா துளியும் எதிர்பார்க்கவே இல்லை.

அவளை ஆழ்ந்து முத்தமிட்டவன், “என்னோட ஒரு முத்தத்தையே இப்படி முகம் சுழிச்சே நீ என்னை அசிங்கப்படுத்திட்ட… அடுத்த முறை நான் உன்னை பார்க்கிறப்போ எனக்குச் சரியான காரணம் தெரியணும், நீ ஏன் என்னைப் பார்த்துப் பயப்படுற அப்படின்னு. அப்படி இல்ல நீ காரணம் சொல்லலைன்னா இதே மாதிரி முத்தம் மறுபடியும் உனக்கு கொடுப்பேன்,” என்றான் சூர்யா.

அவள் மிரண்டுபோய் அவன் மடியில் அமர்ந்தவாறே சூர்யாவைப் பார்க்க… “இந்தக் கண்ணு, இந்த கண்ணு ரெண்டுதான்டி என்னென்னவோ செய்யுது. நீ இப்படிப் பயந்து பார்க்கிறப்போ எனக்கு உன் பக்கத்திலேயே இருக்கணும் போல இருக்கு,” என்றவன், காரைத் திறந்து அவளைக் கீழே இறக்கிவிட்டு, கதவைச் சாற்றியவன், நக்ஷத்ராவைத் திரும்பியும் பார்க்காமல் மறுபுறம் வந்து இறங்கினான். கார் கதவைத் திறந்து உள்ளே அமரப்போனவன், காருக்கு வெளியே நின்றிருந்த நக்ஷத்ராவைப் பார்க்க… அவள் கண்களில் கண்ணீரோடு தலைகுனிந்தபடி இன்னும் அதே இடத்தில் நின்றிருந்தாள்.

“என்ன, வீட்டுக்குப் போறதுக்கு ஐடியா இருக்கா, இல்ல இன்னொரு முத்தம் வேணுமா?” என்று கேட்டான்.

அவன் அப்படிச் சொன்னதும் தான் தாமதம். “இங்கிருந்துவிட்டால் போதும்,” என்று நக்ஷத்ரா ஒரே ஓட்டமாகத் தன் வீட்டிற்குள் ஓடிவிட்டாள். அவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்றுவிட, அவள் சென்ற திசையைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் இட்டவன், தன் காரைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.

அழுதப்படியே நக்ஷத்ரா வீட்டுக்குள் ஓடி வர… அப்போதுதான் ஏர்போர்ட்டில் இருந்து வந்திருந்த தேவ், ரிஷி, பிரியா, குரு நால்வரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். அவர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி உள்ளே வந்த நக்ஷத்ரா, அவசர அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்து, தன் அண்ணன்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்தவள், ரிஷியிடம், “அண்ணா எப்போ வந்த?” என்றாள்.

“இப்போதான்டா. ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் ஆகுது. எங்க பெயிண்டிங் கிளாஸ்க்குப் போயிட்டு வரியா?” என்று கேட்டான்.

“ஆமாம் அண்ணா,” என்று நக்ஷத்ரா சொல்ல…

“எங்கே, ஒண்ணுமே கையில இல்ல? சும்மா கைவீசிட்டு வந்திருக்க கிளாஸ்ல இருந்து?” என்றான் ரிஷி.

ரிஷி கேட்டதும் தான், பெயிண்டிங் கிளாஸிற்கு கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தையும் பயத்திலும் பதட்டத்திலும் சூர்யாவின் காரிலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வர…

“அது… அது வந்து… அண்ணா, என் ஃபிரெண்ட் ரெஃபரன்ஸ்க்கு வேணும்னு அவ வீட்டுக்கு எடுத்துட்டு போயிருக்கா. நாளைக்கு கிளாசுக்கு வரும்போது கொண்டு வரேன்னு சொன்னா,” என்றால் நக்ஷத்ரா.

“சரிடா,” என்று அவள் தலையில் கை வைத்து நக்ஷத்ராவின் தலையைக் கலைத்துவிட்டான்.

நக்ஷத்ரா சூர்யாவுடன் காருக்குள் நடந்த எதையுமே தன் வீட்டில் சொல்லாமல் மறைத்துவிட… ஆனால், அவள் முகம் சரியில்லை… வாசலில் வரும்போதே நக்ஷத்ரா அழுதுகொண்டு வந்ததை கவனித்த இரு கண்கள், இதற்கு காரணமானவர்கள் யார் என்று தனக்குத் தெரியும் என்பது போல, “அவனை வெச்சுக்கிறேன்,” என்று கோபமாகத் தனக்குள் கர்ஜித்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured