Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 179

உன் ரகசிய ரசிகை நான் 179

by Layas Tamil Novel
176 views

EPISODE 179

கேன்டீனில் லேகாவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாதவியைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற போதி, நேராகத் தன் அலுவலக அறைக்குள் (ஆபீஸ் ரூம்) வந்து அவளை உள்ளே விட்டு கதவைச் சாற்றியவன்.

“மேடம்க்கு ஒரு வாரமா என்ன பாக்கலைன்னு கஷ்டமா இல்லையோ? உங்க ஃபிரண்டு கூட சேர்ந்து ஜாலியா ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்கீங்க” என்று கேட்டான்.

அவன் தன்மீது இதற்காகத்தான் கோபமாக இருக்கிறான் என்று புரிந்துகொண்ட மாதவி, வேண்டுமென்றே அவனை வம்பு இழுக்க…

“நான் எதுக்குக் கஷ்டப்படணும்? உங்களுக்கு என் மீது இல்லாத அக்கறை எனக்கு எதுக்கு வரணும்? நீங்க என்னைப் பார்க்க ஒரு வாரமா வரல. அதுக்காக நான் அழுது வடிஞ்சிட்டு சோகமா இருக்கணுமா? என் ஃப்ரெண்டு கூட நான் ஜாலியா ரசிக்கக் (என்ஜாய் பண்ண) கூடாதா என்ன?” என்று கேட்டாள் மாதவி.

அவளுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே பாக்கெட்டில் இருந்து போதியின் போன் இன்னும் விடாமல் அடித்துக் கொண்டு இருக்க…

“இது வேற நேரம் காலம் தெரியாம அடிச்சிட்டு இருக்கு” என்று கடுப்பானவன் தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அட்டென்ட் செய்தவன் மாதவியை முறைத்துக் கொண்டே “ஹலோ…” என்று சொல்ல… அவன் பேசியது அவனுக்கே எதிரொலித்தது.

தன் காதில் இருந்த போனை எடுத்து மீண்டும் தனக்கு வந்த நம்பரைப் பார்த்தவன், திரும்பவும் காதில் வைத்து “ஹலோ…” என்று சொல்ல… மீண்டும் அவன் குரல் அவனுக்கு எதிரொலிக்க… புரியாமல் தன் எதிரில் நின்று இருந்த மாதவியைப் பார்த்தான்.

ஒரு கையில் போனும் மற்றொரு கையில் ஐஸ்கிரீமும் வைத்துக்கொண்டு அவனை முறைத்துப் படி நின்றிருந்த மாதவி. தன் கையில் இருந்த போனை காட்டி, “என்னோட நம்பர் தான் அது” என்று அவன் போனில் வந்த நம்பரை சுட்டிக்காட்டிச் சொன்னால்.

அப்போதுதான் போதிக்கு உரைத்தது. ‘நான் மாதவியைப் பார்க்க வரும் முன்பே அவள் தன்னிடம் பேசத்தான் போனில் அழைத்து இருக்கிறாள். அது தெரியாமல் போனை அட்டென்ட் செய்யாமல் இவளிடம் கோபித்துக் கொண்டோமே’ என்று தயக்கத்தோடு போதி மாதவியைப் பார்க்க…

அவனை முறைத்த மாதவி தன் கையில் இருந்த ஐஸ்கிரீமை வாயில் வைத்துச் சுவைத்தவாறு போதியைப் பார்க்க… அவள் தன் உதடுகளால் சப்பி ஐஸ்கிரீமை சாப்பிடுவதைப் பார்த்த போதிக்கு உடலில் ஏதேதோ உணர்வுகள் தோன்ற, எச்சில் விழுங்கியவாரே மாதவியைப் பார்க்க…

அவள் வேண்டுமென்றே அவன் முன்பு கையில் இருந்த ஐஸ்கிரீமை ருசித்தவள், அவள் உதடுகளில் ஒட்டி இருந்த ஐஸ்கிரீமைத் தன் நாக்கால் அவள் உதட்டை வருடியவாரே அவனைப் பார்க்க..

அவள் செயலில் இருந்த கோபம் எல்லாம் வடிந்த போதி. மாதவி சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஐஸ்கிரீம் கோனையும் அவள் உதட்டையும் மாறி மாறி ஏக்கத்தோடு பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த மாதவி அதைப் பொருட்படுத்தாமல் தன் உதட்டிற்கு அருகில் ஐஸ்கிரீமைக் கொண்டு சென்றவள், அதைச் சாப்பிடாமல் அவனைப் பார்த்து. தன் உதட்டிற்கு அருகில் ஐஸ்கிரீமை வைத்துக்கொண்டு, “வேண்டுமா?” என்று இரட்டை அர்த்தத்தில் அவனிடம் கேட்டாள்.

அவன் “வேண்டாம்” என்று ஏதோ யோசனையில் தலையை ஆட்ட…

“வேணாமா?” என்றவள், “அப்போ சரி, உனக்குக் கொடுத்து வெச்சது அவ்ளோதான். இந்த ஐஸ்கிரீம் எப்படி சுவையாக (டேட் ஆஹ்) இருக்கு தெரியுமா?” என்று சொல்லி மீண்டும் ஐஸ்கிரீமைச் சுவைக்க..

‘நான் ஒரு பேச்சுக்கு வேணாம்னு சொன்னா, மறுபடியும் வேணுமான்னு ஒரு வார்த்தை கேக்குறாளா பாரு’ என்று அவளை முறைத்தவன். அவள் ஐஸ்கிரீம் சுவைக்கும் உதட்டை ஏக்கத்தோடு பார்த்தாப்பாடியே மாதவியின் அருகில் நெருங்கி வந்தவன் அவள் கையில் இருந்த ஐஸ்கிரீமைக் வெடுக்கென்று இழுக்க…

அவள் உதட்டில் ஐஸ்கிரீம் அப்பிக் கொண்டு இருக்க… அதைத் துடைக்கச் சென்ற மாதவியின் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டவன், அவளைத் தன் அருகில் இழுத்து அவள் உதட்டில் ஒட்டி இருந்த ஐஸ்கிரீமைத் தன் நாவினால் சுவைத்தான்.

அவன் தன் கையில் இருந்த ஐஸ்கிரீமைத் தான் பிடுங்கிக் கொள்வான், அலுவலகத்தில் வைத்துத் தன்னிடம் எல்லை மீற மாட்டான் என்று நினைத்து போதியை மாதவி வெறுப்பேற்றி இருக்க… ஆனால் அவனோ எதைப் பற்றியும் யோசிப்பவன் கிடையாது என்று இபொழுது தான் அவளுக்குப் புரிந்தது.

அவன் பிடித்து இருந்த தன் கையை அவனிடம் இருந்து வேகமாக எடுத்துக்கொண்டவள், போதியை விட்டு இரண்டு அடி தள்ளி நின்றவள். அவனைச் செல்லமாக முறைத்துவிட்டு, “என்ன பண்ணிட்டு இருக்க தி…” என்றாள்.

“பார்த்தா தெரியலையா? நீதானே ஐஸ்கிரீம் வேணுமான்னு கெட்ட… அதான் ஐஸ்கிரீம் சுவை (டேஸ்ட்) எப்படி இருக்குன்னு பார்த்தேன் வி…” என்றான் போதி.

“ஐஸ்கிரீம் சுவைத்துப் பார்க்கணும்னா என் கையில் இருக்கு கோனைச் சுவைக்க வேண்டும். என் வாயை இல்லை” என்றவள் அவள் உதட்டைத் துடைக்கப் போக.. அவள் உதட்டில் இன்னமும் ஐஸ்கிரீம் மீதம் ஒட்டி இருக்க.. அதை மாதவி துடைக்கப் போகவும் பதறிய போதி அவசரமாக அவள் அருகில் வந்து அவள் கையைப் பிடித்தவன்.

“எதுக்கு இப்படி அவசரப் படுறேன் வி…” என்றவன். “அதுக்குத் தான் நான் இருக்கிறேன்” என்று அவள் இதழ் நோக்கி குனிய…

அவன் என்ன செய்யப் போகிறான் என்று உணர்ந்தவள் அவனை விட்டுப் பின்னால் தன் முகத்தை இழுத்துக் கொள்ள… “இது எல்லாம் எங்களுக்குச் சாதாரணம்” என்பது போலத் தன் மற்றொரு கையால் அவள் பின் கழுத்தைப் பிடித்துத் தன் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தவன்.

அவன் கண்களைப் பார்த்து, “சும்மா இருந்த என்னை, ‘ஐஸ்கிரீம் சாப்பிடுறேண்’னு சொல்லி உசுப்பேற்றி விட்டுட்டே… இப்படி என்னை உன் உதட்டில் இருக்கும் ஐஸ்கிரீமை ருசி பார்க்க விடாமல் என்னை தடுத்தால் எப்படி?” என்று கண்ணடித்தவன்.

அவள் உதட்டில் இருந்த ஐஸ்கிரீமைத் தன் நாக்கு கொண்டு சுவைக்க… அவன் சீண்டலின் ஈரத்துடன் இருந்த நாக்கு, அவள் குழுமையான உதட்டை வருடவும் மாதவியின் கண்கள் தானாக மூடிக் கொண்டது அவன் தீண்டலில்.

அவள் கண்கள் மூடி அவன் முன்பு நின்று இருந்தவளை ரசித்துக் கொண்டே அவள் இதழைச் சுவைக்க ஆரம்பித்தான். மெல்ல மெல்ல இருவரும் முத்தத்தில் மூழ்கி விட… தங்களை மறந்து அலுவலக அறை என்பதையும் மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டு முத்தமிட்டுக் கொண்டு இருக்க…

அப்போது திடீர் என்று கதவைத் திறந்து கொண்டு வந்த மித்ரன் இவர்கள் இருவரும் நின்று இருந்த நிலையைப் பார்த்து அப்படியே உறைந்து நின்று இருக்க…

அவன் பின்னால் மித்ரன்னைத் திட்டிக் கொண்டே வந்த ரதி. மித்ரன் போதியின் அறைக் கதவைத் திறந்துபடி நின்று இருக்க, அதைக் கவனிக்காமல் அவன் மீது ரதி மோதிவிட…

அவனை இடித்த வேகத்தில் தலையில் முட்டிக் கொண்டவளுக்கு மித்ரன்னின் திடகத்திரமான தோளில் இடித்ததில் வலிக்கவே.. “ஷ்…” என்று தலையைத் தேய்த்துக் கொண்டே அவனைப் பார்க்க..

அவளைத் திட்டுவதற்காகத் திரும்பிய மித்ரன், ரதி அவன் பின்னால் மிகவும் நெருக்கமாக நின்று இருக்க… திரும்பிய வேகத்தில் அவள் மேல் இடிக்கப் போனவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு நின்றவன்.

பின்னால் விழப் போன ரதியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்த… அவனிடம் ஏதோ ரதி பேச வர… அவள் உதட்டில் தன் விரலை வைத்து “ஷ்…” என்று சொன்னவன் மெதுவாகத் திரும்பி போதியின் அறைக்குள் போதியும், மாதவியும் இருக்கும் நிலையை காட்ட..

அவர்கள் இருவரும் தாங்கள் வந்து நின்றது கூடத் தெரியாமல், அதை எல்லாம் மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தவர்களைப் பார்த்து அதிர்ந்தவள். “இருங்க, இவங்க ரெண்டு பேரும் ஆபீஸ்ன்னு கூடப் பார்க்காம வந்து என்ன பண்ணிட்டு இருக்காங்க?” என்று மித்ரன்னைத் தாண்டி உள்ளே செல்லப் போக..

அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போதியின் அறையின் கதவைச் சாற்றிவிட்டு ரதியுடன் வெளியே வர… அவனிடம் “ஏன் மித்ரன் என்னை தடுத்தீங்க? அவங்க ரெண்டு பேரும் நாம வந்தது கூடத் தெரியாம என்ன பண்ணிட்டு இருக்காங்க பாருங்க” என்று ரதி அவனிடம் இருந்து திமிரிக்கொண்டு மீண்டும உள்ளே செல்லப் போக..

அவள் கையைப் பிடித்து நிறுத்த முடியாமல் மித்ரன் ரதியின் இடுப்பில் கை கொடுத்து அவளை இழுத்துத் தன் அருகில் சேர்த்து நிறுத்திக் கொண்டு, “உனக்குப் பினாயில் ஜூஸ் குடிக்கணும்னு ஆசையா?” என்றான் மித்ரன்.

அவன் கைப்பிடிக்குள் அவன் பரந்து விரிந்த மார்பு ரதியின் முதுகை உரசிக் கொண்டு நின்றவளுக்கு முதுகு தண்டு சில்லிட… அவனை விட்டு விலகி நின்றவள், “பினாயில் ஜூஸா?” என்று அதிர்ச்சியாக மித்ரன்னைப் பார்க்க..

“ஏற்கனவே உன் மாமாவோட காதலுக்கு (லவ்வுக்கு) நான் இடைஞ்சலா இருக்குறதா நினைச்சுட்டு, அவனோட ஃபேன்ஸ் எல்லாம் சேர்ந்து எனக்குப் பினாயில் ஜூஸ் கொடுத்து நான் பட்ட அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்.”

“இப்போ மட்டும் நீ போய் போதியையும் மாதவியும் காதல் செய்வதை (ரொமான்ஸ் பன்றதை) தொந்தரவு (டிஸ்டர்ப்) பண்ணுனேன்னு வை.. அடுத்த அத்தியாயத்தில் (எபிசொட்ல) உனக்குப் பினாயில் ஜூஸ் காத்திருக்கும். அதை அவங்க கையாலேயே கொண்டு வந்து உனக்கும் எனக்கும் ஊற்றி விடுவாங்க” என்றான்.

“அப்படி யாரு எனக்கு அந்தப் பினாயில் ஜூஸ் கொடுக்குறாங்கன்னு நான் பாக்குறேன்” என்று சொல்லி மீண்டும் ரதி உள்ளே செல்லப் போக.. அவளை மறுபடியும் இழுத்துத் தன் கை வளைவிற்குள் நிறுத்தி வைத்தவன். அவனைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தவன், “பேசாம இரு ரதி! அந்த கீதா, ப்ரீத்தி, பாரதி மூணு பேரும் நமக்குத் தெரியாம இங்க தான் எங்கயோ இருக்காங்கனு எனக்குத் தோணுது.”

“நீ பேசாம என் கூடக் கிளம்பி வா” என்றவன் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போய்க் காரில் அமர வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டவன். கார் கதவைச் சாற்றிவிட்டு, அவளைத் தழுவிய தன் கையையும். அவள் உதட்டில் வைத்த தன் விரலை வருடிப் பார்த்தவன் பெருமூச்சை விட்டவன், சுற்றி வந்து காரில் ஏறி அமர்ந்தவன்.

தன் அருகில் அமர்ந்து இருந்த ரதியைப் பார்க்க… அவளோ மித்ரன் இவளைத் தூக்கி வந்து தன்னை காரில் அமர்த்தியதும். அவளுக்கு சீட் பெல்ட் மாட்டி விடும் போது அவள் மீது உரசிய அவன் திடகத்திரமான தோளையும் நினைத்தவள். தனக்கு சீட் பெல்ட்டைப் போட்டு விட்டு எழுந்தவனின் மூச்சுக்காற்று அவள் முகத்தை உரசிக் கொண்டு சென்றத்தில் உறைந்து போய் அப்படியே சிலை போல அமர்ந்து இருந்தாள்.

அவளைப் பார்த்த மித்ரன் ரதியின் இதழைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவன் அவள் தோளில் கைவைத்து அவளை உலுக்க.. அப்போது தான் நினைவு வந்தவள் போல அவனப் பார்த்தவள் பின் மித்ரன்னைப் பார்ப்பதைத் தவிர்த்தவள் தன் உதடு வறண்டு விட, அதைத் தன் நாவால் ஈரம் செய்த படி திரும்பிக் கொள்ள..

அவள் ஈரமான ரோஸ் நிற இதழை ஏக்கத்தோடு பார்த்தவன். உள்ளே போதி மாதவிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து விட்டு வந்தவனுக்கு ரதியின் இதழைப் பார்த்து ஏக்கம் கொண்டவன்.

“ம்ஹும்… பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான். எனக்குக் கடைசி வரை இப்படி சிங்கிலாவே இருந்திருவேன் போல இருக்கே” என்று நினைத்தவாறே காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்.


ஷிவுவைப் பெண் கேட்டு ரூபேஷும் அவன் அம்மாவும் கையில் வெற்றிலை பாக்குத் தட்டுகளோடு அவள் வீட்டிற்கு வந்து இருக்க… இதைச் சற்றும் எதிர்பாராத துரைக்குத் தான் வீடு தேடி வந்திருந்தவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார்.

ஏற்கனவே ஷிவு ஒருவனைக் காதலிப்பதாகக் கூறியிருக்க… அவர்கள் வந்து பெண் கேட்டது அதிர்ச்சியாக இல்லை என்றாலும். ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் ராதாவிற்குத் திருமணம் ஆகி இருக்க… அவளுக்கு என்ன தான் ஆதியும், வெங்கடாச்சலமும் சீர்வரிசைகள் செய்திருந்தாலும்.

துரையும் தன் மகளுக்குத் தானே செய்ய வேண்டும் என்று. ஊரில் இருந்த நிலத்தை விற்று ராதாவிற்கு குறை இல்லாமல் சீர்வரிசை செய்திருந்தார். அதே போல ஷிவுவிற்கும் சீர்வரிசை செய்ய வேண்டும் என்றால், ஊரில் இருக்கும் தன்னுடைய மற்றொரு நிலத்தை விற்றுத் தான் செய்ய வேண்டும். அதற்கு எப்படியும் நேரம் பிடிக்குமே என்று யோசனையில் அமர்ந்து இருந்தார்.

ஷிவு ரூபேஷின் அம்மா வருவதை ஏற்கனவே ஆதியிடம் சொல்லியிருந்தாள். அவனும் துர்காவை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்து இருக்க…

துர்கா குணம் ஆனதில் இருந்து இப்போது தான் ஆதியுடன் இங்கே வருகிறாள். அவளைப் பார்த்ததும் அனைவர்க்கும் சந்தோஷம் ஆகி விட… நேராக உள்ளே வந்ததும் துர்கா, கனகாவும், விசாலாட்சியும் நின்று இருந்த இடத்திற்கு வந்தவள் அவர்கள் இருவரையும் இடித்துக்கொண்டு இருவருக்கும் நடுவில் போய் நின்று கொண்டாள்.

துர்காவைப் பார்த்துச் சிரித்தவாறே ஆதி சென்று சோபாவில் அமர… அவர்கள் இருவரும் பார்வையாலே பேசிக் கொள்வதைக் கவனித்த விசாலாட்சி துர்காவை இடித்து… “என்ன டி மருமகளே… என் மகனை உன் கைக்குள்ளே போட்டுக்கிட்டே போல இருக்கே?” என்று மெதுவாகக் கேட்க..

“உங்க மகனை நான் கைக்குள்ளே போட்டுக்கலை அத்தை. என்னோட முந்தானையிலேயே முடிஞ்சு வெச்சுகிட்டேன்” என்றாள் துர்கா வெட்கப்படுக் கொண்டே.

அவள் சொன்னதைக் கேட்டு விசாலாட்சியும், கனகாவும், “என்ன டி சொல்ற? அப்படியா!!!” என்று வாயைப் பிளக்க..

“அதைப் பிறகு பேசிக்கலாம். முதல்ல வந்து இருக்கவங்க என்ன சொல்றங்கன்னு கேளுங்க” என்று தன்னைப் பார்த்துக்கொண்டு இருந்த அவர்கள் இருவர் கன்னத்தையும் பிடித்து எதிரே இருப்பவர்களைப் பார்க்குமாறு திருப்பினாள்.

துர்காவின் செய்கையில் சிரித்தவர்கள் ஷிவுவின் திருமணம் குறித்து என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று கேட்க ஆவலாக இருக்க..

பதட்டத்தோடு துரையின் அருகில் அமர்ந்து இருந்த ஷிவுவைப் பார்த்து ஆதி, “நீ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறியா ஷிவு?” என்றான்.

அவள் ரூபேஷ்ஷை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் ஆதியைப் பார்த்து, “சம்மதம் மாமா” என்றாள்.

துரை ஷிவுவைப் பார்த்து, “உனக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் இந்தக் கல்யாணத்துல சம்மதம் தான் ஷிவு. ஆனா….” என்று அவர் நிறுத்த..

ரூபேஷின் அம்மா, “எதுவா இருந்தாலும் நீங்க வெளிப்படையா எங்க கிட்டே சொல்லுங்க” என்றார்.

“அது வந்து என்னோட சின்ன பொண்ணுக்குத் திடீர்னு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய சூழல் வந்திருச்சு..”

“அவ கல்யாணத்துக்கே இப்போ தான் நாங்க சீர்வரிசை செய்தோம். அதனால உடனே என்னோட பெரிய பொண்ணுக்குக் கல்யாணம் என்று சொன்னால் என் சின்ன பொண்ணு ராதாவிற்கு செய்த அதே சீர்வாரிசைகளைத் துளியும் குறை இல்லாமல் செய்யணும். அதுக்கு எப்படியும் கொஞ்சம் நாள் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்” என்று சொல்ல.

உடனே சோபாவில் அமர்ந்து இருந்த ரூபேஷ் எழுந்தவன். “அதன் அவங்க சொல்லிட்டாங்களே அம்மா! அப்போ எப்போ அவங்க பொண்ணுக்கு எப்போ அவங்களால சீர்வரிசை செய்ய முடியுமோ, அப்போவே அவங்க பொண்ணை நான் கல்யாணம் பணிகிறேன்” என்றவன் அவன் அம்மாவைப் ‘போகலாம்’ என்று அழைக்க..

துரைக்கு ரூபேஷின் இந்த முதிர்ச்சியற்ற பேச்சு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஷிவுவைப் பார்த்து, “இவன் உனக்குத் தேவையா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கேட்க…

‘என்ன செய்வது அப்பா? அவன் பிள்ளை என் வயிற்றில் இப்போது நான்கு மாதம். எனக்கு அவனைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை தான். ஆனால் என் வயிற்றில் வளரும் என் பிள்ளைக்காக நான் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்’ என்று தன் மனதில் நினைத்தவள் அவரை வழி நிறைந்த பார்வையால் பார்த்தாள்.

இதற்கு மேலும் தன் மகளை எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு எடுத்தவர். எழுந்து ரூபேஷ்ஷிடம் வந்து, “தம்பி, நீங்களும் என் பொண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பி தானே இந்தக் கல்யாணத்துக்குப் பொண்ணு கேட்டு வந்தீங்க. ஆனா இப்போ சீர்வரிசை செய்ய நேரம் வேணும்னு சொன்னதும் இப்படி யாரோ மூவது மனுஷன் மாதிரி பேசினா எப்படி?” என்று கேட்டார்.

அவர் பேசியதைக் கேட்ட ரூபேஷ் துரையிடம் பேச வர… அவன் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் அமர வைத்த அவன் அம்மா. “அவன் அப்பாடிதான் சம்மந்தி. எதுவும் புரியாமல் பேசுவான்.”

“நான் அவன் கிட்டே பேசிக்கிறேன். என் மருமகளை நான் என் வீட்டுக்குச் சீக்கிரமா கூட்டிட்டுப் போகணும். அதனால நீங்க சீர்வரிசை எல்லாம் மெதுவா செய்யுங்க. அடுத்த வாரமே ரெண்டு பேருக்கும் திருமணத்தை வெச்சுக்கலாம்” என்று சொன்னார்.

அவர் பேசுவதைக் கேட்ட ரூபேஷ், “அம்மா… என்ன சொல்றிங்க.. என்கிட்டே நீங்க என்ன சொல்லி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கினீங்க… ஆனா இங்கே வந்ததும் அதை பற்றி எதுவும் பேசாமல் இருக்கீங்க” என்று ரூபேஷ் அவன் அம்மாவிடம் கோபமாகக் கேட்க..

அவன் நடந்துகொள்ளும் விதம் அங்கு இருந்த யாருக்கும் பிடிக்கவே இல்லை. இருந்தும் ஷிவு ரூபேஷ்ஷை விரும்புகிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அனைவரும் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தனர்.

ரூபேஷ் பேசுவதைக் கேட்டு இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த துர்கா முன்னாள் வந்து, “ஒரு நிமிஷம்” என்றாள் ஆதியை ஒருமுறை பார்த்துவிட்டு ரூபேஷ்ஷிடம் திரும்பியவள்.

“நான் உங்க கிட்டே கொஞ்சம் தனியாகப் பேசலாமா?” என்றாள்.

அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ரூபேஷ். “என்னங்க இது புது வழக்கமா இருக்கு.. வழக்கமா பொண்ணையும் மாப்பிள்ளையையும் தான் தனியா பேச சொல்லி அனுப்பி வைப்பாங்க. ஆனா இங்கே என்னடான்னா பொண்ணோட அக்கா என்கிட்டே தனியா பேசணும்னு சொல்றாங்க” என்றான் நக்கலாக.

அவன் பேசியதில் ஆதிக்குக் கோவம் வர… சோபாவில் அமர்ந்து இருந்தவன் துர்காவைப் பார்த்துக்கொண்டு எழுந்திருக்கப் போக… துர்கா அவனைப் பார்வையாலேயே ‘இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவனை அமைதிப்படுத்த… ஆதி ‘சரி’ என்பது போல மீண்டும் சோபாவில் அமர்ந்தவன் ரூபேஷ்ஷை முறைத்துப் பார்க்க..

ரூபேஷ்ஷிடம் வந்த துர்கா, “பொண்ணு கூடத் தான் நீங்க வேண்டிய அளவுக்குப் பேசி அவளைப் பேச விடாமல் வாயை அடைத்து வைத்து இருக்கிறீர்களே..” என்றவள்.

“உள்ளே வருகிறீர்களா இல்லை இங்கேயே பேசலாமா?” என்றாள் கையைக் கட்டிக்கொண்டு அவன் முன் மிடுக்காக நின்று கொண்டு.

துர்கா பேசிய தோரணையிலேயே அவள் பேச்சிற்கு கடுப்பானவன் போல “சரி” என்று தலை ஆட்டி அவளுடைன் செல்லப் போக.. முன்னே நடந்த துர்கா ஷிவுவைப் பார்த்து, “நீயும் என்கூட வா ஷிவு” என்று அழைத்தாள்.

ஷிவு, தன் அக்காவுக்குத் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து விட்டது என்று அவள் ரூபேஷ்ஷிடம் பேசியதை வைத்தே புரிந்துகொண்ட ஷிவு ஆதியைப் பார்க்க… அவன் கண்களை மூடி திறந்து, “போய் வா. எதுவும் பயப்படாதே” என்று அவளுக்கு ஆறுதல் கூற…

அவள் அப்பாவைப் பார்த்து விட்டு எழுந்து அவர்கள் பின்னால் எழுந்து சென்றாள்.


அலுவலகம் முடிந்ததும் மதுவை வெளியில் அழைத்துச் செல்வதாக பவன் ஏற்கனவே சொல்லியிருந்தான். அதனால் வேலை முடிந்ததும் அவள் கேபினில் மாத்திரம் காத்திருக்க…

தன் வேலையை எல்லாம் முடித்து விட்டு மிகவும் தாமதமாகத் தான் பவன் மதுவைத் தேடி வந்தான். மதுவின் கேபினுக்கு வந்தவன் மதுவை அழைக்க வர… அவள் நாற்காலியில் அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டு இருந்தால்.

மது வேலை செய்த களைப்பில் தன்னையும் மறந்து அலுவலகத்திலேயே தூங்கிருக்க… அவளைப் பார்த்த பவன்னுக்குப் பாவமாக இருந்தது. அவளை எழுப்ப மனமில்லாமல் அவள் எதிரில் இருந்த நாற்காலி எடுத்துப் போட்டு, மேஜையில் கையை வைத்து கன்னத்தில் ஊன்றியவாறு மது தூங்கும் அழகை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

மது தூங்கிக் கொண்டிருக்க மின்விசிறிக் காற்றில் அவள் கூந்தல் கலையவும், அதை லேசாக அவள் காதின் ஓரம் ஒதுக்கி விட்டான். அவன் விரல் அவள் முகத்தில் உரசவும் மது தூக்கம் கலைந்து கண்விழிக்க, அவள் எதிரில் அவளைப் போலவே மேஜையில் சாய்ந்தவாறு படுத்து பவன் மதுவைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

வேகமாக மேஜையில் படுத்திருந்த பவன் எழுந்து அவளைப் பார்க்க…

“ஏன் மது, அதுக்குள்ள எந்திரிச்சிட்ட? கொஞ்ச நேரம் தூங்கு, அவசரம் இல்லை” என்று சொன்னான் பவன்.

“இல்ல பவன், நீ வர நேரம் ஆனதும். சும்மா அப்படியே படுத்திருக்கலாம்னு நெனச்சு தான் டேபிளில் சாய்ந்தேன். ஆனா என்னையே அறியாமல் தூங்கிட்டேன்” என்றால் மது.

“அதனால என்ன மது? அசதியாக இருந்தாள் தூக்கம் வந்தா தூங்க வேண்டியதுதான்” என்றவன்.

“சரி, நம்ம கிளம்பலாமா? நேரமாயிடுச்சு” என்று சொல்ல, “சரி” என்று தலையாட்டியவள் தன் பையை எடுத்துக்கொண்டு பவனுடன் வெளியே சென்றாள்.

You may also like

1 comment

S.joshna December 8, 2025 - 10:07 am

Wow 😯 inaki episode super 😍

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured