EPISODE 21
ஆஃபிஸில் இருந்து கிளம்பிய ரதி நேராக வந்தது ராக்கி எப்போதும் இருக்கும் அந்த பாழடைந்த மில்லிற்கு தான்.
ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தவள் “எங்க இந்த பொருக்கி ஜீப்பை மட்டும் காணோம் ” என்று யோசனையில் வந்தவள்.
உள்ளே இருந்து அந்த மாரீஷை பார்த்தவள் “ஐயோ ! இவானா! இவன் மட்டும் என்னை பார்த்தா அவ்ளோ தான்…. ” என்று நினைத்தவள் அவன் தன்னை பார்பபதற்குள் அங்கிருந்து கிளம்ப நினைத்து திரும்பி வேகமாக வெளியே செல்ல போனாள் .
அதற்குள் மாரீஸ் ரதியை பார்த்தவன் “என்ன ரதி!.. என்னை பார்த்து பயந்து திரும்பி போற மாதிரி இருக்கு… ” என்றான் நக்கலாக..
“ஆமா இவரு பெரிய இவரு… உன்னை பார்த்து நான் எதுக்கு டா பயந்து இங்க இருந்து போகணும்” என்றபடி திரும்பி அவனை நோக்கி நடந்து வந்தாள் .
“அதானே … ராக்கியை பார்த்தே நீ பயப்படல .. நான் எல்லாம் உனக்கு எம்மாத்திரம் ” என்றவன்..
“சரி என்ன இந்த பக்கம் .. “என்றான்..
“அது… அது நான் ஒரு வேலையா இங்க வந்தேன். அபப்டியே உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் ” என்று சமாளிக்க பார்த்தாள் .
“எது … நீ என்னை பார்க்க வந்தியா… அப்பறோம் ஏன் என்னை பார்த்ததும் திரும்பி போன.. ” என்றான் அவளை சந்தேகமாக பார்த்து.
“அதுவா அது.. உன்ன பக்கா தான் வந்தேன். அப்பறோம் இங்க வந்ததும் உன்கூட அந்த திமிரு பிடிச்சவனும் இருப்பான்னு தோணுச்சு.. அவனை பார்த்தாலே எனக்கு கடுப்பாகும். அதான் கிளம்பிட்டேன்” என்றாள் ரதி.
“யாரு திமிரு புடிச்சவன்.. நானா! ” என்பர் அவள் பின் இருந்து குரல் வர…
ராக்கியின் குரலை பின் இருந்து கேட்டவள் ஆர்வமாக அவனை திரும்பி பார்த்தாள் .
அவளுக்கு மிக நெருக்கமாக கைகளை பின்னால் கட்டிய படி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்று இருந்தான் ராக்கி .
அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தனக்குள் எழுந்த உணர்வுகளை என்னவென்று அவளால் உணர முடியவில்லை. அதை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவள்.
“ஆமா.. நீ தான். உன்ன தான் சொன்னேன் ” என்றாள் .
“நீ திமிரு பிடிச்சவன் டா… என் மனசுக்குள்ள வந்து உக்காந்துட்டு என்னை ரொம்ப படுத்துற நீ… உன்னை பாக்கனும்னு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா…. அதை உன்கிட்டே சொல்லணும்னு தான் ஆசையா இருக்கு… ஆனா என்ன பண்ண உன்னை பார்த்தா எனக்கு வம்பு பேச வாய் வருது . ஆனா மனசுல இருக்கறதை சொல்ல வார்த்தை வர மாட்டேங்குதே… ” என்று நினைத்தவள் தன் முன் நின்றவை ஒருவித காதல் உணர்வோடு பார்த்தாள்.
என்றும் இல்லாமல் ரதியின் பார்வையில் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்தவன் ரதியை மேலும் நெருங்கி வந்து..
“என்ன பீடா இந்த பக்கம் வந்திருக்கு… என்ன விஷயம் ” என்றான்.
“அட.. அதையே தான் நானும் கேட்டேன் ராக்கி . அதுக்கு என்னை பார்க்க தான் இங்க வந்தேன்னு சொல்லுது ” என்றவன் .
“நீயே என்னனு கேளு.. நான் கிளம்பறேன். உள்ள யாரும் இல்ல… நீ கிளம்புற அப்போ பூட்டிட்டு கிளம்பிடு ” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
“இவன் வேற கிளம்பறான் . இவன்கிட்டே நான் தனியா மாட்டிக்கிட்டா அவ்ளோதான் ” என்று நினைத்தவள்.
“டேய் மாரீசு… உன்னை பாக்க தானே நான் வந்தேன். இப்போ நீ உன்பாட்டுக்கு கிளம்பினா என்ன அர்த்தம் ” என்றாள் .
“நீ எதுக்கு இங்க வந்தேன்னு என்னை விட ராக்கிக்கு நல்லாவே தெரியும். நீ ராக்கியை பார்க்க தானே இங்க வந்த… அவனை பார்த்துட்டு கிளம்பு ” என்று அங்கிருந்து கிளம்பினான்.
“அடப்பாவி மாரீசு.. இப்படி யோகி பாபு மாதிரி இருந்துட்டு .. என்னை இவகிட்டே சரியா கோர்த்துவிட்டுட்டியே டா… ” என்று நினைத்தவள் திரும்பி ராக்கியை பார்க்க…
அவள் முன் கைகளை கட்டிக்கொண்டு நின்றவன் “அபப்டியா! என்ன பாக்க தான் இவ்ளோ தூரம் வந்திருக்கியா ” என்றான்.
“இ…இல்ல… ” என்று அவள் தயக்கமாக தலையை இடவலமாக ஆட்ட …
“ஏன் ரவுடி குட்டி… போய் சொல்ற… எனக்கு நல்லாவே தெரியுதே.. நீ என்னை பார்க்க தான் வந்திருக்கேன்னு… ” என்று அவளை நெருங்கி வந்தான்.
“என்ன தெரியும் உனக்கு… நான் ஒன்னும் உன்ன பாக்க வரல… நிஜமாவே மாரீச தான் பாக்க வந்தேன் ” என்று தடுமாறியபடி பேசினாள் ரதி.
“அப்டியா சரி.. பரவால்ல.. அவன் தான் கிளம்பிட்டானே… இங்க நாம ரெண்டு பேரும் மட்டும் தானே இருக்கோம். வந்ததே வந்த.. .வா வந்து ஒரு காபி குடிச்சிட்டு போ… ” என்று அவள் தோளில் கை போட்டு தன்னோடு உள்ளே அழைத்து சென்றான்.
ராக்கியின் இந்த போக்கை கண்டு ரதிக்கு உள்ளூர சந்தோசமாக இருந்தது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் அவனை பார்த்தவள் “ஏய் என்ன நீ விட்டா என்னை தூக்கிட்டு போவ போல… கையை எடு முதல்ல… ” என்று தன் தோளில் இருந்த ராக்கியின் கையை பிடித்து விளக்க மனமில்லாமல் அவன் கையை கீழே இறக்கினாள் .
“ஏன் அதையும் தான் செய்வேன் .” என்றவன் அவள் இடையில் கை வைத்து அழுத்தி தன்னோடு அணைத்துப்பிடித்தவன் . “இங்க உன்னை தூக்கினா யாராவது பாப்பாங்க.. நீ உள்ள வா கைல என்ன உப்பு மூட்டையே தூக்குறேன்” என்று அவளை தன்னோடு அழைத்து சென்றான்.
முன்பு போல இருந்திருந்தால் ராக்கியின் இந்த அடாவடியை கண்டு கோபம் கொண்டிருப்பாள். அவனிடம் சண்டை போட்டிருப்பாள். ஆனால் இப்போது தான் அவள் நிலையே வேறு ஆகிவிட்டதே…
அவனை உள்ளுக்குள் ரசித்தபடி ராக்கியுடன் உள்ளே செல்லப் போக…
“என்ன ராக்கி யாரு இந்த குட்டி எங்க இருந்து இதை தள்ளிட்டு வந்தே ” என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தான் CM சிவராசனின் பிஏ ரத்தினமூர்த்தி.
அவன் குரலை கேட்டதும் திரும்பிய ராக்கி “நீயா! நீ எதுக்கு இங்க வந்த,,,” என்றான்.
“ஏன் நான் இங்க வர கூடாதா.. “என்றபடி ராக்கியின் அணைப்பில் இருந்த ரதியை பார்த்தபடி அவர்களை நோக்கி நடந்தான் இரத்தினமூர்த்தி .
அவன் பார்வையை கண்ட ரதிக்கு ஒரு மாதிரியாக அசௌகரியமாக இருந்தது. அவன் பார்வையை தவிர்த்தாள் ரதி.
“உனக்கு என் இடத்துல என்ன வேலை.. எதுவா இருந்தாலும் போன் பண்ணி சொல்லு போதும். என் இடத்துக்கு வர வேலை எல்லாம் வெச்சுக்காத முதல்ல இங்க இருந்து கிளம்பு ” என்றவன் திரும்பி ரதியுடன் உள்ளே செல்லப்போக..
“ஏன் நான் இங்க வந்தா உன் லீலை எல்லாம் எனக்கு தெரிஞ்சிரும்னு தான் இவ்ளோ நாளா என்னை இங்க வரவிடாம செஞ்சியா . அப்போ தான் இந்த மாதிரி குட்டியை கூட்டிட்டு வந்து சந்தோசமா இருக்க முடியும் உன்னால அதானே … சும்மா சொல்லக்கூடாது குட்டி பாக்க செமையா இருக்கா… ஒரு நைட்க்கு எவ்ளோ வாங்குறா… ” என்றான் ரதியை பார்வையால் அலந்தபடி நக்கலாக.
அதை கேட்ட ராக்கி கோபமானவன் ரதியை விட்டு நேராக ரத்தினமூர்த்தியிடம் வந்தவன் “என்ன டா சொன்ன… ” என்று இரத்தின மூர்த்தியின் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கியவன் சுவற்றில் தள்ளி அந்தரத்தில் தூக்கி இருந்தான்.
அதை கண்டு மூர்த்தி அசரவில்லை. “என்ன டா .. நீ கோபமா பேசினா நான் பயந்திருவேனா .. என்னை என்ன அவ்ளோ சாதாரணமா நினைச்சுட்டியா…” என்று சிரித்தவன்.
“அண்ணன் எவ்ளோ பெரிய வேலையை உன்னை நம்பி கொடுத்துட்டு போயிருக்காரு.. அந்த வேலையை பாக்காம இந்த குட்டியை கூட்டிட்டு வந்து கும்மாளம் அடிச்சிட்டு இருக்க… ” என்றான்.
“டேய்! இன்னொரு தடவை அவளை குட்டி கிட்டின்னு சொன்ன… உன் கழுத்தை நெறிச்சு இங்கையே கொன்னு புதைச்சிருவேன். அவ யாரு தெரியுமா.. அவளை நான் எங்க வெச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமா டா… எதுவும் தெரியாம வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்க… ” என்று மூர்த்தியின் கழுத்தை நெறிக்க துவங்கினான்.
ராக்கி சொன்னதை கேட்டு ரதிக்கு சந்தோசம் தாங்கவில்லை. தன்னை தவறாக பேசியவனை கொன்று புதைக்கும் அளவிற்கு சென்றவனை நினைத்து அவள் பெருமை கொண்டாள். ரதி சந்தோசமாக ராக்கியை பார்க்க…
“டேய்..என்ன டா ரொம்ப ஓவரா போற.. யாரு டா இவ .. ஐட்டம் தானே. அதான் எவ்ளோ ரேட்டுன்னு கேட்டேன்ல… எவ்ளோ சொல்லு நானும் இவளை அப்போ அப்போ யூஸ் பண்ணிக்குறே ” என்றவனை கோபம் தாளாமல் தன் இரு கைகளையும் கொண்டு கழுத்தை நெறிக்க துவங்கி இருந்தான் ராக்கி .
அதில் மூர்த்தியின் முகம் சிவந்து கண்கள் மேல் நோக்கி நிலை குத்த ஆரம்பிக்க… அதை கண்ட ரதி இதற்கு மேலும் விட்டால் மூர்த்தி இறந்தே போய்விடுவான் என்று நினைத்தவள் வேகமாக ராக்கியிடம் வந்தவள்
“ராக்கி.. அவரை விடு.. நீ இப்படி பண்ணினா என்ன அர்த்தம் அவருக்கு எதாவது ஆகிடப்போகுது ” என்று அவன் கையைப்பிடித்து கீழே இழுத்தாள் .
அதை கேட்டும் கேட்காதவனாய் மூர்த்தியின் கழுத்தை நெறிப்பதிலேயே ராக்கி தீவிரம் காட்ட…
“டேய் ராஸ்கல் சொன்னா கேளு டா… அவனை விடு… அவன் அப்படி சொல்லிட்டா நான் அந்த மாதிரி பொண்ணு ஆகிடுவேனா… விடு டா அவரை… ” என்று அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
அதில் சற்று கோபம் தனிய குனிந்து அவளை பார்த்தவன்.
“அவன் உன்னை எப்படி ஐட்டம்னு சொல்லலாம் . நீ முதல்ல நகரு.. இன்னிக்கு இவன் சாவு என் கைல தான் ” என்று மீண்டும் மூர்த்தியின் கழுத்தை நெறித்தான்.
“டேய்.. சொன்னா கேக்க மாட்டியா டா… அவனை விடு டா… ” என்று ராக்கியின் தோள்களில் மாறி மாறி அடித்தவள் . அபப்டி அவள் அடித்தும் ராக்கி எதுவும் கேட்பதாக அவளுக்கு தெரியவில்லை.
“டேய் என்னை உன் மனசுல அங்க வெச்சிருக்கேன் இங்க வெச்சிருக்கேன்னு சொன்ன… அப்போ நான் சொன்னா நீ கேட்கணும் டா… ஏன் கேக்க மாட்டேங்குற.. ” என்றவள் அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டே…
“நீ என்னை பத்தி சொன்னது உண்மையா இருந்தா அவனை விடு டா… ” என்று அவன் பலம் கொண்ட மட்டும் இழுத்தாள்.
ரதியின் அந்த வார்ததையை கேட்ட அடுத்த நொடி மூர்த்தியை விட்டுவிட்டான். சுவற்றில் ஆணியில் மாட்டி இருந்தவனை போல இருந்த மூர்த்தி ராக்கி அவனை விட்டதும் பொத்தென தரையில் விழுந்தவன்.
இருமிக்கொண்டே எழுந்தவன் “டேய்.. என்னையே கழுத்தை பிடிச்சுட்டே இல்ல… உன்னை என்ன செய்றேன் பாரு… ” என்று ராக்கியின் முன் கை நீட்டி அவனை மிரட்டினான் .
“டேய்… என் கண்ணு முன்னாடி நிக்காத ஒழுங்கா இங்க இருந்து போய்ட்டு இல்ல… எனக்கு இருக்க கோபத்துக்கு என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது ” என்று எகிறிக்கொண்டு மூர்த்தியை நோக்கி சென்றான் ராக்கி .
“டேய் சொன்னா கேளு டா.. ” என்று அவனை கட்டிக்கொண்டு மூர்த்தியிடம் போகவிடாமல் தடுத்தாள் ரதி.
“என்ன டா செய்வ … பாக்குறேன் டா.. உன்னக்கு அண்ணனோட சப்போர்ட் இருக்கறதுனால தான இப்படி சொன்ன வேலையை செய்யாம இப்படி பொம்பளையை கூப்டு வந்து கூத்தடிச்சிட்டு இருக்க… இரு டா இரு.. உன்னை ஒரு நாள் வெச்சு செய்றேன்” என்றவன் அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தான்.
“டேய்.. நீ என்னை வெச்சு செய்றது என்ன டா.. நான் உன்ன இப்பவே இங்கையே வெச்சு செய்றேன் வா டா… ” என்று ராக்கி மூர்த்தியை நோக்கி செல்ல…
ராக்கியின் கோபத்தை கண்டு எங்கே அவன் சொன்னதை போல செய்துவிடுவானோ… என்று பயந்தவன் ராக்கியை இருக்க கட்டிக்கொண்டு அவனை அங்கிருந்து போக விடாமல் தடுத்து நிறுத்தினாள் .
“என்ன விடு ரதி .. இவனை சும்மா விடக்கூடாது” என்று ராக்கி எகிற…
அவனை செல்ல விடாமல் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்த ரதி ராக்கியை சமாளிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினாள் .
“என்ன விடு ரதி ” என்று ரதியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு அவளை தாண்டி ராக்கி மூர்த்தியை நோக்கி செல்ல…
“டேய் ராஸ்கல் … பொருக்கி… ரௌடி சொன்னா கேக்க மாட்டியா டா நீ… ” என்றவள் அவன் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தவள் ராக்கியின் முகத்தை பிடித்து கீழே இழுத்தவள் அடுத்த நொடி அவன் இதழில் தன் இதழை பொருத்தி இருந்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத ராக்கி ரதி தந்த முத்தத்தில் அதிர்ந்தவன் அடுத்த நொடி அவளை இடையோடு தூக்கியவன் முத்தமிட துவங்கி இருந்தான்.
