News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

இராக்கதனின் ரதி அவள் part-1-4

by Layas Tamil Novel
450 views
A+A-
Reset

EPISODE 4

வீட்டிலிருந்து கிளம்பிய ரதி நேராக போய் நின்றது முதல்வர் சிவராஜன் வீட்டின்  முன்பு தான்.

 ராக்கி பற்றிய எந்த விபரமும் அவளுக்கு முழுதாக தெரியாது. அவன் வீடு எங்கே, அவனுக்கு யாரை தெரியும் என்று இனி தன ரதி தெரிந்துகொள்ள வேண்டும்.  அதனால் அவன் எப்படியும் முதலமைச்சர் வீட்டிற்கு வந்து செல்வான் என்ற நம்பிக்கையில் அவர் வீட்டில் முன்பு காத்திருந்தாள் கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம் கால் கடுக்க காத்திருந்தவளுக்கு ராக்கியின்  தரிசனம் கிடைக்கவே இல்லை.

“ச்சே… எங்க போனான்  இவன் ஆளையே காணோம். இப்படி  பொறுப்பில்லாம இருக்கான். முதலமைச்சர் இவனை தானே பாடி கார்ட் ரேஞ்சுக்கு வெச்சிருக்காரு.. இவனுக்கு அந்த வேலையை கூட முழுசா செய்ய தெரியாதா.. இவனை நான் எங்கேன்னு பொய் தேடுவேன்” என்று யோசனையோடு மற்ற  பத்திரிக்கையாளர்களோடு ஒருவராக கலந்து இருந்தாள் .

 முதலமைச்சர் கார் அவர் இல்லத்தில் இருந்து கிளம்பி இருக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

இன்று எந்த ஒரு முக்கியமான அறிவிப்பும்  முதலமைச்சர் வெளியிடவில்லை. அதனால் வந்திருந்து பத்திரிக்கையாளர்கள் சோர்வோடு தங்களுக்கு எந்த ஒரு ஹெட்லைனும்  கிடைக்கவில்லையே என்று அவரவர் அலுவலகம்  கிளம்பி இருக்க ரதி மட்டும் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக முதலமைச்சரின் காரை தூரத்திலிருந்து பாலோ செய்தபடி பின்னால் சென்றாள்.

இன்று எப்படியாவது ராகியை சந்தித்து விட வேண்டும் அவனை பற்றி ஏதேனும் ஒரு சிறு தகவலாவது தனக்கு இன்று வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு ஸ்கூட்டியின் வேகத்தை கூட்டி இருந்தாள் .

அவள் ஸ்கூட்டி வேகத்திற்கு முதலமைச்சரின் காரை அவளால் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து பின் தொடர முடியுமா.

“ஏய் ரதி இப்போ எதுக்கு இவ்ளோ அவசரமா CM  வண்டியை பாலோ பண்ற.. நீ முதல்ல ஒரு பத்திரிகையில் வேலை செய்யுற.. அந்த முறையில் யோசி. ” என்று அவள் உள்மனது ரதிக்கு அறிவுறுத்தியது .

வண்டி ஒட்டிக்கொண்டு இருந்த ரதி அதன் வேகத்தை குறைத்தவள் . இரண்டு நிமிடம்  எதையோ யோசித்தவள் ” அட! இப்படி ஏன் நமக்கு தோணாம  போய்டுச்சு… ” என்று  தன்னை தானே கேட்டுக்கொண்டவள் முகம் பிரகாசமானது.

அடுத்த நிமிடம் ஸ்கூட்டியின் வேகத்தை அதிகம் செய்தவள் CM இன்  காரை பின் தொடராமல் திரும்பி எதிர் திசையில் வண்டியை செலுத்தினாள் .

அங்கே வேகமெடுத்தவள் நேராக CM  வீட்டின் கொள்ளை பக்கம் எங்கே என்று தேடிப்பிடித்து அங்கு வந்து தன் ஸ்கூட்டியை அவர் வீட்டில் இருந்து சற்று தள்ளி நிப்பாட்டியவள் . இறங்கி அவர் வீட்டை நோக்கி நடந்து சென்றாள் .

“என்ன யாரையும் காணோம். ஒரு வேலை நான் யோசிச்சது தப்பா இருக்கோமோ …  ” என்று யோசித்தவாறே நடந்து சென்றவள் .

சிவராஜன் வீட்டின் கொல்லைப்புற கேட் திறக்கவும் வேகமாக அங்கிருந்த ஒரு காரின் பின்னால்  போய்  ஒளிந்து கொண்டாள்.

சிவராஜன் வீட்டு கேட்டை திறந்து கொண்டு நான்கைந்து ரௌடிகள் நடந்து வந்தனர் . காரின் பின்னால் இருந்த ரதி மெல்ல தலையை நீட்டி வந்தவர்களில் ராக்கி இருக்கிறானா என்று எட்டி பார்த்தாள்.

அந்த ரௌடிகள்  ரதி ஒளிந்து இருந்த காரை நோக்கி நடந்து வர…

ஆனால்  அவன் அங்கு வந்தவர்களோடு இல்லை… “எங்க போனான் அந்த ராட்சசன் எப்பவும் எவனையாவது உயிரை வாங்குவானே … எங்க  ஆளையே காணோமே..” என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொண்டு பின்னால் மெல்ல நகர்ந்தவள் இரண்டு அடி  சென்றிருப்பாள் . 

ஏதோ மரத்தின் மீது இடித்துவிட  “ஷ்…ஆ…. “ என்று திரும்பி பார்த்தவள் தனக்கு எதிரே இருந்தவனை கண்டதும் அவள் கண்கள் அகன்டு விரிய.. வாயை பிளந்தவள் மூச்சே நின்று விடும்  என்ற நிலையில்  மூச்சை பிடித்துக்கொண்டு தனக்கு எதிரே ரதியை சந்தேக பார்வையோடு பார்த்துக் கொண்டு இருந்த ராக்கியை பார்த்தவாறு பின்னால் நகர… 

அவள் கழுத்தை தன் ஒற்றை கையால் கொத்தாக பிடித்தவன் அவளை இழுத்து தன் பக்கம் நிறுத்தினான்.

ராக்கி இழுத்த வேகத்தில் ரதி சமாளிக்க முடியாமல் அவன் மீது மோதி நின்றவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏய்! 250 பீடா!! யார் நீ? இங்க என்ன பண்ணிட்டு இருக்க? “ என்றான்  அதட்டலாக.

ரதி அவன் தன்னைப் பிடித்துக் கொண்டு கேள்வி கேட்கவும் பதில் பேச முடியாமல்  திரு திருவென  விழித்தாள்.

“என்ன ராக்கி யார் இந்த புள்ள… எதுக்கு அதை புடிச்சிட்டு வெச்சிருக்க…” என்று மாரீஸ் அங்கு வர…

 “ டேய் யாருடா இது.. உனக்கு தெரிஞ்ச புள்ளையா?” என்றான் ராக்கி.

“எனக்கு எந்த பிள்ளைய தெரியும்… அதுவும் இவ்வளவு அழகான புள்ளையா!!” என்று ரதியை ஏற இறங்க பார்த்த மாரீஸ். “தெரியலையேப்பா.. “ என்றான்.

“அப்புறம் ஏன் நம்ம காருக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு நீங்க வர்றதை பார்த்துட்டு இருந்தா இவ..” என்று சந்தேகமாக ரதியை பார்த்தவன்.

“ஏய்! யாரு நீ?” என்றான் அதட்டாளாக.

“அய்யய்யோ!! போச்சு… நான் ஒளிஞ்சிருந்ததை பார்த்துட்டு தான் இவன் வந்திருக்கான் போல… ஊரெல்லாம் தேடினேன் இவனை. ஆனா இவன் என் பின்னாடி வந்ததை நான் எப்படி கவனிக்காம போய்ட்டேன்.  இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது” என்று யோசித்தவள் விழித்துக்கொண்டு ராக்கியையே பார்த்தாள்.

“ ம்ம்ம்… எனக்கு என்னவோ சரியா படல… முதல்லல இவளை பிடிச்சு  காருக்குள்ள போடுங்கடா.. நம்மள வேவு பாக்க தான் வந்திருப்பா போல…  நம்ம பண்ற விஷயம் எதுவும் வெளியில லீக்காயிடக் கூடாது” என்று ரதியைப் பிடித்து மாரீசிடம் தள்ளினான்.

மாரீசின் மேல் போய் விழாமல் தடுமாறி நின்றவள் “நான் உங்களை வேவு பார்க்க  வரல…நான்… நான் வேற… வேற விஷயத்துக்காக வந்தேன்” என்று ரதி திக்கித் திணறி பேச..

“நீ என்ன விஷயத்துக்கு வந்திருந்தன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்களே தெரிஞ்சுப்போம். முதல்ல போய் காரில் ஏறு” என்று ரதியை பின்னங் கழுத்தில் தட்டி காருக்கு அருகில் தள்ளினான் மாரிஸ்.

“நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க.. நிஜமாவே நான்  வேற விஷயமா தான் வந்தேன். நீங்க எல்லாம் யாருன்னு எனக்கு தெரியாது. நான் எதுக்காக உங்களை வேவு பாக்கணும்” என்று ரதி சப்தமிட்டுக்கொண்டே அவர்களை விட்டு விலகப் போக…

“ஏய் டுபுக்கு சுந்தரி…எங்க போற ஒழுங்கா போய் கார்ல ஏறிடு இல்ல…” என்று மாரிஸ் தன் நாக்கை துருத்தி ரதியை மிரட்டியவன். தன் பாக்கெட்டில் இருந்து கத்தியை எடுத்து ரதியின் முன்பு நீட்ட..

அதைப் பார்த்ததும் ரதி அப்படியே கப் ச்சுப்… என்றானாள்.

ரதிக்கு பேச்சை எழவில்லை அவள் நா மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது. இதற்கு மேல் பேசி வம்பை வளர்க்க விரும்பாமல் அமைதியாக கார் கதவு பக்கம் சென்று நின்றாள் .

“என்ன நிக்கிற  மகாராணிக்கு கதவை திறந்து விடணுமா..  போய் கதவை திற” என்று மாரீஸ் கத்த … அவன் அதட்டியதில் வேகமாக கார் கதவை திறந்து கொண்டு உள்ளே ஏறப் போனவள்  திரும்பி மாரீஷை பார்த்து

“சார் சொன்னா கேளுங்க எனக்கு நீங்க யாருன்னே  தெரியாது. நான் வேற ஒரு விஷயமா இங்க வந்தேன். தெரியாம உங்ககிட்ட மாட்டிகிட்டேன்”  என்று அவள் மீண்டும் அவர்களிடம் இருந்து தப்பிக்க பேச்சை வளர்க்க முயன்றாள் .

“அட ராக்கியே உன்னை சந்தேகப்படுதுன்னா அப்ப நீ ஏதோ பெரிய வேலையை செஞ்சிருக்க தான் இங்க வந்தேன்னு நினைக்கிறேன். அவ்வளவு சீக்கிரம் ராக்கி யாரையுமே தப்பு சொல்லாது” என்றபடி ரதியின் தோளை பிடித்து தள்ளி அவளை காருக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றினான்.

காரில் இந்தப் பக்கம் ஏறிய ரதி வேகமாக நகர்ந்து வந்து மறுபக்கம்  கார் கதவை திறந்து கொண்டு வெளியே தப்பிச்செல்ல அவள் கதவை திறக்கவும் அங்கே வந்து நின்றான் ராக்கி.

அவனைப் பார்த்து எச்சில் விளங்கியவள் “ச … சார்!! நான் சொல்றதை கேளுங்க .. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நான் இல்ல. நான் இங்க  எதுக்கு வந்தேன்னா…” என்று ரதி மீண்டும் பேச வர..

“சொல்லிக்கிட்டே இருக்கேன்.. திரும்ப திரும்ப தேஞ்ச ரெகார்ட் மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க..” என்ற மாரீஸ்காருக்குள் ஏறி இருந்தவன். பின்னால் இருந்து அவள் வாயை பொத்தி காருக்குள் இழுக்க ராக்கி மறுபக்கம் ஏறிக்கொண்டு கதவை அடைத்தான்.

தன் கையில் இருந்த கர்சீப்பை ரதியின் வாய்க்குள்  திணித்தவன் ரதியை பேசவிடாமல் செய்தவன். காருக்குள் இருந்த கயிற்றை எடுத்து அவள் கையை பின்னால் இழுத்து கட்டி வைத்தான்.

“அமைதியா உட்கார்ந்துட்டு வரணும். இல்ல இங்கயே உன் கழுத்தை அறுத்து தூக்கி போட்டுட்டு போயிடுவேன் ஜாக்கிரதை” என்று கையில் இருந்த கத்தியை காட்டி ரதியை  மிரட்ட அதன் பின் அவள் எதுவுமே பேசவில்லை.

மாரீஸ் கையில் இருக்கும் கத்தியை பார்த்து பயந்தவன் பின்னால் நகர ராக்கியின் மீது இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

“ஏய் தள்ளிப் போய் உட்காரு” என்று ரதியை ஒரு பொருட்டாகவே கருதாமல் அவளை அதட்ட..

இந்தப் பக்கம் ராட்சசன் அந்தப் பக்கம் காட்டுப் பன்னி இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்ட ரதி உள்ளுக்குள் அலறிக்கொண்டு இருந்தாள் .

“ஐயோ கடவுளே! ஆண்டவா! நான் தெரியாத்தனமா இவனை ஃபாலோ பண்ணி கதை எழுதுறேன்னு சொல்லிட்டேன். தயவு செய்து என்னை எப்படியாவது இவன்கிட்ட இருந்து காப்பாற்றி விட்டுடு . உனக்கு புண்ணியமா போகும் இவன்கிட்ட மாட்டிட்டு நான் என்ன பாடுபடப்  போறனோ.. எப்படியாவது என்ன இவன்கிட்ட இருந்து காப்பாற்றி விட்டு ஆண்டவா” என்று மனதிற்குள் கடவுளிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

கார் அங்கிருந்து கிளம்பி இருக்க.. செல்லும் வழி எல்லாம் ராக்கியையும் மாரீஸையும் மாறி மாறி பார்த்தபடி படபடத்த விழிகளோடு அமர்ந்திருந்தாள் . அவர்கள் வரவேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்த..

காரில் இருந்து இறங்கிய மாரீஸ் கதவை திறந்து ரதியை வெளியே இழுக்க அவனிடம் திமிரு கொண்டு கீழே இறங்கியவள் “ம்ம்ம்…ம்ம்ம்…” என்று ஏதோ பேச வந்தாள் .

ரதியை சட்டை செய்யாமல் கையைப்பிடித்து மாரீஸ் இழுத்துக்கொண்டு செல்ல..  அவனோடு செல்ல மருத்துவளாக திமிறிக்  கொண்டு துள்ளினாள் ரதி. அதை பார்த்து கடுப்பான மாரீஸ்.

“பேசாம வரப்  போறியா? இல்லையா?” என்று திரும்பி அவளை அதட்ட..

அவனை தன் பலம் கொண்ட மட்டும் இடித்து தள்ளியவள் திரும்பி அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சிக்க..

அவ்ர்கள் பின்னால் இறங்கி வந்த ராக்கி… “இந்த 250 பீடா ரொம்ப துள்ளுறாளே.. ” என்று வந்தவன் ரதியை ஒரே எட்டில் பின்னால் கட்டி இருந்த கைகளைப் பிடித்து தன் பக்கம் இழுத்து .ரதியின் கழுத்தில் கையை சுற்றி அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிப் பிடித்தவன்.

“ஏய் 250 பீடா.. ஒழுங்கா சொன்னா  எதையும் கேட்க மாட்டியா நீ.. இப்போ உன்னை நான் என்ன செய்றேன் பாரு ” என்று அவளை தன் பக்கம் திருப்பினான்.

ரதி பயந்துகொண்டே ராக்கியை பார்க்க… அவள் வாயில் இருந்த கர்சீப்பை எடுத்துவிட்டவன் . ரதி வாய் எல்லாம் வறண்டு இருமிக்கொண்டு இருக்க… ரதியின் கையில் கை  கொடுத்த ராக்கி அவளை அபப்டியே தூக்கி தன் தோளில்  போட்டுகொண்டு நடக்க ஆரம்பித்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.