EPISODE 2-14
“சரி சகல, எனக்கு ட்ராவல் பண்ணி வந்ததுல ரொம்ப டயர்டா இருக்கு. நீங்க உங்க ரூமுக்கு போங்க. நானும் ஓவியாவும் ரெஸ்ட் எடுக்கிறோம்,” என்ற ராகவ், “ஓவி வா, நம்ம ரூமுக்கு போகலாம்,” என்று அவள் ஹேண்ட் பேக்கை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப தயாரானான்.
“ஹே ஹே வெய்ட் ராகவ்! என்ன அவசரம்? நீ எதுக்கு இவ்ளோ அவசரப்படுறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நீயும் வேலுவும் பேசிட்டு இருங்க. நாங்க ரெண்டு பேரும் இந்த இடத்தை சுத்திப் பார்த்துட்டு வரோம்,” என்று திகழினி கூற,
“ஹே! அவளுக்கு டயர்டா இருக்கும்னு சொல்றேன், நீ அவளைக் கூப்பிட்டு சுத்திப் பார்க்கக் கிளம்புறேன்னு சொல்ற? அதெல்லாம் எதுவும் வேணாம். முதல்ல ஓவியா ரெஸ்ட் எடுக்கட்டும். பொறுமையா சுத்திப் பார்த்துக்கலாம்,” என்றான் ராகவ்.
“டேய்! இங்க பாரு, அவ உன்கூட வந்தாதான் டயர்ட் ஆகிடுவா. ம்ஹும், இல்ல இல்ல, நீ அவளை டயர்ட் ஆகிடுவ. அப்புறம் இன்னிக்கு எங்கேயும் வெளிய போக முடியாது. அதனால் தான் நானும் ஓவியாவும் முதல்ல சுத்திப் பார்த்துட்டு வரோம்னு சொன்னேன்,” என்றவள், “ஹேய்! நீதான் டி போனதும், ‘என்னை ராகவ் கிட்டே இருந்து காப்பாத்து, இல்ல அவன் என்மேல பாய்ஞ்சிருவான், சொல்லி உன்னை வெளிய கூப்டு போகச் சொன்ன.’ ஆனா இப்போ என்ன டி வந்துச்சு, வாயைத் திறக்காம அமுக்கனி மாதிரி பார்த்துட்டு இருக்க?” என்றாள்.
திகழினி சொன்னதைக் கேட்டதும் வேலு அதிர்ச்சியாக ராகவ்வைப் பார்த்து, “என்ன IPS இது? உங்க பொண்டாட்டி உங்களைக் கண்டு தெறிச்சு ஓடுற அளவுக்கா பாய்வீங்க?” என்று சிரித்தவன், “இதுல என் சப்போர்ட் ஓவியாவுக்கு தான்,” என்றான்.
“ஹே! என்ன ஆளாளுக்கு என்னை வெச்சு விளையாடுறீங்க?” என்று ஓவியாவை முறைத்தவன், “ஊர்ல மொத்த குடும்பத்து முன்னாடி என் மானத்தை வாங்குனது போதாதுன்னு இங்கேயும் ஏண்டி என்னை இம்சை பண்ணுற?” என்றவன் திரும்பி வேலுவிடம்,
“கல்யாணத்துக்கு முன்ன எங்களுக்குள்ள அது நடந்ததோட சரி. அது கூட எனக்கு சுயநினைவு இல்லாத அப்போ நடந்தது. ஆனா இப்போ வரை எங்களுக்குள்ள எதுவும் நடக்கல, போதுமா?” என்றான்.
“அப்படியா?” என்று வேலு ஓவியாவைப் பார்க்க, அவளும் “ஆம்” என்பது போல தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“பார்ப்போம். ஏன் டி அவன்கிட்டே இருந்து எஸ்கேப் ஆகுறதுலையே குறியா இருக்க? அதான் எதுவும் நடக்கலையே இதுவரை. நான் கூட ராகவ் அமெரிக்காவுல வெச்சு நீன்னு நினைச்சு என் மேல பாயப் பார்த்த வேகத்தை வெச்சு தப்புக் கணக்கு போட்டுட்டேன் டி, என் பிரெண்டை,” என்று ராகவ் தோளில் கையைப் போட்டாள்.
“ஏய்! என்ன பண்ற? கையை எடு. உன் புருஷன் இருக்கான். அவன் முன்னாடி என்ன இதெல்லாம்?” என்று ராகவ், திகழினி தன் மேல் போட்டிருந்த கையை விலக்கிவிட்டான்.
“ஹேய் ராகவ் ஸ்டுபிட்! பிரெண்ட்ஷிப்குள்ள இதெல்லாம் ஒரு விஷயமா?” என்றவள், “ஏன் வேலு, நீ எதுவும் நினைச்சுட்டியா?” என்றாள்.
அவள் இப்படி திடீர் என்று கேட்கவும் பதில் சொல்லத் தடுமாறியவன், வெறும் சிரிப்பை மட்டும் அவளுக்குப் பதிலாக தந்தான்.
“உன் புருஷன் எதுவும் நினைக்காம இருக்கலாம். ஆனா எனக்கு நீ என் புருஷன்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிறது பிடிக்கல,” என்று திகழினி கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவள், “நாங்க சுத்திப் பார்த்துட்டு வரோம். நீங்க வேணும்னா பேசிட்டு இருங்க,” என்று அங்கிருந்து திகழினியுடன் கிளம்பி இருந்தாள் ஓவியா.
அவர்கள் சென்றதும் வேலுவிடம் வந்த ராகவ், “சாரி வேலு. திகழ் இப்படி திடீர்னு…” என்று பேச வர,
“இல்ல ராகவ், நீ எதுவும் சொல்ல வேண்டாம். அவ என் முன்னாடி உன் தோளில் கை போட்டது புருஷனா எனக்கு கொஞ்சம் பொசெசிவ்வா தான் இருக்கு. பட் நான் உங்க நட்பை மதிக்கிறேன்னு, திகழினி என் மேல வச்சிருக்க நம்பிக்கை என்னை அதுக்கு மேல யோசிக்க விடல,” என்றவன், “அவ இவ்ளோ நாள் இருந்து வளர்ந்த இடம் அப்படி. சோ, நான் இதை பெருசா எடுத்துக்கலை,” என்றான்.
“ரொம்ப தேங்க்ஸ் வேலு, எங்களைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு,” என்று அவன் தோளில் கை போட்டவன், “ஆமா, நம்ம மச்சானை எங்க காணோம்? எங்கக்காவையும் காணோமே?” என்று ராக்கி, ரதி இருவரையும் தேடினான்.
“ஆமால்ல, நானும் வந்ததுல இருந்து அவங்களை கவனிக்கலையே,” என்று சுற்றிலும் தேடினான்.
தூரத்தில் கார்டனில் இருந்து ராக்கியின் சத்தம் கேட்டது. குரல் வந்த இடத்திற்கு இவர்கள் இருவரும் செல்ல,
“ஏய்! அப்போவே சொன்னேன் இந்த ஹனிமூன் வேணாம்னு. நீதான் பெரிய இவளாட்டம், ‘எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல, போகலாம்,’ ஒத்தை கால்ல நின்ன. இப்போ பாரு என்ன ஆச்சுன்னு?” என்று ரதியை திட்டிக்கொண்டு இருந்தான்.
“என்ன ஆச்சு? ஏன் மச்சான் உன் அக்காவை திட்டிக்கிட்டு இருக்கார்? ட்ராவல் பண்ணினத்துல ரதிக்கு எதுவும் பிரச்சனையோ?” என்றபடி வேலு கேட்டுக்கொண்டே கார்டன் ஏரியாவுக்கு வர,
அங்கே இருந்த வாஷ் பேசனில் ரதி வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தாள். அவள் தலையைப் பிடித்துவிட்டபடி ரதியைத் திட்டிக்கொண்டு இருந்தான் ராக்கி.
“டேய்! கொஞ்ச நேரம் தொண தொணன்னு பேசாம இருக்கியா? சும்மா இருந்த எனக்கு ‘பசிக்கும், பசிக்கும்னு’ பிளைட்ல கொடுத்தது, கொண்டு வந்த ஃப்ரூட்ஸ்னு எல்லாத்தையும் சாப்பிடக் கொடுத்திட்டு, இப்போ வந்து என்னை திட்டுறியா நீ?” என்றவள், ‘உவெக்’ என்று மீண்டும் வாந்தி எடுத்துவிட்டு முகத்தைக் கழுவியவள், ராக்கி தோளில் இருந்த டவலை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டே அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.
“என்ன என்ன இங்க பிரச்சனை?” என்று வந்தனர் வேலுவும் ராகவ்வும்.
“வாங்க, நீங்க ரெண்டு பெரும் கேளுங்க, இவன் பண்ற கொடுமையை! எனக்குப் பசிக்கும், வயித்துக்குள்ள இருக்க பாப்பாவுக்கு பசிக்கும்னு சொல்லி சொல்லி கிடைக்குற எல்லாத்தையும் எனக்கு ஊட்டி ஊட்டி விட்டு வாந்தி எடுக்க வெச்சுட்டான். அத்தனையும் இவன் பண்ணிட்டு இப்போ என்னை பேசுறான்,” என்றாள் ரதி.
“என்ன மச்சான் இது?” என்று இருவரும் ஒரு சேர ராக்கியைப் பார்க்க,
“ஹேய் ஹேய்! என்ன ரெண்டு பேரும் அப்படி பார்க்குறீங்க? அப்புறம் ப்ரெக்னென்ட்டா இருக்கவளுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கணும் இல்ல? அதை தான் செஞ்சேன். இவளை யாரு கொடுத்ததை எல்லாம் சாப்பிடச் சொன்னது? ‘வேணாம்னா வேணாம்னு’ சொல்ல வேண்டியது தானே? எனக்கு வாங்கி வெச்சிருந்ததையும் ஏக்கமா பார்த்தா, இவளை விட்டுட்டு எப்படி எனக்கு சாப்பிட மனசு வரும்?” என்றான் ராக்கி.
அவனைப் பார்த்த அதே பார்வையை இப்போது ரதியின் மீது ராகவ்வும், வேலுவும் கொண்டு செல்ல,
“அஹ், பசிச்சா வேணும்னு கேட்க தான் செய்வாங்க. நான் என்ன பண்ணுவேன்? உள்ள இருக்கவளுக்கு அவங்கப்பன் அவளை விட்டுட்டு சாப்பிடறது பிடிக்கல போல. அதான் அவனோடதையும் சேர்த்து அவளே சாப்டுட்டா,” என்றாள்.
“ராகவ், இந்தப் பஞ்சாயத்து முடியாதுன்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேரும் அமைதியா இங்க இருந்து எஸ்கேப் ஆகிடனும், இல்ல இவங்க பஞ்சாயத்துல நமக்கு டயர்ட் ஆகிடும்,” என்று மெதுவாக ராகவ்வுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொன்னான் வேலு.
“ம்ம் ஆமா சகல. நம்ம அப்படியே இங்க இருந்து எஸ் ஆகிடுவோம்,” என்றவன்,
“சரி சரி மச்சான். ரதியைக் கூப்டு நீங்க ரூம்க்கு போங்க. நாங்க எங்க திங்ஸ் எல்லாம் ரூமுக்கு சரியா வந்திருச்சான்னு பார்க்குறோம்,” என்று அங்கிருந்து நாசுக்காக இருவரும் சென்றுவிட,
ராக்கி திரும்பி ரதியைப் பார்த்தவன், “ரெண்டு பேரும் எப்படி எஸ்கேப் ஆகிட்டானுங்க பார்த்தியா?” என்றான் சிரித்துக்கொண்டே.
“போகட்டும் விடு டா. அப்போ தான் நம்ம தனியா இருக்க முடியும்,” என்றவள், “டேய் புருஷா, என்னைத் தூக்கிட்டு ரூமுக்கு போடா. தூக்கம் வருது,” என்றாள்.
“நீ வா டி, என் 250 பீடா,” என்று அவள் ஹேண்ட் பேக்கை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு ரதியை தன் கைகளில் ஏந்தியவன் ரூமுக்கு சென்றான்.
இங்கே வெளியே ஹோட்டலை சுத்திப் பார்த்த படி நடந்து வந்த திகழினியிடம், “திகழ்! நான் ஒண்ணு சொன்னா நீ என்னை தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றாள் ஓவியா.
“சொல்லு,” என்றாள் வெறுமனே.
“நீ உன் புருஷன் முன்னாடி ராகவ்கிட்டே க்ளோசா நடந்துக்காத. அது அவருக்கு ஹர்ட் ஆகுதுன்னு நினைக்கிறேன்,” என்றாள்.
“ஹேய் ச்சீ! அவன் அப்படி எல்லாம் நினைக்கல டி. நீயும் தான பார்த்துட்டு இருந்த? நான் என்ன பண்ணினாலும் அவனுக்கு எந்த பிரச்னையும் இல்ல. சொல்ல போனா, அவன் என்னைப் பத்தி கண்டுக்கவே மாட்டான். ‘நீன்னு நினைச்சு என்னை கல்யாணம் பண்ணிட்டானே.’ அதனால அவனுக்கு என்னைப் பத்தி பெருசா எந்த அக்கறையும் இல்ல,” என்றாள் திகழ் விரக்தியாக.
“என்ன டி இப்படி சொல்ற? அதெல்லாம் எதுவும் இல்ல. நீ ராகவ் தோள்ல கையைப் போட்டது வேலு முகம் மாறிடுச்சு. அதை நீ கவனிக்கல, நான் பார்த்தேன்,” என்றாள்.
“ஆனா அவன் தான் எதுவும் சொல்லலையே. நான் கேட்டதுக்கு கூட ‘நோ ப்ரோப்லேம்’ எங்க பிரெண்ட்ஷிப் பத்தி எந்தத் தப்பும் சொல்லலையே அவன்?” என்றாள்.
“அவர் தப்பா எதுவும் சொல்லல. ஆனா நீ ராகவ் கூட க்ளோசா இருக்குறது அவருக்கு பொசெசிவ்வா இருக்கும்னு எனக்கு தோணுது,” என்றாள்.
“அப்படியா?” என்று யோசித்தவள், “அதுக்கு வாய்ப்பே இல்ல. கல்யாணம் ஆகி 1 வீக் தான் இருக்கும். அவன் உண்டு நான் உண்டுன்னு எங்க வேலையைப் பார்த்துட்டு இருக்கோம். இதுல எங்க இருந்து அவனுக்கு என்மேல பொசெசிவ் வரது?” என்றவள், “நீ சும்மா எதையாது நினைச்சிட்டு என்கிட்டே சொல்லிட்டு இருக்காத,” என்று முன்னே நடந்தாள்.
“சரி, நான் எதுவும் சொல்லல. நீயே வேணும்னா அவரை நோட் பண்ணிப் பாரு. அப்போ புரியும்,” என்றாள் ஓவியா.
“சரி சரி, நான் பார்த்துக்கிறேன். சுத்திப் பார்த்தது போதும். இந்த இடம் ரொம்ப பெருசா இருக்கு. பாக்கியை மெதுவா பார்த்துக்கலாம்,” என்று திரும்பி ரூமுக்கு நடந்தாள் திகழ். ஓவியாவும் அவள் பின்னே சென்றாள்.
துகழுடன் பேசிக்கொண்டே வந்த ஓவியா தன் அறைநோக்கி நடந்து செல்ல
“எவ்ளோ நேரம் தான் இந்த ஹோட்டலை ரெண்டு பெரும் சுத்தி பார்ப்பாங்க. இங்க ஒருத்தன் அவளுக்காக காத்திருப்பேன்னு தெரிய வேணாம்” என்று புலம்பிக்கொண்டே ஓவியாவை காண அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ராகவ் ஓவியா அவர்கள் அறை நோக்கி வருவதை பார்த்தான்
ஹே ஓவி என்று கையசைத்து அழைக்க போனவன் ஓவியா தன்னை பார்த்துவிட்டாளா என்று கவனித்தவன் அவள் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு வேகமாக அறைக்குள் வந்து கதவின் பின்னே ஒளிந்து கொண்டான்
