Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 108

உன் ரகசிய ரசிகை நான் 108

by Layas Tamil Novel
283 views

விக்கி ஷூட்டிங்கில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஆதிக்குக் கால் செய்து ஒன்றுவிடாமல் கூறினான். யார் இப்படிச் செய்தது என்ற விஷயத்தையும் ஆதியிடம் கூற….

ஆதி விக்கியிடம், “இதை யார் ஷூட்டிங்ல வச்சு துர்காவைக் கொல்ல முயற்சி செஞ்சாங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்,” என்று சொல்லி விக்கிக்கு ஒரு பெரிய கூண்டைத் தூக்கிப் போட்டான்.

“டேய் என்னடா சொல்ற? உனக்கு ஏற்கனவே தெரியும்னு சொன்னா… அப்புறம் எதுக்கு என்னைப் போய் அங்க விசாரிக்கச் சொன்ன?” என்று கேட்டான் விக்கி.

“எனக்கு அந்த ஆள் மேல டவுட் மட்டும் தான் இருந்துச்சு. அதைக் கன்ஃபார்ம் பண்ணத் தான் உன்னை போய்ச் ஷூட்டிங் ஸ்பாட்ல விசாரிக்கச் சொன்னேன் வேற ஒன்னும் இல்லை,” என்றான் ஆதி.

“அப்போ நான் விசாரிச்சு சொன்ன ஆளும் நீ சந்தேகப்பட்ட ஆளும் ஒன்னு தானா?” என்று கேட்டான் விக்கி.

“ஆமாடா! டவுட் இல்லாம இப்போ கிளியர் ஆயிடுச்சு… உன்கிட்ட யார் செய்யச் சொன்னாங்கன்னு ஒரு பையன் சொன்னான்னு சொன்னியே…. அவனைப் பத்திரமா எங்கேயும் போக விடாமல் பார்த்துக்கோ. அவன்தான் நம்மளுக்குச் சாட்சி,” என்று சொன்னான் ஆதி.

“சரிடா. நான் எங்கேயும் போக விடாமல் பத்திரமாகப் பார்த்துக்கிறேன்,” என்றான் விக்கி.

“இந்த விஷயம் உன்னைத் தவிர்த்து வேற யாருக்காவது தெரியுமா?” என்று ஆதி கேட்க… “ஆமா ஆதி. நான் விசாரிக்கும் போது என் கூட லதா மட்டும் இருந்தாள்,” என்று சொன்னான் விக்கி.

“அப்போ லதாகிட்டயும் சொல்லி அவளை அலர்ட் பண்ணு. உன்னையும் அவளையும் தவிர்த்து மூன்றாவது அந்தப் பையனுக்குத் தெரியும் இல்லையா… உங்க மூணு பேரைத் தவிர்த்து இந்த விஷயம் வெளியே போகக்கூடாது. இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணுவோம். துர்கா கண் முழிச்ச பிறகு அதுக்கப்புறம் இதைப் பத்தி விசாரிச்சுக்கலாம். அதுவரைக்கும் இந்த விஷயம் நம்மளுக்குத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்,” என்று சொன்னான் ஆதி.

“சரி ஆதி. அப்போ நான் மற்றவங்களை அனுப்பிடுறேன்,” சொல்லிவிட்டுப் போனை வைத்தான் விக்கி.

ஆதி விக்கியிடம் பேசிவிட்டு வர… அப்போது தான் துர்காவை ஆபரேஷன் தியேட்டரில் இருந்து ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே அழைத்து வந்தார்கள். அவளை ரூமுக்கு ஷிஃப்ட் செய்வதாகச் சொல்லிவிட்டு நர்ஸ்கள் துர்காவை அவள் ரூமுக்கு மாற்றினர். துர்காவை ரூமுக்கு அழைத்து வந்ததும் அவளுடன் தான் இருந்து பார்த்துக் கொள்வதாகச் சொல்லி விவேக்கையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

விவேக்கை அனுப்பி வைத்துவிட்டு துர்காவின் அருகில் வந்து அமர்ந்த ஆதி அவள் கையைத் தன் இரு கைகளுக்குள் வைத்துப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தையே பார்க்க…. அழகான அவள் முகத்தில் சிறு சிறு காயங்களும் கை கால்கள் என இருக்க… அவ்வளவு உயரத்தில் இருந்து அவள் கீழே விழுந்ததால் அவள் கால்களில் அடிபட்டு எலும்பு முறிந்து இருக்க அவள் இரண்டு கால்களுக்கும் கட்டு போட்டு இருந்தனர். அதையெல்லாம் பார்த்த ஆதிக்கு மனது மிகவும் வலித்தது. தன்னால்தான் அவளுக்கு இந்த நிலை என்று மிகவும் வருந்தினான்.

துர்காவை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை இனியும் சும்மா விட்டு வைப்பதில் பிரயோஜனமே இல்லை என்றவன் தன் போனை எடுத்து விக்கிக்கு சில விஷயங்களைச் சொல்லிவிட்டுப் போனை வைத்தான் ஆதி.

துர்காவின் தலையை லேசாக வருடி கொடுத்த ஆதி, “என்ன மன்னிச்சிடு துர்கா. உன்னுடைய நிலைக்கு இந்த நான்தான் காரணம். நீ கண் முழிச்சு வந்ததும் கண் முன்னாடியே அத்தனை பேரையும் பழிவாங்கப் போறேன். அதன் பிறகு எந்த இடஞ்சலும் இல்லாமல் நீயும் நானும் நம் வாழ்க்கையை மோசமாக ஆரம்பிக்கலாம்,” என்று சொன்னான் ஆதி.


துர்காவிற்கு ஆக்சிடென்ட் நடந்து விட்டது என்பதைத் தெரிந்து வீட்டில் உள்ளவர்களும் பதட்டமாக இருக்க…. கதிர் அவர்களுடனே இந்த நேரத்தில் தான் அவர்களுடன் இருப்பது தான் நல்லது என்று நினைத்தவன் ஆஃபீஸுக்கு இன்று போகவில்லை. துர்காவிற்கு ஆக்சிடென்ட் ஆன விஷயம் அவர்களது குடும்ப நபர்களைத் தவிர ஆஃபீஸில் இருப்பவர்களுக்கும் மற்ற யாருக்குமே அவளுக்கு விபத்து நடந்த விஷயம் தெரியாது.

துர்காவிற்கு விபத்து நடந்தது கேள்விப்பட்டதும் வடிவு, கீர்த்தி அவளுடைய அப்பா உடன் சேர்ந்து வெங்கடாசலம் வீட்டிற்கு வந்தனர். வடிவு அழுது கொண்டு விசாலாட்சி இடம் ஓடியவர். “அண்ணி என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? துர்காவிற்கு எப்படி ஆக்சிடென்ட் நடந்தது…. உங்களுக்கு எதுவும் தெரியுமா? துர்கா இப்போ எப்படி இருக்கா ஏதாவது உங்களுக்குத் தெரியுமா அண்ணி? மாப்பிள்ளைக்குப் போன் பண்ணினாலும் மாப்பிள்ளை போன் எடுக்கவே இல்லை,” என்று சொன்னார் வடிவு.

கீர்த்திகா அழுது கொண்டே விசாலாட்சி இடம், “அத்தை அக்காவுக்கு என்ன ஆச்சு அத்தை? நீங்களாவது சொல்லுங்க. யாருமே போன் எடுக்க மாட்டேங்கறாங்க. நான் விக்கி அண்ணாவுக்குப் போன் பண்ணிப் பார்த்துட்டேன். ஆதி மாமாவுக்கும் போன் பண்ணிப் பார்த்துட்டேன். ஆனா அவங்க ரெண்டு பேருமே போன் எடுக்கவே இல்லை,” என்று சொல்லி அழுதாள் கீர்த்திகா.

“துர்காவிற்கு காலையில் பயங்கரமாக அடிபட்டு இருக்கு. அவளுக்கு ரத்தம் நிறையப் போயிட்டதால அவளுக்கு ஆபரேஷன் பண்ண ரத்தம் இன்னும் கிடைக்கலைன்னு நான் கடைசியாகப் பேசினப்ப விக்கி என்கிட்டச் சொன்னான். அதுக்காகத் தான் ஏற்பாடு பண்ணிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனாலதான் நம்ம போன் பண்ணப்ப அவங்க யாருமே எடுக்கல,**” என்று சொல்லி விசாலாட்சி வடிவிடமும் கீர்த்திகாவிடவும் சொல்லிக் கொண்டிருக்கும்போது…

வெளியில் போன் பேசச் சென்ற கதிர் அவன் அம்மாவிடம் வந்தவன். வடிவையும் கீர்த்திகாவையும் பார்த்துவிட்டு, “துர்காவிற்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சுடுச்சு. அண்ணாவுக்குத் தெரிஞ்சு யாரோதான் துர்காவிற்கு ரத்தம் கொடுத்திருக்காங்க. துர்காவை ரூமுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க… எப்படியும் துர்கா கண் விழிக்க 12 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்று அண்ணா இப்பதான் போன் பண்ணிச் சொன்னாங்க அம்மா,**” என்று சொன்னான் கதிர்.

“நல்ல வேலை பா. துர்காவிற்கு ரத்தம் கொடுத்த அந்தப் புண்ணியவான் நல்லா இருக்கணும்,” என்று சொன்னதைக் கேட்ட வடிவு துர்காவிற்கு ரத்தம் கொடுத்தவரை மனதார அவரை வாழ்த்தினார்.

அப்போது கதிர் கீர்த்திகாவிடமும் வடிவிடமும், “உங்க ரெண்டு பேருடைய பிளட் குரூப் என்ன?” என்று கேட்டான். கீர்த்திகா, “எனக்கும் அம்மாவுக்கும் பி பாசிட்டிவ். அப்பா மட்டும் ஏ பி பாசிடிவ்,” என்று சொன்னால் கீர்த்திகா.

கீர்த்திகா சொன்னதைக் கேட்ட கதிர், “நீயும் உன் அம்மாவும் ஒரே பிளட் குரூப் ஓகே. ஆனால் துர்கா மட்டும் உங்க மூணு பேர் கூடச் சம்பந்தமே இல்லாம ஏ பி நெகட்டிவ்வா இருக்காளே!!!” என்று ஆச்சரியமாகக் கேட்டான் கதிர்.

அதைக் கேட்டதும் வடிவும் அவர் கணவரும் அப்படியே உறைந்து போய் அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொள்ள… அவர்கள் இருவரின் முக மாற்றத்தைக் கவனித்த கதிர் இதற்கு மேலும் எதுவும் கேட்க வேண்டாம் என்று அமைதியாக விட்டு விட்டான்.


ரியா ஒரு நாள் முழுக்க மதுவைப் பார்க்கக் கூடாது என்று மதியம் சொன்னதால், அன்று மதியத்திலிருந்து மதுவிடம் பவன் வரவே இல்லை. அவன் வீட்டிற்கு வந்தும் கூட அவன் வீட்டை விட்டு வெளியே வராமல் எங்கே வெளியே வந்தால் மதுவைப் பார்த்து விடுவோமோ என்று வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.

ஆஃபீஸ்ல இருந்து வந்ததுல இருந்து பவன் வீட்டை விட்டு வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தான். அதைக் கவனித்த அவன் அம்மாவும் பவனின் தங்கையும் அவனிடம், “என்னடா இன்னைக்கு வந்ததுல இருந்து வீட்டை விட்டு வெளியேவே போகல? என்ன அதிசயமா இருக்கு. இல்லன்னா ஃபிரெண்ட்ஸ் பார்க்கப் போறேன் … அங்க போறேன்னு …இங்க போறேன்னு… ஏதாவது சாக்கு சொல்லிட்டுத் தான் வெளிய கிளம்பிடுவ… நீ வீட்டிலேயே இருக்க மாட்டேயே நீ,” என்று கேட்டார்.

“இது என்ன பெரிய வம்பா இருக்கு? நான் இப்போ வீட்டுக்குள்ள இருக்கிறது உங்களுக்கு எதுவும் பிரச்சினையா?” என்று கேட்டான் பவன். “நீ வீட்டுக்குள்ள இருந்தா எங்களுக்குச் சந்தோசம் தாண்டா… ஆனா இன்னிக்கி நீ சத்தியமா வெளியிலேயே போகலையேன்னு கேட்டேன்,” என்று சொன்னார் பவனின் அம்மா சீதா.

அப்போது கிச்சனிலிருந்து வந்த ஜெயா அவனிடம், “தம்பி அம்மா காபி கேட்டாங்க. காபித்தூள் தீர்ந்துடுச்சு. கொஞ்சம் கடையில போய் வாங்கிட்டு வந்து தரீங்களா?” என்று கேட்டார். “என்னால கடைக்கு எல்லாம் போக முடியாது ஜெயா அக்கா… எது வேணும்னாலும் நீங்க போய் வாங்கிட்டு வாங்க. என்னைச் சும்மா சும்மா இங்கப் போ அங்கப் போனு… யாரும் சொல்லாதீங்க… நானே ஒரு நாள் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு இருந்தா ஆளாளுக்கு வந்து கேள்வியாக் கேட்டுட்டு இருக்கீங்க,” என்று எரிந்து விழுந்தான்.

“டேய். இப்போ அந்தக் அக்கா என்னடா சொல்லிட்டாங்க? கடைக்குத் தானே போயிட்டு வரச் சொன்னாங்க? உன்னால போக முடியலன்னா முடியலன்னு சொல்ல வேண்டியது தானே… எதுக்கு இப்போ தேவையில்லாம ஜெயா அக்கா கிட்ட எரிஞ்சு விழுந்துட்டு இருக்க….” என்று சொன்னவள், “அக்கா இருங்க நான் போயிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு பவனின் தங்கை காவேரி அவனிடமிருந்து பணத்தை வாங்கிவிட்டுக் கடைக்குச் சென்றாள்.

அனைவரிடமும் கோபித்துக் கொண்டுத் தன்னறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டவன். காலையில் தான் எழுந்து வெளியே வந்தான். இரவு உணவு கூடச் சாப்பிடவில்லை பவன். காலையில் நேரமே எழுந்தவுடன் தன் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு மது ஆஃபீஸிற்கு கிளம்புவதற்கு முன்பாகவே பவன் கிளம்பி ஆஃபீஸிற்கு வந்து விட்டான்.

கதிர் இன்று ஆஃபீசுக்கு வராததால் பவனுக்கும் மதுவுக்கும் வேலை சற்று குறைவாகத்தான் இருந்தது. ரியா சொன்னது போல மது இருக்கும் பக்கமே பவன் வரவே இல்லை… காலையில் ஆஃபீஸ் வந்ததிலிருந்து மது பவனைத் தேடிக் கொண்டிருக்க… ஆனால் அவனோ மதுவின் கண்ணில் எங்கே பட்டு விடுவோமோ என்று அவள் இருக்கும் இடம் வரவில்லை. பவனைக் காலையில் இருந்து பார்க்கவில்லை என மதுவிற்கு ஏனோ போல இருந்தது. இவர்கள் இருவரின் நடவடிக்கைகளையும் அவர்களுக்குத் தெரியாமல் ரியா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

ஸ்டாப்கள் சாப்பிடும் இடத்தில் ரியாவும் மதுவும் இருக்க ரியா மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்க… மது டிபன் பாக்ஸில் சாப்பிடாமல் தன் விரலால் கோலம் வரைந்து ஏதோ யோசனையிலேயே அமர்ந்திருந்தால். அதைக் கவனித்த ரியா மதுவின் தோலைப் பிடித்து ஆட்டியவள். “என்ன மது யோசனையில் இருக்கப் போல இருக்கு,” என்று எதுவும் தெரியாதவள் போல கேட்டாள் ரியா.

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே ரியா. நீ சாப்பிடு. நான் சாப்பிடத் தான் போறேன். சும்மா ஏதோ ஒரு யோசனைல இருந்துட்டேன்,” என்று சொல்லிச் சமாளித்தால் மது. “ஆமா முதல்ல எல்லாம் ரொம்பக் கம்மியா சாப்பாடு கொண்டு வருவியே….. ஆனா இப்ப மட்டும் எப்படி தினமும் இரண்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு கொண்டுவர?” என்று கேட்டால் ரியா.

“அது… அது வந்து…,” என்று மது ரியாவிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாற…. “எனக்குத் தெரியும் நான் சொல்லட்டுமா…,” என்றவள், “அன்னைக்கு ஒரு நாள் பவன் கொண்டு வந்த சாப்பாடு கெட்டுப் போயிடுச்சு. சாப்பாடு கெட்டுப் போனதுனால சாப்பிடாமல் போறதைப் பார்த்துட்டு நீ உன்னோட சாப்பாடு தானே கொடுத்தேன். அதுக்குப் பிறகுத் தான் தினமும் நீ ரெண்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு கொண்டு வந்து நீ ஒன்னு நீ சாப்பிட்டு எனக்குத் தெரியாமல் அவனுக்கு இன்னொரு டிபன் பாக்ஸைக் கொடுத்து இருக்கேன்னு சொன்னால் ரியா. நீங்க ரெண்டு பேரும் பண்றது இல்ல எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்க… அப்படித்தானே?” என்று கேட்டால் ரியா.

“ஏய் ரியா. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல…. அவள் பாவம். இப்படிச் சாப்பிடாமல் வேலை செஞ்சா? நான் சாப்பாடு அவருக்கும் சேர்த்துக் கொண்டு வரேன்,” என்று சொன்னால் மது.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் பவன் அங்கே வந்தான். நீ பார்த்ததும் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட லேட் ஆக வந்த பவன் அதுவும் ரியாவும் இன்னும் சாப்பிட்டு முடிக்காமல் இருப்பதைப் பார்த்தவன். மதுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரியாவிடம் திரும்பி, “ஏன் இரண்டு பேரும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க?” என்று கேட்டான்.

“சும்மாத் தான். நீ வரணும்னு இங்க ஒருத்தர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதனாலதான் நாங்க இன்னும் சாப்பிடாமல் இருக்கோம்,” என்று சொன்னால் ரியா. ஏன் யாரைச் சொல்கிறான் என்று புரிந்து கொண்டவன், “அவன் இல்ல. கொஞ்சம் வேலை இருந்துச்சு. அதனால தான் வர லேட் ஆயிடுச்சு,” என்று சொன்னான் பவன்.

“கதிர் சார் இன்னைக்கு ஆஃபீசுக்கு வரல. அவரு இல்லாதப்ப உனக்கு என்ன வேலை இருக்கு?” என்று கேட்டால் ரியா. “அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. எனக்கு வேலை இருந்துச்சு அவ்வளவு தான்,” என்று சொன்னவன். தன் டிபன் பாக்ஸைத் திறந்து சாப்பிடப் போக…. இன்றும் வழக்கம் போலவே அவன் உணவு கெட்டுப் போயிருந்தது.

உணவு கெட்டுப் போய்விட்டதைக் கவனித்த பவன் வேகமாகத் தன் டிபன் பாக்ஸை மூடிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லப் போக… மது பவன் சாப்பிடாமல் செல்வதைப் பார்த்ததும் மனது வருத்தப்பட்டவள் தன் டிபன் பாக்ஸை அவனிடம் நீட்டி, “இந்தாங்க பவன். உங்களுக்கும் சேர்த்து நான் எடுத்துட்டு வந்து இருக்கேன். சாப்பிடுங்க,” என்று சொல்லி அவன் முன்னே டிபன் பாக்ஸை நீட்டினாள்.

“ஏங்க நீங்க யாருங்க… எனக்கு தினமும் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்துட்டு இருக்கீங்க. நான் சாப்பிட்டா என்ன… சாப்பிடாட்டி உங்களுக்கு என்ன? ஆஃபீசுக்கு வந்தோமோ… வேலையைப் பார்த்தமான்னு இருங்க. இந்த மாதிரி என் மேல கரிசனம் காட்டுறேன் எல்லாம் வந்து இப்படிச் சாப்பிடக் குடுத்துட்டு இருக்காதீங்க. எனக்கு இது சுத்தமாப் பிடிக்கல,” என்று அவன் மதுவின் முகத்தில் அடித்தார் போலப் பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் பவன்.

பவன் இப்படி மதுவிடம் முகத்தில் அடித்தார் போலப் பேசிவிட்டுச் சென்றதைக் கேட்டதும் மதுவினால் தாங்கவே முடியவில்லை. பவன் பேசிவிட்டுச் சென்றதில் சட்டென்று மதுவின் முகம் மாறிவிட அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ரியா எங்கே தான் அழுவதைப் பார்த்துவிடுவாளோ என்று அவளுக்குத் தெரியாமல் தன் கண்களை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்ட மது. வேகமாக டிபன் பாக்ஸைச் சாப்பிடாமலே மூடி வைத்துவிட்டு, “நீ சாப்பிட்டு வா. எனக்கு வேலை இருக்குது,” என்று சொல்லிவிட்டு எழுந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.

மது சாப்பிடாமல் செல்வதைப் பார்த்த ரியாவிற்கு பவனின் மேல் கோபம் வந்தது. அவன் இப்படிப் பேசியதால்தான் மது சங்கடப்பட்டுவிட்டுச் சாப்பிடாமல் சென்று விட்டால் என்று புரிந்து கொண்ட ரியா அவளும் சாப்பிடாமல் டிபன் பாக்ஸை மூடி வைத்துவிட்டு நேராகப் பவனின் கேபினுக்குச் சென்றாள்.

அவன் முன்னே கோபமாக நின்ற ரியாவைப் பார்த்த பவன், “இப்ப எதுக்கு இங்க வந்து நின்னுட்டு இருக்க?” என்றான் பவன். “இப்போ எதுக்கு நீ மது கிட்ட அப்படிப் பேசிட்டு வந்த? பாவமே. நீ சாப்பிடாமக் கஷ்டப்படுவேன்னு சொல்லித் தானே உனக்காக அவள் சமைச்சு எடுத்துட்டு வந்து இருக்கா. அதை விட்டுட்டு அவள் சமைச்சுக் கொடுத்த சாப்பாட்டை வேண்டாம் என்று உனக்கு எப்படிச் சொல்ல மனசு வந்துச்சு?” என்று கேட்டால் ரியா.

“என் உடம்பைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். இவங்க யாரு என் மேல அக்கறை பண்றதுக்கு? நான் சாப்பிட்டால் என்ன? சாப்பிடாட்டி என்ன? தினமும் சாப்பாடு கொண்டு வந்து எனக்கு எதுக்குக் கொடுக்கணும் அவங்க?” என்று கேட்டான் பவன்.

“அவ உன் மேல ஏன் இவ்ளோ அக்கறையா இருக்கான்னு உனக்குத் தெரியலையா?” என்று கேட்டால் ரியா.

ரியா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவளைப் பார்த்த பவன், “எனக்குத் தெரியாது,” என்றான் ரியாவிடம்.

“நீ பொய் சொல்ற. உனக்கு மது ஏன் உன் கிட்ட இப்படி நடந்துகிறாள்னு நல்லாவே தெரியும். அது தெரிஞ்சதுனால தான் நீயும் மது கிட்ட நல்லாப் பேசவே ஆரம்பிச்சே. இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா பவன்?” என்று கேட்டால் ரியா.

இப்படிச் சொன்னதும் அதிர்ச்சியாக ரியாவைப் பவன் பார்க்க… “என்னப் பார்க்குற? எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா… மதுவுக்கு உன் மேல விருப்பம் இருக்கு…. அவள் உன்ன விரும்புறாங்கறதும் உனக்கு நல்லாத் தெரியும். ஆனா நீயா சொல்லுவேன்னு அவளும் அவளாகச் சொல்லுவான்னு எவ்வளவு நாளைக்குக் காத்துகிட்டு இருக்கப் போறீங்க?” என்று கேட்டால் ரியா.

ரியா கேட்டதற்குப் பவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் அமைதியாக இருக்க… “என்கிட்டச் சொல்லு பவன். உனக்கு மது மேல விருப்பம் இருக்கா இல்லையா?” என்று கேட்டால்.

அப்போதும் பவன் அமைதியாகவே இருக்க… “நான் ஏன் உன்கிட்ட ஒரு நாள் முழுக்க மதுவைப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டால் ரியா. அவளைக் கேள்வியாகப் பார்த்த பவனிடம். “நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? மதுவை நீ ஒரு நாள் முழுக்கப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன். ஆனா நீ மதுவுக்குத் தெரியாமல் அவளைத்தான் சுத்தி சுத்தி வந்த… நான் உன்னைக் கவனிச்சிட்டுத் தான் இருந்தேன். இங்க மட்டும் இல்ல. நீ வீட்டுக்குப் போன பிறகும் கூட மதுவைப் பார்க்கிறதை நீ நிறுத்தவே இல்லை. ஆனால் இன்னைக்குக் காலைல நீயா வந்து என்கிட்ட என்ன சொன்ன? பாத்தியா? எனக்கு மதுவுக்கும் இடையில எதுவுமே இல்ல. நீ சொன்ன மாதிரி நேத்துல இருந்து நான் மது இருக்கிற பக்கமே போகலைன்னு என்கிட்டப் பொய் சொன்ன,” என்றாள் ரியா.

“நான் வீட்டில மதுவைப் பார்த்தது எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேள்வியாக ரியாவிடம் கேட்க. “இப்பதான் தெரியும்,” என்று சொன்னால் ரியா சிரித்துக் கொண்டே. அவளைப் புரியாமல் பவன் பார்க்க, “என்னப் பார்க்கிற? நான் சும்மா உன்கிட்ட போட்டுத் தான் வாங்கினேன். ஆனா நீயாவே உளறிட்டே,” என்று சொல்லி கலகலவெனச் சிரித்தால் ரியா.

அவளை முறைத்தவன், “இப்போ நானும் மதுவும் ஒன்று சேர்வதில் நீ எதுக்கு அவ்ளோ ஆர்வமா இருக்க?” என்று கேட்டான் பவன்.

“ஏன்னா எனக்கு மதுவை ரொம்பப் பிடிக்கும். அவளோட மேரேஜ் எவ்வளவு கஷ்டத்தை அவளுக்குக் கொடுத்து இருக்குன்னு உனக்கு நல்லாத் தெரியும். மது அவளோட கல்யாண வாழ்க்கையைப் பற்றி என்கிட்டச் சொன்னப்போ அவளுக்காக நான் எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கேன் தெரியுமா பவன்? அவ அந்த அளவுக்கு அவ கல்யாண வாழ்க்கையில ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கா. அந்த ரவியால் பாதிக்கப்பட்டு இருக்கா.”

“ஆனா அவப்பட்ட கஷ்டம் எல்லாம் உன்கிட்டப் பேசும் போது நீ அவள் பக்கத்துல இருக்கும்போது அவளுக்கு அதெல்லாம் மறந்து போயிடுது. நீ அவள் பக்கத்துல இருக்கும்போது மது ரொம்பச் சந்தோஷமா இருக்கா. தனக்கு ஏற்படுத்தின வாழ்க்கை நல்லா இல்லாமப் போயிடுச்சுங்கறதுக்காகக் காலம் முழுக்க அவ கஷ்டப்பட்டுட்டு இருக்கணும்னு ஏதாவது இருக்கா என்ன. அதுல எனக்குச் சம்மதம் கிடையாது,” என்றாள் ரியா.

“அது எல்லாம் சரி ரியா. ஆனா காரணமே இல்லாம நீ எதுக்கு நாங்க ரெண்டு பேரும் ஒன்று சேரனும்னு நினைக்கிற…. அதுக்கு என்ன காரணம்?” என்று கேட்டான் பவன்.

“காரணமே இல்லாம நான் உங்களுக்கு உதவனும்னு அவசியம் எனக்குக் கிடையாது. ஆனால் நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் நான் ரொம்பச் சந்தோஷப்படுவேன். என்னை விட மது ரொம்பச் சந்தோஷப்படுவா. நீங்க ரெண்டு பேரும் ஒன்று சேருவதில் அப்படி என்ன எனக்கு ஆர்வம்னு தானே கேட்கிற…. நீங்க ரெண்டு பேரும் முதல்ல மனசு விட்டுப் பேசுங்க… என்னைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்றீங்களோ அந்த அன்னைக்கு நான் என்னோட காரணத்தைச் சொல்றேன்,” என்று சொல்லிவிட்டுப் பவனின் கேபினில் இருந்து சென்றால் ரியா.

ரியா செல்வதையே யோசனையோடு பார்த்துக் கொண்டு இருந்தவன். “இவ எதுக்கு எங்க ரெண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைப்பதில் இவ்வளவு ஆர்வமா இருக்கா…. ஏதோ ஒரு காரணம் இருக்கு. அப்படி இல்லாம சும்மா இவளா வந்து என்கிட்ட இப்படிப் பேசிட்டுப் போவாளா?” என்று யோசித்தான் பவன்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured