EPI 230
வெங்கடாச்சலம் விசாலாட்சியின் அறுபதாவது திருமணத்திற்காக சேலை எடுக்க புடவை கடையையே அவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து இருந்தனர்.
விசாலாட்சி துர்காவுக்கு சேலைகளை எடுத்துக்காட்டி இது உனக்கு அழகாக பொருத்தமாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டு இருக்க…
அவர்கள் அருகில் அமர்ந்திருந்த கீர்த்திகா நாங்களும் இங்கே இருக்கும் நாங்களும் இந்த வீட்டு மருமகள் தான் என்று வேண்டுமென்றே விசாலாட்சி இடம் வம்பு இழுக்க…
உடனே துர்கா கீர்த்திகாவிடம் இறங்கிட்டு நான் உனக்கு சேலை செலக்ட் பண்ணி தரேன் உனக்கு எப்பவும் நான் தானே எடுத்து தருவேன் என்று சொல்லி விலை உயர்ந்த மிகவும் அழகான ஒரு ஊதா நிற சேலையை எடுத்து கீர்த்திகாவின் முன்பு காட்டி இந்த சாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் கேட்டு என்று அவளிடம் நீட்ட…
எடுத்துக்காட்டிய சேலையை பார்த்த கீர்த்திகாவிற்கு அது பிடித்து விட அக்கா இந்த சாரி ரொம்ப நல்லா இருக்கு இல்ல என்கிட்ட இந்த கலர்ல சரி இல்லை என்றவள் துர்கா கையில் இருந்த சேலையை ஆசையாக கீர்த்திகா வாங்க போக…
இப்போது துர்காவின் கையில் இருந்த சேலைலையை வெடுக்கென ஒரு கரம் வந்து பறித்தது.
ரித்திகா திரும்பி யார் துர்காவின் கையில் இருந்த இந்த சேலையை இப்படி பிடுங்கியது என்று திரும்பிப் பார்க்க…
போய் முன் ஒரு பெண் நின்று கொண்டு துர்கா இடமிருந்து வாங்கிய புடவையை கையில் வைத்து பார்த்தபடி நின்று இருக்க…
கீர்த்திகா அந்த பெண்ணை யார் இவள் என்பது போல புரியாமல் பார்க்க…
துர்காவும் சங்கவியும் கூட அந்த பெண் யார் என பார்த்துக் கொண்டு இருக்க…
அங்கு நின்று இருந்த பெண்ணோ இவர்கள் இவர்களை கண்டு கொள்ளாமல் தன் கையில் இருந்த புடவையை பிரித்து அதிலிருந்த வேலைப்பாடுகளை பார்த்தவள்.
இந்த வீட்டுக்கு மருமகளா வந்தவளுக்கே இவ்வளவு காஸ்ட்லியா சேலை எடுத்து கொடுத்தா…அப்போ உங்க பொண்ணு எனக்கு நீங்க எவ்வளவு காஸ்ட்லியா புடவை எடுத்து தர போறீங்க… அப்பா என்று வெங்கடாசலத்தை பார்த்து கேட்க…
அப்பா என்றும் தான் அவர் மகள் என்றும் உரிமையாய் பேசும் அந்த பெண்ணை பார்த்த துர்கா, கீர்த்திகா, சங்கவி மூவரும் அதிர்ச்சியாக நிற்க…
அவர்கள் மூவரையும் தவிர மற்றவர்கள் எல்லாம் அந்தப் பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடையவில்லை மாறாக இவள் எதற்கு இங்கே வந்து இருக்கிறாள் என்பது போலத்தான் அந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் பெண்ணை பார்த்த வெங்கடாசலம் சோபாவில் அமர்ந்து இருந்தவர் எழுந்து அவளிடம் வந்து நீயா நீ எதுக்கு இங்கே வந்த அபி என்றார் அவளிடம்.
என்னப்பா நீ எதுக்கு வந்தேன்னு கேட்கிறீங்க… ஏன் நான் இங்கே வரக்கூடாதா? இது என்னோட அப்பா வீடு தானே எனக்கு இங்க வர உரிமை இல்லையா என்றவள்.
நான் மட்டும் வரலப்பா என் கூட அம்மாவும் தான் வந்திருக்காங்க என்றவள் அங்க பாருங்க என்று போல் வாசலை திரும்பி பார்க்க…
அங்கே அப்போதுதான் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்த வெங்கடாசலத்தில் முதல் மனைவி மரகதம் வாசலை தாண்டி உள்ளே வந்தார்.
அவரைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரின் முகமும் மாறிவிட்டது. தங்கள் அறுபதாம் திருமணத்திற்காக சேலை எடுக்க தன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்த விஷாலாட்ச்சி, வெங்கடாசலத்தின் முதல் மனைவி மரகதத்தையும் அவர் பெண் அபியையும் பார்த்ததும் முகம் சுருங்கி போனார்.
இத்தனை வருடமாக வெங்கடாசலமும் அவர் மனைவியும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர் முதல் மனைவி மகள் இருவரையும் மறந்து போய் இருந்தனர்.
ஆனால் இன்று வெங்கடாஜலத்தின் அறுபதாம் திருமணத்தை கெடுப்பதற்காகவே வெங்கடாச்சலம் வீட்டிற்கு மரகதமும் அபியும் வந்திருப்பது போலவே அனைவருக்கும் தோன்றியது.
வெங்கடாசலத்தை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே அவரிடம் வாழப்பிடிக்காமல் அவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டு அவர்கள் சொத்தில் பாதியையும் எழுதி வாங்கிக்கொண்டு அவர் ஆசையாக பாசமாக வளர்த்த அவரிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்ற மரகதம் வந்திருப்பது தான் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இன்று இந்த சந்தோஷமான தருணத்தை கெடுப்பதற்காகவே அவர்கள் வீட்டிற்கு இவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள் என்றாலும் இவர்கள் இருவரையும் பார்த்த வெங்கடாஜலத்தில் வீட்டு ஆட்களுக்கு முகத்தில் ஈயாடவில்லை.
மரகதத்தை விஷால் ஆட்சி பார்த்ததும் இதுவரை இருந்த…. இதைத்தான் இதுவரை வாழ்ந்த மொத்த சந்தோசமும் வடிந்தது போல அவருக்கு தோன்றியது.
அபியின் அருகில் நின்று இருந்த வெங்கடாஜலத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டார் விசாலாட்சி.
விசாலாட்சி சோகமான முகத்தோடு உள்ளே செல்ல அவரை சமாதானம் செய்ய அவர் பின்னால் செண்பகமும், கனகாவும் செல்ல அவர்களை தொடர்ந்து துர்காவும் கீர்த்திகாவும் உள்ளே சென்றனர்.
அப்போதுதான் தன் அறையில் இருந்து துர்காவுக்கு கீழே சென்று வெகு நேரம் ஆகியும் வரவில்லை என்று அவளை தேடிக்கொண்டு கீழே வந்த ஆதி ஹாலில் வெங்கடாசலத்தில் இடம் அபி நின்றிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியானவன் அவள் அருகில் அவள் அம்மா மரகதம் நின்று இருப்பதை பார்த்தவனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.
நேராக அவர்கள் இருவரிடமும் வந்தவன் நீங்க ரெண்டு பேரும் எதற்காக இங்கே வந்தீங்க உங்களை யாரு உள்ளே விட்டது என்று கோபமாக கத்தியவன் முதல்ல ரெண்டு பேரும் இங்கே இருந்து வெளியே போங்க என்று அவளின் கையைப் பிடித்து வாசலை நோக்கி இழுத்துச் செல்ல…
அவனிடமிருந்து தன் கையை உதறிய அபி என்ன ஆதி ரொம்ப நாள் கழிச்சு உன் அக்கா வீட்டுக்கு வந்து இருக்கேன் நீ இப்படித்தான் எனக்கு மரியாதை கொடுப்பியா என்று சிரித்துக் கொண்டே அபி கேட்டாள்.
வாய மூடு முதல்ல சிரிக்கிறத நிறுத்து என்று சத்தமிட்ட ஆதி யாருக்கு யார் அக்கா நீ என்ன என் கூட பிறந்தவளா என்ன என்றவன் உங்களை யார் எங்கே வரச் சொன்னது.
அதுதான் எங்க குடும்பத்தையே வேண்டாம் என்று நீயும் உன் அம்மாவும் என் அப்பாவை விட்டு இங்கிருந்து போனீங்களே உன் அம்மாவும் தானே என் அப்பா கூட வாழ பிடிக்காமல் விவாகரத்து வாங்கிட்டு போனாங்க அவங்க உன்னை என் அப்பாகிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போன போது வேணா உனக்கு விவரம் தெரியாம இருந்திருக்கலாம்.
அதுக்கப்புறம் நாங்க எல்லாம் பிறந்த பிறகு உன்னை அப்பா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அப்போ நீ எப்படி நடந்துக்கிட்ட…என்றவன்.
நீங்க ரெண்டு பேரும் என் அப்பாவை விட்டு போன பிறகு ரொம்ப நாள் கழிச்சு என் அம்மாவை அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டு நாங்க ரெண்டு பேரும் பிறந்து சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தோம்.
ஆனா யாரோ மூலமா நீயும் உன் அம்மாவும் கஷ்டப்படுறத கேள்விப்பட்ட என் அப்பாவும் அம்மாவும் உங்க ரெண்டு பேரையும் தேடி கண்டுபிடிச்சு நீங்க கஷ்டத்துல இருக்குறப்போ உங்கள நல்லபடியா வாழ வைக்கனும்னு உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு திரும்ப கூட்டிட்டு வந்தா நீங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சீங்க…
எவ்வளவு சந்தோஷமா வாசமா பாத்துக்கணும்னு என் அப்பாவும் அம்மாவும் அவங்களால முடிஞ்ச மட்டும் எவ்வளவு உங்களுக்கு செஞ்சிருப்பாங்க…
உங்க அம்மாவோ என் அப்பா கிட்ட இருந்து வாங்கிட்டு போன சொத்து எல்லாத்தையும் வித்து அழிச்சிட்டு திரும்பவும் இங்கே வந்து அவர்கிட்ட மிகவும் நல்லவங்க மாதிரி நீயும் என் அம்மாவும் ரொம்ப வருஷமா கூட இருந்து நடிச்சிட்டு அவர்கிட்ட நீ மறுபடியும் உனக்கு தனியா சொத்துக்கள் வேணும்னு அதையும் இதையும் நீயா பேசி அப்பா கிட்ட இருந்து சொத்தை பிரித்து வாங்கிட்டு போன அப்போ நீ ஒன்னும் தெரியாத விவரம் இல்லாத சின்ன பொண்ணு இல்லையே…
பெத்த அப்பாவையே ஏமாத்தி அவர் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கினவ தானே நீ என்றான் ஆதி.
இதைக் கேட்ட மரகதமும் அபியும் எதுவும் பேசாமல் நிற்க…
நீ நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டை விட்டு போனாப்போ உனக்கு 19 வயசு இருக்குமா உன் அம்மா தான் பணம் காசுக்கு ஆசைப்பட்டு என் அப்பாவை வேண்டாம் என்று சொல்லிட்டு சொத்து மட்டும் இருந்தா போதும்னு போயிட்டாங்க ஆனா நீயும் அவரை ஏமாத்தி உன் அம்மா மாதிரியே சொத்துக்களை எல்லாம் பொய்யான பாசம் காட்டி என் அம்மாவையும் அப்பாவையும் ஏமாற்றி எழுதி வாங்கிட்டு போனீங்க…
நீ அவரையும் என் அம்மாவையும் ஏமாத்திட்டு போனீங்க போனேன்னு தெரிஞ்சும் கூட ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் நீங்க கஷ்டப்படுறது கேள்விப்பட்டு நானும் அப்பாவும் உன்னை தேடி வந்தோமே ஞாபகம் இருக்கா…
இந்த முறை நான் கொஞ்சம் பெரியவனா இருந்ததுனால நீ என் அப்பா கிட்ட அழுது வடிஞ்சு நீலி கண்ணீர் வடித்ததை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு…
அதனாலதான் உன்னையும் உன் அம்மாவையும் இந்த வீட்டு பக்கமே வரக்கூடாது என்று சொல்லி மாசா மாசம் உங்களுக்காக லட்சக்கணக்குல பணம் அழுதுட்டு இருக்கேன்.
இப்போ எதுக்கு இங்கே தேவை இல்லாமல் நீ வர உனக்கும் உன் அம்மாவுக்கும் இந்த வீட்ல என்ன உரிமை இருக்குன்னு இங்கே வந்து இப்படி நடு ஹாலில் நின்னு உரிமையா பேசிக்கிட்டு இருக்க என்று கேட்டான் ஆதி.
இத்தனை நாள் பணம் மட்டும் வேணும்னு மாசம் என்கிட்ட கேட்டு வாங்க தெரிஞ்ச உங்களுக்கு ஒரு நாள் ஆச்சும் அப்பா எப்படி இருக்காருன்னு அவரோட உடம்பு எப்படி இருக்குன்னு அக்கறையா ஒரு வார்த்தை அவர பத்தி விசாரிச்சு கேட்டு இருப்பீங்களா?
ஆனா அப்போ எல்லாம் வராமல் இப்போ ஒரு நல்ல விஷயம் நடக்கிறப்போ எதுக்காக நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்தீங்க என்றான்.
ஏன் ஆதி எங்க மேல இவ்வளவு கோபப்படுற இந்த வீட்ல ஒரு சந்தோஷமான விசேஷம் நடக்குதுன்னு யாரோ சொல்லி நானும் அபியும் கேள்விப்பட்டோம் அப்படி இருக்க…
சந்தோசமான விஷயத்துல நானும் அபியும் கலந்துக்க வேண்டாமா? அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் இங்கே வந்தோம் ஏன் நாங்க ரெண்டு பேரும் இங்கே வரக்கூடாதா என்றார் அம்மா மரகதம்.
இந்த சந்தோஷமான தருணத்தை கெடுப்பதற்காக நீங்க ரெண்டு பேரும் ஏன் இங்கே வந்தீங்கன்னு தானே நானும் கேட்கிறேன் என்றான் ஆதி.
அவர் எதுவும் பேசாமல் ஆதியையே பார்க்க ..
நாங்க சந்தோஷமா இருக்கும்போது வேண்டுமென்று எங்க சந்தோஷத்தை கெடுப்பதற்காக தானே இங்கே வந்து இருக்கீங்க அப்படித்தானே என்றவன் முதல்ல ரெண்டு பேரும் இங்கே இருந்து கிளம்புங்க.
உங்களுக்கு மாசம் மாசம் என்ன வரணுமோ அது சரியா உங்க வீடு தேடி வந்து சேரும் இந்த வீட்டை விட்டு வெளியில போங்க என்றான் ஆதி கோபமாக.
நாங்க ஏன் இந்த வீட்ட விட்டு போகணும் ஆதி? எங்களை இந்த வீட்டை விட்டு போகச் சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு என்றார் மரகதம்.
அவரை திரும்பி முறைத்த ஆதி எனக்கு இல்லாத உரிமை உங்களுக்கு இந்த வீட்ல இருக்கா நீங்க தானே என் அப்பாவை வேண்டாம் என்று சொல்லி விவாகரத்து பண்ணிட்டு போனீங்க அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா? என்ற ஆதி.
நான் அவரை விவாகரத்து பண்ணிட்டு போனா அவர் என் புருஷன் இல்லைன்னு ஆயிடுமா? இல்லை என் பொண்ணுக்கு அப்பா இல்லை என்று ஆயிடுமா? என்ற மரகதம்.
இங்கே பாரு ஆதி அவரை நான் விவாகரத்து பண்ணினாலும் பண்ணாட்டியும் அவர்தான் என்னோட புருஷன். இதை யாராலும் மாற்ற முடியாது சட்டப்படி வேணா அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கலாம் ஆனால் அவரோட பொண்ணுக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்குதானே என்ற மரகதம்.
இந்த வீட்டை விட்டு போக சொல்ற உரிமை உனக்கோ உன் அம்மாவுக்கோ ஏன் இந்த வீட்ல இருக்குற வேற யாருக்குமே கிடையாது என்றார்.
ஆதி சரி எங்களுக்கெல்லாம் எந்த உரிமையும் இல்லைன்னு சொன்னீங்களே அப்போ உங்களை இந்த வீட்டை விட்டு போக சொல்ற உரிமை என்னோட அப்பாவுக்கு இருக்க தானே என்றவன் திரும்பி பார்க்க…
அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…
அதைப் பார்த்து மரகதம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர் உன் அப்பாவ இந்த வீட்டை விட்டு எங்க ரெண்டு பேரையும் போகச் சொல்லு நாங்க இப்பவே இங்கிருந்து கிளம்பறோம் என்று சொல்ல…
அவரிடம் வந்த ஆதிக்கு இன்னும் ஏன் பா அமைதியா நிக்கிறீங்க முதல்ல இவங்க ரெண்டு பேரையும் நம்ம வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்க என்றான்.
அவர் மரகதம் அப்படி சொன்னதும் எதுவும் பேசாமல் இந்த நாட்களுக்குப் பின் தன் மகள் அபியை பார்த்த சந்தோஷத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க ஆதி ஆத்திரமடைந்தான்.
வெங்கடாசலத்தை முறைத்த ஆதி மரகதத்தையும் பார்த்தவன் கூடிய சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் இங்கிருந்து துரத்திட்டு தான் நான் மறுவேலை பார்க்க போறேன் என்று சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் தன் பெட் ரூமிற்கு சென்றான்.
இங்கே நடப்பது எல்லாம் விசாலாட்சியின் அருகில் இருந்து அங்கிருந்து அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்க…
ஆதி சொல்லியும் வெங்கடாசலம் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்பதை பார்த்த விஷாலாட்சி அழ ஆரம்பிக்க…
அவரை சமாதானம் செய்ய அனைத்து பெண்களும் அவரிடம் செல்ல….
ஆதி சென்றதும் ஹாலில் இருந்த மற்றவர்களும் அவரவர் அறைக்கு சென்றுவிட வெங்கடாச்சலம் அவ்விடம் வந்தவர் அவளை பாசமாக வருடி கொடுத்துவிட்டு விசாலாட்சி பார்க்க தன்னரைக்கு சென்று விட்டார்.
அவர் இவர்கள் இருவரையும் வீட்டை விட்டு போகவும் சொல்லவில்லை இங்கேயே இருங்கள் என்றும் சொல்லவில்லை பொதுவாக அவர் எதுவும் பேசாமல் சென்றுவிட அதையே மரகதம் அபியும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டனர்.
வெங்கடாசலமும் சென்றுவிட உடனே மரகதம் அந்த வீட்டு வேலையாட்களை அதிகாரமாக அழைத்து தங்கள் உடமைகள் எல்லாம் காரில் இருப்பதாகவும் அதை எடுத்துக்கொண்டு போய் இந்த வீட்டிலேயே மிகவும் வசதியாக பெரிதாக இருக்கும் ஒரு அறையில் அந்த பொருட்களை எல்லாம் வைக்க சொல்லி அவர்களிடம் அதிகாரம் செய்ய….
அந்த வேலையாட்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் மரகதம் சொன்னபடியே அவரது உடைமைகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
கதிருக்கு இங்கே நடப்பது எதுவும் விளங்கவில்லை ஆதி சொன்ன விஷயங்கள் எல்லாம் அவனுக்கும் ஞாபகம் இருக்கிறதுதான் ஆனால் இத்தனை நாட்களில் அவன் மரகதத்தையும் அபியையும் மறந்தே விட்டிருந்தான்.
மரகதம் வீட்டிற்கு வந்ததும் மற்ற ஆட்களை ஏவுவதை பார்த்த கதிருக்கு அங்கே நிற்கவே பிடிக்கவில்லை அவனும் தன்னரைக்கு சென்று விட…
இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.
தான் ஒரு பிளான் போட்டு இந்த குடும்பத்தை பிரிக்கலாம் என்றால் அந்த கடவுளாகவே இவளுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போல மரகதமும் அபியும் இந்த வீட்டிற்குள் நுழைந்து இருந்தனர்.
இத்தனை தன் மனதிற்குள் கணக்கு போட்ட சங்கவி அவர்கள் இருவரிடமும் வந்து சினேகமாக புன்னகைத்தவள் அபியிடம் சிரித்தபடி வாங்க நான் உங்களுக்கு ரூமை காட்றேன் என்று அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.
யார் இவள் புதிதாக இருக்கிறாள் என்ற யோசனையோடு அவர்கள் இருவரும் சங்கவியோடு உள்ளே சென்றனர்.

1 comment
Sangavi oruthiye eppadi intha kudumbatha pirichu intha veettavittu ellaraiyum viratti vidalamnu plan pottutrukka😡😡😡😡😡 ippa innoruthi veraya 😔😔😔😩😩😨iva enna ellam panna poralo enna plan pottu vachurukkalo😔😔🤔🤔😥😥