EPISODE 191
காலையில் எழுந்திருக்கும்போதே தான் மெத்தையில் படுத்து இருந்ததை பார்த்தவள்.
இது எல்லாம் ரூபேஷின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்தவள் நேராக எழுந்து சோபாவில் படுத்து இருந்தவனை எழுப்பி. என்னை தூக்கி கொண்டு போய் சோபாவில் படுக்க வைத்தால். என் மனசு மாறிடுவேன்னு நினைக்குறியா என்றவள்.
இனிமேல் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்த்து என் கிட்டே நெருங்கனும்னு நினைக்காத சரியா. நீயும் நானும் ஊருக்கும் உலகத்துக்கும் புருஷன் பொண்டாட்டி என் புள்ளைக்கு அப்பன் அவ்வளவு தான். மற்றபடி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றவள் அங்கிருந்து சென்று விட்டால்
அப்பாடி அப்படி என்ன இவ இந்த காசு காச்சிட்டு போறா நான் என்ன செஞ்சேன் இப்போ வயித்துல புள்ளை இருக்கு சோபாவில் ஒருக்களிச்சு படுக்க முடியாதுனு மெத்தையில் படுக்க வைத்தது ஒரு குற்றமா என்று நினைத்தவன். இவை கிட்டே எது செய்தலும் யோசிச்சு தான் செய்யணும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் படுத்து போர்வையை போர்த்திக் கொண்டான்.
ஷிவு திருமணம் ஆன அடுத்த நாளே வேலைக்கு கிளம்பி விட்டால். ரூபேஷ் நிதானமாக தூங்கி எழுந்து பெட் ரூமில் இருந்து வெளியே வர ஷிவு ஆஃபீஸிற்கு கிளம்பிகே கொண்டு இருநாதல்.
அவள் கிளம்பி இருப்பதாய் பார்த்தாலே வேளைக்கு தான் செல்கிறாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. எதுவும் பொய் கேட்டல் காட்டு காது கத்துவாள் நமக்கு எதற்கு வம்பு பேசாமல் நாமும் கிளம்பி ஆபீஸ் போய்டலாம் என்று சென்று குளித்து உடை மாற்றி விட்டு வெளியே வந்தவன் ஷிவு இன்னும் office போகாமல் ஹாலில் அமர்ந்து இருந்தால்.
இவ என்ன அப்போவே ஆபீஸ் போறதுக்கு கிளம்பிற்று இருந்தா ஆனா இன்னும் போகாம உக்கார்ந்து இருக்காதா என்று யோசனையோடு வந்து கிட்சனிற்கு சென்று சாப்பிட எதுவும் இருக்கிறதா என்று பார்க்க செல்ல…
அப்போது கிச்சனில் இருந்து வந்த கனக மாப்பிள்ளை வந்துட்டீங்களா வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம் எல்லாம் ரெடி ஆஹ் இருக்கு என்றவர் ஹாலில் உர்ரென்று அமர்ந்து இருந்தத ஷிவுவை பார்த்து.
ஏய் ஷிவு அங்கே என்ன பண்ணிட்டு இருக்க… மாப்பிள்ளை சாப்பிட உக்கார்ந்திருக்காரு பாரு வருக்கு வந்து பரிமாறு என்றார்.
அவர் சொன்னதும் ஷிவு திரும்பி ரூபேஷாய் முறைத்தாள்.
அவள் பார்த்த பார்வையிலேயே உனக்கு நான் வந்து சாப்பாடு போடணுமா என்பாது போல இருந்தது ரூபேஷிற்கு.
உடனே கனகாவிடம் …அத்தை அவளுக்கு எதுக்கு வீண் சிரம் நானே போடுகிறேன் என்றன.
உடனே ரூபேஷிடம் குனிந்து மாப்பிள்ளை சும்மா இருங்க… இப்படி நீங்க அவளை கண்டு பயந்து ஒதுங்கி போனா அப்பறோம் எப்படி அவ கூட சந்தோசமா இருக்க முடியும் நீங்க.
நானே ஆபீஸ் கிளம்பி இருந்தவளை புடிச்சு வெச்சு உங்களை அவ கூட அனுப்பி வெக்கலாம்னு இருக்கேன் நீங்க வேற காரியத்தை கெடுத்துறாதீங்க என்றார்.
ஏய் இன்னும் என்ன டி அங்கே உக்காந்துட்டு இருக்கே எழுந்து வந்து மாப்பிள்ளைக்கு சாப்பாடு பரிமாறு. நான் உள்ளே தோசையை ஓத்திட்டு வந்திருக்கேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
ஷிவு அவள் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் எழுந்து வந்தவள். சாப்பிடுவதற்காக வைத்து இருந்த இட்லி பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு இட்லியை கையில் எடுத்து எவள்வு இட்லி வெக்குறது உனக்கு என்று கேட்டால்.
அவள் திடீர் என்று தன்னிடம் பேசியதும் ரூபேஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் நீ எவ்வள்வு வெச்சாலும் நான் சாப்பிடுவேன் என்று இளித்து வைத்தான்
அவன் சொன்னதை கேட்டதும் அப்படியா அப்போ நான் எவ்வளவு வைத்தாலும் நீ சாப்பிடுவ அப்படித் தானே என்றாள்.
ரூபேஷும் பின் விளைவுகள் தெரியாமல் ஷிவு தன்னிடம் பேசுவதே போதும் என நினைத்து ஆமாம் என்று தலையை வைத்தான்.
அவன் தலை ஆட்டியதும் தான் தாமதம் அனைவரும் ஷிவுவும், ரூபேஷ்கும் சாப்பிடுவதற்காக வைத்து இருந்தத, இத இட்லியையும் அவன் தட்டில் பாத்திரத்தோடு கவுற்றினால்.
இதை சற்றும் எதிர் பாரத ரூபேஷ் ஷிவு என்ன இது எல்லா இட்லியையும் என் தட்டில் கொட்டிட.. என்றான்.
நீ தானே சொன்ன ரூபேஷ் நான் எவ்வளவு வைத்தாலும் சாப்பிடுவேன்னு என்றால்.
அடக்கடவுளே இப்படி அவசரப்பட்டு வாயை விட்டுட்டோமே என்று நினைத்தவன் ஷிவுவை பார்த்து அசடு வழிய சிரிக்க…
அவன் எதுவும் பேச முடியாமல் அசடு வழிவதை பார்த்த ஷிவு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு என்ன பாக்குறே சாப்பிடு என்றால் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு.
இப்போ மாட்டும் நான் தட்டில் இருக்கும் மொத்த இட்லியையும் சாப்பிடலையின்னா, கொஞ்ச நேரத்துக்கு முன்னே நான் சொன்ன வார்த்தையை நானே காப்பாத்தலையின்னு நான் செய்த பழைய விஷயங்களையும் சேர்த்து வெச்சு பேசுவாலே என்று நினைத்தவன்.
அதுக்கு இல்ல ஷிவு நீ இன்னும் எதுவுமே சாப்பிட்டால எல்லா இட்லியையும் எனக்கே வெச்சுட்ட அதான் கேட்டேன் என்றவன். தன் தட்டில் இருந்து மூன்று இட்லிகளை எடுத்து ஷிவு தட்டில் வைத்துவிட்டு நீ இதை சாப்பிடு நான் சாப்பிடுறேன் என்று சொல்லி அருகில் இருந்த சாம்பார் பாத்திரத்தை எடுக்க போக…
இரு ரூபேஷ் நானே உனக்கு பரிமாறுறேன் என்று ஷிவு அவன் கையில் இருந்த சாம்பார் பாத்திரத்தை வாங்க போக…
தன் கையை பின்னுக்கு இழுத்தவன் வேணாம் நானே போடுகிறேன் நீ சாப்பிடு என்று அவள் தட்டில் இரண்டு கரண்டி சாம்பாரை ஊற்றிவிட்டு தன் தட்டில் மலை போல குவித்து வைத்து இருந்த இட்லியை பார்த்தவன் ஆண்டவா என்னை நீ தான் காப்பாற்றணும் என்று கடவுளிடம் ஒரு பிராத்தனையை வைத்து விட்டு கையில் இருந்த சாம்பாரை பாதி தட்டில் கவுத்திவிட்டு ராஜ்கிரண் சாப்பிடுவது போல இட்லியையும் சாம்பாரையும் பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக எடுத்து விழி பிதுங்க சாப்பிட ஆரம்பித்தான்.
இதை எல்லாம் கிச்சனில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த கனகாவும் ரூபேஷின் அம்மாவும் ஷிவு செய்யும் லூட்டியை பார்த்து ரசித்தவர்கள் பின் கனக ஷிவுவை திட்டிக் கொண்டே இவளுக்கு கொழுப்பை பாருங்க சம்பந்தி மாப்பிள்ளையை எப்படி எல்லாம் டோர்சேர் பண்ணுறான்னு இவளை… என்று சொல்லி கிச்சனில் இருந்து செல்ல போக…
கனகாவின் கையை பிடித்து தடுத்த ரூபேஷின் அம்மா பேசாம இருங்க சம்பந்தி. நீங்க தானே சொன்னிங்க என் மகனும், உங்க பொன்னும் நல்ல
சந்தோசமா வாழணும்னா அவங்க ரெண்டு பேரையும் தனியா ஒன்னா விடணும்னு சொன்னிங்க தானே. இப்போ நீங்களே அதை கெடுத்துருவிங்க போல இருக்கே என்றார்.
அதுக்காக இப்படியா மாப்பிள்ளை கிட்டே நடந்துப்பா என்று கனகா கோவமாக கேட்க…
விடுங்க சம்பந்தி முதல்ல சண்டையில் ஆரம்பிச்சு படிப் படியா சமாதானம் ஆகிடுவாங்க. எனக்கு மட்டும் என் பையன் நல்ல வாழணும்னு அக்கறை இருக்காதா சம்பந்தி வாங்க அவங்களே சரி ஆகிடுவாங்க என்றார்.
இருவரும் உள்ளே சென்று விட… இங்கே ஷிவு வாய்த்த மொத்த இட்லியையும் சாப்பிட முடியாமல் சாப்பிட்டு, முடித்த ரூபேஷ் தட்டில் கை கழுவ போக…
இவ்வளவு நேரம் ரூபேஷ் சாப்பிட சிரம பட்டு தான் சாப்பிட சொன்ன ஒரே காரணத்துக்காக மொத்தத்தையும் கஷ்ட பட்டு சாப்பிடுவதை கன்னத்தில் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தத ஷிவு அவன் காய் கழுத்தை பார்த்தவள்.
அவன் கையை பிடித்து கழுவ விடாமல் தடுத்தவள் தன் தட்டில் இருந்த ஒரு இட்லியை எடுத்து அவன் தட்டில் வைத்து எனக்கு ரெண்டு idly போதும் இதையும் நீயே சாப்பிடு என்று சொல்லி அவன் தட்டில் வைக்க…
அவளை பாவமாக ரூபேஷ் பார்க்க.. கணத்தில் கைவைத்துக் கொண்டு என்ன பாக்குறே நான் எவ்வளவு வெச்சாலும் சாப்பிடுவேன்னு சொன்னே எனக்காக இந்த ஒரு இட்லியையும் சாப்பிடு பாக்கலாம் என்று சொன்னால்.
roobeshum வேறு வலி இல்லாமல் அந்த இட்லியை கையில் எடுத்தவன் அவளையும் இட்லியையும் மாறி மாறி பார்த்தவன் டேய் ரூபேஷ் இன்னிக்கு உன் வயிறே வெடித்தாலும் பரவாயில்லை சாப்பிட்டிரு டாங் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு அருகில் இருந்த சாம்பார் குண்டாவிற்குள் இட்லியை விட்டு சாம்பாரில் இட்லியை மூழ்கவைத்தவன் அதை அப்படியே எடுத்து முழு இட்லியையும் தன் வாயில் போட்டுக் கொண்டு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு மிச்சத்தையும் விழுங்கினான்.
அவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள் அவன் வாயில் இருந்த இட்லி முழுவதும் விழுங்கிய பிறகு தன் பார்வையை வான் மீது இருந்து பிரித்து எடுத்தவள் குடன் பின் தன் தட்டில் இருந்த இட்லியை சாப்பிட ஆரம்பித்தாள்
@@@@@@@@@@@@@@@@
ஆதி செண்பகத்தின் காணாமல் போன பெண்ணை பற்றி நிறைய இடங்களில் விசாரித்துவிட்டான். அனைவரும் சொன்னது திருச்சியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை பற்றி தான். அவள் அங்கே இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டு செண்பகத்தின் மகள் பற்றி விசாரிக்க நிறைய முறை அங்கே ஆட்களை அனுப்பி வைத்தான்.
ஆனால் அங்கே சென்றவர்கள் எல்லாம் சரியான தகவல்களை அவனிடம் கொண்டு சேர்க்கவே இல்லை. விக்கியையும், கதிரையும் கூட அங்கு அனுப்பி பார்த்து விட்டான். அனால் அவர்களையும் அந்த காப்பகத்தின் நிறுவனர் அவர்கள் கேட்ட தகவல்களை கொடுக்க மறுத்துவிட்டனர்.
இது எதுவும் சரி வர வில்லை என்று தன் கம்பெனியின் சார்பில் ஆதரவற்ற இல்லாதில் இருக்கும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆடைகள் வழங்கவும் அவர்கள் தேவையை அறிந்து அதைஇ நிறைவேற்றி தருவதாகவும் தனது பிஏ ரியாவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வர சொன்னான்.
றியா ஆதியிடம் இன்னும் இரண்டு நாட்களில் தன் அண்ணனுக்கும் பவனின் தங்கைக்கும் திருமணமா நடக்க இருப்பதாக சொல்லி தன்னால் நேரில் சென்று சென்று முடியாது என்று சொல்லிவிட்டால்.
இதை எல்லாம் யோசித்தபடி ஆதி அமர்ந்து இருக்க… வெளியே ஷாப்பிங் வந்த துர்கா போகும் வழியில் ஆதியை பார்த்து சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு போகலாம் என்று துர்கா அவன் ஆஃபீஸிற்கு வந்தவல் அவன் கேபின் க்தை திறந்து கொண்டு சிரித்த முங்கமாக சர்ப்பிரைஸ் என்று சிரித்த முகமாக துர்கா உள்ளே வர..
செண்பகத்தின் பெண்ணை பற்றிய யோசனையில் இருந்த ஆதி துர்கா அறைக்குள் வருவதை பார்த்ததும் எழுந்து சென்று என்ன திடீர்னு இந்த பக்கம் வந்து இருக்கீங்க மேடம் என்று சொல்லி அவளை கட்டிப் பிடித்துக் கொண்டான்.
இந்த பக்கம் ஷாப்பிங் வந்தேன் ஆதி அப்படியே நீ ஆஃபிஸில் வேலை எல்லாம் சரியாக செய்கிறாயா என்று பார்க்க வந்தேன் என்றவள்.
ஆமா வேலை நேரத்துல சார் என்ன அப்படி விட்டதை பார்த்து எதை பற்றியோ தீவிரமாக யோசிச்சிட்டு இருந்தீங்க என்றால்..
அதுவா செண்பகம் அத்தை பொண்ணை பற்றி ஒரு கிளு கிடைச்சது அதை வைத்து திருச்சியில் உள்ள ஒரு காப்பகத்திபோல் விசாரிக்க சென்ற நம் ஆட்களை எல்லாம் அங்கே உள்ளே வர விடாம விரட்டி விட்டுட்டாங்க.
சரி அங்கே இருக்க ஆதரவற்றோருக்கு எதுவும் பொருட்கள் கொடுத்து உள்ளே சென்று விசாரிக்கலாம் என்று ரியாவை அனுப்ப நினைத்தேன் அவள் அன்னான் திருமணம் இருப்பதால் அவளால் போக முடியாது என்று சொல்லி விட்டால் என்றான் ஆதி.
இப்போ என்ன ஆதி செண்பகம் அத்தை பொண்ணை பற்றிய விஷயம் உனக்கு தெரியணும் அவ்வளவு தானே நீ கவலையை விடு அதை நான் பார்த்துகிறேன் என்றல் துர்கா.
ஏய் நீ என்ன பண்ண போறே துர்கா…நம்ம கம்பெனி நம்மைஅ கேட்டாலே அவங்க யாரையும் உள்ளே விடமாட்டேங்குறாங்களே என்றான் ஆதி.
நான் ஏன் நம்ம கம்பெனி நம்மை சொல்லி உள்ளே போகணும் ஆதி. நான் அதுக்கு ஏதும் ஐடியா செய்து அங்கே போய் நீ கேட்ட தகவல்களை எல்லாம் உனக்கு நான் சேகரிச்சு கொண்டு வந்து தரேன் என்றால் துர்கா.
எப்படி துர்கா நீ அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்குள்ள போவ… அவங்க தான் யாரும் ஏதும் விசாரிக்க வந்தாலே வெளியே துரத்தி விடுறாங்களே பிறகு எப்படி நீ போய் கேட்ட மட்டும் சொல்லிடுவாங்களா என்றான் ஆதி.
நான் ஏன் விசாரிக்க போகணும் ஆதி நான் அவங்கள்ல ஒருத்தவங்கலா இருந்தாலே எல்லாம் தெரிஞ்சிருமே என்றால் துர்கா.
என்ன சொல்றே துர்கா என்று ஆச்சர்யமாக துர்காவை ஆதி பார்த்துக் கொண்டு இருக்க…
ஒரு நிமிஷம் ஆதி என்று சொல்லி தன் மொபைலை எடுத்தவள் யாருக்கோ போன் செய்ய…
துர்கா யாருக்கு கால் பண்ற என்றான் ஆவலாக.
மை த்ரீ லிட்டில் சிஸ்டர்ஸ்க்கு தான் ஆதி நான் அவங்களை வெச்சு தான் தன் பலனை செயல்படுத்த போறேன் என்று கீர்த்திகா, ராதா, ஷிவு மூவருக்கும் அழைத்து கான்பிறேன்சே கால் போட்டால்.
அவர்களுக்கு அழைத்து விபரம் சொன்ன துர்காவை ஆச்சர்யமாக வாயை திறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.

1 comment
Vera level ponga 😘🫂💋