மது நன்றாக உறங்கிவிட்டாள் என்று நினைத்த பவன் கட்டிலில் இருந்து எழுந்து செல்லப் போக… தூக்கத்தில் அவன் கையைப் பிடித்திருந்த மது அவன் எழுந்த வேகத்தில் பிடித்து இழுக்கவும், அவள் மேல் வந்து பவன் விழுந்தான்.
மதுவின் மேல் பவன் வந்து மொத்த எடையையும் போட்டு விழ… அரை மயக்கத்தில் இருந்த மது, தன் மீது ஒரு பெரிய பாரம் வந்து விழவும் சட்டெனத் தன் கண்ணைத் திறந்து, தன் மீது படுத்திருந்த பவனைப் பார்க்க….
பவனின் முகமும் மதுவின் முகமும் மிக அருகில் இருக்கவும், அவன் உடல் முழுவதும் மதுவின் உடல் மேல் படர்ந்து இருக்க… அவனைப் புரியாமல் பார்த்தாள் மது.
மது தூக்கம் தெளிந்து நன்றாகக் கண்விழித்துப் பவனைப் பார்க்கவும், அவள் மேல் படுத்திருந்த பவனுக்கு மது எங்கே தன்னைத் தவறாக நினைத்து விடுவாளோ என்று நினைத்தவன், மதுவின் மேல் இருந்து அவசர அவசரமாக எழுந்து மதுவைப் பார்த்தவன்.
“மது…. அது… நான் தெரியாம… நீ என் கையைப் பிடிச்சு… கட்டில்ல…. உன் மேல….” என்று வார்த்தைகளைப் பாதியாகப் பேச….
“என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதன்னு சொன்னேன் இல்ல? இப்ப ஏன் நீ போற?” என்று மது குளறிக் கொண்டே பேச….
“மது, நீ நல்லா தூங்கிட்டு இருந்த. அதான், ‘சரி’ன்னு நான் என் ரூமுக்குப் போய் தூங்கலாம்னு…” என்று பவன் சொல்ல….
“பரவாயில்லை. என்னைத் தனியா விட்டுட்டுப் போகாத. நீ இங்கேயே தூங்கு. எனக்குப் பயமா இருக்கு” என்று மது அரை தூக்கத்தில் பவனிடம் கேட்டாள்.
பவன் தயங்கியவாறே நிற்க… “ஏன் அங்கேயே நிக்கிற? என் பக்கத்துல வந்து படுத்துக்கோ” என்று தன் அருகில் பெட்டைத் தட்டிக் காண்பித்தாள் மது.
மது மருந்தின் வீரியத்தில் தான் இப்படி எல்லாம் பேசுகிறாள் என்று பவனுக்குப் புரிந்தது. ஆனால் அவளை எப்படிச் சமாளிப்பது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை.
பவன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…. மது தன் அருகில் நின்ற பவனை எட்டி அவன் கையைப் பிடித்து இழுத்து… தன் அருகில் படுக்க வைத்தவள், அவனைக் கட்டிக் கொண்டு அவளும் படுத்துக்கொண்டாள்.
குளிருக்கு இதமாக மது பவனை நன்றாக இருக்கக் கட்டிக்கொண்டு படுத்திருக்க… அவள் அருகில் படுத்திருந்த பவனுக்குத்தான் மிகவும் அசௌகரியமாக இருந்தது.
மதுவின் உடல் மொத்தமும் பவனின் மேல் பாதியாக உரசிக் கொண்டு இருக்க… பவன் நெளிந்து கொண்டே படுத்து இருந்தான்.
பவன் நெளிந்து கொண்டே இருக்க, மதுவால் சரியாகத் தூங்க முடியவில்லை. அவனைக் கட்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பவனின் முகத்தைப் பார்க்க… அவன் திருதிருவென விழித்துக் கொண்டு படுத்து இருந்தான்.
“ஏன் பவன் இப்படி முழிச்சிட்டு இருக்க?… என்ன ஆச்சு? ஏன் நெளிஞ்சுகிட்டு இருக்க?” என்று கேட்டாள்.
“மது, ப்ளீஸ் கொஞ்சம் என்னை விட்டுத் தள்ளிப் படுத்துத் தூங்கு. எனக்கு ஒரு மாதிரி அசௌகரியமா இருக்கு” என்று பவன் சொல்ல…..
பவன் அப்படிச் சொன்னதும் அவன் அருகில் படுத்திருந்த மது, “நான் உன் பக்கத்துல படுத்து இருக்கிறது உனக்கு அசௌகரியமா இருக்கா?…” என்று சிறுபிள்ளை போல உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழுவது போல முகத்தை வைத்தவள். “என் கூடப் பேசாதே” என்று சொல்லித் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
மது தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று உணர்ந்தவன், அவளைப் பார்த்துத் திரும்பிப் படுத்தவன் மதுவின் தோளைத் தொட…
தன் மீது இருந்த பவனின் கையைத் தட்டி விட்டவள், “என்னைத் தொடாதே…. நான் தான் உன் பக்கத்துல படுத்தா உனக்கு அசௌகரியமா இருக்குன்னு சொல்றியே, அப்புறம் எதுக்கு என்னைத் தொடுற? போ…” என்றால் மது கோபமாக.
மது என்ன பேசுகிறாள், என்ன செய்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அதனால் மதுவிற்குச் சொல்லிப் புரிய வைக்கும் நிலையிலும் அவள் இப்போது இல்லை. இப்போது என்ன செய்வது என்று குழப்பத்திலே படுத்திருந்த பவன், எப்படியாவது அவளைத் தூங்க வைத்து விட்டால் போதும், காலை மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், பின்னால் இருந்து மதுவை இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்.
“ஏய் மது, சாரிடி…. நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன். என்கிட்டக் கோச்சுக்காதே. ப்ளீஸ், என்னைத் திரும்பிப் பாரேன்” என்று மதுவைத் தன் பக்கம் திருப்ப….
அவனைப் பார்த்தவாறு திரும்பிப் படுத்த மது, “அதானே பார்த்தேன், தெரியாம தானே சொன்னே!” என்ற மது. அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்தாள்.
ஏற்கனவே மதுவின் உடல் அவன் உடலோடு உரசலில் அவனுடைய ஹார்மோன்கள் என்னென்னவோ அவன் உடலில் வேலை செய்து கொண்டிருக்க…. போதாக்குறைக்கு இப்போது இவள், சட்டையின் பட்டன் கழண்டு திறந்திருந்த அவன் மார்பில் முகத்தை வைத்து அழுத்திக்கொண்டு உரசவும், போனால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினான்.
மது குளிருக்கு இதமாக அவனின் உடலோடு மேலும் மேலும் நெருங்கிக் கொண்டு ஒன்றிப்போக… முதலில் விலக நினைத்த பவன், அதுவும் இந்த நெருக்கம் அவனை விலகவிடாமல் செய்தது. பேருக்கு அவள் அருகில் அவளை அணைத்துப் படுத்திருந்த பவன், இப்போது தன் கட்டுப்பாட்டை இழந்து, மதுவைத் தன்னோடு சேர்த்து மேலும் இறுக்க அணைத்துக் கொண்டான்.
இருவரின் உடலும் அந்தக் குளிர் பிரதேசத்திலும் சூடேறிப் போக, அவர்களுக்கு இருவருக்கும் தடையாக இருந்த ஆடை, இருவரின் மோகத் தீயில் ஆடையும் தடையாக இருக்க… ஆடையைத் துறந்து ஆதிவாசிகள் ஆகி, ஏற்கனவே தகித்துக் கொண்டிருந்த இருவரின் உடலும் இப்போது ஆடை இல்லாமல், ஒரு தீ போல மேலும் காட்டுத்தீ போல் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது.
மது மருந்தின் மயக்கத்திலும், பவன் மதுவின் மீது இருந்த மயக்கத்திலும், ஒருவரை ஒருவர் தங்களை மறந்து, என் மனதோடு இணைந்த இருவரும் உடலோடு ஒன்று இணைந்தார்கள்.
ஆபீஸிலிருந்து துர்காவுடன் நேரம் செலவழிக்கலாம் என்று மாலை நேரமே வீட்டிற்கு வந்து விட்டான் ஆதி.
அவள் கை கால்களிலும் முகத்திலும் அடிபட்டிருந்த காயங்கள் சிறிது சிறிதாக ஆறிக்கொண்டிருக்க…. துர்காவின் உடல் ஓரளவு தேறிவிட்டது. அவள் இன்னும் எழுந்து நடக்க முடியாததால், அவ்வப்போது அனைவரும் வந்து துர்காவை அவள் அறையிலேயே பார்த்துவிட்டுச் சென்றனர்.
ஆதி துர்காவுடன் இருக்கும் பொழுது யாருமே வந்து அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
ஏற்கனவே ஆதி துர்காவுடன் இன்னும் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை என்று அனைவருக்கும் தெரிந்திருக்க… துர்காவின் பழைய ஞாபகம் வருகிறதோ இல்லையோ, ஆனால் அவள் எழுந்து தானாகவே நடக்கும் வரை சிறிது காலம் காத்திருக்கலாம், அதன் பின்னர் எங்கள் வாழ்க்கை நாங்கள் தொடங்குகிறோம் என்று ஆதி சொல்ல… அனைவரும் ஆதி சொல்வதும் சரிதான் என்று அவன் சொன்னதற்குச் சம்மதித்தனர்.
வீட்டிற்குள் நேராக வந்த ஆதி, ஹாலில் இருந்த அனைவரிடமும் பொதுவாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, துர்காவைப் பார்க்க அவள் அறைக்குச் சீக்கிரமாக வந்து விட்டான்.
ஆதியின் கார் ஹாரன் சத்தத்தை வைத்து ஆதி வந்துவிட்டான் என்று துர்கா ஏற்கனவே கண்டுபிடித்து விட்டாள்.
அவன் எப்போது தன்னைப் பார்க்க மேலே வருவான் என்று துர்கா ஆவலாக வாசலையே பார்த்தபடி காத்திருந்தாள்.
லிப்டில் வர தாமதமாகும் என்று ஆதி வேகமாகப் படிகளில் ஏறி துர்காவின் அறைக்குச் செல்ல….
தங்கள் அறையின் கதவைத் திறந்து கொண்டு ஆதி சிரித்த முகமாக உள்ளே வரவும், அவனுக்காகக் காத்திருந்த துர்காவும் ஆதி உள்ளே வந்ததும் சந்தோஷமாகச் சிரித்தபடி அவனைப் பார்க்க….
உள்ளே வந்த ஆதி, துர்காவைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டான். துர்காவால் எழுந்து நடக்க முடியாது என்பதால், அவளுக்கு வீட்டில் இருக்கும் பொழுது மிகவும் சாதாரண ஆடைதான் அணிவித்து இருப்பார்கள்.
ஆனால் இப்போது துர்கா ஷிப்பான் சேலை கட்டி, அழகாகத் தலை சீவி பின்னலிட்டு, தலை நிறைய மல்லிகை பூ சூடி, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து. கண்களுக்கு லேசாக காஜல் வைத்து, உதடுகளில் உதட்டுச் சாயம் பூசி, இன்று பூத்த பூவைப் போல மிகவும் பிரஷ்ஷாக கட்டிலில் அமர்ந்திருந்தால் துர்கா.
அவளை இப்படிப் பார்த்ததும், திருமணமான புதிதில் துர்கா இப்படித்தான் உடை உடுத்தி இருப்பாள் என்ற நினைவு வர… துர்காவை ஆச்சரியமாகப் பார்த்தவாறே அவள் அருகில் வர…
ஆதி தன்னை இப்படிப் பார்ப்பதை உணர்ந்த துர்காவுக்கு, என்னதான் அவளுக்குப் பழைய நினைவுகள் இல்லை என்றாலும், தான் வயதுக்கு வந்த ஒரு இளம் பெண் என்ற எண்ணம் அவள் மனதிற்குள் எப்போதோ வந்துவிட்டது.
எப்போதெல்லாம் ஆதி துர்கா அருகில் வருகிறானோ அப்போதெல்லாம் துர்காவின் இதயத்துடிப்பு எப்போதும் விட அதிகமாகுவதை துர்கா உணரத்தான் செய்தாள்.
ஆதி துர்காவின் அருகில் வந்ததுமே துர்காவின் முகம் எல்லாம் சிவந்து போய் சூடேறிவிட்டது.
அவள் முகம் அடிக்கடி சிவந்து போகும் என்று திருமணமான புதிதில் கீர்த்திகா சொன்னது ஆதிக்கு நினைவு வர…
இப்போது எதற்காக துர்காவின் முகம் சிவந்து இருக்கிறது என்று யோசித்தவாறே அவள் அருகில் வந்தவன். துர்காவை ஒரு முறை தன் கண்களில் முழுவதுமாக நிறைத்துக் கொண்டவன், துர்காவைப் பார்த்து, “என்ன துர்கா, இன்னைக்குச் சேலையெல்லாம் கட்டி, அழகாத் தலை சீவி, பூவெல்லாம் வச்சி இருக்க. யார் இதெல்லாம் பண்ணி விட்டா?” என்று கேட்டான்.
அவன் அப்படி கேட்டதும், “எனக்கு நல்லா இருக்கா ஆதி? கீர்த்து தான் எனக்கு இதெல்லாம் பண்ணி விட்டா. அவதான் சொன்னா, ‘கல்யாணம் ஆனவங்க புருஷன் வீட்டுக்கு வரும்போது இந்த மாதிரி எல்லாம் டிரஸ் பண்ணிட்டு இருந்தா தான் புருஷனுக்கு அவங்க பொண்டாட்டியப் பிடிக்கும். இனிமேல் நீ இப்படித்தான் இருக்கணும்’ அப்படின்னு சொல்லிட்டு, என்ன இந்த மாதிரி ரெடி பண்ணி விட்டா. அதுவும் இல்லாம, என்ன தினமும் வந்து அவளே இந்த மாதிரி ரெடி பண்ணி விடுறேன்னு சொன்னா. எனக்கு இது நல்லா இருக்கா ஆதி?” என்று இன்னும் மழலை மாறாமல் துர்கா கேட்க.
“ரொம்ப அழகா இருக்கு துர்கா. நாள் பூரா உன்னை இப்படியே பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு” என்று சொன்னான் ஆதி.
ஆதி தன்னை ‘அழகாக இருக்கிறாய்’ என்று சொன்னதும், ஏற்கனவே லேசாகச் சிவந்திருந்த துர்காவின் முகம் அந்திவானமாய் மேலும் சிவந்து விட்டது.
துர்காவின் முகம் மேலும் சிவந்து விட, அதைப் பார்த்ததும் ஆதி, “ஏன் துர்கா, உன் முகம் இப்படிச் சிவந்துருச்சு?” என்று சொல்லி அவள் கன்னத்தைத் தொட… அவள் முகம் சூடாக இருப்பதை உணர்ந்தவன்.
“துர்கா, ஏன் முகம் எல்லாம் சூடா இருக்கு?… உனக்கு எதுவும் உடம்பு சரியில்லையா? காய்ச்சல் அடிக்குதா?” என்று அவள் முகம், நெற்றி, கழுத்து என ஆதி தொட்டுப் பார்க்க…
துர்காவின் தனக்கு வந்த உணர்வுகளை என்னவென்று ஆதிக்கு விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. அவள் செய்வதறியாது ஆதியை வெட்கப்பட்டுக் கொண்டே பார்க்க….
துர்காவுக்கு என்னவோ ஏதோ என்று நினைத்த ஆதி பதறிக் கொண்டிருக்க, துர்கா அவனை வெட்கப்பட்டுக் கொண்டு பார்ப்பதைக் கவனித்த ஆதிக்கு இப்போதுதான் அவளின் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
துர்காவின் நிலையை கண்டு மகிழ்ந்த ஆதி அவளிடம் மேலும் வேறு எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க…
“ஏன் ஆதி, இன்னிக்கி இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட?” என்று கேட்டால் துர்கா.
“என் பொண்டாட்டியப் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு. அதனாலதான் நான் சீக்கிரமா வந்துட்டேன்” என்றான் ஆதி.
ஆதி ‘என் பொண்டாட்டி’ என்று சொன்னதும், அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்பது துர்காவுக்குப் புரிய, அவனைப் பார்த்து துர்கா மெலிதாகச் சிரிக்க…
நீ தன்னைக் கண்டு புன்னகை செய்வதும், வெட்கப்படுவதையும் பார்த்த ஆதிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. துர்கா தன் பழைய நினைவுகளை மறப்பதற்கு முன்பும், இப்போது பழைய நினைவுகளையும் மறந்திருக்கும் நிலையிலும் கூடத் தன்னையே விரும்புவதை நினைத்து, ஆதிக்கு ஒரு சந்தோசமாகவும், மிகவும் பெருமையாகவும் இருந்தது. ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும், நான் அவளால் காதலிக்கப்படுகிறோம் என்னும் உணர்வே அவனை கர்வம் அடைய செய்யும். அதே நிலையில் தான் ஆதியும் இப்போது இருந்தான். துர்கா இந்த நிலையில் கூடத் தன்னை விரும்பி ஏற்பது ஆதிக்குப் பிடித்திருந்தது.
அவள் அருகில் மெத்தையில் அமர்ந்த ஆதி, துர்காவின் கையைப் பிடித்து, “உன்னை இவ்வளவு அழகா ரெடி பண்ணி விட்டா, கீர்த்திகாவிற்கு ஏதாவது கொடுக்கணும்” என்று சொன்னான் ஆதி.
“நீ சொன்ன மாதிரியே தான் கதிரும் கீர்த்திகா கிட்ட சொன்னானே” என்று துர்கா சொன்னாள்.
“கதிர் சொன்னானா!!! என்ன சொன்னான்?” என்று கேட்டான் ஆதி.
“அது… அது… வந்து, ‘எங்க அண்ணனுக்குப் புடிச்ச மாதிரி துர்காவை நீ அழகா ரெடி பண்ணி இருக்க… இதுக்காகவே நான் உனக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கணும்’ அப்படின்னு சொன்னான்.”
“அதுக்கு கீர்த்திகா என்ன கிஃப்ட் தரப் போறன்னு கதிர்கிட்டே கேட்டாள்.”
“சரி… அதுக்கு கதிர் என்ன சொன்னான்?” என்று கேட்டான் ஆதி.
“அதுவா… அது, ‘நான் உனக்குக் கொடுக்கப் போற கிஃப்ட் இங்கே துர்கா முன்னாடி கொடுக்க முடியாது. அதனால நம்ம ரூமுக்குப் போனதும் தரேன்னு’ அப்படின்னு சொன்னான்.”
“கதிர் அப்படி சொன்னதும் கீர்த்திகா, ‘எனக்கு நீ எதுவும் தர வேண்டாம் போடா….’ அப்படின்னு சொல்லிச் சிரிச்சிட்டே இங்கிருந்து வெளியே ஓடிட்டா” என்று துர்கா சொல்ல..
கீர்த்திகாவிற்கு கதிர் என்ன கிஃப்ட் தருவதாகச் சொன்னான் என்பது ஆதிக்குப் புரிய, ஆதி லேசாகப் புன்னகை செய்தான்.
அவன் சிரிப்பதைப் பார்த்த துர்கா, “ஆதி, இதே மாதிரிதான் கீர்த்திகாவும் கதிர் ரூம்ல போயி அவளுக்குக் கிஃப்ட் தரேன்னு சொன்னதும் ஏதோ யோசிச்சிட்டு இப்படி மெதுவாச் சிரிச்சிட்டு இங்கிருந்து ஓடிட்டா” என்று சொல்ல….
அவள் அப்படிச் சொன்னதும் தன்னை யோசனையில் இருந்து திரும்பிய ஆதி, ‘இடியட்… துர்கா முன்னாடி என்ன பேசணும், பேசக் கூடாதுன்னு அவனுக்குத் தெரிய வேண்டாமா… இப்படித்தான் துர்கா முன்னாடி பேசுவானா.. பாரு இப்போ துர்கா இது எல்லாம் எதுவுமே தெரியாம என்கிட்ட கேட்டுட்டு இருக்கா’ என்று என் மனதிற்குள்ளேயே கதிரைத் திட்ட…
“ஆதி” என்று அழைத்த துர்கா, “கதிர் கீர்த்திகாவுக்கு அவளை ரூமுக்கு கூட்டிட்டுப் போய் என்ன கிஃப்ட் கொடுத்திருப்பான்னு உனக்குத் தெரியுமா? அவன் என்ன குடுத்தான்னு நான் பாக்கணும்” என்று துர்கா கேட்க..
உடனே ஆதி துர்காவிடம், “கதிர் கீர்த்திகாவுக்குக் கொடுக்கிற கிஃப்ட் எல்லாம் நம்ம பார்க்கக் கூடாது” என்று சொன்னான் ஆதி.
“ஏன் பார்க்கக் கூடாது? கீர்த்திகா என்னை இப்படி அழகா ரெடி பண்ணிவிட்டதுக்காகத் தானே கதிர் அவளுக்குக் கிஃப்ட் தரேன்னு சொன்னான். அப்போ அந்தக் கிஃப்ட்டை நானும் பார்க்கலாம் தானே?” என்று கேட்டால் துர்கா.
“அச்சோ துர்கா… அதெல்லாம் நீ பார்க்கக் கூடாது” என்றான் ஆதி.
“அதெல்லாம் முடியாது. எனக்கு கதிர் கீர்த்திக்கு என்ன கிஃப்ட் கொடுத்தான்னு நான் பார்க்கணும்” என்று சொன்னால் துர்கா.
“துர்கா… சொன்னா புரிஞ்சுக்கோ… அந்தக் கிஃப்ட்டை எல்லாம் நீ இல்ல, வேற யாருமே பார்க்கக் கூடாது. பார்க்கவும் முடியாது. அது புருஷன் பொண்டாட்டிக்குத் தனியா இருக்கும்போது கொடுக்குற கிஃப்ட்” என்று சொன்னான் ஆதி.
“ஏன் யாருமே பார்க்கக் கூடாது? அப்படி என்ன கிஃப்ட் கதிர் கீர்த்திகாவுக்குக் கொடுத்தான்? எனக்கு அது வேணும். நான் அதை பார்த்தே ஆகணும்” என்று துர்கா சிறுபிள்ளை போல அடம் பிடித்து, உதட்டைப் பிதுக்கி அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு ஆதியைப் பார்க்க…
“உனக்குச் சொன்னா புரியாது” என்று சொன்னவன், தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, துர்காவின் முகத்தைப் பிடித்து அவள் முகத்தருகில் தன் முகத்தைக் கொண்டு சென்றவன், துர்காவின் உதட்டில் அழுந்த முத்தம் ஒன்றை வைத்துவிட்டு, “இந்தக் கிஃப்ட் தான் கதிர் கீர்த்திகாவுக்குத் தரேன்னு சொன்னான். போதுமா?” என்று கேட்டான் ஆதி.
ஆதி திடீரென்று துர்காவுக்கு முத்தம் கொடுத்ததும். பயந்து போன துர்கா, “ச்சீ…. இதுதான் கிஃப்ட்ன்னு கதிர் சொன்னானா?” என்று சொல்லிக் கொண்டே துர்கா அழ ஆரம்பிக்க….
துர்கா திடீரென அழவும், அவளை ஆதி சமாதானம் செய்ய முயல, ஆனால் துர்கா ஆதி சொல்வதைக் கேட்காமல், “போ, நீ ரொம்பக் கெட்ட பையன். நீ எதுக்கு எனக்கு முத்தம் கொடுத்தே?” என்று சொல்லிக் கொண்டே துர்கா சற்றுச் சத்தமாக அழ ஆரம்பிக்க, அவளின் அழுகையை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் குழம்பிய ஆதி.
“துர்கா அழாதே டி…. ப்ளீஸ், என் செல்லம் இல்ல” என்று கொஞ்சினான்.
“போடா, நீ என் கூடப் பேசாத. யாராவது என்கிட்ட வந்து இப்படி எல்லாம் செஞ்சா, அம்மா உடனே என்ன சத்தம் போட்டு அவங்களை கூப்பிடச் சொல்லி இருக்காங்க. என்னைத் தப்பு தப்பத் தொடக் கூடாது. எங்கெல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாதுன்னு அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்று சொன்ன துர்கா.
“இரு… இரு…. நீ என்னை இங்க முத்தம் கொடுத்தே இல்ல” என்று சொல்லித் தன் உதட்டைத் தொட்டுக் காட்டிய துர்கா. “இரு, நான் அம்மாவை கூப்பிட்டு இப்பவே நீ எனக்கு இங்கே முத்தம் கொடுத்தேன்னு சொல்றேன்” என்று சொன்ன துர்கா “அம்மா” என்று வாயைத் திறக்க….
‘என் அத்தை இதெல்லாம் நல்லா சொல்லிக் கொடுத்திருக்கு… ஆனா என்கிட்ட எப்படி துர்கா நடந்துக்கணும்னு மட்டும் சொல்லிக் கொடுக்கல. இவளை இப்போ என்ன செய்யறது?’ என்று செய்வதறியாமல் நின்றவன், அவள் ‘அம்மா’ என்று மறுபடியும் அழைத்ததும், சட்டென்று அவள் முகத்தைப் பிடித்து துர்காவின் இதழ்களைக் கவ்வினான்.
