Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-3

இராக்கதனின் ரதி அவள் part-1-3

by Layas Tamil Novel
270 views

EPISODE 3

“அய்யய்யோ என்ன இவ கையில விளக்குமாரோட வாசலில்லயே நின்னுட்டு இருக்காளே.. யாரு வந்து என்ன பத்தி என்ன போட்டு கொடுத்தாங்கன்னு தெரியலையே” என்று யோசித்தபடி புல்லட்டை நிறுத்திவிட்டு தன்னை தைரியப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் ராக்கி.

“என்ன சாக்கோ கையில விளக்கமாறு வச்சுட்டு நின்னுட்டு இருக்க… ஏன் இன்னைக்கு வீடு கிளீன் பண்ண வர அக்கா வரலையா? நீயே ஒத்தையால வீடு கூட்டி பெருக்க போறியா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.

“ஆமா .. ஆமா..  வீட்ல குப்பை அதிகமாயிடுச்சு அதனாலதான் இன்னைக்கு மொத்தமா கூட்டி பெருக்கலாம்னு விளக்குமாத்தோட காத்துட்டு இருக்கேன் வா.. ” என்று அவனை நோக்கி ஓவியா நடந்து வர…

“நான் எதுவும் ஹெல்ப் பண்ணனுமா ஏன் இப்படி வெயிட்ட  கையில வச்சுட்டு சிரமப்படுற குடு அதை . எங்க கிளீன்  பண்ணனும்னு சொல்லு நான் எப்படி சுத்தமா கிளீன்  பன்றேன்னு பாரு” என்று ஓவியா  கையில் இருந்த விளக்குமாரை ராக்கி வாங்க போக…

“எப்படிடா உனக்காகத் தான் நான் வெளக்குமாரோட காத்துட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் எதுவுமே தெரியாதவன் மாதிரியே பேச்சு கொடுத்துட்டு வர..  அப்படியே என் கையில் இருந்து விளக்கமாறு வாங்கிட்டு என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சியா அதுதான் நடக்காது” என்று ஒரே எட்டில் தாவி ராக்கியின் சட்டையை பிடித்தவள்.

கையில் இருந்த விளக்குமாரை  ஓங்கி அவனை அடிக்கப் போக அவள் கையை பிடித்துக் கொண்டு “ஏய் சாக்கி  இப்ப எதுக்கு தேவையில்லாம என்ன அடிக்க வர நான் என்ன பண்ணினேன் ” என்று  ஓவியாவை தாஜா செய்ய அவளிடம்  “பாரு அண்ணன் உனக்காக நீ கேட்ட மாதிரி கறி வேணும்னு நம்ம குணாகிட்ட சொல்லிட்டு வந்து இருக்கேன். அவன் நீ கேட்டது மாதிரியே சைசா வெட்டி தரேன்னு சொல்லி இருக்கான். அண்ணன் இவ்வளவு காலையிலேயே எழுந்து போய் உனக்கு வேணுங்கறதெல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன். நீ என்னடான்னா இப்படி அண்ணன அடிக்கிற.. அதுவும் விளக்குமாத்தால நான் ஊருக்குள்ள எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா ..” என்று தன் சட்டையில் இருந்த ஓவியாவின் கையை பிரித்துவிட்டு சட்டை காலரை சரிசெய்துவிட்டு “என்னை கண்டா ஊரே நடுங்குது. நீ அடிக்கிறது யாராவது பார்த்தா என் இமேஜ்  டேமேஜ் ஆகாதா” என்று ஓவியவிடம் இருந்து நைசாக ஓவியாவின் கையில் இருந்த விளக்குமாட்ரை  பிடுங்கி தூர எறிந்தான்.

“அதுக்குத்தான்… அதுக்குத்தான் உன்னை அடிக்கிறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். உன்கிட்ட நான் என்ன சொன்னேன் அவன் லெக் பீஸ சரியா வெட்டி தர மாட்டேங்குறான் . பக்கத்துல இருந்து சரியா வெட்டி தரச் சொல்லி கேட்டு வாங்கிட்டு வான்னு  தானே சொன்னேன். அதை விட்டுட்டு நீ என்ன செஞ்சிருக்க ஒரு முழு கோழியவே கண்டம் துண்டமாக வெட்டி அவன் கடையவே நாறடிச்சு இருக்க . குணா எனக்கு போன் பண்ணி பொலம்புறான் உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க..  உன் ரவுடித்  தனத்தை எல்லாம் வீட்டுக்கு வெளியே வச்சுக்கோ நம்ம இருக்கிற ஏரியாவுல எதுவும் பண்ண கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருக்கேனா ? இல்லையா? இப்படி சொன்ன பேச்சு கேட்காமல் எல்லா பக்கமும் வம்பு இழுத்துட்டு வந்தா என்ன அர்த்தம்” என்று கோபத்தோடு தன் அண்ணனை அதட்டினாள் ஓவியா.

 “டேய் குணா இதெல்லாம் உன்னோட வேலை தானா.. இருக்கட்டும் டா உன்ன வந்து வச்சிக்கிறேன்” என்று மனதிற்குள் குணாவை திட்டியவன். “இங்க பாரு சாக்கோ அவனுக்கு கறி வெட்டவே தெரியல இத்தனை வருஷமா எப்படித்தான் இந்த ஏரியாவுல குப்பை கொட்டுனானோ  தெரியல. நான்தான் அவனுக்கு எப்படி வெட்டணும்னு சொல்லி கொடுத்துட்டு வந்தேன் இது தப்பா…  அவன் சொன்னது கேட்டுட்டு நீ இப்போ அண்ணனா அடிக்க வர அதுவும் விளக்குமாரை வெச்சு ” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ராக்கி பேச.

 “இங்க பாரு இனிமே எனக்கு என்ன வேணுமோ அத நானே கடைக்கு  போய் வாங்கிக்கிறேன் தயவுசெய்து எனக்காக வாங்க போறேன்னு எங்கேயும் போய் வம்பிழுத்துட்டு வராத. என்னால ஒவ்வொருத்தர்கிட்டயும் உனக்காக பஞ்சாயத்து பேசிக்கிட்டு இருக்க முடியாது. தினமும் காலையில எழுந்து பொழுது போகிற வரைக்கும் உன் பஞ்சாயத்துக்கு எனக்கு நேரம் சரியா இருக்கு. நான் படிக்கிறதா வேண்டாமா செமஸ்டர் வேற நெருங்கிட்டு இருக்கு ” என்று ராக்கியை தன் வழிக்கு கொண்டுவர முயன்றாள்  ஓவியா.

 “இப்ப என்ன நான் எந்த வம்புக்கும் போகக்கூடாது அவ்வளவுதானே..  சரி இப்ப சொல்றத கேட்டுக்கோ இந்த ஏரியாக்குள்ள உனக்கு என்ன வேணும் எது வேணும்னு என்கிட்ட சொல்லிடு நான் நம்ம பசங்கள விட்டு வாங்கிட்டு வர சொல்றேன். நீ எங்கேயும் கடைத் தெருவுக்கு போகக்கூடாது எதுவா இருந்தாலும் யாராவத கூட கூட்டிட்டு போ தனியா போகாத புரிஞ்சுதா” என்றான்.

“அப்போ இனிமேல் நம்ம ஏரியாவுல எந்த சலம்பலும் பண்ணிக்கிட்டு திரிய மாட்ட அப்படித்தானே” என்றாள் .

“சத்தியமா எதுவும் பண்ண மாட்டேன் போதுமா” என்றவன் “சரி வா ஓவி அண்ணனுக்கு பயங்கரமா பசிக்குது எனக்கு என்ன செஞ்சு வச்சு இருக்க” என்றான்.

 “இன்னிக்கி கம்பங்கூழ்    கருவாட்டு தொக்கு கூடவே கெட்டி தயிரும் இருக்கு கை கழுவிட்டு வா அண்ணா எடுத்து வைக்கிறேன் சாப்பிடலாம்” என்று கண்டிப்பான தங்கையில் இருந்து பாசமுள்ள கனிவான தாயாக மாறி ராக்கி சாப்பிடுவதற்காக உணவுகளை எடுத்து வைக்க சென்றாள்.

கைகழுவி விட்டு வந்தவன் ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்திருந்த கம்பங்கூழும் அதற்கு தொட்டுக்கொள்ள கருவாடும் கூடவே கம்பங் கழியும் வைத்திருப்பதை பார்த்தவன் கருவாட்டு வாசம் மூக்கை துளைக்குது ஓவியமா இன்னிக்கு ஒரு புடி பிடிக்க போறேன்” என்று சாப்பிட ஆரம்பிக்க அவன் சாப்பிட சாப்பிட அவனுக்கு பரிமாற ராக்கியும் சாப்பிட்டுக்கொண்டே ஓவியாவிற்கும் அவ்வப்போது ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான்.

….

“ஏன் டி இவளுக்கு என்ன டி ஆச்சு.. வழக்கமா ஏதாவது கதை எழுத ஆரம்பிச்சா தானே அந்த ரூமுக்குள்ள போவா… இப்போ என்ன ஆச்சு இவளுக்கு அந்த ரூமுக்குள்ள போய்  ஒரு வாரம் ஆச்சு . ஆனா எதுவும் எழுதுன மாதிரியும் தெரியல..” என்று சோபனா மாளவிகாவிடம் கேட்டுக்கொண்டு இருந்தார்.

“நானும் அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன் ம்மா… என்ன ஆச்சு அக்காவுக்கு” என்று அவரிடமே திருப்பி அதே கேள்வியை கேட்டாள்.

“ஏன் டி நான் கேட்டதையே  நீ திரும்ப என்கிட்டே கேக்குறியா ” என்றவர்.

“நீ வா அவகிட்டையே கேட்கலாம் ” என்று ஷோபனா முன்னே செல்ல அவர் பின்னே  மாளவிகா சென்றாள் .

ரதி இருக்கும் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஷோபனா அந்த அறையை பார்க்க… எப்போதும் கசங்கிய காகிதங்கள் நிறைந்து இருக்கும் அந்த அறை  படு சுத்தமாக இருந்தது,

அதை மளவிகாவிடம் சுட்டி காட்டிய சோபனா கட்டிலில் மல்லாக்க படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்தபடி கால் மேல் காலை போட்டுகொண்டு கண்கள் மூடி படுத்து இருந்த ரதியை பார்த்தவர் .

“ரதி.. ரதி.. என்ன டி பண்ணிட்டு  இருக்க… ஏன் எதுவும் எழுதலையா நீ ” என்று அவள் எழுதும் மேஜையில் வாங்கி வைத்திருந்த நோட் இன்னும் உபயோக படுத்தாமல் இருப்பதை சுட்டி கட்டி கேட்டார்.

“அம்மா.. நானும் இந்த கதையை ஆரம்பிச்சதும் அப்படி எழுதணும்.. இப்படி எழுதணும்.. ஹீரோ இப்படி இருக்கனும்.. அப்டி இருக்கணும்னு நிறைய கற்பனை செய்து வெச்சிருந்தேன் . என் கதைக்கு ஏத்த மாதிரி ஒரு ஹீரோ கிடைச்சதும் அவனை வெச்சு கதை எழுதலாம்னு நினைச்சேன். ஆனா… ” என்று கண் மூடியபடி ரதி பேச…

“என்ன அக்கா ஆனா… நீ தான் உன் கதைக்கு ஏத்த ஆள் கிடைச்சிட்டான் . அவனை வெச்சு உன்னோட கதையை எழுத்ப் போறேன்னு சொன்ன… இப்போ என்ன ஆச்சு. ” என்றாள் மாளவிகா.

“ஆமா  மாலா… நான் சொன்னது சரி தான். என் கதைக்கு ஹீரோ கிடைச்சுட்டான். நான் அவனோடவே ட்ராவல்  பண்ணி அவன் கேரெக்டரை ஸ்டடி பண்ணி கதைக்கு தேவையானதை எழுதலாம்னு நினைச்சேன். ஆனா அவன்கிட்டே என்னால போகவே முடியல டி… ” என்றாள்  ரதி.

“ஏன் க்கா… அந்த ஆள் என்ன அவ்ளோ பெரியவனா… நீ போய்  அவன்கிட்டே உண்மையை சொன்னா ஓகேவா  இல்லையான்னு சொல்ல போறான். நீ அவன்கிட்டே முதல்ல பேசுனியா ” என்று கேட்டாள்  மாளவிகா .

கட்டிலில் இருந்து எழுந்து நின்று கொண்டு இருந்த தன் அம்மாவை இழுத்து கட்டிலில் அமரவைத்தவள் அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு “அவன் பெரிய ஆள் தான். அதனால் தான் என்னால அவன்கிட்டே போய்  கேக்க முடியல.. ” என்றாள் .

“ஏன் டி அவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா…. அப்படி அவன்கிட்டே போக முடியாலையினா வேற யாரையாவது வெச்சு எழுத வேண்டியது தானே.. உனக்கு பெட்ரமாக்ஸ் லைட்டே  தான் வேணுமா.. ” என்று நக்கல் செய்தார்.

“அம்மா.. என் கதைக்கு அவன் தான் ஹீரோ அவன் இருக்குற இடத்துல வேற யாரையும் வெச்சு எழுத முடியாது என்னால… ” என்று அவர் மடியில் இருந்து எழுந்து அவரை முறைக்க…

“சரி சரி டி…. நான் சும்மா தான் கிண்டல் பண்ணினேன் ” என்றவர் . “எப்போ என்ன தான் முடிவு பண்ணி இருக்க.. ” என்றார்.

“எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை மா… ” என்றாள் ரதி.

“அக்கா பேசாம உன்னோட கதைக்கு ஆளை மாத்து … இல்லேன்னா கதையை மாத்து ” என்றாள் மாளவிகா.

“போடி.. ஏதாவது உருப்படியான ஒரு ஐடியா இருந்தா சொல்லு… இல்லேன்னா வாயை … ” என்று தன் கையை மாளவிகாவின் முன் நீட்டி அவளை பேசாதே என்று சைகை செய்தாள் .

“நோ டென்ஷன் அக்கா.. உன்னோட ஹீரோ அதான் அந்த பெரிய ஆள் என்ன பிசினெஸ் செய்றாரு ” என்றாள்.

“ஐயோ ! இவ  என்ன அந்த ராக்கி என்ன செய்றன்னு கேக்குறா… இப்போ என்ன சொல்லி சமாளிப்பேன். நான் மட்டும் ஒரு ரௌடி பயலை ஸ்டடி பண்ணி கதை எழுத போறேன்னு தெரிஞ்சுது அப்பறோம் அவ்ளோதான். என்னை வேளைக்கே போகவேண்டாம்னு சொல்லிடுவாங்களே… ” என்று விழித்தாள் ரதி.

“அக்கா சொல்லு… அந்த ஆள் என்ன பிசினஸ் பன்றாரு ” என்றாள்  விடாமல்.

“அது.. அது.. அவன் ” என்று என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தவள் “அவன் நிறைய பிசினெஸ் பண்ணிட்டு இருக்கான். இதுதான்னு இல்ல… ” என்றாள் .

“சரி அப்போ நான் ஒன்னு சொல்றேன் நீ கேக்குறியா “என்றாள்  மாளவிகா.

“என்ன டி சொல்லு… ” என்றாள்  ரதி.

“அந்த ஆளோட ஏதாவது ஒரு கம்பெனியில… அவன் எந்த பிஸிநெஸ்ல பிசியா இருக்கானோ .. அவர் எங்க அதிக நேரம் இருப்பாரோ நீ அங்க போய்  கொஞ்ச நாளைக்கு அவருக்கு கிலோசா இருக்க மாதிரி ஒரு வேலையில சேர்த்துக்க… உனக்கு உன் கதைக்கு தேவையானது கிடைக்குற வரைக்கும். அவருக்கு தெரியாம அவர் கூடவே இருந்து அவரை ஸ்டடி பண்ணு . உனக்கு தேவையானது கிடைச்சதும் வேலையை விட்டிரு அவ்ளோ தான் ” என்றாள் .

“ம்ஹும்… அவனே ஒரு ரௌடி எப்பவும் வெட்டு குத்து சண்டை சச்சரவுனு இருப்பான்.. எப்போ எவனை என்ன பண்ணுவான். யாரை வெட்டுவான் குத்துவான்னே  தெரியாது. இவ  என்னடான்னா அவன்கிட்டே நான் வேளைக்கு சேரணுமா… “” என்று ராக்கியிடம்  வேலைக்கு சேர்ந்தாள்  என்ன  ஆகும் என்று யோசித்தாள்.

அவன் வெட்டு குத்து என்று தீவிரமாக ஆட்களை அடித்து துவம்சம் செய்து கொண்டு இருக்க… அவன் கூடவே இருக்கும் ரதியின் முகம் முழுவதும் ரத்தம் தெறிப்பதும், அவளும் ராக்கியுடன் சேர்ந்து சில ஆட்களை அடிக்க உருட்டு கட்டையோடு அவன் பின்னால்  செல்வது போல கற்பனை செய்தவள்.

“ச்சி … ச்சி … ” என்று தன் தலையை உலுக்கியவள்.

“மாலா அது எல்லாம் சரிப்படாது . நான் வேற ஏதாவது ஐடியா பண்ணுறேன் . அதெப்படி நான் ஒரே நேரத்துல ரெண்டு பக்கம் வேலை பாக்க முடியுமா  ” என்றாள் .

“ஆமா இல்ல… அதுவேற ஒன்னு இருக்கோ… ” என்று யோசித்தாள்  மாளவிகா.

“ஏன் டி அவன் கூடவே இருந்து தான் எழுதணுமா அவனை தூரத்துல வெச்சு எதுவும் எழுத முடியாதா  ” என்றார் சோபனா.

“தூரமாவா… ” என்று ரதி யோசிக்க…

“ஆமா  ரதி.. நீ சொன்ன அந்த ஆளை அவனுக்கு தெரியாம அவன் போற வர இடம் எல்லாம் பாலோ பண்ணி உனக்கு வேணுங்குறதை எடுத்து எழுத வேண்டியது தானே “என்றார்.

“அம்மா அதெப்படி மா தூரத்துல இருந்து ஆளை வெறுமனே பார்த்து எழுதுறது . அந்த ஆள்  என்ன பேசறாரு எப்படி நடந்துக்குறாரு . அவர் குணம் என்ன ஏதுன்னு கூட இருந்து எழுதுனா தானே சரியா இருக்கும் ” என்றாள்  மாளவிகா.

“ஏன் டி அவன் யார் என்னனு கூட பழகினா தான் தெரிஞ்சுக்க முடியுமா . ஏன் அவனுக்கு தெரிஞ்சவங்க இல்ல.. அவன்கூட ரொம்ப கிலோசா இருக்குறவங்களை கேட்டு தெரிஞ்சு எழுதலாமே.. அதுலையே அவனை ஒரு அளவுக்கு தெரிஞ்சுக்கலாம் தானே ” என்றார் .

“அது எல்லாம் சரியா வரத்து மா ” என்றாள்  மாளவிகா.

இவர்கள் இருவரும் ரதிக்காக மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருக்க…

இங்கே ரதியோ வேகமாக எழுந்தவள் தன் மொபைலையும் , ஹாண்ட்  பேக்கையும்  எடுத்துக்கொண்டு வெளியே செல்ல…

“ஏய் என்ன டி உனக்காக நாங்க சண்டை போட்டுட்டு இருக்கோம் . நீ என்ன டி கிளம்பி போய்ட்டு இருக்க ” என்றார் சோபனா.

“அம்மா நீ சொன்னது தான் சரி அவனை  கூட இருந்து ஸ்டடி பண்ணனும்ன் அவசியம் இல்லை. நான் அவனை தூரமா இருந்தே ஸ்டடி பண்ணி கதை எழுதுறேன் ” என்றவள் புத்துணர்வோடு ராக்கியை தேடி சென்றாள்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured