Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 141

உன் ரகசிய ரசிகை நான் 141

by Layas Tamil Novel
223 views

துர்கா ஆதிக்கு முத்தம் கொடுத்ததும் அவள் ஆதியைக் குற்றம் சொல்லி, துர்காவின் அம்மாவிடம் சொல்கிறேன் என்று அவள் கனகாவை அழைக்க…

துர்கா “அம்மா” என்று அழைக்க… அதற்குள் ஆதி துர்காவைப் பிடித்து அவள் இதழில் முத்தம் வைத்தான்.

துர்காவுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் போக… ஆதி முத்தம் வைக்க, துர்கா விழிகள் படபடத்துக் கொண்டு, கண்களை அகல விரித்தவள், ஆதி முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க… அந்த முத்தத்தில் மூழ்கிப் போனவள் போல, தன்னையும் மறந்து கண்களை மூடி ஆதிக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.

துர்கா எதுவும் செய்யாமல் அமைதியாகத் தன் முத்தத்தை ஏற்றுக் கொள்ள…. ஆதிக்கு அப்படியே ரெக்கை கட்டிப் பறப்பது போல இருந்தது.

தான் ட்ரீட்மென்ட் எடுத்து வந்து பிறகு துர்காவுடன் ஒன்றாகச் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு, துர்காவுக்கு ஏற்பட்ட விபத்தில் அவள் பழைய ஞாபகங்களை மறந்து இருக்க… ஆதி தன்னுடைய ட்ரீட்மென்டை முழுவதுமாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டான்.

இன்னும் அவன் முகத்தில் தழும்புகளும், காயங்களும் முழுவதுமாகக் குணமாகாமல் இருக்க, துர்காவாக இருந்தால் தன்னை எப்படி இருந்தாலும் பொறுத்துக் கொள்வாள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால், தன்னையே மறந்திருக்கும் நிலையிலும் கூட, துர்காவுக்குத் தன்னுடைய குறைகள் ஒன்றும் பெரிதாகத் தோன்றாமல் அவள் தன்னை அப்படியே ஏற்றுக் கொண்டது ஆதியின் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

சாரிகாவாக மாறி இருந்த துர்காவுக்கு, தன் முகத்தில் இருக்கும் தழும்புகளையும் காயங்களையும் கண்டு பிறரைப் போலத் தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவாளோ என்ற பயம் ஆதியின் மனதில் நிறையவே இருந்தது.

ஆனால், அதுபோல எல்லாம் துர்கா இன்றுவரை நடந்து கொண்டதே இல்லை. அப்படி என்றால், அவள் ஆழ்மனதில் ஆதி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்தான்.

எந்தச் சூழ்நிலையிலும், எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களிலும் துர்காவை எப்போதும் கைவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டான் ஆதி.

துர்காவாகவும், சாரிகாவாகவும் இருக்கும் தன்னுடைய துர்காவுக்கு, தான் தூக்கி வைத்திருந்த காதலையும், ஆசையையும் இந்த முத்தத்தில் மூச்சுத் திணற வைக்க…

துர்காவுக்கு மூச்சு விட மிகவும் சிரமமாக இருக்க… துர்கா செய்வதறியாமல் ஆதியின் தோளில் வேகமாக அடிக்க…. இப்போதுதான், துர்காவுக்கு மூச்சு விடக்கூட இடைவெளி தராமல் அவள் இதழைத் தான் உயிர் வரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தான்.

துர்காவை விட மனமே இல்லாமல் அவளை விட்டுப் பிரிந்து தள்ளி நின்ற ஆதி வேகமூச்சு எடுக்க… துர்கா அவனை விட அதிகமாக வேகமாக மூச்சுக்கள் எடுத்தாள்.

துர்கா வேகவேகமாக மூச்சை இழுத்துக் கொண்டே ஆதியைப் பார்த்து, “நீ ரொம்ப ரொம்ப பேட் பாய். பாரு, எனக்கு மூச்சு விடவு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இப்படித்தான் யாராவது முத்தம் கொடுப்பாங்களா?” என்று கேட்டாள் துர்கா.

“என் பொண்டாட்டிக்கு எனக்குப் புடிச்ச மாதிரி நான் முத்தம் கொடுக்கிறேன். உனக்கு என்னடி வந்துச்சு?” என்றான் ஆதி.

ஆதி துர்காவைப் பார்த்து ‘என் பொண்டாட்டி’ என்று சொன்னதும், அவனைத் திட்ட வேண்டும் என்று நினைத்த துர்காவுக்கு அதற்கு மேல் எதுவும் பேசத் தோன்றாமல் வெட்கம் வந்து விட…

“புருஷன் பொண்டாட்டிக்கு இப்படித்தான் முத்தம் கொடுப்பானா?” என்று அவளிடமே திரும்ப கேள்வி கேட்டால் துர்கா.

“புருஷன் பொண்டாட்டிக்கு முத்தம் மட்டும் கொடுக்க மாட்டான். வேற எல்லாம் கொடுப்பான். அது உனக்குத் தெரியுமா?” என்றான் ஆதி.

“வேறயா… வேற என்ன கொடுப்பான்?” என்றால் துர்கா புரியாமல்.

“ஐயோ!! மக்கு! உன்னை வச்சுட்டு நான் என்னடி பண்றது?” என்றவன், “இங்கே வா” என்று அழைக்க…

துர்கா “ம்ஹும்….” என்று வேகமாகத் தலையாட்டி, “உன் பக்கத்துல வந்தா நீ மறுபடியும் பேட் பாயா மாறி எனக்கு இங்க முத்தம் கொடுப்ப. நான் வரமாட்டேன்” என்றால் துர்கா.

“ம்ப்ச்…. நான் எதுவும் உன்னை பண்ண மாட்டேன். என் பக்கத்தில் வா” என்று அவள் முகத்தருகில் ஆதி தன் முகத்தைக் கொண்டு போக… அவனை விட்டுத் தன் முகத்தைப் பின்னால் தள்ளி வைத்திருந்த துர்கா, ‘என்ன?’ என்பது போல அவன் அருகில் வர….

“புருசனும் பொண்டாட்டிக்கு முத்தம் மட்டும் இல்ல, அவளுக்குக் கொடுப்பதற்கு…” என்று சொல்லி அவள் காதிற்குள் சொல்ல நினைத்ததைச் சொல்ல…

ஆதி சொல்வதைக் கேட்டவளின் உடல் எல்லாம் கூசிப் போய்விட்டது. தன் தோளைப் பிடித்து அவள் காதருகில் சொல்லிக் கொண்டிருந்த ஆதியைப் பிடித்துத் தன்னிடமிருந்து பின்னே தள்ளி விட்டவள்.

“ச்சி… ச்சி… ச்சி…. நீ ரொம்ப மோசம்… அசிங்க அசிங்கமா பேசுற… போ…” என்ற துர்கா அவனைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள….

துர்கா பேசியதையும் அவள் முகத்தில் காட்டிய உணர்வுகளையும் பார்த்த ஆதிக்குச் சிரிப்புதான் வந்தது. அவளை ரசித்தவாறே…. “நான் ஒன்னும் மோசம் இல்லை. உனக்கு உடம்பு மட்டும் சரியாகட்டும், அப்புறம் இருக்கு” என்று சொன்னான் ஆதி.

“எனக்கு உடம்பு சரியானா என்ன?” என்று கேட்டால் துர்கா புரியாமல்.

“உனக்கு உடம்பு சரி ஆகி, நீ சீக்கிரம் எழுந்து நடந்த பிறகு, உனக்குப் பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து பிறகு, இப்ப நான் உன் காதுக்குள்ள என்ன எல்லாம் சொன்னேனோ, அதையெல்லாம் உன் கூடச் சேர்ந்து செய்யப் போறேன்” என்றான் ஆதி.

ஆதி அப்படிச் சொன்னதும் துர்கா அதிர்ச்சியாகி கண்ணையும் வாயையும் அகலமாகத் திறந்தவள், ஆதியைப் பார்த்து அப்படியே உறைந்து போய் இருக்க….

“என்ன? இதுக்கு ஷாக்கா? உன்கிட்ட நான் சொன்னது கொஞ்சம் தான். நீ முதல்ல சீக்கிரம் சரியாகி வா. அதுக்கு பிறகு உனக்கு இருக்கு” என்று ஆதி சொல்ல….

துர்கா முகத்தை அழுவது போல வைத்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கியவள். “போ…. எனக்கு உடம்பு சரியாகவே வேண்டாம். நான் எழுந்து நடக்க மாட்டேன். நீ என்னென்னவோ சொல்ற…. எனக்கு உன்னைப் பார்த்தாலே இப்போ ரொம்பப் பயமா இருக்கு. நீ என் பக்கத்துல வராதே” என்று சொல்லி ஆதியைப் பார்க்காமல் துர்கா திரும்பிக் கொள்ள…

“என்ன துர்கா இப்படி சொல்ற? உன்னை விட்டுப் போக சொன்னா நான் எங்க போவேன்? எனக்கு நீ வேணும்” என்றான் ஆதி.

“நீ எங்கேயாவது போ… எனக்கு நீ வேண்டாம்” என்றால் துர்கா.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நீ தான் என் பொண்டாட்டி. நான் தான் உன் புருஷன். எனக்கு நீ வேணும்.. உனக்கு நான் வேணும்… சரியா?” என்றான் ஆதி குறும்பாக.

“எனக்கு நீ வேண்டாம் போ. எனக்கு நீ சொல்றதெல்லாம் கேட்டா ரொம்பப் பயமா இருக்கு. ஆனா அதெல்லாம் உன்கூட முடியாது. போ….” என்றால் துர்கா அவனைப் பார்க்காமல்.

கட்டிலின் இந்தப் பக்கம் துர்காவின் அருகில் அமர்ந்து இருந்த ஆதி, துர்கா தன்னைப் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ள… அவன் அவள் முகத்தைத் திருப்ப முயற்சிக்க, துர்கா முகம் திருப்ப மாட்டேன் என்று உறுதியாக இருக்க…

அருகில் இருந்து எழுந்து கட்டிலின் மறுபக்கம் வந்த ஆதி. “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது செல்லக்குட்டி….” என்று சொல்லி அவள் முன்னே வர…

“நீ என் பக்கத்துல வராத. எனக்கு உன்னைப் பார்த்தாலே பயமா இருக்கு. நீ போ… முதல்ல இங்கிருந்து. நீ இப்ப போறியா? நான் என் அம்மாவை கூப்பிடவா?” என்றால் துர்கா.

“நீ இந்த வீட்ல யாரை வேணா கூப்பிட்டுக்கோ. ஆனா யார் வந்து உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினாலும், நான் சொன்னது தான் கூடிய சீக்கிரம் நடக்கும். அதுக்குத் தயாராக இரு” என்று மேலும் துர்காவை ஆதி பயமுறுத்த…

இதுவரை பயந்து இருந்த துர்கா, ஆதி விடாமல் துர்காவுக்கு வம்பிழுத்துக் கொண்டு பேச… துர்கா இப்போது உண்மையாகவே அழ ஆரம்பித்தாள்.

கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிய, அதைப் பார்த்த ஆதிக்குக் கஷ்டமாகப் போய்விட்டது.

அவளைச் சீண்டுவதாக நினைத்து உண்மையாகவே பயமுறுத்தி விட்டோமோ என்று நினைத்த ஆதி, துர்கா அருகில் வந்து துர்காவை சமாதானப்படுத்த முயல, துர்கா ஆதியைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

துர்கா சத்தம் போட்டு அழ ஆரம்பிக்க… ஆதி துர்காவிடம், “துர்கா அழாதடி ப்ளீஸ்… நான் சும்மா விளையாட்டுக்குத் தான் உன்னை அப்படி எல்லாம் பண்ணுவேன்னு சொன்னேன். அப்படி எல்லாம் நான் எதுவுமே பண்ண மாட்டேன் ப்ளீஸ் டி… அழாதே” என்று துர்காவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க…

“எனக்குப் பயமா இருக்கு. நான் உன் கூடப் பேச மாட்டேன். நீ என்கிட்டப் பொய் சொல்ற. இப்போ இப்படித்தான் சொல்லுவ. அப்புறம் மறுபடியும் இதே மாதிரி தான் பேசுவ. என் கூடப் பேசாத இப்போ” என்று அழுது கொண்டே துர்கா ஆதியின் முகத்தைப் பார்க்க மறுக்க…

அப்போது ஆதியைக் கீழே அழைப்பதாகச் சொல்லி கீர்த்திகா அவனை கூப்பிட அவர்கள் அறைக்கு வந்தவள், துர்கா அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு உள்ளே வந்த கீர்த்திகா, “ஐயோ.. மாமா! அக்காவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்போ அழறா?” என்று கேட்க.

“அதுவா? அது ஒண்ணும் இல்லம்மா. சும்மா நான் கூடப் பேசிட்டு இருந்தேன்” என்று ஆதி சொல்ல வர…

உடனே துர்கா குறுக்கிட்டு, “அவன் பொய் சொல்றான். நீ அவன் சொல்றத நம்பாத… அவன் நான் நினைச்ச மாதிரி நல்ல பையன் இல்ல. அவன் ரொம்பப் பேட் பாய், ரொம்பக் கெட்ட பையன். என்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?” என்று சொல்லி துர்கா ஆதி சொன்னதைச் சொல்ல வர…

எங்கே தான் துர்காவிடம் சொன்னதை எல்லாம் கீர்த்திகாவிடம் துர்கா சொல்லித் தன் மானத்தை வாங்கி விடுவாளோ என்று நினைத்த ஆதி. அவசரமாக துர்கா பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கே வந்த ஆதி, கீர்த்திகாவைப் பார்த்து, “கீர்த்திகா, அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவளை நான் பார்த்துக்கிறேன். ஆமா, நீ ஏன் இப்ப வந்த?” என்று கேட்டான்.

“மாமா, உங்கள பாக்க ஆபீஸ்ல இருந்து யாரோ வந்திருக்காங்க. அதற்காகத்தான் உங்களை கூப்பிட வந்தேன்” என்று கீர்த்திகா சொல்ல…

“சரி, நீ போமா. நான் வரேன்” என்று ஆதி கீர்த்திகாவை அந்த அறையில் இருந்து வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருக்க….

உடனே துர்கா கீர்த்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “கீர்த்திகா நீ என்னை விட்டுப் போகாத. எனக்கு இவனைப் பார்த்தா ரொம்பப் பயமா இருக்கு” என்று சொன்ன துர்கா. ஆதியைப் பார்த்து, “நீ போ… வெளியே உன்னைத்தான் யாரோ பார்க்க வந்திருக்காங்கன்னு கீர்த்திகா சொல்றல்ல…. நீ போ. நீ இங்க இருக்காத” என்று அவனைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தால் துர்கா.

கீர்த்திகாவும், “மாமா, நீங்க வேணா கீழ போய் வந்திருக்கிறவர்களைப் பாருங்க. நான் கொஞ்ச நேரம் துர்கா கூட இருக்கேன். அவ எதையோ நினைச்சு பயந்துட்டா போல” என்று கீர்த்திகா சொல்ல.

கீர்த்திகா சொன்னதைப் பார்த்த துர்கா, “ஆமா, நீ போ. எனக்குக் கிட்ட இவ கூட இருக்கத்தான் பயமா இருக்காது. நீ போ…” என்றால் மீண்டும் ஆதியிடம்.

ஆதிக்கு இப்போது வேறு வழியே இல்லை, கீழே போய்தான் ஆக வேண்டும். “சரி கீர்த்து, நான் போயிட்டு வந்துடறேன். நீ துர்காவை பத்திரமா பாத்துக்க… அவ கிட்ட நீ வேற எதுவும் கேட்டுடாத சரியா… அவ எது சொன்னாலும் நீ கேட்காத சரியா..” என்றான் ஆதி.

‘இந்த ஆதி மாமாவிற்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியாக ஆதி மாமா நடந்துக்கிறாங்க?’ என்று யோசித்த கீர்த்திகா, சரி என்று தலையாட்டினாள்.

கீர்த்திகாவைப் பார்த்துவிட்டு துர்கா அருகில் வந்த ஆதி, துர்காவின் முகத்தருகே குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி, “நான் உன்கிட்ட சொன்னது எல்லாம் எங்காவது கீர்த்திகா கிட்ட நீ சொன்னேன்னு எனக்குத் தெரிஞ்சது, நான் கீழே போயிட்டு வந்ததும் உன் காதில் என்னெல்லாம் சொன்னேன் என்றால், அது எல்லாம் செஞ்சிடுவேன், ஜாக்கிரதை” என்றும் மிரட்ட…

துர்கா அரண்டு போய் ஆதியைப் விழி விரியப் பார்த்தவள், எதுவும் பேசாமல் அப்படியே இருக்க…

பின் கீர்த்திகாவைப் பார்த்து, “நீ துர்காவைப் பார்த்துக்கோ. நான் வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு கீழே சென்றான்.

இந்த அறையை விட்டு வெளியே செல்லும் வரை ஆதியையே பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகா, ஆதி சென்று விட்டான் என்று தெரிந்ததும், தன் அருகில் இருந்த துர்காவை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

துர்கா திடீரென்று தன்னைக் கட்டிக்கொண்டு அழுவதைப் பார்த்த கீர்த்திகாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

துர்கா எதையோ நினைத்துப் பயப்படுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட கீர்த்திகா, அவள் முதுகை வருடி கொடுத்து அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

துர்காவைத் தன்னிடமிருந்து விலக்கிய கீர்த்திகா, துர்காவைப் பார்த்து, “அக்கா உனக்கு என்ன ஆச்சு? ஏன் திடீர்னு அழற… அதுவும் ஆதி மாமாவைப் பார்த்தா பயமாயிருக்குன்னு சொல்ற… என்ன ஆச்சு அக்கா? ஆதி மாமா உன்னை எதுவும் மிரட்டினாரா?” என்று கேட்டால் கீர்த்திகா.

“ஆமா, ஆதி இப்போ என்ன மிரட்டிட்டு தான் போனான்” என்று சொன்னால் துர்கா.

“மாமா உன்ன எதுக்கு மிரட்டினார்?” என்று கேட்டால் கீர்த்திகா.

“அதுவா, அது… நீ வந்து எனக்கு இப்படி டிரஸ் பண்ணி விட்டியா, ஆதி என்னை இப்படிப் பார்த்துட்டு, ‘நீ என்ன இப்படி அழகா ரெடி டிரஸ் பண்ணி விட்டதுக்கு ஆதியும் உனக்குக் கிஃப்ட் தரப் போறேன்’னு தான் சொன்னான். ஆதி அப்படிச் சொன்னதும் நான் கதிர் உன்னைத் தனியாகக் கூட்டிட்டுப் போய் கிஃப்ட் தரேன்னு சொன்னானா, அதை நான் ஆதி கிட்ட சொன்னேன்.”

“நான் அப்படிச் சொன்னதும் ஆதி என்கிட்ட வந்து…” என்று சொல்லி துர்கா, ஆதி தன்னிடம் நடந்து கொண்டதையும், தனக்கு முத்தம் கொடுத்ததையும், காதில் அவன் சொன்ன விஷயங்களையும் ஒன்று விடாமல் அனைத்தையும் கீர்த்திகாவிடம் கூறி விட…

துர்கா சொன்னதைக் கேட்ட கீர்த்திகாவுக்கு வெட்கம் பிடுங்கிக் கொண்டு வந்தது. நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருக்க, “அக்கா போதும் போதும்! நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாமே புரிஞ்சிடுச்சு. ப்ளீஸ் அக்கா பேசாதே” என்று கீர்த்திகா துர்காவிடம் கெஞ்ச, ஆனால் துர்கா அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், ஆதி சொன்ன ஒரு சின்ன விஷயத்தைக்கூட விடாமல் கீர்த்திகாவிடம் சொன்னாள்.

“ஐயோ… அக்கா போதும் நிறுத்து” என்று கீர்த்திகா துர்காவின் வாயை மூடியவள். “அக்கா நீ என்ன லூசா? ஆதி மாமா உன்னோட புருஷன் தானே? அவர் உன்னிடம் இப்படி எல்லாம் பேசாம வேற யார் பேசுவாங்க? இதைப் போய் நீ என்கிட்ட இப்படியே சொல்றியே” என்று சொல்லி கீர்த்திகா தன் தலையில் அடித்துக் கொள்ள.

“ஆதி என் புருஷன்தான். அதுக்காக இதெல்லாம் சொல்லனுமா? அம்மா (கனகா) என்கிட்ட குட் டச்… பேட் டச்… எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க. இவன் சும்மா இருக்காம இங்கே முத்தம் கொடுத்து, என்னை என்னென்னவோ செய்றேன்னு சொல்றான். எனக்கு அவனைப் பார்த்தாலே பயமா இருக்கு” என்று துர்கா முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு தேம்பி அழுதவாரே பேச…

கீர்த்திகா துர்காவின் கண்களைத் துடைத்து விட்டவள், “நீ அழாத அக்கா. நான் சொல்றதக் கொஞ்சம் கேளு” என்று சொன்னால் கீர்த்திகா.

துர்கா கீர்த்திகாவைப் பார்க்க, “நான் சொன்னா நீ கேட்பியா மாட்டியா?” என்றால் கீர்த்திகா.

“ம்ம்ம்ம்… சொல்லு. நான் கேட்டுக்குறேன்” என்றால் துர்கா.

“ஆதி மாமா உன் கிட்ட சொன்னது எதுவுமே தப்பு இல்லை. கல்யாணமான கணவன் மனைவிக்குள்ள இது எல்லாம் சகஜம் தான். அதுக்காக நீ இப்படிப் பயக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதி மாமா யாரு? உன்னோட புருஷன் தானே? அவருக்கு உன்கிட்ட எவ்வளவு உரிமை இருக்கோ, அதே போலத்தான் உனக்கும் ஆதி மாமா கிட்ட உரிமை இருக்கு.”

“உனக்குப் பயமா இருந்துச்சுன்னா, ஆதி மாமா கிட்ட ‘எனக்குப் பயமா இருக்கு, இது பிடிச்சிருக்கு, இது பிடிக்கலை’ன்னு நீ சொன்னா, மாமா புரிஞ்சுக்குவாங்க. அதுக்காக மாமாவைப் பிடிக்கல, வெளியே போ… அப்படின்னு எல்லாம் சொல்லக்கூடாது சரியா?” என்றால் கீர்த்திகா.

“நான் ‘எனக்குப் பிடிக்கலை’ன்னு சொன்னா, ஆதி என்ன எதுவும் பண்ண மாட்டேன் தானே?” என்றால் துர்கா.

“ம்ஹும்… நீ சொன்னா ஆதி மாமா என்ன வேணா செய்வார். நீ வேண்டாம் என்று சொன்னா, ஆதி மாமா எதுவுமே உன்ன செய்ய மாட்டார் சரியா?” என்றால் கீர்த்திகா.

“நிஜமாவா?” என்றால் துர்கா சிறுபிள்ளை போல.

“ஆமாக்கா. நீ வேணா ஆதி மாமா வந்து பிறகு, அவர்கிட்ட அழாம, பயப்படாம நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் சொல்லிப் பாரு. ஆதி மாமா நீ சொன்னதுக்கு ‘சரி’ன்னு சொல்லுவாரு” என்று கீர்த்திகா, “சரி நான் கீழே போறேன். நீ சமத்தா அழாம இருக்கணும் சரியா?” என்றால் கீர்த்திகா.

“என்னைத் தனியா விட்டுட்டு நீ கீழ போறியா? எனக்குப் பயமா இருக்கு கீர்த்திகா” என்றால் துர்கா பாவமாக.

“இது நம்ம வீடு. இது உன்னோட ரூம். இங்கே யாரு என்ன உன்ன ஒண்ணும் பண்ணிடப் போறாங்க? எதுக்கு இப்படிப் பயப்படுற? நம்ம ஆதி மாமா தானே? அவரு உன்னையே எதுவும் பண்ண மாட்டாரு. சரியா? நீ தைரியமாக இரு” என்று சொன்ன கீர்த்திகா கீழே செல்ல…

தன்னைப் பார்க்க வந்த ஆபீஸ் ஸ்டாப்பைப் பார்த்துவிட்டு ஆதி, எங்கே துர்கா தான் சொன்னதை எல்லாம் கீர்த்திகாவிடம் சொல்லி விடுவாளோ என்று பதட்டத்தில் அவசர அவசரமாகப் படிகளில் ஏறித் தன் அறைக்கு வந்து கொண்டிருக்க…

அவன் எதிரே வருவதைப் பார்த்த கீர்த்திகா, ஆதியைப் பார்த்ததும் வெட்கப்பட்டுக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள…

கீர்த்திகா வெட்கப்படுவதைப் பார்த்ததுமே ஆதிக்குப் புரிந்து விட்டது, துர்கா அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாள் என்று.

ஆதி என்ன செய்வது என்று தெரியாமல் சங்கடத்துடன் மேலே ஏறி கீர்த்திகாவைத் தாண்டிச் செல்லப் போக….

“மாமா ஒரு நிமிஷம்” என்று சொல்லி கீர்த்திகா ஆதியை நிறுத்தினாள். அவள் அழைத்ததும் அப்படியே நின்று ஆதி, கீர்த்திகாவைத் திருப்பிப் பார்க்காமல், “என்ன கீர்த்து?” என்றான்.

“மாமா, நீங்க துர்கா மேல ரொம்ப ஆசையா இருக்கீங்கன்னு தெரியுது. அதுக்காக இப்படி எல்லாம் உன்கிட்ட பேசி அவளைப் பயமுறுத்தாதீங்க. அப்புறம் உங்க பக்கத்துலயே அவ வரமாட்டா. நான் ஏதோ எனக்குத் தெரிஞ்சது சொல்லி அவளைச் சமாதானமும் செஞ்சு வச்சு இருக்கேன். நீங்க கொஞ்சம் துர்கா கிட்டே பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்க…

ஆதிக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. தர்ம சங்கடமாக கீர்த்திகாவை ஆதி பார்க்க…

ஆதியின் முகத்தைப் பார்த்த கீர்த்திகாவுக்குச் சிரிப்பு வந்துவிட, வெட்கப்பட்டுக் கொண்டே அவள் கீழே ஓடிவிட்டாள்.

தன்னை நினைத்து நொந்து கொண்டவன், வேகமாகத் தன் அறைக்குச் சென்றவன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர…

கதவைத் திறந்து ஆதி உள்ளே வந்ததும், துர்கா பயந்த முகத்தோடு ஆதியைப் பார்க்க…

முதலில் லேசாக அவள் மீது கோபம் வந்தாலும், ஆனால் அவளுடைய இப்போதைய மனநிலையைப் புரிந்து கொண்ட ஆதி, துர்காவிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவள் அருகில் சென்றவன், துர்காவின் கையைப் பிடித்து, “சாரி துர்கா. நான் உன்கிட்ட விளையாட்டு தனமாத் தான் அதெல்லாம் சொன்னேன். ஆனா அது உன்னை இந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கும் என்று நான் நினைக்கல” என்று சொல்லி ஆதி துர்காவிடம் மன்னிப்பு கேட்க…

துர்கா எதுவும் பேசாமல் ஆதியைப் பார்க்க…

“துர்கா… சாரி டி…. என்னை மன்னிச்சிடுடி …” என்றான் ஆதி.

“நான் உன்னை மன்னிச்சிடுறேன். இனிமேல் நீ என்கிட்ட அப்படி எல்லாம் பேச மாட்டேன் தானே?” என்றால் துர்கா.

“ம்ஹும்… அதெல்லாம் இனிமேல் உன்கிட்ட நான் பேசவே மாட்டேன்” என்று தன் தலையை ஆதி உறுதியாக ஆட்ட…

“சத்தியமா?” என்று கேட்டுக் கொண்டே அவன் முன் தன் கையை நீட்ட..

“சத்தியமா, இனிமேல் அந்த மாதிரி எல்லாம் உன்கிட்ட நான் பேசமாட்டேன்” என்று சொல்லி அவள் கையில் அடித்து ஆதி சத்தியம் செய்தான்..

ஆதி சத்தியம் செய்ததும் தான் துர்காவுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.

அவன் இப்போதைக்குத் தான் அவளைச் சமாதானம் செய்யச் சத்தியம் செய்து இருக்கிறான். ஆனால் போகப் போக, துர்காவை என்ன பாடு படுத்தப் போகிறானோ…

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured