Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-1

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-1

by Layas Tamil Novel
834 views

இராக்கதனின் ரதி அவள் பாகம் 2

பாகம் ரெண்டில் முழுக்க முழுக்க ரொமான்ஸ், காமெடி மட்டும் தான் வரப்போகுது. ஜோடிகளுக்குள்ள  சண்டை இருக்கும் ஆனா அதை விட ரொமான்ஸ் அதிகம் இருக்கும். இந்த பார்ட்டில் நான் ரெண்டு version எழுத போறேன். ஒன்னு வெப்சைட் க்கு இன்னோன்னு pratilipi க்கு. இங்க ரொமான்ஸ் இருக்கறதை விட சைட்ல ரொமான்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.

நம்ம லயாஸ் தமிழ் நாவல் வெப் சைட்ல இராக்கதனின் ரதி அவள் பாகம் ரெண்டோட கதைய இனிமேல் இங்கே டெய்லி அப்லோட் பண்ண போறேன். அதுக்கு முன்ன பாகம் ஒன்னோட கதை சுருக்கத்தை சொல்லிடுறேன் 

முதலமைச்சர் சிவராஜ்னுக்கு அடியாளா வேலை பார்க்கிறான் ரங்கநாதன் என்கிற ராக்கி. அவனுக்கு ஒரு தங்கை ஓவியா.

ராக்கிய பத்தி அவளோட எடிட்டர் ஆபீஸ்ல வேலை பாக்குற குணவான் மூலமா   தெரிஞ்சுகிட்ட நம்ம ஹீரோயின் ரதி அவனுக்கு தெரியாம  பாலோ பண்ணி கதை எழுத முடிவு பண்ரா.

அவள் தினம் கவனி   பத்திரிக்கையில் வேலை பார்த்துட்டு இருக்கா 

ராக்கியோட தங்கச்சி ரதியோட  ஜூனியr  இவங்க ரெண்டு பேருக்கும் பழக்கமாகுது அவன் மூலியமா ராக்கி பத்தி நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கிறா.

ரதிக்கு  ராக்கி மேல காதல் வந்துடுது அந்த ரவுடி பயலே நம்ம கதை ஆசிரியர் லவ் பண்றாங்க 

அவன பத்தி கதை எழுதுற விஷயத்தை  சொல்லவே இல்ல ராக்கிகிட்டே அவங்க கல்யாணமும் முடிஞ்சிடுது இதுக்கு இடையில ரதியோட ட்வின் பிரதர் ராகவுக்கும் ராக்கி ஓட தங்கச்சி ஓவியாவுக்கும் காதல் மலருது 

இவங்களோட காதல் ஒரு பக்கம் போயிட்டு இருக்கு.

ரதியோட தங்கச்சி மாளவிகாவ அவளோட அத்தை பையன் ஜீவனுக்கு மாளவிகா விருப்பம் இல்லாம கல்யாணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடக்குது.

இவங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன பிரச்சனை வந்துச்சு ஜீவன பிடிக்காமலேயே எப்படி அவனை கல்யாணம் பண்ணிக்க மாளவிகா சம்மதிச்சா 

இதுக்கிடையில ரதியோட சித்தப்பா பையனுக்கும் அவ கூட வேலை பாக்குற கமலிக்கும் இடையில லேசா உரசலும் காதலும் ஆரம்பிச்சிருக்கு 

ராகவ் ஓவியாவுடன் காதல் மிக தீவிரமா போயிட்டு இருக்கு. தன்ன பத்தி ரதி கதை எழுதுற விஷயத்தை ராக்கி தெரிஞ்சுக்கிறான். அதனால அவ கூட இனிமேல் சேர்ந்து வாழ முடியாது தன்கிட்ட சொல்லாம அவ இந்த கதை எழுதுனது அவனுக்கு துரோகம் செஞ்ச மாதிரி இருக்குன்னு அவள ஒதுக்கி வைக்கிறான் விவாகரத்து வாங்கணும்னு வற்புறுத்தறான் 

இவங்க பிரச்சனை இப்படி போயிட்டு இருக்குறப்போ மாளவிகாவுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது அவ கல்யாணத்தப்போ ராகவ் ஓவியா முத்தம் கொடுத்துகிறது ராக்கி பாத்திரான் அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சுடுறான் 

இடைல முதலமைச்சர் சிவராஜனோட பொண்ணு திகழினி   கல்யாணம் பண்ணி அமெரிக்கவுல இருக்கவ திடீர்னு விவாகரத்து பண்ணிர்றா…  

அவளால அமெரிக்காவில் இருந்து முதலமைச்சருக்கு சில பிரச்சினைகள் வருது அதன் மூலமா அவரோட அரசியல்ல பிரச்சனை வரதுனால எப்படியாவது திகழினி பிரச்னையை சரி செஞ்சு அவளை இந்தியா அழைச்சு வர  ராகவ்வை அனுப்பி வைக்கிறார் 

அமெரிக்கப் போன ராகவ் திகழினி கூட நட்பு பாராட்டி பழகுறான் முதல்ல அவன்கிட்ட முகம் கொடுத்து பேசாம எரிந்து விழுந்த திகழினி ராகவ் கூட பழக பழக அவனை பிடிச்சு போயிருது. ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கு இடையில ஒரு சின்ன பிரச்சனை வந்துருது அதனால ரெண்டு பேருக்கும் இடையில் தப்பு நடந்திருக்கும் 

இந்த பிரச்சினையால ராகவ் திகழினிய கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுறான்

முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு போறப்போ அவரோட எப்பவும் ராக்கியும் இருப்பான். தினம் கவனி பத்திரிகை சார்பாக ரதி அவளோட டீமோட இந்த பிரச்சாரத்துக்கு அவர் கூடவே பயணம் செய்றாங்க.

அங்கயும்  ராக்கிக்கும் ரதிக்கும் பிரச்சினை ஓடிக்கிட்டே தான் இருக்கு அவ எவ்வளவோ சொல்லியும் சமாதானப்படுத்த நினைக்கிற ஆனா ராக்கி கொஞ்சமும் இறங்கி வரவே இல்லை 

இதுக்கு இடையில மந்திரிக்கு உடம்பு சரி இல்லாம போயிடுது திகழினியும் அமெரிக்காவிலிருந்து ராகவ்வோட இந்தியா வந்துடறா வந்தவங்களுக்கு இடையில் கல்யாண ஏற்பாடு நடக்குது கூடவே ஓவியாவுக்கும் முதலமைச்சரோட பிஏ வேலுவுக்கும் கல்யாணம் ஏற்பாடு நடக்குது 

ஒரு வழியா ராக்கியா சமாதானம் செஞ்சிருந்த ரதி இந்த கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறா ஆனா அது முடியல ராகவ் திகழையும், ஓவியா வேலுவையும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க இதுதான் முதல் பாகம் அடுத்து வர செகண்ட் பார்ட்ல இந்த முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கலாம் ஏன் இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என்ன பிரச்சனைனால இதெல்லாம் நடந்துச்சுனு இராக்கதனின் ரதி அவள் பாகம் 2ல படிச்சு தெரிஞ்சுக்கோங்க

எபிசோட் 1

திகழினியையும், ஓவியாவையும் நிறுத்தி வைத்திருந்த ராக்கி, “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சிருக்கீங்க. மீடியா, பத்திரிக்கைனு எல்லோரும் உங்க கல்யாணத்தை கவர் பண்ணியிருக்காங்க. இப்போ, நீங்க பண்ணின காரியத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்று கோபமாகக் கேட்டான்.

அவன் அருகில் நின்றிருந்த ரதி, “விடுடா… அவங்க ரெண்டு பேரும் எல்லாமே முடிவு பண்ணிட்டுதான் கல்யாண மேடை ஏறியிருக்காங்க. நாமதான் எதுவும் தெரியாம ஏமாந்து போயிருக்கோம். நம்மளை மட்டும் இல்ல, ராகவ், வேலு ரெண்டு பேரையும் சேர்த்துதானே ஏமாத்தியிருக்காங்க” என்றாள்.

ரதி பேசுவதைக் கேட்ட திகழ் அவளை முறைக்க, ரதி அதைப் பொருட்படுத்தாமல் நின்றிருந்தாள்.

“ஏன்டி இப்படிப் பண்ணுன? நாங்க பேசி வச்சது என்ன? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணியிருக்கிற காரியம் என்ன?” என்று செல்வி, திகழினியின் முதுகில் அடித்தார்.

“அம்மா… வலிக்குது!” என்று முனகியவள்,

 “நான் எப்படி ராகவ்வைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்? நான் அவனை அந்த மாதிரி பார்த்ததே இல்லை. அவன் என்னோட ஃப்ரெண்ட் அவ்வளவுதான். அவனை கல்யாணம் பண்ணிட்டு அவன் கூட என்னால குடும்பம் நடத்த முடியாது. அதனாலதான் நானும் ஓவியாவும் ஆள் மாறாட்டம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்றாள்.

“ஏன்டி, அப்புறம் உனக்கும் ராகவ்வுக்கும் கல்யாணம்னு சொன்னதும் நீயும் சரின்னு சம்மதிச்ச? அதுக்கு என்னடி அர்த்தம்? நீ சரின்னு சொன்னதுனாலதானே ராகவ்வும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னான்?” என்று செல்வி கேட்டார்.

“ஐயோ அம்மா, அந்தக் கதையே வேற. அதை உங்ககிட்ட சொன்னா சரி வராது” என்றவள் ராகவ்வின் பக்கம் திரும்பி, “ஸாரி ராகவ். உன்கிட்ட இத்தனை நாள் ரூடா நடந்ததுக்கு ஃபன் பண்ணலாம்னுதான் முதல்ல இதை ஆரம்பிச்சேன். ஆனா, இவ்வளவு சீரியஸா கல்யாணம் வரைக்கும் வந்து விடும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஸாரி” என்றாள் மீண்டும்.

திகழ் சொன்னதைக் கேட்டு ராகவ் அவளை அழுத்தமாகப் பார்த்தான்.

ஓவியாவைத் திருமணம் செய்யப் போகிறோம் என்று அதிக எதிர்பார்ப்போடு அந்தக் கல்யாணத்திற்கு முழு மனதாகத் தயாராகி வந்தது வேலு மட்டும்தான். ஆனால், இன்று ஜோடிகள் மாறிவிட்டதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராகவ் கட்டிய தாலியோடு, மேடையில் அவன் அருகில் நின்றிருந்த ஓவியாவை ஏமாற்றத்தோடு பார்த்தான் வேலு.

அவன் பார்வையில் இருந்த வலியை உணர்ந்த ஓவியா, கைகூப்பி வேலுவைப் பார்த்து, “என்னை மன்னிச்சிடுங்க. நாங்க ஆள் மாறாட்டம் பண்ணி கல்யாணம் பண்றது உங்ககிட்டயாவது சொல்லியிருக்கணும். கடைசி நிமிஷத்துல இந்த மாதிரி பண்ண வேண்டியதாயிடுச்சு” என்று அவனிடம் மனதார மன்னிப்புக் கேட்டாள்.

வேலுவின் மனநிலையை ராக்கியால் உணர முடிந்தது. அவன் அருகில் வந்தவன், “ஸாரிடா மச்சான். என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் இப்படிப் பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல. வீணா இதுல உன்னையும் ராகவ்வையும் இவளுங்க ரெண்டு பேரும் சேர்ந்து பகடைக்காயா யூஸ் பண்ணிட்டாங்க” என்று அவர்களுக்கு எதிரே மேடையில் நின்றிருந்த ஓவியாவையும் திகழினியையும் பார்த்துச் சொன்னான்.

“இல்ல பாஸ். ஓவியா அவங்க மனசுக்குப் பிடிச்சவரத்தான் கல்யாணம் பண்ணியிருக்காங்க. அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், சாரோட பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் என்னால் ஏத்துக்க முடியல. அவங்க தகுதிக்கும் என்னோட தகுதிக்கும் இது சரியா வராத விஷயம். ராகவ்வுக்கும் ஓவியாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னுதான் சாரோட பொண்ணு என்னைக் கல்யாணம் பண்ணியிருக்காங்க. ஆகமொத்தம், நான் இங்கே டம்மி பீஸ்தான்” என்றான் வேலு.

“ஏய், என்ன நீ டம்மி பீஸ்னு இப்படிப் பேசிட்டு இருக்க? உன்னை பத்தி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் நல்லாவே தெரியும். அவங்க நீ சொன்ன மாதிரி அந்தஸ்து பார்த்துப் பழகுற ஆளுங்க கிடையாது. அப்படி இல்லாமலா, திகழுக்கு பிடிக்கும்னு சொன்னதும் கடைக்கோடியில் இருந்த ஒருத்தனை அவருக்கு மருமகனாக்கினார்? அதை புரிஞ்சுக்கோ. அவங்க மனசு உனக்குத் தெரியாதா?” என்றவன்,

 திகழினியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் திகழ் வேற வழியில்லாம உன்னைக் கல்யாணம் பண்ணிக்கல. அவளுக்கு உன்னைப் பிடிக்காமல் கழுத்தை நீட்டற டைப் கிடையாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோ” என்றான் ராக்கி.

அதைக் கேட்டு வேலு திகழைப் பார்க்க, அவளோ வேலுவின் பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

என்னடா இது? ஓவியா மட்டும்தான் ராக்கியோட தங்கச்சின்னு இவ்வளவு நாள் சொல்லிட்டு இருந்தோம். இப்ப என்ன தங்கச்சிங்க… தங்கச்சிங்கனு ரெண்டு பேரையும் சேர்த்து சொல்றான்னு தானே யோசிக்கிறீங்க? ஆமாங்க, ஓவியா, திகழினி ரெண்டு பேருமே ராக்கியோட தங்கச்சிங்கதான்.

அவங்க ரெண்டு பேரும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஒருத்தர் போலவே ஒருத்தர் இருப்பாங்க. சின்ன வித்தியாசம் என்னனா… அப்படி எதுவுமே கிடையாது. ரெண்டு பேரும் அச்சு அசல் ஜெராக்ஸ் எடுத்து வச்ச மாதிரி இருப்பாங்க. நம்ம இரட்டை ரோஜாக்கள். ஓவியா ராக்கி கூட வளர்ந்ததுனால கொஞ்சம் குடும்பப்பாங்கானவள். செல்வச் செழிப்போட வளர்ந்த நம்ம திகழ் கொஞ்சம் மாடர்ன் டைப். அவ்வளவுதான் அவங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்கிற வித்தியாசம். அதுவும் அவங்க நடவடிக்கையிலும் பேச்சிலும் இருந்துதான் நம்ம கண்டுபிடிக்க முடியும்.

அதெல்லாம் சரி, இப்ப என்ன ஆள் மாறாட்டம் பண்ணாங்கன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இருந்தாலும் சொல்லிடுறேன்.

மணமகள் அறை

இறுகிய முகத்தோடு கண்ணாடியின் முன்பு ஓவியா அமர்ந்திருக்க, அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர் ஒப்பனைக் கலைஞர்கள். அவள் அருகில் மற்றொரு இருக்கையில் அமர்ந்து ஓவியாவையே கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் திகழ்.

“எப்படிடி இவ்வளவு கல்நெஞ்சக்காரியா இருக்க? ராகவ்வ உருகி உருகி லவ் பண்ணிட்டு, இப்ப அந்த வேலுவ கல்யாணம் பண்றதுக்கு வெட்கமே இல்லாம ரெடி ஆயிட்டு இருக்க” என்றாள் திகழ்.

“என்னை என்ன பண்ண சொல்ற? அண்ணன் வீம்பு பிடிச்சுட்டு, எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. அண்ணன் பேச்சை மீறி நான் எப்படி ராகவ்வுக்குக் கழுத்து நீட்டுவேன்? அது அண்ணனை அவமானப்படுத்துற மாதிரி ஆகிடாதா?” என்றாள்.

“உன் அண்ணன் அவமானப்படக் கூடாது, ஆனா நீ மட்டும் பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை முழுக்கக் கஷ்டப்பட்டு இருக்கணுமா? என்னடி லாஜிக் இது?” என்றாள் திகழினி.

“இந்த லாஜிக் பார்க்கிற வேலையெல்லாம் எனக்குத் தெரியாது. ஒண்ணு என் அண்ணனே இந்தக் கல்யாணத்தை நிறுத்தி எனக்கும் ராகவ்வுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும். அப்படி இல்லனா, ராகவ் வாய் திறந்து என்னைத்தான் பிடிச்சிருக்கு, என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லணும். அப்படி இவங்க ரெண்டு பேருமே எதுவுமே சொல்லலனா, நான் வேலு கட்டற தாலியை வாங்கிக்கிடுவேன்” என்றாள் அழுத்தமாக.

“உன் அண்ணனுக்கு நீயும் ராகவ்வும் கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கலைன்னு யாரடி சொன்னா?” என்று அங்கு வந்தாள் ரதி.

“என்ன அண்ணி, தெரியாத மாதிரியே கேட்குறீங்க? நீங்களும் அண்ணாவும் சண்டை போட்டுட்டு பிரிஞ்சிட்டிங்களே. அதனாலதான் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க மாட்டேன்னு அண்ணா வீம்பு பிடிச்சுட்டு இருந்தது” என்றாள் ஓவியா.

“அது நடந்து முடிந்த பழைய கதை. ஆனா, நானும் உன் அண்ணனும் ராசியாயிட்டோம். நாங்க ரெண்டு பேரும் ராசியானதுமே நான் உன் அண்ணன்கிட்ட முதல்ல கேட்டது, உன்னையும் ராகவ்வையும் சேர்த்து வைக்கச் சொல்லிதான். அதுக்கு அவனும் சம்மதிச்சிட்டான். ஆனால், உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லலாம்னு நினைச்சப்போதான் சிவராஜன் ஐயாவுக்கு உடம்பு முடியாம போயிடுச்சு. அவர் ராகவ்வைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும், ராகவ்வும் திகழினியை சரின்னு சொல்லிட்டான். அவன் ஏன் அப்படி சொன்னான்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது. சரி, உங்க ரெண்டு பேர் கிட்டயும் உண்மையைச் சொல்லி உங்க கல்யாணத்தை நடத்தலாம்னு நினைச்சா, உன் அண்ணன் என்கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டான். ராகவ் அவனாவே ஓவியாவை கல்யாணம் பண்ணுவேன்னு வாய் திறந்து சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு. எனக்குத்தான் பொறுக்க முடியல. இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்கப்போகுது. இப்படி அவங்கவங்க வீம்புக்காக உண்மையை மறைச்சு வீணா உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்க எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் இப்பவாவது வந்து சொல்லணும்னு வந்தேன்” என்றாள் ரதி.

ராக்கிக்கு இந்தக் திருமணத்தில் சம்மதம் என்று தெரிந்ததுமே, இவ்வளவு நேரம் சோகத்தில் இருண்டுபோய் இருந்த ஓவியாவின் முகம் பிரகாசித்ததைப் பார்த்து திகழினிக்குச் சந்தோஷமாக இருந்தது.

“அப்புறம் என்னடி? அதான் ராக்கி ஓகே சொல்லிட்டானே. நேரா போய் ராகவ்வுகிட்ட விஷயத்தைச் சொல்லிட வேண்டியதுதான்” என்று எழுந்தாள் திகழினி.

அவள் கையைப் பிடித்துத் தடுத்த ஓவியா, “முதல்ல அண்ணனை பேர் சொல்லிக் கூப்பிடுறதை நிறுத்து. அவர் உனக்கும் அண்ணன்தானடி? ஒழுங்கா மரியாதை கொடுத்துப் பேசு” என்றாள்.

“இது ரொம்ப முக்கியம்! நீ கையை விடு. நான் போய் ராகவ்வுகிட்ட முதல்ல இந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்லிட்டு வரேன்” என்று நகரப் போனவளை மீண்டும் பிடித்து தன் முன் நிற்க வைத்தவள்,

 “வேண்டாம். அவனை நான் எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரியும். தெரிஞ்சுமே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சம்மதம் சொன்னானே. அப்போ அவனுக்கு என் மேல இருந்த காதல் பொய்ன்னுதானே அர்த்தம்? அப்படியே அவன் என் மேல வச்சிருக்கிற காதல் உண்மையா இருந்தா, அவனா இந்த கல்யாணத்தை நிறுத்துறானான்னு பார்க்கலாம்” என்றாள்.

“அவன் இந்தக் கல்யாணத்தை கண்டிப்பா நிறுத்த மாட்டான்” என்றாள் திகழினி.

“ஏன்?” என்று ஓவியாவும் ரதியும் ஒருசேரக் கேட்க,

“அதை நீயே அவன்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்றவள், 

“நீ சொன்னதுபோல விஷயத்தை ராகவ்வுகிட்ட சொல்லாம விட்டுட்டா, கடைசியில் அவன் என் கழுத்துல தாலி கட்டிடுவான். நோ வே. அவன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். நான் அவனை அப்படித்தான் பார்க்குறேன். என்னால எல்லாம் அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. என் புருஷனா அவனை நினைச்சுப் பார்க்கவே என்னால முடியல” என்று தலையை இடவலமாக அசைத்தவள், “வேணும்னா இப்படிப் பண்ணலாம்” என்று தன் யோசனையைச் சொல்ல ஆரம்பித்தாள் திகழினி.

“என்ன விளையாடுறியா திகழினி? மொத்தம் மீடியாவும் இங்கதான் கூடியிருக்கு. இந்த நேரத்துல இப்படிப்பட்ட விஷப் பரீட்சை தேவையா?” என்றாள் ரதி.

“இங்க பாரு ரதி” என்று திகழ் பேச வர, “ஏய், அவங்க உனக்கு அண்ணிடி. பேர் சொல்லி கூப்பிடாத. ஒழுங்கா முறை சொல்லி கூப்பிடு” என்றாள் ஓவியா.

“ஓ மை காட்! இவளை வச்சுட்டு…” என்று சலிப்பானவள், “எனக்கு எப்படி வருததோ அப்படிதான் கூப்பிடுவேன். நீ வாயை மூடி” என்று அவளை அடக்கியவள், “இவ்வளவு வருஷமா என் அம்மாவும் அப்பாவும் எங்களைப் பத்தி யாருக்குமே சொல்லாம இருந்துட்டாங்க” என்று பெருமூச்சு விட்டவள்

.

“இனியும் இதை மறைச்சு வைக்கிறதுல என்ன லாபம் இருக்கு? எப்படியும் ஒருநாள் விஷயம் வெளியே வரத்தான் போகுது” என்றவள் ஓவியாவைப் பார்த்துவிட்டு, “ஒண்ணுமே இல்ல. நானும் இவளும் பார்க்கிறதுக்கு ஒரே மாதிரி இருக்கோம். இப்ப கல்யாண மேடையில போய் நாங்க ரெண்டு பேரும் உட்கார்ந்தா பார்க்குறவங்களுக்கு சந்தேகம் வராதா? அமைச்சரோட பொண்ணும் ராக்கி தங்கச்சியும் ஒரே மாதிரி இருக்காங்களேன்னு அப்போ மட்டும் அங்க கேள்வி வராதா?” என்றாள்.

அவள் சொன்னதை யோசித்த ரதி, “ஆமா, நீ சொன்னதும் சரிதான். நான் எழுதின கதையில், விளையாட்டுக்காக முதல் அமைச்சரோட அடியாளா இருக்கிற என்னுடைய ஹீரோவை, அதாவது ராக்கியை சிவராஜன் சாரோட மகனா சித்தரிச்சுக் கதையை மாத்தி எழுதினேன். ஆனா, அதுவே இப்போ உண்மையாயிருச்சுன்னு நினைக்கிறப்போ என்னாலயே நம்ப முடியல” என்றவள், “சரி, நீ சொன்னபடியே பண்ணலாம்” என்றாள்.

இருவரும் திருமணத்திற்குத் தயாராகி மணமேடை வந்தவர்கள். திகழும் ஓவியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அங்கே கூடியிருந்த சொந்த பந்தங்களும் பத்திரிக்கைக்காரர்களும் சிவராஜனின் மகள் திகழினியைப் போலவே அச்சசலாக மற்றொரு பெண் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்

 அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொள்ள, அதையெல்லாம் சிவராஜன் கண்டுகொள்ளவில்லை. அவருக்கே திகழ் யார், ஓவியா யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

“ரதி, மாளவிகா! ரெண்டு பேரும் ஓவியாவையும் திகழையும் கூட்டிட்டுப் போய் மணமேடையில உட்கார வைங்க” என்றார் செல்வி.

ரதியால் ஓரளவுக்கு திகழ் யார், ஓவியா யார் என்று கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால், கூட்டத்தினர் முன்பு எங்கே அடையாளம் தெரிந்து கொடுத்துவிடுவாளோ என்று அவள் தயங்கி நிற்க, மாளவிகாவுக்கும் அங்கே நின்று கொண்டிருப்பவர்களில் யார் ஓவியா, யார் திகழினி என்று தெரியவில்லை.

அவள் குழப்பத்தைப் பார்த்த ஓவியா, திகழ் அருகில் குனிந்து, “அதுதான் தங்கச்சி மாளவிகா” என்று ரதியின் அருகில் இருந்தவளைக் காட்டி, “அவளை நீ கூப்பிடு. அப்பதான் உன்னை ஓவியான்னு எல்லாரும் நம்புவாங்க” என்றாள்.

“சரி” என்று தலையாட்டியவள், “மாளவிகா, எங்க ரெண்டு பேர்ல யார் ஓவியான்னு கண்டுபிடிக்க முடியலையா?” என்று சிரித்தவள், “வாடி” என்று உரிமையாக அழைக்க, 

மாளவிகாவும் அவள்தான் ஓவியா என்று நினைத்தவள் சிரித்துக்கொண்டே அவளிடம் வந்து, “நிஜமாவே உங்க ரெண்டு பேர்ல யார் ஓவியானு என்னால கண்டுபிடிக்கவே முடியலடி” என்று சிரித்துக்கொண்டே அவளை அழைத்துக்கொண்டு போய் வேலுவின் அருகில் அமர வைக்க, ரதி ஓவியாவை அழைத்துக்கொண்டு போய் ராகவ்வின் அருகில் அமர வைத்தாள்.

ஓவியாவிற்கு மனதுக்குள் அவ்வளவு போராட்டம். ராகவ் கடைசி நிமிடத்தில் இந்தக் கல்யாணத்தை நிறுத்துவானா இல்லையா என்ற கேள்வி அவள் மனதிற்குள் ஓடியது.

திகழுக்கோ, ‘ராகவ், தயவு செய்து கல்யாணத்தை நிறுத்திடுடா. நீ மட்டும் அவள் கழுத்துல தாலி கட்ட, அவ்வளவுதான்’ என்று ராகவ்வைக் குறித்து வருத்தப்பட்டாள்.

அதே யோசனையோடு வேலுவைத் தாண்டி அடுத்த மணமேடையில் அமர்ந்திருந்த ராகவ்வை திகழ் எட்டிப் பார்க்க, வேலுவோ அவள் தன்னைத்தான் பார்க்கிறாள் என்று நினைத்து அவளைப் பார்த்து சிரித்தான்.

‘ஐயோ, இவன் வேற’ என்று நினைத்தவள், அசடு வழிய ‘ஈ’ என்று வேலுவிடம் பல்லைக் காட்டிச் சிரித்துவிட்டுத் திரும்பித் தலைகுனிந்து அமர்ந்து கொண்டாள்.

மந்திரங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, இரு மணமேடையில் இருந்த ஐயர்கள் “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்று தாலியை எடுத்து ராகவ் கையிலும் வேலு கையிலும் கொடுக்க, வேலு சந்தோஷமாகத் தாலியை வாங்கியவன் அருகில் இருந்த திகழினியைப் பார்த்துவிட்டு அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

ராகவ்வோ, இறுக்கமான முகத்துடன் தாலியை வாங்கியவன், ஓவியாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

ராகவ் தன் கழுத்தில் கட்டிய தாலியைச் சந்தோஷமாக ஏற்க வேண்டிய மனநிலையில் இப்போது ஓவியா இல்லை. அவள் மனம் முழுவதும், ராகவ் திகழினியை முழு மனதாகத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகிவிட்டான் என்று நினைத்து அவன் மீது உச்சபட்ச வெறுப்பில் இருந்தாள் ஓவியா.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured