EPI 207
மாதவி மெத்தையில் படுத்துக் கொண்டு போதியிடம் பேசுவாதற்காக காத்துகிட்டு கொண்டு இருந்தாள்.
அவன் இவர்கள் திருமணத்திற்கான வேலைகளை எல்லாம் கவனிக்க சென்று விட்டு இரவு வந்து தூங்க போவதற்கு முன்னாள் மாதவியிடம் பேசிவிட்டு தான் தூங்க போவான்.
இன்றும் மாதவி போதியின் போனிற்காக காத்திருக்க… அவளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் போதி மாதவிக்கு கால் செய்தான்.
போன் அடித்த மறு நொடியே மாதவி போதியின் அழைப்பை ஏற்றி இருந்தாள்.
ஓய்… பொண்டாட்டி என்ன இன்னும் தூங்கலையா நீ நான் போன் பண்ணினதும் எடுத்துட்டே.. இல்லையின்னா மற்ற நாள் எல்லாம் அப்பாவுக்கு மருந்து கொடுத்துட்டு வர லேட் ஆகிருச்சு.. அம்மாவுக்கு கிட்சன்ல ஹெல்ப் பன்னிட்டு வந்தேன். அண்ணி கூட பேசிட்டு இருந்தேன்., அண்ணக்கூட கடைக்கு போனேன்னு ஏதாவது காரணம் சொல்லிடு இருப்ப.. இன்னிக்கு என்ன உனக்கு ஒரு வேலையும் இல்லையா என்று கேட்டான் போதி.
அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்று உணர்ந்த மாதவி போதி மீது கோபமாக.. எப்பவும் நீங்க எனக்கு போன் பண்ற அப்போ நான் எடுக்க லேட் ஆகிடுது.
வெளியே அழைஞ்சிட்டு வந்து நான் வந்து உங்களுக்கு கால் பண்ற வரைக்கும் தூங்காம முழிச்சிட்டு இருக்கிங்கலேன்னு இன்னிக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடிச்சிட்டு வந்து உங்க கூட கொஞ்ச நேரம் சேர்த்து பேசலாம்.
உங்களையும் சீக்கிரம் தூங்க வைக்கலாம்னு நான் நினைச்சு உங்க காலுக்காக காத்துட்டு இருந்தா… என்னை இப்படி கிண்டல் செயிரிங்களே என்றவள்.
ம்ஹும்… நான் உங்க மேல கோபமா இருக்கேன் என்றவள். என்கூட பேசாதிங்க என்று சொல்லி தன் போனை கட் செய்தாள்.
அவள் கோபமாக இருக்கிறேன் என்று சொல்லி போனை வைக்கவும். என் பொண்டாட்டிக்கு கோபம் எல்லாம் பட தெரியுது என்று நினைத்து சிரித்தவன். அவளுக்கு மீண்டும் அழைக்க… போனை அட்டென்ட் செய்து நான் கோவமா இருக்கேன் இன்று சொல்லி மீண்டும் போனை கட் செய்தால்.
பாருடா… நிஜமாவே கோபமா தான் இருப்பா போலயே.. என்றவன் உடனே அவளுக்கு நார்மல் கால் செய்யாமல் வீடியோ காலில் மாதவிக்கு அழைத்தான்.
போதி வீடியோ காலில் வருவதை பார்த்தவள் மெத்தையில் படுத்தவாறே…காலை அட்டென்ட் செய்தவள் போதியின் முகத்தை பார்க்க… ஆனால் போதியோ தன் முகத்தை காட்டாமல் வீடியோ கால் செய்து இருந்தான்.
அவன் முகத்தை பார்க்கும் ஆவலில் மாதவி வீடியோ காலை அட்டென்ட் செய்ய… ஆனால் போதியோ… முகத்தை காட்டாமல் மாதவியிடம் விளையாட..
நீங்க இப்போ உங்க முகத்தை காட்டளையின்னா நான் நிஜமாவே உங்க கூட பேச மாட்டேன் என்றாள் மாதவி.
அவள் அப்படி சொன்னதும் டட்ட… டைன்…. என்று சொல்லி அவளிடம் தான் முகத்தை காட்ட…
அவன் சத்தமிட்டு வந்து சிறுபிள்ளை போல தன்னிடம் விளையாடுவதை பார்த்த மாதவிக்கு சிரிப்பு தான் வந்தது.
என்னை டார்லிங் இப்போ என் மேல இருந்த கோவம் எல்லாம் போய்டுச்சா என்றான்.
மாதவியும் அவனை பார்த்த சந்தோசத்தில் கோபம் எல்லாம் இல்லை போய்டுச்சு என்றாள்.
சரி செல்ல குட்டி என்னை செயிரிங்க… என்றான்.
ம்ம்ம்… என் சிங்கக்குட்டி கிட்டே பேசுறதுக்காக காத்துட்டு இருக்கு என்றால் வெட்கப்பட்டுக் கொண்டே.
நான் சிங்க குட்டியா என்றான் போதி.
அவள் ஆமாம் என்றால் அவனை பார்த்து சிரித்த படி.
சரி சிங்கம் யாருனு தெரியுமா என்றான் மாதவியிடம்.
ஓ.. நல்லா தெரியுமே காட்டுக்கே ராஜா தானே சிங்கம் என்றாள் மாதவி.
காட்டுக்கு ராஜா தான் ஆனா வீட்டுக்கு யாருனு தெரியுமா? என்றான்
ம்ஹும்… என்று தலையை இட வளமாக ஆட்டி தெரியாது என்றாள்.
தெரியாதா என்றவன் சரி நான் சொல்றேன் கேட்டுக்கோ என்று காட்டுக்கே ராஜாவா இருக்க சிங்கம் வீட்டுக்கு வெறும் கூஜா தான் என்றான்.
வீட்டுக்கு கூஜாவை ஏன் என்றாள் மாதவி.
அதுவா காட்டில் இருக்கும் விலங்குகள் எல்லாமே சிங்கத்தை கண்டா பயந்து நடுங்கிடும். ஆனா வீட்டுல சிங்கம் எப்படி இருக்கும் தெரிரியுமா? சரியான சோம்பேறி.. தூங்கு மூஞ்சி என்றான் போதி.
அப்படியா என்று ஆச்சர்யமாக கதை கேட்டாள் மாதவி.
ம்ம்ம்… ஆமா.. வீட்டில் இருக்க சிங்கத்துக்கு அதோட பெண் சிங்கம் தான் வீட்டை ஆட்டி சாப்பிட உணவு கொண்டு வருமாம். பெண் சிங்கம் கொண்டு வந்து கொடுக்குற சாப்பாட்டை நல்லா மூக்கை முட்ட சாப்பிட்டுட்டு நல்லா தூங்கி எழுந்திருக்கும் என்றான்.
என்னது அவ்ளோதான் பண்ணுமா சிங்கம் அப்போ அது போய் காட்டில் மிருகங்களை எல்லாம் வேட்டை ஆடாதா என்றாள் மாதவி.
அதெல்லாம் செய்யும் ஆனா அதுக்கு தோணினா தான் செய்யும் என்றவன்.அதை விட அதுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றான் போதி.
வேட்டை ஆட கூட போகாம அப்படி என்னை சிங்கத்துக்கு முக்கியமான வேலை இருக்கு என்றாள் மாதவி.
அதுவா என்றவன் இங்கே கிட்டே வா.. என்று அவளிடம் ரகசியம் பேசுபவன் போல போனிற்கு மிகவும் அருகில் மாதவியின் முகத்தை கொண்டு வர சொல்லி.
ஆண் சிங்கம் அதோட பெண் சிங்கத்தோட… ஒன்னா சேர்ந்து… என்று சொல்லி அவன் நிறுத்த…
என்னை சொல்லுங்க ரெண்டும் ஒன்னா சேர்ந்து என்னை செய்யும் வேட்டையாட போகுமா? என்று தன் முக்கியமான சந்தேகத்தை கேட்டாள்.
அவள் கேட்ட கேள்வியைக் கேட்டு ஐயோ என்று தன் தலையில் அடிக் கொண்ட போதி.நம்ம கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு.
நான் உன்கிட்டே ஓரு மூடோட வந்து பேசுற அப்போ எல்லாம் இப்படி ஒன்னும் தெரியாத தத்தி மாதிரி கேள்வி கேட்டா நான் என்னன்னு உன்கிட்டே பதில் சொல்றது என்றான் போதி.
அவன் எதற்காக பேசுகிறான் என்று மாதவிக்கு சுத்தமாக விளங்க வில்லை.
உடனே என்னை எதுக்கு தத்தின்னு திட்டுறீங்க…நான் ஒன்னும் தத்தி கிடையாது. கலெகிலேயே படிப்பில் நான் தான் டோப்பர் என்றால் மாதவி.
படிப்புல நீ தான் டோப்பர் நான் அதை ஒப்புக்கிறேன். ஆனா படிப்புல டாப் ஆஹ் இருந்து என்னை செய்றது. படுக்கை விஷயத்தை என்று போதி இழுக்க..
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒரு அளவுக்கு புரிந்து போனது மாதவிக்கு.
அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்டதும் மாதவியின் முகம் உடனே சிவந்து போனது.
அவள் முகம் சிவப்பானதை வீடியோ கால் வள்ளியாக பார்த்த போதிக்கு மாதவி வெட்கப்டுவது நன்றாக புரிந்தது.
என்ன என் செல்லத்துக்கு முகம் எல்லாம் சிவந்து போய் இருக்கு என்றான் எதுவும் தெரியாதவன் போல..
அவன் சொன்னதும் திரையில் தெரிந்த தன் முகத்தை பார்த்த மாதவி. அதுவா… அது வந்து… என்றவள் இங்கே ஒரே புழுக்கமா இருக்கு அதன் உடம்பு சூடக்கி முகம் எல்ல்லாம் சிவப்பாகிருச்சு என்றவள் போதியிடம் இருந்து தன் முகத்தை மறைக்க… பெரும்பாடு பட்டால் மாதவி.
அவள் வெட்கப்பட்டு தன்னிடம் முகத்தை காட்ட முடியாமல் முகத்தை இப்படியும் அப்படியும் திருபுவதை பார்த்த போதுக்கு சிரிப்பு தான் வந்தது.
ஏய்… மாதவி என்று ஹஸ்கி வாய்ஸ்யில் அவளை அழைத்தான்.
மாதவி அவன் முகம் பார்க்காமல் ம்ம்… என்றாள்.
என்னை பாரு… என்றான்.
மாதவி ம்ஹும்… என்று தலையை ஆட்ட..
இங்கே பாரு… என்னை பாரு… டி பொண்டாட்டி என்று போதி குழைய…
வெட்கப்பட்டுக் கொண்டே போதியை மாதவி நிமிர்ந்து பார்க்க… ஆண் சிங்கத்தோட முக்கியமான வேலை என்னனு சொன்னேனே அது என்னனு இப்போ புரிஞ்சுதா என்றான் போதி.
அவன் மீண்டும் அதே விஷயத்தை பேச வரவும்
மாதவிக்கு முகமெல்லாம் வெட்கத்தில் மேலும் சிவந்து ரத்த சிவப்பானது.
அவன் முகத்தை பார்க்கமுடியாமல் மாதவி தடுமாற… இப்போ சொல்லு நான் சிங்கமா என்றான் போதி.
மாதவி ஆமாம் என்று தலையை ஆட்ட.. அப்போ ஆண் சிங்கம் என்ன எல்லாம் பெண் சிங்கத்து கிட்டே நடந்துக்குதோ… நமக்கு கல்யாணம் ஆன பிறகு நானும் உன் கூட அப்படி நடந்துப்பேன் என்றான்.
அவன் சொல்வதை தாங்க முடியாமல் ஐயோ… நீங்க என்னை இப்படி எல்லாம் பேசுறீங்க.. எனக்கு கேக்கவே எனவோ போல இருக்கு என்று தன் முகத்தை மூடிக் கொள்ள…
ஏய் மாதவி… இங்கே பாரு… என்னை பாரு…. என்று போதி மாதவியின் வெட்கப்பட்ட முகத்தை பார்க்க ஆர்வமாக அவளை அழைக்க…
ஆனால் அவளோ அவன் முகத்தை பார்க்கமுடியாமல் தவித்தால்.
ஏன் இப்படி எல்லாம் பண்றே.. நான் உன் முகத்தை பார்த்து பேசுறதெ கொஞ்ச நேரம் தான். அதையும் நீ இப்படி என்கிட்டே உன் முகத்தை காட்டாம வெட்கப்பட்டுட்டு இருந்தா. அப்பறோம் எப்படி நமக்கு கல்யாணம் ஆனா பின்னே முதல் இரவு அறைக்குள் வரும்போது நீ இப்படி வெட்கப்பட்டுட்டே இருந்தா.
இந்த சிங்கம் எப்படி உன்கிட்டே… என்று நிறுத்த..
போடா… போதி… நீ ரொம்ப கேட்ட பையன். நீ பேசுறதே சரி இல்லை தப்பு தப்பா பேசுற என்கிட்டே.. நீ இப்படியே பேசிட்டு இருந்தாள் நான் உன்கூட இனி பேசவே மாட்டேன் என்றாள்.
அவன் அப்டி சொன்னதும் மாதவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் சிரமப்பட்டு தன் முகத்தை நிமிர்த்தி போதியை பார்க்க…
அவள் தாமரை பூ நிறம் மேலும் சிவந்து இருப்பதை பார்த்தவன் அதை அப்படியே தன் போனில் ரெகார்ட் செய்து கொண்டான்.
அவள் என்னை செய்வது என்று தெரிரியாமல் அமைதியாக இருக்க இதற்கு மேலும் மாதவியை வெட்கப்பட வைக்க விரும்பாத போதி.
ஏய் பொண்டாட்டி என்று அழைத்தான்.
ம்ம்ம்… என்றாள் மாதவி.
நேரம் ஆகுது நாம ரெண்டு பேரும் தூங்கலாமா என்றான் போதி.
என்னது நாம ரெண்டு பேருமா!!! என்று அதிர்ந்தவள். அதெல்லாம் இப்போ முடியாது நாம கல்யாணத்துக்கு பிறகு தான் ஒன்னா இருக்க முடியும் என்று மாதவி சொல்ல..
அது எனக்கும் தெறியும் டி என் பொண்டாட்டி நாம அதுவரைக்கும் காத்திருக்கணுமா என்ன என்றவன்.
இப்படியே வீடியோ காலில் ரெண்டு பேரோட முகத்தையும் பார்த்துட்டு அப்படியே தூங்கிடுவோமா என்றான்.
அவளும் சரி என்று சொல்ல… இருவரும் மெத்தையில் படுத்துக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு படுத்திருக்க… அப்படியே இருவரும் அசதியில் தூங்கிவிட்டனர்.
❤️

2 comments
Super akka 💐💕🎉 episode inaki vera level ponga 😘🫂
🤩🤩🤩🙏🙏🙏