Home UncategorizedMR.LOVER 8

MR.LOVER 8

by Layas Tamil Novel
114 views

EPISODE 8

ஜியாவைச் சந்தித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு தனது ஸ்டூடியோவிற்கு வந்த வினு, கோபமாக உள்ளே நுழைந்தான். தன் கேபினுக்குள் வந்து கார் சாவியை விட்டெறிந்தவன், தன் சேரில் போய் அமர்ந்தான். “அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் கிட்டே வந்து பேசணும்னு சொல்லுவா?” என்று கொதித்துக் கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த அவனுடைய பி.ஏ. ஆர்யா, “யாரு மச்சான்? அவ்வளவு தைரியமா உன்கிட்டே வந்து பேசினது?” என்று கேட்டான்.

அவனை முறைத்த வினு, “அதை தெரிந்து நீ என்ன பண்ணப் போற?” என்றான். அவன் கொண்டு வந்த ஃபைலை வாங்கிப் பார்த்துவிட்டு, டேபிளில் தூக்கிப்2 போட்டவன், “எல்லாம் ரெடிதானே?” என்றான்.

அவனைப் புரியாமல் பார்த்த ஆர்யா, “கேள்வி கேட்டது ஒரு குத்தமாடா?” என்று புலம்பியவன், “நமக்கு என்ன வந்துச்சு?” என்று நினைத்துக் கொண்டு, “எல்லாம் ரெடியா இருக்கு சார்” என்று, மச்சானிலிருந்து உடனே ‘சார்’ என தன் மனநிலையை மாற்றிக் கொண்டு வினுவின் பின்னால் சென்றான்.

அப்போது ஆர்யாவின் மொபைல் அடிக்க, வினுவின் பின்னால் சென்று கொண்டு இருந்தவன் மொபைலை எடுத்துப் பார்க்க, ‘மை ஃப்ரெண்ட்’ என்று வந்திருந்தது. அதைப் பார்த்ததும் சிரித்தபடி போனை எடுத்து, “சொல்லுப்பா” என்றான் ஆர்யா.

“என்னடா மவனே பங்கிட்டு இருக்க?” என்று அந்தப் பக்கத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

“ம்ஹும்… வேற என்ன செய்வேன்? நீ சொன்ன அப்போவே நான் உஷாரா இருந்திருக்கணும். அதைக் கேட்காம விட்டதுக்குத் தான் இன்னிக்கு அனுபவிக்கிறேன் அப்பா!” என்று அழுவது போலப் பாவனை செய்ய, உள்ளே சென்ற வினு, தன் பின்னால் ஆர்யா வராமல் போகவே, “எங்கே போய்ட்டான்?” என்று யோசனையோடு திரும்பி உள்ளே வந்தவன், ஆர்யா போன் பேசிக் கொண்டு இருப்பதைப் 4பார்த்துவிட்டு, அவன் கையில் இருந்த போனை வாங்கி காதில் வைத்தான். “ஹலோ சியாம் அங்கிள், நான் வினு பேசுறேன். எப்படி இருக்கீங்க?” என்றான்.

அங்கே, “என் பையன் எப்படி இருக்கானோ அதேபோலதான் நான் இங்கே இருக்கேன்” என்று சொல்லிக்கொண்டே, ஃபைலை எடுத்துக் கொண்டு விக்ரமின் கேபினுக்குச் சென்று கொண்டு இருந்தான் சியாம்.

“சரிங்க அங்கிள், எனக்கு ஒரு ஷூட் இருக்கு. அதை முடிச்சிட்டு ஆர்யாவை கால் பண்ணச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, சியாம் பதில் பேசுவதற்கு முன் போனை கட் செய்து ஆர்யாவிடம் வீசியவன், “வாடா…” என்று சொல்லிவிட்டுத் திரும்பி 3நடந்தான். வினுவின் பின்னால் ஆர்யா புலம்பியபடியே சென்றான்.

இருவரும் வினுவின் அடுத்த புராஜக்ட்டிற்கு நடக்க இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்குச் சென்றனர். பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், வினு செட்டிற்குள் நுழைந்ததும் பவ்வியமாக அவனை வணங்கி அனைவரும் மரியாதை செலுத்திவிட்டு விலகி நின்றனர்.

வினுவும் தன் கையில் நோண்டிக் கொண்டு இருந்த போனை வைத்துவிட்டு, பதிலுக்குத் தலையாட்டிக் கொண்டே தன் இடத்திற்குச் சென்றான். அன்று ஒரு பிரபல ஸ்கின் கேர் நிறுவனத்தின் விளம்பரப் படம். வெறுமனே வந்து வினு அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு சில போஸ் கொடுத்தால் போதும். அதற்கு அந்த பிராண்ட் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிடும். அதற்காகவே வினுவுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இந்த விளம்பரத்திற்கு அவரை புக் செய்து இருக்கிறார்கள்.

வினு அவ்வளவு சீக்கிரம் ஸ்கின் கேர் விளம்பரங்களில் பணத்திற்காக வேலை செய்ய மாட்டான். தனிப்பட்ட முறையில் அந்தப் பொருளைப் பற்றி எல்லாம் சரியாக இருக்கிறதா, இதனால் எதுவும் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் அதை உபயோகப்படுத்துபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இருக்கிறதா என்று அனைத்தையும் பரிசோதித்த பிறகு, தானும் அந்தப் பொருளை உபயோகப்படுத்திவிட்டுத்தான் அந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொள்வான்.

அவனுடைய ரசிகர்கள், ரசிகைகள் இதற்காகவே அவன் பரிந்துரைக்கும் பொருளை அவனுக்காகவே அந்தப் பொருளை நம்பிக்கையோடு வாங்கிவிடுவார்கள். கண்மூடித்தனமாக வினு என்ன சொன்னாலும் வாங்கிவிடுவார்கள். அவன் ரசிகைகளும் ரசிகர்களும் வினுவை “V” என்று அழைப்பார்கள்.

அப்படிப்பட்ட நம் V யை எவ்வளவு பேருக்குப் பிடிக்குமோ, அதேபோல அவனை விரும்பாதவர்களும், சிலர் அவன் துறையில் அவனது வளர்ச்சியைப் பிடிக்காதவர்களும் இந்தத் துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தன்னுடைய ஸ்கிரிப்டை வாங்கிப் படித்துக் கொண்டு இருந்தவனின் முதுகில் ஓங்கி ஒரு அடி பலமாக விழுந்தது. இவ்வளவு பெரிய ஸ்டாரை பின்னால் இருந்து வேறு யாரும் கை வைத்திருந்தால், இந்த நேரம் ஷூட்டிங் நடந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கும்.

ஆனால், வினுவை முதுகில் ஓங்கி அடித்ததும் கீழே விழப்போனவன், சுதாரித்துக் கொண்டு சேரில் நன்றாக அமர்ந்து கொண்டு திரும்பிப் பார்த்தான். தன் பின்னால் சிரித்தபடி நின்று இருக்கும் வினித் ஸ்ருதியின் மகள் நிதி. வினுவின் அருகில் போடப்பட்டு இருந்த சேரில் வந்து அமர்ந்தவள், “எப்படிட இருக்க, என் அண்ணா?” என்றாள்.

“வாடி என் தங்கச்சி… எனக்கு என்ன? நான் சூப்பரா இருக்கேன்” என்றான் வினு.

“சரி சரி, டெக்சாசில் இருந்து எப்போ வந்தே? யார் யார் என்ன செய்றாங்க?” என்றாள் நிதி.

“அவள் வீட்டில் வாமினி டார்லிங் வந்திருக்காங்க. அவங்க கூட பேசிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்” என்றான்.

“வாமினி டார்லிங் வந்திருந்தா கண்டிப்பா ஜியாவும் வந்து இருப்பாளே?” என்றாள் வினுவைப் பார்த்து கண்ணடித்து.

“ஆமா, வந்தா என்ன இப்போ?” என்றவன், “சரி, வெட்டி கதை பேசிட்டு இருக்காதே. ஷூட் ஸ்டார்ட் ஆயிருச்சு வா” என்று அங்கேயிருந்து எழுந்து செல்ல, அவன் அருகில் நின்று இருந்த விஷ்ணு, “என்ன சினிமாவின் இளசுகளின் கனவுக்கன்னி, எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்றான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன். பிரபல ஸ்டாருக்கு அசிஸ்டண்ட்டா இருக்கிற என் சியாம் அங்கிளுடைய ஒரே ஒரு பாவப்பட்ட மகன், என் அண்ணன் வினு கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கும் என் அண்ணா விஷ்ணு எப்படி இருக்கீங்க?” என்றாள்.

“அதானே, அவனோட தங்கச்சியாச்சே! அப்பறம் எப்படி பேசுவ? அவனை மாதிரி தானே நீயும் இருப்ப?” என்றவன், “போ தாயே… அப்பறம் உங்க அண்ணா நீ வரலைன்னாலும் என்னைதான் திட்டுவான்” என்று சொல்லி நிதியை ஷூட்டிங் செய்ய அனுப்பி வைத்தான்.

வினித் ஸ்ருதியை போலவே சினிமாத் துறையில் நிதியும் தனக்கென்று ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கிறாள். ஹாலிவுட்டில் மிகவும் முக்கியமான நடிகை இவள். அவ்வப்போது இந்தியத் திரைப்படங்களிலும் தன் கால்ஷீட்டிற்கு ஏற்ப நடித்துக் கொண்டிருப்பாள். வினு மாடல் என்றால், நிதி பிரபல நடிகை.

இவர்கள் இருவரையும் சேர்த்து இந்த விளம்பரத்தில் நடிக்க வைக்க, இந்த விளம்பர நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருக்கும் வம்சிகா ராணாவின் செல்ல மகள் ரசிகாவை அணுகி, இந்த பிராண்டிற்கு கால்ஷீட் வாங்கித் தரச் சொல்லி ரசிகாவை கவனித்து, அவள் மூலமாக வினுவையும், நிதியையும் இந்த விளம்பரத்தில் நடிக்க கோடிக்கணக்காக செலவு செய்து புக் செய்து இருந்தது அந்த ஸ்கின் கேர் நிறுவனம்.

விளம்பர ஷூட் செய்ய ஆரம்பித்து, அனைவரும் நடித்துக் கொண்டு இருக்கையில் வந்தாள் ரசிகா. நேராக வந்து விஷ்ணுவிடம், “எந்தப் பிரச்சினையும் பண்ணாம வினு நடிச்சிட்டு இருக்கான் போல இருக்கு?” என்றாள்.

அவளைத் திரும்பிப் பார்த்த விஷ்ணு, “வந்துட்டியா? ஏற்கனவே இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாம நான் திண்டாடிட்டு இருக்கேன், இதுல நீ வேறயா?” என்றவன், “ஏதோ எதுவும் செய்யாம நடிச்சிட்டு இருக்கான், அதுவரையில் சந்தோஷம்” என்றான் விஷ்ணு.

அப்போது, ஷூட்டிங்கை நல்ல முறையில் முடித்துக் கொடுத்துவிட்டு வினுவும், நிதியும் வர, அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்ட ரசிகா, “இந்த ஷூட்டிங்கை நல்ல முறையில் இரண்டு பேரும் முடிச்சுக் கொடுத்துட்டீங்க. அதுக்காக இன்னிக்கு நைட் ஒரு சின்ன பார்ட்டி இங்கே பண்ணி இருக்கேன். எல்லாரும் அங்கே வந்துடணும்” என்றாள் விஷ்ணுவையும் சேர்த்து.

அதற்கு வினு, “இல்லை, நான் எங்கேயும் பார்ட்டிக்கு போறதில்லைனு உனக்குத் தெரியும் இல்ல? அப்பறம் என்ன இது புதுசா?” என்றான்.

“டேய் V! இது வெளியாட்கள் கலந்துக்கிற பார்ட்டி கிடையாது, நம்ம ஃப்ரெண்ட்ஸ் மற்றும் ரிலேட்டிவ்ஸ் மட்டும் கலந்துக்கிற பார்ட்டி” என்றாள் ரசிகா.

அவள் ‘ரிலேட்டிவ்ஸ்’ என்று சொன்னதும், அப்போது ஜியாவும் அங்கு வருவாள் என்று அவனுக்குத் தெரியும். ஒரு நிமிடம் முகம் பிரகாசம் ஆனாலும், அவனுக்கும் அவளுக்கும் இடையில் இப்போது உறவு சரி இல்லை என்றபோது அவளைப் பார்க்க விருப்பம் இல்லாமல், அதை மனதில் வைத்துக் கொண்டு அந்தப் பார்ட்டிக்கு வரவில்லை என்று சொன்னான்.

உடனே நிதி, வினுவுக்கு மட்டும் கேட்கும்படி, “ஜியா அந்தப் பார்ட்டிக்கு வருவான்னுதான் நீ வரலைனு சொல்ற? அவ என்னடா பண்ணினா? அவ ஒரு பக்கம் இருக்கப் போறா, நீ ஒரு பக்கம் இருக்கப் போறே. பேசாம வா” என்றவள் திரும்பிப் பேசப் போக, இவர்கள் இருவரும் தங்களுக்குத் தெரியாமல் என்ன ரகசியம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கவனமாகக் கேட்க விஷ்ணுவும், ரசிகாவும் தங்கள் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு இருந்தனர்.

சட்டென்று நிதி திரும்பியதும், தங்களுக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இருவரும் பின்னால் நகர்ந்து கொண்டனர். அவர்கள் இருவரும் என்ன செய்திருப்பார்கள் என்று நிதிக்குத் தெரியும். இருவரையும் பார்த்துத் தலையை ஆட்டியவள், “வினு வருவான் ரசி” என்றாள்.

அதைக் கேட்டதும், “அப்பாடா! முதல் முறையா இவனுக்கு அசிஸ்டண்ட்டா இருந்துட்டு நான் பார்ட்டி என்ஜாய் பண்ணப் போறேன்” என்றான் விஷ்ணு.

“ஏன்? இதுக்கு முன்னே நீங்க பார்ட்டிக்கே போகாத மாதிரி இல்ல பேசுறே?” என்றாள் ரசிகா.

“இல்லை ரசி, இவன் யாராவது ரொம்ப கம்பல் பண்ணிக் கூப்பிட்டால் அந்தப் பார்ட்டிக்கு போவான். அங்கே போய் இவனும் என்ஜாய் பண்ண மாட்டான், கூட இருக்கிற என்னையும் என்ஜாய் பண்ண விட மாட்டான். இது நம்ம கேங் பார்ட்டி இல்லையா? இங்கே என் இஷ்டத்துக்கு இருக்கலாம் பாரு. அதைத்தான் சொன்னேன்” என்றான்.

“சரி சரி, ஈவினிங் 7 ஓ’கிளாக் எல்லாரும் மறக்காம வந்திடுங்க. எனக்குக் கொஞ்சம் ஒர்க் இருக்கு” என்றவள், வினுவிடம் திரும்பி, “உனக்கு ஒரு பெரிய புராஜக்ட்டில் ஹீரோவா நடிக்கக் கேட்டு என்னை ஒரு புரொடக்ஷன் நிறுவனம் அப்ரோச் பண்ணி இருக்காங்க. நீ சினிமாவில் இதுவரை நடித்ததில்லை, ஒரு டிரை பண்ணி பார்க்கிறியா?” என்றாள் ரசிகா. வினு வேண்டாம் என்பது போலத் தலை ஆட்ட, அவன் கையைப் பிடித்த நிதி, “ரசி, நீ ஓகே சொல்லு. இவன் கிட்டே கேட்டுட்டு இருந்தா ‘வேணாம்’னு தான் சொல்லிட்டு இருப்பான். இவனை நடிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றாள் நிதி.

“ஏய் நிதி! சும்மா இரு” என்று அவளை வினு தடுக்கப் போக, “நீ பேசாம இருடா அண்ணா! உனக்கு எதுவும் தெரியலை” என்றாள்.

“ஆமா, இவளுக்கு எல்லாம் தெரியும்” என்றான் அருகில் இருந்த விஷ்ணு நக்கலாக.

அவனை முறைத்த விஷ்ணு, “உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு” என்று அவனை மிரட்டியவள், “ஓகே, எனக்கு வேற ஒர்க் இருக்கு. முடிச்சிட்டு ஈவினிங் பார்ட்டிக்கு வந்துடறேன். பை” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். மற்றவர்களும் பேசிவிட்டு கிளம்பினார்கள்.

காலையில் நேரமே எழுந்த பிரியா, பூஜை அறையில் சுவாமி படங்களுக்குப் பூ போட்டு பூஜை செய்தவள், அனைவரையும் நேரமே எழுப்பிவிட்டு, சீக்கிரம் ரெடியாகி கீழே வரச் சொல்லி இருந்தாள் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று.

தேவ், ரிஷி ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் வேலை இருப்பதால் இருவரும் சீக்கிரம் கிளம்பி வந்திருக்க, நக்ஷத்ரா மட்டும் சூர்யாவை நினைத்துக் கொண்டே படுத்து இருந்தவள், நேரம் கழித்துத்தான் கீழே வந்தாள்.

நக்ஷத்ராவுக்காக அனைவரும் சாப்பிடாமல் காத்திருக்க, மெதுவாக எழுந்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு கீழே வந்தாள். நக்ஷத்ரா குளிக்காமல் சாப்பிட வருவதைப் பார்த்த பிரியாவிற்கு கோபம் தான் வந்தது. இவளை திட்டினால் அவள் அண்ணன்களும், அப்பாவும் தன்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்று பல்லைக் கடித்துக் கொண்டு, படியில் இறங்கி வரும் நக்ஷத்ராவைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள் பிரியா.

நேராக வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தவள், “இன்னிக்கு என்ன ஸ்பெஷல் பிரியா? நிறைய ஐட்டம்ஸ் செஞ்சு வெச்சிருக்க?” என்றாள்.

“ஒண்ணும் இல்லை, சும்மாதான்” என்றாள் பிரியா.

“சும்மாவா? இதை என்னை நம்ப சொல்றியா?” என்றவள், “ரிஷி அண்ணன் ஊரைச் சுற்றிவிட்டு ரொம்ப நாள் கழிச்சி வீட்டிற்கு வந்திருக்குன்னு தான் இத்தனை செய்து வெச்சிருக்க. இல்லைனா எனக்கும் என் அப்பா, தேவ் அண்ணாவுக்கு நீ எப்பவும் அந்த இட்லி, உப்புமான்னு தானே செஞ்சு தருவ? இந்த மாதிரி ரிஷி அண்ணா இருக்கும்போது நீ செய்யறதை எல்லாம் பார்த்துதான் நாங்க எல்லாம் உனக்கு இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் செய்யத் தெரியும்னு தெரிஞ்சுக்கிறோம்” என்றால், அங்கிருந்த உணவை எடுத்துத் தன் தட்டில் போட்டுக் கொண்டே.

“ஏன்டி, சொல்ல மாட்ட… உன்னை எல்லாம் எதுவும் சொல்லாம கைக்குள்ள வெச்சு தாங்கிட்டு இருக்காங்களே இந்த மூணு பேரையும் சொல்லணும். வரதைப் பாரு, குளிக்காம அப்படியே வந்து சாப்பிடுறதை. நீ பல்லு விளக்காம வந்து சாப்பிடறதுக்கு நான் செய்யற இட்லியும் உப்புமாவும் போதும்” என்றாள் பிரியா.

“ஏய்… இப்போ எதுக்கு சாப்பிடுற பிள்ளையை திட்டுற?” என்று சொல்லிக் கொண்டே குரு, அவளுக்குப் பிடித்த அல்வாவை எடுத்து அவள் தட்டில் வைத்து, “சாப்பிடுடா நக்ஷத்ரா குட்டி, அவ கிடக்கிறாள்” என்றான்.

நக்ஷத்ரா சாப்பிட்டுக் கொண்டே பிரியாவைப் பார்த்து, “பார்த்தியா? எனக்கு என் அப்பா சப்போர்ட் இருக்கு. அவர் என்கூட இருக்கிறவரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்றாள்.

“அப்போ நாங்க, நக்ஷத்ரா குட்டி?” என்று தேவும், ரிஷியும் கேட்க, “நீங்களும் தான் அண்ணா” என்றாள் இருவரையும் பார்த்து சிரித்தபடி.

“ஏன்டா ரிஷி? அவ இவ்வளவு நேரம் உன்னை சொல்லிதான் திட்டிட்டு இருந்தா. இப்படி கொஞ்சம் கூட ரோசமே இல்லாம இவளுக்கு வரிந்து கட்டிக்கிட்டு வந்து நிக்கிறே?” என்றாள் பிரியா.

“அம்மா, விடுமா… நம்ம நக்ஷத்ரா குட்டிதானே பேசுறா? அவளே குட்டிப் பொண்ணு மா…” என்றான் ரிஷி.

“யாரு? இவளா? இவளா சின்னப் பொண்ணு?” என்ற பிரியா, நக்ஷத்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நான் உங்க எல்லாரையும் முக்கியமா பேசணும்னு வரச் சொன்னதே, இவ கல்யாணத்தைப் பற்றிப் பேசத்தான்” என்றாள்.

நக்ஷத்ராவுக்குக் கல்யாணம் என்று சொன்னதும் அனைவரின் முகமும் வாடிவிட, அவர்களைப் பார்த்த பிரியாவிற்கும் அப்படித்தான் இருந்தது. “என்ன செய்வது? பெண்ணாகப் பிறந்தால் ஒருநாள் தன் பிறந்த வீட்டை விட்டுவிட்டு, தன் கணவனுடன் புகுந்த வீடு சென்றுதானே ஆக வேண்டும்” என்று நினைத்தவள், “நீங்க முகத்தை எவ்வளவு சோகமா வெச்சுகிட்டாலும் ஒரு நாள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துதானே ஆக வேண்டும்?” என்றாள்.

“இப்போ என்ன அவசரம்மா எனக்குக் கல்யாணத்துக்கு?” என்றாள் நக்ஷத்ரா.

“ஏன்? இங்கேயே இருந்து என்னை காலம் முழுக்க உனக்கு சமைச்சுப் போடச் சொல்றியா?” என்றாள் பிரியா.

“இங்கே பாருங்கடா… நம்ம நங்கை அத்தை இருக்காங்கல்ல, அவங்க பையன் முகிலுக்கு நம்ம நக்ஷத்ராவை பொண்ணு கேட்டு எனக்குப் போன வாரம் கால் பண்ணி இருந்தாங்க. நான் எல்லார் கிட்டயும் கலந்து பேசி முடிவு சொல்றேன்னு சொல்லிட்டேன்” என்றவள், நக்ஷத்ராவைப் பார்த்து, “நக்ஷத்ரா, அம்மா உன்கிட்டே ஒரு விஷயம் கேட்கிறேன். அதுக்கு நீ ஓப்பனா பதில் சொல்லு. நீ சொல்றதை வெச்சுதான் நாங்க முடிவு எடுப்போம். உன்னோட விருப்பம் இல்லாம இந்த வீட்ல எதுவும் நடக்காது, சரியா?” என்று தன் மகளுக்குத் தைரியம் சொன்னாள் பிரியா.

தனக்குத் திருமணம் என்று சொன்னதும் கலகலவென பேசிக் கொண்டு இருந்த நக்ஷத்ரா அமைதியாக இருக்க, தன் அம்மாவின் பேச்சைக் கேட்டு சற்றுத் தைரியம் வந்தவளாக, “சொல்லுமா…” என்றாள்.

“நீ யாரையாவது லவ் பண்றியா? உன் மனசுல யாராவது இருக்காங்களா?” என்றாள் பிரியா.

“அம்மா! என்ன இது? இவ்வளவு ஓப்பனா அவ கிட்டே கேக்குறீங்க?” என்றான் ரிஷி.

“இதுல என்ன இருக்கு ரிஷி? அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம நாம எந்த முடிவும் எடுக்கக் கூடாது இல்லையா? அவ மனசுல யாரும் இல்லைனு சொல்லிட்டா இந்த கல்யாணத்தை அடுத்த கட்டதுக்குக் கொண்டு போகலாம். அப்படி இல்லை, யாரையாவது விரும்புறேன்னு நக்ஷத்ரா சொன்னா, அந்த பையனைப் பற்றி விசாரிச்சுட்டு, நல்ல குடும்பமா இருந்தா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்” என்றாள் பிரியா.

“ஆஹா… அம்மா சூப்பர்!” என்ற ரிஷி, “நீதான் இந்த ஜெனெரேஷனுக்கு ஏத்த அம்மா” என்றவன், “அப்பா, நீ உண்மையிலேயே அம்மா மாதிரி ஒரு பிராக்டிக்கலான பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்க” என்றான்.

குரு பிரியாவைப் பார்த்து, “யாரு? உங்க அம்மா பிராக்டிக்கலா?” என்றவன், “இது எல்லாம் நேத்து நைட் நான் உங்க அம்மா கிட்டே சொன்னது. அதையே இங்கே சொல்லி அவ ஸ்கோர் பண்ணிட்டா” என்றான் குரு.

“நான் கொஞ்சம் நல்லா பேரு வாங்கினா உனக்குப் பொறுக்காதே குரு?” என்றவள், “உனக்கு ஸ்வீட் கிடையாது” என்று அவன் தட்டில் இருந்த அல்வாவை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

“அடிப்பாவி! இது எல்லாம் நல்லா இல்லை, பார்த்துக்கோ. அப்பறம் பசங்க இருக்காங்கன்னுக் கூட பார்க்க மாட்டேன். உன் வாயில் இருக்கிற அல்வாவை எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும்” என்று குரு சேரில் இருந்து எந்திரிக்க வர, “ஐயோ… பசங்க முன்னாடி என்னடா பேசுறே?” என்றவள், அவனுக்கு மறுபடியும் அல்வாவை எடுத்து அவன் தட்டில் வைத்து, “சாப்பிடு” என்றாள்.

“குரு, இது வேண்டாம், உன் வாயில் இருப்பது தான் வேண்டும்” என்று கண் சாடையில் அவளிடம் கெஞ்ச, இதை எல்லாம் பார்த்து தேவ், ரிஷி, நக்ஷத்ரா மூவரும் “ம்க்கும்…” என்று தங்கள் தொண்டையைக் கணைக்க, குரு திரும்பி அவர்கள் மூவரையும் அசடு வழியப் பார்த்தான்.

“அப்பா, நாம இப்போ நக்ஷத்ரா கல்யாணம் பற்றிப் பேசிட்டு இருக்கோம். நீங்க ரெண்டும் பண்றதைப் பார்த்தா, உங்க ரெண்டு பேருக்கும் மறுபடியும் கல்யாணம் பண்ணி வெச்சு ஹனிமூன் அனுப்புற மாதிரியில்லா இருக்கு?” என்றான் தேவ்.

“சரி சரி, முதல்ல விஷயத்துக்கு வருவோம்” என்ற ரிஷி, தன் அருகில் இருந்த நக்ஷத்ராவைப் பார்த்து, “நக்ஷத்ரா, நீ சொல்லு, யாரையும் லவ் பண்றியா?” என்று கேட்டான்.

நக்ஷத்ரா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள், எதையோ யோசிக்க, காரணமே இல்லாமல் அவள் மனக் கண்ணில் சூர்யா வந்து சென்றான். “இது என்ன? என் மனதில் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்தால் இந்த வில்லன் முகம் மனதில் வருகிறதே?” என்று தலையைக் குலுக்கிக் கொண்டவள், “அப்படி எல்லாம் யாரும் இல்லை அண்ணா” என்றாள்.

அங்கே, நக்ஷத்ரா பிரியா அவளை யாரையும் விரும்புகிறாளா என்று கேட்டதற்கு, “அப்படி எல்லாம் யாரும் இல்லை” என்று சொல்லிவிட்டால். ஆனால், தன் கனவில் வந்து, “சூர்யா மாமா, என்னை மறந்துட்டியா? என் கழுத்துல நீ கட்டின தாலி இருக்கு” என்று அவன் முன்பு, பச்சை விழியால் கழுத்தில் தாலியைத் தொங்கவிட்டு அவன் முன்பு உரிமையாக நிற்கும் நக்ஷத்ராவை நினைத்து உருகிக் கொண்டு, கண்கள் மூடிப் படுத்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு மட்டும் நக்ஷத்ரா சொன்ன விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ அவளின் நிலை?

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured