Home FULL NOVEL BOOK (FREE)உன் ரகசிய ரசிகை நான்

உன் ரகசிய ரசிகை நான்

by Layas Tamil Novel
406 views

EPISODE 1

சிட்டியிலேயே மிக பிரம்மாண்டமான திருமண மண்டபம். நாட்டின் முக்கிய புள்ளிகள் அநேகம் பேர் வந்திருந்தனர். மிக பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த திரு. வெங்கடேசன், திருமதி. விசாலாட்சி அவர்களின் மூத்த வாரிசான ஆதிக்குத் திருமணம்.

என்ன ஃபிரெண்ட்ஸ், பார்க்குறீங்க? இவர் தான் நம்ம ஹீரோ ஆதி. இவருக்கும் பிரபல தொழிலதிபரின் ஒரே வாரிசான சங்கவிக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சிறிது நேரத்தில் நடைபெற உள்ளது.

நம்ம ஹீரோ ஆதிக்கு பத்து வருடங்களுக்கு முன் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு விபத்து நடந்தது. அப்போது அவருக்கு ரத்தம் அதிகம் போனதால், வேறு ஒருவரின் ரத்தம் அவருக்கு ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் அவருக்கு சேராததனாலோ என்னவோ, அவரின் உடல் முழுக்க சிறு சிறு சிவப்பு கொப்புளங்கள் போல சில வருடங்களுக்கு முன் அந்த ஆபரேஷனால் ஏற்பட்டன.

அதை சரி செய்ய நிறைய மருந்துகளும், சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டாலும், சரி ஆவது போல வந்தாலும் திரும்பவும் அவரின் உடல் முழுவதும் சிவப்பு கொப்புளங்கள் வர ஆரம்பித்துவிடும்.

அந்த சமயங்களில் ஆதி வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் அவரை கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தான் அதிகம். இதைக் கூட அவர் பொறுத்துக்கொண்டார்.

ஆனால், எங்கே அவரின் நோய் தங்களையும் தொற்றி விடுமோ என்று எண்ணி அவரிடம் அருகில் வரக்கூட தயங்கி, அவரை ஒதுக்கியே வைத்திருந்தனர்.

அன்றிலிருந்து தன்னை வெளி உலகத்திற்கு அதிகம் காட்டிக் கொள்வதில்லை. தன் அலுவலகத்தில் உள்ள பதினைந்தாவது மேல் தளத்தில் இருந்துகொண்டே தனது அலுவலக வேலைகளை தனது தம்பி கதிர் மூலம் அனைத்தையும் செய்து முடித்துவிடுவார்.

தனது அலுவலகத்திலும் தங்களுக்கு சொந்தமான மற்ற அலுவலக வேலைகளையும் சிசிடிவி மூலம் கண்காணித்துக்கொண்டும், மீட்டிங் என்று வரும்போது வீடியோ கால் மூலம் சிறப்பாக அலுவலகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

தன் நோயின் நிலை குணமாக மேலை நாட்டில் இதற்கான மருந்து இருப்பதாகவும், அங்கு ஆதி சிகிச்சை எடுப்பதற்கும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

ஆனால், ஆதி தன்னை ஒதுக்கியவர்கள் முன், தான் இருக்கும் இந்த நிலையிலேயே தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒருவளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தோடு இருந்தான். அதன் பிறகே தனக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கூறி, அவன் பெற்றோர் எவ்வளவு எடுத்து சொல்லியும் மறுத்துவிட்டான்.

அவன் இவ்வளவு நாள் பொறுத்து இருந்ததற்கு பலனாகத்தான் சங்கவியை திருமணம் செய்ய போகிறான். அவனுடைய அலுவலகத்தில் தொழில் பற்றி தெரிந்துகொள்ள தன் ஒரே வாரிசான சங்கவியை, ஆதியின் கம்பெனியில் சேர்த்திருந்தனர் சங்கவியின் பெற்றோர்.

முதலில் சங்கவியும் ஆதியைப் பார்த்து அருவருப்படைந்தால்தான். ஆனால் பின்னாலில் அவன் அலுவலகத்தில் தான் அவளுடைய வேலை என்று முடிவாக வேறு வழியில்லாமல் அவனுடன் பேசி பழக வேண்டி இருந்தது.

சிறிது நாளில் இருவரும் நண்பர்கள் என்ற முறையில் பழக ஆரம்பிக்க, சிறிது நாளில் சங்கவியை ஆதிக்குப் பிடித்துப்போக, தன் காதலை சொல்லாமலேயே அவளுடன் பழகி வந்தான்.

சங்கவியும் மற்றவர்களைப் போல் அல்லாமல் அவனிடம் நன்றாகப் பழகவே, அவளும் தன்னை விரும்புவதால்தான் தன்னுடன் நன்கு பழகுகிறாள் என்று எண்ணிவிட்டான். ஆதி தன்னை விரும்புவது சங்கவிக்கும் தெரியும். ஆனால் அவளோ தன் வேலை முடியும் வரை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டுப் போய்விடலாம் என்று அவனுக்குத் தகுந்தாற்போல் அவளும் நடந்துகொண்டாள்.

ஆதியின் அப்பாவும், சங்கவியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஆதியின் அப்பா இவனிடம் சங்கவியை திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்க, ஆதிக்கும் மிகுந்த சந்தோசத்தில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான்.

இதை அவன் பெற்றோரும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால், ஆதியின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என்று திருமண ஏற்பாட்டை சீக்கிரமாக நடத்திக்கொண்டிருந்தனர்.

சங்கவி வீட்டில் அவள் அப்பாவின் பேச்சுக்கு எதிர் பேச்சு கிடையாது. ஆகையால் அவள் இந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லியும், அவளை மிரட்டி இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார்.

வேறு வழி இல்லாமல் இந்தத் திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தாள் சங்கவி. எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் அல்லது ஆதியின் தம்பி கதிரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள்.

ஆமாம் ஃபிரெண்ட்ஸ், சங்கவி ஆதியின் கம்பெனியில் ட்ரைனியாக வேலை செய்ய சம்மதித்ததே கதிர்-க்காகத்தான். ஆனால் அவனுக்கு சங்கவியைக் கண்டால் சுத்தமாகவே ஆகாது.

அவளின் திமிர் பேச்சும், மற்றவரை நடத்தும் விதமும், தேவை என்று வந்துவிட்டால் தன்னை சுற்றி இருப்பவர்களை தனக்கு ஏற்றவாறு ஆட்டிப்படைப்பவள். இவள் தன் அண்ணன் ஆதியை திருமணம் செய்ய போகிறாள் என்று கேள்விப்பட்டதும், இந்தத் திருமணத்தை நிறுத்த கதிர் முயற்சிக்க, அப்போதுதான் தன் அண்ணன் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான், அதுவும் சங்கவியை விரும்புகிறான் என்று தெரிந்ததும் அமைதியாகிவிட்டான். இத்தனை நாள் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது திருமணம் செய்ய சம்மதம் சொல்லிவிட்டான், அதுவும் சங்கவியை திருமணம் செய்கிறேன் என்று தெரிந்தும் தன் அண்ணா மீது கொண்ட பாசத்தால் அமைதியாகிவிட்டான் கதிர்.

மணமகன் அறையில் ஆதி தன் திருமணத்திற்கு ஆர்வமாகத் தயாராகிக்கொண்டிருந்தான். அவனை கிண்டல் செய்து கொண்டு, அவனின் மிக நெருங்கிய நண்பன் விக்கி ஆதியை தயார் செய்துகொண்டிருக்க, அப்போது அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்க, யார் என்று நினைத்தவன், உள்ளே வாங்க என்று கதவைப் பார்க்க, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவரைப் பார்த்து ஆதியின் முகம் பிரகாசமாக மலர்ந்தது.

உள்ளே சிரித்த முகத்தோடு, பன்னீர் ரோஜா நிறத்தில் சிவப்பு நிற பட்டுச் சேலை, அதற்கு ஏற்றார் போல் பச்சை நிற ப்ளவுசில், ஒரு மெல்லிய சிறிய செயின் மட்டும் அணிந்து, அழகாக தலை பின்னலிட்டு, அதில் ஒற்றை ரோஜா ஒன்றை வைத்து, அழகுப் பதுமையாய் உள்ளே தன் குடும்பத்துடன் வந்தாள், நம் கதையின் நாயகி துர்கா. அவள்தான் நம் ஹீரோவின் காலேஜ் தோழியும், அவரது ஆபிஸில் பர்சனல் அசிஸ்டன்ட்டுமான நம்முடைய நாயகி துர்கா. 🌷

“ஹே துர்கா, உள்ளே வா….” என்று எழுந்து சென்று அவளின் கை பிடித்து அழைத்து வந்தவன், அவளுடன் வந்த அவளுடைய அம்மா, அப்பாவையும், அவள் தங்கை கீர்த்தியையும் உள்ளே அழைத்து அமர செய்தான்.

ஆதி உள்ளே அழைத்து வந்து அவர்களை அருகில் இருந்த சோபாவில் அமரவைத்தான். என்னதான் அவன் மிகவும் எளிமையாகவும், நெருக்கமாகவும் அவர்களுடன் பழகினாலும், அவன் தங்களிடம் இவ்வளவு அன்புள்ளமாக இருப்பது அவர்களுக்கு சிறிது சங்கோஜமாகத்தான் இருந்தது. தயக்கத்தினுடைய அங்கு அமர்ந்திருந்தனர்.

ஆதியிடம் வந்த துர்கா, “என்ன ஆதி, ரெடி ஆயாச்சா? உன்னுடைய நீண்ட நாள் ஆசை, அதுவும் நீ நினைச்ச பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கப் போற, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள் துர்கா.

அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்த ஆதி, “ஆமாம்” என்பது போல சிரித்துக்கொண்டே தலையை ஆட்டியவன், “ஏய் துர்கா, எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்றியா?” என்றான். “என்ன? என்னடா இப்படிக் கேட்கிற? என்னன்னு சொல்லு. நீ எதுவும் கேட்டு நான் இதுவரைக்கும் செய்யாம இருந்திருக்கேனா என்ன? வேணும்னு சொல்லு நான் செய்கிறேன், இப்பவே” என்றாள் துர்கா.

“அது.. அது வந்து…. நான் ஒரு கிப்ட் தரேன். அதைக் கொண்டு போய் நீ நான் கொடுத்ததாகச் சொல்லி சங்கவிகிட்ட கொடுத்துட்டு வர்றியா?” என்றான். “என்ன ஆதி, கல்யாணத்துக்கு முன்னயே என்னைத் தூது அனுப்புறியா?” என்று அவனை கிண்டல் செய்தவள், “சரி கொடு, நான் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு, அவளுடைய அம்மா, அப்பா, தங்கை மூவரையும் பார்த்து, “அப்பா நீங்க வெளியே இருங்க, நான் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்து உங்களை அங்க வந்து பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு, ஆதியிடம் கிபிட்டை வாங்கிக்கொண்டு சந்தோசமாக சங்கவி அறைக்குச் சென்றாள்.

சங்கவி அறைக்கு வந்த துர்கா, ஒரு வித தயக்கத்தோடு அவள் அறையின் கதவை தட்டினாள். அறைக்கதவை தட்டி சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து கதவைத் திறந்து, “யார்?” என்பது போல் அவளைப் பார்க்க, “சங்கவி மேடம் பார்க்கணும்” என்றாள் துர்கா.

அவள் கையில் ஒரு கிப்ட் உடன் நின்றிருப்பதைப் பார்த்து, அந்தப் பெண் திரும்பி சங்கவியைப் பார்த்து, “உன்னைப் பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறாள்” என்று கூற, “யார்?” என்று எட்டிப் பார்த்த சங்கவி, அங்கே துர்கா கையில் ஒரு கிப்ட் உடன் நின்று இருப்பதைப் பார்த்ததும், “இவளா…..” என்று இளக்காரமாக கூறியவள், “வரச் சொல்லு” என்றாள்.

உள்ளே வந்த துர்கா, “ஹலோ மேடம், ஆதி சார் இந்த கிப்ட் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாரு” என்று கூறி, ஆதி கொடுத்த கிப்ட்டை சங்கவி முன் நீட்டினாள்.

அதை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, அவளிடம் இருந்து வாங்கி பக்கத்திலிருந்த ஒரு டேபிள் மீது வீசினால். இதைப் பார்த்த துர்காவுக்கு ஏதோ போல ஆகிவிட்டது. “ஆதிக்கு எவ்வளவு ஆசையாக இந்தக் கிப்ட் சங்கவிகிட்ட கொடுக்கச் சொன்னார். ஆனா, இந்தப் பொண்ணு என்னடான்னா அவன் கொடுக்கிறதை கொஞ்சம் கூட மதிக்காம இப்படி குப்பையைப் போல தூக்கிப் போடுறாளே” என்று மனதிற்குள் கஷ்டப்பட்டாள் துர்கா.

துர்காவிடம் இருந்து கிப்ட்டை வாங்கி வைத்துவிட்டுத் திரும்பிய சங்கவி, “நீ இன்னும் போகலையா இங்க இருந்து? அதான் அவன் கொடுக்கச் சொன்னதைக் கொடுத்துட்டு இல்ல, வந்த வேலை முடிஞ்சிடுச்சா? முதல்ல இங்கிருந்து கிளம்பு. உன்னைப் பார்த்தாலே எனக்குக் கடுப்பாக வருது” என்றாள் சங்கவி.

“சாரி மேடம், நீங்க எதுவும் சொல்வீங்களோ அப்படிங்கறதுக்காகத்தான் நின்னுட்டு இருந்தேன். ஆதி சார் கிட்ட நான் போய் ஏதாவது சொல்லனுமா?” என்று கேட்க, “அவன் கிட்ட போயி நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் அவனிடம் எங்கே, எப்போ, எதைச் சொல்லவேண்டுமோ, அதை சொல்லிக்கிறேன். நீ வந்த வேலை முடிஞ்சதா, கிளம்பு” என்றாள் சங்கவி எரிச்சலோடு.

துர்கா எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தவள், மனதிற்குள் ஏதோ நெருடலாகத் தோன்ற, “ஆதி எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்றான்? இவ என்னடான்னா ஆதி பேரைச் சொன்னாலே எரிஞ்சு விழறா. அப்புறம் எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பா?” என்று யோசித்தாள். “அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சின்னதா சண்டை ஏதோ இருந்திருக்கலாம். நான் தான் அதை பெரிசா எடுத்துட்டு அதை இதை யோசிக்கிறேன்” என்று நினைத்துக்கொண்டு நேராக ஆதியின் அறைக்குச் சென்றாள். இவள் வரவுக்காக ஆவலோடு வாசலிலேயே காத்திருந்த ஆதி, வேகமாக துர்கா உள்ளே வந்ததும் அவள் அருகில் வந்தவன், “கிப்ட்டா சங்கவிகிட்ட குடுத்தியா? அவ பிரிச்சுப் பார்த்தா? இல்ல ஏதாவது சொன்னாளா?” என்று கேள்வியைக் கேட்க, “ஹே… ஆதி… பொறு, பொறு” என்ற துர்கா, “நான் கொண்டு போய் கிப்ட் கொடுத்தேன். அவங்க அதை ஆசையா வாங்கிட்டாங்க. ஆனா, சுத்தி நிறைய பேர் இருந்ததால, நான் அப்புறம் யாரும் இல்லாதப்போ தனியா அதைப் பிரிச்சுப் பார்த்துட்டு ஆதி கிட்டயே சொல்லிக்கிறேன், நீ போ என்று சொல்லி என்னைப் அனுப்பி வச்சிட்டாங்க” என்று கூறினாள் துர்கா.

“அப்படியா? அப்போ சங்கவி இன்னும் கிஃப்ட் பார்க்கவே இல்லையா?” என்றான் சோகமாக ஆதி. “சரி பரவாயில்லை விடு” என்று கூறியவன் சோகமாக சேரில் அமர்ந்திருக்க, அப்போது உள்ளே வந்த ஆதியின் அம்மா, “டேய் ஆதி, சீக்கிரம் ரெடி ஆகுடா… ஐயர் இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாரு, மணமேடைக்கு நீ வரணும் இல்லையா?” என்று கூறியவர், அருகில் துர்கா நின்றிருப்பதைப் பார்த்தவர், “துர்கா…. நீ எப்போ வந்த? நான் உன்னைப் பார்க்கவே இல்லையே இவ்வளவு நேரம்” என்று கூறியவர்.

“ஆமா, இது என்ன? நம்ம வீட்டுக்கு கல்யாணத்துக்கு வந்துட்டு, கழுத்துல எப்படி ஒரு சின்ன செயின் மட்டும் போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கு?” என்று கூறியவர், தன் கழுத்தில் போட்டிருந்த ஒரு பெரிய ஆரத்தைக் கழட்டி துர்கா கழுத்தில் போட்டுவிட்டார்.

அவர் தன் கழுத்தில் இவ்வளவு பெரிய ஆரத்தைப் போட்டுவிட்டதும், பதறிய துர்கா, “ஐயோ அம்மா, எனக்கு இதெல்லாம் வேண்டாமா? இதைப் போட்டுக்கோங்க” என்று ஆரத்தைக் கலட்டப் போக, அவளைக் கடிந்துகொண்ட விசாலாட்சி, “அம்மா சொன்னா கேக்க மாட்டியா? நீ பேசாம நான் கொடுக்கிறதைப் போடு” என்று கூறியவர், தன் கையில் இருந்த இரண்டு வைர வளையல்களையும் கழட்டி துர்காவின் கையில் போட்டுவிட்டார். “பாரு, எவ்வளவு ஒல்லியா இருக்க நீ? இந்த வளையல் உன்னோட இடுப்புக்கு ஒட்டித்தனமாக போட்டுவிடலாம் போல இருக்கே. இவ்வளவு பெரிய ஒல்லியா இருந்தா என்ன செய்யறது?” என்று கிண்டல் செய்தார்.

“போங்க அம்மா… உங்களுக்கு எப்பவுமே என்னைப் பார்த்தா கிண்டல் செய்யறதேதான் வேலையா போச்சு. போங்க, ஐயர் உங்களை கூப்பிடுகிறார் பாருங்கள். போய் கல்யாணம் வேலையை முன்னாடி நின்னு பாருங்க. நான் ஆதியைக் கூட்டிட்டு வரேன். இல்ல வேற ஏதாவது வேலை இருந்தா எனக்குச் சொல்லுங்க, நான் செய்கிறேன்” என்றாள் துர்கா.

“ஆமாம்டா, ஒரு சின்ன வேலை இருக்கு. அம்மா கூட வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?” என்று கேட்க, “என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க? வாங்க, என்ன வேலைன்னு சொல்லுங்க நான் செய்றேன்” என்று கூற, அவளை அழைத்துக்கொண்டு, ஆதிக்கு சீக்கிரம் வரச் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு இருவரும் வெளியே சென்றனர்.

துர்காவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு வந்த விசாலாட்சி, ஐயரிடம், “ஐயரே, இந்தப் பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணுதான். நீங்க இந்தப் பூஜை விஷயமாக எது சொன்னாலும் இவள்கிட்ட சொல்லுங்க. எல்லாத்தையும் பொறுமையா இருந்து செஞ்சு கொடுப்பாள் உங்களுக்கு” என்று கூறி அவளைக் கை காட்டிவிட்டு, “துர்கா, நீ இங்க கொஞ்சம் பார்த்துக்க, நான் போய் வந்தவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்துடறேன்” என்று கூறி மணமேடையை விட்டு இறங்கிச் சென்றார்.

ஐயர் துர்காவிடம் தீப்பெட்டி கொடுத்து, “இந்தம்மா, பார்க்கிறதுக்கு நல்லா லட்சுமி கடாட்சமா இருக்க. போய் அந்த ரெண்டு விளக்கையும் மனசார வேண்டிட்டு, இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நினைச்சு விளக்கேத்திட்டு வாம்மா” என்று கூறி அவளிடம் தீப்பெட்டியை கொடுத்தார்.

அவரிடம் தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு, விளக்கு நின்ற இடத்தில் சென்று, அருகில் இருந்த பிள்ளையார் மஞ்சளைப் பிடித்து வைத்திருந்த பிள்ளையாரைப் பார்த்து மனமார வேண்டி, “என்னோட ஆதிக்கு இந்த கல்யாணம் நல்லபடியா நடந்து, அவன் சந்தோஷமா இருக்கணும் கடவுளே. அவன் சந்தோஷமா இருக்கணும்னா இந்த கல்யாணம் நடக்கணும். அதுக்கு நீங்கதான் அருள் புரியணும் விநாயகா” என்று மனமாற வேண்டிக்கொண்டவள் விளக்கினை ஏற்றினாள்.

இதே போல மற்ற திருமண வேலைகளை ஐயர் கூட பூஜை வேலைகளையும் துர்கா இழுத்துப்போட்டுக்கொண்டு மேடையின் கீழும் மேலும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அலைந்து திரிந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.

திருமணத்துக்கு வந்திருந்த விசாலாட்சியின் உறவினர்களும், நண்பர்களும், அவருடைய தோழிகளும் துர்காவைப் பார்த்து, “யாரு விசாலாட்சி அந்தப் பொண்ணு? நல்லா சிட்டு மாதிரி இங்கேயும் அங்கேயும் ஓடி ஓடி வேலை பார்த்துட்டு இருக்கா. உனக்கு இந்த மாதிரிப் பொண்ணு தானே பிடிக்கும்? நீ எப்படி அந்த சங்கவியை நம்ம ஆதிக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதித்த?” என்று கேட்டனர்.

அவ்வளவு நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்த விசாலாட்சி, அவர்கள் இப்படிக் கேட்டதும் சோகமானவர் ஆனார். “என்ன பண்றது ஹேமா? என்னோட பையனுக்கு அந்த சங்கவி தான் பிடிச்சிருக்கு. அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏற்றவளே கிடையாது. அவளைப் பார்த்தாலே எனக்கும் என் குடும்பத்தில் இருக்கிற யாருக்குமே பிடிக்கல. ஆனால் நம்ம ஆதிக்கு பிடிச்சிருக்கு. அவன் சந்தோஷம் தானே எங்கள் சந்தோஷமும்.

அவன் இந்த கல்யாணம் நாங்க பண்ணிக்கணும்னு சொன்னதுமே சரின்னு சொல்லிட்டான். எங்களுக்கு அதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவசரத்துல என் வீட்டுக்காரர் அவரோட நண்பர்கிட்ட வாக்கு கொடுத்துட்டாரு, அவர் பொண்ணை என் பையனுக்குக் கட்டிக்கொடுக்கிறேன்னு சொல்லிட்டு. சரி, ஆதி இப்படியும் கல்யாணத்துக்கு மாட்டானான்னு நானும் பொறுமையா இருந்துட்டேன். ஆனா கடைசில ஆதி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு அப்புறம், அவனோட ஆசைக்கு நான் என்றைக்கு குறுக்கே நின்றிருக்கேன்?

அவன் சந்தோஷம்தான் எங்கள் எல்லாரோட சந்தோஷமும். அவனுக்கு அந்தப் பொண்ணுதான் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணனும்னு சொன்னா நாங்க கட்டிவெச்சுருவோம்.

ஆனா என்ன, இவன் துர்கா கூட அவ்வளவு நெருக்கமாப் பழகிப் பேசுவதைப் பார்க்கிறப்ப, இவங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு நாங்க நினைச்சிருந்தோம். ஆனா அவனுக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லை போல. துர்காவுக்கும் அந்த மாதிரி எண்ணம் ஒண்ணுமே இல்ல போல. அப்படி இருக்கிறப்ப நான் எப்படி இவங்க ரெண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைக்க முடியும்?” என்று கூறினார் விசாலாட்சி.

“சரி விடுங்க. அந்த ஆண்டவனுக்குத் தெரியும் யார் யாருக்கு எங்கே முடிச்சுப் போட்டு இருக்காருன்னு. அதுதானே நடக்கும்? நம்ம நினைச்சது எல்லாம் நடந்துருச்சுன்னா, இப்போ எதுக்கு அந்த கடவுள்னு ஒருத்தர் இருக்காரு? அவருக்குத் தெரியும் யாருக்கு எங்கே நிச்சயம் இருக்கு, அங்க மட்டும்தான் அது நடக்கும்”னு சொல்லிட்டு, “சரி வாங்க, நீங்க வந்து முன்னாடி உட்காருங்க, நான் போய் வந்த உங்களை எல்லாம் பார்த்துட்டு வரேன்” என்று கூறி அங்கிருந்து சென்றார்.

சிறிது நேரத்தில், “மணமகன் அழைச்சுட்டு வாங்கோ…” என்று ஐயர் கூற, மேடைக்கு அவனது நண்பன் விக்கி, ஆதியை அழைத்து வந்து அமர வைத்தான். ஆதி வந்ததும் ஐயர் திருமண சடங்குகளை ஆரம்பித்தார். ஒவ்வொரு சடங்குகளாக முடித்து மணப்பெண்ணையும் அழைத்து வரச் சொல்ல, அப்போது அங்கே வந்த சங்கவியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர்.

EPISODE 2

ஆதி, துர்காவைத் தன் அறையிலிருந்து அழைத்து வந்த விசாலாட்சி, ஐயரிடம் பூஜைக்குத் தேவையான வேலைகளை எல்லாம் துர்காவிடம் கேட்டு வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் தன் தோழிகளுடன் துர்காவைப் பற்றியும், ஆதி திருமணம் செய்துகொள்ளப் போகும் சங்கவியைப் பற்றியும் பேசி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்.

தன் நண்பன் விக்கியுடன் மணமேடைக்கு வந்த ஆதி, மேடையில் அனைவருக்கும் வணக்கம் சொல்லி வந்திருந்தவர்களை வரவேற்றவன், பின் அமர்ந்து ஐயர் கூறுவது போலத் திருமணச் சடங்குகளைச் செய்தான்.

பின் ஐயர், “கல்யாணப் பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ” என்று கூற, சங்கவியை அழைக்க அவள் அறைக்குச் சென்ற பெண் அவள் அறைக்கதவைத் தட்ட, கதவைத் திறந்த பெண் “என்ன?” என்று அவளைக் கேட்க, “நேரமாச்சு, பெண்ணை அழைத்து மணமேடைக்கு வரச் சொன்னாங்க ஐயர்” என்றாள்.

“அப்படியா, சரி நீ போ. நான் பெண்ணை கூட்டிட்டு வரேன்” என்று கூறி அந்தப் பெண் இவள் பதிலுக்குக் காத்திராமல் கதவைச் சாத்திவிட்டாள். மணமேடையில் ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டிருக்க, “எங்கம்மா பொண்ணு இன்னும் வரலையா? நேரம் ஆகுது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, “யாரம்மா நீங்க? போய் பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ, முகூர்த்தத்திற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு” என்று கூற, ஐயர் அருகில் நின்றிருந்த சங்கவியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட, ஆதி ஒன்றும் புரியாமல் தன் அருகில் நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்க்க, அங்கே சங்கவி மணப்பெண் அலங்காரத்தில் இல்லாமல், சாதாரணமாக ஒரு ஜீன்ஸும் பனியனும் போட்டு நின்றிருந்தாள்.

மணப்பெண் அலங்காரத்தில் இல்லாமல் அவள் அப்படி நின்றிருப்பதைப் பார்த்த ஆதிக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உடனே மேடையிலிருந்து எழுந்தவன், “என்ன சங்கவி? என்ன ஆச்சு? ஏன் இப்படி டிரஸ் பண்ணிட்டு இருக்க? கல்யாணத்துக்கு ரெடியாகாம ஏன் இப்படி வந்து நிக்கிற?” என்று கேட்டான் ஆதி.

அதற்குள் மேடைக்கு வந்த ஆதியின் பெற்றோரும், சங்கவியின் பெற்றோரும் சங்கவியைப் புரியாமல் பார்க்க, சங்கவியின் அருகில் வந்த சங்கவியின் அப்பா, “நீ சங்கவி என்ன ஆச்சு உனக்கு? இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்து நின்னுட்டு இருக்க? கல்யாணத்துக்கு எப்படி டிரஸ் பண்ணிட்டு வரணும்னு உனக்குத் தெரியாதா என்ன? இது என்ன?” என்று அவளை அதட்டினார்.

அவர் பேசுவதைக் காதில் வாங்கிக்கொள்ளாத சங்கவி, “இப்போது இத்தனை பேர் முன்னால் என் விருப்பத்தைச் சொன்னால் தான் என்னுடைய கல்யாணத்தை நிப்பாட்டுவாங்க. அப்படி இல்லைன்னா என் அப்பா எதையாவது பேசி என்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருவாரு” என்று மனதில் நினைத்தவள், அவரை சட்டை செய்யாமல் ஆதியைப் பார்த்து, “ஆதி, எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. எங்க அப்பா என்னைக் கட்டாயப்படுத்தினதுனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்” என்று கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட ஆதி அதிர்ச்சியானவன், “என்ன சங்கவி சொல்ற? இந்தக் கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா? நீ சந்தோசமா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொன்னதனால் தானே நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். எப்படித்தான் இருந்தாலும் நீயும் நானும் லவ் பண்ணிட்டு தானே இருக்கோம்?” என்று ஆதி கேட்க,

அவன் “நீயும் நானும் லவ் பண்ணிட்டு தானே இருக்கோம்” என்று சொன்னதும் சங்கவி அவனை திரும்பிப் பார்த்து, “வாட்? நீயும் நானும் லவ் பண்றோமா?… அப்படின்னு உனக்கு யார் சொன்னது? நான் வந்து உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனா? நீ இப்படி நினைச்சிட்டு இருக்குறதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது.

எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க துளி கூட விருப்பமே இல்லை. என் அப்பா பிசினஸ் கத்துகிறதுக்காக உன் ஆபீஸ்ல உனக்கு கீழ தான் வேலை பார்க்கணும்னு சொன்னப்ப, வேற வழி இல்லாம தான் உன் கூட சகஜமா சிரிச்சு பேசி பழகினேன். என் வேலை ஆகணும்னு தான் நான் அமைதியா நீ என்கிட்ட வழிஞ்சு வர அப்போ எல்லாம் சும்மா இருந்தேன். அதுக்காக நான் உன்னை லவ் பண்றேன்னு அர்த்தம் இல்லை” என்றாள்.

“எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பமே இல்லை. நான் என் அப்பாகிட்ட எவ்வளவு சொல்லி பாத்துட்டேன். ஆனா அவர் நான் சொல்றதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதனால்தான் வேற வழி இல்லாம தாலி கட்டுற சமயம் வரைக்கும் நான் காத்திருந்தேன்.

எனக்குப் பிடிச்சது பிடிக்காதது எதுவா இருந்தாலும் எனக்கு விருப்பப்படி, நான் நினைச்ச படி தான் நடக்கணும். அப்படி நடக்க நான் என்ன வேணா செய்வேன்” என்று கூறியவள், “ஓகே, டன்… என் வேலை முடிஞ்சுது, நான் கிளம்புறேன்” என்று கூறி மேடையை விட்டு இறங்க போனவளை, சங்கவியின் அப்பா அவள் கையைப் பிடித்து நிறுத்தி, அவளை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றார்.

அவளை அறைக்குள் விட்டு தானும் வந்து அரைக்கதவை சாற்றிவிட்டு திரும்பி சங்கவியை “பளார்” என்று ஓங்கி அறைந்தார். அவர் அறைந்ததில் சங்கவி அருகில் போய் கீழே விழுந்தாள்.

கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவள் அப்பா அடித்த இடத்தை தேய்த்து பார்த்துக்கொண்டே எழுந்து நிற்க, அவர் சங்கவியிடம், “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நீ?… உனக்காக நான் அந்த வெங்கடாசலத்திடம் அதையும் இதையும் சொல்லி, இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கி அதற்கு முன் உன்னை அந்த ஆதியின் கம்பெனிக்கு அனுப்பி, அவனுக்கு உன்னைப் பிடிக்க வைக்க நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நான் என்னவென்று சொல்வது?

அந்த வெங்கடாசலம் குடும்பத்திற்கு எத்தனை சொத்துக்கள் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? அவன் எவ்வளவு நாடுகளில் பிசினஸ் செய்து பேரும் புள்ளியாக இருக்கிறான் என்று உனக்குத் தெரியுமா? நாம் நினைத்தாலும் நம்முடைய சொத்துக்கள் எல்லாம் அவர்கள் சொத்துக்களுக்கு முன்னால் ஒரு சிறு துரும்பு தான்.

அவ்வளவு பணக்காரன், ராஜ வம்சத்து வாரிசான அந்த ஆதியை உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க நான் எவ்வளவு சிரமப்பட்டு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறேன்.

நீ என்னவென்றால் உனக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று அதனை பேர் முன்னாலும் வந்து சொல்லிக்கொண்டு இருக்கிறாய். உனக்கு என்ன பைத்தியமா?” என்று மறுபடியும் அவளை அறைய,

“அப்பா…. எனக்கு அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை. அவன் உடம்பில் இருக்கும் அந்த சிவப்பு கொப்புளங்களை பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது..

அப்படி இருக்க நான் எப்படி அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியும்?” என்று கூறிய சங்கவியைப் பார்த்து, “அவன் தான் திருமணம் ஆனதும் சென்று அந்த கொப்புளங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாக கூறினானே” என்றார்.

“அப்படியும் உனக்கு அவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றால், அவன் தம்பியை உன் கைக்குள் போட்டுக்கொள். எப்படியோ அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் நமக்கே வந்து சேர வேண்டும். ஞாபகம் வைத்துக்கொள்.

இப்போ நீ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால், என் சொத்தில் இருந்து ஒரு நயா பைசா கூட உனக்குக் கொடுக்க மாட்டேன்” என்று அவர் கூற, இதுவரை அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சங்கவி, “எப்படியும் தனக்கு ஆதியை எனக்கு பிடிக்கப் போவதில்லை. அவனை இப்போது அப்பா சொல்வது போலத் திருமணம் செய்து கொண்டு, அவன் சொத்துக்களை எல்லாம் அனுபவிப்பதற்கு நான் ஒரு தியாகம் மட்டுமே செய்திருக்க வேண்டும். அந்த அசிங்கம் பிடித்த ஆதியை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

அவன் தம்பிக்கும் வேறு ஒருவனைப் பார்த்து திருமணம் செய்து வைக்கக் கூடாது. அப்படியே அவன் திருமணம் செய்வதாக இருந்தால் அந்தப் பெண் என் கைக்குள் இருப்பவளாக இருப்பது தான் எனக்கு நல்லது.

அண்ணனை திருமணம் செய்துகொண்டு முடிந்தால் தம்பியை என் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று யோசித்தவள்.

அவள் அப்பாவிடம், “அப்பா, நீங்க சொல்றது கரெக்ட் தான். எனக்கு அந்த ஆதி சுத்தமா பிடிக்கல. ஆனால் அவனோட தம்பியைத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க சொன்ன மாதிரி இப்போதைக்கு இந்த ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

அதுக்கப்புறம் என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன். எனக்கு இந்த கல்யாணத்துக்கு முழு சம்மதம் என்று நீங்க போய் சொல்லுங்க. வித்தின் டென் மினிட்ஸ் நான் ரெடி ஆகி வரேன்” என்று கூறி அவரை வெளியே அனுப்பி வைத்தாள்.

அவர் சென்றதும் சங்கவி தன் அறைக்குச் சென்று தானே மேக்கப் போட்டு 10 நிமிடத்தில் மணப்பெண் அலங்காரத்தில் மேடைக்கு வந்தாள். அவள் வருவதற்குள் சங்கவியின் அப்பா அங்கு இருப்பவர்களிடம் பேசி சமாதானம் செய்து, அவள் ஏதோ புரியாமல் செய்துவிட்டாள் என்று அங்கிருப்பவரிடம் மன்னிப்பு கேட்பது போல நடித்து, நாடகம் ஆடி அனைவரையும் சம்மதிக்க வைத்தார்.

ஆதியின் மனதில் இப்போது ஏதோ ஒரு நெருடலோடு தன் அறையில் அமைந்திருந்தான். “சங்கவிக்கு என்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று தானே சொன்னாள்? இப்போது அப்போ இத்தனை நாள் அவள் வேலை ஆக வேண்டும் என்று என்னிடம் நெருங்கிப் பழகி இருக்கிறாளா?” என்று யோசித்துப் பார்த்தவன் அதிர்ச்சி ஆனான்.

“கடைசியில் இவளும் மற்றவர்கள் போல என்னுடைய சொத்திற்கு ஆசைப்பட்டுதான் இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லி இருக்கிறாளோ?… இப்போது நான் என்ன செய்வது? எப்படி இந்தத் திருமணத்தை நிறுத்துவது? இப்படிப்பட்டவளை நான் திருமணம் செய்துகொண்டு என் வாழ்க்கையை நாசம் செய்வது போதாது என்று என் குடும்ப கெளரவத்தையும், என் குடும்பத்தினரையும் நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை” என்று மனதில், “இப்படிப்பட்டவளை நான் கண்டிப்பாகத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும்” என்று எண்ணியவன், தன் தம்பி மற்றும் நண்பன் இருவரையும் போன் செய்து தன் அறைக்கு வரச் சொன்னான்.

மண மேடையில் சங்கவி தயாராகி வந்து வெகு நேரம் காத்திருந்த பின்னும் தன் அறையில் இருந்து ஆதி வராததால் அனைவரும் பதட்டமாக நின்றிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஆதி தன் அறையில் இருந்து அதே மாப்பிள்ளை கோலத்தில் வெளியே வந்தான். அவன் மணவறைக்கு வந்து நிற்க, சங்கவியின் அப்பா, “வாங்க மாப்பிள்ளை, என் பொண்ணு பேசினதை எதுவும் மனசில் வெச்சுக்காதீங்க மாப்பிள்ளை. அவளுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று அவனிடம் கெஞ்சுவது போல நடித்தார்.

அவரை சட்டை செய்து கொள்ளாத ஆதி தன் தாய் தந்தையிடம் சென்றான். அவர்கள் வாடிய முகத்தைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்தான். அவன் அப்பாவிடம், “அப்பா” என்று அவன் ஏதோ பேச வருவதற்குள், “என்னை மன்னிச்சிருடா ஆதி. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நான் சங்கவியை உனக்குக் கட்டிவைக்க இந்த ஏற்பாடு எல்லாம் செய்தேன்.

ஆனால் இப்படி அந்தப் பொண்ணு அனைவரும் முன்னிலையிலும், உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டாள்.

இப்போதைக்கு இந்தத் திருமணம் நின்றால், நம் முன்னோர்கள் இவ்வளவு நாள் சேர்த்து வைத்த அந்தஸ்து, கெளரவம் எல்லாம் காற்றோடு காற்றாகப் போய்விடும். எனக்கு இப்போது இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. என்னதான் சங்கவியை சமாதானம் செய்து உனக்குத் திருமணம் செய்து வைத்தாலும், உன்னைப் பிடிக்காத ஒருவளுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

அவர் அருகில் நின்றிருந்த விசாலாட்சி என்ன கூறுவது என்று தெரியாமல் அழுதுகொண்டு நின்றிருந்தார். அவன் அம்மாவிடம் வந்தவன், “அம்மா, நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டான்.

“உன்னுடைய சந்தோசம்தான் ஆதி, எனக்கும் சந்தோஷம். நீ என்ன முடிவு எடுத்திருந்தாலும் எனக்கு சம்மதம் தான்” என்றார். அவர் அப்படி கூறியதும், அதுவரை நெருடலோடு இருந்த ஆதியின் மனதில் இப்போதுதான் நிம்மதி பிறந்தது.

அவன் அப்பாவைப் பார்த்தவன் நேராக மணமேடைக்குச் சென்றவன், “சங்கவி, எனக்கு உன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. நீ இங்கிருந்து போகலாம்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்ட அனைவருக்கும் இப்போது மேலும் அதிர்ச்சியையே தந்தது. ஆதி கூறியதைக் கேட்ட சங்கவிக்கு இப்போது பெருத்த அவமானமாக இருந்தது. “இத்தனை பேர் முன்னிலையில் தன்னை வேண்டாம் என்று ஆதி கூறிவிட்டானே” என்று ஆத்திரம் வந்தது அவளுக்கு.

மேடையிலிருந்து எழுந்த சங்கவி, “ஆதி என்ன விளையாடுகிறாயா?” என்று கேட்க, அவளை ஒரு அறைவிட்ட ஆதி, “நான் விளையாடினேனா? இல்லை இவ்வளவு நேரம் நீ என் வாழ்க்கையோடு விளையாடினாயா?” என்று கேட்டான்.

சங்கவியை அறைந்ததும், அவள் அப்பா “ஆதி…” என்று கத்திக்கொண்டு அவன் அருகில் வர, “என்ன சார்? உங்க பொண்ணை இத்தனை பேர் முன்னிலையில் வேண்டாம் என்று கூறி அடித்ததும் உங்களுக்கு கோவம் வருகிறதா?” என்று கூறியவன் அவரை ஒரு முறை முறைக்க, அதுவரை ஆதியின் முன்பு நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தவர் அவனின் இந்த பார்வை அவரை நடுங்க வைத்தது. அவர் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டார்.

ஆதி வந்திருந்த அனைவரிடமும் திரும்பி, “இந்தத் திருமணம் நடக்காது. வந்திருந்தவர்கள் அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள்” என்று கை கூப்பி தலை வணங்கி நின்றான்.

தன் மகனை இதுவரை இப்படி பார்த்திராத விசாலாட்சி தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே கீழே சரிய, “அம்மா…” என்று ஓடிச் சென்று அவரைத் தாங்கிப் பிடித்தாள் துர்கா….

EPISODE 3

ஆதி தன் அறையிலிருந்து வெளியே வந்தவன், நேராக அவன் அப்பா, அம்மாவிடம் சென்று அவர்களிடம் பேசிவிட்டு மணமேடைக்கு வந்தவன், சங்கவியைப் பார்த்து “எனக்கு உன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை” என்று கூறினான். அதைக் கேட்ட சங்கவி அதிர்ச்சி அடைந்தவள், எழுந்து வந்து அவனிடம் சண்டையிட, அவளை அறைந்த ஆதி அவள் செய்த செயலையே கூறி அவளைத் திட்ட, அவளுடைய அப்பாவும் சங்கவிக்குத் துணையாக வந்து நின்று ஆதியிடம் சண்டையிட, அவரைத் தன் பார்வையாலே அடக்கிய ஆதி, “இப்போ நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுனீங்கன்னு நான் சொல்லட்டுமா?” என்று கூறியவன்,

திரும்பி தன் நண்பன் விக்கியைப் பார்க்க, அவன் மண்டபத்தில் மணமகன், மணப்பெண் திருமணத்தை ஒளிபரப்புவதற்காக வைத்திருந்த டிவியில் தான் கொண்டு வந்திருந்த பென்டிரைவை இணைத்து ஆன் செய்தான். அங்கிருந்த அனைத்து டிவியிலும் அது பெரியதாகக் காட்டப்பட்டது.

அதில் சங்கவியும் அவள் அப்பாவும் உள்ளே அறையில் பேசிக்கொண்டிருந்தது ஒளிபரப்பாக, அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி அவர்களைப் பார்க்க, அனைவரின் முன்னிலையும் தங்களை அவமானப்படுத்திய ஆதியைப் பார்த்து முறைத்த சங்கவியும் அவளுடைய அப்பாவும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்தனர்.

அவர்களைப் பார்த்த ஆதி, “இப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து நான் கல்யாணம் பண்ணி என்னோட ராஜ வம்சத்தை அவமானப்படுத்த விரும்பல. எனக்கு என்னோட ராஜ வம்சமும் அதனுடைய பாரம்பரியமும் ரொம்ப முக்கியம்.

இப்படிப்பட்ட ஒரு குணம் உள்ளவள் இந்த ராஜ வம்சத்துக்கு கண்டிப்பா பொருத்தமாகவே இருக்க மாட்டாள். நல்லவேளை எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க சுயரூபம் முழுசும் தெரிஞ்சிருச்சு. இன்னும் ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்க? முதல்ல இங்கிருந்து வெளியே போங்க” என்று மண்டபமே அதிரும்படி கர்ஜித்தான் ஆதி.

அவர்களை வெளியே போகச் சொல்ல, அவன் கூறிய விதத்திலேயே பயந்துகொண்டவர்கள், சங்கவியும் சங்கவியைச் சேர்ந்தவர்களும் மண்டபத்தை விட்டு வேகமாக வெளியே சென்றனர்.

அவர்கள் சென்றதும், ஆதி அங்கு இவர்கள் திருமணத்திற்காக வந்திருந்த தன் சொந்தங்களிடம் கைகூப்பி வணங்கி, “இந்தக் கல்யாணம் நின்றுவிட்டது. அதற்காக நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இந்தக் கல்யாணம் நடக்காது” என்று கூறி தலை வணங்கி அவன் மன்னிப்பு கேட்டான்.

தன் ஆசை மகன் அவ்வாறு அனைவர் முன்னிலையிலும் தலை வணங்கி, கைகூப்பி நின்று மன்னிப்பு கேட்டு நின்றதைப் பார்த்த விசாலாட்சிக்கு மனதில் ஏதோ செய்வது போல இருக்க, தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிய,

அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுவதைப் பார்த்த துர்கா, “அம்மா…..” என்று கத்திக்கொண்டு கையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தாள்.

“அம்மா” என்று கத்திக்கொண்டு துர்கா ஓடுவதைப் பார்த்து ஆதி, “என்ன?” என்று திரும்பிப் பார்க்க, அங்கே அவன் அம்மா கீழே விழுவதைப் பார்த்தவன், அவனும் ஓடி வந்து பிடிக்க, இருவரும் சேர்ந்து விசாலாட்சியைத் தாங்கிப் பிடித்தனர்.

கீழே விழப்போன தன்னைத் தன் மகனும், தனக்குப் பிடித்த பெண்ணும் தாங்கிப் பிடிப்பதைப் பார்த்த விசாலாட்சிக்குச் சிறிது மன நிம்மதியாக இருந்தாலும், வலி தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தார்.

அவரைத் தன் மடி மீது சாய்த்துக்கொண்டு துர்கா, “அம்மா…. என்னம்மா ஆச்சு? ஏன்மா இப்படி ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று கேட்க, அவரால் பதில் பேச முடியவில்லை துர்காவிடம்.

கண்களில் கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டிருக்க, அதைப் பார்த்த ஆதியின் மனதில் கணம் மேலும் கூடியது. “அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா. என்னால தானே உங்களுக்கு இத்தனை வலியும் வேதனையும் வந்துச்சு. ஆரம்பத்திலிருந்து என்னால் மட்டும்தான் உங்களுக்கு எப்பவுமே கஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் நான் எப்படி சரி பண்ண போறேன்னு எனக்குத் தெரியவில்லை” என்று மிகவும் மன வருத்தத்தோடு அவர் கையைப் பிடித்துக்கொண்டு ஆதி பேசினான்.

அவன் அவ்வாறு வருத்தப்பட்டு கூறியதைக் கேட்டு, விசாலாட்சி அவன் வாயைப் பற்றியவள், “அப்படி எல்லாம் பேசாதப்பா. உன்னால எப்பவுமே எனக்குக் கஷ்டம் வந்ததே கிடையாது. எங்களால தான் உனக்கு இப்போ ஒரு நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் கூட பண்ணி வைக்க முடியாமல் போயிடுச்சு.

இப்படி எல்லாரையும் கூட்டி சபையில நின்னு உன்னை எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கும் படியா நாங்க பண்ண காரியத்தினால் தானே நடந்துச்சு?” என்று வருத்தப்பட்டார் விசாலாட்சி.

அவர் வருத்தப்பட்டு ஆதியைப் பார்த்துக்கொண்டிருக்க, அப்போது அவர் அருகில் வந்த வெங்கடாசலம், “விசாலாட்சி, நீ வருத்தப்படாத. இப்பவே இந்த மண்டபத்துல ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து நம்ம ஆதிக்குக் கல்யாணம் பண்ணி வச்சிரலாம்.”

“அவன் கல்யாணம்தான் இப்போ நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்” என்று கூறியவர், “இந்த மண்டபத்தை விட்டு வெளியே போகும்போது, ஆதி தனியாக இல்லாமல் திருமணம் செய்து கொண்டு, தன்னுடன் தன் ஜோடியை அழைத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்து நம் வீட்டுக்கு வரவேண்டும்” என்று தீவிரமாகப் பேசினார் வெங்கடாசலம்.

“ஆதி, நீ சரி என்று சொல்லு. இங்கே எந்தப் பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லு. அந்தப் பொண்ணை நான் எப்படியாவது அவங்களோட அம்மா, அப்பா கிட்ட பேசி உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார் வெங்கடாசலம்.

அவர் அவ்வாறு கூறியதும் ஆதி, “அப்பா, என்ன விளையாடுறீங்களா? இப்போதான் எனக்கு இங்கே கல்யாணம் நின்னுச்சு. அது நின்னு கொஞ்ச நேரம் கூட ஆகாம, அதுக்குள்ள மறுபடியும் ஒரு பொண்ணைப் பார்த்து எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றீங்களே. இது உங்களுக்கு நல்லா இருக்கா?… என்ன இப்படியே விட்டுருங்க. நான் இப்படி நிம்மதியா இருந்துக்கிறேன். எனக்கு இனிமேல் கல்யாணம் அப்படிங்கற வட்டத்துக்குள்ள இருக்க விரும்பல. என் வாழ்க்கையில் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்றான் ஆதி.

அவன் அவ்வாறு விரக்தியாகப் பேசியதைக் கேட்ட விசாலாட்சி மேலும் வெடித்து அழ ஆரம்பித்தார். “டேய் ஆதி, அப்படி எல்லாம் சொல்லாதடா. எவளோ ஒருத்தி பண்ணினதுக்காக எல்லாரும் அதே மாதிரி இருப்பாங்கன்னு மட்டும் நீ மனசுல நினைச்சுக்காத” என்று கூறியவர், “நான் உன்கிட்ட இதுவரைக்கும் எதுவுமே கேட்டதில்லை. இந்த அம்மாவுக்காக எனக்கு ஒன்னே ஒன்னு செய்வியா?” என்று அழுதுகொண்டு, தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவனிடம் கேட்டார்.

அவர் அவ்வாறு சிரமப்பட்டு பேசுவதைப் பார்த்து துர்கா, “அம்மா எதுக்குமா இப்படி அழறீங்க? எல்லாம் சரியாயிடும். ஆதி, நீங்க சொன்னா கேட்பான். நீங்க இப்படி எல்லாம் உங்களை போட்டு வருத்திக்காதீங்க” என்று மிகவும் வருந்தினாள் துர்கா.

தன்னை ஆறுதல்படுத்திய துர்காவைத் திரும்பிப் பார்த்தவள், “அவனிடம் கேட்கிறது இருக்கட்டும்மா, நான் உன்கிட்ட இப்ப கேட்கிறேன்” என்று கூறியவர், துர்காவின் பின்னால் நின்று இருந்த அவள் குடும்பத்தைப் பார்த்தவர், அவர்களைத் தன் அருகில் வருமாறு தலையை அசைத்து சைகை செய்தார்.

தங்களை ஏன் அழைக்கிறார் என்று புரியாமல் துர்காவின் அம்மாவும், அப்பாவும் அவளிடம் வந்து நிற்க, அவர்களைப் பார்த்து விசாலாட்சி, “நான் என் மகன்கிட்ட கேட்கிறதை விட, துர்காகிட்ட கேட்கிறதை விட உங்க கிட்ட கேட்கிறது தான் முறை. என் மகனைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்.

அவன் சொக்கத்தங்கம். அப்படிப்பட்ட என் பையனுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி குடுப்பீங்களா?” என்று கேட்டவர், “இதை நான் ஒரு பையனோட அம்மாவா முறையா கேட்காம, மடிப்பிச்சை செய்யக் கேட்கிறேன். என் பையனுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி தர்றீங்களா?” என்று தன் முந்தானையை எடுத்து மடிப்பிச்சை எடுப்பது போல அவர்கள் முன் நீட்டினார்.

விசாலாட்சி, துர்காவின் பெற்றோரிடம் துர்காவைத் தன் மகன் ஆதிக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லி மடிப்பிச்சை கேட்டதைப் பார்த்த ஆதியின் அப்பா வெங்கடாசலம், விசாலாட்சியின் அருகில் வந்து, அவரும் சேர்ந்து, “நாங்க ரெண்டு பேரும் முழு சம்மதத்தோட தான் கேட்கிறோம். உங்க பெண் துர்காவை என் பையன் ஆதிக்கு இப்பவே இங்கேயே கல்யாணம் பண்ணி கொடுக்க உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டார்.

அவர்கள் இவ்வாறு கேட்பதைப் பார்த்த ஆதி, “அப்பா……” என்று அதிர்ச்சியாக, “ஆதி, நீ பேசாம இரு. உனக்கு எதுவும் தெரியாது” என்று அவனை அதட்டி அமைதிப்படுத்திவிட்டு,

துர்காவின் பெற்றோரைப் பார்க்க, அவர் இவ்வளவு பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லி மடிப்பிச்சை கேட்பதைப் பார்த்ததும், என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்றனர்.

அவர் தயங்கி நிற்பதைப் பார்த்த விசாலாட்சி, “என்னடா, இவ்ளோ பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவங்க உங்க வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி கேட்கிறேன்னு நீங்க நினைக்காதீங்க. பணம் எதுவுமே இங்கே முக்கியமில்லை.

எனக்கு துர்காவை முதலிலிருந்து ரொம்ப பிடிக்கும். அவளோட குணமும், அவளோட அன்பு தான் என்னை அவளை இப்படி உரிமையா உங்ககிட்ட என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கேட்க வச்சது” என்று கூறியவர், “நீங்க தைரியமா உங்க பொண்ணை என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி குடுங்க. அவளை நான் என் துர்காவை மருமகளா பார்க்கல, என் மகளா தான் பார்க்கிறேன். நான் அவளைத் தங்கத்தட்டுல வச்சுத் தாங்குவேன். இது சத்தியம்” என்று துர்காவின் கையில் சத்தியம் செய்து கூறினார் விசாலாட்சி.

அவர் அவ்வாறு கூறியதும் பதறிய துர்காவின் பெற்றோர், “அம்மா, என்ன இப்படி எல்லாம் கேட்கிறீங்க?” என்று துர்காவின் தாய் அன்னம் விசாலாட்சியின் கையைப் பிடித்தவர், ஒருமுறை தன் கணவரைத் திரும்பிப் பார்த்தவள், அவர் சம்மதம் வேண்டவே, அவரும் “சரி” என்பது போலத் தலையை ஆட்டினார்.

அன்னம் விசாலாட்சியிடம், “எங்கள் எல்லாருக்கும் எங்க பொண்ணு துர்காவை உங்க பையன் ஆதிக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்க சம்மதம்” என்று கூறினார்.

இதைக் கேட்ட விசாலாட்சிக்கும், வெங்கடாசலத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியானது. “ஆதி, போ, போய் மணமேடையில் உட்காரு” என்றார் வெங்கடாசலம்.

“அப்பா….” என்று ஆதி அவரைப் பார்க்க, “பேசாம போய் உட்காரு” என்று அவர் அவனை அதட்ட, அனைவர் முன்னிலையிலும் தன் அப்பாவை எதிர்த்து பேசத் துணிவில்லாமல், வேறு வழி இன்றி மணமேடையில் சென்று அமர்ந்தான் ஆதி.

தன் மடியில் இருந்த விசாலாட்சியைப் பார்த்து, “என்ன அம்மா இப்படி செய்துவிட்டீர்கள். ஆதி என்னோட ஃபிரெண்ட். அவனை எப்படி நான்…” என்று இழுத்த துர்காவின் கையைப் பிடித்துத் தன் தலை மேல் கொண்டு வைத்தவர், “அம்மா மேல சத்தியமா சொல்லு. உனக்கு ஆதியைப் பிடிக்கலை என்று சொல்லு” என்று அவர் கேட்கவும்,

“அம்மா….” என்று அவர் தலையிலிருந்து கையை எடுத்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “எனக்குத் தெரியும் துர்கா, உனக்கு என் பையனைப் பிடிக்கும் என்று. நீ அந்தஸ்து, அது இது என்று யோசித்துவிட்டுத்தான் இப்படி அவனிடம் ‘நண்பன்’ என்று மட்டுமே உரிமையோடு பேசுகிறாய் என்று எனக்குத் தெரியும்” என்றவர், “போ… போய் சந்தோசமாக என் பையனைத் திருமணம் செய்துகொண்டு என் வீட்டிற்கு சீக்கிரம் வாடிம்மா… என் துர்கா குட்டி” என்று அவர் கொஞ்ச, இவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் என்ன என்று மட்டும் யாருக்கும் தெரியவில்லை.

விசாலாட்சியை கைத்தாங்கலாக அங்கிருந்தவர்கள் ஒரு சேரில் அமர வைக்க, ஹாஸ்பிடல் போகலாம் என்று கூற, “என் மகனின் திருமணத்தைப் பார்த்தாலே எனக்கு எல்லாம் சரி ஆகிவிடும்” என்று ஹாஸ்பிடல் செல்ல மறுத்துவிட்டார்.

தன் தோழி அமிர்தத்தை அழைத்தவர், “என் மருமகளை அழைச்சுட்டுப் போய் என் அறையில் இருக்கிற நகைகளில், என் மருமகள் அழகுக்கு ஏற்றதை எடுத்து அவளுக்குப் போட்டுவிட்டு அழைத்து வா…” என்று கூறித் தன் அறை சாவியை அவரிடம் நீட்டினார்.

துர்காவை அழைத்துக்கொண்டு சென்ற அமிர்தம், சிறிது நேரத்தில் அவளைச் சிம்பிளாக, அழகாக அலங்காரம் செய்து அழைத்து வந்து ஆதிக்கு அருகில் மணமேடையில் அமர வைத்தார்.

மணமேடையில் அமர்ந்த துர்கா நிமிர்ந்தும் ஆதியைப் பார்க்கவில்லை. ஆதிக்கும் கோபத்தோடு தன் அப்பா இப்படி செய்துவிட்டாரே என்ற ஆதங்கத்தோடு அமர்ந்திருந்தான்.

அவர்கள் இருவரையும் பார்த்த ஐயர், “இப்போதாம்பா ஜோடி பேசாம அமைஞ்சிருக்கு. அருமையான பொண்ணு போங்கோ. உங்க ஆத்துக்கு அந்த மகாலட்சுமியே வரப்போறா…” என்று கூறியவர், “இந்தாங்க தம்பி, முகூர்த்த நேரம் முடியப்போறதுக்குள்ள சீக்கிரமா அந்தப் பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டுங்கோ….” என்று கூறி ஆதியின் கையில் தாலியை நீட்ட, அவரை முறைத்துக் கொண்டு தாலியை வாங்கிய ஆதி திரும்பி தன் அருகில் அமர்ந்திருந்த துர்காவைப் பார்த்தான்.

தலை குனிந்து பதட்டத்தோடு அமர்ந்திருந்தா அவள் விழிகள் படபடப்பதைப் பார்த்த ஆதியின் மனதிற்குள் ஏதோ சொல்ல முடியாத உணர்வு தோன்ற, தன்னை மறந்து துர்காவையே பார்த்துக்கொண்டிருந்தவனை, “கெட்டி மேளம்…. கெட்டி மேளம்…” என்று ஐயர் கூறியதும் தான் நினைவுக்கு வந்தவன், எதுவும் புரியாமலேயே துர்காவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

இருவரும் ஜோடியாக அமர்ந்திருந்ததை திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் பார்த்து, “ஜோடிப் பொருத்தம் அருமையாக அமைந்துவிட்டது. விசாலாட்சி, நீ நினைச்ச மாதிரியே உனக்கு மருமகள் வாய்ச்சுட்டா” என்றனர் அவரது தோழிகள்.

தன் மகனுக்குத் தான் நினைத்தது போலவே திருமணம் நடந்து விட்டதை எண்ணி விசாலாட்சியும், வெங்கடாசலமும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

மற்ற சடங்குகளை எல்லாம் முடித்த பிறகு, மேடையில் இருந்து இறங்கி வந்து ஆதியின் பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள்,

துர்காவின் பெற்றோரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கப் போக, அவர்கள் “வேண்டாம் ஆதி” என்று தயங்கி அவனைத் தடுக்க, அவர்களைப் பார்த்த ஆதி, “பரவாயில்லை மாமா… அப்படி வேண்டாம் என்று சொல்லாதீர்கள்” என்று கூற, அவன் தன்னை “மாமா” என்று கூறியதும் அதுவரை இருந்த தயக்கம் அவருக்கு விட்டுப்போனது போல இருந்தது.

இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிய பின், விசாலாட்சியின் அருகில் வந்த துர்கா, “வாங்க அம்மா, போகலாம்” என்று கூற, “எங்கே?” என்பது போல அவளை அவர் நிமிர்ந்து பார்க்க, “ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவரை அழைக்க, “எனக்கு ஒன்னும் இல்லைடா, இப்போ நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவர் கூற,

“அதெல்லாம் முடியாது. முதல்ல உங்க உடம்புக்கு என்னன்னு பாக்கணும்” என்று துர்கா பிடிவாதமாக கூற, “சரிடா, நாம நல்ல நேரம் முடியறதுக்குள்ள நம்ம வீட்டுக்கு போகலாம். அங்கேயே நம்ம ஃபேமிலி டாக்டரை வரவழைச்சுப் பாத்துக்கலாம்” என்று வெங்கடாசலம் கூற, “சரிங்க சார்…” என்று துர்கா கூற, “இன்னும் என்ன சார் என்று என்னை கூப்பிட்டுக்கொண்டு? மாமா… என்று கூப்பிடுமா” என்றார். அவர் கூறியதைக் கேட்டுச் சிரித்தவள், “சரிங்க மாமா…” என்றாள்.

அனைவரும் கிளம்பி ஆதியின் வீட்டிற்குச் சென்றனர்.

EPISODE 4

ஆதியின் வீட்டிற்கு வந்ததும், இருவரையும் வாசலில் வைத்து ஆரத்தி எடுக்க, அதுவரை அமைதியாக இருந்தவன், ஆரத்தி எடுத்து முடிந்ததும் வேகமாக துர்காவைக் கூட பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு சென்றதைப் பார்த்த விசாலாட்சி, “அவன் ஏதோ கோவத்துல இருக்கான்மா, நீ எதுவும் மனசுல வெச்சுக்காத. போக போக சரி ஆகிடுவான். அப்படி ஆகலை என்றாலும் நீ அவனை சரி செய்துவிடு” என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு போய் பூஜை அறையில் நிற்க வைத்தவர்,

“அம்மாடி துர்கா, இந்த வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே எனக்கு மருமகளா வந்திருக்கா… உன்னால இந்த வீடு சந்தோசத்தில் நிறைஞ்சு இருக்கனும், நம்ம வம்சம் விருத்தி அடையனும், எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சுட்டு விளக்கைக் ஏற்றுமா…” என்று அவள் கையில் தீப்பெட்டியை கொடுத்தார்.

அதை வாங்கிய துர்கா, விளக்கை திரும்பிப் பார்க்க, அவள் உயரத்திற்கு தங்கத்தால் ஆன குத்து விளக்கு இருந்தது. அதைப் பார்த்ததும், “அம்மா, இதுலயா விளக்கு ஏற்றணும்?” என்று கேட்க, “ஆமாம்டா. இன்னிக்கு நீ ஏற்றுகிற விளக்கு நம்ம குலத்தை மென்மேலும் வளரச் செய்யணுமில்லையா? அதான் பெரிய விளக்கை நம்ம கடையில் இருந்து எடுத்து வரச் சொன்னேன்.

இன்று நாள் பூரா அணையாமல் எரியணும் இந்த விளக்கு, சரியா?” என்று கூறியவர், “சரிடா, விளக்கை ஏற்று” என்று கூற, “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு, கடவுளை வேண்டிவிட்டு விளக்கினை ஏற்றினாள் நம் துர்கா, நம் மகா துர்கா…

திடீரென்று துர்காவுக்குத் திருமணம் ஆனதால், அவளது பெற்றோருக்கும் தங்கைக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்து துர்கா அவர்கள் அருகில் வந்து அமர்ந்தவள், “அப்பா, ஏம்பா ஒரு மாதிரியா அமைதியாக இருக்கீங்க? என்னடா, இப்படி எனக்கு திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு வருத்தப்படுறீங்களா?” என்று கேட்டாள் துர்கா. “இல்லம்மா, நீ கல்யாணம் ஆனது எனக்கு சந்தோசம்தான், வருத்தமல்ல. ஒன்னும் இல்ல, ஆனா நம்ம தகுதிக்கு மேல் மிகவும் பெரிய இடத்துல உனக்குக் கல்யாணம் ஆகி இருக்கு. இங்கே உன்னை எப்படி நடத்துவாங்க? உனக்கு எப்படி மரியாதையாக வைத்துக்கொள்வார்கள் என்று எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. விசாலாட்சி அம்மா நல்லவங்கதான், ஐயரும் நல்லவர் தான். ஆனா மத்தவங்க எல்லாம் நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க, என்ன பேசுவாங்கன்னு கொஞ்சம் எனக்கு யோசனையா இருக்குமா” என்றார்.

அவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டு வந்த ஆதியின் அப்பா, துர்காவின் அப்பாவின் அருகில் அமர, இவ்வளவு பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் தன்னருகில் அமர்ந்ததும், பதட்டத்தில் துர்காவின் அப்பா எழுந்து நின்றுவிட்டார்.

அவர் சங்கடப்பட்டு எழுந்ததைப் பார்த்து மனம் வேதனை அடைந்த துர்கா, “ஆதியின் அப்பா… சம்மந்தி, ஏன் இப்படி சங்கடப்பட்டு எழுந்தீங்க? எப்போ என் பையனுக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் ஆச்சோ, அப்போவே நம்ம ரெண்டு பேரும் உறவுக்காரங்க ஆகிட்டோம்.

அப்போ ரெண்டு பேருமே சரி சமம் தான். பணம், காசுல ஒன்னும் சரிசமம் நான் எப்பவுமே யார்கிட்டயும் பார்த்து பழகுவதில்லை. நல்ல எண்ணமும், குணமும் இருந்தால் போதும் சம்மந்தி. உட்காருங்க” என்று அவர் கை பிடித்து இழுத்துத் தன் அருகில் இருந்த சோபாவில் அமரவைத்தார்.

“சம்மந்தி, இப்படி திடீர்னு என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அவ கல்யாணத்துக்காக நாங்க கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச மூணு ஏக்கர் நிலம் இருக்கு, அதுபோக துர்காவுக்கும் சிறுக சிறுக சேர்த்து வைத்ததில் ஆளுக்கொரு 20 பவுன் சேர்த்து வைத்திருப்போம். சம்மந்தி, கீர்த்திக்கு போட்டதையும் சேர்த்து நான் துர்காவுக்குப் போட்டு விடுறேன். எங்களால இவ்வளவுதான் செய்ய முடியும் சம்மந்தி. உங்க வசதிக்கும், அந்தஸ்திற்கும் எங்களால இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலைன்னா முறையா அதெல்லாம் நான் கொண்டு வந்து தரட்டுமா?” என்று கேட்டார் துர்காவின் அப்பா.

அங்கே வந்த விசாலாட்சி, “என்ன சம்மந்திமா… அவர் இப்படி பேசிட்டு இருக்காரு, நீங்களும் பக்கத்துல உட்கார்ந்து கேட்டுட்டு இருக்கீங்க? உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்ய விருப்படுறீங்களோ அது செய்யுங்க. அதுக்காக கீர்த்திக்காக சேர்த்து வச்சதையும் சேர்த்து துர்காவுக்குக் கொடுக்கணும்னு அவசியம் இல்லை.

இதுவே நான் ஏன் சொல்றேன்னா, நீங்க எதுவுமே செய்யாம பொண்ணு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன்னு உங்களுக்கு தோணிற கூடாது என்பதற்காகத்தான் நான் உங்களுக்கு சொல்றேன். உங்கள் இருவருக்கும் என்ன விருப்பமோ, அதை செய்யுங்கன்னு சொன்னேன். அந்த மூணு ஏக்கர் நிலத்தையும் கீர்த்தி பேர்லயே எழுதி வச்சிருங்க. துர்காவுக்கு நகை போடணும்னு சொன்னீங்க இல்லையா, அந்த நகை அவளுக்காக சேர்த்து வச்ச அந்த 20 பவுன் மட்டும் உங்களால் உங்கள் முறைக்காகக் கொண்டு வந்து கொடுங்க. நான் அதை வேண்டான்னு சொல்லல. துர்காவுக்கும் தன் தாய் வீட்டிலிருந்து சீதனமா எதுவுமே வரல அப்படின்னு ஒரு மனசு உறுத்தல் வந்திட கூடாது என்பதற்காகத்தான் இதை நான் உங்ககிட்ட சொல்றேன்” என்றார்.

“இல்ல வேணாம் ஆன்ட்டி. எங்க அக்காவுக்கும் என்னோட நகைகளை கொடுத்து இருங்க. எனக்குதான் இன்னும் கல்யாணத்திற்கு நிறைய நாள் இருக்கே. அண்ணா இப்பதான் ஃபைனல் இயர் முடிச்சிட்டு இருக்கேன். ஃபைனல் முடிச்சு எனக்குப் பிடிச்ச வேலைக்கு நான் போய் நானே சம்பாதித்து எனக்காக சேர்த்துக்கிறேன் ஆன்ட்டி. அக்காவுக்கு என்னுடையதும் சேர்த்து அம்மா, அப்பாவை நான் கொடுக்க சொல்றேன். நீங்க வேண்டாம்னு சொல்லக் கூடாது” என்று கீர்த்தி கூற,

அவள் அருகில் வந்த விசாலாட்சி அவள் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்தவள், “அக்கா மேல அவ்வளவு பாசமா உனக்கு?” என்றவர், “இங்க பாரு கீர்த்திகா, இனிமேல் என்னை ‘ஆன்ட்டி’ன்னு எல்லாம் கூப்பிடக்கூடாது. உங்க அக்காவுக்கு நான் எப்படி அத்தையோ, அதே தான் உனக்கும். நீ ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலும் சரி இல்ல ‘அத்தை’ன்னு கூப்பிட்டாலும் சரி. சரியா? உனக்கு எது விருப்பமோ அப்படி கூப்பிடு. இனிமேல் ‘ஆன்ட்டி’ன்னு மட்டும் கூப்பிடக்கூடாது, சரியா?” என்றவர்,

“எங்க வீட்டுக்கு நீங்க பெரிய சொத்தான உங்க மகளையே கொடுத்து இருக்கீங்க. இதுக்கு மேல எங்களுக்கு எதுவுமே வேண்டாம். எங்க கிட்ட இல்லாததா இருந்தாலும் உங்க திருப்திக்காகவும், நான் துர்காவோட மனசு சங்கடப்படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த 20 பவுனையே கொடுங்கள் என்று சொன்னேன்.

இனிமேல் இந்த நகை பற்றியோ, வரதட்சணை பற்றியோ, பணம் பத்தி யாருமே பேசக்கூடாது. சரியா? நீ சின்னப் பொண்ணு. நீ நல்ல சந்தோசமா இருக்கணும். உனக்கானது உனக்கு இருக்கட்டும். நீ எதுவும் சொல்ல வேண்டாம், சரியான தங்கம்” என்று அவளைத் தட்டிக் கொடுத்தார் விசாலாட்சி.

“சரி இருங்க, நான் போய் உங்க எல்லாருக்கும் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று சமையல் அறைக்குச் செல்ல, “அம்மா, இருங்க நானும் வரேன்” என்று கூறிய துர்கா எழுந்து அவருடன் செல்ல, கீர்த்தியும் “நானும் வருகிறேன்” என்று மூவரும் சமையலறைக்குச் சென்றனர்.

❤️

ஆதியின் அறையில் ஆதி கோபமாக இங்கும் அங்கும் நடந்துகொண்டிருக்க, அவனைப் பார்த்த விக்கி, கதிரிடம், “உங்க அண்ணன் என்னடா இவ்வளவு கோவமா இருக்கான்.

இவனை சமாதானம் பண்ணச் சொல்லி அம்மா என்னையும் உன்னையும் அனுப்பி வச்சிருக்காங்க. கோபமா இருக்கும்போது இவன் பக்கத்துல யாருன்னாலும் போக முடியாது, துர்காவை தவிர. ஆனா துர்காவை கல்யாணம் பண்ணதுக்காகத்தான் இப்ப கோவத்துல இருக்கான். இப்ப எப்படி நம்ம போய் துர்காகிட்ட ஹெல்ப் கேட்க முடியும்?” என்று விக்கி கதிரிடம் மெதுவாகக் கூறினான்.

விக்கி கூறியதைக் கேட்ட கதிர், “அம்மா உன்கிட்ட தான சொல்லி அனுப்பி இருக்காங்க. அப்ப நீயே போய் அவன் கிட்ட பேசி சமாதானம் பண்ணு. என்னால எல்லாம் அவன் கிட்ட பேச முடியாது. இப்ப நான் போய் பேசினேன் வை, இருக்கிற மொத்த கோபத்தையும் என் மேலதான் காட்டுவான்” என்று கதிர் கூற…

“ஏன்டா, அப்ப நான் போய் பேசுனா பரவாயில்லையா? அந்தக் கோபம் எல்லாம் என் பக்கம் திரும்பிடுச்சுன்னா நான் என்ன பண்றது?” என்று கேட்க, அவன் தோள் மீது கை வைத்த கதிர், “நீதானே அவனோட பெஸ்ட் பிரண்டு? அவன் எவ்வளவு அடிச்சாலும் நீ தாங்குவடா” என்று தலையாட்ட, “ஏன்டா சொல்ல மாட்டீங்க” என்று கூறியவன், “சரி நானே போய் சமாளிக்கிறேன்” என்று ஆதியின் அருகில் செல்ல,

ஆதியின் அருகில் சென்று விக்கி, “ஆதி” என்று கூற, நடந்துகொண்டிருந்தவன் நின்று அவனைத் திரும்பி, “என்னடா….” என்று கேட்டான் ஆத்திரத்தோடு.

அவன் கோபமாகக் கேட்டதைப் பார்த்த விக்கி அப்படியே நின்றான். மனதில், “ஆஹா, இவ்வளவு கோவமா இருக்கான். என்கிட்ட போய் நான் வாயை கொடுத்துட்டேன்னு” என்று யோசித்து, “சாரி, சமாளிப்போம்” என்று வடிவேலு ஸ்டைலில் கூறிக்கொண்டு அவன் பக்கம் சென்று, “இப்போ எதுக்கு குட்டி போட்டு போன மாதிரி இங்கேயும் எங்கேயும் நடந்துகிட்டு இருக்க?” என்று ஆதியிடம் கேட்க, “நான் ஏன் இப்படி இருக்கேன், உங்களுக்குத் தெரியாதாடா?” என்று திருப்பி அவர்களிடம் கேட்டான்.

“எங்களுக்குப் புரியாம எல்லாம் இல்லைடா. இப்ப என்ன பண்றது? யாருமே எதிர்பார்க்கலையே துர்காவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு சொல்லிட்டு.”

“ஏன்? துர்கா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டா? அவ மனசுல என்ன இருக்கு, எப்படி அவ யோசிச்சிட்டு இருப்பான்னு நமக்கும் தெரியாது தானே? நீ இப்போ தேவையில்லாம டென்ஷனாகி என்ன பண்ணப் போற? நீ டென்ஷனாவே, சுத்தி இருக்கவங்களும் சேர்ந்து டென்ஷனாகுறதுதான் மிச்சம்.

இப்ப போய் நீ, ‘எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல, அது இது’ன்னு அம்மா கிட்டயோ, அப்பா கிட்டயோ சொல்லிராத. ஏற்கனவே அம்மாவோட உடம்பு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு” என்று விக்கி கூற,

“எனக்குப் பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சாங்க. நான் சொல்லாட்டியும் அவங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும். நான் வேண்டாம்னு சொல்லியும் அப்பா என்னை அதட்டி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைத்துவிட்டார். அத்தனை பேர் முன்னாடி அவரிடம் நான் போய் வாக்குவாதம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு, வேற வழி இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

அதுக்காக என்னால துர்கா கூட எல்லாம் வாழ முடியாது. அவ என்னப் பத்தி என்ன நினைப்பா? என்னோட உடல் கண்டிஷன் உனக்கே நல்லா தெரியும். நான் இப்படி இருக்கிறப்போ, எனக்குப் பிடிச்ச பொண்ணு, என்னைப் பிடிச்சு ஏத்துக்கிட்ட ஒருத்தியைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தேன்.

அது துர்காவுக்கும் நல்லாவே தெரியும். ஆனா துர்காவுக்கு நான் இப்படி இருக்கிறது எப்படி பிடிக்கும்? அவ மனசுல அவளோட கல்யாணத்தைப் பத்தி, எதிர்கால வாழ்க்கையைப் பத்தி 1008 கனவு கண்டு இருப்பா இல்லையா? இப்போ என்ன போல ஒரு நோயாளியை கல்யாணம் பண்ணிக்கிட்டோமே என்று அவள் மனசுலயும் வருத்தம் இருக்குமா, இருக்காதா? நீயே சொல்லு.

நான் எப்படி அவளை நேருக்கு நேரா ஃபேஸ் பண்ணுவேன்? என்னால துர்காவை ஒரு ஃபிரண்டை தவிர்த்து வேற ஒரு கோணத்தில் என்னால் பார்க்கவே முடியல” என்று கூறினான் ஆதி.

“சரிடா, நீ சொல்றது எனக்குப் புரியுது. நீ எதுவுமே துர்காகிட்ட பேசாம எதுவுமே முடிவெடுக்காத. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுங்க. அதுக்கப்புறம் அம்மா, அப்பா கிட்ட போய் பேசுங்க. நீ மட்டும் ஏதாவது சொல்லி உன் சைடு மட்டும் யோசிக்காத. துர்காவோட சைடும் கொஞ்சம் யோசி. உன்னைப் பத்தி என்ன நினைக்கிறா? அவளுக்கு உன்னைப் பிடிக்குமா, பிடிக்காதா? இல்ல அவ மனசுல வேற யாராவது இருக்காங்களா? அப்படிங்கறதை நீ தெரிஞ்சுக்க வேண்டாமா? எடுத்த உடனே ‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம், எனக்கு இது பிடிக்கவில்லை’ என்று நீ சொல்றது எந்தப் பிரயோஜனமும் இல்லை.

உங்க ரெண்டு பேருக்கும் இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கு பிடிக்கலையா? ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இப்போ கல்யாணம் ஆயிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் உறவு முறையா இருக்கீங்க. அதாவது கணவன், மனைவியா. அது சரியா, தப்பா? முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி முடிவு எடுத்துட்டு, அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் பெரியவங்க கிட்ட போய் பேசுங்க, சரியா? முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நான் சொல்றதை திரும்பத் திரும்ப புரிந்துகொள்” என்றான் விக்கி.

“சரி, நீ இப்படியே டென்ஷனாயிட்டு இங்கே எங்கேயும் நடந்துட்டு இருக்காம போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸா ரெஸ்ட் எடு. சரியா? நான் மண்டபத்துக்கு போறேன். அங்க நிறைய வேலைகளை அப்படியே பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டோம். நானும், கதிரும் மண்டபத்துக்குப் போயி பேலன்ஸ் என்ன வேலை இருக்கு, அதெல்லாம் முடிச்சு கொடுத்துட்டு நைட் வீட்டுக்கு வர்றோம்” என்று கூறிவிட்டு, கதிரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

விக்கி கூறியது எல்லாம் கேட்ட ஆதி, சிறிது நேரம் அவன் சொன்னதைப் பற்றி யோசித்தவன், “அவன் சொல்றதும் கரெக்ட் தான். முதல்ல துர்காகிட்ட பேசலாம். அவ என்ன நினைச்சி இருக்கா? இந்தக் கல்யாணத்தால அவளுக்கு என்ன பாதிப்பு வந்திருக்கு? அவள் எவ்வளவு சங்கடப்படுறா? இல்ல அவளுக்கு விருப்பமா என்னங்கறது முதல்ல கேட்டு தெரிஞ்சுக்குவோம். அதுக்கப்புறம் எதா இருந்தாலும் நம்ம முடிவு பண்ணிக்கலாம்” என்று யோசித்தவன், அங்கிருந்த சேரில் அமர்ந்து அப்படியே சாய்ந்து படுத்துக்கொண்டு துர்காவிடம் எப்படி பேசுவது என யோசித்துக்கொண்டிருந்தான்.

அறையை விட்டு வெளியே வந்த விக்கியிடம் கதிர், “என்ன விக்கி, நீ பாட்டுக்கு ஆதிகிட்ட ‘நீங்க ரெண்டு பேரும் கணவன், மனைவி. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுங்க. துர்கா மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நீ ஏன் எதுவும் முடிவு பண்ணாதே’ என்று சொல்லிட்டு வந்துட்டே.

ஆனா துர்காவுக்கு ஆதியைப் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியலையே. ஒருவேளை அவன் கேட்டு துர்காகிட்ட ‘உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இருக்கா? பிடிச்சிருக்கா, பிடிக்கலையா?’ என்று கேட்டு, துர்கா விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டானா என்ன செய்றது?

அப்போ அவன் உடனே ‘ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்’னு அவன் அப்பவே சொல்லிடுவானே. அம்மாவுக்கு துர்கா மருமகளா வந்ததுல ரொம்ப சந்தோசமா இருக்காங்க. இப்ப போய் அண்ணா இப்படி அம்மா, அப்பா கிட்ட ‘கல்யாணத்திலிருந்து விலகிக்கொள்கிறோம், எங்கள் இருவருக்குமே இந்த கல்யாணத்தில் உடன்பாடில்லை’ என்று சொல்லிட்டான்னா என்ன செய்றது?

அம்மாவுடைய மனநிலை எப்படி இருக்கும்? அம்மாவோட உடம்பும் சரி இல்லை. அவங்க என்ன யோசிப்பாங்கன்னு நினைச்சாலே எனக்குப் பயமா இருக்கு. அவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு” என்றான் கதிர் கவலையோடு.

“அப்படியெல்லாம் அவன் கேட்டதும் துர்கா ‘எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை’ன்னு சொல்ல மாட்டா. நீ கவலைப்படாத” என்று கூறினான் விக்கி.

“அது எப்படி? துர்கா, ஆதி ‘இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையா’ன்னு கேட்டா, உடனே அவ அப்படி சொல்ல மாட்டான்னு நீ எப்படி சொல்ற?” என்று கேட்டான் கதிர்.

“ஏன்னா, ஆதியை துர்கா கிட்டத்தட்ட ரொம்ப வருசமா அவனை லவ் பண்ணிட்டு இருக்கா….” என்றான் விக்கி.

விக்கி கூறியதைக் கேட்ட கதிர் அதிர்ச்சியில் நின்றான்.

EPISODE 5

ஆதியின் வீட்டிற்கு வந்ததும், இருவரையும் வாசலில் வைத்து ஆரத்தி எடுக்க, அதுவரை அமைதியாக இருந்தவன், ஆரத்தி எடுத்து முடிந்ததும், வேகமாக துர்காவைக் கூடப் பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு சென்றதைப் பார்த்த விசாலாட்சி, “அவன் ஏதோ கோவத்துல இருக்கான்மா. நீ எதுவும் மனசுல வெச்சுக்காத. போகப்போக சரியாகிடுவான். அப்படி ஆகலை என்றால், நீ அவனை சரி செய்துவிடு” என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு போய் பூஜை அறையில் நிற்க வைத்தவர்,

“அம்மாடி துர்கா, இந்த வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே எனக்கு மருமகளா வந்திருக்கா… உன்னால இந்த வீடு சந்தோசத்தில் நிறைஞ்சு இருக்கணும், நம்ம வம்சம் விருத்தி அடையணும், எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சுட்டு விளக்கைக் ஏற்றுமா…” என்று அவள் கையில் தீப்பெட்டியை கொடுத்தார்.

அதை வாங்கிய துர்கா, விளக்கை திரும்பிப் பார்க்க, அவள் உயரத்திற்கு தங்கத்தால் ஆன குத்து விளக்கு இருந்தது. அதைப் பார்த்ததும், “அம்மா, இதுலயா விளக்கு ஏற்றணும்?” என்று கேட்க, “ஆமாம்டா. இன்னிக்கு நீ ஏற்றுகிற விளக்கு நம்ம குலத்தை மென்மேலும் வளரச் செய்யணுமில்லையா? அதான் பெரிய விளக்கை நம்ம கடையில் இருந்து எடுத்து வரச் சொன்னேன்.

இன்று நாள் பூரா அணையாமல் எரியணும் இந்த விளக்கு, சரியா?” என்று கூறியவர், “சரிடா, விளக்கை ஏற்று” என்று கூற, “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு, கடவுளை வேண்டிவிட்டு விளக்கினை ஏற்றினாள் நம் துர்கா, நம் மகா துர்கா…

திடீரென்று துர்காவுக்குத் திருமணம் ஆனதால், அவளது பெற்றோருக்கும் தங்கைக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்து துர்கா அவர்கள் அருகில் வந்து அமர்ந்தவள், “அப்பா, ஏம்பா ஒரு மாதிரியா அமைதியாக இருக்கீங்க? என்னடா, இப்படி எனக்கு திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு வருத்தப்படுறீங்களா?” என்று கேட்டாள் துர்கா. “இல்லம்மா, நீ கல்யாணம் ஆனது எனக்கு சந்தோசம்தான், வருத்தமல்ல. ஒன்னும் இல்ல, ஆனா நம்ம தகுதிக்கு மேல் மிகவும் பெரிய இடத்துல உனக்குக் கல்யாணம் ஆகி இருக்கு. இங்கே உன்னை எப்படி நடத்துவாங்க? உனக்கு எப்படி மரியாதையாக வைத்துக்கொள்வார்கள் என்று எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு. விசாலாட்சி அம்மா நல்லவங்கதான், ஐயரும் நல்லவர் தான். ஆனா மத்தவங்க எல்லாம் நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க, என்ன பேசுவாங்கன்னு கொஞ்சம் எனக்கு யோசனையா இருக்குமா” என்றார்.

அவர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டு வந்த ஆதியின் அப்பா, துர்காவின் அப்பாவின் அருகில் அமர, இவ்வளவு பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் தன்னருகில் அமர்ந்ததும், பதட்டத்தில் துர்காவின் அப்பா எழுந்து நின்றுவிட்டார்.

அவர் சங்கடப்பட்டு எழுந்ததைப் பார்த்து மனம் வேதனை அடைந்த துர்கா, “ஆதியின் அப்பா… சம்மந்தி, ஏன் இப்படி சங்கடப்பட்டு எழுந்தீங்க? எப்போ என் பையனுக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் ஆச்சோ, அப்போவே நம்ம ரெண்டு பேரும் உறவுக்காரங்க ஆகிட்டோம்.

அப்போ ரெண்டு பேருமே சரி சமம் தான். பணம், காசுல ஒன்னும் சரிசமம் நான் எப்பவுமே யார்கிட்டயும் பார்த்து பழகுவதில்லை. நல்ல எண்ணமும், குணமும் இருந்தால் போதும் சம்மந்தி. உட்காருங்க” என்று அவர் கை பிடித்து இழுத்துத் தன் அருகில் இருந்த சோபாவில் அமரவைத்தார்.

“சம்மந்தி, இப்படி திடீர்னு என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அவ கல்யாணத்துக்காக நாங்க கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச மூணு ஏக்கர் நிலம் இருக்கு, அதுபோக துர்காவுக்கும் சிறுக சிறுக சேர்த்து வைத்ததில் ஆளுக்கொரு 20 பவுன் சேர்த்து வைத்திருப்போம். சம்மந்தி, கீர்த்திக்கு போட்டதையும் சேர்த்து நான் துர்காவுக்குப் போட்டு விடுறேன். எங்களால இவ்வளவுதான் செய்ய முடியும் சம்மந்தி. உங்க வசதிக்கும், அந்தஸ்திற்கும் எங்களால இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலைன்னா முறையா அதெல்லாம் நான் கொண்டு வந்து தரட்டுமா?” என்று கேட்டார் துர்காவின் அப்பா.

அங்கே வந்த விசாலாட்சி, “என்ன சம்மந்திமா… அவர் இப்படி பேசிட்டு இருக்காரு, நீங்களும் பக்கத்துல உட்கார்ந்து கேட்டுட்டு இருக்கீங்க? உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்ய விருப்படுறீங்களோ அது செய்யுங்க. அதுக்காக கீர்த்திக்காக சேர்த்து வச்சதையும் சேர்த்து துர்காவுக்குக் கொடுக்கணும்னு அவசியம் இல்லை.

இதுவே நான் ஏன் சொல்றேன்னா, நீங்க எதுவுமே செய்யாம பொண்ணு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன்னு உங்களுக்குத் தோணிற கூடாது என்பதற்காகத்தான் நான் உங்களுக்கு சொல்றேன். உங்கள் இருவருக்கும் என்ன விருப்பமோ, அதை செய்யுங்கன்னு சொன்னேன். அந்த மூணு ஏக்கர் நிலத்தையும் கீர்த்தி பேர்லயே எழுதி வச்சிருங்க. துர்காவுக்கு நகை போடணும்னு சொன்னீங்க இல்லையா, அந்த நகை அவளுக்காக சேர்த்து வச்ச அந்த 20 பவுன் மட்டும் உங்களால் உங்கள் முறைக்காகக் கொண்டு வந்து கொடுங்க. நான் அதை வேண்டாம்னு சொல்லல. துர்காவுக்கும் தன் தாய் வீட்டிலிருந்து சீதனமா எதுவுமே வரல அப்படின்னு ஒரு மனசு உறுத்தல் வந்திட கூடாது என்பதற்காகத்தான் இதை நான் உங்ககிட்ட சொல்றேன்” என்றார்.

“இல்ல வேணாம் ஆன்ட்டி. எங்க அக்காவுக்கும் என்னோட நகைகளை கொடுத்து இருங்க. எனக்குதான் இன்னும் கல்யாணத்திற்கு நிறைய நாள் இருக்கே. அண்ணா இப்பதான் ஃபைனல் இயர் முடிச்சிட்டு இருக்கேன். ஃபைனல் முடிச்சு எனக்குப் பிடிச்ச வேலைக்கு நான் போய் நானே சம்பாதித்து எனக்காக சேர்த்துக்கிறேன் ஆன்ட்டி. அக்காவுக்கு என்னுடையதும் சேர்த்து அம்மா, அப்பாவை நான் கொடுக்க சொல்றேன். நீங்க வேண்டாம்னு சொல்லக் கூடாது” என்று கீர்த்தி கூற,

அவள் அருகில் வந்த விசாலாட்சி அவள் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்தவள், “அக்கா மேல அவ்வளவு பாசமா உனக்கு?” என்றவர், “இங்க பாரு கீர்த்திகா, இனிமேல் என்னை ‘ஆன்ட்டி’ன்னு எல்லாம் கூப்பிடக்கூடாது. உங்க அக்காவுக்கு நான் எப்படி அத்தையோ, அதே தான் உனக்கும். நீ ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலும் சரி இல்ல ‘அத்தை’ன்னு கூப்பிட்டாலும் சரி. சரியா? உனக்கு எது விருப்பமோ அப்படி கூப்பிடு. இனிமேல் ‘ஆன்ட்டி’ன்னு மட்டும் கூப்பிடக்கூடாது, சரியா?” என்றவர்,

“எங்க வீட்டுக்கு நீங்க பெரிய சொத்தான உங்க மகளையே கொடுத்து இருக்கீங்க. இதுக்கு மேல எங்களுக்கு எதுவுமே வேண்டாம். எங்க கிட்ட இல்லாததா இருந்தாலும் உங்க திருப்திக்காகவும், நான் துர்காவோட மனசு சங்கடப்படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த 20 பவுனையே கொடுங்கள் என்று சொன்னேன்.

இனிமேல் இந்த நகை பற்றியோ, வரதட்சணை பற்றியோ, பணம் பத்தி யாருமே பேசக்கூடாது. சரியா? நீ சின்னப் பொண்ணு. நீ நல்ல சந்தோசமா இருக்கணும். உனக்கானது உனக்கு இருக்கட்டும். நீ எதுவும் சொல்ல வேண்டாம், சரியான தங்கம்” என்று அவளைத் தட்டிக் கொடுத்தார் விசாலாட்சி.

“சரி இருங்க, நான் போய் உங்க எல்லாருக்கும் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று சமையல் அறைக்குச் செல்ல, “அம்மா, இருங்க நானும் வரேன்” என்று கூறிய துர்கா எழுந்து அவருடன் செல்ல, கீர்த்தியும் “நானும் வருகிறேன்” என்று மூவரும் சமையலறைக்குச் சென்றனர்.

❤️

ஆதியின் அறையில் ஆதி கோபமாக இங்கும் அங்கும் நடந்துகொண்டிருக்க, அவனைப் பார்த்த விக்கி, கதிரிடம், “உங்க அண்ணன் என்னடா இவ்வளவு கோவமா இருக்கான்.

இவனை சமாதானம் பண்ணச் சொல்லி அம்மா என்னையும் உன்னையும் அனுப்பி வச்சிருக்காங்க. கோபமா இருக்கும்போது இவன் பக்கத்துல யாருன்னாலும் போக முடியாது, துர்காவை தவிர. ஆனா துர்காவை கல்யாணம் பண்ணதுக்காகத்தான் இப்ப கோவத்துல இருக்கான். இப்ப எப்படி நம்ம போய் துர்காகிட்ட ஹெல்ப் கேட்க முடியும்?” என்று விக்கி கதிரிடம் மெதுவாகக் கூறினான்.

விக்கி கூறியதைக் கேட்ட கதிர், “அம்மா உன்கிட்ட தான சொல்லி அனுப்பி இருக்காங்க. அப்ப நீயே போய் அவன் கிட்ட பேசி சமாதானம் பண்ணு. என்னால எல்லாம் அவன் கிட்ட பேச முடியாது. இப்ப நான் போய் பேசினேன் வை, இருக்கிற மொத்த கோபத்தையும் என் மேலதான் காட்டுவான்” என்று கதிர் கூற…

“ஏன்டா, அப்ப நான் போய் பேசுனா பரவாயில்லையா? அந்தக் கோபம் எல்லாம் என் பக்கம் திரும்பிடுச்சுன்னா நான் என்ன பண்றது?” என்று கேட்க, அவன் தோள் மீது கை வைத்த கதிர், “நீதானே அவனோட பெஸ்ட் பிரண்டு? அவன் எவ்வளவு அடிச்சாலும் நீ தாங்குவடா” என்று தலையாட்ட, “ஏன்டா சொல்ல மாட்டீங்க” என்று கூறியவன், “சரி நானே போய் சமாளிக்கிறேன்” என்று ஆதியின் அருகில் செல்ல,

ஆதியின் அருகில் சென்று விக்கி, “ஆதி” என்று கூற, நடந்துகொண்டிருந்தவன் நின்று அவனைத் திரும்பி, “என்னடா….” என்று கேட்டான் ஆத்திரத்தோடு.

அவன் கோபமாகக் கேட்டதைப் பார்த்த விக்கி அப்படியே நின்றான். மனதில், “ஆஹா, இவ்வளவு கோவமா இருக்கான். என்கிட்ட போய் நான் வாயை கொடுத்துட்டேன்னு” என்று யோசித்து, “சாரி, சமாளிப்போம்” என்று வடிவேலு ஸ்டைலில் கூறிக்கொண்டு அவன் பக்கம் சென்று, “இப்போ எதுக்கு குட்டி போட்டு போன மாதிரி இங்கேயும் எங்கேயும் நடந்துகிட்டு இருக்க?” என்று ஆதியிடம் கேட்க, “நான் ஏன் இப்படி இருக்கேன், உங்களுக்குத் தெரியாதாடா?” என்று திருப்பி அவர்களிடம் கேட்டான்.

“எங்களுக்குப் புரியாம எல்லாம் இல்லைடா. இப்ப என்ன பண்றது? யாருமே எதிர்பார்க்கலையே துர்காவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு சொல்லிட்டு.”

“ஏன்? துர்கா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டா? அவ மனசுல என்ன இருக்கு, எப்படி அவ யோசிச்சிட்டு இருப்பான்னு நமக்கும் தெரியாது தானே? நீ இப்போ தேவையில்லாம டென்ஷனாகி என்ன பண்ணப் போற? நீ டென்ஷனாவே, சுத்தி இருக்கவங்களும் சேர்ந்து டென்ஷனாகுறதுதான் மிச்சம்.

இப்ப போய் நீ, ‘எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல, அது இது’ன்னு அம்மா கிட்டயோ, அப்பா கிட்டயோ சொல்லிராத. ஏற்கனவே அம்மாவோட உடம்பு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு” என்று விக்கி கூற,

“எனக்குப் பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சாங்க. நான் சொல்லாட்டியும் அவங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும். நான் வேண்டாம்னு சொல்லியும் அப்பா என்னை அதட்டி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைத்துவிட்டார். அத்தனை பேர் முன்னாடி அவரிடம் நான் போய் வாக்குவாதம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு, வேற வழி இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

அதுக்காக என்னால துர்கா கூட எல்லாம் வாழ முடியாது. அவ என்னப் பத்தி என்ன நினைப்பா? என்னோட உடல் கண்டிஷன் உனக்கே நல்லா தெரியும். நான் இப்படி இருக்கிறப்போ, எனக்குப் பிடிச்ச பொண்ணு, என்னைப் பிடிச்சு ஏத்துக்கிட்ட ஒருத்தியைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தேன்.

அது துர்காவுக்கும் நல்லாவே தெரியும். ஆனா துர்காவுக்கு நான் இப்படி இருக்கிறது எப்படி பிடிக்கும்? அவ மனசுல அவளோட கல்யாணத்தைப் பத்தி, எதிர்கால வாழ்க்கையைப் பத்தி 1008 கனவு கண்டு இருப்பா இல்லையா? இப்போ என்ன போல ஒரு நோயாளியை கல்யாணம் பண்ணிக்கிட்டோமே என்று அவள் மனசுலயும் வருத்தம் இருக்குமா, இருக்காதா? நீயே சொல்லு.

நான் எப்படி அவளை நேருக்கு நேரா ஃபேஸ் பண்ணுவேன்? என்னால துர்காவை ஒரு ஃபிரண்டை தவிர்த்து வேற ஒரு கோணத்தில் என்னால் பார்க்கவே முடியல” என்று கூறினான் ஆதி.

“சரிடா, நீ சொல்றது எனக்குப் புரியுது. நீ எதுவுமே துர்காகிட்ட பேசாம எதுவுமே முடிவெடுக்காத. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுங்க. அதுக்கப்புறம் அம்மா, அப்பா கிட்ட போய் பேசுங்க. நீ மட்டும் ஏதாவது சொல்லி உன் சைடு மட்டும் யோசிக்காத. துர்காவோட சைடும் கொஞ்சம் யோசி. உன்னைப் பத்தி என்ன நினைக்கிறா? அவளுக்கு உன்னைப் பிடிக்குமா, பிடிக்காதா? இல்ல அவ மனசுல வேற யாராவது இருக்காங்களா? அப்படிங்கறதை நீ தெரிஞ்சுக்க வேண்டாமா? எடுத்த உடனே ‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம், எனக்கு இது பிடிக்கவில்லை’ என்று நீ சொல்றது எந்தப் பிரயோஜனமும் இல்லை.

உங்க ரெண்டு பேருக்கும் இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கு பிடிக்கலையா? ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இப்போ கல்யாணம் ஆயிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் உறவு முறையா இருக்கீங்க. அதாவது கணவன், மனைவியா. அது சரியா, தப்பா? முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி முடிவு எடுத்துட்டு, அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் பெரியவங்க கிட்ட போய் பேசுங்க, சரியா? முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நான் சொல்றதை திரும்பத் திரும்ப புரிந்துகொள்” என்றான் விக்கி.

“சரி, நீ இப்படியே டென்ஷனாயிட்டு இங்கே எங்கேயும் நடந்துட்டு இருக்காம போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸா ரெஸ்ட் எடு. சரியா? நான் மண்டபத்துக்கு போறேன். அங்க நிறைய வேலைகளை அப்படியே பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டோம். நானும், கதிரும் மண்டபத்துக்குப் போயி பேலன்ஸ் என்ன வேலை இருக்கு, அதெல்லாம் முடிச்சு கொடுத்துட்டு நைட் வீட்டுக்கு வர்றோம்” என்று கூறிவிட்டு, கதிரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

விக்கி கூறியது எல்லாம் கேட்ட ஆதி, சிறிது நேரம் அவன் சொன்னதைப் பற்றி யோசித்தவன், “அவன் சொல்றதும் கரெக்ட் தான். முதல்ல துர்காகிட்ட பேசலாம். அவ என்ன நினைச்சி இருக்கா? இந்தக் கல்யாணத்தால அவளுக்கு என்ன பாதிப்பு வந்திருக்கு? அவள் எவ்வளவு சங்கடப்படுறா? இல்ல அவளுக்கு விருப்பமா என்னங்கறது முதல்ல கேட்டு தெரிஞ்சுக்குவோம். அதுக்கப்புறம் எதா இருந்தாலும் நம்ம முடிவு பண்ணிக்கலாம்” என்று யோசித்தவன், அங்கிருந்த சேரில் அமர்ந்து அப்படியே சாய்ந்து படுத்துக்கொண்டு துர்காவிடம் எப்படி பேசுவது என யோசித்துக்கொண்டிருந்தான்.

அறையை விட்டு வெளியே வந்த விக்கியிடம் கதிர், “என்ன விக்கி, நீ பாட்டுக்கு ஆதிகிட்ட ‘நீங்க ரெண்டு பேரும் கணவன், மனைவி. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க. அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுங்க. துர்கா மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நீ ஏன் எதுவும் முடிவு பண்ணாதே’ என்று சொல்லிட்டு வந்துட்டே.

ஆனா துர்காவுக்கு ஆதியைப் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியலையே. ஒருவேளை அவன் கேட்டு துர்காகிட்ட ‘உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இருக்கா? பிடிச்சிருக்கா, பிடிக்கலையா?’ என்று கேட்டு, துர்கா விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டானா என்ன செய்றது?

அப்போ அவன் உடனே ‘ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்’னு அவன் அப்பவே சொல்லிடுவானே. அம்மாவுக்கு துர்கா மருமகளா வந்ததுல ரொம்ப சந்தோசமா இருக்காங்க. இப்ப போய் அண்ணா இப்படி அம்மா, அப்பா கிட்ட ‘கல்யாணத்திலிருந்து விலகிக்கொள்கிறோம், எங்கள் இருவருக்குமே இந்த கல்யாணத்தில் உடன்பாடில்லை’ என்று சொல்லிட்டான்னா என்ன செய்றது?

அம்மாவுடைய மனநிலை எப்படி இருக்கும்? அம்மாவோட உடம்பும் சரி இல்லை. அவங்க என்ன யோசிப்பாங்கன்னு நினைச்சாலே எனக்குப் பயமா இருக்கு. அவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு” என்றான் கதிர் கவலையோடு.

“அப்படியெல்லாம் அவன் கேட்டதும் துர்கா ‘எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை’ன்னு சொல்ல மாட்டா. நீ கவலைப்படாத” என்று கூறினான் விக்கி.

“அது எப்படி? துர்கா, ஆதி ‘இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையா’ன்னு கேட்டா, உடனே அவ அப்படி சொல்ல மாட்டான்னு நீ எப்படி சொல்ற?” என்று கேட்டான் கதிர்.

“ஏன்னா, ஆதியை துர்கா கிட்டத்தட்ட ரொம்ப வருசமா அவனை லவ் பண்ணிட்டு இருக்கா….” என்றான் விக்கி.

விக்கி கூறியதைக் கேட்ட கதிர் அதிர்ச்சியில் நின்றான்.

EPISODE 6

ஆதி, கதிர் மற்றும் விக்கி மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக்கொடுத்துவிட்டு வெங்கடசாலம் இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.

இனி நான் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக வீட்டில் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்னை பிசினஸ் அது இது என்று இனி யாரும் தொந்தரவு செய்யக்கூடாது நானும் என் பொண்டாட்டியும் ஊர் சுற்ற போகிறோம் என்ன விசாலாட்சி போலாமா என்று தன் மனைவியை பார்த்து கண்ணடிக்க என்னங்க நீங்க பசங்க முன்னாடி இப்படி எல்லாம் அதுவும் இந்த வயசுல என்றார் வெட்கப்பட்டுக் கொண்டே.

அத்தை மாமா உங்களை எவ்வளவு அழகா ரொமான்ஸ் பன்றாரு இந்த வயசுலயே. உங்க மேல அதே காதலோட இருக்கிறது எல்லாம் வரம் அத்தை என்ஜோய் பண்ணுங்க அத்தை என்றாள் கீர்த்தி. அவள் கூறியதை கேட்டு அவளை திரும்பி பார்த்த கதிர் கீர்த்திகாவா இப்படி பேசுவது என்று ஆச்சர்யமாக அவளை பார்க்க அவள் விசாட்சியிடம் ஏதோ பேசி கிண்டல் செய்து சிரித்துக்கொண்டு இருந்தால்.

அவளை பார்த்ததும் கதிருக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்ற என்ன இது இன்னைக்கு இவளை புதுசா பாக்குற மாதிரி ஏன் நான் பார்க்கிறேன். இவள் எத்தனை முறை துர்காவுடன் பாத்திருக்கிறேன் அப்போதெல்லாம் ஏன் இப்படி தோன்றவில்லை என்று அவளையே பார்த்துக்கொண்டிருக்க அருகில் இருந்த விக்கி ரைட்டு…. அங்க என்ன டா பார்வை உனக்கு வேண்டி இருக்கு இந்த பக்கம் திரும்புடா என்று கதிரின் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

சரி எல்லாரும் சாப்பிட வாங்க நேரம் ஆகுது என்று எல்லோரையும் வர சொல்லிவிட்டு கிட்சனிற்கு சென்றுவிட்டார் விசாலாட்சி அவர் சென்றதும் துர்காவும் அவருடன் செல்ல போக அம்மாடி… துர்கா இங்க வாம்மா என்றார் வெங்கடாச்சலம்.

அவர் அழைத்ததும் சொல்லுங்க மாமா என்று அவர் அருகில் வந்தவலை தன் பக்கம் அமர செய்து உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே டா… நாங்கள் அனைவரும் உன்னை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டோம் அதனால் நீயும் இந்த திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிட்டாய்.

ஆனால் உன்மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு முழுதாக தெரியவில்லை இன்றிலிருந்து நீ இந்த வீட்டின் மருமகள் என் மகனின் மனைவி ஆகியிருக்கிறாய் அதை நீ முழு மனதோடு ஏற்றுக் கொண்டாயா என்று தெரிந்துக் கொள்ளவே உன்னிடம் கேட்கிறேன்.

நீ மனதில் என்ன நினைக்கிறாயோ அதை அப்படியே சொல்லி விட்டு அம்மா நான் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக தான் இருக்கிறேன் என்றார். அவர் அவ்வாறு கூறியதும் எதுவும் கூறாமல் துர்கா அமைதியாக இருக்க.

அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அனைவரும் ஆவலாக அவளையே பார்க்க இங்கு ஒருவன் அனைவரையும் விட மிக ஆவலாக இருந்தான் துர்கா சொல்ல போகும் பதிளுக்காக வேற யாரு ஃபிரெண்ட்ஸ் நம்ம ஹீரோ ஆதி தான்.

ஏன் துர்கா அமைதியா இருக்க என்ன நினைச்சிருக்கியோ இந்த கல்யாணத்தை பத்தி அதை அப்படியே சொல்லு என்று விசாலாட்சி அவள் அருகில் வந்து உன் மனசுல என் மகன் இருக்குறானு அவனை நான் விரும்பி தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்னு சொல்லு என்றார்.

சொல்லுமா என்று துர்காவின் அம்மாவும் கூற எனக்கு பிடிச்சு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிட்சேனிற்குள் ஓடி விட்டாள்.

அவள் கூறியதை கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைய ஆதி மட்டும் அதிர்ச்சியில் துர்காவையே பார்த்துக்கொண்டு இருந்தான். இவள் என்ன சொல்கிறாள் பிடித்து தான் திருமணம் செய்திருக்கிறாளா என்னை அப்படி என்றாள் அவள் என்னை…. என்று யோசித்தவன் ச்சேச்சே இருக்காது துர்கா அப்படி எல்லாம் இருப்பவள் இல்லையே இருந்திருந்தால் இத்தனை வருடத்தில் என்னிடம் சொல்லி இருப்பாளே என்று யோசிக்க.

அவன் அருகில் அமர்ந்திருந்த விக்கி என்ன டா துர்காவை அவளோ அதிர்ச்சியா பாக்குற இதை வரை நீ பார்த்த துர்காவா இவள் என்று தானே யோசிக்கிற இன்னும் போக போக பாரு நீ பார்த்த துர்காவை விட இவள் இன்னும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் உனக்கு கொடுக்க போகிறாள் என்று கூறிய விக்கி. அவளிடம் இன்று இரவு எதுவும் கேட்டு அவளை சங்கட படுத்தி விடாதே என்று கூற என்ன இன்று இரவா… என்றான் புரியாமல்.

டேய் உனக்கு உண்மையாவே தெரியலையா இல்லை தெரியாத மாதிரி நடிக்கறியா என்று கெட்டவன் இன்றைக்கு உனக்கு முதல் இரவு டா என்றான் விக்கி இதை கேட்டதும் ஆதி அதிர்ச்சியில் வாட்….. என்று அவனை பார்க்க எனக்கு பசிக்குது வாடா… கதிர் நாம சாப்பிட போகலாம் என்று கூறிவிட்டு

இது என்ன முதல் இரவா அம்மாடி இளமைக்கு புது வரவா….

என்று ஓரு பாடலை ஹ்ம்ம்… செய்துகொண்டே டைனிங் டேபிள் சென்றான். அவன் முதல் இரவு என்று கூறி சென்றதும் ஆதிக்கு முகமெல்லாம் வெர்த்து வடிந்தது. இதுவரை எந்த பெண்ணையும் தான் அருகில் விட்டாதில்லை ஆனால் இனி ஒரு பெண்ணுடன் வாழ்நாள் முழுவதும் ஒரேய அறையில் ஒரே படுக்கையில் எப்படி என்று தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தெரியாமல் டைனிங் ஹாலில் பார்க்க அங்கே துர்கா பிங்க் நிற ஷிப்பான் சேலை கட்டி அதற்கு மேட்சாக ப்ளௌஸ் போட்டு தலையை பிரீ ஹேர் விட்டு அதில் சின்னதாக ஒரு கிளிப் மட்டும் போட்டு மேக் அப் இல்லாத முகத்தில் ஒரு குட்டி வட்ட பொட்டு வைத்துக்கொண்டு சிரித்த முகத்தோடு மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தால்.

இதுவரை அவன் துர்காவை இவ்வளவு நுனுக்கமாக கவனித்ததில்லை ஆனால் இன்று ஏன் இவளை இவ்வளவு தூரம் கவனிக்க தோன்றுகிறது என்று புரியாமல் அப்படியே அமர்மதிருந்தான்.

ஆதி….. என்று விசாலாட்சி அழைக்க அவன் கவனம் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. என்னபா…அங்கேயே உக்காந்துட்டு இருக்க நீயும் வா…. சாப்பிடலாம் என்று அழைக்க ஆதி எழுந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அவன் தட்டில் உணவுகளை துர்கா பரிமாற அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அமர்ந்திருந்தான் ஆதி.உணவை எதுவும் சாப்பிடாமலே ஒரு வித தயக்கதோடே அமர்ந்திருந்த ஆதியை கவனித்த அவன் அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்திக்கொள்ள விசாலாட்சி அவரிடம் ஏங்க நீங்க சொல்லுங்க அவன்கிட்ட நான் சொன்ன கோச்சுக்குவான் என்றார்.

வெங்கடேசலம் திரும்பி ஆதி… நாம மட்டும் தான இப்போ நம்ம வீட்டில இருக்கோம் இன்னும் ஏன் அந்த மாஸ்க்ய் கழட்டாமல் இருக்க.

சும்மா மாஸ்க்ய் கழட்டிட்டு சாப்பிடு பா… என்றார்.அவன் முகம் உடல் என எல்லா பக்கமும் சிவந்த தடித்த கொப்பலங்கள் இருப்பதால் எப்போதும் அவன் முழுக்கை சட்டையும், தான் உடலை முழுதாக மறைத்திருக்கும் படியான ஆடைகளை தான் போடுவான்.

அவன் அம்மா அப்பா கதிர் விக்கியை மற்றும் முத்து தாத்தாவை தவிர அவன் முகத்தை மாஸ்க் இல்லாமல் யாரும் பார்த்தது கிடையாது ஏன் இவ்வளவு வருஷத்தில் ஆதியின் பர்சனல் அசிஸ்டன்ட் ஆக அவன் கூடவே இருக்கும் துர்கா கூட அவன் முகத்தை பார்த்ததில்லை.

அவன் வீட்டில் மட்டும் தான் மாஸ்க் இல்லாமல் சாதாரண உடையில் இருப்பான். இன்று இவனுக்க்கு திருமணம் ஆகிவிட்டு அவன் வீட்டில் இப்போது துர்காவும் அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் இருக்க ஒருவித சங்கடத்துடனேயே இருந்தான் ஆதி.

வீட்டிற்கு வந்ததில் இருந்தது அவன் வெளியே செல்லும்போது எப்படி உடை அணிந்திருக்கிறானோ அதே போல தான் இப்போதும் உடை அணிந்திருந்தான்.அவன் அப்பா சொன்னதும் யோசித்துக்கொண்டே அமர்ந்திருக்க அவன் அருகில் இருந்த விக்கி டேய் எப்படியும் ஒரு நாள் துர்காவும் அவள் வீட்டிலும் உன்னை பார்த்துதான் ஆக வேண்டும் பேசாமல் மாஸ்க்ய் கழட்டு டா என்றான்.

ஆதிக்கு வேறு வழியே இல்லை இப்போது எப்படியும் மாஸ்க்ய் கழட்டிவிட்டு தான் சாப்பிட்டாக வேண்டும் துர்காவும் இனி என்னுடன் இங்கு தான் இருக்க போகிறாள் அவள் பெற்றோரும் அடிக்கடி வந்து போகும்போளுது எப்படியும் நான் அவர்களை சந்தித்து தான் ஆக வேண்டும் என்று யோசித்தவன் ஒரு முடிவுடன் மாஸ்க்ய் கழட்ட போக அப்போதி சரியாக துர்கா மாமா… ஆதி சார்க்கு பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி சார்ரை போர்ஸ் பண்ணாதீங்க என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் தன்னை எப்போதும் ஆபீஸில் பார்த்து பார்த்து கவனித்து என் மனநிலைக்கு தகுந்து அனைத்தையும் செய்யும் துர்கா இன்று என் வீட்டிலும் அதையே செய்கிறாள் என்று நினைத்தவன்.துர்கா கூறியதற்கு இல்லை பரவாயில்லை என்று கூறி தான் மாஸ்க்ய் கழட்டினான்.

வெறும் அவன் கண்களையும் அவன் குணத்திஸ்யங்களை மட்டுமே பார்த்து காதல் செய்து கொண்டிருந்த துர்கா இன்றுடன் இத்தனை வருடத்தில் அவன் முகத்தை முழுவதுமாக பார்க்கிறாள்.தனக்கு தாலி கட்டும் போது கூட அவன் முகமூடியுடனேயே தான் இருந்தான்.

அவன் முகத்தை முதன் முறை நன்கு பார்த்தால் துர்கா. அவனின் அழுத்தமான பார்வைக்கு எற்றார் போல அவன் முகமும் சற்று கடுமையுடனேயே இருந்தது.அவன் முகம் முழுதும் கோபுலங்கள் இருப்பதால் அவன் மீசை தாடி என்று எதையும் வைத்துக் கொண்டதில்லை இதுவரை.

சிவந்த அவன் தோளிர்க்கும் அவனது கோபுளங்களுக்கும் ரொம்ப பெரிய வித்யாசம் எதுவும் இல்லை.அவன் முகத்தில் அவை ஆங்காங்கே சிவந்து சிறிது சிறிதாக வீங்கிப்போய் இருந்தது. ஆனால் அது ஒன்றும் அவன் அழகான முகத்தை கெடுக்க வில்லை ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் கொஞ்சம் பெரியதாக கோபுலங்கள் இருந்தன.

ஆதியின் முகத்தை அனு அனுவாக பார்த்து தான் மனதிற்குள் படம் பிடித்துக் கொண்டிருந்தால் துர்கா. தன் முகத்தை பார்த்ததும் துர்கா முகம் சுழித்து விடுவாள் என்று இனிய ஆதிக்கு,அவள் தன் முகத்தை இவ்வளவு ஆர்வமாக முகம் சுலிக்காமல் பார்க்கிறாள் என்பதே ஆதிக்கு நம்ப முடியவில்லை.

இவன் துர்காவை பார்ப்பதை கூட அவள் கவனிக்கவில்லை பரிமாறுவதை விட்டு விட்டு, துர்காவை கவனித்த கீர்த்திகா அக்கா மாமாவை சைட் அடிச்சது போதும் எனக்கு கொஞ்சம் சாம்பார் ஊத்துறியா என்றாள்.

அப்போது தான் இவ்வளவு நேரம் நான் இப்படியே நின்றிருந்திருக்கிறேன் போல ஆதி என்னை பற்றி என்ன நினைப்பான் என்று யோசித்தவள் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தால்.

கீர்த்திகா ஏதாவது ஒன்று பேசிக்கொண்டே இருந்தால். ஆதியிடம் மாமா நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லட்டுமா என்று கேட்டாள். அவள் தன்னை உரிமையோடு மாமா என்று அழைப்பதை பார்த்து சந்தோசமாக சொல்லு கீர்த்தி என்றான் ஆதி.

நீங்க ரொம்ப ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கீங்க மாமா நான் மட்டும் முதல்லயே உங்க முகத்தை பார்த்திருந்தா எப்பவோ உங்களுக்கு ப்ரொபோஸ் பன்னி இருப்பேன் என்றாள். அவள் கூறியதை கேட்டு ஆதிக்கு புரை ஏறியது.

தன் அக்காவை வைத்துக்கொண்டு இவள் என்ன பேச்சு பேசுகிறாள் என்று நினைத்துக்கொண்டு திரும்பி துர்காவை பார்க்க அவள் கீர்த்திகாவை முறைத்துக்கொண்டு நின்றிருந்தால்.

இதை எதையும் கவனிக்காத கீர்த்திகா என்ன மாமா நான் சொல்றது உண்மைதானே என் அக்கா எப்படி உங்கள் முகத்தை பார்க்காமலேயே இவ்வளவு நாள் காத…… என்று அவள் ஏதோ கூற வரவும் துர்கா கீர்த்தி…. என்று சத்தமிட அப்போது தான் கீர்த்திக்கு ஐயோ…. இன்னேரம் நான் அக்காவை பற்றி உளறி இருப்பேனே என்று துர்காவை பயத்துடன் துர்காவை பார்க்க அவள் எரிக்கும் பார்வை வீசிக்கொண்டு இருப்பதை பார்த்து போச்சு அவ்ளோ தான் நான் இன்னிக்கு என்று மனதிற்குள்லேயே தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தால்.

துர்காவை தவிற இன்னோரு ஆள் கீர்த்தியை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் வேறு யாருமில்லை நம்ம. கதிர் தான். நான் இங்கு ஒருவன் இருக்கிறேன் என்னை விட்டு விட்டு என் அண்ணனை அதுவும் திருமணம் ஆனவனிடம் போய் எப்படி பேசுகிறாள் என்று மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டிருக்க கீர்த்திகாவிற்கு புரை ஏரியாது இப்போது.

அவளுக்கு அவசரமாக தண்ணீரை கொடுத்த அவள் அம்மா கொஞ்ச நேரம் பேசாம சாப்பிடறிய நீ… இப்படி தான் எப்பவும் ஏதாவது ஒன்று பேசிட்டே இருப்பா நீங்க அவள் பேசியது எதையும் மனசுல வெச்சுக்காதீங்க தம்பி என்று ஆதியிடம் அவர் கூற என்ன சம்மந்தி இன்னும் தம்பிஞ்சு சொல்லிட்டு இருக்கீங்க என் பிள்ளைய மாப்பிள்ளை என்று வாய் நிறைய கூப்பிடுங்க என்றார் விசாலாட்சி.

சரிங்க சம்மந்தி அம்மா என்றவர் கீர்த்தி பேசாம சாப்பிடு என்று அவளை அதட்டி விட்டு சாப்பிட தொடங்கினார்.

இங்கு ஆதி கீர்த்தி இப்போ ஏதோ சொன்னாலே துர்கா பற்றி அதற்குள் அவள் இவளை அதட்டிவிட்டாளே அவள் ஏதோ சொன்னாலே என் அக்கா எப்படி இவ்வளவு நாள் உங்க முகத்தை பாக்காமயே கா…. ன்னு ஏதோ சொன்னாலே எனவே இருக்கும் என்று யோசிக்க ஏதும் புரியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து அம்மா நான் ரூம்க்கு போறேன் என்று கூற டேய்.. டேய்… எங்க டா போற இரு கொஞ்ச நேரம் நீ கதிர் ரூம்ல போய் இரு உன் ரூமை எல்லாம் கிளீன் பண்ண சொல்லிருக்கேன் என்று கூற ஏன் மா என் ரூம் நல்லா தான இருக்கு என்றவனை பார்த்தவர் இவனை என்ன செய்வது என்று புளம்பியவர் விக்கி என்று அழைக்க அம்மா நான் பாத்துக்கிறேன் நீங்க ஆக வேண்டிய வேலைய பாருங்க என்று கூறிவிட்டு ஆதியை அவன் அழைத்து சென்றான்.

கதிர் ரூமிற்குள் வந்தா ஆதி என்ன டா இது என்று கேட்க நான் அப்போவே என்ன சொன்னேன் உனக்கும் துர்காவுக்கும் இன்னிக்கு முதல் இரவு என்று சொன்னேனே என்றான் விக்கி.

டேய் எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை இப்போ எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் என்று கூறியவன் நான் இப்பவே போய் அம்மா கிட்ட பேசுறேன் என்று சென்றவனை பிடித்து நிறுத்திய கதிர் அண்ணா இது எல்லாம் அம்மா அப்பா திருப்திக்காக செய்றது நீ போய் வேண்டாம்னு சொல்லி அம்மாவை சங்கட படுத்தாத ப்ளீஸ் என்றான் கதிர், இதை கேட்ட பின் ஆதியால் எதுவும் செய்ய முடியவில்லை.

சிறிது நேரத்தில் ஆதியை ரெடியா செய்துவிட்டு அவனிடம் ஆதி நீ உன்னோட கோபம் எல்லாம் துர்கா கிட்ட காட்டி அவளை வந்தா முதல் நாளே சங்கட

பட வைத்துவிடாதே நான் சொன்னது போல முதலில் அவள் என்ன நினைக்கிறாள் என்று எதுவும் தெரியாமல் அவளிடம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி விடாதே சரியா என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு போய் அவன் அறையில் விட்டான்.

உள்ளே வந்தவன் கதவை சாற்றி விட்டு திரும்பி பார்க்க அங்கே துர்கா கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தால்.ஆதி வருவதை பார்த்தவள் அவசரமாக எழுந்து நின்றவள் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.

உள்ளே வர தயக்கப்பட்டுக்கொண்டே வந்த ஆதி சென்று கட்டிலின் மறுபுறம் அமர்ந்தவன் து…துர்கா… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான்.

 நானும் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் சார் என்றாள் துர்கா. என்ன பேசணும் சொல்லு என்று கேட்டான் ஆதி நீங்க சொல்லுங்க சார் பரவாயில்லை என்றாள். இல்லை பரவாயில்லை நீ சொல்லு என்று அவளையே பார்க்க அவனை பார்த்து அமர்ந்தவள் இப்படி சட்டுனு கல்யாணம் நம்ம ரெண்டு பேருக்கும் நடக்கும் என்று நான் நினைக்கல நீங்களும் நினைச்சிருக்க மாட்டீங்க சார்.

அது மட்டுமில்லாமல் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தில் நீங்கள் எப்போதும் திரும்பி கூட பார்க்க மாட்டிர்கள் இந்த திருமணமும் அப்படித்தான் உங்களுக்கு என்று எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுடைய தகுதிக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது எனக்கு நன்றாகே தெரியும் நாம் இருவரும் இந்த ரூமிற்குள் இப்போது போலவே எப்போதும் இருக்கலாமா சார் வெளியே செல்லும்போது அத்தைக்காக என்னுடன் என்னை பிடித்தது போல உங்களால நடந்து கொள்ள முடியுமா சார் என்றாள் பாவமாக.

துர்கா இப்படி சொல்வால் என்று ஆதி நினைக்கவில்லை நான் கூற நினைத்ததையே அவளும் கூற சரி என்று தலையை ஆட்டினான்.நாம எப்பவும் போல ஃபிரெண்ட்ஸ் ஆவே இருக்கணும்னு நான் எதிர் பாக்கிறேன் என்றாள் துர்கா.

சரி துர்கா இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றான் ஆதி. அப்பறோம் இன்னோரு வேண்டுகோள் என்றாள் துர்கா. ஹேய் என்ன இது வேண்டுகோள் அது இது என்று சொல்லிட்டு என்ன கேட்கணுமோ கேளு சரியா என்றான்.

நாளையில் இருந்து நான் எப்போதும் போல் ஆஃபிஸிற்கு உங்களுடைய பர்சனல் அசிஸ்டன்ட் ஆகவே வரலாமா என்றாள். அவள் கூறியதை கேட்டு யோசித்தவன் கண்டிப்பா வரணுமா எனக்கு மனைவி ஆகிவிட்ட பிறகு என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் ஒரு நிமிடம் அவன் தான் அவ்வாறு கூறினானா என்று அவனையே பார்க்க. உனக்கும் எனக்கும் திருமணம் ஆனது நம் ஆபீஸ் முழுக்க தெரியும் அப்படி இருக்க நீ வேளைக்கு வந்தே ஆக வேண்டிய அவசியம் எதுவும் இருக்கிறதா என்று தான் கேட்கிறேன் என்றான்.

என் வீட்டில் எனக்கு சில கடமைகள் இருக்கு அதை எல்லாம் முடிக்க எனக்கு கொஞ்ச காலம் தேவைப்படும், அதுவுமில்லாமல் என்று ஏதோ சொல்ல வந்தவள் அமைதியாகிவிட சொல்லு துர்கா என்றான்.

நம்முடைய கல்யாணத்தில் உங்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று தெரியும். நாளைக்கே உங்களுக்கு பிடித்த ஒரு பெண் ஏதும் வந்துவிட்டால்.என்னை உங்களை விட்டு விலகிக்கொள்ள நீங்கள் கேட்டாள், அதன் பின் என் நிலை எனக்கு என்று ஒரு பிடிப்பு வேண்டாமா சார் அதுவும் ஒரு காரணம் நான் என் வேலையை திருமணத்திற்கு பிறகு தொடர என்றாள்.

தான் சில விஷயங்கள் துர்காவிடம் கூற நினைத்ததில் பெரும்பாலானவை துர்காவே சொல்லிவிட்டால்.ஆனால் அவளை நான் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன் என்ற துர்கா கூறிய வார்த்தையை கேட்டு அவனுக்கு ஏனோ இதயம் வலித்தது.

துர்கா கூறியதை எல்லாம் கேட்டவன் சரி என்றான் சொல்லிவிட்டு எழுந்து படுக்க போக சார்…. என்று துர்கா தயக்கத்தோடு திரும்பவும் அழைக்க சொல்லு துர்கா இன்னும் எதுவும் சொல்லனுமா என்று கேட்க இல்லை சார் என்று தலையை ஆட்டினால். அப்பறோம் ஏன் கூப்பிட என்றான் இல்ல…. நீங்க ஏதோ என்கிட்ட பேசணும்னு சொன்னிங்க… அதான்…. என்று இழுத்தால்.

ஓ …. அதுவா… நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீ சொல்லிட்ட அதான் நான் எதுவும் பேசாமல் இருந்துட்டேன் என்றான் ஆதி. இனி எதுவுமில்லையே என்னிடம் சொல்வதற்கு என்று கேட்டான் அவள் இல்லை என்று தலையை ஆட்டியதும் சரி தூங்கலாமா என்றான்.

ம்ம்…. என்று தலையை ஆட்டிவிட்டு பெட்டில் இருந்த ஒரு தலையணையையும் பெட்ஷீட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு செல்ல போனவளை பார்த்து எங்க போற துர்கா என்று கேட்டான் ஆதி. அந்த சோபாவில் படுக்க போறேன் சார் என்றால்.

ஏன் அங்க போய் படுக்கிற இங்கயே படுக்க வேண்டியதுதானே என்றான். அவன் அவ்வாறு கூறியதும் மனதிற்குள் ஐ….. நான் நினைச்சது நடக்குது என்று சிரித்துக்கொண்டவள் வெளியே எதுவும் தெரியாதவள் போல இங்கயா….. என்றாள் குழந்தை போல. ஆமா இங்க தான் ஏன் என்று கேட்டான். இல்லை இது நீங்க தூங்குற பெட் அதான்…..என்று இழுக்க

இங்க பாரு துர்கா தெரிஞ்சோ தெரியாமலோ நாம இப்போ கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் இம்போர்ட்டன்ஸ் கொடுத்துக்கணும் சரியா நீ இங்கயே வந்து படு என்று பெட்டை கைகாட்டின்னான்.

சார் அது வந்து…. என்று அவள் இழுக்க ஏன் நீ இங்க வந்து படுக்க இவ்ளோ யோசிக்கிற நான் என்ன உன்னை எதுவும் பண்ணிவிடுவேனா என்று கோபமாக கேட்க அவன் கோபத்தை பார்த்து பயந்தவள் இல்ல சார் நான் இங்கயே படுத்துக்கிறேன் என்று வேகமாக தன் கையில் இருந்த தலையனையை பெட்டில் போட்டுவிட்டு மேலே ஏறி போர்வையை போர்த்திக்கொண்டு கப் சிப் என்று படுத்துவிட்டால்.

அவள் அவ்வாறு பயந்து படுப்பதை பார்த்து ஆதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.அவளை அந்த பக்கம் படுத்திருக்க ஆதிக்கும் லேசாக புன்னகைத்தவன் பெட்டில் படுத்து கண்களை மூடி கொஞ்ச நேரத்தில் உறங்கிப்போனான்.

அவன் நன்றாக உறங்கி விட்டான் என்று உறுதி படுத்திய துர்கா மெல்ல எழுந்து ஆதியை பார்க்க அந்த மங்கிய விளக்கொளியில் அவன் அவன் முகம் அழகாக தெரிய அவன் புறம் வந்து அருகில் படுத்துக்கொண்டு ஒரு கையில் தான் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்துக்கொண்டு அவன் தூங்குவதை பார்த்து கொண்டு மெல்ல இத்தனை வருசமா நான் பக்கத்துல இருந்திருக்கேன் ஆனா இவ்ளோ பக்கத்துல நினைச்சே பாக்கலை என்று கூற அவள் மூச்சுகாற்று ஆதியின் முகத்தில் லேசாக பட சட்டென கண் திறந்து ஆதி பார்க்க அவன் கண் திறக்கிறான் என்று தெரிந்ததும் சட்டென பெட்டில் தூங்குவது போல கண் மூடி படுத்துக் கொண்டால்.

தன் மீது விழுந்த காற்றின் வாசம் அவனை ஏதோ செய்ய என்ன இது இதுவரை நான் உணராத ஒரு வாசம் என்று யோசித்தவன் துர்காவை பார்க்க அவள் நன்கு தூங்கிக் கொண்டிருந்தால் இல்லை தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தால்.

இவளிடமா இந்த வாசனை வருகிறது என்று அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை கொண்டு வர அவளின் மூச்சுகாற்று அவன் முகத்தில் பட ஆதிக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு அவன் உடலில் ஏற்பட்டது. தன்னிலை இழந்தது போல ஒரு உணர்வு அவள் மூச்சு காற்று அவன் மேல பட பட அதன் உஸ்னம் அவனை ஏதோ செய்ய இங்கே துர்காவின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.அவன் இவ்வளவு அருகில் இருப்பதை அவளால் நம்ப முடியாமலும் அவன் அருகாமை அவளை ஏதோ செய்ய இதற்கு மேல் தாங்காது என்று நினைத்து கண் விழிக்க அவள் கண் விழிப்பதை எதிர் பாராமல் ஆதி திட்டுகிட்டு எழ போக எழ முடியாமல் தடுமாறி துர்காவின் மேலே விழ அவன் உதடும் அவள் உதடும் ஒன்றை ஒன்று தொட்டு ஒட்டிக்கொண்டது….

EPISODE 7

தூக்கத்திலிருக்கும் துர்காவின் மூச்சுக் காற்று பட்டு, பெட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஆதி சட்டென்று கண் விழிப்பதை உணர்ந்த துர்கா, உறங்குவதுபோல் படுத்துக்கொண்டாள்.

தன்மேல் விழுந்த காற்றின் உணர்வு ஆதியை ஏதோ செய்ய, ‘இதுநாள் வரை இந்த அறையில் இப்படி ஒரு வாசம், உணர்வு தனக்கு ஏற்பட்டதில்லையே’ என்று யோசித்தவன், திரும்பி துர்காவைப் பார்க்க அவள் உறங்கிக்கொண்டிருப்பதுபோல் படுத்திருந்தாள். அது ஆதிக்குத் தெரியாது. அவள் அருகில் மெல்லச் சென்று, அவள் முகத்தருகே குனிந்து அவள் தூங்குகிறாளா என்று பார்க்க, அப்போது அவளது மூச்சுக் காற்று ஆதியின் மேல் பட, ‘இதே மூச்சுக்காற்றுதான் சற்றுமுன் தன் மேல் பட்டது’ என்பதை உணர்ந்தான் ஆதி.

‘துர்கா உறங்கிக்கொண்டுதான் இருக்கிறாளா? இவள் வாசம் இங்கே படுத்திருக்கும்போது என்மீது எப்படி வந்தது?’ என்று யோசித்துக்கொண்டே அவளைப் பார்க்க, அவன் தன்மேல் இவ்வளவு அருகாமையில் இருப்பது துர்காவால் உணர முடிந்தது.

ஆதியின் மூச்சுக்காற்று துர்காவின் முகத்தில் வருட, அவனின் அருகாமையால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், துர்கா என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள்.

ஆதி தன்னிடம் இருந்து விலகுவதாகத் தெரியவில்லை என்று உணர்ந்தவள், ‘இதற்கு மேல் தன்னால் முடியாது’ என்று துர்கா கண் விழிக்க, துர்கா திடீரென்று கண் விழித்த அதிர்ச்சியில் ஆதி அவளிடமிருந்து விலகப்போக, நிலை தடுமாறி அவள் மேலேயே ஆதி விழ, அவன் முகமும் அவள் முகமும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ள, இருவரின் உதடும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது.

இதை எதிர்பாராத இருவருமே அதிர்ச்சியில் தங்கள் கண்களை விரிக்க, ஒருவர் கண்களும் ஒருவர் மிக நெருக்கமாகப் பார்த்ததில், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் துர்காதான் முதலில் சுயநினைவு வந்தவளாக அவனைப் பிடித்து தன் மேலிருந்து தள்ளிவிட, ஆதியும் அவள் அருகில் பெட்டில் ‘பொத்’தென்று விழுந்தான்.

பெட்டில் விழுந்தவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு பெட்டிலிருந்து எழுந்து அமர, துர்காவும் எழுந்து அமர்ந்தாள். சிறிது நேரம் இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

ஆதி துர்காவைப் பார்க்கவும், துர்கா ஆதியைப் பார்க்கவும் இருவரும் ஒன்றாக தங்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, துர்கா அவன் முகத்தைப் பார்த்ததும் வெட்கப்பட்டுக்கொண்டு தலை குனிந்துகொண்டாள்.

முதன்முதலாக அந்தச் சிறிய விளக்கொளியில், வெட்கப்பட்டு தன்னைப் பார்த்து தலைகுனிந்து கொண்டிருக்கும் துர்காவைத் தன் தோழியாக அல்லாமல், தன்னிடம் பணிபுரிபவளாக அல்லாமல், வேறு ஒரு கோணத்தில் அவளைப் பார்த்தான் ஆதி.

தன் இந்த நிலை வித்தியாசமாக இருந்தது ஆதிக்கு. அவளை வைத்த கண் வாங்காமல் ஆதி பார்த்துக்கொண்டிருக்க, வெட்கப்பட்டு தலைகுனிந்தவள் வெகுநேரமாய் ஆதியும் எதுவும் பேசாமல் இருக்க, தலை நிமிர்ந்து அவனைப் பார்க்க, இப்போது அவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த துர்கா, என்ன கூறுவது என்று தெரியாமல், “ஆதி…..” என்று தயங்கிக்கொண்டே அவனை மெதுவாக அழைத்தாள்.

துர்கா தன் பெயர் சொல்லி அழைத்ததும் தான் அவளை அப்படிப் பார்ப்பதை உணர்ந்தவன் சட்டென்று தன் தலையைக் குலுக்கிக்கொண்டு, “துர்கா…. அது வந்து… துர்கா நான் ஏதோ காற்று… வாசம்…. நீ…. பக்கத்தில்…..” என்று வார்த்தை முழுதாக வராமல் பேசினான் ஆதி.

அவன் நிலையைப் புரிந்துகொண்ட துர்கா மனதுக்குள் சிரித்துக்கொண்டவள், “என்ன ஆதி சொல்ற, எனக்கு எதுவுமே புரியல” என்ற துர்கா வேண்டுமென்றே கூற, “அது ஒன்னும் இல்ல துர்கா. நீ படுத்து தூங்கு. சாரி, தெரியாம உன் மேல வந்து….” என்று சொன்ன ஆதி அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் திரும்பி, போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டான்.

‘என்ன ஆதி? ஆபீஸ்ல அவ்வளவு கம்பீரமா, எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் எதிர்த்து ஃபேஸ் பண்ணி நிற்பாய். ஆனா இப்போ என்ன? உன்னால ஃபேஸ் பண்ண முடியலையா?’ என்றும் மனதுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டவள், “இன்னும் போகப்போக நிறைய இருக்கு ஆதி, எனக்கு உன்னை பிடிக்கும் என்று உனக்குத் தெரிய வைப்பேன். அதேபோல, உனக்கும் என்னை பிடிக்க வைப்பேன்” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டவள், திரும்பி பெட்ஷீட்டைப் போர்த்திக்கொண்டு படுத்து உறங்கினாள்.

துர்கா இப்போதுதான் நன்றாகத் தூங்க ஆரம்பித்தாள். அவள் தன்னை மறந்து அசந்து தூங்கிக்கொண்டிருக்க, இங்கு ஆதியின் நிலைதான் பெரும்பாடாகிவிட்டது.

தான் பிறந்ததிலிருந்து பெண்களின் வாடையே அறியாமல் வளர்ந்த ஆதி, தன்னிடம் யாரையும் நெருங்கவிடாமல் இருந்தவன், இன்று இவ்வளவு நெருக்கத்தில் துர்காவைப் பார்த்ததும் அவளுக்கு முத்தமிட்டதும் அவன் மனதிற்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது.

ஆதியால் நன்றாகப் படுத்து உறங்கவும் முடியவில்லை. தூக்கம் வராமல் இங்கும் அங்கும் புரண்டு புரண்டு படுத்தவன், திரும்பி படுக்கும்போது துர்காவைப் பார்த்து படுத்துக்கொண்டான்.

துர்கா நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்க…. அவளைப் பார்த்து படுத்துக்கொண்டிருந்த ஆதி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இவ்வளவு நாள் அவன் துர்காவின் முகத்தை இவ்வளவு நெருக்கத்தில் ஒருபோதும் பார்த்ததும் இல்லை. ஆனால் இன்று இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும்போது ஆதிக்கு மனதிற்குள் ஏதோ செய்தது. ‘தனக்கு ஏன் ஒரு மாதிரியான உணர்வு துர்காவைப் பார்க்கும்போது ஏற்படுகிறது?’ என்று அவன் மனதிற்குள் அவனைக் கேட்டுக்கொண்டான்.

அவளைப் பார்த்துக்கொண்டே படுத்திருந்த ஆதியின் மேல் திடீரென்று ஏதோ வந்துவிட, ‘என்ன?’ என்று திரும்பிப் பார்க்க, துர்காவின் கால் அவன் கால் மேல் வந்து ‘பொத்’தென்று விழுந்து இருந்தது.

தன் மேல் காலைப்போட்டுப் படுத்திருந்த துர்காவைப் பார்த்தவன் மெதுவாக எழுந்து, அவள் காலை தன் மீது இருந்து நகர்த்தி கீழே வைத்துவிட்டுப் படுக்க, துர்காவின் கை அவன் வயிற்றின் மேல் விழுந்தது.

“துர்கு…..” என்று அவளைக் கடுப்புடன் அழைக்க, ஆனால் அவளோ நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள். ஆதியும் அவள் தன் மேல் போடும் கையையும் காலையும் விலக்கிக்கொண்டே இருக்க, அவள் தூக்கத்தில் இங்கேயும் அங்கேயும் நெளிந்து படுத்துக்கொண்டும் அவன் மேல் கை கால்களைப் போட்டுக்கொண்டும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள்.

பாதி இரவுக்கு மேல், ‘இனியும் இவளுடன் படுத்திருந்தால் நான் தூங்க முடியாது’ என்று எழுந்து சென்று சோபாவில் படுத்துக்கொண்டான். அதன் பிறகே அவனால் தூங்க முடிந்தது.

❤️

இரவு முழுவதும் தூங்காமல், தன்னை அவமானப்படுத்திவிட்டு, துர்காவை திருமணம் செய்து கொண்ட ஆதியையும், தன் அந்தஸ்திற்கு நிகரில்லாதவளை தன் இடத்தில் வைத்துக்கொண்டு திருமணம் செய்திருக்கும் துர்காவின் மீதும் பழி உணர்ச்சியோடு இருந்தாள் சங்கவி.

காலையில் அவளுக்கு காபி கொண்டுபோய் கொடுக்க பயந்துகொண்டு வேலைக்காரர்கள் யாரும் அவள் ரூமிற்கு போகாமல் இருக்க, சங்கவியின் அப்பா தானே அவளுக்கு காபி கொண்டு சென்று அவள் அறைக்கதவை தட்ட, கதவைத் திறந்து கொண்டு அவள் அப்பா காபியுடன் உள்ளே வந்தார். உள்ளே வந்தவர், இரவு எந்த இடத்தில் என்ன கோலத்தில் பார்த்தாரோ அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளை இப்படிப் பார்க்கவே சங்கவியின் அப்பாவிற்கு சங்கடமாக இருந்தது. காபியை ஒரு மேஜை மேல் வைத்துவிட்டு, அவள் அருகில் போய் அமர்ந்தவர், “சங்கவி?” என்று அழைத்தார். அவர் அழைத்ததும் அவரை நிமிர்ந்து பார்க்க, “ஏன்டா…. இப்படியே நைட் முழுக்க உக்காந்துட்டு இருந்தியா நீ….” என்றார்.

அவள் “ஆமா” என்று தலையை ஆட்டினாள். “இப்படி உன்னையே வருத்திட்டு இருக்குறதுனால யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லடா. முதல்ல நீ எழுந்திருச்சு பிரஷ் ஆகிட்டு வந்து இந்த காபியை குடி” என்றார்.

அவள் எதுவும் பேசாமல், அவரையே பார்க்க, “ஏண்டா அப்படி பாக்குற? அப்பாவை முதல்ல பிரஷ் ஆகிட்டு வாடா. நாம மத்ததெல்லாம் பேசிக்கலாம்” என்று கூற, “சரி” என்று தலையை ஆட்டியவள், எழுந்து பாத்ரூம் சென்று பிரஷ் ஆகிவிட்டு வெளியே வந்தாள்.

அவள் வந்ததும் வேறு காபி கொண்டு வர சொல்லிவிட்டு, அவளைத் தன் அருகில் அமர செய்து, தலையை வருடிக் கொடுத்தவர், “இங்க பாரு சங்கவிமா. இப்ப எதுக்கு நீ இவ்வளவு ஃபீல் பண்ற? உனக்குத்தான் ஆதியைப் பிடிக்கலைனு நேத்து அவ்வளவு பேர் முன்னாடி தைரியமா சொன்னியே? இப்போ எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு இவ்வளவு ஃபீல் பண்ணி நைட் முழுக்க தூங்காம இருக்க?” என்றார்.

“இப்போ நீ நினைச்ச மாதிரிதானே உனக்குக் கல்யாணம் நடக்கலை” என்று கேட்டார். “அப்பா… நான் எனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மண்டபத்தில் இருந்து கிளம்பத்தானே போனேன்? நீங்கள்தான் என்னை சமாதானம் செய்து திரும்ப என்னை மனமேடையில் அமர வைத்தீர்கள். நானே சம்மதமாகி திருமணத்திற்கு சம்மதித்து வந்து அமர்ந்திருக்கும்போது, அவன் எப்படி அவ்வளவு பேர் முன்னாடி என்னைக் கேவலப்படுத்தி, அவமானப்படுத்தி, ‘அவர்கள் குடும்பத்திற்கு நான் ஏற்றவள் இல்லை’ என்று முடிவு செய்யலாம்? என்னுடைய அந்தஸ்து பற்றி பேசிய அந்த ஆதி, எனக்கு அந்தஸ்தில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அந்தத் துர்காவை அவன் கல்யாணம் பண்ணியிருக்கான். என்னால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.”

“நம்முடைய அந்தஸ்து எங்கே? அந்த ஏழை அடுத்தவரிடம் கைகட்டி வேலைபார்க்கும் அந்தத் துர்கா எங்கேப்பா?” என்றாள் ஆத்திரத்துடன்.

“என்னை அவமானப்படுத்திய அந்த ஆதியையும், எனக்கு சமம் இல்லாத அந்தத் துர்காவையும் நான் சும்மா விடப்போவதில்லை. எப்படியும் அந்த ஆதிக்கு இந்த கல்யாணம் பிடிக்காமல் தான் பண்ணி வைத்திருப்பார்கள். அவனால் அந்தத் துர்காவைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது.”

“என்னதான் என்னை வேண்டாம் என்று சொன்னாலும், அந்த ஆதி என்னைக் காதலித்திருக்கிறான். அவன் மனதில் நிச்சயமா நான் இருப்பேன். அவனிடம் மீண்டும் எப்படியாவது நான் நெருங்கிப் பழகி, அவனே வந்து என்னிடம் ‘என்னை திருமணம் செய்துகொள்’ என்று அவனை கெஞ்ச வைக்க வேண்டும் அப்பா” என்றாள் சங்கவி.

“அந்த ஆதிக்கு எப்படி இந்த கல்யாணம் பிடிக்காமல் தான் பண்ணியிருப்பான். அப்பா, என்னை எப்படியாவது ஆதியின் பிசினஸ் கூட நம்ம பிசினஸையும் மறுபடியும் நான் உள்ளே நுழைய ஏதாவது ஒரு ஹெல்ப் பண்ணுங்க. அப்பத்தான் நான் பக்கத்துல இருந்து ஆதியும் அந்தத் துர்காவும் என்ன பண்றாங்க என்று பார்க்க முடியும். அது மட்டும் இல்லாம அந்தத் துர்கா, ஆதி பணக்காரன்னு சொல்லி அவனை வளைச்சுப் போடுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அதை நான் நடக்க விடக்கூடாது. என்னதான் அவளைக் கல்யாணம் பண்ணி இருந்தாலும், எல்லோர் முன்னாடி என்னை வேண்டாம்னு சொன்ன அவனோட வாழ்க்கை நல்லா இருக்க நான் விடமாட்டேன். தெரிஞ்சோ தெரியாமலோ அவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துடக்கூடாது. எனக்கு முதல்ல ஆதி கூட கம்பெனியில் திரும்பவும் நான் போறதுக்கு நீங்க ஒரு வழி பண்ணிக் கொடுங்க அப்பா” என்று கூறினாள் சங்கவி.

“நீ சொல்றதும் சரிதாம்மா. கொஞ்சம் பொறுத்துக்கோ. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நான் எப்படியாவது ஏதாவது ஒரு ஐடியா பண்ணி, நம்ம பிசினஸோட அவங்க கிட்ட இருக்கிற டீலை கேன்சல் பண்ணாம முதல்ல பார்த்துக்கிறேன். அதுக்கப்புறம் உனக்கு நான் நம்ம பிசினஸோட எல்லா உரிமையும் கொடுத்து, நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கிற மாதிரி நான் பண்றேன். அப்பத்தான் உன்னால லீகலா அவங்க கம்பெனிக்குள்ள போக முடியும்” என்றார் சங்கவியின் அப்பா.

❤️

இரவு வெகு நேரமாக சரியாகத் தூங்காததால் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்த துர்கா, திரும்பி ஆதியைப் பார்க்க, ஆதி அங்கு இல்லை.

எழுந்து குளித்து முடித்து கீழே வர, அங்கே டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ‘அச்சோ! வந்த முதல் நாளே இவ்வளவு லேட்டா வந்துட்டேனே’ என்று நினைத்துக்கொண்டு டேபிளுக்கு வந்தவள், அனைவர்க்கும் உணவு பரிமாறிக்கொண்டிருந்த விசாலட்சியிடம், “அம்மா… குடுங்க, நான் பரிமாறுகிறேன் எல்லோருக்கும்” என்று அவர் கையிலிருந்து உணவை வாங்க, அதற்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த கீர்த்திகா, “அக்கா… வந்தது லேட், இப்போ அத்தை கிட்ட ஐஸ் வச்சு நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்க்குறியா நீ…? ஆமா, ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்ட நீ?” என்று கேட்க, “அது…. நைட் தூங்க லேட்டா ஆகிவிட்டது” என்று துர்கா சொல்ல, அவள் சொன்னதன் அர்த்தம் என்னவோ வேறு…. ஆனால் அங்கிருந்தவர்கள் புரிந்துகொண்டது வேறு. “லேட்டா ஆகிருச்சா நைட்? நீ சீக்கிரம் தூங்கிடுவியே எப்போதும்” என்றாள் கீர்த்தி.

“அது…. அது வந்து… தூக்கம் வரலடி…. அதான் லேட்டா தூங்கி லேட்டா எழுந்தேன்” என்றாள் துர்கா. “தூக்கம் வரலையா? இல்ல, மாமா உன்னை நைட் முழுக்கத் தூங்க விடலையா?” என்று கண்ணடித்து கீர்த்தி கேட்க, அவள் அவ்வாறு கேட்டதும் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆதிக்கு புரை ஏறியது. அவனுக்கு அவசரமாகத் தண்ணீர் கொடுத்த துர்கா, “ஏய் வாலு…. கொஞ்ச நேரம் வாய வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியாடி…. பேசாம சாப்பிடு” என்று அவளை அதட்ட, “நான் இப்போ என்ன கேட்டுட்டேன்? உண்மையதானே கேட்டேன்?” என்று முகத்தைச் சிறுபிள்ளையை யாரேனும் திட்டிவிட்டால் குழந்தையின் முகம் சோகமாவதைப்போல கீர்த்தியின் முகம் இருக்க, அதைப்பார்த்து அவளுக்கு வக்காலத்து வாங்க நம்ம கதிர் வந்துட்டாரு.

“ஹே துர்கு! கீர்த்தி என்ன இப்போ தப்பா கேட்டுட்டா? சரியா தான கேட்டா?” என்றவன், “ஆமா ஆதி… உன் கண்ணெல்லாம் ஏன் சிவந்திருக்கு? நீயும் நைட் சரியா தூங்கலையா?” என்று கதிர் கேட்க, “ஆமாடா…. நைட் சரியா தூங்கலை” என்றான். “ஏன் தூங்கலை?” என்று கதிர் கேட்க, சாப்பிடும் மும்முரத்தில், “துர்காவாலதான்டா நைட் எல்லாம் நான் தூங்கலை” என்று சொல்ல, டைனிங் ஹாலில் இருந்த அனைவரும் எதுவும் பேசாமல் தலைகுனிந்து சிரித்துக்கொண்டு சாப்பிட, “என்ன திடீர் என்று அமைதியாக இருக்கிறது?” என்று யோசித்து ஆதி தலை நிமிர்ந்து பார்க்க, அவனையும் அவன் அருகில் இருந்த துர்காவையும் பார்த்து அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, தான் கூறியதன் அர்த்தம் இப்போதுதான் ஆதிக்கு புரிய, அவன் திரும்பி கதிரை முறைக்க, “என்னை ஏன்டா…. முறைக்குற? நான் ஒன்னும் தப்பா கேக்கலையே, கண்ணு ஏன் சிவந்திருக்கு என்றுதானே கேட்டேன்?” என்றவன் குனிந்து அமைதியாக சாப்பிட, அவனை யாரோ குருகுருவென பார்ப்பதுபோல இருக்க, தன்னை சுற்றிப்பார்க்க, எதிரே இருந்த கீர்த்திதான் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சரியாக கதிர் கீர்த்தியைப் பார்க்க, கீர்த்தி தலையை அவன் பார்க்காததுபோல திருப்பிக்கொண்டாள்.

அம்மா

“சரி சரி…. கிண்டல் செய்தது போதும், சீக்கிரம் சாப்பிடுங்க. நேரம் ஆகுது. நல்ல நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டும்” என்றார் விசாலட்சி. “கிளம்பணுமா அம்மா? எங்கே கிளம்பணும்? எனக்கு ஆஃபீஸில் ஏகப்பட்ட வேலை பெண்டிங்கில் இருக்கிறது” என்று கூற, “இங்க பாரு…. இன்னும் ஒரு பத்து நாளைக்கு நீ ஆபீஸ் பக்கமே போக வேண்டாம். எல்லாத்தையும் கதிரும் விக்கியும் பார்த்துக்கொள்வார்கள்” என்றார். “அம்மா…. 10 நாள் நான் ஆபீஸ் போகாமல் எப்படிம்மா இருக்க முடியும்?” என்றான். “இப்போதான் புதுசா கல்யாணமாகியிருக்கு. நிறைய வேலை எல்லாம் இருக்கு. நான் சொல்ற வர நீ ஆபீஸ் போகக் கூடாது. இது இந்த அம்மாவிடம் ஆர்டர்” என்றார். ஆதிக்கும் வேறு வழியில்லாமல் “சரி” என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்.

 EPISODE 8

ஆதி தன் அம்மா விசாலாட்சி, பத்து நாட்களுக்கு ஆபீஸ் போக வேண்டாம் என்று சொன்னதும், வேறு வழியில்லாமல் “சரி” என்று சம்மதம் சொல்லிவிட்டு சாப்பிடாமல் மேலிருந்த ரூமுக்கு செல்லப்போக, “டேய், எங்கேடா போற?” என்று விசாலாட்சி ஆதியைக் கூப்பிட்டார்.

“அம்மா, என்னை ஆபீஸ் போக வேணாம்னு சொல்லிட்டீங்க. மேல என் ரூமுக்குதானே போறேன். அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டமா கேக்குறீங்க?” என்றான் கடுப்பாக.

“இங்கேயே ஹால்ல கொஞ்ச நேரம் உட்காருடா. நானும் துர்காவும் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறோம். அப்புறம் எல்லாரும் சேர்ந்து வெளியே கிளம்பணும். நீ மேல உன் ரூமுக்கு போய்ட்டா, அப்புறம் உன்னை வரவைக்கிறது பெரும்பாடு ஆகிரும்” என்றவர், “துர்கா வாம்மா, நாம சாப்பிடலாம்” என்று இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

ஆதி அருகில் இருந்த கதிரிடம், “எங்கே போறோம்?” என்று கேட்க, “தெரியவில்லை” என்று தோளைக் குலுக்கினான். விக்கியும் அதே பதிலைச் சொன்னான்.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு வரும்வரை அனைவரும் காத்திருக்க, சாப்பிட்டு முடித்து விசாலாட்சி, “சரி, வாங்க எல்லாரும் போலாம்” என்றார். ஆதி உடனே, “அம்மா, அப்போ இருந்து வெளிய போகணும்னு சொல்றீங்க, எங்கேன்னு சொல்ல மாட்டேங்குறீங்க. எங்கே போறோம் நாம?” என்றான்.

“அதை அங்கே போய் தெரிஞ்சுக்க. இப்போ பேசாம என்கூட கிளம்பி வாங்க” என்றவர், “விக்கி, நீ, கதிர், ஆதி, துர்கா எல்லாரும் ஒரு கார்ல வாங்க. நான், அப்பா, துர்காவோட அம்மா, அப்பா, தங்கை எல்லாம் ஒரு கார்ல வறோம். எங்க கூடவே நீங்க பின்னாடி வாங்க” என்றார். அப்போது கீர்த்திகா, “அத்தை, நான் அக்கா கூட அந்த கார்ல போறேனே?” என்றாள்.

அவள் கூறியதும் துர்காவின் அம்மா, “ஏய், சும்மா வரமாட்டியா நீ…. எங்கே போனாலும் ஏதாவது பண்ணிட்டே இருக்கணுமா உனக்கு?” என்றவர், “பேசாமல் எங்க கூட வா…” என்று அவளை அதட்டினார்.

“சம்மந்தி, விடுங்க. அவள் சின்னப் பொண்ணு. அவளை ஏன் அதட்டுறீங்க? போடி… நீ உன் அக்கா கூடவே அந்த கார்ல வா” என்று கூறி, அவளை அந்தக் காரில் அனுப்பி வைத்துவிட்டு, மற்றவர்கள் ஒரு காரில் ஏறி கிளம்பினர்.

காரின் முன் இருக்கையில் டிரைவர் காரை ஓட்ட, அவர் அருகில் இருந்த சீட்டில் ஆதியும் துர்காவும் அமர்ந்திருந்தனர். அதன் பின் இருந்த சீட்டில் கதிரும் கீர்த்திகாவும் இருந்தனர்.

இங்கு கதிருக்கு உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷம். தான் அருகில் கீர்த்திகா அமர்ந்து வருவது. ஆனால் அவள் வந்ததிலிருந்து அவன் இருந்த திசைகூட திரும்பவில்லை. வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டோ இல்லை என்றால் கையில் இருக்கும் மொபைலை நோண்டிக்கொண்டோ வந்தாள்.

வெகுநேரம் கார் அமைதியாகவே செல்ல, பின்னால் இருந்த கீர்த்தி துர்காவின் தோளை சுரண்டினாள். அவளை திரும்பிப் பார்த்த துர்கா, “என்னடி….” என்றாள். “அக்கா, ரொம்ப போர் அடிக்குது. டிரைவர் கிட்ட சொல்லி பாட்டுப் போட சொல்லு அக்கா” என்றாள்.

“ஏய், கொஞ்ச நேரம் சும்மா இருடி. ஆதிக்கு அதெல்லாம் பிடிக்காது” என்று அவளை அதட்ட, இருவரும் ஏதோ ரகசியம் பேசிக்கொள்வதுபோல இருக்க, ஆதி அதைக் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தான்.

“இவர்கள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள்” என்று கதிர், “துர்கு, என்ன பேசிக்கிறீங்க நீயும் உன் அருமை தங்கச்சியும்?” என்று அவன் கீர்த்திகாவை கிண்டல் செய்ய, அவனை முறைத்த கீர்த்திகா, “ம்ம்ம்… இங்கே ஒரே போரிங்கா… இருக்கு. டிரைவர் கிட்ட சொல்லி பாட்டுப் போட சொன்னேன். அதுக்கு என் அக்கா உங்க அண்ணாவுக்கு பாட்டெல்லாம் கேட்கப் பிடிக்காது, பேசாம இருன்னு சொல்லிட்டா.”

“என்ன எல்லாரும் இப்படி இருக்கீங்க? ஒரு ஜாலியா இல்லாம, உருன்னு எப்போது பார்த்தாலும் முகத்தை வெச்சுட்டு… நான் பேசாம அந்தக் கார்லயே போயிருக்கலாம் போல இருக்கு. அங்கே பெரியவங்க இருக்காங்க, போர் அடிக்கும்னு இங்கே வந்தா, இங்கே அதுக்கு மேல இருக்கே.”

“ஏன் துர்கா? நீ டெய்லி பாட்டு கேட்காமல் எழுந்திருக்க மாட்டே, தூங்க மாட்டே. நீ எப்படி மாமா கூட குடும்பம் நடத்தப் போற? ஒரு பாட்டுகூட கேட்கப் பிடிக்காதுன்னா, அவர் எப்படி இன்ட்ரஸ்டிங்கா இருப்பாரு? ரொம்ப போர் அடிக்குமே இப்படி இருந்தா….” என்று சொல்ல, அவள் கூறியதை அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்த ஆதி திரும்பி கீர்த்திகாவைப் பார்க்க, அவன் மாஸ்க் அணிந்திருந்த முகத்தில் அவன் விழிகள் மட்டும் அவளை ஆழமாகப் பார்க்க, அதைப்பார்த்த கீர்த்திகா எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.

‘ஆத்தி…. என்ன மாமா இப்படி கண்ணாலேயே மிரட்டுறாரு? இனி எதுவும் பேசாம கம்முனு வந்துரணும்’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டவள், அமைதியாக இருந்துவிட்டாள்.

இதை எல்லாம் கவனித்த கதிர், கீர்த்திகாவின் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி, “இப்போ புரியுதா? ஏன் எல்லாரும் சைலன்டா வரோம்னு? உனக்கு என் அண்ணனைப் பற்றி எதுவும் தெரியாது. பேசாம கப் சுப்னு வரணும், சரியா?” என்றான்.

அவன் இப்படி கூறியதைக் கேட்டு அவனை முறைத்த கீர்த்திகா, “நீ என்னவோ ஆபீஸ்ல புலி மாதிரி வேலை செய்வேன்னு என் அக்கா அப்பப்போ வந்து என்கிட்ட உன்னைப்பத்தி பெருமையா சொல்லுவா. ஆனா, ஒரு பாட்டு போடறதுக்கு உங்க அண்ணா சொன்னால்தான் போடணும். அதுக்குக்கூட உன்னால செய்ய முடியலை. உன்னைப்போய் என் அக்கா ஓவரா… பில்டப் எல்லாம் கொடுத்துட்டாளே! கடைசியில உன் அண்ணாதான் டேர்ரர் போல. நீ டம்மி பீஸா….?” என்று அவனை வார, ‘தன்னை “அவன், இவன்”னு சொன்னது பத்தலைன்னு “டம்மி பீஸ்”னு வேற சொல்றா. இவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?’ என்று அவளை முறைக்க, தன்னை முறைத்த கதிரைப் பார்த்து, “என்ன முறைக்குற? ரோஷம் வந்திருச்சோ…? அவ்வளவு ரோஷம் உள்ளவனா… இருந்தா, எங்கே? இப்போ இந்தக் கார்ல பாட்டுப் போட சொல்லு பார்ப்போம்” என்று கீர்த்திகா அவனை உசுப்பேற்றினாள்.

“நான் டம்மி பீஸா…டி…? நான் உனக்கு…” என்றான். “ரொம்ப வாய் பேசாத, சரியா? அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, பார்த்துக்கோ” என்று அவளை முறைக்க, “ஏய், என்னை ‘டி…’ போட்டு பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காத, சரியா?” என்று அவனை முறைக்க, “நீ மட்டும் என்னை ‘அவன், இவன்’னு மரியாதை இல்லாம பேசுவ. நான் உனக்கு மரியாதை தர? நீ என்ன இந்த ஊரு மகாராணியா?” என்றான்.

“ஆமாடா… நான் மகாராணிதான். ஏன்? நீ இந்த ஊரு மகாராஜாவோ…? ரொம்பத்தான் பேசுற. ஒரு பாட்டுப் போட முடியலை உன்னால. பேச வந்துட்டான், போடா….” என்று கதிரை முறைக்க, “ஏய், ‘டா…’ போட்டு பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காத” என்றான். “அப்படித்தான்டா பேசுவேன். என்ன பண்ணுவ?” என்றாள் கீர்த்திகா. “என்ன பண்ணுவேனா…? இதுவே காரா மட்டும் இல்லாம இருந்துச்சு… உன்னை…. உன்னை….” என்று அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருக்க, “சொல்லுடா… சொல்லு…. நான் அப்படிதான் உன்னை ‘டா…’ போடுவேன். என்னை… என்னை என்ன பண்ணுவ நீ? போடா, டம்மி பீஸ்” என்று அவள் அவனை மேலும் வெறுப்பேற்ற, “ஷ்…. என்ன அங்கே ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு வரீங்க? அமைதியா இருக்க முடியாதா உங்களால?” என்று ஆதி அதட்ட, இருவரும் அமைதியாகினர்.

கீர்த்திகாவிடம், “இப்போ நான் பாட்டு போட்டுட்டா, நீ என்னடி… செய்வ?” என்றான். “நீ முதல்ல பாட்டை போடு பார்க்கலாம்” என்றாள். “சரி, நான் இப்போ இந்தக் கார்ல பாட்டு போட்டுட்டா, நீ நான் என்ன சொன்னாலும் செய்யணும், சரியா?” என்றான். இவளும் அவனுடன் பேசிய கடுப்பில் “சரி” என்று சொல்லிவிட்டாள்.

‘வா…டி.. வா…. நல்லா வந்து என்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட’ என்று மனதிற்குள் நினைத்தவன், அவளைப் பார்க்க, கீர்த்திகாவும் திரும்பி கதிரைப் பார்க்க, அவள் முன் தான் வலது கையை உயர்த்தியவன், மெதுவாக தன் ஒவ்வொரு விரலாக “ஒன்…. டூ……” என்று எண்ணிக்கொண்டு வர, ‘இவனுக்கு என்ன ஆச்சு? லூசா இவன்?’ என்று யோசித்தவள் அவனையே பார்க்க, கதிர் “த்ரீ….” என்று மூன்றாவது விரலை உயர்த்தியதும் காரில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.

இதை எதிர்பார்க்காத கீர்த்திகா அவனைப் பார்த்து, ‘இவ்வளவு நேரம் நம்மகிட்ட சண்டை போட்டுட்டுதானே இருந்தான்? அப்புறம் எப்படி பாட்டு போட்டான்?’ என்று அவனை அதிர்ச்சியாகப் பார்க்க…… தன்னை வியந்து பார்க்கும் கீர்த்திகாவைப் பார்த்து சாய்ந்து அமர்ந்தவன், காலரைத் தூக்கிவிட்டு, அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி “எப்படி….” என்று கேட்டான்.

‘ஐயோ…. நான் வேற இவன் கேட்டதுக்கு ‘சரி’னு சொல்லி தலையை ஆட்டி வெச்சிட்டேனே! என்ன கேட்கப் போறானோ?’ என்று மனதிற்குள் நினைத்து பயந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்து ‘வெடுக்’கென வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

அவளின் இந்த செயலைப்பார்த்து உள்ளுக்குள் ரசித்துச் சிரித்தாலும், வெளியே அதே மிடுக்குடன் அமர்ந்திருந்தான் கதிர்.

என்ன ரீடேர்ஸ், இவன் எப்படி கீர்த்திகா கூட சண்டை போட்டுட்டே பாட்டு போட்டானு பார்த்தீங்களா? கீர்த்திகா பாட்டு கேட்டதுமே, தன் மொபைலில் இருந்து காரின் முன்னால் அமர்ந்திருந்த விக்கிக்கு “ப்ரோ…..” என்று மெசேஜ் அனுப்பினான். காரின் பின் இருந்து ‘எதற்காக எனக்கு மெசேஜ் அனுப்புகிறான்?’ என்று திரும்பி கதிரைப் பார்க்க, அவன் தான் மொபைலை ஆட்டி அதைப் பார்க்கச் சொன்னான். “சொல்லுடா….” என்று ரிப்ளை செய்தான் விக்கி.

“ப்ரோ…. ஒரு நல்ல ரொமான்டிக் சாங் போடு ப்ரோ” என்றான் கதிர். இதைப் படித்த விக்கி, “என்ன விளையாடுறியா நீ…? உன் அண்ணனைப் பத்தி யோசிச்சியா? அவன் என்னைக் கொன்னே போட்டுருவான்டா. என்னால முடியாது” என்றான் விக்கி.

“ப்ரோ…. ப்ளீஸ்” என்று கெஞ்சி மெசேஜ் அனுப்ப, அவனைத் திரும்பிப் பார்த்த விக்கி, கதிர் தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு விக்கியைப் பார்க்க, “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு, “என்ன பாட்டு போடறது?” என்று விக்கி கதிருக்கு மெசேஜ் அனுப்ப, தற்போது பிரபலமான ஒரு ரொமான்டிக் பாட்டின் பெயரைச் சொல்லிப் போடச் சொல்லிவிட்டு, “நான் சொல்லும்போது பாட்டு போடு ப்ரோ. ப்ளீஸ். அண்ணனை நான் சமாளிச்சுக்கிறேன்” என்று கூறி விக்கியிடம் கெஞ்சி இருந்தான்.

“ஓகே” என்று தம்ப்ஸ் அப் ஸ்மைலி அனுப்பினான் விக்கி. சரியாக கீர்த்திகாவிடம் வேண்டுமென்றே வம்பிழுத்துவிட்டு, அதன் பிறகு விக்கிக்கு சிக்னல் அனுப்பி இருந்தான் பாட்டு போட சொல்லி.

இப்படி கெஞ்சிதாங்க நம்ம கதிர் பாட்டு போட்டுட்டு கீர்த்திகாவிடம் கெத்து காட்டினான். ஒரு லவ்வை சக்சஸ் செய்யறதுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க ஃபிரெண்ட்ஸ்.

முன்னால் வெங்கடசாலம், விசாலாட்சி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றவர்கள் கார் ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டின் முன் கார் நின்றதும், ஆதி சென்ற காரும் அங்கு நின்றது.

காரை விட்டு அனைவரும் இறங்க, ஆதி துர்காவை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, வேலைக்காரனிடம் விசாலாட்சி சைகை செய்ய, அந்த வேலைக்காரன் கையில் ஆரத்தி தட்டுடன் வர, அதை வாங்கிய விசாலாட்சி துர்காவின் தாயையும் கீர்த்தியையும் அழைக்க, மூவரும் சேர்ந்து ஆதிக்கும் துர்காவுக்கும் ஆரத்தி சுற்றி, திருஷ்டி கழித்துவிட்டு, அவர்களை உள்ளே வரச்சொல்ல, அவர்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் உள்ளே செல்ல, “வலது காலை எடுத்துவைத்து ரெண்டு பேரும் உள்ளே போங்க” என்று விசாலாட்சி கூறிவிட்டு, ஆரத்தி தட்டை வேலைக்காரனிடம் கொடுத்துவிட்டு, அவர்களுடன் அந்த வீட்டிற்குள் வந்தவர், “ஆதி, உள்ளே வந்தவன் அந்த மாளிகை போன்ற வீட்டைச் சுற்றி நோட்டம் விட, “என்ன ஆதி அப்படி பாக்குற? இந்த வீடு யாரோடதுன்னு பாக்குறியா? உங்க அப்பா தான் உனக்குக் கல்யாணம் ஆனதும் உனக்குக் கல்யாண பரிசாக இந்த வீட்டை கொடுக்கணும்னு முன்னாடியே ரெடியாக பண்ணி இருந்தாரு. கல்யாணம் முடிஞ்சு நேரா உன்னை இங்கேதான் அழைச்சுட்டு வர்றதா இருந்தது. ஆனா, நேத்து அவள் பண்ணின காலேபரத்துல உனக்கும் துர்காவுக்கும் கல்யாணம் ஆன சந்தோஷத்துல முதல்ல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். அதான், இன்னைக்கு நல்ல நாளா இருக்குனு இன்னைக்கே உங்களை இங்கே கூட்டிட்டு வந்துட்டேன்.”

“இனிமேல் நீயும் துர்காவும் இங்கேதான் இருக்கப் போறீங்க” என்று விசாலாட்சி கூற, அவரைப் பார்த்து ஆதி ஏதோ கூற வந்தவன், விசாலாட்சி மிகுந்த சந்தோஷத்துடன் துர்காவின் கையைப் பிடித்து, “அம்மாடி… துர்கா, என்னடா… அத்தை உன்னைக் கல்யாணம் ஆன மறுநாளே தனியா வெச்சுட்டேன்னு யோசிக்கிறியா?” என்றார்.

“இல்லை அம்மா. நீங்க எது செஞ்சாலும் எங்க நல்லதுக்காகத்தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். நான் எதுவும் நினைக்கலை அம்மா. ‘நாளைக்கே நீங்க நம்ம வீட்டுக்கு வந்திருங்க’னு எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டா, நான் உடனே அங்கே வந்திருவேன். நீங்க வருத்தப்படாதீங்க அம்மா” என்று அவரிடம் ஆறுதல் சொல்ல, அதைக் கேட்டதும் விசாலட்சியின் முகம் மகிழ்ச்சியில் இருந்ததை கவனித்த ஆதி எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான்.

‘இதுவும் நலத்திற்குத்தான். இப்படி இருந்தால் தான் நானும் துர்காவும் கணவன் மனைவி போல் நடிக்க வேண்டியதில்லை. இல்லை என்றால், அம்மா எதுவும் கண்டுபிடித்துவிட்டால் பிறகு அனைவருக்குமே சிரமம்தான்’ என்று எண்ணிக்கொண்டவன் அமைதியாகிவிட்டான்.

“சரி, வா. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள பால் காய்ச்சிவிடலாம்” என்று அனைவரும் சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சிவிட்டு, பூஜைஅறையில் விளக்கேற்றிவிட்டு வந்து, அனைவரும் ஆளுக்கு ஒருபுறம் வீட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.

துர்காவையும், ஆதியையும் அழைத்துக்கொண்டு ஆதியின் அப்பா வெங்கடசாலமும், துர்காவின் அப்பாவும் ஒருபுறம் செல்ல, விக்கியிடம் விசாலாட்சி வீட்டில் வேறு எதுவும் வேலைகள் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருக்க, அவருடன் துர்காவின் தாயும் இருந்தார்.

இப்போது தனியாக இருப்பது நம்ம கீர்த்திகாவும் கதிரும் தான். கீர்த்திகா ஒவ்வொரு அறையாக சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் பின்னாலேயே அவளைப் பின்தொடர்ந்து சென்ற கதிர், அவள் அங்கே மாடியில் இருந்த ஆதி அறையில் பால்கனியில் இருந்த ஊஞ்சலைப் பார்த்ததும் “ஐ……” என்று வேகமாக அங்கே ஓடியவள், அங்கிருந்த ஊஞ்சலில் ஏறி அமர்ந்தவள், அதை ஆசையாக ஆட்டிவிட்டு சந்தோஷமாக ஊஞ்சல் ஆடினாள் கீர்த்திகா.

அவள் ஆசையாக, சந்தோஷமாக ஊஞ்சல் ஆடுவதை ரசித்த கதிர், ‘ஓஹோ… நம்ம ஆளுக்கு ஊஞ்சல்னா பிடிக்கும் போல இருக்கே’ என்றவன், ‘நோட் பண்ணிக்கோடா கதிர்’ என்று மனதிற்குள் குறித்துக்கொண்டான்.

பின் மெதுவாக அவள் அருகில் சென்றவன், அவள் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலைப் பிடித்து நிறுத்த, “யார்?” என்று திரும்பிப் பார்த்த கீர்த்திகா, திரும்பிப் பார்க்க, அங்கே இவளைப் பார்த்து வித்தியாசமாக சிரித்த கதிரைப் பார்த்து ஒரு நிமிடம் பயந்துவிட்டாள்.

பின், ‘ச்சே… இவனா? இவனுக்கா நாம பயந்தோம்? கீர்த்து, பயந்திராத. அப்புறம் இவன் நம்மளை என்ன சொல்லி கிண்டல் பண்ணுவான்னு தெரியாது’ என்று மனதிற்குள் தனக்குத்தானே சமாதானம் செய்தவள், ஊஞ்சலிலிருந்து இறங்கி கதிரைத் தாண்டி அவள் பாட்டுக்கு அறையைவிட்டு வெளியே செல்ல, அப்போது தனக்கு எதிரே வந்தவரைப் பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே உறைந்து நின்றாள் கீர்த்திகா….

EPISODE 9

ஆதிக்கும் துர்காவுக்கும் தனியாக இருப்பதற்காக ஒரு புதிய மாளிகை, அவனது அப்பா ஏற்கனவே அவனது திருமணப் பரிசாகக் கொடுப்பதற்காகத் தயார் செய்து வைத்திருந்ததால், அவர்கள் இருவரையும் அங்கு அழைத்து வந்திருந்தனர். அழைத்து வந்து வீட்டிற்குப் பால் காய்ச்சிவிட்டு, அனைவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்க, கீர்த்திகா மட்டும் தனியாக அவர்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் பின்னாலேயே கதிரும் அவள் செல்லும் இடமெல்லாம் அவளுக்குத் தெரியாமல் சென்றுகொண்டிருந்தான்.

ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த கீர்த்திகா, கடைசியாக ஆதியின் அறைக்கு வரவும், உள்ளே சென்று பார்க்க, அங்கே பால்கனியில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் “ஐ…” என்று அங்கே சென்று ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள்.

வீட்டில் சந்தோஷமாக ஊஞ்சல் இல்லாமல் இருந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்த கதிர், ‘ஓஹோ… நம்ம ஆளுக்கு ஊஞ்சல்னா ரொம்ப பிடிக்கும்போல இருக்கே! ஃபியூச்சர்ல அவளை இம்ப்ரஸ் பண்றதுக்கு இந்த ஐட்டமும் தேவைப்படும்’ என்று யோசித்துக்கொண்டவன், “நோட் பண்ணுடா…. நோட் பண்ணுடா….” என்று தன் மனதிற்குள் தானே குறித்துக்கொண்டான்.

பின், சிறிது நேரம் அவள் சந்தோஷமாக ஊஞ்சல் ஆடுவதை ஏறிட்டு நின்று ரசித்தவன், அவள் அருகில் வந்து ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலைத் தன் கையால் பிடித்து நிறுத்தினான். தன்னை யார் நிறுத்தினார்கள் என்று ஊஞ்சலிலிருந்து திரும்பிப் பார்த்த கீர்த்திகா, கதிர் ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு சிரித்த முகமாக அவளைப் பார்த்ததால், உள்ளுக்குள் ஏதோ செய்தது.

‘என்ன இவன் சிரிக்கிற சிரிப்பு நமக்குள்ள என்னமோ செய்ற மாதிரி இருக்கு. ம்ஹும்…. இவனைப் பார்க்கக் கூடாது’ என்று நினைத்த கீர்த்திகா, ‘இவனைக் கண்டுக்காம நாம பாட்டுக்கு இந்த ரூமை விட்டு வெளியே, இவனைப் பார்க்காத மாதிரியே வெளியே போய்விடு கீர்த்து’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ஊஞ்சலிலிருந்து இறங்கி கதிரைத் திரும்பியும் பார்க்காமல் அந்த அறையைவிட்டு வெளியே செல்ல, கதவு அருகில் சென்றாள்.

தன்னைத் திரும்பியும் பார்க்காமல் ஊஞ்சலிலிருந்து இறங்கிச் சென்ற கீர்த்திகாவைப் பார்த்து, ‘இவளுக்கு எவ்வளவு கொழுப்பு! நான் இப்படி ஒருத்தன் பிடிச்சிட்டு இருக்கேன். என்ன, ஏதுன்னு கேட்காம இவ பாட்டுக்கு இறங்கிப் போறா’ என்று அவளைப் பார்த்தவன், ‘இருடி செல்லக்குட்டி, வரேன்’ என்று மனதில் நினைத்து, வேகமாக அவளைத் தாண்டிச் சென்று கீர்த்திகாவின் எதிரில் வேகமாக வந்து நின்றான்.

கதிரைப் பார்க்காததுபோல ஊஞ்சலிலிருந்து இறங்கி வெளியே செல்லப் போன கீர்த்திகா, தன் எதிரே புயலியைவிட வேகமாக வந்து நின்ற கதிரைப் பார்த்ததும் திடுக்கிட்டு, அப்படியே பின்னால் நகரப்போக, தன்னைச் சமாளித்துக்கொண்டு நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழப்போக, கதிர் வேகமாக வந்து அவள் இடுப்பில் கை கொடுத்து அவளைத் தூக்கி தன்னோடு சேர்த்து நிறுத்தினான்.

கதிரின் முகத்தை அவ்வளவு நெருக்கமாகப் பார்த்த கீர்த்திகாவின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவளை தன்னோடு சேர்த்து அணைத்திருந்ததால், அவளின் இதயத்துடிப்பும் கதிரால் உணர முடிந்தது. ஒரு பெண்ணின் உடல் தன்னுடன் இவ்வளவு நெருக்கமாக முதன்முதலில் இருக்கவும், அவளுடைய இதயத்துடிப்பையும் உணர்ந்த கதிருடைய இதயத்துடிப்பு வேகமாக ஆரம்பித்தது.

வேகமாகத் துடிக்கும் அவள் இதயத்தோடு போட்டி போட்டுக்கொண்டு கீர்த்திகாவின் இமைகளும் படபடத்துக்கொண்டே அவனைப் பார்க்க, கதிரின் பார்வையும் அவள் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட, இருவரும் அப்படியே அசையாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். எவ்வளவு நேரம் இப்படி இருந்தார்கள் என்று இருவருக்குமே தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே தங்களை மறந்து நின்றிருக்க, கீர்த்திகாதான் முதலில் சுயநினைவுக்கு வந்தவளாக வேகமாக அவனைத் தள்ளிவிட்டு, அவனை விட்டுப் பிரிந்து தள்ளி நின்றாள்.

தன்னைவிட்டு திடீரென்று பிரிந்து நின்ற கீர்த்திகாவை பிரிய மனமில்லாமல், தள்ளி நிற்க வைக்க முடியாமல் கதிர் வேண்டுமென்று அவள் அருகில் நெருங்கி வர, கீர்த்திகா அவனை முறைத்தவாரே இரண்டு அடி பின்னால் தள்ளி நின்று, கையை நீட்டி “அங்கே நின்னு பேசுங்க. இப்ப எதுக்கு என் பக்கத்துல வரீங்க?” என்று கதிரைப் பார்த்து கூறினாள்.

“நான் அப்படி ஒன்னும் உன் பக்கத்துல வரலையே. கொஞ்சம் பக்கத்துல வந்து நின்னேன், அது ஒரு தப்பா?” என்று கதிர் கேட்க, “எப்படி? உங்க ஊர்ல ஒரு பொண்ணு கிட்ட பையன் இவ்வளவு நெருக்கத்தில் வந்து நின்னுதான் பேசுவானா? இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்றாள் கீர்த்திகாவும் அவனிடம் விடாப்பிடியாக.

“சரி, வழி விடுங்க. நான் முதல்ல போகணும். நான் சுற்றிப் பார்க்கறதுக்காகத்தான் வந்தேன். உங்க கூட பேசிட்டு இருக்க வரலை” என்று கூறியவள் அவனை விலக்கி, அவனைத் தாண்டிச் செல்லப்போக, அவள் முன் சென்று நின்ற கதிர், “எங்கே மேடம்? இப்படி என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிப் போறதிலேயே குறியா இருக்கீங்க. கொஞ்சம் பொறுங்க மேடம்” என்று கூறியவன், “கார்ல வரும்போது நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு வந்தோமே, ஞாபகம் இருக்கா? இல்லை இல்லை, சண்டை போட்டுட்டு வந்தோமே…. ஞாபகம் இருக்கா…? நீங்க என்கிட்ட பெட் கட்டினீங்க, அதுவாவது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.

“சண்டையா…? நான் எதுக்கு கார்ல உங்க கூட சண்டை போட்டுட்டு வந்தேன்? அப்படி எல்லாம் நான் எதுவும் செய்யலையே” என்று தெரியாதவள்போல கீர்த்திகா பேச, அவளைப் பார்த்துக் குறும்பமாக முறைத்த கதிர், “கார்ல பாட்டுப் போட சொன்னீங்க. எங்க அண்ணன் உங்களைப் பார்த்து முறைச்சதும் பயந்துட்டு அமைதியா இருந்துட்டு, கடைசில என்னை என்னவெல்லாம் கேள்வி கேட்டு, அசிங்கப்படுத்தி, ‘தைரியம் இருந்துச்சுன்னா பாட்டுப் போடுங்க பார்ப்போம்’னு நீங்க சொன்னீங்க. அதே மாதிரி நானும் பாட்டு போட்டு விட்டுட்டேனா…? அப்படி நான் பாட்டுப் போட்டு விட்டுட்டா, நான் என்ன சொன்னாலும் நீ கேட்கணும் அப்படிங்கறதுதானே நம்ம பெட்டே?” என்றான் கதிர்.

“ஆமா, அது நான் தெரியாம சொல்லிட்டேன். அதுக்காக இப்படி என் பின்னாடியே வந்து, என்னை துரத்தி, என்கிட்ட இப்படியெல்லாம் வம்பு பண்ணணுமா?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“என்னது வம்பு பண்றேனா…? நான் இன்னும் வம்பு பண்ண ஸ்டார்ட் பண்ணவே இல்லை மேடம். ஜஸ்ட் உன் பக்கத்துல நின்னு பேசிட்டுதான் இருக்கேன். நான் வம்பு பண்ண ஆரம்பிச்சா, அப்புறம் உன்னாலே தாங்க முடியாது” என்று நக்கலாகக் கூறிய கதிர், “சரி, நான் அதையும் இதையும் பேச வரல. நேரடியா விஷயத்துக்கு வரேன்” என்று தன் பின்னால் யாரும் இருக்கிறார்களா என்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, அவள் அருகில் மெதுவாக நடந்து வர, அவனைப் பார்த்துப் பயந்து கீர்த்திகா, “இப்ப எதுக்கு என் பக்கத்துல இப்படி வரீங்க? எதுவாக இருந்தாலும் அங்கேயே நின்னு பேசுங்க. இப்படிப் பக்கத்தில் வந்து பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க” என்றாள்.

“அட இருமா. நான் பெட் கட்டினதுல என்கிட்ட நீ தோத்து போயிட்ட. ‘நான் என்ன சொன்னாலும் செய்றேன்னு’ சொல்லி இருக்க. அப்ப, நீ என்ன செய்யணும்னு நான் உன்கிட்ட சொல்ல வேண்டாமா?” என்று கூற, அவன் கூறியதைக் கேட்டு, “கெட்டியா? எதுவா இருந்தாலும் அங்க நின்னு சொல்லுங்க. இவ்வளவு பக்கத்துல எல்லாம் வந்து ஒன்னும் சொல்லணும்னு அவசியம் இல்லை” என்று கூறினாள்.

“அப்படியே நீ சொல்ற மாதிரி இவ்வளவு தூரத்தில் இருந்து எல்லாம் சொல்ல முடியாது. நான் எதுவா இருந்தாலும் உன் பக்கத்தில் வந்து உன் காதில் தான் சொல்லுவேன்” என்று கூறியவன், அவள் பதிலுக்கும் காத்திருக்காமல் மெதுவாக அவள் அருகில் வந்தான்.

அவள் அருகில் வந்தவன், கீர்த்திகாவின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, அவள் காதருகே குனிந்து, காதோரம் விழுந்திருந்த முடியைத் தன் ஒற்றை விரலால் ஒதுக்கிவிட்டு, அவள் காதில் மிக மெதுவாக, “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ?” என்று முத்து படத்தில் ரஜினி சொன்ன பாணியில் அவள் காதில் மெதுவாகக் கதிர் கூற, அவன் இவ்வாறு சொன்னதும் அதைக் கேட்ட கீர்த்திகா அதிர்ச்சியாகி, அவனிடமிருந்து வேகமாக விலகிப் பின்னே தள்ளி நின்றாள். அவனைப் பார்த்து முறைக்க, “என்ன முறைக்கிற? ‘நான் என்ன சொன்னாலும் செய்கிறேன்’னு சொன்னேதானே? அதானே பெட்டு?” என்று கேட்டான்.

“கெத்துதான். அதுக்காக என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் எல்லாம் கொடுக்கச் சொல்றீங்க? நீங்க யாரு? நான் யாரு? நான் எதுக்கு உங்களை கட்டிப்பிடிக்கணும்? எதுக்கு முத்தம் கொடுக்கணும்?” என்று கேட்க, “ஏய், என்னை பார்த்து ‘யாரு’னு கேக்குற? நான் உன் அக்கா வீட்டுக்காரரோட தம்பி. அப்படிப் பார்த்தா நான் உன்னைக் கட்டிக்கிற முறைதான். சொல்லப்போனால், நான் தான் உன்னைக் கல்யாணமா பண்ணிக்கப் போறேன்” என்று கூற, அதைக் கேட்ட கீர்த்திகா, “என்ன விளையாடுறீங்களா? இந்த மாதிரி பேசுறதெல்லாம் இனிமேல் என்கிட்ட வெச்சுக்காதீங்க. நான் எதுக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்? எனக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. இந்த மாதிரி இனிமேல் பேசிட்டு என் பக்கத்துல வராதீங்க” என்று அவனை வேகமாகத் தள்ளிவிட்டு, அந்த அறையைவிட்டு ஓடிவிட்டாள்.

‘இங்கிருந்து தப்பித்தால் போதும்’ என்று ஓடியவளைப் பார்த்து சிரித்த கதிர், “எங்கே போகப்போற? இன்னைக்கு நீ இங்கிருந்து போறதுக்குள்ள உன்கிட்ட இருந்து நான் முத்தம் வாங்காம உன்னை அனுப்பப் போறதே இல்ல” என்றான் அவளுக்குக் கேட்கும்படி. அவளை விட்டு ஓடியவள் நின்று, அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அவனைப் பார்த்து, “அது உங்களால முடியாது. அதையும் தான் பார்க்கிறேன் நான்” என்றாள்.

“என்னால முடியாதுன்னு சொன்னே பாக்கறியா நீ…? என்னால முடியாது என்கிற விஷயமே என் வாழ்க்கையிலும் என் அண்ணா வாழ்க்கையிலும் கிடையாது. அதைத் தெரிந்துகொள் முதல்ல. நான் உனக்கு முத்தம் கொடுக்கலைனா, என் பேரு கதிர் இல்லை” என்றான் தன் மீசையை முறுக்கியவாரே.

“அதையும் நான் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கியவள் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள். சிரித்தவளை, ‘ஏய் கீர்த்து, நீ அவன்கிட்ட நல்லாவே மயங்கிப்போற. கவனமா இரு’ என்று அவளின் இன்னொரு மனம் எச்சரித்தது.

அனைவரும் வீடு சுற்றிப் பார்த்துவிட்டு வர, கீர்த்திகாவும் கதிரும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். துர்காவையும் ஆதியையும் அருகே சோபாவில் அமர வைத்து, துர்காவின் பெற்றோர் அவளுக்காக அவர்கள் செய்ய இருந்ததாகச் சொன்ன நகைகளைப் போட்டு, ஆதிக்கும் அவர்களால் முடிந்ததைச் செய்து அவர்கள் இருவரையும் அழகு பார்த்தனர்.

தன் மகனைத் துர்காவோடு சேர்த்து இப்படிப் பார்த்த விசாலாட்சிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரின் அருகில் வந்தவர், அவர்கள் இருவருக்கும் நெட்டி முறித்து திருஷ்டி சுற்றியவர், “என் கண்ணே பட்டுடும் ராஜாத்தி. என் மகன் கூட சேர்ந்து உட்கார்ந்து இருக்கிறப்போ எவ்வளவு அழகா இருக்கு தெரியுமாடி துர்கா?” என்று அவளைக் கன்னம் பிடித்துக் கொஞ்சினார்.

அவர் கூறியதும் வெட்கப்பட்டு துர்கா, “போங்க அத்தை” என்றாள். அவள் வெட்கப்படவும், அவள் அருகில் வந்து கீர்த்தி, “அக்கா, ரொம்ப வெட்கப்படாதே. அப்புறம் மாமா உன் சிவந்த முகத்தைப் பார்த்து அப்படியே மயங்கி விழுந்துடப் போறாரு” என்று கூறினாள்.

கீர்த்திகா கூறியதைக் கேட்ட ஆதிக்கு, துர்கா வெட்கப்பட்டால் முகம் சிவந்துவிடும் என்பதை உணர்ந்தவன், அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, அதைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன், அவள் புறமே திரும்பாமல், மனதிற்குள், ‘டேய் ஆதி, இது என்ன புதுசா இப்படி எல்லாம் பழகுற? இவ்வளவு நாள் நீ துர்காவைப் பார்க்காதவனா? இப்ப மட்டும் எதுக்கு அவ முகத்தைப் பார்க்கணும்னு கீர்த்திகா சொன்னது உனக்கு ஆர்வமா இருக்கு? பேசாம இரு’ என்று அவன் மனம் அவனைத் தடை போட்டது.

இருவருக்கும் சீர்வரிசை சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து முடித்த துர்காவின் பெற்றோர், அனைவரையும் பார்த்து, “நாளைக்கு நல்ல நாளா இருக்கு. மாப்பிள்ளை, பொண்ணு நீங்க ரெண்டு பேரும், மற்ற எல்லாரும் எங்க வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்கு கண்டிப்பா வரணும்” என்று அழைத்தனர்.

அவர் கூறியதும் “ஐ” என்று கைதட்டிய கீர்த்தி, “அப்ப, அக்கா, மாமா நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு வருவீங்கதானே?” என்று கூற, துர்கா “ஆம்” என்று தலையாட்டிவிட்டு ஆதியைத் திரும்பிப் பார்க்க, ஆதி அவளை என்ன சொல்வது என்று தெரியாமல் பார்க்கவும், “நீ அவளுடைய தாயிடம், “அம்மா, நாளைக்கே நாங்க மறுவீட்டுக்கு வரணுமா?” என்று கேட்க, துர்காவின் தாய், “இது என்னடி? நாளைக்கே வரணுமான்னு கேக்குற? அப்புறம் நாளைக்கு வராம வேற எப்ப வரப் போறீங்க? மறுவீட்டுக்கு வந்த பிறகுதான் நீங்க எங்கேயும் வெளியில் போக முடியும், வர முடியும். அதுவரைக்கும் நீங்க எங்கேயும் போகக் கூடாது” என்று அவர் கூறவும், ‘ஆதிக்கு இப்போது இதுதான் சரியான சமயம், நாளைக்கு மறுவீடு போய் வந்துவிட்டால், அதன் பிறகு எப்பொழுதும் போல ஆபீஸ் சென்று வரலாம்’ என்று நினைத்தவன், “சரி அத்தை, நாங்கள் நாளைக்கே வருகிறோம்” என்றான்.

ஆதி நாளை துர்காவின் வீட்டிற்கு மறுவீடு செல்கிறேன் என்று சொன்னதும், அதை நம்பாத அனைவரும் அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து எழுந்து தன்னுடைய அறை எங்கே என்று பார்ப்பதற்காக மாடிக்குச் சென்றுவிட்டான். அவன் வெட்கப்பட்டுக்கொண்டு செல்வதாக நினைத்த மற்றவர்கள் சிரித்துக்கொண்டு எதுவும் பேசாமல் இருக்க, துர்கா மனதிற்குள் மட்டும், ‘அவன் எதற்காகச் சொல்லி இருப்பான்? மறுவீடு போயிட்டு வந்தாதானே அவனால் ஆபீஸ் போக முடியும்னு நினைச்சுத்தானே சொல்லி இருப்பான்? எங்க வீட்டுக்கு வரேன்னு இவனுக்கு என்ன என் மேல ஆசைப்பட்டா என் வீட்டுக்கு வரேன்னு சொல்லப் போறான்?’ என்று மனதில் நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.

துர்காவிடம் விசாலாட்சி, “போம்மா, நீயும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா கீழ வா. நாங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறோம். எனக்கு மாத்திரை போட்டதிலிருந்து ஒரு மாதிரி டயர்டா இருக்குது” என்று விசாலாட்சி கூற, “சரி அத்தை” என்று கூறி மாடிக்குச் சென்றாள் துர்கா.

ஆதியின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த முத்து தாத்தாவைக் கார்த்திக்கின் புது வீட்டுக்கு வரவழைத்த விசாலாட்சி, “மதியத்துக்கு எல்லோருக்கும் உணவு சமைச்சிடுங்க” என்று கூறி, செல்வதற்கு முன், துர்காவின் பெற்றோருக்கும் ஒரு அறையைக் கட்டி, அங்கே ரெஸ்ட் எடுக்கச் சொல்ல, கீர்த்திகாவும் அவர்களுடனே சென்றாள்.

ஹாலில் இருந்த கதிர் விக்கியிடம், “வா விக்கி… நாம ஆபீஸ் போயிட்டு வந்துரலாம். அண்ணாவும் வர நாள் ஆகுமில்லையா? நாம போயிட்டு வந்துரலாம்” என்று இருவரும் கிளம்பி ஆபீஸ் சென்றனர்.

ரெஸ்ட் எடுப்பதற்காக துர்கா அவர்கள் அறைக்கு மேலே வர, உள்ளே வந்த துர்கா ஆதி எங்கே என்று தேட, பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க, அவன் அங்கிருக்கிறானா என்று அறைக்குள்ளே வந்து மெதுவாக தங்கள் அறையை நோட்டமிட ஆரம்பித்தாள். அந்த அறையின் அளவே அவர்கள் வீட்டின் அளவு இருந்தது. பெரியதாக இருந்த அதன் வேலைப்பாடுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்த விதத்தையும் பார்த்த துர்கா, ஒவ்வொரு பொருளாக நோட்டமிட்டவள், அங்கே ஃபிரேம் செய்து பெரிதாக மாற்றப்பட்டிருந்த அவர்களின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்தாள்.

அதன் அருகில் வந்தவள், அதில் முகத்தில் மாஸ்க் போட்டுத் தன் அருகில் அமர்ந்திருந்த ஆதியைப் பார்த்து, “உன்னோட கல்யாணத்துக்குக் கூட நீ இந்த மாஸ்க்கை கழட்ட மாட்டியாட நீ….. மாஸ்க் இல்லாம இருந்தாலும் எவ்வளவு அழகா இருக்கன்னு உனக்கு ஏன் தெரிய மாட்டேங்குது? எதுக்காக இந்த அழகான முகத்தை அந்த மாஸ்க் போட்டு மூடி வெச்சுக்கிற?” என்று ஆதியைக் கேட்டதாக நினைத்து, அந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஆதியிடம் கேட்டாள்.

சுவற்றில் மாற்றப்பட்டிருந்த தங்கள் திருமணப் புகைப்படத்தையே சிறிது நேரம் பார்த்த துர்கா, ஒரு நிமிடம் திரும்பிப் பாத்ரூமில் பார்க்க, இன்னும் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் சத்தம் கேட்கும் ஆதி இப்போதைக்கு வெளியே வரமாட்டான் என்பதை உறுதி செய்துகொண்ட துர்கா, சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்திற்கு அருகில் வந்தவள், தன் பாதத்தை உயர்த்தி புகைப்படத்தில் இருந்த ஆதியின் முகத்தில் முத்தமிட்டாள்.

சரியாக அவள் முத்தமிடவும், ஆதி பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் துர்கா பதறிப் போனவள், அங்கிருந்து நகரப்போக, கால் தவறி அப்படியே கீழே விழப் போக, அவள் வருவதைப் பார்த்த ஆதி ஓடி வந்து அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

அவளை கீழே விழாமல் பிடித்து நிறுத்திய ஆதியின் மீது மோதி, ஆதியின் உடலோடு மோதி நின்றாள் துர்கா. அவளைப் பிடித்து நிறுத்தியவன், “ஏன்? என்னாச்சு உனக்கு? இப்ப எதுக்கு இப்படி அவசரமா நகரப்போன?” என்று கூறி அவன் முகம் பார்த்து கேட்க, ஆதிக்கு இவ்வளவு அருகில் பார்த்ததும் துர்காவின் முகம் சிவந்துவிட்டது.

துர்காவின் முகம் சிவந்திருப்பதைக் கவனித்த ஆதி, அவள் முகத்தைப் பார்த்தவன், “ஏய் துர்கு, ஏன் உன் முகம் இப்படி சிவந்து போயிருச்சு? என்ன ஆச்சு உனக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, ஏற்கனவே வெட்கத்தில் சிவந்திருந்த துர்காவின் முகம் ஆதி இப்படி கேட்டுத் தன்னைத் தொட்டுப் பார்க்கவும் மேலும் சிவந்துவிட, அவன் கையைத் தட்டிவிட்டவள் வேகமாகப் பாத்ரூமுக்குள் ஓடி, கதவைச் சாற்றிக்கொண்டு அதன் மேலே சாய்ந்துகொண்டு மூச்சு வாங்கினாள்.

‘அம்மாடியோ… எப்படி எல்லாம் கவனிச்சு கேக்குறான் பாரு’ என்று மனதில் நினைத்து துர்கா அவன் கூறியதை நினைத்துச் சிரித்தாள். அவள் ஓடிச் சென்று கதவைச் சாற்றிக்கொண்டதைக் கவனித்த ஆதி, ‘இப்ப நான் இவள்கிட்ட என்ன கேட்டுட்டேன்? இவ இப்படி என் கையைத் தட்டிவிட்டு ஓடிவிட்டாள்?’ என்று யோசித்தவன், ‘அவன் முகமே அப்படி சிவந்திருந்தது’ என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, சற்று நேரத்துக்கு முன்பு கீர்த்திகா, ‘துர்காவின் முகம் சிவந்து அழகாக இருந்தது’ என்று சொன்னாளே, ‘ஒருவேளை அவள் முகம் சிவந்தால் இப்படித்தான் இருக்குமோ?’ என்று யோசித்தவன், அவள் சிவந்த முகத்தை ஒருமுறை தன் மனக்கண்ணுக்குள் கொண்டு வந்து, துர்காவின் சிவந்த முகத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க, அவள் முகம் சிவந்து அவனைப் பார்த்த பார்வை ஒரு கணம் அவன் கண்முன் வந்து செல்ல, தன் உடல் சிலிர்த்து ஒருவித உணர்வு தோன்றுவதை உணர்ந்த ஆதி, தலையைக் குலுக்கிக்கொண்டு, ‘என்ன இப்படி ஒரு உணர்வு?’ என்று யோசித்தவன், அவள் நின்றிருந்த இடத்தை திரும்பிப் பார்க்க, அங்கே இவர்கள் இருவரின் திருமணப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்ததைக் கவனித்தான்.

அதன் அருகில் வந்து துர்காவின் முகத்தைப் பார்க்க, அந்தப் ஃபோட்டோவில் ஆதி துர்கா கழுத்தில் தாலிக் கட்டும் புகைப்படம் இருந்தது. அதில் துர்கா லேசாகக் கண்களைத் தாழ்த்தி, அழகான சிறிய மெல்லிய புன்னகை ஒன்று உதிர்த்து அமர்ந்திருந்தாள். துர்காவைப் பார்த்து, ‘ரெண்டு பேர்கிட்டயும் அப்போதானே சம்மதம் கேட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க? அம்மாவுக்காகத்தானே இவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா? ஆனா இந்த ஃபோட்டோல நான் தாலிக் கட்டும் போது அவள் சிரிச்ச முகமாகத்தானே இருக்கா? அப்படின்னா அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்தான்?’ என்று ஏதோ ஒன்று அவனுக்குப் புரிவதுபோல இருக்க, அருகில் இருந்த அவன் புகைப்படத்தைப் பார்த்தான்.

அவன் புகைப்படத்தைப் பார்க்க, அதில் ஏதோ ஈரமாக இருப்பதைப் பார்த்து, அதன் அருகில் வந்து நன்றாக உற்றுப் பார்க்க, அதில் முத்தம் கொடுத்ததற்கு அடையாளமாக லிப்ஸ்டிக்குடன் படிந்திருந்த முத்தக்கறை, அவன் புகைப்படத்தில் அவன் மாஸ்கின் மேல் இருந்தது. இதைப் பார்த்ததும் ஆதியின் கண்கள் பளிச்சென விரிந்தது. அவனுக்கு ஏதோ ஒன்று புரிவதுபோல இருக்க, ‘இந்த முத்தக்கறை இங்கே எப்படி வந்திருக்கும்? அதுவும் ஈரம் காயாம இருக்கு. அப்படின்னா இந்த ரூமுக்குள்ள இப்போ இருந்தது துர்கா மட்டும்தான். அப்போ, அவளுக்கு என்னைப் பிடித்துதான் இருக்கா? உண்மையாகவே? அதனாலதான் என் ஃபோட்டோவுக்கு முத்தம் கொடுத்திருக்காளா?’ என்று யோசித்தவாரே வந்து கட்டிலில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்தவன், அப்படியே யோசனையிலேயே இரண்டு நாட்களாக இருந்த களைப்பில் உறங்கிவிட்டான்.

சிறிது நேரம் அறைக்குள் அமைதியாக இருப்பதை உணர்ந்த துர்கா, பாத்ரூம் கதவை லேசாகத் திறந்து, ஆதி என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று எட்டிப் பார்க்க, அவன் பெட்டில் படுத்து, உட்கார்ந்த வண்ணம் தலை சாய்ந்து அப்படியே உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுப் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். வந்தவள் அவன் அருகில் வந்து அவன் மாஸ்க் அணியாத முகத்தை உற்றுப் பார்த்தாள். ‘எவ்வளவு அழகாக இருக்கிறது அவன் முகம்! ஆங்காங்கே சிவந்திருந்த கொப்பளங்களையும் தாண்டியும் அழகாக இருந்த அவன் முகத்தை ரசித்துப் பார்த்தவள், அவன் உதட்டைத் தொடாமல் கிள்ளுவதுபோல காற்றில் செய்து, தன் உதட்டால் அவன் உதட்டைக் கிள்ளிய தன் விரல்களுக்கு ‘உம்மா……’ என்று முத்தமிட, அவள் முத்தமிட்ட சத்தம் அமைதியாக இருந்த அந்த அறையில் நன்றாக எதிரொலிக்க, துர்கா செய்வதறியாமல் அப்படியே திகைத்துப்போய் நின்றாள்.

EPISODE 10

அறை அமைதியாக இருக்க, பாத்ரூம் கதவை லேசாகத் திறந்து பார்த்த துர்கா, ஆதியைத் தேடினாள். அவன் அங்கிருந்த மெத்தையில் தலை சாய்த்து அமர்ந்தவாறு கண்கள் மூடி இருக்க, அவன் அருகில் மெதுவாக வந்த துர்கா, அவன் முகத்தருகே குனிந்து பார்த்தவள், அவன் மூச்சுக்காற்று சீராக இருக்கவும், தூங்கிவிட்டான் என்று உறுதிப்படுத்தினாள்.

அவன் முகத்தில் இருந்த சிறு சிறு சிவப்பு கொப்பளங்களும், ஆங்காங்கே அந்த கொப்பளங்கள் உடைந்து காயமாகி இருந்ததையும் பார்த்த துர்காவுக்கு மனம் ஏனோ கனத்தது. இவை எல்லாவற்றையும் தாண்டியும் அவன் அழகிய முகமே அவளுக்குத் தெரிந்தது. ‘சின்ன சின்ன கொப்பளம் தானே இருக்கு? இதுக்கு போய் யாராவது முகத்தை மாஸ்க் போட்டு இந்த அழகான முகத்தை மறைச்சுக்குவார்களா என்ன?’ என்றவள், அவன் மூடிய இமைகளைப் பார்த்தாள்.

அழகிய தடித்த புருவங்கள், இமைகள் மூடி இருப்பதிலும் அழகாகவே இருந்தது அவளுக்கு. கண்ணை மூடியும் மூடாமலும் அவன் வைத்திருக்க, அதைப் பார்த்தவள் ‘தூங்கலையோ?’ என்று அவள் கைகளை அவன் கண்களுக்கு முன் ஆட்டினாள். ஆதி எந்த எதிர்வினையும் காட்டாமல் இருக்கவே, அவன் முகத்தை ரசித்தவள் அவன் சிவந்த உதட்டைப் பார்த்தாள்.

அவன் உதட்டைத் தொடாமல் கிள்ளுவதுபோல காற்றில் செய்து, தன் உதட்டால் அவன் உதட்டைக் கிள்ளிய தன் விரல்களுக்கு “உம்மா…” என்று முத்தமிட, அவள் முத்தமிட்ட சத்தம் அமைதியாக இருந்த அந்த அறையில் நன்றாக எதிரொலிக்க, துர்கா செய்வதறியாமல் அப்படியே திகைத்துப்போய் நின்றாள்.

அவள் அவ்வாறு செய்ததும், அதுவரை தூங்குவதுபோல இவள் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் தன் உதட்டிற்கு முத்தம் கொடுப்பதுபோல அவள் உதடுகளைக் குவித்து அவளுடைய விரல்களுக்கு முத்தமிட, ஆதிக்கு ‘என்னுடைய அந்த விரல்கள் நானாக இருந்திருக்கக்கூடாதா?’ என்று அவன் மனம் ஏங்கியது.

ஆதியைத் திரும்பிப் பார்த்தவள், அவன் கண் விழிக்காததைக் கண்டு நிம்மதி அடைந்தவள், பெருமூச்சொன்றை விட்டவள், ‘இனி இப்படி எல்லாம் பண்ணக் கூடாது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கட்டிலின் மறுபக்கம் சென்று ஆதிக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள்.

அவள் அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்து இவ்வளவு நேரம் நின்றிருந்ததில் அவள் மூச்சுக்காற்று ஆதியின் முகத்தில் பட்டதில், அவனை உள்ளுக்குள் ஏதேனும் செய்ய, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவ்வளவு நேரம் தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருந்தான் ஆதி.

அவள் படுத்துவிட்டாள் என்று உறுதி செய்த பின், தன் கண்களைத் திறந்து, துர்கா படுத்திருந்த பக்கம் திரும்பிப் பார்க்க, அவள் அவனிடம் முதுகு காட்டிப் படுத்திருந்தாள். அவனிடம் முதுகு காட்டி ஒருபுறமாகச் சாய்ந்து படுத்திருந்த துர்காவின் முதுகைப் பார்த்தவன், அவள் மஞ்சள் வண்ண மேனி லேசாக அவள் முதுகிலும் லேசாகத் தெரிந்த அவள் இடுப்பிலும் தெரிய, அதைப் பார்க்கும் ஆவலைக் கட்டுப்படுத்தி அவளைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டான்.

அவன் இதயம் ஏனோ படபடத்தது. துர்காவின் மூச்சுக்காற்றும், அவள் அருகாமையும், இவ்வளவு நேரம் அவள் அவன் அருகில் இருந்து கொண்டு அவனை ரசித்துப் பேசிய வார்த்தைகளும், முத்தமிட்ட அவள் குவிந்த உதட்டின் ஈரம்… இவை அனைத்தும் ஆதியை ஏதோ செய்ய. முழுக்க முழுக்க அவள் நினைவாகவே அவனுக்கு இருக்க, ஒருமுறை திரும்பி அவளைப் பார்க்க, ‘இவ்வளவு நாள் துர்காவிடம் தோழியாகப் பழகி இருந்தாலும், தினமும் ஆஃபீஸில் தன்னுடனேயே அவள் இருந்திருந்தாலும், அப்போதெல்லாம் வராத ஒரு உணர்வு, இன்று அவளைப் பார்த்ததும், அவள் தன்னிடம் இவ்வளவு அருகாமையில் இருந்தும், தன்னைப் பிடிப்பதுபோல் அவள் பேசும் வார்த்தைகளும், தன் போட்டோவிற்கு முத்தமிட்ட அவள் உதடுகளும் அவனின் உணர்வுகளை வேறு ஒரு உலகத்திற்கு அவனை இழுத்துச் சென்றது.’

கண்கள் மூடி யோசித்துக்கொண்டிருந்த ஆதி, ‘அப்போ துர்காவுக்கு என்னை பிடிச்சிருக்கு. கல்யாணம் ஆனதுக்காக பிடிச்சிருந்தது அப்படின்னா அவள் இவ்வளவு நெருக்கமா என்கிட்ட பேசி இருக்க மாட்டா. ஆனா, அவள் என்னிடம் ரொம்ப உரிமை எடுத்துப் பேசுறா. நான் தூங்கிட்டு இருக்கும்போதும், நான் இல்லாதபோதும், அவள் என்னை நினைத்து இவ்ளோ உரிமையா பேசுறா அப்படின்னா, அவ மனசுக்குள்ள நான் இருக்கேனா…? அவளுக்கு உண்மையாவே என்னைப் பிடிச்சிருந்ததுனாலதான் எங்க கல்யாண போட்டோல இருக்கிற என்னோட போட்டோவுக்கு அவள் முத்தம் கொடுத்தாளா….?’ என்று யோசித்தான் ஆதி.

இப்படி யோசிக்கும்போது ஆதியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல இருந்தது. அவன் உடலெல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தது. துர்கா என் மேல் இவ்வளவு நாள் இருந்த உணர்வு, இப்போது வேறு ஒரு விதமாக அவனுக்குத் தோன்றியது. அது என்ன உணர்வு என்று அவனால் யூகிக்க முடியவில்லை. ‘நான் ஏன் இப்படி இருக்கேன்?’ என்று யோசித்துக்கொண்டே ஆதி துர்காவை ஒருமுறை திரும்பிப் பார்க்க, அவன் உதடு தானாக ஒரு புன்முறுவலைச் சிந்தியது. அவனும் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று கண்கள் மூடிப் படுக்க, இருவருமே படுத்து உறங்கிவிட்டனர்.

சங்கவியை ஆதியுடன் அவர்களுக்கு இருந்த பிசினஸ்ஸில் உள்ளே நுழைத்துவிட வழி தேடிக்கொண்டிருந்தார் அவளுடைய அப்பா. சங்கவிக்கும் ஆதிக்கும் நடக்க இருந்த திருமணம் நின்ற பிறகு, அவர்களுடனான தொடர்பை, அவர்களுடன் இருக்கும் பிசினஸில் மட்டுமே இணைக்க முடியும் என்று யோசித்த சங்கவியின் அப்பா ஒரு முடிவுடன் ஆதியின் அப்பாவிற்கு கால் செய்தார்.

ஆதியின் அப்பா வெங்கடசாலம் அவர்களின் புது வீட்டில் போய் படுத்துக்கொண்டிருக்க, தன் மொபைல் போன் ரிங் அடிக்கவும் எழுந்து எடுத்துப் பார்த்தவர், அதில் சங்கவியின் அப்பா பெயர் வந்திருப்பதைக் கண்டு ‘இவர் எதற்கு இப்போது கால் செய்து இருக்கிறார்?’ என்று யோசனையுடன் அந்த காலை அட்டென்ட் செய்தார்.

அட்டென்ட் செய்து காதில் வைத்தவர் “ஹலோ” என்று சொல்ல, சங்கவியின் அப்பா “நான் தான் சங்கவியின் அப்பா பேசுறேன்” என்றார். “தெரியுது, சொல்லுடா” என்றார் வெங்கடசாலம் எப்பொழுதும் போல.

தன்னிடம் நடந்த எதையுமே மனதில் வைத்துக்கொள்ளாமல் வெங்கடசாலம் நார்மலாகப் பேசுவதைப் பார்த்த சங்கவியின் அப்பாவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “என்னை மன்னித்துவிடு வெங்கடசாலம். என் பொண்ணுனால அதான் நான் அப்படியெல்லாம் அவகிட்ட பொய்யா அதையும் இதையும் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கதான் நான் அந்த மாதிரி எல்லாம் அவள்கிட்ட பேசிட்டு இருந்தேன். அதை யாரோ எனக்கே தெரியாம வீடியோ எடுத்து ஆதிகிட்ட கொடுத்துட்டாங்க. எனக்கு இப்போ உன்னை பார்க்கவும், ஆதியைப் பார்க்கவும் ரொம்ப தர்மசங்கடமா இருக்குது” என்றார்.

சங்கவியின் அப்பா வெங்கடசாலத்திடம், ‘தான் தெரியாமல் தன் பொண்ணு என்னிடம் அவளை சம்மதிப்பதற்காகத்தான் இப்படி எல்லாம் சொன்னேன்’ என்று சொன்னதை நம்பாத வெங்கடசாலம், மனதிற்குள் ‘யாராவது தன் பொண்ணுகிட்டேயே கட்டிக்கப் போற பையனோட தம்பியையும் வளைச்சு கைக்குள்ள வெச்சுக்க சொல்லிக் கொடுப்பாரா? இதை வந்து அவன் பொண்ணைச் சமாதானப்படுத்த சொன்னேன்னு என்கிட்ட திரும்ப வந்து சொல்றான். இவனை என்ன பண்றது?’ என்று நினைத்துக்கொண்ட வெங்கடசாலம், “இப்ப எதுக்கு அதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்க?” என்று கேட்க, “என் பொண்ணு பண்ணின காரியத்துக்காக நம்மளோட ஃப்ரெண்ட்ஷிப் உடைந்து விடக்கூடாது. நம்மளோட பிசினஸ் உடைஞ்சிடக் கூடாதுன்னுதான் உனக்கு கால் பண்ணேன். அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். என்னையும் மன்னித்துவிடு வெங்கடசாலம்” என்று கூறிய சங்கவியின் அப்பா, “அவ செஞ்ச காரியத்திற்காக நம்மளோட இத்தனை வருஷம் பழக்கம் உடைஞ்சிடாது இல்லையா?” என்று வெங்கடசலத்திடம் கேட்க, மனதில் சங்கவியின் அப்பாவை நினைத்து கோபம் இருந்தாலும், ‘இத்தனை வருடப் பழக்கம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான். ஆனால் இத்தனை வருடமாக இவனது உண்மை முகம் எனக்குத் தெரியாமலேயே போய்விட்டது’ என்று யோசித்தவர், அதை அவரிடம் காட்டவும் முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டார். “சரிடா, நம்ம பழக்கம் எப்பவும் போலதான் இருக்கும்” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு சந்தோஷமா இருந்த சங்கவியின் அப்பா, “அப்போ நம்முடைய பிசினஸ்?” என்று கூறி நிறுத்த, “உன்னோட பழக்கத்தையே நான் இருக்கட்டும்னுதான் நான் சொல்றேன். அப்போ உன் பிசினஸை மட்டும் எப்படி நான் ஒடச்சிக்க முடியும்? இந்த ப்ராஜெக்ட் முடியிற வரைக்கும் நீ என்னோட பிசினஸ்ல இருக்கலாம். அது முடிஞ்ச பிறகு தானாவே நீயாக விலகிக்கணும் அப்படின்னு ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் எனக்குக் கொடு” என்றார் ஆதியின் அப்பா.

‘இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்’ என்பதுபோல, இந்த நிபந்தனையை கேட்டவுடன் சங்கவியின் அப்பா வேகமாக “சரிடா, நான் ஒத்துக்குறேன். இந்த ப்ராஜெக்ட் முடியுற வரைக்கும் என் பொண்ணு எப்பவும் போல உன் ஆஃபீசுக்கு வந்து பிசினஸ் பார்த்துப்பா. அது முடிஞ்ச பிறகு நாங்கள் இந்த பிசினஸை விட்டு விலகிப் போய்விடுவோம்” என்றார் சங்கவியின் அப்பா.

“என்ன, சங்கவிதான் மறுபடியும் பிசினஸ்க்கு வரப் போறாளா?” என்று ஆதியின் அப்பா கேட்க, “ஆமாடா. எனக்கும் உடம்பு ரொம்ப முடியல. என்னால முன்ன மாதிரி இந்த சம்பவத்துக்குப் பிறகு வெளியே தலை காட்ட ரொம்ப சங்கடமா இருக்கு. அதனாலதான் நான் சங்கவியே இந்த பிசினஸ் டேக் ஓவர் பண்ணிக்க சொல்லி அவ பேர்ல எல்லாத்தையும் எழுதி வச்சுட்டேன். இந்த ஒரு ப்ராஜெக்ட்டுக்கு மட்டும் அவளை மன்னிச்சு அவளைப் பொறுத்துக்கோங்க. எனக்காக தயவு செய்து” என்றார் சங்கவியின் அப்பா.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், நீண்ட யோசனைக்குப் பிறகு “சரி” என்று வெங்கடசாலம் கூறினார். இதைக் கேட்டதும் மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்த சங்கவியின் அப்பா, “சரி வெங்கடசலம், அப்போ என் பொண்ணு நாளைலிருந்து ஆஃபீசுக்கு வர சொல்லிவிடுகிறேன்” என்றார். “சரி” என்று பேசிவிட்டு போனை வைத்தார் வெங்கடசாலம்.

போனை பேசிவிட்டு வைத்த சங்கவியின் அப்பா, சங்கவியைப் பார்த்து, “நான் நினைத்ததுபோல முதல் கட்ட வேலை நடந்துவிட்டது. இனி எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது. ஆதியின் ஆஃபீஸில் நுழைந்ததும் நீ உன் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்றார் சங்கவியின் அப்பா.

அவர் கூறியதைக் கேட்ட சங்கவி, “இனிமேல்தான் இந்தச் சங்கவியோட உண்மையான முகத்தை அவங்க பார்க்கப் போறாங்க. என்னை அத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்தி, மணமேடையில் இருந்து துரத்தின அந்த ஆதியையும், அந்த துர்காவையும், அவன் குடும்பத்தையும் நான் சும்மா விடமாட்டேன்” என்றாள் சங்கவி.

கதிரும் விக்கியும் ஆஃபீஸ் சென்றுவிட்டு வேலைகளை எல்லாம் சிறிது பார்த்துவிட்டு, நேராக ஆதியின் புதிய வீட்டுக்கு வந்துவிட்டனர் மதிய உணவு சாப்பிடுவதற்காக. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு வீட்டிற்குள் வரும்போதே ஹாலில் இவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்த வெங்கடசாலம் இவர்களைப் பார்த்ததும், தன்னிடம் வருமாறு சைகை செய்ய, அவர்கள் இருவரும் அவர் அருகில் சென்று அமர்ந்தனர்.

“நான் இப்ப சொல்லப் போற விஷயத்தை ஆதிகிட்ட நீங்க ரெண்டு பேரும் தான் பொறுமையா போய் எடுத்து சொல்லணும். நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டதும், ‘தாம் தூம், அதெல்லாம் முடியாது, வேண்டாம். நம்மளுக்கு எவ்வளவு நஷ்டமானாலும் பரவாயில்லை, கேன்சல் பண்ணிடலாம். அது இது’ன்னு ஏதாவது சொல்லுவான்” என்று அவர் கூறவும், அவர் கூறியது எதுவும் புரியாமல் கதிரும் விக்கியும் ஒருவரை ஒருவர் பார்க்க, அவர்களைப் பார்த்த வெங்கடசாலம், “சங்கவியின் அப்பா போன் செய்திருந்தார்” என்று சொல்ல, அதிர்ச்சியாகி அவரைத் திரும்பிப் பார்த்து, “என்னப்பா சொல்றீங்க?” என்று கதிர் கோபத்துடன் கேட்க, “இதுக்குத்தான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் முதல்ல சொன்னேன். நான் ஆதிகிட்ட சொல்லாம நீயே இப்படி கோபப்படுற. அப்ப அவன் எவ்வளவு கோபப்படுவான்? சங்கவி பெயரை கேட்டாலே அவனுக்கு அப்படித்தான் கோபம் வரும். ஏன்னா அந்தப் பொண்ணு அவ்ளோ பண்ணிட்டு போயிடுச்சு ஒரே நாள்ல.”

சங்கவியின் அப்பா கூறியதை அனைத்தையும் இவர்களிடம் கூறிய வெங்கடசாலம், “இப்ப நான் சொன்னதெல்லாம் பொறுமையா கேட்டுட்டீங்க இல்லையா? நாளைலிருந்து அவள் நம்ம ஆஃபீஸ்க்கு வரப் போறா. இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சு அவ வெளியே போற வரைக்கும் அவகிட்ட வேற எந்தப் பிரச்சினையும் வெச்சுக்கக் கூடாது. ஆஃபீஸ்ல இருக்குற வேலைகளைத் தவிர்த்து, வேற இதுலயும் அவளை இன்வால் பண்ணக் கூடாது” என்றார்.

அவர் கூறியதெல்லாம் கேட்டு இருவரும் தலையாட்டிவிட்டு, “சரிப்பா, நாளைலிருந்து நாங்க பார்த்துக்கிறோம். எப்படி, அண்ணா வரதுக்கு இன்னும் பத்து நாள் ஆகிடும் இல்லையா? அதுக்கப்புறம் அண்ணன் வந்ததுக்கு அப்புறம்தான் அவளுக்கு இருக்கு. இது பத்தி எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவ ஜஸ்ட் நம்ம பிசினஸ் பார்ட்னர் தான். இனிமேல் அவளை நான் இன்வால் பண்ணிப் பேசவே மாட்டேன்” என்றான் கதிர். “அவளுக்கு அதற்கான தகுதியும் இல்லை” என்றான்.

“சரி, போங்க ரெண்டு பேரும் போய் பிரஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்” என்று கூறியவர், “முத்து” என்று தன் வேலைக்காரனை அழைக்க, “ஐயா, சொல்லுங்க” என்று வந்தான். “நீ மேலே சென்று துர்காவையும் ஆதியையும் ரெடியாகிச் சாப்பிட வரச் சொல்” என்றார். “அம்மா, விசாலாட்சி, எல்லாமே ரெடி ஆயிடுச்சா?” என்று கேட்க, “எல்லாம் ரெடி ஆயிடுச்சுங்க. எல்லாரும் வந்தா சாப்பிடலாம்” என்றார் விசாலாட்சி.

விக்கி பிரஷ் ஆகச் சென்றுவிட, கதிர் எழுந்து சென்றவன், “எங்கே நம்ம ஆள காணோமே…? இது ரொம்ப அமைதியா இருக்க மாதிரி இருக்கே. இது சரி இல்லையே” என்று அந்த ஹால் முழுவதும் நோட்டமிட, அவள் சமையலறையில் ஒரு திண்டின் மேல் அமர்ந்து அவள் அம்மாவிடம் பேசிக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் நொறுக்குத் தீனியை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

‘அதைத்தான் பார்த்தேன். நீ பெண்ணுக்குத்தான் வாய் சும்மா இருந்திருக்க சொன்னா சாப்பிடணும். இல்லன்னு ஏதாவது பேசிட்டு இருக்கணும். அப்படி இல்லைன்னா அந்த வாய்க்கு ஏதாவது வந்துடும்’ என்று நினைத்துச் சிரித்தவன், அவனும் பிரஷ் ஆகச் சென்றுவிட்டான்.

மேல சென்று முத்து தாத்தா கதவைத் தட்ட, அப்போதுதான் கண்விழித்த துர்கா எழுந்து வந்து கதவைத் திறந்தாள். அவரைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே “சொல்லுங்க தாத்தா” என்று கூற, “அம்மாடி கண்ணு, எல்லாரையும் கீழே சாப்பிட வரச் சொல்றாங்க கண்ணு. ஆதி தம்பி முழிச்சிடுச்சா?” என்று கேட்க, “இல்லைங்க ஐயா. நான் அவரை எழுப்பி கீழே கூட்டிட்டு வரேன். நீங்க போங்க” என்று துர்கா அவரிடம் கூறி அனுப்பி வைத்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டு அறைக்குள் வந்து திரும்பிப் பார்த்தாள். ஆதி நன்கு உறங்கிக்கொண்டிருந்தான்.

அசதியில் தன்னை மறந்து தூங்கும் ஆதியைப் பார்த்தவள், அவனை எழுப்பும் மனமில்லாமல், முதலில் தான் சென்று ரெடியாகிவிட்டு, அதன் பிறகு வந்து அவனை எழுப்பிக்கொள்ளலாம் என்று, காலையில் வெளியே செல்வதற்காக அணிந்திருந்த உடை இப்போது கசங்கி இருக்க, வேறு உடை மாற்றிக்கொள்ளலாம் என்று வேறு உடை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

பாத்ரூமுக்குள் சென்று உடை மாற்றிவிட்டு வெளியே வந்த துர்கா அப்போதும் ஆதி உறங்கிக்கொண்டிருக்க, அவன் அருகில் வந்து “ஆதி” என்று அழைக்க, அவன் அசையாமல் படுத்திருக்க, திரும்பவும் அவன் தோளைத் தொட்டு, “ஆதி” என்று லேசாக அவனை உலுக்கினாள்.

கண் விழித்து, தன் எதிரே அழகின் மறு உருவமாக நின்றிருந்த துர்காவைப் பார்த்த ஆதி, தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு அவளை நன்றாகப் பார்க்க, அவள் அழகில் அப்படியே பிரமித்துப்போய் எழுந்து அமர்ந்தான்.

கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ஆதியைப் பார்த்த துர்கா, “நான் தோளைத் தொட்டு உலுக்கினேன், வலிக்கலையா? ஆதிக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படிப் பார்க்குற? என்ன இன்னைக்கு?” என்று கேட்க, அவள் அவனை அழைத்துவந்ததால் சுயநினைவுக்கு வந்த ஆதி, “ஒன்னும் இல்லையே” என்று கூறியவன், “என்னை ஏன் இப்ப எழுப்பின?” என்று கேட்டான், பொய்யான கோபத்தோடு.

“இல்லை ஆதி. முத்து தாத்தா வந்தாரு. ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நம்ம ரெண்டு பேரையும் சாப்பிட கீழே வரச் சொன்னாங்கன்னு சொல்லி கூப்பிட, அதனாலதான் நான் உன்னை எழுப்பினேன்” என்றாள் துர்கா பயந்தவாரே.

தான் தன்னைப் பார்த்துப் பயந்து பின்னே செல்வதைப் பார்த்த ஆதி, “ஹே… துர்கு. நான் சும்மா கோபம் வர்ற மாதிரி உன்கிட்ட நடிச்சேன். கோபம் எல்லாம் படவில்லை. நீ ஏன் இப்ப அதுக்காக பயந்துக்கிற? நான் ஆஃபீஸ்ல எவ்வளவு கோபமா இருந்திருக்கேன்? அப்பெல்லாம் கூட நீ இப்படிப் பயப்பட்டது இல்லையே. இப்போ நான் சும்மா சின்னதா கோபம் வர்ற மாதிரி நடிச்சதுக்கு ஏன் இப்படிப் பயந்துக்கிற?” என்று கேட்டான் ஆதி.

“இல்லை ஆதி. ஆஃபீஸ் அப்படிங்கிறது என்னன்னா, அது தொழிலோட போயிடும். வேலை எல்லாம் முடிச்சு அடுத்த நாள் வரும்போது அப்படி ஒரு விஷயம் நடந்தது மாதிரியே நம்ம நினைச்சுக்க மாட்டோம். ஆனால் இங்கு அப்படி இல்லையே. இது நம்ம வீடு. நம்ம ரெண்டு பேரும் தான் இனிமேல் ஒரே வீட்டில் இருக்கப் போறோம். ஒருத்தரை ஒருத்தர் சங்கடம் வராமல், கோபம் இல்லாம பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். அவ்வளவுதான்” என்றாள்.

“சரி துர்கா. நீ சொன்னதும் கரெக்ட் தான். நான் இனிமேல் தேவையில்லாம உன்கிட்ட கோபப்படுற மாதிரி நடந்துக மாட்டேன், ஓகேவா?” என்று சிரித்தபடியே கூற, அவன் சிரித்த முகத்தைப் பார்த்து ஆச்சரியமாக “ஆதி, உனக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா?” என்று கேட்டாள் துர்கா.

“ஏன் துர்கா? இதுக்கு முன்னாடி நான் சிரிச்சு நீ பார்த்ததே இல்லையா? என்னமோ புதுசா பார்க்குற மாதிரி கேட்குற?” என்று ஆதி கேட்க, “ஆமா ஆதி. காலேஜ்லயும் சரி, ஆஃபீஸ்லயும் சரி, நீ இதுவரைக்கும் சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ஆதி?” என்றாள் துர்கா.

அவள் தன்னை அழகாக இருக்கிறேன் என்று புகழ்ந்து பேசினதும், ஆதி தன் மனதிற்குள் கர்வமாகத் தன்னைப் பற்றி எண்ணிக்கொண்டான். ஒரு பெண் முதன்முதலாகத் தன்னிடமே நேரடியாக அவனை ‘அழகாக இருக்கிறான்’ என்றும் கூறியது கேட்டு உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

அவன் சந்தோஷத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் மகிழ்ந்தவன், துர்காவிடம் “நான் போய் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல ரெடியாயிட்டு வந்துடறேன். நம்ம ரெண்டு பேருமே ஒண்ணா போகலாம்” என்று கூறிவிட்டு எழுந்து பாத்ரூம் செல்ல, அதுவரை அவனை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த துர்கா, ‘என்ன ஆச்சு? ஏன் நம்ம கிட்ட நல்லா பேசுறான் இன்னைக்கு? எப்போ பார்த்தாலும் உர்ருனு வெச்சுட்டுதானே பேசுவான்’ என்று யோசித்தாள்.

சிறிது நேரத்தில் ஆதியும் ரெடி ஆகி வந்துவிட, இருவரும் சேர்ந்து கீழே செல்லவும், அனைவரும் டைனிங் ஹாலில் ஒன்றுகூடி சாப்பிட ஆரம்பித்தனர். அனைவரும் சந்தோஷமாக பேசி சாப்பிட்டு முடித்துவிட்டு, ஹாலில் அமர்ந்திருக்க, ஆதியைக் கூட்டிக்கொண்டு விக்கி அங்கே இருக்கும் ஸ்டடி அறைக்குச் சென்றான்.

துர்காவிடம் விசாலாட்சி, அந்த வீட்டில் இருக்கும் மற்ற விஷயங்கள் என்ன என்று விவரங்கள் சொல்லிக்கொண்டிருக்க, அவர்களோடு சேர்ந்து கீர்த்திகாவும் அவள் அம்மாவும் அமர்ந்து அவர்கள் பேசுவதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கதிர் ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டு கீர்த்திகாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவ என்ன எல்லார் கூடவும் ஒட்டிக்கிட்டே சுத்திட்டு இருக்கா? தனியா எழுந்து எங்கும் செல்வாளா?’ என்றும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது வெங்கடசாலம் “முத்து, எனக்கு கொஞ்சம் வெந்நீர் வேணும் எடுத்துட்டு வா…” என்று தன் அறையில் இருந்து சத்தமிட, ஆனால் முத்து கிட்சனில் இல்லை. அவர் பதில் ஏதும் பேசாமல் இருக்க, விசாலாட்சி “எனக்குக் கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாம்மா….” என்று கூற, “கொண்டு வரேங்க” என்று அவள் எழப் போக, “அத்தை, இருங்க. நான் மாமாவுக்கு கொண்டுபோய் கொடுத்துட்டு வரேன்” என்றும் எழுந்து கிச்சனுக்குள் சென்றாள்.

அதுவரை அவளை எப்படித் தனியாகச் சந்திப்பது என்றும் பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு, இப்போது வாய்ப்பு தானாகவே அமைந்துவிட்டது. கீர்த்திகா எழுந்து சமையலறைக்குச் சென்றதும், கதிரும் எதுவுமே தெரியாதவன் போல எழுந்து சத்தம் இல்லாமல் அவள் பின்னாலேயே சமையலறைக்குள் சென்றான்.

உள்ளே சென்றவன், கீர்த்திகா என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவள் அடுப்பில் வெந்நீர் வைக்கப் பாத்திரம் தேடிக்கொண்டிருந்தாள். பின் ஒரு வழியாகப் பாத்திரத்தை எடுத்து, தண்ணீர் பிடித்து, ஸ்டவ்வை ஆன் செய்துவிட்டு நின்றிருக்க, அவளுக்குத் தெரியாமல் அவள் அருகில் பின்னால் வந்து நின்ற கதிர், அவள் ஜிமிக்கியைத் தன் விரலால் சுண்டி விட, திடுக்கிட்டுத் திரும்பிய கீர்த்திகா, கதிரைப் பார்த்ததும் அவனை அங்கு எதிர்பார்க்காமல் “ஆ…” என்று கத்த வாயைத் திறக்க, சட்டென அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் பிடித்து, அவள் இதழ்களைத் தன் இதழ்களால் சிறை செய்திருந்தான்.

EPISODE 11

கீர்த்திகா சமையல் அறை சென்று வெங்கடசாலத்திற்கு சுடுதண்ணீர் வைத்துவிட்டு நின்றிருக்க. அவளை பின் தொடர்ந்து அவளுக்கு தெரியாமல் கிட்சேனிற்குள் நுழைந்த கதிர் அவளை பின்னால் நின்று அவளை காதில் மாட்டி இருந்த ஜிமிக்கியை சுண்டிவிட்டான்.

யார் என்னோட ஜிமிக்கியை சுண்டிவிட்டது என்று திரும்பிய கீர்த்திகா கதிரை அங்கு அவளை அருகில் பார்த்ததும் பயத்தில் ஆ… என்று கத்த வாயை திறக்க, எங்கே அவளை சத்தம் போட்டு அனைவரையும் கூப்பிட்டுவிடுவளோ என்று நினைத்தவன் அவளை முகத்தை தன் இருக்கைகளாலும் பிடித்து அவளை இதழ்களை சிறை செய்தான்.

முதல் முறை ஒரு பெண்ணின் இதழ் ஸ்பரிசமும் அவளை அருகாமையும் கதிரை ஏதோ செய்ய லேசாக முதலில் லேசாக அவள் இதழில் முத்தமிட்டவன் அவளை ஸ்பரிசம் அவன் உடலை சூடேற்ற அவன் தந்த முத்தத்தை தீவிரமாகினான்.

இங்கே கீர்த்திகாவின் நிலையோ அதற்கு மேல். ஒரு ஆணின் தீண்டல் முதல் முறை உணர்ந்தவள் அவன் மூச்சுகாற்றின் சுவாசம் அவளின் நாசியில் கலக்க அவன் இதழ் முத்தம் அவளை ஏதோ செய்ய அவனை தன்னிடம் இருந்து விளக்க மறந்து அப்படியே கண்களையும் கைகளையும் இருக்க மூடிக்கொண்டு அவனிடம் தன் இதழை கொடுத்துவிட்டு தன்னை மறந்து நின்றிருந்தால்.

கதிர் அவளை ஒருகையால் அணைத்துக் கொண்டு மறுகையால் அவளை முகத்தை பிடித்து தன் முகத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டு நின்று சுற்றி இருக்கும் சூழல் மறந்து அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

எங்க அவருக்கு சுடு தண்ணீர் கொண்டு வரேன்னு சொல்லி உள்ள போன கீர்த்திகாவை இன்னும் காணவில்லை என்று விசாலாட்சி கூற, இருங்க சம்மந்தி நான் போய் பாத்துட்டு வரேன் நீங்க பேசிட்டு இருங்க என்று எழுந்து சென்றார்.

இருவருமே தங்களை மறந்து இருக்க, துர்காவும் அவள் அம்மாவும் சமையல் அறை நோக்கி வந்து கொண்டிருந்தார். சமையல் அறைக்குள் வந்தவர் அங்கே உள்ளே நின்றிந்தவலை பார்த்து அப்படியே ஒரு நிமிடம் நின்றுவிட்டார்.

கீர்த்திகா அங்கே கதிரை பார்த்து நின்றிருந்தது போல கண்களை இருக்க மூடி, கைகளை மூடி அப்படியே விரைப்பாக அவளை மட்டும் நின்றிருக்க, இவளுக்கு என்ன ஆச்சு இப்படி நிக்குறா என்று யோசித்தவர் அவளை அருகில் வந்து கீர்த்ததுமா… என்று அழைக்க, அவளை அப்படியே நிற்க திரும்பவும் “ஏய் கீர்த்திகா….” என்று அதட்டாளாக அவள் தோலை தொட்டு குலுக்க, அப்போது தான் சுயநினைவு வந்தவளாக, அவளை அம்மாவின் குரல் கேட்டு “ஐயோ… அம்மா வந்துவிட்டர்களே! என்னை இப்படி பார்த்தால் என்ன ஆவது?” என்று தன் எதிரே கதிர் இருப்பதாக நினைத்து அவளை அம்மாவை தன்னிடம் இருந்து வேகமாக விளக்குவதாக நினைத்து தள்ளி விட்டாள்.

அவர் கீழே விழுவது போல பின்னால் போக, அப்போது தான் கீர்த்திகா “தன் அம்மாவை தான் நான் தள்ளி இருக்கிறேனா? அப்போ அவன்…” என்று யோசனையில் முதலில் அவள் அம்மாவை கைபிடித்து நிறுத்தியவள் சுற்றுமுற்றும் பார்க்க, அங்கே கதிரை காணவில்லை.

அதுவும் புரியாமல் விழித்தவள் அவளை அம்மாவை பார்க்க அவர் முறைத்துக்கொண்டு நின்றிருந்தார். அவரை பார்த்து அசடு வழிந்தவள் திரும்பி தண்ணீரை பார்க்க அது நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது.

அவசரமாக அதை ஆஃப் செய்ய “நீ தள்ளு, நானே எடுத்துட்டு போய் சமந்திக்கு கொடுக்கிறேன். நீ என்னவோ சரி இல்லை ஏதோ மாதிரியே இருக்க இங்க வந்ததுல இருந்து” என்று கூறியவர், தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்து சென்றார்.

அவர் பின்னாலேயே செல்ல போன கீர்த்திகாவை ஒரு கை பிடித்து சமையல் அறைக்கு உள்ளேயே இருந்த ஸ்டோர் ரூமிற்குள் இழுத்தது.

இழுத்த வேகத்தில் அவளை வாயை தன் கையால் யாரோ மூட, யார் என்று பார்க்க அங்கே கதிர் நின்றிருந்தான். அவனை பார்த்ததும் அவளை விழிகள் அதிர்ச்சியில் மேலும் அகல விரிந்தது.

கதிர் தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து “ஷ்…..” என்று சைகை செய்தவன், அவளை வாயில் இருந்து தன் கையை எடுத்தான். அவளை சுவற்றோடு பிடித்து அழுத்தி நிறுத்தி இருக்க கீர்த்தியால் எங்கேயும் நகர முடியவில்லை.

அவனையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களை ரசித்தவரே “என்ன கீ… நா உன்கிட்ட பேட் கட்டின மாதிரியே உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துட்டேன் பாத்தியா?” என்று மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறி தன் காலரை தூக்கிவிட்டான்.

அவன் அப்படி கூறியதும் அவனை முறைத்த கீர்த்திகா அவனிடம் கோபமாக “இப்படி ஒரு பொண்ணு கிட்ட நடந்துகிறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று கூற, “வெட்கமா? எனக்கா …. நோ….” என்று அவளை பார்த்து சிரிக்க.

அவன் சிரித்ததில் அவன் கண்கள் லேசாக சுருங்கி அழகாக தெரிய, அதை ரசித்தவள் பின் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, ‘இவன் நம்ம கிட்ட அத்துமீறி நடந்திருக்கான், அவனை போய் ரஸிக்குறியே?’ என்று தன்னை தானே கேட்டுக்கொண்டாள்.

“அதானே? நீங்க எல்லாம் பெரிய இடத்து பசங்க. உங்களுக்கெல்லாம் இது சகஜமா இருக்கும். ஆனா எங்களுக்கு எல்லாம் அப்படியா? நாங்க மனம் ரோசம் உள்ளவங்க. எங்க நிலை என்ன என்று எங்களுக்கு தெரியும்” என்றவள், அவனை முறைத்து கொண்டு அது “என்ன கீ…” என்றாள். “கீர்த்திகாவை சுருக்கி கீ… என்று சொன்னேன்” என்றான் கதிர். “இனிமேல் என்கிட்ட இந்த மாதிரி பேசுற வேலை, நடந்துக்கிற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க. எங்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு. உங்க பொழுது போக்கிற்காக எங்க வாழ்க்கையில் விளையாடதீர்கள்” என்று முகத்தில் அடித்தது போல பேச.

கதிர் “ஏய் கீ…. ஏன் இப்படி எல்லாம் பேசுற? நான் உன்னை அப்படி இல்லனா தவறாக நினைத்து…” என்று அவன் கூற வர “இப்போதான சொன்னவன் இப்படி பெயர் வைத்துக் கூப்பிடவேண்டாம்” என்று அவள் அவனை முறைக்க, அவன் வேண்டுமென்றே அப்படி தான் கூப்பிடுவேன் என்றவன் திரும்ப “கீ….” என்று அவளை அழைக்க.

அவள் திரும்ப அவனை “போடா கா….” என்றாள். “என்னது? கா…வா…” என்று கதிர் கூப்பிட, “நீ என்னை இப்படி கூப்பிட்டா நானும் உன்னை அப்படி தான் அழைப்பேன்” என்று அவனிடம் வம்புக்கு நின்றாள்.

அவன் மறுபடி “ஏய்… கீ…” என்று ஹுஸ்கி வாய்சில் அழைத்துக்கொண்டு அவளை அருகில் வர, பதறிய கீர்த்திகா “டேய் இப்போ எதுக்கு என் பக்கத்தில வர?” என்று கூறி பின்னே செல்ல, அவன் “ம்ம்ம்…. அப்போ அவசரத்துல சரியா கொடுக்கலை, அதன் மறுபடி ஒரு முறை பெட்ல ஜெயிக்கலாம்னு….” என்று நிறுத்த, “இன்னோரு தடவை அந்த மாதிரி ஏங்கிட்ட நடந்துகிட்டே, நடக்குறதே வேரை” என்று அவனை எச்சரித்து விட்டு, அவனை தாண்டி செல்ல போனவளை அவளை கையை பிடித்து இழுத்து அவளை சுவற்றில் அழுத்தி நிறுத்தியவன், “என்ன டி பண்ணுவ? நானும் பாக்குறேன். ரொம்ப ஓவரா தான் போற” என்றவன், “இப்போ நான் மறுபடியும் முத்தம் கொடுக்கிறேன். உன்னால ஆனதை பாரு” என்றவன் குனிந்து அவள் இதழில் மீண்டும் முத்தமிட, அவனை பலம் கொண்டு தன்னிடம் இருந்து பிரித்தவள் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டாள் கீர்த்திகா.

அவனிடம் இருந்து விலகி இரண்டு அடி தள்ளி நின்று, “இனி என் பக்கத்துல வர வேலை வெச்சுக்காதே, உன் மரியாதை கெட்டு போயிரும்” என்றவள் அங்கிருந்து கண்களில் கண்ணீரோடு வெளியே சென்றாள்.

சமையலறையை விட்டு வெளியே வந்த கீர்த்திகா தன் கண்களை துடித்துக் கொண்ட நேராக அவள் அம்மாவிடம் சென்று “அம்மா நான் வீட்டுக்கு போறேன்” என்றாள். அவள் அப்படி திடீரென்று வந்து “நான் வீட்டுக்கு செல்கிறேன்” என்று கூறியதும், அமர்ந்திருந்த விசாலாட்சி, துர்கா, அவளுடைய அம்மா மூவருமே “ஏன்? என்ன ஆச்சு உனக்கு? என்ன திடீர்னு ஏன் வீட்டுக்கு போறேன்னு சொல்ற?” என்று துர்கா கேட்க, விசாலாட்சியும் “ஏன்டா கண்ணு? என்ன ஆச்சு?” என்று கேட்டார்.

அது ஒன்னும் இல்ல ரொம்ப போர் அடிக்குது இங்க அது இல்லாம எனக்கு எக்ஸாம் வேற இன்னொரு வாரத்தில் வரப்போகுது. அதனால்தான் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். போய் கொஞ்சமாக படிக்கலாமே. நான் இங்க சும்மா தானே இருக்கேன். அதனால தான் அத்தை” என்றால் விசாலாட்சியிடம் கீர்த்திகா.

அவள் எக்ஸாம் இருக்கிறது படிப்பதற்கு என்று சொல்லவும் அவரை யாரும் தடுக்கவில்லை. “சரி நீ கிளம்புதுன்னா கிளம்புமா. அம்மா அப்பாவும் சாயங்காலம் சீக்கிரம் வந்துருவாங்க வீட்டுக்கு” என்று கூறி, கீர்த்திகாவை அனுப்ப மனமில்லாமல் விசாலாட்சி அனுப்பி வைத்தார்.

“சரி நீ எப்படி வீட்டுக்கு போக இங்கிருந்து? இரு நான் யாரையாவது கொண்டு வந்து விட சொல்றேன்” என்று அவர் கூற “அதில்ல அத்தை நானே ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுறேன். உங்களுக்கே வீண் சிரமம்” என்று அவள் கூற “இதில் என்னடா இருக்கு? என் மருமகளோட தங்கச்சி உன்னை எப்படி நான் ஆட்டோவில் போடறதுக்கு விடுவேன்? சரி நீ இரு நான் டிரைவர் யாரையாவது வர சொல்றேன்” என்று கூறியவர், அவளை காத்திருக்க சொல்லிவிட்டு டிரைவரை அழைத்தார்.

அப்புறம் எப்படி? டிரைவர் வரவும் “டிரைவர், நீங்க கீர்த்திகாவை கொண்டு போய் பத்திரமாக அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துருங்க” என்றார். டிரைவர் “சரிமா” என்று கூறி, கீர்த்திகாவை வரச் சொல்லிவிட்டு காரை எடுத்து சென்று விட்டார்.

அனைவருடன் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினாள். துர்காவின் வீட்டை விட்டு வெளியே வரவும், கார் வரவும் சரியாக இருந்தது. அவள் காரின் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்து “அண்ணா, நான் சொல்ற வழியில போங்கனா, உங்களுக்கு எங்க வீடு தெரியாது தானே?” என்று சொல்லிக் கொண்டு டிரைவரை பார்க்க அங்கே கதிர் அமர்ந்திருந்தான்.

அவனை அங்கு எதிர்பார்க்காத கீர்த்திகா “நீ? உன்னை யார் இங்க வர சொன்னது?” என்று கூறியவள் கார் கதவை திறந்து இறங்கப் போக “ஏய் கீ….. ப்ளீஸ், என்ன ரொம்ப தர்ம சங்கடத்துக்கு ஆளாகிற. நீ தயவு செய்து காரிலேயே உட்காரு. நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். பேசாம கொண்டு போய் உன் வீட்டில் விட்டுவிட்டு வந்துருவேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது” என்று அவளிடம் கெஞ்ச, வேறு வழி இல்லாமல் கீர்த்திகா பேசாமல் கதவை சாற்றி விட்டு அமர்ந்தால்.

காரை ஸ்டார்ட் செய்த கதிர் ஓட்டிக்கொண்டு செல்ல இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக வந்தனர். கீர்த்திகாவிற்கு அழுகை தாங்க முடியாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்க, அதை காரின் உள்ள கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே வந்தான் கதிர்.

சிறிது நேரம் சென்றவன் காரை ஒரு ஓரமாக நிறுத்த, கார் நின்றதை உணர்ந்த கீர்த்திகா கண்களை திறந்து பார்க்க, கார் ரோட்டில் ஒரு ஓரமாக நின்று இருக்க, திரும்பி டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த கதிரை பார்த்து முறைத்தாள்.

அவனை முடித்தவன் கார் கதவை திறந்து கொண்டு வெளியே செல்லலாம் என்று கதவைத் திறக்க, ஆனால் கதவு திறக்க முடியாதபடி கதிர் கதவை லாக் செய்து இருந்தான்.

“இப்ப எதுக்கு கார் கதவை லாக் பண்ணி வச்சிருக்க கதிர்? தயவு செய்து கதவை திற. என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துற நீ? நான் உனக்கு என்ன பாவம் பண்ண?” அழுது கொண்டு பேசினால் கீர்த்திகா.

அவள் அழுவதை மேலும் தாங்க முடியாத கதிர் வேகமாக தன் இருக்கையில் இருந்து கார் கதவை திறந்து வெளியே வந்தவன், பின் இருக்கைக்கு வந்து கீர்த்திகாவின் அருகில் அமர்ந்தான்.

அவன் தன் அருகில் வந்து அமர்ந்ததும் தன்னை ஏதோ செய்யத்தான் அப்படி வந்திருக்கிறான் என்று பயந்தவள் பின்னிருக்கையின் கதவிற்கு பக்கத்தில் ஒண்டி அமர்ந்தவள் கதவை திறக்க பலமுறை முயற்சி செய்ய “கீர்த்திகா ப்ளீஸ் இப்படி பண்ணி என்னை இன்சல்ட் பண்ணாத. நான் உன்னை எதுவுமே பண்ண மாட்டேன். ஏன் இப்படி நடந்துக்கிற? என்னை பார்த்து இப்படி பயந்துக்கிறேன்?” என்று கதிர் அவளை பார்த்து கேட்க. “நீ என்ன எதுவுமே பண்ண மாட்டியா? இன்னைக்கு வீட்ல வச்சு கிச்சன்ல நீ என்னை என்ன பண்ணுன? என்னை பார்த்தா உனக்கு எப்படி தோணுது? நீ வந்து என்னை கிஸ் பண்ணவும் நானும் சரின்னு சொல்லி உனக்கு இடம் கொடுக்கணுமா?

இப்படித்தான் ஒரு பொண்ணு கிட்ட நீ அத்துமீறி நடந்துக்குவியா? இப்படித்தான் உங்க அம்மா உனக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்களா? ஏன் இப்படி என்ன கஷ்டப்படுத்துற? நான் தான் அங்கிருந்து உடனே கிளம்பி வந்துடனே உன்ன பாக்க கூடாதுன்னு. உன்னை யாரு இப்ப கார் எடுத்துட்டு என் கூட வரச் சொன்னது? இப்ப எதுக்கு கார் ரோட்டோரமா நிறுத்துன? அப்படி நான் என்ன பண்ணுனேன் உனக்கு? உனக்கு ஒரு பொண்ணு கிட்ட இருந்து முத்தம் வேணும் இல்ல வேற ஏதாவது வேணும்னா எத்தனையோ பெண்கள் அதுக்காக உன் பணத்துக்காகவும் பின்னாடி சுத்திட்டு இருப்பாங்களே. அவங்க பின்னாடி போக வேண்டியது தானே? என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துற? நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்?” என்று பேசிக்கொண்டே இருந்தால் கீர்த்திகா.

அவள் இப்படி அவனை கோபப்படுத்தும் படி பேசிக் கொண்டே இருக்க “கிருத்திகா ப்ளீஸ் கொஞ்சம் பேசாம இருக்கியா?” என்று சத்தம் போட்டான் கதிர்.

அவன் இப்படி கோபமாக பேசியதும் இதுவரை பேசிக் கொண்டிருந்த கீர்த்திகா அதிர்ச்சியில் அப்படியே பேசாமல் அவனை பார்க்க.

“ஏய், உன் மனசுல என்ன தாண்டி நீ நினைச்சிட்டு இருக்க? என்ன பார்த்து பொம்பள பொறுக்கி மாதிரி தெரியுதா? ஒரு பொம்பளை கிட்ட அவ விருப்பம் இல்லாம என்ன வேணா செய்றவன் நீனு நினைச்சுட்டியா?

என் பணத்துக்காக என் பின்னாடி ஆயிரம் பொண்ணுகள் வருவாங்க. அவங்க பின்னாடி போனு சொல்றே. அது எனக்கு தெரியாதா? அதை நீ சொல்லித்தான் நான் செய்யணுமா? நான் ஏன் உன் பின்னாடி வரேன்னு கொஞ்சம் கூட உன் மனசாட்சிக்கு தெரியலையா? உன் மனசாட்சியே தொட்டு நீயே யோசிச்சு பார்த்து இருந்தா, இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் நீ என்கிட்ட பேசி இருக்க மாட்ட.

இப்படி பேசுற உன்கிட்ட நான் என் மனசு துறந்து எதை புத்தி விளக்கமா சொல்லி உனக்கு புரிய வைக்க என்னால முடியாது. அதுக்கு நான் விருப்பப்படவும் இல்லை. என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லையா உனக்கு? என்ன பார்த்தா அப்படித்தான் தெரியுதா?” என்றவன் வெறுத்தாலும் பார்வை அவள் மீது வீசியவன். “ச்சே…. உன்ன போய் நான் என் மனசுல அவ்ளோ ஒரு பெருசா நினைச்சுட்டேனே” என்று அவளை பார்க்கவும் பிடிக்காமல் காரை விட்டு வெளியே வந்தவன், வழியில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸி பிடித்து நிறுத்தியவன், அவனுக்கு கையில் பணத்தை கொடுத்து, கீர்த்தியாவின் வீட்டு அட்ரஸையும் சொல்லி, நேராக அவர் வீட்டில் அவளை இறக்கி விடும்படி சொல்லி, கீர்த்திகாவிற்கு காரை திறந்து வெளியே போ என்பது போல கையை நீட்ட, அதுவரை அவர் மீது கோபமாக இருந்த கிருத்திகாவிற்கு இப்போது ஏனோ மனது மிகவும் பாரமாக இருந்தது. அவசரப்பட்டு அவனிடம் வார்த்தைகளை கொட்டி விட்டோமோ என்று யோசித்தவள், அவனிடம் பேச “க… க… கதிர்” என்று பேசுகிற, அவள் முகத்திற்கு நேராக கையை நீட்டி “எதுவும் பேசாதே, போ” என்று வெறுப்போடு கூடியவன் அவளை திரும்பியும் பார்க்காமல் தான் வந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

கீர்த்திகாவால் அவனிடம் பேச முடியவில்லை என்று அவள் மனது மிகவும் பாரமாக இருக்க எதுவும் செய்ய முடியாமல் பேசாமல் செல்லும் அவனை கனத்த இதயத்துடன் அவன் நிறுத்தி இருந்த காரில் ஏறி அவள் வீடு நோக்கி சென்றாள்.

EPISODE 12

நான் உங்களுக்கு சிரமத்தைக் கொடுத்ததற்காக மன்னிக்கவும். கதிர் என்ற பெயரைப் பரதன் என்று மாற்றச் சொல்லி நீங்கள் கேட்கவில்லை. நான் அதைத் தவறுதலாகச் செய்துவிட்டேன். உங்கள் கோரிக்கையின்படி, நான் இப்போது கதிர் என்ற பெயரையே வைத்து, முழு கதையையும் திருத்தி அளிக்கிறேன்.

கீர்த்திகாவிடம் பேசி அவளைச் சமாதானம் செய்வதற்காக அவளை இறக்கிவிடச் சென்ற கதிர், அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் போக, அவள் நடந்துகொண்ட விதத்தால் வருத்தமடைந்தான். ஆனாலும், அவன் அவளைப் பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.

வீட்டில் துர்காவையும், ஆதியையும் அழைத்த விசாலாட்சி, “நாளைக்கு துர்கா வீட்டிற்கு மறுவீடு வர வேண்டும்” என்று சொல்லி, அவர்கள் இருவரையும் அழைத்த பிறகு, துர்காவின் பெற்றோர் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர். அவர்களைப் பார்த்த விசாலாட்சி, “ஏன் சம்மந்தி உடனே கிளம்புறீங்க? இங்கேயே இருங்களேன், இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் போகலாம்” என்று கேட்டார்.

அதற்கு துர்காவின் தந்தை, “இல்லை சம்மந்தி அம்மா. கீர்த்திகா வீட்டிற்குப் போய்ப் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அவள் தனியாக இருக்கப் பயப்படுவாள். நாங்க கிளம்புகிறோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர். துர்காவின் அப்பா ஒரு நிமிடம் நின்றவர், திரும்பி ஆதியைப் பார்த்து, “தம்பி, என் பொண்ணு வெளி உலகம் எதுவும் தெரியாமல் வளர்ந்தவள். அவளை உங்க எல்லாரையும் நம்பிதான் விட்டுட்டுப் போறேன். உங்க வசதிக்கும், தகுதிக்கும் எங்களிடம் பணம், காசு எதுவும் இல்லை என்றாலும், அவள் தன் கூட இருப்பவர்களுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்க மாட்டாள். அவர்களைப் புரிந்துகொண்டு சந்தோஷமாக வைத்துக்கொள்வாள். இவளால் யாருக்கும் கஷ்டம் வராது. அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கைகூப்பி வணங்கினார்.

அவர் அவ்வாறு செய்ததும், ஆதி வேகமாக அவர் அருகில் வந்து, “ஏன் மாமா இப்படி எல்லாம் சொல்றீங்க? துர்காவைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க. அவளை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன். இனி அவள் என் பொறுப்பு” என்றான்.

ஆதியிடம் ஒரே நாளில் இவ்வளவு மாற்றத்தைப் பார்த்த அவனின் பெற்றோருக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவன் துர்காவைப் பார்த்துக்கொள்வதாகக் கூறியதும், அவனை மாமா என்று உரிமையோடு அழைப்பதையும் பார்த்த துர்காவின் அப்பாவிற்குப் பேச வார்த்தைகளே வரவில்லை. தன் மகளைப் பிரிய மனம் இல்லாமல் இருவரும் கிளம்பினர். அவர்கள் செல்லும் வரை சிரித்த முகத்தோடு அவர்களை வழி அனுப்பி வைத்த துர்கா, அவர்கள் இருவரும் தன் கண்களில் இருந்து மறைந்ததும், அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவளுடைய கண்களில் இருந்து வெளிவந்தது. யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று வேகமாக அங்கிருந்து தன் அறைக்கு ஓடினாள்.

அவள் ஏன் அப்படி ஓடுகிறாள் என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. ஆதியின் அம்மா அவனிடம், “நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவள் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலை ஆதி. அவள் இந்த குடும்பத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். உன்னுடைய கோபத்தால் அதை இழந்துவிடாதேடா. நான் துர்காவையும் சேர்த்துதான் சொல்கிறேன். உனக்கு விருப்பம் இல்லாமல் இந்தக் கல்யாணம் நடந்திருந்தாலும், நீ நன்றாக யோசித்துப் பார்த்தால், உன்னைச் சுற்றி இருப்பவர்களுடைய அருமை உனக்குத் தெரியும்” என்றார்.

“அவள் அழுதுகொண்டே மேலே போயிருக்கிறாள். நாம யாரும் அவள் அழுவதைப் பார்க்கக் கூடாது என்றுதான் அவள் ரூமிற்குப் போனாள். நீ அவளுக்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவளைக் கஷ்டப்படுத்தாமல் பார்த்துக்கொள், சரியா?” என்றவர், “ஏங்க, வாங்க போகலாம்” என்று இருவரும் கிளம்பினர். அப்போது ஆதியின் அப்பா, “இன்றிலிருந்து உன் வாழ்க்கை உன் கையில் ஆதி. இன்னும் பத்து நாள் கழித்து நீ அலுவலகம் வந்தால் போதும். இவங்க இருவரும் அலுவலகத்தைப் பார்த்துக்கொள்வார்கள். நீ கொஞ்சம் துர்கா கூட நேரம் செலவழித்து அவளைப் புரிந்துகொள்ள டைம் எடுத்துக்கோ” என்றவர், கதியையும், விக்கியையும் வரச்சொல்லிவிட்டு கிளம்பினர்.

விக்கியும் கதிரும் ஆதியிடம் சொல்லிவிட்டு துர்காவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பினர். அனைவரும் கிளம்பிவிட, ஆதி மட்டுமே ஹாலில் நின்றிருந்தான்.

“எனக்குத் தெரியாத துர்காவா…? கல்லூரியிலிருந்து அவள் என்னுடன் தான் இருக்கிறாள். அவளைப் புரிந்துகொள்ளச் சொல்லி என்கிட்ட எல்லாரும் சொல்லிட்டுப் போறாங்க” என்று நினைத்தவன், வேலை ஆட்களைக் கிளம்பச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

உள்ளே சென்று பார்க்க, விளக்குகள் எதுவும் போடாமல் அறை முழுவதும் இருட்டாக இருந்தது. உள்ளே வந்தவன், லைட்டை ஆன் செய்துவிட்டு முதலில் துர்காவைத்தான் தேடினான்.

அவள் படுக்கையில் படுத்து அழுதுகொண்டிருந்தாள். வெளிச்சம் வரவும் வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள், ஆதியைப் பார்த்து, “நான் போய் அத்தை, மாமாவுக்கு எதுவும் வேணுமான்னு கேட்டுட்டு வரேன்” என்று அவன் முகத்தைப் பார்க்காமல் அங்கிருந்து எழுந்து செல்ல, “அவங்க கிளம்பிட்டாங்க” என்றான் ஆதி.

அவன் கூறியதும் அப்படியே நின்றாள். அவனைத் திரும்பிப் பார்க்க, ஆதி அவளிடம் தகவலைச் சொல்லிவிட்டு அவள் என்ன செய்கிறாள் என்று கூடப் பார்க்காமல் குளியலறைக்குள் சென்றுவிட்டான்.

அவன் தன்னைப் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, ஏன் அழுகிறாய் என்று ஒரு ஆறுதலுக்குக்கூட ஆதி அவளிடம் கேட்கவில்லை என்று நினைத்த அவளின் மனம் ஏனோ மேலும் வலிக்க, அடக்கி வைத்த கண்ணீர் மறுபடியும் வெளிப்பட, சென்று படுக்கையில் பொத்தென விழுந்தவள் அழுதுகொண்டே உறங்கிப்போனாள்.

குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தவன், துர்கா கட்டிலில் மீண்டும் படுத்திருந்ததைப் பார்த்தான். அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவள் உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அவள் அருகில் சென்று அவளைப் பார்த்தான். கண்களில் கண்ணீர் வழிந்து காய்ந்துவிட்ட தடம் அவள் கன்னத்தில் இருக்க, அவள் கண் இமைகளில் ஒரு துளி கண்ணீர் காயாமல் ஒட்டிக்கொண்டு இருந்தது.

அதை தன் ஒற்றை விரலால் தொட்டு எடுத்தவன், தன் விரல்களில் இருந்த அவள் கண்ணீர்த் துளியைப் பார்க்க, ஏனோ அவனுக்கு வலித்தது. பின் அவள் அருகில் அமர்ந்து சிறிது நேரம் என்ன நினைத்தானோ, அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

தூக்கத்தில் புரண்டு படுத்த துர்காவின் கைகள் கட்டிலில் எதையோ தேடுவதுபோல அலைபாய்ந்தன. “என்ன தேடுகிறாள்?” என்று ஆதி பார்க்க, அவள் சட்டென அவன் தொடையில் கைவைக்க, ஆதிக்கு ‘பக்கென்று’ ஆனது.

அவள் தலையணை என்று நினைத்து அவன் போட்டிருந்த நைட் பேண்ட்டைப் பிடித்து இழுக்க, அது வரவில்லை என்று நினைத்தவள், தூக்கத்திலேயே எக்கி அவன் தொடையில் கைபோட்டு, தலையணை போல அதில் தன் தலையை வைத்து கட்டிக்கொண்டு படுத்தாள்.

இதை எதிர்பார்க்காத ஆதி, என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்க்க, துர்கா நன்கு வசதியாக அவன் மடியில் படுத்து உறங்கி இருந்தாள். ஆதிக்கு அவளைத் தன்னிடம் இருந்து விலக்க முடியாமல் தர்மசங்கடமாக உணர்ந்தான்.

பின் மெல்ல அவள் முகத்தைத் தன் மடியில் இருந்து விளக்கி, ஒரு தலையணையை எடுத்து அவள் தலைக்குக் கொடுத்து படுக்க வைத்துவிட்டு எழ, அவன் தொடையில் ஏதோ ஈரம் இருக்க, “என்ன?” என்று பார்த்தான். துர்கா படுத்திருந்த இடத்தில் ஈரம் இருக்க, “தூக்கத்தில் அசுத்தப்படுத்தி இருப்பாள் போல” என்று நினைத்திடும்போது, அவளைப் பார்க்க, அவள் தன் வாயில் வழியும் எச்சிலைத் துடைத்துக்கொண்டு புரண்டு படுக்க, அவள் வாயில் இருந்த எச்சில் தான் அவன் மடியில் வந்திருக்கிறது என்று பார்த்தவன், தன் முகத்தைச் சுழித்துவிட்டு, “துர்கா…” என்று அவளைப் பார்த்துக் கத்தினான். அது அவள் காதிலேயே விழாமல் அவள் நன்கு தூங்கிக்கொண்டிருக்க, “இவளை…” என்று கோபம்கொண்டவன், சென்று தன் உடையை மாற்றிக்கொண்டு வந்து படுத்தான்.

படுத்து வெகுநேரம் ஆகியும் தூக்கம் வராமல் தவிக்க, புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். இது போதாதென்று துர்கா வேறு தூக்கத்தில் அவன் மேல் கையையும், காலையும் தூக்கிப் போடுவதும், அதை அவன் விலக்கி விடுவதுமாகத் தொடர, ஒரு கட்டத்தில் எழுந்து சென்று அந்த அறையை விட்டு வெளியே சென்று தன் படிப்பு அறையில் படுத்துவிட்டான்.

விக்கியும் கதிரும் காலையில் அலுவலகம் செல்ல, இருவரும் அலுவலகத்திற்குள் நுழையும்போதே ஒரே சத்தமாக இருந்தது. என்னவென்று பார்க்க, அங்கே அவர்களுக்கு முன் வந்து அங்கிருக்கும் ஊழியர்களை அதிகாரம் செய்துகொண்டிருந்தாள் சங்கவி.

அலுவலகத்தின் நடுநாயகமாக நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்துகொண்டு, அங்கிருந்த மேலாளரை அழைத்து, அவளுடைய திட்ட சம்பந்தமான அனைத்து கோப்புகளும் அவளுடைய கேபினுக்குக் கொண்டு வரச் சொல்லி அதிகாரம் செய்தாள்.

அந்த மேலாளர் எதுவும் பேசாமல் அவளையே பார்க்க, “என்ன, நான் சொன்னது உன் காதில் விழவில்லையா? போ… போய் நான் சொன்ன கோப்புகள் எல்லாம் எடுத்துட்டு வா…” என்று கேட்டாள்.

அவர் அவள் அருகில் வந்து, “மேடம், அதெல்லாம் ஆதி சார் பார்த்துட்டு இருக்கிற திட்டக் கோப்புகள். அவர் சம்மதம் இல்லாமல் யாருக்கும் காட்டக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்” என்று அந்த மேலாளர் சொல்லி வாய் மூடவில்லை. அவரை ‘பளார்’ என்று அறைந்துவிட்டு, “இந்தத் திட்டத்தில் எங்கள் நிறுவனமும் தான் வேலை செய்துகொண்டிருக்கிறது. அது எப்படி நீ நான் கேட்டு முடியாது என்று சொல்லலாம்?” என்று அவனை மீண்டும் அறையக் கையை ஓங்க, ஓங்கிய அவள் கைகளைப் ஒரு கரம் பிடித்து அவளை ‘பளார்’ என்று அறைந்தது.

அறை விழுந்த வேகத்தில் சங்கவி ஒரு சுற்று சுற்றி நாற்காலியில் போய் விழுந்தாள். தன்னை அறைந்தது யார் என்று நிமிர்ந்து பார்க்க, அங்கே விக்கி நின்றுகொண்டிருந்தான்.

அவளை முறைத்துக்கொண்டு நின்றிருந்தவனைப் பார்த்து சங்கவிக்கு ஒரு நொடி பயத்தில் அவனையே பார்த்தவள், பின் தன் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஏய் யூ… எவ்வளவு தைரியம் இருந்தால் இந்தச் சங்கவி மேலேயே கை வைத்திருப்பாய்?” என்று அவன் முன் கை நீட்டிப் பேசினாள்.

“நீ எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க அலுவலகத்திற்கு வந்து எங்க ஊழியர் மேலேயே கைவைப்பாய்?” என்று கூறி மறுபடியும் அவள் கன்னத்தில் அறைந்தான். “உனக்கு உன்னுடைய திட்ட சம்பந்தமாக என்ன வேண்டும் என்றாலும் என்னையோ அல்லது கதிரையோதான் கேட்க வேண்டும். எல்லாரிடமும் கேட்கணும் என்று இங்கு சுற்றிக்கொண்டிருந்தால் நடப்பதே வேறு, புரியுதா? போறது ஒழுங்காக உன் கேபினுக்குப் போ…” என்று அவளை மிரட்ட, அவன் பேச்சில் அரண்டுபோனவள் வேகமாகத் தன் அறைக்குச் சென்றாள்; இல்லை, இல்லை ஓடினாள்.

அவள் சென்றதும், அதே கோபத்தோடு தன் அறைக்கு விக்கி செல்ல, அவன் பின்னே வந்த கதிர் உள்ளே வந்ததும், விக்கியைக் கட்டி அணைத்து, “சூப்பர் டா விக்கி” என்று கூறிச் சிரித்தான்.

தன்னைக் கட்டி இருந்த கதிரை விலக்கியவன், அதுவரை முகத்தை இறுக்கமாக வைத்திருந்த விக்கி, கதிரைப் பார்த்துச் சிரிக்க, கதிரும் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்க, இருவரும் ‘ஹை ஃபை’ அடித்துக்கொண்டனர்.

அலுவலகத்திற்குள் நுழைந்த இருவரும், சங்கவி “தாட் பூட்” என்று கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள், “இவளை…” என்று கதிர் அவளை அடிக்கப்போக, அவன் கையைப் பிடித்து இழுத்த விக்கி, “ஒரு நிமிஷம் இருடா. இப்ப நீ போய் அவள் மேல் கை வைத்தாய் என்றால், அவங்க அண்ணனை வேண்டாம்னு சொன்னதுக்காகத்தான் மனசில் வைத்துக்கொண்டு நீ அவளை அடிக்கிறாய் என்று சொல்லி அவள் உன் மேல் பழியைப் போட்டுவிடுவாள். பேசாமல் இரு, அவள் என்ன செய்கிறாள் என்றுதான் பார்ப்போம்” என்று கூற, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘பளார்’ என்று ஒரு அறை கேட்க, இவர்கள் திரும்பிப் பார்க்க, சங்கவி அவர்கள் மேலாளரை அடித்திருந்தாள்.

அதன் பிறகு விக்கிக்கும் கோபம் வந்துவிட, “இவளை…” என்று சொன்னவன், “இப்போ இவளை எல்லார் முன்னாடியும் எப்படி அவளைப் பாவிக்கணுமோ, அதே மாதிரி நான் ட்ரீட் பண்ணப் போறேன். இன்னைக்கு நைட் எனக்கு நீ பார்ட்டி வைக்கிற, டீலா?” என்று கேட்டான் விக்கி.

“டீல்டா! நீ செய் முதல்ல. அவளை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தினால் தான் எனக்குக் கொஞ்சமாவது மனசு ஆறும்” என்று கூறிய கதிர், “நீ அவளை என்ன செஞ்சாலும் நான் வந்து உன்னைத் தடுக்க மாட்டேன். ‘என்ன?’ என்று கேட்க மாட்டேன்” என்று கேட்டான். கதிரிடம், “ஓகே, டீல். இன்னைக்கு நைட் ட்ரீட்டுக்கு ரெடியாயிரு” என்று சொல்லிவிட்டுச் சென்றுதான் விக்கி அவளை ‘லெப்ட், ரைட்’ என்று வெளுத்து வாங்கி இருந்தான்.

“இனிமேல் அந்தச் சங்கவி, அலுவலகத்துக்குள்ள நம்ம ஊழியர்களைப் பார்த்து ‘யார், யார்?’ என்று அதிகாரம் பண்ணணும் அல்லது வேற ஏதாவது பேசணும்னு வாயைத் திறக்குறதுக்கு முன்னாடி நான் அவளுக்குக் கொடுத்த அறைதான் அவளுக்கு ஞாபகம் வரும். பேச வாய் திறந்த உடனே இந்த விக்கிதான் ஞாபகத்துக்கு வரணும்” என்று சொன்னான் விக்கி.

“கல்யாண மேடையில அத்தனை பேரும் முன்னாடி அவள் ஆதியை வேண்டாம்னு சொன்னப்ப ஆதியோட முகத்தை நீ பார்த்திருக்கணுமே. அவன் முகம் எப்படி துடிச்சுப்போயிருச்சு தெரியுமா? அவ்வளவு ஆசையாக முதன்முதலில் தான் நேசித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ங்கிற ஒரு சந்தோஷத்துல அவன் எப்படி இருந்தான் தெரியுமா? அத்தனையும் இவள் பாழாக்கிவிட்டாள். இவள் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாள்” என்றான் விக்கி.

“சரி விடு விக்கி, எல்லாம் சரியாகிவிடும். அண்ணன் தான் இப்போ துர்காவை கல்யாணம் பண்ணி இருக்கானே. நம்ம துர்கா அவனை நல்லா பார்த்துக்கொள்வாள். இவளைவிட அவதான் அண்ணனுக்கு நல்ல சாய்ஸ். நீ வேண்டுமானால் பார், அண்ணனும் துர்காவைப் புரிந்துகொண்டு அவளுடன் கண்டிப்பா வாழ்வான் என்று நான் நம்புகிறேன்” என்றான் கதிர்.

“சரிடா, நானும் அதைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன். நம்ம துர்காவை அவன் புரிஞ்சுக்கணும். துர்கா எத்தனை வருஷமா அவன் மேல் உயிரையே வச்சிருக்கா. அவள் எந்த நிலைமையில் இருந்தாலும் அவளுக்கு அவனைப் பிடிக்கும். அது உன் அண்ணனுக்கு அப்போதான் அவனுக்கு துர்காவைப் பற்றித் தெரிந்து கொண்டு அவளுடன் சந்தோஷமாக இருப்பான்” என்று விக்கி சொல்ல, “ஆமா விக்கி, அதுக்கு முதல்ல அண்ணாவுக்குத் துர்காவைப் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை நம்ம இரண்டு பேரும் இருந்தா ஏற்படுத்தி கொடுக்கணும். அவன்கிட்ட போய் நேரடியாக ‘துர்கா இப்படி, அப்படி’ என்று நம்ம என்ன அவளைப் பத்தி நல்லதா சொன்னாலும் அவன் நம்ப மாட்டான். அவனாக அதை உணர்ந்தால் தான் அவனுக்கு அது புரியும்” என்றான் கதிர்.

“வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை நம்ம பயன்படுத்திக்கொள்வோம், சரியா?” என்று கூறிவிட்டுத் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

EPISODE – 13

காலையில் தாமதமாகக் கண்விழித்த துர்கா, படுக்கையறையில் ஆதி இல்லை என்பதைக் கண்டாள். அவன் எழுந்து சென்றிருப்பான் என நினைத்து மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தவள், நேராகக் குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு, வெறும் துண்டுடன் வெளியே வந்தாள். கண்ணாடி முன் நின்றவள், தன் செல்போனை எடுத்து அவளுக்குப் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டு, அதன் தாளத்திற்கு ஏற்ப ஆடிக்கொண்டே மற்றொரு துண்டால் தன் உடலைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

பாடல் பாடிக்கொண்டே, கிரீமை எடுத்துத் தன் உடலில் தடவிவிட்டு, அதன் மூடியை மூடப்போக, அது தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க அவள் குனியவும், சரியாக அதே நேரத்தில் ஆதி அவர்கள் படுக்கையறையின் கதவைத் திறந்து வெளியே வந்தான். வெறும் துண்டுடன் குனிந்திருந்த துர்காவைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு, மூடியை அவசரமாகக் கையில் எடுத்துக்கொண்டு அவள் எழப்போக, அப்போது சரியாக அவள் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து கீழே விழுந்தது. “கடவுளே…!” என்று அவள் அலற, அவளைப் பிறந்த மேனியில் பார்த்த ஆதிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே உறைந்துபோய், அவளை மேலிருந்து கீழாக முழுவதுமாகப் பார்த்து அப்படியே நின்றான். அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த துர்கா, தன்னை மறைத்துக்கொள்ள அவசரமாகக் கீழே இருந்த துண்டை எடுத்துக்கட்டிவிட்டு நகரப் போனாள். அவள் குளித்துவிட்டு ஈரத்தோடு வந்திருந்ததால், தரை வழுக்கி அவள் விழப்போக, அதைப் பார்த்த ஆதி பதறிக்கொண்டு ஓடி வந்து அவளைப் பிடிக்கப்போனான். அவளைப் பிடிப்பதாக நினைத்து அவளுடைய துண்டை இழுக்க, அது அவன் கையோடு வந்துவிட, அவள் தரையில் ‘பொத்தென’ விழுந்தாள்.

தரையில் ஆடையில்லாமல் விழுந்தவள், “ஆ…!”வென அலறித் தன் உடலில் கட்டியிருந்த துண்டு அவன் கையில் இருப்பதைக் கண்டு, குனிந்து தன் உடலைப் பார்த்தாள். ஆதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தவன், பின் துர்கா தன்னைப் பார்க்கிறாள் என்று கண்களை இருக்க மூடிக்கொண்டான்.

அவன் கண்களை மூடவும், அவன் கையில் இருந்த துண்டைப் பிடுங்கிக்கொண்டு எழுந்து, அதை அவசரமாகத் தன் உடலில் சுற்றிக்கொண்டு குளியலறைக்குள் ஓடினாள். குளியலறைக் கதவு திறந்து மூடும் சத்தம் கேட்கவும், கண்களைத் திறந்த ஆதி, அறையை ஒருமுறை நோட்டமிட, அங்கே துர்கா இல்லாமல் போனதும், “அப்பாடா” என்று அவள் வருவதற்குள் தயாராகி கீழே வந்துவிட்டான்.

கீழே, துர்காவைப் பிறந்த மேனியில் பார்த்த ஆதிக்கு அந்த அதிர்ச்சி இன்னும் போகாமலேயே இருந்தது. அவள் நினைவாக இருந்தவனுக்கு, அவளை அப்படிப் பார்த்தபோது அவளுடைய மார்பில் ஒரு மச்சம் இருந்ததையும் பார்த்துவிட்டான். அந்த மச்சம் ஏனோ அவனை வசீகரித்துவிட்டது.

துர்கா மேல் எந்த ஈர்ப்பும் இல்லாதிருந்த ஆதிக்கு, அவளை இந்தக் கோலத்தில் பார்த்ததினால் மட்டுமல்லாமல், அந்த மச்சத்தினால் அவள் மேல் ஈர்ப்பு வந்தது. அதை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. அவன் கண்ணுக்குள் அவள் மார்பில் பார்த்த மச்சம் வந்துகொண்டே இருக்க, ஆதி தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தலையை வேகமாக உலுக்கிக்கொண்டான். “ச்சே… ஆதி, என்ன உன் புத்தி இப்படிப் போகுது? ஒரு மச்சத்தைப் பார்த்ததற்காக அவ பின்னாடி உன் மனசு போகுது. இல்லை, அவள் உன்னோட ஃபிரெண்ட். கொஞ்சம் முன்னாடி நடந்தது ஒரு விபத்து மாதிரிதான் நடந்திருக்கு. இதைப்போய் பெரிதுபடுத்தி அதையே நீ நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

அப்படி இனிமேல் துர்காவைப் பற்றித் தவறான எண்ணம் தன் மனதில் தோன்றக் கூடாது என்று தனக்குத்தானே உறுதியாகக் கட்டளையிட்டுக் கொண்டவன், படிகளில் கொலுசு சத்தம் கேட்க ஆவலுடன் தன் முகத்தைத் திருப்பி அவள் வந்ததைப் பார்த்தான். அவள் மஞ்சள் வண்ணச் சேலையில் எளிமையாக உடை உடுத்தி, அழகாகப் படிகளில் இறங்கி வருவதைப் பார்த்தவன் மனது, எப்போதோ அவள் பின்னால் சென்றுவிட்டதை உணரவில்லை.

தன் மனதிற்குப் போட்ட கடிவாளங்கள் எல்லாம் காற்றோடு பறந்துபோனதை உணராத அவன், அவளையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்க, படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த துர்கா, ஆதி ஹாலில் அமர்ந்துகொண்டு தன்னை இமைக்காமல் பார்ப்பதைக் கண்டாள். சற்று முன் அவன் படுக்கை அறையில் தன்னைப் பார்த்ததை நினைத்துதான் அவன் இப்படிப் பார்க்கிறான் என நினைக்கும்போதே, துர்காவின் முகம் வெட்கத்தில் இரத்தமெனச் சிவந்தது. வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்தவள், அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி இமைக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, ஆதியையும் துர்காவையும் வீட்டில் வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டு, தங்களுக்குள் ஏதோ கூறி சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டனர். ஹாலில் இப்போது துர்காவும், ஆதியும் மட்டுமே இருந்தனர். துர்கா மெது மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி ஆதிக்கு அருகில் வர, ஆதிக்கு இதயத் துடிப்பு வேகமாக இருந்தது. அவன் முகம் லேசாக வியர்த்துவிட்டது. தன் முகத்தில் இருந்த வியர்வையைத் துடைக்கக் கைகளை உயர்த்தித் துடைத்துக்கொண்டவன் அப்போதும் துர்காவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த துர்கா, “ஆதி” என்று மெதுவாக அழைத்தாள். அவள் கூப்பிட்டது அவனுக்குக் கேட்டால் தானே! தன் முன்னே அழகுச் சிலையாக நின்றிருந்த துர்காவை மேலிருந்து கீழாகச் சுழலவிட்டான். இலேசாகப் பின்னலிட்டு, அதில் மல்லிகை பூ வைத்து, வகுட்டின் நடுவே சிறிதாக ஒரு குங்குமம் வைத்திருந்ததுதான் அவள் திருமணமான பெண் என்பதை காட்டிக் கொடுத்தது. அது அவளின் அழகுக்கு மேலும் மெருகூட்டியது. அவளை இதுவரை இப்படி அவன் பார்த்ததே இல்லை. அலுவலகத்தில் எப்போதும் வாரிச் சீவி கொண்டை போட்டுக் கொண்டிருந்த தலையையும், எப்போதும் பேண்ட், சட்டை அணிந்தும்தான் அலுவலகம் வருவாள். தங்களை அழகுபடுத்திக்கொள்ள மெனக்கெட்டுச் செலவு செய்வதும், ஆடைகளைக் கவர்ச்சியாக உடுத்துவதிலும் எப்போதுமே துர்காவுக்கு உடன்பாடு கிடையாது.

அப்படியே தினம் தினம் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், இவள் தன்னைத் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்து சேலையிலேயே பார்க்க, அன்றுவிட இன்று ஏனோ அவன் கண்ணுக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தாள் துர்கா. பதிந்து சிறிய தலையில் பூவை சூடி, சிறிய ஜிமிக்கி ஒன்றை அணிந்து, இரு புருவங்களுக்கு இடையே மெரூன் கலர் வட்டப் பொட்டு ஒன்றை வைத்து, ஒப்பனையே இல்லாத அவள் முகத்திலிருந்து அப்படியே கண்களில் இருந்து கீழே இறங்கி, அவள் ரோஸ் நிறத்தில் இருந்த இரு கன்னங்களையும் பார்த்தவன், அதைத் தொட்டு கிள்ள வேண்டும் போலத் தோன்ற, தன் கைகளை அடக்கிக்கொண்டு அப்படியே கீழே வந்து அவள் செவ்விதழ்களைப் பார்த்தான். அந்த உதட்டிலிருந்து ஏதோ சத்தம் மட்டுமே வருவதும், அது அசைவதும் மட்டுமே அவனுக்குப் புரிந்தது. ஆனால் அது எதுவுமே ஆதியின் காதில் விழவே இல்லை. அவளின் உதடு வளைவுகளைக் கவனித்தவன், ஒரு கைதேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியம் போல அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அந்த உதடு லேசாக ஈரம் இருக்க, அதைப் பார்த்ததும் ஏனோ அவனுக்கு அதைச் சுவைக்க வேண்டும்போல தோன்ற, தன் எச்சில் விழுங்கிக்கொண்டு பார்த்திருக்க, அவன் முகத்திற்கு நேராகக் கைகளை அசைத்து, “ஆதி… ஆதி…” என்று துர்கா சத்தமிட, அப்போதுதான் நினைவு வந்தவனாகத் தலையை உலுக்கி அவளைப் பார்த்தான். அவள் “என்ன ஆதி, அப்படி என்ன பார்க்கிறாய்?” என்று கேட்க, அவள் உதட்டை ஒருமுறை பார்த்துவிட்டு, கஷ்டப்பட்டு அவளிடம் இருந்து பார்வையை விலக்கி, வேறு பக்கம் திருப்பியவன், “ஒன்னும் இல்லை. என்ன வேணும், சொல்” என்றான் கடுகடுப்பாக. அப்படிப் பேசியதும் துர்காவுக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது.

“ஆதி, சாப்பிட்டியா? அதைக் கேட்கத்தான் நான் வந்தேன்” என்று தயங்கிக்கொண்டே அவனிடம் பேசினாள். அவனின் கோபம் எப்படி இருக்கும் என்று துர்காவுக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். ஆதலால் அவன் மனநிலை சரி இல்லை என நினைத்து, அவனிடம் எதுவும் பேசாமல் இதைக் மட்டும் கேட்டாள்.

“நான் சாப்பிட்டேன். நீயும் போய் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பு” என்றான். அவன் தன்னையும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பச் சொன்னதைக் கேட்டுச் சந்தோஷமாக, “2 நிமிடத்தில் ஆதி. நான் சீக்கிரம் சாப்பிட்டு வந்துவிடுகிறேன்” என்று வேகமாகச் சாப்பிடச் சென்றாள்.

சீக்கிரமே சாப்பிட்டு வந்த துர்கா அவனிடம் வந்து நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன், “போலாமா?” என்று கேட்க அவளும் “சரி” என்று தலையாட்டிவிட்டுச் சிறுபிள்ளை போல அவன் பின்னே சென்றாள். இருவரும் காரில் ஏற, “டிரைவர், துர்கா வீட்டுக்கு போங்க” என்று ஆதி கூறினான். துர்காவுக்கு மனதுக்குள் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சொல்லாமலேயே தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆதியைப் பார்த்துச் சந்தோஷப்பட்டாள்.

துர்காவின் வீட்டில் அவள் திருமணம் ஆன பின்பு முதல் முறையாக மறுவீடு வருகிறாள் என்பதால், ஏற்பாடுகள் எல்லாம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது.

தன் அறையில் கதிரைப் பற்றிய நினைவிலேயே இருந்த கீர்த்திகா, தன் அறையை விட்டு காலையிலிருந்து வெளியே வராததால், அவளுடைய அம்மா வெளியில் இருந்து, “கீர்த்திகா, என்னடி? நானும் பார்த்துட்டு இருக்கேன். உங்க அக்கா இன்னைக்கு மாப்பிள்ளை உடன் வீட்டுக்கு வரப்போறா. கொஞ்சம் வெளிய வந்து அம்மாவுக்கு ஏதாவது ஒத்தாசையா வேலை பார்க்கணும்னு இல்லாம, ரூம்க்குள்ளயே நேற்றுல இருந்து அடைந்து கிடக்கிற. அப்படி என்னதாண்டி ஆச்சு உனக்கு?” என்று கேட்டார் அவள் அம்மா.

கீர்த்திகாவின் அம்மா அவளைச் சத்தம் போடவும், அறையை விட்டு வெளியே வந்தவள், “அம்மா, நான் தயாராகி வரத்தான் நேரம் ஆயிடுச்சு. வேற எல்லாம் ஒண்ணும் இல்லை. இதோ நான் வந்துட்டேன் பாருங்க. என்ன பண்ணணும்னு சொல்லுங்க, நான் செய்றேன்” என்று கூறிவிட்டு அவர் அருகில் வர, அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “தயாராகியாச்சா? சரி, போ அந்தச் சாமி படத்துக்கு பூவெல்லாம் போட்டு விளக்கு பற்றவை” என்றார். “சரிமா” என்று கூறிவிட்டு அவள் பூஜை அறைக்குச் சென்றாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விசாலாட்சி அவர் கணவருடன், கதிரும் விக்கியும் வந்துவிட, உள்ளே வந்தவர்களை வரவேற்ற துர்காவின் அம்மா, “மாப்பிள்ளையும் இன்னும் வரல சம்மந்தி” என்று கேட்க, “அவங்க வந்துட்டு இருக்காங்க சம்மந்தி அம்மா. ஒரு அஞ்சு நிமிடத்தில் வந்துடுவாங்க” என்று கூறிவிட்டு விசாலாட்சி உள்ளே செல்ல, பின்னாலேயே துர்காவும் ஆதியும் வந்துவிட்டனர்.

இருவரையும் வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டு, இருவருக்கும் துர்காவின் அம்மா ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, இருவரையும் உள்ளே அழைத்தார். ஆரத்தித் தட்டை கீர்த்திகாவின் கையில் கொடுத்து, வெளியே சென்று ஊற்றிவிட்டு வருமாறு அவளை அனுப்பி வைத்துவிட்டார்.

அவள் வந்ததிலிருந்து கதிரையே பார்த்தாள், ஆனால் கதிர் அவள் இருக்கும் இடமே திரும்பிப் பார்க்கவில்லை. சோகமாக அவள் அம்மாவின் கையில் இருந்து தட்டை வாங்கிக்கொண்டு போய் வெளியில் ஊற்றிவிட்டு உள்ளே வந்தவள், அனைவருக்கும் பழச்சாறு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். அனைவருக்கும் பழச்சாறு கொடுத்துவிட்டு, கதிரிடம் சென்று கையை நீட்ட, கதிர் அவள் இருக்கும் இடமே பார்க்காமல் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்து விக்கி, “டேய், என்னடா பண்ணிட்டு இருக்க? ஒழுங்கா பழச்சாறை எடுடா” என்று அவனை அதட்ட, அவளைப் பார்க்காமலேயே பழச்சாறைக் கையில் எடுத்தவன், அதை குடிக்காமல் அப்படியே கையில் வைத்திருந்தான்.

அனைவரும் பேசிக்கொண்டிருக்க, துர்கா நேராக சமையலறைக்குச் சென்றாள். அங்கே பாத்திரத்தில் வைத்திருந்த உணவு வகைகளை எல்லாம் திறந்து பார்த்து, “அம்மா, என்னம்மா செய்து வச்சிருக்க?” என்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். “எல்லாம் உனக்கும், மாப்பிள்ளைக்கும் பிடிச்சது தாண்டி. நான் நேத்தே சம்மந்தி அம்மா கிட்ட மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தான் வந்திருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சதுதான் சமைச்சு வச்சிருக்கேன். கொஞ்ச நேரம் பொறு, எல்லாரும் சாப்பிடலாம்” என்று கூறினார் துர்காவின் அம்மா.

அனைவரும் சாப்பிடும் நேரம் வர, அனைவரையும் சாப்பிட அழைத்தார். அனைவருக்கும் உணவு பரிமாற, அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, கீர்த்திகாவும் அவள் அம்மாவும் ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாற, கீர்த்திகா வேண்டும் என்றே கதிரின் இலையில் உணவுகளை அதிகமாக வைக்க, எதுவுமே சொல்லாமல் கதிர் அமைதியாக இருந்தான்.

துர்காவும் ஆதியும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, கீர்த்திகா ஆதியைப் பார்த்து, “மாமா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க சாப்பிடக்கூடாது. முதல்ல எங்க அக்காவுக்கு ஊட்டி விடுங்க, அதுக்கப்புறம் நீங்க சாப்பிடுங்க” என்றாள். அவள் கூறியதும் ஆதி அமைதியாக இருக்க, விசாலாட்சி ஆதியிடம், “ஆதி, உன் இலையிலிருந்து ஒரு ஸ்வீட் எடுத்து துர்காவுக்குக் கொஞ்சம் ஊட்டிவிடுப்பா. துர்கா, நீயும் அவனுக்கு ஊட்டிவிடுமா” என்றார்.

ஆதி அமைதியாகவே இருக்க, துர்கா தன் இலையிலிருந்து ஒரு ஸ்வீட்டை எடுத்து ஆதியின் வாய் முன் நீட்ட, அவன் வாயைத் திறக்காமல் அவளையே பார்த்தான். “ப்ளீஸ்” என்று பார்வையால் கெஞ்சி, சுற்றி இருப்பவர்களுக்காக என்று மெதுவாகக் கூற, ஆதி மெதுவாக ஸ்வீட்டின் ஒரு ஓரத்தில் இலேசாகக் கடித்தான். அவன் சாப்பிட்டுவிட்டு, துர்கா வாய் அருகே ஸ்வீட்டை நீட்ட, துர்காவும் சிரித்துக்கொண்டு அவன் கொடுத்த ஸ்வீட்டை விரும்பி உண்பது போல நடித்து, ஸ்வீட்டை வாயில் வைத்து கடிக்க, அவளுடைய உதடு அவன் விரலில் படவும், அதன் பூ போன்ற மென்மையான இதழ்களின் ஈரத்தை உணர்ந்த ஆதி, அவள் உண்ணும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பூ போன்ற அவள் இதழைச் சுவைக்க ஆசைகொண்டான். தன்னை மறந்து துர்காவைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரும் விக்கியும், “ஆதி, உன் பொண்டாட்டியோட அழகை ரசித்தது போதும். முதல்ல சாப்பிடு. எங்களுக்கெல்லாம் பசிக்குது. நீ சாப்பிட்டால் தான் நாங்க சாப்பிடணும்னு வேற எங்களைச் சாப்பிட விடாமல் பிடிச்சு வச்சிருக்காங்க” என்று விக்கி கூறினான்.

அவன் ரசித்ததை விக்கி கண்டுபிடித்துவிட்டான் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாதவாறு, திரும்பி அவனை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் சாப்பிடத் தொடங்கினான் ஆதி. அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மற்ற அனைவரும் கிளம்ப, ஆதியும் துர்காவும் அங்கே இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருமாறு விசாலாட்சி கூற, வேறு வழி இல்லாமல் ஆதி துர்கா வீட்டில் இருப்பதற்குச் சம்மதித்தான்.

அனைவரும் கிளம்பும்போது துர்கா வீட்டிலிருந்து எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப, கதிர் மட்டும் அனைவரிடமும் சொன்னவன் கீர்த்தியைக் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டான். “உரிமையாவது தன்னை ஒருமுறை பார்த்துவிட மாட்டானா?” என்று ஏங்கிய கீர்த்திக்கு, அவனின் இந்த ஒதுக்கல் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

அவர்கள் சென்று சிறிது நேரத்தில் ஆதியின் அலுவலகத்திலிருந்து அவனுடைய மேலாளர் குமார் போன் செய்திருந்தார். அதை அட்டென்ட் செய்த ஆதி, “சொல்லு குமார், என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“சார், நீங்க கொஞ்சம் ஆபீஸுக்கு வர முடியுமா? இங்கே சங்கவி மேடத்தால் ஒரு பெரிய பிரச்சனை” என்றார். “வாட்? சங்கவியா? அவள் எதுக்கு அங்க வந்தாள்?” என்று கேட்டான் ஆதி. காலையில் அவள் அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து, கதிர் மற்றும் விக்கிக்கும் அவளுக்கும் நடந்தது வரை ஒன்று விடாமல் கூறிய மேலாளர், அவள் இப்போது அலுவலகத்தில் ரகளை செய்துகொண்டிருப்பதாகக் கூறினார். அவர்கள் இருவருக்கும் கால் செய்ய, அவர்கள் எடுக்காததால் தனக்குக் கால் செய்ததாக மேலாளர் கூற, “சரி, நான் இன்னும் 5 நிமிடத்தில் கிளம்பி அங்கு வரேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

போனை வைத்துவிட்டுத் தன் எதிரே ஹாலில் கீர்த்திகாவுடன் அமர்ந்திருந்த துர்காவைப் பார்த்தான். அவன் யாருடன் பேசுகிறான் என்பது புரிந்துகொண்டு அமர்ந்திருந்த துர்கா, அவன் தன்னைப் பார்க்கவும், “சரி, போயிட்டுச் சீக்கிரம் வந்துடுங்க. அம்மாவும், அப்பாவும் கேட்பாங்க” என்று தயங்கித் தயங்கி அவனிடம் பேசினாள்.

தான் என்னவென்று கூறாமலேயே தான் பேசியதை வைத்தே தன்னைப் புரிந்து கொண்ட துர்காவை நினைத்து, “இப்படி ஒரு ஃபிரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன்” என்று நினைத்தவனின் இன்னொரு மனம் அவன் தலையில் தட்டி, “டேய் முட்டாள், அவள் உன்னோட ஃபிரெண்ட் இல்லைடா. இப்போ அவள் நீ தொட்டுத் தாலி கட்டிய மனைவி” என்றது. “அப்படியானால் நீ என்ன நினைக்க வேண்டும்? இப்படி உன்னைப் புரிந்து கொண்ட ஒருத்தி உனக்கு மனைவியாக வந்திருப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று மனசாட்சி கூறியது. அது சரிதானே என்று யோசித்தவன், முதல் முறையாக துர்காவைத் தன் மனைவியாகப் பார்த்தான்.

சங்கவியை சந்தித்த பிறகு தனக்கு மனைவியே வேண்டாம் என்று அவன் முடிவெடுக்கப் போவது அவனுக்கே தெரியாமல் அவளை ரசித்தான். அவளிடமும், கீர்த்திகாவிடமும் கூறிவிட்டு கிளம்பி அலுவலகம் வர, அங்கே உள்ளே நுழைந்தவன் அதிர்ச்சியாகி அப்படியே நின்றான்.

EPISODE – 14

துர்காவிடம் சொல்லிவிட்டு அலுவலகம் சென்ற ஆதி, தன் காரைவிட்டு கீழே இறங்கியதும் அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்த அவனுடைய மேலாளர் குமார், ஆதி காரிலிருந்து இறங்கியதும் நேராக அவனிடம் ஓடிவந்தார். “சார்…” என்று ஏதோ கூற வர, அவரைப் பார்த்து, “எல்லாம் எனக்குத் தெரியும்” என்று அவரிடம் சொல்லிவிட்டு, நேராகத் தன் கேபினுக்குச் சென்றான் ஆதி.

கேபின் கதவைத் திறந்து உள்ளே சென்றவன், தன் அறையில் இருந்த முக்கியமான கோப்புகள் அனைத்தும் சிதறிக் கிடப்பதைக் கண்டான். அவற்றைச் சிதறடித்துவிட்டு, பேய்போல் அவன் அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த சங்கவியைப் பார்த்ததும் ஆதிக்கு ஆத்திரமாக வந்தது.

தன் மேலாளரை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, அறைக்குள் வந்து கதவைச் சாத்திவிட்டு நேராகச் சங்கவியிடம் வந்தவன், “உன் மனசில் நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? திறந்திருக்கும் வீட்டுக்குள் ஏதோ ஒன்று வந்து நுழைந்ததுபோல், என்னுடைய அலுவலகத்திற்குள், அதுவும் என் கேபினில் வந்து இத்தனை அட்டகாசம் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

அவன் தன்னை நாய் என்று சொல்லாமல் சொன்னதும், “ஆதி!” என்று கத்திக்கொண்டு எழுந்தவள், “என்ன சொன்னாய்? நான் எதுக்கு உன் அலுவலகத்திற்கு வந்தேன் என்று கேட்டாயா? எங்கள் நிறுவனத்துடனான திட்டத்தைத்தான் உங்களுடன் சேர்ந்து நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். நான் காலையில் இருந்து அதுசம்பந்தமான கோப்புகள், விவரங்கள் வேண்டும் என்று கேட்டால், உன் மேலாளர் உட்பட, அத்தனை பேரும், கதிர், விக்கி என்று யாருமே எடுத்துத்தர மாட்டேன்கிறார்கள். அதனால்தான் நானே எடுத்துக்கொள்ளலாம் என்று உன் அறைக்குள் வந்து தேடினால், இங்கேயும் இல்லை. அப்படி எதற்காக அதை ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று சங்கவி கேட்டாள்.

அவளை முறைத்துவிட்டுத் தன் நாற்காலியில் போய் அமர்ந்தவன், அதில் இருந்த லாக்கரைத் திறந்து, அவள் கேட்ட கோப்பை எடுத்து அவளிடம் தூக்கிப் போட்டான். அதை கையில் எடுத்துக்கொண்டு, “சரி, இதை முதலிலேயே கொடுத்திருந்தால் இவ்வளவு சேதாரம் வந்திருக்காது” என்று கூறிவிட்டு எழுந்த சங்கவி வெளியே செல்ல, அவளைச் சொடுக்கிட்டுக் கூப்பிட்ட ஆதி, “இனிமேல் இந்த அலுவலகத்திற்கு வரும் வேலையை வைத்துக்கொள்ளாதே. உன்னை யார் உள்ளே விட்டது? முதலில் நீ எதற்காக இங்கு வந்து, இப்பொழுது இந்தக் கோப்பிற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருக்கிறாய்? உங்களுடைய நிறுவனத்தின் விவரங்கள் எல்லாமே நாங்கள் உன் அப்பா கூடத்தான் வைத்திருக்கிறோம். உனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும், நான் ஏன் அந்தக் கோப்பை உன்னிடம் கொடுத்தேன் தெரியுமா? ‘அதையும் இதையும் காரணம் சொல்லிக்கொண்டு என் நிறுவனத்திற்குள் திரும்பவும் வரக்கூடாது’ என்று சொல்லிவிட்டுதான் இதைக் கொடுத்தேன்” என்று கூறினான்.

அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த சங்கவி, “என்ன சொன்னாய்? எனக்கும் இந்த நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லையா? என் அப்பா அவருடைய நிறுவனம் மற்றும் இந்த வணிகத் திட்டத்தின் எல்லாப் பொறுப்பையும் என் பெயரில் எழுதி வைத்துவிட்டார். என் அப்பா அவர் நிறுவன விஷயமாவும், இந்தத் திட்ட விஷயமாவும் உன்னிடம் எதுவுமே பேச மாட்டார். இந்த நிறுவனத்திற்கும் வர மாட்டார். எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் தான் கேட்டுச் செய்ய வேண்டும்” என்றாள் சங்கவி.

அவள் கூறியதைக் கேட்டதும் ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “என்ன?” என்று கேட்க, “ஏன், உன் அப்பா உன்னிடம் எதுவுமே சொல்லவில்லையா? என் அப்பா, உன் அப்பாவிடம் போன் செய்து நேற்று எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். இந்தத் திட்டம் முடியும் வரைக்கும் நான் தான் இந்தத் திட்டத்தின் எல்லா விவரங்களையும் கவனிக்கப் போகிறேன். இனிமேல் நீ எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட கேட்டுட்டு செய். உனக்கு நீயாக முடிவு எடுக்காதே” என்றாள் சங்கவி.

அதைக் கேட்டதும் கடுப்பான ஆதி, “என்ன ஓ… நீதான் இந்த வணிகத் திட்டத்தைக் கவனிக்கப் போகிறாயா?” என்று கூறியவன், தன் செல்போனை எடுத்து, தன் தந்தைக்கு அழைப்புச் செய்ய, “அப்பா, சங்கவி கூறிய விஷயத்தைச் சொல்லி, இதெல்லாம் உண்மையா?” என்று கேட்டான். “ஆமாம் ஆதி. நான்தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு கதிர் கிட்டயும், விக்கி கிட்டயும் சொல்லியிருந்தேன். நீயே ஏற்கனவே பயங்கர அழுத்தத்தில் கல்யாணம் பண்ணியிருக்கிறாய். உன்னை எதுவும் சொல்லி டென்ஷன் பண்ண வேண்டாம்னுதான் பார்த்தேன். ஆனா உனக்கு எப்படி இந்தச் செய்தி தெரிஞ்சுச்சு?” என்று கேட்டார். “அதை நீங்க கதிர் கிட்டயும், விக்கி கிட்டேயும் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. இனிமேல் என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் என்கிட்ட கேட்காம முடிவு எடுக்க மாட்டீங்க நீங்க. ஆனா இந்த விஷயத்தை மட்டும் ஏன் என்கிட்ட கேட்காமலே முடிவெடுத்தீங்க?” என்று கேட்டான் ஆதி.

அவன் அப்படி கேட்டதும் அவனிடம் பதில் கூற முடியாமல் வெங்கடாசலம், “என்னை மன்னிச்சுடு ஆதி. நான் கேட்காம முடிவெடுத்தது தப்புதான். இருந்தாலும் சில விஷயங்களை உன்னிடம் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் சொல்லலை. எப்படி உனக்குத் தெரியத்தானே போகுது? பத்து நாள் கழித்து அலுவலகம் வந்துருவேன்னு சொல்லிட்டு நான் உன்கிட்ட இதைச் சொல்லாமல் விட்டுட்டேன். எதுவும் நினைத்துக்காதே” என்று அவர் வருத்தப்பட, அவர் குரலில் அவர் வருத்தப்படுவது தெரியவும், ஆதி அதற்கு மேல் எதுவும் கேட்காமல், “சரி பரவாயில்லை அப்பா” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

திரும்பிச் சங்கவியைப் பார்க்க, அவள் ஏளனமாக அவனைப் பார்த்துச் சிரிக்க, “என்ன ஆதி, உங்க வீட்ல எல்லாமே உன்னைக் கேட்டுதானே முடிவு எடுப்பாங்க? இந்த விஷயம் மட்டும் எப்படி உனக்குத் தெரியாம போயிடுச்சு?” என்று கிண்டல் செய்தவள், அவன் அருகில் வந்து, “அப்புறம் எப்படி இருக்கு உன் புதுப் பொண்டாட்டி?” என்று கேட்டாள். அவள் அப்படி கேட்டதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ஆதியைப் பார்த்து, “பைத்தியக்காரி அவள். உன்னைப்போய் கல்யாணம் பண்ணியிருக்கிறாள் பார்த்தேன். இப்படி முகம் முழுக்கத் தடிப்புத் தடிப்பாக, எத்தனை புண்ணும், கொப்புளமும் கூட இருக்கிற உன் முகத்தைப் பார்த்து எப்படித்தான் அவள் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாளோ தெரியல” என்று கூறிவிட்டு அருவருப்பாக இருப்பதுபோல தன் முகத்தை வைத்துக்கொண்டு, “சரி, அவள் எப்படியோ கல்யாணம் பண்ணிட்டாள். உன் சொத்துக்காகவும், உனக்கு இருக்கிற பணம், அந்தஸ்துக்காகவும் எப்படியோ உன்னையும் உங்க அம்மாவையும் மயக்கிக் கல்யாணம் பண்ணிட்டாள். அவள் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் இருந்திருந்தால், உங்க அம்மா அவளிடம், ‘ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’ அப்படின்னு கேட்ட உடனே அவள் எப்படி உடனே ‘சரி’ன்னு சொல்லுவாள்? எல்லாம் திட்டம் தானே பைத்தியக்காரி” என்று திரும்பவும் கூறியவள், “என்னவோ உன்னை பிடிச்சு, உன்னைக் காதலிக்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு இருந்து, கல்யாணம் பண்ணணும்னு நினைத்தாயே… இப்ப என்ன ஆச்சு? கடைசியில உன்னுடைய பணத்துக்காக உன்னைக் கல்யாணம் பண்ணித் தானே இப்போ உனக்கு மனைவியா வந்திருக்கிறாள்? இங்கே பாரு ஆதி, நீ வேணா நினைக்காதே. பணம், காசுக்கு ஆசைப்படாமல் மனசு மட்டும் பார்த்து கல்யாணம் பண்ற பெண்கள் இருக்காங்க. நீ இதெல்லாம் நம்பி உன் நேரத்தை ரொம்ப வீணடித்துவிட்டாய். அப்படி எல்லாம் யாருமே இந்தக் காலத்தில் கிடையாது. பணம், காசு என்பதுதான் இங்கு முக்கியமா இருக்கு. பாசம், காதல் அப்படிங்கறது ஒண்ணுமே கிடையாது. நீ இன்னுமும் அதை நம்பிட்டு இருந்தேன்னா, உன்னைப் போல ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது” என்று கூறிவிட்டு, “முட்டாள் ஆதி” என்று சத்தமாகச் சிரித்தவள், அவளிடம் திரும்பப் பேச முடியாமல் அமைதியாக நின்ற ஆதியை விட்டு வெளியே சென்றாள்.

அவள் துர்காவைப் பற்றிக் கூறியதும் முதலில் ஏனோ அவனுக்குக் கோபம் வந்தது. அவளைப் பற்றிப் பேச அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதுபோல, ‘தனக்கு உரிமையானவள் துர்கா’ என்ற எண்ணம் அவன் மனதில் சிறிது தோன்றியது. அதன் பிறகு அவள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் உண்மைதான் என்பதுபோல அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தன்னிடம் இருக்கும் அந்தஸ்துக்கும், பணத்திற்காகவும்தான் துர்கா தன்னைத் திருமணம் செய்திருக்கிறாள். அதனால்தான், என் அம்மா அவளிடம் ஒருமுறை கேட்டதும் ‘சரி’ என்று திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டாள். இத்தனை வருடம் என்னுடன் இருக்கிறாள், அனைத்து விஷயமும் அவளுக்குத் தெரியும். அதனால்தான் ‘வேறு வழியே இல்லை. எனக்குத் திருமணமே ஆகாது’ என்று நினைத்துவிட்டாள். அப்படி நினைத்துதான் என்னைக் கல்யாணம் செய்துகொண்டாள் என்று தனக்குத்தானே நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி.

“இன்றைக்கு என்ன ஆனாலும் சரி, துர்கா ஊருக்குத்தான் அவள் என் மனைவி. ஆனால் அவள் எப்போதும் என் மனதிற்குள்ளும், என் வாழ்க்கைக்குள்ளும் நுழையவே முடியாது” என்று மனதில் உறுதியாக முடிவெடுத்துவிட்டான். அவனுக்குத்தான் தெரியவில்லை, அவள் கழுத்தில் இவன் எப்போது தாலி கட்டினானோ, அன்றே இவன் வாழ்க்கைக்குள் அவள் வந்துவிட்டாள் என்று. ஆனால் அவன் மனதிற்குள் வரத் துர்கா அச்சாரம் போட்டுவிட்டாள், அதுதான் அவனுக்குத் தெரியவில்லை. அவன் மனதில் அவள் இருக்கிறாள் என்று அவன் உணரும்போது, அவன் மனநிலை எந்த நிலையில் இருக்கும் என்று அவனே அறியாதது.

கதிரும், விக்கியும் இரவு விருந்திற்காக ஒரு பிரபல ஹோட்டலுக்குச் சென்றிருந்தனர். அங்குச் சென்று கதிரின் பிற நண்பர்களையும் வரச் சொல்லி இருந்தனர். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விருந்து அமோகமாக ஆரம்பிக்க, கதிர் மட்டும் சோகத்தில் அமர்ந்து ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

சோகத்தில் அமர்ந்தவன், நாலு ரவுண்டுக்கு மேல் ட்ரிங்க்ஸ் அருந்த, அவனை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி அவனிடம் வந்து, “டேய் கதிர், என்னடா ஆச்சு? ஏன் இன்னைக்கு இவ்வளவு சோகமா இருக்க? அந்தச் சங்கவியை நாம் தான் லெஃப்ட், ரைட் வெளுத்து வாங்கிட்டோமே, அதுக்கப்புறமும் ஏன் ஒரு மாதிரி சோர்வாகவே இருக்க?” என்று கேட்டான். “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை விக்கி. நீ ட்ரிங்க்ஸ் சாப்பிடு” என்று கூறினான். நண்பர்களைப் பார்த்துவிட்டு, “டேய், வாங்கடா, நாம் போய் விருந்தை அனுபவிக்கலாம்” என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு, நடனம் நடந்துகொண்டிருந்த ஓர் இடத்திற்குச் சென்று நடனமாடிக்கொண்டிருந்தார்கள். விக்கி வேகமாக எழுந்து வந்தவன், கதிரின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய், ஒரு நாற்காலியில் அமர வைத்தவன், “ஒழுங்காகச் சொல்லிவிடு. ஏன் உன் முகமே சரியில்லை? என்னன்னு சொல்லப்போறியா, இல்லை நடப்பதே வேற?” என்று அவன் அவனை உரிமையாகக் கேட்க, “நான் உன்கிட்ட சொன்னா நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டியே. ஏன்டா, போதையில் விக்கியைப் பார்த்துக் கதிர், “என்னைப்பார்த்து உனக்கு எப்படித் தெரியுது? இத்தனை வருஷம் நான் உன்னுடன் இருக்கேன். உன்னையும், உன் அண்ணனையும் தவிர்த்து எனக்கு வேறு யாரும் இல்லை. யாராவது என் கழுத்தில் கத்தி வைத்து, ‘உங்க ரெண்டு பேர் பற்றிச் சொல்லு, இல்லை என்றால் கழுத்தை அறுத்துவிடுவேன்’ என்று சொன்னாலும், உங்களைப் பற்றி என் வாயில் இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியாது. நான் வெளியே விடமாட்டேன்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த கதிர், விக்கியைக் கட்டிக்கொண்டு, “மச்சான்” என்று கூறி அழுதான். “டேய், என்னடா ஆச்சு? இவ்வளவு நேரம் சோகமாக இருந்தேன்னு பார்த்தேன், இப்ப எதுக்குடா அழுக ஆரம்பிக்கிற?” என்று கேட்க, “என்ன ஒருத்தி அடிச்சுட்டாள் மச்சான்” என்று கூறினான் கதிர்.

“என்னடா சொல்ற? உன்னை ஒருத்தி அடிச்சிட்டாளா? யாருடா? அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் ஃபிரெண்ட் மேல் கையை வைத்திருப்பா? யாருடா மச்சான் அவள்?” என்று விக்கியும் சற்றுப் போதையில் பேச, “அவள் வேறு யாருமில்லடா. நம்ம துர்கா இருக்காளே? ஆமா, நம்ம துர்கா… அவளுக்கென்னடா? என்னை அடித்தது நம்ம துர்காவோட தங்கச்சி கீ…தான்டா…” என்று கூறிவிட்டு மீண்டும் ஓவென அழுதான்.

“என்னடா சொல்ற? கீ…யா?” என்று புரியாமல் விக்கி கேட்க, “ஆமாடா. கீர்த்திகாவைத்தான் நான் சுருக்கி ‘கீ’ என்று சொன்னேன்” என்று கூறிவிட்டு மறுபடியும் குடிக்க ஆரம்பித்தான் கதிர்.

“அடேய், அவ உன்னை அடிச்சான்னு அழுகிறாய். ஆனா அவளுக்குச் செல்லப் பெயர் வேற வெச்சுச் சொல்றாய். என்னடா நடக்குது இங்க?” என்று புரியாமல் விக்கி கேட்க, “ஆமாடா, அவளை நான் காதலிக்கிறேண்டா… மச்சான்” என்று கூறிவிட்டு மறுபடியும் ஒரு கிளாஸ் விஸ்கியைக் குடித்தவன், “நீயே சொல்லுடா மச்சான். நான் காதலிக்கிற பொண்ணுக்கு முத்தம் கொடுக்கிறது தப்பா?” என்று கதிர் கேட்க, “ம்ஹும், நாம் காதலிக்கிற பொண்ணுக்கு முத்தம் கொடுத்தது தப்பில்லை” என்றான்.

“அதுதான் நான் என்ன. என் காதலினு சொல்லு உரிமை கட்டி அணைச்சு முத்தம் கொடுத்தேன். அதுவும் உதட்டில் இலேசா… இம்மாம் தண்டு கொடுத்தேன். என்னவோ நான் உதட்டு முத்தம் பண்ணுன மாதிரி கோவிச்சுட்டு என்னை அறைஞ்சுட்டாள்டா மச்சான்” என்று மறுபடியும் அழுக ஆரம்பிக்க, “டேய், அழாதேடா…” என்று அவனைச் சமாதானம் செய்த விக்கி, “ஏண்டா, இருவரும் காதலிக்கிறீங்க. அவளுக்கு முத்தம் கொடுத்தால் பிடிக்குமா, பிடிக்காதான்னு தெரிஞ்சுட்டு கொடுக்க மாட்டியா?” என்று விக்கி கேட்க, “அதுதான் மச்சான். அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு நினைச்சிட்டு நான் அவளுக்கு முத்தம் கொடுத்துட்டேண்டா. அதுக்கு அவள் என்னை அடிச்சது மட்டும் இல்லாம, என்னை ‘பெண்களுக்குப் பின்னாடி சுத்துபவன்’னு சொல்லிட்டு அவமானப்படுத்திட்டாள்டா” என்று கதிர் கூறினான்.

அதுவரை இருவரும் காதலிக்கிறார்கள் என்று நினைத்த விக்கிக்கு அதிர்ச்சியாக, “என்னடா சொல்ற? நீ மட்டும் தான் கீர்த்தியைக் காதலிக்கிறியா? அவள் உன்னைக் காதலிக்கலையா?” என்று கேட்க, “ஆமாம்டா” என்று தலையை போதையில் ஆட்டினான்.

“அடப்பாவி! அங்கே என்னடான்னா ஒருத்தன், தன் பக்கத்திலேயே அவனை ரொம்ப வருடமாக காதலித்துக்கொண்டிருக்கிற பெண்ணைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளாமல் அவளுக்குத் தாலியைக் கட்டியிருக்கிறான். இங்கே என்னடான்னா அவன் தம்பி, தன் அண்ணன் பொண்டாட்டியோட தங்கச்சிக்கு, அவள் இவனைக் காதலிக்கிறாளா, இல்லையான்னு எதுவுமே தெரியாமல் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான். அதுவும் உதட்டில் முத்தம்… என்னமோ போங்கடா…” என்று தலையைத் தொங்கப்போட்டவன், “எனக்கு மட்டும் ஏன்டா எதுவுமே சரியாக மாட்டேங்குது? நான் மட்டும் தனியாகச் சுத்திக்கொண்டு இருக்கேன். இவனுங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கானுங்க” என்று புலம்பிக்கொண்டிருக்க, அவன் தோளில் ஒரு கை பலமாக அவனை அடிக்க, “யாருடா அது? என்னை அடிக்கிறது?” என்று கூறி கோபத்தில் நிமிர்ந்து பார்க்க, அவன் எதிரே ஆதி கோபமாக நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் “ஆத்தி…! இவன் எப்படி இங்கே வந்தான்? இவனை விட்டுட்டு நாங்க இங்க குடிச்சுட்டு இருக்கிறது தெரிஞ்சிருச்சே. இனி என்ன பண்ணப் போறானோ?” என்று ஜெர்க் ஆன விக்கி, ஆதியைப் பார்த்து, “டேய் ஆதி, வாடா. எப்படி இருக்க? ஆமா, நீ துர்கா வீட்லதானே இருந்த? இங்க எங்கே?” என்று கேட்க, “ஏன், நான் துர்கா வீட்டில் இருந்தால் அங்கேதான் இருக்கணுமா? இங்கே வரக்கூடாதா?” என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டான் ஆதி. “நான் அலுவலகத்திலிருந்து வரேன்” என்று கூற, “என்னடா சொல்ற? அலுவலகம் போனாயா நீ? அங்கே எதுக்குடா போன?” என்று கேட்க, “உங்களை” என்று கூறி, இப்போது போதையில் இருக்கும் இவர்களிடம் எதுவும் பேசி பிரயோஜனம் இல்லை என்று அமர்ந்தவன், “ஏண்டா, என்கிட்ட சொல்லாம நீங்க ரெண்டு பேரும் மட்டும் இங்க வந்தீங்க?” என்று கேட்டான். “இல்லைடா, உனக்கு இப்பதான் கல்யாணம் ஆகியிருக்கு. நீ உன் மனைவியுடன் அவர்கள் வீட்டில் இருக்கிறாய். அதுவும் அப்படி. நாங்க விருந்து பண்ணப் போறோம்னு சொல்லி உன்னை அங்கிருந்து கூப்பிட்டு வந்தா நல்லா இருக்காது இல்லையா? அதனாலதான் நானும் கதிர் மட்டும் வந்து உன்கிட்ட எதுவுமே சொல்லாமல் வந்தோம்” என்று கூறினான் விக்கி.

“ஓஹோ, எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு அப்படின்னா என்னைக் கழட்டிவிட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் மட்டும் இந்த வேலையைப் பார்க்க வந்திருவீங்களா? எப்போது குடிக்கப் போனாலும் நாம் மூன்று பேரும் ஒன்றாகப் போவோம்னுதானேடா? ஆனா என்னை விட்டுட்டு இப்போ நீங்க மட்டும் வந்து குடிக்கிறது நல்லா இருக்கா?” என்று கூறிவிட்டு, “வேறு” என்று கூறி அவனுக்குத் தேவையான ட்ரிங்ஸை ஆர்டர் செய்தான்.

என்ன நண்பர்களே, பார்க்கிறீர்கள்? “நம்ம ஹீரோ ரொம்ப நல்லவர்”னு நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்தான் நண்பர்களே. ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவது மட்டும்தான். அதுவும் தினமும் சாப்பிட மாட்டார். ஆனால் ட்ரிங்க்ஸ் சாப்பிட ஆரம்பித்தால், அவரைத் தடுப்பது ரொம்பக் கஷ்டம். குடிகாரனாகவே மாறிவிடுவார் நம்ம ஆதி. அவரிடம் இந்த பழக்கம் நம்ம விக்கிக்கும் கதிக்கும் தவிர வேறு யாருக்குமே தெரியாது. ஏன், இத்தனை வருடமாக உடன் இருக்கிற நம்ம துர்காவுக்குக்கூடத் தெரியாது. அவ்வளவு ரகசியமாகப் பராமரித்து வருகிறார்கள்.

ஆதிக்கு ஆர்டர் பண்ணிய ட்ரிங்க்ஸ் வந்ததும் குடிக்க ஆரம்பித்தான். அவன் நிற்காமல் கோபமாகக் குடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த விக்கி, “டேய், அளவா குடிடா. நீ இருக்கிறது உன் மாமனார் வீட்டில். வந்த அன்றைக்கு குடித்துவிட்டு அங்க போனன்னு வை, அவங்க எல்லாம் உன்னைப்பற்றி என்ன நினைப்பாங்க தெரியுமா? ‘தெரியாமல் குடிகாரப் பையனுக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டோமே’ன்னு யோசிக்க மாட்டாங்களா? போதும்டா, அளவாகக் குடி” என்று கூறி அவன் கையில் இருந்த கிளாசை வாங்கி கீழே வைத்தவன், “இப்ப எதுக்குடா நீ இப்படி நான்-ஸ்டாப்பாகக் குடிக்கிறாய்? நீ சந்தோஷமாக இருக்கணும் இல்லைன்னா ரொம்பக் கோபமாக இருந்தா தானே குடிப்பாய்? எதுக்கு இப்படி குடிக்கிறாய்? சந்தோஷமாக இருக்கியா, இல்ல கோபமாக இருக்கியா?” என்று கேட்டான். “உன்னைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரியலை. அப்போ கண்டிப்பா கோபமாகத்தான் இருப்பாய். அப்படி என்ன ஆச்சு, நீ கோபப்படுற அளவுக்கு?” என்று கேட்டான் விக்கி.

“என்ன ஆச்சா? ஏன்டா, எங்கப்பா தான் என்கிட்ட இருந்து அந்தச் சங்கவியைப் பற்றி மறைத்துவிட்டார் என்றால், நீங்கள் இருவரும் என்கிட்ட எதுவுமே சொல்லாம விட்டுட்டீங்க. அவள் காலையிலிருந்து நம்ம அலுவலகத்தில் வந்துட்டு எல்லாரையும் ரொம்பப் படுத்திட்டு இருந்தாளாமே? அவள் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள், அதுவும் நம்ம பார்ட்னராக வந்திருக்கிறாள் அப்படின்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல. எப்படி எனக்குத் தெரியாமலே போகப்போகுது இந்த விஷயம்? பத்து நாள் கழித்து சொன்னா என்ன, இப்பவே சொன்னா என்ன? நான் அலுவலகத்திற்குப் போனால் அவள் அவ்வளவு தெனாவெட்டாக என்கிட்டயே அப்படிப் பேசிட்டு போறாள்” என்று ஆதி பேசினான்.

“என்னடா, நீ அலுவலகத்திற்கு அதுக்குத்தான் போனாயா? சங்கவியைப் பார்த்தாயா? என்னடா சொன்னாள் அவள்?” என்று விக்கி கேட்க, ஆதி சங்கவியிடம் அலுவலகத்தில் நடந்த உரையாடல் அனைத்தையும் சொன்னான். ஆனால், திருமணத்தைப் பற்றியும் துர்காவைப் பற்றியும் மட்டும் உஷாராக யாரிடமும் சொல்லவில்லை. துர்காவைப் பற்றிச் சங்கவி கூறியது சரியா தவறா என்று எண்ணத்திலேயே இன்னும் மனதில் குழப்பத்தோடு இருந்தான் ஆதி. அதனால் தனக்குத் தெளிவில்லாத போது அதை எதற்கு வெளியில் சொல்ல வேண்டும் என்று அமைதியாக இருந்துவிட்டான்.

அவன் கூறியதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட கதிர், “சரி விடுடா, அவளைப் பற்றித் தெரியும் நம்மளுக்கு முதலிலேயே. அவள் அந்த ஆட்டம் ஆடுவாள். இப்ப சொல்லவா வேணும்? இந்தத் திட்டம் முடியும் வரைக்கும் பல்லைக் கடிச்சுட்டு கொஞ்சம் பொறுமையாக இரு. அதுவும் நம்ம அப்பா வாக்கு கொடுத்துட்டாரங்கறதுக்காகத்தான். இல்லன்னா அவளை நானே ஒரு வழி பண்ணி இருப்பேன்” என்றான் விக்கி.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அரைப் போதையில் கேட்டுக் கொண்டிருந்த கதிர், “டேய், அவளை அப்படியேவாடா விட்டீங்க? அவள் கன்னத்தில் விக்கி அறைந்த மாதிரி நீயும் நாலு அறை விட்டுக் கொள்ளலாம் இல்ல? அவளை வெளியே தட்டி அனுப்பி இருக்கலாம் இல்ல ஆதி?” என்று குளறிக்கொண்டு கேட்டான் கதிர்.

“சரி விடுடா மச்சான், பார்த்துக்கலாம். அவள் திரும்பவும் நம்மளிடம் மாட்டாமலா போய்விடுவாள்? அன்றைக்கு இருக்கிறது அவளுக்கு. திரும்பவும் ஏதோ ஒரு விஷயம் கிடைக்கட்டும். அதைச் சாக்காக வைத்து அவளை நான் என்ன பாடு படுத்துகிறேன் என்று பார். சரி வாங்க நம்ம கிளம்பலாம். இரவு ரொம்பத் தாமதமாகப் போகிறது” என்று விக்கி கூற, “டேய், நீங்க எல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நான் இப்பதான் வந்திருக்கேன். இப்பவே கிளம்பி என்னடா பண்ணப் போறீங்க? இருங்க போலாம்” என்று ஆதி சொல்ல, “டேய், நாங்க எப்ப வேணா வீட்டுக்குப் போலாம்டா. ஆனா நீ இப்போ புதிதாகக் கல்யாணம் ஆனவன். அதுவும் உன் மாமனார் வீட்டில் இருக்கே. மறுவீட்டுக்கு போயிருக்க. அப்படிப் போற இடத்துல, நீ வந்த அன்னைக்கு ராத்திரி வெளியில் போய் குடிச்சுட்டு வந்து அவங்க வீட்டுக்கு போறேன்னு வைத்துக்கொள், அங்கே என்ன நினைப்பாங்க? நீ குடித்த வரைக்கும் போதும். இதுக்கு மேல குடிச்சா உனக்கு போதை ஆகிடும். இதை ஏன் எப்படியாவது சமாளிச்சுட்டு உள்ளே போய்க்கலாம். பேசாம கிளம்பி வா” என்று வலுக்கட்டாயமாக ஆதியை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

விக்கியும், கதிரும் ஒரு காரிலும், தங்கள் டிரைவரை ஆதியின் காருக்கு அனுப்பிவிட்டு, அவனைப் பத்திரமாக அவர்கள் வீட்டில் சேர்க்கும்படி அனுப்பிவிட்டு, இருவரும் கிளம்பினர்.

ஆதி துர்காவின் வீட்டிற்கு வரும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. ஹாலில் துர்காவும், கீர்த்திகாவும் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, அவளுடைய பெற்றோர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். லேசாகத் தள்ளாடியபடி நடந்து வந்த ஆதி, ஹாலில் அமர்ந்திருந்த துர்காவையும், கீர்த்தியையும் பார்த்தவன் எதுவும் கூறாமல் அமைதியாகவே வர, அவனைப் பார்த்ததுமே துர்காவுக்கு அவன் சரியாக இல்லை என்பது மட்டும் புரிந்தது. உடனே அவள், “கீர்த்தி, நீ உள்ளே போய் படு. அவர் வந்துவிட்டார் பார். நான் அவருக்குச் சாப்பிட வைத்துவிட்டு, நான் தூங்குகிறேன்” என்று கூற, “இவ்வளவு நேரம் ‘என்ன, போகாதேடி, தூங்கப் போகாதே. எனக்குத் தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு. கூட இருந்து தூக்கம் வந்தால் என்னைப் பிடித்து உட்கார வைத்துவிட்டு, இப்பொழுது மாமா வந்ததும் என்னைக் கழட்டி விடுகிறாயா?’ என்ஜாய்!” என்று கூறிச் சிரித்துக்கொண்டே கீர்த்தி எழுந்து அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.

ஆதி லேசாகத் தள்ளாடியபடி துர்காவிடம் வர, தன் பக்கத்தில் அவன் வந்ததுமே அவனிடமிருந்து ஒரு வாடை வீச, அவன் குடித்திருக்கிறான் என்பதை உணர்ந்த துர்காவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஆதி, வா ஆதி, சாப்பிடலாமா?” என்று கூறி அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கப் போக, “இல்லை வேண்டாம். நான் வெளியில் சாப்பிட்டு வந்துட்டேன். என் நண்பர்களைப் பார்க்கப் போயிருந்தேன்” என்று கூறிவிட்டு, “அறை எங்கே இருக்கு? நான் போய் அங்கே புத்துணர்ச்சி பெற வேண்டும்” என்று கூற, அவள் தன் அறையைக் காட்ட, “முன்” என்று தலையாட்டிவிட்டு, அவள் அறைக்குச் சென்றான் ஆதி.

அவன் தனக்குச் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, துர்கா அறைக்குச் சென்றதும், வாசல் கதவைச் சாத்திவிட்டு, லைட்டை அணைத்துவிட்டு, துர்கா அவன் பின்னே சென்றாள். உள்ளே வந்ததும் அவனுக்குத் தேவையான துணியையும், துண்டையும் எடுத்துக்கொடுத்து அவனைப் புத்துணர்ச்சி பெற வரச் சொல்லிவிட்டு, அவள் வந்து கட்டிலில் படுத்தவள் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டாள்.

புத்துணர்ச்சி பெற்றுவிட்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தவன், அந்த அறையைச் சுற்றிப் பார்க்க, இப்போதுதான் அவனுக்கு லேசாக நினைவு வந்ததாக, அவன் துர்கா வீட்டில் இருப்பது ஞாபகம் வந்தது. அந்த அறையில் துர்காவை அவன் கண்கள் தேடியது.

துர்கா கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருக்க, அவள் அருகில் வந்து குனிந்து அவள் முகத்தைப் பார்த்தவன், மாலையில் சங்கவி அவனிடம் கூறியதெல்லாம் நினைவுக்கு வர, அவளைப் பார்க்கப் பிடிக்காமல் தன் தலையைக் கோபத்தில் திருப்பிக்கொண்டான் ஆதி.

‘இவள் என்னுடைய பணத்திற்காகத்தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்? இவளை ஏன் நான் இப்படிப் பார்க்கணும்? நான் பார்க்க மாட்டேன். காலையில் இவள் எழுந்ததும், இந்தக் கல்யாணத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட்டுதான் என் பணத்திற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு என் அருகில் யாரும் இருக்கக் கூடாது’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

காலையில் எழுந்ததும் துர்காவிடம் பேசி இந்தக் கல்யாணத்துக்குச் சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தவன், சென்று கட்டிலின் மறுபக்கம் படுத்தவன், போதையிலும், களைப்பிலும் தூங்கிவிட்டான்.

EPISODE 15

காலை எழுந்தவுடன் முதலில் துர்காவும் பேச வேண்டும் என்று நினைத்தவன் அரைபோதையில் வந்து படுத்த ஆதி உறங்கி விட்டான்.

காலையில் கண்விழித்த ஆதி எழுந்ததும் இரவு அவன் யோசித்தது நினைவில் வர, இன்று எப்படியாவது துர்காவிடம் இதைப் பற்றி பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அழுகையில் துர்கா கையில் காபியுடன் சிரித்த முகத்தோடு அவனிடம் வந்தாள்.

தான் இரவு போதையில் இவர்கள் வீட்டிற்கு வந்தது ஆதிக்கு நினைவில் வர, அவள் முகத்தை பார்க்க தயங்கியவன் கட்டிலில் அமர்ந்திருக்க, அவன் அருகில் வந்த துர்கா அவனிடம் காபியை கொடுத்துவிட்டு “தல ரொம்ப வலிக்கும்னு நினைக்கிறேன், இந்தக் காபியைக் குடி” என்றவள் திரும்பி நடந்து செல்ல, தன்னிடம் ஏன் என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் சிரித்த முகத்தோடு தனக்கு காபி கொடுத்துச் சென்ற துர்கா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஆதி, அவளிடம் பேச மறந்து அப்படியே அமர்ந்து இருந்தான்.

காபி குடித்துவிட்டுச் சென்று ரிப்ரஸ் ஆகி வந்த ஆதி, அவர்கள் அறையை விட்டு வெளியே வரவும், கதவைத் திறந்து கொண்டு துர்கா உள்ளே வரவும் சரியாக இருக்க, இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர்.

மோதிய வேகத்தில் துர்கா நிலை தடுமாறி விழப்போக, அவளை இடுப்போடு சேர்த்து இழுத்துப் பிடித்து தன்னிடம் நெருக்கி நிறுத்தி வைத்தான் ஆதி.

மிக அருகில் துர்காவை பார்க்கையில், அவளின் வாசம் அவன் நாசியில் ஏற, உள்ளுக்குள் ஏதோ செய்தது ஆதிக்கு. கண்ணிமைக்காமல் துர்காவின் முகத்தையே பார்த்தவன், துர்காவின் கண்கள் பட படவென பட்டாம்பூச்சி போல் துடிப்பதைப் பார்க்க, ஏனோ அந்தக் கண்ணுக்குள் காலம் பூராவும் சிக்குண்டு இருக்க வேண்டும் என்பது போல ஆதி மனதில் தோன்றியது.

கண்களில் இருந்து அப்படியே பார்வை கீழே இறங்கியவன், அவள் உதட்டை பார்க்கவும், அன்று அவன் வீட்டில் பெட்ரூமில் துர்கா உதட்டில் எதேச்சையாக முத்தம் வைத்தது நினைவில் வர, அந்த இதழைப் பற்றி சுவைக்க வேண்டும் என்று ஆதிக்கு தோன்ற, அந்த நினைவைக் கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன், தன் கையில் இருந்து அவளை விலக்கி நிற்க வைத்தவன், தள்ளி நின்று “என்ன” என்பது போல அவளைப் பார்த்தான்.

“சாப்பிட அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, அதனாலதான் வந்தேன் ஆதி. சாரி, அவசரத்துல நீ வெளிய வர்றதப் பார்க்காம உன் மேல மோதிட்டேன்” என்று அவள் பாவமாக கூற, “சரி பரவாயில்லை துர்கா” என்று கூறியவன் சிறிது தயங்கியவன் பின் “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் துர்கா” என்றான்.

அவன் அவளிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த துர்கா “என்ன ஆதி, சொல்லு” என்றாள். அவளை நேருக்கு நேராக மறுபடியும் பார்க்க, அவளின் பார்வையை தவிர்க்க முடியாமல் அப்படியே நின்றவன், தான் சொல்ல வந்ததை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருக்க, துர்கா அவன் தன்னை பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்பதைப் பார்த்தவள், அவளாகவே யோசித்து “ஆதி…” என்று அழைத்தாள்.

அவள் அழைப்பில் நினைவு வர, அவளைப் பார்த்தவன் ஏதோ கூற வர, “ஆதி, நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு தெரியும் ஆதி. நானே சொல்லட்டுமா நீ என்ன நினைக்கிறாய்?” என்று துர்கா கேட்க.

‘நான் மனதில் நினைத்தது இவளுக்கு எப்படி தெரியும்? ஒருவேளை நான் நினைத்ததைதான் இவளும் நினைத்துக் கொண்டிருக்கிறாளா? இவளுக்கும் என்னோடு இருக்க விருப்பம் இல்லையா? என்னைப் போலவே பிரிந்து செல்ல நினைக்கிறார்களா?’ இப்படி ஒரு எண்ணம் என்னைப் போலவே அவளுக்கும் மனதில் இருந்தால் இந்த வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று உள்ளுக்குள் கணக்குப் போட்டவன், “சொல்லு துர்கா” என்றான் ஆதி.

“அது வந்து, அத்தையும் மாமாவும் உன்கிட்ட பத்து நாள் கழிச்சுதான் ஆபீஸ் போகணும்னு சொல்லி இருந்தாங்களே. உன்னால தினமும் ஆபீஸ் விஷயமும் ஆபீஸ் வேலையும் பார்க்காம இருக்க முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும் ஆதி. என்னைக் கல்யாணம் பண்ணிட்ட அப்படிங்கறதுக்காக நீ என் கூட இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல. இந்தப் பத்து நாள் ஒண்ணும் அவ்வளவு பெரிய மாற்றத்தை நம்மளுக்கு கொண்டுவரப் போறது இல்ல. நீ ஆபீஸ் கிளம்பறதா இருந்தா கிளம்பு ஆதி. நானும் உன் கூட ஆபீசுக்கு வரட்டுமா? நானும் வீட்ல சும்மாதான் இருக்கப் போறேன்” என்று தயங்கிக்கொண்டே அவள் வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி மெதுவாக ஆதியிடம் கேட்க.

ஆதி நினைத்தது போல துர்கா கூறாமல் ஆபீஸ் வேலை பற்றி கூறவும், ஆதிக்கு இதுவும் அவன் நினைத்ததில் ஒன்றுதான் என்று நினைத்தவன் “ம்ம்ம்… சரி துர்கா. நானும் உன்கிட்ட இதைத்தான் சொல்லணும்னு நினைச்சேன். அப்போ நீயும் என் கூட ஆபீசுக்கு வரியா?” என்று கேட்டவன், அவள் வருவாள் என்று தெரிந்தும் அவள் பதிலுக்காக காத்திருக்க, “5 மினிட்ஸ் ஆதி, நான் ரெடி ஆகி வந்துடறேன்” என்று அவனை கீழே அனுப்பி விட்டு வேகமாகச் சென்று ஆபீசுக்கு செல்லும் உடையை அணிந்து கொண்டு நேராக கீழே வந்தாள்.

அதுவரை ஆதியிடம் பேசிக் கொண்டிருந்த துர்கா, அப்பா துர்கா அப்படி இருந்தும் இறங்கி வர, அவளுடைய சத்தம் கேட்டு திரும்பியவர் அவளைப் பார்த்து “என்னம்மா, ஆபீஸ் போற மாதிரி கிளம்பி இருக்கே?” என்று கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் துர்காவுக்கு என்ன கூறுவது என்று புரியாமல் நிற்க, சட்டென்று ஆதி “அது ஒண்ணுமில்ல மாமா, இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு இம்பார்ட்டண்ட் மீட்டிங் இருக்கு. அந்த டீடெயில் எல்லாம் துர்காவுக்கு மட்டும் தான் தெரியும். அதனாலதான் நான் ஆபீஸ் போறப்ப அவளையும் என்கூட வர சொல்லி இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் ஆபீஸ் கிளம்பி போகணும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்” என்றான்.

“என்ன மாப்பிள்ளை, நேத்துதான் வந்தீங்க. அதுக்குள்ள ஆபீஸ் போகாட்டி என்ன? இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் போலாமே” என்றார் துர்காவின் அப்பா.

“அப்பா, இது ரொம்ப நாள் முன்னாடி ஃபிக்ஸ் பண்ண மீட்டிங் பா. இதை தள்ளி போடுறது கொஞ்சம் சிரமம். அதனாலதான் நாங்க இந்த மீட்டிங்க கண்டிப்பா போய் அட்டென்ட் பண்ணனும்னுதான் நாங்க ரெண்டு பேருமே புறப்படறோம். இல்லைன்னா விக்கி, கதிர் யாரோ ஒருத்தரை இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லி இருப்போம். இதை கண்டிப்பா இவர்தான் அட்டென்ட் பண்ணி ஆகணும்” என்றவள் “நாங்க சீக்கிரம் வந்துடுவோம் பா” என்றால் துர்கா.

“சரிங்க மாப்பிள்ளை, சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க. போயிட்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்துருங்க. என்ன புதுப் பொண்ணு கட்டிட்டு துர்கா ரொம்ப நேரம் வெளியே இருக்கக் கூடாது” என்று கூறியவர், தன் மனைவி அழைத்து காத்திருக்கும் துர்காவுக்கும் காலை உணவு எடுத்து வைக்கச் சொன்னார்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு துர்காவின் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினர். கிளம்பிய இருவரும் ஆபீஸ் செல்லும் வரை ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

ஆபீஸ் வந்ததும் ஆதி இறங்கி உள்ளே சென்று விட, அவனுக்கு முன்னால் இறங்கிய துர்கா அவன் செல்வதையே பார்த்தவள், “சரி அவன் அப்படித்தான்” என்று நினைத்துக் கொண்டு ஆபீசுக்குச் சென்று தன் கேபினுக்குச் சென்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

இவர்கள் இருவரும் வந்ததை பார்த்த விக்கியும் கதிரும் மற்றும் அவர்கள் ஆபீஸ் ஸ்டாப்பும் “கல்யாணமாகி ரெண்டு நாட்கள்தான் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் அதற்குள்ளாகவே ஆபீஸ் வேலை பார்க்க வந்துவிட்டனர். வந்தவன் தான் வந்தார்கள். அவளை தன் மனைவி என்று ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு இன்றோடுஸ் செய்யவும் இல்லை. அவரவர் சென்று அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று இவர்கள் இருவரைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

விக்கி கதிரிடம் “நேத்துதானே அம்மா இவன்கிட்ட அத்தனை சொன்னாங்க? அதே மாதிரி இன்னைக்கு ஆபீஸ் வந்திருக்காங்க. என்னதான்டா பண்றது இவனை? எல்லாம் இந்த சங்கவியால் தான் இது எல்லாம் நடந்திருக்கு. அவ மட்டும் நேத்து ஆபீஸ்ல ரகளை பண்ணாம இருந்திருந்தால் ஆதி அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு பத்து நாள் நிம்மதியாக துர்காவுடன் தற்பொழுதுப் பொழுதைக் கழித்துக் கொண்டு இருப்பான்” என்றான் கதிர்.

“வாடா இவனைப் போய் என்னன்னு கேட்டுட்டு வருவோம். மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கான்? அந்தப் பொண்ணைக் கல்யாணம் ஆன ரெண்டு நாளில் ஆபீஸ் கூட்டிட்டு வந்து வேலை வாங்கணுமா? அவ எவ்வளவு வருஷம் தான் இவன்கிட்ட வேலைக்கு இன்னும் இருப்பா? பொண்டாட்டி ஆயிட்டாலே. இனிமேல் வேலைக்கு வர வேண்டாம், வீட்ல நிம்மதியா இருன்னு ஒரு வார்த்தை சொல்லி அவளை சப்போர்ட் பண்ணி வீட்டில் இருக்க சொல்றானா பார்” என்று கதிரை இழுத்துக் கொண்டு விக்கி ஆதியின் கேபினுக்கு சென்றான்.

கதிரும் விக்கியும் உள்ளே சென்றுவிட, அதுவரை துர்காவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய ஆபீஸ் தோழிகள் வேகமாக அவள் அருகில் வந்து “என்னடி புதுப் பொண்ணு, கல்யாணமே ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள புருஷனை விட்டுட்டு இருக்க முடியுமா? அவர் கூட சேர்ந்து நீ ஆபீசுக்கு வந்துட்டியா?” என்று அவளைச் சீண்ட.

துர்கா சிரித்துக்கொண்டே “லதா என்னன்னு தெரியாம என்னை ஓட்டாதடி. உன்னை அப்புறம் நான் என்ன செய்றேன்னு பாரு” என்று கிண்டல் செய்த துர்கா, “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடி. அவர் ஆபீசுக்கு வந்தாரு. நானும் வீட்ல சும்மாதானே இருக்கேன். நானும் அவர் கூட ஆபீசுக்கு வரேன்னு சொல்லி கிளம்பி வந்துட்டேன்” என்றால் துர்கா.

“எல்லாம் ஒண்ணுதான். வேலையில்லைன்னு வீட்டில் சும்மா இருக்கியா? அவரு இருந்தா தானே உனக்கு வேலையே இருக்கும்” என்று இரண்டு அர்த்தத்தில் லதா கூற, அவர் கூறியது கேட்டு புரிந்து கொண்ட துர்காவின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட, அதைப் பார்த்து லதா “என்னடி கண்ணமெல்லாம் சிவந்து போச்சு? சார் உள்ள ரெண்டு நாளா தூங்க விடலையோ? கண்ணெல்லாம் சிவந்து இருக்கு” என்று அவளை சீண்ட, “ஏய் சும்மா இருடி. போய் ஒழுங்கா வேலையைப் பார்க்கப் போறீங்களா இல்ல, போய் நான் சார்கிட்ட சொல்லிக் கொடுக்கவா?” என்று வேண்டுமென்றே தன் தோழியை மிரட்ட.

“ஐயோ வேண்டாம்ப்பா, ஏற்கனவே அவரு நீ அவருக்கு பர்சனல் அசிஸ்டென்டா இருக்கும்போது நீ எதை சொன்னாலும் அப்படியே நம்பிடுவாரு. இப்ப நீ வேற அவர் பொண்டாட்டியா ஆயிட்ட. அப்புறம் உன்னை நாங்க எல்லாம் கிண்டல் பண்ணனும்னு அவருக்கு தெரிந்தது என்றால் எங்களையெல்லாம் ஆபீஸ்ல இருந்து வேலையை விட்டு தூக்கிட போறாங்கடா சாமி. நான் போய் என் வேலையை பார்க்கிறேன், நீ உன் வேலையை கண்டினியூ பண்ணு” என்ற லதா அவள் டேபிளுக்கு சென்று விட்டாள்.

இதையெல்லாம் தன் கேபினில் இருந்த கேமரா வழியாக அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஆடியோ மூலம் கேட்டுக் கொண்டிருந்த ஆதி, துர்காவின் முகம் பார்க்க, அவள் முகம் சிவந்து அவ்வளவு அழகாக இருந்தது. லதா பேசிவிட்டு போனதும் அவள் சொன்னதெல்லாம் கேட்ட துர்காவின் முகம் மேலும் சிவக்க, சிரித்துக்கொண்டே தன் தலையில் தட்டிக் கொண்டவள் தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க, அதை எல்லாம் தன் கேபினிலிருந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதி அவனை அறியாமல் துர்காவை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி.

அப்போது அரைக்கதவை திறந்து கொண்டு வந்த விக்கியும், கதிரும் வர, தன் லேப்டாப்பை வேகமாக மூடியவன், அவர்களை திரும்பி என்ன என்பது போல பார்க்க, ‘இவன் எதுக்கு இவ்ளோ அவசரமாக லேப்டாப்பை மூடுகிறான்? நாங்க வருவதைப் பார்த்து’ என்று யோசித்த விக்கி “கண்டுபிடிப்போம்” என்றவன் கதிரை பார்த்து “பேசு” என்று சைகை செய்ய.

“அண்ணா… எதுக்கு இன்னைக்கே நீங்க ஆபீஸ் வந்தீங்க? அம்மா அப்பா உங்களை பத்து நாளைக்கு ஆபீஸ் வர வேண்டாம் என்று சொன்னாங்க. நீங்க வந்ததும் இல்லாம, துர்காவையும் சேர்த்து கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று கேட்க.

“நான் எவ்வளவு நாள் தான்டா வீட்டிலேயே இருப்பது? எனக்கு தெரியும் எப்போ வரணும், வேண்டாம் என்று எனக்கு தெரியும்” என்றான் கோபத்தோடு. ‘இதுக்கு மேல இவன்கிட்ட பேசினா அவ்ளோதான்’ என்று தன் வாயை மூடிக்கொள்ள.

விக்கி ஆதியின் அருகே வந்தவன் “டேய் மச்சான், அந்த சங்கவியோட ப்ராஜெக்ட் விஷயமா ஒரு டீடெயில் கேக்கணும் உன்கிட்ட” என்று கூற, “என்ன?” என்று ஆதி கேட்க “உன்கிட்டதானே அவளோட ப்ராஜெக்ட் சம்பந்தமான டீடெயில்ஸ் இருக்கு?” என்று கூறிக்கொண்டு ஆதியிடம் அது சம்பந்தமான ஃபைலை கேட்க, “அதை நான் நேற்றே சங்கவியிடம் கொடுத்துவிட்டேன்” என்றான் ஆதி.

“என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியில் விக்கி கேட்க, நேற்று ஆபீஸில் நடந்த சம்பவம் பற்றி கூறியவன் “எப்படியும் அவளுக்கு அவள் ப்ராஜெக்ட் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்துதான் ஆக வேண்டும். அதனால் நான் அவளிடம் கொடுத்துவிட்டேன்” என்றான்.

இவர்கள் மோரும் ஆதியின் கேபின்கூட பேசிக் கொண்டிருக்க, திடீரென்று வெளியில் இருந்து சத்தம் வர, “என்ன?” என்று மூவரும் திரும்பி ஆதியின் கேபினில் கண்ணாடி வழியாக வெளியே பார்க்க, துர்காவுடன் அவர்கள் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்த விவேக் என்பவன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்க, அவர்கள் சிரித்துப் பேசும் சத்தம் ஆதியின் கேபின் உள்ளே வரை வந்தது.

துர்கா விவேக்குடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த விக்கியும் கதிரும் எழுந்து வெளியே வர, அதை உள்ளிருந்து பார்த்த ஆதிக்கு ஏனோ அவர்கள் மீது கோபம் வந்தது.

விவேக் துர்காவிடம் சிரித்துப் பேசும் சாக்கில் அவள் தோள்களில் அடித்துப் பேசவும், அவள் கையைப் பிடித்து பேசவும் என்று அவள் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்க, ஆதியால் அதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை.

இதற்கு முன்னும் அவர்கள் இருவரும் அப்படித்தான் பேசிக் கொண்டே இருந்தார்கள். ஏனென்றால் விவேக்கும் துர்காவும் சிறுவயது தொட்டு பழகி வரும் நண்பர்கள். விவேக் எதார்த்தமாக துர்காவிடம் பேசிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் வெளியில் இருந்து பார்த்த ஆதிக்கு தான் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. இதற்கு முன்னால் துர்கா தன்னுடைய தோழி என்றாலும், அப்போதே அவனுக்கு இவன் இவளுடன் இவ்வளவு நெருக்கமாக பேசுவது பிடிக்காது. இப்போது அவன் மனைவி வேறு ஆகிவிட்டாள். இப்போது சும்மா இருக்க முடியுமா பார்த்துவிட்டு.

தன் கேபினில் இருந்து அழைப்பு மணியை அடிக்கவும், அவனுடன் பேசிக்கொண்டிருந்த துர்கா சட்டென்று பேசுவதை நிறுத்தியவள், விவேக்கிடம் “டேய் விவேக், அவர் நம்ம பேசுவதை பார்த்துவிட்டார் என்று நினைக்கிறேன். கூப்பிட்டு காயப் போறாரு. சரி நான் உள்ள போறேன். நீ போய் உன் கிட்ட உள்ள வேலையைப் பாரு. நம்ம அப்புறம் லஞ்சில் பேசலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஆதியின் அருகில் சென்றாள்.

துர்கா உள்ளே வந்து நின்று “சார், கூப்டீங்களா?” என்று கையில் ஒரு நோட்டும் பேனாவுடனும் நிற்க, “ஆமா” என்று கடுப்பாக கூறிய ஆதி, “இன்னைக்கு என்னென்ன ஷெட்யூல்கள் இருக்கு? மீட்டிங் பத்தி எனக்கு டீடெயில்ஸ் வேணும்” என்று அவன் கூற.

“ஓகே சார், ஒரு ஃபைவ் மினிட்ஸ். நான் எல்லா டீடெயிலும் எடுத்துட்டு வரேன்” என்று சென்றவள், ஐந்து நிமிடங்களில் அவன் கேட்டிருந்த அனைத்து டீடெயில்களையும் எடுத்து வந்து அவனிடம் அன்றைய செட்யூல்கள் ஒவ்வொன்றாக விளக்கிக் கூற, அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் கூறும் எதையுமே ஆதியின் காதில் விழவே இல்லை. என்னதான் தன் முகத்தை முகமூடி போட்டு மறைத்திருந்தாலும், அவன் கண்கள் அவள் முகத்தையும் உதட்டையும் பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் உதட்டை பார்க்கும் போதெல்லாம், அன்று அவளுக்கு தன் உதட்டில் அவள் உதட்டை ஒற்றி எடுத்தது ஞாபகம் வர, மறுபடியும் அந்த வாய்ப்பு கிடைக்காதா என்பது போல அவனுக்கு தோன்ற, தனக்குள்ளேயே “டேய் நேத்து நைட்டு தானடா அவ கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கணும்னு நினைச்சு அவகிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தே? இப்ப என்னடான்னா அவ லிப்ஸ பார்த்த உடனே முத்தம் கொடுக்கணும்னு யோசிக்கிற? இல்ல உனக்கே நல்லா இருக்கா?” என்று அவனை அவனே கேள்வி கேட்டுக் கொண்டான்.

அது ஏனோ ஆதிக்கு புரியவில்லை. அவளுக்கு யாராவது நெருக்கி பேசி பழகினால் அவனுக்கு ஏனோ பிடிக்காமல் போக, அவனை அவனே திட்டி சமன்படுத்திக் கொண்டவன், துர்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விளக்கம் முடித்ததும் அமைதியாக அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார்” என்று துர்கா அழைக்க, அவள் அழைப்பில் சுயம் வந்தவன், அவளைப் பார்த்து “என்ன?” என்பது போல பார்க்க, “நான் போலாமா?” என்று கேட்க, “அப்படி அவசரமா வெளிய போய் என்ன மேடம் பண்ண போறீங்க? அந்த விவேக் கூட விட்ட கதையை திரும்ப பேசப் போறீங்களா?” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் துர்காவுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க, “சரி நீ போலாம்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தவன், அவள் சென்று தன் கேபினில் சோகமாக அமர்வதைப் பார்த்தான்.

ஆதிக்கு வேறு ஒரு போன் வர, போன் பேசிக்கொண்டு துர்காவை பார்த்தவாறு தனது ஆபீஸ் வேலைகளில் போக ஆரம்பித்தான். மதியம் சாப்பிடும் நேரம் வரவும், விக்கியும் கதிரும் வந்து ஆதியிடம் “டேய், சாப்பிட போலாமா?” என்று கேட்க, மணியை பார்த்ததும் “சரி போலாம். ஒரு ஃபைவ் மினிட்ஸ்” என்று கூற, விக்கி அங்கேயே நின்று கொண்டிருக்க, “என்ன?” என்று தலைநிமிர்த்தி ஆதி கேட்க, தயங்கியவாறு விக்கி “துர்காவையும் நம்ம கூட கூட்டிட்டு போலாமா?” என்று கேட்டான்.

“அவள் எதுக்கு நம்ம கூட சாப்பிட வரணும்? இத்தனை நாள் வரைக்கும் அவ நம்ம சாப்பிடும்போது நம்ம கூட தான் வந்து சாப்பிட்டாளா? ஆபீஸ் பொறுத்தவரைக்கும் அவ எப்பவும் போல என்னோட பர்சனல் அசிஸ்டென்ட் தான். வீட்டையும் ஆபீஸையும் ஒன்றாக கொண்டு வராது” என்று கோபமாக பேசினான் ஆதி.

“இதற்கு மேல் இவன்கிட்ட பேசி ஒண்ணும் பண்ண முடியாது. வாடா கதிர் நம்ம ரெண்டு பேரும் முன்னாடி போலாம். அவன் வரட்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சாப்பிடும் கேபினுக்கு இருவரும் சென்று விட்டனர்.

பார்த்துக் கொண்டிருந்த ஃபைல்களை மூடிவிட்டு சாப்பிட எழலாம் என்று நினைத்தவன், துர்கா என்ன செய்கிறாள் என்று அவள் கேபின் பக்கம் பார்க்க, அப்போதுதான் அங்கே வந்து விவேக்கும் லதாவும் துர்காவிடம் “நீ சாப்பிட எங்க கூட வரப் போறியா? இல்ல உன் புதுப் புருஷன் கூட போகப் போறியா?” என்று லதா அவளை கிண்டல் செய்து கொண்டு கேட்க, முதலில் துர்காவுக்கு என்ன கூறுவது என்று புரியாமல் துர்கா நிற்க.

“மேடம் எல்லாம் பெரிய ஆள் ஆயிட்டாங்க. பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிட்டாங்க. இனி நம்ம கூட எல்லாம் அவங்க வந்து சாப்பிடுவாங்களா? லதா, நீயே தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. வா நம்ம ரெண்டு பேரும் போய் சாப்பிடுவோம்” என்று விவேக் துர்காவை கிண்டல் செய்ய, “டேய், நீ சும்மா இருக்க மாட்டியா?” என்று அவன் தோளில் தட்டியவள், “நான் உங்க கூட வரேன். வாங்க நம்ம மூணு பேரும் எப்பவும் போல கேன்டீன்ல போய் சாப்பிடலாம்” என்று துர்கா தன் ஃபைல்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வெளியில் பேசிக் கொண்டிருப்பதை ஆதி கேமரா மூலம் கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் விவேக்குடன் கேன்டீனுக்கு சாப்பிட செல்கிறேன் என்று அவனிடம் சொன்னதும், ஆதிக்கு ஏனோ துர்கா விவேக்குடன் சென்று சாப்பிடுவது பிடிக்கவில்லை.

துர்காவின் கேபினுக்கு போன் செய்தவன், “ஹலோ துர்கா, உள்ள வா” என்று கூற, “வரேன் சார்” என்று கூறி போனை வைத்தவள், “சரி நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க. நான் அவரை கூப்பிடறாரு, என்னன்னு பேசிட்டு கேன்டீனுக்கு வந்துடுறேன்” என்று துர்கா கூற, “சரி சரி, லஞ்ச் டைம்ல ரொமான்ஸ்” கூறிக்கொண்டு துர்கா அடிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவள் அரை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து “சார், சொல்லுங்க” என்று கேட்க, “சரி, வா நம்ம ரெண்டு பேரும் சாப்பிட போலாம்” என்று அவன் கூற, அவன் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியாய் துர்கா நின்றவள் “சார்…” என்று இழுக்க.

“என்ன மேடம், சாப்பிட தானே கூப்பிட்டேன்? எதுக்கு அதுக்காக இப்படி அதிர்ச்சி ஆறிங்க?” என்று அவன் கேட்க, “இல்ல சார், நான் ஃப்ரெண்ட்ஸோட கேன்டீன்ல லதா, விவேக்…” என்று வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி பேசினாள்.

தன் சேரிலிருந்து எழுந்த ஆதி வேக நடை போட்டு அவள் அருகில் வந்து நின்றவன், “ஏன், உங்க ஃபிரெண்ட்ஸ் கூடத்தான் போய் சாப்பிடுவீங்களா? என்கூட எல்லாம் நீங்க சாப்பிட மாட்டியா?” என்று நெருக்கமாக வந்து நின்று கேட்டான்.

அவன் அவ்வளவு நெருக்கமாக துர்காவிடம் வந்து நிற்கும், துர்காவின் இதயத்துடிப்பு எகிறியது. அவளால் மூச்சு சரியாக விட முடியவில்லை. படபடக்கும் விழிகளோடு ஆதியை பார்க்க, அவன் “என்ன?” என்பது போல தன் இரு கண்கள் மட்டும் தெரிய காட்டி அவளை பார்வைகளையே அவளிடம் கேட்க, அவள் அவன் பார்வையை பார்த்ததும் மயங்கி “வருகிறேன்” என்று அவளை அறியாமலேயே தலையை ஆட்டினாள்.

“குட். சரி, வா போகலாம்” என்று அவன் இரண்டு அடி நடந்து செல்ல, அவள் நகராமல் அங்கேயே நின்றிருந்தாள். “என்ன மேடம், இப்போ என் கூட சாப்பிட வரீங்களா இல்லையா?” என்று அவன் அதட்ட, “வரேன் சார்” என்று பதட்டமாக அவன் பின்னால் ஓடினால் துர்கா.

சாப்பிடும் அறை கதவை திறந்து கொண்டு ஆதி வர, அவன் பின்னாலயே துர்கா கொண்டு வருவதை பார்த்து விக்கி கதிரிடம் “சொன்னேன் நானு. எப்படி வேலை செய்கிறது பார்த்தாயா? என்னோட ஐடியா உங்க அண்ணன் தானா அவன் பொண்டாட்டியை சாப்பிட கூட்டிட்டு வரான் பாத்தியா?” என்று விக்கி கூற, “நீ சொல்றது சரிதான் விக்கி. நீ சொன்னதும் இப்படி எப்படி உனக்கு இப்படி ஐடியா தோணுச்சு?” என்று கேட்க, “இருடா, இருடா. உங்க அண்ணன் வேற நம்ம பேசுறது காதுல கேட்டா, நம்ம ரெண்டு பேரையும் கொன்னே போடுவான்” என்றவன் கதிருக்கு மட்டும் கேட்கும் விதமாக “டேய், எப்பவுமே அவன் பொண்டாட்டி கிட்ட அவன் பேசுறானோ இல்லையோ, அடுத்தவன் பேசினா எந்த ஆம்பளைக்கும் பிடிக்காது. அப்படித்தான் நான் விவேக் கிட்ட சொல்லி வேணும்னு துர்காவை சாப்பிட கூப்பிட சொன்னேன். அவன் பேசுறது உங்க அண்ணா கேபின்ல இருந்து பார்ப்பான்னு எனக்கு தெரியும். ஏன்னா, அவன் நான் இந்தக் காலைல வந்ததுல இருந்து நோட் பண்ணிட்டுதான் இருந்தேன். வேலையை தான் செய்கிறானே ஒழிய, அவன் பார்வை முழுக்க துர்கா மேலேயேதான் இன்னைக்கு இருந்துச்சு. அதனாலதான் அவன் பொஸசிவ்னஸ் கொஞ்சம் தூண்டிவிட்டேன். உடனே துர்காவை சாப்பிட நம்ம கூட கூட்டிட்டு வந்துட்டான் பாத்தியா?” என்றவன் அவர்கள் அருகில் “வாடா ஆதி. என்ன துர்கா, உன்னையும் கூட கூட்டிட்டு வந்துட்டானா? ஏன்டா ஆதி, துர்காவை சாப்பிட கூப்பிட்டதற்கு?” என்று அவன் அவனைப் பார்த்து பேச வர, தன் பார்வையாலேயே விக்கியை முறைத்து அவனை அடக்கியவன், “துர்கா உட்காரு” என்று கூற, அவள் தயங்கிக் கொண்டு கதிரின் அருகில் இருந்த சேரில் போய் உட்கார்ந்தாள்.

தன் அருகில் வந்து அமர்ந்த துர்காவை பார்த்து கதிர் “வா துர்கா வந்து உட்காரு” என்று தன் அருகில் இருக்கும் சேரை அவளிடம் எடுத்துப் போட, கதிரைப் பார்த்து ஆதி முறைப்பதை கவனித்த கதிர், அந்தச் சேரை அப்படியே தள்ளிக் கொண்டு போய் ஆதியின் அருகில் போட்டான்.

ஆதியின் பார்வையையே தாங்க முடியாமல் கதிர் சேரை ஆதியிடம் போட்டுவிட்டு, “துர்கா நீ இங்க உட்கார்ந்து சாப்பிடு” என்று கூறினான். ஆதி மனதிற்குள், ‘அந்த பயம் இருக்கட்டும். நான் எவ்வளவு என் தம்பியாக இருந்தாலும் யாருக்கும் இனி விட்டுத் தரப் போவதில்லை. இவள் என்னவள். இவளை என் கண் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ளப் போகிறேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், அருகில் இருக்கும் துர்காவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு, ‘உன்னை யாருக்கும் நான் இனிமேல் விட்டுத் தரப் போவதில்லை’ என்று அவள் அருகில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

ஆதியின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருந்த விக்கி மனதிற்குள் ‘எப்படியாவது ஆதிக்கு எப்படியாவது துர்காவை பிடித்து விட வேண்டும். அதற்காக என்ன வேலை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராகத்தான் இருக்கிறேன். ஆதி, கூடிய சீக்கிரம் துர்கா பின்னால் உன்னை சுத்த வைக்கலைன்னா நான் உன் ஃப்ரெண்டு இல்லடா’ என்று மனதிற்குள் சபதம் கொண்டவன், அவனும் கதிரும் பேசிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.

EPISODE 16

மதியம் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தங்கள் வேலைகளை பார்க்கச் சென்றுவிட, வேலைகளும் நிறைய இருக்கவே, அவரவர் வேலையில் மூழ்கிப் போயினர்.

மாலை ஒரு நாலு மணியைப்போல ஆதியின் ஆபீசுக்கு வந்த சங்கவி, உள்ளே வந்ததும் அங்கே துர்கா இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டு ஆபீஸ் வேலையில் மும்முரமாக இருக்க, அவளை மறுபடியும் சில நாட்கள் கழித்து நேரில் பார்த்ததும் சங்கவிக்கு ஆத்திரமாக வந்தது.

நேராக துர்காவிடம் வந்தவள் “ஏய்…. எனக்கு சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு என்னோட கேபினுக்கு வா…” என்று கூறிவிட்டு விடுக்கென தன் கழுத்தைத் திருப்பிக்கொண்டு அவள் கேபினுக்குச் சென்றாள்.

அவள் அப்படி துர்காவிடம் பேசிவிட்டு சென்றதைப் பார்த்த துர்காவின் தோழி லதா, துர்காவிடம் “இவள் திமிரைப் பார்த்தியா? எவ்வளவு திமிரு இருந்தா உன்னை ஆதி சாரை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரிஞ்சும் ஆபீஸ் பாய் வேலை வாங்குறா பாரு இவளை. என்ன செய்றது?” என்று புலம்பியவள், “நீ காபி கொண்டு போக வேண்டாம் துர்கா, நான் எடுத்துட்டு போறேன்” என்று லதா சொல்ல, “இல்ல வேணாம் டி… நானே எடுத்துட்டு போறேன். இல்லைனா அவ அதுக்கும் ஏதாவது சண்டை போடுவா” என்று கூறி நகரப் போக.

அப்போது ஆதி தன் இண்டெர்வியூ காம்-இல் அவளுக்கு அழைத்திருந்தான். போனை அட்டென்ட் செய்ய, சில டீடெயில்களை கேட்டுவிட்டு அதற்கு உண்டான ஃபைல்களை எடுத்துக்கொண்டு அவளை உள்ளே வரச் சொல்லி போனை வைத்து விட்டான்.

துர்கா போன் பேசுவதை அவள் அருகில் நின்றுகொண்டிருந்த அவள் தோழி லதா, “நீ முதல்ல சார் கேட்ட டீடைல் எடுத்துக்கொண்டு போய் கொடு. நான் போய் அவளுக்கு காபி கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு லதா துர்காவை அனுப்பிவிட்டு சங்கவிக்கு காபி போட்டு எடுத்துக்கொண்டு சங்கவியின் கேபினுக்கு சென்றவள் கதவைத் தட்ட, சங்கவி அவளை உள்ளே வரச்சொன்னாள்.

காபி கொண்டு வந்திருப்பது துர்கா தான் என்று நினைத்து, அவளை திமிருடன் நிமிர்ந்து பார்த்த சங்கவிக்கு அங்கேயே துர்காவுக்குப் பதில் லதா நின்று இருப்பதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது.

“ஏய் நீ எதுக்கு இப்போ இந்தக் காபி எடுத்துட்டு வந்த? நான் அவளை தானே காபி எடுத்துட்டு வரச் சொன்னேன்?” கோபமாகக் கேட்க, லதா அவரிடம் பயந்து நடுங்குவதுபோல நடித்துக்கொண்டு “மேடம், அவளை ஆதி சார் அவரோட கேபினுக்கு வர சொல்லிட்டாரு. அதனாலதான் அவளுக்குப் பதில் நான் உங்களுக்கு காபி கொண்டு வந்தேன்” என்று கூற.

“அவனுக்கு முன்னால் நான் தானே இவளை காபி கொண்டு வரச் சொன்னேன்? நான் சொன்னது கேட்காமல் அவன் கூப்பிட்டதும் அவன் பின்னாடியே ஓடிவிட்டாளா?” என்று கூறிக்கொண்டே அவள் கையில் இருந்த காபியை வாங்கி அந்தக் காபி கப்பை காபியோடு தரையில் தூக்கி எறிய, அந்தக் கப் சுக்கு நூறாக உடைந்து விட்டது.

பின் லதாவைப் பார்த்து “போ, போய் துர்காவை காபி போட்டு எடுத்துட்டு வரச் சொல்லு” என்று கூறிவிட்டு தன் சேரில் சாய்ந்து அமர்ந்தவள், லதா அங்கேயே நின்று இருக்க, அவளைப் பார்த்து “நீ இன்னும் போகாம இங்கே என்னடி பண்ணிட்டு இருக்க? முதல்ல என் கண்ணு முன்னாடி நிக்காத. வெளியே போ” என்று அவளை திட்டி வெளியே அனுப்பினாள் சங்கவி.

“ஓகே மேடம்” என்று கூறிக்கொண்டு அவள் அறை கதவைத் திறந்து வெளியே வந்தவள், “ஷ்…. அப்ப்பா….. நல்லவேளை இவளை ஆதி சார் கல்யாணம் பண்ணல. இவளை மட்டும் கல்யாணம் பண்ணி இருந்தா, இவள் இந்த ஆபீசுக்கு மகாராணியாய் எங்களை எல்லாம் கொடுமைப்படுத்தி இருப்பா” என்று நினைத்தவள் துர்காவின் கேபினுக்குச் செல்ல, அப்போது துர்கா வந்துவிட்டாள்.

கோபமான முகத்துடன் வந்த லதாவை பார்த்த துர்கா “ஏய்…. லதா என்னடி ஆச்சு? ஏன் உன் முகம் இவ்வளவு கோபமா இருக்கு? அவ எதுவும் சொன்னாளா உன்கிட்ட?” என்று துர்கா கேட்க.

“ஆமாண்டி, அவ சரியான திமிரு புடிச்ச ராக்கிடி…. காபியை நீ கொண்டு வந்து கொடுத்தா தான் குடிப்பாளாம். நான் கொடுத்த குடிக்க மாட்டாளா? கொண்டு போன காபியை வாங்கி கீழே போட்டு உடைச்சுட்டா… இவ்வளவு எல்லாம் யாராலையும் திருத்திட முடியாது, சரியா? அவள் ஒரு ராட்சசி” என்று திட்டினாள்.

“சரி, நீ போடி. நானே போய் அவளுக்கு காபி கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்” என்று கூறி லதாவை அனுப்பிவிட்டு, துர்கா சென்று காபியைப் போட்டுக்கொண்டு நேராக அறையின் கதவைத் தட்டிக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே செல்ல, துர்கா கையில் காபி கப்புடன் உள்ளே வருவதைப் பார்த்த சங்கவி துர்காவைப் பார்த்ததும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு துர்காவைப் பார்த்து “ஏண்டி, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் உன்கிட்ட காபி போட்டு எடுத்துட்டு வரச் சொன்னா, அந்த லதா கிட்ட கொடுத்து காபியை கொண்டு வர சொல்லி இருப்ப?”

“அப்போ இந்த ஆபீஸ்ல நீ ஒரு ஸ்டார். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நான் சொன்ன வேலையை அவாய்ட் பண்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா?” என்று கூறி அவள் சேரில் இருந்து எழுந்து வந்து துர்காவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் சங்கவி.

சங்கவி துர்காவை அறைந்தது வெளியில் நின்றிருந்த லதா, விவேக், கதிர், விக்கி என நால்வரும் பார்க்க, கதிர் கோபமாக சங்கவியின் அறைக்குச் செல்லப் போக, அவன் கையைப் பிடித்து இழுத்த விக்கி “வேண்டாம்” என்று அவனுக்கு கண்ணை காட்டிவிட்டு அவனைத் தன் அருகில் இழுத்து நிறுத்தினான்.

லதாவுக்கு கோபம் வந்து அவளும் செல்லப் போக, அவள் கையைப் பிடித்த விவேக் இழுத்து நிறுத்தியவன் “கொஞ்ச நேரம் பேசாமல் இரு” என்றான். “என் கையைவிட்டு போவதற்கு எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம துர்காவை அறைந்திருப்பா? எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை, நான் இவளை சும்மா விடமாட்டேன்” என்று லதா திமிரிக்கொண்டு அவன் கையில் இருந்து தன்னை பிரிக்கப் போக, “ஏய், கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா டி? நான் சொல்றதை கேளு. அங்கே பாரு ஒரு நிமிஷம்” என்று விவேக் அவள் தலையைப் பிடித்துத் திருப்பி ஆதியின் அறையைக் காட்ட, ஆதி கோபமாக தன்னாலே கதவைத் திறந்து கொண்டு வேகமாக சங்கவியின் அறையின் நோக்கிச் செல்வதைப் பார்த்த லதா அமைதியாய் அப்படியே நின்றாள்.

தன் அறையில் இருந்து சங்கவி துர்காவை தன் அறைக்கு வரச் சொல்லியதை கேட்டுவிட்டு தான் ஆதி துர்காவிடம் வேண்டுமென்றே வேறு டீடெயில்கள் பற்றி கேட்டு அவளை தன் அறைக்கு வரவழைத்தான்.

ஆனால் சங்கவி மறுபடியும் துர்காவையே காபி கொண்டு வரச் சொல்ல, “சரி, என்னதான் நடக்கிறது” என்று பொறுமையாக பார்க்கலாம் என்று நினைத்த ஆதி, அவன் அறையில் இருந்து சங்கவியின் அறையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க.

ஆனால் அவன் எதிர்பாராத விதமாக சங்கவி எழுந்து வந்து துர்காவின் கன்னத்தில் அறைந்ததைப் பார்த்ததும் மிகவும் கோபம் கொண்டு எழுந்து அவள் அறை நோக்கிச் சென்றான்.

சங்கவியின் அறையை வேகமாகத் திறந்து கொண்டு உள்ளே வந்த ஆதி, நேராக சங்கவியின் அருகில் சென்று “சங்கவி, இது ஆபீஸ். இங்கே என்ன நடக்குது? இப்போ எதுக்கு நீ துர்காவை அடிச்ச?” என்று கேட்க.

துர்காவுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு ஆதி தன் அறைக்கே வந்துவிட்டான் என்பதை நம்ப முடியாத சங்கவி அவனை வெறித்துப் பார்க்க.

“சங்கவி….!” என்று கத்திய ஆதி “நான் உன்ன தான் கேட்டுட்டு இருக்கேன். இப்போ எதுக்கு நீ துர்காவை அறைஞ்ச?” என்று அவன் கேட்க, “அது… அது வந்து ஆதி…” என்று பதில் கூற முடியாமல் சங்கவி விழித்துக் கொண்டு நின்றவள், பின் ‘இவனுக்கு எதற்கு நாம் பயப்பட வேண்டும்’ என்று நினைத்துவிட்டு, ஆதியை நேராகப் பார்த்து “நான் அவளை காபி கொண்டு வரச் சொன்னேன். ஆனா அவ கொண்டு வராம லதா கிட்ட கொடுத்து அனுப்பினா. அதனால்தான் எனக்கு கோபம் வந்து அவ்வளவுதான் அடிச்சேன்” என்று சங்கவி திமிராக ஆதியைப் பார்த்துக் கூற.

“காபி கொண்டு போறதுக்குத்தான் ஆபீஸ் பாய் இருக்கிறப்போ, நீ எதுக்கு துர்காவை கொண்டு வரச் சொல்லி சொன்ன? துர்கா ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரி இல்ல. நீ கூப்பிட்டதும் நீ கேட்டதெல்லாம் செஞ்சு தர்றதுக்கு. உன்னை உன் ப்ராஜெக்ட் முடியிற வரைக்கும் தான் இந்த ஆபீசுக்குள்ள வரதுக்கு நான் அனுமதிச்சிருக்கேன். உன் ப்ராஜெக்ட் முடிந்தால் போறதும் தெரியவே கூடாது. மறுபடியும் இதே மாதிரி ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு இருந்தா, அப்புறம் நடக்கிறதே வேற” என்று அவன் சங்கவியை எச்சரிக்க.

“என்ன ஆதி, அவளும் இந்த ஆபீஸ்ல வேலைதானே செய்யற? ஏன் அவ எனக்கு காபி கொண்டு வந்தா இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்க்க, அவளை திரும்பி முறைத்த ஆதி, “அவ இந்த ஆபீசுக்கு வேலைக்குத்தான் வந்திருக்கா, நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அதையும் தாண்டி அவ என்னோட மனைவி. என்னோட மனைவியை நீ ஒரு ஆபீஸ் பாயை விட கேவலமா ட்ரீட் பண்றது எனக்கு பிடிக்கல” என்று அவன் கூற.

‘நேற்று நான் பேசிய பேச்சு இவன் இந்த துர்காவே வேண்டாம், பெண்களே வேண்டாம் என்று பார்த்தேன். என்றான். இவன் இன்னிக்கு என்னடான்னா இவன் இவளைப் பார்த்து என் மனைவின்னு சொல்றான். இது சரி இல்ல சங்கவி, இவன் அந்த கேடுகெட்ட துர்கா பின்னாடி போயிட்டான்னா, அதுக்கப்புறம் உன் வேலையில் எதுவுமே நடக்காது’ என்று நினைத்த சங்கவி.

“என்ன ஆதி, உன் பணத்துக்காக உன்னை கல்யாணம் பண்ண அவளைப் பார்த்து உன்னோட பொண்டாட்டின்னு சொல்ற? பணத்துக்காக மட்டும்தான் அவ உன்ன கல்யாணம் பண்ணிருக்கா. இல்லையென்றால் இந்த மாதிரி உடலில் நோய் இருக்கிறவனை, இப்படி ஒரு முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறவன, இந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கவா? உன்னை எல்லாரும் சொன்னாங்க அப்படிங்கறதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதுக்கு ஒரே காரணம் உன்கிட்ட இருக்கிற உன்னோட காசுதான். உன் முகத்தை நீ போய் ஒரு முறையாவது கண்ணாடியில் நல்லா பார்த்து இருக்கியா? உடம்பு முழுக்க கொப்புளமாக, முகம் முழுக்க காயத்தோடையும் இருக்கிற ஒருத்தனை எந்தப் பொண்ணும் மனசார விரும்பி கல்யாணம் பண்ணிக்கவா? பணத்துக்காகத்தான் கல்யாணம் பண்ணி இருக்கா. அப்படி இருக்க நீ அவளுக்கு எதுக்கு இப்படி சப்போர்ட் பண்ற?” என்று கேட்டாள் சங்கவி.

சங்கவி தன் முகத்தைப் பற்றியும் தன்னழகைப் பற்றியும் தன் உடலில் இருக்கும் நோயைப் பற்றியும் கூறி அவனை மட்டம் தட்டி பேசியதைக் கேட்ட ஆதிக்கு சங்கவியிடம் திருப்பி என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறி நிற்க.

சங்கவி அப்படி ஆதியை மட்டம் தட்டிப் பேச, அவள் கன்னத்தில் திடீர் என்று ‘பளார்’ என்று அறை விழ, தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தன்னை அறைந்தவர் யார் என்று திரும்பிப் பார்த்த சங்கவிக்கு அவள் எதிரே கோபமே உருவாய் பத்திரகாளி போல் நின்றிருந்த துர்காவைப் பார்த்ததும் சங்கவிக்கே பயம் தொற்றிக் கொண்டது.

துர்கா கோபத்தோடு சங்கவியைப் பார்த்து “ஏய், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் ஆதியைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லுவ? என் ஆதியைப் பத்தி உனக்கு என்னடி தெரியும்? முகத்தோட அழகும் உடம்பில் இருக்கிற நோயும் ஒருத்தரை தப்பா காட்டிட முடியாது. அவங்க மனசு சுத்தமாவும் அடுத்தவங்களுக்கு கெடுதல் பண்ணாம நல்ல விதமாக இருந்தாலும் போதும். என் ஆதியை பற்றி பேசற யோக்கியதை உனக்கு இருக்கா முதல்ல? இனிமேல் என் ஆதியைப் பத்தி, அவனோட நோயைப் பத்தி ஏதாவது நீ சொன்ன, உன் வாயை கிழிச்சிடுவேன், புரிஞ்சுதா?” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

சங்கவி துர்காவை அவமானப்படுத்தி அடித்தபோது கூட துர்காவுக்கு கோபம் வரவில்லை. ஆனால் அவள் ஆதியைப் பற்றித் தப்பாக பேசியதும் எங்கிருந்துதான் அவளுக்கு கோபம் அப்படி வந்தது தெரியவில்லை. அவள் கோபத்தை இன்று தான் ஆதி முதன்முதலாகப் பார்க்கிறான்.

சங்கவி அறையை விட்டு கோபமாக வெளியே செல்லும் துர்காவை ஆச்சர்யம்போல பார்த்த ஆதி, ‘இவளை எந்த காரணம் கொண்டும் விடவே கூடாது’ என்று தீர்மானித்துக் கொண்டான்.

பின் சங்கவியைப் பார்த்து முறைத்தவன் “நான் சொன்னதெல்லாம் ஞாபகத்துல வச்சுக்க. வந்தமா வேலையைப் பார்த்தமா போனமான்னு இருக்கணும்” என்று அவனும் பதிலுக்கு எச்சரித்துவிட்டு சங்கவியின் கேபினை விட்டு வெளியே சென்றான்.

தன் கேபினுக்கு வந்து அமர்ந்தவன், துர்கா பேசியதெல்லாம் நினைத்துப் பார்க்க, அவள் வார்த்தைக்கு வார்த்தை ‘என் ஆதி’, ‘என் ஆதி’ என்று சொன்னாளே. நிஜமாவே அவ அவனை லவ் பண்றாளா? இதை எப்படி நான் கன்ஃபார்ம் பண்றது என்று யோசித்துக் கொண்டு வெளியே பார்க்க, அங்கே துர்கா அவள் கேபினில் கோபமாக அமர்ந்து கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, புஸ்… புஸ்ஸென மூச்சுவிட்டுக்கொண்டு கோபத்தோடு அமர்ந்திருந்தாள்.

அவள் முகம் எல்லாம் கோபத்தில் சிவந்து இருக்க, அதைவிட அவள் மூக்கின் நுனி கோபத்தில் சிவந்திருக்க, அதைப் பார்த்த ஆதிக்கு அவள் மூக்கைப் பிடித்து கிள்ள வேண்டும் போல இருக்க, லேப்டாப் திரையில் தெரிந்த அவள் முகத்தை முதன் முறையாகத் தொட்டுப்பார்க்க ஆவல் கொண்டு அந்தத் திரையில் தெரியும் அவள் முகத்தை தன் விரல் கொண்டு வருடினான்.

அவள் அருகில் லதாவும் விவேக்கும் அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க. கதிர் விக்கியிடம் “பாத்தியாடா, துர்காவுக்கு ஆதியை சங்கவி ஏதும் சொல்லிருப்பா போல. அதைக் கேட்டதும் கோபம் வந்து ‘பளார்’னு ஒரு அறை விட்டா பாத்தியா?”

“இனி இந்த ஆபீசுக்கு சங்கவி வேலை பார்க்க வராளோ இல்லையோ, தினம் ஒருத்தரிடம் அறை வாங்க கண்டிப்பா வருவா” என்று கூறி சிரித்து “சரி, வா நம்ம ஆதி கிட்ட போய் அவன் என்ன யோசிக்கிறான்னு பார்க்கலாம்” என்று கதிரை அழைத்துக்கொண்டு விக்கி ஆதியின் கேபினுக்குச் செல்லப் போக, “நீ முன்னாடி போ…. நான் துர்காவைப் பார்த்துட்டு வரேன்” என்று கூறி விக்கியை ஆதியின் கேபினுக்கு அனுப்பிவிட்டு, கதிர் துர்கா கேபினுக்கு சென்றான்.

விக்கி தன்னறை நோக்கி வருவதைப் பார்த்த ஆதி வேகமாக தன் லேப்டாப்பை மூட, அதை கவனித்துவிட்டான் விக்கி.

உள்ளே வந்த விக்கி “என்னடா ஆச்சு? அங்கே ஏதோ பிரச்சனையா? துர்கா அந்த அடங்கா பிடாரி சங்கவியை அறைஞ்சுட்டா போல” என்று ஒன்றும் தெரியாதவன் போல விக்கி ஆதியிடம் கேட்க.

“ம்ம்ம்… ஆமா” என்று மட்டும் தலையை ஆட்டிய ஆதியின் பார்வை முழுவதும் வெளியே துர்கா இருந்த கேபினிலேயே பதிந்திருந்தது.

அப்போது ஆதியின் கேபின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த கதிர், “டேய் விக்கி, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம துர்கா எதுக்கு அந்த பிடாரியை அறைஞ்சான்னு உனக்கு தெரியுமா?” என்று கதிர் கேட்க.

விக்கி “எதுக்குடா அவ அந்த பிடாரியை அறைஞ்சா?” என்று கேட்க, “அவ நம்ம ஆதியைப் பார்த்து அவனோட நோயைப் பற்றியும் அவன் முகத்தைப் பற்றியும் ஏதோ ஒன்று மட்டம் தட்டி பேசி இருக்கா. அதைக் கேட்டு தான் துர்காவுக்கு கோவம் வந்து அந்த சங்கவியை அறைஞ்சு இருக்கா” என்று கூற.

“அப்படியாடா? பார்த்தியா? நம்ம துர்காவுக்கு நம்ம ஆதி மேல எவ்ளோ தெரியும்னு. அவன் முதலில் ஆதியை யாராவது ஏதாவது சொன்னால், அவனை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டா. அவனுக்காக அவளை வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்குப் போவா.”

“அப்படி இருக்கும்போது, இன்னைக்கு ஆதி அவளோடு புருஷன். அவ புருஷனைப் பற்றி அவ முன்னாடி யாராவது தப்பா பேசினா சும்மா இருப்பாளா? அதனால தான் கோவம் வந்து அந்த சங்கவியை கண்ணம் பழுக்குற அளவுக்கு நல்லா அறிஞ்சிட்டா. நம்ம இங்கிருந்து பார்த்தாலும் அந்த சங்கவியோட கண்ணம் பன்னு மாதிரி வீங்கி இருக்கிறது நல்லா தெரியுதுடா” என்று கூறி சிரித்தான் விக்கி.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட ஆதிக்கு, துர்கா தன் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாள் என்பதை நினைக்கும் போது அவனுக்குத் தானாக துர்காவின் மேல் காதல் ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் அவனுக்குத் தான் அது தெரியவில்லை. அவளை ரசனையோடு அவன் பார்த்துக் கொண்டிருக்க, கதிர் விக்கியின் தோளை எடுத்து ஆதியை கண்டாடை காட்டி அவனைப் பார் என்று கூற, விக்கி “நானும் வந்ததிலிருந்து பாத்துட்டே தான்டா இருக்கேன். அவன் நம்மள பார்க்கவே மாட்டேங்குற. வெளிய நம்ம துர்காவை தான் பார்த்துட்டு இருக்கான்.”

“நம்ம ஆதி சாருக்கு இப்பதான் துர்காவைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குதுன்னு நினைக்கிறேன். இதை இப்படியே கண்டினியூ ஆகி அவனுக்கு துர்காவைப் பற்றி எல்லாமே தெரியனும்டா” என்று கூறிக்கொண்டவன், “சரி வா, நம்ம இங்கே இருக்கிறது பிரயோஜனம் இல்ல. நம்ம ரெண்டு பேரும் வெளியே போகலாம். அவன் இங்கிருந்து அவன் பொண்டாட்டி சைட் அடிச்சிட்டு இருக்கட்டும்” என்று கூறியவர்கள் இருவரும் வெளியே செல்ல.

அவர்கள் இருவரும் இதுவரை அவனுக்கு என்னென்ன செய்து பேசியதும் வெளியில் சென்றதும் கூட தெரியாமல், உள்ளே இருந்து கொண்டு துர்காவை ரசித்துக்கொண்டிருந்தான் ஆதி.

EPISODE 17

ஆதி சங்கவியை எச்சரித்துவிட்டு சென்ற பிறகு ஆபீஸில் இருப்பதற்கு சங்கவிக்கு மனமே வரவில்லை. விருப்பம் கொள்ளாதவள் நேராகக் கிளம்பி தன் வீட்டிற்கு வந்தாள்.

வந்தவுடன் கையிலிருந்த பொருட்களை எல்லாம் இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக விட்டு சிதறி அடித்தவள், “அம்மா….” என்று அலறினாள். அவளின் அலறல் சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து சங்கவியின் அம்மா ரமா வேகமாக வெளியே ஓடி வந்து, “ஏய் சங்கவி, என்னடி ஆச்சு? எதற்காக இப்படி கத்துற?” என்று கேட்க.

“எனக்கு தலை வலிக்குது. போய் உடனே எனக்கு ஒரு கப் காபி எடுத்துட்டு வா” என்று சொன்னாள் சங்கவி. “சரிடி, காபி தானே? போட்டு எடுத்துட்டு வரேன். அதுக்கு ஏன் இப்படி கத்துற?” என்று சங்கவியைப் பார்த்து கேட்க, “போ அம்மா… போய் முதல்ல காபி எனக்கு எடுத்துட்டு வா போ!” என்று அவரை விரட்டிவிட்டாள்.

‘இவளுக்கு என்ன ஆச்சு? தேவையில்லாமல் அவங்க அப்பனைப்போலவே தாட் பூட் என்று கத்துறாள். அறிவு கெட்டவள்’ என்று திட்டிக்கொண்டே செல்ல.

அவர் சங்கவியைத் திட்டியது அப்படியே சங்கவியின் காதில் விழ, “அம்மா….” என்று மறுபடியும் கத்த, தன் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு சங்கவியைப் பார்த்து, “இப்போ எதுக்குடி கத்துற? நான் தான் காபி எடுத்துட்டு வரேன்னு சொல்றேன் இல்ல. சும்மா அம்மா… அம்மா… ன்னு கத்திட்டே இருக்க. கொஞ்ச நேரம் அமைதியா இரு, கொண்டு வரேன்” என்று அவளைத் திட்டி விட்டு உள்ளே செல்ல.

அப்போது அங்கு வந்த சங்கவியின் அப்பா விஜய் “என்னடி… சங்கவியைத் திட்டிக்கிட்டே இருப்பதாய்ப் போல இருக்கே?” என்று தன் மனைவியை அதட்டிக்கொண்டு உள்ளே வந்தார்.

அவர் வந்ததும் சங்கவி அவரைப் பார்த்து “அப்பா, வாங்க அப்பா. வந்துட்டீங்களா? நான் உங்க கிட்ட தான் பேசணும்” என்று கூற, “என்னடா சொல்லு” என்று அவள் அருகில் வந்து அவள் தலையை வருடி விட.

உள்ளே சமையல் அறையில் இருந்து இவர்கள் இருவரையும் பார்த்த சங்கவியின் அம்மா ரமா. “ம்க்கும்…. இந்த ஆளும் வந்துட்டானா? இனி அவ்ளோதான். இவனும் நல்லது செய்ய மாட்டான், தன் பிள்ளைக்கும் நல்லது செய்ய மாட்டான். ரெண்டும் சேர்ந்து இன்னிக்கு எந்த குடும்பத்தை கெடுக்க பிளான் பண்ணப் போகுதுங்களோ…” என்று தனக்குத்தானே பேசிக்கொள்ள. அவர் அருகில் வேலை செய்து கொண்டிருந்த அவர் வீட்டு சமையல்கார பாட்டி, “அடியே ரமா, மெதுவா பேசுடி. உன் வீட்டுக்காரன் காது பாம்பு காது. ஏதாவது கேட்டுற போகுது” என்று சொல்ல, “ஆமா பாட்டி, அவன் காதுல விழுந்தா அவ்ளோதான்” என்றவர் மற்றொரு வேலைக்கார பெண்ணை அழைத்து, அவள் கையில் காபியைக் கொடுத்தவர், “இதை நீயே கொண்டு போய் அந்த ரெண்டு பிசாசுகளுக்கும் கொடுத்திட்டு வா… நான் போனா இதுங்க ரெண்டும் சேர்ந்து என் தலையை உருட்டுங்க…” என்று கூறி அவள் கையில் காபியைக் கொடுத்து அனுப்ப.

இங்கு சங்கவி தன் அப்பா விஜய்யிடம் ஆபீஸில் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருந்த அனைத்தையும் கூறியவள், இன்று நடந்த காபி மேட்டரையும் கூற.

அவள் அப்பா “நீ எதுக்குமா இப்போ அங்க போய் தேவை இல்லாத வம்பை பேசி விலைக்கு வாங்கிட்டு வந்த? இப்போதான நான் உன்னை அந்த ஆதியின் ஆபீசில் நுழைத்திருக்கிறேன். கொஞ்ச நாள் பொறுமையா இரு. அதன் பிறகு நீ நினைத்ததெல்லாம் கண்டிப்பாக நடக்கும்” என்று அவளுக்கு ஆறுதல் கூற, “ஆமா ஆமா, உங்க பொண்ணுக்கு இன்னும் நல்லாதான் சொல்லி கொடுங்க. அப்போதான் அவ எல்லார் கிட்டயும் போய் இன்னும் சண்டை போட்டுட்டு வருவா. எங்க அவ தான் புத்தி இல்லாம இப்படி நடந்துகிறானா? நீங்களும் அவளுக்கு ஒத்து ஊத்துறீங்களே. இது நல்லா இருக்கா? அவளுக்கு கால காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சு அவளுக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுக்க வேணாமா நீங்க?” என்று கிச்சனில் இருந்து ரமா சத்தமிட.

அதைக் கேட்ட சங்கவி, “அப்பா… அந்த லூசை கொஞ்ச நேரம் பேசாம இருக்க சொல்லுங்க. நான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். இது வேற வந்ததிலிருந்து என்னை கடுப்பேத்திட்டே இருக்கு” என்று சொல்ல, அவள் ஹாலில் இருந்து “ஏய் ரமா இங்க வாடி” என்று அழைக்க.

அவர்களுக்காக காபி கொண்டு வந்த வேலைக்காரப் பெண் கையில் காபி வைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் நிற்க, அவளைத் திரும்பிப் பார்த்த சங்கவி, “ஏய் உன்னை யாருடி காபி கொண்டு வரச் சொன்னது? நான் எங்க அம்மாவை தானே காபி கொண்டு வரச் சொன்னேன்?” என்று அந்தப் பெண்ணை முறைத்தவர், “ரமா” என்று அவள் அம்மா பெயரைச் சொல்லி கத்த.

“இப்ப எதுக்குடி அப்பாவும் பொண்ணும் மாத்தி மாத்தி என்னை ஏலத்துல விடறீங்க? அதான் நான் வந்துட்டு இருக்கேன் இல்ல. ஏன் அவ காபி கொண்டு வந்து கொடுத்தா நீ குடிக்க மாட்டியா? நானே தான் கொண்டு வந்து உன் கையில் கொடுக்கணுமா?” என்று அவர் கேட்க.

ஆபீஸில் துர்காவிடம் காபி கேட்டபோது அவளுக்குப் பதிலாக அந்த லதா தான் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அதேபோல இங்கே தன் அம்மாவும் தன்னை அவமானப்படுத்துகிறார் என்று உள்ளுக்குள் எரிந்த சங்கவி, அவள் அம்மாவை எதுவும் கூற முடியாமல் பல்லைக் கடித்தவள், “அப்பா, இந்த அம்மா ஏன் அப்பா இப்படி இருக்கு? நம்மக்கு மட்டும் எப்பவுமே சப்போர்ட் பண்ணவே மாட்டேங்குது” என்று சலித்துக் கொள்ள. அதற்குள் ரமா அவள் அப்பாவிடம் வந்து “ஏங்க, இப்ப எதுக்குங்க என்னை கூப்பிட்டீங்க?” என்று சலித்துக் கொண்டு அவள் அவர் பக்கம் வந்து நிற்க, அவர் எழுந்து ரமாவை ஓங்கி ஒரு அறை விட்டார்.

அவ்வளவு நேரம் வாய் வாய் பேசிக் கொண்டிருந்த ரமா, சங்கவியின் அப்பா அவரை அறிந்ததும் அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாக நின்று விட்டார். அவர் கண்ணில் கண்ணீர் மடமடவென்று வெளியே வர, அதையெல்லாம் பார்த்த சங்கவிக்குக்கும் அவள் அப்பாவிற்கும் துளிகூட அவர் மேல் இரக்கம் கொள்ளவில்லை.

அவர் ரமாவைப் பார்த்து, “இங்கு பாரு, இன்னொரு தடவை என் பொண்ணுக்கு கோபமாக இருக்கிறப்ப அவகிட்ட நான் அதை எதையும் பேசி அவளை மறுபடியும் டென்ஷன் பண்ணேன்னு வை, அப்புறம் நடக்கிறதே வேற. உன் வேலை என்ன, சமையல் கட்டுக்குப் போய் சமைக்கிறது மட்டும்தான். அதை மட்டும் நீ செய், சரியா? என் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கணும், அவளுக்கு என்ன செஞ்சு கொடுக்கணும்னு எனக்கு நல்லா தெரியும், புரிஞ்சுதா?” என்று அவர் கர்ஜிக்க, அதற்கு மேல் ரமா எதுவும் பேசாமல் “சரி” என்பது போல தலையை பாவமாக ஆட்டிவிட்டு நேராக சமையலறைக்குச் சென்று விட்டார்.

அழுதுகொண்டு சமையலறைக்குள் சென்றவர், அங்கே இருந்த அவர்கள் வீட்டில் சங்கவி பிறப்பதற்கு முன்னாலேயே வேலை செய்து கொண்டிருக்கும் அந்தப் பாட்டி ரமாவை சமாதானம் செய்ய, “உனக்குத்தான் உன் புருஷனைப் பத்தி தான் நல்லா தெரியுமே? அவன் ஒரு கல் நெஞ்சக்காரன். பெத்த பிள்ளையவே யாருக்கும் தெரியாம யாருக்கோ தூக்கி கொடுத்திருந்தானே” என்று அவர் ஏதோ கூற வர, ரமா வேகமாக அவர் வாயை பொத்தி, “சுற்றியும் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதையாக பேசவும்” என்று அவரிடம் ஜாடை செய்துவிட்டு, கண்களை துடைத்துக் கொண்டு தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்.

அந்தப் பாட்டியும் தன் மனதுக்குள்ளேயே ‘இவனுக்கு எப்போதான் புத்தி வரப்போகுதோ? பாவம் இந்தப் பிள்ளையைப் போட்டு இந்த பாடுபடுத்துறானே’ என்று நினைத்தவர், ‘சரி இதெல்லாம் நம்ம கையிலையா இருக்கு.’

‘இந்த ரமாவுக்கு சீக்கிரமா ஒரு நல்ல வழியை காமிடா கடவுளே’ என்று கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு சென்று ரமாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்தார்.


ஆதிக்கு ஆபீஸ் வேலை முடிந்ததும் கிளம்பத் தயாராக, துர்காவும் தன் வேலைகளை முடித்துவிட்டு அவனுக்காக தன் கேபினில் காத்திருந்தாள். லதாவும் விவேக்கும் அவளிடம் வந்து கூறிவிட்டு கிளம்பிச் செல்ல, அப்போது ஆபீஸில் மற்றவர்களும் கிளம்பிச் சென்றனர்.

இப்போது ஆதி, துர்கா, கதிர், விக்கி நால்வர் மட்டுமே இருந்தனர். கதிர் தன் கேபினில் இருந்து வெளியே வர, அவனுடன் சேர்ந்து விக்கியும் உள்ளே வர, துர்காவிடம் அருகில் வந்து இருவரும் “என்ன துர்கா, இன்னும் கிளம்பலையா?” என்று விக்கி கேட்டுக்கொண்டே வர, “இல்ல விக்கி, அவருக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று உள்ளே கையை காட்டி, “ஓ உங்க வீட்டுக்காரர்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று அவன் கிண்டல் செய்ய, “டேய், எல்லாரையும் மாதிரியும் நீயும் ஏண்டா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து கிண்டல் பண்ற? உனக்கே எங்க கல்யாணம் எப்படி நடந்தது என்று தெரியும் தானே?” என்று துர்கா கூற, “இன்னைக்கு எங்க வீட்டுக்கு போறோம், நாளைக்கு தான் அங்க நம்ம வீட்டுக்கு வருவோம். எங்க அம்மா அப்பா போன் பண்ணிட்டாங்க. எங்க ரெண்டு பேரையும் சீக்கிரமா கிளம்பி வரச் சொல்லி. ஆனால் ஆதி கிட்ட போய் இப்படி சொல்லி வரச் சொல்றதுக்கு எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

“இதுக்கு எதுக்குடி பயந்துட்டு இருக்க? நேரா போய் ‘இந்த மாதிரி… இந்த மாதிரி… இந்த மாதிரி…’ அப்படின்னு இந்த விஷயத்தைச் சொல்லிட்டு வர வேண்டியதுதானே? அவனும் ‘சரி வா போலாம்’னு உன்கூட கெடந்து வந்து இருக்கப் போறான்” என்று விக்கி கூற.

“ஓ அப்படியா? அப்ப நீயே ‘அந்த மாதிரி… அந்த மாதிரி… எங்க அம்மா அப்பா இப்படி சொன்னாங்க’ அப்படின்னு நீயே போய் உன் ஃபிரெண்டுகிட்ட அந்த மாதிரி சொல்லிட்டு வா பார்ப்போம்” என்று துர்கா கூற. விக்கி அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் வாயை மூடிக்கொள்ள, “இப்போ புரியுதா நான் ஏன் ஆதி கிட்ட சொல்றதுக்கு யோசிச்சேன்னு?” என்று அவள் கூற, “சரி தாயே, ஒத்துக்கறேன். என் ஃபிரெண்டு பயங்கர கோவக்காரன்னு ஒத்துக்கறேன். வெளியே வர வரைக்கும் வெயிட் பண்ணுவோம். என்ன பண்றது?” என்று விக்கி அமைதியாக இருக்க, அந்த நேரத்தில் ஆதி வேலைகளை முடித்துவிட்டு லேப்டாப்பைக் எடுத்துக்கொண்டு அவன் கேபினை விட்டு வெளியே வந்தான்.

வந்ததும் நேராக துர்காவைப் பார்க்க, அங்கே விக்கியும் கதிரும் அவளுடன் அரட்டை அடித்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், ‘இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இருக்காதா? எப்ப பாரு இந்த துர்கா பின்னாடி சுத்திட்டு இருக்காங்க’ என்று மனதில் நினைத்து அவர்களை வறுத்தெடுத்தவன், அவர்கள் அருகில் வந்ததும் “ம்க்கும்….” என்று தன் தொண்டையை கனைக்க.

விக்கி கண்களை துர்காவிடம் காட்ட, அவளும் திரும்பி எழுந்து நின்று ஆதியைப் பார்க்க, துர்காவைப் பார்த்து “போலாமா?” என்று அவன் கேட்க, “ஓகே ஆதி, போகலாம். நான் ரெடியா தான் இருக்கேன்” என்று கூறிவிட்டு தன் ஹேண்ட்பேக்கை கையில் எடுத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவள், பின் இவர்கள் இருவரையும் பார்த்து “நாளைக்கு காலைல நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க” என்று கூற, கதிர் அங்கு கீர்த்திகா இருப்பாள் என்று மனதில் வைத்துக்கொண்டு, “இல்ல துர்கா, நாங்க நேராக ஆபீஸ் வந்துருவோம். நீயும் ஆதியும் நாளைக்கு ஆபீஸ் வந்துருங்க” என்று அவன் கூற, “நான் உன்ன ‘வரேன்னு’ கேட்கல. ‘வரச் சொன்னேன்’, சரியா? விக்கி, நீயும் அவன் கூட நாளைக்கு காலைல நேரமே எங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடுங்க” என்று கூறிவிட்டு திரும்பியும் பார்க்காமல் ஆதியுடன் கிளம்பிச் சென்றாள்.


ஆதி துர்கா வீட்டுக்கு வரவே இரவு 10 மணி ஆகிவிட்டது. அவர்கள் வந்ததும் துர்காவின் அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்து “வாங்க மாப்பிள்ளை, சாப்பிடலாமா? நான் எடுத்து வைக்கிறேன்” என்று கூற, “இல்ல மாமா. இனிமேல் தான் சாப்பிடணும். ஒரே நிமிஷம், நான் ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்று ஆதி துர்காவின் அறை நோக்கி மேலே செல்ல.

துர்கா அருகில் வந்து அவள் அம்மா “என் மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா பேசுறாரா?” என்று கேட்க, “ஏம்மா, ஆதி என்ன, அவன் எப்பவும் போலத்தான் என்னிடம் நல்லா தான் பேசிட்டு இருக்கான்” என்று கூற.

“அடியே, எப்பவும் போல பேசுறது வேற, கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி ஆனதுக்கு பிறகு பேசறது வேறடி. மனைவி என்கிற முறையில உன்கிட்ட அன்பா பழகுறாரா?” என்று கேட்க, “அம்மா, எனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி எல்லாம் கேட்டா நான் என்னன்னு பதில் சொல்லுவேன்? கொஞ்ச நாள் எனக்கும் ஒரு டைம் வேண்டாமா?” என்று கூறியவள் “சரி, நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா? கீர்த்திகா சாப்பிட்டாளா?” என்று கேட்க, “நாங்க எல்லாரும் சாப்பிட்டோம். கீர்த்திகா தூங்கிவிட்டால். உங்க ரெண்டு பேருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்” என்று கூற, “சரி, வா. ஆதி வந்ததும் நானே அவனுக்கு சாப்பாடு பரிமாறறேன். நீங்க போய் தூங்குங்க” என்று கூறி அவள் பெற்றோரை தூங்க அனுப்பி வைத்தாள்.

அவர்கள் சென்றதும் ஆதி “ஒரு ஃபைவ் மினிட்ஸ் நான் டிரஸ் ஆகிட்டு வந்துடுறேன். ப்ளீஸ், கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று கூற, “ஓகே துர்கா, டேக் யுவர் டைம்” என்று கூற, “தேங்க்ஸ் ஆதி” என்று கூறி சிரித்தவள் வேகமாக தன்னறைக்கு ஓடினாள்.

அவள் வேகமாக ஓடிச் செல்வதைப் பார்த்து ரொம்ப சிரித்தவன், அவள் வரட்டும் என்று டைனிங் டேபிளில் அவளுக்காக காத்திருக்க, மேலே சென்று ஐந்து நிமிடங்களில் ரெடியாகிவிட்டு கீழே இறங்கி வர, அவள் வரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் அப்படியே வாயை பிளந்து நின்றான்.

“சாப்பிடலாமா ஆதி?” என்று கூறிக்கொண்டு அவன் அருகில் வந்த துர்கா, அவன் வாயைத் திறந்து கொண்டு அவளைப் பார்ப்பதை கவனித்தவள் மனதிற்குள் சிரித்துக் கொண்டு, அவன் தோளைத் தொட்டு “ஆதி, ஏன் என்னாச்சு? இப்படி பார்க்குற?” என்று கேட்க.

அவளை கீழே இருந்து மேலாக ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவள் “சாரி ஆதி, நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு தான் ரெண்டு நாளா நான் அந்த சேலையை கஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு இருந்தேன். என்னால அதை கட்டிட்டு தூங்க முடியல ஆதி. அதனாலதான் நான் எப்பவும் போடுற நைட் டிரஸ் போட்டுட்டு வந்தேன். உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே? இல்ல நான் போய் மறுபடியும் சேலையை கட்டிக்கவா?” என்று கூற.

அவள் அணிந்திருந்த நைட் டிரஸ்ஸை கீழிருந்து மேலாகப் பார்க்க, ஒரு குட்டி டிரௌசரும் அதன் மேல் இடுப்புவரை மறைத்து குட்டி சட்டையும் அணிந்திருந்தாள். கீழிருந்து மேலாக அவர் கால்களைப் பார்க்க, சந்தன நிறத்தில் வாழைத்தண்டு போல அவள் கால்கள் இருக்க, அதைப் பார்த்ததும் ஏனோ அவனுக்கு அதைத் தொட்டு தடவி பார்க்க வேண்டும் என்பது போல ஏக்கம் வந்தது. அதை அடக்கிக் கொண்டவன் அப்படியே தன் பார்வையை மேலே உயர்த்த, திரண்டு இருந்த இரண்டு மாம்பழங்களைப் பார்த்ததும் ஏனோ அவன் மனமும் கண்ணும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.

“ஆதி” என்று துர்கா அவனை அழைக்கவும், வலுக்கட்டாயமாக தன் கண்களை அவள் மார்பின் மேல் இருந்து பிரித்தவன், “என்ன” என்பது போல அவளைப் பார்க்க, “உனக்கு ஓகேவா? நான் இல்லன்னா போய் சாரி கட்டிட்டு வரட்டுமா?” என்று அவள் கேட்க, “இல்ல இல்ல, பரவாயில்லை. இந்த டிரஸ் நல்லா தான் இருக்கு. நீ இதையே போட்டுக்கோ” என்று அவன் கூற, அவனைப் பார்த்து சிரித்துவிட்டு “தேங்க்ஸ் ஆதி. சாப்பிடலாமா?” என்று கூறி, அவனுக்கும் தட்டில் உணவைப் பரிமாறி அவளும் சாப்பிட, “சரி ஆதி, நீ மேல ரூமுக்கு போ. நான் உனக்கு பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்” என்று கூறி அவனை அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலேயே பாலை காய்ச்சி கொண்டு போய் ஆதிடம் கொடுத்தாள்.

அவள் ஒரு டம்ளர் மட்டுமே கொண்டு வந்திருக்க, “நீ சாப்பிடலையா?” என்று ஆதி கேட்க, “இல்ல ஆதி, பால் உனக்கு அளவு கொஞ்சமா தான் இருந்துச்சு. எனக்கு வேண்டாம். நீ குடிச்சுக்கோ. உனக்குத்தான் பால் சாப்பிடலைன்னா நைட் தூக்கம் வராதுன்னு சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல” என்று அவள் கூற, “இல்ல பரவாயில்லை துர்கா… இன்னைக்கு கொஞ்சம் குடிச்சுட்டு கொடு. அப்புறம் நான் குடிச்சிக்கிறேன்” என்று கூறி அவள் கையில் பால் டம்ளரை நீட்ட, “இல்ல ஆதி, பரவாயில்லை” என்று அவள் கூற, “பரவாயில்லை துர்கா, இந்தா குடிச்சுட்டு கொடு” என்று கூறி அவள் கையில் டம்ளரைத் திணிக்க, “சரி” என்று வாங்கி பாலை சிறிது குடித்துவிட்டு அவனுக்கு கொடுத்தாள். ஆதிக்கும் அவள் ஒதுக்கப்பட்ட டம்ளரை வாங்கி, அதே இடத்தில் வாய் வைத்து அவனும் குடிக்க, அவனுக்கு ஏனோ அவள் இதழை சுவைத்தது போல தோன்ற, கவனிக்காத துர்கா “சரி ஆதி, நான் தூங்கறேன்” என்று கூறி அவனைத் தாண்டிச் சென்று கட்டிலின் மறுபக்கம் படுத்து உறங்கிவிட்டாள்.

கொடுத்துவிட்டு திரும்பிப் பார்த்த ஆதி, அதற்குள் துர்கா உறங்கி விட்டதைப் பார்த்ததும் ஏக்கமாக அவளைப் பார்க்க, அன்று மதியம் ஆபீஸில் நடந்த விஷயங்களை ஆசைப்பட்டவன், அவள் தனக்காக சங்கவியிடம் சண்டையிட்டு அவளை அடித்தது, தன்னை ‘என் ஆதி’ என்று அவள் சொன்னதும் நினைவில் வர, அவனுக்கு துர்காவின் மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உண்டானது.

தன் மேல் அவள் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டான் ஆதி. அவள் தூங்கிக்கொண்டிருக்க, அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன், அவள் தலைமுடி அவள் முகத்தை மறைக்க, அதை லேசாகத் தன் விரல்களால் ஒதுக்கி அவள் காதோரம் ஒதுக்கி விட்டவன், அவள் முகத்தையே பார்க்க, துர்கா நன்றாகத் தூங்கிவிட்டாள்.

மெல்ல தன் விரல்களை அவள் முடியிலிருந்து எடுத்தவன், அப்படியே அவள் முகத்திற்கு கீழாகக் கொண்டு வந்தவன், அவள் உதட்டை லேசாகத் தன் விரலால் தொட்டுப் பார்க்க, அது பஞ்சை விட மிருதுவாக இருக்க, பின் தன் விரலைக் கொண்டு அதைத் தடவிப் பார்த்தவன், உதட்டைச் சுவைக்க வேண்டும் போல தோன்ற, பின் தனக்குத்தானே “டேய் ஆதி, என்னடா பண்ணிட்டு இருக்க? அவ உன்னை நம்பித்தான் உன் பக்கத்துல படுத்துட்டு இருக்கா. ஆனா நீ அவளுக்குத் தெரியாம அத்துமீறி வேலை பார்த்துட்டு இருக்க” என்று அவனது மனம் அவனை எச்சரிக்கை.

அவன் அவளிடமிருந்து கையை எடுத்தவன், அவளிடம் இருந்து தள்ளி படுத்துக் கொண்டான். அவளிடம் இருந்து தள்ளி படுத்தானே ஒழிய, அவன் பார்வை முழுவதும் துர்காவின் மேலேயே இருந்தது.

அவள் எப்போது புரண்டு படுத்து தன் மீது கைகளையும் கால்களையும் தூக்கி போடுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டே படுத்திருந்தான் ஆதி. அவள் இன்று முழுவதும் வேலை செய்த களைப்பில் நன்கு அசந்து தூங்கிவிட்டால். சிறிது கூட அசையவே இல்லை. இவனும் ‘அவள் தன்மேல் கை கால்களை போடுவாள்’ என்று பார்த்து, அவன் எதுவும் நடக்காமல் ஏமாற்றத்திலேயே படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.

நள்ளிரவில் திடீரென்று தன்மேல் யாரோ கை வைக்கவும், கண்களை விழித்துப் பார்த்த காட்சி, அவன் மீது துர்கா தன் கையையும் காலையும் போட்டு அவன் அருகில் படுத்திருப்பதைப் பார்த்தவன், லேசாகப் புன்னகை செய்தவன் திரும்பி, தன் மீது அவள் போட்டிருந்த காலின் மீது தன் கையை வைத்து அவள் காலைத் தொட்டுப் பார்த்தான். வாழைத்தண்டு கால்கள் நன்கு வழுவழுவென்று இருக்க, சிறிது நேரம் அவள் காலை தடவ, துர்கா தூக்கத்தில் தன் காலில் ஏதோ ஊறுவது போல உணர்ந்து அவள் கையை கொண்டு தன் காலைத் தட்டி விட, ஆதி அப்போதுதான் முட்டாள்தனத்தை நினைத்தவன், அவள் கையையும் காலையும் தன் மீது இருந்து எடுத்து விட்டவன், “துர்கா” என்று கத்தினான்.

அவன் அப்படி கத்தவும், நன்கு தூங்கிக்கொண்டிருந்த துர்கா அதிர்ந்து “என்னவோ” என்று பதறி அடித்துக்கொண்டு எழ, “உன்னால ஒரு பக்கம் அசையாமல் படுத்து தூங்க முடியாதா? இப்படி அசிங்கப்படுத்தி என் மேல கையையும் காலையும் தூக்கிப் போட்டுட்டு இருந்தா நான் எப்படி தூங்குவது?” என்று அவன் மிகவும் கோபமாக அவளைப் பார்த்து கேட்க.

தான் தூக்கத்தில் புரண்டு ஆதி மீது தன் கையையும் காலையும் தூக்கிப் போட்டு தூங்கிவிட்டோமோ, அவனை சங்கடப்படுத்தி விட்டோமே என்று நினைத்தவள், “சாரி ஆதி, மன்னிச்சிடு. நான் தெரியாம இப்படி பண்ணிட்டேன். நான் இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்” என்று கூறியவள், கட்டிலில் இருந்து தலைகாணி எடுத்துக்கொண்டு இறங்கிச் சென்று சோபாவில் படுத்துக்கொண்டாள்.

அவசரப்பட்டு அவளைத் திட்டிவிட்டோமே என்று வருத்தப்பட்ட ஆதி, “துர்கா, சாரி. நான் சரியா தூங்க முடியலைன்னு சொல்லிட்டு ஏதோ கோபத்திலும் ஒண்ணும் அப்படி சொல்லிட்டு. அதுக்காக நீயே அங்க போய் படுத்துக்கிற? பரவாயில்லை, இங்கே வந்து படு” என்று கூற, “இல்லை ஆதி, பரவாயில்லை. நான் உன் பக்கத்துல படுத்தா மறுபடியும் கையும் காலையும் தூக்கி போடுவேன். உன்னால சரியா தூங்க முடியாது. உங்க வீட்டு கட்டில் அளவுக்கு எங்க வீட்டு கட்டில் ரொம்ப பெருசு இல்லை. அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க. நாளைல இருந்து நம்ம வீட்ல படுக்கும்போது நான் உனக்கு டிஸ்டர்ப் பண்ணாம படுத்து தூங்குகிறேன்” என்று அவள் சொல்ல, ஆதியின் மனம் ஏனோ மிகவும் சங்கடப்பட்டது.

“மறுபடியும் சாரி துர்கா, மேலே வந்து படுத்துக்கோ” என்று கூற, “அவசியம்” என்று கூறிவிட்டு அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு தலைகாணியைப் போட்டு “இனிமேல் உனக்கு என்னால் டிஸ்டர்ப் ஆகாது ஆதி. நீ படுத்து தூங்கு” என்று கூறி அவளும் திரும்பி படுத்துக் கொண்டாள்.

தங்கள் இருவருக்கும் இடையில் தலைகாணியைப் போட்டு படுத்ததும் ஆதிக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. வேறு வழியில்லாமல் அவனும் படுத்து உறங்கிவிட்டான்.

EPISODE 18

காலை விடிந்ததும் எழுந்த ஆதி, தன் அருகில் துர்காவைப் பார்க்க, அவள் அங்கு இல்லாமல் இருக்கவே ஏமாற்றம் அடைந்தவன், எழுந்து அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட, பாத்ரூமுக்குள் இருந்து குளித்துவிட்டு வெளியே வந்தாள் துர்கா.

பாத்ரூமிற்குள் இருந்து வெளியே வந்த துர்காவைப் பார்த்த ஆதி, அவள் வெறும் உள் பாவாடையும் ஜாக்கெட்டும் மட்டும் அணிந்து, மேலே ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வெளியே வரவும், அவளை அப்படிப் பார்த்ததும் ஆதிக்கு துர்காவை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும் போல் தோன்றியது.

சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், வலுக்கட்டாயமாக தன் பார்வையை அவள் மீது இருந்து திருப்பியவன், வேகமாக எழுந்து சென்று துர்கா இருக்கும் இடம் பார்க்காமல் பாத்ரூமுக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.

அவன் அப்படி செய்ததும் துர்காவுக்கு உள்ளுக்குள் மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னை நிமிர்ந்து பார்க்கக் கூட பிடிக்காமல் தான் அவன் இப்படி வேக வேகமாக பாத்ரூமுக்குள் எழுந்து சென்று விட்டான் என்று தப்பாகப் புரிந்து கொண்டாள் துர்கா.

தனக்கு அவனுடன் சந்தோஷமாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லை போல, அவன் தன்னை இன்னும் தன் தோழியாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று துர்கா நினைத்து வருத்தப்பட்டாள்.

ஆதி குளித்து வருவதற்குள் துர்கா ரெடியாகி கீழே சென்றுவிட, குளித்துவிட்டு வந்த ஆதி இடுப்பில் ஒரு துண்டோடு தலையைத் துவட்டிக்கொண்டு அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட்டான்.

அவன் பழகிய அறையில் பாதி கூட இல்லாத அந்த அறை முழுவதும் துர்காவின் சிறு வயது புகைப்படம் முதல் தற்போது வரை எடுத்த புகைப்படங்கள் ஃபிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது.

அவளின் ஆறு வயது முதல் தற்போது வரை உள்ள போட்டோக்கள் அதில் இருந்தது. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தவன், அவள் ஆறு வயது இருந்தபோது எடுத்துக் கொண்ட போட்டோவைப் பார்க்க, அவனுக்கு ஏதோ தோன்ற, அந்தப் போட்டோவை இதற்கு முன் வேறு எங்கோ பார்த்திருப்பதாகத் தோன்ற, அந்தப் போட்டோவை மட்டும் யாருக்கும் தெரியாமல் எடுத்து தன் பேக்குக்குள் வைத்துக் கொண்டான்.

அதன்பின் சென்று ரெடியாகி ஆதி கீழே வர, அங்கே விக்கியும் கதிரும் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து “வாங்கடா” என்று கூறிக்கொண்டு சிரித்துக் கொண்டு அவர்கள் அருகில் வந்து அவன் அமர, ஆதியைப் பார்த்து “என்னடா அதிசயமா சிரிச்சிட்டு வர? உன்னை இப்படி எல்லாம் நாங்க பார்த்ததே இல்லையே இதுவரைக்கும்” என்று விக்கி கேட்க.

விக்கியை முறைத்த ஆதி, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். உனக்கு தான் கண்டதெல்லாம் தோனிட்டு இருக்கு” என்று அவன் வாயை அடைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த கதிருடன் ஆபீஸ் பற்றி கேட்க ஆரம்பித்தான்.

ஆபீஸ் விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் ஆதியின் கண்கள் துர்கா எங்கு இருக்கிறாள் என்று தேடிக்கொண்டு இருந்தது.

அப்போது சமையலறைக்குள் இருந்து சிரிப்பு சத்தம் கேட்க, அங்கே திரும்பிப் பார்த்த ஆதி துர்காவைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

இவர்கள் இருவரும் இன்று ஆதியின் வீட்டிற்கு செல்ல இருப்பதால், துர்காவின் அம்மா இவர்கள் இருவருக்கும் இரவே இவர்கள் இருவரும் உடுத்திக் கொள்ள புதுத் துணியைக் கொடுத்திருந்தார்.

ஆதி பச்சை கலர் சட்டை அதற்கு மேட்ச்சாக பேன்ட் அணிந்திருக்க, அவன் சட்டைக்கு மேட்ச்சாக பட்டு சேலை அணிந்து, லேசாக ஒப்பனை செய்து, சுருளாக பின்னலிட்டு, தலை நிறைய மல்லிகை பூ வைத்து, கீர்த்திகாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

துர்காவைப் பார்த்ததும் அவள் அழகைப் பார்த்து மெய்மறந்து தான் போனான் ஆதி. அதுவரை பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியாகிவிட, கதிர் நிமிர்ந்து ஆதியைப் பார்க்க, ஆதியின் பார்வை வேறு புறம் இருக்க, அவன் எங்கே பார்க்கிறான் என்று திரும்பிப் பார்த்த கதிர், துர்கா வந்து கொண்டிருக்க, அதைப் பார்த்தவன், ‘ஓஹோ, ஆதி கூட ரூட்டை கரெக்டா போயிட்டிருக்கும் போல’ என்று நினைத்தவன்.

அப்படியே தன் பார்வையை நகர்த்த அவள் அருகில் கீர்த்திகா வந்து கொண்டிருந்தாள். ‘இவளா இது? உன்னைப் பார்த்தாலே எனக்கு ஆத்திரமா வருது’ என்று மனதிற்குள் அவன் நினைத்தாலும், அவன் பார்வை அவளை விட்டு நகரவே இல்லை.

சிம்பிளாக காட்டன் சுடிதார் அணிந்து ஃப்ரீ ஹேர் விட்டு ஒரு கிளிப்பை குத்தி இருந்தாள். கழுத்தில் ஒரு சின்ன செயின் அணிந்திருந்தாள். துர்காவுடன் சிரித்துப் பேசிக்கொண்டே உணவுகளைக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து வைத்துக் கொண்டே தன் பார்வையை கதிர் இருக்கும் இடம் திருப்ப, அதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கதிர் அவள் தன்னை பார்க்கிறாள் என்றதும் சற்றென்று தன் பார்வையை திருப்பிக்கொண்டு எதிரில் இருக்கும் விக்கிடம் பேசுவது போல அவனைப் பார்க்க, அவன் இவர்கள் இருவரையும் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான்.

ஆதி இதையெல்லாம் சட்டை செய்துகொள்ளாமல் துர்காவை சைட் அடிப்பதிலேயே குறியாக இருந்தான். ‘அண்ணனும் தம்பியும் ஒரே வீட்ல அக்காவையும் தங்கச்சியையும் அவங்க அம்மா அப்பா முன்னாடியும் தைரியமாக சைட் அடிக்கிறானுங்க. ஆனா எனக்குன்னு ஒருத்தி வந்து மாட்ட மாட்டேங்கிறாளே? நான் மட்டும் இன்னும் சிங்கிளாவே சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்று வருத்தப்பட்டான் விக்கி.

சிறிது நேரத்தில் ஆதியின் பெற்றோரும் வந்துவிட, அவர்களிடம் எல்லோரும் பேசிக் கொண்டு அனைவரும் சென்று சாப்பிட்டுக்கொண்டு இருக்க, அப்போது கதிரின் பக்கத்தில் வந்த கீர்த்திகா, அவனிடம் ஒரு மூடிய தட்டை வைக்க, புரியாமல் அவளை நிமிர்ந்து பார்த்த கதிர் “என்ன?” என்பது போல அவளைக் கோபமாகப் பார்க்க, அவள் “ப்ளீஸ்” என்று அவனிடம் கெஞ்சி, “அந்த தட்டை ஓபன் செஞ்சு பாருங்க” என்று கூறினாள். கதிர் அவளை முறைத்துக்கொண்டு மூடி இருந்த தட்டை லேசாகத் திறந்து பார்க்க, அதில் ‘மன்னித்துவிடு கதிர்’ என்று எழுதி இருந்தது.

அதைப் பார்த்ததும் கதிருக்கு, ‘பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப சாரி கேக்குறாளா இவ? இவ முகத்திலேயே விழிக்க கூடாது என்று தான் இங்கு வராமல் இருந்தேன். துர்கா தான் என்னை வர சொல்லி கட்டாயப்படுத்திட்டாள்’ என்று கூறி அந்தத் தட்டை மூடி வைத்துவிட்டு சாப்பிடத் தொடங்க, அவன் ஏதாவது கோபப்படுவான் என்று எதிர்பார்த்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க, ஆதியையும் துர்காவையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றனர்.

துர்கா விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட சொல்லிவிட்டு சாமிக்கு தீபாராதனை காட்டினார் துர்காவின் அம்மா. பின் தீபாரதனை தட்டைக் கொடுத்தவர், “தம்பி, இதுல இருக்குற குங்குமத்தை எடுத்து துர்காவுக்கு வெச்சு விடுங்க” என்று அவர் கூற.

ஆதி “என்ன?” என்பது போல புரியாமல் நிற்க, ‘அவன் தனக்கு குங்குமம் வைத்து விடு விரும்பவில்லை போல’ என்று நினைத்துக்கொண்ட துர்காவின் அம்மா, “குடுங்க, நானே வெச்சிக்கிறேன். ஆதிக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை” என்று கூறி அவர் கையில் இருந்த தட்டை வலுக்கட்டாயமாக வாங்கி, அதில் இருந்து குங்குமத்தை எடுத்து அவளே வைத்துக் கொண்டாள்.

தான் அவளுக்குக் குங்குமம் வைத்து விடுவது பிடிக்காமல் தான் அவள் வலுக்கட்டாயமாக வாங்கி குங்குமத்தை வைத்துக் கொண்டாள் என்று ஆதி தப்பாக நினைத்துக் கொள்ள, இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, விக்கி அவர்கள் இருவரையும் பார்த்ததும், ‘இது சரி இல்லையே. ஆளுக்கு ஒரு புறமா போய்ட்டு இருந்தா எப்ப தான் ரெண்டு பேரும் ஒண்ணு சேருவது?’ என்று நினைத்தவன், ‘சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு கட்டணும்’ என்று நினைத்துக் கொண்டான் விக்கி.

ஆதி அவள் தன்னை குங்குமத்தை விட அனுமதிக்கவில்லை என்று நினைத்தவன் கோபத்தில் துர்காவைப் பார்க்க. அவன் கோபத்தில் இருப்பதை அறியாமல் துர்கா தன் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

பின் அனைவரும் கூறிவிட்டு கிளம்பிப் போக, துர்கா கீர்த்திகாவையும் அவள் அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதாள். துர்காவின் அம்மா “அழாதடா. இங்க பக்கத்துல தானே இருக்கு வீடு. நீ நினைச்சதும் அம்மா அப்பாவை பார்க்க வந்திரு. அப்படி இல்ல, எங்களை பார்க்கணும்னு தோணுச்சுன்னா சொல்லிவிட்டு, நாங்க ரெண்டு பேரும் உன்னை பார்க்க உங்க வீட்டுக்கு வந்திருவோம். மாப்பிள்ளை வீட்டுக்கு போகும்போது அழுதுட்டு போகாதடா கண்ணு. சிரிச்சிட்டு சந்தோஷமா போயிட்டு வா” என்று அவளைத் தேற்றி அவள் அம்மா அனுப்பி வைக்க, “சரி” என்று கூறி அவர்களுடன் கிளம்பிச் சென்றாள் துர்கா.


துர்கா வீட்டிலிருந்து கிளம்பி நேராக அவர்கள் இருவரையும் அருகில் இருந்த ஒரு பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றனர் விசாலாட்சியும் வெங்கடாசலமும்.

அவர்கள் இருவருக்கும் இந்த கோயிலில் வேண்டுதல் வைத்திருப்பதால், அந்த வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு ஆதி வீட்டிற்கு செல்லலாம் என்று கூற, “அம்மா என்ன இது? இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் ஆபீஸ் வர போகணும்” என்று கூற, “உன் கிட்ட நான் என்ன சொல்லி இருந்தேன்? ஒரு பத்து நாளைக்கு நீ ஆபீஸ் போக கூடாதுன்னு சொல்லி இருந்தேன். ஆனா நீ என்னடான்னா நேத்து ஆபீஸ் போனதும் பத்தாதுன்னு துர்காவையும் சேர்த்து உன் கூட வேலைக்கு அழைத்துக்கொண்டு போயிருக்க. நான் சொல்றதை கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா நீ? இன்னும் ஒரு வாரத்துக்கு நீ ஆபீஸ் பக்கம் போனேன்னு கேள்விப்பட்டேன், அப்புறம் நடக்கிறதே வேற” என்று அவனை மிரட்ட, விக்கியையும் கதிரையும் பார்த்து, “ஆதி இந்த ஒரு வாரமும் ஆபீஸ் பக்கம் வந்தால் எனக்குத் தெரிஞ்சது, உங்க ரெண்டு பேரையும் தொலைச்சிடுவேன்” என்று அவர்கள் இருவரையும் மிரட்ட.

கதிர் ஆதி அண்ணனிடம், “கொஞ்ச நாளைக்கு ஆபீஸ் பக்கமே தயவு செய்து வந்துவிடாதே. என்னால் அம்மா கிட்ட தினமும் திட்டு வாங்க முடியாது. ஒரு வாரம் தானே, அட்ஜஸ்ட் பண்ணிட்டு பேசாம துர்கா கூட வீட்டிலேயே இரு” என்று அவன் கூட, வேறு வழி இல்லாமல் ஆதிக்கும் “சரி” என்று சொன்னவன், கோவிலுக்குள் சென்று அவர்களுக்காகச் சொல்லப்பட்ட பரிகாரத்தைச் செய்ய ஆரம்பித்தனர் துர்காவும் ஆதியும்.

சிறு பரிகாரம் தான் என்பதால் சீக்கிரமே பரிகாரத்தை முடித்துவிட்டு அனைவரும் கிளம்பி ஆதியின் வீட்டிற்கு வர மதியம் ஆகிவிட்டது.

ஏற்கனவே முத்து தாத்தாவிடம் இவர்கள் மதியம் சாப்பிட வருவார்கள் என்று விசாலாட்சி கூறிவிட, அனைவரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப இப்போது துர்காவும் ஆதியும் மட்டும் அங்கே இருந்தனர்.

இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை, என்ன பேசிக் கொள்வது என்றும் தோன்றவுமில்லை. சிறிது நேரம் அமைதிக்குப் பின்பு ஆதி துர்காவைப் பார்த்து, “நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறதா இருந்தா ரெஸ்ட் துர்கா. நான் என்னோட ஃபிரெண்ட்ஸ் கொஞ்ச பேரு பார்க்க வேண்டி இருக்கு. அவங்கள பாத்துட்டு நான் வந்துட்றேன். நீ போய் ரெஸ்ட் எடு” என்றான். அவளும் “சரி ஆதி” என்றவுடன், அவன் செல்லும் வரை காத்திருந்து விட்டு, தன்னறைக்கு சென்று உடை மாற்றி விட்டு படுத்தவள் உறங்கி விட்டாள்.


வீட்டிலிருந்து கிளம்பிய ஆதி, நேராக ஒரு பிரபல ஹோட்டலுக்கு செல்ல, அங்கே அவனுக்காக முன்கூட்டியே வந்து காத்திருந்த அவனுடைய நண்பன் வினய்.

ஆதியைப் பார்த்ததும் எழுந்து நின்ற தன் நண்பனுக்கு கை கொடுத்து வாழ்த்திய வினய், “வாழ்த்துக்கள் ஆதி. ரொம்ப வருஷம் கழிச்சு எப்படியோ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நான் கேள்விப்பட்டேன். கதிரும் விக்கியும் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க.”

“நீ திடீர்னு போன் பண்ணி என்ன பாக்கணும்னு வர சொன்னப்போ, உனக்கு ரெண்டு பேரும் உன் கூட வருவானுங்கன்னு தான் நினைச்சேன். ஆனா நீ மட்டும் தனியா வந்து இருக்கியே? என்ன?” என்று கேட்டான் வினய்.

“இது ரொம்ப முக்கியமான விஷயம் வினய். அதனாலதான் அவங்க ரெண்டு பேர் இடமும் சொல்லாம நான் உன்னை பர்சனலா மீட் பண்ணனும் என்று வரச்சொன்னேன்” என்றான் ஆதி.

“என்ன, பர்சனலா மீட் பண்ணனும் அப்படின்னா ஏதோ முக்கியமான விஷயம் தான் இருக்கணும். சொல்லு ஆதி, என்ன விஷயம்?” என்று கேட்டான் வினய்.

தன் பக்கத்திலிருந்த போட்டோவை எடுத்து வினயிடம் காட்டிய ஆதி, “இந்த போட்டோவில் இருப்பது என்னுடைய வைஃப் துர்கா. இது அவளுடைய சின்ன வயசு படம்.”

“இந்த போட்டோவை நான் இதற்கு முன்னாடி எங்கேயோ பார்த்து இருக்கேன். என்கிட்ட தான் எனக்கு சரியா அடையாளம் தெரியல. இவளுடைய குழந்தை வயசு போட்டோவை நான் துர்காவோட அப்பா கிட்ட கேட்டதுக்கு, அவர் அப்போ அந்த போட்டோவை எடுக்கல, ‘அவ ஆறு வயசு இருக்கும்போது தான் போட்டோ எடுத்தோம்’ என்று ஏதோ கூறி என்னிடம் சமாளிக்கிறார். இவளைப் பற்றி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று எனக்கு என்னுடைய உள் உணர்வு சொல்லிக் கொண்டே இருக்கிறது. நீ இந்த போட்டோவை வைத்து எனக்காக கொஞ்சம் விவரங்களை சேகரித்து தர முடியுமா? துர்காவைப் பற்றிய விவரம் ஏதாவது கிடைத்தால் எனக்கு உடனடியாக நீ சொல்ல வேண்டும்” என்று கூறினான் ஆதி.

போட்டோவை வாங்கிப் பார்த்த வினய், “ஆதி, என்னால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் எல்லா விஷயமும் கலெக்ட் பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று கூறி, சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பிச் சென்றனர்.

தன் நண்பனைப் பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு வந்த ஆதி உள்ளே வர, முத்து தாத்தா அவனைப் பார்த்து “தம்பி, வந்துட்டீங்களா? காபி எதுவும் குடிக்கிறீங்களா?” என்று கேட்க, “இல்ல தாத்தா, நான் வெளியே என் ஃபிரெண்ட்ஸ் பார்த்துட்டு தான் வருகிறேன், அங்கேயே சாப்பிட்டு தான் வந்தேன்” என்றான் ஆதி.

அவரிடம் பேசிக் கொண்டே கண்களை நோட்டம் விட, அவன் பார்வையில் அர்த்தம் புரிந்து கொண்ட முத்து தாத்தா, “தம்பி, துர்கா பாப்பா நீங்க போனதும் மேல ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கிறேன்னு போச்சு தம்பி. இன்னும் கீழே வரவே இல்ல. சரி, நானும் ஏதோ அலுப்புல இருப்பாங்கன்னு சொல்லிட்டு துர்கா பாப்பாவை எழுப்பவே இல்ல. தம்பி, நீங்க வேணா பாப்பாவை போய் உன் மேல பார்க்கிறீங்களா?”

“ரொம்ப நேரமா தூங்குறாங்கன்னு நினைக்கிறேன். இப்பவே மணி ஆறு ஆயிடுச்சு. ராத்திரி முழிச்சுகிட்டாங்கன்னா தூக்கம் வராது பாப்பாவுக்கு” என்று அவர் கூற, அவன் “சரி” என்று தலையாட்டியவாறு தன் ரூமுக்குச் சென்றான்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் அங்கு துர்கா படுத்திருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியாக முகம் சுளித்தான்.

அவள் அம்மா வீட்டில் அணிந்திருந்தது போல டீ-சர்ட்டும் ட்ரௌசரும் அணிந்து படுத்திருந்தாள். அது கூட பிரச்சனை இல்லை. ஆனால் தன் கையையும் காலையும் பப்பரப்ப என்று பரப்பிக் கொண்டு கட்டிலில் படுத்திருக்க, அவளை அவ்வாறு பார்த்ததும் ஆதிக்கு கோபம் வர, வேகமாகச் சென்றவன் துர்காவின் தோளைத் தொட்டு உலுக்கி எழுப்ப.

தூக்கத்திலேயே எழுந்த துர்கா, அவன் கழுத்தில் தன் கையைப் போட்டு தன்னோடு சேர்த்து இழுக்க, அதிர்ச்சியான ஆதி அவள் மேல் போய் விழுந்தான்.

EPISODE 19

ஆதி வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வர, தாத்தா அவள் மதியம் சென்று படுக்கப் போனால் இன்னும் வெளியே வரவில்லை என்று கூற, துர்காவைப் பார்க்கச் சென்றவன், கதவைத் திறந்து உள்ளே செல்ல, அவள் கட்டிலில் படுத்திருந்ததைப் பார்த்ததும், தன் கையையும் காலையும் நன்கு பரப்பிக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருக்க.

அவளை அந்தக் கோலத்தில் பார்த்த ஆதி, ‘முழித்திருக்கும்போது மட்டுமே இவள் பெண் போல இருக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கும்போது இவள் ஒரு பெண் போல நடந்து கொள்வது இல்லை. இவள் அருகில் படுத்துத் தூங்க முடியாது’ என்று மனதுக்குள் அவளை வருத்து எடுத்தவன், அவள் அருகில் சென்று எழுப்ப.

அரைத் தூக்கத்தில் கண்விழித்த துர்கா, கண்களைத் திறந்து பார்க்க, அவள் எதிரில் நின்றவனைப் பார்த்துவிட்டு, தூக்கத்தில் கீர்த்திகா என்று நினைத்தவள், கீர்த்திகாவின் கழுத்தில் மாலை போலப் போடுவதாக நினைத்து ஆதியின் கழுத்தில் போட்டு அவனை அப்படியே இழுக்க, அவன் தடுமாறி துர்கா மீதே விழுந்தான்.

தன் மீது விழுந்தவனை தூக்கத்தில் கட்டிக்கொண்டு துர்கா, “கீர்த்துமா, ஒரு டென் மினிட்ஸ் தூங்குகிறேண்டி. என்ன டிஸ்டர்ப் பண்ணாத, ப்ளீஸ். வேணும்னா நீ என் கூட படுத்துக்கோ” என்பது போல அவனைக் கட்டிக்கொண்டு, தன்னோடு படுக்க வைத்துவிட்டு, அவள் மீது பின் கையையும் காலையும் போட்டு, ஆதியை அசைய விடாமல் படுத்துக் கொண்டாள்.

இப்போது ஆதியும் துர்காவும் மிக நெருக்கமாக ஒருவர் உடல் மற்றொருவரின் உடலில் ஒட்டி இருப்பது போல நெருங்கிப் படுத்துக்கொண்டிருந்தனர். துர்கா மீண்டும் கண்களை மூடி தூங்கத் தொடங்க, அவள் கைக்குள் சிக்கிக் கொண்ட ஆதி அப்போதுதான் அவள் முகத்தை மிகவும் நெருக்கமாகப் பார்த்தான்.

ஒப்பனை இல்லாத அவள் முகமும் பளிச்சென்று இருந்த அவள் சருமமும், அழகிய புருவங்களும் என ரசித்தவன், அவள் இதழில் வந்து பார்வையை நிறுத்தினான்.

ரோஜாப்பூ நிறத்தில் செதுக்கி வைத்தது போல அவள் உதடுகள் இருக்க, அவள் மூச்சுக்காற்று அவன் மூச்சுக்காற்றோடு கலக்க, துர்காவின் மூச்சுக்காற்று ஆதியின் உடலை ஏதோ செய்ய, அவள் உதட்டையே ஏக்கத்துடன் பார்த்தவன், அதைச் சுவைக்க வேண்டும் போல அவனுக்குத் தோன்ற, மறுபடியும் அவளைப் பார்க்க, தூக்கக் கலக்கத்தில் தன் நாவை வெளியே கொண்டுவந்து தன் உதடுகளை ஈரப்படுத்தியதைப் பார்த்தவன்.

அவள் ஈரப்படுத்திய அந்த ரோஸ் நிற உதடுகள், அந்த ரூமில் இருந்த விளக்கு ஒளியில் பளபளவெனத் தெரிய, அதை இப்போது சுவைக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்ற, தலையை குனிந்து அவள் முகத்திற்கு அருகில் இன்னும் நெருக்கமாக வந்தான் ஆதி.

அவள் முகத்தின் அருகில் ஆதி வரவும், அவன் மூச்சுக்காற்று மிகவும் சூடாக ஆனது. அவள் உதட்டைத் தன் ஒற்றை விரல் கொண்டு மெல்ல வருடினான். அவள் ஈரம் அவன் கையில் ஒட்டிக்கொள்ள, அவள் உதட்டில் இருந்து தன் விரலை எடுத்தவன் அந்த ஈரம் பட்ட விரலைத் தன் இதழ் கொண்டு முத்தமிட்டான்.

பின் மறுபடியும் துர்காவைப் பார்க்க, அவள் மேலும் அவனை இறுக்கிக்கொண்டு உடலை உரசிக்கொண்டு படுக்க, ஆதியின் நிலைதான் பரிதாபமாகப் போய் விட்டது.

துர்கா ஆதியை கீர்த்திகா என்று நினைத்து அணைத்துப் படுத்திருக்க, இதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்த ஆதி, அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவள் கைகளைத் தன் மேல் இருந்து எடுக்க.

மறுபடியும் அவள் தோள்களைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் தன் முகத்தை வைத்து உரச, இதுவரை அவளை ரசித்தவன், பொறுமை காத்தவன், இதற்கு மேல் தன்னால் முடியாது என்று நினைத்தவன், துர்காவைத் தன்னிடம் இருந்து பிரித்து அவளைத் தள்ளி படுக்க வைக்க, அவன் அவளைத் தன்னிடம் இருந்து பிரித்ததில் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்க்க, ஆதியின் ஒரு கை துர்காவின் தோள் மீது இருக்க, அவளை அணைத்து படுத்ததில் அறியாமல் தன்னுடைய காலை துர்காவின் கால் மேல் போட்டிருந்தான்.

துர்கா கண் விழித்ததும், ஆதியின் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவள், அதிர்ச்சியாகி கண்கள் விரிய “ஆதி” என்று பின்னே நகரப் போக, அவள் கட்டிலின் விளிம்பில் இருந்ததால் கீழே விழப்போக, அவளை அவசரமாகப் பிடித்து இழுத்த ஆதி, தன் மீது சேர்த்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

துர்காவும் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் ஆதியின் சட்டையை இறுக்கிப் பிடித்திருந்தவள் கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள். அவளைக் கீழே விழாமல் தன்னோடு சேர்த்துப் பிடித்திருந்த ஆதி அவள் முகத்தைப் பார்க்க, அவள் பயந்துபோய் கண்களை இறுக்க மூடிப் படுத்திருந்தாள்.

அவன் மெல்ல அவள் காதின் அருகில் குனிந்து ஹஸ்கி வாய்ஸில் “துர்கா….” என்று அழைத்தான். அவ்வளவுதான், துர்காவின் உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது அவனின் இந்த ஹஸ்கி வாய்ஸைக் கேட்டு. அவள் எதுவும் கூறாமல் கண்களை இறுக்க மூடிப் படுத்திருக்க, இப்படி “துர்கா” என்று மெதுவாக அவன் அழைக்க, துர்கா “ம்ம்ம்…..” என்று மட்டும் பாதி வார்த்தை விழுங்கியும் விழுங்காமலும் கூற, அவள் முகம் சிவந்து சூடாக இருப்பதை கவனித்த ஆதி, மெல்ல சிரித்தவன் “நீ கீழ விழல. நான் உன்னை பிடிச்சிருக்கேன். கண்ணை திறந்து பாரு” என்றான்.

அவன் சொன்னதும் பட்டென கண்களைத் திறந்து, தன்னைக் குனிந்து பார்க்க, அவன் உடலோடு அவளுடன் உரசி மிக நெருக்கமாக அவன் உடலோடு ஒட்டி படுத்திருப்பதை கவனித்தவள், வேகமாக அவனிடம் இருந்து விடுபட்டு எழுந்து அமரப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை தன் மீது போட்டுக்கொள்ள, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் துர்கா.

‘இவன் தானா தன்னை இப்படி கை பிடித்து இழுப்பது?’ என்று யோசித்தவள், அவனையே விழி இமைக்காமல் பார்க்க, “என்ன துர்கா, அப்படி பார்க்குற?” என்று ஆதி கேட்க.

“இன்று புதிதாக பேசுற… இ… இல்ல… ஆதி, நீதான் இப்படி பேசுறியா?” என்று நிறுத்தி அவனைப் பார்க்க.

“ஏன் துர்கா, நான் உன்னை பார்த்து இப்படியெல்லாம் பேசக்கூடாதா?” என்று கேட்டான். அவன் அப்படி கேட்டது மேலும் ஆச்சரியமாக துர்கா அவனையே பார்க்க, “இ… இல்ல… பேசலாம் ஆதி” என்றாள் தட்டுத் தடுமாறி.

“நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா? ஒண்ணு இல்ல, சில கேள்விகள் கேட்கலாமா?” என்று கேட்டான் ஆதி. அவனைப் பார்த்தவள் “ம்ம்ம்ம்…..” என்று தலையாட்டினாள்.

“உனக்கு என்ன பிடிக்குமா துர்கா?” என்று ஆதி கேட்டதும் துர்காவின் இதயத் துடிப்பு எகிறியது. ‘இவன் என்ன இப்படி நேரடியாகவே கேள்வி கேட்டு விட்டான்?’ என்று யோசித்த துர்காவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திடுதிருவென்று விழித்தாள்.

அவள் விழிப்பதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், “ம்ம்ம்… சொல்லு துர்கா” என்று கேட்டான். “அது… அது வந்து… எனக்கு உன்னை பிடிக்கும் ஆதி. உன்னோட குணம், ஒரு நல்ல நண்பனா உன்னோட பாசம், உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆதி. உன் கூட காலேஜில் படித்ததில் இருந்தே எனக்கு உன்னை நல்லா தெரியும். அதிலிருந்து எனக்கு உன் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

நீ இப்படி பொறுப்பாக அவனை பிடிக்கும் என்று கூறினாளே தவிர, நேரடியாக அவனை அவள் விரும்புகிறாள் என்பது போல, அவனை அவளுக்கு பிடிக்கும் என்பது போல அவள் கூறவே இல்லை. ஆனால் ஆதி எதிர்பார்த்த பதில் வேறான, ‘தன்னைக் காதலிப்பாள்’ என்று அவன் நினைத்துத்தான் அவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.

அவள் நேரடியாகச் சொல்லாமல், ஏதோ ஒரு மறைமுகமாகவாவது அவனே தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்த ஆதி, துர்காவின் பதிலைக் கேட்டு சற்று ஏமாந்துதான் போனான்.

“உனக்கு என் ஃப்ரெண்டா, என்னோட பாசம் தான் பிடிக்குமா?” என்று அவன் கேட்க, துர்காவும் “ஆமா ஆதி, ஏன்?” என்று கேட்டாள்.

“அப்போ நேத்து நீ சங்கவி கூட சண்டை போடும்போது ‘என் ஆதி’ ‘என் ஆதி’ என்று திரும்பத் திரும்ப சொன்னாயே?” என்று அவன் கேட்க.

‘போச்சுடா… போச்சு… கண்டுபிடிச்சிட்டானா? நான் கூட நேத்து நான் கோபத்துல, சங்கவி கூட சண்டை போடுற ஆர்வத்துல, ‘என் ஆதி’னு மனசுல இருக்குறதே தெரியாமல் வெளியில உளறிட்டேன்.’

‘ஆனா ஆதிக்குக் கேட்டிருக்காது என்று நினைத்தேன். இப்பத் தெளிவா அதைச் சொல்லியே என்கிட்ட கேக்குறானே…. ஹே துர்கா, என்னடி சொல்லி ஆதி கிட்ட சமாளிக்கப் போற?’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.

அவள் தனக்குத்தானே மனதிற்குள் பேசிக் கொண்டாலும், அவள் முகபாவனை நொடிக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருப்பதைப் பார்த்து ஆதி ரசித்துக் கொண்டு அவளிடம் “துர்கா” என்று அழைக்க, திடுக்கிட்டு அவள் “சொல்லு ஆதி” என்றாள்.

“என்ன யோசிச்சிட்டு இருக்க துர்கா? நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டியா?” என்று அவன் கேட்க, “ஆதி நான் என்ன சொல்றது?” என்று அவள் இழுக்க.

“சரி விடு. உனக்கு எப்ப தோணுதோ அப்போ நான் கேட்ட இந்த கேள்விக்கு மறக்காம எனக்கு பதில் தரணும். அது எப்படினாலும் நான் காத்துட்டு இருக்கேன்” என்று கூறியவன்.

“இன்னொரு கேள்வி கேட்கட்டுமா?” என்றான். அவன் இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்று சொன்னதும், துர்கா அவனைப் பார்த்து ‘இவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்? அடுத்து என்ன கேள்வி கேட்கப் போறானோ?’ என்று யோசித்தவள் “சொல்லு ஆதி” என்றாள். “உன் வீட்டில உன்னோட பெட்ரூம்ல, உன்னோட ஆறு வயசுக்கு மேல எடுத்த போட்டோ தான் நிறைய இருந்துச்சு. ஆனா அதுக்கு முன்னாடி எடுத்த போட்டோ எல்லாம் ஒண்ணு கூட இல்லையா உன்கிட்ட?” என்று அவன் கேட்க.

அவன் சொன்னதும் தன் வீட்டில் அவன் போட்டோ எந்த வயதில் இருக்கிறது என்று யோசித்தவள், “ஆமா ஆதி. நானும் என் அம்மா அப்பா கிட்ட நிறைய தடவை கேட்டு இருக்கேன். ‘ஏன் இதுக்கு முன்னாடி எடுத்த போட்டோ எல்லாம் என்ன ஆச்சு?’னு கேட்டிருக்கேன். அதற்கு அவர்கள் ‘ஒரு விபத்தில் அந்த போட்டோக்கள் எல்லாம் தொலைந்து விட்டது’ என்று கூறினார்கள். எனக்கும் ஆறு வயதுக்கு முன்னாடி நடந்த சம்பவங்கள் எதுவுமே இன்றுவரை ஞாபகம் இல்லை. நானும் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு பிறகு நான் அதைப் பற்றி எதுவுமே கேட்டுக் கொள்ளவும் இல்லை” என்றாள் துர்கா.

அவள் கூறிய தகவல்களைக் கேட்டுக்கொண்ட ஆதி, ‘முன்னாடி நடந்தது எல்லாமே மறந்து போயிடுச்சா? அப்படின்னு விபத்து நடந்தது. இவளோட போட்டோ எல்லாம் தொலைஞ்சு போக, இவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை அப்படின்னு சொல்ற அளவுக்கு பெரிய விபத்தா நடந்து இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே, ‘சரி, இதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்கலாம்’ என்று அமைதியாக இருந்தான்.

“சரி, இன்னொரு கேள்வி” என்று அவன் கூற, “இன்னொரு கேள்வியா?” என்று துர்கா வாய்விட்டு சத்தமாக அவனைப் பார்த்துக் கூறிவிட. அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தவன், “ரொம்ப பெரிய கேள்வி இல்லை. ரொம்ப சிம்பிள். இதுக்கு நீ எப்படி ஆன்சர் பண்றேங்கறதைப் பொறுத்து தான் நான் அடுத்த கேள்வி கேட்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுவேன்” என்று கூற.

“சரி ஆதி, பரவாயில்லை. நீ கேளு. நான் எனக்கு தெரிஞ்ச பதிலை சொல்றேன்” என்று அவள் கூற. தன்மேல் அவளைப் போட்டுக்கொண்டே, தன்னிரு கைகளையும் அவள் இடுப்பில் கொடுத்துப் பிடித்துக் கொள்ள, அவனின் இந்தத் தீண்டல் துர்காவுக்குப் புதுமையாக இருந்தாலும், அவனின் அணைப்பு இப்படித்தான் இருந்தது.

பின்னே இருக்காதா? துர்காவின் 10 வருட கனவல்லவா இது? இதற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருப்பாள். ஆனால் அவன் தன்னைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, தன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை, தன் மனைவி என்று கூட என்னிடம் ஒருமையில் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது எதற்கு இப்படி எல்லாம் என்னிடம் நடந்து கொள்கிறான் என்று மனதில் குழப்பத்தோடு அவனைப் பார்க்க.

“துர்கா, நான் அந்தக் கேள்வி கேட்கட்டுமா?” என்று அவளை நினைவுக்குக் கொண்டு வர, அவள் “சரி” என்பது போல தலையாட்ட, “நான் இப்படி கேட்கிறேன் என்று நீ என்கிட்ட கோச்சுக்க கூடாது” என்றான்.

“நீ கேட்டு நான் கோவிச்சுக்கவா நான்? ஆதி, அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. நீ என்ன வேணாலும் என்கிட்ட கேட்கலாம். நான் உன்கூட கோபப்படவும் மாட்டேன், சண்டை போடவும் மாட்டேன்” என்றாள் துர்கா. அவள் அப்படி கூறியதும் மனதிற்குள், ‘தன் மேல் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள். நான் எது சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டேன், சண்டை போட மாட்டேன் என்று சொல்கிறாளே’ என்று நினைத்தவன்.

“அப்போ நிஜமாத்தான் சொல்றியா துர்கா? நான் கேட்டதுக்கு அப்புறம் நீ என்கிட்ட கோச்சுக்க கூடாது” என்றான். “இல்லை ஆதி, நிச்சயமாக நான் உன்கிட்ட கோபப்பட மாட்டேன். என்னன்னு ஃபர்ஸ்ட் கேள்வியைக் கேளு ஆதி” என்றாள்.

“அது… அது வந்து… துர்கா…” என்று நிறுத்தியவன் அவளைப் பார்க்க, “சொல்லு ஆதி, ஏன் இப்படி தயங்கித் தயங்கி பேசுற? எதுவா இருந்தாலும் சொல்லு. நான் எதுவும் நினைக்க மாட்டேன்” என்றாள் துர்கா.

“நீ வெளியில ஆபீஸ்ல எங்க வந்தாலும், ஒரு அடக்கமான பெண் மாதிரி, தைரியமான பெண் மாதிரி, கலகலப்பான பெண் போல இருக்கிற. ஆனா…..” என்று கூறி அவன் அவளைப் பார்க்க, “சொல்லு ஆதி” என்று அவள் சிணுங்க. “சரி சரி சொல்றேன். நிஜமா நான் சொன்னதை கேட்டதுக்கு அப்புறம் என்ன திட்ட மாட்டியே?” என்றான் ஆதி. “நீ சொல்லலைன்னா தான் நான் டென்ஷனாகி உன்னை திட்டுவேன்” என்று அவள் கூற, “சரி சரி டென்ஷன் ஆகாத. நான் சொல்றேன்” என்றவன்.

“நீ வெளியே எங்க போனாலும் அல்லது எப்படி இருந்தாலும், ஒரு பெண் போல நடந்துக்கிற. ஒரு பெண் எப்படி இருக்கணுமோ அது அப்படியே நீ எல்லா விஷயமும் செய்யவும் செய்ற. ஆனா தூங்கும்போது மட்டும் ஏன் ஒரு பொண்ணு மாதிரி நீ நடந்துக்க மாட்டேங்குற?” என்று கூறியவன், “நீ ஒரு பொண்ணு தானே?” என்று கிண்டலாகக் கேட்டவன், அதற்கு மேல் தன் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்து விட.

அவன் அப்படி கூறியதும் “ஆதி” என்று கோபமாக அவன் நெஞ்சின் மேல் கைகளை வைத்து ஊன்றி அவனை விட்டு தள்ளி எழுந்தவள், தன் இடுப்பில் கைவைத்து “என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? பொண்ணு மாதிரி தெரியலையா? தூங்கும்போது நான் எப்படி தூங்கினேன்? பொண்ணு மாதிரி தானே தூங்குவேன்? வேற எப்படி தூங்கினேன்?” என்று அவள் அவனிடம் சண்டைக்கு நின்றாள்.

“பாத்தியா பாத்தியா துர்கா, இப்போதான நீ என்கிட்ட சண்டை போட மாட்டேன்னு சொன்னேன். ஆனா பாரு, உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல. நான் ஒரு கேள்வி கேட்டதும் இப்படி கோபப்படுறியே” என்றவன், “நான் உன்கிட்ட என்ன கேட்டேன்? உண்மைய தானே கேட்டேன்? நீ ஏன் தூங்கும்போது மட்டும் பொண்ணு மாதிரி நடந்துக்க மாட்டேங்கிற?” என்று அவன் திரும்பவும் அவளை கோபப்படுத்துவது போல அந்தக் கேள்வியைக் கேட்க.

அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. அவள் தூங்கும்போது பக்கத்தில் இருப்பவர்கள் மேல் கை கால்களை போட்டுக்கொண்டு தூங்குவாள் என்பது அவளுக்கே தெரியும். அதற்காக தன்னை பெண்தானா என்று இவன் கேட்டு விட்டானே? புசுபுசு என்று மூச்சு வாங்க அவனை முறைத்தவள்.

“நான் பொண்ணுதான். போதுமா?” என்றாள் கோபமாக. “நீ பொண்ணுதான்மா. நான் இல்லைன்னு சொல்லல. ஆனா தூங்குறப்போ மட்டும் ஏன் பொண்ணு மாதிரி இருக்க மாட்டேங்குற?” என்று மறுபடியும் அவன் அதே கேள்வியைக் கேட்க.

துர்காவுக்கு மிகவும் கோபம் வர, தன் கைகளை இறுக்க மூடி, கண்களை மூடிக்கொண்டு “ஆ…..” என்று கத்த, ஆதி “என்ன நீ ரொம்ப கோபப்படுற? நீ பேசாம இப்போ இருக்கப் போறியா?” என்று கேட்க, “இல்ல துர்கா, நான் எதுக்கு அந்தக் கேள்வியை கேட்டேனா” என்று அவன் ஏதோ கூற வர, “நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு நீ எதுக்காக அப்படி கேட்டேன்னு தெரியும். நான் தெரியாம ஒரு தடவை உன் மேல தூங்கும் போது கையையும் காலையும் போட்டுட்டேன்னு சொல்லிட்டு, என்னை ‘பொண்ணு’னு கேக்குற” என்று துர்கா கூற.

“இல்ல துர்கா, நீ தூங்கும்போது என் மேல கை கால் மட்டும் போடல” என்று நிறுத்த, அவள் ‘ஐயோ, தூக்கத்துல வேற என்ன பண்ணினேனோ? இவன் என்ன இப்படி கேட்கிறான்?’ என்று நினைத்தவள், அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று அவனை ஆர்வமாகப் பார்க்க.

“என் மேல கை கால் மட்டும் போட்டுட்டு தூங்கினா பரவாயில்லை. நான் இல்லாதப்ப கூட நீ அப்படி தான் தூங்குற. எப்படி தெரியுமா?” என்று கூறிவிட்டு, அந்தக் கட்டிலில் அவன் படுத்து, துர்கா எப்படிப் படுத்திருந்தாளோ, அதேபோல தன் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு கண் மூடி தூங்குவது போல நடித்துக் காட்ட, ‘அப்படி படுத்திருப்பதைப் பார்த்ததும் பதிலே சொல்லித் தந்துவிட்டோமே. நான் இப்படித்தான் படுத்துத் தூங்கினேன். அதுவும் ஆதிக்கு முன்னாடி. இவன் என்னை என்ன நினைப்பான்?’ என்று துர்கா சங்கடப்பட.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் சிரித்துக்கொண்டே, “இதுக்கு தான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல” என்று சொல்லிக்கொண்டே இருக்க, அவள் சிணுங்கியவாறே, “ஆதி, நீ இப்படியெல்லாம் என்ன ரொம்ப கிண்டல் பண்ணாத. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. நான் தூக்கத்துல என்ன பண்றேன்னு எனக்கே தெரியாது. எங்க அம்மாவும், கீர்த்திகாவும் என்கிட்ட நிறைய தடவை சொல்லி இருக்காங்க, ‘ஒழுங்கா ஒரு பொண்ணு போல படுத்துத் தூங்குடி’னு.”

“நான் என் வீடுன்னு நெனச்சு, அசதியில அதே மாதிரி படுத்துத் தூங்கிட்டேன். இனிமேல் நான் அப்படி எல்லாம் படுத்துத் தூங்க மாட்டேன். என்ன தயவுசெய்து இப்படி எல்லாம் ஓட்டாத ஆதி” என்று அவனுக்குக் கெஞ்சுவது போல முகத்தை வைத்து அவனிடம் கெஞ்ச, அவள் முகத்தைப் பார்க்க பாவமாக இருக்க, “சரி சரி, நான் இனிமேல் அதைப் பத்தி எதுவும் பேச மாட்டேன். நீ ரொம்ப ஃபீல் பண்ணாத” என்று கூறிக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரிக்க, முதலில் அவன் சிரித்த முகத்தைப் பார்த்ததுமே துர்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் இப்படிச் சிரித்து அவள் பார்த்ததே இல்லை. அவளும் அவளோடு சேர்ந்து முகத்தில் சந்தோஷமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று துர்கா அவன் முகத்தைப் பார்த்ததும் பதட்டமானாள்.

அவள் முகம் மாறுவதைக் கண்ட ஆதி, “ஏன் உன் முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சு? நான் உன்னை ரொம்ப கிண்டல் பண்ணிட்டேனா? அப்படி எதுவும் நான் கிண்டல் பண்ணி இருந்தா, சாரி துர்கா” என்று அவன் உண்மையாகவே வருத்தப்பட்டு துர்காவிடம் மன்னிப்பு கேட்க.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆதி. ஆனா உன் முகத்தில் உன் முகத்துல” என்று அவள் கைநீட்டிக்கொண்டு அவன் முகத்தருகில் தன் கைகளை கொண்டு வர, அப்போதுதான் இதுவரை முகக்கவசம் அணியவில்லை என்பது நினைவில் வர, ஆதி சட்டென படுக்கையில் இருந்து எழுந்து, துர்காவைக் கோபமாகப் பார்த்து, “இப்போ என்ன? என் முகத்துக்கு என்ன? இவ்வளவு நேரம் இந்த முகத்தை நீ பக்கத்துல இருந்து தானே பார்த்துட்டு இருந்த? இப்ப ஏன் இப்படி முகம் சுளிக்கிற?” என்று அவள் தன் முகத்தில் இருக்கும் கொப்புளங்களை இப்பொழுதுதான் கவனித்தவளாக இப்படி நடந்துகொள்கிறாள் என்று நினைத்து, ஆதி அவளிடம் கோபப்பட்டவன்.

அங்கு இருந்து கோபமாக வெளியே செல்லப் போனவனை, கை பிடித்து நிறுத்திய துர்கா, “ஆதி, ப்ளீஸ். நான் சொல்றது ஒரு நிமிஷம் பொறுமையா கேளு. நான் உன் கொப்புளத்தைப் பார்த்து எல்லாம் ஒண்ணும் முகத்தை மாத்திக்கல. ஆனா உன் முகத்தில்…” என்று அவள் மறுபடியும் அவன் முகத்தைப் பற்றி ஏதோ கூற, அவள் தன்னை கேவலப்படுத்துகிறாள், அவமானப்படுத்துகிறார் என்று நினைத்த ஆதி, கோபமாக அவள் கைகளை உதறிவிட்டு நேராக பாத்ரூமுக்குள் சென்று விட்டான்.

இவ்வளவு நேரம் தன்னிடம் என்றும் இல்லாமல் இன்று ஆசையாகப் பேசிய ஆதியை, தான் தேவையில்லாமல் பேசி கோபப்படுத்தி விட்டோமோ? தான் இப்போது என்ன கேட்டு விட்டேன்? தான் சொல்வதை முழுமையாகக் கூட கேட்காமல் அவன் கோபித்துக்கொண்டு பாத்ரூம் சென்று விட்டானே? என்று துர்கா மிகவும் வருத்தப்பட்டாள்.

EPISODE 20

துர்கா தன் முகத்தைப் பார்த்து ஏதோ கூற, அவள் முகம் சட்டென்று மாறியதும், தன் முகத்தில் இருக்கும் கொப்புளங்களைப் பார்த்து அருவருப்பாக நினைத்து தான் அவள் அப்படி செய்கிறாள் என்று நினைத்த ஆதி, அவளிடம் கோபித்துக்கொண்டு பாத்ரூம் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.

அவன் கோபமாகச் சென்றதைப் பார்த்த துர்கா, “அச்சச்சோ, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? அவன் கிட்ட இப்படி கோச்சிட்டு போறானே! ஆனா இவனுக்கு இப்படி ப்சுப்புசுனு கோபம் வந்திருது. நான் எப்படி இவனை வச்சு சமாளிக்கப் போறேன்னு தெரியல, ஆண்டவா. என்ன இவங்க கிட்ட இருந்து நீ தான் காப்பாத்தணும்” என்று கடவுளை வேண்டியவள், அவன் வெளியே வரட்டும் என்று காத்திருந்தாள்.

பாத்ரூமிற்குச் சென்று கதவைச் சாற்றிக்கொண்ட ஆதி, ‘உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை நேருக்கு நேரா இப்படி முகத்தை சுளிப்ப? கொஞ்சம் கூட மனசு அப்படிங்கறது இவளுக்கு கிடையாது’ என்று நினைத்தவன், முகம் கழுவப் போகலாம் என்று தண்ணீரைத் திருப்பிவிட்டு, தண்ணீரைப் பிடித்து தன் முகத்தில் அடித்தவன் முகம் அப்போதுதான் எரிய ஆரம்பித்தது.

“ஷ்…” வலியோடு தன் முகத்தை உயர்த்தி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க, அவன் முகத்தில் இருந்த கொப்புளங்கள் உடைந்து அதிலிருந்து லேசாக சீழ் வந்துகொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து ரத்தமும் வர, அவன் முகமே பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்க, அவனுக்குத் தன்னையே பார்த்து வெறுப்பாக இருந்தது.

‘ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனை கொடுக்கிறாய் கடவுளே? நான் என்ன பாவம் பண்ணினேன்?’ என்று தனக்குத்தானே நொந்து கொண்டவன், தன் முகத்தை ஒரு ஈர டவல் கொண்டு லேசாக ஒற்றி எடுத்தான். சிறிது நேரம் அப்படியே நின்று தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தவாறு நின்றிருந்தான். ‘இந்த முகத்தைப் பார்த்தால் யாருக்கு தான் பிடிக்கும் இப்படி? அதுவும் இவ்வளவு பக்கத்துல இந்த மாதிரி காயங்களோடு பார்த்த துர்காவின் முகம் கண்டிப்பா அப்படித்தான் போகும்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாலும், அவனுக்கு துர்கா மீது இருந்த கோபம் குறையவே இல்லை.

கோபத்தோடு பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, துர்கா அவனுக்காகக் கட்டிலில் அமர்ந்து காத்திருக்க, அவனைக் கண்டதும் கட்டிலில் இருந்து எழுந்து நின்ற துர்கா அவனிடம் ஏதோ கூற வர, “ஆதி” என்று அழைக்க, அவள் அழைப்பைக் காதில் கேட்டும் கேட்காதவன் போல வேகமாகச் சென்று கட்டிலில் படுத்து போர்வை போற்றிக்கொண்டான்.

துர்கா அவன் அருகில் வந்து நிற்க, அவன் அருகில் நிழல் ஆடுவதைக் கவனித்தவன், துர்கா தான் அருகில் வந்து நிற்கிறாள் என்பதை உணர்ந்தவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.

அவன் படுத்திருந்த பக்கத்தில் நின்ற துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்க, அவன் எதுவும் பேசாமல் இருக்க, “ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளு. இப்படி கோபப்படாத” என்று துர்கா கூற, அவள் கூறுவதைக் கேட்டு அவன் பதில் பேசப் பிடிக்காமல் திரும்பிப் படுத்துக்கொண்டான் ஆதி.

“ஆதி, ப்ளீஸ். நான் உன்னை பார்த்து தப்பா அசிங்கமா எல்லாம் நினைக்கல. நீ அந்த மாதிரி கற்பனை பண்ணிக்காத. ப்ளீஸ் ஆதி, உன் முகத்தில் திடீரென காயத்தைப் பார்த்ததும், அதில் ரத்தம் வந்ததும், அதைப் பார்த்து எனக்குப் பயமாயிடுச்சு. நான் முதல் தடவை உன் முகத்துல காயங்களைப் பார்த்தது எனக்குப் பயமும், பதட்டமும் ஆயிடுச்சு ஆதி. அதுதான் அப்படியே முகம் காமிச்சிருக்கு. நான் வேணும்னு முகத்தை இப்படி வைக்கல. நீ இப்படி இருக்கிறது எனக்கு ஒண்ணும் அருவருப்பே கிடையாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோ ஆதி” என்று அவள் கூற.

அவள் தன்னை விளக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதி, ‘யாரும் என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம். அவங்களோட மனசுல இருக்கிறதுதான் முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்க. உன் முகத்துல என்ன பத்தியான எண்ணம் உன் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. உனக்கு என்ன பாக்க அருவருப்பா இருக்குன்னு எனக்குத் தெரியுது துர்கா. என்ன பண்றது? கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. இந்த முகத்தை நீ பார்க்க வேண்டிய அவசியம் வராது. கூடிய சீக்கிரமே உனக்கு விருப்பம் இல்லாத இந்த கல்யாணத்திலிருந்து நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்து விடுகிறேன்’ என்று அவன் கூறியதும்.

துர்காவுக்கு அவன் கூறியதை கேட்டதும் இதயம் வெடித்து விடும் போல இருந்தது. “ஆ… ஆதி” என்று அவள் குரல் உடைந்து அவனை அழைக்க, அவள் வருத்தமான குரலில் அழைப்பதை கூட புரிந்துகொள்ளாத ஆதி, “இப்ப எதுக்கு துர்கா இங்க நின்னு பேசி சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க? பேசாமல் போய் படு. என்ன பார்த்துக்க எனக்குத் தெரியும். என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிற வேலையெல்லாம் நீ வெச்சுக்காத” என்று அவளை மேலும் வார்த்தைகளால் துன்புறுத்த.

தன் மனதில் இருப்பதை அவனிடம் கூற வந்த துர்கா, அவன் தன்னை இப்படி உதாசீனப்படுத்தி சுடு சொல்லாகப் பேசவும் துர்காவின் இதயம் மிகவும் வலித்தது.

“ஏன் ஆதி இப்படி நினைக்கிற? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு உன்னத் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ மட்டும் தான் என் உலகம்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கேன் ஆதி. என்ன போய் நான் உன் முகத்தைப் பார்த்து அருவருப்பு பட்டுட்டேன்னு சொல்றியே? என்னோட முகத்தைப் பார்த்தமா உனக்கு என்னோட காதல் புரியாம போயிடுச்சு? நீ எப்ப தான் ஆதி என் காதலை புரிந்து கொள்வ? உன் மேல விருப்பம் இல்லாம உன் பணத்துக்காக உன் பின்னாடி சுத்தினவங்க எல்லாரையும் பிரச்சனைப்படுத்தினேன்னு எனக்கு தெரியும். அதே லிஸ்ட்ல என்னையும் சேர்த்துட்டு இல்ல நீ? இனிமேல் என்னோட காதலை உனக்குப் புரிய வெச்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல ஆதி. உனக்கு அதெல்லாம் புரியணும். நான் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறேன்னு என் முகத்தைப் பார்த்து உனக்குத் தெரியாம போயிடுச்சு இல்ல? இதுக்கு மேல நானா வந்து உன்கிட்ட என் காதலை பற்றி சொல்லுவேன்னு இனி கனவிலும் நினைச்சுடாத.”

“நான் பத்து வருஷம் உனக்காகக் காத்திருந்தேன். உன் காதலுக்காகக் காத்திருந்தது எல்லாம் போதும். அதற்கெல்லாம் பதிலா பெருமிதமா நீ இப்ப பேசினது என் மனசு நிறைஞ்சு போச்சு ஆதி. இனிமேல் நீ சொல்வது போல எனக்கு டைவர்ஸ் நீ கொடுக்கிற வரைக்கும் உன்னைப்பத்தி நான் எதுவும் கேட்க மாட்டேன். உன்னோட ஆபீஸ்ல வேலை செய்யுற ஒரு வேலைக்காரியை மட்டும் தான் இனிமேல் நீ என்னைப் பார்ப்பாய்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்ட துர்கா அழுது கொண்டே வேகமாக அங்கிருந்து சென்றவள், அங்கிருந்த ஒரு கேபினை திறந்து அதில் இருந்து ஒரு ஆயின்மென்ட் எடுத்து வந்தவள், அவன் படுத்திருந்த மேசையின் பக்கத்தில் வைத்துவிட்டு.

“ஆதி, உன் விருப்பம் எதுவும் என் விருப்பம் அதுதான். உனக்கு எனக்கு டைவர்ஸ் கொடுக்கிறது சந்தோஷம் என்று நீ நினைக்கிற என்ன, அந்த டைவர்ஸ் என்ன சந்தோஷமா வாங்கிக்க ரெடியாகத்தான் இருக்கிறேன். நாளைக்கு அதற்கான வேலைகளை நீ பார்க்கலாம்” என்று கூறிவிட்டு.

“இந்த டேபிள் மேல உன் காயத்துக்கான ஆயின்மென்ட் எடுத்து வெச்சிருக்கேன். என் மேல் இருக்கிற கோவத்துல உன்னை நீயே தண்டிச்சுக்காத. தயவு செய்து அந்த மருந்தை எடுத்து அப்ளை பண்ணிட்டு அதுக்கப்புறம் படுத்து தூங்கு” என்று கூறியவள் அவன் பதிலுக்கும் காத்திராமல் அந்த அறையை விட்டு கதவைத் திறந்து கொண்டு வெடுக்கென்று வெளியே சென்றாள்.

துர்கா அரைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்வதை உணர்ந்த ஆதி, கதவை மூடும் வரை பொறுமையாக இருந்தவன், கதவு சாற்றப்படும் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

‘ச்சே… இவளைப் போய் நான் எவ்வளவு பெருசா நினைச்சுட்டேன். டைவர்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னதும் ‘வேண்டாம் ஆதி’ என்று ஒரு வார்த்தையாவது சொல்வாருன்னு நினைச்சேன்.’

‘ஆனா இவ என்னடான்னா நான் கேட்டதும் எதுவுமே மறுப்பு தெரிவிக்காமல் ‘நாளைக்கு எனக்கு டைவர்ஸ் கொடுத்தாலும் சந்தோசம் தான்’னு சொல்லிட்டு போற. அப்போ என்னை டைவர்ஸ் பண்ணிட்டு, அந்த டைவர்ஸ் பண்ற சாக்கை வச்சு என்கிட்ட ஜீவனாம்சமா என்கிட்ட இருக்கிற சொத்துக்கள் எல்லாம் அபகரிக்கணும்னு நினைச்சுட்டாளா இவ?’

‘இவளோட எண்ணத்தை மட்டும் நான் என்னைக்குமே நிறைவேற்றி விடமாட்டேன். இவளுக்கு நான் டைவர்ஸ் கொடுத்தா தானே என்கிட்ட இருந்து என் சொத்துக்களை வாங்கிட்டு வெளியே போய் சந்தோசமா இருக்க முடியும்? நான் உன்கிட்ட சும்மா கோபத்துல ஒரு பேச்சுக்குதான் டைவர்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னேன் துர்கா. நீயே என்ன விட்டுப் போறேன்னு நினைச்சாலும் நான் இனிமேல் உன்னை என்கிட்ட இருந்து போக விடவே மாட்டேன். அது நீ விருப்பப்பட்டாலும் சரி விருப்பப்படாட்டியும் சரி.’

‘நீயா டைவர்ஸ் வேணும்னு வாய் திறந்து கேட்டாலும் இனிமேல் உனக்கு டைவர்ஸ் கொடுக்க மாட்டேன். நீ செத்தாலும் சரி, வாழ்ந்தாலும் சரி, அது என்னோட மட்டும்தான் இருக்கும். இனிமேல் தான் நீ இந்த ஆதியின் ஆட்டத்தைப் பார்க்கப் போற. நான் டைவர்ஸ் உனக்கு கொடுக்கிறேன் என்று சொன்னது நீயும் சரின்னு சொல்லிட்டு போன இல்ல? அதே வாயால ‘எனக்கு டைவர்ஸ் வேண்டாம் ஆதி, நீ என்கூட சந்தோசமா வாழணும்’னு உன் வாயாலே என் கிட்ட கெஞ்ச வைக்கிறேனா இல்லையா பாரு?’ என்று நினைத்தவன்.

அருகில் அவள் கொண்டுவந்து வைத்திருந்த மருந்தை திரும்பிப் பார்த்தவன், ‘நான் புண்ணிற்கு இந்த ஆயின்மென்ட் தான் பேசுவான்னு இவளுக்கு எப்படி தெரியும்? சரியாக அந்த மருந்து கொண்டு வந்து வைத்திருக்கிறாள்’ என்று ஆதி அவளை நினைக்க.

அதிலிருந்து கூட அவள் தன் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறாள் என்று உணராத ஆதி, ‘அவள் யார்கிட்டயாவது என்னைப் பத்தி எல்லா விவரமும் கேட்டு தெரிந்து வைத்திருப்பாள். அப்பதானே என்னைக் கைக்குள் போட்டுக்க முடியும்? என் பணத்துக்காக என் பின்னாடி அலைய முடியும்’ என்று அவளைத் தவறாக நினைத்தவன்.

‘அந்த சங்கவி நல்லவளோ கெட்டவளோ, ஆனா அவள் சொன்ன வார்த்தை உண்மை ஆகிடுச்சு பாத்தியா துர்கா? நீ இவ்வளவு மோசமானவள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை துர்கா. உனக்கு நான் டைவர்ஸும் கொடுக்க மாட்டேன், உன் கூட நான் சந்தோசமா வாழவும் மாட்டேன். நீ என் கூட இருக்கிற நாட்கள் எல்லாமே உனக்கு நான் நரகத்தை தான் காட்டப் போறேன். ‘ஏன்டா இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டமே’ என்று நீயே வெறுத்து, நான் உன்னை ஏமாத்த தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ல வைக்கல என் பேரு ஆதி இல்லை’ என்று நினைத்தவன்.

எழுந்து சென்று கண்ணாடியின் முன் நின்று தன் காயங்களுக்கு மருந்து இட ஆரம்பித்தான்.

ஆனால் அவனுக்குத்தான் தெரியவில்லை, அவன் துர்காவின் காதலை உணரும்போது அவள் அவன் அருகில் இருப்பாளா? அவள் காதல் உணர்ந்த பின் ஆதி தன் மனதில் எழும் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவளிடம் தன் காதல் சொல்வானா?

துர்காவின் காதலை உணரும் போது ஆதியின் மனநிலை அவனையே கொல்லும்.

அவள் காதல் உணர்ந்து அவளிடம் தன் காதல் சொல்லப் போக, துர்காவின் உதாசீனம் அவனை எவ்வளவு தூரம் காயப்படுத்தும் என்று, துர்காவின் வலியைப் போல பன்மடங்கு அவனுக்கு வலி வரப்போகிறது என்று உணராமல் ஆதி.

EPISODE 21

ஆதிடன் சண்டை போட்டுவிட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள் துர்கா.

“அவளே வந்து, என் பணத்திற்காகத்தான் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன் என்று சொல்ல வைப்பேன்” என்று சபதம் எடுத்துக் கொண்ட ஆதி, எழுந்து சென்று துர்கா விட்டுப் போன மருந்தை எடுத்து அவனது காயங்களுக்குப் போட ஆரம்பித்தான். முகத்தில் இருந்த காயங்களுக்கு மருந்தை போட்டு முடித்துவிட்டு, படுத்து உறங்கிவிட்டான்.

ஆனால், இங்கு அவனிடம் “டைவர்ஸ் கையெழுத்து போட்டுத் தருகிறேன்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே வந்த துர்கா, நேராக வீட்டுக்கு வெளியே சென்று தோட்டத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

“ஏன் ஆதி இப்படிப் பண்ணின? உனக்கு என் காதல் புரியவே இல்லையா? நான் உன் மேல வச்சிருக்கிற பாசம் உன் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்படி வெடுக்கென்று ‘நான் உனக்கு டைவர்ஸ் கொடுக்கிறேன்’ என்று சொல்லிட்டேயே? ஆதி, உன்னை டைவர்ஸ் பண்றதுக்காகத்தான் நான் இவ்வளவு வருஷம் காத்திருந்தேன்” என்று கூறி, கால்களை மடித்து சேரின் மேல் அமர்ந்தவள், தன் மடியில் முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. திடீரென்று மழை பெய்ய ஆரம்பிக்க, அப்போதுதான் தான் வெளியே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பதை உணர்ந்த துர்கா, நிமிர்ந்து மழையைப் பார்த்தாள். ‘அந்த மழையுடன் சேர்ந்து தன் கண்ணீரும் கரைந்து போக வேண்டும்’ என்று மனதில் நினைத்தவள், மீண்டும் ஆதி தனக்கு டைவர்ஸ் அளிக்கிறேன் என்று கூறியதை தாங்க முடியாமல் அழத் தொடங்கினாள்.

மழை நின்ற பாடும் இல்லை, துர்காவின் அழுகையும் நின்ற பாடு இல்லை. அவள் அழுது கொண்டே மழையில் நனைந்திருக்க, அப்போது அவள் தோள் மீது ஒரு கை வந்து அவளை அழுத்தமாகத் தொட்டது. அழுது கொண்டே யார் என்று திரும்பிப் பார்த்த துர்கா, அங்கே முத்து தாத்தா குடையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்.

“டேய் துர்கா பாப்பா! எவ்வளவு நேரம் மழையில நனைஞ்சுட்டு இருந்திருக்க? நான் தண்ணி குடிக்கலன்னு எந்திரிச்சு வந்தப்பதான் வாசல் கதவு திறந்து இருக்கிறதைப் பார்த்தேன்டா. ஏன்டா இந்த நேரத்துல இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்க?” என்று அவளிடம் முத்து தாத்தா கேட்க, தன்னிடம் கரிசனையாகப் பேச இந்த வீட்டில் முத்து தாத்தாவாவது இருக்கிறார் என்று எண்ணி துர்காவிற்கு மேலும் அழுகை வந்தது. எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் முத்து தாத்தா அமைதியாக நின்று, துர்கா நனையாமல் குடை பிடித்துக் கொண்டிருக்க, அவரும் அவளுடன் சேர்ந்து நனைவதைப் பார்த்த துர்காவிற்கு, எழுந்து உள்ளே செல்வதுதான் சரி என்று தோன்றியது. அங்கிருந்து எழுந்து, “வாங்க தாத்தா! நம்ம உள்ள போலாம். ஒண்ணும் இல்லை” என்று கூறி, அவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல், அவரிடம் இருந்து குடையை வாங்கி, அவருக்கும் சேர்த்து குடை பிடித்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.

உள்ளே வந்ததும் முத்து தாத்தாவை சென்று படுக்கச் சொல்லிவிட்டு, அவளும் தன் அறைக்குச் சென்று உடை மாற்றச் செல்ல, அங்கே ஆதி நன்றாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

“நான் கோபித்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே போனோமே, என்ன செய்கிறாள் என்று கூடப் பார்க்க இவனுக்குத் தோன்றவில்லை இல்லையா? அவ்வளவு நெஞ்சுறுதிக்காரனாக இருக்கிறானே ஆதி?” என்று நினைத்தவள், ஒரு வெற்றுப் புன்னகையை அவனைப் பார்த்து சிந்திட்டு, நேராக குளியலறைக்குப் போனாள். குளித்து முடித்து வேறு இரவு உடையை போட்டுக்கொண்டு வந்தவள், ஆதிக்கு அருகில் சென்று தூங்க பிடிக்காமல், நேராக அங்கிருந்த படிப்பு அறைக்குச் சென்றாள்.

ஆதிக்குத் தெரியாமல் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த அவளது நாட்குறிப்பை எடுத்து, அன்றைய தினம் காலை முதல் இப்போது வரை நடந்த, அவளை பாதித்த விஷயங்களை எழுத ஆரம்பித்தாள். துர்காவிற்கு இந்த பழக்கம் எப்போது இருந்து வந்தது என்று தெரியாது. ஆனால் அவள் தினமும் நாட்குறிப்பு எழுதுபவளும் இல்லை. எப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறாளோ அல்லது எப்போது மிகவும் சோகமாகவோ, அழுத்தத்துடனோ இருக்கிறாளோ, அன்றெல்லாம் நாட்குறிப்பு எழுதுவது வழக்கமாக கொண்டிருந்தாள் துர்கா. இன்று ஆதி அவளிடம் நடந்து கொண்டது, அதனால் தன் இத்தனை வருட காதல் வீணாய் போய்விட்டது என்றும், அவளுக்கு ஆதி மீது இருந்த காதலும், இப்போது வந்திருக்கும் வெறுப்பு வரை எழுதி இருந்தாள்.

இரவு வெகுநேரம் ஆகியும் தூக்கம் வராமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டு, எதையாவது செய்து தன் மனதின் சிந்தனையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அலைந்தவள், ஒரு வழியாக மேஜை மீது தலை வைத்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், அப்படியே உறங்கி விட்டிருந்தாள்.

அங்கு துர்கா ஆதியைக் குறித்து நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருக்க, இங்கு துர்காவின் தங்கை கீர்த்திகா, கதிர் தன்னிடம் பாராமுகம் காட்டுவதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு படுத்திருந்தாள்.

அவனை நேருக்கு நேராக பார்த்து அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எவ்வளவோ முறை முயற்சித்தாலும், அவன் இவளைத் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட, கீர்த்திகாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்படியாவது அவனிடம் பேசிவிட வேண்டும் என்றுதான் அன்று அவன் தன் வீட்டிற்கு வந்த பொழுது அவனிடம் பேசுவதற்கு முயற்சி செய்தாள். ஆனால் அவன் இவள் இருக்கும் திசை திரும்பியும் பார்க்கவில்லை. அவனிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு தட்டில் எழுதிக் கொடுத்தும், அதைப் பார்த்துவிட்டு ஒரு பேச்சிருக்காவது அவளைப் பார்த்து “பரவாயில்லை” என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், அவள் இன்று நிம்மதியாக இருந்திருப்பாள். ஆனால் கீர்த்திகாவை அவன் முற்றிலும் வெறுத்துவிட்டவன் போலவே நடந்து கொள்ள, கீர்த்திகாவின் மனம் ஏனோ மிகவும் கஷ்டப்பட்டது.

அவனிடம் மன்னிப்புக் கேட்டுத்தான் தனக்கு நிம்மதியாக தூக்கம் வரும் என்று நினைத்தவள், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தாள். அவன் எண்ணை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, அவளுக்கு சட்டென்று விக்கிதான் ஞாபகம் வந்தது. துர்கா வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, திருமணத்திற்கு முன் விக்கி அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு துர்காவைப் பார்க்க வருவது வழக்கம். அதனால் விக்கியுடன் கீர்த்திகாவின் உறவு நன்றாகவே இருந்தது. அவனை தன் அண்ணன் என்பது போலவே பாவித்து கீர்த்திகா அவனிடம் உரிமை கொண்டாடி, எப்போதுமே பேசுவாள்.

மற்ற விஷயங்கள் என்றால் தைரியமாக அவனிடம் இது வேண்டும் என்று கேட்டு விடுவாள். ஆனால் கதிரின் எண்ணை எப்படி அவனிடம் கேட்பது? அப்படி கேட்டால் அவன் தன்னை என்ன நினைத்துக் கொள்வான் என்று யோசித்தவள், ஆனால் அவனைத் தவிர அவன் எண்ணை வேறு யாரிடமும் கேட்கவும் முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து விக்கிக்கு “ஹாய் அண்ணா” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அவள் குறுஞ்செய்தி அனுப்பிய நேரம் இரவு ஆகிவிட்டதால், குறுஞ்செய்தி அனுப்பியதும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. “சரி, அவன் தூங்கிக் கொண்டிருப்பான். எப்படியும் தன் குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு காலையில் அழைப்பான்” என்று நினைத்தவள், அலைபேசியை வைத்துவிட்டு படுக்கப் போனாள். அவள் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் சத்தம் கேட்க, அது அவனாகத்தான் இருக்கும் என்று அவசர அவசரமாக எழுந்து தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க, விக்கிதான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

அதை திறந்து பார்க்க, “சொல்லுடா தங்கம். உனக்கு இந்த அண்ணனோட ஞாபகம் இப்பதான் வருதா? உன் அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்ததிலிருந்து நீ என்கூட சரியாகப் பேசறதே இல்லை. இந்த அண்ணன் என்ன பண்ணினேன்? என்கிட்ட சரியாவே பேசலை” என்று அவன் பெரிதாகப் பதில் அனுப்பியிருக்க, அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தவள் மெலிதாக சிரித்துவிட்டு, அதற்குப் பதில் அனுப்பினாள். “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. நீங்களும் வேலையில ரொம்ப பிசியா இருந்தீங்க. அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்த போதும், எல்லாருமே பரபரப்பாக இருந்ததால என்னால சரியா பேச முடியல. என்ன தப்பா எடுத்துக்காதீங்க, சாரி அண்ணா” என்று அவனுக்குப் பதில் அனுப்பியிருந்தாள்.

“சரிடா பரவாயில்லை. நீ இப்போ எதுக்கு இந்த நேரத்துல எனக்கு குறுஞ்செய்தி பண்ணி இருக்க? நீ எப்பவுமே இந்த நேரத்துல குறுஞ்செய்தி பண்ண மாட்டியே?” என்று அவன் கேட்க, “அது, அது வந்து… அண்ணா, நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்பேன், நீங்க என்ன தப்பா எடுத்துக்கக் கூடாது” என்று குறுஞ்செய்தி அனுப்ப, அதைப் படித்ததும் அவன் திரும்பவும் “பரவாயில்ல கேளுடா, என்கிட்டதானே கேக்குற? நான் எதுவும் நினைக்க மாட்டேன்” என்று சொல்ல, அதைப் படித்துவிட்டு சிறிது தயங்கினாள். பிறகு தைரியம் வந்தவளாக, “அண்ணா எனக்கு கதிரோட எண் கிடைக்குமா?” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதும், படிக்கப்பட்டது என்று இரண்டு நீல நிற குறிகள் காட்ட, ஆனால் கதிரிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே, கீர்த்திகாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது. தான் இந்த நேரத்தில் கதிரின் எண் வேண்டும் என்று கேட்டது, அவன் தன்னை எதுவும் தப்பாக நினைத்துக் கொண்டானோ என்று பயந்தவளாக திரும்பவும் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தாள். “அண்ணா, நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. அன்னைக்கு துர்காவோட புது வீட்டுக்கு போயிருந்தப்போ கதிர் கூட எனக்கு ஒரு சின்ன சண்டை வந்துருச்சு. அதனால அவரு என் கூடப் பேசல. என்ன இருந்தாலும் அவரு என்னோட அக்கா வீட்டுக்காரருடைய தம்பியாச்சே. நாங்க எப்படி இருந்தாலும் அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். இப்படி பேசாமல் இருந்தால் அது ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கடமா இருக்கும் அண்ணா. நீங்களே அன்னைக்கு பார்த்திருப்பீங்க, நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்ப கூட கதிர் என்கிட்ட சரியா பேசல. அதனால நான் அன்னைக்கு அவர் கூட சண்டை போட்டதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான் அவர் எண் கேட்கிறேன். அவரை நேரா பார்த்து கேட்கலாம் என்று பார்த்தால், அவர் என் முகத்தைப் பார்க்கவே மாட்டேங்குறாரு” என்று கீர்த்திகா ஒரு பெரிய பத்தி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் விக்கிக்கு.

அதைப் படித்த விக்கி, “இப்போ என்ன உனக்கு அவனோட எண் வேணும். அவன்கிட்ட நீ மன்னிப்புக் கேட்கணும், அவ்வளவுதானே? சரி, நான் இப்போ உனக்கு அவனோட எண் அனுப்புறேன். ஆனா நீ இப்போ குறுஞ்செய்தி பண்ண வேண்டாம். அவன் வேற ஒரு ஆபீஸ் வேலைல இருக்கான். இப்போ நீ குறுஞ்செய்தி அனுப்பினால் அதையும் பார்த்துட்டு ரொம்ப அதிகமா கோபப்படுவான். நாளைக்கு நான் அவனை சந்திக்கக் கூட்டிட்டு வரேன். எங்கே கூட்டிட்டு வரட்டும் மட்டும் சொல்லு” என்று கேட்க, சிறிது நேரம் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்தவள், “அண்ணா, என் கல்லூரிக்கு எதிரில் ஒரு காபி கடை இருக்கு. அங்கே கூட்டிட்டு வர முடியுமா அண்ணா? கதிர் எதுவும் என்ன நேரா பார்க்கறப்போ ரொம்ப கோபப்பட்டு பேசிட மாட்டானே?” என்று அவள் குறுஞ்செய்தி அனுப்ப, “அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியவன், “சரிடா தூங்கு, குட் நைட். நான் உன்னோட எண்ணை உனக்கு அனுப்புறேன்” என்று கூறிவிட்டு, கதிரின் எண்ணை அவளுக்கு அனுப்பிவிட்டு அலைபேசியை வைத்தான்.

“இவனை எப்படி நாளைக்கு கீர்த்திகாவைப் பார்க்க கல்லூரிக்கு கூட்டிட்டு போறது?” என்று யோசித்தவன், “சரி, எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம். இப்போ தூக்கம்தான் ரொம்ப முக்கியம்” என்றவன், அலைபேசியை வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான்.

காலையில் தூங்கி எழுந்த ஆதி, எழுந்தவுடன் தன் அருகில் துர்கா இருக்கிறாரா என்று திரும்பிப் பார்க்க, அவள் அங்கு இல்லாததும், நைட்டே அவள் அறைக்கு வெகுநேரமாகியும் வரவில்லையே, எங்கே போனாள் என்று யோசித்தவன், எழுந்து குளியலறைக்குச் சென்று தயாராகிவிட்டு வெளியே வர, படிப்பு அறையில் சிறியதாக ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்கே யார் என்று யோசித்தவன், படிப்பு அறை கதவைத் திறந்து பார்க்க, அங்கே மேஜை மீது தன் கைகளையும், கால்களையும் குறுக்கிக் கொண்டு துர்கா உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் தன் அருகில் வந்து படுக்கையில் படுக்காமல் இங்கே வந்து படுத்திருப்பதைப் பார்த்த ஆதிக்கு கோபம் கோபமாக வந்தது. “அவ்வளவு தூரம் என்னை வெறுப்பவள், எதற்காக என்னை திருமணம் செய்து இருக்க வேண்டும்? எப்படி இருந்தாலும் இருவரும் காலம் முழுவதும் ஒரே அறையில்தான் இருக்க வேண்டும். இப்படி என்னைப் பார்க்க அருவருப்பட்டுக்கொண்டு படிப்பு அறையில் வந்து படுத்திருக்கிறாள்” என்று அவள் மீது கோபம் வந்தவன், அவளையே சிறிது நேரம் நின்று கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ, வேகமாகத் திரும்பி அறைக்குள் வந்தவன், நேராக குளியலறைக்குச் சென்றான். வெளியே வரும்போது கையில் ஒரு வாளியில் தண்ணீரோடு வந்தான்.

குளியலறையில் இருந்து வெளியே வந்தவன், நேரே துர்கா இருக்கும் படிப்பு அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன், தன் கையில் இருக்கும் வாளியில் இருந்த தண்ணீர் முழுவதையும் அப்படியே தூக்கி அவள் மேல் ஊற்ற, தூங்கிக் கொண்டிருந்த துர்காவின் மீது குளிர்ந்த தண்ணீர் படவும், பதறி அடித்துக் கொண்டு எழுந்தவள், “என்ன?” என்று புரியாமல் தன்னைச் சுற்றிப் பார்க்க, அவள் எதிரே ஆதி கையில் வாளியுடன் கோபமே உருவாக நின்றிருந்தான். அவன் தான் தன் மீது தண்ணீரை ஊற்றி இருக்கிறான் என்பது, அவன் கையில் இருந்த வாளியைக் கண்டதுமே புரிந்து கொண்டாள்.

தன் மீது அவனுக்கு அப்படி என்ன கோபம்? “நான் அப்படி இவனுக்கு என்ன பாவம் செய்தேன்?” என்று தனக்குத் தானே கோபம் வர, “ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ள முடியாத இவனையா நான் இத்தனை வருடங்கள் உருகி உருகி காதலித்தேன்?” என்று நினைக்கையில் தன்னையே சபித்துக்கொண்ட துர்கா, ஆதியைப் பார்த்து எதுவும் கூறாமல் ஒரு வெற்றுப் புன்னகையை அவனைப் பார்த்து உதிர்த்துவிட்டு, அவனை கடந்து செல்ல, தன்னை அவள் பார்த்து ஒரு அலட்சியப் பார்வை பார்த்து சிரித்துவிட்டு செல்கிறாள் என்று அவள் மீது கோபம் கொண்டவன், துர்கா அவனைத் தாண்டிச் சென்று கொண்டிருக்க, வேகமாக தன் கையில் இருந்த வாளியைத் தூக்கி எறிய, அது “டமார்” என்று சுவற்றில் மோதி உடைய, சத்தம் கேட்டு திடுக்கிட்ட துர்கா திரும்பி அவனைப் பார்க்க, அவன் அவளையே முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். அவனைப் பார்த்தவள் திரும்பி வாளி விழுந்த இடத்தைப் பார்க்க, அது உடைந்து போயிருக்க, “உன்னுடைய நிலைமைதான் எனக்கும்” என்று அந்த வாளியைப் பார்த்து விரக்தியாகக் கூறியவள், திரும்பி அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

அவள் தன்னை மீண்டும் மீண்டும் அலட்சியப்படுத்து கொண்டே இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “இதற்கு மேலும் இங்கு நின்றால், தன் கோபம் முற்றி அவளை ஏதும் செய்துவிடுவோம்” என்று எண்ணம் தோன்ற, உடனே அந்த அறையை விட்டு வெளியே வந்தவன், தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அவன் கோபமாக அறையை விட்டு வெளியே செல்வதை, ஈரம் சொட்ட நின்றிருந்த துர்கா, அவன் செல்வதையே பார்த்தவள், அவன் தன் பார்வையில் இருந்து விலகும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தவள், பின் திரும்பி குளியலறைக்குச் சென்று, அங்கு இருந்த குளியல் தொட்டியில் தண்ணீர் நிறைய இருக்க, அதைப் பார்த்தவள் சென்று அதனுள் குத்தவைத்து அமர்ந்தவள், சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்க, அதைத் துடைக்க கூடத் தோன்றாமல் அப்படியே இருந்தவள், ஒரு கட்டத்தில் முடியாமல் வாய் விட்டு “ஆஹ்…” என்று கத்தி, தன் ஆற்றாமையைக் கண்ணீரால் வெளி ஏற்றினாள். அப்படியே பின்னால் சாய்ந்து, தன் தலையை வெளியே தொங்க போட்டுக்கொண்டு, உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க, கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தவள், இரவு முழுவதும் சாப்பிடாமல், மழையில் நனைந்து, இரவு முழுவதும் தூங்காமலும், ஆதி அவள் மீது பச்சை தண்ணீரையும் ஊற்றி இருக்க, அவள் உடல் சோர்ந்து தண்ணீருக்குள் அமர்ந்து இருந்தவள் அப்படியே மயங்கிப் போனாள்.

EPISODE 22

ஆதிக்கு, துர்கா, லக்ஷு ஆகிய பெயர்களை ஆதி, துர்கா என்று மாற்றி, அசல் கதை நடையை மாற்றாமல், எழுத்துப் பிழைகள், நிறுத்தற்குறிகள் ஆகியவற்றை மட்டும் சரிசெய்து, கொடுக்கிறேன்.

துர்கா குளியல் தொட்டியில் தண்ணீருக்குள் அமர்ந்தவள் அப்படியே மயங்கி விழுந்திருக்க, அவள் குளியலறையில் மயங்கிய விஷயம் தெரியாமல் ஆதி கோபத்தில் அறையை விட்டுச் சென்றவன், நேரே கிளம்பி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான்.

அலுவலகத்திற்கு வந்த ஆதியைப் பார்த்த விக்கியும் கதிரும் அவனிடம் வந்து, “என்னடா, நீ மட்டும் தனியாக வந்து இருக்க? உன் மனைவி வரலையா?” என்று விக்கி அவனைப் பார்த்துக் கேட்க, துர்காவைத் தன் மனைவி என்று சொன்னதும் ஆதியின் மனதிற்குள் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட, ஒரு நிமிடம் துர்காவின் முகம் வந்து போக, தன் மனதிற்குள் சந்தோஷம் பரவுவதை உணர்ந்த ஆதி, “என்ன இப்படி ஒரு உணர்வு?” என்று யோசித்தவன், காலையில் அவள் படிப்பு அறையில் படுத்திருந்தது நினைவிற்கு வர, “தன்னை வேண்டாம் என்று அலட்சியப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டாள்” என்று நினைத்து, “நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும்?” என்று மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தான். இவன் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த விக்கி, “டேய் ஆதி, உன்னைத்தான், என்னமோ யோசிச்சிட்டு இருக்க! ஏன் துர்கா வரலையா இன்னைக்கு?” என்று கேட்டான்.

விக்கியின் குரல் கேட்டு நினைவுக்கு வந்த ஆதி, “அவள் வரவில்லை” என்றான் கடுப்பாக. அவன் முகமே சரியில்லையே என்று உணர்ந்த விக்கி, கதிரைப் பார்த்தான். “அண்ணா, அப்போ அப்பா உனக்கு கால் பண்ணினாரா?” என்று கேட்டான் கதிர். அமைதியாக இருந்தவன் கதிர் கேட்டதற்குப் பதில் அளிக்காமல் அப்படியே அமைதியாக இருக்க, விக்கியைப் பார்த்த கதிர் திரும்பவும், “அண்ணா” என்று சத்தமாக அழைத்தான். கதிர் அழைத்ததும் அவனைப் பார்த்து, “என்ன?” என்பதுபோல தலையை நிமிர்த்த, ஆதியைப் பார்த்து, “சரி, இவங்க அண்ணன் ஏதோ இன்னைக்கு மனநிலையில் இல்லை போல இருக்கே” என்று நினைத்தவன், “ஒண்ணும் இல்லண்ணா, அப்பா உனக்கு கால் பண்ணினாரா?” என்று கேட்டான். “காலையிலேயே கால் பண்ணிட்டாரு கதிர்” என்றான். “நம்ம அருணாச்சலம் மாமா பொண்ணு கல்யாணத்துக்கு நம்ம எல்லாரும் குடும்பத்தோடு போகணும். அதனால நாளை மதியம் போல கிளம்பினால், மாலை அங்கு தங்குவதாக அப்பா உறுதி சொல்லி இருக்காங்க. அதனால நம்ம நாளைக்கு மதியம் எல்லாருமே கிளம்பனும்” என்றான் ஆதி. “அப்புறம், அருணாச்சலம் மாமா அப்பா கிட்ட என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசி இருக்காரு. துர்காவுடைய குடும்பத்தையும் அழைக்கணும்னு சொல்லி அப்பா கிட்ட போன் நம்பர் வாங்கி, துர்காவோட அம்மா, அப்பா கிட்ட பேசிவிட்டாராம் அருணாச்சலம் மாமா. சோ, அவங்களும் நம்ம கூட வருவாங்க. நாளை மதியம் அவங்க குடும்பம் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லுங்க. எல்லாரும் ஒண்ணா கிளம்பலாம்” என்றவன், “துர்கா கிட்ட சொல்லி அவங்க அம்மா, அப்பா கிட்ட எத்தனை மணிக்கு வர்றாங்கன்னு கேட்கச் சொல்லிடுங்க” என்றான். அதற்கு விக்கி, “ஏன்டா, நீ வீட்ல இருந்துதான் வர, துர்கா உன் கூடதானே இருந்திருப்பா? நீயே அவ கிட்ட விஷயத்தைச் சொல்லிப் பேசி இருக்கலாமே?” என்று கேட்க, “இல்லை, அப்பா நான் காரில் வரும்போது எனக்கு கால் செய்தார். அதனால் நான் துர்கா கிட்ட இன்னும் பேசல” என்றான் ஆதி விறைப்பான முகத்தை வைத்துக்கொண்டு.

அவன் முகத்தைப் பார்த்து விக்கி ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன், “சரிடா, நானே துர்கா கிட்ட பேசிக்கிறேன்” என்றவன், ஆதி கையில் இருந்தே தன் அலைபேசியை எடுத்து துர்காவிற்கு அழைக்க, துர்காவின் அலைபேசி முழுவதுமாக ஒலித்து இணைப்பு துண்டானது. மறுபடியும் இரண்டு, மூன்று தடவை அழைத்தும், அவள் அலைபேசியை எடுக்கப்படவில்லை. “ஏன்டா, எப்ப போன் பண்ணாலும் துர்கா ரெண்டு, மூணு ரிங்கில் எடுத்துருவாளே, இன்னைக்கு ஏன் போன் அடிக்கும்போது அவ எடுக்க மாட்டேங்கிறா?” என்று கூறிவிட்டு, “அவ என்ன செஞ்சுட்டு இருக்கா ஆதி? ஏன் அவ போன் எடுக்க மாட்டேங்கிறான்னு உனக்கு தெரியாதா?” என்று கேட்க, “அவ போன் எடுக்கலைன்னு எனக்கு எப்படித் தெரியும்? நான் எங்க இருக்கேன், அவ வீட்ல இருக்கா. அவ என்ன பண்ணிட்டு இருக்கான்னு நீ என்னைக் கேட்டா?” என்றான் கோபத்தோடு.

கதிரும் விக்கியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, கதிர் விக்கியிடம், “சரி, ஆதி ஏதோ பயங்கர கோபத்துல இருக்கான் போல துர்கா மேல. நம்ம முதல்ல இந்த அறையை விட்டு வெளியே போவோம். அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு துர்காவுக்கு போன் பண்ணிப் பார்ப்போமா?” என்று கூற, “சரிடா, சரி வா. ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீயும் நானும் கொஞ்சம் வெளியே போக வேண்டி இருக்கு” என்று ஆதி கூறிவிட்டு, விக்கியும் கதிரும் வெளியே சென்றனர்.

ஆதிக்கு துர்காவின் நினைவாகவே இருந்தது. “நான் வரும்போது அவள் படுக்கை அறையில் தானே நின்னுட்டு இருந்தா? அறைலதானே இருந்தா? ஏன் விக்கி இரண்டு, மூன்று முறை போன் பண்ணியும் அவ போன் எடுக்கவே இல்லை?” என்று யோசித்தவன், ஏதோ சரி இல்லை என்பது போல யோசித்தவன், தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு நேராகத் தன் வீட்டிற்குச் சென்றான்.

அலுவலகத்திற்குச் சென்று சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு திரும்பி வந்த ஆதியைப் பார்த்த முத்து தாத்தா, அவனிடம் வந்து, “ஏன் தம்பி, சீக்கிரமா வந்துட்டீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா? ஏதாவது மறந்துட்டீங்களா?” என்று அவனிடம் கேட்க, “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல தாத்தா, ஒரு கோப்பை மறந்துவிட்டேன். அதை எடுக்கத்தான் வந்தேன்” என்று பொய் சொன்னவன், தன் கண்களை சமையலறைக்குள் செலுத்த, அவன் பார்வையைப் புரிந்து கொண்ட தாத்தா, “தம்பி, காலையில இருந்து பாப்பா கீழே வரல. நானும் காலையில சாப்பிட வரச் சொல்லலாம்னு போய் அறை கதவைத் தட்டினேன், ஆனா பாப்பா கதவைத் திறக்கவே இல்லை. சரி, அசதியில தூங்கி இருக்கும்னு சொல்லிட்டு நானும் வந்துட்டேன் தம்பி” என்றார் முத்து தாத்தா.

“காலையில இருந்து அவ வெளியவே வரலையா?” என்று யோசித்தவனுக்கு, மனதிற்குள் ஏதோ தப்பாகத் தோன்ற, அவன் மேலே செல்லப் போக, அவனை அழைத்து முத்து தாத்தா, “ஒரு நிமிஷம்” என்று அழைக்க, மேலே செல்லப் போனவன் நின்று திரும்பி அவரைப் பார்த்த ஆதி, “உங்களுக்கும் பாப்பாவுக்கும் ஏதாவது சண்டையா தம்பி நேத்து நைட்டு?” என்று கேட்டார். அவன் ஒருவேளை துர்கா இவரிடம் எதுவும் சொல்லி இருப்பாளோ என்று யோசித்தவன், “ச்சே… இருக்காது. அப்படி இருந்தா முத்து தாத்தா விஷயம் என்னன்னு சொல்லி கேட்டு இருப்பார். அவருக்கே தெரியாது. அதனாலதானே என்கிட்ட கேக்குறாரு?” என்று யோசித்தவன், “இல்லை” என்பதுபோல தலையை ஆட்ட, “அப்போ ஏன் தம்பி பாப்பா நைட் முழுக்க மழையில நனைஞ்சிட்டு அழுதுட்டு இருந்திருப்பாள் போல்? நான் ரெண்டு மணி போல தண்ணி குடிக்க சமையலறைக்கு வந்தா அப்போ வாசல் கதவு திறந்து இருந்துச்சு தம்பி. வெளியே போய் பார்த்தா பாப்பா தொப்பலாக மழையில் நனைச்சுட்டு ஒரு நாற்காலியில் காலை குறுக்கி உட்கார்ந்து முகத்தை மூடி அழுதுட்டு இருந்துச்சு தம்பி. நான் போய் என்னன்னு கேட்டா, ‘ஒண்ணும் இல்லை தாத்தா’னு சொல்லிச்சு. நான் தான் பாப்பாவை வலுக்கட்டாயமாக உள்ள வரச் சொல்லி கூட்டிட்டு வந்தேன் தம்பி. வந்ததும் மேலே போனதுதான். அதுக்கப்புறம் இப்போ வரைக்கும் கீழே வரல. அதனாலதான் கேட்டு, உங்களுக்கும் பாப்பாவுக்கும் எதுவும் பிரச்சனையான்னு?” என்று தயக்கத்துடனே ஆதியிடம் கூறினார் முத்து தாத்தா.

“இரவெல்லாம் மழையில் நனைந்திருக்கிறாள்” என்று கேட்டதுமே ஆதியின் மனம் பதறியது. “தன்னால்தான் அவள் அழுதுவிட்டு வெளியே சென்றாள். நானும் அவள் எங்கே இருக்கிறாள், என்ன என்று பார்க்காமல் விட்டுவிட்டேனே! இப்படி இரவு முழுவதும் அழுது கொண்டு மழையில் நனைந்திருக்கிறாள். இது தெரியாமல் காலையில நான் வேற அவ மேல பச்சைத் தண்ணியைக் கொண்டு வந்து ஊத்திட்டேனே!” என்று மனம் பதைபதைக்க, “காலையில தாத்தா அறை கதவைத் தட்டியும் அவள் திறக்கல. விக்கி என் முன்னாடி தானே துர்காவுக்கு இரண்டு, மூன்று தடவை அழைத்தான். அப்பவும் அவள் எடுக்கவில்லையே? அவளுக்கு எதுவும் ஆகிவிட்டதோ?” என்று பதற்றமடைந்தவன், முத்து தாத்தாவிடம், “சரி தாத்தா, நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க” என்று கூறிக்கொண்டே வேகமாகத் தன் அறை நோக்கி ஓடினான்.

தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், அறையைச் சுற்றி நோட்டமிட துர்கா அங்கு இல்லை. “ஒருவேளை படிப்பு அறையில் இருப்பாளோ?” என்று அங்கு சென்று பார்க்க, அங்கேயும் அவள் இல்லை. “சாளரம், என்னுடைய உடற்பயிற்சிக் கூடம்” என்று அறை முழுவதும் தேட, துர்கா எங்கும் இல்லாமல் போகவே, ஆதிக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. “அறையை விட்டு வெளியே எங்கும் சென்று இருப்பாளோ? வீட்டின் வேறு அறைகளில் தேடிப் பார்க்கலாம்” என்று அவன் படுக்கை அறையில் இருந்து வெளியே செல்ல, அறைக் கதவைத் திறந்தவன், “அவள் காலையில் நான் கிளம்பும் பொழுது அவள் குளியலறையின் அருகில் நின்றிருந்தாளே” என்று நினைவில் வர, வேகமாகத் திரும்பி குளியலறை நோக்கி வந்தவன், கதவு பூட்டப்பட்டு இருப்பதைப் பார்த்தான். “அப்போ அவ காலையில் நான் சென்றதில் இருந்து குளியலறையில் தான் இருக்கிறாளா?” என்று யோசித்தவனின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்திருந்தது. வேகமாக கதவைத் தட்டி, “துர்கா” என்று அழைத்தான். எந்த சத்தமும் உள்ளே இருந்து வரவில்லை. கதவில் காதை வைத்துக் கேட்க, உள்ளே தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. மறுபடியும் கதவைத் தட்டி, “துர்கா” என்று சத்தமாக அழைக்க, எந்த சத்தமும் துர்காவிடம் இருந்து வராமல் இருக்கவே, “கதவைத் திறந்து கொண்டு உள்ளே போவது” என்று முடிவு செய்தவன், வேகமாக அறைக்கு வெளியே சென்று, “முத்து தாத்தா, என்னுடைய குளியலறை கதவின் சாவி வேண்டும்” என்று கூற, அவர் கீழிருந்து ஆதி சாவி கேட்டதும், “எதற்காக?” என்று யூகித்தவர், வேகமாகச் சென்று சாவியை எடுத்துக்கொண்டு ஆதியின் அறைக்கு உள்ளே சென்று சாவியை ஆதியின் கையில் கொடுக்க, அதை வாங்கியவன் கதவைத் திறக்கப் போக, முத்து தாத்தா நாகரீகம் கருதி வெளியே சென்றுவிட்டார்.

ஆதி கதவைத் திறந்து கொண்டு உள்ளே பார்க்க, அவள் அவ்வளவு பெரிய குளியலறையில் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த குளியல் தொட்டியில், துர்கா தலையும், கைகள் இரண்டும் வெளியே இருக்க, உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க, அப்படியே மயங்கி இருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் ஆதியின் இதயத்தில் யாரோ சுத்தியலால் அடித்ததுபோல இருந்தது. “தன்னைப் பிடித்துத் திருமணம் செய்தாளோ இல்லையோ, ஆனால் அவள் என்னை நம்பி வந்தவள். அவள் என்னுடன் இருக்கும் வரை அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை. அதை நான் தவற விட்டுவிட்டேனே!” என்று அவனது மனம் அவனது மூளைக்கு உரைக்க, வேகமாக அவள் அருகில் சென்றவன், “துர்கா” என்று அவள் கன்னம் தொட்டு அவளை எழுப்ப, அவள் நினைவின்றி இருக்க, அவன் அழைத்தது அவள் காதில் விழவே இல்லை.

அவளைத் தண்ணீரில் இருந்து வேகமாக வெளியே எடுக்க, அவள் உடல் முழுவதும் தொப்பலாக நனைந்து இருந்தது. அவளைத் தூக்கிக்கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தவன், கட்டிலில் அவளைப் படுக்க வைத்துவிட்டு, தன் அலைபேசியை எடுத்துத் தன் குடும்ப மருத்துவரை அழைத்து விவரம் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தவன், துர்காவைத் திரும்பிப் பார்க்க, அறை முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்ததால், அவள் குளிரில் நடுங்க ஆரம்பித்தது. அவள் உடல் முழுவதும் ஈரத்தோடு, தலையெல்லாம் ஈரத்தோடு கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்த ஆதி, வேகமாக அவள் அருகில் சென்றவன், அவளுக்கு உடை மாற்றலாம் என்று அவள் போட்டிருந்த சட்டையில் கை வைக்க, அதைக் கழட்டலாமா, வேண்டாமா என்று தனக்குள் ஒரு போராட்டமே நடத்தினான்.

கட்டிலில் இருந்து கீழே இறங்கியவன், வெளியே சென்று வேலையாட்களை யாரையாவது அழைத்து அவளுக்கு உடை மாற்ற வரச் சொல்லலாம் என்று நினைத்தவன், தனக்குத்தானே, “வேண்டாம், அவர்களை அழைத்து இப்படிச் சொன்னால், அப்போது எனக்கும் துர்காவிற்கும் இடையில் எதுவுமே நடக்கவில்லை என்று தெரிந்து கொள்வர். உடனே அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ கால் செய்து சொல்லிவிட்டால் என்ன செய்வது?” என்று நினைத்தவன், மீண்டும் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தவன், “ஆபத்திற்கு பாவம் இல்லை. அப்படி இருந்தாலும் இவள் என் மனைவி தானே? இவளை முழுமையாக பார்ப்பதற்கு எனக்கு முழு உரிமையும் உள்ளது. ஏற்கனவே அவளை ஒரு முறை அப்படி பார்த்தவன் தானே?” என்று நினைத்தவன், துர்காவைத் திரும்பிப் பார்க்க, குளிரில் அவள் உடல் உதறிக் கொண்டிருந்தது. குளிர்சாதனப் பெட்டியின் கட்டுப்பாட்டுக் கருவியை எடுத்து அதை அணைத்தவன், அறை வெப்பமாக்கியை ஆன் செய்தான். பின் கட்டிலின் மேல் அவள் அருகில் அமர்ந்தவன், அவளைத் தூக்கி தன் மீது சாய்த்துக் கொண்டு, அவள் போட்டிருந்த சிறிய அரைக் காற்சட்டையையும், பனியனையும் முதலில் கழற்றினான். பின் அவள் உள் ஆடைகளையும் கழற்றித் தூர எறிந்தவன், துண்டை எடுத்து அவள் தலை முதல் பாதம் வரை முழுவதுமாக துடைத்துவிட்டான். சுத்தமாக ஏதும் இல்லாமல் துடைத்துவிட்டவன், படுக்கை முழுவதும் ஈரமாகி இருக்க, அவளைப் படுக்கையில் இருந்து தூக்கியவன், நேராக அலங்கார அறைக்குச் சென்றான். அங்கு இருந்த சோபாவில் அவளைப் படுக்க வைத்துவிட்டு, உள்ளிருந்து அவளையும் முழுவதும் மூடும்படி ஒரு ஆடையை எடுத்துப் போட்டுவிட்டான்.

அவளுக்கு உடையும் மாற்றிவிட்டு, பின் தன்னையும் பார்க்க, அவன் உடை முழுவதும் ஈரமாக இருக்க, அங்கேயே தன் உடையையும் மாற்றிவிட்டு, கட்டிலுக்குச் சென்று ஈரமாக இருந்த படுக்கை விரிப்பைத் தூரப் போட்டுவிட்டு, வேறு படுக்கை விரிப்பை மாற்றிவிட்டு, துர்காவைத் தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தவன், அவளைப் பார்க்க, அவள் உடல் மிகவும் நடுங்கிக் கொண்டிருக்க, அவள் உள்ளங்கைகளையும் கால்களையும் சூடு பறக்கத் தேய்த்துவிட்டவன், அவள் இன்னும் நடுங்குகிறாளே என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, அவளுக்குக் குளிர் காய்ச்சல் வந்து நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய முட்டாள்தனத்தால் துர்கா இப்படி ஆகிவிட்டாளே என்று மிகவும் வருந்திய ஆதி, “மருத்துவர் இன்னும் காணவில்லை” என்று தன் அலைபேசியை எடுத்து மருத்துவருக்கு அழைக்கப் போக, அப்போது அவன் அறை கதவு தட்டப்படவும், துர்காவிற்கு கழுத்து வரை படுக்கை விரிப்பை முழுவதுமாகப் போர்த்திவிட்டவன், நேராகச் சென்று கதவைத் திறக்க, அங்கே அவனுடைய குடும்ப மருத்துவர் ஷியாமலாவும், முத்து தாத்தாவும் நின்றிருந்தனர்.

அவரை உள்ளே அழைக்க, நேராகச் சென்று துர்காவைப் பார்த்தவர் திரும்பி ஆதியிடம், “ஆதி, என்ன நடந்தது?” என்று கேட்க, அவன் அனைத்தையும் ஒன்றுமறைக்காமல் கூற, டாக்டரை முறைத்து, “ஆதி, கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்றவர், துர்காவைப் பரிசோதித்துவிட்டு, அவளுக்கு மருந்து செலுத்திவிட்டு, அவளுக்குக் காய்ச்சல் குறைய ஊசி போட்டுவிட்டு, ஆதியை உள்ளே அழைத்தவர், முத்து தாத்தாவிடம் சென்று, “சுடு தண்ணீர் வைத்துவிட்டு வரும்படி” அவரை அனுப்பி வைத்துவிட்டு, ஆதியைப் பார்த்து, “என்ன ஆதி, இப்படிப் பண்ணி வச்சிருக்க! இது உன்னோட அம்மா, அப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகிறது?” என்று அவர் கேட்க, “ஆண்டி, சாரி ஆன்டி. நான் ஏதோ கோவத்துல துர்கா மேல தண்ணி ஊத்திட்டேன்” என்று அவன் சொல்ல, “என்னப்பா நீ? ஏன் இப்படிப் பண்ணலாம்? சரி, இனிமேலாவது அவளிடம் கொஞ்சம் அனுசரிச்சு நடந்து போ. ஏற்கனவே அவள் உடல் நெருப்பாக கொதிச்சிட்டு இருக்கு. நான் ஊசி போட்டு இருக்கேன். போயிட்டு இருக்கும். என்னோட செவிலியர் நான் இங்கே விட்டுட்டுப் போறேன். ஏதாவது அவசரம்னா எனக்கு கால் பண்ணு. அவள் பக்கத்துல இருந்து அவளைப் பார்த்துக் கொள். அவளுக்குக் குளிரில் நடுக்கம் வராமல் பார்த்துக்கொள்ளனும்” என்று கூறிவிட்டு, சில மருந்து மாத்திரைகளை அவனுக்குக் கொடுத்து, “நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த மாத்திரையைக் கொடு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் சென்றதும் முத்து தாத்தா சுடு தண்ணீர் கொண்டுவர, அவரை அனுப்பி வைத்துவிட்டு, சுடு தண்ணீர் நனைத்து அவளுக்கு கை, கால் எல்லாம் சுடு தண்ணீர் ஊற்றுதல் கொடுத்தான். அவள் அருகிலேயே அமர்ந்து அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்ட ஆதி, அவ்வப்போது அவள் குளிரில் நடுங்கவும், அவள் கை, கால்களை சூடு பறக்கத் தேய்த்துவிட்டவன், அவளுக்கு நன்றாகப் போர்த்திவிட்டு, அவளுக்கு உயிரெடுக்காமல் இதமாக இருக்கமாறும்படிப் பார்த்துக் கொண்டான். மதியம் அவள் சாப்பிடுவதற்கு கஞ்சி வைத்துத் தரச் சொல்லி அவனே அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு ஊட்டிவிட்டான்.

ஆதி அலுவலகத்திலிருந்து வந்ததுல இருந்து துர்காவை விட்டு ஒரு நிமிடம் கூடப் பிரிந்து இருக்கவில்லை. அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான். துர்காவின் காய்ச்சல் லேசாக குறைந்ததே ஒழிய முற்றிலுமாக குறையவில்லை. அப்போது மருத்துவர் அவளைப் பார்த்துக் கொள்ள விட்டுச் சென்ற செவிலியர் வந்து, துர்காவின் வெப்பநிலையைப் பார்த்துவிட்டு, மருந்து சொட்டுநீரையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதிக வேலை ஆதி வைக்கவே இல்லை. இரவு 9 மணி போல துர்காவிற்கு மறுபடியும் கஞ்சியைக் கொடுத்து அவளுக்கு மாத்திரையை அவள் அரை மயக்கத்தில் இருக்கும்போதே தன் மீது சாய்த்து, அவளுக்கு மாத்திரை கொடுத்தவன், சிறிது நேரத்தில் செவிலியர் வந்து மருந்து சொட்டுநீரைப் பார்த்து மாற்றிவிட்டு, ஆதியிடம், “இந்த சொட்டுநீர் காலை வரை இருக்கும் சார். ஏதாவது அவசரம்னா என்னைக் கூப்பிடுங்க. நான் அந்த எதிரில் இருக்கும் அறையில் தான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த செவிலியர் சென்றவுடன், ஆதி, “சரி” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு, அறைக்கதவைச் சாத்திவிட்டு வந்து, துர்காவின் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டான்.

மாத்திரை, ஆதியின் கவனிப்பு என்று அனைத்தும் சேர்ந்து துர்காவிற்கு இப்போது ஓரளவு காய்ச்சல் குறைந்து இருந்தது. அருகிலேயே அமர்ந்தவன், அவள் எப்போது கண் திறப்பாள் என்று பார்த்துக் கொண்டே அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவளைப் பார்த்து, “ஏன் துர்கா இப்படிப் பண்ற? உனக்கு என்னைப் பிடிக்கல அப்படின்னா, நமக்குக் கல்யாணம் ஆனாலும் நான் உன் கணவனா இருக்கணும்னு அவசியமில்லை. ஒரு நண்பனாவாவது நீ எப்பவும் போல என்கிட்ட நடந்துக்கலாமே? ஏன் என்னைப் பிடிக்காத மாதிரி இப்படி நீ நடந்துக்குற? எனக்கு கோபம் உண்டாக்கினால் தானே நான் உன் மேல பச்சைத் தண்ணியைக் கொண்டு வந்து ஊத்தினேன். என்னை மன்னித்துவிடு துர்கா” என்று மனதிற்குள்ளேயே ஆதி துர்காவிடம் மன்னிப்புக் கேட்டான். இது எதுவுமே துர்காவிற்கு கேட்கவில்லை. அவன் மனது கேட்காமல் தான் துர்காவிடம் மன்னிப்புக் கேட்டான்.

அவள் கைகளைப் பிடித்துக்கொண்டே அமர்ந்திருந்தவன் எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை. அப்படியே அவள் கைகளைப் பிடித்துக்கொண்டே தூக்கத்தில் மெத்தையில் தலை வைத்தவாறு படுத்து உறங்கிவிட்டான் ஆதி. திடீரென்று துர்காவின் முனகல் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த ஆதி, நிமிர்ந்து துர்காவைப் பார்க்க, அவள் மீண்டும் உடல் நடுங்கி கொண்டு படுத்திருந்தாள். குளிரில் அவளுக்கு நடுக்கம் வந்ததுபோல அவள் உடலும் கை, கால்களும் விட்டுவிட்டு இழுக்க, ஆதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாகச் சென்று அங்கிருந்த செவிலியரை அழைத்துக் கொண்டு உள்ளே வர, அவர் வந்தவர் துர்காவின் நிலையைப் பார்த்து, அவசர அவசரமாக ஒரு ஊசியை எடுத்து அவள் நரம்பு வழியே செலுத்தினார். சிறிது நேரம் துர்காவின் அருகிலேயே இருந்து அவளின் நடுக்கம் குறைகிறதா என்று பார்த்தவர், ஆதியிடம், “மறுபடியும் நடுக்கம் வராமல் பார்த்துக்கோங்க சார். அப்படி வந்துருச்சுன்னா ரொம்ப சிரமமாகிடும். அவங்களை மருத்துவமனைதான் கூட்டிட்டுப் போகணும்” என்று சொல்லிவிட்டு செவிலியர் சென்றுவிட, அவர் சென்றதும் ஆதி எழுந்து வந்து கட்டிலில் அமர்ந்து, துர்காவைத் தூக்கித் தன் தோள் மீது சாய்த்துக்கொண்டு, அவள் உடல் முழுவதும் போர்வையால் இறுக்கமாகப் போர்த்திவிட்டு, அவளைத் தன் கை வளைவுக்குள் படுக்க வைத்து அவளை அணைத்தவாரே ஆதிக்கும் படுத்திருந்தான். அவளோடு சேர்ந்து அவனும் உறங்கிவிட, மறுபடியும் துர்காவிற்கு உடல் நடுக்கம் வந்தது போல நடுங்கத் தொடங்கியது. அவளைத் தன் கை வளைவில் இருந்து படுக்க வைத்தவன், அவள் கை, கால்களை எல்லாம் தேய்த்துவிட, அவள் நடுக்கம் குறைந்த பாடில்லை.

“என்ன செய்வது?” என்று தெரியாமல் யோசித்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக, தன் சட்டையைக் கழற்றிவிட்டு, துர்காவுடன் சென்று அவள் போர்வைக்குள் நுழைந்து கொண்டான்.

EPISODE 23

கதிரிடம் விக்கி ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறி, அவனை அழைத்துக்கொண்டு கிளம்பிச் சென்றான். “எங்கே போகிறோம்? யாரை பார்க்கப் போகிறோம்?” என்று வழியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த கதிரிடம், “கொஞ்ச நேரம் பேசாமல் அமைதியாக வாடா…” என்று அவனை மிரட்டுவது போலப் பார்த்த விக்கி, பின் “டேய் கதிர்” என்று அழைத்தான்.

அவனைப் பார்த்த கதிர், “என்ன, சொல்லு” என்றான் விக்கியை முறைத்துக்கொண்டு. “சரிடா, கோச்சுக்காதே” என்று அவன் தோளில் கை வைத்துத் தடவ, “முதல்ல மேல இருந்து கை எடுடா” என்றான் கதிர். “எதுக்குடா கோச்சுக்கிற? நான் ஒரு முக்கியமானவங்களை சந்திக்கத் தானே உன்னை கூட்டிட்டுப் போறேன். அங்கே போனால் யாரு, என்னன்னு நீயே தெரிஞ்சுக்கப் போற. அதை விட்டுட்டு சும்மா போற வழியில எங்க போற, யாரை பார்க்கப் போறோம்னு நினைச்சுக்கிட்டே இருந்தா எனக்கு கோவம் வந்துருச்சு. அதனாலதான் உன்னை அப்படிப் பேசிட்டேன்” என்றான் விக்கி. “சரி, பரவாயில்லை. இப்பவாவது சொல்லு, நாம யாரை பார்க்கப் போறோம்?” என்று கதிர் கேட்க, “நான் எது பண்ணாலும் உனக்கு நல்லதுக்கு தானே பண்ணுவேன்?” என்று கேட்டான் விக்கி. “எதுக்குடா திடீர்னு கேக்குற?” என்று விக்கியைப் பார்த்துக் கதிர் கேட்க, “நான் சொன்னதுக்கு முதல்ல பதில் சொல்லு” என்றான் விக்கி. “கண்டிப்பா நீ பண்ணுவது எங்கள் நல்லதுக்காகத்தான் இருக்கும். இதுல நானும் சரி, என் அண்ணனும் சரி, உன் மேல முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்றான் கதிர். “அப்போ இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கேட்காமல் பேசாமல் அமைதியா வரியா?” என்று கேட்க, “அப்போ கடைசி வரைக்கும் நம்ம யாரை பார்க்கப் போறோம்னு நீ என்கிட்ட சொல்ல மாட்ட அப்படித்தானே?” என்றான் கதிர். “டேய்! இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம அவங்களை சந்திக்கப் போறோம். அதுக்குள்ள எதுக்குடா இந்த பரபரப்பு? கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு” என்றவன், “ஒரு ஐந்து நிமிடங்கள் அமைதியா, ரிலாக்ஸாக வா. உனக்கு அங்கே போனதும் தெரிஞ்சுடும்” என்றான்.

இதற்குமேல் விக்கியிடம் கேட்டு பிரயோஜனமே இல்லை என்று முடிவு செய்த கதிர், “சரி, என்னமோ பண்ணித் தொலை” என்று அமைதியாக இருக்கையில் சாய்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான். ஐந்து நிமிடத்தில் கார் நின்றது ஒரு கல்லூரி முன்பு என்று தெரிந்ததும், திரும்பி விக்கியை முறைக்க, “ப்ளீஸ் டா, கோச்சுக்காதே. கொஞ்சம் இறங்குறியா?” என்று கூறி அவனை இறங்கச் சொல்ல, “நீ இப்ப எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்து இருக்க? அதுவும் இந்த கல்லூரிக்கு?” என்றான் கதிர். “என்னன்னு சொல்றேன். ஒரு நிமிஷம் நீ கீழே இறங்குடா” என்ற விக்கி கீழே இறங்கி, கதிரின் அருகில் சென்று கார் கதவைத் திறக்க, ஏதோ யோசனை செய்தவாறு காரில் இருந்து இறங்கினான் கதிர். “சரி, இறங்கிட்டேன். இப்ப சொல்லு. இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்த? இங்க யாரை சந்திக்கப் போறோம்?” என்று கதிர் கேட்க, “இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னு நீ யோசி. இங்கு யாரை சந்திக்கப் போறேன்னு உனக்குத் தெரிந்திருக்கும் தானே?” என்றான் விக்கி கதிரைப் பார்த்து. “இப்ப எதுக்கு அவளைப் பார்க்கறதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்த?” என்று கேட்டான் கதிர். “முதல்ல வந்து காரை ஸ்டார்ட் பண்ணு. முதல்ல கிளம்பலாம் இங்கிருந்து. எனக்கு யாரையும் சந்திக்க இஷ்டம் இல்லை” என்று கதிர் கூற, “உன்னை இன்னைக்கு அவளை சந்திக்க கூட்டிட்டு வரேன்னு கீர்த்திகா கிட்ட உறுதி கொடுத்துட்டேன்டா. ப்ளீஸ், ஒரு ஐந்து நிமிடங்கள் வந்து அவளிடம் என்னன்னு மட்டும் பேசு. அதுக்கப்புறம் போயிடலாம்” என்று கூறினான்.

விக்கி கதிரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும்போது, அங்கே கீர்த்திகா வந்தாள். வந்தவள் கதிரைப் பார்த்து பயந்து கொண்டே விக்கியைப் பார்த்து, “ஹாய் அண்ணா, நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க, “அடடா! வாடா தங்கச்சி, வந்துட்டியா? நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்க? கல்லூரி எல்லாம் எப்படிப் போகுது?” என்று அவனும் பேச, இவர்கள் இருவரும் கதிரைச் சட்டை செய்யாமல் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த கதிர் மேலும் கோபம் வர, “இப்ப நீ வந்து முதல்ல காரை எடுக்கப் போறியா? இல்லை நான் கிளம்பிப் போகட்டுமா?” என்று ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தவன், குனிந்து கீர்த்திகாவைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, விக்கியைப் பார்த்து, “இப்ப நீ உள்ள ஏறலைன்னா நான் காரை நிறுத்தாமல் கிளம்பிடுவேன்” என்று சொல்லிவிட்டு, விக்கிக்காக காத்திருக்க, கதவு திறக்கவும் விக்கிதான் வந்து அமர்கிறான் என்று திரும்பிப் பார்க்க, காரில் கீர்த்திகா அமர்ந்திருந்தாள்.

“நீ எதுக்கு வந்து காருக்குள்ள போற? முதல்ல கீழே இறங்குடி” என்று கோபமாக கீர்த்திகாவைப்பார்த்துப் பேச, “இங்க பாரு, என்னை ‘டி’ போட்டு கூப்பிட்டால் அப்புறம் நானும் உன்னை ‘டா’ போட்டு கூப்பிட வேண்டி வரும்” என்று கீர்த்திகா சொல்ல, “‘டா’ போட்டு கூப்பிடு பார்ப்போம்! என்னை ‘டா’ போட்டு கூப்பிட்ட வாயைக் கிழிச்சிடுவேன்” என்று கூற, “அப்போ நீயும் என்னை ‘டி’ போட்டு கூப்பிடாதே” என்றாள். அவளைப் பார்த்துக் கை எடுத்து கும்பிட்ட கதிர், “அம்மா தாயே! உன்னை நான் எதுவும் சொல்லி கூப்பிடல. முதல்ல காரில் இருந்து இறங்குறியா?” என்று கூற, அவன் அப்படி செய்ததும் கீர்த்திகாவிற்கு சிரிப்பு வந்துவிட, தன் உதட்டை மடித்து வந்த சிரிப்பை அடக்கினாள். “சிரிக்காதேடி” என்று அவள் சிரிப்பை அடக்கியதைப் பார்த்தவன், “இப்ப நீ மட்டும் காரில் இருந்து இறங்கலைன்னா…” என்று கூறி நிறுத்த, “இறங்கலைனா என்ன பண்ணுவ?” என்று அவளும் விடாமல் அவனிடம் வம்பு இழுக்க, ஸ்டார்ட் செய்திருந்த காரை வேகமாகச் சாலையில் செலுத்தினான்.

கதிர் திடீரென்று காரை வேகமாகச் செலுத்த, கீர்த்திகாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கதிரைக் கலவர முகத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தவள், “இப்போ எதுக்கு காரை இவ்வளவு வேகமா ஓட்டிட்டுப் போற நீ?” என்று பயந்து கொண்டே கதிரைப் பார்த்துக் கேட்க, “காரை விட்டு இறங்க மாட்டேன்னு நீதானே சொன்ன? அதான் உன்னைக் கடத்திட்டுப் போகலாம்னு” என்றவன் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க, அவன் கூறியதைக் கேட்டு கீர்த்திகாவின் முகம் அந்த குளிர்சாதனப் பெட்டியிலும் வியர்த்துக்கொட்டியது. “கடத்திட்டுப் போறியா என்னை? எனக்குப் பயமா இருக்கு. முதல்ல என்னை இறக்கிவிடு” என்று அவள் கெஞ்ச, அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.


கதிர் காரை எடுத்துக்கொண்டு வேகமாகச் செல்வதைப் பார்த்த விக்கி, “நல்லா இருக்குடா! உங்க சண்டையில என்னை நடுரோட்டில் விட்டுட்டீங்களே!” என்று புலம்பியவன், தன் அலைபேசியை எடுத்து ஒரு ‘கேப்’பை முன்பதிவு செய்துவிட்டு, அது வரும் வரை காபி கடையில் காத்திருக்கலாம் என்று கீர்த்திகா சொன்ன காபி கடைக்குச் சென்று, காபி ஆர்டர் செய்துவிட்டு, தன் அலைபேசியை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தான் விக்கி. அவனது காபியும் வந்துவிட, அதை எடுத்து ஒவ்வொரு சிப்பாகக் குடித்துக்கொண்டே அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கியின் தோளில் ஒரு மென்மையான கரம் அவனை அழுத்தியது.

“யார்?” என்று திரும்பிப் பார்த்த விக்கிக்குத் தன் அருகே இருந்தவரைப் பார்த்ததும் புருவங்கள் இரண்டும் முடிச்சிட, குழப்பத்தோடு பார்க்க, அவள் அழகில் அப்படியே உறைந்துபோனான். என்ன ஒரு சாந்தமான அழகு அவள் முகத்தில் தெரிகிறது! வகிடு எடுத்துப் படிய தலை சீவி, ஒப்பனை இல்லாத முகத்தில் கண்ணில் அழகாக மை இட்டு இருந்தாள். அந்தக் கண்ணைக் கண்டதும் நம்ம விக்கி விழுந்துவிட்டான். அதில் ஒரு கண்ணாடியும் அணிந்திருக்க, அவளை ரசித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து அந்தப் பெண், “ஹலோ அண்ணா! எப்படி இருக்கீங்க? இப்போதான் வந்தீங்களா?” என்று கூறிக்கொண்டே ஒரு பெண் அவன் எதிரே வந்து அமர, “யாருமா நீ? உனக்கு என்னை இதற்கு முன்னே தெரியுமா? என்னை தெரிந்தவள் போலப் பேசுகிறாயே?” என்று கேட்க, அவனிடம் சிரித்துக்கொண்டே பேசுவதுபோல, “அண்ணா, கொஞ்ச நேரம் நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன் அண்ணா. என்னோட மூத்த சகோதரிகள் எல்லாம் என்னை ரொம்ப நையாண்டி பண்றாங்க. அவங்க கிட்ட நான் என் அண்ணா என்னை பக்கத்துல இருக்கும் காபி கடையில வெயிட் பன்னிட்டு இருக்காருன்னு போய் சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா அதை நம்பாம அவங்க என்னை ‘ஃபாலோ’ பண்ணிட்டு வந்துட்டாங்க. நான் உண்மையா தான் சொல்றேனா? இல்லை அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக பொய் சொல்லிட்டு வந்து இருக்கேன்னு பாக்குறதுக்காக வந்துட்டாங்கண்ணா” என்றாள். “அதனால நான் இந்த காபி கடைக்குள்ள வந்து சுத்தி முத்திப் பார்த்துட்டு நீங்க மட்டும் தான் தனியா உட்கார்ந்து இருந்தீங்க. அதுவும் உங்களை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது அண்ணா” என்று வார்த்தைக்கு வார்த்தை அந்தப் பெண் ‘அண்ணா’ என்று கூப்பிடவும், அவனுக்கு இவ்வளவு அழகாக இருக்கிற பெண் தன்னை ‘அண்ணா’ என்று கூப்பிடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“முதல்ல நீ என்னை அண்ணன்னு கூப்பிடுறதை நிறுத்து” என்றவன், “சரிமா, நான் இப்ப என்ன பண்ணட்டும் சொல்லு” என்று அவன் கேட்க, “கொஞ்ச நேரம் என் கூட தெரிஞ்சவள் போலப் பேசிட்டு இருங்க அண்ணா. அது போதும்” என்றாள். “அப்படியா? சரிமா” என்றவன், “முதலில் நீ என்னை அண்ணன்னு கூப்பிடாதே” என்று அவளைத் தெரிந்தவன் போலச் சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான் விக்கி. “ஏன் அண்ணா நான் உங்களை அப்படி கூப்பிடக் கூடாதா?” என்று அவளும் சிரித்துக்கொண்டே பேச, “நீ என்னை அண்ணன்னு கூப்பிடுறது எனக்குப் பிடிக்கலை” என்றான் அவன் சிரித்துக்கொண்டே. அவளும் சிரித்துக்கொண்டு, “அப்போ ஏன் நான் உங்களை அண்ணன்னு கூப்பிடுறது உங்களுக்குப் பிடிக்கலை?” என்று அந்தப் பெண் கேட்க, “இவ்வளவு அழகான ஒரு பொண்ணு என்ன வந்து அண்ணன்னு சொல்லி கூப்பிட்டால், கல்யாணம் ஆகாத ஒரு ‘சிங்கள்’ பையனைப் பார்த்து அண்ணன் சொன்னா எனக்குக் கஷ்டமா இருக்காதா?” என்று அவன் கூற, அவன் பேச்சு வேறு மாதிரி செல்வதை உணர்ந்த அந்தப் பெண், “நாம தெரியாமல் இவனிடம் வந்து பேசி கொடுத்துவிட்டோமோ?” என்று யோசித்தவள், எழுந்து, “சரி அண்ணா நான் போயிட்டு வரேன்” என்று செல்லப் போக, சரியாக அவள் கூறிய அவளுடைய மூத்த மாணவிகள் அவளைக் காண அந்த காபி கடைக்குள் வந்துவிட, திரும்பவும் வந்து அவன் மேசையிலேயே அமர்ந்து கொண்டாள்.

“அண்ணா, ப்ளீஸ் அண்ணா! தயவுசெய்து கொஞ்ச நேரம் அமைதியா இருங்களேன். அவங்க எல்லாம் போனதுக்கு அப்புறம் நான் எந்திரிச்சு போயிடுறேன். ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச, “நீ என்னை அண்ணன்னு கூப்பிடாம இருந்தா நான் சும்மா இருப்பேன்” என்று விக்கி கூற, அவள் “சரி” என்று தலையை ஆட்டியவள் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த அவளுடைய கல்லூரி மூத்த மாணவி, “ஏய், இவன்தான் உன் அண்ணனா?” என்று கூற, அந்தப் பெண் விக்கியைப் பார்த்து “ஆம்” என்று தலையாட்ட, விக்கி அவளை முறைத்துப் பார்த்தவன், நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து, “அந்தப் பொண்ணு பொய் சொல்லுதுமா” என்று கூற, நின்று கொண்டிருந்த பெண் திரும்பி அவன் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து, “ஏய்… நிலானி… இந்த ஆள் சொல்றது உண்மையா?” என்று கேட்டாள்.

“நிலானி” என்று அந்தப் பெண் பெயர் சொல்லி அழைக்க, அதைக் கேட்ட விக்கி, “நிலானி… நிலானி… நிலா…னி… நிலா…” என்று மாற்றி மாற்றி அவள் பெயரைச் சொன்னவன், எதிரே இருக்கும் நிலானியைப் பார்க்க, அந்தப் பெண் நிலானியின் கையைப் பிடித்து, “என்கிட்டயே பொய் சொல்றியா?” என்று கூறி அவளை, “என் கூட வாடி…” என்று அவளை இழுத்துக்கொண்டு செல்ல, நிலானி விக்கியை, “இப்படி என்னை மாட்டிவிட்டுட்டியே!” என்று அவனை முறைத்துக்கொண்டே, அந்தப் பெண்ணிடம், “மூத்த சகோதரி, ப்ளீஸ் மூத்த சகோதரி என்னை விடுங்க” என்று அவளிடம் கெஞ்சிக்கொண்டே, மேசையிலிருந்து அந்தப் பெண்ணின் இழுப்பிற்கு எழுந்து போன நிலானி, விக்கியை முறைத்துக்கொண்டே அவனைத் தாண்டிச் செல்ல, அவளை இழுத்துக்கொண்டு சென்ற அந்தப் பெண் மறுஅடி எடுத்து வைக்கும்போது நிலானியை இழுக்க முடியாமல் அவளைத் திரும்பிப் பார்க்க, நிலானியின் மற்றொரு கையை விக்கி பிடித்துக்கொண்டு, ‘ஹீரோ’ போல ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான்.


துர்காவிற்கு மீண்டும் உடல் நடுங்கத் தொடங்க, செவிலியர் கூறியது நினைவில் வர, ஒரு முடிவுக்கு வந்தவனாக, தான் மேல் சட்டையைக் கழற்றிக்கொண்டு படுக்கைக்குச் சென்று, துர்காவை போர்த்தி விட்டிருந்த போர்வைக்குள் நுழைந்து அவளுடன் நெருக்கமாகப் படுத்துக்கொண்டான்.

அவன் வெற்று மார்பு அவள் மேல் படவும், அவன் உடல் சூடு அவள் குளிருக்கு இதமாக இருக்க, தன் அருகில் ஆதிதான் இருக்கிறான் என்று தெரியாமல் அவளாகவே அவனை அணைத்துக் கொண்டாள். அவள் உடல் நடுக்கம் குறைந்த பாடில்லை. அவள் கை, கால்கள் நடுங்க, உதடுகள் ‘தந்திரி’ அடிப்பதைப் பார்த்தவன், அவளைத் தன் கை வளைவில் கொண்டு வந்து, தன்னோடு எவ்வளவு சேர்ந்து படுக்க வைக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக துர்காவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், அவள் கைகளை எடுத்துத் தன் மீது போட்டுக்கொண்டான். அவள் காலைத் தூக்கி அவள் கால் மேல் போட்டு, அவள் கால்களைத் தன் காலால் உரசி சூடேற்ற முயன்றான்.

அவளுக்குக் குளிர் குறைவதாகத் தெரியவில்லை. அவன் கைகள் அவள் உடல் முழுவதும் தேய்த்துவிட்டுக்கொண்டிருக்க, அவள் உடலைத் தொட்டதும் துர்காவிற்கு உடலில் வேதியியல் மாற்றம் நிகழ, அவனை இறுக அணைத்து, அவன் முகத்தோடு தன் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டு, அவன் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து உரச, ஆதியின் நிலைதான் இங்கே பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. காலையில் தான் அவள் தன்னை ஒதுக்குகிறாள் என்று அவளை அவ்வளவு பேசினான். தன் முகத்தில் இருக்கும் கொப்புளங்களை அவள் முக சுழிப்போடு பார்த்தது அவனுக்கு நினைவில் வர, ஆனால் இப்போது அவள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன் முகத்தோடு அவள் முகம் உரசிக் கொண்டிருக்கிறாளே என்று யோசித்தவன், அவள் உடலை வருடிக் கொண்டிருந்த அவன் கையை எடுத்து, அவள் முகத்தைத் தன்னிடம் இருந்து பிரித்தவன், அவள் முகத்தைப் பார்க்க, அவள் உதடு நடுங்கிக் கொண்டிருக்க, கண்கள் அரை மயக்கத்தில் இருக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“துர்கா” என்று அழைத்தான். அவள் எதுவும் பேசாமல் அவன் கால்களோடு தன் கால்களை உரசிக்கொண்டும், அவனை கட்டியிருந்த கைகளை அவன் முதுகில் அலை பாய விட்டுக்கொண்டும் இருக்க, அவன் உடம்பில் ஒரு வித மாற்றம், ‘இது என்ன உணர்வு?’ என்று சொல்ல முடியாத ஒரு வித உணர்வு அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஈன ஸ்வரத்தில் “துர்கா” என்று அவன் அழைக்க, தன் கண்களை மெல்லத் திறந்து பார்க்க, அவள் எதிரில் அவன் முகம் மிக நெருக்கமாகத் தெரிய, “ஆதி” என்று கிறக்கத்தோடு அவன் பெயரை அழைக்க, அவள் குரலில் இருந்த கிறக்கம் இவனையும் தொற்றிக்கொண்டது.

“துர்கா… என்ன… என்ன பண்ற?” என்றான். அவள் மயக்கத்திலேயே அவனிடம் திருப்பி, “என்ன பண்ணிட்டு இருக்கேன்?” என்று அவன் கேட்ட கேள்வியையே அவனிடம் கேட்டாள். “இப்போ உனக்குப் பரவாயில்லையா?” என்று அவன் கேட்க, “ம்ம்ம்ம்…” என்றாள் மெதுவாக. “சரி” என்றவன், அவளை விட்டு எழ மனமில்லாமல் அவளை விட்டு எழ, அவன் எங்கோ எழுந்து செல்கிறான் என்று அவன் கையைப் பிடித்து, “எங்க போறே?” என்றாள் குழந்தை போல.

அவன், “உனக்கு இப்போ நல்லா இருக்கு. நீ மாத்திரை சாப்பிட்டிருக்க. நல்லா தூங்கு” என்று எழுந்தான். அவள் உதடுகள் நடுங்க, “எனக்குத் தூக்கம் வரலை ஆதி. ரொம்பக் குளிருது” என்று படுத்திருந்தவள் எழ முயற்சிக்க, அவள் மிகவும் சோர்ந்து போய் எழ முடியாமல், ‘போதென்று’ மறுபடியும் படுக்கையில் ‘பொத்தென’ விழ, அவளைப் பார்த்த ஆதி பதறி, “இப்போ எதுக்கு துர்கா எழற? பேசாமல் படு” என்று மீண்டும் எழுந்தவளை எழ விடாமல் படுக்கையில் படுக்க வைக்க, அவள், “அப்போ நீயும் என்கூடப் படுத்துக்கோ” என்று படுத்துக்கொண்டே அவன் கழுத்தில் கைவைத்து, அவனைத் தன்னோடு சேர்ந்து படுக்க வைத்துவிட்டாள். அவனை அருகில் படுக்க வைத்தவுடன், அவன் மீது தன் கையையும் காலையும் போட்டு நெருங்கிப் படுத்தவள், அமைதியாகப் படுத்திருக்க, ஆதியினால் அவளை அவளிடம் இருந்து பிரிக்க முடியாமல், அமைதியாக அவன் கைக்குள் படுத்திருக்கும் துர்காவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு கண்கள் மூடித் தூங்க ஆரம்பிக்க, அவனும் அவள் தூங்கட்டும் என்று கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டான்.

அவளோடு சேர்ந்து அவனும் அசதியில் தூங்கிவிட, திடீரென்று துர்காவின் உடல் குளிரில் நடுங்கத் தொடங்க, அவள் கைகள் ஆதியை குளிரில் மேலும் இறுக்கிப் பிடிக்க, அவள் பிடி இறுகவும் கண் விழித்த ஆதி, துர்காவைப் பார்க்க, அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். பதறி எழுந்தவன், அவள் கைகளையும் கால்களையும் சூடு பறக்கத் தேய்த்துவிட, அவள் குளிரும் காய்ச்சலும் குறைவதாகத் தெரியவில்லை. அவள் அருகில் படுத்து, அவளைத் தன் உடலோடு சேர்த்து இறுக அணைக்க, துர்காவும் அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவன் மார்போடு தன் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டு அவள் முகத்தை உரச, அவளை இறுகக் கட்டிக்கொண்டு அவளுக்குத் தன் உடல் சூட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தவனின் உடல் மேலும் தணிக்கத் தொடங்கியது.

துர்கா அவனை கட்டிக்கொண்டே அவன் முகத்தருகில் வந்தவள், அரை மயக்கத்திலேயே அவனைப் பார்க்க, அவனும் அவளையே ஏக்கத்தோடு தன்னை பார்க்கும் துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அதிர்ச்சியில் கண்கள் திடீரென்று அகல விரிந்தது. அவன் என்ன நடக்கிறது என்று உணரும் முன்னே, துர்கா அவன் இதழில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவளைத் தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்த ஆதி, “துர்கா… என்ன பண்ற?” என்று அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்க, அவள் அவனை மேலும் இறுக அணைக்க, “துர்கா… விடு! என்ன பண்றேன்னு உனக்குத் தெரியுமா?” என்று அவள் பிடியில் இருந்து விலகப் போராடிக்கொண்டே அவளைப் பார்க்க, அவள் அவனைப் பார்த்து, “லவ் யூ ஆதி…” என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும், ஒரு நிமிடம் ஆதியின் இதயத்திற்குள் என்னவோ ஒரு உணர்வு தோன்ற, அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஆதி, “து… துர்கா… என்ன சொன்ன?” என்று அவன் கேட்டது சரிதானா என்பது போல மறுபடியும் துர்காவைப் பார்த்துக் கேட்க, “ஏன்டா… உனக்கு என்னை பிடிக்கவே பிடிக்காதா? நான் எவ்வளவு வருஷமா உனக்காகக் காத்துட்டு இருக்கேன் தெரியுமாடா? ஏன்டா இப்படிப் பண்ற? என்னைப் பார்த்தா உனக்குப் பிடிக்கலையாடா ஆதி?” என்று அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு குழந்தை போல உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழ ஆரம்பிக்க, “அவள் தன்னை பார்த்து ‘லவ் யூ’ சொன்னாளே! அவளாகவே வந்து எனக்கு முத்தமிட்டாளே! இப்போது, எனக்காகக் காத்திருந்தேன் என்று சொல்கிறாளே!” என்று தனக்குள்ளேயே அவள் கூறியதை எல்லாம் அசை போட்டுப் பார்த்தவன், அவளிடமே கேட்டுவிடலாம் என்று அவளைப் பார்க்க, அவன் கைக்குள் குழந்தை போலத் தன் உடலைக் குறுக்கிக்கொண்டு, அவனை கட்டிக்கொண்டு தூங்கிவிட்டிருந்தாள் துர்கா. அவள் கன்னத்தை மெதுவாகத் தட்டி, “துர்கா” என்று அவளை எழுப்ப, அவள் மருந்தின் வீரியத்தில் நன்றாகத் தூங்கிவிட்டிருந்தாள். கொஞ்ச நேரம் அவள் கூறியதை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன், அவனும் தூங்கிவிட்டான்.

EPISODE 24

கீர்த்திகாவை அழைத்துக் கொண்டு காரில் வேகமாகச் சென்ற கதிர், அவளது கல்லூரியில் இருந்து தூரமாக அழைத்துச் சென்றான். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, சிட்டியை விட்டுத் தள்ளி ஆளில்லாத இடமாகப் பார்த்து, ஒரு மரத்தின் அடியில் தன் காரைக் கொண்டு போய் நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கியவன் வெளியே சென்று காரின் மீது சாய்ந்தவாறு நின்று கொண்டான். அவன் இறங்கிச் சென்றதைப் பார்த்துவிட்டு கீர்த்திகாவும் காரில் இருந்து இறங்கி நடந்து வந்தவள், காரைச் சுற்றி வந்து அவன் அருகில் தயங்கித் தயங்கி வந்து நின்றாள். அவன் ஏதாவது பேசுவான் என்று அமைதியாகத் தன் துப்பட்டாவை கையில் பிடித்துக்கொண்டு, அதைத் தன் விரலில் சுற்றிக்கொண்டு நின்றிருந்தாள்.

இருவரும் நீண்ட நேரம் அமைதியாக நின்று கொண்டிருக்கவே, கதிர், அவளாகவே பேசும் என்று காத்துக்கொண்டிருந்தவன், பொறுமை இழந்து அவளைப் பார்த்து, “ஏய்… என்னமோ பேசணும்னு விக்கி இடம் சொல்லி என்னை வரச் சொல்லிட்டு, இப்ப எதுவுமே பேசாம வாயை மூடிட்டு இருந்தா என்னடி அர்த்தம்? எதுக்குடி என்னை வர சொன்ன? என்னடி பேசணும் உனக்கு?” என வார்த்தைக்கு வார்த்தை அவளை ‘டி’ போட்டு கூப்பிட, அவள் நிமிர்ந்து பார்த்து முறைத்த கீர்த்திகா, “இப்போ எதுக்கு என்ன ‘டி’ போட்டு கூப்பிடுற நீ? ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிட முடியாதா?” என்று அவள் அவனைக் கேட்க, “அப்படித்தான் ‘டி’ போட்டு கூப்பிடுவேன். என்னடி பண்ணுவ?” என்று கூற, “நீ என்ன ‘டி’ போட்டு கூப்பிட்டால், நானும் உன்னை ‘டா’ போட்டு தான்டா கூப்பிடுவேன். நீ என்னடா பண்ணுவ?” என்று அவளும் அவனிடம் மல்லுக்கட்ட, அவள் ‘டா’ சொன்னதும் கோபம் வந்த கதிர், “ஏய்… இப்ப நீ சொல்லப் போறியா? இல்லை உன்னை இங்கேயே விட்டுட்டு நான் கார் எடுத்துட்டு போகட்டுமா?” என்று கேட்க, அவன் செய்தாலும் செய்பவன் தான் என்று மனதில் நினைத்துக் கொண்டவள், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “எதுக்கு வரச் சொல்லுவாங்க? உன்னை அன்னைக்கு நான் கோவமா நடந்துக்கிட்டேன். அதுக்கு ‘சாரி’ கேட்கலாம் என்று சொல்லித்தான் உன்னை சந்திக்கணும் என்று சொல்லி வரச் சொன்னேன்” என்றாள்.

“சரி, அதான் நேரில் வந்துட்டேன் இல்ல, என்கிட்ட மன்னிப்பு கேளு. நிறைய வேலை இருக்கு. உன்கிட்ட இனிமே வெட்டியா பேசிட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை” என்று அவன் சொல்ல, அவனை முறைத்தவள், “‘சாரி’ கதிர்! அன்னைக்கு நான் ரொம்ப பேசிட்டேன்” என்றாள். “ரொம்பத்தான் பேசின. என்ன பண்ண முடியும்? உனக்கு தான் என்னைப் பார்த்தாலே வெறுப்பானது போலத் தோணுதே! நான் தான் அந்த பெண்கள் பின்னாடி சுத்துறவன் ஆச்சே” என்றான் கோபமாக. “அது தப்பு என்று சொல்லி தானே நான் உன்கிட்ட ‘சாரி’ கேட்கிறேன் கதிர்! என்ன மன்னிச்சிடு. நீ அப்படிப்பட்டவன் இல்லை என்று எனக்குத் தெரியும். எனக்கு ஏதோ கோபத்துல நீ என்னை முத்தம் கொடுத்ததினால் என்னால தாங்க முடியாம, என்ன பண்றதுன்னு தெரியாம நான் அப்படிப் பேசிட்டேன். உன்னை அடிக்கவும் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு கதிர்” என்றாள். அவள் அவனிடம் உண்மையாகவே மன்னிப்பு கேட்க, கதிரின் மனம் அவளுக்காக இலகியது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ம்ம்ம்… சரி, நான் உன்னை மன்னிச்சிட்டேன். நீ கிளம்பு” என்றான் தெனாவட்டாக.

தன்னை ஆள் இல்லாத இடத்துக்கு கூட்டி வந்து விட்டு, இப்போது கிளம்பு என்று சொல்லவும் கீர்த்திகாவிற்கு கோபம் வந்தது. “என்ன, கிளம்புனு சொன்னா நான் எப்படி கிளம்புறது? நீதானே கூட்டிட்டு வந்த? திருப்பி கொண்டு போய் நீதான் விடணும்” என்றாள் கீர்த்திகா. “ஏய், நானா உன்னை கூட்டிட்டு வந்தேன்? நீதானே என் காரில் வலுக்கட்டாயமாக ஏறி வந்தே? அப்போ நீதான் கிளம்பனும். சரி, நீ எப்பவோ கிளம்பு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” என்று கூறி, அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் சென்று ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறந்து காரில் ஏறி அமர, அதற்குள் கீர்த்திகாவும் ஓடி வந்து, முன்னிருக்கையில் வந்து கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள். அவளை திரும்பிப் பார்த்து முறைத்த கதிர், “இப்ப எதுக்குடி வந்து கார்ல ஏறி உக்காந்த? முதல்ல கீழே இறங்கு. நான் கிளம்பனும்” என்று அவன் வேண்டுமென்றே அவளை வம்பு இழுத்தான். “இறங்கப் போறியா இல்லையா?” என்று கேட்க, “இறங்க முடியாதுடா! என்னடா பண்ணுவ? நான் அப்படித்தான் உட்காருவேன். நீ காரை எடுத்தா எடு. இல்லை இங்கேயே நிப்பாட்டினாலும் நிப்பாட்டு. நான் தனியா எல்லாம் போக மாட்டேன். நீ என்னை எங்க ஏத்திட்டு வந்தியோ, அங்கே இறக்கிவிட்டால் போதும். கொண்டு போய் விடு. இல்லைன்னா நான் போக மாட்டேன்” என்று அவள் சொல்லி, இருக்கையில் நன்றாக சாய்ந்து, கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

“இப்போ மட்டும் நீ காரில் இருந்து கீழே இறங்கலைன்னு வை…” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க, “இறங்கலைனா என்னடா பண்ணுவாய்?” என்று அவளும் அவனைக் திருப்பி கேட்க, “உனக்கு இதுதான் முதல் மற்றும் கடைசி வாய்ப்பு. நீ இப்போ இந்தக் காரில் இருந்து இறங்கலை அப்படின்னா, என் கூட இப்ப மட்டும் இல்லை, இந்த வாழ்க்கை முழுக்க நீ என் கூட தான் பயணம் பண்ண வேண்டி வரும். நல்லா யோசிச்சு முடிவெடு. உனக்கு அஞ்சு நிமிஷம் நான் நேரம் தரேன்” என்று கதிர் கூற, “அஞ்சு நிமிஷம் எதுக்கு? நான் இப்பவே சொல்றேன். இப்ப மட்டும் இல்லை, உன் வாழ்க்கை முழுக்க உன் கூடப் பயணம் செய்ய நான் தயாராத்தான் இருக்கேன்” என்றாள் கீர்த்திகா. அவளிடம் பேசும் சாக்கில் தன் காதலைச் சொல்லியிருந்த கதிருக்கு, அவள் உடனே அதற்குப் பதிலும் திருப்பிச் சொல்வாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவனுக்கு பிடித்த பதிலாகவே சொல்லி இருந்தாள். “உன்னோட வாழ்க்கை முழுக்க பயணம் செய்ய நான் தயாராத்தான் இருக்கேன்” என்று சொல்லிய கீர்த்திகா, வெட்கத்தில் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் வேகமாக கார் கதவைத் திறந்து கொண்டு எழுந்து வெளியே சென்றாள்.

அவள் தன் காதலுக்கு உடனே ‘சரி’ என்று சம்மதம் சொல்வாள் என்று எதிர்பார்க்கவே இல்லை கதிர். இப்போது நடந்தது கனவா இல்லை நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டவன், “ஷ்… ஆ… வலிக்கிறது” என்று தன் கையைத் தானே தேய்த்து கொண்டவன், “அப்போ இது பொய் இல்லை. கனவில் நிஜம்டா! அப்படியா? என்னை காதல் பண்ண ஒத்துக்கிட்டாளா?” என்று சந்தோஷப்பட்டவன், தன் கார் கதவைத் திறந்து கொண்டு வேகமாக வெளியே வர, கீர்த்திகா அவனைப் பார்க்க முடியாமல் மரத்தின் அருகில் சென்று வேறு புறம் பார்த்து நின்று கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்ற கதிர், அவள் தோளைத் தொட்டுத் தன்னை பார்க்குமாறு திருப்ப, அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள் கீர்த்திகா.

“ஏய்… கீ… என்ன பாருடி” என்றான். அவள் “முடியாது” என்று தலையை ஆட்டினாள். “ப்ளீஸ் என்னைப் பாரு. இப்படி குனிஞ்சுக்கிட்டா நான் எப்படி உன் முகத்தைப் பார்த்து பேசுவேன்?” என்றான் கதிர். “ப்ளீஸ், ஒருவாட்டி நிமிர்ந்து என் முகத்தைப் பாரு” என்றான் கதிர். துப்பட்டாவை கையில் பிடித்து சுற்றிக்கொண்டு, மெதுவாகத் தலையை நிமிர்த்தி கதிரின் முகத்தைப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்து, “நிஜமாகவே உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்க, “ஆமாம்” என்று வேகமாகத் தலையாட்டிவிட்டு, கீர்த்திகா தன் இரு கைகளாலும் தன் முகத்தை வெட்கப்பட்டு மூடிக்கொண்டாள். “ஐயோ! இப்படி வெட்கப்பட்டு என்னைக் கொல்லுடி! நீ வெட்கப்படும்போது எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா கீ? நீ ரொம்ப அழகா இருக்க” என்றான். அவள் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று இருக்க, “என்னைப் பார்த்து ஒருவாட்டி, ஒரே ஒருவாட்டி, ‘ஐ லவ் யூ கதிர்’ என்று சொல்லேன்” என்றான் கதிர்.

கீர்த்திகா “முடியாது” என்று தலையை இடவலமாக ஆட்ட, அவள் முகத்தை மூடிக்கொண்டு ‘முடியாது’ என்று சொல்லவும், அவள் கையை வலுக்கட்டாயமாக அவள் முகத்திலிருந்து எடுத்தவன், தன் கைக்குள் அவள் கைகளை வைத்துக்கொண்டு, “ப்ளீஸ், என்னைப் பார்த்து ஒரே ஒரு வாட்டி ‘ஐ லவ் யூ’ சொல்லு” என்றான். “முடியவே முடியாது” என்று தலையாட்டிவிட்டு, அவன் கையை உதறிவிட்டு, கார் கதவைத் திறந்து கொண்டு போய் உள்ளே அமர்ந்து கொண்டாள். அவள் வெட்கப்பட்டுத் தன்னை பார்க்க முடியாமல் செல்வதைப் பார்த்த கதிருக்கு, அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் காற்றே பறந்து இருந்தது. ஒரு முறை ‘ஐ லவ் யூ’ சொல்ல மாட்டாளா என்று ஏக்கம் கொண்டது அவன் மனது. தன்னையே தன்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தன்னிலை மறந்து நின்றிருந்த கதிர், அவள் காருக்குள் சென்று அமர்ந்ததும், அவன் தலையை அழுந்தக் கூடியவன், அவனும் சென்று ஓட்டுநர் இருக்கையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே அமர்ந்தான்.

கீர்த்திகா அவனைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்க, அவளைப் பார்த்தவன், “நீ இப்போ என்னைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லலைன்னா நான் காரை ஸ்டார்ட் செய்ய மாட்டேன்” என்றான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க, அவள் கையைப் பிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு கதிர், “ப்ளீஸ் கீர்த்தி! ஒரே ஒரு வாட்டி சொல்லுடி. ப்ளீஸ்” என்று கதிர் கெஞ்ச, அவன் கெஞ்சுவதைப் பார்த்து பாவமாக இருக்க, மெல்லத் தன் தலையை நிமிர்த்தி கதிரைப் பார்த்த கீர்த்திகா, அவன் அவளையே குறுகுறுவென்று பார்க்க, அவனின் பார்வையின் ஆழம் தாங்க முடியாமல் மறுபடியும் தலையை கீழே தொங்கப் போட்டவள், “முடியாது” என்றாள். “ஏன்டி சொல்ல மாட்டேங்குற? ப்ளீஸ், ஒரே ஒரு வாட்டி சொல்லு. ப்ளீஸ் கீ…” என்று அவன் கெஞ்ச, “சரி, சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ என்னைப் பார்க்கக் கூடாது. நீ முதல்ல கண்ணை மூடு. அப்பதான் நான் சொல்லுவேன். இல்லைன்னா சொல்ல மாட்டேன்” என்றாள்.

“நீ சொல்றதை பார்க்கணும்னு சொல்லித்தானே நான் ஆசையா கேட்கிறேன்? இப்படி என்னைப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னா நான் எப்படி நீ சொல்றதை பார்க்க முடியும்?” என்று கதிர் கேட்க, “நான் சொல்றதை நீ கேட்டா போதும். பார்க்கணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை. இல்லைன்னா நான் சொல்லவே மாட்டேன்” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, “சரி” என்றவன் தன் கண்களை மூட, “கண்ணைத் திறக்கக் கூடாது, சரியா?” என்று கீர்த்திகா அவனிடம் கேட்க, “டேய்! கண்ணைத் திறக்கல. சீக்கிரம் சொல்லு. நான் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கிறது?” என்றான். “ஏன்டா? ஒரு பொண்ணு அவனை காதலிக்கிறேன்னு சொல்றதுக்காக அவன் பின்னாடி சுத்தி எத்தனை வருஷம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க? இந்த ஒரு மூணு வார்த்தைக்காக! ஆனா நீ என்னடான்னா ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண மாட்டியா?” என்று கீர்த்திகா கேட்க, “அவனுக்கெல்லாம் முட்டாள்தனமடி. நான் பாரேன்! பார்த்ததும் பிடிச்ச முதல் நாளில் உன்னைக் கிஸ் பண்ணிட்டேன். என்னை மாதிரி வேகமா இல்லைன்னா, வேற ஒருத்தன் வந்து அந்தப் பொண்ணை கொண்டு போயிடுவான்” என்று சொல்ல, “அப்போ பக்குவமா தான் எனக்கு முத்தம் கொடுத்தியா?” என்று கீர்த்திகா கேட்க, “ஆமாம். எனக்கு உன்னை ரொம்பப் பிடித்து இருந்தது. உன்னைப் பார்த்ததும் அந்த ரோஸ் கலர்ல இருக்க உதட்டைப் பார்த்ததும் எனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணுச்சு. எப்படி இருந்தாலும் நீ எனக்கு மனைவி ஆகப்போவது தானே? உங்ககிட்ட எதுக்கு அனுமதி கேட்கணும்னு சொல்லிட்டு தான் அன்னைக்கு நீ பந்தயம் கட்டினதும், சமையலறையில் வச்சு உனக்கு முத்தம் கொடுத்தேன்” என்று அவன் சொல்ல, “அடப்பாவி!” என்றவள், “போ! நீ அப்போ அன்னைக்கு பக்குவமாத் தானே பண்ணின? நான் உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்ல மாட்டேன். போ…” என்று அவள் கூற, அவன் கண்களை உடனே திறந்தவன், “இப்பதான் சொல்லிட்டேயே, ‘ஐ லவ் யூ’னு” என்று சொன்னவன், இருக்கையில் இருந்து அவள் புறம் சாய்ந்து, கீர்த்திகா எதிர்பாராத நேரம் பார்த்து அவள் இடுப்பில் கை கொடுத்து அவளைத் தூக்கித் தன் மடியில் அமர வைத்துவிட்டான்.

கீர்த்திகா அதிர்ச்சியாகி அவனையே பார்க்க, “எப்படி?” என்பது போலத் தன் புருவத்தை உயர்த்தி கேட்க, அவள் வெட்கப்பட்டவள் அவன் மடியில் அமர முடியாமல் நெளிந்து கொண்டே, “என்னை விடு…” என்று அவன் மார்பில் கை வைத்துத் தள்ள, “ம்ஹும்… முடியாது. என்ன ‘டி’ பண்ணுவ?” என்றான் கதிர். “ப்ளீஸ் என்னை விடு…” என்று அவள் கெஞ்ச, “அப்போ என்னைப் பார்த்து, என் கண்ணை பார்த்து ‘லவ் யூ’ சொல்லு. நான் உன்னை விடுறேன்” என்று கூற, “ம்ஹும்…” என்று மீண்டும் அவள் முதலிலிருந்து ‘முடியாது’ என்று ஆரம்பிக்க, “உன்னை…” என்று பொறுமை இழந்தவன், அவள் இடுப்பை பிடித்திருந்த அவன் கைகளைத் தூக்கி, அவள் முகத்தை அசைய விடாமல் பிடித்துக்கொள்ள, கீர்த்திகா, “டேய், என்னடா… பண்ற? விடுடா… என்னை” என்று அவன் மார்பில் தன் கைகளை ஊன்றி அவனிடம் இருந்து அவனை விளக்க முயற்சிக்க, கதிர் அதை எதையும் சட்டை செய்யாதவன் போல, “நானும் எவ்வளவு தடவை உன்கிட்ட கெஞ்சுவது? ‘லவ் யூ’ சொல்லுடி!” என்றான். “உன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தா வேலை ஆகாதுடி” என்றவன், அவள் முகத்தைத் தன் அருகில் கொண்டு வந்து அவள் இதழைச் சிறை செய்தான். அவன் இது தான் செய்யப் போகிறான் என்று யூகித்து அவனிடம் இருந்து விலக முயற்சிக்க, அதற்குள்ளாக அவள் இதழைச் சிறை செய்தான். அவனிடம் இருந்து தன்னை பிரித்துக் கொள்ளப் போராட, அவளால் முடியாமல் போகவே, அவனைத் தடுக்க முடியாமல் அவன் முத்தத்தில் மெல்ல மெல்ல கரைந்து கண்களை மூடி முத்தத்தை ஏற்றுக் கொண்டாள். அவன் முத்தத்தை இதுவரை எதிர்த்தவள், இப்போது அமைதியாகிவிட, கதிரின் ஆர்வம் மேலும் முத்தம் கொடுப்பதில் தீவிரமானது.


நிலானியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்ற அவளுடைய மூத்த மாணவி, அவளுடன் வராமல் நிற்கவே திரும்பிப் பார்க்க, அவளது மறு கையை பிடித்துக் கொண்டு விக்கி ‘ஹீரோ’ போல ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து அந்தப் பெண், “ஹலோ சார்! உங்களுக்குத் தான் இவளை யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே? இப்ப எதுக்கு அவளைக் கையைப் பிடிச்சு இழுக்கறீங்க?” என்று அந்தப் பெண் கேட்க, “நான் இந்தப் பொண்ணை தெரியாதுன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையேமா… இவ சொல்றது பொய் என்று தானே சொன்னேன்?” என்றான் விக்கி. அவன் கூறியது புரியாமல் அந்தப் பெண் விக்கியைப் பார்க்க, நிலானியும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க” என்று அந்த மூத்த மாணவி கேட்க, “இவர் சொல்றது பொய் என்று தான் சொன்னேன்” என்றவன், நிலானியைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணைப் பார்த்து, “என்ன, அண்ணன்னு தானே சொல்லிக் கூப்பிட்டாள் இவள் என்னை?” “அதைத்தான் அந்தப் பொண்ணு பொய் சொல்லுச்சுன்னு சொன்னேன். இவ என்னை அண்ணன்னு கூப்பிட்டது தப்பு. உண்மையாக நான் நிலானியோட காதலன்” என்றான்.

அவன் தன்னுடைய காதலன் என்று சொன்னதும், நிலானியின் கண்கள் அதிர்ச்சியில் அகலமாக விரிய, அவள் மை இட்ட கண்ணைப் பார்த்த விக்கி, “ஐயோ! இப்படி இரண்டு கண்ணையும் உருட்டி என்னைப் பார்த்துக் கொள்ளுறாளே” என்று மனதில் நினைத்துக் கொண்டவன், அந்த மூத்த மாணவியைப் பார்த்து, “நான் இவளுக்கு அண்ணன் கிடையாது, காதலன்” என்றான் விக்கி. அவன் காதலன் என்று சொல்லிக் கூறியதைக் கேட்டு, அந்த மூத்த மாணவி நிலானியின் கையை விட, உடனே நிலானியை இழுத்துத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்திய விக்கி, “எங்கே, இப்போ இவளை நையாண்டி பண்ணு பார்ப்போம்?” என்றான். அந்தப் பெண் உண்மையிலேயே விக்கியைப் பார்த்து, நிலானியின் காதலன் தான் போல என்று நினைத்தவள், “இல்லை சார்! நான் சும்மா ஒரு ‘ஃபன்’ பண்றதுக்காக தான் நிலானி கிட்ட விளையாடிட்டு இருந்தேன். நீங்க பேசுங்க. நான் போயிட்டு வரேன்” என்று அந்தப் பெண் அங்கிருந்து நகரப் போக, “இந்தாம்மா பொண்ணே” என்று விக்கி அந்தப் பெண்ணை ‘சொடக்கிட்டு’ அழைத்தான். அவளே அவர்களிடமிருந்து தப்பிக்கலாம் என்று செல்லப் போக, அந்தப் பெண் இவன் அழைத்ததும் திடுக்கிட்டு பயந்து கொண்டே அவனைத் திரும்பிப் பார்க்க, “இப்ப எதுக்குமா பயப்படுற? கல்லூரியில் இந்த நையாண்டி எல்லாம் சகஜம் தான். அது ஒரு சின்ன எல்லையோடு இருந்துட்டா பிரச்சனை இல்லை. அவங்களை வருத்தப்படுத்துற மாதிரி இருக்க கூடாது, சரியா? இன்னையிலிருந்து என்னுடைய நிலானியை நீதான் இந்த கல்லூரியில் பாதுகாப்பா பார்த்துக்கப் போற. அவளுக்கு ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு நீ போன் பண்ணி சொல்லணும், சரியா?” என்று கூறி, “எங்கே, உன் போனை கொடு” என்று விக்கி கேட்க, “ச… சார்! எதுக்கு என்னோட போன்?” என்று அவள் கேட்க, “அட, கொடுமா… ஒண்ணும் பண்ண மாட்டேன்” என்று அவளிடம் போனை கேட்க, தன் பையிலிருந்து எடுத்து போனை அவனிடம் தயக்கத்துடன் நீட்டினாள் அந்தப் பெண்.

“‘போனை திற’ பண்ணிக் கொடுமா” என்று சொல்ல, போனைத் திறந்து அவன் கையில் கொடுக்க, அந்த மூத்த மாணவியின் போனில் இருந்து தன் போனுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்த விக்கி, “இதுதான் உன் நம்பரா? சரி, உன் நம்பர் என்ன சேமித்து வச்சுக்கிறேன். என்னோட நம்பரையும் நீ சேமித்து வச்சுக்கோ. என் பெயர் விக்கி” என்றான். “சார், என் பெயர் லதா” என்று அந்தப் பெண் சொன்னாள். “சரிம்மா! உன் நம்பரையும் நான் சேமித்து வச்சுக்கிறேன். இந்தா” என்று அந்தப் பெண்ணின் போனை அவளிடம் நீட்டி, “சரி, நீ கிளம்புமா. எங்களுக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு” என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணை அனுப்ப, அவள் விட்டால் போதும் என்று அங்கிருந்து வேகமாக வெளியே சென்றாள். அந்தப் பெண் செல்லும் வரை அமைதியாக விக்கியையே பார்த்துக் கொண்டிருந்த நிலானி, அவன் கைவளைவில் இருந்து உடனே அவனைத் தள்ளிவிட்டு, அவனிடம் இருந்து விலகி நின்றவள், “நீங்க ஏன் இப்ப அவகிட்ட என் காதலன்னு சொன்னீங்க?” என்று நிலானி கோபமாக அவனிடம் கேட்க, “நான் மட்டும் அப்படிச் சொல்லலைன்னா, அந்தப் பொண்ணு இந்நேரம் உன்னை விட்டிருப்பாளா?” என்று அவன் கேட்க, “ம்ஹும்… இல்லை” என்று தலையாட்டினாள் நிலானி. “அதனாலதான் நான் உன்னோட காதலன் என்று அந்தப் பொண்ணு கிட்ட சொன்னேன்” “ஏன் காதலன்னு சொன்னீங்க? அண்ணன்னு சொல்லி இருந்தாலே அவ என்னை விட்டுட்டு போயிருப்பாளே? நீங்க எதுக்கு அவசரமாக வந்து உங்க காதலன் என்று பொய் சொன்னீங்க?” என்று நிலானி கேட்க, “இல்லையே, நான் பொய் எல்லாம் சொல்லலையே. நான் உண்மையாத் தானே சொன்னேன்?” என்று அவன் கூற, “என்ன சொல்றீங்க?” நிலானி அவனை அதிர்ச்சியாகப் பார்க்க, “ஐயோ! நிலா குட்டி, இந்தக் கண்ணை வச்சு உருட்டி அப்படி என்னைப் பார்க்காதே. என்னால நீ அப்படிப் பார்க்கிறப்போ என்னால என்னைக் கட்டுப்படுத்தவே முடியலை. அப்புறம் இது காபி கடைனு கூடப் பார்க்காம உன்னை இழுத்து வச்சு ஒரு முத்தம் கொடுத்துருவேன்” என்றான். விக்கி அப்படி கூறவும், நிலானியின் கண்கள் மேலும் அதிர்ச்சியில் விரிய, “ஐயோ செல்லம்! இப்பதானே சொன்னேன் அப்படி என்னைப் பார்க்காதேன்னு” என்று கூறிக்கொண்டு, அவன் அவள் அருகில் வர, அவன் தன் அருகில் வந்ததும் வேகமாக அவனை விட்டு விலகிச் சென்ற நிலானி, “ஹலோ, யார் சார் நீங்க? அவசரத்துக்கு ஒரு உதவி என்று வந்து கேட்டால் இப்படி நீங்களே எனக்கு உபத்திரமாக இருக்கீங்களே! யார் சொன்னது நீங்க என்னோட காதலன்னு?” என்று அவள் கோபமாக அவனைப் பார்த்துக் கேட்க, “நான் தான் சொன்னேன். இதை போய் யார் கிட்ட கேட்கணும்? இன்னையிலிருந்து நான் தான் உன்னோட காதலன். எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கு” என்றவன், அவள் அருகில் வந்து, “ஐ லவ் யூ… நிலாக்குட்டி” என்றான்.

அவன் ‘ஐ லவ் யூ’ என்று கூறி நிலானியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றிருக்க, அவன் சிரிக்கும் பொழுது அவன் கண்களைக் குறுக்கி அழகாகச் சிரித்த அவனை, கண்ணிமைக்காமல் பார்த்து, தனக்குள்ளேயே ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னை விழி இமைக்காமல் ரசிப்பதைப் பார்த்த விக்கிக்குச் சந்தோஷம். “உனக்கும் தன்னைப் பிடிக்கும் போல தான் தெரிகிறது” என்று நினைத்துக் கொண்டவன், நிலானியின் கையைப் பிடித்து, “நிலாக்குட்டி, ‘ஐ லவ் யூ’டா” என்றான். அவன் கையை உதறிவிட்டு, “ஹலோ, இப்படி எல்லாம் பேசாதீங்க. நீங்க யாரு, என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. எப்படி நீங்க வந்து என்கிட்ட இப்படிப் பொது இடத்தில் ‘ஐ லவ் யூ’னு சொல்லலாம்? ஏன் மூத்த மாணவி கிட்ட நீங்க தான் என்னோட காதலன் என்று எப்படி சொல்லலாம்?” என்று கேட்டவள் அங்கிருந்து செல்லப் போக, “நிலா குட்டி, எங்க போற?” என்று அவன் மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுக்க, “இனிமே என்னை தொட்டு பேசினீங்கன்னா அப்புறம் நடக்கிறதே வேற! முதல்ல என் மேல இருந்து கையை எடுங்க” என்று அவள் கோபமாக கூற, “சரி, ஓகே ஓகே… ‘கூல்’… நான் கையை பிடிக்கல, சரியா?” என்று அவள் கையை விடுவித்தவன், “நான் உன்கிட்ட என்னோட காதலன்னு சொல்லிட்டேன். நீ இப்ப என்கிட்ட சொல்லப் போறியா?” என்று அவன் திருப்பி கேட்க, “நான் எதுக்கு உங்க கிட்ட காதல் சொல்லணும்? எனக்கு உங்களை யாருன்னு தெரியாது. அப்படி எல்லாம் முன்ன பின்ன தெரியாதவங்களையும் என்னால் காதல் பண்ணவும் முடியாது. என்னை முதல்ல இங்கிருந்து போக விடுங்க” என்று சொன்னவள், வேகமாக அங்கிருந்து அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டாள்.

அவனைத் திரும்பியும் பார்க்காமல் செல்லும் நிலானியைப் பார்த்து ஏக்கத்துடன், “இப்படி பிடி கொடுக்காமல் போறாளே!” என்று நினைத்தவன், “சரி, முதல்ல பார்த்தவுடனே திடீர்னு காதல் முன்மொழிதல் பண்ணினால் எந்தப் பொண்ணுக்கும் பயமாத் தானே இருக்கும்? பரவாயில்லை, நம்ம கீர்த்திகாவும் இதே கல்லூரி தானே? அவகிட்ட சொல்லி முதல்ல நிலானியின் நம்பரை வாங்கணும். அதுக்கப்புறம் மற்றதை எல்லாம் பார்த்துக்கலாம்” என்றவன், சந்தோஷமாக மனதிற்குள், “ஆண்டவா! இன்னைக்கு காலையில தான் உன்னிடம் பிரார்த்தனை வைத்தேன். என் பிரார்த்தனை பலிச்சிருச்சு. ரொம்ப ‘தேங்க்ஸ்’ ஆண்டவா! உன்னை சீக்கிரமே வந்து நான் பார்க்கிறேன்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.


ஆதியின் மீது தன் கையையும் காலையும் போட்டுக்கொண்டு கிட்டத்தட்ட அவளின் உடல் ஆதியின் மேல் தான் இருந்தது. காலையில் கண் விழித்த ஆதி, தன் மீது தூங்கிக் கொண்டிருந்த துர்காவைப் பார்த்தவன், அவள் உடல் காய்ச்சல் குறைந்து இருந்து, நடுக்கம் எல்லாம் இல்லாமல் இருப்பதை கண்டு நிம்மதியானான். படுக்கையை விட்டு எழுந்திருக்கலாம் என்று நினைத்தவன், துர்கா அவன் மேல் தூங்கிக்கொண்டிருந்ததால் அவளை எழுப்ப மனமில்லாமல், அவள் கண் விழிக்கும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தவன், அமைதியாகப் படுத்திருக்க, அவள் மெதுவாக நெளிய ஆரம்பித்தாள். “எங்கே, எழுந்ததும் தன் மேல் படுத்திருந்ததைப் பார்த்து கோபப்படுவாளோ?” என்று எண்ணியவன், என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் மூடித் தூங்குவது போலப் படுத்திருந்தான்.

துர்கா கண்களை விழித்ததும் முதலில் தெரிந்தது ஆதியின் முகம் தான். அதை ரசித்துக்கொண்டே அவன் மார்பின் மீது தன் கையை வைத்து, அதில் தன் முகத்தை வைத்துப் படுத்துக்கொண்டே அவன் முகத்தை அவ்வளவு அருகில் பார்த்தவள், அவன் சாந்தமான முகத்தைப் பார்த்தவள், “தூங்கும்போது மட்டும் எப்படி இவ்வளவு சாந்தமா இருக்கே ஆதி? ஆனா கண் விழிச்சா அப்படியே சிங்கம் போலக் கர்ஜிக்கிறேயே. இப்படி சாந்தமான முகத்தை நான் ஒரு நாள் நீ கண் விழிச்சிருக்கும்போது பார்க்கனும் ஆதி” என்றாள். அவள் கூறியதைக் கேட்டு, “இவளுக்கு நான் அமைதியாக இருப்பது தான் பிடித்திருக்கிறதோ?” என்று யோசிக்கும்போதே, அவன் புருவத்தை துர்கா தொடுவதை உணர்ந்தவன், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகப் படுத்திருக்க, அவன் நன்றாக உறங்குகிறான் என்று நினைத்தவள், அவன் புருவத்தைத் தன் ஒற்றை விரலால் நீவிவிட்டு, இரு புருவமும் இணைந்து இருக்க, அதைத் தடவிப் பார்த்தவள், “இந்த புருவம் இருக்கே ஆதி, இந்த புருவத்தையும் உன்னோட கண்ணையும் பார்த்து நான் எத்தனை முறை பேச வந்ததை பேச முடியாமல் நான் திணறி இருக்கேன் என்று உனக்குத் தெரியுமா ஆதி?” என்று அவள் கூற, ஆதிக்கு அவள் கூறியதைக் கேட்டு மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. “என் கண்களையும் புருவத்தையுமே இப்படி ரசிக்கிறாளே! இவளுக்கு என்னைப் பிடிக்குமா? என்னைப் பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு தூரம் என் புருவங்களை மட்டுமே ரசிப்பாளா என்ன?” என்று யோசித்துக்கொண்டிருக்க, அவள் விரல்கள் அவன் புருவங்களில் இருந்து மூக்கின் மீது வர, அவன் மூக்கின் நுனியை லேசாக ஆட்டியவள், அவனுக்கு வலிக்காதவாறு கிள்ளியவள், “இந்த மூக்கிற்கு மேல எவ்வளவு கோபம் வருதுடா உனக்கு?” என்றாள்.

“என்ன, ‘டா’ வா?” என்று மனதிற்குள் அதிர்ச்சி அடைந்தவன், தனக்கு வந்த கோபத்தை அடக்கப் பெரும்பாடு பட்டான். “என்னடா… நான் உன்னை ‘டா’ சொன்னதும், தூக்கத்தில் கூட உனக்குக் கோபம் வருதோ? உன் மூக்கு தூக்கத்தில் கூடக் கோபத்தில் வீங்குகிறது” என்றவள், அவன் முகத்தைத் தன் இரு கையாலும் வருட, “அவ்வளவு கொப்புளம் பாரேன் ஆதி. என் ஆதி இந்தக் கொப்புளங்களால் எவ்வளவு கஷ்டப்படுறானே! கடவுளே! சீக்கிரமா என் ஆதியை குணம் ஆக்கி என் கிட்ட கொடுத்திரு” என்று வேண்டியவள், அப்படியே கீழே வந்தவள், அவன் உதட்டில் தன் விரல் படவும், மின்சாரம் பாய்ந்தது போலத் தன் விரலை ‘வீரென்று’ எடுத்துவிட்டாள். அவள் விரல் அவன் உதட்டில் பட்டதும், ஆதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின் மெல்ல அவன் மேல் இருந்து எழுந்தவள், “அவன் வெற்று உடலுடனா தன்னுடன் படுத்திருந்தான்?” என்று நினைக்கவே, அவளுக்குள் வேண்டாத எண்ணங்கள் எல்லாம் ஓடத் தொடங்க, தன் தலையில் தட்டி, “ஏய் லூசு துர்கா… என்ன ‘டி’ கண்டதெல்லாம் மனசுல ஓட விடற? நீ செய்றது கொஞ்சம் கூடச் சரி இல்லை. இப்போ மட்டும் ஆதி கண் விழிச்சான்னா, அவ்வளவுதான் நீ காலி” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.

பின் அவன் மார்பைப் பார்த்தவள், ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டவள், “இன்று தூங்கியது போலவே என்னை தினமும் உன் மார்பில் படுக்க வைத்துக்கொள்வாயா ஆதி?” என்றாள். இதைக் கேட்டதும் ஆதிக்கு இதயம் வேகமாகத் துடிக்க, அவனை அவனால் அமைதிப்படுத்த முடியவில்லை. அவள் தன் மீது படுத்துக்கொள்ள ஆசை படுவதைக் கேட்டதும், அவன் மனதில் கொஞ்ச நஞ்சமாக துர்காவின் மேல் இருந்த வெறுப்பும் காற்றைக் கண்ட கற்பூரம் போல ஆகிவிட்டது. தன் மனதிற்குள், “இந்த மார்பில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை துர்கா” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான். அவன் மார்பையே பார்த்துக் கொண்டிருந்தவளைத் தன் அரைக் கண்ணில் பார்த்து ரசித்தவன், எவ்வளவு நேரம் அவள் தன்னையே இப்படி உற்றுப் பார்ப்பதில் அவனுக்கே கூச்சம் வந்துவிட, லேசாகத் தூக்கத்தில் நெளிவது போலத் தன் உடலை நெளித்தான்.

அவன் நெளிவதைக் கண்டதும், “அச்சோ! எழுந்திருச்சிட்டான் போலவே” என்று அவன் மீதிருந்து எழுந்தவள், அவன் வெற்றி உடலை முழுவதும் பார்க்க, அவன் திடகார்த்தமான உடலைப் பார்த்து, தன்னையே மறந்து அவனையே ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் அசைவதை நிறுத்தவும், “அப்பாடி! எழுந்திருக்கல” என்று நிம்மதி அடைந்தவள், அவனையே குருகுரு என்று பார்க்க, அவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்று அவன் யோசிக்கும்போதே, அவள் முகம் அன்று அவன் முகத்தில் இருந்த புண்களைப் பார்த்து முகம் சுழித்தது போல, இப்போதும் சுழித்தவள், சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கி வேகமாகச் செல்வதைப் பார்த்த ஆதிக்கு, அவள் தன் உடலில் இருக்கும் கொப்புளங்களைப் பார்த்து தான் இப்படி முகம் சுழித்துக்கொண்டு சென்றுவிட்டாள் போல என்று கோபம் வர, படுக்கையை விட்டு எழப் போனவன் கண்களைத் திறக்க, வேகமாகச் சென்ற துர்கா கையில் எதையோ கொண்டு வருவதைப் பார்த்தவன், அமைதியாக மறுபடியும் கண்கள் மூடிப் படுத்துவிட்டான்.

கட்டிலில் ஏறி அவன் அருகில் அமர்ந்தவள், கையில் இருந்த களிம்பை எடுத்து அவன் மேல் இருந்த உடைந்த கொப்புளங்களில் பூசத் தொடங்கினாள். என்னதான் அவனிடம் சண்டை போட்டாலும், அவன் தன்னை வெறுத்து ஒதுக்கினாலும், அவன் மேல் இருக்கும் அவளின் காதல் குறையுமா என்ன? அவன் புண்ணிற்கு மருந்து இட்டவள், அவன் உடலில் இருந்த தழும்புகளை எல்லாம் பார்த்தவள், கண்களில் கண்ணீர் வந்துவிட, “அவன் எவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருப்பான் இவ்வளவு வருடங்களாக?” என்று நினைத்தவளின் கண்ணீர்த் துளி அவன் மார்பின் மேல் விழ, அவள் அழுவதைப் பார்த்த ஆதி, “தன் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளா இவள்?” என்று எண்ணியவன், அவள் கண்ணீரைத் துடைக்க எண்ணிய கைகளைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான். இதற்கு மேலும் அவள் தன் உடலில் இருக்கும் புண்களையும், தழும்புகளையும் பார்த்து கஷ்டப்பட வேண்டாம் என்று எண்ணியவன், மெதுவாக உடலை நெளித்துக்கொண்டு எழுந்திருப்பது போலப் பாசாங்கு செய்ய, அவன் எழுந்திருக்கப் போகிறான் என்று எண்ணி, வேகமாகப் படுக்கையை விட்டு இறங்கி, குளியலறைக்குள் ஓடிவிட்டாள். அவள் இறங்கி ஓடுவதைப் பார்த்தவன், தன் மீது அவளுக்கு நிஜமாகவே அக்கறை இருப்பதை உணர்ந்தவனின் இதயத்தில் முதல் முறையாக துர்காவின் மேல் காதல் மலர ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் துர்கா அவன் இதயத்திற்குள் காதல் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டாள்.

EPISODE 25

ஆதியும், துர்காவும் இரவு முழுவதும் சேர்ந்து படுத்திருந்தார்கள். காலையில் எழுந்த துர்கா, தான் ஆதியின் மீது படுத்திருப்பதை உணர்ந்தாள். அவன் தூங்குவது போல நடித்துக்கொண்டிருக்க, அவனை ரசித்தபடி, அவன் உடலில் இருந்த புண்களுக்கு மருந்து தடவினாள். ஆதி, துர்காவின் கவனிப்பை உணர்ந்து அமைதியாக இருந்தான்.

ஆதி தூக்கத்தில் அசைவது போல நடிக்க, துர்கா வேகமாக எழுந்து குளியலறைக்குள் சென்றாள். அவள் போனதும் எழுந்த ஆதி, கண்ணாடியில் தன் உடலைப் பார்த்தான். தன் உடலின் எல்லா புண்களுக்கும் துர்கா மருந்து போட்டிருந்தாள். ‘அன்று என் முகத்தில் இருந்த காயங்களைப் பார்த்து முகம் சுளித்தவள், இன்று என் உடலில் இருந்த புண்களுக்கு எப்படி முகம் சுளிக்காமல் மருந்து போட்டாள்?’ என்று ஆதி யோசித்தான். அப்போது குளியலறையில் இருந்து துர்கா வெளியே வந்தாள்.

துர்காவுக்கு இரவு நடந்த எதுவும் நினைவில் இல்லை. ஆனால் ஆதிக்கு, அவளின் ஒவ்வொரு அசைவும் நினைவில் இருந்தது. அவன் துர்காவைப் பார்த்ததும் நேற்றிரவு அவள் தன் மீது கை கால்களைப் போட்டுக்கொண்டு படுத்திருந்தது, அவனைப் பார்த்துக் கிறங்கியது என எல்லாமே நினைவுக்கு வந்தது. அவன் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டாமல், சாதாரணமாகப் பார்த்தான். ஆனால் துர்கா, அன்று அவன் தன் மீது பச்சைத் தண்ணீர் ஊற்றியதையும், அவமானப்படுத்தியதையும் நினைத்து, கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றாள்.

அவள் கோபமாக இருப்பதை ஆதி புரிந்துகொண்டான். ‘நான் செய்தது தவறுதான். அவள் கோபப்பட்டு வெளியே சென்றதும், நான் அவளைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதுமட்டுமின்றி, அவள் மீது பச்சைத் தண்ணீர் ஊற்றி அவளைப் बीमार ஆக்கிவிட்டேன். அவள் கோபப்படுவது நியாயம் தான்’ என்று நினைத்தவன், ‘காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று குளிப்பதற்காகக் குளியலறைக்குச் சென்றான்.

குளித்துவிட்டு வந்த ஆதி, துர்காவைத் தேடினான், அவள் அறையில் இல்லை. அவளைக் காணாததும் அவன் மனம் ஏனோ பதறியது. அவள் எங்கே என்று தேடி, படிகள் வழியாகக் கீழே வந்தான். அப்போது சாப்பிடும் மேஜையில் துர்கா உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். வேலை ஆட்களிடம் பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டிருந்த அவளை, ஆதி ரசித்துக்கொண்டே வந்தான். அப்போது அவன் யாரோ ஒருவர் மீது மோத, கோபமாக நிமிர்ந்து பார்த்தான். அங்கே விக்கி, கதிர் இருவரும் நின்றிருந்தார்கள்.

“என்னடா? எதிரில் யார் வரான்னு கூடப் பார்க்காம எங்கே பார்த்துட்டு வர?” என்று விக்கி கேட்க, “யாரையும் நான் பார்க்கலையே” என்று ஆதி சமாளித்தான். “இல்லையே, நீ அங்கே யாரையோ தேடிட்டு வந்த மாதிரியும், அவங்களைப் பார்த்துட்டு தான் இறங்கி வந்த மாதிரியும் தெரிந்தது. நான் தான் நீ மேலிருந்து இறங்கி வந்ததைப் பார்த்துட்டு இருந்தேனே” என்று விக்கி கூற, ஆதி தான் துர்காவைப் பார்த்துக்கொண்டிருந்ததை விக்கி கண்டுபிடித்துவிடுவானோ என்று பயந்து, சட்டென்று அவன் தலையைத் தன் பக்கம் திருப்பி, “என்னடா? இவ்வளவு காலையிலேயே?” என்றான்.

“அது ஒண்ணுமில்லடா. அம்மா உன்னையும் துர்காவையும் இன்னைக்கு ஆபீஸ் போக வேண்டாம்னு சொன்னாங்க. நேரா கிளம்பி வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்றான். “எதுக்குடா?” என்று ஆதி கேட்க, “மறந்துட்டியா? இன்னைக்கு அருணாச்சலம் மாமா பொண்ணு பூமிகா கல்யாணம். அதுக்காகத்தான் அம்மா வரச் சொன்னாங்க. நாம் எல்லாரும் ஒண்ணா போகணும்னு சொன்னாங்க” என்று விக்கி கூற, கதிர், “ஆமாம் அண்ணா. அம்மா உங்க ரெண்டு பேருக்கும் உடைகள் எல்லாம் அங்கேயே எடுத்து வச்சிருக்காங்க. நீங்க கிளம்பி வந்தா போதும்னு எங்களை அனுப்பி வச்சாங்க” என்றான். “சரிடா, அதுக்காக இவ்வளவு காலையிலேயா?” என்று ஆதி கேட்க, “டேய், உனக்கு என்ன பிரச்சனை? இப்போ கிளம்பி வரப் போறியா? இல்லை அம்மாவுக்கு போன் செய்யவா?” என்று விக்கி போனை எடுக்க, “சரி, சரிடா, போலாம். நான் இதை இன்னும் துர்கா கிட்ட சொல்லலையே” என்று ஆதி கூறினான்.

அப்போது துர்கா சிரித்த முகத்தோடு, இடுப்பில் சொருகியிருந்த புடவைத் தலைப்பை எடுத்து கைகளைத் துடைத்தபடி, விக்கி, கதிர் இருவரையும் நோக்கி நடந்து வந்தாள். புடவையில் வந்த அவளை ஆதி வாயடைத்துப்போய் பார்த்தான். ஆதியைக் கண்டுகொள்ளாத துர்கா, “என்ன கதிர், விக்கி? இவ்வளவு காலையிலேயே வந்திருக்கீங்க?” என்று கேட்டாள். விக்கி, “ஒண்ணுமில்ல துர்கா, பசியா இருந்ததால் வந்தோம். சாப்பாட்டு வாசனை நல்லா இருந்தது. சுவை எப்படி இருக்குன்னு பார்க்க வந்தோம்” என்று கூற, துர்கா சிரித்தாள். “சாப்பாடு வேணும்னு நேரடியாக சொல்ல மாட்டீங்களா? சரி, வாங்க. இன்னைக்கு நான் தான் சமைத்தேன். சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க” என்றாள். “அப்படியா துர்கா? உன்னோட சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாகிடுச்சு. முன்னாடி ஆபீஸுக்கு வந்தப்போ அடிக்கடி செஞ்சு கொண்டு வருவே. இப்போ நீங்க முதலாளி ஆயிட்டீங்க, இனி அந்த சாப்பாடெல்லாம் கிடைக்குமா?” என்று விக்கி ஏக்கமாகக் கூற, கதிர், “டேய், அநியாயத்துக்கு பொய் சொல்லாதே. அவளுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல. அதுக்கு முன்னாடி வரை நமக்குச் சாப்பாடு செஞ்சு கொண்டு வந்துட்டு தானே இருந்தா?” என்றான். “இப்படி எல்லாம் சொன்னாதான்டா நமக்குச் சோறு கிடைக்கும்” என்று விக்கி கூற, துர்கா அவன் காதை பிடித்துத் திருக, “எங்கே, என்னை பார்த்து சொல்லு. நீ இப்படி பேசினாத்தான் சாப்பாடு கொடுப்பேனா?” என்று சண்டைக்கு வந்தாள். “ஏய் துர்கா, வலிக்குதுடி! விடு” என்று தப்பித்துக்கொண்டவன், “சரி வாங்க சாப்பிடப் போலாம்” என்று சொன்னான். கதிர் சிரித்தபடி துர்காவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சாப்பிடும் மேஜைக்குச் சென்றான்.

தன் மனைவியிடம் உரிமை எடுத்துப் பேசும் தம்பியையும், நண்பனையும் பார்த்த ஆதிக்குச் சந்தோஷமாக இருந்தாலும், அதே நேரத்தில் எரிச்சலாகவும் இருந்தது. தன்னை அழைக்காமல் அவர்களை மட்டும் அழைத்துச் சென்று உணவு பரிமாறிக் கொண்டிருந்த துர்காவைப் பார்த்து முறைத்துக்கொண்டே, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவன், டிவியை ஆன் செய்து செய்தி சேனலைப் பார்த்தான். விக்கியும், கதிரும் துர்காவின் சமையலைப் புகழ்ந்து தள்ள, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த விக்கி, ஆதியைப் பார்த்தான். அவன் தீவிரமாக டிவி பார்ப்பது போல நடித்தான்.

“என்னடா? உங்க அண்ணா சாப்பிட வரலையா?” என்று கதிரைக் கேட்க, அப்போது தான் ஆதியை அழைக்காதது துர்காவுக்கு நினைவுக்கு வந்தது. “டேய், ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் போய் அவரைச் சாப்பிடக் கூட்டிட்டு வரேன்” என்று துர்கா செல்ல, கதிர் அவள் கையைப் பிடித்து நிறுத்தி, “நீ முதல்ல எங்களுக்குப் பரிமாறு. அவன் வந்தா எங்க ரெண்டு பேரையும் சாப்பிட விட மாட்டான்” என்றான். “இல்லை கதிர், நான் கூப்பிடலன்னு கோபமா இருக்காரு போல. நீங்க சாப்பிடுங்க, நான் வந்துடுறேன்” என்று துர்கா கூற, “முதல்ல நாங்க ரெண்டு பேரும் தான் உன்னோட நண்பர்கள். அதுக்கு அப்புறம் தான் ஆதி உனக்கு புருஷன். புரிஞ்சுதா? முதல்ல எனக்கு அந்த சிக்கன் கிரேவியை எடுத்துப் பரிமாறு” என்று கதிர் பிடிவாதமாக நின்றான். “டேய், நீ பேசாம சாப்பிடப் போறியா? இல்லை நான் நீ சாப்பிடற சாப்பாட்டில் எதையாவது கலந்து வைக்கவா?” என்று துர்கா கேட்டாள். “பாரு விக்கி! பத்து வருஷமா காதலிச்ச ஆதி தான் முக்கியம். நாங்க முக்கியமில்லைன்னு சொல்லாம சொல்லிட்டா பாரு” என்று கதிர் கூற, துர்கா அவன் வாயைப் பொத்தி, “உனக்கு எப்படி கதிர்… இந்த விஷயம்?” என்று கேட்டுக்கொண்டே விக்கியை முறைத்தாள். “அவனை ஏன் முறைக்கிற? நான் உன்னோடு இவ்வளவு நெருக்கமாகப் பழகி என்ன செய்ய? ஆனா உனக்கு அண்ணாவை லவ் பண்ற விஷயம் எனக்கு விக்கி சொல்லிதான் தெரிய வேண்டியிருக்குல்ல” என்று கதிர் கோபப்பட, “டேய் கதிர், நான் எப்படி உங்க அண்ணாவை லவ் பண்றேன்னு உன் அண்ணாகிட்டயே சொல்லல. அப்போ எப்படி உன்கிட்ட வந்து சொல்ல முடியும்? என் நிலையில் இருந்து யோசிச்சுப் பாரு” என்று சொல்லி, “என்னை மன்னிச்சிரு கதிர்” என்று உண்மையான வருத்தத்துடன் கேட்டாள்.

துர்காவை மேலும் கஷ்டப்படுத்த விரும்பாத கதிர், “சரி, பரவாயில்லை. அந்த கோழித் தொடையை இன்னொன்னு சேர்த்து வை, உன்னை மன்னிச்சிடுறேன்” என்று கூற, துர்கா சந்தோஷத்தில் அவனுக்கு இன்னும் இரண்டு கோழித் தொடைகளைப் பரிமாறினாள். விக்கி, “ஏய் துர்கா, நான் இங்க இருக்கேன் ஞாபகம் இருக்கா? எல்லாத்தையும் அவனுக்கே வைக்குற நீ” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, “நீ என்னை மாட்டிவிட்டதுக்கு உனக்கு ஒண்ணுமே கொடுக்கக் கூடாதுதான். போகட்டும் என்று தான் இப்போ உனக்கு வைக்கிறேன்” என்று கூறி அவனுக்கும் பரிமாறினாள். “நீங்க சாப்பிடுங்க, நான் ஆதியைச் சாப்பிடக் கூப்பிடுறேன்” என்று கூறி அவனிடம் வந்தாள்.

ஆதி தீவிரமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான். துர்கா வந்தது கூடத் தெரியாமல் அவன் இருக்க, அவனை இரண்டு மூன்று முறை அழைத்தாள். அவன் கேட்காததால், டிவியை ஆஃப் செய்தாள். அவள் செய்தியை ஆஃப் செய்ததும் ஆதிக்குக் கோபம் வர, “ஏய் துர்கா! இப்போ எதுக்கு நீ டிவியை ஆப் செய்தாய்?” என்று கோபமாகக் கேட்டான். “நான் எவ்வளவு நேரமா உன்னைச் சாப்பிடக் கூப்பிட்டுட்டு இருக்கேன்? நீ ரொம்பத் தீவிரமாக டிவி பார்த்துட்டு இருக்கே” என்று அவளும் கோபமாகப் பேச, “ஏய் துர்கா, என்னையே நீ அதிகாரம் பண்றியா? உன் வரம்பு என்னவோ அதுபடி இருந்துக்க. தேவை இல்லாம என்னை அதிகாரம் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதே” என்றவன், எழுந்து சென்று மேஜையில் அமர்ந்தான். “முத்து தாத்தா!” என்று அதே கோபத்தில் கத்த, முத்து தாத்தா வேகமாக ஓடி வந்து நின்றார். “எனக்குச் சாப்பாடு பரிமாறுங்க” என்று ஆதி கூற, அவர் தயக்கத்துடன் துர்காவைப் பார்த்தார். அவள் பரவாயில்லை என்று தலையாட்ட, முத்து தாத்தா ஆதிக்குப் பரிமாறினார். அவர் வைத்த உணவை எல்லாம் சாப்பிட்டவன், சுவை நன்றாக இருந்ததால், எதுவும் கூறாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டான். மீண்டும் முத்து தாத்தா பரிமாற வர, “தாத்தா! இன்னைக்கு யாரு சமைத்தது? சாப்பாடு எதுவுமே நல்லா இல்லை. இனிமேல் இப்படி சமைக்காதீங்க” என்று கேட்டான். முத்து தாத்தா தயக்கத்துடன் நிற்க, “ஏன்டா ஆதி? இவ்வளவு நேரம் நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுட்டு தான இருந்த? இப்போதான் உனக்குச் சாப்பிட பிடிக்காத மாதிரி சொல்ற. சாப்பாடு நம்ம துர்கா தான் செஞ்சா, நல்லா தான் இருக்கு. இதையே நீ குறை சொல்றியா?” என்று விக்கி கேட்க, “உனக்கு வேணா அவ செய்தது சுவையாக இருக்கலாம். எனக்கு அவ சுவை பிடிக்கல” என்று துர்காவைப் பார்த்தவன், “என்ன சுவையோ” என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.

ஆதி இப்படி கூறிவிட்டு சென்றதால், துர்காவுக்கு வருத்தமாக இருந்தது. அவள் அருகில் வந்த முத்து தாத்தா, “கண்ணு, நீ ஏன் வருத்தப்படறேன்னு எனக்குப் புரியுதுடா. ஆதி தம்பி நீ செய்த எல்லா சாப்பாடையும் சாப்பிட்டுட்டு, சாப்பிட முடியாம தான் எழுந்து போனாரு” என்று கூற, விக்கியும், கதிரும், “அவன் எல்லாப் பதார்த்தங்களையும் காலி பண்ணிட்டான். உனக்கு எதுவுமே மிச்சம் இல்லை. நீயே பாரு” என்று அங்கிருந்த பாத்திரங்களை எடுத்து காட்ட, துர்காவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. “சரி துர்கா, நீ சாப்பிட்டியா?” என்று கதிர் கேட்க, அவள் இல்லை என்று தலையாட்ட, “எல்லாமே தீர்ந்துவிட்டது. நான் உனக்கு ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” என்று கதிர் கேட்க, துர்கா வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மேலே சென்ற ஆதி தயாராகி வந்தவன், “போலாமா?” என்று கேட்டான். துர்கா எதுவும் புரியாமல் விழிக்க, “துர்கா, சீக்கிரம் மேல போய் உடை மாத்திட்டு வா” என்றவன், ஆதியின் அம்மா சொல்லி அனுப்பியதை கூறினான். “சரி” என்று தலையாட்டிவிட்டு அவள் மேலே செல்லப் போக, “துர்கா, இரு. எங்க போற? நேரமாகிவிட்டது” என்று ஆதி கூற, அவள் அவனைப் பார்த்தாள். “டேய், அவ இன்னும் சாப்பிடக்கூட இல்லை” என்று விக்கி சொல்ல, “அதெல்லாம் அங்கே போய் பார்த்துக் கொள்ளலாம். போலாம் சீக்கிரம்” என்று அவன் அவசரப்படுத்த, துர்கா வேறு வழியின்றி அவர்களுடன் முத்து தாத்தாவிடம் கூறிவிட்டு கிளம்பினாள்.

EPISODE 26

கோட்டை போல இருக்கும் ஆதியின் வீட்டின் உள்ளே கார் நுழையும் சத்தம் கேட்டதும், உள்ளே வேலை ஆட்களிடம் பூமிகாவின் திருமணத்திற்கு கிளம்புவதற்காக வேலை வாங்கிக் கொண்டிருந்த விசாலாட்சி, வெளியே காரின் சத்தம் கேட்டதும் வேகமாக வாசல் வந்தவர், அனைவரும் காரில் இருந்து இறங்க அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் நேராக துர்காவிடம் வந்தவர், “துர்கா! வா டா… எப்படி இருக்க? நல்லா இருக்கியா? ஏன் டா, எதுவுமே சாப்பிடறது இல்லையா? இப்படி இளைச்சுப்போன மாதிரி இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலையா? முகம் எல்லாம் வாடி இருக்கு,” என்று விடாமல் பேசிக்கொண்டே இருக்க.

விசாலாட்சி தங்கள் மூவரையும் கண்டு கொள்ளாமல் துர்காவிடம் செல்ல, அதைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரும், விக்கியும் அவர் அருகில் வந்து, துர்காவிடம் பேசிக் கொண்டிருந்த விசாலாட்சியின் கையை ஆளுக்கு ஒருபுறமாக பிடித்து, அவரை தங்களைப் பார்க்குமாறு திருப்பி நிற்க வைத்து, “ஹலோ தாய்க்குலமே! இங்க நாங்க மூணு பேர் இருக்கோம். எங்களை எல்லாம் என்னன்னு கூட கேட்காம நேரா உங்க மருமகள் கிட்ட போய் இவ்ளோ அக்கறையா விசாரிக்கிறீங்க. எங்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியலையோ?” என்றான் கதிர்.

“டேய்! நீங்க ரெண்டு பேரும் காலைல தான டா இங்க இருந்து போனீங்க? உங்க கிட்ட என்ன டா விசாரிக்க வேண்டி இருக்கு?” என்றார்.

“சரி மா.. எங்க ரெண்டு பேரையும் காலைல தான் பார்த்தீங்க. சரி. உங்க மகனும் மருமகளும் இப்பதானே வராங்க? அவனை விட்டுட்டு துர்காவை மட்டும் கேட்கிறீங்க,” என்று விக்கி கேட்க.

“அவனை நான் கேட்கலைனாலும், அவன் முகத்தைப் பார்த்தே நான் கண்டு பிடிச்சிருவேன் டா. நல்லா இருக்கானா இல்லையானு,” என்றார்.

“ஓஹோ! அவன் மாஸ்க் போட்ட முகத்தைப் பார்த்து நீங்க தெரிஞ்சுப்பீங்க. அப்படி தானே?” என்று நக்கல் அடித்த கதிரைப் பார்த்து, “ஆமா டா! நான் சரியா சொல்லட்டுமா? நீ, விக்கி, அப்புறம் ஆதி மூணு பேரும் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டு நல்லா ஃப்ரெஷ் ஆக இருக்கீங்க. ஆனா என் மருமகள் முகத்தைப் பாருங்க. அவ முகமே சரி இல்லை. டல்லா இருக்கா.. சரியா சாப்பிடாம உடம்பு முடியாம இருக்கவ மாதிரி இருக்கு,” என்றார் விசாலாட்சி.

அவர் சொன்னதும் மூன்று பேரும் திரும்பி துர்காவின் முகத்தைப் பார்க்க, அவர் சொல்வது போல தான் துர்காவின் முகம் இருந்தது.

“இவ்ளோ நேரம் நாங்க கூட தான் இருந்தோம், எங்களுக்கு இது தெரியலையே,” என்ற விக்கி, “துர்கா, உனக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கேட்க.

அதற்கு ஆதி, “ஆமா. நேற்று முழுவதும் அவளுக்கு குளிர் காய்ச்சல். காலையில் தான் அவளுக்கு ஒரு அளவுக்கு சரி ஆகிருக்கு. நைட் முழுவதும் காய்ச்சலில் என்னை படாத பாடு படுத்தி விட்டாள்,” என்று அவள் நேற்று இரவு ஆதியிடம் தூக்கத்தில் பேசியதையும், அவனை விடாமல் கட்டிக்கொண்டதையும் நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்படவன், வெளியில் வெறுப்பாக பேசுவது போல காட்டிக் கொண்டான்.

ஆதி பேசியதை கேட்ட கதிருக்கும், விக்கிக்கும் ஷாக்காகி போனது. அவனை திரும்பிப் பார்த்த இருவரும், “என்ன, துர்காவுக்கு நேத்துல உடம்பு முடியலையா?” என்றனர் ஒருசேர.

அவர்கள் இருவரும் ஷாக்காகிக் கேட்க, ஆதி அவர்களைப் பார்த்து “ஆமா” அசால்டாக. “என்னடா இவ்வளவு அசால்ட்டா சொல்ற? துர்காவுக்கு நேத்து எல்லாம் குளிர் காய்ச்சல்னு சொல்லிட்டு, அப்புறம் ஏன் அவ சாப்பிடாம கூட இங்க கூட்டிட்டு வந்த? காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலைங்க. நீ மட்டும் நல்லா வயிறு முட்ட சாப்பிட்ட தானே இருந்த?” என்று விக்கி கோபத்தோடு கேட்க.

“டேய்! நான் எங்கடா வயிறு முட்ட சாப்பிட்ட? கொஞ்சமாதான் சாப்பிட்டேன். அதுவும் நல்லா இல்லைன்னு பாதியை பிளேட்டிலேயே வச்சிட்டுதானே வந்தேன்? நீங்களும் பார்த்து தனியாக இருந்தீர்கள்,” என்றான் ஆதி.

“உங்க அண்ணனுக்கு ‘குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை’ என்கிற கதைதான். நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு, அவளுக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு, இப்ப என்னடான்னா கொஞ்சம் தான் சாப்பிட்டேன்னு சொல்றான் பாரு. கொஞ்சம் கூட வெக்கமே இல்லடா உங்க அண்ணனுக்கு,” என்றான் கதிரிடம்.

“என்ன பண்றது? எங்க அண்ணன் அப்படித்தான்,” என்றான் கதிர் அவனிடம் சேர்ந்து கொண்டு.

இவர்கள் எல்லாம் மாறி மாறி பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த விசாலாட்சி, “ஏன்டா! இந்த புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு, காலையில சாப்பிட வைக்காமல் கூட இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்களா? உங்களையெல்லாம் என்னடா பண்றது? உங்களை நம்பி எப்படி நான் என் மருமகளை உங்க கூட அனுப்பி வைக்கிறது? இப்படித்தான் பார்த்து இருக்கீங்களா? ஏன் ஆதி! உனக்குமா இப்படி? ஏன் இப்படி நீ இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கொள்கிறாய்? நீ அப்படிப்பட்டவன் இல்லையே. அவ சாப்பிடாமல் உடம்பு முடியலன்னு தெரிஞ்சு, அவளை இவ்வளவு தூரம் சாப்பிடாம இங்க அழைச்சிட்டு வந்திருக்க,” என்று கூறியவர், துர்காவை பார்த்து, “வா டா.. கண்ணு…முதல்ல நம்ம போய் சாப்பிடலாமா?” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, “ஐயோ.. அத்தை, எனக்கு பசி எல்லாம் ஒன்னும் இல்ல அத்த. அவங்க எல்லாம் ஏதோ சொல்றாங்க. நிஜமாவே எனக்கு பசிக்கல,” என்று துர்கா சொல்ல, “நீ பேசாம இரு. பொய் பேசாத. வா முதல்ல சாப்பிடலாம்,” என்று கூறி, துர்காவை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளில் சென்று அமர வைத்தவர், அங்கிருந்து உணவுகளை எடுத்து அவளுக்குப் பரிமாற சாப்பிட சொன்னார்.

தன் அம்மாவை விட்டு பிரிந்து இங்கே வந்து விட்டோம் என்று வருத்தம் ஒருபுறம் துர்காவின் மனதில் இருந்தாலும், ஆனால் அந்தக் குறையை விசாலாட்சி இப்போது தீர்த்து வைத்து விட்டார் என்று மனதிற்குள் சந்தோஷம் அடைந்தவள், அவர் வைக்க வைக்க நன்றாக சாப்பிட்டால்.

துர்கா பசியில் அவர் வைத்த உணவை எதுவுமே வேண்டாம் என்று சொல்லாமல் அனைத்தையும் சாப்பிட, அவள் சாப்பிடுவதை அவள் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விக்கி, கதிர், ஆதி மூவருமே ஆவென வாய்ப்பிளந்து கொண்டு பார்த்தனர்.

ஆதி மனதிற்குள், “அப்போ இவ்ளோ பசியை வைத்துக்கொண்டு தான் நான் கூப்பிட்டது எதுவும் பேசாமல் கிளம்பி வந்துட்டாளா? ஏற்கனவே உடம்பு சரியில்லாதவளை நான் வேற சாப்பிடாம வேற கூட்டிட்டு வந்துட்டேன். எனக்குத்தான் அறிவு இல்லாம போச்சு,” என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ள, அவன் முகபாவனை பார்த்துக் கொண்டிருந்த விக்கி, “என்னடா? ஏதோ தீவிரமா யோசனையில் இருக்க?” என்று கேட்க, “ஒன்னும் இல்லையே,” என்றான் ஆதி.

“அப்புறம் எதுக்கு நீ துர்காவையே விழுங்குற மாதிரி பாத்துட்டு இருக்க?” என்று விக்கி கேட்க, அவனை முறைத்தவன் தன் ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்.

“ம்க்கும்… இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனா ஊனா முகத்தைத் தூக்கி வச்சுக்க வேண்டியது. எங்க தான் இவனுக்கு மட்டும் இப்படி டிசைனா மூஞ்சி செஞ்சாங்களோ,” என்று மனதிற்குள்ளேயே ஆதியை திட்டிக் கொண்டான் விக்கி.

துர்கா சாப்பிட்டு முடிக்கவும், வெங்கடேசலமும் வெளியே சென்று இருந்தவர் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவரை “வாங்க மாமா,” என்று அழைத்த துர்கா, அவரிடம் சென்று சிறிது நேரம் பேசியவள், விசாலாட்சி விடம் வந்து, “அத்தை, நான் ஏதாவது எடுத்து வைக்கணுமா? அத சொல்லுங்க. ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க,” என்று கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லடா. எல்லா வேலையும் முடிச்சாச்சு. நம்ம கிளம்புனா மட்டும் போதும். உங்க மாமாவுக்காக தான் நான் காத்துட்டு இருந்தேன். அவரும் வந்துட்டாரு. சரி, நாம எல்லாம் கிளம்பலாமா?” என்றவர், “எங்க துணி எல்லாம்? எனக்கு ஊருக்கு நான் எதுவுமே எடுத்து வைக்கல,” என்று துர்கா சொல்ல, “நான் எல்லாத்தையுமே அரேஞ்ச் பண்ணிட்டேன். அங்க போய் உன்னோட டிரஸ்ஸையும், ஆதியின் டிரஸ்ஸையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். சரியா? போலாமா இப்போ?” என்று கூற, “சரி,” என்று அனைவரும் கிளம்ப.

அனைவரும் கிளம்ப போக, விசாலாட்சி துர்காவிடம், “உங்க அம்மா, அப்பாவையும், கீர்த்திகாவையும் அழைச்சிட்டு வருவதற்கு ஒரு கார் அனுப்பி இருக்கேன் டா. அவங்கள நேரா அங்க இருந்து நம்ம தங்கி இருக்கிற இடத்துக்கு வந்துருவாங்க. நீ எதுக்கும் ஒரு வாட்டி போன் பண்ணி அவங்க கிளம்பிட்டாங்கன்னு மட்டும் விசாரிச்சுக்க,” என்று கூற, கீர்த்திகா வருகிறாள் என்று கேட்டதும் கதிரின் முகத்தில் “தவுசன்ட் வாட்” பல்பு எரிந்தது. அதைக் கவனித்த விக்கி, “நடத்து நடத்து,” என்று நினைத்துக் கொண்டு, “என் ஆளு இந்நேரம் என்ன பண்ணிட்டு இருக்கோ? என்ன நினைச்சிட்டு இருக்கிறாளோ இல்லையோ? யாருக்கு தெரியும்?” என்று புலம்பிக்கொண்டு காருக்குச் சென்றான்.

வெங்கடாசலம், விசாலாட்சி டிரைவருடன் ஒரு காரிலும், ஆதி, துர்கா காரின் பின்னே அமர்ந்துகொள்ள, கதிர் காரை ஓட்ட, விக்கி அவன் அருகில் அமர்ந்து கொண்டு நால்வரும் ஒரு காரில் கிளம்பினர் பூமிகாவின் திருமணத்திற்கு.

****

சங்கவியின் வீட்டில் சங்கவியின் அம்மா இதே பூமிகாவின் கல்யாணத்திற்கு கிளம்புவதற்காக துணிமணிகளை எல்லாம் பேக் செய்தவர், சங்கவி ஹாலில் அமர்ந்து போன் நோண்டிக்கொண்டு இருக்க, “ஏய்! நீ வரலையா டி கல்யாணத்துக்கு? உன் டிரஸ்ல நீ எதுவுமே எடுத்து வைக்காமல் இப்படி உட்கார்ந்து இருக்க? இல்லை நான் போய் எடுத்து வைக்கட்டுமா?” என்று சங்கவி அம்மா அவளிடம் கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், “இங்கே உன் பொண்ணுக்கு கல்யாணம் நின்னு இப்படி ஆயிடுச்சு. நீ கொஞ்சமாவது வருத்தப்படுறியா? யாரோ வீட்டு கல்யாணத்துக்கு இவ்ளோ சந்தோசமா கிளம்பி போற,” என்று அவரை முறைத்த சங்கவியைப் பார்த்தவர்.

“நானா உன் கல்யாணத்தை நிறுத்துன? நீ தான் அந்த பையனை பிடிக்கலைன்னு சொல்லி கல்யாணத்தை வேண்டாம் என்று அத்தனை பேரும் முன்னாடி அவ்வளவு அமர்க்களம் பண்ணுன. நல்ல வேலை உன்னை கல்யாணம் பண்ணிட்டு அந்த தம்பி எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்குமோன்னு ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தேன். நல்ல வேலை தப்பிச்சிருச்சு,” என்று மனதில் நினைத்தவர், சங்கவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க.

அவர் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு ஏதோ மனதில் யோசிப்பதைப் பார்த்த சங்கவி, அவரிடம் எழுந்து வந்து, அவர் முகத்தை முன் சொடக்கிட, அப்போதுதான் நினைவுக்கு வந்தவராக, “என்ன?” என்று அவளை நிமிர்ந்து பார்க்க, “என்னமா! மனசுக்குள்ள என்னதான் ஏதோ திட்டிட்டு இருப்ப போல,” என்று சங்கவி கேட்க.

“இல்லடா. நான் எதுக்கு உன்னை திட்ட போறேன்? நீ இப்படி சொன்னது எனக்கு உன் மேல ரொம்ப வருத்தமாயிடுச்சு. ஐயோ! என் பொண்ணு இப்படி கல்யாணம் நின்னு போச்சு அப்படின்னு சொல்லிட்டு,” என்று அவர் சொல்ல, “போதும். ரொம்ப நடிக்காத. உன் அக்கறை எனக்கு நல்லாவே தெரியும்,” என்றவள், “நீயும் அப்பாவும் தானே கிளம்ப போறீங்க? நான் அங்க வராட்டி என்ன?” என்று அவள் சொல்ல, அப்போது வெளியே சென்று சங்கவியின் அப்பா வீட்டிற்குள் வந்தார்.

“என்ன அம்மாவும், பொண்ணும் காலையிலேயே ஹால்ல நின்னு சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” என்று கூறிக் கொண்டே வந்தவர், அவர் மனைவியைப் பார்த்து, “என்னடி! என் பொண்ணு கிட்ட வம்பிழுத்துட்டு இருக்க?” என்று கேட்க.

“இதோ வந்துட்டான்டா பைத்தியக்கார பையன். அப்பன் மாதிரியே பிள்ளை, பிள்ளை மாதிரியே அப்பன். இந்த ரெண்டும் சேர்ந்துச்சுன்னா எதுவுமே விளங்காது,” என்று மனதிற்குள் வருத்தப்பட்டவர், “அது ஒண்ணும் இல்லைங்க. நம்ம இன்னைக்கு உங்க ஃபிரெண்ட் அருணாச்சலத்தோட பொண்ணு கல்யாணத்துக்கு போறோமே, அதுக்கு சங்கவியும் வரலையான்னு கேட்டேன். அதுக்காக என்ன கோவிச்சுக்கிறா,” என்று கூற, “அதை நான் பாத்துக்கிறேன். நீ போ,” என்று அவரை அனுப்பி வைக்க, “அப்பாடி! இதுக இரண்டுதிலிருந்து தப்பிச்சுட்டோம்டா,” என்று சொல்லிக்கொண்டு வேகமாக சென்று விட்டார்.

அவர் சென்றதும் சங்கவியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு வந்தவர், அவள் கட்டிலில் அமர வைத்து, அவர் கதவை சாத்திவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தவர், “இப்ப ஏன்டா நீ இந்த கல்யாணத்துக்கு வரலைன்னு சொன்ன?” என்று கேட்க.

“இல்லப்பா. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல,” என்றால் சங்கவி. “அப்படி எல்லாம் சொல்லாதடா. இப்ப நீ என் கூட அந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும். ஏன்னா வெங்கடாசலத்துக்கும் எனக்கும் அந்த அருணாச்சலம் ஃபிரெண்டு தான். அதனால தான் எங்க ரெண்டு பேரையும் இன்வைட் பண்ணி இருக்காரு. வெங்கடாசலம் ஃபேமிலியோட கல்யாணத்துக்கு கிளம்பியாச்சு. நான் விசாரிச்சிட்டு தான் வரேன். நீ கண்டிப்பா அங்க வரணும். நீ அங்க வந்து எப்படியாவது அந்த ஆதியை வளைச்சு உன் கைக்குள் போட்டுக்கோ. அன்னைக்கு நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா? அவன் கம்பெனில போய் பிரச்சனை பண்ணி, நீ மறுபடியும் அவன்கிட்ட பகையை வளர்த்துக்கிட்ட. அதெல்லாம் இல்லாம, அவங்க கிட்ட நீ ரொம்ப கோவமா நடந்துக்கிட்ட. போதாக்குறைக்கு அந்த துர்கா வேற வந்துட்டு இருக்கா. அவ கிட்ட அடியும் வாங்கி இருக்கே. இதெல்லாம் சரியா இருக்குமா? இந்த நேரத்துல கொஞ்சம் உன் கோபத்தைக் குறைமா. அப்பதான் நம்ம நினைச்ச காரியத்தை நடத்த முடியும். புரியுதா நான் சொல்றது?” என்றவர்.

“அதை எல்லாம் சரி பண்ணி நீ அந்த ஆதியை கண்டிப்பா உன் வலைக்கு உள்ள சிக்க வைக்கணும். இந்த பிராஜெக்ட் முடியுற வரைக்கும் தான் நம்மளுக்கு டைம் கிடைக்குது. அதுக்குள்ள உனக்கு எப்ப சான்ஸ் கிடைச்சாலும், நீ ஆதி கூட மிங்கில் ஆகுற வழியை பாரு. அப்பதான் நீ நினைச்ச மாதிரி அந்த சொத்து எல்லாத்தையும் அடைய முடியும். நான் சொல்றது புரியுதா இல்லையா?” என்று சொல்ல, அவர் சொல்வதைக் கேட்டபோது, “சரி அப்பா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. சரி, நான் போய் திங்ஸ்ல பேக் பண்ணிட்டு கிளம்புறேன்,” என்றவள் சிரித்துக் கொண்டே வேகமாகத் தன் அறைக்குச் சென்றால் கிளம்புவதற்காக.

EPISODE 27

துர்காவின் அம்மா, அப்பா, கீர்த்திகா மூவரும் விசாலாட்சி அனுப்பி இருந்த காரில் கிளம்பி இருக்க, அப்போது கீர்த்திகாவிற்கு துர்காவிடம் இருந்து கால் வந்தது.

போனை எடுத்துப் பார்த்தவள், துர்கா தான் அழைத்திருக்கிறாள் என்று திரையில் அவள் பெயர் தெரியவும் சந்தோஷமாக போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஹலோ, இங்க கீர்த்திகா பேசுறேன். அங்க யாருங்க பேசுறது?” என்றாள். அவள் வேண்டுமென்றே துர்காவிடம் வம்பு பேசுகிறாள் என்று புரிந்துகொண்ட துர்கா சிரித்துக்கொண்டே.

“ஹலோ, இந்த பக்கம் தி கிரேட் துர்கா பேசுகிறேன்,” என்றால் துர்காவும். “ஓஹோ… யாருங்க அந்த துர்கா? ரெண்டு நாள் முன்ன மறுவீடு முடிஞ்சு வீட்டுக்கு கிளம்பி போயிட்டு, இப்போ வர எதுவும் பேசாம, போன் பண்ணாம இருக்காங்களே, அவங்களா?” என்றால் கீர்த்தி.

“ஓஹோ… இதனால தான் மேடம் மூணாவது மனுஷங்க போல என்கிட்ட பேசுறியா?” என்றவள், “ஏய் கீர்த்தி, நான் வேணும்னு உன்கிட்ட பேசாம இருப்பேனா டி?” என்றால் குழைவாக துர்கா.

துர்கா கீர்த்தி என்று சொன்னதும் தான் காதுகளை கூர்மையாக்கிய கதிர், துர்கா என்ன பேசுகிறாள் என்று காரை ஓட்டிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தான்.

“சும்மா ஏதோ ஒன்னு சொல்லி சமாளிக்காத அக்கா. ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்கு போனது தானே நீ? இப்ப வரைக்கும் எனக்கு ஒரு போன் பண்ணி பேசிருப்பியா? கல்யாணம் பண்ணி போனதும் உனக்கு எங்கள எல்லாம் மறந்துருச்சு. அப்படித்தானே?” என்றால் சோகமாக.

“அச்சோ! அப்படி இல்லை கீர்த்து மா… ஏன் இப்படி எல்லாம் பேசுற? எனக்கு உடம்பு சரி இல்லை டி. அதனால தான் நான் யாருக்குமே போன் பண்ணலை,” என்று துர்கா சொன்னாள்.

துர்காவுக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னதும், “அக்கா, என்ன ஆச்சு உனக்கு? எதுவும் ப்ராப்ளமா? ஏன் உடம்பு சரி இல்ல? த்ரீ டேஸ் ப்ராப்ளமா உனக்கு? அப்போ தான உனக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்கும்?” என்று கீர்த்திகா கேட்க, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் அருகில் இருந்த ஆதிக்கு துர்கா போனை ஸ்பீக்கரில் போடாமல் இருந்தும் நன்றாகவே கேட்டது.

கீர்த்திகா அவ்வளவு பதட்டமாக சத்தமாக பேசினாள். அவள் அவ்வளவு பதட்டப்படவும், “ஏய் கீர்த்தி, எனக்கு அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ கொஞ்சம் பதட்ட படாம இரு முதல்ல,” என்றவள், “நீங்க எல்லாரும் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்க தான் நான் கால் பன்னினேன் என்று துர்கா கேட்க. கீர்த்திகாவிடம் இருந்து போனை வாங்கிய துர்காவின் அம்மா வடிவு, “துர்கா, ஏன்டா உடம்பு முடியலையா? நல்லா இருக்கியா இப்போ?” என்று விசாரிக்க, “அம்மா எனக்கு உடம்பிற்கு எதுவுமில்லை அம்மா. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க எல்லாரும் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்க, “ஆமா டா. நாங்க கிளம்பி வந்துட்டு தான் இருக்கோம்,” என்று வடிவு கூறினார். “சரி மா.. அப்போ நாம எல்லாம் அங்கே கல்யாணத்தில் சந்திக்கலாம்,” என்று கூறியவள், “சரி மா, நீங்க கீர்த்திகா கிட்ட போனை கொடுங்க,” என்றால்.

“சொல்லு துர்கா,” என்று கீர்த்திகா கூற, “எல்லாமே எடுத்து வெச்சுட்டேன் தானே? நாம போறது ஒரு பெரிய இடத்து வீட்டு கல்யாணத்திற்கு. நான் ஏற்கனவே அவங்க வீட்டு விசேஷத்திற்கு போயிருக்கேன். எல்லாருமே பெரிய பெரிய ஆளுங்க. அதான் கேட்டேன்,” என்று துர்கா மெதுவாக யாருக்கும் கேட்காத வண்ணம் மெதுவாகக் கேட்க.

“அக்கா, நீ ஒண்ணும் கவலை படாத. எல்லாமே அத்தை காலையிலேயே பேக் செய்து எங்களுக்கு முன்னமே கொடுத்து விட்டுட்டாங்க. நாங்க அதை எடுத்துட்டு தான் வந்திருக்கோம். கவலை படாதே,” என்று கூற, “சரி டி, நான் போனை வைக்கவா?” என்று கூற.

இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்கி, உடனே “துர்கா, என்கிட்ட போனை குடு,” என்று போனை வாங்கியவன், அதை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு கதிரைப் பார்க்க, கதிருக்குத் தான் நண்பன் தன்னக்காக உதவுவதை நினைத்து மகிழ்ந்து கொண்டவன், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தவன்.

இதுவரை இவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஓட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டு வந்த கதிர், துர்கா போனை வைக்கிறேன் என்று சொன்னதும் திடீர் என்று இருமல் வருவது போல தொண்டையை செரும, துர்காவிடம் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி அது கதிர் தான் என்று தெரிந்து கொண்டவள், “அக்கா, யாரு கா இருமுறது? மாமா வா? அவருக்கு குடிக்க தண்ணி கொடுங்க அக்கா,” என்று மிகவும் அக்கறையோடு இருப்பது போல கூற.

“இல்லை கீர்த்தி, அவர் என் பக்கத்துல தான் உக்காந்திருக்காரு. கதிருக்கு தான் புரை ஏறிருச்சு,” என்று கூற. “அவனுக்கா? சரி சரி என்னவோ பண்ணுங்க. நான் போனை வைக்கிறேன்,” என்று கூற.

“ஏய்… என்ன கீர்த்து நீ? உங்க மாமாவுக்கு தம் புரை ஏறிருச்சு நினைச்சு அவ்வளவு அக்கறையா கேட்ட. ஆனா இப்போ கதிர் என்று தெரிந்ததும் பேருக்கு கூட அவனுக்கு தண்ணி கொடுங்க என்று கூட சொல்லலாமா? நீ பாட்டுக்கு போன் வைக்குறேனு சொல்ற,” என்று கேட்க.

“அவனுக்கு புரை ஏறினா எனக்கு என்ன அக்கா? நான் எதுக்கு அவனை பற்றி எல்லாம் அக்கறை படனும்?” என்று கதிரை பிடிக்காதவள் போல கீர்த்தி பேச.

“ஏய், அப்படி எல்லாம் சொல்ல கூடாது. ஆதி எப்படி உனக்கு மாமாவோ, அதே மாதிரி கதிரும் உனக்கு அதே முறை தான். நீ முதல்ல அவன், இவன்னு சொல்லாம கதிரை மாமா என்று கூப்பிட்டு பழகு,” என்று கூற. “அக்கா, அவனை எல்லாம் என்னால அப்படி மாமா என்று சொல்ல முடியாது,” என்று கீர்த்தி சொல்ல.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கு, இவள் தன்னை எப்படி வாருகிறாள் துர்காவிடம் என்று கோபமாக வந்தது.

கதிர் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் கீர்த்தி வேண்டுமென்று பேச, ஆனால் இதைக் கேட்ட கதிர், “ஏய் கீ… நீ கல்யாணத்திற்கு வருவேல்ல? உன்னை அங்க வெச்சு கவனிச்சுக்கறேன்,” என்று மனதிற்குள் அவளை கழுவி ஊற்ற, அவன் நிலையைப் பார்த்த விக்கி தான் சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டான்.

“ஏய் கீர்த்து, நீ பேசுறதை எல்லாரும் கேட்டுட்டு இருகாங்க டி,” என்று துர்கா கீர்த்திகாவிடம் சொல்ல. “ஏய் லூசு அக்கா, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? போனை ஸ்பீக்கரில் போட்டேனு சொல்ல மாட்டே? லூசு லூசு,” என்று திட்ட இம்முறை ஆதி கீர்த்திகா பேசுவதைக் கேட்டு, துர்காவை லூசு என்று சொன்னதைக் கேட்டு லேசாக சிரித்தான்.

அவனை ஒரக் கண்ணால் பார்த்த துர்கா, அவனை மனதிற்குள் திட்டினாள். இவர்களை எல்லாம் பார்த்த விக்கிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்க, அவனை பின் சீட்டில் இருந்த துர்கா விக்கியின் தலையில் கொட்டினாள். “ஷ்… ஆ… வலிக்குது துர்கா…” என்றவன், “கீர்த்து மா.. நான் விக்கி பேசுறேன் டா. என்ன டா நீ இப்படியா பேசுவ? உங்க அக்கா வீட்டுக்காரர் உடைய தம்பின்னு கொஞ்சம் மரியாதையா பேசலாமே,” என்று கேட்க.

“அண்ணா, என் அக்கா வீட்டுக்காரருக்கு அதாவது என்னோட மாமாவுக்கு மட்டும் தான் நான் மரியாதை கொடுப்பேன். மற்றவங்க எல்லாம் என்கிட்ட நடந்துக்றதைப் பொறுத்து தான் நான் அவங்களுக்கு மரியாதை கொடுக்கலாமா வேண்டாமா என்று நான் முடிவு செய்யணும்,” என்று சொல்ல.

இதை கேட்டுக் கொண்டிருந்த கதிர், “எனக்கு எல்லாம் யாரும் மரியாதை கொடுக்கணும் என்று அவசியம் இல்லை. இவ மரியாதை கொடுத்து தான் நான் இருக்கணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை,” என்று பதிலுக்கு கதிரும் கீர்த்தியின் மீது கோவப்பட.

“அக்கா, அவனை என்ன அவ, இவன்னு கூப்பிடற வேலை வெச்சுக்க வேணாம்னு சொல்லுங்க அக்கா,” என்றால்.

“ஏய், யாரைப் பாத்து டி அவன்னு சொல்ற?” என்று காரை ஓட்டிக்கொண்டே கதிர் கீர்த்தியிடம் மல்லுக்கு நிற்க. இருவரும் ஒருவரை ஒருவர் கழுவி ஊற்றுவதை காது கொடுத்து இரு பக்கமும் இவர்களுடன் பயணம் செய்து கொண்டு இருப்பவர்களால் கேட்க முடியவில்லை.

இவர்கள் பேசுவதைக் கேட்க பொறுமை இழந்த ஆதி, “போதும் நிறுத்துங்க,” என்று கத்த, கார் ஓட்டிக்கொண்டிருந்த கதிர் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்த, விக்கி வேகமாக டேஷ் போர்டில் தான் தலையில் முட்டிக்கொள்ள. துர்கா சீட்டில் சாயாமல் முன்னாள் நகர்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவள்.

கார் சடன் பிரேக் போடவும் முன் சீட்டின் பின் பகுதியில் முட்டிக்கொண்டு பின் சீட்டில் வந்து விழ, ஆதியின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டால்.

துர்கா தான் விழாமல் இருக்க ஆதியின் கையை ஆதரவாக கெட்டியாக பிடித்துக் கொள்ள, ஆதி தன் கையையும் துர்காவையும் மாறி மாறி பார்க்க, அவள் கண்களை இருக்க மூடி அமர்ந்திருந்தவள், கார் நின்றது புரிய கண்களை திறந்து பார்க்க, அப்போதுதான் அவள் ஆதியின் கையைப் பிடித்திருப்பதை உணர்ந்தவள், பட்டென ஆதியைப் பிடித்து இருந்த கையை விட்டவள், அவனிடம் இருந்து தள்ளி சென்று காரின் கதவருகில் அமர்ந்து கொண்டாள்.

தன்னைத் தொட பிடிக்காமல் தான் துர்கா தன்னிடம் இருந்து விலகி தள்ளி சென்று அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்ட ஆதிக்கு துர்காவின் மேல் கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஆதி கத்தியதால் காரை நிறுத்தி இருந்த கதிர், இப்போதுதான் பின்னாடி திரும்பி ஆதியைப் பார்த்து, “அண்ணா, எதுக்கு அண்ணா இப்ப கத்துனீங்க?” என்று கேட்க, ஆதி, துர்கா மீது இருந்த அதே கோபத்தோடு கதிரிடம், “ஒழுங்காக ரோட்ட பார்த்து வண்டியை ஓட்ட முடியுமா முடியாதா? அப்படி இல்லைன்னா இறங்கி கீழே வா. நான் வண்டி ஓட்டுறேன். இப்படி போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டிட்டு இருந்தா எப்படி ஊருக்கு பத்திரமா போய் சேர்வது? உனக்கு அறிவு இல்லையா? கொஞ்சம் கூட இப்படித்தான் நடந்து கொள்வாயா?” என்று கத்த, மறுமுனையில் இருந்த கீர்த்திகா ஆதி மிகவும் கோபமாக பேசுவதை கேட்டவள், ஃபோனை தானாகவே அனைத்துவிட்டு அமைதியாக தன் காரில் அமர்ந்திருக்க, அவளுடைய அம்மா, “இதெல்லாம் உனக்கு தேவையா? பாரு, மாப்பிள்ளை எவ்வளவு கோபத்தோட பேசுறாருன்னு. உனக்கு எதுக்கு இந்த மாதிரி வம்பு இழுக்கற வேலை? நீ தான் வாயாடி இருக்க,” என்று வடிவு அவளை திட்டினார்.

ஆதி திட்டியதும் எதுவும் பேசாமல், “சாரி அண்ணா, நான் இனிமேல் கரெக்ட்டா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுறேன்,” என்று சொன்னவன் காரை ஸ்டார்ட் செய்ய, இப்போது காருக்குள் இறுக்கமாக இருக்க, யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக அவரவர் அமர்ந்து கொண்டு கிளம்பினர்.

நீண்ட நேரம் பயணத்திற்குப் பின் பூமிகாவின் வீட்டிற்கு ஆதி குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். அவர்களை வாசலில் வந்து வரவேற்ற அருணாச்சலம், வெங்கடாசலத்திடம், “என்னடா? என்கிட்ட சொல்லாம திடீர்னு பொண்ண மாத்தி கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன்னு கேள்வி பட்டேன். என் பொண்ணு கல்யாணம் இருக்கறதுனால தான் என்னால ஆதியின் கல்யாணத்துக்கு வர முடியல. பொண்ணு மாறிடுச்சுன்னு நான் கேள்விப்பட்டேன். சரி எப்படியும் நீ பூமிகா கல்யாணத்துக்கு வருவியா? அப்பவே பார்த்துக்கலாம் நான் வராம விட்டுட்டேன். நான் வரலைன்னு சொல்லிட்டு என் மேல கோவிச்சுக்காத,” என்று அருணாச்சலம் வெங்கடாசலத்திடமும், விசாலாட்சியிடமும் மன்னிப்பு கேட்டார்.

“அருணாச்சலம், நான் உன் மேல கோவமா தான் இருந்தேன். ஏதோ பூமிகாவுக்காக தான் உன்ன விட்டு வைக்கிறேன்,” என்று சிரித்துக் கொண்டே வெங்கடாசலம் கூற, “சரி சரிடா கோபப்படாத. வா, எல்லாம் சரியாயிடும்,” என்று கூறியவர் அனைவரும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

“எங்கடா? நீயும் விசாலாட்சியும் மட்டும் தான் வந்து இருக்கீங்க? இன்னும் ஆதி, கதிர் எல்லாம் காணோம்?” என்று அவர் கேட்க, “வந்துட்டே இருக்காங்கடா. எங்க பின்னாடி தான் வந்தாங்க. இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்கன்னு சொன்னாங்க. நான் இப்பதான் பேசினேன்,” என்று வெங்கடாசலம் கூறினார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, வாசலுக்கு எழுந்து சென்ற அருணாச்சலம், ஆதி வருவதைப் பார்த்தவர், ஆதியுடன் விக்கி, கதிர், துர்கா வர, துர்காவை பார்த்ததும் அருணாச்சலத்திற்கு மிகவும் பிடித்துப் போனது. அவளைப் பார்த்ததும் அவள்தான் ஆதியின் மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர், “ஆதி, வாப்பா,” என்று அழைக்க, துர்கா தயங்கிக் கொண்டு காரிலிருந்து இறங்கியவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, ஆதி துர்காவைத் திரும்பிப் பார்த்து, “உனக்கு தனியா வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா? ஒழுங்கா கூட வரமாட்டியா?” என்று அவளை கடிந்து கொள்ள, அவள் எதுவும் பேசாமல் சரி என்று தலையாட்டிக் கொண்டு ஆதியின் பின்னாலே சென்றாள்.

விக்கி, கதிரிடம், “உங்க அண்ணன் ஏன்டா துர்கா கிட்ட எப்போ பாரு எரிஞ்சு விழறான்? அவ ஆதியிடம் பி.ஏ-வாக வேலை செஞ்சிட்டு இருக்கும்போது கூட இவ்வளவு திட்டு வாங்கிருக்க மாட்டா. எப்போ இவனை கல்யாணம் பண்ணாளோ, அன்னில இருந்து இவனை நானும் பார்த்துக்கொண்டே தான் இருக்கேன். துர்காவை எப்ப பார்த்தாலும் ஒரு மாதிரி முறைச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான். ஒரு மாதிரியா தான் இருக்கா. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்டா சீக்கிரமா. பாவம் துர்கா. எதுவும் பேசாம, எது திட்டினாலும் சரி, சரின்னு கேட்டுட்டு அமைதியா போறதுனால இவனுக்கு இவ்ளோ லொள்ளு. ஆதிக்கு ஒரு நாளைக்கு என் கிட்ட இருக்கு. அவளுக்கு கேட்கிறது யாரும் இல்லை என்று நினைத்துவிட்டானா ஆதி? நான் பேசிக்கிறேன் டா,” என்று கதிரிடம் சொல்லிக்கொண்டு ஆதியை முறைக்க, ஆதி திரும்பிப் பார்த்து, “என்ன?” என்பது போல தலையாட்ட, “ஒண்ணும் இல்லையே,” என்று விக்கி சொல்ல, கதிர் சிரித்துக் கொண்டு, “உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம்? அவன் உன்னை பார்த்து ‘என்ன’னு கேட்டதுக்கு ‘ஒண்ணும் இல்லை’ன்னு பயந்துட்டுட்டு சொல்ற. நீ போய் தைரியமா எங்க அண்ணன் கிட்ட, ‘துர்காவை ஏன்டா இப்படி திட்டுன’ன்னு கேக்க போறியா? பேசாம வாடா,” என்று விக்கியின் தோல் மேல் கை போட்டு கதிர் விக்கியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே சென்று அனைவரும் அமர, துர்கா தயங்கியபடி ஆதியின் அருகில் அமர்ந்திருந்தாள். அவனிடம் ஒட்டாமல் அவனிடமிருந்து சற்று விலகி அமர்ந்திருக்க, ஆதி துர்காவை மனதில் வருத்தெடுத்துக் கொண்டிருந்தான். “பாரு, இங்கே இத்தனை பேர் இருக்காங்க. ஒரு ஃபேமிலி டிக்காவது என் பக்கத்துல உக்காந்தா என்ன? இவ்வளவு தூரம் தள்ளி உட்கார்ந்து இருக்கா பாரு,” என்று மனதில் நினைத்தவன், “இரு உனக்கு ஒரு நாளைக்கு இருக்கு,” என்று நினைத்துக் கொண்டிருக்க, அருணாச்சலம் அனைவரிடம் பேச, பூமிகாவும் அப்போதுதானே பியூட்டி பார்லர் சென்று இருந்தவள் உள்ளே வர, ஹாலில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும், அருணாசலத்தையும், விசாலாட்சியையும் பார்த்ததும் வேகமாக அவர்கள் இருவரும் ஓடி வந்தவர், “விசு ஆன்ட்டி! எப்படி இருக்கீங்க?” என்று அவரின் அருகில் சென்று அவரை கட்டிக்கொண்டு பேச, “வாடா… பூமி, எப்படி இருக்க? நல்லா இருக்கியா? என்ன பாத்து எவ்வளவு நாளாச்சு? அன்னைக்கு நம்ம அந்த ட்வின் கல்யாணத்தில் பார்த்தோம். அதுக்கப்புறம் இப்பதான் பார்க்கிறோம். எப்படிடா இருக்க?” என்று அவர் கேட்க, “நல்லா இருக்கேன் ஆன்ட்டி. பாருங்க, நான் இப்பதான் பியூட்டி பார்லர் போயிட்டு வந்தேன். அழகா இருக்கேனா?” என்று கேட்க.

“உனக்கு என்னடா ராஜாத்தி? ரொம்ப அழகா இருக்க. ஆனா அத்தை ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே?” என்று கேட்க, “சொல்லுங்க ஆன்ட்டி,” என்று கூற, “என் மருமகளை விட நீ கொஞ்சம் அழகு கம்மிதான்,” என்று அவர் துர்காவை புகழ, துர்காவிற்கு இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு பூமிகாவையும், விசாலாட்சியையும் மாறி மாறி பார்க்க, பூமிகா எதுவும் தன்னை தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்று பயந்து கொண்டே பூமிகாவை பார்த்தால் துர்கா.

விசாலாட்சி துர்கா பூமிகாவை விட அழகு என்று சொன்னதும், “அப்படியா சொன்னிங்க? அப்ப நான் அழகா இல்லையா?” என்று அவரிடம் கோபப்பட்டவள் வேகமாக அவரிடம் இருந்து எழுந்து துர்காவைப் பார்க்க, விசாலாட்சி நிஜமாகவே பூமிகா கோவித்துக் கொண்டால் என்று வேகமாக எழுந்து, “டேய், நான் சும்மா தாண்டா சொன்னேன்,” என்று சொல்ல வர, “நீங்க பேசாதீங்க என்கூட,” என்று சொன்னவள்.

விசாலாட்சியிடம் இருந்து சென்று துர்கா அருகில் சென்றவள், துர்காவை பார்க்க, துர்கா பயந்தவாரே பூமிகாவை பார்க்க, பூமிகா துர்காவை தலையிலிருந்து கால் வரை பார்க்க, துர்காவிற்கு ஏனோ மிகவும் கூச்சமாக இருக்க, குனிந்து கொண்டு நின்றிருந்தால். துர்காவை பூமிகா பார்வையாலேயே அளந்தவள், அவள் அருகில் வர துர்கா மறுண்ட விழிகளில் பூமிகாவை பார்க்க.

“ஆண்ட்டி….” என்று சத்தமாக அழைக்க அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் பூமிகாவையே பார்க்க, அவள் அருகில் வந்த விசாலாட்சி, “சொல்லு டா கண்ணு,” என்று பூமிகாவைப் பார்த்து என்ன சொல்ல போகிறாளோ என்று யோசனையுடனே பார்க்க.

“என்னை விட உங்க மருமகள் இந்த துர்கா அழகா இருக்கான்னு தான சொன்னிங்க?” என்று கேட்க. “அது இல்ல டா.. கண்ணு. நான் என்ன சொன்னேன்னா….” என்று அவர் பேச வர, “உண்மையாவே உங்க மருமகள் அழகா தான் இருக்கா,” என்று கூறியவள் துர்காவைப் பார்த்து, “ஹாய் துர்கா… யூ ஆர் லுக்கிங் ரீயலி பியூட்டிஃபுல்,” என்று கூறியவள் துர்காவை கட்டிக்கொண்டு அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள்.

இப்போதுதான் அனைவருக்கும் உயிரே வந்தது போல இருந்தது. அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, துர்காவும், பூமிகாவும் சீக்கிரமாகவே நன்றாக பேசி பழகிக்கொள்ள, பூமிகா அனைவரிடமும் சொல்லிக்கொண்டு துர்காவை அலைத்துக்கொண்டு உள்ளே சென்றால்.

இவர்கள் இருவரும் சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒரு ஜோடி கண் பொறாமை தீயில் வெந்து கொண்டு இருந்தது.

EPISODE 28

 பூமிகா லட்சுமியை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல அவர்கள் இருவரும் செல்வதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த இரு கண்கள் வேறு யாரும் இல்லை நம்ம கார்த்திக் தாங்க.

 லட்சுமி மேல் அப்படி என்னதான் அவனுக்கு பொறாமையோ…. தெரியலை.லட்சுமி வெளிய வந்தா மட்டும் எல்லார்கிட்டயும் அவ்வளவு நல்லா பேசுற இவ கிட்டயும் எல்லாரும் நல்லா ஒட்டிக்கிறாங்க…

 ஆனா என்கிட்ட மட்டும் எப்பவுமே சரியா அவ பேசுறது இல்ல எல்லார்கிட்டயும் எவ்வளவு கலகலன்னு பேசுற இப்ப பார்த்த இந்த பூமிகா கிட்ட கூட சட்டுனு ஒட்டிக்கிட்டா.

ஆனால் நான் பார்த்தா மட்டும் முகத்தை ஊர்ருனு வெச்சுகிரா… என் உருவம் ஒருவேளை அவளுக்கு அசிங்கமா தெரியுதோ அதனால் தான் என்கிட்ட அவ நெருங்கி பேச மாட்டேங்கிறாளோ கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் கூட என்கிட்ட ஃப்ரெண்ட்லியா இவ்ளோ நல்லா பேசினா ஆனா கல்யாணம் ஆனதுக்கப்புறம் என்கிட்டே அவ சரியாவே முகம் கொடுத்து பேசுவதே இல்லை என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

 கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எப்படிங்க அவ பேசாம இருப்பா நம்ம. ஹீரோ தானே அவளோட பாஸ்!! அவளோட லவ்வர்!! ஆனா இப்ப புருஷன் ஆயிட்டான் புருஷன் ஆனாலும் ஆனான் அந்த பொண்ணு போட்டு இவ்ளோ டார்ச்சர் பண்ணினா லட்சுமி எப்படி இவன்கிட்ட சந்தோஷமா பேசுவா.

முதல்ல கார்த்திக்  லட்சுமி கிட்ட சந்தோசமா பேசினா தானே நம்ம லக்ஷ்மியும் நம்ம ஹீரோ கிட்ட பேசுவாங்க இதெல்லாம் நம்ம ஹீரோ சார்க்கு தெரியாது இவர் பண்ற தப்பு எல்லாம் அவருக்கு கண்ணுக்கு தெரிகிறதே இல்ல ஆனா நம்ம லக்ஷ்மி மட்டும் எப்ப பார்த்தாலும் குறை சொல்லிட்டு இருக்காரு இல்லையா ஃபிரண்ட்ஸ்.

 பூமிகாவும் லட்சுமியும் உள்ளே செல்லும் வரை அமைதியாக இருந்த அருணாச்சலம். முதல் இருவரும் உள்ளே செல்வதை உறுதி செய்து கொண்ட பின் வெங்கடாஜலத்தை பார்த்து ஏன் வெங்கடாச்சலம் நம்ம பிரண்டு வேத்தாசலம் பொண்ணு சங்கவியத்தானே உன் பையன் கார்த்திக் இருக்கு கல்யாணம் செய்து வைக்கிறதா இருந்துச்சு.

அப்புறம் எப்படி திடீர்னு கடைசி நேரத்துல கல்யாணம் பொண்ணு மாறிச்சு எதுவும் பிரச்சனையா அவனுக்கு நான் போன் பண்ணி கேட்டா அவனும் எதுவும் பேசுறதா இல்ல என்கிட்ட நேரில் வந்து எல்லாம் பேசுகிறேன் என்று சொல்லி போன வச்சுட்டான்டா எதுவும் பிரச்சனையே அந்த பொண்ணுனால இல்ல உங்களால எதுவும் பிரச்சனையா என்று கேட்க.

 அதுவரை சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த அனைவரும் சங்கவியின் பெயரை கேட்டதும் அனைவரின் முகமும் மாறிவிட அதை கவனித்த அருணாச்சலம் ஏண்டா நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா ஏன் உங்க எல்லாரும் முகமும் சட்டுன்னு இப்படி மாறிடுச்சு அதுவும் சங்கவி பெயரை சொன்னதும் என்று கேட்க.

 ஏன் கேக்குற அருணாச்சலம் நீ மட்டும் அங்க கல்யாணத்தன்று இருந்து இருந்தால் அந்த வேத்தாசலத்தை நீயே நாக்க புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்ப.

அவன் என்னோட பிரண்டு என்று சொல்லி உரிமையாதானடா அவன் பொண்ணு என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனு கேட்ட அப்போ  அவன் சொன்னதும் நான் சரின்னு சொல்லி சம்மதம்  சொன்னேன்.

ஆனா அவனோட நெனப்பே வேற மாதிரி இருந்திருக்கு என்று கூறி கல்யாணத்து அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் வெங்கடாசலம் கூற இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருணாச்சலத்திற்கு  வேதாச்சலத்தின் மீது கோபமே வந்துவிட்டது.

 என்னடா சொல்ற வேதாச்சலம் இப்படிப்பட்டவனா இத நான் எதிர்பார்க்கவே இல்லையே அவனும் இப்படி எல்லாம் நடந்துக்குவான் என்று நான் நினைக்கவே இல்ல அந்த பொண்ணு அதுக்காக அவனை மாதிரியே இருக்கணும் என்னடா இதெல்லாம் நம்ம வேதாச்சலம் பொண்டாட்டி பார்க்கும்போது இவங்க ரெண்டு பேரும்  இப்படித்தான் இப்படி இருக்காங்களோ தெரியல என்று ஆதங்கப்பட்டார் அருணாச்சலம்.

 அண்ணா நீங்க ரொம்ப வருத்தப்படாதீங்க அண்ணா அந்த சங்கவிய கல்யாணம் பண்ணி இருந்தா கூட இந்நேரம் அவ என்ன பண்ணி தினமும் ஏதாவது பிரச்சனையை எடுத்துட்டு வந்து இருப்பாளோ தெரியலை.

ஆனா என் லட்சுமி அப்படிப்பட்ட பெண்ணே கிடையாது ஏன்னா…..கார்த்திக்க பத்தி நல்லாவே அவளுக்கு தெரியும்.

 மனசுல அவ ரொம்ப மகாராணி அண்ணா என் பையனை எப்படி பார்த்துக்கிறா தெரியுமா என்ற விசாலாட்சி. அத்தனை பேருக்கும் முன்னாடி நாங்க  தல குனிஞ்சு நிக்கிறது பார்த்து தாங்கிக்க முடியாமல் நான் என் பையன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா என்று கேட்டதும் சரின்னு சொல்லி என் பையனை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா என்று விசாலாட்க்ஷி கூறினார் .

 ஆமா விசாலாட்சி நானும் அந்த பொண்ண பார்த்ததும் அப்படித்தான் நினைச்சேன் ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது.

 ரொம்ப அமைதியா இருக்க அந்த பொண்ணு பார்க்கிறதுக்கு எல்லாருக்கும் நல்ல மரியாதை கொடுக்கிற எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருச்சு என்றவர் கார்த்திக்கிடம் திரும்பி பார்த்து ஒரு விஷயம் நம்மளுக்கு தட்டி போய் இன்னொரு விஷயம் கிடைக்குது அப்படின்னா அது கண்டிப்பா நம்மளுக்கு ஏற்றதாக தான் அந்த ஆண்டவன் கொடுப்பாங்க என்னோட நம்பிக்கை.

உனக்கு அந்த சங்கவி வேண்டாம் என ஆனதுக்கப்புறம் அப்பவே உனக்கு அந்த லட்சுமி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க அப்படின்னா அந்த லட்சுமி தான் உன் வாழ்க்கையில முக்கியமான இடத்தில இருக்க போறேன்னு அர்த்தம்.

அதனால எந்த காரணத்தை கொண்டு அந்த பெண்ணை நீ மிஸ் பண்ணிடாத என்ன தான் உனக்கு பிடிச்சோ பிடிக்காமலையோ நீ கல்யாணமே பண்ணி இருந்தாலும் இந்த லட்சுமி தான் வாழ்க்கை முழுக்க வரப்போறா அவளை நீ நல்லா பாத்துக்கணும் என்று கார்த்திக்கிடம் அருணாச்சலம் கூறினார்.

அவர் கூறியது எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த கார்த்திக் சரி அங்கிள் நான் பார்த்துக்கிறேன் என்று மட்டும் சொன்elaarum

சரி பா… நீ சரின்னு சொன்ன வரைக்கும் சந்தோசமே சரி நீங்க எல்லாம் ரொம்ப களைப்பா இருப்பிங்க போய் ரூம்ல ரெஸ்ட் எடுங்க மதியத்திற்கு பிறகு உங்களுக்குனு தனியா ரிசர்ட் ஏற்கனவே ரெடி போனோம் வெச்சிருக்கு நீங்க அங்க போய் தங்கிக்கலாம் என்று கூற.

கதிர் அங்கிள் நாங்க இப்பவே அங்க போறோம் அங்கிள் இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப கிளம்பி அங்க போறதுக்கு இப்பவே போன அங்கேயே ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா ரெடி ஆகி நாங்க நேர ரிசப்ஸ்ன் வந்திருவோம் என்று கூற.

சரி கதிர் நீ சொல்றதும் சரி தான் எதற்கு வேண்டாத அலைச்சல் என்றவர் நான் உங்க கூட பூமிகாவை அனுப்புறேன் அவளோட பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அதே ரிசார்ட்யில் தான் தங்கி இருகாங்க என்று கூற.

வெங்கடாச்சலம் கதிரிடம், டேய் கதிர் என்று அழைத்தார் என்ன அப்பா சொல்லுங்க.. என்றான்.

நாம போற ரிசார்ட் எங்க இருக்குனு தெரிஞ்சுட்டு லட்சுமியுடைய அம்மா அப்பா வை நேர அங்கேயே வர சொல்லிரு என்று கொரோ சரி அப்பா நான் சொல்லிறேன்னு என்று கூறி போனை எடுத்துக்கொண்டு வெளியே வர அவன் பின்னாலேயே வந்த விக்கி அப்பறோம் டா மாப்பிள்ளை யாருக்கு போன் பண்ண தனியா வந்திங்க என்று கேட்க.

அப்பா உன் முன்னாடி தானே சொன்னாரு லக்ஷு வோட அம்மா அப்பா வை நேர ரிசர்ட் வர சொல்லி எமது கால் பண்ண சொன்னாரே என்று கூற.

ஓஹோ… அப்போ நீங்க லக்ஷு அம்மா கு தான் கால் பண்ண வந்திருக்கீங்க அப்படித்தானே மச்சான் என்று நக்கல் அடிக்க.

விக்கியை முறைத்த கதிர் என்கிட்ட லக்ஷு அம்மா நம்பர் இல்லை என்றான். அதனால் என்ன டா உன் ஆளு அவங்க கூட தானே இருக்கா அவளுக்கு போன் பண்ணி கேட்கலாமே என்றான்…விக்கி..

எனக்கு தெரியும் நீ பேசாம போறியா முதல்ல இங்க இருந்து என்று விக்கியை தூரத்த. எல்லாம் என் நேரம் டா அங்க என்ன டான்னா ஒருத்தன் கல்யாணம் ஆகியும் பொண்டாட்டி நினைப்பே இல்லாம சுத்துறான்.

இங்க இவன் என்ன டான்னா அந்த பொண்ண நினைச்சுட்டே சுத்திட்டு இருக்கான் என்று புலம்பியவன். சரி டா மாப்பிளை நீங்க மெதுவா வாங்க நாங்க அப்டியே கிளம்பிறோம் என்று கூற.

விக்கியின் சட்டை காலறை பிடித்து இழுத்து தன் கை வளைவுக்குல் கொண்டு வந்து நிறுத்தியவன். நீ எங்கயும் போக வேணாம் அப்பறோம் நீ மூஞ்சிய தூக்கி வெச்சு இருப்ப ஒரு நிமிஷம் நில்லு என்ற கதிர் தன் போனை எடுத்து கீர்த்திகாவிற்கு கால் செய்தான் .

 இங்கே கீர்த்திகா அவள் அம்மாவிடம் அப்பாவிடமும் வசவு வாங்கிக்கொண்டு  முகத்தை உர்….. என்று வைத்துக்கொண்டு அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு  வந்து கொண்டிருந்தால்.

 அந்த ராஸ்கல் என்ன வம்பு பண்ணதுக்கு நான் என்ன பண்ணுவேன் ஆனா இப்படி பேசினா நான் கேட்டுட்டு பேசாம இருக்கணுமா எங்க அம்மா சொல்றாங்க இதெல்லாம் எந்த ஊரு நியாயமா இருக்கு என்று மனதுக்குள்ளயே கதிரை வறுத்து எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்

அப்போது சரியாக அவள் போன் பண்ணி அடிக்கவும் யார் என்று எடுத்துப் பார்க்க கதிர் தான் அழைத்திருந்தான்.

 போனை பார்த்தவுடன் திரும்பி அவளை அம்மாவை பார்க்க என்னடி என்னைய பார்த்துட்டு இருக்க யார் போன் பண்றது என்று கேட்க கதிர் தான் போன் பண்ணி இருக்கான் என்று கூற பாத்தியா உன்கிட்ட அந்த தம்பியை மரியாதையா பேசினா அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் என்கிட்டயே கதிர் தான்னு அந்த பயணம் மரியாதை இல்லாம சொல்றியா   ஒழுங்கா மாமானு கூப்பிடு மாட்டியா இப்ப இருந்தே மரியாதை கொடுத்து பழகு  அவங்க வீட்டு ஆளுக  முன்னாடியும் இப்படி மரியாதை இல்லாம கூப்பிட்டா  அவங்க எல்லாம் உன்ன பத்தி என்ன நினைப்பாங்க என்று அவள் அம்மா மறுபடியும் திட்ட வேறு வழி இல்லாமல் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்துவள் ஹலோ என்று கூற கதிர் அந்த அமைதியாக  இருந்தான்.

 மறுபடியும் கதிர் எதுவும் பேசாமல் இருக்க கீர்த்திகா மறுபடியும் ஹலோ என்றால். அமைதியாகவே நின்று இருக்க வேறு வழியே இல்லாமல் அவள் அம்மா வேறு அருகில் இருப்பதால் இவனை திட்ட வேறு முடியாது என்று மனதில்  நினைத்தவள் ஹலோ மாமா……சொல்லுங்க எதுக்கு போன் பண்ணிட்டு எதுவுமே பேசாம இருக்கீங்க என்று கீர்த்திகா கேட்டால்.

 முதல்முறையாக கீர்த்திகா கதிரை மாமா என்று அழைத்ததும் அவள் மேல் கோபமாக இருந்த கதிருக்கு அவள் அழைத்து அந்த ஒற்றைச் சொல்லில் கோபம் இல்லம் காற்றோடு பறந்து போனது.

 இதுவரை விக்கியிடமும்  அனைவரிடமும் முகத்தை உர்…..என்று வைத்திருந்தவன் இவள் மாமா என்று அழைத்ததும் கதிரின் முகம் பிரகாசமாவதை பார்த்த விக்கி அவனை ஆச்சரியமாக பார்த்தான்.

 கதிர் உடனே ஹலோ என்றான் இந்த பக்கம் கீர்த்திகாவிற்கு அவன் குரல் கேட்டதும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

கீர்த்திகா அமைதியாக இருக்க கதிர் ஏய்… கீ… என்றான் அவள் ம்ம்ம்… என்று மட்டும் கூற.

என்ன கீ…எதுவுமே பேச மாட்டேங்குற என்றான். நான் என்ன பேசுறது நீங்க தானே கூப்பிட்டீங்க என்னனு சொல்லுங்க என்றால்.

இப்போ கொஞ்சம் முன்னாடி எண்னை என்னா சொல்லி கூப்பிட்டே நீ… என்றான். அவன் கேட்டது புரிந்தது அவளுக்கு ஆனால் கீர்த்தியின் அம்மா அருகில் இருந்ததால் எதுவும் பேசாமல் ஒன்னும் இல்லையே நீங்க எதுக்கு கால் பண்ணுணிங்கனு சொல்லுங்க முதல்ல என்றால்.

ஏய் கீ… ஒரு லவர் கிட்ட பேசுற மாரியா நீ பேசுற என்னவோ பிடிக்காதவன் கிட்ட பேசுற மாறி பேசுற. நீ என்கிட்ட லவ் ஓகே சொன்ன அப்போ நான் எத்தனை தடவை என்னை மாமான்னு கூப்பிட சொன்ன அப்போ கூப்பிடாம இப்போ அத்தை சொன்னதும் கூப்பிடற பாத்தியா என்றான்.

அதற்கு கீர்த்திகா வேற வழி இல்லாமல் தான் சொன்னேன் என்றால் அவள் அப்படி சொன்னதும் கதிருக்கு புஸ்… என்று ஆனது.

இது எப்டியோ நீ என்னை இனிமேல் மாமான்னு சொல்லி தான் கூப்பிடனும் சரியா என்றான் கதிர்.

அதெல்லாம் முடியாது என்றால் கீர்த்தி என்ன முடியாதா சரி பாக்குறேன் நீ எப்படி கூப்புடாம இருக்கிறேன்னு என்று சொன்னவன் சரி நான் இப்போ  எதுக்கு போன் பன்னினேனா என்று அவன் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல வர அதற்குள் கீர்த்திகா முதல்ல அதை சொல்லுங்க எதுக்கு போன் பண்ணுணிங்க என்றால் கடுப்பாக.

நீ இப்படி கடுப்பா பேசினா நான் எப்படி சொல்றது நீ என்கிட்ட மாமா எதுக்காக போன் பண்ணுணிங்கனு கேட்ட தான் நான் சொல்வேன் என்றான் கதிர்.

அவன் கூறியதை கேட்டு நீ சொன்ன சொல்லு சொல்லாட்டி போய்யா…. என்றவள் போனை கட் செய்தவள். இவனுக்கு லவ் ஓகே சொன்னது தப்பா போயிருச்சு கொஞ்ச நாள். இவனை சுதல்ல விட்டிருக்கணும் என்று முனுமுன்னுத்தால்.

அவள் அருகில் இருந்த வடிவு என்ன டி ஆச்சு அந்த தம்பி கூட எப்போ பாரு சண்டை போட்டுட்டே இருக்க என்று கேட்க அதெல்லாம் ஒன்னுமில்லய் நீ பேசாம இரு மா… என்றால்.

சரி அந்த தம்பி எதுக்கு போன் பன்னிச்சு என்று வடிவு கேட்க எனக்கு எப்படி தெரியும் அவன் தான் எதுவும் என்கிட்டே சொல்லலை என்று கீர்த்தி கூற.

ஏய் அவன் இவன்னு சொல்லாம மாமான்னு சொல்லு டி அறிவு கெட்டவளே என்று கீர்த்தியின் தலையிலேயே ஒரு அடி வைத்தார்.

ஷ்…. அம்மா இப்போ எதுக்கு அடிக்குற என்று தலையை தேய்த்து வீட்டுக்கொண்டே அவரை முறைக்க. என்னை முறைக்காத முதல்ல அந்த தம்பிக்கு போனை போடு எதுவும் முக்கியமா சொல்ல கூப்பிடிருக்க போகுது என்று கூற.

ம்ம்ம்… என்று கூறி கால் செய்ய போனை ஸ்பீக்கரில் போடு என்றார் வடிவு அவரை முறைத்துக்கொண்டே கீர்த்தி கதிருக்கு கால் செய்ய.

அந்த பக்கம் என்ன இவ சொல்ல முடியாது போய்யா… சொல்லி போனை வெச்சுட்டாலே என்று யோசித்துகொண்டிருக்க. அவன் அருகில் நின்றிருந்த விக்கி என்ன மாப்பிள்ளை என் தங்கச்சி ஏதோ கழுவி ஊத்திருக்கும் போலவே உன் முகம் கொஞ்சம் முன்னாடி இருந்த பிரகாசம் இப்போ காணாமல் போயிருச்சே… என்று கிண்டல் அடிக்க.

அவனை முறைத்த கதிர் உனக்கு என்ன டா நீ சிங்கள் ஆஹ்… சுத்திட்டு இருக்க என்னை மாறி கமிட் ஆகி பாரு இவளுங்க கிட்ட ஆசையா ஒரு வார்த்தை பேச சொல்லி கேட்குறதுக்குள்ள உயிரே.. போய்விடும் என்றான் கதிர்.

தன்னை சிங்கள் என்று கிண்டல் செய்த கதிரை பார்த்து டேய் யாரை பார்த்து சிங்கள்ன்னு சொன்னே என்று விக்கி பொங்கி எழ… அவனை ஆச்சர்யமாக பார்த்த கதிர் என்ன டா சொல்றே… எனக்கு தெரியாம நீ எப்போ கமிட் ஆனே என்று கேட்க.

ஐயோ…அவசரத்துல உளறி கொட்டிட்டேனே இப்போ எப்படி சமாளிக்கிறது என்று விக்கி யோசித்துக கொண்டிருக்க அப்போது கதிரின் போன் அடிக்க விக்கியிடம் பேசுவதை விட்டுவிட்டு போனை பார்க்க கீர்த்தி தான் கால் செய்திருந்தால்.

சிரித்த முகமாக போனை எடுத்தவன் ஹலோ… டார்லி…. என்று கூப்பிட வர கீர்த்தி அதற்குள் ஹலோ மாமா… நான் கீர்த்திகா பேசுறேன் அம்மா உங்க கிட்ட பேசணும்னு சொன்னாங்க போன் ஸ்பீக்கரில் தான் இருக்கு நீங்க பேசுங்க என்று அவசர அவசரமாக எங்கே இவன் எதுவும் உளறி வைத்து விடுவானோ என்று கீர்த்திகா பேச.

கீர்த்திகாவை டார்லிங் என்று சொல்ல வந்ததவன். ஹலோ அத்தை சொல்லுங்க அத்தை என்றான் கதிர் நல்லவன் போல.

அவன் அருகில் நின்றிருந்த விக்கி அட சாமி… கொஞ்ச நேரதுக்குள்ள எவ்ளோ எக்ஸ்பிரஷன் மாத்துறான் யா… இவன் என்று கதிரையே பார்த்தவன். எப்படியோ என் லவ் மேட்டரய் மறந்துட்டான் என்று சந்தோச பட்டாணி விக்கி.

போனில் வடிவு சொல்லுங்க தம்பி எதுக்கோ கூப்பிட்டிருந்திங்க அதுக்குள்ள என் பொண்ணு போனை வெச்சுட்டா அவளுக்கு பொறுமைங்கிறதே கிடையாது. இவளை கட்டிக்க போறவன் இவளை கட்டிக்கிட்டு என்ன செய்வானோ… என்று புலம்ப.

கதிர் சிரித்துக்கொண்டே விடுங்க அத்தை சின்ன பொண்ணு தானே போக போக சரி ஆகிரும் விடுங்க அத்தை என்று கதிர் கூற.

ஆமாமா தம்பி சரி ஆகிரும்னு தான் நினைக்குறேன் என்றவர் ஏன் தம்பி கூப்பிட்டீங்க என்று கேட்க. அத்தை நாங்க இப்போ ஒரு ரிசார்ட்ற்கு போறோம் அத்தை அங்கயே உங்களையும் வர சொல்லி அம்மா உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க அதுக்கு தான் கால் பன்னினேன் என்று கூற.

சரிங்க தம்பி எங்க வரணும்னு நீங்க கீர்த்திகாகிட்ட சொல்லிருங்க என்று கீர்த்திகாவை பார்க்க நீயே கேட்க வேண்டியது தானே அவன்கிட்ட எதுக்கு இப்போ என்னை கோர்த்து விடுறே மா.. நீ… என்று புலம்ப ஏய் ஒழுங்கா மரியாத கொடுத்து பேசு கொன்றுவேன் இல்லைன்னா என்று அவளை மிரட்ட.

வடிவை முறைத்துக் கொண்டே ஹலோ மாமா அட்ரஸ் சொல்லுங்க மாமா நான் நோட் பண்ணிக்கிறேன் என்றால் பணிவாக.

அப்படி வாடி… என் செல்ல குட்டி வழிக்கு…என்று நினைத்தவன். என்ன கீர்த்திகா நீ இப்போ இருக்குற காலத்துல இன்னும் அட்ரஸ் கேட்டுட்டு இருக்க என்னமா நீ படிக்கிற இது கூட தெரியாம என்று அவளை அவள் அம்மாவிடம் வேண்டுமென்றே மாட்டி விட.

வடிவு இவளை இடித்து என்ன டி தம்பி இப்படி சொல்ற அளவுக்கு அறிவில்லாம இருக்கியா நீ.. என்று அவளை கட்டிந்து கொண்டார் வடிவு.

அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டே ஹலோ மாமா… என்றால் பல்லை கடித்துக் கொண்டே..அவள் பேசியதிலேயே தன் மீது சரி கடுப்பில் இருப்பதை புரிந்து கொண்டவன் சிரித்துக்கொண்டே சரி மா நான் உனக்கு லொகேஷன் வாட்ஸ்ஆப்பில் ஷேர் பண்றேன் நீங்க டிரைவர் கிட்ட சொல்லி நேர அங்க வந்திருங்க நாம அங்க மீட் பண்ணலாம் என்று கூற ஓகே மாமா என்று கடுப்புடன் போனை கட் செய்தால்.

போனை வைத்துவிட்டு கதிர் வாடா மாப்பிள்ளை உள்ள போலாம் என்று விக்கியின் தோல் மெல்ல கை போட்டு அவனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லவும் அனைவரும் கிளம்பவும் சரியாக இருக்க.

பூமிகாவும் இவர்களுடன் ஒன்றாக ரிசார்ட்ற்கு கிளம்பினால்.

EPISODE 29

பூமிகாவின் கல்யாண வரவேற்புக்காக அவளது வீட்டிற்கு வந்த ஆதியின் குடும்பத்தினர், பூமிகாவுடன் அங்கிருந்து கிளம்பி அவளது தந்தை ஏற்பாடு செய்திருந்த ரிசார்ட்டிற்குச் சென்றனர்.

அவர்களுடன் பூமிகாவும் செல்வதாகவும், அங்கே சென்று தனது தோழிகளையும் அப்படியே பார்த்துவிட்டு வருவதாகவும் அவள் அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பூமிகா கிளம்புவதாகக் கூறவும், அவளது அப்பா அருணாச்சலம், “சரிடா, பத்திரமா போயிட்டு சீக்கிரமா வந்துரு. உன் ஃபிரெண்ட்ஸைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு அவங்க கூட அங்கேயே இருந்திராத. உனக்குத் தான் இன்னைக்கு சாயங்காலம் கல்யாண வரவேற்பு இருக்கு, ஞாபகத்துல வச்சுக்கோ,” என்று அருணாச்சலம் கூற.

“ஒண்ணும் பிரச்சினை இல்லைப்பா. நான் மேக்கப் பண்றவங்கள நேரா ரிசார்ட்டுக்கே வர சொல்லிட்டேன். அவங்க நேரமே அங்க வந்துடுவாங்க. நாங்க எல்லாருமே அங்கிருந்து கிளம்பி ரெடியாகி உன்னை மண்டபத்துக்கு வந்துருவோம்ப்பா. நீங்க கவலைப்படாதீங்க. நான் பத்திரமா சீக்கிரமா வந்துருவேன்,” என்று கூற, “சரிம்மா, என்னமோ பண்ணு, ஆனால் பத்திரமா சரியா,” என்று கூறியவர்.

திரும்பி துர்காவிடம், “அம்மா துர்கா, நீ கொஞ்சம் இவளைப் பார்த்துக்கொள் அம்மா. இவ ஃபிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்ததும் அரட்டை அடிக்க உட்கார்ந்துக்குவா. நேரம் போறது இவளுக்குத் தெரியாது. சீக்கிரமா ரெடியாகி ரிசப்ஷனுக்கு வரணும் இல்லையா? இவளே லேட்டா வந்தா அப்புறம் நல்லா இருக்காதுமா. நீ கொஞ்சம் அவ கூட இருந்து பார்த்துக்கோ,” என்று கூற, “சரிங்க, நான் பார்த்துக்கிறேன்,” என்று துர்கா கூற, “என்னம்மா? அங்கிருந்து கூப்பிடுற? என்னை ‘அப்பா’ என்று கூப்பிடுமா?” என்று சொல்ல, அவள் சிரித்துக்கொண்டே “சரிங்க அப்பா, நான் பார்த்துக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

சிறிது நேரத்தில் அனைவரும் ரிசார்ட் வந்து சேர, அவர்கள் எல்லாம் காரில் இருந்து இறங்கவும், சரியாக கீர்த்திகாவும் அவள் அம்மா, அப்பாவும் வந்த காரும் ரிசார்ட்டிற்கு வர சரியாக இருந்தது.

கீர்த்திகாவின் கார் வருவதைப் பார்த்த கதிர், காரை விட்டு கீர்த்திகா இறங்குவதைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்க, அம்மாவும் அப்பாவும் முதலில் இறங்கிவிட, அவர்கள் பின்னாலேயே கீர்த்திகா இறங்கி வந்தாள்.

கீர்த்திகா இறங்கியதும் துர்காவைப் பார்த்ததும் “அக்கா” என்று ஓடிவந்து அவளை கட்டிக்கொள்ள, துர்காவும் சிரித்துக்கொண்டே கீர்த்திகாவைப் பார்த்து, “இன்னும் சின்ன பிள்ளை மாதிரி இப்படி ஓடி வரியா? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இத்தனை பேர் இருக்காங்க இல்ல? மெதுவா நடந்து வாடி,” என்று அவளைப் பார்த்துக் கூற.

“இங்க யாரு இருக்காங்க? நம்ம குடும்பத்து ஆளுக மட்டும் தானே இருக்காங்க? நீ எதுக்கு இப்படி எப்ப பார்த்தாலும் என்னை அம்மா மாதிரியே திட்டிட்டு இருக்க? இனிமே இப்படி திட்டினேன்னா உன் கூட பேசவே மாட்டேன், போ,” என்று கீர்த்திகா சிறு பிள்ளை போல துர்காவிடம் கோபித்துக்கொள்ள.

“அச்சோ… கோபித்துக்கொண்டாயா? சரி சரி டி. இனிமே நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன். உன் இஷ்டப்படியே இரு. சரியா? எனக்கு என்ன, அப்புறம் அம்மா எதுவும் சொன்னா என்ன, சொல்ல கூடாது,” என்று துர்கா கூறினாள்.

அவர்கள் இருவரும் செல்லமாக சண்டையிட்டுக் கொண்டும் கட்டிப்பிடித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பூமிகாவிற்கு ஏக்கமாக இருந்தது. தன்னுடன் பிறந்தவர்கள் என்று யாருமே இல்லாமல் போனது நினைத்து இப்போதுதான் முதல்முறையாக அவள் வருந்தினாள்.

துர்காவும் கீர்த்திகாவும் பேசிக் கொண்டிருக்க, விசாலாட்சி கீர்த்திகாவிடம் வந்தவர், “என்னடா கண்ணு? இதிலிருந்து உன் அக்கா கிட்ட மட்டுமே பேசிட்டு இருக்க? இங்க ஒரு அத்தை உனக்காக இருக்கேன்னு நீ பார்க்கவே இல்லையே,” என்று விசாலாட்சி கூற, “ஐயோ அத்தை, உங்களை நான் எப்படி பார்க்காமல் போயிடுவேன்? வந்ததும் அக்காவை பார்த்த உடனே அங்கே பேசிட்டு இருந்தேன். உங்களை பார்க்காமல் நான் போவேனா?” என்று கூறிக்கொண்டு திரும்பி அவரையும் சேர்த்து கட்டிப்பிடித்துக்கொண்டு பேச, அதை பார்த்து வடிவு, “ஏய்….கீர்த்திகா…. என்ன பண்ணிட்டு இருக்க? முதல்ல அவங்க மேல இருந்து கையை எடு. பெரியவங்கன்னு கொஞ்சமாவது மரியாதை இருக்கா பாரு,” என்று கூற.

“விடுங்க சம்பந்தி. சின்ன பொண்ணு தானே அவள்? எதார்த்தமா எல்லார்கிட்டயும் பழகிட்டு இருக்கா. நீங்க ஏன் அவளை ஏதுன்னு சொல்லிட்டே இருக்கீங்க? பரவாயில்லை, அவளும் என் பொண்ணு மாதிரி தானே,” என்று கூறியவர், “நீ வாடா. அவங்க ஏதாவது சொல்லிட்டு தான் இருப்பாங்க. நம்ம போலாமா?” என்று கூறி, துர்காவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, வடிவையும் வர சொல்லிவிட்டு அங்கிருந்து நகர.

விசாலாட்சி சந்தோஷமாக துர்காவிடமும் இருப்பதைக் பார்த்த வெங்கடாசலம், “உங்க அம்மாவுக்குப் பொண்ணு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருந்தாடா. நீங்க ரெண்டு பேரும் பையனா பிறந்துட்டீங்கன்னு சொல்லிட்டு. அதுக்காகவே துர்காவும், கீர்த்திகாவும் அவளுக்கு கிடைச்சிருக்காங்க போல. பாரு, எவ்வளவு சந்தோஷமா நம்மள எல்லாம் மறந்துட்டு அவங்க மூணு பேரும் போறத,” என்று ஆதியிடமும் கதிரிடமும் கூறி சிரிக்க, “ஆமாம்” என்பது போல இருவரும் தலையை ஆட்டினர்.

அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்த விசாலாட்சி நேராக பூமிகாவிடம் சென்றவர்.

“கீர்த்திகாவை எப்படி துர்கா எனக்கு மருமகளோ, அதே மாதிரி இவளும் என்னோட மருமகள்,” என்று கூற, “என்ன ஆண்ட்டி? சொல்லவே இல்லை நீங்க. கதிருக்கு பார்த்திருக்கப் பொண்ணா?” என்று கேட்டால் பூமிகா.

அதை கேட்டதும் கதிருக்கு மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல சந்தோஷத்தில் மிதந்தான். அவன் அருகில் இருந்த விக்கி கதிரின் கையைப் பிடித்து இழுத்தவன்.

“டேய், வாயை மூடுடா.. எதுக்கு இப்போ இப்படி ரொம்ப சந்தோஷமா இருக்க மாறி முகத்தை வெச்சிருக்க? நீயே உன்னோட லவ்வ காட்டி கொடுத்திருவ போல இருக்கே,” என்று கதிரின் காதில் கூற, அப்போதுதான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று உரைத்தது கதிருக்கு. உடனே எதையும் காட்டிக்கொள்ளாதவன் போல முகத்தை மாற்றிக்கொள்ள, அதை பார்த்த விக்கி, “ஏய் அப்பா… என்ன டா… இவ்ளோ சீக்கிரம் எக்ஸ்பிரஷன் மாத்துற? நல்லா நடிக்கிற டா நீ,” என்றான் விக்கி.

பூமிகா கூறியதை கேட்ட விசாலாட்சி, “அப்படி இல்ல டா… கீர்த்திகா துர்காவோட தங்கச்சி. அந்த முறையில் சொன்னேன் டா. இவளும் எனக்கு மருமகள் தான்னு சொன்னேன்,” என்றார்.

“அதனால் என்ன ஆண்ட்டி? பேசாம கதிருக்கும் இவங்களையே கல்யாணம் பண்ணி வெச்சிருங்களேன். அக்காவும் தங்கையும் ஒரே வீட்டில் இருந்த மாதிரியும் ஆச்சு, அண்ணாவையும் தம்பியையும் பிரிக்காமையும் இருப்பங்களே,” என்று கண்ணடித்து பூமிகா கூற.

“அதெல்லாம் இல்ல டா கண்ணு. ஏற்கனவே கல்யாணம் பண்ணின வீட்ல மறுபடியும் பொண்ணு எடுக்க மாட்டேன். துர்காவின் வீட்டில் திரும்ப பெண் எடுக்க மாட்டேன் டா கண்ணு,” என்றார்.

இதை கேட்டதும் கீர்த்திகா அதிர்ச்சியாகி நிற்க, அவளை விட அதிர்ச்சியானது நம் கதிர் தான். விசாலாட்சியிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

விசாலாட்சி அப்படி கூறவும், “ஏன் ஆண்ட்டி அப்படி சொல்றீங்க?” என்று பூமிகா கேட்க. “அது வந்துமா…. எனக்கு…என்று விசாலாட்சி ஏதோ கூற வர, உடனே வெங்கடாசலம், “விசாலாட்சி, வந்த இடத்துல என்ன வளவளன்னு பேச்சு? முதல்ல எல்லாரும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். பூமிகாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். அவளுக்கு சாயங்காலம் நேரமே இருக்காது,” என்று அவர் அதட்ட. “சரிங்க, நான் சும்மா அப்படியே பேசிட்டு இருந்துட்டேன்,” என்றவர், “சரி வாங்க போகலாம்,” என்று அனைவரையும் அழைத்துவிட்டு துர்கா, கீர்த்திகாவுடன் செல்ல.

வெங்கடாசலம் அவசரமாக விசாலாட்சி ஏதோ கூற வருவதை தடுத்ததை பார்த்த ஆதி, இவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. அதனால் தான் அம்மா ஏதோ பூமிகாவிடம் சொல்ல வரும்போது அப்பா அதை வேண்டாம் என்பதற்காகவே அம்மாவை திசை திருப்பி இருக்கிறார் என்று புரிந்துகொண்ட ஆதி, இது என்ன என்று சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

கதிரின் மனதில் ஏதோ பாரமாக இருப்பது போல உணர, எதுவும் பேசாமல் அவர்கள் பின்னால் போனான். இதே நிலையில் தான் கீர்த்திகாவும் இருந்தால்.

வெங்கடாசலம் விசாலாட்சிக்கு ஒரு அறை, கீர்த்திகா அவள் அம்மா அப்பா உடனும் தங்கும் அறையை காட்டிவிட்டு, அவளை தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து, அவள் அறைக்கு பக்கத்திலேயே கதிர், விக்கி இருவருக்கும் ஒரு அறையை காட்டி தங்க வைத்துவிட்டு, ஆதி, துர்காவிற்கு என்று தனி அறையை காட்டி, அவர்களுடன் வந்த பூமிகா துர்காவுடன் நன்றாக அதற்குள் பழகிவிட, அவள் தங்கையாக கீர்த்திகாவுடனும் நன்றாக மிங்கில் ஆகி விட்டால் பூமி.

துர்காவையும் கீர்த்திகாவையும் தன் தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு வருவதாக கூறி அவர்கள் இருவரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு பூமிகா அவள் தோழிகளைப் பார்ப்பதற்காக கிளம்புவதாக கூறிவிட்டு செல்ல போக, அப்போது அருணாச்சலம் பூமிகாவிற்கு அழைத்திருந்தார்.

போனை அட்டென்ட் செய்தவள், அவர் கூறிய விபரங்களை கேட்டுவிட்டு திரும்பி துர்காவைப் பார்க்க.

“என்ன பூமி? ஏன் என்னை இப்படி பாக்குற?” என்று கேட்டால் துர்கா. “உங்க அப்பா கூட போன்ல ஏதோ பேசலையே? ஏன் எதுவும் ப்ராப்ளமா?” என்று கேட்க, பூமி அதற்கு “ஆமாம்” என்பது போல தலையாட்ட, உடனே கீர்த்திகா அவளிடம் வந்தவள், “அக்கா, என்ன ப்ராப்ளம் என்று சொல்லுங்க,” என்று கேட்டால்.

“ப்ராப்ளம் வரது என்னமோ உண்மைதான். ஆனால் எனக்கு இல்லை, உனக்கு தான்,” என்று துர்காவைப் பார்த்து பூமிகா கூற.

“என்ன சொல்ற பூமி? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு. எனக்கு புரியல. எனக்கு என்ன ப்ராப்ளம் வரப்போகுது? அதுவும் இங்க.. இப்பதான் நான் இந்த இடத்துக்கு முதல் முறையாக வந்து இருக்கேன்,” என்று துர்கா கூற.

“அப்பா போன் பண்ணி சொன்னாரு, அந்த சங்கவியும் அவளோட அம்மா, அப்பாவும் இங்கதான் வந்துட்டு இருக்காங்கன்னு சொல்லிட்டு. உங்க நேரா எங்க வீட்டுக்கு போறதா தான் இருந்துச்சு. ஆனா அப்பதான் நம்ம எல்லாருமே இங்க வந்துட்டோம்னு சொல்லிட்டு, அவங்களுக்கு நேரம் இங்க வர சொல்லிட்டாரு. அவங்க இப்போ இங்க தான் வந்துட்டு இருக்காங்க,” என்று பூமிகா கூற.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த துர்காவின் முகம் சட்டென சங்கவியின் பெயரை கேட்டதும் இறுகிப் போனதாக மாறியது.

துர்காவின் முகம் மாறுவதைப் பார்த்து பூமிகாவும் கீர்த்திகாவும் அவளிடம் வந்து, கீர்த்திகா, “அக்கா, நீ ரொம்ப ஃபீல் பண்ணாத. அவங்க கல்யாணத்துக்கு தானே வந்திருக்கா? நல்ல நம்மளுக்கு என்ன பிரச்சனை வந்துட போகுது,” என்று கீர்த்திகா கூற.

“உனக்கு அவளைப் பத்தி சரியா தெரியல கீர்த்திகா. அவ இன்னும் உங்க மாமா மேல தான் குறியா இருக்கா. அவரை எப்படியாவது மறுபடியும் விழ வைக்கணும்னு நினைச்சுட்டு இருக்கா. ஆனால் அதை நேரடியா உங்க மாமா கிட்ட காமிச்சுக்கல. நாளைக்கு ஆபீசுக்கு வந்துட்டு ரொம்ப கலாட்டா பண்ணிட்டா, உங்க மாமாவே கோபம் வந்து அவளை அடிச்சிட்டாரு. அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எல்லாரும் முன்னாடியும் உங்க மாமா சொல்லி மண்டபத்தை விட்டு அனுப்பின கோபத்தில் இருக்கா. போதாக்குறைக்கு ஆபீஸ்ல வச்சு அவளை அடிச்சிட்டாரு. அவ ஏதோ பிளான் ஓட தான் திரும்பவும் ஆதி கூட ப்ராஜெக்ட் காரணமா வச்சு திரும்பவும் ஆதி கூட ஆபீஸ்க்கு வந்து இருக்கா. அவ சும்மா ஒண்ணும் திரும்பவும் அந்த ஆபீஸ்க்கு வரலன்னு எனக்கு நல்லாவே புரியுது. இது கூடவே நோயை காரணமா காட்டி, அவன் பணத்துக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகவும், அவனை விருப்பப்பட்டு ஒண்ணும் நான் கல்யாணம் பண்ணல என்று சங்கவி ஆதி முகத்துக்கு நேரா சொன்னா. ஆதிக்கு தன்னோட நோயால யாருகிட்டயும் சரியா பழகாமல், ஒரு தாழ்வு மனப்பான்மையோடு சுத்திட்டு இருக்கான். இப்போ பத்தாததுக்கு இந்த சங்கவி வேற அவன் நோயை சொல்லியும், அவனோட காசுக்காக தான் நான் ஆதியை கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லி அவனுக்கு மனசுல கண்டதை விதைச்சிட்டா. அவ சொன்னதை எல்லாம் ஆதியும் முழுசா நம்பிட்டாருன்னு தான் நானும் நினைக்கிறேன். அதனால தான் என்கிட்ட எப்பவுமே வெறுப்பை காட்டுற மாதிரியே பேசுறது, நடந்துக்குறதுமா இருக்கான் ஆதி. எனக்கு அது ரொம்பவே கஷ்டமா இருக்கு. காசுக்காக தான் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு அந்த சங்கவி சொன்னப்போ, ஆதி அவளிடம் திருப்பி எதுவுமே பேசாம அமைதியா இருந்தான். எனக்கு அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு கீர்த்தி. எல்லாம் பத்தலைன்னு சொல்லிட்டு இப்போ இந்த கல்யாணத்துக்கும் வந்து இருக்கா. இங்க வந்து இனி என்ன எல்லாம் பண்ண போறாளோ, எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு,” என்றால் துர்கா.

எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்திகாவும் பூமிகாவும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அப்போது கீர்த்திகா, “அக்கா, நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே. அவளை மாமா கிட்ட வராம பாத்துக்கிட்டா மட்டும் போதும். அவளை நாம இருக்க பக்கம் நெருங்க விடாமல் பாத்துக்கணும்,” என்றால்.

பூமிகாவும், கீர்த்திகா சொல்வதும் சரிதான் என்று கூறியவள். “நான் அந்த சங்கவி அண்ட் ஃபேமிலியை நீங்க இருக்க ஏரியாவை விட்டுட்டு வேறு பக்கம் ரூம் கொடுத்துறேன். அப்போதான் அவ நீங்க இருக்க பக்கம் வர மாட்டாள்,” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ரிசார்ட்டின் வாயிலில் ஹார்ன் சத்தம் கேட்க, அங்கே நின்றிருந்த செக்யூரிட்டி கார் சத்தம் கேட்டு வேகமாக சென்று கதவை திறந்து விட்டார்.

கார் உள்ளே வந்ததும் அதில் இருந்து இறங்கிய சங்கவி நேராக கேட்டை திறந்து விட்ட வாட்ச்மேன் இடம் சென்றவள், அவர் அருகில் சென்றதும் அவர்கள் திரும்பிப் பார்க்க, ஓங்கி பலம் கொண்டு ஒரு அறை அறைந்தால் சங்கவி.

சங்கவி அந்த வாட்ச்மேனை அறைந்ததை யாருமே எதிர்பார்க்கவே இல்லை. சங்கவியின் அருகில் வேகமாக சென்று துர்கா, “மேடம், எதுக்கு இப்போ அந்த வாட்ச்மேன் அடிச்சீங்க?” என்று கேட்க.

“நான் அவனை அடிச்சா உனக்கு என்னடி வந்துச்சு? நீ எதுக்கு என்னை கேள்வி கேட்கிறாய்? என்னை கேள்வி கேட்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா? இல்ல அவ்ளோ பெரிய ஆளா ஆயிட்டியா நீ?” என்றால் சங்கவி துர்காவைப் பார்த்து.

“வேலைக்கு வந்தவ தானே நீ? ஆதியை வளைச்சு கல்யாணம் பண்ணவ தானே நீ? என்ன கேள்வி கேட்கக்கூடாது. உன் அந்தஸ்து என்ன? உன்னோட இடம் என்னவென்று தெரிந்துகொண்டு அங்க போய் நில்லு. நீ எல்லாம் என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என்று சங்கவி, வாட்ச்மேனிடம் திரும்பி, “ஹே வாட்ச்மேன், எவ்வளவு தைரியம் இருந்தா நான் வரும்போது கதவை சாத்தி வச்சிருப்ப? வெளியே வந்து ஹாரன் அடிச்சு எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கனுமா நாங்க?” என்று கேட்க.

அந்த வாட்ச்மேன் கன்னத்தில் கையை வைத்து தேய்த்தபடியே, “இங்க பாருங்க மேடம். நீங்க யாரு என்னன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நான் இங்கே மரியாதை கொடுக்க வேண்டியது எங்க பூமிகா மேடம், அவங்களோட அப்பாவுக்கு மட்டும்தான். இங்க வரவங்களுக்கு எல்லாம் எப்படி நடந்துக்கணும்னு சொல்லி கொடுத்திருக்காங்க எங்களுக்கு. நீங்க யாரு? எப்படி என்னன்னு எனக்கு எப்படி தெரியும்? வந்து ஹாரன் அடிச்சா யாரு, என்னனு விசாரிச்சு தான் நாங்க உள்ளேயே விடுவோம். நீங்க பாட்டுக்கு வந்து அவ்வளவு நேரம் ஹாரன் அடிச்சுட்டே இருந்த நாள் தான் உங்களை என்ன ஏதுன்னு கேட்காமல் நான் கதவை திறந்து விட்டேன். நீங்க உள்ளே வருவதற்காக,” என்ற அந்த வாட்ச்மேன்.

“அப்போ நான் எங்க அருணாச்சலம் ஓட ரிசார்ட்க்கு வரதுக்கு உங்களை எல்லாம் கேட்டுட்டு நீங்க என்ன விசாரிச்சதுக்கு அப்புறம்தான் நான் உள்ளே வரணுமா?” என்று கேட்க.

இருவரையும் பேச விட்டால் சண்டை வளர்ந்து கொண்டே போகும் என்று புரிந்துகொண்டு பூமிகா நேராக சங்கவியிடம் வந்தவள்.

“சங்கவி, ஒரு நிமிஷம் இரு. இப்ப எதுக்கு வந்தது வராதுமா இவ்ளோ கோபப்படுற? இது இங்கே இது ஒரு ரூல்ஸ். எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், யார் வந்தாலும் அவங்கள ஃபுல்லா தரவா செக் பண்ணாம நாங்க உள்ள கூட்டிட்டு வர மாட்டோம். ஏன்னா இது எங்க அப்பாவோட முக்கியமான இடம். இங்கு பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் வந்துட்டு போற இடம். அதனால் அவங்களோட பாதுகாப்பு முக்கியம். அதே மாதிரி எங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வராமல் இருக்க தான் இந்த ஏற்பாடு நாங்க பண்ணிருக்கோம். இது தெரியாம நீ போய் அந்த வாட்ச்மேனை அடிச்சிட்டேன். முதல்ல நீ அவர்கிட்ட மன்னிப்பு கேளு அவர் அடிச்சதுக்காக,” என்று பூமிகா கூற.

“வாட்…..நான் இங்கே வரவங்க போறவங்களுக்கு கதவு திறந்து விட நின்னுட்டு இருக்குற இந்த வாட்ச்மேன் கிட்ட மன்னிப்பு கேட்கணுமா? அட ஸ்டேட்டஸ் என்ன? என்னோட அந்தஸ்து என்னன்னு உனக்கு தெரிஞ்சும் நீ அவன்கிட்ட என்னை மன்னிப்பு கேட்க சொல்றியா?” என்று அந்த வாட்ச்மேனைப் பார்த்து மரியாதை இல்லாமல் கூற.

வாட்ச்மேன் பூமிகாவிடம் வந்து, “மேடம், பரவாயில்லை விடுங்க மேடம். இவங்கள மாதிரி நான் எவ்வளவோ பேரை பாத்துட்டேன். இவங்க மன்னிப்பு கேட்கணும்னு அவசியம் இல்ல. நீங்க வந்தவங்கள கவனிங்க மேடம். உங்களுக்காக அங்க ரெண்டு பேர் பாருங்க பாத்துட்டு இருக்காங்க,” என்று கூற, அப்போதுதான் துர்காவும் கீர்த்திகாவும் ஞாபகத்துக்கு வர, சரி என்று தலையை ஆட்டிய பூமிகா நேராக துர்காவும் இருக்கும் இடத்திற்கு போகவும், அப்போதுதான் காரை பார்க் செய்துவிட்டு வந்த சங்கவி அப்பாவும் அம்மாவும் வர, அவர்கள் இருவரும் துர்காவைப் பார்த்ததும் எதுவும் கூறாமல் சங்கவியைப் பார்க்க, சங்கவி கோபத்தில் நின்றிருப்பதைப் பார்த்ததும் சங்கவியின் அப்பா அவள் அருகில் சென்று, “என்னடா ஆச்சு? ஏன் இவ்வளவு கோவமா இருக்க?” என்று கேட்க.

சங்கவி அங்கு நடந்த விஷயத்தை அவள் அப்பாவிடம் கூறவும், “வந்த இடத்திலேயே ஆரம்பிச்சுட்டியா? கொஞ்ச நேரம் அமைதியா இரு. இப்படியே நீ இப்படி பண்ணிட்டு இருந்தா உன்னைப் பத்தி தப்பான விஷயம் தான் அந்த ஆதி கிட்ட போகும். கொஞ்சம் அமைதியா இரு, நான் பார்த்துக்கிறேன்,” என்று கூறிவிட்டு பூமிகாவைத் திரும்பிப் பார்த்து அவளிடம் நலம் விசாரித்தவர், அவர்கள் அறை எங்கே இருக்குது என்று கேட்டுவிட்டு சங்கவியை இழுத்துக் கொண்டு அங்கே சென்றனர்.

இதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்த துர்காவைப் பார்த்த கீர்த்திகாவிற்கும், பூமிகாவிற்கும் ஏதோ போல ஆகிவிட்டது.

சங்கவி அவளை மனது நோகும்படி பேசி விட்டதால், துர்கா தன்னுடைய தகுதியைப் பற்றி சங்கவி இப்படி பேசிவிட்டாளே என்று எனக்கு மிகவும் நொந்து போய் நின்று இருக்க, அவளிடம் சென்று கீர்த்திகாவும், பூமிகாவும் ஆறுதல் கூறியவர்கள், “பூமிகா, சரி வா முதல்ல நாம என்னோட ஃபிரெண்ட்ஸ் போய் பாத்துட்டு வரலாம். நீ அங்க வந்து பார்க்கும்போது தெரிஞ்சுரும், இந்த சங்கவியைப் பத்தி எல்லாம் உனக்கு ஒரு விஷயமாகவே தெரியாது. என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் எப்படி என்னனு நீ பார்த்தீன்னா உனக்கு தெரிஞ்சிடும். அவங்கள விடு, உனக்காக நாங்க இருக்கோம்,” என்று கூறிக்கொண்டு துர்காவின் தோல் மேல் கை போட்டுக்கொண்டு, பூமிகா துர்காவை அழைத்துக்கொண்டு தன் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றால்.

EPISODE 30

பூமிகாவின் தோழிகளைச் சந்தித்துவிட்டு கிளம்பிய துர்காவும், கீர்த்திகாவும் பேசிக்கொண்டே அவர்கள் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீர்த்திகா துர்காவிடம், “அக்கா, பூமிகா அக்காவோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப நல்லா பழகுறாங்க. எனக்கு அவங்க எல்லோரையும் ரொம்ப பிடிச்சுருச்சு. அவங்கள பார்த்ததுமே என்னமோ உன் கூட பழகுற மாதிரியே எனக்கு ஃபீல் ஆச்சு அக்கா. முக்கியமா மீனு அக்கா இருக்காங்க இல்ல? அவங்கள பார்த்ததும் எனக்கு உன்கூட பேசுற மாதிரி தான் இருந்துச்சு. எனக்கு அப்படி தான் தோணுச்சு,” என்றாள் கீர்த்திகா.

கீர்த்திகா கூறியதைக் கேட்ட துர்கா சிரித்துக்கொண்டு, “ஆமாடா. மீனு நல்லாதான் பழகுறாங்க, பேசுறாங்க. அவங்க வந்து சங்கவி மாதிரி ஸ்டேட்டஸ் பார்க்காம நம்ம கூட எல்லாம் பழகுறாங்க. எனக்கு சந்தோஷமா இருக்கு,” என்றால் துர்கா.

“ஆமாக்கா, நீ சொல்றது சரிதான். ஆனாலும் இன்னைக்கு அந்த சங்கவி ரொம்ப ஓவரா தான் உன்னை ரொம்ப மட்டம் தட்டி பேசினா. எனக்கு அவ பேசுறது தாங்கிக்கவே முடியல. நீ எப்படி அவ பேசுறது எல்லாம் கேட்டுட்டு பொறுமையா இருக்க? என்னால எல்லாம் உன்னை மாதிரி எல்லாரும் பேசுவதை கேட்டுட்டு பொறுமையா இருக்க முடியாது. இனிமேல் இந்த மாதிரி அவ ஏதாவது பேசினா, நீ கேட்டுட்டு சும்மா இருக்காதே அக்கா. அவளுக்கு உறைக்குற மாதிரி ஏதாவது பேசிவிடு இல்ல திட்டிவிடு. அப்பதான் அவளுக்கு கொஞ்சமாவது உறைக்கும் அக்கா,” என்றால் கீர்த்திகா.

“அப்படி எல்லாம் சொல்லாதே கீர்த்திகா. அவ பேசுறதுக்கு எல்லாமே நம்ம பதில் பேசிட்டு இருந்தோம்னா, அப்புறம் அவளுக்கும், நமக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும். அவ வேணும்னு தான் என்னை எல்லார் முன்னாடியும் மட்டம் தட்டி பேசிட்டு இருக்கா. அவ ஆதியை முதல்ல வேண்டாம்னு சொல்லிட்டு, பின்னாடி அவங்க அப்பா பணத்தை பத்தி சொல்லி அவளை இதையும் அதையும் சொல்லி மனசு கெடுத்ததுக்கு அப்புறம் ஆதி வேணும்னு திரும்பவும் கல்யாணத்துக்கு ஒத்துக்குறப்பவே அவளைப் பத்தி நீ தெரிஞ்சுக்க வேண்டாம்? அவளோட புத்தி எவ்ளோ கேடுகெட்ட தனமா இருக்குன்னு. அப்படி இருக்கிறவ கிட்ட நம்மளும் அவளை மாதிரியே திருப்பி பேசணும்னா அப்புறம் அவளுக்கும் நமக்கும் சுத்தமா ஒரு வித்தியாசமும் இல்லை கீர்த்திகா. அதனாலதான் நான் அவ எது பேசினாலும் திருப்பி பேசறது இல்லை. ஆனா ஆதியை மட்டும் அவ ஏதாவது சொன்னா என்னால தாங்கிக்க முடியாது. அன்னைக்கு அவ ஆதியோட ஆபீஸ்ல வச்சு ஆதியை ரொம்ப பேசிட்டா. அவ அப்படி பேசின நாள் தான் நான் அவளை அடிச்சேன்,” என்று துர்கா அன்று நடந்த விஷயங்களை கூறினாள்.

கீர்த்திகா இதெல்லாம் கேட்டுவிட்டு, “பரவாயில்லை அக்கா, உனக்கும் கொஞ்சம் தைரியம் இருக்கத்தான் செய்து. அவளையே ஆதி மாமா ஆபீஸ்ல வச்சு அடிச்சிட்டியே. சூப்பர்,” என்று கீர்த்திகா துர்காவை ஆகா… ஓகோ… என்று புகழ, “ஏய் கீர்த்து, சும்மா பேசாம வா…” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

கீர்த்திகாவும், துர்காவும் பூமிகாவுடன் வெளியே சென்றுவிட்டு வர வெகு நேரம் ஆகிவிட்டதால், அவர்களை காணோம் என்று அவர்களின் அம்மா வடிவு இவர்களை தேடிக்கொண்டு வெளியே நின்று இருக்க.

அவரைப் பார்த்ததும் துர்கா, கீர்த்திகா ஓடி சென்று “அம்மா” என்று கட்டிக்கொள்ள, “எங்கடா போனீங்க இரண்டு பேரும் இவ்வளவு நேரம்? கொஞ்சம் சீக்கிரமா வர வேண்டியதுதானே? ஏன் துர்கா, அவதான் சின்ன பொண்ணு. போன இடத்துல விளையாட்டுதனமா பேசிட்டு உட்கார்ந்திருக்கான்னா நீயுமா இப்படி இருக்க? உனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு. மாப்பிள்ளை அங்க தனியா ரூம்ல இருப்பாரு. உன்னை காணோம்னு தேட மாட்டாரா? இப்படி வந்ததும் வராதுமா வெளியே போயிட்ட. ஆதி தம்பி என்ன பண்றாரு? அவருக்கு ஏதாவது வேணுமான்னு கேட்காம நீ பாட்டுக்கு இவ கூட சேர்ந்துட்டு வெளியே போயிட்ட. முதல்ல போய் ஆதி தம்பியை பார்த்து ஏதாவது வேணுமான்னு கேட்டு, அவருக்கு என்ன வேணும்னு செய், போ…” என்று துர்காவை அதட்டி அனுப்பி வைக்க, கீர்த்திகாவின் முகம் மாறிவிட்டது.

“அம்மா, அக்கா இப்ப தானே வந்தா? கொஞ்ச நேரம் நம்ம கூட இருக்கட்டுமே. அதுக்கப்புறம் ஆதி மாமா கூட பேசிட்டு வரட்டுமே,” என்று சொல்ல.

“ஏய், நீ சின்ன பொண்ணு. உனக்கு ஒண்ணும் தெரியாது. சும்மா இரு,” என்று அவளை அதட்டிவிட்டு வடிவு, “நீ போடா தங்கம்,” என்று துர்காவை அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார் வடிவு.

வடிவினால் வலுக்கட்டாயமாக ஆதியிடம் அனுப்பி வைக்கப்பட, துர்கா, “ஆமாம்மா. உன்னோட மாப்பிள்ளை நான் வரலைன்னு வாசல்ல நின்னு என்ன காணோம்னு தேடிட்டு இருக்காரு பாரு. அவனுக்கு நான் என்ன பண்ணா என்ன? எங்க போனா என்ன? கொஞ்சம் கூட ஒரு ஃபிரண்டுங்குறதுக்கான அக்கறை கூட என் மேல இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட எவ்ளோ ஃப்ரெண்ட்லியா இருந்தான். என் மேல எவ்ளோ அக்கறையா இருந்தான். கல்யாணம் ஆனாலும் ஆச்சு. அவன் என்னை கண்டால் எப்ப பார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறான். என்னைக் கண்டாலே அவனுக்கு பிடிக்க மாட்டேங்குது. இதுல வேற அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு நான் செய்யணுமா? அவரு என்ன காணோம்னு தேடிட்டு இருப்பாரா?” என்று முனகிக்கொண்டே அந்த ரிசார்ட்டைச் சுற்றி பார்த்தபடியே முணுமுணுத்துக்கொண்டு அவள் அறைக்கு வர.

அங்கே வாசலில் ஆதி இவளுக்காகத்தான் காத்துக் கொண்டு நின்றிருந்தான். “எங்கே இவள் சென்று வெகு நேரம் ஆகிவிட்டது. இன்னும் வரவில்லையே,” என்று யோசித்துக் கொண்டிருக்க, கதவை திறந்து வெளியே வரவும், துர்கா தூரத்திலிருந்து கையில் சேலை தலைப்பைப் பிடித்து திருகிக்கொண்ட, எதையோ பேசிக்கொண்டு, சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்து வருவதைப் பார்த்தவன், “இவ என்ன ஒரு சின்ன புள்ள மாதிரி இப்படி விளையாட்டுத்தனமா நடந்து வரா,” என்று அவளைப் பார்த்துக் கொண்டே நின்று இருக்க, துர்கா அவன் நிற்பதைக் கூட கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே வர.

எதிரே நின்றிருந்த ஆதியின் மீது மோதிவிட, இதை சற்றும் எதிர்பார்க்காத ஆதி, அவள் மோதியதும் நிலை தடுமாற, துர்கா அவனை இடித்த வேகத்தில் பின்னால் விழப்போக, அவளை விழாமல் சட்டு என்று அவள் இடுப்போடு சேர்த்து பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்தி வைத்தான்.

ஆதியின் கை அவள் சேலை கொண்டு அவள் இடுப்பு பிடித்துக்கொண்டு நின்று இருக்க, அதை உணராத துர்கா அவனையே அதிர்ச்சியில் இமைக்காமல் பார்க்க, ஆதியும் துர்காவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தால்.

ஆதியின் கண்களையே பார்த்துக் கொண்டிருக்க, அவளை பிடித்திருந்த துர்காவின் இடையை அவளை கீழே விழாமல் இருக்க தான் பிடியை இருக்க. அப்போதுதான் நினைவு வந்தவளாக, ஆதி தன்னை பிடித்திருப்பதைப் பார்த்தவள் சட்டென்று அவனிடம் இருந்து விலகி நிற்க.

தான் தொடுவது பிடிக்காமல்ல தான் அவள் இப்படி செய்கிறாள் என்று தப்பாக நினைத்துக்கொண்ட ஆதி, துர்காவை கோபம் கொண்டு முறைத்தான்.

‘இவன் என்ன என்னை இப்படி முறைக்குறான்? மாஸ்க் போட்டு வெறும் கண்ணு மட்டும் தெரியும்போதே அவன் கோபம் இப்படி அப்பட்டமா என்னை நடுங்க வைய்க்குதே. இவன் முகம் முழுசும் இதே கோபத்தோட பார்த்தா அவ்ளோ தான்,’ என்று நினைக்கும்போதே அவள் முதுகு தண்டு சிலிர்த்தது.

அவள் ஏதோ யோசித்துக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்த ஆதி, “ஏய்…. என்ன டி… அப்படி யோசிச்சுட்டு இருக்க?” என்று கேட்க.

ஆதி தன்னை ‘டி…’ போட்டு பேசியதைக் கேட்டதும், ஒரு கணம் உள்ளுக்குள் தன்னை உரிமையாக நினைத்து ‘டி…’ போட்டு கூப்பிடுகிறான் என்று நினைக்கும் போதே துர்காவிற்கு ஒரு நிமிடம் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது.

பிறகு மறுகனமே, ‘ச்சே… இவன் தான் என்னைக் கண்டாலே எரிந்து விழுகிறானே. என்னிடம் இருந்து விலக நினைப்பவனை நினைத்து நான் கற்பனையில் சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கிறேனே,’ என்று தன்னையே நொந்துகொண்டவள்.

“ஆதி, என்னை ‘டி…’ போட்டு கூப்பிடறதை இதோட நிப்பாட்டிக்க. இன்னொரு வாட்டி இப்படி கூப்பிட்டா அப்புறம் நல்லா இருக்காது,” என்றாள்.

அவள் இப்படி தன்னிடம் பேசுவாள் என்று சற்றும் எதிர்பார்க்காத ஆதியின் கோபம் மேலும் அதிகரித்தது.

தன்னிடம் இருந்து விலகி நின்றதிலேயே கோபம் கொண்டிருந்த ஆதி, துர்கா இப்படி பேசவும் மேலும் கோபம் கொண்ட ஆதி அவளிடம் நெருங்கியவன், “நான் உன்னை ‘டி…’ போட்டு கூப்பிட கூடாதா? நான் அப்படி தான் உன்னை ‘டி…’ போட்டு கூப்பிடுவேன். என்ன செய்வ நீ?” என்றான்.

“என்னை ‘டி…’ போட்டு கூப்பிட உனக்கு என்ன உரிமை இருக்கு ஆதி? எப்படியும் நீயும் நானும் பிரியத்தானே போகிறோம். அப்படி இருக்க நீ எப்படி என்னை ‘டி…’ போட்டு கூப்பிடலாம்? எனக்காக, என்னை நினைப்பவர்கள் மட்டுமே என்னை உரிமையுடன் நீ கூப்பிட்டது போல கூப்பிட முடியும். அப்படி இருக்க நீ….யார்…. எனக்கு?” என்றால் கோபத்துடன் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து.

துர்கா தன்னிடம் பழகிய நாட்களில் இருந்து இது போல அவனிடம் பேசியதில்லை. ஆனால் இன்று இவ்வளவு பேசுகிறாள் என்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருக்க.

ஆதி எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்க, ‘தான் காதலித்த ஆதி நீ இல்லை ஆதி,’ என்று மனதிற்குள் அழுதவள் அவனைத் தாண்டி உள்ளே சென்றால்.

தன்னை இவ்வளவு தூரம் எடுத்தெறிந்து பேசிவிட்டு தாண்டி சென்ற துர்காவின் மீது அளவு கடந்த கோபம் வர, ஆதி அதே கோபத்தோடு அறைக்குள் வர அங்கே துர்கா அவள் ஆடைகளை பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே ஆதியை தாண்டி செல்ல.

தன்னை சுத்தமாக கண்டு கொள்ளாமல், உதாசீனம் படுத்திவிட்டு சென்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன் முன் நிறுத்த, கையில் இருந்த பெட்டி கீழே விழ, அவனை முறைத்த துர்கா, “இப்போ எதுக்கு என் கையை பிடிச்சே ஆதி? என்ன வேணும் உனக்கு? என்னை விடு,” என்று அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள திமிர.

“என்ன டி… நான் உன் கையை பிடிக்க கூடாதோ? ரொம்ப துள்ளுற,” என்றவன் தான் பிடியை மேலும் இருக்க.

அவன் அழுத்தி பிடித்ததில் வலியில் மேலும் கோபம் கொண்ட துர்கா, “ஆதி… நான் வெளியில் என்ன சொன்னேனோ அதே தான் இப்பவும் சொல்றேன். என் கிட்ட எந்த உரிமையில் நீ இப்படி எல்லாம் நடந்துகிற? உனக்கும் எனக்கும் என்ன மாதிரியான உறவு இருக்கு?” என்று ஏதேதோ கோபத்தில் துர்கா ஆதியை கேட்க.

“என்ன டி… ஆன்னா உன்னா… உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் கேட்டுட்டே இருக்க?” என்று கேட்டவன் அவள் முகத்தை பார்த்து பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் கழுத்தில் இருந்து கீழே இறங்க.

அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசிக் கொண்டிருந்த துர்கா அவன் பார்வை செல்லும் இடத்தைப் பார்க்க. தன்னை கழுத்துக்கு கீழ் பார்க்கிறான் என்று தெரிந்ததும் கோபம் கொண்டு அவனை ஓங்கி கன்னத்தில் அறைய, அதை சற்றும் எதிர்பார்க்காத ஆதி, அவள் கையை மேலும் இருக்கி பிடித்தவன், “ஏய்… என்ன டி… நானும் பார்க்கிறேன். ரொம்ப ஓவர் ஆஹ் போற. இப்போ நான் உன்னை என்ன பண்ணிட்டேன்னு என்னை அடிச்ச நீ? உன்னோட கையை பிடிச்சதுக்காக என்னை அடிச்ச நீ?” என்று கேட்க.

“உன் பார்வை என் முகத்தில் இருந்து கழுத்துக்குக் கீழ் ஏன் போனது? அதனால் தான் நான் உன்னை அடித்தேன்,” என்றால்.

“ச்சி… இவ்ளோ தானா நீ? உன் புத்தி என்னை பற்றி இவ்வளவு கேவலமாகவா நினைத்துக்கொண்டு இருக்கிறது?” என்றவன் அவள் கழுத்தில் இருந்த தாலியை கையில் பிடித்து உயர்த்தி, “உன்னிடம் இப்படி எல்லாம் நடந்து கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டாயே. இந்த உரிமையில் தான் பேசுகிறேன் என்று சொல்வதற்காக தான் உன் கழுத்தை பார்த்தேன். நீ நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பொறுக்கி அல்ல, ஒரு பெண்ணை கட்டிய மனைவியாகவே இருந்தாலும் அவள் அனுமதி இல்லாமல் கீழ்த்தரமாக பார்ப்பதற்கு,” என்று கூறியவன்.

“ஆனால் எப்போது நீ என்னை இவ்வளவு மட்டமாக நினைத்தாயோ, இனியும் நான் சும்மா இருந்தால் நன்றாக இருக்காது,” என்றவன் துர்காவின் கண்களை பார்க்க, துர்காவும் அவன் கண்களை தான் பார்த்துக் கொண்டிருந்தால். தான் அணிந்திருந்த மாஸ்கை கழட்டியவன் அவளை பார்க்க, துர்கா அவன் மாஸ்கை கழட்டவும், அவன் கோபம் கொண்ட முகத்தை முழுமையாக அதுவும் அவ்வளவு அருகில் பார்க்க.

அவன் மூச்சுகாற்று மிகவும் உஷ்ணமாக அவள் முகத்தில் பட, துர்காவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. “ஆ… ஆத்… ஆதி…” என்று அவனை அழைக்க, ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த ஆதி, துர்கா அழைத்தது அவன் காதில் விழுவதற்குள், துர்கா என்ன என்று யோசிப்பதற்குள் கீழே குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத துர்கா அதிர்ச்சியில் கண்களை அகல விரித்து ஆதியின் கண்களை பார்க்க, அவனும் கண்கள் சிவக்க துர்காவின் கண்களை பார்த்துக்கொண்டே அவளை முத்தமிட, அவன் பார்வையில் இருந்தது கோபமா, காமமா, காதலா என்ன என்று புரியாமல் கண்களை மூட மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தால்.

ஆதியை எதிர்க்க கூட தோன்றாமல் அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருக்க, தான் முத்தம் கொடுத்ததும் துர்காவிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராமல் போகவே, முத்தத்தை மேலும் தீவிரமாகியவன் அவள் இதழ்களை வலுக்கட்டாயமாக பிரித்து தன் நாவினால் அவள் நாவை வருட, சட்டென துர்காவும் பெண்மை விழித்துக்கொள்ள, தன்னை அவனிடம் இருந்து விலகிக்கொள்ள அவன் மார்பில் கைவைத்து அழுத்தி அவனிடம் இருந்து பிரிந்தவள்.

“ஆதி…” என்று கத்திவிட்டு, “என் கழுத்தில் தாலி கட்டி விட்டால் நீ என்ன வேண்டுமானாலும் என்னிடம் உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டாயா? ச்சே… என் ஆதியா…நீ… இல்லை இல்லவே இல்லை. உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை, உன்னை பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. என்னை தொடாதே. எனக்கு நீ தொட்டால் உடல் எல்லாம் நெருப்பைப் பற்றவைத்தது போல இருக்கிறது,” என்று கூறி வெளியேறப் போக, “என்ன டி… சொன்னே? நான் தொட்டால் உனக்கு எரிகிறதா? நானும் போனால் போகட்டும் என்று பார்த்தால் நீ… என்னை மிகவும் கேவலமாக நினைச்சுட்டே போற. இப்போ நான் ஒரு இடம் விடாமல் தொட்டு தடவுகிறேன். அதன் பிறகு மீண்டும் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லி திட்டிக்கொள்,” என்றவன் துர்காவை நெருங்க.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியான துர்கா ஆதி அவள் அருகில் நெருங்கி வரவும், அவனை தள்ளி விட்டு வெளியே செல்லப் போக, “எங்க டி… ஓடுற?” என்றவன் அவள் சேலை தலைப்பை பற்றி இழுக்க, அவன் இழுத்த இழுப்பில் அவன் மார்பின் மீது மோதி நிற்க, அவளை அப்படியே இழுத்த வேகத்தில் தன் கையில் துர்காவை தூக்கியவன் அவளை தூக்கி பெட்டில் போட்டான்.

EPISODE 31

“உன்னை பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. என்னை தொடாதே. எனக்கு நீ தொட்டால் உடல் எல்லாம் நெருப்பைப் பற்றவைத்தது போல இருக்கிறது,” என்று கூறி வெளியேறப் போன துர்காவை, “என்னடி சொன்னே? நான் தொட்டால் உனக்கு எரிகிறதா? நானும் போனால் போகட்டும் என்று பார்த்தால் நீ… என்னை மிகவும் கேவலமாக நினைச்சுட்டே போற. இப்போ நான் ஒரு இடம் விடாமல் தொட்டுத் தடவுகிறேன். அதன் பிறகு மீண்டும் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டிக்கொள்,” என்றவன் துர்காவை நெருங்கினான்.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியான துர்கா, ஆதி அவள் அருகில் நெருங்கி வரவும், அவனைத் தள்ளிவிட்டு வெளியே செல்லப் போக… “எங்கடி ஓடுற?” என்றவன் அவள் சேலைத் தலைப்பை இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவள் அவன் மார்பின் மீது மோதி நிற்க, அவளை அப்படியே இழுத்த வேகத்தில் தன் கையில் தூக்கிப் படுக்கையில் போட்டான்.

படுக்கையில் துர்காவைப் போட்டவன், அவள் எழுந்திருக்கப் போக, அவளைத் திரும்பவும் படுக்க வைத்து சட்டென்று அவள் மேல் படுத்துவிட்டான். அவன் செயலில் அதிர்ச்சியான துர்கா, “ஆதி, என்ன பண்ற? விருப்பம் இல்லாத ஒரு பொண்ணுகிட்ட இப்படி எல்லாம் நடந்துகிறியே? உனக்கு வெட்கமா இல்லையா? முதல்ல என் மேல இருந்து எழுந்திரு, ஆதி. ப்ளீஸ்,” என்று கெஞ்சினாள்.

“இப்போதான் அவ்வளவு திமிரா பேசின. இப்போ நான் இப்படி எல்லாம் பண்ணுவேன்னு தெரிஞ்சதும் கெஞ்சுற மாதிரி நடிக்கிறியாடி?” என்றவன் தாமதிக்காமல் குனிந்து அவள் இதழை சிறை செய்தான்.

துர்கா முதலில் ஆதி முத்தம் கொடுத்ததில் அதிர்ந்தாலும், பின் சுதாரித்து அவன் முதுகில் அடித்து அவனைத் தன்னிடம் இருந்து விலக்கப் போராடினாள். ஆனால் ஆதி துர்காவின் மேல் படுத்திருந்ததால் அவளால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை. தன்னை அடித்துக் கொண்டிருந்த துர்காவின் கையை அவன் கைகளால் இருபுறமும் இழுத்து, தன் கைகளை அவள் கைகளுடன் கோர்த்து அசையவிடாமல் இருபுறமும் அழுத்திப் பிடித்தான். துர்கா அவனிடம் தன் இதழைப் பிரிக்கத் தலையை இங்கும் அங்கும் ஆட்ட, அவன் ஒரு கையை விடுத்து அவள் தலையை அசையவிடாமல் பிடித்துக்கொண்டு முத்தத்தை தீவிரமாக்கினான்.

அவனிடம் போராட முடியாமல் வலுவிழந்த துர்காவின் கைகளும் உடலும் துவண்டு போக, இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் ஆதி இல்லை. அவள் மேல் இருந்த கோபத்தை முழுமையாக அவளிடம் காட்டிக் கொண்டிருந்தான். தான் தொடுவது தீயாய் எரிவது போல இருப்பதாக துர்கா கூறியதைக் கேட்டதில் இருந்து, ஆதிக்கு துர்காவை இதற்கு மேலும் சும்மா விட்டுவைக்க அவன் மனம் விரும்பவில்லை. இனி என்ன ஆனாலும் சரி, இவளைத் தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானமாய் தன் மனதில் முடிவெடுத்தவன், அவனுக்கு அவள் மீது என்ன உரிமை இருக்கிறது என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் தரும் விதமாக, “நான் உனக்கு உரிமையானவன். நீ எனக்கு உரிமையானவள். உன் கழுத்தில் இருக்கும் தாலியே அதற்குச் சாட்சி,” என்று மனதில் நினைத்துக்கொண்டே அவள் இதழை வன்மையாகச் சுவைக்க ஆரம்பித்திருந்தான்.

ஆனால் இங்கு மீனுவின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. தான் காதலித்த அந்த யதார்த்தமான ஆதி இவன் இல்லை. பெண்களை மதித்து அவர்களுக்கு மரியாதையைத் தரும் ஆதி இவன் இல்லை. இவன் குணம் இதுவல்ல. இப்படிப்பட்ட ஆதி எனக்குத் தேவை இல்லை. இனிமேல் என்ன ஆனாலும் சரி, சீக்கிரமாகவே இவனிடம் இருந்து பிரிந்துவிட வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் அவள் இன்னொரு மனம், தான் காதலித்தவனே தானாக வந்து தனக்கு முத்தமிடுவதை நினைத்து சந்தோஷப்பட்டது. அவன் அருகாமையும் அவன் வாசமும் துர்காவிற்குப் பிடிக்கத்தான் செய்தது.

“சீ… மானம் கெட்ட மனதே, உனக்கு வெட்கமாக இல்லை? உன்னை ஒரு காதலியாக வேண்டாம்… ஏன், அவன் மனைவியாகக்கூட எண்ணாமல், நான் கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னை சித்ரவதை செய்ய நினைக்கும் ஆதி இவன். உனக்காக ஒரு நண்பனாகக்கூட இருக்க நினைக்காத ஆதி இவன். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் உன் காதலன் ஆதிக்குத் துளியும் கிடையாது. உன் காதல் என்றோ செத்துப்போய்விட்டது,” என்று இப்படி எல்லாம் நினைத்துக்கொண்டு, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல் தன்னையே நொந்துகொண்ட துர்காவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.

ஆதி துர்காவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டே மேலும் மேலும் தன் பாரம் முழுவதையும் அவள் மேல் போட்டு, அழுதுகொண்டிருந்த துர்காவிற்கு மூச்சுவிடக்கூட இடம் கொடுக்காமல் அவள் இதழைச் சுவைத்தான். அவன் வெறியில் அவள் உதட்டைக் கடித்துவிட, அவள் சூடான ரத்தம் அவன் நாவில் சுவையை கூட்ட, அவன் உடல் சூட்டை அது அதிகப்படுத்த, அவன் கைகள் தானாக அவள் கைகளில் இருந்து விடுபட்டு அவன் உடலில் ஊர்வலம் செய்ய ஆரம்பித்தது.

அவன் கைகள் அவள் இடுப்பில் இருந்து ஒவ்வொரு படியாக மேலே உயர, அவள் சருமத்தின் மென்மையை அவன் கைகள் உணரவும், அவளை இப்போதே தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற வேகம் அவனுக்குள் தோன்ற, இடுப்பில் இருந்த கை மேலே ஏறி, அவள் மென்மையை சேலையோடு சேர்த்து முதல் முறையாகத் தொட… ஆதி அவள் மென்மையின் மென்மையில் பித்தனானான். அவன் கை அவள் இடது மார்பை வன்மையாகத் தீண்ட, அவன் தன் மார்பில் கை வைத்ததும் அதிர்ச்சியில் உறைந்த துர்கா, அவன் கைகளை தன் மீதிருந்து விலக்க நினைக்க, அவன் தன் மார்பில் வைத்திருந்த கையை விளக்க நினைத்து அவன் கையைப் பிடித்துக்கொண்டு, ‘வேண்டாம்’ என்பது போலவே தலையை ஆட்டி அவன் விழிகளை கண்ணீருடன் பார்த்தாள். அதே நேரம் கண்களில் கோபமும் காமமும் சிறிதும் குறையாமல் துர்காவின் கண்களை பார்த்த ஆதிக்கு, அவள் கண்களில் தெரிந்த வலி அப்பட்டமாகக் காட்ட, அவன் மூளைக்குள் யாரோ சம்மட்டியால் அடித்தது போல அவனுக்கு உரைக்க, சட்டென்று அவளை விட்டு விலகியவன் எழுந்தான். தான் நடந்துகொண்டதை நினைத்து தன்னைத் தானே கடிந்துகொண்டவன், துர்காவைத் திரும்பியும் பாராமல் தன் உடல் சூட்டைக் கட்டுப்படுத்திக்கொள்ள பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அவன் பாத்ரூம் சென்று கதவை சாற்றியதைப் பார்த்த துர்கா, அவன் விட்டுச் சென்ற அதே நிலையில் படுத்திருந்தவள், எழுந்திருக்கக்கூட மனம் இல்லாமல் தன் கைகளால் முகத்தை மூடி, ஓவென்று கத்தி அழ ஆரம்பித்தாள்.

துர்கா அழுவதை பாத்ரூமில் இருந்து கேட்டவனுக்கு இதயம் ஏனோ கனத்தது. தன் மீதே தனக்கு கோபம் வர, பாத்ரூம் சுவற்றில் ஓங்கிக் குத்திக்கொண்டே இருந்தான். தனக்குத் தண்டனையாக இது போதாது என்று நினைத்தவன், அங்கிருந்த கண்ணாடியில் ஓங்கிக் குத்த, அது சுக்குநூறாக உடைந்து சிதறியது. அவன் கையையும் பதம் பார்த்திட, கைகளில் இருந்து ரத்தம் வழிந்தது.

அழுது கொண்டிருந்த துர்கா, பாத்ரூமிற்குள் ஏதோ உடையும் சத்தம் கேட்கவும் பதறியவள், படுக்கையில் இருந்து இறங்கி பாத்ரூம் கதவைத் தட்டினாள். உள்ளிருந்த ஆதிக்கு அவள் கதவு தட்டும் சத்தம் கேட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக, உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தெரிந்த காயங்கள் நிறைந்த தழும்புகளும், கொப்புளங்களும் நிறைந்த தன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். ‘இந்த முகம் தானே இவளுக்குப் பிடிக்கவில்லை? இதனாலதானே அவள் என்னை வெறுத்து ஒதுக்குகிறாள்? இந்த முகத்தையே இவளுக்குப் பிடிக்க வைத்து இவளை என் மீது காதல் கொள்ள வைக்கிறேன்,’ என்று மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

கதவு தட்டியும் உள்ளிருந்து எதுவும் சத்தம் கேட்காமல் இருக்கவும் பயந்துபோன துர்கா, அழுதுகொண்டே “ஆதி… ஆதி… என்ன ஆச்சு? ஏன் கதவைத் திறக்க மாட்டேங்குற? கதவைத் திற ஆதி,” என்று கத்திக்கொண்டே இருக்க, அவள் சத்தம் கேட்டு தன்னிலை வந்த ஆதி, தன் கைகளைக் கழுவிக்கொண்டு முகத்தையும் கழுவி விட்டு கதவைத் திறந்தான்.

அவனை கேள்வியுடன் பார்த்த துர்கா, “ஆதி, ஏதோ உடைந்த சத்தம் கேட்டது,” என்று கேட்டுக்கொண்டே பாத்ரூமிற்குள் எட்டிப் பார்க்க, அங்கே கண்ணாடி உடைந்து சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்ததும் பதறிய துர்கா, ஆதியை மேலிருந்து கீழாகப் பார்க்க, அவன் என்னதான் கைகளைக் கழுவி இருந்தாலும் கண்ணாடி கிழித்த இடத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டு தரையில் விழுந்துகொண்டிருந்தது.

இதைப் பார்த்த துர்கா பயந்துவிட்டாள். “என்ன ஆதி இது? உன் கையில் இருந்து ரத்தம் வருகிறது?” பதறிக்கொண்டே அவன் கைகளைப் பிடித்து அழுதுகொண்டே பார்க்க, ரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டு இருக்க, அவன் கைகளைப் பிடித்து இழுத்து வந்தவள், அவனை மெத்தையில் அமர வைத்துவிட்டு, பதட்டத்துடன் அந்த அறையில் எதுவும் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கிறதா என்று தேடினாள். கடைசியில் கதவின் அருகில் இருந்த ஒரு அலமாரியில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸைப் பார்த்ததும் எடுத்துக்கொண்டு வேகமாக வந்து, அவன் கால் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவள், அவன் கைகளில் வழிந்த ரத்தத்தைச் சுத்தம் செய்து, காயத்திற்கு மருந்து போட்டு, அழுதுகொண்டே கட்டு போட்டுக்கொண்டிருந்தாள்.

‘தான் தொட்டால் எரிகிறது என்று சொல்லி விலகிப் போக நினைப்பவளா இவள்? தன் கையில் வழிந்த ரத்தத்தைப் பார்த்து பதறிப்போய் அழுதுகொண்டு இவ்வளவு அக்கறையாகத் தனக்கு மருந்து போட்டு விடும் துர்காவை’ பார்த்துக்கொண்டிருந்த ஆதி, ‘இவளுக்கு என் மேல் பிரியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது வெறும் மனிதாபிமான அடிப்படையில் அவள் எனக்குச் செய்யும் முதலுதவி இல்லை. துர்காவின் மனதில் கண்டிப்பாக எனக்கென்று ஒரு இடம் இருக்க வேண்டும். இவள் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்னை வெறுப்பது போலவே நடிக்கிறாள்,’ என்று நினைத்தவன், அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து அவளுக்கு என் மேல் இருக்கும் காதலை அவள் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டவன் அவளையே விழி அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குக் கட்டு போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்து ஆதியைப் பார்க்க, அவன் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றதும் சட்டென்று எழுந்து சென்றவள், கடுப்போடு எடுத்த பொருட்களை எல்லாம் அங்கேயே வைத்துவிட்டு வந்தவள், பாத்ரூம் சென்று உடைந்த கண்ணாடித் துகள்களைக் கிளீன் செய்யப் போக… “எங்கே போற?” என்றான் ஆதி. “கண்ணாடியெல்லாம் பாத்ரூம்ல சிதறி இருக்கு. அதை கிளீன் பண்ண போறேன்,” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் ரூம் சர்வீஸ்க்கு கால் பண்ணி சொல்றேன். அவங்க வந்து கிளீன் பண்ணிக்குவாங்க,” என்றான். “இல்லை, பரவாயில்லை. அவங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே கிளீன் பண்றேன்,” என்று உள்ளே செல்லப் போக, எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து இழுத்தவன், “நான் சொல்வதைக் கேட்கவே கூடாது என்று முடிவில் இருக்கியா? நீ கிளீன் பண்ண போய் உன் கையெல்லாம் காயம் ஆகணுமா? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவர்களை அழைத்து நான் சொல்லிக்கொள்கிறேன். நீ பேசாமல் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு,” என்றான் கனிவாகச் சொல்லிவிட்டு, ரூம் சர்வீசிற்கு கால் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

இவ்வளவு நேரம் கடுமையான கோபத்துடன் இருந்தவனா இவன்? இப்போது எவ்வளவு கனிவாகப் பேசுகிறானே, என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.

ரூம் சர்வீஸிலிருந்து வந்து கிளீன் செய்துவிட்டுப் போக துர்காவின் போன் அடித்தது. யார் என்று எடுத்துப் பார்க்க விசாலாட்சிதான் அழைத்திருந்தார். போனை அட்டென்ட் செய்து, “ஹலோ அத்தை,” என்றால். “என்ன டா கண்ணு பண்ற? நான் எதுவும் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றார். “அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை. நான் சும்மாதான் இருக்கேன்,” என்றால் துர்கா.

“சரி டா கண்ணு… உனக்கும் ஆதிக்கும் சாயங்காலம் அப்புறம் காலையில் போட்டுக்கொள்வதற்கு டிரஸ்ஸும், நகைகளும் கொண்டு வந்திருக்கேன். வெளியேதான் நிற்கிறேன்,” என்றார். “என்ன அத்தை? நீங்க முதல்லயே இதையெல்லாம் சொல்லியிருக்கணும்,” என்றவள் எழுந்து செல்ல, அவள் செல்வதைப் பார்த்த ஆதி என்ன என்பது போலவே துர்காவைப் பார்க்க, “அத்தை வெளியே நிக்கிறாங்க,” என்றாள் தயங்கியபடியே. “ம்ம்ம்… சரி போ…” என்றான். ‘இவன்கிட்ட யாரு பெர்மிஷன் கேட்டா இப்போ? அதெல்லாம் ஆபீஸ்ல மட்டும் வெச்சுக்கிட்டா போதும். வீட்லையுமா?’ என்று முனகினாள்.

சோபாவில் சென்று அமர்ந்த ஆதி, “ஆபீஸ், வீடு எதுவா இருந்தாலும் என்கிட்ட கேட்டு தான் நீ செய்யணும், புரியுதா?” என்றான் அழுத்தமாக அவளைப் பார்த்து. ‘அவனுக்கு நான் பேசியது கேட்டுவிட்டதோ’ என்று நினைத்தவள் எதுவும் பேசாமல், “சரி” என்று தலையை ஆட்டிவிட்டு, “இப்போ நான் போய் கதவைத் திறக்கவா? இல்லை வேணாமா?” என்றாள் வேண்டுமென்றே. அவளை ஆதி முறைக்க, அவள் அவனை முறைத்துவிட்டு, “ஒவ்வொண்ணுக்கும் உன்கிட்ட கேட்டுட்டு எல்லாம் என்னால செய்ய முடியாது,” என்று அவனை முறைத்துவிட்டு கதவைத் திறந்தாள்.

வெளியில் சிரித்த முகமாக விசாலாட்சி நின்றிருக்க, அவரைப் பார்த்துவிட்டு உள்ளே அப்படியே திரும்பிப் பார்த்த துர்கா, ஆதியைப் பார்த்துவிட்டு அவன் அம்மாவையும் பார்க்க, “எப்படி அத்தை உங்களுக்குப் போய் இப்படி ஒரு பிள்ளை? நீங்க எப்படி சிரிச்ச முகமா சந்தோஷமா இருக்கீங்க? உங்க மகனும் தான் இருக்காரு, எப்ப பார்த்தாலும் மூஞ்சி தூக்கிவச்சுட்டு ‘உர்..’ன்னு இருக்காரு,” என்றாள் வேண்டுமென்று.

“அதுதான் உன்னை கல்யாணம் பண்ணி வச்சிருக்கேனே. நீ வந்து என் மகனை மாத்திட்டு இருக்கிற நம்பிக்கையிலதான். என்ன மாதிரி அவனையும் சிரிச்ச முகமா மாத்திக்கிடுவே தங்கம்,” என்றவர் ஆதியைப் திரும்பிப் பார்க்க, அவன் இவர்கள் இருவரையும் முறைத்துக்கொண்டு இருந்தான். “ஏண்டா, துர்கா சொன்ன மாதிரி இப்படித்தான் மூஞ்சி உம்முன்னு வச்சுக்கிட்டே இருப்பியா? கொஞ்சம் சிரியேன், உன் முகமும் சிரிச்சுப் பாரு எவ்வளவு அழகா இருக்கும்,” என்றார் விசாலாட்சி.

“போதும் போதும், உங்க மருமகள் கூட சேர்ந்துட்டு நீங்களும் என்னை எதுவும் சொல்லாதீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு,” என்று எழுந்து வெளியேப் போக, “இவனுக்கு எங்க வந்தாலும் வேலை வேலை. புதுசா கல்யாணம் ஆயிருக்கே. பொண்டாட்டி கூட நேரம் செலவழிச்சு அவளை நல்லாப் பார்த்துக்க வேணாமா?” என்றவர் துர்காவிடம் திரும்பி, “இந்தாடா, உனக்கும் அவனுக்கும் டிரஸ். அப்புறம் நீ நைட், காலைல போட்டுக்க நகை எல்லாம் வச்சிருக்கேன். நல்லா அழகா ரெடி ஆகி இதெல்லாம் போட்டுட்டு ராணி மாதிரி வரணும்,” என்றார். “சரி அத்தை, அப்படியே வரேன்,” என்று துர்கா கூற, அவர் எதுவும் பேசாமல் துர்காவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“என்ன அத்தை அப்படிப் பாக்குறீங்க?” என்றால் துர்கா. “உனக்கும் அவனுக்கும் ஏதாவது பிரச்சனையா டா?” என்றார். “இல்லையே, ஏன் அத்தை இப்படி கேட்கிறீங்க?” என்றால் துர்கா.

“பொய் சொல்லாதடா, ஒரு அம்மாவுக்குத் தெரியாதா தன் பொண்ணோட முகத்தை பார்த்ததுமே என்னனு? கண்டு பிடிக்க மாட்டாங்களா என்ன? நீ என் மருமகளா இருந்தாலும் நான் உன்னை என் மகள் மாதிரிதான் நினைச்சுட்டு இருக்கேன். உன் முகமே சரியில்லையே. உன் முகம் அழுது நல்லா வீங்கி இருக்கு. உன் உதட்டில் வேற காயமா இருக்கு. இதெல்லாம் பார்க்கும் போது எனக்குத் தெரிஞ்சிருச்சு. அதனாலதான் ஆதி இருக்கிறப்ப எதுவும் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன்,” என்றவர், “என்ன ஆச்சுடா?” என்று கேட்க, அவர் இதெல்லாம் கண்டுபிடித்துவிட்டார் என்று நினைத்த துர்கா என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று இருக்க, அவள் அருகில் வந்து நின்றவர் அவள் தலையை வாஞ்சையாகத் தடவி கொடுத்துவிட்டு, “என்னடா நான் இப்படி சொல்றேன்னு நீ நினைக்காத டா. ஆதி கொஞ்சம் கோபக்காரன் தான். அவனுக்குப் பிடிக்காத மாதிரியோ அல்லது அவனுக்குக் கோபம் வர்ற மாதிரி ஏதாவது ஒரு விஷயத்தைப் பேசிட்டோம்னா, அவன் அதை பிடிச்சுக்கொண்டு ரொம்பக் கூப்பிடுவான். அதை மனசுல வச்சுட்டு இருந்துட்டு, ரொம்ப நாள் கழிச்சாலும் அதை விடாமல் பிடிச்சுட்டு அதுக்கான தண்டனை கொடுத்துட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். நானும் எவ்வளவு சொல்லிப் பார்த்துட்டேன் இந்த விஷயத்தில் இப்படி எல்லாம் இருக்காதுன்னு. ஆனா அவன் மாத்திக்கிற மாதிரியே தெரியல. ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறணும்னு நான் நம்பிக்கையில் இருக்கேன். அதுக்கு முக்கிய காரணமே நீதான். நீ கண்டிப்பா அவனை மாத்தி விடுவாய் என்று நம்புறேன்டா. எனக்காக கொஞ்ச நாள் அமைதியா போடா. பிறகு உன்னைப் பத்தி நல்லாப் புரிஞ்சுக்கிட்டானா, அவன் உன் காலடியில் இருப்பான். அவனுக்கு ஒருத்தரைப் பிடிச்சுப் போயிருச்சுன்னா, யாரு நினைச்சாலும் அவங்களை எங்கேயும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டான் டா,” என்றார்.

விசாலாட்சி கூறியதெல்லாம் கேட்டு அமைதியாக இருந்த துர்கா, மனதிற்குள் சற்று முன் அவனைப் பற்றிய எண்ணம் அவளுக்குத் தோன்ற, ‘இப்போதுதான் இவனை விட்டுப் பிரிந்து போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனா அது இந்த மாதிரி இப்படி சொல்றாங்க. நான் ஆதியை விட்டுப் பிரிந்து போறப்ப அத்தையோட மனசு எவ்வளவு கஷ்டப்படுமோ? கடவுளே… இவங்களுக்கு நீதான் தைரியத்தைக் கொடுக்கணும்,’ என்று மனதில் கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.

“என் மனசுல இருக்குறத நான் சொல்லிட்டேன் டா. எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க,” என்று விசாலாட்சி கூற, “அத்தை, அப்படி எல்லாம் நீங்க சொல்லாதீங்க. நீங்க எனக்கு அம்மா மாதிரி. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குவேன். நான் பொறுமையா போகிறேன் அத்தை. நான் இனிமேல் ஆதிகிட்ட பார்த்து நடந்துக்கிறேன்,” என்று கூறினாள் துர்கா.

அவளைக் கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவர், “சரிடா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அதுக்கப்புறம் சாயங்காலம் ரெடி ஆகி சீக்கிரமா வந்துருங்க. ரிசப்ஷனுக்கு போலாம்,” என்றவர், “அதே மாதிரி நான் கீர்த்திகாவுக்கும், அம்மா, அப்பாவுக்கும் எல்லாத்துக்கும் டிரஸ், நகை எல்லாம் கொடுத்துட்டேன் டா, சரியா? நீ அவங்க கிட்டயும் ஒரு வாட்டி ஏதாவது வேணும்னா கேட்டுக்கோ. அவங்க என்கிட்ட ஏதாவது வேணும்னு சொல்ல தயக்கப்படுவாங்க. நீ போய் கேட்டுக்க அவங்க கிட்ட எதுவும் வேணுமா என்னன்னு. நம்மள நம்பி வந்திருக்காங்க. அவங்களுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது, சரியா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அறையை விட்டு வெளியே வந்த விசாலாட்சி, அங்கே ஆதி வெளியே நின்று கொண்டிருந்திருப்பதைப் பார்த்தவர், அவன் அருகில் வந்து, “கண்ணா, ஏதோ வேலை இருக்குன்னு வெளிய வந்த. ஏன்டா இங்கே நின்னுட்டு இருக்கே?” என்று கேட்க, “அது எல்லாம் ஒண்ணும் இல்லம்மா. போன் பேசிட்டு வந்தேன். போன் பேசிட்டேன் அப்படியே சும்மா நின்னுட்டேன்,” என்றான் ஆதி.

அவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் கையைப் பார்க்க, அவன் கையில் கட்டுப் போடப்பட்டிருக்க, விசாலாட்சி பதறிப்போய், “டேய் கண்ணா, என்னடா ஆச்சு உன் கையில? காயம்… கட்டு போட்டு இருக்கு. எப்படி அடி பட்டுச்சு?” என்று கேட்டார். “அது ஒண்ணும் இல்லம்மா. பாத்ரூம்ல கண்ணாடி உடைந்து கையை கிழிச்சுடுச்சு, அதுதான்,” என்றான் கையைப் பார்த்துக்கொண்டு. “சரிப்பா, கொஞ்சம் கவனமா இரு சரியா?” என்றால் விசாலாட்சி. “சரிம்மா,” என்றான் ஆதி.

“சரிப்பா, உனக்கு டிரஸ் துர்காகிட்ட கொடுத்து இருக்கேன். சாயங்காலம் ரெண்டு பேரும் நல்லா டிரஸ் பண்ணிட்டு ரிசப்ஷனுக்கு வந்துருங்க. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எல்லாரும் பொறாமைப்படணும் இப்படி ஒரு ஜோடியானு…. சரியா? அவ்வளவு அழகா வரணும் ரெண்டு பேரும். இதை மட்டும் செய் டா,” என்றவர், “சரி, அம்மா ரூமுக்கு போறேன்,” என்று செல்லப் போனவர், திரும்பி ஆதியிடம் வந்து, “கண்ணா, அம்மா ஒண்ணு சொன்னா நீ என்ன தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றார்.

“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? நீங்க ஏதாவது சொல்லுங்க, நான் அப்படி ஏதாவது உங்களுக்கு நடந்துக்குவேன்? அதெல்லாம் இல்ல, என்னன்னு சொல்லுங்க நான் கேட்கிறேன்,” என்றான் ஆதி.

அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்பட்ட விசாலாட்சி, “நம்மளை நம்பி ஒரு பொண்ணு, சொந்த பந்தத்தையும் எல்லாரையும் விட்டுட்டு உன் கூட வந்திருக்கா அப்படின்னா, அவளுக்கு உன் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்குனு அர்த்தம். அப்படி நம்மள நம்பி வந்த பொண்ணுகிட்ட நம்மளோட கோபத்தை, ஈகோவை எதையும் காட்டக்கூடாது. அவங்களை நம்ம நல்லாப் பார்த்துக்கணும்கிறது மட்டும்தான் இருக்கணும். ஏன்னா நம்மள நம்பி வந்திருக்கவங்களும் நம்ம தானே பார்த்துக்கணும்? நீ எல்லார்கிட்டயும் எப்படி நடந்துக்குவேன்னு எனக்கு அம்மாவுக்குத் தெரியும். அதே போலத்தான் துர்காகிட்டயும் நடந்துக்கணும்னு நினைக்கிறேன். ஆனா மத்தவங்களும் துர்கா ஒண்ணு கிடையாது. அவ உன்னை கல்யாணம் பண்ணி இருக்கா. உன் வாழ்க்கை முழுக்க உன் கூட வரப்போறா. அப்போ அவகிட்ட நீ எப்படி இருக்கணும்னு உனக்கு தெரிஞ்சுக்க வேண்டாமா? அவளை கொஞ்சம் பார்த்து நடத்துடா, பாவம் டா அந்த பொண்ணு. அழுது முகமெல்லாம் வீங்கி, ரொம்ப மனசு வாடிப்போய் இருக்கா. அவ முகத்தைப் பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருக்கு. இதுவே நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருந்து அவளை கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்தில் இப்படி இருந்தா அவளைப் பார்க்கும்போது நமக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? துர்காவோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளை இந்த மாதிரி பார்த்தா எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்னு கொஞ்சம் யோசி டா…. நீ கொஞ்சமாவது உன் கோபத்தை குறைச்சுக்க,” என்று கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார்.

அவர் செல்வதையே எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, அவன் அம்மா கூறியது எல்லாம் கேட்டதும், ‘என் அம்மா வந்து என்னிடம் ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள் என்று சொல்லும் அளவுக்கு நான் நடந்துவிட்டேனா?’ என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பியவன், ‘இனியும் அவரை சங்கடப்படுத்தும் படி நான் நடந்துகொள்ளவே கூடாது,’ என்று மனதில் நினைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்.

அவன் உள்ளே சென்று பார்க்கும் போது துர்கா கட்டிலில் ஒரு ஓரமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து அவள் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்க, அவள் நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அம்மா சொன்னது போலவே அவள் முகம் எல்லாம் அழுது வீங்கி இருந்தது. துர்கா அவ்வாறு பார்க்கவே ஆதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இனிமேல் துர்காவிடம் என் கோபத்தைக் காட்டிக்கொள்ளவே கூடாது என்று நினைத்தவன், அவள் முகத்தைப் பார்த்தவரே அவள் அருகில் படுத்து அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் அப்படியே அவனும் தூங்கிப் போனான்.

EPISODE 32

“உன்னை பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. என்னைத் தொடாதே! நீ தொட்டால் உடலெல்லாம் நெருப்பைப் பற்ற வைத்தது போலிருக்கிறது,” என்று கூறி வெளியேறப் போன துர்காவை நோக்கி, “என்ன டி சொன்னே? நான் தொட்டால் உனக்கு எரிகிறதா? நானும் ‘போனால் போகட்டும்’ என்று பார்த்தால் நீ… நீ என்னை மிகவும் கேவலமாக நினைத்துவிட்டுக் கிளம்புகிறாய்.

இப்போது நான் ஒரு இடம் விடாமல் தொட்டுத் தடவுகிறேன். அதன் பிறகு மீண்டும் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டிக்கொள்!” என்றவன் துர்காவை நெருங்கினான்.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த துர்கா, ஆதி அவள் அருகில் நெருங்கி வரவும், அவனைத் தள்ளிவிட்டு வெளியே செல்லப் போக, “எங்கே டி ஓடுகிறாய்?” என்றவன் அவள் சேலைத் தலைப்பைப் பற்றி இழுக்க, அவன் இழுத்த இழுப்பில் அவள் மார்பின் மீது மோதி நின்றாள். அவளை அப்படியே இழுத்த வேகத்தில் தன் கையில் தூக்கியவன், அவளைத் தூக்கி கட்டிலில் போட்டான்.

கட்டிலில் துர்காவைப் போட்டவன், துர்கா கட்டிலில் இருந்து எழுந்திருக்கப் போக, அவளைத் திரும்பவும் படுக்க வைத்தவன் சட்டென்று அவள் மேல் படுத்துவிட்டான்.

அவன் செயலால் அதிர்ச்சியான துர்கா, “ஆதி! என்ன பண்ற? விருப்பம் இல்லாத ஒரு பொண்ணுகிட்ட இப்படி எல்லாம் நடந்துகிறியே! உனக்கு வெட்கமாக இல்லையா? முதலில் என் மேலிருந்து எழுந்திரு ஆதி! ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள்.

“இப்போதுதான் அவ்வளவு திமிராகப் பேசினாய். இப்போது நான் இப்படி எல்லாம் பணிவேன்னு தெரிந்ததும் கெஞ்சுகிற மாதிரி நடிக்கிறாயா டி?” என்றவன் தாமதிக்காமல் குனிந்து அவள் இதழைச் சிறை செய்தான்.

துர்கா முதலில் ஆதி தனக்கு முத்தம் கொடுத்ததில் அதிர்ந்தாலும், பின் சுதாரித்தவள் அவன் முதுகில் அடித்து அவனைத் தன்னிடமிருந்து விலக்கப் போராடினாள். ஆனால் ஆதி, துர்காவின் மேல் படுத்திருந்ததால் அவளால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை.

தன்னை அடித்துக்கொண்டிருந்த துர்காவின் கையை அவன் கைகளால் இருபுறமும் இழுத்து, அவள் கைகளில் தன் கைகளைக் கோர்த்து அசைய விடாமல் இருபுறமும் அழுத்திப் பிடித்தவன், துர்கா அவனிடம் தன் இதழைப் பிரிக்கத் தலையை இங்கும் அங்கும் ஆட்ட, அவன் ஒரு கையை விடுத்து அவள் தலையை அசைய விடாமல் பிடித்துக்கொண்டு முத்தத்தைத் தீவிரமாக்கினான்.

அவனிடம் போராட முடியாமல் வழுவிழந்த துர்காவின் கைகளும் உடலும் துவண்டு போக, இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் ஆதி இல்லை. அவள் மேல் இருந்த கோபத்தை முழுமையாக அவளிடம் காட்டிக்கொண்டிருந்தான்.

தான் தொடுவது தீயாய் எரிவது போல இருப்பதாக துர்கா கூறியதைக் கேட்டதிலிருந்து, ஆதிக்கு துர்காவை இதற்கு மேலும் சும்மா விட்டுவைக்க அவன் மனம் விரும்பவில்லை.

‘இனி என்ன ஆனாலும் சரி, இவளைத் தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானமாய் தன் மனதில் முடிவெடுத்தவன், ‘அவனுக்கு அவள் மீது என்ன உரிமை இருக்கிறது’ என்று அவள் கேட்ட கேள்விக்குப் பதில் தரும் விதமாக, ‘நான் உனக்கு உரிமையானவன். நீ எனக்கு உரிமையானவள். உன் கழுத்தில் இருக்கும் தாலியே அதற்குச் சாட்சி’ என்று மனதில் நினைத்துக்கொண்டே அவள் இதழை வன்மையாகச் சுவைக்க ஆரம்பித்திருந்தான்.

ஆனால், இங்கு துர்காவின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. ‘தான் காதலித்த அந்த யதார்த்தமான ஆதி இவன் இல்லை… பெண்களை மதித்து அவர்களுக்கு மரியாதையைத் தரும் ஆதி இவன் இல்லை… இவன் குணம் இதுவல்ல. இப்படிப்பட்ட ஆதி எனக்குத் தேவையில்லை. இனிமேல் என்ன ஆனாலும் சரி, சீக்கிரமாகவே இவனிடமிருந்து பிரிந்துவிட வேண்டும்’ என்று தீர்க்கமாக முடிவெடுத்திருந்தாள்.

ஆனாலும், அவள் இன்னொரு மனம் தான் காதலித்தவனே தானாக வந்து அவளுக்கு முத்தமிடுவதை நினைத்துச் சந்தோஷப்பட்டது. அவன் அருகாமையும், அவன் வாசமும் துர்காவுக்குப் பிடிக்கத்தான் செய்தது.

“சீ… மானம் கெட்ட மனமே! உனக்கு வெட்கமாக இல்லை? உன்னை ஒரு காதலியாக வேண்டாம்… ஏன்! அவன் மனைவியாகக்கூட எண்ணாமல், நான் கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னைச் சித்திரவதை செய்ய நினைக்கும் ஆதி இவன்! உனக்காக ஒரு நண்பனாகக்கூட இருக்க நினைக்காத ஆதி இவன். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் உன் காதலன் ஆதிக்குத் துளியும் கிடையாது. உன் காதல் என்றோ செத்துப்போய்விட்டது,” என்று இப்படி எல்லாம் நினைத்துக்கொண்டு, அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல் தன்னையே நொந்துகொண்ட துர்காவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.

ஆதி துர்காவுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே மேலும் மேலும் தன் பாரம் முழுவதையும் அவள் மேல் போட்டு, மேலும் அழுத துர்காவுக்கு மூச்சு விடக்கூட இடம் கொடுக்காமல் அவள் இதழைச் சுவைக்க, அவன் வெறியில் அவள் உதட்டைக் கடித்துவிட, அவள் சூடான இரத்தம் அவன் நாவில் சுவையைக் கூட்ட, அது மேலும் அவன் உடல் சூட்டை அதிகப்படுத்த, அவன் கைகள் தானாக அவள் கைகளிலிருந்து விடுபட்டு அவன் உடலில் ஊர்வலம் செய்ய ஆரம்பித்தன.

அவன் கைகள் அவள் இடுப்பிலிருந்து ஒவ்வொரு படியாக மேலே உயர, அவள் சருமத்தின் மென்மையை அவன் கைகள் உணரவும், அவளை இப்போதே தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற வேகம் அவனுக்குள் தோன்ற, இடையில் இருந்த கை மேலே ஏறி அவள் மென்மையைச் சேலையோடு சேர்ந்து முதல் முறையாகத் தொட, ஆதி அவள் மென்மையின் மென்மையில் பித்தனானான். அவன் கை அவள் இடது மார்பை வன்மையாகத் தீண்ட, அவன் தன் மார்பில் கை வைத்ததும் அதிர்ச்சியில் உறைந்த துர்கா, அவன் கைகளைத் தன் மீதிருந்து விலக்க நினைக்க, அவன் தன் மார்பில் வைத்திருந்த கையை விலக்க நினைத்து அவன் கையைப் பிடித்துக்கொண்டு ‘வேண்டாம்’ என்பது போலவே தலையை ஆட்டி, அவன் விழிகளை கண்ணீருடன் பார்க்க, அதே நேரம் கண்களில் கோபமும் காமமும் சிறிதும் குறையாமல் துர்காவின் கண்களைப் பார்த்த ஆதிக்கு, அவள் கண்களில் தெரிந்த வலி அப்பட்டமாகக் காட்ட, அவன் மூளைக்குள் யாரோ சம்மட்டியால் அடித்தது போல அவனுக்கு உரைக்க, சட்டென்று அவளை விட்டு விலகியவன், எழுந்து வேகமாகத் தன் நிலையை, தான் நடந்துகொண்டதை நினைத்து தன்னைத் தானே கடிந்துகொண்டவன், துர்காவைத் திரும்பியும் பாராது தன் உடல் சூட்டைக் கட்டுப்படுத்திக்கொள்ள பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அவன் பாத்ரூம் சென்று கதவைச் சாற்றியதைப் பார்த்த துர்கா, அவன் விட்டுச் சென்ற அதே நிலையில் படுத்திருந்தவள், எழுந்திருக்கக்கூட மனமில்லாமல் தன் கைகளால் முகத்தை மூடி ஓ…வென்று கத்தி அழ ஆரம்பித்தாள்.

துர்கா அழுவதைப் பாத்ரூமில் இருந்து கேட்டவனுக்கு இதயம் ஏனோ கனத்தது. தன் மீதே தனக்குக் கோபம் வர, பாத்ரூம் சுவற்றில் ஓங்கி குத்திக்கொண்டே இருந்தான். ‘தனக்கு இந்தத் தண்டனை போதாது’ என்று நினைத்தவன், அங்கிருந்த கண்ணாடியில் ஓங்கி குத்த, அது சுக்கு நூறாக உடைந்து சிதறியது. அவன் கையையும் பதம் பார்த்திட, கைகளிலிருந்து இரத்தம் வடிந்தது.

அழுது கொண்டிருந்த துர்கா பாத்ரூமிற்குள் ஏதோ உடையும் சத்தம் கேட்கவும் பதறியவள், கட்டிலில் இருந்து இறங்கி பாத்ரூம் கதவைத் தட்டினாள்.

உள்ளிருந்த ஆதிக்கு அவள் கதவு தட்டும் சத்தம் கேட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக, உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தெரிந்த காயங்கள் நிறைந்த, தழும்புகளும் கொப்புளங்களும் நிறைந்த தன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

‘இந்த முகம்தானே இவளுக்குப் பிடிக்கவில்லை? இதனால்தானே அவள் என்னை வெறுத்து ஒதுக்குகிறாள்? இந்த முகத்தையே இவளுக்குப் பிடிக்க வைத்து, இவளை என்மீது காதல் கொள்ள வைக்கிறேன்’ என்று மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

கதவு தட்டியும் உள்ளிருந்து எதுவும் சத்தம் கேட்காமல் இருக்கவும் பயந்துபோன துர்கா அழுது கொண்டே, “ஆதி… ஆதி… என்ன ஆச்சு? ஏன் கதவைத் திறக்க மாட்டேங்குற? கதவைத் திற ஆதி!” என்று கத்திக்கொண்டே இருக்க, அவள் சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்த ஆதி தன் கையைக் கழுவிக்கொண்டு, முகத்தையும் கழுவி விட்டு கதவைத் திறந்தான்.

அவனை கேள்வியுடன் பார்த்த துர்கா, “ஆதி! ஏதோ உடைந்த சத்தம் கேட்டது…” என்று கேட்டுக்கொண்டே பாத்ரூமிற்குள் எட்டிப் பார்க்க அங்கே கண்ணாடி உடைந்து சிதறிக்கிடந்தது.

அதைப் பார்த்ததும் பதறிய துர்கா ஆதியை மேலிருந்து கீழாகப் பார்க்க, அவன் என்னதான் கைகளைக் கழுவி இருந்தாலும் கண்ணாடி கிழித்த இடத்திலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டு தரையில் விழுந்துகொண்டு இருந்தது.

இதனைப் பார்த்த துர்கா பயந்துவிட்டாள். “என்ன ஆதி இது! உன் கையில் இருந்து இரத்தம் வருகிறது!” பதறிக்கொண்டே அவன் கைகளைப் பிடித்து அழுது கொண்டே பார்க்க, இரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டு இருக்க, அவன் கைகளைப் பிடித்து இழுத்து வந்தவள் அவனை மெத்தையில் அமர வைத்துவிட்டு, பதட்டத்துடன் அந்த அறையில் எதுவும் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கிறதா என்று தேடியவள், கடைசியில் கதவின் அருகில் இருந்த ஒரு அலமாரியில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸைப் பார்த்ததும் எடுத்துக்கொண்டு வேகமாக வந்து அவன் கால் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவள், அவன் கைகளில் வழிந்த இரத்தத்தைச் சுத்தம் செய்து காயத்திற்கு மருந்து போட்டு அழுது கொண்டே கட்டு போட்டுக்கொண்டிருந்தாள்.

‘தான் தொட்டால் எரிகிறது என்று சொல்லி விலகிப் போக நினைப்பவளா இவள்? தன் கையில் வழிந்த இரத்தத்தைப் பார்த்துப் பதறிப்போய் அழுதுகொண்டு இவ்வளவு அக்கறையாக தனக்கு மருந்து போட்டுவிடும் துர்காவைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி.’

‘இவளுக்கு என் மேல் பிரியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது வெறும் மனிதாபிமான அடிப்படையில் அவள் எனக்குச் செய்யும் முதலுதவி இல்லை. துர்காவின் மனதில் கண்டிப்பாக எனக்கென்று ஒரு இடம் இருக்க வேண்டும். இவள் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்னை வெறுப்பது போலவே நடிக்கிறாள்’ என்று நினைத்தவன், ‘அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து, அவளுக்கு என்மேல் இருக்கும் காதலை அவள் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டவன் அவளையே விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்குக் கட்டுப் போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்து ஆதியைப் பார்க்க, அவன் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றதும் சட்டென்று எழுந்து சென்றவள், கடுப்புடன் எடுத்த பொருட்களை எல்லாம் அங்கேயே வைத்துவிட்டு வந்தவள், பாத்ரூம் சென்று உடைந்த கண்ணாடித் துகள்களைக் கிளீன் செய்யப் போக, “எங்கே போற?” என்றான் ஆதி. “கண்ணாடியெல்லாம் பாத்ரூமில் சிதறி இருக்கு. அதைக் கிளீன் பண்ணப் போறேன்,” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் ரூம் சர்வீசுக்குக் கால் பண்ணிச் சொல்றேன். அவங்க வந்து கிளீன் பண்ணிக்குவாங்க,” என்றான்.

“இல்லை, பரவாயில்லை. அவங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே கிளீன் பண்றேன்,” என்று உள்ளே செல்லப் போக, எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து இழுத்தவன், “நான் சொல்வதைக் கேட்கவே கூடாது என்ற முடிவில் இருக்கியா? நீ கிளீன் பண்ணப் போய் உன் கையெல்லாம் காயம் ஆகணுமா? அது எல்லாம் ஒன்றும் வேண்டாம். அவர்களை அழைத்து நான் சொல்லிக்கொள்கிறேன். நீ பேசாமல் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு,” என்றான் கனிவாகச் சொல்லிவிட்டு, ரூம் சர்வீசுக்குக் கால் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான்.

‘இவ்வளவு நேரம் கடுமையான கோபத்துடன் இருந்தவனா இவன்! இப்போது எவ்வளவு கனிவாகப் பேசுகிறானே!’ என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.

ரூம் சர்வீசில் இருந்து வந்து கிளீன் செய்துவிட்டுப் போக, துர்காவின் ஃபோன் அடித்தது. ‘யார்’ என்று எடுத்துப் பார்க்க, விசாலாட்சிதான் அழைத்திருந்தார்.

ஃபோனை அட்டென்ட் செய்து, “ஹலோ அத்தை,” என்றாள் விசாலாட்சி. “என்னடா கண்ணு பண்ற? நான் எதுவும் உங்களைத் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை. நான் சும்மாதான் இருக்கேன்,” என்றாள் துர்கா.

“சரிடா கண்ணு… உனக்கும் ஆதிக்கும் சாயங்காலத்திற்கும் அப்புறம் காலையில் போட்டுக்கொள்வதற்கும் டிரஸ்ஸும், நகைகளும் கொண்டு வந்திருக்கேன். வெளியேதான் நிற்கிறேன்,” என்றார்.

“என்ன அத்தை! நீங்க முதல்லயே இதைச் சொல்லி இருக்கணும்,” என்றவள் எழுந்து செல்ல, அவள் செல்வதைப் பார்த்த ஆதி ‘என்ன’ என்பது போலவே துர்காவைப் பார்க்க, “அத்தை வெளியே நிக்குறாங்க,” என்றாள் தயங்கியபடியே.

“ம்ம்ம்… சரி போ…” என்றான். ‘இவன்கிட்ட யாரு பர்மிஷன் கேட்டா இப்போ? அதெல்லாம் ஆபீஸ்ல மட்டும் வெச்சுக்கிட்டா போதும். வீட்லையுமா?’ என்று முணுமுணுக்க, சோபாவில் சென்று அமர்ந்த ஆதி, “ஆபீஸ், வீடு எதுவாக இருந்தாலும் என்கிட்ட கேட்டுத்தான் நீ செய்யணும். புரியுதா?” என்றான் அழுத்தமாக. அவனைப் பார்த்து,

‘அவனுக்கு நான் பேசியது கேட்டுவிட்டதோ?’ என்று நினைத்தவள், எதுவும் பேசாமல், “சரி,” என்று தலையை ஆட்டிவிட்டு, “இப்போ நான் போய் கதவைத் திறக்கவா? இல்லை வேண்டாமா?” என்றாள் வேண்டுமென்றே.

அவளை ஆதி முறைக்க, அவள் அவனை முறைத்துவிட்டு, “ஒவ்வொன்றுக்கும் உன்கிட்ட கேட்டுட்டு எல்லாம் என்னால செய்ய முடியாது,” என்று அவனை முறைத்துவிட்டுக் கதவைத் திறந்தாள்.

வெளியில் சிரித்த முகமாக விசாலாட்சி நின்று இருக்க, அவரைப் பார்த்துவிட்டு, உள்ளே அப்படியே திரும்பிப் பார்த்த துர்கா, ஆதியைப் பார்த்துவிட்டு அவன் அம்மாவையும் பார்க்க, “எப்படி அத்தை உங்களுக்குப் போய் இப்படி ஒரு பிள்ளை! நீங்க எப்படி சிரித்த முகமாகச் சந்தோஷமாக இருக்கீங்க? உங்க மகனும் தான் இருக்காரு. எப்பப் பார்த்தாலும் மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு ‘உர்’னு இருக்காரு!” என்றாள் வேண்டுமென்று.

“அதுதான் உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சேனே. நீ வந்து என் மகனை மாத்திட்டு இருகிற நம்பிக்கையில்தான். என்ன மாதிரி அவனையும் சிரித்த முகமாக மாத்திடுவே தங்கம்,” என்றவர் ஆதியைத் திரும்பிப் பார்க்க அவன் இவர்கள் இருவரையும் முறைத்துக்கொண்டிருந்தான்.

“ஏண்டா! துர்கா சொன்ன மாதிரி இப்படித்தான் மூஞ்சி உம்முனு வச்சுக்கிட்டே இருப்பியா? கொஞ்சம் சிரியேன்! உன் முகமும் சிரிச்சுப் பாரு! எவ்வளவு அழகாக இருக்கும்!” என்றார் விசாலாட்சி.

“போதும்! போதும்! உங்க மருமகள் கூடச் சேர்ந்துட்டு நீங்களும் என்னை எதுவும் சொல்லாதீங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு,” என்று எழுந்து வெளியே போக, “இவனுக்கு எங்க வந்தாலும் வேலை, வேலை! புதுசா கல்யாணம் ஆயிருக்கே! பொண்டாட்டி கூட நேரம் செலவழிச்சு அவளை நல்லா பார்த்துக்க வேணாமா?” என்றவர் துர்காவிடம் திரும்பி, “இந்தாடா, உனக்கும் அவனுக்கும் டிரஸ், அப்புறம் நீ நைட்டும் காலையிலும் போட்டுக்க நகை எல்லாம் வச்சிருக்கேன். நல்லா அழகாக ரெடியாகி இதெல்லாம் போட்டுட்டு ராணி மாதிரி வரணும்,” என்றார்.

“சரி அத்தை, அப்படியே வரேன்,” என்று துர்கா கூற, அவர் எதுவும் பேசாமல் துர்காவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

“என்ன அத்தை அப்படிப் பாக்குறீங்க?” என்றால் துர்கா. “உனக்கும் அவனுக்கும் ஏதாவது பிரச்சனையாடா?” என்றார்.

“இல்லையே. ஏன் அத்தை இப்படி கேட்கிறீங்க?” என்றால் துர்கா.

“பொய் சொல்லாதடா! ஒரு அம்மாவுக்குத் தெரியாதா? தன் பொண்ணோட முகத்தைப் பார்த்ததுமே என்னன்னு கண்டு பிடிக்க மாட்டாங்களா என்ன? நீ என் மருமகளாக இருந்தாலும் நான் உன்னை என் மகள் மாதிரிதான் நினைச்சுட்டு இருக்கேன். உன் முகமே சரியில்லையே! உன் முகம் அழுது நல்லா வீங்கி இருக்கு. உன் உதட்டில் வேற காயமா இருக்கு. இதெல்லாம் பார்க்கும்போது எனக்குத் தெரிஞ்சிருச்சு. அதனால்தான் ஆதி இருக்கிறப்ப எதுவும் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன்,” என்றவர், “என்ன ஆச்சுடா?” என்று கேட்க, அவர் இதெல்லாம் கண்டுபிடித்துவிட்டார் என்று நினைத்த துர்கா என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று இருக்க, அவள் அருகில் வந்து நின்றவர் அவள் தலையை வாஞ்சையாகத் தடவி கொடுத்துவிட்டு, “என்னடா! நான் இப்படிச் சொல்றேன்னு நீ நினைக்காதடா. ஆதி கொஞ்சம் கோபக்காரன்தான். அவனுக்குப் பிடிக்காத மாதிரியோ அல்லது அவனுக்குக் கோபம் வர்ற மாதிரி ஏதாவது ஒரு விஷயத்தைப் பேசிட்டோம்னா, அவன் அதைப் பிடித்துக்கொண்டு ரொம்பக் கோபப்படுவான். அதை மனசுல வச்சுட்டு இருந்துட்டு, ரொம்ப நாள் கழிச்சாலும் அதை விடாமப் பிடிச்சுட்டு, அதுக்கான தண்டனை கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். நானும் எவ்வளவு சொல்லிப் பார்த்திட்டு, ‘இந்த விஷயத்தில் இப்படி எல்லாம் இருக்கக்கூடாது’ன்னு. ஆனா, அவன் மாத்திக்கிற மாதிரியே தெரியலை. ஆனா, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறணும்னு நான் நம்பிக்கையில் இருக்கேன். அதுக்கு முக்கிய காரணமே நீதான். நீ கண்டிப்பா அவனை மாத்தி விடுவாய் என்று நம்புறேன்டா… எனக்காகக் கொஞ்ச நாள் அமைதியாகப் போடா. பிறகு உன்னைப்பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டானா, அவன் உன் காலடியில் இருப்பான். அவனுக்கு ஒருத்தரைப் பிடிச்சுப்போயிருச்சுன்னா, யாரு நினைச்சாலும் அவங்களை எங்கேயும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டான்டா,” என்றார்.

விசாலாட்சி கூறியதெல்லாம் கேட்டு அமைதியாக இருந்த துர்கா, மனதிற்குள் சற்று முன் அவனைப் பற்றிய எண்ணம் அவளுக்குத் தோன்ற, ‘இப்போதுதான் இவனை விட்டுப் பிரிந்து போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனா, அத்தை இப்படிச் சொல்றாங்க. நான் ஆதியை விட்டுப் பிரிந்து போறப்ப அத்தையோட மனசு எவ்வளவு கஷ்டப்படுமோ! கடவுளே… இவர்களுக்கு நீதான் தைரியத்தைக் கொடுக்கணும்’ என்று மனதில் கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.

“என் மனசுல இருக்கிறதை நான் சொல்லிட்டேன்டா. எதுவும் தப்பாக எடுத்துக்காதீங்க,” என்று விசாலாட்சி கூற, “அத்தை! அப்படி எல்லாம் நீங்க சொல்லாதீங்க. நீங்க எனக்கு அம்மா மாதிரி. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குவேன். நான் பொறுமையாகப் போகிறேன் அத்தை. நான் இனிமேல் ஆதிகிட்ட பார்த்து நடந்துக்கிறேன்,” என்று கூறினாள் துர்கா.

அவளைக் கட்டிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவர், “சரிடா. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அதுக்கப்புறம் சாயங்காலம் ரெடியாகிச் சீக்கிரமா வந்துருங்க. ரிசப்ஷனுக்குப் போலாம்,” என்றவர், “அதே மாதிரி, நான் கீர்த்திகாவுக்கும் அம்மா அப்பாவுக்கும் எல்லாத்துக்கும் டிரஸ் நகை எல்லாம் கொடுத்துட்டேன்டா. சரியா? நீ அவங்ககிட்டயும் ஒரு வாட்டி ஏதாவது வேணும்னா கேட்டுக்கோ. அவங்க என்கிட்ட ‘ஏதாவது வேணும், செய்யணும்’னு சொல்லத் தயக்கப்படுவாங்க. நீ போய் கேட்டுக்க. அவங்ககிட்ட எதுவும் வேணுமா என்னன்னனு? நம்மளை நம்பி வந்திருக்காங்க. அவங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது. சரியா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அறையை விட்டு வெளியே வந்த விசாலாட்சி, அங்கே ஆதி வெளியே நின்று கொண்டிருந்திருப்பதைப் பார்த்தவர், அவன் அருகில் வந்து, “கண்ணா! ஏதோ வேலை இருக்குன்னு வெளிய வந்த. ஏன்டா இங்கே நின்னுட்டு இருக்கே?” என்று கேட்க, “அது எல்லாம் ஒன்னும் இல்லைமா. போன் பேசிட்டு வந்தேன். போன் பேசிட்டேன். அப்படியே சும்மா நின்னுட்டேன்,” என்றான் ஆதி.

அவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் கையைப் பார்க்க அவன் கையில் கட்டுப் போடப்பட்டிருக்க, விசாலாட்சி பதறிப்போய், “டேய் கண்ணா! என்னடா ஆச்சு உன் கையில காயம்… கட்டுப் போட்டு இருக்க? எப்படி அடி பட்டுச்சு?” என்று கேட்டார். “அது ஒன்னும் இல்லைமா. பாத்ரூம்ல கண்ணாடி உடைந்து கையைக் கிழிச்சிடுச்சு. அதுதான்,” என்றான் கையைப் பார்த்துக்கொண்டு. “சரிப்பா! கொஞ்சம் கவனமாக இரு சரியா,” என்றால் விசாலாட்சி. “சரிமா,” என்றான் ஆதி.

“சரிப்பா! உனக்கு டிரஸ் துர்காகிட்ட கொடுத்திருக்கேன். சாயங்காலம் ரெண்டு பேரும் நல்ல டிரஸ் பண்ணிட்டு ரிசப்ஷனுக்கு வந்துருங்க. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எல்லாரும் பொறாமைப்படணும். ‘இப்படி ஒரு ஜோடியானு…’ சரியா? அவ்வளவு அழகாக வரணும் ரெண்டு பேரும். இதை மட்டும் செய்யிடா,” என்றவர், “சரி, அம்மா ரூமுக்குப் போறேன்,” என்று செல்லப் போனவர், திரும்பி ஆதிகிட்ட வந்து, “கண்ணா! அம்மா ஒன்னு சொன்னா நீ என்னைத் தப்பாக எடுத்துக்க மாட்டியே?” என்றார்.

“என்னம்மா இப்படிச் சொல்றீங்க! நீங்க ஏதாவது சொல்லுங்க. நான் அப்படி ஏதாவது உங்களுக்கு நடந்துக்குவேன்? அதெல்லாம் இல்லை. என்னன்னு சொல்லுங்கம்மா,” என்றான் ஆதி.

அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்பட்ட விசாலாட்சி, “நம்மளை நம்பி ஒரு பொண்ணு, சொந்த பந்தத்தையும் எல்லாரையும் விட்டுட்டு உன் கூட வந்திருக்கா அப்படின்னா, அவளுக்கு உன்மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்குன்னு அர்த்தம். அப்படி நம்மளை நம்பி வந்த பொண்ணுகிட்ட நம்மளோட கோபத்தை, ஈகோவை எதையும் காட்டக்கூடாது. அவங்களை நம்ம நல்லா பார்த்துக்கணும்கிறது மட்டும்தான் இருக்கணும். ஏன்னா, நம்மளை நம்பி வந்திருக்கவங்க நம்மதானே பார்த்துக்கணும்? நீ எல்லார்கிட்டயும் எப்படி நடந்துக்குவேன்னு எனக்கு அம்மாவுக்குத் தெரியும். அதே போலத்தான் துர்காகிட்டயும் நடந்துக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, மத்தவங்களும் துர்காவும் ஒன்னு கிடையாது. அவ உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கா. உன் வாழ்க்கை முழுக்க உன் கூட வரப்போறா. அப்போ அவகிட்ட நீ எப்படி இருக்கணும்னு உனக்குத் தெரிஞ்சுக்க வேண்டாமா? அவளைக் கொஞ்சம் பார்த்து நடத்துடா. பாவம்டா அந்தப் பொண்ணு. அழுது முகமெல்லாம் வீங்கி ரொம்ப மனசு வாடிப்போய் இருக்கா. அவ முகத்தைப் பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருக்கு. இதுவே நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருந்து, அவளைக் கல்யாணம் பண்ணி கொடுத்த இடத்தில் இப்படி இருந்தா, அவளைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? துர்காவோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளை இந்த மாதிரி பார்த்தா எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு கொஞ்சம் யோசிடா… நீ கொஞ்சமாவது உன் கோபத்தைக் குறைச்சுக்க,” என்று கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார்.

அவர் செல்வதையே எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, அவன் அம்மா கூறியது எல்லாம் கேட்டதும், ‘என் அம்மா வந்து என்னிடம் ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் நடந்து விட்டேனா?’ என்று தனக்குத் தானே கேள்வி எழுப்பியவன், ‘இனியும் அவரை சங்கடப்படுத்தும் படி நான் நடந்துகொள்ளவே கூடாது’ என்று மனதில் நினைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்.

அவன் உள்ளே சென்று பார்க்கும் போது துர்கா கட்டிலில் ஒரு ஓரமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து அவள் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்க, அவள் நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அம்மா சொன்னது போலவே அவள் முகம் எல்லாம் அழுது வீங்கி இருந்தது.

துர்காவை அவ்வாறு பார்க்கவே ஆதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இனிமேல் துர்காவிடம் என் கோபத்தைக் காட்டிக்கொள்ளவே கூடாது’ என்று நினைத்தவன், அவள் முகத்தைப் பார்த்தவரே அவள் அருகில் படுத்து அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவன், அப்படியே அவனும் தூங்கிப் போனான்.

EPISODE 33

சிவகாமி அழுதுகொண்டே தன் அறைக்குச் சென்று கொண்டிருக்க, அப்போது வெளியே ஃபோன் பேச வந்த ஆதி, சிவகாமி அழுதுகொண்டு வருவதைப் பார்த்தவன் அவரிடம் சென்று பேசலாமா வேண்டாமா என்று யோசித்தவன், அவரைப் பார்க்க அவரும் ஆதியைப் பார்த்துவிட்டார். இனி அவரைத் தவிர்க்க முடியாது என்று நினைத்தவன் அவரிடம் சென்றான்.

ஆதியைப் பார்த்த சிவகாமி, “தம்பி, நல்லா இருக்கியா?” என்று கேட்டார்.

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க…?” என்று இழுத்தவன், “ஏன் அழுதுட்டு வரீங்க? அங்கிள் உங்களை ஏதும் சொல்லிட்டாரா?” என்றான்.

“அது ஒண்ணுமில்லை தம்பி. அவருக்கு என்னை அழ வைத்துப் பார்க்கிறதுல ஒரு சந்தோஷம். அவன் கிடக்கிறான் வீணாப்போனவன். அவனுக்கும், என் பொண்ணுக்கும் அவ்வளவுதான் அறிவு. நீ நல்லவேளை என் பொண்ணைக் கல்யாணம் பண்ணாமல் தப்பிச்சிட்டே. இல்லையென்றால், அவளை எல்லாம் உங்களால சமாளிக்கவே முடியாது தம்பி,” என்றார்.

“ஆன்ட்டி! நீங்களே… இப்படி எல்லாம் சங்கவியைப் பற்றிப் பேசலாமா? என்ன இருந்தாலும் அவள் உங்க பொண்ணு இல்லையா?” என்று ஆதி கேட்டான்.

ஆதி இப்படி கேட்டதும் சற்றும் யோசிக்காமல், “அவள் என் பொண்ணே இல்லை தம்பி,” என்றார் உடனே.

சிவகாமி சங்கவியை தன் பெண்ணே இல்லை என்று ஆதியிடம் சொன்னதும், இதைக் கேட்ட ஆதி மிகவும் அதிர்ச்சியாகி, “என்ன ஆன்ட்டி சொல்றீங்க? சங்கவி உங்க பொண்ணு கிடையாதா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.

“ஆமாம் தம்பி. அவளை நான் என் வயித்துலதான் பெத்தேனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு. நான் பெத்த பிள்ளையா இருந்தா, என்னோட இரத்தம் அவள் உடம்பில் ஓடுறதுதான் இருந்தா, இப்படி ஒரு ராங்கி நான் பெத்து வச்சிருப்பேனா? அவள் நடந்துகொள்வதும், அவள் அப்பன் கூட சேர்ந்து அவள் பண்ற வேலை எல்லாம் கேட்கும்போது எனக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு. இவள் இப்படிப்பட்டவள் என்று முதலிலேயே தெரிந்திருந்தால் என் வயிற்றில் உருவானபோதே இவளை அழிச்சிருப்பேன் தம்பி. இப்படிப் பெரியவளாக வளர்த்துவிட்டு, இவளால் எனக்கு நிம்மதியில்லை. கூட இருக்கிறவங்க யாருக்குமே நிம்மதியில்லை. என் பொண்ணு எப்பதான் திருந்தி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வாளோனு எனக்கு ஆசையா இருக்கு தம்பி. மத்த பொண்ணு மாதிரி இவளும் நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டின்னு சந்தோஷமா இருக்கணுமா வேண்டாமா? 

இப்படி அடுத்தவங்களைப் பழிவாங்கணும்னு நினைச்சுட்டு சுத்திட்டு இருந்தா எவ்வளவு நாளைக்கு யார் தான் பிடிக்கும்? இவளை யார் தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க? கொஞ்சம்கூட மனசுல நல்ல எண்ணமே இல்லை தம்பி அவளுக்கு. அவள்தான் அப்படி இருக்கிறாளா, அவளை அடித்துத் திருத்தி வளர்க்க வேண்டிய என் புருஷன், அந்த வீணாப்போனவன், அவனும் அப்படித்தான் இருக்கான். அவள் கொஞ்சமாவது ஏதாவது தப்புப் பண்ணப் போனா, இந்த ஆளு அதையும் இதையும் சொல்லி ஏற்றிவிட்டு, அவளை மொத்தமாகவே வில்லியாக மாற்றிவிட்டார். 

அவளுக்கு யாராவது நல்லா இருந்தா பிடிக்கிறதே இல்லை. வயித்தெரிச்சலுடைய சுத்திட்டு இருக்கா. எதுக்கும் நீங்களும் உங்க குடும்பமும் அவள் கண்ணுல படாமல், அவளிடம் இருந்து ஒதுங்கிக் கொஞ்ச நாளைக்கு இருங்க தம்பி. அவள் உங்கள் மேலேயும் உங்க குடும்பத்தின் மேலேயும் ரொம்பக் கோபத்தில் இருக்கா. உங்களைப் பழிவாங்கணும்னு சொல்லிட்டு அவள் அப்பனும் அவளும் ஏதோ கூடி கூடி பேசிக்கிறாங்க. எது நடந்தாலும் ஜாக்கிரதையாக, அவளிடம் இருந்து மாட்டிக்காமல் தப்பிச்சுக்கற வழியை மட்டும் பாருங்க. அவள் என்ன சொன்னாலும், எப்படி நடந்துகிட்டாலும் அவளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள் தம்பி. என் பொண்ணுதான், நான் இல்லைன்னு சொல்லல. இருந்தாலும் சொல்றேன், 

அவளுக்கு நல்ல எண்ணமும் நல்ல மனசே கிடையவே கிடையாது,” என்றவர், “சரி தம்பி, நான் ரூமுக்குப் போறேன். இந்நேரம் அந்த வீணாப்போனவன் வந்தான்னா, என்ன வந்து கண்டதும் பேசி, என்னை அடிக்க ஆரம்பிச்சிடுவான். நான் போறேன் தம்பி,” என்று சொல்லிவிட்டு சிவகாமி அங்கிருந்து சென்றார்.

ஆதியைத் தாண்டி சிறிது தூரம் நடந்தவர், திரும்பி ஆதியைப் பார்த்து, “தம்பி, ஒரு நிமிஷம்” என்று கூறினார். உள்ளே செல்லப்போன ஆதி அவர் அழைத்ததும் நின்று, அவரைத் திரும்பிப் பார்த்து, “என்ன ஆன்ட்டி சொல்லுங்க?” என்று கேட்க, அவர் வேகமாகச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு ஆதியின் அருகில் வந்தவர், “எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“என்ன ஆன்ட்டி, என்ன வேணும்னு கேளுங்க. நான் மறக்காம செய்றேன். நீங்க இப்படி எல்லாம் என்கிட்ட கேட்கலாமா?” என்றான் ஆதி.

“ரொம்ப சந்தோஷம் தம்பி. இந்த கல்யாணம் எல்லாம் முடிச்சுட்டு நம்ம ஊருக்குப் போனதுக்கு அப்புறம் நான் உங்களுக்குப் ஃபோன் பண்றேன். நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். முக்கியமா, நம்ம ரெண்டு பேரும் சந்திச்சுக்கறது எங்க வீட்டிலேயோ உங்க வீட்டிலேயோ யாருக்குமே தெரிய வேண்டாம் தம்பி. குறிப்பா, என் புருஷன் அந்த வீணாப்போனவன், அவனுக்குக் கண்டிப்பா தெரியவே கூடாது,” என்றார் சிவகாமி.

“சரிங்க ஆன்ட்டி. நான் அங்கிளுக்குத் தெரியாமல் பார்த்துக்கிறேன். எங்க வீட்லயும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கிறேன். நீங்க ஊருக்குப் போன பிறகு, எப்போ என்கிட்ட பேசணும்னு நினைச்சாலும் நீங்க மறக்காம கூப்பிடுங்க. நான் உங்களைப் பார்க்க வந்து விடுவேன்,” என்றவன் ஆதி அவரிடம் சொல்லிவிட்டு, “சரிங்க ஆன்ட்டி, நான் போயிட்டு வரேன்,” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி, ‘ரொம்ப நல்ல பையன். இவனைக் கல்யாணம் பண்ணி நல்லா வாழ என் பொண்ணுக்குக் கொடுத்து வைக்கலை. அந்த துர்கா பொண்ணு மனசுக்கு இவன் கூடச் சந்தோஷமாக வாழட்டும்’ என்று இருவரையும் மனதார வாழ்த்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றார்.

*****

துர்கா, கீர்த்திகாவின் அம்மா அப்பா இருவரையும் ரெடியாகச் சொல்லிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றுவிட்டாள். கீர்த்திகா, துர்கா சென்றதும் அறையை விட்டு வெளியே வந்தவள், அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டே செடிகளின் அருகில் நடந்து வந்து கொண்டிருக்க, அப்போது அந்தச் செடிகளுக்குப் பின்னால் அவ்வளவு நேரம் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த கதிர், சுற்றிலும் யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு, கீர்த்திகாவின் கையைப் பிடித்து இழுத்துச் செடியின் அருகில் யாருக்கும் தெரியாமல் மறைந்தவாறு அவளை நிறுத்தி வைத்தான்.

கதிரைப் பார்த்ததும் கீர்த்திகா, “டேய்! இப்ப எதுக்குடா என் கையைப் பிடிச்சு இங்கே இழுத்துட்டு வந்தே?” என்று கோபமாகக் கத்த, அவள் வாயைப் பொத்தியவன், “இப்ப எதுக்குடி இப்படி கத்துற? நான்தானே உன்னை இழுத்தேன்னு பார்த்தே இல்ல? அப்புறம் எதுக்கு வேற யாரோ உன்னைக் கையைப் பிடிச்சு இழுத்த மாதிரி நினைச்சுக் கத்திட்டு இருக்க?” என்று கதிர் சத்தம் போட…

அவனை முறைத்தவள் தன் வாயிலிருந்து அவன் கையை எடுத்து வைத்தாள். “இப்ப எதுக்குடா என்ன இங்க கூட்டிட்டு வந்த?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“உன்னை எதுக்கு நான் இங்கே, யாருக்கும் தெரியாமல் உன்னைக் கூட்டிட்டு வந்தேன்னு உனக்குச் சத்தியமாத் தெரியாது அப்படித்தானே?” என்றான் கதிர்.

அவன் தன்னைப் பார்ப்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறான் என்று கீர்த்திகாவுக்குப் புரிந்தது. இருந்தும் அவனிடம் வேண்டுமென்றே தான் கோபப்படுவது போலப் பேசினாள்.

“நீ எதுக்குக் கூப்பிட்டேன்னு எனக்குத் தெரியும். அதுக்காக இங்க நம்ம சுற்றியும் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்க யாராவது உன்னையும் என்னையும் இப்படிச் சேர்த்து வைத்துப் பார்த்தார்கள் என்றால் அவங்க என்ன நினைப்பாங்க நம்மளைப் பற்றி?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“யார் என்ன நினைச்சா எனக்கென்ன? என் ஆளை நான் பார்க்க எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் நான் வந்து விடுவேன்,” என்று காலரைத் தூக்கிக்கொண்டு கதிர் கூற, அவன் கூறியது கேட்டுச் சிரித்தவள், “இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. அப்படி இருக்கிறவன், நேரா என் ரூமுக்கே வந்து எங்க அம்மா அப்பா முன்னாடியே என்னைப் பார்த்துப் பேசிட்டுப் போக வேண்டியதுதானே? இப்படி எதுக்கு யாருக்கும் தெரியாமல் மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சு நின்னுட்டு இருக்கணும்?” என்று கீர்த்திகா அவனைக் கிண்டல் செய்தாள்.

“சரி சொல்லு. இப்ப எதுக்கு என்னைப் பார்க்க வந்த?” என்று கேட்க, “உன்னை எப்படிப் பார்க்க வருவேன்? எல்லாரும் ரிசப்ஷன்னுக்கு ரெடியாகிட்டு இருக்காங்க. சரி, நீயும் ரிசப்ஷனுக்கு எப்படியும் ரெடியாகி இருப்பே. அதனால உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்,” என்று கூறியவன், அவளை மேலிருந்து கீழாகப் பார்க்க, “சும்மா சொல்லக் கூடாதுடி, இந்த டிரஸ்ல நீ செம்மையாக இருக்க,” அவளை அங்கமங்கமாக ரசிக்க…

அவன் பார்வையின் ஆழத்தைத் தாங்க முடியாமல், உடல் கூச, நெளிந்து கொண்டே நின்றவள், “இப்ப எதுக்குடா என்னை இப்படிப் பார்க்கிற? எனக்குக் கூச்சமாக இருக்கு,” என்று அவனைப் பார்க்காமல் திரும்பி நின்றுகொண்டாள்.

“முன்னாடி பார்த்து ரசிச்சது பத்தவில்லை என்று சொல்லிட்டு, பின்னாடி பார்த்து ரசிக்கச் சொல்லி திரும்பி நின்னுட்டியா? சரி, அதையும் பார்த்துட்டா போச்சு…” என்று அவன் கூறிக் முடிப்பதற்குள் கீர்த்திகா திரும்பி அவனைப் பார்த்து முறைக்க…

“அச்சோ! என்னடி இப்படி முறைக்கிற? இப்படி எல்லாம் முறைச்சா நான் எப்படி உன்னை சைட் அடிக்கிறது? என் செல்லத்தை நான் பார்த்து ரசிக்காமல் வேற யார் பார்த்து ரசிக்கப் போறாங்க? சொல்லு! கரெக்ட் தானே?” என்றான் கதிர்.

அவள் அவன் கூறியது எல்லாம் கேட்டுச் சிரித்தவள், “ஆமாம், நீதான் பார்த்து ரசிக்கப் போற. அதுக்காக இன்னைக்கு மொத்தமாப் பார்த்து ரசிச்சு என்ன பண்ணப் போற?” என்று கேட்க, “என்னடி சொல்ற? மொத்தமாகப் பார்க்கிறேன்? நான் எங்க மொத்தமா பார்க்கிறேன்? ஏதோ அங்கங்கே தெரியுற மிச்சத்தை மட்டும் தானே பார்க்கிறேன். மொத்தமாப் பார்க்க என்னைக்கு எனக்குக் கொடுத்து வச்சிருக்கோ தெரியலையே,” என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டான் கதிர்.

“போடா லூசு! இப்படியா பேசுவ? கொஞ்சம்கூட அறிவே இல்லை. ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசணும்னு தெரியாதா உனக்கு?” என்று கீர்த்திகா வேண்டுமென்று கோபிப்பது போல நடிக்க…

“யாராவது பொண்ணுங்க கிட்டவாடி அப்படி பேசினேன்? நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுகிட்ட தானே பேசினேன்? நான் அப்படிதான் பேசுவேன். என்னடி பண்ணுவே?” என்றான் கதிர்.

அவன், ‘நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகும் பெண்ணிடம் தான் அப்படிப் பேசுகிறேன்’ என்று சொன்னதும், கீர்த்திகாவுக்கு காலையில் கதிரின் அம்மா, ‘ஒரே வீட்டில் பெண்ணெடுக்க மாட்டேன்’ என்று சொன்னது ஞாபகம் வர அவள் முகம் உடனே சுருங்கிவிட்டது.

அவள் முகம் வாடியது கண்ட கதிர், “கீர்த்து! என்ன ஆச்சு? ஏன் இப்படி முகத்தை வச்சுட்டு இருக்க? இவ்வளவு நேரம் சந்தோஷமாகத் தானே இருந்த?” என்று கேட்க…

“இல்லை கதிர். காலையில் உங்க அம்மா பூமிகா அக்கா கிட்ட பேசுறது நீ கேட்டியா?” என்று கீர்த்திகா கேட்டாள்.

“கேட்டுட்டுதான் இருந்தேன் கீர்த்து. அம்மா அப்படி சொன்னதும் எனக்கு முதலில் வருத்தமாகத் தான் இருந்துச்சு. அதுக்காக அவங்க அப்படி நினைக்கிறார்கள் என்பதற்காக நீயும் நானும் காதலிக்கிறதை விட்டுக்கொடுக்க முடியுமா? அம்மாவும் சரி அப்பாவும் சரி, என்ன சொன்னாலும் எனக்கு நீதான் பொண்டாட்டி. உனக்கு நான் தான் புருஷன். நீ மாறுவதை யாராலயும் முடியாது. நீ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே. ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அம்மா ஏன் அப்படி சொன்னாங்க? அதுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சிட்டு அதைச் சரி செய்யப் பார்க்கிறேன். சரியா? நீ அதைப் பற்றி எல்லாம் ஃபீல் பண்ணாமல் என்னை எப்படி லவ் பண்றதுன்னு மட்டும் யோசிக்கணும். சரியா?” என்றவன், மறுபடியும் ஒரு முறை பார்த்தவன், “ஏய் கீர்த்துமா! உன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கேனே. எனக்கு எதுவும் கொடுக்க மாட்டியா?” என்று கேட்டான் கதிர்.

“என்னடா இப்படி கேட்கிற? என்ன வேணும்? பசிக்குதா உனக்கு? நான் போய் ரூம்ல சாப்பிட்டு ஏதாவது இருக்கும் எடுத்துட்டு வரட்டுமா?” என்று கீர்த்திகா கேட்க…

‘இந்தத் தத்தியை வச்சுட்டு நான் இப்படித்தான் குடும்பம் நடத்தப் போறேன், கல்யாணம் பண்ணப் போறேன், தெரியலையே’ என்றவன், “ஏய் லூசு! நான் சாப்பிடவாடி உன்கிட்ட கேட்டேன்?” என்று கதிர் கேட்க, “அப்ப வேற என்னடா வேணும்? சீக்கிரம் சொல்லு. நான் ரூமுக்கு போறேன். யாராவது வந்துரப் போறாங்க,” என்று கீர்த்திகா அவனை அவசரப்படுத்த…

மறுபடியும் தன்னைச் சுற்றிப் பார்த்த கதிர், தன்னைப் பார்க்குமாறு கீர்த்திகாவின் முகத்தைப் பிடித்துத் திருப்பியவன், “ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடுடி,” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும், தன் முகத்தைப் பிடித்திருந்த அவன் இரண்டு கைகளையும் பிடித்துக் கீழே இறக்கியது, “என்னடா சொல்ற? எங்க வச்சு கிஸ் கேட்கிறேன்? அதெல்லாம் என்னால கொடுக்க முடியாது. நான் உள்ளே போகிறேன்,” என்று உள்ளே செல்லப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்தவன், “ப்ளீஸ் டி கீர்த்தி. ஒரே ஒரு கிஸ் தானே கேட்கிறேன்,” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கதிர் கெஞ்ச…

அவனைப் பார்ப்பதற்கு கீர்த்திகாவுக்கும் பாவமாகத்தான் இருந்தது. “சரி, நீ கண்ணு மூடு. அப்பத்தான் நான் கிஸ் பண்ணுவேன்,” என்று கீர்த்திகா சொல்ல, “எதுக்குடி கண்ணு மூடணும்?” என்று கேட்க, “எனக்கு வெட்கமா இருக்குடா. உன் முகத்தைப் பார்த்துட்டு நான் எப்படி முத்தம் கொடுக்கிறது? நீ கண்ணை மூடு. நீ என்னை குறுகுறுன்னு பார்த்துக்கிட்டே இருக்க,” என்று கீர்த்திகா சொல்ல, சிரித்தவன், “சரி,” என்று கூறி வேகமாக கண்களை மூடியவன், தன் உதட்டை முத்தம் கொடுப்பது போலக் கொடுத்து வைத்து அவளிடம் தன் முகத்தைக் கொண்டு வர…

சிரித்துக்கொண்டே அவன் முகத்தடியில் வந்தவள், அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பி அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, “இப்போதைக்கு இது போதும்,” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

“அடிப்பாவி! இப்படி என்னை ஏமாத்திட்டியே!” என்று அவளைத் திட்டியவன், ‘வந்ததுக்குக் கன்னத்துலயாவது ஒரு கிஸ் கிடைச்சது. ‘மாட்டேன்’னு சொல்லாமல் அதையாவது கொடுத்துட்டுப் போனாளே! அதுவரைக்கும் சந்தோஷம்’ என்று நினைத்தவன் அங்கிருந்து சென்றான்.

EPISODE 34

அனைவரும் கிளம்பி வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க, துர்கா தன் அறைக்கு வந்து ஆதி கிளம்பிவிட்டானா என்று பார்ப்பதற்காக அறைக்குள் வந்தாள். ஆதி ரெடியாகி சோபாவில் அமர்ந்து கொண்டு தன் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.

அவன் ‘டிப் டாப்பாக’ அணிந்திருந்த உடையையும் அவனையும் பார்த்த துர்கா, அவன் மாஸ்க் அணிந்த முகத்தையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தாள்.

‘எப்படி இவன் மட்டும் என்ன டிரஸ் போட்டாலும் அழகாக இருக்கிறான்? மாஸ்க் அணிந்த முகமாக இருந்தாலும் அவன் கண்கள் ஒன்றே போதுமே, அவன் பால் தன்னை அது ஈர்த்து விடுகிறதே’ என்று யோசித்துக் கொண்டே வந்தவள், எதிரே இருந்த டேபிளைக் கவனிக்காமல் வந்தாள். அவள் உள்ளே வரும் சத்தம் கேட்டு யதேச்சையாகத் திரும்பிப் பார்த்த ஆதி, துர்கா தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு வருவதைப் பார்த்தவன், ‘என்ன இப்படிப் பச்சையாக என்னைச் சைட் அடிக்கிறாள்?’ என்று இவனும் விடாமல் அவளையே பார்க்க, ஆனால் துர்காவின் மூளைக்கு அவன் தன்னையே பார்க்கிறான் என்று உரைக்கவில்லை.

அவள் தான் பார்ப்பது கூடத் தெரியாமல் இப்படி தன்னையே பார்ப்பதை எண்ணி ஆதிக்கு ஆச்சர்யமாகப் போய், மாஸ்கைக் கழட்டிக்கொண்டே அவளையே அவனும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். காலையில் என்னவென்றால், ‘நான் தொட்டால் உடலெல்லாம் எரிகிறது’ என்றால்; ஆனால், இப்போது அதற்கு நேர் மாறாக இப்படித் தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு வரும் துர்காவைப் புரிந்துகொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, அவள் எதிரே இருக்கும் டேபிளில் மோதப் போகிறாள் என்று பார்த்தவன், “துர்கா… டேபிள்… பார்த்து…” என்று கூற, அது அவள் காதிலேயே விழவில்லை. அவள் அந்த அளவிற்கு மெய்மறந்து போயிருந்தாள்.

அவளை அழைத்தும் அவள் நிஜ உலகிற்கு வராததை எண்ணிச் சிரித்தவன், சோபாவிலிருந்து எழுந்தவன், அவள் டேபிளில் மோதி கீழே விழாமல் இருக்க வேகமாக வந்து அவள் கரத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தப் போக, அப்போதுதான் தான் சுயத்திற்கு வந்தவள் ஆதியைத் திடீர் என்று அவ்வளவு அருகாமையில் பார்த்ததும் பதறியவள், அவனிடமிருந்து விலக நினைக்க, பதட்டத்தில் கால் தடுமாறி விழப் போக, தான் விழாமல் இருக்க எதிரே இருந்த ஆதியின் கோட்டைப் பிடிக்க, அவள் விழுந்த வேகத்தில் ஆதியையும் தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டு கீழே விழுந்தாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஆதி சுதாரிக்க முடியாமல் அவள் மேலேயே விழுந்தான். விழுந்த வேகத்தில் இருவர் இதழும் மோதிக்கொள்ள, துர்கா இதை எதிர்பார்க்காததினால் அதிர்ச்சியில் அவனைப் பார்க்க, ஆதியும் அதே நிலையில்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையில் கொடுத்தது போலவே ஆழமான முத்தமாக இல்லாமல் போனாலும், இந்தத் திடீர் முத்தம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவளைப் பிரிய மனம் வராமல் ஆதி அவள் மேலேயே படுத்திருக்க, தன் மேல் இருந்து இன்னும் விலகாமல் அப்படியே படுத்திருந்த ஆதியைப் புரியாமல் பார்த்த துர்கா, அவன் உதடு இன்னும் தன் இதழை விட்டுப் பிரியாமல் அவள் உதட்டோடு உரசிய வண்ணம் இருப்பதை உணர்ந்தவள், அவனைத் தன் மேல் இருந்து விலக்கப் போராட, அவள் அவனிடமிருந்து விலகுவதற்காகத் தன் உடலையும் முகத்தையும் அசைக்க அசைக்க, ஆதியின் அழுத்தம் கூடிக்கொண்டே போனது. அதை மிகவும் தாமதமாகவே உணர்ந்தவள், தன் கைகளால் அவன் முகத்தைப் பிடித்துத் தன் முகத்தில் இருந்து பிரித்தவள், “ஆதி” என்று அழைத்தாள்.

“என்ன?” என்றான் அவள் மேல் இருந்துகொண்டே.

“என்ன பண்ற ஆதி? முதல்ல என் மேல இருந்து எழுந்திரு,” என்றால்.

“நான் என்ன பண்ணினேன்? நீதான் என்னை என்னவோ பண்ற,” என்றான்.

அவன் அப்படி கூறியதும், “நான் என்ன பண்ணினேன்?” என்றால் துர்கா.

“நீ என்ன பண்ணுன? பாவமே! கீழே விழப் போறியே என்று வந்து உன்னைப் பிடித்துக்கொண்டால், நீ என்னை இழுத்து உன் மேல் போட்டுக் கொண்டது மட்டும் போதாது என்று எனக்கு முத்தம் வேறு கொடுத்துவிட்டாய்,” என்றான்.

அவன் அப்படி, தான் என்னவோ வலுக்கட்டாயமாக அவனைத் தன் மீது போட்டுக் கொண்டு, தான் வேண்டுமென்றே அவனுக்கு முத்தம் கொடுத்ததாகச் சொல்கிறானே என்று நினைத்தவள், அவனைத் தன் மீது இருந்து மிகவும் சிரமப்பட்டுக் கீழே தள்ளி விட்டவள், எழுந்து நின்று அவனைப் பார்த்து, “நான் வேணும்னு உன்னை ஒன்னும் என் மீது இழுத்து போட்டுக் கொள்ளவில்லை. நான் கீழே விழாமல் இருக்கத் தெரியாமல் உன்னைப் பிடித்து விட்டேன்,” என்றால்.

“ஓ… அப்படியா சொல்ற நீ?” என்று எழுந்தவன், தன் மேல் இருந்த தூசியைத் தட்டிக்கொண்டு எழுந்தவன், “உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியாமல் பிடித்து இழுத்தது போலவே தெரியலையே. கதவைத் திறந்து வந்ததிலிருந்து என்னையே தான் பார்த்துட்டு இருந்த. நான் உன் பேரைச் சொல்லி கூப்பிட்டும் நீ எதுவுமே பேசலை. இப்படி அப்பட்டமாக என்னை சைட் அடிச்சுட்டு, கடைசியில் ‘நான் வேணும்னு எல்லாத்தையும் பண்ணினேன்’ மாதிரி இல்லை நீ சொல்ற,” என்றான் ஆதி.

‘என்ன! நான் உள்ளே வந்ததிலிருந்து இவன் என்னையே பார்த்துக்கொண்டுதான் இருந்தானா? இதுகூடத் தெரியாமல் நான் இவனையே பார்த்துக் கொண்டு இருந்தது இவனுக்கும் தெரிந்துவிட்டதா?’ என்று நினைத்தவள், அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க.

அவள் ஏதோ யோசித்த வண்ணம் திருதிருவென விழித்து இருப்பதைப் பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்தவன், “ம்ஹும்…” என்று தொண்டையைச் செரும, அவன் செருமலில் திடுக்கிட்டவள், “க்… ஆதி, நான் ஒன்றும் உன்னைப் பார்க்கவில்லை. நீ ரெடி ஆகிட்டியா இல்லையா என்றுதான் பார்க்க வந்தேன்,” என்றால் துர்கா.

“ரெடி ஆகிட்டியான்னு பார்க்க வந்தே. சரி. ஆனால், எதுக்கு என்னைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தே?” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் பதட்டத்தில், “நான் எங்க உனக்கு முத்தம் கொடுத்தேன்? நீதான் எனக்கு முத்தம் கொடுத்தே. நான் எதுவுமே பண்ணலை,” என்றால் அழுவது போலவே முகத்தை வைத்துக்கொண்டு.

“நானா உனக்கு முத்தம் கொடுத்தேன்?” என்று ஆதி கேட்க, அவள் “ஆமாம்” என்று வேகமாகத் தலையை குழந்தை போலவே மேலும் கீழும் ஆட்ட, அதை ரசித்தவன்,

“நானா வந்து உனக்கு முத்தம் கொடுத்திருந்தால் இப்படியா முத்தம் கொடுத்திருப்பேன்?” என்று கூறியவன், சட்டென்று துர்காவின் முகத்தைப் பிடித்துத் தன் அருகில் கொண்டு வந்தவன், அவள் அதிர்ச்சியில் விரிந்த கண்களைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுத்தவன், அவளை விட்டுப் பிரிந்தவன், “இப்படித்தான் கொடுப்பேன்,” என்று கூறி மீண்டும் ஒரு முத்தத்தை அவள் தடுக்கத் தடுக்க கொடுத்துவிட்டு அவளை விட்டு விலகி நின்றான்.

அவள் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க, “ஹேய்… துர்கா…” என்று அவள் முகத்திற்கு நேராகத் தன் கைகளை ஆட்ட, ‘என்ன’ என்பது போலவே அவன் கொடுத்த முத்தத்தில் இருந்து மீள முடியாமல் அவனைப் பார்க்க, “இப்படியே எவ்வளவு நேரம் நிப்ப? ஃபங்ஷனுக்குப் போகணும்னு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேட்க.

அவன் மீது கோபம் கொண்ட துர்கா, “ஆதி, இப்போ எதுக்கு நீ எனக்கு முத்தம் கொடுத்தே?” என்று சண்டையிட்டாள் அவனிடம்.

“இனிமேல் இந்த மாதிரி பண்ற வேலை எல்லாம் வெச்சுக்காதே. என் விருப்பம் இல்லாமல் என்கிட்ட வர வேலை எல்லாம் வேண்டாம். நான் உங்க ஸ்டேட்டஸ்க்கு ஏற்ற ஆள் கிடையாது. அத்தை சொன்ன ஒரே காரணத்துக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ சொன்னது போலவே உன்னை வளைச்சுப் போடவோ, உன்கிட்ட இருக்க காசுக்காகவோ இல்லை ஆதி. அதனால நீயா எதுவும் நினைச்சுட்டு இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்காதே. புரியுதா? கொஞ்ச நாள் பொறு ஆதி. ஒரு நல்ல சூழ்நிலையாகப் பார்த்து நான் அத்தை, மாமாகிட்ட பக்குவமாகப் பேசி, ‘உனக்கும் எனக்கும் இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை. நாங்க ஒண்ணா வாழ்றது காலத்தின் விரயம் தான் ஆகும்’ என்று சொல்ல…”

“ஓ! அப்போ மேடம் எங்க அம்மா அப்பாகிட்ட போய் நாம சந்தோஷமாக இல்லைன்னு சொல்லப் போறீங்க அப்படித்தானே?” என்றான் கோபமாக. அவள் “அம்” என்று தலையை ஆட்ட, அவள் சொன்னதெல்லாம் கேட்டவனின் கோபம் மேலும் அதிகமாக, அவள் முடியைக் கோபத்தோடு பிடித்துத் தன் அருகில் இழுத்தவன், “என்ன டி சொல்ற? நான் உனக்கு வேணாமா? என்கிட்ட இருந்து பிரியணும்னு நீ நினைக்கிறியா? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள். உன்னை என்னிடம் இருந்து போகவிட்டால் தானே நீ போவே. என்ன ஆனாலும் சரி, நீ என்னிடம் இருந்து போகவேண்டும் என்று நினைத்தது நடக்கவே நடக்காது,” என்றான்.

அவன் தன் முடியைப் பிடித்து இழுத்தது, இப்போது அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் கேட்ட துர்காவுக்குக் கண்களில் கண்ணீர் வர, அதைப் பார்த்த ஆதி மனதில் ஏதோ செய்ய, மெல்ல அவள் முடியை விட்டவன், கலைந்திருந்தா அவள் முடியைச் சரி செய்தவன், “கண்ணைத் துடைச்சுட்டு ஃப்ரெஷ் ஆகி வா. நான் வெளிய வெயிட் பண்றேன். நாம கிளம்பலாம்,” என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியே வந்தான்.

அவன் கூறியதை எல்லாம் கேட்ட துர்காவுக்கு, தான் எடுத்த முடிவு தப்பாகி விட்டதோ என்று யோசித்தவள், பின் தலையைக் குலுக்கிக் கொண்டவள், ‘இதை பிறகு யோசித்துக்கொள்ளலாம்’ என்று நினைத்தவள் கிளம்பி வெளியே வர, அங்கே கதிர், விக்கி, விசாலாட்சி, வெங்கடாச்சலம், அவள் அம்மா அப்பா, கீர்த்தி என்று எல்லோரும் நின்றிருந்தனர்.

அவள் வந்ததும் அனைவரும் கிளம்ப, வடிவு (துர்காவின் அம்மா), “துர்கா, நீங்க சம்மந்தி அம்மா, மாப்பிள்ளை எல்லாரும் முன்னாடி போங்க. எங்களுக்கு அங்கே யாரையும் தெரியதில்லையா? நாங்க கொஞ்ச நேரம் கழித்து வரோம்,” என்று கூற.

“அதனால் என்ன சம்மந்தி! வாங்க போலாம்,” என்று விசாலாட்சி கூற, வடிவு தயங்கிய படியே நிற்க, அவரைப் பார்த்த வெங்கடாச்சலம், “சரி பரவாயில்லை. வா விசாலாட்சி, நாம முதலில் போவோம். அவர்கள் பிறகு வரட்டும்,” என்று கூற, “சரிங்க, அப்போ கதிர், விக்கி, நீங்க இருந்து அவங்களை உங்க கூட அழைச்சுட்டு வாங்க. நாங்க முன்னால் போகிறோம்,” என்று கூறி ஆதியையும், துர்காவையும் அவர்களுடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

****

வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு குடும்பத்துடன் வந்து இறங்கிய வெங்கடாச்சலம், வரவேற்புக்காக நின்றிருந்த அருணாச்சலத்தைப் பார்த்ததும், அவரும் பார்த்துவிட இருவரும் ஒருவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள, அருணாச்சலம் அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அவருடன் விசாலாட்சியும் சென்றுவிட…

துர்கா என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருக்க, அவள் மீது இன்னும் கோபம் குறையாமல் இருந்த ஆதி அவளை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அங்கிருந்து செல்ல, துர்காவும் தான் வந்த இடத்தில் தனக்கு யாரையும் தெரியாது என்பதால் அவன் பின்னாலேயே சென்றாள்.

ஆதி வருவதைப் பார்த்து, அவர்களுக்கு முன்னாலேயே வந்திருந்த விக்ரம் (விக்கி) அவனை கை காட்டி வர, துர்காவைப் பார்த்து மீனு கை அசைக்க, துர்கா சிரித்துக் கொண்டே ஆதியைத் தாண்டிச் சென்று மீனுவிடம் பேசினாள்.

இங்கே இவளைப் பார்த்த ஆதி, ‘என்னை பார்த்தால் மட்டுமே இவளுக்குப் பிடிக்கவில்லை போல. எல்லோரிடமும் எவ்வளவு சிரித்த முகமாகப் பேசுகிறாள். ஆனால், என்னைப் பார்த்தால் மட்டும் இவளுக்கு எப்படித்தான் இருக்குமோ?’ என்று யோசித்தவன், பின் விக்ரமிடம் திரும்பிப் பேசிக் கொண்டிருக்க, விக்ரம் மீனுவிடமும் துர்காவிடமும் சொல்லிவிட்டு, ஆதியிடம் ஓசையிடாமல் அவனைத் தனியாக அழைத்துச் சென்றான். ஆதியும் துர்காவை ஒரு முறை பார்த்துவிட்டு விக்ரமுடன் சென்றான்.

****

அனைவரும் ஜோடி ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருக்க, தான் மட்டும் தனியாக இருப்பதாக ‘ஃபீல்’ செய்த ரித்து (ரித்திகா) அமர்ந்திருக்க, அப்போதுதான் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கீர்த்தி நேராகச் சாப்பிடச் சென்றவள், ‘ஃபுல் கட்டு’ கட்டிவிட்டு உள்ளே வந்து தெரிந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்று தேட, ரித்திகாவைப் பார்த்து விட, அவள் அருகில் வந்தவள், ரித்து புலம்புவதைக் கேட்டு அவளிடம், “யாரைப் பற்றி நினைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள் அக்கா?” என்று கேட்டுக்கொண்டு அவளிடம் வந்து அமர. அவளைக் கண்டதும் “ஒன்றுமில்லை, சும்மா தான்,” என்ற ரித்து, இருவரும் பேசிக் கொண்டிருக்க…

அப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்தப் பக்கமாகச் சென்ற சங்கவி, நேராக இவர்கள் இருக்கும் இடத்திற்கு வர, அவளைப் பார்த்ததும் அவ்வளவு நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கீர்த்திகாவின் முகம் சங்கவி அங்கே வந்ததும் அவள் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.

இதைக் கவனித்த ரித்து, கீர்த்திகாவின் கை மேல் தன் கையை வைத்து அழுத்தியவள், அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள்.

அவர்கள் அருகில் வந்த சங்கவி, “ஹாய்…” என்று ரித்துவைப் பார்த்து கை அசைக்க, ரித்துவும் “ஹாய்” என்றால். “என்ன இங்க உட்கார்ந்து இந்த லோ கிளாஸ் கூடப் பேசிட்டு இருக்கீங்க?” என்றால் சங்கவி.

அவள் தன்னை ‘லோ கிளாஸ்’ என்று மேலும் கீர்த்திகாவுக்குக் கோபம் வர, “ஏய்! யாரைப் பார்த்து லோ கிளாஸ்ன்னு சொல்ற? நீதான் லோ கிளாஸ்! ரொம்பக் கேவலமான எண்ணம் இருக்கிற நீதான் லோ கிளாஸ்! நான் இல்லை!” என்று கீர்த்தி அவளிடம் சண்டைக்குச் செல்ல.

அவளை இடைமறித்து சமாதானம் செய்த ரித்து, சங்கவியைப் பார்த்து, “ஹலோ சங்கவி! ஒரு ஃபங்ஷன் வந்த இடத்தில் இப்படியா பேசுவீங்க? கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லாமல்!” என்றவள், “போங்க, நீங்க எதுக்கு வந்திங்களோ அந்த வேலையைப் பாருங்க,” என்று கூற, அவர்களை முறைத்த சங்கவி, ‘இரு டி… உன்னை பிறகுப் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதுபோல கீர்த்தியைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து செல்ல.

அவள் சென்றதும், “அப்பாடா! ஒரு வழியா ஓடிட்டா! இவளுக்கு என்னையும் என் அக்காவையும் பார்த்தால் எப்படித்தான் இருக்குமோ!” என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி, திடீர் என்று “வாவ்…” என்று கத்த, அவளைப் புரியாமல் ரித்து பார்த்து, “என்ன ஆச்சு?” என்று கேட்க, கீர்த்தி தன் கையை உயர்த்தி தனக்கு எதிரே காட்ட, அவள் காட்டிய இடத்தை ரித்துவும் பார்த்தவள் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.

EPISODE 35

கீர்த்திகா யாரையோ பார்த்து “வாவ்!” என்று சொல்லவும், “எதுக்கு இப்போ இப்படி கத்துற?” என்று ரித்து கீர்த்தியை கேட்க, “அக்கா, அங்க ஒரு ஆள் ஸ்மார்ட்ஹ்… ஹேண்ட்ஸமா… இருக்கானே! யாரு அக்கா அது?” என்று கேட்டாள்.

அவள் சொன்ன இடத்தை திரும்பிப் பார்க்கப் போக, அதற்குள் கீர்த்திகாவையே ஃபாலோ செய்து கொண்டு வந்த கதிர், கீர்த்திகா தன்னைக் காதலித்துவிட்டு இப்படி அப்பட்டமாக யாரையோ சைட் அடிக்கிறாள் என்றதும் கோபத்துடன் அவர்கள் முன் வந்து நின்றான்.

‘இவன் யாருடா வந்து இடையில் நின்று தாங்கள் சைட் அடிப்பதைத் டிஸ்டர்ப் செய்வது?’ என்று கீர்த்திகாவும், ரித்துவும் அவனை நிமிர்ந்து பார்க்க.

கோபமான முகத்துடன் நின்றிருந்த கதிரைப் பார்த்த கீர்த்தி, ‘ஐயோ… இவனா… இவன் எப்போ வந்தான்? நான் வேற ஆர்வத்துல சைட் அடிச்சுட்டு சத்தமா வேற சொல்லிட்டேனே! இனி இவன் என்னவெல்லாம் சொல்லி என்னை திட்டப் போறானோ?’ என்று நினைத்தவள், அவனைப் பார்த்து அசடு வழியச் சிரிக்க.

“என்ன டி…. நான் ஒருத்தன் குத்து கல்லாட்டம் இருக்குறப்போ, என்னைப் பார்த்து சைட் அடிக்காம வேற எவனையோ சைட் அடிச்சுட்டு இருக்க. என்னைப் விட அவன் என்ன அவ்ளோ அழகாவா இருக்கான்?” என்று கூற, “ஐயோ… டேய் கதிர்! எதுக்கு டா… இப்படி கத்துற? நீ சொல்றதை யாராவது கேட்டா அவ்ளோ தான் டா. நாம மாட்டிக்குவோம்,” என்று கீர்த்திகா பதற.

அதுவரை இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரித்திகா, “ஹேய்… ஹேய்… இங்க என்ன பா… நடக்குது? நான் ஒருத்தி இங்கே இருக்குறது உங்க கண்ணுக்குத் தெரியலையா? ஏய்… கீர்த்து, யாரு இது? இவங்க வந்துட்டு என்ன உன்கிட்ட லவ்வு, அது இதுன்னு சொல்றாங்க?” என்று ரித்து கேட்க.

‘ஐயோ போச்சு… இவங்களுக்கு வேற தெரிஞ்சிருச்சே. இனி அவ்ளோதான்,’ என்று நினைத்தவள், “அக்கா, ப்ளீஸ்! தயவு செஞ்சு என் அக்கா கிட்டயோ, இல்லை வேற யார்கிட்டயும் சொல்லிராதீங்க. இவன் ஆதி மாமாவோட தம்பி கதிர். நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம் அக்கா,” என்றால்.

கீர்த்தி கூறியதைக் கேட்டு ஆச்சர்யமான ரித்து, “என்ன சொல்ற? இப்பவே நீ லவ் பண்றியா?” என்றால். “ஆமா அக்கா,” என்று குழைவாகச் சொல்ல, “சரி சரி, உனக்கும் ஜோடி வந்திருச்சா? சரி போ…” என்றவள் வேறு புறம் திரும்பிக் கொள்ள.

கீர்த்திகா திரும்பி கதிரைப் பார்க்க, அவன் கீர்த்திகாவை முறைத்துக் கொண்டு இருக்க, “டேய் கதிர்! நான் சும்மா கிண்டலுக்கு தாண்டா அந்த அக்கா கிட்ட பேசிட்டு இருந்தேன். ஒரு பையனை சும்மா சைட்தான் அடிச்சேன். அதுக்காக நான் உன்ன லவ் பண்ணலைன்னு அர்த்தமாயிடுமா?” என்று கீர்த்திகா கூற.

“அது எப்படி டி…. என்ன மனசுல நினைச்சுட்டு வேற ஒருத்தனை ரசிக்க முடியுது உன்னால? அப்போ என்ன நீ லவ் பண்ணலை அப்படித்தானே? என்ன முழுசா லவ் பண்ணி இருந்தா, உன் முன்னாடி எவ்ளோ அழகான ஆண்கள் வந்து நின்னாலும் அவங்க எல்லாம் உனக்கு ஒரு பொருட்டாவே தெரிய மாட்டாங்க. நான் மட்டும் தான் உனக்குப் பெருசா தெரிவேனே. ஆனா நீ இப்படி என் முன்னாடியே அப்பட்டமா சைட் அடிக்கிறியே கீர்த்திகா, இதெல்லாம் உனக்கே நியாயமா?” என்றான் கோபம் பொங்க.

கதிர் தன்மீது பயங்கர கோபத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட கீர்த்திகா, “கதிர்! ப்ளீஸ் கதிர். நான் சொல்றத கொஞ்சம் கேளு. நீ நினைக்கிற மாதிரி நான் அந்த மாதிரி எண்ணத்தில் எல்லாம் பார்க்கலை டா…. சும்மா ஜஸ்ட் திரும்பிப் பார்க்குறப்போ ஒரு பையன் அழகா நின்னுட்டு இருந்தான். அதை நான் தான் எதார்த்தமா ‘அழகா இருக்கான்’னு ரித்துக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். நீ ஏன் இப்படி எல்லாம் நினைக்கிற? அந்த மாதிரி எண்ணத்தில் சத்தியமா நான் பார்க்கலை. அந்தப் பையன் நல்லா இருக்கான்னு சொல்லித்தான் பார்த்தேன். வேற மாதிரி எண்ணமெல்லாம் என் மனசுல இல்லை,” என்று கூறினாள் கீர்த்திகா.

“அப்போ உண்மையா நீ வேற மாதிரி எண்ணத்துல பார்க்கலை அப்படித்தானே?” என்று கதிர் கேட்க. “என் மேல சத்தியமா நான் அந்தப் பையனை அப்படி எல்லாம் நினைச்சுப் பார்க்கலை டா. ‘வாவ்’ என்று சொல்லி அழகா இருக்கான்னு மட்டும் தான் பார்த்தேன். உன்னை நினைச்சு, மனசுல அந்த மாதிரி எண்ணத்தோடு நான் வேற யாரையுமே நினைக்க மாட்டேன் கதிர். என்னை நம்புடா! ப்ளீஸ்….” என்று அவள் கெஞ்ச, அவள் கெஞ்சுவதைப் பார்த்து மனம் இறங்கிய கதிரின் கோபம் கொஞ்சம் தணிந்தது.

இருந்தும் இவளிடம் சிறிது நேரம் கோபமாக இருப்பது போலவே நடிக்கவேண்டும் என்று நினைத்த கதிர், “நீ என்ன சொன்னாலும் நான் சமாதானமே ஆகமாட்டேன்,” என்று கூறிவிட்டு கோபமாக அந்த இடத்தை விட்டு வேகமாக அவன் நகர, ‘ஐயோ! இவன் ஏன் இப்படி டென்ஷன் ஆயிட்டு இருக்கான்? நான் அப்படி எல்லாம் நினைக்கலைன்னு எவ்வளவு தூரம் சொல்றேன். இப்பவும் கோபத்தைக் குறைக்க மாட்டேன்னா நான் என்ன பண்ணுவேன் கடவுளே. எப்படியாவது இவனை சமாதானப்படுத்த எனக்கு ஹெல்ப் பண்ணு,’ என்று கூறிக்கொண்டு அவன் பின்னால் எழுந்து ஓடினாள்.

கீர்த்திகா கதிரின் பின்னால் ஓட, அவள் பின்னால் வருவதை உணர்ந்து கொண்ட கதிர் சிறிது தூரம் நடந்தவன், யாருமில்லாத ஒரு இடத்திற்குச் சென்று அங்கே நிற்க, கீர்த்திகாவும் அங்கு அவன் பின்னலேயே வந்துவிட்டாள்.

தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தவன், தன் பின்னால் வந்து கொண்டிருந்த கீர்த்திகாவைத் திரும்பிச் சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்தி அணைத்துக் கொண்டான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கீர்த்திகா அவன்மேல் மோதி நின்று கொள்ள, அவனை நிமிர்ந்து பார்க்க, கதிர் சிரித்துக் கொண்டு அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் கதிர்…. என்னடா பண்ற? என்ன விடுடா! இங்கே சுத்தி எத்தனை பேர் இருப்பாங்க? யாராவது நம்மளப் பார்த்துடப் போறாங்க. என்னை விடுடா….. ப்ளீஸ்,” என்று அவனிடமிருந்து விடுபட அவன் மார்பில் கையை வைத்து அழுத்தித் தன்னை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளப் பின்னால் நகர, அவளை மேலும் இறுக்கித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கதிர்,

“நீயா வந்து என்கிட்ட நல்லா வசமா மாட்டிக்கிட்டியா?” என்று கதிர் கூற, அவனை அதிர்ச்சியில் பார்த்த கீர்த்திகா அவனை முறைத்தவள்,

“பாவமே, கோவமா போறேன்னு உன்னைச் சமாதானப்படுத்த உன் பின்னாடி வந்தா, கடைசியில் நீ என்னை ஏமாற்றி இங்கே யாருமில்லாத இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு வந்திருக்க,” என்றால் அதே கோபத்தோடு.

“பின்னே! நான் எனக்குக் கிடைக்கிற சான்ஸை நான் மிஸ் பண்ணுவேனா? அதுவும் என் கீர்த்திக் குட்டியை நான் மிஸ் பண்ணுவேனா? காலையில் நீ எனக்கு முத்தம் கொடுக்கச் சொன்னப்போ எங்க கொடுத்துட்டுப் போன? என்னோட கன்னத்துல தானே? இப்ப நீ நல்லா வசமா வந்து மாட்டிக்கிட்டியா. நான் கேட்ட இடத்துல எனக்கு முத்தம் நீ கொடுத்தா தான் நான் உன்னை விடுவேன். இல்லன்னா யாரு வந்தாலும் நான் உன்னை விட்டுப் இப்படியே கட்டிப்பிடிச்சுட்டுத்தான் இங்கேயே நிற்கப் போறேன்,” என்று கூறினான் கதிர்.

“டேய் கதிர்! என்னடா விளையாட்டு இது? ப்ளீஸ்டா! யாராவது வந்திடப் போறாங்க. மாட்டிக்கிட்டோம்னா அவ்வளவுதான். ப்ளீஸ்,” என்று கீர்த்திகா கெஞ்ச.

“நீ எனக்கு முத்தம் கொடுத்தால் தான் நான் உன்னை விடுவேன். இல்லைன்னா விடமாட்டேன்,” என்று கதிர் பிடிவாதமாக நிற்க, அவன் பிடிவாதம் அறிந்த கீர்த்திகா, இனி இவனிடம் போராடி பிரயோஜனம் இல்லை என்றவள் அமைதியாக நிற்க.

அமைதியாக நின்ற கீர்த்தியைப் பார்த்து, “என்னடி எதுவுமே சொல்லாமல் அமைதியா இருகுற? ஒன்னு முத்தம் கொடுக்கிறேன்னு சொல்லு, இல்லன்னா இல்லைன்னு சொல்லு. இப்படி எதுவும் சொல்லாமல் இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?” என்று கதிர் கேட்க.

“டேய் கதிர், எனக்கு வெட்கமாக இருக்குதுடா. நான் எப்படி உனக்கு முத்தம் கொடுக்கிறது?” என்று கேட்க, “உனக்கு வெட்கமா இருக்கா? நான் வேணா கண்ணை மூடிக்கிட்டா…. நீ எனக்கு முத்தம் கொடுக்குறியா?” என்று கூற.

அவள், “சரி நீ கண்ணை மூடிக்கோ. ஆனா எனக்கு கட்டிப் பிடிச்சு நிக்கிறது எனக்கு ரொம்ப கூச்சமாக இருக்குது,” என்று அவள் நெளிந்து கொண்டு கூற, “எதுக்கு நான் கண்ணை மூடினதுக்கப்புறம் இங்கிருந்து எஸ்கேப் ஆகுறதுக்கு? முடியவே முடியாது. நீ முத்தம் கொடுக்காமல் என்ன ஆனாலும் நான் உன்னை இங்கிருந்து விடப்போவதில்லை,” என்று கூற.

இவனிடம் தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்து கீர்த்திகா, “சரி நீ கண்ணை மூடு. நான் முத்தம் கொடுக்கிறேன்,” என்று கூற, கதிர் அவளைப் பார்த்து சிரித்தவன், “அப்படி வா…. வழிக்கு,” என்று தன் கண்களை மெதுவாக மூட, கீர்த்திகா முதலில் அவன் முகத்தைப் பார்த்தவள் கூச்சப்பட்டு கொண்டே நிற்க, “ஏன் இப்ப நீ முத்தம் கொடுக்கப் போறியா இல்லை நான் கண்ணைத் திறக்கவா?” என்று கதிர் கேட்க.

“டேய்… டேய்… இருடா ஒரு நிமிஷம்,” என்று அவன் வாயைப் பொத்தியவள், “நீ அமைதியா இருந்தால் தான் நான் முத்தம் கொடுப்பேன்,” என்று கூற, “ம்ம்ம்… ம்ம்…” என்று தலையை ஆட்டினான்.

அவன் முகத்தருகில் தான் முகத்தைக் கொண்டு வந்து அவன் வாயில் இருந்த தன் கையை எடுத்துவிட்டு அவனுக்கு முத்தமிட அவன் உதட்டருகில் வர, அவள் மூச்சுக் காற்று அவன் முகத்தருகே மிக நெருக்கமாக உணர, அவள் உஷ்ண மூச்சுக் காற்று கதிரின் உதட்டில் பட்டதும், சட்டென்று கண்களைத் திறந்தவன் அவள் முகத்தைப் பிடித்து அவள் இதழைத் தன் இதழ்களால் சிறை செய்தான்.

தயங்கியவாறு அவன் அருகில் முத்தம் கொடுக்க வந்தவளைச் சட்டென்று அவன் கொடுத்த முத்தத்தை எதிர்பாராதவள், அவனையே அதிர்ச்சியாகப் பார்க்க, அவனோ ஒற்றை முத்தத்திலேயே அவளிடம் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான். அவன் முத்தம் கீர்த்தியை ஏதோ செய்ய, மெல்ல மெல்லத் தன்னை அவள் முத்தத்தில் தொலைத்துக் கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரும் தங்களை மறந்து முத்தத்தைப் பரிமாறிக் கொண்டிருக்க, காலையிலிருந்து இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நபர் இவர்கள் இருவரும் அறியாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதைப் புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தான்.

****

விஷால், பூமிகா வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சில இளைஞர்களுடன் நம் ஜோடிகளும் அங்கே இருக்க அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் அனைவரும் நேரமே ரூமிற்குச் சென்றுவிட, அனைவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாட ஆரம்பித்தனர்.

ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக அந்த இடமே அதிர்ந்து கொண்டு இருந்தது. விஷால், பூமிகா ஒரு புறம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க….

கதிர், தூரத்தில் அவனையே ரசித்துக் கொண்டிருக்கும் தன் கீர்த்தியைப் பார்த்துக் கொண்டே ட்ரிங்க்ஸ் பண்ணிக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

விக்கியும் அவனுடன் இருக்க, “டேய்.. கதிர்! இங்கே நான் ஒருத்தன் இருக்கேன் என்பதையே மறந்துட்டியா டா நீ? உன்னோட ஆளையே பார்த்துட்டு இருக்க. பக்கத்துல இருக்க எனக்கும் கொஞ்சம் கம்பெனி குடுடா…” என்றவன், கதிர் அமர்ந்திருந்த சேரை தன்னைப் பார்க்குமாறு திருப்பி அவனைத் தன் புறம் அமர வைத்தான்.

“விக்கி… மச்சான்… கொஞ்சமாவது அறிவு இருக்கா டா… உனக்கு? என் ஆளே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா என் ரொமான்ஸ் மூடிற்கு ஏற்றது போலவே வந்துட்டு இருக்கா…. நீ என்ன டா.. ன்னா.. அதை கெடுத்திருவ போலவே இருக்கே,” என்று திரும்பப் போக,

“டேய்! இப்படி என்கூடப் பார்ட்டி பண்ணாமல் கீர்த்திகா கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா, நான் அம்மா கிட்ட போய் நீங்க காலையில் சொன்னது சரி தான் மா… ஒரே வீட்டில் பொண்ணு எடுக்காதீங்கனு சொல்லிருவேன்,” என்று கூறி எழுந்து செல்லப் போக, அவன் கையைப் பிடித்து அமர வைத்த கதிர், “ஹேய்.. ஹேய்… சாரி டா மச்சான். ப்ளீஸ் … ஒரே ஒரு நிமிஷம்,” என்றவன் திரும்பி கீர்த்தி இருந்த இடத்தில் திரும்பிப் பார்த்தவன், “நான் அப்புறமா உனக்குப் மெசேஜ் பண்றேன்,” என்று சொல்ல, அவள் ‘ஏன்?’ என்று சைகையிலேயே, யாரும் தன்னைப் பார்த்து விடக் கூடாது என்று கவனமாகத் தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடியே கதிரிடம் கேட்டாள். அதற்கு கதிர் தன் அருகில் காட்ட, அங்கே விக்கி நின்று இருவரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டு இருக்க.

அவனைக் கண்டதும் கீர்த்தி “ஐயோ… அண்ணா….” என்று ஷாக் ஆனவள். விக்கி தன்னை முறைப்பதைப் பார்த்தவள் தன் காதைப் பிடித்துக்கொண்டு அவனிடம் “சாரி” என்று சைகையிலேயே அவனிடம் மன்னிப்புக் கேட்க, “சரி” என்று சொன்னவன் திரும்பி கதிருடன் பார்ட்டி பண்ண ஆரம்பித்தான்.

“ஏன்டா… கதிர்.. கல்யாணம் ஆகாம நீயே இந்த ரொமான்ஸ் பண்ற. ஆனா உங்க அண்ணன் என்ன டா… இப்படி அம்பி மாதிரி உக்காதிருக்கான். அங்க பாரு,” என்று ஆதி இருந்த இடத்தைக் கை காட்ட.

அவன் காட்டிய திசையை திரும்பிப் பார்த்த கதிர், அங்கே ஆதி கையில் மது கிளாஸுடனும், அவன் அருகில் துர்கா அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதையும் பார்த்த கதிர், “இவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. நான் அவனிடம் அவ்வளவு சொல்லிவிட்டுத் தான் வந்தேன் துர்காவிடம் நன்றாக நடந்து கொள்ளச் சொல்லி. ஆனால் இப்போ பாரு, இவ்வளவு நேரம் ஆகியும் துர்காவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறான்,” என்று அலுத்துக் கொண்டான்.

கதிர், “சரி பொறு, நாம ஏதாவது ஐடியா பண்ணலாம்,” என்றவன், பார்ட்டி நடத்திக் கொண்டிருக்கும் நபரிடம் சென்று காதில் ஏதோ கூற, அவரும் கதிர் சொன்னதைக் கேட்டதும் “சரி” என்பது போலவே தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.

பின் விக்கியிடம் வந்து கதிர் அமர, “என்னடா சொல்லிட்டு வந்த?” என்று கேட்க, “வெயிட் அண்ட் வாட்ச் மச்சான். அவசர படாத,” என்றான் கதிர்.

பார்ட்டி நடத்துபவர் ஓடிக் கொண்டிருக்கும் பாட்டை நிறுத்திவிட, அதுவரை அவர் பாடலுக்கு என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தவர்கள், “ஏன் பாட்டை நிறுத்தினீர்கள்? அதற்குள் பார்ட்டி முடிந்து விட்டதா…” என்று கேட்க.

“நோ கைஸ்…. பார்ட்டி இனிமேல்தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கப் போகிறது. இப்போ நாம ஒரு கேம் விளையாடப் போறோம். இதை சிங்கிள்ஸ், ஜோடி என்று யார் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால், அவர்களுடன் இன்னொரு நபர் இருக்க வேண்டும். இரண்டு பேர் சேர்ந்து விளையாட வேண்டிய கேம் இது,” என்றார்.

உடனே அங்கிருந்த அனைவரும் “ஹேய்…..” என்று கூச்சலிட்டு ஸ்டார்ட் செய்யலாம் என்று கூற, “யார் யாரெல்லாம் விளையாடப் போகிறார்கள் என்று முடிவு செய்து விட்டு அங்கே போடப்பட்டிருக்கும் சேரில் அமரவும்,” என்று கூற.

சிலர் தங்கள் ஜோடியைத் தேர்வு செய்ய, ஆதி, துர்கா அமைதியாக அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் வந்த விக்கியும், கதிரும், “டேய்! நீயும் துர்காவும் இதுல கலந்துக்கோங்க,” என்றனர்.

“டேய் என்ன விளையாடுறியா? என்னால முடியாது. நான் எல்லாம் இதற்கு வரலை,” என்றான் ஆதி. துர்காவும் “முடியாது” என்று கூற.

அப்போது அங்கு வந்த சங்கவி, “ஆதி” என்று அழைத்தாள். அவளைத் திரும்பி, “என்ன…” என்று கடுப்போடு ஆதி கேட்க, “என்கூட இந்த கேமில் ஜாயின் பண்ண நீ வரியா?” என்று கேட்க.

அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன், அவள் மேக்கப்பும் அவள் அணிந்திருக்கும் கவர்ச்சியான ஆடையையும் பார்த்தவன், முகத்தைச் சுளித்துக்கொண்டு, “நான் எதற்கு உன்கூட அந்தக் கேமை விளையாடணும்?” என்று கேட்டான்.

அவன் ஏற்கனவே மது கொஞ்சம் அதிகமாக அருந்தி இருந்ததால் லேசாகக் குழறியபடியே பேசினான். “ஏன் ஆதி, இது கப்பிள்ஸ் விளையாடுற கேம் என்று தானே சொன்னார்கள்? எனக்குப் பேர் யாருமில்லை. அதனால் தான் உன்னை அழைத்தேன்,” என்றாள்.

இதை அவள் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த விக்கி, “ஹலோ சங்கவி! அவனுக்கு ஜோடி இல்லை என்றால் நீ அவனை கூப்பிடுவது சரி என்று சொல்லலாம். ஆனால் அவன் மனைவி இவான் கூட இருக்கும்போது நீ எப்படி ஆதியை அழைக்கலாம்?” என்று கேட்டான்.

அவனை முறைத்த சங்கவி, “ஹேய்… நீ யாரு மணி இதெல்லாம் கேட்க? ஆதியே எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான் என்றால், அவனுக்கு இந்த வேலைக்காரியிடம் விளையாடப் பிடிக்கவில்லை போலவே இருக்கிறது. அவன் தகுதிக்கு துர்கா எல்லாம் ஆதியின் காலை தூசிக்குச் சமம்,” என்று கூற.

அவ்வளவு நேரம் அவள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆதி, சங்கவி துர்காவை ‘வேலைக்காரி’, ‘தகுதி இல்லாதவள்’ என்று கூறியதைக் கேட்டதும் கோபம் வர, அவன் துர்காவைப் பார்க்க, அவள் முகம் சங்கவியின் பேச்சில் சுருங்கி வாடிய மலரைப் போல ஆகிவிட்டது.

இதைக் கவனித்த ஆதி, “நான் துர்காவுடன் விளையாடுகிறேன். எனக்கு ஜோடி இருக்கிறது. நீ போ… முதலில் இங்கிருந்து. உன்னைப் பார்க்கவே எனக்கு எரிச்சலாக இருக்கிறது,” என்று கூறினான்.

சங்கவி மறுபடியும் ஏதோ கூற வர, இடைமறித்த விக்கி, “இப்போ என்ன உனக்கு ஒரு ஜோடி வேணும் அப்படித் தானே?” என்றவன் சிறிது யோசித்தவன், “சரி வா… நானே உன்னுடன் ஜோடியாக இருக்கிறேன்,” என்று கூற.

“ஏய் இடியட்! உன்னை யார் எனக்கு எல்லாம் ஜோடியாக இருக்க சொன்னது? அம்மா அப்பா யார் என்று தெரியாத அனாதை உடன் எல்லாம் என்னால் விளையாட முடியாது,” என்றால்.

இதைக் கேட்டதும் கதிரும், ஆதியும், துர்காவும் கூடக் கோபம் வந்து “ஏய்….” என்று கத்த, சங்கவி இதைப் பார்த்து மிரள, அவள் அருகில் வந்த கீர்த்திகா, “எங்க அண்ணனைப் பார்த்து நீ எப்படி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்? இனிமேல் இப்படி அவரை எதுவும் இந்த மாதிரி பேசினால் உன் கழுத்தை அறுத்து விடுவேன்,” என்றால்.

அனைவரையும் பார்த்துப் பயந்த சங்கவி மிரண்டு போய் அங்கேயே நிற்க, மற்றவர்களைச் சமாதானம் செய்த விக்கி, சங்கவியிடம் வந்தவன், “நீ சொன்னதில் எந்தத் தப்பும் இல்லை தான். நான் அனாதை தான்.. அதற்காக எனக்கு என்று யாருமில்லை என்று மட்டும் நினைக்காதே. இவ்வளவு பேர் எனக்காக வருகிறார்கள் பார்த்தாயா?” என்றான்.

“சரி, இப்போ என்கூட நீ வரியா… இல்லையா… இங்க ஜோடி என்றால் திருமணமானவர்கள், லவர்ஸ் தான் என்று இல்லை. நண்பர்கள், சகோதரா, சகோதரிகள் என்று யார் வேண்டுமானாலும் ஜோடியாக விளையாடலாம். நீ என்னை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்,” என்றான் விக்கி.

“சரி, வந்து தொலை! உன்னோடவே விளையாடுறேன்,” என்றவள் அவனுடன் செல்ல, கதிர் விக்கியைப் பார்த்து இடிக்க, விக்கி “சரி… சரி… நோண்டாதே டா….” என்றவன்.

பின்னால் திரும்பி, “ஆதி, நீ துர்காவின் கையைப் பிடித்துட்டு வா…” அந்தக் கதிர் உனக்கு ஜோடி என்று யோசிப்பது போலவே பாவனை செய்தவன், பின், “கீர்த்துமா, நீ தனியா தானே இருக்க? கதிரும் தனியா தான் இருக்கான். நீ அவன் கூட ஜோடி ஆகிக்கோ,” என்று கூற.

“அண்ணா…. நான் எப்படி….?” என்று கீர்த்தி கூற. அவள் அருகில் இருந்த துர்கா, “ஆமா கீர்த்தி, நீயும் வாடி,” என்று அவளை வற்புறுத்த, “சரி” என்று சொன்னவள் கதிரைப் பார்க்க, அப்போது கீர்த்தியைப் பார்த்ததும், “ஏய் நம்ம கதிர் தானே? போடி…” என்று கீர்த்தியைத் தள்ளி விட, அவள் சென்று அவன் அருகில் நின்றிருக்க, “எப்படி டி! உன்னையே எனக்கு ஜோடி சேர்த்துட்டேன் பார்,” என்று தன் காலரை தூக்கி விட்டான்.

“சரி சரி போடா போடா….வரேன்,” என்ற துர்கா அவள் பின்னால் செல்ல, அனைத்து ஜோடிகளும் வந்து நடுநாயகமாக நின்றனர்.

அனைவரும் வந்திருப்பதைப் பார்த்த அந்த டி.ஜே, “சரி, இந்த கேம் ஓட மெயின் தீம் என்னன்னா…” என்றவன், இந்தக் கேம் எப்படி விளையாடணும் என்று சொல்ல ஆரம்பித்தான்.

“இரண்டு உண்மைகள் மற்றும் ஒரு பொய்” என்பது ஒரு உன்னதமான ஐஸ்பிரேக்கர் கேம் ஆகும். இதில் கலந்து கொள்ளும் நபர் தங்களைப் பற்றி ஒரு பொய்யுடன் இரண்டு உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஆனால், கலந்து கொள்ளும் நபர் சொல்லிய மூன்று செய்திகளில் எது பொய் என்பதை அவருடைய ஜோடி சொல்ல வேண்டும்,” என்றான். இது தான் கேம் ரூல் என்று கூறியவன், “ஓகே, ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றான்.

EPISODE 36

அனைவரும் வந்திருப்பதைப் பார்த்த டி.ஜே… “சரி, இந்த கேமோட மெயின் தீம் என்னன்னா…” என்றவன், இந்த கேம் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான்.

“இரண்டு உண்மைகள் மற்றும் ஒரு பொய்” என்பது ஒரு உன்னதமான ஐஸ்பிரேக்கர் கேம் ஆகும். இதில் கலந்து கொள்ளும் நபர் தங்களைப் பற்றி ஒரு பொய்யுடன் இரண்டு உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஆனால், கலந்து கொள்ளும் நபர் சொல்லிய மூன்று செய்திகளில் எது பொய் என்பதை அவருடைய ஜோடி சொல்ல வேண்டும்,” என்றான். இதுதான் கேம் ரூல் என்று கூறியவன், “ஓகே, ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றான்.

முதலில் ஒரு ஜோடி வந்தது; இரண்டு பெண்கள் கலந்து கொண்டனர். முதல் பெண் தன்னுடன் பங்கேற்ற இரண்டாவது பெண்ணிடம் சொல்ல வேண்டும்.

அவளிடம் என்ன உண்மைகளையும், என்ன பொய்யையும் சொல்ல வேண்டும் என்று யோசித்த முதல் பெண் இரண்டாவது பெண்ணிடம் சொல்ல ஆரம்பித்தார்.

முதலாவதாக, தன் கழுத்திலிருந்த செயினைக் காட்டி, “இது போன வாரம் நான் (ஒரு பிரபல நகைக்கடை பெயரைச் சொல்லி) அங்கே வாங்கினேன்,” என்று சொன்னாள். இரண்டாவதாக, “நானும் மேகாவும்தான் இன்று இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒன்றாக வருவதாக இருந்தது. ஆனால், அவளால் கடைசி நேரத்தில் வர முடியவில்லை,” என்றாள். மூன்றாவதாக, “நான் அணிந்திருக்கும் இந்த ஆடையை ஒரு கடையில் இருந்து வாடகைக்கு எடுத்து அணிந்து வந்திருக்கிறேன்,” என்று சொன்னாள்.

முதல் பெண் கூறிய மூன்று செய்திகளையும் கேட்ட இரண்டாவது பெண், சற்று நேரம் பொறுமையாக அவள் சொன்னதை யோசித்துக் கொண்டிருந்தார்.

“மூன்றாவதாகக் கூறிய விஷயம் பொய். மற்ற இரண்டும் உண்மை,” என்று அந்தப் பெண் சட்டென்று சொன்னார்.

இரண்டாவது பெண் எது பொய் என்று சொன்னதைக் கேட்டு, போட்டியை நடத்துபவர் முதல் பெண்ணிடம், “மேடம், நீங்க சொன்ன மூணு விஷயங்கள்ல இவங்க சொன்ன அந்த விஷயம் தான் பொய்யா?” என்று கேட்டார்.

அதைக் கேட்ட முதல் பெண், “ஆமாம் சார், இவள் கரெக்ட்டாகத்தான் சொல்லியிருக்கா,” என்று அந்தப் பெண் சொல்லிவிட்டு, தன் தோழியைப் பார்த்து, “ஏய்! எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்க,

“நீ நகை எடுக்கப் போனதையும், மேகா வரவில்லை என்பதையும் எனக்கு ஏற்கனவே சொல்லிட்ட. ஆனா, இந்த டிரஸ் விஷயம், நீ வாடகைக்கு எடுத்து சொன்னாய் பார்த்தியா? அதைக் என்னால் நம்ப முடியவில்லை. ஏன்னா, நீ, நாங்க போட்டு இருக்கிற டிரெஸ்ஸையே வாங்கிப் போட மாட்டே. எப்பவுமே உன்னோட பொருளை மட்டும் தான் யூஸ் பண்ணுவ. அடுத்தவங்க பொருளை நீ யூஸ் பண்ண மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்போ, நீ போட்டிருக்கிற டிரஸ்ஸை வாடகைக்கு எடுத்து, இன்னொருத்தர் போட்டு கொடுத்ததை எடுத்து நீ போட்டு இருக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான், நீ மூன்றாவது சொன்ன விஷயம் பொய்ன்னு நான் சொன்னேன்,” என்றால் அந்தப் பெண்.

“சூப்பர்! கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க!” என்று சொன்னார் நடுவர். “சரி, அடுத்து யார் பார்க்கலாம்?” என்று ஒவ்வொரு ஜோடியாக அழைத்தார். இப்போது விக்கியும் சங்கவியும் மேடை ஏறினர்.

சங்கவி மூன்று விஷயங்களைக் கூற வேண்டும். விக்கி அதிலிருந்து எது பொய் என்று ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.

  1. “என் வீட்டுக்கு நான் ஒரே செல்லப் பிள்ளை,” என்று முதல் விஷயத்தைச் சொன்னாள்.
  2. “இந்த ஊரிலேயே நாங்கள் மிகவும் அழகான பெண். என்னைவிட அழகான பெண் இங்கு யாருமே இல்லை,” என்றாள்.
  3. கூடிய சீக்கிரத்தில் நான் ஆதியைத் திருமணம் செய்யப் போகிறேன்,” என்றால் அத்தனை பேர் முன்னிலையில்.

இவள் சொன்ன மூன்றாவது விஷயத்தைக் கேட்டு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. துர்காவும் ஆதியுமே சங்கவி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய்தான் அமர்ந்திருந்தனர்.

விக்கி, இவள் சொன்ன மூன்று விஷயங்களைப் பொறுமையாகக் கேட்டவன்,

அவளை ஒரு முறை பார்த்தவன் ஏளனமாகச் சிரித்துவிட்டு, “உனக்கு ஒண்ணுமே உருப்படியாகச் செய்யத் தெரியாதா? இவங்க என்ன சொன்னாங்க? ரெண்டு உண்மை ஒரு பொய் சொல்ல சொன்னாங்களா? ஆனா, நீ சொன்ன மூணுமே பொய்!” என்றான் விக்கி.

அவன் கூறியதைக் கேட்ட சங்கவி, “ஏன் மேன், நான் பொய் சொன்னேன்? உனக்கு எப்படித் தெரியும் நான் சொன்ன மூணுமே பொய் என்று நீ எப்படி சொல்லலாம்?” என்று கேட்டாள் சங்கவி.

“முதல்ல என்ன சொன்ன? ‘எங்க வீட்டுக்கு நான் செல்லப் பிள்ளை’ன்னு சொன்னே. அதாவது, உங்க அம்மா அப்பாவுக்கு நீ ஒருத்தி தான் செல்லப் பிள்ளைன்னு சொன்னே. ஆனா, அது பொய். உங்க அம்மாவை விட உங்க அப்பாவுக்குத்தான் நீ செல்லப் பிள்ளை. உங்க அம்மாவுக்குக் கிடையாது, கரெக்ட்டா?” என்றான்.

“சரியாகச் சொன்னீங்க தம்பி! அவ எங்க நான் சொல்ற பேச்சைக் கேட்கிறாள்? அவளுக்குச் செல்லம் கொடுத்துச் செல்லம் கொடுத்து அவங்க அப்பா தான் கெடுத்து வெச்சிருக்காரு. அவருக்குத்தான் அவ செல்லப்பிள்ளை, எனக்கில்லை. என் பேச்சைக் கேட்டால் தானே அவ செல்லப்பிள்ளை?” என்றார் சிவகாமி (சங்கவியின் அம்மா).

சிவகாமி சொன்னதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட, இதைப் பார்த்த சங்கவிக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

சிவகாமி இவ்வாறு கூட்டத்தில் அனைவரும் முன்னிலையில் இவள் செல்லப்பிள்ளை இல்லை என்று சொன்னதும், சங்கவிக்கும் மூக்கு உடைந்தது போல ஆக, அவள் கோபத்துடன் தன் அம்மாவைப் பார்த்து, “அம்மா!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்த, அவள் அருகில் இருந்த வேதாச்சலம் சிவகாமியின் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தவர், “ரூமுக்கு வாடி! உன்னைப் பேசிக்கிறேன்,” என்று யாருக்கும் கேட்காத வண்ணம் அவருக்கு மட்டும் கேட்டவாறு சொல்லிவிட்டு, “அது ஒண்ணும் இல்ல தம்பி, இன்று காலையில சங்கவிக்கும் அவ அம்மாவுக்கும் ஒரு சின்ன சண்டை. அதனால கோபத்தில் அவங்க அம்மா இப்படி சொல்லிட்டா. என் பொண்ணு எங்க ரெண்டு பேருக்குமே செல்லம் தான்,” என்றார் வேதாச்சலம்.

“சரி, அது உண்மையாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா மற்ற இரண்டும் பொய்தானே?” என்று சொன்ன விக்கி, “அது எப்படி நீதான் இந்த ஊரிலேயே அழகான பொண்ணுன்னு சொல்ற? உன்னைவிட அழகான பொண்ணு இங்க நிறைய பேர் இருக்காங்க. அதை நீ பார்க்கவே இல்லையா? நீ மட்டும்தான் அழகுன்னு எப்பவுமே நீ சொல்லக்கூடாது. மத்தவங்கதான் சொல்லணும். ஒரு பொய் சொல்றதுக்கு அளவில்லையா?” என்றான் விக்கி.

விக்கி கூறிய விளக்கத்தைக் கேட்டு சில பெண்கள் ஆம் என்பது போல, அவன் சொன்னதுதான் சரி என்பது போலவும், அவனுக்குச் சப்போர்ட் செய்ய, சங்கவிக்குத் தன் நிலை நினைத்துக் கோபம் வர, ‘இவ்வளவு அவமானப்படுத்தி விட்டான்’ என்று அவன் மேல் அளவு கடந்த கோபம் அவளுக்கு வந்தது.

“சரி, மூன்றாவதாக நீ சொன்னியே, ஆதியை நீ சீக்கிரத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி? மத்த இரண்டையும் கூட ஏதோ ஒரு காரணத்துக்காகச் ‘சரி’ன்னு ‘உண்மை’ன்னும் கூடச் சொல்லிவிடலாம். ஆனா, இப்போ சொன்ன மூணாவது விஷயம், அதாவது ஆதியை நீ சீக்கிரத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன விஷயம் எந்த விதத்துல உண்மையாக முடியும்? நல்லா யோசிச்சுப் பாரு. நீ எப்படி யோசிச்சாலும், எவ்வளவு தலைகீழா நின்னாலும், ஆதியை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதை நான் அடிச்சு சொல்றேன்! இத்தனை பேரும் முன்னாடியும் ஆதி கல்யாணம் பண்ணிக்கிட்டது எங்க துர்காவைத்தான். அவள்தான் அவனோட பொண்டாட்டி. நீ என்ன நெனச்சாலும் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது,” என்று விக்கி கூறினான்.

இதைக் கேட்ட சங்கவி, “அது எப்படி துர்கா தான் அவனோட பொண்டாட்டி என்று நீ உறுதியா சொல்ற? இந்தத் திருமணமே அவசரத்தில் நடந்தது தானே? அவளே ஆதி காசு வச்சிருக்கான் அப்படின்னு சொல்லித்தான், அவனுடைய நோயைக் கூடப் பொருட்படுத்தாம ஆதியின் சொத்துக்காகத்தான் துர்கா ஆதியைத் திருமணம் பண்ணிக்கிட்டா. அப்படி இருக்கப்போ இந்த மாதிரி எண்ணத்தோடு ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு எப்படி ஆதி சந்தோஷமா காலம் முழுக்க இருக்க முடியும்? அதுக்கு வாய்ப்பே இல்லை. கூடிய சீக்கிரம் துர்காவும் ஆதியும் பிரியத்தான் போறாங்க. நான் தான் ஆதியைத் திருமணம் பண்ணப் போறேன்,” என்று சொன்னாள் சங்கவி திடமாக.

துர்காவை இவ்வளவு பேர் முன்னிலையில் சங்கவியின் பேச்சால் தாங்க முடியாத துர்காவின் மனம் மிகவும் வருத்தப்பட, அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டவள் அமைதியாக அமர்ந்திருக்க, இதைக் கவனித்த ஆதி எதுவும் பேசாமல் சங்கவியின் மேல் கோபத்தோடு அமர்ந்திருந்தான்.

துர்காவைப் பற்றி சங்கவி தவறாகக் கூறியதைக் கேட்ட கீர்த்திகாவும், அவள் அம்மா வடிவும், விசாலாட்சியும் மூன்று பேருமே சங்கவியிடம் சண்டைக்கு வந்துவிட்டனர்.

“நீ எப்படி எங்க பொண்ணைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம்?” என்று வடிவும் விசாலாட்சியும் கேட்க, கீர்த்திகா, “ஆமாம் அத்தை! இன்னைக்கு காலையில இருந்து பூமிகா அக்கா கிட்ட அப்புறம் அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் துர்காவைப் பத்தி சங்கவி இப்படியேதான் சொல்லிட்டு இருக்கா. ‘காசுக்காகத்தான் துர்கா ஆதி மாமாவை கல்யாணம் பண்ணியிருக்கா’ன்னு சொல்லிட்டே இருக்கா. அதைக் கேட்டு அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா? இவளுக்கு ஏன் இப்படி ஒரு பொறாமை? இவள் தானே ஆதி மாமாவை வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போனா. அப்படி இருக்கிறப்ப சும்மா சும்மா துர்காவைப் போட்டு இப்படி கஷ்டப்படுத்திட்டு இருந்தா நல்லா இருக்கா?” என்று கேட்டாள் கீர்த்திகா.

அனைவரும் சங்கவியையே திட்ட, அப்போது அங்கே வந்த வேதாச்சலம், “இப்ப எதுக்கு என் பொண்ணைத் திட்றீங்க? அவ ஏதோ ஆதியைத் திருமணம் பண்ண முடியல அப்படிங்கற ஆதங்கத்தில் எல்லாரும் முன்னாடியும் ஏதோ வார்த்தையை விட்டுட்டா. அதுக்காக என் பொண்ணை யாரும் திட்டாதீங்க. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். என் பொண்ணு ஆதியை நினைச்சுட்டு, அவ எந்தப் பையனையும் இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா. ‘ஆதியை நான் செய்த தப்பினால் தான் அவனைத் திருமணம் பண்ண முடியாமல் போனது’ என்ற ஆதங்கத்தில் அவ சொல்லியிருப்பா…. அப்படியெல்லாம் பேசாதீங்க,” என்று மிகவும் நல்லவர் போல அனைவரிடமும் சங்கவிக்குப் பதிலாக மன்னிப்புக் கேட்டார். அனைவரும் இவரின் நிலையைப் பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் அமைதியாகப் போய்விட்டனர்.

மேடையில் இருந்து இறங்கிய சங்கவி விக்கியைப் பார்த்து முறைத்துக் கொண்டு கீழே இறங்கி வர, விக்கி சங்கவியைப் பார்த்துத் தன் நாக்கை நீட்டி அவளிடம் பழிப்பு காட்டியவன், “முதல்ல உன்னை அடக்க ஒடுக்கமா நடந்துக்கிற வழியைப் பாரு. இப்படிப் பொய் பேசிட்டு அடுத்தவங்களுக்குக் கெடுக்கணும்னு நினைச்சுட்டு இப்படியே சுத்திட்டு இருந்தேன்னு வை…. இது உன் வாழ்க்கைக்கு நல்லதில்லை. உன்னோட நல்லதுக்காகத்தான் ஒரு அக்கறையாக நான் சொல்றேன்,” என்றான் விக்கி.

அவன் கூறியதை எல்லாம் கேட்ட சங்கவி, “ஏய்…. உனக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கிறது? நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டே…. உன்னைக் கேட்கவே உனக்கு யாரும் இல்லை. அம்மா அப்பா இல்லாத அனாதை தானே நீ….?” என்று கேட்க.

அதை கேட்ட விக்கி, “நான் அனாதைன்னு யார் சொன்னது? என்கூட எத்தனை நல்லவங்க, நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க இருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும். நீ என்ன வேணாலும் என்னைச் சொல்லிட்டுப் போ…. ஆனா, உன்னைப் பார்க்கும்போது எல்லாம் அது என்னவோ தெரியல, நீ இந்த மாதிரி எல்லாம் பண்றப்போ எனக்குக் கூடப் பிறந்த தங்கச்சியோ அக்காவோ யாராவது இருந்திருந்தால், அவர்களை எப்படி நான் கண்டித்து வாய்ப்பேனோ அப்படித் தான் எனக்கு உன்னைப் பார்த்ததும் கண்டிக்கத் தோன்றுகிறது,” என்றான்.

சங்கவி கூறியதைக் கேட்டதும் அங்கிருந்த பெரியவர்களுக்குப் பிடிக்காமல் அனைவரும் எழுந்து தங்கள் அறைக்குச் சென்று விட்டனர்.

துர்காவும் எழுந்து தன் அறைக்குச் செல்லப் போக, அப்போது அவளின் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தது ஒரு கை. யார் கையைப் பிடித்து நிறுத்தினார்கள் என்று திரும்பிப் பார்க்கையில் ஆதிதான் அவளைப் பிடித்து நிறுத்தி இருந்தான்.

“துர்கா, எங்க போற? இன்னும் கேம் முடியல. நம்மளும் பார்ட்டிசிபேட் பண்ணப் பேர் கொடுத்திருக்கோம்ன்னு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்றான்.

“நான் இந்தக் கேம்ல கலந்து கொள்ளவில்லை ஆதி. போதும் அவமானப்பட்ட வரைக்கும். ஒவ்வொருத்தரும் வந்து அதையும் இதையும் சொல்லி என்னை அவமானப்படுத்தும் போது எனக்கு ரொம்ப வலிக்குது. எங்களுக்காகப் பேச இங்க யாருமே இல்லை என்கிறப்ப நான் எதுக்காக இங்க இருக்கணும்? நான் போறேன். நீ கையை விடு ஆதி,” என்று கூற, ஆதி கோபமாக அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் இருந்த சேரில் அமர வைத்தான். துர்காவைப் பார்த்து,

“நீ இங்கே இருக்கிறதா இருந்தாலும், இங்கிருந்து போறதா இருந்தாலும், நான் சொன்னா மட்டும்தான் நீ செய்யணும். நீயா யோசிச்சு எந்த முடிவையும் எடுப்பதற்கு நான் உனக்கு எந்த அனுமதியும் கொடுக்கல,” என்று ஆதி துர்காவைப் பார்த்து கோபத்துடன் சொல்ல.

ஆதி சொன்னதைக் கேட்டது கேட்டு துர்காவின் மனம் மேலும் புண்படும்படி ஆகிவிட, எதுவும் பேசாமல் அமைதியாக அவன் அருகில் அமர்ந்தாள்.

கதிரும் கீர்த்திகாவும் ஸ்டேஜுக்கு வந்தனர்.

கதிர் மூன்று விஷயங்களைச் சொல்ல வேண்டும். அதிலிருந்து எது பொய் என்று கீர்த்திகா கண்டுபிடிக்க வேண்டும்.

போட்டியை நடத்துபவர், “ஓகே மிஸ்டர் கதிர்! நீங்க ரெடியா இருக்கீங்களா? இப்போ கேம் ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்று கேட்க,

“ஓகே ஷூர்! நான் ரெடியாகத்தான் இருக்கேன். கேம் ஸ்டார்ட் பண்ணலாம்,” என்றான்.

“சரி ஓகே! நீங்க ஏதாவது ஒரு மூணு விஷயத்தை உங்களோட பார்ட்னருக்கு சொல்லுங்க. அவங்க அதிலிருந்து எது பொய் என்று கண்டுபிடிக்கட்டும்,” என்று கூற, “ஓகே” என்று சொன்னவன் மைக்கை வாங்கிக் கீர்த்திகாவைப் பார்த்துவிட்டு,

  1. “என்னோட வாழ்க்கையின் முதல் லட்சியமே, எனக்காகத் தனியாக ஒரு பிசினஸ் ஸ்டார்ட் செய்து அதில் சக்ஸஸ்ஃபுல்லாக வரவேண்டும். அதில் என் அப்பாவின் பெயரையோ என் அண்ணனின் பெயரையோ உபயோகிக்காமல் நான் அந்தத் தொழிலில் முன்னேற வேண்டும் என்பதே என் முதல் ஆசை,” என்றான்.
  2. “இங்க கொஞ்ச நேரம் முன்னாடி சங்கவி, விக்கியைப் பற்றி எனக்கு யாருமில்லை என்றெல்லாம் சொல்லி அவனை எல்லோரும் முன்னிலும் அவமானப்படுத்தினாள். அதற்குப் பதிலடி கொடுப்பது போல, ‘சங்கவி கூறிய அனைத்து விஷயங்களும் உண்மையே. அவனுக்கு வேற யாரும் இல்லைன்னு இங்கு யாரும் நினைச்சிட வேண்டாம். என் குடும்பமும் நானும் இருக்கிறோம்,’ ” என்று இரண்டாவது விஷயமாகக் கூறினான்.

கதிர் கூறியதைக்கேட்டதும் விக்கிக்கு மிகவும் சந்தோஷமாகவும், அதேசமயம் கண்களில் இருந்து கண்ணீரும் வந்துவிட்டது. தனக்காகப் பேச தன் நண்பனும் நண்பனின் தம்பியும் எப்போதுமே தன் அருகில் இருக்கிறார்கள் என்று மிகவும் சந்தோஷப்பட்டான்.

  1. “மூன்றாவதாக, எனக்கு உன்னை சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது,” என்றான் கதிர்.

அவனிடமிருந்து மைக்கை வாங்கிய கீர்த்திகா, “நீங்க சொன்ன மூணாவது விஷயம், அதாவது, ‘என்ன உங்களுக்குச் சுத்தமா பிடிக்கவே பிடிக்காது’ன்னு சொன்னீங்க இல்லையா? அந்த விஷயம் தான் பொய்,” என்றால் கீர்த்திகா.

உடனே அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியமாக கீர்த்திகாவையும் கதிரையும் பார்க்க, ‘என்ன! இவன் அவளைப் பிடிக்காதுன்னு சொல்றான். ஆனா இந்த பொண்ணு அவனுக்கு அவளை பிடிக்கும் என்று சொல்கிறாள்?’ என்று எல்லோரும் யோசனையாகப் பார்க்க, துர்காவும் அதே யோசனையோடு தான் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தாங்கள் மேடையில் இருக்கிறோம் என்பதை மறந்து இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றிருக்க, அப்போது கீர்த்திகாவின் அருகில் வந்து போட்டியை நடத்துபவர், “ஹலோ மிஸ்… எப்படி நீங்க அவர் சொன்னது பொய் என்று உறுதியாகச் சொல்றீங்க?” என்று கேட்டார். அப்போதுதான் தன் நிலைக்கு வந்த கீர்த்திகா கதிரை ஒரு முறை பார்த்துவிட்டு, அந்தப் போட்டியை நடத்துபவரிடம் திரும்பி, “அதை நான் இப்போ ப்ரூஃப் பண்றேன்,” என்று சொன்னாள்.

“ஓகே” என்று அந்தப் போட்டியை நடத்துபவர் சற்று அவர்களை விட்டுத் தள்ளி நிற்க, கீர்த்திகா ஒரு முறை கதிரைப் பார்த்துவிட்டு,

“ஹலோ கதிர் மாமா….” என்று கீர்த்திகா கதிரை அழைத்ததும், அவ்வளவு நேரம் அவளிடம் விளையாட்டு காட்ட வேண்டும் என்று வேண்டுமென்று ‘அவளைப் பிடிக்காது’ என்று சொன்ன கதிர், அவள் தன்னை ‘மாமா’ என்று அழைத்ததும் ஆச்சர்யத்தில் எதுவும் பேசாமல் அப்படியே நின்று இருக்க, “உங்களுக்கு என்ன நிஜமாகவே பிடிக்காதா மாமா?” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

கதிர் வேண்டும் என்று தன்னை இத்தனை பேர் முன்னிலையில் ‘மாமா மாமா’ என்று கூப்பிட்டுத் தன்னை வம்பு இழுப்பதைப் புரிந்துகொண்ட கதிர், வேண்டும் என்று அவளிடம், “எனக்கு உன்னைப் பிடிக்காதுன்னு தானே சொன்னேன்,” என்று அவன் திரும்பி கேட்க, “அப்போ நிஜமா என்னைப் உங்களுக்குப் பிடிக்காது அப்படித்தானே?” என்று கேட்க, கதிரும் “ஆமாம்” என்று தலையை ஆட்டினான்.

“சரி, அப்போ உங்களுக்கு என்னப் பிடிக்காது தானே? அப்ப நான் எது செஞ்சாலும் உங்களுக்குக் கவலை இல்லை அப்படித்தானே?” என்று கீர்த்திகா கேட்க, கதிரும், “ஆமாம்! என்ன செஞ்சா எனக்கு என்ன? எனக்குப் பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் நான் அதைப்பற்றிக் கவலையே பட மாட்டேன்,” என்றான் சற்றும் யோசிக்காமல்.

“அப்போ சரி! இனிமேல் நான் எது செஞ்சாலும் நீங்க என்ன எதுவும் கேட்கக்கூடாது. ஓகேவா….” என்று சொன்னவள், மைக்கைப் பிடித்துக்கொண்டு கூட்டத்தில் இங்குமங்கும் சுற்றிப் பார்க்க, அவள் அங்கே பாலு அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அவனைப் பார்த்து, “ஹாய் ஜெண்டில்மேன்….” என்று மேடையில் இருந்து கையை அசைக்க.

அதைப் பார்த்த பாலு புரியாமல் தன்னைத்தான் அழைக்கிறாளா இல்லை தன் பின்னால் இருப்பது யாரோ கூப்பிடுகிறார்களோ என்று தன்னைச் சுற்றி முற்றும் பார்க்க, “இல்லை! நான் உங்களைத்தான் கூப்பிட்டேன்,” என்று சொல்ல.

“என்னையா?” என்று கேள்வியுடன் எழுந்து நின்ற பாலு, “சொல்லுங்க மிஸ்….” என்று புரியாமல் கேட்க, “நீங்க ரொம்ப அழகா ஹேண்ட்ஸமா இருக்கீங்க,” என்று சொன்னாள்.

கீர்த்திகா இப்படிச் சொன்னதும் மேடையில் இருந்த கதிருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. ‘சற்றுமுன் தானே அவளிடம் நான் எவ்வளவு கோபமாக, ‘இப்படி என்னை வைத்துக்கொண்டு அடுத்தவங்களை சைட் அடிக்கக் கூடாது’ன்னு எச்சரித்தேன். ஆனால் இவள் என்னவென்றால் மேடையில இத்தனை பேர் முன்னாடியும் என்னை வைத்துக்கொண்டு இன்னொருவனை ‘அழகா இருக்க’ன்னு சொல்கிறாள்…’ என்று கோபம் வந்த கதிர்,

சட்டென்று அவள் கையில் இருந்து மைக்கைப் பிடுங்கியவன், “உன்னை எனக்குப் பிடிக்காதுன்னு நான் சொன்னதுக்கும் இப்போ நீ செஞ்சிட்டு இருக்குற காரியத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் கதிர்.

“சம்பந்தம் இருக்கு கதிர் மாமா…..” என்று அந்த ‘மாமா’வை அழுத்தமாகச் சொன்ன கீர்த்திகா, “உங்களுக்குத்தான் என்னப் பிடிக்காதே…. அப்போ நான் யாரைப் பார்த்து ஹேண்ட்ஸமா… இருக்குன்னு சொன்னா என்ன? சொல்லாட்டி உங்களுக்கு என்ன? நீங்க பாட்டுக்கு பேசாமல் போக வேண்டியது தானே? இப்ப ஏன் இவ்வளவு கோபமா என்கிட்ட வந்து மைக்கைப் பிடுங்கி என்கிட்ட சண்டை போடுறீங்க?” என்று கேட்டால் கீர்த்திகா.

“எப்பவுமே ஒரு விஷயம் சொல்லுவாங்க, ‘நமக்கு பிடிச்சவங்க கிட்டதான் நம்ம கோபத்தைக் காட்டுவோம்’னு. இப்போ நீங்க என்கிட்ட கோபத்தைக் காட்டிட்டீங்க அப்படின்னா, உங்களுக்கு என்னப் பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம் கதிர் மாமா?” என்று அவள் கூற.

இதற்கு மேல் எதுவும் பேச முடியாத கதிர் எதுவும் பேசாமல் நிற்க, “பாத்தீங்களா! அப்ப நீங்களே எதுவுமே சொல்லலையா? அப்போ உங்களுக்கு என்னை கண்டிப்பா பிடிச்சிருக்கு,” என்று சொன்னவள், போட்டி நடத்துபவரிடம் மைக்கைக் கொடுத்துவிட்டு, “அவ்வளவுதான்! நான் தான் ஜெயிச்சேன். பை….” என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டாள். செல்லும் கீர்த்திகாவையே ஆச்சரியம் தாங்காமல் பார்த்துக் கொண்டு இறங்கி வந்தான் கதிர்.

போட்டி நடத்துபவர் மேடையில் ஏறி நின்று, “அடுத்ததாக மேடைக்கு வரும் ஜோடி ஆதி மற்றும் துர்கா,” என்று கூறினார்.

துர்கா மூன்று விஷயங்களைக் கூற வேண்டும். அதில் எது பொய் என்று ஆதி அவள் சொன்ன விஷயத்தில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

துர்கா மைக்கை வாங்கியவள் தயக்கத்துடனே நின்றிருக்க. அவளை முறைத்த ஆதி, “இப்ப ஏதாவது சொல்லப் போறியா? இல்லை இங்கிருந்து இறங்கிப் போயிடலாமா? மேடையேறி வந்துட்டு எதுக்கு இப்படி எதுவுமே பேசாமல் நிக்கிற?” என்று அவன் அவளை அதட்ட…

துர்கா எதுவும் பேசாமல் திரும்பி மைக்கைப் பிடித்தவள்.

  1. முதலாவதாக, “ஆதியை எனக்குக் கடந்த பத்து வருடமாகத் தெரியும். அவனும் நானும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.”
  2. இரண்டாவதாக, “ஆதியைப் பற்றி எனக்கு எல்லா விஷயமும் தெரியும். ஆனால், ஆதிக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்,” என்று பொய் சொன்னாள். ஏன் என்றால், ஆதிக்கு துர்காவைப் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியாது என்று துர்காவுக்கு நன்றாகவே தெரியும்.

அவள் இப்படி கூறியதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், மூன்றாவதாக துர்கா என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலாகக் காத்திருந்தான்.

  1. மூன்றாவதாக, “இப்போது சங்கவி சொன்னது போல, நான் ஆதியை அவனிடம் இருக்கும் சொத்துக்காகத் திருமணம் செய்யவில்லை,” என்றால் துர்கா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு.

துர்கா பேசி முடித்துவிட்டு ஆதியிடம் மைக்கை நீட்ட. கையில் இருந்த மைக்கை வாங்கியவன் துர்காவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, துர்கா கூறியதில் மூன்றாவதாகச் சொன்ன விஷயம் தான் பொய் என்று அவன் சொன்னதும்.

கீழே இருந்த மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்க, துர்காவும் அதே நிலையில் தான் அவனையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆதி இவ்வாறு சொன்னதும், இவ்வளவு நேரம் அவன் சொல்வதெல்லாம் கேட்டுக்கொண்டு மேடையின் கீழ் அமர்ந்திருந்த சங்கவி வேகமாக எழுந்து கையைத் தட்டிக் கொண்டவள், “பாத்தியா ஆதி! நான் சொன்னேன் இல்லையா? துர்கா உன்கிட்ட இருக்கச் சொத்துக்காகத்தான் அவ உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன்னு. அதை நீயே ஒத்துக்கிட்ட பார்த்தியா? நான் சொன்னது சரிதானே?” என்று சந்தோசமாக சங்கவி கைகளைத் தட்ட.

அவளை ஒரு பார்வை பார்த்து முறைக்க, அவன் பார்வையிலேயே பேசாமல் தனது சேரில் அமர்ந்தாள்.

துர்கா, ஆதியைப் பார்த்து, தன்னை சங்கவி சொன்னது போல, அவனுடைய பணத்திற்காகத் தான் அவனை நான் திருமணம் செய்து கொண்டேன் என்று ஆதியும் இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்ததும், துர்காவின் கண்களில் கண்ணீரோடு ஆதியையே பார்த்துக் கொண்டிருக்க, கீழே இருந்த விக்கியும் கதிரும் ஆதியைப் பார்க்க, கதிர் பொறுக்க முடியாமல், “என்ன ஆதி! அந்த சங்கவி சொன்ன மாதிரியே நீயும் சொல்ற? அதுவும் ஸ்டேஜ்ல இத்தனை பேரும் முன்னாடியும் சொல்லிட்டு இருக்க. உனக்கு துர்காவைப் பற்றி என்ன தெரியும்? அவ உன்னை எத்தனை நாளா……” என்று ஏதோ சொல்ல வரும்போது விக்கி கதிரின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவன், கண்களைக் காட்டி எதுவும் சொல்ல வேண்டாம் என்று மெதுவாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்திச் சேரில் அமர வைத்தான்.

கதிர் துர்காவுக்கு ஆதரவாக எதுவும் பேச முடியாமல் கோபத்தோடு அமர்ந்தான்.

துர்கா, ‘ஆதி சொன்ன இந்தச் சொல்லைத் தாங்க முடியாமல் மேடையில் இருந்து இறங்கி ரூமிற்குச் செல்லப் போக,’ ஆதி மைக்கில் பேசும் சத்தம் துர்காவுக்குக் கேட்டது.

“துர்கா மூணாவதா சொன்ன விஷயம் பொய் அப்படின்னு நான் ஏன் சொன்னேன்னா, ‘துர்கா என்கிட்ட இருக்கிற சொத்துக்காக என்ன கல்யாணம் பண்ணலை’ன்னு சொன்னது பொய்.

துர்காவோட சொத்தே நான் தான். அவ எனக்காகத் தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா….,” என்று ஆதி சொல்ல, இதைக் கேட்டதும் துர்காவால் தன்னையே நம்ப முடியவில்லை.

ஆதி தன்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறாரா என்று அதிர்ச்சியில் செல்ல இருந்தவள் நின்று திரும்பி அவனைப் பார்க்க, ஆதியும் துர்காவைத் தான் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான்.

“என்னோட திருமணத்தன்னிக்கு மணமேடை வரைக்கும் நான் வந்து மணமேடையில் அமர்ந்திருக்கிறப்போ, இதோ இங்க இருக்காங்களே மிஸ் சங்கவி, இவங்கதான் என்னோட நோயைப் பற்றி சொல்லி என்னைத் திருமணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு என்னை நிராகரிச்சாங்க. இதன் பிறகு யார் யாரோ பேச்சைக் கேட்டு சமாதானம் ஆகி இந்தச் சங்கவி திரும்ப என்னைத் திருமணம் பண்ணிக்க ஒப்புக்கொண்ட போது, அவளுடைய சுயரூபம் தெரிஞ்சு தான் நான் அவர்களைத் திருமணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு சொல்லி மேடையில் இருந்து எழுந்தேன்.

நான் யார் முன்னாடியும் அவமானப்பட்டு நிற்கக் கூடாதுன்னும், திருமணம் தடைப்பட்டு விடக்கூடாது அப்படிங்கற ஒரே காரணத்துக்காக என் அம்மாவோட வற்புறுத்தலால் தான் துர்கா என்னைத் திருமணம் பண்ணிக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் இந்த காரணத்துக்கு உள்ளேயும் துர்காவுக்கு என் மேல வச்சிருக்கிற அன்பும் பாசமும் எனக்கு நல்லா புரிஞ்சது. என்னச் சந்திச்ச நாளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்போ வரைக்கும் துர்கா எனக்காக எதுவாக இருந்தாலும் செய்வாள். துர்காவுக்கு ‘நான்’ என்றால் ரொம்பப் பிடிக்கும்,” என்று ஆதி கூற.

ஆதி பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த துர்காவுக்கு, தான் ஆதியைக் காதலிக்கிறாள் என்பது தெரியுமோ தெரியாதோ…. ஆனால், அவன் மேல் தான் வைத்திருக்கும் அக்கறையும் பாசமும் உண்மை என்று எப்படியோ ஆதிக்குப் ஓரளவுக்குப் புரிந்து இருக்கிறது என்று நினைத்தவள், கண்களில் இருந்து கண்ணீர் மேலும் அதிகரிக்க அங்கே நிற்க முடியாமல் அவள் அறைக்குச் சென்று விட்டாள்.

EPISODE 37

தன் மீது துர்காவுக்கு அன்பும், மிகுந்த பாசமும் உள்ளது என்று ஆதி புரிந்து கொண்டான். ஆதி தன்னைப் பற்றி இவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறான் என்பதை நினைத்த துர்காவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷத்தின் வெளிப்பாடு அவள் கண்களில் இருந்து கண்ணீராக வெளிப்பட, அதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அனைவரும் தன்னை பார்க்கும் முன்னர் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

துர்கா மேடையில் இருந்து கீழே இறங்கிச் செல்வதை மட்டும்தான் மற்றவர்கள் பார்த்தார்கள். ஆனால், ஆதி பேசியதை அனைவரும் கவனித்ததால் துர்காவை யாரும் கவனிக்கவில்லை. அவள் அழுது கொண்டே சென்றதை யாரும் கவனிக்காதபோது…

மேடையில் இருந்த ஆதி அவளைப் பார்த்துக் கொண்டுதான் பேசிக் கொண்டிருந்தான் என்பதால், அழுது கொண்டு சென்ற துர்காவைக் கவனித்தவன், பேசி முடித்ததும் மைக்கை மேடையில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி துர்காவைக் காண அவள் பின்னாலேயே சென்றான்.

இங்கு ஆதி, துர்கா அழுது கொண்டே சென்றதைப் பார்த்து அவள் பின்னாடியே சென்றதைக் கவனித்த கதிரும் விக்கியும் ஒருவரை ஒருவர் பார்க்க, விக்கி கதிரிடம், “நான் சொன்னேன் இல்லையா? கூடிய சீக்கிரத்தில் உங்க அண்ணன் துர்காவைப் பற்றி ஒரு அளவுக்குப் புரிந்து கொள்வான் என்று. இப்பதான் உங்க அண்ணன் துர்காவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கான். இன்னும் கொஞ்ச நாளில் துர்காவை முழுசாப் புரிஞ்சுகிட்டு, அவளைத் தன்னோட மனைவியா ஏத்துக்கிட்டு வாழப் போறான் பாரு,” என்றான் விக்கி.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சங்கவி, “இந்த துர்கா கூட எப்படி ஆதி சேருகிறான் என்று நானும் பார்க்கிறேன். ஆதியை என்ன ஆனாலும் துர்கா கிட்ட சேர நான் விடவே மாட்டேன்,” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள், யாருக்கும் தெரியாமல் ஆதியின் பின்னாலேயே சென்றாள்.

ஆதி, துர்கா அழுது கொண்டு கண்டிப்பாக தங்கள் ரூமிற்குத் தான் சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் ரூமுக்குச் செல்லப் போக, அப்போது திடீரென்று அவன் முன்னாள் வந்து சங்கவி அவனை வழிமறித்து நின்றாள்.

சங்கவியைக் கண்டதும் எரிச்சலான ஆதி தன் முகத்தைச் சுழித்துக் கொண்டவன், “ஏய்… இப்ப நீ எதுக்கு இங்க வந்த? முதல்ல வழி விடு. இப்ப எதுக்கு என்னை மறைச்சுட்டு நின்னுட்டு இருக்கே?” என்று ஆதி கோபத்தோடு சங்கவியைப் பார்த்துக் கேட்க,

“என்ன ஆதி, என்னைப் பார்த்து இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழற? நான் அப்படி என்ன பண்ணிட்டேன்? ஏதோ ஒரு அவசர புத்தியால் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன். அதுக்காக நீயும் நானும் பழகுனது பொய்யாயிடுமா? எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் தான் ஆதி. அந்த நேரத்துல நான் ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனமா யோசிச்சு உன்னை வேண்டாம்னு சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிரு ஆதி….. இப்பவும் சொல்றேன், நீ இப்ப ‘சரின்னு’ சொல்லு. நான் உன்னை இப்பவே கல்யாணம் பண்ணிட்டு உன் கூட வாழ நான் ரெடியாகத்தான் இருக்கேன் ஆதி,” என்று சங்கவி வெட்கம் விட்டு அவனிடம் வழிந்து கொண்டு கூற.

“ஏய்… சீ…. முதல்ல வழியை விடு! இன்னும் நீ என்னை பழைய ஆதியாகவே இருப்பேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாயா? நீ இதைச் சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சுட்டு இருக்கியா? அந்த ஆதி என்றைக்கோ காணாம போயிட்டான். இப்ப இருக்கிற ஆதி, தன்னைச் சுற்றி இருக்கிறவங்க யாரு, என்ன, என்னைப் பற்றி அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நான் புரிஞ்சிருக்கேன். இப்ப வந்து மறுபடியும் அதையும் இதையும் சொல்லி என்னைக் குழப்பாமல் இங்கிருந்து முதலில் போ. எனக்கு வழி விடு,” என்று அவளைத் தாண்டிச் செல்லப் போக,

தன்னைத் தாண்டிச் சென்ற ஆதியை நினைத்து கோபம் கொண்ட சங்கவி, “ஏய் ஆதி! என்னையே வேண்டான்னு சொல்லித் தள்ளிவிட்டுட்டுப் போறியா? உன்னை கூடிய சீக்கிரம் என் காலில் விழ வைக்கிறேன்,” என்று சொன்னவள், திரும்பி வேகமாக ஓடி ஆதியைத் தாண்டிப் போய் அவன் எதிரில் நின்றவள், சட்டென்று அவன் எதிர்பார்க்காத போது அவனைக் கட்டிப்பிடித்து நின்று கொண்டாள்.

சங்கவி இப்படித் திடீரென்று வந்து தன்னைக் கட்டிப்பிடித்ததை எதிர்பார்க்காத ஆதி, சங்கவி திடீரென்று கட்டிப்பிடித்ததும் சற்றுத் தடுமாறிய ஆதி என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க, அவன் எதுவும் செய்யாமல் இருப்பதைப் பார்த்த சங்கவி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டவள், நன்றாக ஒரு கையால் அவனை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டு, தன் மறு கையால் அவன் முகத்தில் இருந்து மாஸ்கைக் கழட்டி விட்டு, அவன் சற்றும் எதிர்பாராத நேரம் எட்டி ஆதியின் இதழில் முத்தமிட்டு விட்டாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத ஆதி மேலும் அதிர்ச்சியாகி அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்கப் போராட, ஆனால் சங்கவி அவன் கையை நன்கு இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்று இருக்க,

“பாத்தியா ஆதி! உனக்கு என்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான் நான் உன்னை கட்டிப்பிடிச்சு உனக்கு முத்தம் கொடுத்ததும் நீ என்னைத் உங்கிட்ட இருந்து விலக்கி விடாமல் அப்படியே நின்னுட்டு இருக்க. உனக்கு என்னோட முத்தம் பிடிச்சிருக்கு, என்னையும் பிடிச்சிருக்கு. அதனாலதான் நீ இப்படியே இருக்க,” என்று சங்கவி கூற, ஆதிக்கு ‘இவள் என்ன லூசா? நான் அவளை என்னிடம் இருந்து விலக்கப் போராடுகிறேன். இவள் லூசு மாதிரி பேசிட்டு இருக்கா’ என்று நினைக்க.

இதையெல்லாம் செய்துவிட்டு சங்கவி ஆதியைப் பார்த்து கூறிவிட்டு, அவனை கட்டிப்பிடித்தவாரே, அவனைத் தாண்டித் தூரத்தில் யாருக்கும் தெரியாமல் நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த துர்காவைப் பார்க்க, துர்காவும் சங்கவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க.

ஆதியைப் பார்த்துவிட்டு மேடையில் இருந்து அழுது கொண்டே ஓடிவந்த துர்கா, அங்கிருந்த கார்டனில் ஒரு பெஞ்சில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவள், “வெகுநேரமாகத்தான் இங்கு அமர்ந்து விட்டோம். தன்னை யாரும் தேடுவார்கள்,” என்று எழுந்து செல்லப் போக, அப்போதுதான் ஆதியை சங்கவி கட்டிப் பிடிக்க, அவர்களைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள்.

துர்கா தனக்குப் பின்னால் இருப்பது தெரியாத ஆதி, சங்கவியின் செயலுக்கு எதிர்வினை ஆற்றியதை ஆதி அறிந்தானே அன்றி துர்காவுக்கு அது தெரியவே இல்லை. அவன் அப்படியே நின்று இருக்கிறான் என்று நினைத்து, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துர்காவின் அழுகை மேலும் அதிகரிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் சங்கவியையே பார்க்க, சங்கவியும் துர்காவைத்தான் பார்த்துக் கொண்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சங்கவி ஆதி இடத்தில் பேசியதை எல்லாம் கேட்ட துர்கா, ‘அப்போ ஆதிக்கு உண்மையாவே சங்கவியைத் தான் பிடிச்சிருக்கு. இவ்வளவு நாளும் அவளைத்தான் நெனச்சிட்டு இருக்கானா? நான் தான் தப்பா நினைச்சுட்டு அவன் வாழ்க்கைக்குள்ள வந்துட்டேனோ. சங்கவியின் வாழ்க்கைக்குள் தான் தெரியாமல் நுழைந்து விட்டேனோ?’ என்று கவலைப்பட்ட துர்கா, ‘இனிமேலும் ஆதிக்கும் சங்கவிக்கும் இடைஞ்சலாக நான் இருக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் ஆதியைக் விட்டுப் பிரிய முடியுமோ நான் அவ்வளவு சீக்கிரம் ஆதியின் வாழ்க்கையை விட்டும் பிரிந்து போக வேண்டும்,’ என்று முடிவெடுத்தவள், இனி இங்கு நிற்பதில் பிரயோஜனம் இல்லை, சங்கவியும் ஆதியும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து துர்கா சென்றுவிட்டாள்.

இதையெல்லாம் ஆதியைக் கட்டிப் பிடித்தவாறு பார்த்துக் கொண்டிருந்த சங்கவி, ‘என்னோட பிளான் ஒர்க் அவுட் ஆயிடுச்சு,” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க.

அதுவரை அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆதி, வேகமாக அவளைத் தன்னிடம் இருந்து தள்ளிவிட, ஆதி தள்ளிய வேகத்தில் அவனை விட்டுத் தள்ளி கீழே போய் விழுந்தாள் சங்கவி.

கீழே விழுந்த வேகத்தில் ஏற்கனவே சங்கவி லேசாக ஆடை உடுத்தியிருந்ததால், அவள் விழுந்த வேகத்தில் அவள் அணிந்திருந்த பிளவுஸின் பின்புறம் கிழிந்து விட, அவள் மொத்த முதுகும் வெளியில் அப்பட்டமாகத் தெரியவும். ‘தான் என்ன செய்துவிட்டோம்’ என்று நினைத்தவன், சட்டென்று தன் கோட்டைக் கழட்டி சங்கவியின் மேல் போர்த்தி விட்டான்.

அவளுக்குத் தன் கோட்டைக் கழட்டிப் போட்டு விட்டவன், அவளைத் திரும்பியும் பார்க்காமல் தன்னறைக்குச் சென்றுவிட்டான். அவன் செல்லும் வரை அதே இடத்தில் அமர்ந்திருந்த சங்கவி, அவன் சென்றதும் அங்கிருந்து எழுந்தவள், தன் கைகளில் இருந்த தூசியைத் தட்டி விட்டவள், அவன் கோட்டை நன்றாக இழுத்துப் போட்டுவிட்டு அங்கிருந்து செல்லவும், அவளுக்கு எதிரே துர்கா வரவும் சரியாக இருந்தது.

துர்காவைப் பார்த்ததும் சங்கவி ஒரு முடிவுடன் அவள் எதிரே சென்று நிற்க, துர்கா அவளைக் கண்டதும் அவளைத் தாண்டிச் செல்லப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய சங்கவி,

“பாத்தியா? நான் சொன்னேனே எப்படியும் ஆதியை நான் திருமணம் பண்ணிக்குவேன்னு. ஆனா அந்த விக்கி என்ன சொன்னான்? அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு தானே சொன்னான். இப்போ நீயே பார்த்துட்டியே, ஆதி என்னை எப்படி கட்டிப்பிடிச்சிட்டு நின்று இருந்தான்னு தானே நீயும் பார்த்துட்டு இருந்த. அவன் கட்டிப்பிடித்த வேகத்தில் என்னோட பிளவுஸ் கிழிஞ்சு போயிடுச்சு. அவ்ளோ ஆசை அவனுக்கு என் மேல,” என்று கூறியவள், தன் மேல் போர்த்தி இருந்த ஆதியின் கோட்டை விலக்கியவள், தன் முதுகை துர்காவுக்கு வெட்கமில்லாமல் காட்டிய சங்கவி, “பாத்தியா? என்னோட பிளவுஸ் எப்படி கிழிச்சிட்டான் ஆதி. பிளவுஸ் கிழிஞ்சும் கூட என்னை விடாமல் என் முதுகை ஆசையாக அவன் தடவிக்கொண்டே நின்றிருந்தான். நான் தான் வெட்கத்தில் அவனை விட்டுத் தள்ளி நின்றேன். அவனுக்கு என் மேல சின்ன வருத்தம் தான். நான் அத்தனை பேர் முன்னாடியும் ஆதியை வேண்டாம் என்று சொல்லிட்டேன்னு அவனுக்கும் என் மேல கோபம் இருக்குறது நியாயம் தானே. ஆனால், இப்போ என்னை புரிஞ்சுக்கிட்டான் என் ஆதி. அதனால தான் நான் அவனை ஆசையா கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்த அப்போ என்னை எதுவும் செய்யாமல் அவனும் பதிலுக்கு என்னைக் கட்டிப் பிடிச்சான், முத்தமும் கொடுத்தான். எவ்வளவு ஆசை இருந்தால் இந்த அளவுக்கு என்னோட பிளவுஸ் கிழியுற அளவுக்கு என்னைக் கட்டிப் பிடிச்சிருப்பான்னு நீயே பாரேன்,” என்று மறுபடியும் அவள் முதுகைக் காட்ட, “ச்சீ….” என்று தன் முகத்தைச் சுளித்து துர்கா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள், “சீக்கிரமே நீ ஆதி கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு அவனை விட்டுப் பிரிஞ்சு போறது நல்லது,” என்று சங்கவி கூற.

“சரி சங்கவி, நான் எவ்வளவு சீக்கிரம் ஆதியிடம் இருந்து டைவர்ஸ் வாங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் டைவர்ஸின் வாங்கிட்டு போயிறேன்,” என்று கூறியவள் அவள் முன் அழுது விடக்கூடாது என்று அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.

தான் சொன்னதை எல்லாம் உண்மை என்று நம்பி துர்கா செல்வதைப் பார்த்த சங்கவி குரூரமாகச் சிரித்தவள், “சீக்கிரமே இவை எல்லாவற்றையும் நான் போய் உண்மை ஆக்கி காட்டுறேன் துர்கா. நீ அந்த ஆதியைக் விட்டுப் போற நாள் வெகு தூரத்தில் இல்லை,” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டவள் அங்கிருந்து தன் அறைக்கு உடை மாற்றச் சென்றுவிட்டாள்.

*****

இரவு வெகு நேரமானதால் அனைவரும் சென்றுவிட, கதிர் கீர்த்தியிடம் கண் ஜாடை செய்து அவளைத் தனியே அழைக்க.

அவனை விட்டுச் சற்றுத் தள்ளி இருந்த கீர்த்திகா, “ம்ஹும்…. முடியாது,” என்று மெதுவாகத் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து அவள் பெற்றோருடன் அறைக்குச் சென்று விட்டாள்.

அவள் சென்றதும், ‘ச்சே…. இவ இருக்காளே! அத்தனை பேர் முன்னிலையில் ‘எனக்கு அவளைப் பிடிக்கும்’ என்று என்னிடமே சொல்லிவிட்டுப் போனாள். ஆனால், தனியாகப் பேசலாம் ‘வா’ என்றால் மட்டும் வர மாட்டேன்கிறாளே,’ என்று தன் மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருக்க, அதுவரை அவன் அருகில் பேசாமல் அமர்ந்திருந்த விக்கி,

“ஆமா! தனியா வந்தால் தானே நீ அந்தப் புள்ள வாயைப் பிடிச்சுக் கடிச்சுட்டுறியே? அப்புறம் எப்படி உன்னை நம்பிக் கீர்த்தி தனியா வருவா….” என்று விக்கி கூற.

“டேய் விக்கி! நான் பேசியதெல்லாம் உனக்குக் கேட்டுருச்சா…. ஆமா… நான் கீர்த்திகா வாயைக் கடிச்……ச்சே….. கீர்த்திகாவுக்கு முத்தம் கொடுத்தது உனக்கு எப்படி…..” என்று இழுக்க,

“ம்ம்ம்ம்…. சாயங்காலம் அவ யாரையோ சைட் அடிச்சதுக்கு நீ போட்டியே ஒரு சீன்…. அதை பார்த்து கூட அந்தப் புள்ளை நீ உண்மையாவே கோச்சுட்டேன்னு நினைச்சு உன் பின்னாடி கெஞ்சிட்டே வந்தாலே. அவ வந்ததும் நீ அவளைப் பிடிச்சு அதையும் இதையும் சொல்லி அவ வாயிலேயே கிரிக்கெட் ஆடுனியே, அதை எல்லாம் நின்னு நான் பார்த்துட்டு தான் டா சொல்றேன்.. நீ…. இருக்கியே! இங்க ஒருத்தன் நான் தனியா இருக்கேனே? அண்ணன் தம்பி மட்டும் ஆளுக்கு ஒரு ஆளா அக்காவையும், தங்கச்சியையும் கரெக்ட் பண்ணி ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்துறீங்களே…. அட நீங்கதான் இப்படி இருக்கீங்க அப்படின்னா, அந்த வசீகரனின் காதலி (Visalaatchi’s son-in-law) காங்க மொத்தமும் அப்படி தான் இருக்கு. ஸ்டேஜ்க்கு பின்னாடி ஒருத்தன், மரத்துக்குப் பக்கத்துல ஒருத்தன், ஸ்விம்மிங் பூல் ஓரத்துல ஒரு சந்துல ஒருத்தன், அட பாத்ரூம் போலாம்னா அங்க ஒருத்தன்னு ஆளுக்கு ஒரு ஆளைத் தள்ளிட்டு வந்து ரொமான்ஸ் பன்றானுங்க! சரி, இதை எல்லாம் பார்க்க முடியலையென்னு சொல்லிட்டு கார்டென்ல போய் நிம்மதியா கொஞ்ச நேரம் காத்து வாங்கலாம்னா, முதல்ல நீ உன் ஆளைத் தள்ளிட்டு வந்தே. இந்தக் கொடுமையைத் தாங்க முடியலைன்னு வேற கார்டென்ல நீங்க இல்லாத பக்கம் போய் உக்காரலாம்னா, அங்க ஒருத்தன் அந்த வெள்ளைக்காரி அது யாரு…. அஹ்ஹ்… அதான் அந்த ரித்திகா, அவளைக் கூட்டிட்டு வந்து என்னமா ரொமான்ஸ் பண்றான். அப்பா… அப்பா…. அப்பா…. என்னால முடியலை டா சாமி. இந்தக் கல்யாணத்துக்கு வந்தாலும் வந்தேன், எத்தனை ஜோடியைத்தான் நான் பார்க்கிறது. என் கண்ணே இதை எல்லாம் பாத்து பாத்து என் கணு ரெண்டும் அவிஞ்சே போயிருச்சு டா மாப்பிள்ளை,” என்று கூறி வடிவேலு போல கதிரின் தோளில் கையைப் போட்டு அழுவது போல பாவனை செய்ய.

விக்கியைப் பார்த்துச் சிரித்த கதிர், “சரி விடு டா… நாம இங்கயே ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து உனக்குப் பேசி முடிச்சிருவோம்,” என்று ஆறுதலாக விக்கியின் தோளைத் தட்டிக் கொடுக்க.

அவன் கையைத் தட்டி விட்டவன், “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை,” என்றான் விக்கி.

“ஏன் டா…. விக்கி வேண்டாம்னு சொல்ற? அப்போ காலம் முழுக்க நீ இப்படிச் சிங்கிளாவே எங்க கூடயே இருக்கப் போறியா?” என்று கேட்க.

“எதுக்கு நான் காலம் பூரா உனக்கும் உங்க அண்ணனுக்கும் சேவகம் செய்யணும்? நீயும் உங்க அண்ணாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருப்பிங்களா…. அது தான் என்கிட்ட நடக்காது. உங்க அப்பா எனக்கு ஒரு சொத்து எழுதிக்கொடுத்தாரே, அதை நான் இப்போதான் யூஸ் பண்றது. எனக்குன்னு ஒருத்தி வந்தாள் தானே நான் இதை எல்லாம் அனுபவிக்கிறதுக்கு?” என்றான்.

“அப்புறம் ஏன் டா, இங்க எதுவும் பொண்ணு பார்க்கலாம்னு சொன்னா ‘வேணாம்’னு சொல்ற?” என்று புரியாமல் கதிர் கேட்க.

“என்ன? எனக்கு ஊர்ல ஆல்ரெடி ஒரு ஆளை நான் பார்த்து வெச்சிட்டு வந்துட்டேன் டா… ஆனா அவளுக்குத் தான் என்னோட ஞாபகம் இருக்குமோ இல்லையோன்னு தெரியலை,” என்றான் கவலையுடன்.

“என்ன டா…. சொல்றே? ஆல்ரெடி ஆள்…. இருக்கா….? உன்னால நம்பவே முடியலையே,” என்று ஆச்சர்யமாக கதிர் கேட்க.

“ஏன் டா… எனக்கு எல்லாம் லவ்வர் இருக்கக் கூடாதா என்ன?” என்றான் விக்கி.

“ச்சே…. அப்படி சொல்லலை டா. எங்க கூடவே தானே இருக்க, அதான் எப்படின்னு ஒரு ஆச்சர்யத்துல கேட்டுட்டேன். சரி, அதை எல்லாம் விடு. யாரு அந்தப் பொண்ணு? எங்க இருக்காங்க? என்ன பண்றாங்க? என்னோட சிஸ்டர்?” என்று கதிர் ஆர்வமாக கேட்க.

“அவள் ஒரு தேவதை…..” என்றான் விக்கி. அவன் கூறியதைக் கேட்ட கதிர், “ஓஹோ! உங்க தேவதையின் பெயர் என்னவோ….?” என்று கேட்க.

“என் தேவதையின் பெயர் நிலானி….” என்றவன், அவளைச் சந்தித்த தருணங்களை விவரித்தான். “எப்போ அவளைப் பார்த்தேனோ, அவளைப் பாக்கணும், பேசணும்னு ஆசையா இருக்கு டா… ஆனா, அவள் என்னை நினைக்குராளா இல்லையா என்று தன் தெரியலை,” என்று சோகமாகச் சொல்ல.

“இப்போ என்ன, உனக்கு உன் ஆள் என்ன பண்றான்னு தெரியணும் அவ்ளோ தானே?” என்று கதிர் கேட்க, “ஆமா” என்று விக்கி அவனைப் புரியாமல் பார்க்க.

“சரி, என் கூட வா…” என்று கூற, “எங்கே டா…” என்றான் விக்கி. “உன் ஆளு என்ன பண்றான்னு தெரியணும்னா…. என்கூடப் பேசாம வா…” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, விக்கியும் ஆர்வமுடன் அவன் பின்னே சென்றான்.

EPISODE 38

விக்கி, தான் கல்லூரியில் சந்தித்த நிலானியைப் பற்றிக் கதிரிடம் சொல்லவும், கதிர், “இப்போ என்ன? உனக்கு உன் ஆளு இந்த நேரம் என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரிஞ்சுக்கணும் அவ்வளவுதானே?” என்று கூற.

விக்கி அவனை அதிசயம் போலப் பார்த்து, “என்னடா சொல்ல வர? எனக்கு புரியல,” என்று விக்கி கூற, “இன்னுமாடா புரியல? இப்போ உனக்கு உன் ஆளு உன்னை நெனச்சிட்டு இருக்காளா இல்ல என்ன பண்ணிட்டு இருக்கான்னாவது தெரியனும் அப்படித்தானே?” என்று கதிர் கேட்க, விக்கி ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினான். “அப்ப பேசாம என் கூட வா,” என்று கூறி கதிர் முன்னே செல்ல, அவன் பின்னாலேயே யோசனையுடன் விக்கியும் சென்றான்.

கதிர் அங்கிருந்து கிளம்பி நேராக கீர்த்திகாவின் அறைக்கு வந்து அவள் அறைக் கதவைத் தட்ட, விக்கி பதறிப் போய், “டேய்! உன் ஆளைப் பாக்குறதுக்கு வரணும்னா நேரா நீயே வந்திருக்க வேண்டியதுதானே? அதுக்காக என்னை ஏன் கூட்டிட்டு வந்தே? என் ஆள் என்ன பண்றான்னு சொல்றேன்னு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்திருக்க. நீதான் டா இங்க வரணும், என்னை ஏண்டா புடிச்சி இழுத்துட்டு வந்திருக்க? இந்த நேரத்துல கீர்த்திகாவோட அம்மாவோ அப்பாவோ நம்மைப் பார்த்தா, உன்னையும் என்னையும் பத்தி என்ன நினைப்பாங்க? நீயாவது சொந்தக்காரன்னு ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். நான் சும்மா கூட வந்துட்டு என்னைப் பார்த்தா என்ன நினைப்பாங்க? ஒரு வயசுப் பொண்ணு இருக்கிற இடத்துல இந்த நேரத்தில் வந்து கதவைத் தட்டினா நம்மள பத்தித் தப்பா எடுக்க மாட்டாங்க,” என்று கதிர் கூற.

“டேய்…. கொஞ்ச நேரம் வாய் மூடிட்டுப் பேசாம இருடா,” என்று கூறியவன் திரும்பவும் கதவைத் தட்டப் போக, அப்போது கீர்த்திகாவின் அப்பா கதவைத் திறந்தார்.

அவர் கதவைத் திறந்து பார்க்க, எதிரே கதிரும் விக்கியும் நின்றிருப்பதைப் பார்த்ததும் எதுவும் புரியாமல், “என்ன தம்பி, இந்த நேரத்துல வந்திருக்கீங்க? இப்போதான கீர்த்திகாவும் அங்கிருந்து வந்தா. ஏன் தம்பி, தான் முக்கியமான விஷயமா?” என்று அவர் பேச, “ஆமாம் அங்கிள்! துர்கா தான் கீர்த்திகாவை அவங்க ரூமுக்கு எங்களை அழிச்சிட்டு வரச் சொன்னாள். நேர்ல வந்து தான் கீர்த்திகாவைக் கூப்பிடுறதா சொன்னா. இந்த நேரத்தில் தனியா வரணும் அப்படின்னு சொல்லிட்டு நாங்களே போய்க் கூட்டிட்டு வரோம்னு வந்துட்டோம் அங்கிள்,” என்று கதிர் கூற.

“அப்படியா! சரி தம்பி, இருங்க நான் கீர்த்திகாவை அனுப்பி வைக்கிறேன்,” என்று கூறியவர் திரும்பி கீர்த்திகாவை அழைக்க, அவள் “என்னப்பா….” என்று கேட்டுக்கொண்டே வந்தவள், வாசலில் கதிரும் விக்கியும் நிற்க, அவர்களைப் புரியாமல் பார்த்துவிட்டு, அவள் அப்பாவைப் பார்க்க, “துர்கா உன்னை வரச் சொன்னா போல. அதனாலதான் தம்பி இங்க உன்னைப் பார்க்க வந்திருக்காங்க. நீ என்னன்னு கேட்டுட்டு வாடா,” என்று அவர் கூற.

“ஏன் பா…. துர்காவே பேசாமல் நமக்கு ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாமே? இவங்க ரெண்டு பேரையும் எதுக்கு இப்ப அனுப்பி வச்சிருக்கா….?” என்று புரியாமல் கீர்த்திகா கேட்க.

கீர்த்திகா சொன்னதில் லாஜிக் இருப்பதைப் புரிந்துகொண்ட விக்கி, கதிரிடம், “ஆஹா….. இவ சரியான உஷார் பார்ட்டியாத்தான் இருப்பா போல இருக்கு. அவளை நீயே நேர்ல வந்து எதுவும் சாக்கு சொல்லி கூப்பிட்டாலும் வரக்கூடாது என்கிற எண்ணத்திலேயே கரெக்ட்டா பாயின்ட் எடுத்து அவங்க அப்பனுக்குக் கொடுக்கிறாளே! நீ இவ கிட்ட கொஞ்சம் உஷாராவே இருக்கணும் டா மச்சான். இவளை நம்பி எதையும் செய்ய முடியாது. உன்னை கால வாரி விட்டுடுவா….,” என்று சொன்னான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ கொஞ்சம் வாய மூடிட்டுச் சும்மா இருக்கியா? உனக்கு உன் ஆள் என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியனுமா வேண்டாமா?” என்று கதிர் கேட்க, “கண்டிப்பா தெரியணும்,” என்று விக்கி சொல்ல.

“அப்போ வாயை மூடிட்டு நான் என்ன பண்ணாலும் பேசாமல் எனக்கு ‘ஆமாம் சாமி’ போட்டுட்டு நில்லு. ஓகேவா?” என்று சொல்ல, “சரிங்க சாமி,” என்று சொல்லிவிட்டுப் பேசாமல் நின்றான் விக்கி.

கீர்த்திகாவின் அப்பா கீர்த்திகாவிடம், “ஏதோ அவசரம்ன்னு சொல்லி அனுப்பி வச்சிருக்காமா. நீ போ. அங்கதான் போற. நீ அங்கேயே போய்க் கேட்டுக்கோ. சீக்கிரமா போயிட்டு சீக்கிரமாக வந்துரு,” என்று சொல்லிவிட்டு அவளை அனுப்ப, அவளும் வேறு வழியில்லாமல் தன் ஃபோனை எடுத்துக் கொண்டு இவர்களுடன் சென்றாள்.

இவர்கள் மூவரும் செல்லும் வரை பார்த்துவிட்டு கீர்த்திகாவின் அப்பா கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்ல. அவர் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டதும் தான் தாமதம்.

அவர்களுடன் நடந்து கொண்டிருந்த கீர்த்திகா சட்டென்று அவர்கள் முன்னால் வேகமாக எட்டுக்களாக எடுத்து வைத்து, திரும்பி இவர்களைப் பார்த்துக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றவள், “இந்த நேரத்துல எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்க நீங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டாள்.

“அடே அப்பா! சரியான போலீஸ்காரியா இருப்ப போல இருக்கே நீ….. உங்க அக்காவா உன்னைக் கூப்பிடல, நாங்கதான் உன்னைப் பார்க்க வந்தோம்னு எப்படி கண்டுபிடிச்ச தங்கச்சிமா?” என்றான் விக்கி.

“முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் எங்க அக்கா கூப்பிட்டான்னு சொல்லி என்னைக் கூட்டிட்டுப் போக வந்தப்பவே நான் நினைச்சேன். எங்க அக்கா கண்டிப்பா என்ன வர சொல்லி இருக்க மாட்ட. அப்படியே இருந்தால் அவன் என்கிட்டயே ஃபோன் பண்ணி கேட்டுப்பாள். அதை விட்டுட்டு உங்க ரெண்டு பேரையும் என்னைக் கூட்டிட்டு வர அனுப்பி வைத்தால் என்றால், இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?” என்று கீர்த்திகா சொல்ல.

“நம்பற மாதிரி தான் இல்ல. என்ன பண்றது? எங்களுக்குக் காரியம் ஆகணுமே. அதனால தான் அப்படி சொல்லி உன்னைக் கூப்பிட்டோம்,” என்று கதிர் சொல்ல.

“என்னது! என்னால உங்களுக்குக் காரியம் ஆகணுமா? அப்படி என்ன உங்களுக்குக் காரியமாக வேண்டி இருக்கு?” என்று கீர்த்திகா கேட்க.

“இப்படி என் கையைக் கட்டி போலீஸ்காரன் மாதிரி நின்னு கேள்வி கேப்பியா? அப்படி வா, கொஞ்சம் ரிலாக்ஸாக உட்கார்ந்து பேச வேண்டிய விஷயம் இது. சும்மா போற வழியில் பேசிட்டுப் போற விஷயம் இல்ல,” என்று கூறியவன் கீர்த்திகாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு பெஞ்சில் சென்று அமர. கதிரும் கீர்த்திகாவும் அமர.

அவர்கள் எதிரே கை கட்டி நின்ற விக்கி, “ஏண்டா, நீ உன் ஆள் கூட உட்கார்ந்து கடலை போடறதுக்கு நான் தான் கிடைச்சேனா? என்ன சொல்லி என்னை இங்க கூட்டிட்டு வந்த…. ஆனா, இப்ப எதுக்கு கீர்த்திகாவை கூட்டிட்டு வந்து இப்படி நீங்க ரெண்டு பேரும் ஒக்காந்துட்டு என்னைப் பார்க்க வெச்சு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க?” என்று விக்கி கேட்க.

“டேய் விக்கி! கொஞ்ச நேரம் நீ பேசாம இருக்கியா? அப்பதான் நீ கேட்ட விவரம் எல்லாம் உனக்குக் கிடைக்கும். இல்லை இப்படியே என் தொண தொணன்னு பேசிட்டு இருந்தேன்னா நான் உனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டேன்,” என்று கதிர் கூற.

“சரி சரி கோபப்படாதடா….. நான் எதுவுமே பேசல. நீ உன் ஆள் கூடப் பேசு. நான் கையைக் கட்டி நின்னு நீங்க ரெண்டு பேரும் பேசுவதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்,” என்று பெருமூச்சுவிட்டு கூறிவிட்டு நின்றான்.

கதிர் கீர்த்திகாவைப் பார்த்து, “கீர்த்திகா, உங்க காலேஜ்ல படிக்கிற ஒரு பொண்ணைப் பற்றி எங்களுக்கு டீடைல்ஸ் வேணும். அது எந்த ஊரு? என்ன பண்றா? எந்த டிபார்ட்மென்ட்ல படிக்கிறாள் அப்படிங்கறது தெரியணும்.”

“டேய் விக்கி! என்னடா பேசாம நிக்கிற? வாய் திறந்து சொல்லுடா. நீ சொன்ன அந்தப் பொண்ணு கீர்த்திகா காலேஜ்ல தான படிக்கிறா?” என்று சொல்லவும், இப்போதுதான் கதிர் எதற்காகத் தன்னை இங்கே அழைத்து வந்திருந்தான் என்று முழுதாகப் புரிந்த விக்கிக்கு ஒரே சந்தோஷமாகப் போய்விட்டது.

“டேய்! இதை நான் யோசிக்கவே இல்ல டா. அந்தப் பொண்ணைப் பார்த்த அப்போ நம்ம கீர்த்தியும் இங்கதான் படிக்கிறான்னு நினைச்சே ஒழிய, அதுக்கப்புறம் நான் கீர்த்தியாகிட்ட இதைப்பற்றி கேட்கணும்னு நினைக்கவே இல்லை. அப்படியே கேட்டிருந்தாலும், என் தங்கச்சி என்னைப் பத்தி ஏதாவது தப்பா நினைச்சுக்குமோன்னு யோசிச்சு தான் கேட்காமல் இருந்தேன்,” என்று விக்கி சொல்ல.

“எல்லாம் சரிடா! வளவளன்னு கதை அடிக்காத. நைட் ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. டீடைல் சொல்லு. உனக்கு காலையில் எல்லா விவரத்தையும் கீர்த்திகா வாங்கி கொடுத்துடுவா….,” என்று சொன்னவன், கீர்த்திகாவிடம் திரும்பி, “என்ன கீர்த்திகா, காலையில் எல்லா டீடெயில்ஸையும் வாங்கிடுவியா?” என்று கேட்டான்.

அதுவரை அவர்கள் இருவரும் பேசுவதைத் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகா, “என்னங்கடா ரெண்டு பேரும் என்ன உட்கார வெச்சிட்டு பேசிட்டு இருக்கீங்க? நீங்க சைட் அடிக்கிறதுக்கு நான் தான் கிடைச்சேனா… என்னால உங்களுக்கு எல்லாம் எதுவும் செய்ய முடியாது. போங்கடா,” என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து போக.

விக்கி உடனே கீர்த்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “தங்கச்சி, அண்ணன் உன் லவ்வுக்கு எல்லாம் ஹெல்ப் பண்னேன் இல்லயா…..? உன் அண்ணன் பாவம் இல்லையா? எனக்குன்னு யாரு இருக்கா உன்னை விட்டா?” என்று அழுவது போல முகம் வைத்துக் கொண்டு, “இந்த அண்ணன் லவ்வுக்காக நீ ஹெல்ப் பண்ண மாட்டியா?” என்று கேட்க, அவன் முகத்தைப் பார்த்ததும் பாவமாக இருக்க, “சரி, சொல்லித் தொலைங்க,” என்று திரும்பவும் வந்து மேஜையில் அமர்ந்தாள்.

“முதல்ல, அந்தப் பொண்ணு எங்க காலேஜ் தான் என்பது கன்ஃபார்மா தெரியுமா? அவ பேர் என்ன?” என்று கீர்த்திகா கேட்க.

“எனக்கு கன்ஃபார்மா தெரியும். அன்னைக்கு நீ கதிர் கூடப் போன பிறகு நான் உங்க காலேஜுக்கு எதிரில் இருக்குற காஃபி ஷாப்பில் தான் உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருந்தேன். அப்போதான் என் தேவதை அங்கே உள்ள வந்தா…. என் தேவதை வந்தப்ப உங்க காலேஜ் ஐடி கார்டு தான் கழுத்துல போட்டு இருந்தா,” என்று சொல்லியவன், அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, “சரி, இத்தனை சொன்னீங்களே, உங்க தேவதையைப் பற்றி, அவ பேர் என்னன்னு முதல்ல சொல்லுங்க,” என்று கீர்த்திகா கேட்க, “அவ பேரு…. அவ பேரு….” என்று வெட்கப்பட்டு கொண்டு விக்கி நின்றிருக்க.

அவனைப் பார்த்த கதிர், “டேய்! பார்க்க சகிக்கலடா உன்னை….. ரொம்பப் பண்ணாத. முதல்ல அந்தப் பொண்ணு பேரு சொல்லு. இப்படியே நீ பண்ணிட்டு இருந்தேன்னு வை…… நான் எந்திரிச்சு கிளம்பிப் போயிருவேன். கீர்த்திகாவையும் ரூமுக்கு போக சொல்லிவிடுவேன்,” என்று சொல்லிவிட்டு அவனை முறைக்க, “சரி சரிடா கோவிச்சுக்காத கோச்சுக்காத! என் தேவதை பேரு நிலானி,” என்றான் விக்கி.

நிலானி என்ற பெயரைக் கேட்டதும் கீர்த்திகா ஒரு நிமிடம் யோசித்தவள், “அண்ணா! அந்தப் பொண்ணு எந்த டிபார்ட்மென்ட்ல படிக்கிறான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க.

“ம்ஹும்….. தெரியாதே தங்கச்சி. அந்தப் பொண்ணு உங்க காலேஜ்ல மட்டும்தான் படிக்கிறான்னு தெரியும். அதுவும் அவள் கழுத்துல போட்டு இருந்த ஐடி கார்டு வெச்சு தான் உங்க காலேஜுனே நான் கன்ஃபார்மா சொல்றேன். மற்றபடி அவ எந்த டிபார்ட்மென்ட் அப்படிங்கறதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது,” என்று கூற.

“சரி, அவ கழுத்துல போட்டு இருந்த ஐ.டி. கார்டோட கலர் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கீர்த்திகா கேட்க, அப்போது கதிர், “ஏய் கீ…. அவன் அந்தப் பொண்ணைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அது எல்லாம் எப்படி ஞாபகம் வச்சுட்டு இருப்பான்? ஐடி கார்டு கலர்லாம் கேட்டுட்டு இருக்க லூசு மாதிரி,” என்று கதிர் கூறிக் கொண்டிருக்கும் போதே, “பச்சை கலர்,” என்றான் விக்கி.

அவனை அதிசயமாய்த் திரும்பிப் பார்த்த கதிர், “என்ன மச்சான்! கலர், ஐடி கார்ட் கலர் எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாயா? அந்த அளவுக்கு நீ உன் ஆளை நோட் பண்ணி இருக்கியா?” என்று கேட்க.

“ஆமாண்டா! நான் அவளையூதான். முதலாகப் பார்த்த அன்று அவ சிவப்பு கலர்ல சுடிதார் போட்டிருந்தா. ஒரு நெட் ஷால் போட்டு இருந்தா. அதுக்கு மேட்ச்சாக இருக்கிற மாதிரி பொட்டு, கம்மல், வளையல் என எல்லாமே போட்டு இருந்தா. அவளோட வாட்ச் ஸ்டாப் கலர் மட்டும் சிவப்பு கலர்ல இல்ல. அது ஒரு மாதிரி ஸ்கின் கலர் போல. கலருக்கும் அந்த வாட்ச் ஓட ஸ்டாப் கலருக்கும் வித்தியாசமே தெரியாத மாதிரி ஒரு கலர்ல ஸ்ட்ராப் போட்டு இருந்தா,” என்று விக்கி கூற.

அவன் கூறிய இதெல்லாம் கேட்டு கதிரும் கீர்த்திகாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, கீர்த்திகா அவனை, “நீயும்தான் இருக்கியே! எங்க சொல்லு பார்ப்போம், இன்னைக்குக் காலையில நான் என்ன கலர் டிரஸ் போட்டு இருந்தேன் அப்படின்னு சொல்லு பார்ப்போம்,” என்று கீர்த்திகா கேட்க.

“ஏய்! இப்ப அதுவாடி முக்கியம். நீ முதல்ல அந்தப் பொண்ணு உனக்குத் தெரியுமா இல்லையான்னு சொல்லு. இல்லைன்னா இன்னைக்கு நைட்டு இவன் என்னை தூங்கவே விடமாட்டான்,” என்று கதிர் பேச்சை மாற்ற.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டே அப்படித்தானே…. புரிஞ்சிடுச்சு. நல்லா தெரிஞ்சிருச்சு. உனக்கு எதுவுமே என்னைப் பத்தி ஞாபகம் இருக்காது. உனக்கு இருக்குடா. அப்புறம் பேசுகிறேன் உன்னை,” என்று சொன்னவள்,

விக்கிடம் திரும்பி, “அண்ணா! நல்லா யோசிச்சு சொல்லுங்க. அவ பச்சை கலர் ஐடி கார்டு தான் போட்டிருந்தாளா?” என்று கேட்க, சற்றும் தாமதிக்காமல், “நல்ல ஞாபகம் இருக்கு தங்கச்சிமா. என் தேவதை பச்சை கலர் ஐடி கார்டு தான் போட்டு இருந்தாள். அவளோட சிவப்பு கலர் சுடிதாருக்கும் அவளோட கலருக்கும் அந்தப் பச்சை கலர் தனியா எடுப்பா தெரிஞ்சுச்சு…..” என்று சொல்ல, “ஓஹோ! அப்படியா?” என்று அவனை மேலும் கீழாகப் பார்த்தவள்,

“ஆமா! அன்னிக்கு நீங்க என்னையும்தான் பார்த்தீங்க. அப்ப நான் என்ன கலர் ஐ.டி கார்டு போட்டு இருந்தேன்? நீங்க கவனிச்சீங்களா?” என்று கேட்க, “இல்லை தங்கச்சிமா. நான் எங்கடா உன்னைக் கவனிச்சேன்,” என்று சொல்ல.

விக்கியை முறைத்தவள், “அதானே! நீங்க இவனோட பிரண்டு தானே! அப்புறம் எப்படி இருக்கும்? அவனை மாதிரி தானே இருப்பீங்க,” என்று சொன்னவள். “நீங்க சொல்ற சிவப்பு கலர் சுடிதார் போட்டுட்டு, அந்தப் பச்சை கலர் ஐடி கார்டு போட்டு இருந்த அந்த நிலானி என்னோட டிபார்ட்மென்ட் தான். உங்க தேவதை என்னோட கிளாஸேதான். இதை விட முக்கியமான விஷயம், அவ என் பக்கத்துல தான் எப்பவும் உட்கார்ந்து இருப்பா,” என்று சொல்ல.

கதிரும் விக்கியும் ஆச்சரியமாக கீர்த்திகாவையே பார்க்க. “என்ன ரெண்டு பேரும் என்னை அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க.

“ஆஹா தங்கச்சிமா! வெண்ணைய கையிலேயே வெச்சிட்டு இத்தனை நாளா அது தெரியாம சுத்திட்டு இருந்தேனே! என் தேவதை உன் பக்கத்துல தான் உக்காந்து இருக்கான்னா, அவ அப்ப உனக்கு நல்லாப் பழக்கப்பட்டவளா தானே இருப்பா? உனக்கு நல்லா தெரிஞ்சுருக்கும் தானே அவளைப் பத்தி?” என்று கேட்க, “கண்டிப்பா தெரியும். ஏன்னா உங்க தேவதை, அவ என்னோட பெஸ்ட் பிரண்டு,” என்றால் கீர்த்திகா.

கீர்த்திகா கூறியதைக் கேட்டதும் ஆச்சரியமான இருவரும், நிலானி அவளுடைய நெருங்கிய தோழி என்று தெரிந்ததும் இன்னும் ஆச்சரியமாகிவிட, விக்கி கீர்த்திகாவின் அருகில் வந்து அமர்ந்தவன், “அப்ப தங்கச்சிமா, என் ஆளோட ஃபோன் நம்பர் உன்கிட்ட கண்டிப்பா இருக்குமே! ப்ளீஸ் என் ஆளோட ஃபோன் நம்பர் மட்டும் எனக்குக் கொடுடி! ப்ளீஸ்,” என்று கேட்டான்.

சற்று நேரம் கீர்த்திகா யோசிப்பதைப் போலப் பாவனை செய்ய, “என்ன தங்கச்சி, ஒரு ஃபோன் நம்பர் குடுக்குறதுக்கு, அதுவும் இந்த அண்ணனை நம்பிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு யோசிக்கிறியே,” என்று விக்கி கேட்க.

“குடுக்கலாம் குடுக்கலாம். நான் எங்க வேணா போகப் போறேன்? இங்க தானே இருக்கேன். பொறுமையா கொடுக்கல,” என்று கீர்த்திகா சொல்ல, “என்னது! பொறுமையா கொடுக்கலாமா? அதெல்லாம் முடியாது! எனக்கு இப்பவே என் ஆளோட ஃபோன் நம்பர் வேணும்! ப்ளீஸ் தங்கச்சி, கொடுடா,” என்று விக்கி கேட்க.

“முடியாது. காலைல வர வெயிட் பண்ணுங்க. நான் காலைல வந்து உங்களுக்கு ஃபோன் நம்பர் கொடுக்கிறேன். எனக்கு இப்போ ரொம்பத் தூக்கம் வருது. நான் போயிட்டு வரட்டுமா?” என்றவள், கதிரைப் பார்த்து, “கதிர் மாமா! நான் போய்த் தூங்குறேன். குட் நைட்,” என்று அவன் கன்னத்தை தன் கைகளால் உரசிவிட்டு, கதிரை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள் அங்கிருந்து ஒரே ஓட்டமாக அவள் சென்று விட்டாள்.

இப்போது கதிர், கீர்த்திகா தன்னை இப்படி ‘கதிர் மாமா’ என்று கூறி, தன் கன்னம் தொட்டுச் சென்றதும் அதிர்ச்சிலேயே அமர்ந்திருக்க, கீர்த்திகா தனக்கு ஃபோன் நம்பர் காலையில் தருகிறேன் என்று சொன்னதும், நன்றியும் அதே அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான். எப்படியும் கீர்த்திகா காலையில் நிலானியின் ஃபோன் நம்பரைக் கொடுக்கும் வரை விக்கிக்குத் தூக்கம் வராது. அதே போல கதிரைச் சும்மா இருக்காமல், அவன் உணர்வுகளைத் தூண்டிவிட்டுச் சென்றுவிட்டாள். அதனால் அவனுக்கும் கீர்த்திகாவின் நினைப்பாகவே இருக்கும். ‘இவர்கள் இருவரும் இன்று நைட்டு கண்டிப்பாகத் தூங்க மாட்டார்கள்’ என்று நினைத்துக் கொண்ட கீர்த்திகா, ‘நான் போய் நிம்மதியாப் படுத்துத் தூங்கப் போறேன்,’ என்று அவள் அறைக்குப் போகும்போது யோசித்துக் கொண்டு சென்று விட்டாள்.

ஆதியும் துர்காவும்

சங்கவியைப் பார்த்துவிட்டுத் தன் அறைக்கு வந்த ஆதி, துர்கா அருகில் இருப்பாள் என்று வந்தவன், அறை லாக் செய்யப்பட்டிருக்க, தன் கையில் இருந்த ஒரு சாவியைக் கொண்டு அறையைத் திறந்தவன் உள்ளே செல்ல, ‘இங்க தானே வந்தா? எங்க போயிருப்பா?’ என்று துர்காவின் நினைவாகவே உள்ளே வந்தவன், பாத்ரூமுக்குள் சென்று ரெப்ரெஷாக சென்றுவிட்டான்.

ஆதி பாத்ரூமுக்குச் சென்ற சிறிது நேரத்தில் துர்கா உள்ளே வந்தாள். அறை திறந்திருக்கும் ஆதிதான் வந்திருப்பான் என்று உள்ளே வர, அவன் ஷூ அங்கேயே இருப்பதைப் பார்த்தவள், பாத்ரூமில் சத்தம் வர ஆதி குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவள், அவன் வருவதற்குள் உடை மாற்றிக் கொள்ளலாம் என்று ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று உடை மாற்றி விட்டு வந்து கட்டிலில் அப்படியே படுத்துக் கொண்டாள்.

கட்டில் படுத்துக் கொண்டிருந்தாலும், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. சங்கவி கூறியதெல்லாம் தன் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, அதை நினைத்த அவளின் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வந்த ஆதி, துர்கா கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்ததும், அவளிடம் ஆசையாகப் பேசலாம் என்று அவள் அருகில் போக, அவள் அழுது கொண்டு படுத்திருப்பதைப் பார்த்ததும் ஆதி அப்படியே நின்று விட்டான்.

சற்றுத் தாங்கினாலும், மெல்ல துர்கா அருகில் சென்றவன், அவள் தோலைத் தொட்டு, “துர்கா,” என்று அழைக்க, அவன் தன்னைத் தொட்டதும் சட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள், படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள், “இப்ப எதுக்கு என்னைத் தொட்ட ஆதி?” என்று கேட்க.

“ஏன் துர்கா? நான் உன்னைத் தொடக் கூடாதா? இப்ப ஏன் நீ அழுதுட்டு இருக்க? நான் மேடையில் சொன்னதெல்லாம் கேட்டு அழுதுட்டு இருக்கியா? நான் சொன்னதோட உள் அர்த்தம் உனக்குப் புரியவே இல்லையா? நீ தப்பா புரிஞ்சுட்டு அழுதுட்டு இருக்கியா?” என்று ஆதி கேட்க.

“ஆமாம் ஆதி! நான் உன்னை இத்தனை நாளும் தப்பாத்தான் புரிஞ்சுட்டு இருந்திருக்கிறேன். அதை நினைச்சு தான் நான் அழுதுட்டு இருக்கேன். உன்னைத் தப்பா தான் நான் புரிஞ்சுட்டேன் ஆதி. என்னை மன்னிச்சிடு. இனிமேல் என் பக்கத்துல நெருங்கி வராத. என்னைத் தொட்டுப் பேசாத. தயவுசெய்து நான் சொல்றது புரிஞ்சுக்கோ,” என்று துர்கா கூறிவிட்டு அழ.

“ஹே… துர்கா! ஏன் இப்படி எல்லாம் பேசுற? முதல்ல அழுவதை நிப்பாட்டு. நான் சொல்ல வரதை நீ கொஞ்சம் புரிஞ்சுக்க,” என்று ஆதி கூற.

“முதல்ல நான் சொல்றதை நீ கேளு ஆதி,” என்றவள். படுக்கையில் இருந்து எழுந்தவள், “நீ எவ்வளவு சீக்கிரமா எனக்கு டைவர்ஸ் கொடுக்க முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் எனக்கு டைவர்ஸ் கொடுத்திரு ஆதி. என்னால இங்க யாருக்கும் பிரச்சனை வேண்டாம். நான் யார் வாழ்க்கையிலும் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை,” என்று துர்கா சொன்னதும் தான் தாமதம், ஆதி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

EPISODE 39

“நீ எவ்வளவு சீக்கிரமா எனக்கு டைவர்ஸ் கொடுக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எனக்கு டைவர்ஸ் கொடுத்திரு கார்த்திக். என்னால இங்க யாருக்கும் பிரச்சனை வேண்டாம். நான் யார் வாழ்க்கையிலும் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை,” என்று துர்கா சொல்ல.

இதையெல்லாம் இவ்வளவு நேரம் கோபத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, துர்கா தன்னை ‘வேண்டாம்’ என்று இன்னமும் ஒதுக்கி வைக்கிறாள் என்று நினைத்ததும் தான் தாமதம், ஆதி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

தன்னை அறைவான் என்று எதிர்பார்க்காத துர்கா, தன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து ஆதியைப் பார்க்க, கோபமே உருவாக ஆதி அவள் எதிரில் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.

அழுது கொண்டே துர்கா ஆதியைப் பார்த்து, “இப்போது எதுக்கு நீ என்ன அடிச்ச ஆதி? நான் ஒன்னும் தப்பா சொல்லலையே? உன் வாழ்க்கையில் நான் இடைஞ்சலா இருக்கறதுனால தானே உன்னால அந்த சங்கவி கூட சேர முடியலை. நான் ஒருத்தி உன் அம்மா பேச்சைக் கேட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாம போயிருச்சு ஆதி. என்னை மன்னிச்சிடு. உன் மனசுல அந்த சங்கவி தவிர வேற யாருக்குமே இடம் இல்லைன்னு எனக்கு இன்னைக்குத்தான் புரிந்தது. நான் உனக்கும் சங்கவிக்கும் இடையிலான வாழ்க்கைக்குள்ள இடைஞ்சலா இருக்க விரும்பல ஆதி. அதனாலதான் சொல்றேன், சீக்கிரமா எனக்கு டைவர்ஸ் கொடுத்துடு. எனக்கு டைவர்ஸ் கொடுத்து அப்புறம் நீயும் சங்கவியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா சந்தோசமா இருங்க. நான் உங்க வாழ்க்கையில குறுக்கிடவே மாட்டேன்,” என்று அழுதுகொண்டே கூறினாள்.

துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, ‘இவ்வளவு நாளும் துர்கா இதையெல்லாம் நினைத்துக் கொண்டுதான் என்னை விட்டுத் தள்ளி இருந்தாளா?’ என்று நினைத்தவன், துர்காவின் தோள்களைப் பிடித்து அவளைத் தன்னைப் பார்க்குமாறு நிமிர்த்தியவன், “இப்போ சங்கவியையும் என்னையும் சேர்த்து வைக்கிறதுல நீ ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்க? நான் வந்து உன்கிட்ட சொன்னேனா சங்கவிக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வை… என்னை விட்டு சீக்கிரமா போயிரு, எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுன்னு நான் உன்கிட்ட கேட்டேனா? நீ ஏன் இப்படிப் பேசுற துர்கா?” என்று கேட்க.

தன்னைப் பிடித்திருந்த அவன் கைகளை கடினப்பட்டு விலக்கிய துர்கா, “ஆதி, நீயும் சங்கவியும் கார்டன்ல கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு இருந்ததை நான் பார்த்தேன் ஆதி. உனக்கு அவ மேல இருந்த காதலையும் நான் கவனிச்சேன். அந்த சங்கவியே வந்து ‘நீயும் அவளும் எவ்வளவு உண்மையா காதலிக்கிறிங்க’ன்னு என்கிட்ட சொல்லி ‘எங்க வாழ்க்கையில் இருந்து போயிடு’ன்னு என்கிட்ட கேக்குறப்போ, நான் என்ன பண்ண முடியும்? என்னால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம் ஆதி. அதனாலதான் நான் உன்கிட்ட டைவர்ஸ் கேட்கிறேன். ப்ளீஸ் ஆதி, புரிஞ்சுக்கோ,” என்று துர்கா கூற.

‘அப்போ நான் வரதுக்கு முன்னாடியே கார்டன்ல துர்கா ரூமுக்கு வராம அங்கதான் இருந்திருக்கா. இந்த சங்கவி இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் என்கிட்ட இந்த மாதிரி நடந்திருக்காளா?’ என்று அவள் மேல் ஆத்திரம் வர, ‘இவளைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்த ஆதி, துர்காவிடம் வந்தவன், “நான் அவளை விருப்பப்பட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்ததை நீ பார்த்தியா?” என்று ஆதி கேட்க.

“ஆமாம் ஆதி,” என்று துர்கா சொல்ல, “நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படிங்கற காரணத்துக்காக வேண்டாம். இவ்வளவு வருஷமா நீயும் நானும் நல்ல நண்பர்களா இருந்திருக்கோமே? அப்படி இருக்கிறப்போ என்னோட குணத்தைப் பற்றி கொஞ்சமாவது உனக்குத் தெரிந்திருக்க வேண்டாமா துர்கா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் சங்கவியைக் காதலித்தது உண்மைதான். ஆனா காதல் அப்படிங்கறது ரெண்டு பக்கமும் இருந்து வரணும் துர்கா. நான் மட்டுமே அவளைக் காதலிச்சு இருக்கேன்னு எனக்கு நம்ம கல்யாணத்தை அப்போதான் தெரியும். இப்படி இருக்கிறப்போ, ‘நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம், எங்க வாழ்க்கையை விட்டுப் போயிடு’ன்னு சொல்லி சங்கவி வந்து கேக்குறப்போ, நீ எப்படி அதுக்குச் ‘சரின்னு’ சொல்லிட்டு வரலாம்? என்னோட விருப்பத்தைப் பற்றி நீ யோசிக்கவே இல்ல அப்படித்தானே? நான் என்ன நினைத்திருப்பேன்? நான் எப்படிப்பட்டவன் உனக்குத் தெரியாமப் போயிடுச்சா…. துர்கா இத்தனை வருஷத்துலயும்?” என்று ஆதங்கமாக துர்காவைப் பார்த்துக் கார்த்தி கேட்க, துர்காவுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் ஆதியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“இப்போ சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ துர்கா. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் சங்கவியைக் காதலிச்சது உண்மைதான். ஆனா, எப்போ நான் உன் கழுத்துல தாலி கட்டினேனோ, அப்பவே அந்தச் சங்கவியை என் மனசுல இருந்து மொத்தமா அவளோட நினைவையும், அவள் மேல நான் வச்சிருந்த காதலையும் அழிச்சிட்டேன். அது காதலே கிடையாது. உன் கழுத்துல தாலி கட்டின பிறகு வேற எந்தப் பொண்ணையும் மனசால நான் நினைக்கக் கூடாது என்கிறதுல உறுதியா இருந்தேன். உனக்கு என் மேல காதல் இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நாள் வரைக்கும் எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. ஆனா, எனக்கு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு துர்கா. இதை நான் கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சிருக்கேன். இப்பவும் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியாது துர்கா. ஆனா உன்னத் தோழியா இருந்து பிடிச்சதை விட, இப்போ ரொம்பப் பிடிக்குது. ஏன்னு எனக்குச் சொல்லவும் தெரியல.”

“நான் உன்னைப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். அதுவும் முழுசாப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் துர்கா. நீ முழுசா என் மனசுக்குள்ள வரணும். அது போல, உன் மனசுக்குள்ள நான் இருக்கேனான்னு நானும் தெரிஞ்சுக்கணும் துர்கா. நான் உன்னையும் என்னையும் நம்மையும் பற்றி இவ்வளவு யோசிச்சிட்டு இருக்கேன். ஆனா நீ என்னடான்னா அந்தச் சங்கவி பேச்சக் கேட்டுட்டு, காதல், மண்ணாங்கட்டி, அது இதுன்னு சொல்லிட்டு எனக்கு டைவர்ஸ் கொடு என்று சொல்லி என்கிட்ட வந்து கேக்குற அப்படித்தானே? ஒன்னு சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ துர்கா. இனியும் ‘எனக்கு டைவர்ஸ் கொடு’ அப்படி இப்படின்னு சொல்லிட்டு என் முன்னாடி வந்து நிற்காதே. நமக்குள்ள பிரிவு என்பதே இந்த ஜென்மத்துல கிடையவே கிடையாது. இந்த ஜென்மத்தில் நீயும் நானும் ஒன்னா வாழத்தான் போறோம் துர்கா. இந்த ஜென்மத்தில் நீதான் எனக்கு மனைவி…. இதை அந்த ஆண்டவனே நினைச்சாலும் மாற்ற முடியாது.”

“நான் சொல்வதை நீ புரிஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். எனக்குள்ள எப்போ உன் காதல் முழுமையா நுழையுதோ, அதை நான் உணர்ந்த அடுத்த நிமிஷமே உன் முன்னாடி வந்து என் காதலை கண்டிப்பா நான் சொல்வேன் துர்கா. நான் உன்கிட்ட என் காதலை சொல்லும்போது, நீயும் என்னைப் புரிஞ்சுக்கிட்டு என் காதலை ஏத்துக்கிட்டு நீயும் உன் காதலை சொல்லுவேன்னு நான் எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்கேன். அதுவரைக்கும் இந்த மாதிரி எல்லாம் நான்சென்ஸ் மாதிரி பேசிட்டு என் முன்னாடி வந்து நிற்காதே. போ, போய் முகத்தைக் கழுவிட்டு வந்து படுத்துத் தூங்கு,” என்று சொன்னவன், திரும்பியும் பார்க்காமல் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்று விட்டான்.

இவ்வளவு நேரம் ஆதி கூறியதை எல்லாம் கண்ணிமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்த துர்கா, ‘தன் ஆதியா இப்படிப் பேசுவது? தன் ஆதியா தன்னிடம் வந்து ‘என்னைப் பிடிக்கும்’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்?’ ஆதி கூறிய அனைத்து விஷயங்களும் துர்காவின் காதில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க, தன்னையே தன்னால் நம்ப முடியாமல் நின்றிருந்த துர்கா, ‘இவ்வளவு நாளும் நான் நினைத்தது எல்லாமே தப்பாகப் போய்விட்டதே! ஆதிக்கும் என்னைப் பிடிக்கத்தான் செய்கிறது,’ என்று நினைக்கும் போதே, அழுது கொண்டிருந்த துர்கா முகம் வெட்கத்தில் சிவந்து விட, ஆதி தன்னைப் பிடிக்கும் என்று சொன்னதை நினைத்தவளின் முகம் மெல்ல மலர ஆரம்பித்தது. ஆதி சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டே பாத்ரூம் நோக்கிச் சென்றாள் துர்கா.

இது எல்லாம் ட்ரெஸ்ஸிங் ரூமில் கதவு ஓரத்தில் நின்று, அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, துர்கா முகம் தாமரைப்பூ போலச் சிவந்து இருப்பதைப் பார்த்தவன், அவளையே ரசித்த வண்ணம் அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

ஆதி இரவு உடை அணிந்து கொண்டு வந்து கட்டிலின் ஒரு புறம் படுத்திருக்க, துர்காவும் முகம் கழுவி விட்டு வந்து அவன் அருகில் சிறிது இடைவேளை விட்டு, அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள். இருவரும் தங்கள் மனதில் சொல்ல முடியாத உணர்வுகளோடு போராடிக் கொண்டு, இருவரும் முதுகு காட்டிப் படுத்து எப்போது தூங்கினோம் என்று தெரியாமல், இருவரும் நன்றாகத் தூங்கி விட்டனர். நாளை விடியும் பொழுது இவர்கள் வாழ்க்கையிலும் ஒரு நல்ல விடிவு பிறக்க வேண்டும். ❤️

****

அதிகாலை மூன்று மணி போல கீர்த்திகாவின் அறைக் கதவு தட்டப்பட, கீர்த்திகாவின் அப்பா எழுந்து கதவைத் திறந்தார்.

கதவைத் திறந்தவருக்கு அங்கே, கையில் சோப்பு, சீப்பு, டவல், டூத் பேஸ்ட், ஷாம்பு சகிதம் நின்றிருந்த விக்கியைப் பார்த்து அதிர்ச்சியாகி, “என்ன தம்பி, இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க? இதெல்லாம் என்னது தம்பி?” என்று அவன் கையில் இருக்கும் பொருட்களை எல்லாம் பார்த்துக் கேட்டார்.

“அங்கிள்! ஆதி அம்மா, ‘உங்க அறையில் எல்லாம் சௌகரியமா இருக்கா? பாத்ரூமில் சுடு தண்ணீர் வருதா? காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்க லேட்டா ஆகிட்டா, மேரேஜுக்குப் போறதுக்கு லேட் ஆகிடும்’னு சொல்லி, உங்க எல்லாரையும் எழுப்பி விடச் சொல்லி, இதெல்லாம் உங்களுக்குக் கொடுக்கச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்,” என்று விக்கி கூற.

“அது சரி தம்பி. இதுக்குத்தான் வேலை ஆட்கள் இருப்பங்களே…. சம்மந்தி அம்மா எப்பவும் அவங்க கிட்ட தானே கொடுத்து விடறாங்க. நீங்க ஏன் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.

“அதுவா அங்கிள்! அவங்க எல்லாரையும் துர்கா அறைக்கு அனுப்பி வெச்சுட்டாங்க. அதான் என்னை இங்க அனுப்பினாங்க,” என்றவன், “சரி அங்கிள்! எல்லாரும் எழுந்துட்டீங்களா?” என்று அறைக்குள் எதிர்பார்த்துக் கொண்டே கேட்டான்.

“நானும் வடிவும் (கீர்த்திகாவின் அம்மா) எழுந்துட்டோம் தம்பி. கீர்த்திகா தான் நைட் துர்காவைப் பார்த்துட்டு வந்து லேட்டா வந்ததுல, அழுப்புல தூங்குறா பா…. சரி நாங்க எல்லாரும் ரெடி ஆகிட்டு அவளை எழுப்பலாம் என்று தூங்கட்டும்னு விட்டுட்டோம்,” என்று சொன்னார்.

அவர் கூறியதைக் கேட்டவன், “என்னது! கீர்த்திகா இன்னும் எழுதிருக்கலையா….? இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு ஃபங்ஷனுக்கு. அங்கே நேரமே எல்லாரும் எழுந்து ரெடி ஆகி போய்ட்டு இருக்காங்க. கீர்த்திகா இன்னும் தூங்குறாளா? நகருங்க அங்கிள்! நான் போய் அவளை எழுப்புறேன்,” என்றவன் அவரைத் தள்ளிக்கொண்டு தாண்டி அறைக்குள் சென்றான்.

உள்ளே சென்றவன், முகம் வரை போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த கீர்த்திகாவைப் பார்த்ததும், ‘கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பார் இவளுக்கு. காலைல என் தேவதையோட நம்பர் தரேன்னு சொல்லிட்டு, இங்க வந்து எப்படித் தூங்குகிறா பாரு,’ என்று நினைத்தவன், கீர்த்திகாவின் பக்கத்தில் சென்று, “தங்கச்சி….. தங்கச்சி மா….. எழுந்திருடா தங்கம்….. கீர்த்திகா…. கீர்த்திகா…. எழுந்திரு கீர்த்திகா…. எழுந்திரு…..” அஞ்சலி படத்தில் வரும் வசனம் போல விடாமல் கீர்த்திகாவின் காதின் அருகில் சென்று அவள் பெயரைச் சொல்லி அழைத்து அவளை எழுப்பிக் கொண்டே இருக்க.

“யாருடா அது இந்த நேரத்துல வந்து காதுக்குள்ள என் பேரு சும்மா சொல்லிட்டு…..” என்று தூக்கத்தில் திரும்பப் படுக்கப் போனவளின் கை படாரென்று விக்கியின் கன்னத்தில் வேகமாக அடிக்க.

“ஷ்…. ஆஹ்…..” என்று தன் கன்னத்தில் கையை வைத்தவன், ‘அடிப்பாவி! தூக்கத்துல கூட யாரு பக்கத்துல இருக்குறானு பார்க்காம என்ன அடிக்கிறாளே! இது எல்லாம் என் நேரம். எனக்கு என் வேலை ஆகணுமே! நீ என்ன செஞ்சாலும் பொறுத்துத் தானே போகணும்,’ என்று முடித்தவன், மறுபடியும் சென்று அவள் தோலைத் தொட்டுச் சுரண்ட.

“ப்ச்……” என்று சினுங்கியவள் தன் தோளில் இருந்த கையைத் தட்டி விட்டாள். மறுபடியும் விக்கி அவள் தோலைச் சுரண்ட, கண்களைத் தேய்த்துக் கொண்டே அரை தூக்கத்தில் கண்ணை லேசாகத் திறந்து பார்க்க, அவள் முகத்திற்கு நேர் எதிராக விக்கி ஈ……என்று பல்லைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

அரை தூக்கத்தில் இருந்து கீர்த்திகா கண்விழித்ததும் விக்கி முகத்தை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும், அவன் முகம் மிகவும் பெரியதாக வித்தியாசமாகத் தெரியவும், பதறிப் போய், “ஐயோ….. அம்மா…… பேய்…..” என்று அலறி அடித்துக் கொண்டு பெட்டில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்து நின்றாள்.

அவள் இப்படி அலறி எடுத்துக்கொண்டு கத்தவும், குளித்துவிட்டு வெளியே வந்த வடிவும் (அம்மா) கீர்த்திகாவின் அப்பாவும், “என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி கத்துற?” என்று பதறி அடித்துக் கொண்டு கீர்த்திகாவின் அருகில் வர.

அப்போது தான் தன் தூக்கம் மொத்தமும் கலைந்து விட, தன்னைச் சுற்றி யார் யார் நிற்கிறார்கள் என்று நன்றாகப் பார்த்த கீர்த்திகா. பெட்டிற்கு இந்த பக்கம் கீர்த்திகா நிற்கவும், இவர்கள் மூவரும் பெட்டிற்கு அந்தப் பக்கம் நின்று இருந்தார்கள்.

“என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி கத்துற?” என்று வடிவு கேட்க, கீர்த்திகா தன் இதிலிருந்து விக்கியைப் பார்க்க, விக்கி அவர்கள் இருவருக்கும் தெரியாமல் கையெடுத்துக் கும்பிட்டு “சாரி” என்று யாருக்கும் தெரியாமல் கீர்த்திகாவிடம் கெஞ்சவும், அவனை முறைத்தவள், “அம்மா அது ஒன்னும் இல்ல. ஒரு கெட்ட கனவுல ஒரு பேய் என் பக்கத்துல வர மாதிரி கனவு கண்டேன்மா…. அதனாலதான் தூக்கத்துல பயந்து கத்திட்டேன்,” என்ற கீர்த்திகா விக்கியைப் பார்த்து முறைத்துக் கொண்டே கூறினாள்.

“என்ன பொண்ணுமா நீ! இவ்வளவு பெருசா இன்னமும் பேய், பூதம் என்று அதுவும் கனவில் கண்டதாகச் சொல்லி பயந்து இப்படி அலறி அடிச்சு எழுந்து, எங்க எல்லாரையும் ஒரு நிமிஷம் பயந்துட்டோம்,” என்றார் அப்பா.

“சரி, எழுந்தாச்சுல்ல. சீக்கிரம் குளித்து ரெடியாயிடு. நம்ம கல்யாணத்துக்கு போகணும் இல்லையா?” என்று கூட, “சரிமா, நீயும் அப்பாவும் போய் ரெடியாகுங்க. நான் விக்கி அண்ணா கூடப் பேசிட்டுப் போய் ரெடியாகிடுறேன்,” என்று கூறிவிட்டு, விக்கியைக் கண்களால் வெளியே வரும்படி ஜாடை செய்ய, விக்கி அவள் பின்னால் பம்மிக்கொண்டு வெளியே சென்றான்.

விக்கி வெளியே வந்ததும், அவர்கள் அறை கதவை அடைத்தவள், விக்கியைப் பார்த்து முறைத்தவள், “என்ன அண்ணா! இவ்வளவு காலையில் வந்து இருக்கீங்க? முகத்தைக் கொண்டு வந்து இப்படியா மூஞ்சிக்குப் பக்கத்துல வச்சு என்ன பயமுறுத்துவீங்க?” என்று அவனிடம் சிடுசிடுக்க.

“அச்சோ! அண்ணா மூஞ்சியைப் பார்த்து பயந்துட்டியா தங்கச்சிமா? சாரிடா….. நான் நீ நல்லாத் தூங்கிட்டு இருந்தியா. உன்னைச் சத்தம் போட்டு எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டு தான் பக்கத்துல வந்து மெதுவா கூப்பிட்டேன். ஆனா நீ அதுக்குமே பயந்துட்ட. நீ ரொம்பச் சின்ன புள்ளை மாதிரி இருக்க. இப்படியெல்லாம் பயந்துக்க கூடாது. சரியா?” என்று விக்கி அவளிடம் மிகவும் பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ள.

“சரி சரி! இப்ப எதுக்கு இவ்வளவு காலையில் எங்க ரூமுக்கு வந்தீங்க? என்னையேன் இவ்வளவு சீக்கிரம் எழுப்பி விட்டீங்க? முதல்ல அதை சொல்லுங்க. நான் போய் ரெடி ஆகணும். கல்யாணத்துக்கு நேரம் ஆயிடுச்சு. அப்புறம் அம்மா அப்பாவும் என்னைத்தான் திட்டுவாங்க,” என்று கீர்த்திகா கூற.

“அது ஒன்னும் இல்லடா தங்கச்சிமா. நீ காலையில் நிலானியின் ஃபோன் நம்பர் எனக்குத் தரேன்னு சொன்னியா? அதுதான் பொழுது விடிஞ்சிடுச்சு. உன்னை எழுப்பி ஃபோன் நம்பர் கேக்கலாம்னு வந்தேன்,” என்று விக்கி கூற.

அவன் கூறியதைக் கேட்டுக் கீர்த்திகா, “அண்ணா! இது எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? மணி 3:30 தானே ஆகுது. காலைலேங்குறது அஞ்சு மணி ஆறு மணிக்கு மேல தானே? இப்படியா வந்து ஃபோன் நம்பர் கேட்பிங்க?” என்று அவனிடம் கோபிக்க.

“சரிடா சரிடா தங்கச்சிமா…. அண்ணா பாவம்ல. இப்படி கோச்சுக்காதடா. ப்ளீஸ்……. நீ என் ஆள் நம்பர் மட்டும் கொடுத்துடு. அதுக்கப்புறம் நான் நீ….. இருக்கிற பக்கமே வரமாட்டேன். உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அண்ணா பாவம் தானே? எவ்வளவு நேரம் தான் நான் காத்துட்டு இருக்கேன் தெரியுமா? நேத்து நைட்ல இருந்து நான் காத்துட்டு இருக்கேன்,” என்றான். ஏதோ வருடக் கணக்கில் காத்திருப்பது போலக் குரலை ஏற்றி இறக்கிக் கூறினான்.

விக்கி கெஞ்சுவதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகாவின் கோபம் காணாமல் போய்விட்டது. “சரி சரி அண்ணா! ரொம்பக் கெஞ்சாதிங்க. எனக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு உங்களை இப்படிப் பார்க்க. உங்களுக்கு என்ன இப்ப அவ நம்பர் வேணும். அதானே? நான் இப்பவே தரேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்,” என்றால்.

“என்னடா கண்டிஷன்? சொல்லு கீர்த்து. நீ என்ன சொன்னாலும் இந்த அண்ணா செய்வேன். சொல்லுடா,” என்றான் விக்கி.

“அதுவா! நான் இப்போ ரூம்குள்ள போனதும் என் ஃபோனை எடுத்து வாட்ஸ் அப்ல உங்களுக்கு நான் நிலானியின் நம்பர் அனுப்பிவிடுவேன். அதே மாதிரி அவளுக்கும் நான் உங்க நம்பர் சொல்லி அனுப்பி, ‘இவர் கூப்பிடுவார்’ என்று மட்டும்தான் சொல்லுவேன். உங்களப் பத்தி எந்த விஷயமும் நான் சொல்ல மாட்டேன். சரியா?”

“நீ அண்ணன் நம்பர் கூட சொல்ல வேண்டாம்டா. உன் பிரண்டு நம்பர் மட்டும் கொடு போதும். மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்,” என்று விக்கி கூற.

“ம்ஹும்….. அது தப்பு அண்ணா. நான் அவகிட்ட உங்க நம்பர் கொடுத்து, ‘இவர் கூப்பிடுவார். நீ பேசிக்கோ’ன்னு மட்டும் சொல்லுவேன். மற்றதெல்லாம் நீங்க நிலானி கிட்ட ஃபோன் பண்ணிப் பேசிக்கோங்க. அண்ட், நான் இப்போ உங்க ரெண்டு பேருக்குமே நம்பர் அனுப்பிடுவேன். ஆனா நீங்க அவளுக்கு இப்ப கூப்பிடக்கூடாது. காலைல ஒரு ஒன்பது மணிக்கு மேல தான் கூப்பிடனும். சரியா?” என்றவள் அதற்கான காரணத்தையும் சொன்னாள்.

“ஏன்னா அவ ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கா. இப்போ நீங்க கால் பண்ணா, அது அவளுக்குப் பிரச்சனையாகிடும். என்னால் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. ஏற்கனவே அவ வாழ்க்கையில நிறைய கஷ்டம் இருக்கு. அதனால இதுவும் அவளுக்குக் கஷ்டமாப் போய்டக் கூடாது. அதனால ரொம்ப ஜாக்கிரதையா அவ கிட்ட பேசுங்க. அவளைக் கஷ்டப்படுத்திர மாதிரி எதுவும் பண்ணிராதீங்க அண்ணா. ப்ளீஸ்,” என்றவள்.

“அவ ரொம்ப எமோஷனல் டைப் அண்ணா. அவளுக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லை. கொஞ்ச நாள் முன்னதான் ஒரு ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்க. ஒரே ஒரு அக்கா மட்டும் தான் இருகாங்க. அவங்களை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாதுனால, அவளால் அவங்க வீட்டில் இருந்து காலேஜ் வந்து போக முடியாது. அதுவுமில்லாமல், இவளுக்கும் அவங்க அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்த குடும்பத்திற்கும் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். முதல் வருஷம் அவங்க அக்கா வீட்டில் இருந்து தான் வந்தா. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை. ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறா. லீவு விடக் கூட அவ ஹாஸ்டலை விட்டு எங்கேயும் போக மாட்டா அண்ணா. ரொம்பப் பயந்த சுபாவம் அவளுக்கு. அவளை எதுவும் கஷ்ட படுத்துனீங்கனு மட்டும் எனக்குத் தெரிய வந்துச்சு, அப்புறம் ‘அண்ணன்’னு கூட பார்க்க மாட்டேன். உங்க தோளை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவேன்,” என்று சொன்னவள், “சரின்னா நீங்க உங்க ரூமுக்கு போங்க. நான் இப்போ உள்ள போயிட்டு நம்பர் அனுப்பிடுறேன்,” என்றவள் தன் அறைக்குச் செல்ல.

கீர்த்திகா கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்கி, நிலானியைப் பற்றி ஓர் அளவு தெரிந்து வைத்திருந்தாலும், அவள் கஷ்டப்படுகிறாள் என்று சொன்னதும், ஏனோ விக்கிக்கு நிலானியை இப்போதே பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று தோன்றிய நினைப்பை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன், அவன் ரூமிற்குச் செல்லவும், அவன் மொபைல் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் கேட்டது. அதை எடுத்துப் பார்க்க, கீர்த்திகா நிலானியின் நம்பரை அனுப்பியிருந்தாள்.

நிலானியின் நம்பரைப் பார்த்ததும், ஃபோன் திரையில் தெரிந்த அவள் நம்பரை தன் விரல்களால் வருடியவன். பின் அந்த நம்பரைத் தன் மொபைலில் ‘என் தேவதை’ என்று சேவ் செய்தான். ❤️

****

ஆதியும் துர்காவும் நேரமே எழுந்து பூமிகாவுடைய திருமணத்திற்குச் செல்வதற்காகத் தயாராகி கொண்டிருக்க.

ஆதி சீக்கிரமே கிளம்பி சோபாவில் அமர்ந்திருந்தவன், துர்கா கிளம்பி வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கூட ஆதியைக் காக்க வைக்காமல் துர்கா தயாராகி வெளியே வர, ட்ரெஸ்ஸிங் ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் தன் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த ஆதி நிமிர்ந்து பார்க்க.

திருமணத்திற்குச் செல்வதற்காக ஆதியே நேரில் சென்று பார்த்துப் பார்த்து துர்காவுக்கு அழகாக ஒரு மயில் வண்ண நிறத்தில் பட்டு சேலை என்று செலக்ட் செய்து அவளுக்குக் கொடுத்திருந்தார். சேலைக்கு எடுப்பாகச் சிறிய வைர நெக்லஸும் அதுக்கு மேட்ச்சாக கம்மல், வளையல் என துர்காவுக்கு வைரத்தாலேயே எடுத்திருந்தார். அவர் வாங்கிக் கொடுத்த நகைகளையும் பட்டுப் புடவையையும் தான் இப்போது துர்கா அணிந்து வெளியே வந்தாள்.

துர்காவை அந்தப் பட்டுச்சேலையில் பார்த்த ஆதி, அவள் அழகில் மயங்கி அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான். தன் சேலையைச் சரி செய்து கொண்டு வெளியே வந்த துர்கா, ஆதி சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனிடம் தயக்கத்துடன் சென்றவள், “ஆதி, நான் ரெடி ஆயிட்டேன். நாம போலாமா?” என்று துர்கா கேட்க, அவள் பேசும் சத்தம் கேட்டதும் தான் நினைவுக்கு வந்தவன், தலையை ஒருமுறை உலுக்கிவிட்டு எழுந்தவன், “சரி வா, போலாம்,” என்று முன்னே நடக்க, துர்கா அவன் பின்னே சென்றாள்.

அனைவரும் ரெடியாகி பூமிகாவின் திருமணத்திற்கு கிளம்பினர். அவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து அருணாச்சலம் தன் மகளின் திருமணத்திற்காக மேடை ஏறி நின்று அவளை ஆசீர்வதிக்கச் சென்றார். மற்ற அனைத்து ஜோடிகளும் பூமிகா, விஷால் அருகில் இருக்க, ஆதியையும் துர்காவையும் அழைத்து அவர்களுடன் சேர்த்து நிற்க வைத்துக் கொண்டனர்.

விக்கி தன் மொபைலைக் கையில் வைத்துக் கொண்டு, மணி எப்பொழுது ஒன்பதாகும் என்று காத்துக் கொண்டு இருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த கதிர், அவனுக்கு இரண்டு சேர் தள்ளி அமர்ந்திருந்த கீர்த்திகாவையே சைட் அடித்தவாறு, கீர்த்திகாவைப் பார்த்துக் கொண்டே இடையிடையே திருமணத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

வாத்தியங்கள் முழங்க ஐயர் கெட்டிமேளம்….கெட்டிமேளம்….. என்று சொல்லிவிட்டு “மாங்கல்யம் தந்துனானே……” என்று மந்திரம் ஓத, பூமிகாவின் கழுத்தில் விஷால் தாலி கட்டினான்.

திருமணம் இனிதே முடிந்ததும் மேடை விட்டு இறங்கிய ஆதியும் துர்காவும் கீழே வர, அவர்களையே இலக்கு வைத்துக் கடன் வாங்காமல் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்த சங்கவி நேராக எழுந்து ஆதியின் அருகில் வர, அவளைப் பார்க்கப் பிடிக்காமல் தான் அணிந்திருந்த மாஸ்க்கைச் சரி செய்து கொண்டே, “இப்போ எதுக்கு இங்க வந்து நிற்கிற? கொஞ்சம் வழியை விடு,” என்று அவளை அதட்ட.

“ஒரு நிமிஷம் இரு ஆதி. உனக்குச் சொந்தமானது ஒன்று என்னிடம் இருக்கு,” என்று சங்கவி குதர்க்கமாக கூற, அவளைப் புரியாமல் பார்த்த ஆதி, “என்ன?” என்று அவளைக் கேட்டான்.

துர்காவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தன் கைப்பையில் இருந்து ஆதியின் பர்ஸை எடுத்தவள், “நேற்று நீ எனக்கு உன்னோட கோட் போட்டு விட்டாய். அந்த கோர்ட்டுக்குள்ள தான் உன்னோட பர்ஸ் இருந்தது. அதைக் கொடுத்துட்டுப் போலாம்னு தான் வந்தேன். இப்படி என்ன ஏதுன்னு தெரியாம எப்பப் பார்த்தாலும் என்னிடம் சிடுசிடுன்னு பேசாத ஆதி,” என்று கூறி அவள் பர்ஸை நீட்ட, அதை விடுபட்டுப் பிடுங்கிய ஆதி, “உன்கிட்ட பேசணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இனிமேல் இந்த மாதிரி என் முன்னாடி வந்து நின்னு பேசுற வேலை வெச்சுக்காத,” என்று சொல்லிவிட்டு, “வா துர்கா,” என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான். ❤️

EPISODE 40

ஆதி தன்னுடைய குடும்பத்துடன் அருணாச்சலத்தை சந்தித்து தாங்களும் ஊருக்குச் செல்வதாகக் கூற, “ஏன் ஆதி இப்படி அவசரப்படுற? என் பொண்ணுங்க கல்யாணமான கையோட ஹனிமூன் போறா. நீங்க வந்ததும் தான் வந்தீங்க, இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டுப் போலாமே,” என்று அவர் கூற, “இல்ல அங்கிள்! எனக்கு ஏற்கனவே ஆபீஸ்ல நிறைய வேலை பெண்டிங் இருக்கு. நான் கண்டிப்பா போயே ஆகணும். இன்னொரு நாள் நாங்க எல்லாரும் வந்து கண்டிப்பா உங்க வீட்ல தங்குகிறோம்,” என்று ஆதி கூற, “சரிப்பா, எனக்கு நீ சொல்றது புரியுது. பத்திரமா போயிட்டு வாங்க. கண்டிப்பா இடையில நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வரணும்,” என்று கூற, “கண்டிப்பா வரோம் அங்கிள்,” என்று சொல்லிவிட்டு ஆதி, விக்ரமையும் மற்றவர்களையும் பார்க்கச் சென்றுவிட, வெங்கடாசலமும் அருணாச்சலத்திடம் சொல்லிவிட்டு விடைபெற்று, முதலில் கீர்த்திகாவின் பெற்றோருடன் கிளம்பினர்.

கீர்த்திகா, துர்காவுடன் வருவதாக அங்கேயே இருந்துவிட்டாள்.

ஆதி சென்று விக்ரமையும் மற்றவர்களையும் பார்த்துவிட்டு, அவர்களிடம் விடைபெறச் சென்றவன், அவர்களை எல்லாம் தன் வீட்டிற்கு அழைத்திருந்தான். அனைவரும் ஹனிமூன் சென்றுவிட்டு வந்த பிறகு, அவன் வீட்டிற்கு கொஞ்ச நாள் கழித்து வருவதாகச் சொல்லவும், “கண்டிப்பாக அனைவரும் வரவேண்டும்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பப் போக, அவனை வழியனுப்ப அவனுடன் வந்த விக்ரம், “நாங்க எல்லாரும் கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் கழித்துத்தான் ஹனிமூன் போறோம் ஆதி. நீ உன் மனைவியுடன் சீக்கிரமே ஹனிமூன் போக என்னுடைய வாழ்த்துக்கள்,” என்று விக்ரம் கூற. விக்ரம் இப்படிக் கூறியதும் ஆதி லேசாகச் சிரித்துத் தலையை ஆட்டியவன், “நாங்க ஹனிமூன் போகும் பொழுது கண்டிப்பாக உன்கிட்ட சொல்லிட்டுத்தான் போவோம் விக்ரம்,” என்று ஆதி கூற, “சீக்கிரமே எதிர் பார்க்கிறேன்,” என்றவன் ஆதியை வழியனுப்பி வைத்தான்.

ஆதி, “சரி துர்கா, நீ ரூமிற்குப் போ… எனக்குக் கொஞ்சம் ஃபோன் பேச வேண்டி இருக்கு. நான் பேசிட்டு வந்துறேன்,” என்று கூற, “சரி ஆதி,” என்று துர்கா ரூமிற்கு வர, வரும் வழியில் கீர்த்திகாவும் அவள் அம்மா அப்பாவை வழியனுப்பிவிட்டு, இவர்கள் ரூமிற்குத்தான் வந்து கொண்டு இருந்தாள்.

துர்கா வருவதைப் பார்த்ததும், “அக்கா…..” என்று சிரித்துக் கொண்டே வந்து துர்காவைக் கட்டிக் கொண்டாள். “என்ன கீர்த்து, ரொம்பச் சந்தோஷமா இருக்க இன்னைக்கு?” என்று கேட்க, “அப்படியா அக்கா? அதெல்லாம் ஒன்னுமில்லையே. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்,” என்று கீர்த்திகா கூறினாள்.

“சரி, அம்மா அப்பா கிளம்பிட்டாங்களா?” என்று துர்கா கேட்டாள். “ம்ம்ம்…. அவங்களை அனுப்பிட்டுத்தான் அக்கா நான் வந்தேன். எப்படியும் உங்க கூட தானே வரணும். அதான் அக்கா. சரி, நீ ரூமுக்குத்தான் போறியா….” என்று கேட்டாள். “ஆமாம் கீர்த்து, திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனுமில்லையா? அதான் ரூமுக்குப் போறேன். நீ என்னைப் பார்க்கத்தான் வந்தியா?” என்று துர்கா கேட்க, “ஆமாம் அக்கா, நீ ரூமுக்கு வந்துட்டியானு உன்னைப் பார்த்துட்டு, அப்புறம் போய் என்னோட பேக் ரூமில் இருக்கு, எடுத்துட்டு வரலாம்னு வந்தேன் அக்கா.”

“சரி வா…. நானும் வரேன். நாம ரெண்டு பேரும் போய் உன்னோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு, அப்புறம் ரூமுக்குப் போகலாம்,” என்று துர்கா கீர்த்திகாவுடன் செல்லப் போக, “அக்கா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ உன் ரூமிற்குப் போ… நான் போய் எல்லாம் எடுத்துட்டுச் சீக்கிரம் வந்துடுறேன்,” என்று கூற.

“சரி, நீ தனியா போய்க்குவியா?” என்று துர்கா கேட்க, “அக்கா, இது பூமிகா அக்காவுடைய ரிசார்ட் தானே? இங்க யாரு நம்ம என்ன செஞ்சிரப் போறாங்க? நான் பத்திரமா போயிட்டு வந்துடுவேன் அக்கா. நீ போய் உன்னிடம் திங்ஸை எல்லாம் பேக் பண்ணிட்டு இரு. நான் சீக்கிரமா போயிட்டு என் பேக்கை எடுத்துட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு துர்காவை அவள் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு கீர்த்திகா சென்றாள்.


கீர்த்திகா தன் அறைக்கு வர, அவள் அறை முன்பு விக்கி சோகமாக முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றிருந்தான். அவனை அப்படிப் பார்க்கவும், கீர்த்திகா விக்கியிடம் சென்று, “விக்கி அண்ணா! ஏன் இப்படிச் சோகமா நின்னுட்டு இருக்கீங்க? என்ன ஆச்சு? அதுவும் என் ரூமுக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

கீர்த்திகா “என்ன ஆச்சு?” என்று கேட்டதும் தான் தாமதம், “ஓ…..” என்று அழுவது போலச் சத்தமிட, “அண்ணா! என்ன ஆச்சு? எதுக்கு இப்படி அழுகிற மாதிரி இருக்கீங்க? சொல்லுங்க என்ன ஆச்சு?” என்று கீர்த்திகா கேட்க.

“அவன் ஏன் அழறான்னு நான் சொல்றேன்,” என்று கூறிக்கொண்டே கதிர் அங்கே வந்தான்.

“ஏன் அழறாரு?” என்று கீர்த்திகா கேட்க, “உன்கிட்ட காலையில் நேரமே வந்து நிலானியுடைய ஃபோன் நம்பர் வாங்கிட்டு வந்தானா…” என்று கதிர் கேட்டான்.

“ஆமாம் கதிர், காலையில் 3 மணியைப் போல வந்துட்டாரு. நான் நிலானி நம்பர் கொடுத்து ஒன்பது மணிக்கு மேல அவளுக்குக் கால் பண்ணிப் பேசச் சொல்லி இருந்தேன். ஏன் என்றால்…”

“அதே தான். உன்கிட்ட ஃபோன் நம்பர் வாங்கிட்டு வந்ததில் இருந்து, ‘எப்போ ஒன்பது மணி ஆகும்?’ என்று ஃபோனையே வெறித்துப் பார்த்துட்டு, சரியா மணி ஒன்பது ஆனதும் உடனே நிலானிக்கு ஃபோன் பண்ணி இருக்கான். அந்தப் பொண்ணும் காலை அட்டென்ட் பண்ணிப் பேசி இருக்கு. இவன் என்ன பேசினானோ தெரியலை, அதுக்கு பிறகு இவன் காலைக் கட் பண்ணிட்டு, இவன் நம்பரை பிளாக் பண்ணி வேற வெச்சுட்டா,” என்று சொல்ல.

“என்னது! அவ அண்ணா நம்பரை பிளாக் பண்ணிட்டாளா? அவ அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்லையே கதிர்!” என்றவள், விக்கியிடம் திரும்பி, “அண்ணா! அவ உங்க நம்பரை பிளாக் பண்ற அளவுக்கு அப்படி என்ன பேசுனீங்க?” என்று கேட்டாள்.

“நான் ஒண்ணுமே பேசலை கீர்த்து. கால் பண்ணினேன். ரெண்டு மூணு ரிங்கில் ஃபோனை அட்டென்ட் பண்ணினா. நான் ‘ஹலோ நிலா குட்டி…..'”

“‘ஹலோ, யாரு நீங்க? என்னை இப்படி எல்லாம் சொல்லி கூப்பிடறீங்க?’ என்றால் நிலானி.”

“‘என்னை யாருன்னு உனக்குத் தெரியலையா?’ என்றான் விக்கி.”

“‘தெரியலைன்னு தானே கேக்குறேன். சொல்லுங்க யாரு நீங்க?’ என்றால்.”

“‘ஒரு நாள் உன்னோட காலேஜ்ல உன் சீனியர் பொண்ணு உன்னை கலாட்டா பண்ண வந்த அப்போ, உங்க காலேஜுக்கு எதிரில் இருக்க காபி ஷாப்பில் வெச்சு உன்னை அந்தப் பொண்ணு கிட்ட இருந்து காப்பாத்தினேனே, உனக்கு ஞாபகம் இருக்கா….’ என்றான்.”

“‘ம்ம்… நல்லா ஞாபகம் இருக்கு,’ என்றவள், ‘உங்களை மறக்க முடியுமா என்னால? என்னோட சீனியர் கிட்ட இருந்து தப்பிச்சு உங்க கிட்ட மாட்டிகிட்டேனே, அதை எப்படி நான் மறப்பேன்? நல்லா ஞாபகம் இருக்கு!’ என்றால்.”

“‘சட்சாத் நானே தான் பேசுறேன்,’ என்றான்.”

“‘உங்களுக்கு எப்படி கீர்த்திகாவைத் தெரியும்? அவ எங்க அண்ணா ஃபோன் பண்ணுவாரு பேசிக்கோன்னு சொல்லி இந்த நம்பரைக் கொடுத்தா… ஆனா…. நீங்க எப்படி அவளுக்கு அண்ணாவா இருக்க முடியும்? அவளுக்கு ஒரே ஒரு அக்கா தான் இருக்காங்கன்னு சொல்லி இருக்காளே?’ என்று கேட்க.”

“‘அச்சோ…. என் நிலா குட்டி எவ்ளோ அறிவா பேசுற நீ…’ என்றவன், ‘நான் கீர்த்துவோட ஒண்ணு விட்ட அண்ணன்,’ என்றான்.”

“‘ஹலோ! இந்த குட்டி….. கிட்டின்னு…. எல்லாம் பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க! எதுக்கு இப்போ எனக்குக் கால் பண்ணி இருக்கீங்க? அதை முதல்ல சொல்லுங்க!’ என்றால் காட்டமாக.”

“‘என்ன நிலானி இப்படிப் பேசுற? உன்கிட்ட ஆசையா பேசணும்னு கால் பண்ணினா நீ இப்படி என்கிட்ட கோவமா பேசினா எப்படி?’ என்று விக்கி கேட்க.”

“‘ஹலோ! இங்க பாருங்க சார்…’ என்று நிலானி கோபத்துடன் பேச வர… அவளைப் பேசுவதை இடைமறித்த விக்கி, ‘என்ன நிலா குட்டி…. சார்ன்னு சொல்றே? என்னை அழகா விக்கின்னு என் பேரைச் சொல்லி கூப்பிடு. இல்லைனா என்னை ஆசையா மாமான்னு…. கூப்பிடு பார்க்கலாம்,’ என்று விக்கி சொல்ல.”

“அவன் சொன்னதைக் கேட்ட நிலானி, ‘ஹலோ! என்ன விட்டா உங்க வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிப் பேசுறீங்கா? இப்படி எல்லாம் பேசுற வேலை வெச்சுக்காதீங்க என்கிட்ட. கீர்த்திகா சொன்னானு ஒரே காரணத்துக்காகத் தான் உங்க கிட்ட இவ்ளோ பொறுமையாப் பேசிட்டு இருந்தேன். இப்படி எல்லாம் பேசுற உங்கா கிட்ட பேச எனக்கு எதுவுமில்லை. பேசாம போனை வைங்க,’ என்று சொல்லிவிட்டுப் போனை கட் செய்துவிட்டாள்.”

“என்ன, நிலா குட்டி போனை கட் செஞ்சுட்டா?” என்று நினைத்தவன், திரும்பவும் நிலானிக்குக் கால் செய்ய, அவன் கால் போகவே இல்லை நிலானிக்கு,” என்று நடந்தது அனைத்தையும் விக்கி சோகமாகக் கீர்த்திகாவிடம் சொல்லி முடித்தான்.

விக்கி கூறியதை எல்லாம் அதுவரைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்திகா, “ஏன் அண்ணா….? முதல் முதலா இன்னைக்குத் தான் அவகிட்ட ஃபோன் பண்ணிப் பேசறீங்க. இப்படியா ‘மாமான்னு கூப்பிடு….. நிலா குட்டி…..’ அப்படி இப்படி என்று சொல்லி அவகிட்டப் பேசுவீங்க? உங்களை அவளுக்கு யார், என்ன என்றே தெரியாது. அவளுக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியாம நீங்க கூப்பிட்டதும் எல்லாத்துக்கும் சரி சரின்னு பேசுவாங்கன்னு கொஞ்சமாவது நீங்க யோசிச்சுப் பேச மாட்டீங்களா?” என்று கீர்த்திகா விக்கியைக் கடிந்து கொள்ள.

“சாரி…. கீர்த்து. என் ஆள் கிட்டப் பேசுற ஒரு ஆர்வத்தில் என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன்,” என்று விக்கி சொல்ல. “ஆமாமா. நம்ம கூட பேசுறவங்க மனநிலை தெரியாமப் பேச வேண்டியது. இல்லைன்னா ஏதாவது செஞ்சிற வேண்டியது. பிறகு அதுக்கு வருத்தப்பட வேண்டியது. இல்லை என்றால் கோவப்பட வேண்டியது. இந்த ஆம்பளைங்களுக்கு இதே வேலையாப் போச்சு! எதையுமே யோசிச்சுச் செய்றதிள்ள. எல்லாருக்கும் அவசர புத்தி,” என்று கூறிக்கொண்டு கதிரைப் பார்க்க.

கதிர், அவள் தன்னையும் சேர்த்துதான் பேசுகிறார்கள் என்று புரிந்தவன், “இருடி…. உன்ன நான் அப்புறம் கவனிச்சுக்கிறேன்,” என்று அவளை மிரட்டுவது போலச் சைகை செய்ய, அவனைப் போலவே சைகை செய்து, கதிரைப் பார்த்து, “போடா…..” என்று சொன்னவள்.

விக்கியிடம் திரும்பி, “இப்போ என்ன உங்களுக்கு? நிலானி உங்களை பிளாக் லிஸ்டில் இருந்து எடுக்கணும். அதானே? சரி, அத நான் பாத்துக்கிறேன். இன்னைக்கு ஒரு நாளைக்கு அவளை ஃப்ரீயா விட்டுருங்க. நாம இன்னைக்கு ஊருக்கு போயிடுவோமா? நாளைக்கு நான் காலேஜ் போனதும் முதல் வேலையா அவகிட்டப் பேசி உங்களை அன்பிளாக் பண்ணச் சொல்றேன். சரியா அண்ணா? அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க,” என்றால் கீர்த்திகா.

கீர்த்திகா நிலானியிடம் தன்னை அன்பிளாக் பண்ணச் சொல்லச் சொல்கிறேன் என்று சொன்னதும், அவ்வளவு நேரம் சோகமாக இருந்த விக்கியின் முகம் பிரகாசமானதும், கீர்த்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “கண்டிப்பா சொல்லிருவ தானே கீர்த்துமா?” என்று கேட்க, “கண்டிப்பா நாளைக்கு அவங்க அன்பிளாக் பண்ணிடுவா. சரியா அண்ணா….? இப்ப வருத்தப்படாம இருங்க,” என்றவள். “சரி, நான் போய் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு வரேன். நம்ம கிளம்பலாம். அக்கா ரெடி ஆயிட்டுச் சீக்கிரம் வரச் சொன்னா,” என்று சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல.

“என்னடா மச்சான், ஓகேவா இப்ப? ஹேப்பியா நீ?” என்று கதிர் சொல்ல, “ஹாப்பி தாண்டா! நாளைக்கு என் தேவதை என்ன அன்பிளாக் பண்ற வரைக்கும் கொஞ்சம் சோகமாத்தான் இருக்கும். அதுக்கப்புறம் செம்ம ஹாப்பி நான்,” என்றால் விக்கி. “சரி வா நாம போய்க் கிளம்பலாம்,” என்று விக்கி கதிரைக் கூப்பிட.

“இல்லை டா… நீ முன்னாள் போ…. நான் இப்போ வந்துறேன்,” என்று கதிர் கூற. “நீ ஏன் என்னை முன்னாடி போ சொல்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ கீர்த்திகா மட்டும்தான் ரூம்ல இருக்கா. நானும் போயிட்டேன்னா, நீ போய் அவகிட்ட ரொமான்ஸ் பண்ணலாம்னு பார்க்கிற அப்படித்தானே? அது மட்டும் நடக்காதுடா மவனே. அவள நம்மள நம்பி விட்டுட்டுப் போயிருக்காங்க. நீ பாட்டுக்கும் போய் கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது எசகு பிசகா…. நடந்துச்சுன்னு வச்சுக்கோ. அப்புறம் எல்லாருக்கும் தான் சங்கடமாயிடும். இந்த ரொமான்ஸ் எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டைக் கட்டி வை. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப வா என் கூட முதல்ல,” என்று கதிரின் கையைப் பிடித்து, வரமாட்டேன் என்று நின்றிருந்தவனை வலுக்கட்டாயமாக ரூமுக்கு இழுத்துச் சென்றான்.

4நேத்து நைட் நாம போட்ட பிளானை விட ஒரு நல்ல சந்தர்ப்பம், ஆதியுடன் தனியே இருக்க வாய்ப்பு கிடைச்சுது அப்பா.

அவன்கிட்ட நான் க்ளோஸா இருக்கலாம்னு அவன் பக்கத்துல போய் அவனை கட்டிப்பிடிச்சுக் கிஸ் பண்ணினேன் அப்பா. ஆனா, அவன் என்னைப் பிடிச்சு வேகமாகக் கீழே தள்ளி விட்டுட்டான். அவன் என்னைத் தள்ளி விட்டதில் என் பிளவுஸ் கிழிஞ்சிருச்சு. அதை பார்த்ததும் என்ன நினைச்சானோ தெரியலை, அவனோட கோட்டைக் கழட்டி எனக்குப் போட்டுவிட்டுப் போயிட்டான்.

சரி, அந்தக் கோட்ல அவனோட பர்ஸ் இருந்துச்சு. அவன் பர்ஸைக் கொடுக்கிறதைச் சாக்கா வெச்சு அவன்கிட்ட பேசலாம்னு போனேன். அந்தக் ஆதி, கேவலம் அந்த வேலைக்காரி (துர்கா) முன்னாடி, என்னை அவமானப்படுத்துற மாதிரி ‘இனிமேல் இப்படி எல்லாம் வந்து என் முன்னாடி நிக்காதே’ன்னு சொல்லிட்டு, அந்த துர்காவை கூட்டிட்டு அங்கிருந்து போயிட்டான்ப்பா,” என்று சங்கவி சொன்னாள்.

“என்னை கீழ தள்ளி விட்டதற்காக இப்போ வரை ஒரு ‘சாரி’ கூட சொல்லலைப்பா அவன். நான் அவன்கிட்ட நெருங்கிப் போனாலே என்னை அவமானப்படுத்தி அனுப்பறான் அப்பா, அந்த இடியட் ஆதி. அவனை எப்படி என் வலைக்குள்ள விழவைக்கிறதுன்னு எனக்குத் தெரியவில்லை அப்பா,” என்றாள்.

“இதுக்காக நீ இவ்ளோ கோவமா உட்கார்ந்திருக்க? ஒரு விஷயம் நாம நினைச்சது நமக்கு வேணும்னா, நம்ம கொஞ்சம் பொறுமையா இருந்துதான் ஆகணும்மா. எல்லாமே எடுத்ததும் கிடைக்கணும்னு எப்பவும் நினைக்கக் கூடாது. அது நமக்கு வேற நல்ல விஷயமா இருந்தாலும் சரி, அல்லது அடுத்தவங்களுக்கு நாம செய்ற கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி, உன் முயற்சியை விடாமல் செஞ்சிட்டே இருந்தோம்னா தான், அதுக்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்.

நான் உன்கிட்ட ஏற்கனவே என்ன சொன்னேன்? ஆதிகிட்ட உன்ன மாதிரி ஃப்ரெண்டா இருக்கிற மாதிரி தானே பழகச் சொன்னேன். ஆனா, அதை விட்டுட்டு நீ போய் அவனைக் கட்டிப் பிடிக்கவும் முத்தம் கொடுக்கவும் செஞ்சேன்னா, அவனுக்குக் கண்டிப்பா கோபம் தானே வரும்? இதெல்லாம் யதார்த்தமா நடக்கணுமா.

முதல்ல நீ அந்த ஆதிகிட்ட பழையபடி ஃப்ரெண்டா இருக்க ட்ரை பண்ணு. அவனோட மனசுல உன்னைப் பத்தி நல்ல அபிப்பிராயம் வர மாதிரி நீ முதல்ல நடந்துகோ. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா, உனக்குத் தகுந்த மாதிரி அவனை உன் வழிக்குக் கொண்டு வர வழியைப் பாரு. அதை விட்டுட்டு, ‘இப்பவே எனக்கு அவன் வேணும், இப்பவே என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்’னு சொன்னா அது எப்படிமா நடக்கும்? கொஞ்சமாவது ப்ராக்டிகலா யோசிக்கப் பாருமா. ஏற்கனவே அவன் அத்தனை பேர் முன்னாடி ‘வேண்டாம்’னு சொல்லி உன்னை அவமானப்படுத்தினான். பதிலுக்கு அவனும் உன்னை அவமானப்படுத்தி அனுப்பி வெச்சிருக்கான். அப்போ அவனுக்கு உன் மேல எவ்வளவு கோபம் இருக்கும்?

அதெல்லாம் சரியாகக் கண்டிப்பா கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்கு நீ அவனுக்குக் கொஞ்சம் இடம் கொடுக்கணும். அது எல்லாவற்றையும் விட, அவன் உன்னை முழுசா ‘நீ திருந்திட்டேன்னு’ நம்பணும். அதை அவன் கண்ணு முன்னாடியே நீ நல்லவளா இருக்கிறதைப் பார்த்து உணரனும். அப்போதான் அவனுக்கு உன்மேல கொஞ்சமாவது இரக்கம் வந்து உன்கூட பழையபடி பழக ஆரம்பிப்பான். புரியுதா நான் சொல்றது உனக்கு?” என்றார் வேதாச்சலம்.

புரிதல் வந்தவளாக, எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த சங்கவி, “சரிப்பா, நீங்க சொல்றதெல்லாம் எனக்குப் புரியுது. இனிமேல் பாருங்க, நான் எப்படி நடந்துக்கிறேன்னு! அவன் என் கூட முதல்ல ஃப்ரெண்டா பழக வைக்கிறேன். அதுக்கப்புறம் எனக்கு எப்படித் தெரியும், அப்படி அவனை மாத்திக்கிறேன்… இல்லை… இல்லை… மாற்றுவேன்,” என்றாள் சங்கவி.

“வெரி குட்… தாட்ஸ் மை கேர்ள்… இப்படித்தான் இருக்கணும், சரியா? நம்ம மற்றதெல்லாம் ஊருக்குப் போய் பேசிக்கலாம். இப்ப நீ சீக்கிரம் ரெடி ஆகு, டைம் ஆகுது. நம்ம கிளம்பலாம். உங்க அம்மா இன்னும் அங்க என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியல. அந்த ‘லூசை’ போய் கிளம்பச் சொல்றேன். நீ ரெடி ஆயிட்டு நம்ம ரூமுக்கு வந்துடுடா,” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பினார். “சரிப்பா, சீக்கிரம் நானும் வரேன்,” என்று கூறிவிட்டு அவளும் கிளம்பத் தயாரானாள்.

*****

ஊருக்குச் செல்வதற்காக அனைவரும் கிளம்பி வரலட்சுமி, ஆதி, விக்கி, கீர்த்திகா, கதிர் என அனைவரும் காரில் ஏறிப் புறப்பட்டனர். விக்கி காரை ஓட்ட, கதிர் அவன் அருகில் அமர்ந்திருந்தான். பின் சீட்டில் கதிர் உட்கார்ந்திருந்த நேர் பின்னால் இருந்த சீட்டில், பின்னால் அமர்ந்துகொண்டாள் கீர்த்திகா. அவள் பக்கத்தில் துர்கா, அதற்கடுத்து ஆதியும் அமர்ந்திருந்தனர்.

கார் கிளம்பி ஊருக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்க, துர்காவுக்கு ஆதியின் மிக அருகில் இப்படி உட்கார்ந்திருப்பது ஏனோ போல இருக்க, நெளிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவள் நெளிந்து கொண்டே இருப்பதை கவனித்த கீர்த்திகா, “ஏன் இப்படி நெளிஞ்சிட்டே இருக்க? பேசாம ஒரு இடத்தில் உட்கார மாட்டியா? என்னால இங்க உட்காரவே முடியல. நீ இப்படி நெளிஞ்சிட்டு இருந்தா எனக்குக் கம்பர்டாக இருக்க மாட்டேங்குது. பேசாம உட்காரு,” என்றாள்.

கீர்த்திகா, துர்கா எழுந்து கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துச் சொன்னதும், அதுவரை தன் போனில் ஏதோ முக்கியமான மெயிலை அனுப்பிக்கொண்டிருந்த ஆதி, திரும்பி துர்காவை பார்க்க, துர்கா அவனிடம் நெருக்கத்தில் அமரக் கூச்சப்பட்டுக்கொண்டு நெளிந்து கொண்டிருப்பதைக் கவனித்தான்.

மெதுவாக துர்காவின் காதருகில் குனிந்து, “இப்பவும் என் கூட நெருக்கமா இருக்கிறது உனக்கு உடம்பெல்லாம் எரியற மாதிரி இருக்கு துர்கா? நீயும் அப்படி நினைச்சிட்டு இருக்காத துர்கா. நீ நினைக்கிற ஆதி நான் இல்லை. கண்டிப்பா உன்னை நான் எல்லா விஷயத்தையும் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். முதல்ல சகஜமா இருக்க முயற்சி பண்ணு. அப்போதானே ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்க முடியும்? நல்லா ஃப்ரீயா உட்காரு துர்கா!

இப்ப மட்டும் இந்தக் காருக்குள்ள யாரும் இல்லாம நீயும் நானும் மட்டும் இருந்தோம்னு வெச்சுக்கோ, இப்படி நெளிஞ்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்க உன்னைப் பிடிச்சு இழுத்து என் மடி மேல உட்கார வச்சு, நம்ம ஊருக்குப் போற வரைக்கும் அப்படியே உன்னை…” என்று அழுத்திச் சொன்னவன், ஒரு நிமிடம் அப்படியே பேச்சை நிறுத்த… துர்காவுக்கு அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று பதட்டத்தில் விரல்கள் நடுங்கின. அதைப் பார்த்து ஆதி தன் கைக்குள் துர்காவின் நடுங்கிய விரல்களைக் கோர்த்தவன்,

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கையெல்லாம் நடுங்குது உனக்கு?” அவள் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவன், “நான் என்ன சொல்ல வந்தேன்னா, நம்ம ஊருக்குப் போற வரைக்கும் உன்னை என் மடி மேலே உட்கார வைத்து வந்திருப்பேன் என்று சொல்ல வந்தேன்,” என்றான் ஆதி.

அவன் அப்படி கூறியதும் ஆச்சரியமாக துர்கா அவனைத் திரும்பிப் பார்க்க, “என்ன அப்படி பார்க்கிற? நீ இப்ப கூட ஓகேன்னா சொல்லு. உன்னை என் மடி மேல உட்கார வைத்துக் கூட்டிட்டு வரேன்,” என்று ஆதி கூற, அவனை அடித்து விடுவது போல் பார்த்த துர்கா, திரும்பி வெளியில் வேடிக்கை பார்ப்பது போல அமர்ந்துகொண்டாள்.

ஆனால், உள்ளுக்குள் மிகவும் பதட்டமாகவே இருந்தது. இப்போது வரை துர்காவின் கையைப் பிடித்திருந்தவன், அவள் கையை விளக்க எவ்வளவு முயற்சி செய்தும், அதை விடாமல் இறுக்கமாகப் பிடித்திருந்தான்.

அப்புறம் துர்கா காதருகில் வந்து, “நான் உன்னை காருக்குள்ள வெச்சு எதுவும் பண்ணிட மாட்டேன். அதுவும் இத்தனை பேர் முன்னாடி, சரியா? உன்னை நான் ஒன்னும் செய்ய மாட்டேன். கவலைப்படாம பேசாம வா. உன் கையைப் பிடித்து இருக்கிறதுனால நான் உன்னை எதுவும் செஞ்சிடுவேன் என்று அர்த்தம் இல்லை,” என்று மேலும் துர்காவை பதட்டப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்தவன், சீட்டில் ரிலாக்ஸாக சாய்ந்துகொண்டு, தன் இடது கையால் துர்கா வலது கையைக் கோர்த்து பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் போனை நோண்டிக் கொண்டு வந்தான்.

அவள் கையைப் பிடித்திருந்தவன் இப்போதைக்கு துர்காவின் கையை விடுவதாகத் தெரியவில்லை என்று உணர்ந்த துர்கா, இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று பேசாமல் அமர்ந்திருந்தாள். இருந்தாலும், ஆதியின் இந்தத் திடீர் மாற்றத்தால் துர்கா குழம்பிதான் போனாள்.

இவனுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறான்? என்கிட்ட இப்படி திடீர்னு நெருங்கி வர்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு, என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்ள… அப்போது துர்காவின் கைக்குள் தன் கையை வைத்திருந்த ஆதி, துர்காவின் உள்ளங்கையைக் கிள்ளினான்.

சட்டென்று ஆதியின் இந்தச் செய்கையாலும், அவன் நறுக்கென்று கிள்ளி வைத்ததாலும் துர்கா பதறியவள், “ஷ்… ஆ…” என்று லேசாகக் கத்திவிட…

அவள் அருகில் அமர்ந்திருந்த கீர்த்திகா, துர்காவைப் பார்த்து, “அக்கா, என்ன ஆச்சு? ஏன் இப்போ கத்தின?” என்று கேட்டாள்.

“என்னக்கா, நான் கேட்டுட்டு இருக்கேன். எதுவுமே சொல்லாம நீ அமைதியா இருக்க. ஏன் என்ன ஆச்சு? எதுக்கு இப்போ கத்தின?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“ஒ… ஒன்னும் இல்லை கீர்த்திகா. ஒரு கொசு என்னைக் கடிச்சிருச்சு,” என்றாள் துர்கா. “என்னது அக்கா? இவ்ளோ பெரிய காருக்குள்ள கொசு இருக்கா? என் கண்ணுக்கு ஒண்ணுமே அகப்படவில்லையே,” என்று கீர்த்திகா சொல்ல…

“எனக்கும் தான் தெரியல கீர்த்திகா. அப்படியெல்லாம் கொசு வந்து காருக்குள்ள கடிக்கும்,” என்று சொல்லிட்டு பேசாமல் அமர்ந்திருக்க…

மீண்டும் துர்கா காதருகில் குனிந்தவன், “நான் உனக்கு கொசுவா? இப்படித்தான் சரியா உள்ளங்கையில வந்து கடிக்குமா? அது எங்கெல்லாம் கடிக்கும் தெரியுமா?” என்றவன், சிறிதும் யோசிக்காமல் துர்காவின் இடுப்பைப் பிடித்து கிள்ளி வைக்க, இப்போது துர்கா சத்தமாக “ஆ…” என்று கத்திவிட்டாள்.

துர்கா போட்ட சத்தத்தில், கார் ஓட்டிக்கொண்டிருந்த விக்கி சட்டென்று காரை நிறுத்திவிட, அதில் காரின் பின் சீட்டில் நடுவில் சீட் பெல்ட் போடாமல் அமர்ந்திருந்த துர்கா, கீழே விழப்போக… அவளை இடுப்போடு கை கொடுத்துப் பிடித்து இழுத்து, காரில் முட்டிக் கொள்ளாமல் தன் அருகில் அமர வைத்திருந்தான் ஆதி.

துர்காவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆதி கொடுத்துக் கொண்டே இருக்க, அவன் இப்படி தன் இடுப்பில் கையைப் போட்டு, இத்தனை பேர் முன்னால் இப்படி நெருக்கமாக அமர வைத்திருப்பதில் கூச்சமடைந்த துர்கா, அவன் கையைத் தன் இடுப்பிலிருந்து பிரிக்க முயற்சி செய்ய… அவள் பிரிக்க முயற்சி செய்வதை உணர்ந்தவன், மேலும் அவனது பிடியை இருக்கமாக்கினான்.

காரை சடன் பிரேக் போட்டு நிறுத்திய விக்கி, பின்னால் திரும்பி துர்காவைப் பார்க்க… துர்கா, ஆதியின் கை வளைவுக்குள் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியமான விக்கி, இதைக் கண்டுகொள்ளாதவன் போல, “துர்கா, ஏன் இப்ப கத்தின? என்ன ஆச்சு?” என்று கேட்க… “அது ஒண்ணும் இல்ல அண்ணா. ஒரு பெரிய சைஸ் கொசு என் அக்காவைக் கடிச்சுட்டு இருக்கும் போல இருக்கு. அதனால தான் அவ சத்தம் போட்டிருக்கா காருக்குள்ள,” என்ற கீர்த்திகா, ஓரக்கண்ணால் ஆதியையும், துர்காவையும் பார்த்துக் கொண்டு.

“என்ன கீர்த்துமா சொல்ற? காருக்குள்ள பெரிய சைஸ் கொசு இருக்கா? என் கண்ணுக்கு தெரியலையே,” என்று விக்கி வேண்டுமென்று எதுவும் தெரியாதவன் போலக் கேட்க…

“அண்ணா, அந்தக் கொசு நம்ம யாரையுமே கடிக்காது. துர்காவை மட்டும் தான் கடிக்கும். அதனால அது துர்கா கண்ணுக்கு மட்டும் தான் தெரியும். நமக்கு யாருக்கும் தெரியாது. விடுங்க! இதை நம்ம கண்டுக்கக் கூடாது. நீங்க பேசாம வண்டி எடுங்க. நம்ம சீக்கிரமா ஊருக்குப் போகலாம். இந்தக் கொசுத் தொல்லை ரொம்பத் தாங்கல,” என்றாள் கீர்த்திகா.

உடனே முன்னாள் அமர்ந்திருந்த கதிர், இவர்கள் பேசியதின் அர்த்தமெல்லாம் எதுவும் புரியாமல், “காருக்குள்ள எப்படி கொசு வந்திருக்கும்? நான்தான் காலையில காரை ஃபுல்லா கிளீன் பண்ணச் சொல்லி டிரைவர்கிட்ட சொல்லித்தானே இருந்தேன். எப்படி காருக்குள்ள கொசு வரும்?” என்று கேட்க… உடனே கீர்த்திகா, “நீ முன்னால உட்கார்ந்திருந்த. பின்னாடி இருக்கிறதைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது. நீ கொஞ்சம் பேசாம அமைதியா வா,” என்று சொன்னவள், “அண்ணா, நீங்க காரை எடுங்க. நம்ம போகலாம்,” என்று சொல்ல… விக்கி ஒருமுறை திரும்பி துர்காவைப் பார்க்க… இவர்கள் பேசுவதை எதையுமே கவனிக்காமல் அவள் இப்பவும் தன் ஆதியின் கையை இடுப்பிலிருந்து பிரிப்பதிலேயே குறியாக இருந்தால். ஆனால் ஆதி அவளை இறுக்கமாகப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.

விக்கி இவர்கள் இருவரையும் பார்ப்பதைக் கவனித்த ஆதி, அவனைப் பார்வையாலேயே புருவம் இரண்டையும் தூக்கி, “என்ன?” என்று கேட்க… விக்கி, “ம்ம்ஹும்… ஒன்றும் இல்லை,” என்று தோளைக் குலுக்கயவன் திரும்பி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

“ஏன், இந்தக் காருக்குள்ள இருக்கிறவங்க யாருமே பேசவே மாட்டீங்களா? ரொம்ப அமைதியாவே இருக்கு இல்ல விக்கி அண்ணா? நீங்களும் நானும் தான் பேசிக்கிட்டே இருக்கும். ஆனா இவங்க யாருமே பேச மாட்டேங்கிறாங்க. பேசாம ஏதாவது பாட்டு போடுங்க. அட்லீஸ்ட் நம்ம பாட்டைக் கேட்டுவிட்டு வருவோம்,” என்று கூறினாள் கீர்த்திகா.

“ஆமா தங்கச்சிமா. இந்தக் காருக்குள்ளேயே வெச்சு நீயும் நானும் தான் கலகலன்னு இருக்கோம். பாரு இந்த மூணுங்களும் எப்ப பார்த்தாலும் மூஞ்சை ‘உர்’ என்று வெச்சுட்டே வர்றதை. இவங்க கூட எல்லாம் எப்படித்தான் நம்ம காலம் தள்ளுவதோ தெரியல,” என்றான் விக்கி.

“ஆமா அண்ணா, நீங்க சொல்றதும் சரிதான். என்ன பண்றது? நம்மளுக்கு இதுதான் விதி என்று இதை சகிச்சுட்டுப் போய் தானே ஆகணும்,” என்றால் கதிரை நினைத்து. இது கதிர்க்கும் புரியத்தான் செய்தது.

“இப்ப நீங்க ரெண்டு பேரும் பேசாம வந்தாதான் பாட்டு போட முடியும். இல்ல, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க. நான் பாட்டு போடல,” என்றான் கதிர்.

“சரி, சரி, கதிர் மாமா…” என்று அழுத்தம் கூட்டிக் சொன்னவள், “நான் எதுவும் பேசல. நீங்க பாட்டு மட்டும் போடுங்க,” என்றாள். அடியே, யாரும் இல்லாதப்ப என்ன ‘மாமா’ன்னு கூப்பிட சொன்னா கூப்பிட மாட்டேன்னு, எப்ப பாரு யாராவது இருக்கும்போதே என்ன ‘மாமா மாமா’ன்னு கூப்பிட்டு என்ன வெறுப்பேத்துறியா? இருடி, நீ தனியா என்கிட்ட மாட்டாமலா போயிடுவே… அப்ப வெச்சுக்கிறேன் உன்னை, என்று நினைத்தவன் பாட்டை ஆன் செய்தான்.

பாடல் ஒலிக்கத் தொடங்கியது:

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,

வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,

ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,

ரகசியமா ரூட்டப் போட்டு..

கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!

… (பாடல் வரிகள் தொடர்ந்தன)

பாட்டு ஓடிக்கொண்டிருக்க, அந்தப் பாட்டை ரசித்தவாறே கீர்த்திகா ஜன்னல் வழியாக வெளியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வந்தாள்.

ஆனால், இங்கு துர்காவின் நிலைதான் மிகவும் மோசமாகிவிட்டது. இறுக்கமாய் அவளை மிக அருகில் இழுத்து அமர வைத்திருக்க, நெளிந்துகொண்டே அமர்ந்திருந்த துர்காவின் காதருகில் குனிந்த ஆதி,

“இந்தப் பாட்டுல வர்ற லைன் எல்லாம், நான் உன்னைப் பார்த்து சொல்ற மாதிரியே இல்லையா துர்கா?” என்று கேட்டான் ஆதி.

துர்கா புரியாமல் ஆதியைப் பார்க்க, ஆதி அந்தப் பாட்டில் வரும் வரிகளை அவள் காதில்…

ராசாத்திய ராத்திரி பாத்தேன்,

ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,

ரகசியமா ரூட்டப் போட்டு..

கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!

இந்த நாலு வரிகளை அவள் காதில் சொல்லியவன், “இதுல வர்ற மாதிரி உன்னைக் கடத்திட்டு போகணும்னு எனக்கு அவசியம் இல்லை துர்கா. ஆனா என்னவோ, எனக்கு உன்னைப் பார்த்ததும் ஒரே ரொமான்டிக் மூடா இருக்கு…” என்றான் ஆதி. மேலும் இவன் அருகில் அமர முடியாத துர்கா, அவன் கையை நறுக்கென்று கிள்ளிவிட்டு, அவன் கையைப் பிடித்தவள் அவனிடமிருந்து தள்ளி அமர… அவள் கிள்ளியதில் ஆதி இப்போது “ஆ” என்று சத்தமிட…

காரை ஓட்டிக்கொண்டிருந்த விக்கி, “என்னடா, உன்னையும் கொசு கடிச்சிடுச்சா?” என்று கேட்டான். காரின் முன் சீட்டில் இருந்த கண்ணாடி வழியாக ஆதியைப் பார்க்க, ஆதி அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

என்னதான் மாஸ்க் போட்டு இருந்தாலும் முறைக்கிறது மட்டும் நிறுத்த மாட்டேங்கிறானே. வெறும் கண்ண வெச்சு எல்லாத்தையும் பயமுறுத்திட்டு இருக்கான், என்று முணுமுணுத்த விக்கி, “நான் எதுவும் சொல்லலப்பா. நீங்க கண்டினியூ பண்ணுங்க. நான் காரை மட்டும் ஓட்டிட்டு வரேன்,” என்றான் விக்கி.

வெட்கத்தில் தன்னை விட்டுத் தள்ளி அமர்ந்திருக்கும் துர்காவைப் பார்த்தவன், இதற்கு மேலும் அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அமைதியாகிவிட்டான் ஆதி.

காரில் பாடல் ஒலித்துக்கொண்டே வர, துர்கா அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே சீட்டில் சோர்வாகச் சாய்ந்து அமர்ந்தவள், தன்னை மறந்து அப்படியே தூங்கிப் போனாள்.

நன்றாகத் தூங்கிய துர்கா, அப்படியே ஆதியின் தோளில் சாய… துர்கா தன் தோள் மீது சாய்ந்ததும் அவளைத் திரும்பிப் பார்த்த ஆதி, அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், அதுவரை நோண்டிக் கொண்டிருந்த தன் போனை கீழே வைத்தவன், தன் கையை எடுத்து அவள் தோள் மீது போட்டு, தன் கை வளைவுக்குள் துர்காவைக் கொண்டு வந்து, தன் மார்பின் மீது அவளைச் சாய்த்துக் கொண்டு வந்தான்.

இதையெல்லாம் காரை ஓட்டிக்கொண்டே முன்னால் இருந்த கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி, மனதிற்குள், எப்படியோ, ஆதி கொஞ்சம் கொஞ்சமா துர்கா பக்கம் சாய்ந்துட்டு வர்றது நல்லாவே தெரியுது. இப்படியே அவன் முழுசா துர்காவைப் புரிஞ்சுகிட்டு, அவள் காதலைப் புரிஞ்சுகிட்டு அவ கூட சந்தோஷமா வாழ்ந்தால், என்ன விட சந்தோஷப்படுவேன் வேறு யாருமே இருக்க மாட்டேன், என்று மனதில் நினைத்தவன்.

ம்ஹும்… இங்க அவன் ஆள்கூட ஜாலியா இருக்கானுங்க. ஆனா என் ஆளு என்னடான்னா, என் கூட பேச மாட்டேன்னு என்ன ப்ளாக் பண்ணி வெச்சிருக்கா. கடவுளே! கூடிய சீக்கிரம் என் ஆளுக்கு என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு, அவ என் கூட நல்லா பேசணும். அதுக்கு நீ தான் துணையா இருக்கணும், என்று வேண்டிக்கொண்டான் விக்கி.

EPISODE 42

அனைவரும் இரவுபோல வீட்டிற்கு வர, துர்காவையும், ஆதியையும் இறக்கிவிட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பப் போனார்கள்.

“துர்கா… இவ்ளோ தூரம் வந்துட்டு இப்பவே எல்லாரும் கிளம்பணுமா என்ன? யாரும் போக வேணாம். நைட் இங்கேயே தங்கிட்டு நாளைக்குப் போகலாம்,” என்று கட்டளையாகச் சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் அனைவரும் அங்கேயே தங்கிவிட்டனர்.

விக்கியும் கதிரும் அறைக்குச் சென்று ஃப்ரெஷ் ஆகி வரச் சென்றுவிட, கீர்த்திகாவை அங்கே இருந்த கெஸ்ட் ரூமில் ஃப்ரெஷ் ஆகச் சொல்லிவிட்டு வந்த துர்கா, அனைவர்க்கும் முத்து தாத்தாவிடம் சொல்லி இரவு உணவு தயார் செய்யச் சொல்லிவிட்டு, அவருடன் சேர்ந்து சமையல் செய்துகொண்டிருந்தாள்.

மேலே தன் அறைக்குச் சென்ற ஆதி, துர்கா தன் அறைக்கு வருவாள் என்று நினைத்தவன் அவளுக்காகக் காத்திருக்க, வெகு நேரமாகியும் துர்கா வராததால், தன் அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தான். அவள் சமையல் கட்டில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தாள்.

ச்சே… இந்தக் துர்காவை யாரு இப்போ சமையல் செய்யச் சொன்னது? அதுக்குத்தான் ஆட்கள் இருக்காங்களே. இவளேதான் போய்ச் சமையல் செய்யணுமா என்ன?

இங்கே ஒருத்தன் அவளுக்காகக் காத்துட்டு இருக்கானே அப்டிங்குற நினைப்பு இவளுக்கு கொஞ்சமாவது இருக்கா பாரு! என்று நினைத்தவன், துர்காவை நினைத்துக்கொண்டே குளிக்கச் சென்றான்.

குளித்துவிட்டு வெளியே வந்த ஆதி, இடுப்பில் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு, மற்றொரு டவலால் தன் தலையைத் துவட்டியவாறே வெளியே வர… அங்கே துர்கா துணி இருக்கும் அலமாரியின் முன் நின்றுகொண்டு ஏதோ எடுத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் ஆதிக்குச் சந்தோஷமாகிவிட, கையில் இருந்த டவலைக் கட்டிலில் போட்டுவிட்டு, மெதுவாக அவள் அருகில் சென்றவன், துர்காவின் பின்னால் சத்தமின்றி வந்து நின்றான். எதுவும் பேசாமல் அவள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தான்.

“இந்த ஆதிக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை. எப்போ பாரு டிரஸ்ஸையெல்லாம் கலைச்சு வைப்பதையே வேலையா வெச்சிருக்கான். எல்லாம் இந்த அத்தையைச் சொல்லணும். கொஞ்சமாவது பொறுப்பா வளர்த்திருக்காங்களா அவனை? ஆபீஸில் மட்டும் ‘அது சரியா இருக்கணும், இது சரியா இருக்கணும்’னு கொஞ்சம் டேபிளில் ஃபைல்ஸ் எல்லாம் கலைஞ்சிருந்தா என்னைக் எவ்வளவு திட்டு திட்டுவான், ‘இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பியா?’ என்று. ஆனால், இங்க வீட்ல பாரு எப்படி வெச்சிருக்கான்னு. நின்ன இடத்தில் டிரஸ்ஸைக் கழட்டிப் போட வேண்டியது. குளிச்சுட்டு வந்தா டவலை ஈரத்தோட கொண்டு வந்து பெட்டில் போட வேண்டியது. டிரஸ்ஸை களையாமல் எடுக்கத் தெரியுறதில்லை. இவனை என்ன செய்வது?” என்று புலம்பிக்கொண்டே, தனக்கு மாற்றிக்கொள்ள உடைகளை எடுத்துக்கொண்டு திரும்ப… இவ்வளவு நேரம் துர்கா தன்னைத் திட்டியதை எல்லாம் கேட்டுக்கொண்டு அவள் அருகில் கை கட்டி நின்றிருந்த ஆதி மீது மோதி, அவனை இடித்த வேகத்தில் பின்னால் சென்று அலமாரியில் முட்டி நின்றாள் துர்கா.

அவனிடமிருந்து பின்னால் நகர்ந்து நின்றவள், அப்போதுதான் அவனை முழுதாகப் பார்க்க… ஆதியின் உடலில் ஈரத்துடன் தலையில் நீர் சொட்டிக்கொண்டு இருக்க, இடுப்பில் ஒற்றைத் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அவள் முன்னாள் நின்று இருந்தவனை, கீழிருந்து மேலாகப் பார்த்தாள். அவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டைத் தாண்டி அவள் பார்வை மேலே வர… என்னதான் உடல் முழுக்க கொப்புளங்களும் தழும்புகளும் இருந்தாலும், அதையும் தாண்டி அவன் சிக்ஸ் பேக் உடம்பு அவளைச் சுண்டி இழுக்க, அதைத் தொட்டுப் பார்க்கும் ஆவலைக் கஷ்டப்பட்டுத் தடுத்தாள். மேலே நிமிர, அவள் தன்னை ரசிப்பதைக் கவனித்தான் ஆதி.

துர்காவை மேலிருந்து கீழாகப் பார்த்தவன்… அவள் சேலையை மிக நேர்த்தியாகக் கட்டி இருக்க, அவள் உடல் வளைவுக்கு ஏற்றதுபோல அவள் உடம்பில் கச்சிதமாகப் பொருந்தி இருந்த சேலையும், அவள் இடுப்பில் சொருகி இருந்த சேலைத் தலைப்பும் அவள் வெற்று இடையை அப்பட்டமாகக் காட்ட… அவள் இடையைப் பார்த்ததும் தானாகத் தொடச் சென்ற தன் கையை கஷ்டப்பட்டு அடக்கியவன், தன் கண்களை அப்படியே லேசாக மேலே உயர்த்த… ஆதி இவ்வளவு அருகில் நின்றிருப்பதால் துர்காவுக்குப் பதட்டம் தொற்றிக்கொள்ள, அவள் பெரிய மூச்சுகளாக எடுத்துக்கொண்டு நின்றிருந்தாள். அவள் செய்த செய்கையால் அவள் நெஞ்சுப் பகுதி மேலும் கீழும் ஏறி இறங்க, ஒரு பெருமூச்சுடன் அதைப் பார்த்துவிட்டு துர்காவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். துர்காவும் ஆதியைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கடவுளே!! நான் இவ்வளவு நேரம் ஆதியைத் திட்டியதை எல்லாம் அவன் கேட்டுக்கொண்டுதான் நின்றிருந்தானா? இப்போது ஏதாவது கேட்டால் நான் என்ன செய்வேன்? மணி வேற இவனை ரொம்பத் திட்டிவிட்டேனே. கடவுளே! இவனிடம் இருந்து என்னைக் காப்பாற்று! என்று துர்கா மனதிற்குள் கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருக்க… அவள் முகத்தில் ஒரு நிமிடத்தில் எழும் முக பாவனையைப் பார்த்தவன்,

“என்ன துர்கா… கடவுள் கிட்டே பலமான வேண்டுதல் போல…” என்றான். அவன் எப்படித் தன் மனதில் கடவுளிடம் வேண்டியதை அப்படியே சொல்லிவிட்டானே என்று ஆச்சர்யமாக அவனைப் பார்க்க…

அவள் கண்களை அகல விரித்து, கருவிழிகளை உருட்டி ஆதியைப் பார்க்க… “என்னடா மனசில் நினைச்சதை அப்படியே சொல்லிவிட்டானே என்று யோசிக்கிறியா?” என்று ஆதி கேட்க,

“இ… இல்லை… ஆதி,” என்று அவள் தலையை இட வலமாக ஆட்ட… அவள் கன்னத்தை ஒரு கையால் பிடித்தவன், “இப்படி கண்ணை உருட்டி என்னைப் பார்க்காத துர்கா…” என்றான்.

“ஏ… ஏன்… ஆதி?” என்று துர்கா புரியாமல் கேட்க, “உனக்கு அதையெல்லாம் சொன்னால் புரியாது,” என்றவன், அவள் முகத்தருகில் தன் முகத்தைக் கொண்டு வர… “ஆ… ஆதி… என்ன பண்ற?” என்று திக்கித் திணறி கேட்க… “ஷ்…” என்று அவள் உதட்டில் தன் ஒரு விரலைக் கொண்டு அவளைப் பேசாதே என்று தடுத்தவன்…

தன் மற்றொரு கையால் அவள் முகத்தில் இருந்து கையை கீழே இறக்க… துர்காவின் இதயம் அவன் செயலால் வேகமாகத் துடிக்க… இப்போது என்ன செய்வது என்று யோசித்தவள், ஒரு வழியாக “ஆதி என்… என்ன பண்ற?” என்று கேட்டே விட்டாள்.

“நான் என்ன பண்ணப் போறேன்னு நீ நினைக்கிறே?” என்று அவளிடமே திருப்பிக் கேட்டான். அவள் எதுவும் சொல்ல முடியாமல் விழிக்க, “இப்போதானே சொன்னேன், இந்தக் கண்ணை வெச்சுட்டு இப்படி உருட்டாதே,” என்று சொன்னவன், அவன் கைகளை துர்காவின் மார்பைத் தாண்டி கீழே கொண்டு வந்தவன், அவள் இடுப்பில் சொருகி இருந்த சேலைத் தலைப்பை வெடுக்கென்று இழுத்தான்.

ஆதி தன் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுக்கவும், என்ன செய்வது என்று தெரியாமல் அவனையே பார்க்க… “என்ன துர்கா… என்னைப் அப்படிப் பார்க்கிறே? நான் உன்னை எதுவும் செய்துவிடுவேன் என்று பயமா இருக்கா?” என்று கேட்டான்.

அதற்கு துர்கா “ஆமாம்” என்று மேலும் கீழும் தலையை மெல்ல ஆட்டியவள், பிறகு வேகமாகத் தலையை இட வலமாக ஆட்டி “இல்லை” என்று சொன்னாள்.

அவள் செய்ததைப் பார்த்துச் சிரித்தவன், “ஒன்னு ஆமான்னு சொல்லு, இல்ல இல்லைன்னு சொல்லு. அது என்ன எதுக்குமே சம்பந்தம் இல்லாம தலையை எல்லாப் பக்கமும் ஆட்டுற? வாயைத் திறந்து பேச மாட்டியா? இந்த வாய்க்குள்ள அப்படி என்ன வெச்சிருக்க? எங்கே ஆ… காட்டு,” என்றவன், அவள் முகத்தைப் பிடித்திருந்த தன் கையை கொஞ்சம் உயர்த்தி, அவள் கன்னங்களைத் தன் விரல்களால் பிடித்து அழுத்த… மூடியிருந்த அவள் உதடுகள் பிரிந்து மீன் போல துர்காவின் உதடுகள் குவிந்திருக்க… அதைத் தன் ஒற்றை விரலால் வருடியவன், நேற்று அவளுக்கு முத்தம் கொடுத்தது ஞாபகம் வர ஒரு பெரு மூச்சு விட்டான்.

துர்கா அவன் செய்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவனையே பார்க்க, “உன் வாய்க்குள்ள தான் எதுவுமில்லையே. இப்போ சொல்லு, நான் கேட்ட கேள்விக்குப் பதில்,” என்றான்.

“ஆதி… நீ எதுக்கு என் சேலையை…” என்று பாதியிலேயே கேள்வியைக் கேட்டு அவனைப் பார்க்க… “உன் சேலையை இடுப்பில் இருந்து எதற்கு எடுத்தேன் என்று நீ நினைக்கிறே?” என்று மறுபடியும் அவளிடமே கேட்க… “அ… அது… வந்து…” என்று சொல்லும்போதே சேலையை அவள் முகத்திற்கு நேராக உயர்த்தியவன், துர்காவின் முகத்தில் இருந்த வியர்வைத் துளிகளை அவள் சேலைத் தலைப்பைக் கொண்டு ஒற்றி எடுக்க, துர்காவுக்கு “அப்பாடா…” என்று இருந்தது.

அவள் முகத்தைத் துடைத்து விட்டவன், “அவளை விடு! இதற்குத்தான் என் சேலையை எடுத்தியா ஆதி? என்கிட்டவே சொல்லி இருக்கலாமே. நானே துடைச்சிருப்பேனே,” என்று கூற…

“ஆமா, உன் வியர்வையைத் துடைக்கத்தான் நான் உன் இடுப்பில் இருந்த சேலையை எடுத்தேன். நான் எதற்கு உன் சேலையை உன் இடுப்பில் இருந்து எடுத்தேன் என்று நீ என்னவென்று நினைச்சே? உன்னை நான் என்ன செய்வேன்னு நீ நினைச்சே?” என்று ஆதி கேட்க…

ஐயோ… கடவுளே! இவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? என்கிட்ட இவ்ளோ நெருக்கமா வந்து பேசுறான். என்னென்னவோ செய்றான். கேட்டா, ‘நான் என்ன நினைச்சேன்னு’ என்கிட்டயே திருப்பிக் கேட்கிறானே! என்று மனதிற்குள் நினைத்தவள், “நான்… நான்… ஒன்னும் நினைக்கலையே,” என்றவள், “ஆதி! கொஞ்சம் வழியை விடு. நான் போய்க் குளிக்கணும்,” என்றாள்.

“இவ்ளோ இடம் இருக்கு! இதற்கு மேலும் நான் வழி விடணுமா உனக்கு இங்க இருந்து போறதுக்கு?” என்று கேட்க… அவன் சொன்னதும் தங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைப் பார்த்தவள், ஒரு புக்கை இருவருக்கும் இடையில் வைத்தால் இருக்கும் இடத்தை விட மிகச் சிறியதாகத்தான் இடைவெளி இருந்தது.

இவனிடம் இதைச் சொன்னால், அதற்கும் என்னிடமே ஏதாவது கேள்வி திரும்பக் கேட்பான் என்று நினைத்தவள், தன் மூச்சை லேசாக மேலே இழுத்து, அவன் மேல் மோதிவிடாமல் மெல்ல மெல்ல அவனை விட்டு நகர்ந்து, அவனிடம் இருந்து வேகமாக பாத்ரூம் நோக்கி ஓடிவிட்டாள்.

ஓஹோ… மேடம் என் மேல மோதிடாம போறீங்களா? எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்கேன்னு நானும் பார்க்கிறேன், என்று நினைத்தவன், எப்படியும் நைட் நீ ரூமிற்கு வந்துதானே ஆகணும்? அப்போ இருக்கு உனக்கு, என்று நினைத்தவன், உடை மாற்ற ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றான்.

EPISODE 43

அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, கீர்த்திகாவும் கதிரும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். விக்கி அவன் அருகில் அமர்ந்துகொண்டு, சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தன் போனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு, துர்கா அவர்களுடன் சாப்பிட உட்கார்ந்தாள். அவள் கீர்த்திகாவின் அருகில் அமர… அதுவரை துர்கா தன்னிடம் வந்து அமர்வாள் என்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

துர்கா அனைவருடனும் பேசிக்கொண்டு சாப்பிட, ஆதி அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு சாப்பிட்டான். இதைக் கவனித்த விக்கி, “ம்ஹுக்கும்….” என்று தன் தொண்டையைக் கணைக்க… அவன் சத்தம் கேட்டு, “என்னடா?” என்பது போல அவனை முறைத்தான் ஆதி.

“ஏய் அப்பா… நான் ஒண்ணும் சொல்லலைடா… நீ உன் வேலையை கண்டினியூ பண்ணுடா,” என்று சைகையில் ஆதியிடம் சொன்னவன், “கலி முத்திடுத்து… பகவானே… கலி முத்திடுத்து…” என்று ஆதி பாஷையில் பேசியவன், ஆதியைப் பார்த்துப் பெருமூச்சொன்றை விட்டு, “பொண்ணுங்கன்னா என்னனு தெரியாதவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு. அதுகூட பரவாயில்லை, அவன் எல்லாம் இன்னைக்கு ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்,” என்று கூறிக்கொண்டே தன் பக்கத்தில் இருக்கும் கதிரைப் பார்க்க… அவன் தீவிரமாக எங்கேயோ பார்த்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

கதிர் எங்கே பார்க்கிறான் என்று விக்கி அவன் பார்த்துக்கொண்டிருந்த திசையைப் பார்க்க… அங்கே கீர்த்திகா அமர்ந்திருந்தாள். சுத்தம்… அண்ணனாவது கல்யாணம் பண்ணிட்டு, உரிமையா இத்தனை பேர் முன்னாடி அவன் பொண்டாட்டியை சைட் அடிச்சுட்டு இருக்கான். ஆனா இவன் என்னடான்னா, அவனோட அண்ணன் முன்னாடியே அவன் மச்சினியை சைட் அடிக்கிறான். ஆளாளுக்கு ஆள் வெச்சுட்டு என்னைப் வெறுப்பேத்துறானுங்களே! விநாயகா… இது எல்லாம் உனக்கே நியாயமாகுமா? என்னைவிட சின்னப் பையனுக்கு எல்லாம் லவ் செட் ஆகிருச்சு. ஆனா, நான் பேச ஆள் கிடைச்சும் எனக்கு அதுவும் செட் ஆகாம போயிடும் போலவே…

“விநாயகா… தயவு செஞ்சு என்னை என் ஆள கூட சேர்த்து வெச்சிருங்கப்பா… எப்படியாச்சும் நான் என் ஆள கூடப் பேச எனக்கு ஒரு வழி சொல்லுங்கப்பா…” என்று கெஞ்ச…

“ஏன்டா… டேய்… விக்கி…” என்று ஒரு குரல் கேட்டது. தன்னை யார் இவ்வளவு உரிமையாய் பெயர் சொல்லி அழைப்பது என்று நிமிர்ந்து, தனக்கு எதிராக இருந்த ஆதியையும், பக்கத்தில் இருந்த கதிரையும் பார்க்க… அவர்கள் இருவரும் காரியமே கண் என தங்கள் வேலையை மிகச் சிரத்தையாகச் செய்துகொண்டிருந்தார்கள். வேற என்னங்க, அவங்க அவங்க ஆளை சைட் அடிச்சுட்டே சாப்பிட்டு இருக்காங்க.

இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா நான் ஒருத்தன் இங்க இருக்குறதே இவனுங்களுக்கு தெரியாது போலவே, என்று நினைத்தவன், இவங்க இங்க பிஸியா இருக்க… அப்போ என்னை வேற யாரு கூப்பிட்டிருப்பா? அதுவும் மரியாதை இல்லாம? என்று நினைத்தவன், தன்னைச் சுற்றிலும் சுற்றும் முற்றும் பார்க்க…

மறுபடியும், “டேய் விக்கி…” என்று அவன் மிக அருகில் சத்தம் கேட்க… திடுக்கிட்டவன், தன் இடது புறம் சத்தம் வரவும் திரும்பி அவன் இடது புறம் பார்க்க… அவன் அருகில், நல்ல சாம்பல் நிறத்தில் சற்றுச் சிறியதாக, வயிறு பெருத்து, யானை முகத்தோடு, சாட்சாத் மிஸ்டர். விநாயகர் தான் அமர்ந்திருந்தார்.

(என்ன ஃபிரெண்ட்ஸ், புதுசா ஒரு கேரக்டர் இன்ட்ரோடுயூஸ் பண்ணி இருக்கேன்னு பார்த்தீங்களா? யாருனு பாக்குறீங்களா? அதாங்க நம்ம விக்கி கூட கொஞ்ச நேரம் முன்ன விநாயகா… என்று தீவிரமாக எதையோ சொல்லி அவரிடம் கேட்டுக்கிட்டு இருந்தானே… அவன் வேண்டுதலைக் கேட்டுட்டு அந்த விநாயகரே அவனைப் பார்க்க நேர்ல வந்துட்டாரு பாத்தீங்களா… இந்தக் கதையில் அப்போ அப்போ நம்ம மிஸ்டர். விநாயகர் வரப்போறாருங்க. சோ… எல்லா கேரக்டரையும் போல இவரையும் வெல்கம் பண்ணி நம்ம விநாயகருக்கு சப்போர்ட் பண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் )

(இது கற்பனைக் கதை. அதனால யாரு வேண்டுமானாலும் என் கதையில் வரலாம். ஏன் என் கதையைப் படிச்சுட்டு கமெண்ட் பண்ற தோழிகள் கூட இந்தக் கதையில் இடம்பெறலாம், . உடனே நீங்க எப்படி இப்படி எல்லாம் கேரக்டரைக் கொண்டு வரலாம் என்று எல்லாம் சொல்லக் கூடாது, ஓகேவா ஃபிரெண்ட்ஸ் . உங்க சப்போர்ட் இருந்தால் தான் நான் என் கதையைச் சரியா, அழகா கொண்டு போக முடியும். அதனால என்னோட ஃபிரெண்ட்ஸ் சப்போர்ட் பண்ணுங்க என்னோட கதைக்கு, ஓகேவா 🌹

விக்கி தன் அருகில், தொந்தியும் தொப்பையுமாக, யானை முகத்துடன், அழகாக வெள்ளை நிற டீ-ஷர்ட் மற்றும் குட்டியாக முட்டிவரை வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்து அமர்ந்திருந்த பிள்ளையாரைப் பார்த்ததும் அதிர்ச்சியானவன், “நீ… நீ… நீங்க…” என்று இழுக்க…

“என்ன… நீ… நீ… நீங்க… ஆமாண்டா… நான்… நான்… நான்தான்! நீ இப்போ கொஞ்ச நேரம் முன்ன நல்லா சாப்பிட்டுத் தூங்கிட்டு இருந்த என்னைக் கூப்பிட்டு ஏதோ புலம்பிட்டு இருந்தியே. அதான் என்னனு கேட்டுட்டுப் போலாம்னு நேர்லயே வந்துட்டேன்,” என்றார் நம் விநாயகர்!

“என்னது, நான் கூப்பிட்டேன்னு நேர்ல வந்தீங்களா?” என்று விக்கி வாயைப் பிளக்க… “ஆமாண்டா… நான் நேர்ல வரலைன்னு வை, நீ என் பேரைச் சொல்லி ஏதாவது புலம்பிட்டே இருப்ப. அப்பறம் எனக்குத்தான் டிஸ்டர்பா இருக்கும். அதான் உன்னை நேர்ல பார்த்து என்னனு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்,” என்றார்.

“என்னது, நான் கூப்பிட்டேன் என்பதற்காக எனக்கு நேர்லயே காட்சி தர வந்துட்டீங்களா விநாயகா?” என்று ஆச்சர்யமாகக் கேட்க… “ஆமாண்டா… இல்லைன்னா உன்னோட புலம்பலை யாரு கேட்டுட்டே இருக்குறது? அப்பறம் நான் எப்போ தூங்குறது? அதான் நேர்ல வந்து உன் புலம்பல் என்னனு கேட்டுட்டு, அதைச் செஞ்சுட்டுப் போயிட்டா நான் போய் நிம்மதியா தூங்கலாமே. காலையில வேற எனக்கு ஏர்லி மார்னிங் அரச மரத்தடியில் டியூட்டி இருக்கு. எல்லாரும் என்னைப் பார்க்க நேரமே வந்திருவாங்க. நான் சீக்கிரம் போய்த் தூங்கினா தான் சீக்கிரம் எழுந்திருக்க முடியும். உன்னை மாதிரி என்னைக் ‘வெட்டிப் பையன்’னு நினைச்சுட்டு இருக்கியா? ஐ அம் ட்வென்டி ஃபோர் இன்டு செவன்… த்ரீ சிக்ஸ்டி ஃபைவ் டேஸ் பிஸிடா…” என்று கெத்தாகத் தன் டீ-ஷர்ட் காலரை உயர்த்தியவர் அவன் பார்க்க…

“யோவ் பிள்ளையாரே…. இது நிஜமா நீதானா? இல்லை நான் எதுவும் தூங்கிட்டு இருக்கேனு என் கனவில் வந்திருக்கியா?” என்று விக்கி கேட்க…

“டேய்…. என்னடா… மரியாதை தேயுது? போன போகட்டுமே. ரெண்டு மூனு நாளா பார்க்க பாவமா, டல்லா இருக்கியேன்னு பாவப்பட்டு ஹெல்ப் பண்ண வந்தா, என்னையே சந்தேகப்படுறியா? போடா…. உனக்கு ஹெல்ப் பண்ண வந்ததுக்கு, அங்க பக்கத்துத் தெருவுல நடு ரோட்ல ஒருத்தன் நின்னு ‘போர் அடிக்குது, கம்பெனி கொடுக்க வா’ன்னு என்ன ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கான். அவனைப் பார்க்கப் போயிருக்கலாம்,” என்றவர், “சரி, நீ என்னை நம்பலை. உன்கிட்ட இனி எனக்கு என்ன பேச்சு? நான் பக்கத்தில் இருக்குற தெருவுக்குப் போய்ட்டு வரேன். நீ… இப்படியே இவனுங்க ரெண்டு பேரும் அவங்க ஜோடி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குறதைப் பார்த்துட்டுப் புலம்பிகிட்டு இரு… நான் கிளம்பறேன். பை…” என்று சொல்லிவிட்டு, அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்திருந்தவர் எழுந்திருக்கப் போக…

“ஐயோ பிள்ளையாரப்பா…. விநாயகா… எங்க அப்பனே…. போயிராத! போயிராத! எனக்கு ஹெல்ப் பண்ண பெரிய மனசு பண்ணி இவ்வளவு தூரம் வந்துருக்க… ப்ளீஸ் போகாத பிள்ளையாரப்பா…” என்று விக்கி அவர் கையைப் பிடித்துக் கெஞ்ச…

அவனை ஏற இறங்கத் தன் அழகான குட்டி யானை முகத்தை மேலும் கீழும் ஆட்டி, கண்கள் மின்னப் பார்த்த விநாயகர், “அப்படி வா… வழிக்கு… சொல்லு, எதுக்கு என்னைக் கூப்பிட்ட?” என்று கேட்டார்.

“அது ஒண்ணும் இல்லை பிள்ளையாரே…” என்று இழுக்க… “என்னது ஒண்ணுமில்லையா? அப்பறம் எதுக்குடா தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பிவிட்ட? சரி அப்போ நான் கிளம்பறேன். யூ கண்டினியூ…” என்று சொல்லிவிட்டு, சேரில் இருந்து வேகமாக விநாயகர் எழ… “ஐயோ நோ…. பிள்ளையாரே,” என்று எங்கே அவர் கிளம்பிவிடுவாரோ என்று பதட்டப்பட்ட விக்கி, சத்தமாக “போகாதே….” என்று கத்த…

அவன் சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த எல்லோரும் விக்கியைப் பார்க்க… விக்கி எங்கோ பதட்டமாகப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஆதி, “டேய் விக்கி, என்னடா பண்ணிட்டு இருக்க? அங்க என்ன பார்த்துட்டு நிக்குற? யாரைப் பார்த்து ‘போகாதே’ன்னு சொல்லிட்டு இருக்க?” என்று விக்கி பார்த்த திசையைப் பார்த்துக் ஆதி கேட்க…

என்ன ஆதி? என் எதிர்ல நிக்குற விநாயகரைப் பார்த்து ‘யாரு நிக்குறாங்கன்னு’ கேட்குறானே. அவனுக்கு ஒரு வேலை இவரைத் தெரியலையோ…” என்று விழித்தவன், அவன் எதிரே பார்க்க… அவன் எதிரே விநாயகர், “என்னடா பார்க்கிற? நான் உனக்கு மட்டும் தான் தெரிவேன். அவங்களுக்கு எல்லாம் தெரிய மாட்டேன்,” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட, “என்னடா முழிக்கிற? அதான் கேட்குறான்ல உங்கிட்ட. அவன்கிட்ட எதையாவது சொல்லிச் சமாளிச்சுட்டு, உன்னோட ரூமுக்கு வா. நான் அங்க வெயிட் பண்றேன். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. காலையில இருந்து சரியான வேலை எனக்கு,” என்றவர், “நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். சீக்கிரம் வா,” என்றுவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்.

அவர் மறைந்ததும் சற்று நிதானித்த விக்கி, ஆதியைப் பார்க்க… அவனை அனைவரும் கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்க… ஆதி மறுபடியும், “யாரைடா… பார்த்துட்டு இருக்க? யாரைப் ‘போகாதே’ன்னு சொல்லிட்டு இருக்க?” என்று கேட்க…

“அது… அது…” என்று யோசித்தவன், சட்டென்று தன் கையில் இருந்த போனை எடுத்து காதில் வைத்தவன், “என் ஃபிரெண்ட் தான்டா… அவன் கூட தான் பேசிட்டு இருந்தேன். அவன் ஊருக்குப் போறேன்னு சொன்னான். ‘நானும் வரேன்னு’ சொன்னா, ‘இல்லை நான் இப்பவே கிளம்பிடுவேன்னு’ சொன்னான். அதான் ஒரு ஆர்வத்துல சத்தமா ‘போகாதே’ன்னு கத்திட்டேன்,” என்றான்.

“அப்படி யாருடா உனக்கு ஒரு ஃபிரெண்ட், இந்த நேரத்துல கூப்பிட்டு ஊருக்குப் போறேன்னு உங்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க? அதுவும் எங்களுக்குத் தெரியாம அப்படி ஒரு ஃபிரெண்ட்?” என்று கதிர் கேட்க…

“டேய், இவ்வளவு நேரம் என்ன வேலை பார்த்தியோ அந்த வேலையை ஒழுங்கா பாரு…. இப்படி என்னைக் குடைஞ்சு கேள்வி கேட்டேன்னா, நான் உங்க அண்ணா கிட்டயும் துர்காகிட்டயும் நீயும் கீர்த்திகாவும் லவ் பண்றதைச் சொல்லிருவேன். நானே எப்படி உங்க அண்ணனைச் சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். இதுல நீ வேற இடையில வந்து உங்க அண்ணாவுக்குப் பாயிண்ட் எடுத்துக் கொடுக்குறியா? பேசாம சாப்பிட்டுட்டே உன் ஆளை சைட் அடி போ…” என்று அவன் கதிரின் அருகில் அமர்ந்து, அவன் காதில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூற…

விக்கி சொன்னதைக் கேட்ட கதிர், எனக்கு எதற்கு வம்பு? என்று நினைத்தவன், “ஆதி, நம்ம விவேக் தான் கால் பண்ணி இருக்கான். அவனை நம்ம கொடைக்கானல் ஆஃபிஸிற்குப் போகச் சொல்லி இருந்தோமில்லையா? அதைத்தான் பேசிட்டு இருக்காங்க போல,” என்று ஏதோ கூறி கதிர் சமாளிக்க…

“அப்படியா…. சரி சரி, சீக்கிரம் பேசிட்டுச் சாப்பிடு,” என்றான் ஆதி. “நான் சாப்பிட்டுட்டேன் ஆதி. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் விநாயகர்… இல்லை இல்லை… விவேக் கிட்ட பேசிட்டு வரேன்,” என்றவன், போனில் பேசுவது போலப் பாவனை செய்து சமாளித்துவிட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகி தன் ரூமிற்கு வந்தான்.

தன் அறைக்கு வந்தவன், கதவை மெல்லத் திறந்து உள்ளே எட்டிப் பார்க்க… அங்கே இருந்த ஒரு டேபிளின் மீது, ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து ஹாயாகச் சாய்ந்துகொண்டு, தன் தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்தார் விநாயகர்.

“எவ்வளவு நேரம் தான் வாசல்ல நின்னு என்னைப் பார்த்துட்டு இருப்ப? உள்ள வாடா…” என்றார் கண்ணைத் திறக்காமலேயே.

அவர் கண் திறக்காமல் தான் நிற்பதைக் கணிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்று நினைத்தவன், உள்ளே வந்து கதவைச் சாற்றிவிட்டு, அவர் அருகில் வந்து பணிவாக நிற்க…

“என்னடா… மரியாதை எல்லாம் பலமா இருக்கு? இப்போதான் கோபத்துல என்ன ‘யோவ்’ன்னு எல்லாம் சொன்ன,” என்று விநாயகர் நக்கல் அடிக்க…

அவர் முன் கை எடுத்துக் கும்பிட்டு, “விநாயகா… போதும். என்னை ரொம்ப ஒட்டாத விநாயகா. வெளிய அவனுங்களையே என்னால சமாளிக்க முடியலை. இந்தக் உலகத்துக்கே முதல் கடவுள் உன்னை என்னால சமாளிக்க முடியுமா? நான் உங்கிட்ட சரண்டர் ஆகிடுறேன் விநாயகா…” என்று அவர் முன் விழ…

“ம்ம்… அப்படி வா… வழிக்கு,” என்றவர், “சரி சரி எழுந்திரு. உன்னால சமாளிக்க முடியாது… என்று தெரிந்துதான் நான் கதிருக்கு ஐடியாவை வரவெச்சு உனக்கு எஸ்கேப் ஆக ஹெல்ப் பண்ணினேன்,” என்றார்.

“அப்பா…. விநாயகா….” என்று எழுந்து கைகூப்பியவன், “தெரியாம உன்னைத் திட்டிட்டேன். என்னை மன்னிச்சிருப்பா…” என்றவன், அவர் அருகில் வந்து நின்று தைரியத்தை வரவழைத்தவன், “விநாயகா…” என்றான். கண்களை மூடிக்கொண்டே, “என்ன?” என்றார். “நிஜமா நீங்கதான் வந்திருக்கீங்கன்னு நம்புறேன் விநாயகா…” என்றான் விக்கி.

“ஓகே.. ஓகே…” என்றார் தும்பிக்கையை ஆட்டிக்கொண்டே. மறுபடியும் “விநாயகா…” என்றான் விக்கி. “சீக்கிரம் சொல்லுடா.. எனக்கு தூக்கம் வருது,” என்றார் சற்று கடுப்பாக. “சரி சரி கோச்சுக்காத பிள்ளையாரே,” என்றவன்.

“என் ஆளு….” என்றான். “என்ன? சொல்லு. உன் ஆளு….” என்றார் அவரும் விக்கியை போலவே. நக்கலைப் பார்த்தியா? என்னை மாதிரியே பேசிக்காட்டுறதை! என்று நினைத்தவன் அவரை முறைக்க…

“என்னடா முறைப்பு… உன்னை மாதிரி இல்லை, உன் பாட்டன் பூட்டான் மாதிரியும் நான் பேசுவேன்,” என்றார். என்ன, மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டாரு! என்று நினைத்தவன், அவர் வந்து அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸைப் பிடித்து இழுத்துக்கொண்டே, “பிள்ளையாரே.. பிள்ளையாரே.. என் ஆளு என்கூட பேசமாட்டேன்னு சொல்லி என் போன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டா பிள்ளையாரே… நீயே பார்த்தியில்ல, அங்க டைனிங் டேபிளில் வெச்சு அவனுங்க ரெண்டு பேரும் எப்படி அவனுங்க ஆளுங்களை சைட் அடிச்சுட்டு இருந்தாங்கன்னு. ஆனா நான் மட்டும் தனியா சிங்கிளா இருக்கே… உன்னை மாதிரியே…” என்று அவரையும் சிங்கிள் என்று கூறி துணைக்கு இழுக்க…

“டேய், என்னையும் உன்கூட சேர்க்காத,” என்றவர். “இதுக்கு எதுக்குடா… என்னைக் கூப்பிட்ட? என் தம்பி முருகனைக் கூப்பிட்டிருக்கலாமே? அவன்தான் இதுல எல்லாம் பயங்கர எஸ்பர்ட்,” என்றார்.

“ஆனா, அவருக்கே அவர் லவ்வுக்கு நீதானா ஹெல்ப் பண்ணின? அப்போ நான் உன்னைத் தானே கூப்பிடணும்?” என்றான் விக்கி.

“பரவாயில்லையே… கொஞ்சம் அறிவா… லாஜிக்கா… தான் பேசுற நீயும். இப்போ உனக்கு என்ன பண்ணனும் சொல்லு,” என்றார். “ஒண்ணுமில்லை பிள்ளையாரே. என் ஆளு என்னை அன்ப்ளாக் மட்டும் பண்ண வெச்சிடு. மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கறேன்,” என்றான்.

“அப்போ உன் ஆளை உன்னை அன்ப்ளாக் பண்ண வெச்சுட்டா போதுமா.. வேற எதுவும் வேணாமா?” என்றார். விக்கியும் வேகமாக “அது மட்டும் பண்ணு பிள்ளையாரப்பா போதும். நான் எப்படியாவது அவ கிட்ட கெஞ்சியாச்சும் என்கூடப் பேச வெச்சிருவேன்,” என்றான்…

அவ்வளவு நேரம் கண்மூடிப் படுத்திருந்தவர், “அப்போ உன் ஆளை உன்னை அன்ப்ளாக் பண்ண வெச்சுட்டா, நீ என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டே. அப்படிதானே?” என்றார். “ஆமாம்…. ஆமாம்….” வேகமாகத் தலையை ஆட்டினான் விக்கி.

“சரி, நான் அப்படிச் செஞ்சுட்டா எனக்கு என்ன செய்வே?” என்றார் பிள்ளையார். “என்ன பிள்ளையாரே? உங்கிட்ட இல்லாததா என்கிட்ட கேட்குறே?” என்று அவர் தோளில் இடித்துக் கேட்க…

“டேய் விக்கி! என்கிட்ட என்ன இருந்தாலும், என்ன நம்பி வந்து என்கிட்ட வேண்டிகிட்டு எனக்கு அவங்கனால முடிஞ்சது ஒரு சாக்லேட் ஆவது கொடுத்து கும்பிடறாங்களே, அதுவே எனக்கு போதும்டா,” என்றவர்.

“சரி…சரி…. சீக்கிரம் சொல்லு. என்ன தரேன்னு?” என்றார். “நீயே சொல்லுப்பா என்ன வேணும்னு?” என்றான் விக்கி. “சரி, அப்போ நாளைக்கு எனக்கு லட்டு செஞ்சு வை… அதுவும் வெளியே இருக்காளே என்னோட பக்தையான துர்கா, அவ கையால லட்டு செஞ்சு வாங்கி வை. நான் வந்து சாப்பிடுறேன்,” என்றவர் அங்கிருந்து செல்லப் போக…

“பிள்ளையாரப்பா எங்க போறீங்க? நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லாம போறீங்க,” என்று விக்கி கேட்க… “டேய் மக்கு! உன்னோட போன்ல மெசேஜ் சவுண்ட் வந்துச்சில்ல? எடுத்துப் பாரு. உன் ஆளுதான் உனக்கு மெசேஜ் பண்ணி இருக்கா,” என்று சொல்ல… வேகமாகத் தன் கையில் இருந்த போனைப் பார்க்க… அதில் நோட்டிஃபிகேஷனில் நிலானியிடம் இருந்து மெசேஜ் வந்திருக்க… அதைப் பார்த்ததும் ஓடி வந்து சந்தோஷத்தில் பிள்ளையாரைக் கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தவன், “தேங்க்ஸ் விநாயகா… என் செல்லம்! தேங்க்யூ….” என்று மறுபடியும் அவர் கன்னத்தில் முத்தம் வைக்க…

“டேய்… டேய்…. போதும்டா… ரொம்பச் சந்தோஷப்படாத, சரியா? நீ என்ஜாய் பண்ணு. நான் போய்ப் ரெஸ்ட் எடுக்கிறேன்,” என்று கூறிவிட்டு, அவன் கையைத் தன் மீது இருந்து விளக்கிவிட்டு, “நாளைக்கு லட்டு ரெடியா இருக்கணும்,” என்று கூறிவிட்டு, சட்டென்று விக்கியின் அறையில் இருந்து மறைந்துவிட்டார்.

அவர் சென்றதும் போனை எடுத்துக்கொண்டு, நிலானி அனுப்பிய மெசேஜைப் பார்த்துக்கொண்டே வந்து கட்டிலில் விழுந்தான் விக்கி.

EPISODE 44

ஆதியும் துர்காவும் சாப்பிட்டு முடித்துவிட, ஆதி முத்து தாத்தாவைப் பார்த்து, “தாத்தா, எனக்கு ஒரு டம்ளர் பால் மட்டும் மேல ரூமுக்குக் கொடுத்து விடுங்க,” என்று சொல்லிவிட்டு, துர்காவைப் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் கீர்த்திகாவும் கதிரும் சாப்பிடச் சொல்லிவிட்டு, துர்கா கிச்சனுக்குள் சென்று, கிச்சனில் மற்றவர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

இப்போது டைனிங் டேபிளில் கதிரும் கீர்த்திகாவும் மட்டும் அமர்ந்திருக்க… கீர்த்திகா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, கதிரைப் பார்க்க… கதிர் அவளைக் கண்டுகொள்ளாதவன் போலத் தீவிரமாகக் குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவன் தன்னைப் பார்க்காமல் சாப்பாட்டிலேயே குறியாகச் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த கீர்த்திகா, அவனைப் பார்த்து முட்டாள்! முட்டாள்! முதலிலாவது யாராவது இருந்தாங்க, சரி என்னைப் பார்க்க முடியலைன்னு சொல்லலாம். இப்போதான் டைனிங் டேபிளில் யாருமே இல்லையே, நம்மளைச் சுற்றி யாருமே இல்லையே. என்னைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தா என்ன? என்று அவனைத் திட்டிக்கொண்டு கீர்த்திகா சாப்பிட… அவள் திட்டுவது கதிருக்குக் கேட்கத்தான் செய்தது. ஆனாலும், கேட்காதவன் போலக் குனிந்து சிரித்துக்கொண்டே சாப்பிட்டான்.

தன் அருகில் இருந்த சாம்பார் பாத்திரத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்தவள், வேண்டுமென்று கரண்டியில் சாம்பாரைக் கலக்குவதுபோல பாத்திரத்தில் தட்டிச் சத்தம் எழுப்பினாள். அப்போதும் கதிர் திரும்பவே இல்லை.

அவனை முறைத்துக்கொண்டு சாம்பார் எடுத்து அவன் தட்டில் ஊற்றும் பொழுதும், கரண்டியைத் தட்டில் படும்படி வேகமாகச் சத்தம் எழுப்பிச் சாம்பாரை ஊற்ற… கிச்சனில் இருந்து துர்கா, “ஏய்…. கீர்த்து… இப்ப எதுக்கு பாத்திரத்தை உருட்டிட்டு இருக்க? சத்தமில்லாமல் சாப்பிட முடியாதா உன்னால?” என்று கிச்சனில் இருந்து கீர்த்திகாவை துர்கா சத்தம் போட… “இல்லை, தெரியாம கை தவறித் தட்டில் கரண்டி விழுந்துருச்சு,” என்றாள் கீர்த்திகா.

பிறகு எதுவும் சத்தமில்லாமல் அமைதியாக கீர்த்திகா சாப்பிட்டுக்கொண்டிருக்க… திடீரென்று அவள் காலில் ஏதோ ஊர்வதுபோல் இருக்க… குனிந்து தன் காலைப் பார்க்க… கதிர் தான் டைனிங் டேபிள் அடியில் தன் காலை விட்டு அவள் காலைத் தன் காலால் உரசிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் காலைப் பார்த்ததும் வேகமாக நிமிர்ந்து கீர்த்திகா அவனை முறைக்க… அப்போது கதிர் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனை முறைத்துக்கொண்டு, “இப்போ எதுக்குடா என் காலை நோண்டுற? இவ்ளோ நேரம் என்னைப் பார்க்காமல் தான் உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தேன். அந்த வேலையைப் பாரு. என் காலை உரசுற வேலை எல்லாம் வெச்சுக்காத,” என்று சொல்லிவிட்டு, தன் காலால் அவன் காலை ஓங்கி ஒரு மிதி மிதிக்க… அவன் வலியில் “ஷ்…. ஆ…. அம்மா….” என்று கத்த…

கதிர் கத்திய சத்தம் கேட்டு, கிச்சனில் இருந்து துர்கா வேகமாக டைனிங் டேபிளுக்கு வந்தவள், “கதிர்! ஏன்டா கத்துற? என்ன ஆச்சு? ஏதாவது கையில சூடா கொட்டிக்கிட்டியா?” என்று அவசரமாகக் கேட்டுக்கொண்டே டைனிங் டேபிளுக்கு வர…

துர்கா டைனிங் டேபிளுக்கு வந்ததும் கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவன், சுதாரித்துக்கொண்டு, “அது ஒண்ணும் இல்லை துர்கா… ஹாட் பாக்ஸில் இட்லி சூடா இருக்குறது தெரியாமல் அப்படியே கையை உள்ள விட்டுட்டேன் துர்கா… அதான் சூடு பட்ட உடனே சத்தம் போட்டுட்டேன். வேற எல்லாம் ஒண்ணும் இல்லை,” என்று கூற…

“இட்லி வேணும்னா என்னைக் கூப்பிட வேண்டியதுதானே? நான் வந்து எடுத்து வைப்பேன்ல? கீர்த்திகா பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கா. அவகிட்ட சொன்னா அவ எடுத்து வைக்கப் போறா… நீ எதுக்கு இப்படி கை எல்லாம் சுட்டுக்கிட்ட? இந்த வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்க?” என்று அவனை கடிந்துகொண்டவள், “சரி இரு… நானே உனக்கு இட்லி வைக்கிறேன்,” என்று ஹாட் பாக்ஸில் இருந்து மேலும் இரண்டு இட்லியை அவன் தட்டில் வைக்க… “இல்லை துர்கா… நான் வெச்சிட்டேன். எனக்கு போதும்,” என்று கதிர் சொல்லவும் கேட்காமல் அவள் இரண்டு இட்லி சேர்த்து வைத்தாள்.

கதிருக்கு இட்லி வைத்துக்கொண்டே, அருகில் இருந்து கீர்த்திகாவைப் பார்த்து, “ஏண்டி, நீ இங்க சும்மாதானே உட்கார்ந்து, சாப்பிடாமத் தட்டையே பார்த்துட்டு இருக்க. கதிருக்கு எடுத்துச் சாப்பாடு வச்சா என்ன? நீ குறைஞ்சு போயிருவியா? நீ அவன்கிட்ட ‘நான் எடுத்து வைக்கிறேன்’னு சொல்லி வைக்க மாட்டியா?” என்று கேட்க… கதிர் உடனே துர்காவைப் பார்த்து, “விடு துர்கா… அவ சின்னப் பொண்ணு. அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்கே ஒழுங்காச் சாப்பிடத் தெரியாது. இதுல எனக்குச் சாப்பாடு பரிமாறப்போறாளா?” என்று கீர்த்திகாவின் காலை வார… அவனை முறைத்தவள் வேண்டுமென்று அவன் காலை ஓங்கி மிதிக்க… பல்லைக் கடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக அவளை முறைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கதிர்.

“ஏண்டி, உனக்கு மெதுவா கதிர் தான் பேசிட்டு இருக்கேன். நீ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டியா? உன்கிட்ட தான கேட்டுட்டு இருக்கேன் கீர்த்து,” என்று துர்கா கீர்த்திகாவின் தோளைப் பிடித்து உலுக்க…

“அக்கா, நான் ஒன்னும் வேலை செய்ய மாட்டேன்னு சொல்லல அக்கா. கதிர் மாமா…. கிட்ட,” என்று அழுத்திச் சொன்னவள், “நான் இட்லி வைக்கிறேன்னு தான் சொன்னேன். அதுக்கு அவர் என்ன தெரியுமா சொன்னாரு? ‘உன் கை பட்ட இட்லி எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். நீ எல்லாம் எனக்கு ஒன்னும் வேலை செய்ய வேண்டாம். நானே எடுத்துச் சாப்பிடுகிறேன்,’ என்று சொல்லி அவரே எடுத்து இட்லி வெச்சிட்டாரு அக்கா. அவருக்குத்தான் என்னைக் கண்டால் பிடிக்கவே மாட்டேங்குது. என்னை எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்காரு,” என்று திடீரென்று அழுவது போல முகம் வைத்துக்கொள்ள… இப்போது துர்காவுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. கதிருக்குப் பேசுவதா, கீர்த்திக்குப் பேசுவதா என்று தெரியாமல் இடையில் மாட்டிக்கொண்டு இருவரையும் பார்க்க…

“ஏய் கீர்த்திகா! நான் உன்கிட்ட எப்போ அப்படிச் சொன்னேன்? இப்ப ஏன் நீ பொய் பேசிட்டு இருக்க? பாரு துர்காவுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா. நான் அப்படியெல்லாம் சொல்லல,” என்று கதிர் அவளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்க… அப்போது அங்கே வந்த முத்து தாத்தா, கையில் கொண்டு வந்த பால் டம்ளரை துர்காவிடம் கொடுத்துவிட்டு, “பாப்பா, நீ போய் ஆதி தம்பி குடிக்கப் பால் கேட்டுச்சு. நீ இந்தப் பாலைக் கொண்டுபோய் தம்பிக்குக் கொடுத்துடு மா…” என்றவர் அவள் கையில் பால் டம்ளரைத் திணிக்க…

அதை கையில் வாங்கியவள், ஐயோ… இப்போ பாலைக் கொண்டுபோய் அவன் கையில் கொடுத்தா ஏதாவது வம்பிலுப்பானே, என்று நினைத்தவள், “தாத்தா, நீங்களே கொண்டுபோய்க் கொடுத்துட்டு வரிங்களா? நான் கிச்சனில் கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சுட்டு வந்துறேன்,” என்று கூற…

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பாப்பா…. நான் எல்லா வேலையும் நம்ம ஆளுங்களை எல்லாம் வெச்சு நான் வேலை வாங்கிக்கிறேன். அதுவும் இல்லாம, இந்த நேரத்துல இத்தனை ஆளுங்க இருந்தும் நீ வேலை பார்த்தா, அப்பறம் ஆதித் தம்பி எங்க எல்லாரையும் திட்டும்,” என்று சொல்லிவிட்டு, “நீ போ மா…” என்று அவளை வலுக்கட்டாயமாக அனுப்ப…

“அது வந்து…. நான் கீர்த்திகா தனியா இருப்பா. நான் அவகூட படுத்துக்கிறேன்,” என்று கூற… உடனே கீர்த்திகா, “அக்கா, நான் என்ன சின்ன குழந்தையா? நான் தூங்கிக்குவேன். நீ போய்த் தூங்கு அக்கா,” என்று சொல்லிவிட… வேறு வழி இல்லாமல் பாலை எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.

அவள் மாடி ஏறி அவள் அறை செல்லும் வரை துர்காவையே பார்த்துக்கொண்டிருந்த மூவரும், துர்கா உள்ளே சென்றதும் முத்து தாத்தா சமையல் அறை சென்றுவிட… கதிர் கீர்த்திகாவைப் பார்த்து, “நான் வேணும்னா நைட் உனக்குத் துணையாக வந்து இருக்கட்டுமா?” என்றான் கதிர்.

“ஆஹா… பாலுக்குப் பூனை காவலா! உன்னை என் துணைக்கு வர சொன்னா அப்பறம் அடுத்த மாசமே நான் அம்மா ஆக வேண்டியதுதான். போடா…. எனக்குப் பத்திரமாப் படுத்துத் தூங்கத் தெரியும். நீ வந்து என்னைப் பார்த்துக்காக்குற அளவுக்கு இங்க யாரு வந்து என்ன என்ன செய்யப் போறாங்க?” என்றவள், எழுந்து கை கழுவி விட்டு, கதிர் அருகில் வந்து, “குட் நைட் டார்லிங்…..” என்று அவனிடம் வந்து அவன் தலை முடியைக் கலைத்துவிட்டு, அவள் அறைக்கு ஓடிவிட்டாள்.

“ஏய்…. ” என்று எட்டி அவளைப் பிடிக்கக் கதிர் போவதற்குள், சிட்டாகப் பறந்து அவள் அறைக்குள் ஓடி கதவைச் சாற்றிக்கொண்டாள்.

அவளையும் அவள் துடுக்குத்தனத்தையும் நினைத்துச் சிரித்தவன், கை கழுவிவிட்டு அவன் அறைக்குச் செல்லப் போக… “தம்பி, இந்தாங்க பால். துர்கா உங்க மூணு பேருக்கும் கொடுக்கச் சொல்லிட்டுத்தான் மேலே போச்சு. இங்கேயே எடுத்துக்கிறீங்களா? இல்லை ரூமில் கொண்டு வந்து கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்.

அவர் கையில் மூன்று கிளாஸ்கள் இருந்த ட்ரேயைப் பார்த்தவன், ஏதோ யோசித்தவனாக, “தாத்தா, என்கிட்ட கொடுங்க. நானே கொண்டு போய்க்கிறேன். நீங்க போய்த் தூங்குங்க. நேரம் ஆகுதில்லையா?” என்றவன், அவர் ‘வேண்டாம்’ என்று சொல்ல வருவதற்குள், அவர் கையில் இருந்த ட்ரேயை வாங்கிவிட்டான்.

“உங்களுக்கு எதுக்குத் தம்பி சிரமம்? நான் சின்னப் பாப்பாவுக்கு வேணும்னா கொடுத்துறேன். கொடுங்க,” என்று அவன் கையில் இருந்து ட்ரேயை வாங்க வர… “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்க போங்க. நானே கொண்டு போறேன்,” என்று அவரின் பதிலுக்குக் காத்திராமல் திரும்பி நடந்தான்.

பால் ட்ரேயுடன் கீர்த்திகாவின் அறைக்கு வந்தவன், கதவைத் தட்ட… கதவைத் திறந்த கீர்த்திகா, அறைக்கு வெளியே கதிர் பால் ட்ரேயுடன் நின்றிருப்பதைக் பார்க்க… “என்ன?” என்று புருவத்தை உயர்த்தி அவனிடம் கேட்க…

“பார்த்தா தெரியல? கையில பால் ட்ரேயோட வந்து நிற்கிறேன். என்ன என்று கேட்கிறாய்?” என்று கதிர். “இல்ல. வழக்கமா ஃபர்ஸ்ட் நைட்டுக்குக் கையில் ஒரு சொம்பு தான் கொண்டு வருவாங்க. ஆனா, நீ எதுக்கு மூணு கிளாஸ் பால் எடுத்துட்டு வந்து இருக்க?” என்று கேட்டாள் கீர்த்திகா.

அவள் ‘ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பால் சொம்பு’ என்று சொன்னதும், “பால் சொம்புல தான் கொண்டு வரணும்னு அவசியம் இல்லையே? அப்போ ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நீ ரெடியா…..” என்று கேட்டுக்கொண்டே அவள் அறைக்குள் நுழைய…

“ஏய்! ஏய்! டேய் கதிர்! இப்ப எதுக்குடா உள்ள வந்த? பால் கொடுக்கத்தானே வந்த? அங்க வெளியில் நின்னு கொடுத்துட்டுப் போக முடியாதா? உள்ள வந்து தான் கொடுக்கணுமா?” என்று கீர்த்திகா கேட்க…

“நான் வெறுமனே கதவ தட்டி, பால் கொடுத்துட்டு உன்கிட்ட இரண்டு வார்த்தை பேசிட்டுப் போலாம்னு தான் வந்தேன். ஆனா நீதான் ‘ஃபர்ஸ்ட் நைட் அது இல்லை’ன்னு சொல்லி என்ன ஏத்தி விட்டுட்ட. அப்புறம் நீயே இந்த மாதிரி பேசுறப்போ நான் எப்படிச் சும்மா போக முடியும்? அதனால ஒரு ட்ரையல் பார்த்திடலாம்,” என்றவன், பாலுடன் இருந்த ட்ரேயை அருகில் இருந்த மேசை மீது வைத்துவிட்டு வந்து கீர்த்திகாவின் அறை கதவைச் சாற்றி, கதவின் மேல் சாய்ந்து நின்று, “என்ன டார்லிங்? ஒரு ரிகர்சல் பார்த்திடலாமா?” என்று கதிர் கேட்க…

ஆஹா! இவன்கிட்ட தெரியாம கிண்டல் பண்றோம்னு சொல்லி நானே வாயை விட்டு மாட்டிக்கிட்டேனே… “உன்னை எப்படிச் சமாளிப்பது?” என்று தெரியாமல் கீர்த்திகா விழிக்க… “என்னடி முழிக்கிற…. ரிகர்சல் பார்த்திடலாமா? சொல்லு,” என்று கொண்டே தன் சட்டையின் மேல் பட்டனைக் கழட்டிக்கொண்டு அவள் அருகில் வந்தான்.

“டேய் கதிர்! நான் சும்மா உன்னைக் கிண்டல் பண்றதுக்கு தான் அப்படிப் பேசினேன். நீ அதையே சாக்க வெச்சுட்டு இப்படி எல்லாம் வரக்கூடாது. இப்படிப் பண்ணினா நான் என் அக்காவைக் கூப்பிடுவேன்,” என்று கூற…

“கிண்டல் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் நைட் பற்றி எல்லாம் பேசுவீங்களா நீங்க? அதுவும் ஒரு ஆம்பளை கிட்ட. எப்படிப் பேசணும் உனக்குத் தெரியாது. வந்தது வந்துட்டேன். ஒரு சின்ன ட்ரைலர் பார்த்துட்டு நான் போவேன். உங்க அக்காவைக் கூப்பிடுறேன்னு சொன்னா நான் என்ன பயந்துறப் போறேனா?” என்றவன் அவள் அருகில் நெருங்க…

கதிர் சுவரொட்டியாக எடுத்து வைத்து முன்னே வர, கீர்த்திகா நிஜமாகவே அவன் தன்னை ஏதோ செய்வதற்காகத்தான் வந்திருக்கிறான் என்று நினைத்தவள், மெதுமெதுவாகப் பின்னால் சென்றாள். அவளைப் பார்த்து மனதிற்குள் சிரித்தவன், இவள் நிஜமாவே நம்பிட்டா போலயே. சரி, இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே மெயின்டெயின் பண்ணுவோம், என்று நினைத்தவன், “என்ன பின்னாடி போய்ட்டு இருக்கு டார்லிங்? மாமா கிட்ட பக்கத்துல வா,” என்று கூற… அவள் “நான் வரமாட்டேன்,” என்று சொன்னவள், “டேய் கதிர்! வேண்டாண்டா. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் நடக்கணும். கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாது. ப்ளீஸ்டா. சாரி. நான் சும்மாதான் சொன்னேன்,” என்று கூறிக்கொண்டே பின்னால் நகர… “எங்கடி போற?” என்று ஒரே வீச்சில் வேகமாக வந்து அவளைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிறுத்திக்கொண்டவன்,

“போலாமா?” என்று வெட்டி காட்டிக் கேட்க… அவள் அதிர்ச்சியாகி, கண்களில் நீர் வழிய, “முடியாது. நான் சும்மாதான் சொன்னேன். நீ முதல்ல இங்கிருந்து வெளியே போ,” என்று அவன் மார்பில் கைவைத்து அவனைத் தன்னிடம் இருந்து விலக்கப் பார்க்க… அவளை இருக்கிக் பிடித்து நிறுத்தி வைத்தவன்,

“நான் தான் சொன்னேனே, சின்ன ட்ரெய்லாவது பார்த்துட்டுப் போலாம்னு சொல்லிட்டு. அதனால நீ பயப்படாதே, ஓகேவா? நான் உன்னை ரொம்ப எல்லாம் கஷ்டப்படுத்த மாட்டேன்,” என்று சொன்னவன் மெதுவாகக் கீழே குனிய… கீர்த்திகா பயந்து, “என்னடா பண்ற…. என்ன விடுடா,” என்று அவன் மார்பில் அடிக்க… அவளை ஒரு கையால் கட்டிக்கொண்டு, மறுகையால் அவள் கையைப் பிடித்தவன், அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே முன்னே குனிய… அவன் தன்னிடம் நெருங்குவதைப் பார்த்துக் கீர்த்திகா பயந்துகொண்டே பின்னால் சரிய… அவளை வெடுக்கென்று இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கீர்த்திகா, விழிகள் இரண்டும் பெரிதாக விரிய, அவனைப் பார்க்க… அவனும் கீர்த்திகாவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டே அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தவன்… கீர்த்திகா தன்னை பார்க்கவும், “என்ன?” என்பது போல அவள் கண்களைப் பார்த்து தன் புருவத்தை உயர்த்தி முத்தம் கொடுத்துக்கொண்டே கேட்க… அவள் இதழ் தேனைப் பருகிக்கொண்டே, அவளை மெத்தைக்குத் தூக்கிச் சென்றவன், மெத்தையில் அவனும் அமர்ந்து, அவளைத் தன் மடிமீது அமர்த்தி முத்தத்தைத் தீவிரமாக்க… கீர்த்திகாவும் அவன் முத்தத்தில் கரைந்து, அவன் முத்தத்தைக் கண்கள் மூடி ஏற்றாள்.

EPISODE 45

கீர்த்திகாவைக் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த கதிர் அவள் இதழில் முத்தமிட… முதலில் அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தவள், பின் அவன் முத்தத்தில் கரைந்தவள், அவன் கழுத்தைத் தன் கைகளால் மாலைபோல் கோர்த்து கட்டிக்கொண்டாள்.

அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டே அவளைக் கட்டிலில் சாய்த்தவன், அவனும் அவளுடன் கட்டிலில் சரிந்தான்.

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு இருந்தவள், அவன் தந்த முத்தத்தில் கிறங்கியவள், கதிரை இருக்கக் கட்டிக்கொள்ள… கீர்த்திகாவாகவே வந்து தன்னை அணைத்துக்கொண்டதும் கதிருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாகிவிட, தன் முத்தத்தைத் தீவிரப்படுத்தினான்.

இருவரும் முத்தத்திலேயே தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டிருக்க, தங்களை மறந்து காதல் என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு இருவரின் உணர்ச்சிகளும் செல்லத் தொடங்க… மெல்லக் கீர்த்திகாவைக் கட்டிக்கொண்டிருந்தவன் கைகள் அவள் முதுகில் இருந்து இறங்கி அவள் இடுப்பில் வந்து அவள் இடையை வருட… சட்டென்று அவள் கதிரின் கையைப் பிடித்துக்கொண்டு அவனை முத்தமிடுவதை நிறுத்தி அவனைப் பார்க்க… கதிரும் அவளிடம் பார்வையாலேயே “ப்ளீஸ்….” என்று கெஞ்ச… அவனிடம் இருந்து எழுந்து அமர… கதிரும் எழுந்தவன் அவளைப் புரியாமல் பார்க்க… கீர்த்திகா, “வேணாம் கதிர், இது தப்பு….” என்றாள்.

“என்ன தப்பு? நீயும் நானும் தான் காதலிக்கிறோமே…” என்றான் கதிர். அதற்கு கீர்த்திகா, “காதல் தானே செய்கிறோம் கதிர்? இன்னும் நமக்குக் கல்யாணம் ஆகவில்லையே,” என்றாள்.

“ஆனால் நான் உன்னைத்தானே திருமணம் செய்யப்போகிறேன்? பிறகு என்ன?” என்று கேட்டான். “என்னைத்தான் திருமணம் செய்யப் போகிறாய் என்றால், அதற்காகத் திருமணத்திற்கு முன்பே இதெல்லாம் தப்பு கதிர்,” என்றாள் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு.

“இதில் என்ன தப்பு இருக்கு கீர்த்திகா? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு, எனக்கும் உன்னைத்தான் பிடிச்சிருக்கு. ரெண்டு பேரும் இப்போ காதலிச்சுட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்,” என்றான்.

“கதிர், நீ புரிஞ்சுதான் பேசுறியா இல்லையா? இது எல்லாம் மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு வேணும்னா சரியா இருக்கலாம். ஆனா நம்ம ஊருக்கு நீ சொல்ற காரணம் எல்லாம் எதுவுமே பொருந்தாது,” என்றாள்.

தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றதும் கதிருக்குக் கீர்த்திகாவின் மீது கோபம் வந்துவிட… கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவன் அறையை விட்டு வெளியே செல்லப் போக… “கதிர்…. நில்லு கதிர்!” என்றாள் கீர்த்திகா.

அறைக் கதவு வரை சென்றவன், கீர்த்திகா நிற்கச் சொன்னதும் அப்படியே நின்றான். எதுவும் பேசாமல் அமைதியாக அவன் அருகில் வேகமாக வந்த கீர்த்திகா, அவன் முன் சென்று நின்றவள், “கதிர் என் மேல கோபமா?” என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்க… அவன் முகத்தைத் தன் கைகளால் ஏந்தி அவனைத் தன்னைப் பார்க்குமாறு திருப்ப… அவன் கீர்த்திகாவைப் பார்த்த பார்வையில் தெரிந்துவிட்டது தன் மீது கோபம் இருப்பது.

“கதிர் ப்ளீஸ்… நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா… இது எல்லாம் தப்புடா… கல்யாணத்துக்கு முன்னாடி என்னதான் நீயும் நானும் நெருங்கிப் பழகினாலும், நமக்குள்ள ஒரு வரம்பு நிர்ணயம் பண்ணி இருக்கணும்டா… நான் உனக்குச் சொந்தமானவள். உனக்கு மட்டுமே சொந்தமானவள் கதிர். என்னிடம் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதே போலத்தான் எனக்கும். ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? நீயும் நானும் இப்போது உணர்ச்சியின் பிடியில் தவறாக இருந்துவிட்டோம் என்றால், இதை நினைத்து நாளையே என்னை விட நீதான் வருத்தப்படுவாய், ‘நாம் அவசரப்பட்டுவிட்டோமோ’ என்று. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் நம் உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு இதை எல்லாம் கடந்து வந்தோம் என்றால், ஒரு நாள் நான் உனக்கு முழுமையாக உரிமையான பிறகு, உன்னிடம் நான் என்னை முழுவதுமாகத் தருவதில் எனக்கு இப்போதைவிட இன்னும் சந்தோஷமாக இருக்கும் கதிர். என் காதலனான நீயே என் கணவனாக வரும்போது, அப்போது என்னிடம் நீ இப்படி இல்லை எப்படி நடந்துகொண்டாலும் நான் உன்னைத் தடுக்கவே மாட்டேன். கொஞ்சம் புரிஞ்சுக்கோ கதிர். நமக்கும் நிறைய கனவு, லட்சியம் எல்லாம் இருக்கிறது. அதை எல்லாம் நாம் அடைய வேண்டாமா? இப்போது இப்படி இருந்துவிட்டு, பின்னாளில் இதனால் எதுவும் பெரியதாக நடந்துவிட்டால் என்ன செய்வது? கொஞ்சம் யோசிச்சுப் பாரு கதிர் ப்ளீஸ்….” என்று கீர்த்திகா கெஞ்சிக்கொண்டே கூற…

தன் முகத்தைப் பிடித்துக்கொண்டு தன்னிடம் இவ்வளவு மென்மையாக இந்தச் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி, தன்னைச் சமாதானம் செய்யும் கீர்த்திகாவைப் பார்த்தவன், அவள் கைகளைத் தன் முகத்தில் இருந்து பிரிக்க…

அவன் இன்னும் தன் மீது கோபத்தில் இருக்கிறானோ என்று பதறிய கீர்த்திகா, “கதிர்!” என்று அவனை கவலையுடன் பார்க்க… அவள் கைகளை அப்படியே கொண்டு தன் இடுப்பில் அவள் கைகளை வளைத்துக் கட்டிக்கொண்டு, கீர்த்திகாவைத் தன் அருகில் இழுத்து அணைத்துக்கொண்டவன், “உன்னிடம் எனக்கு உரிமை இருக்குதானே?” என்றான். அவளும் “ஆம்” என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள். “அப்போ எனக்கு இப்போ ஒரு கிஸ் நீயே கொடு. அதன் பிறகு நான் ரூமுக்கு போறேன்,” என்றான்.

அவன் இப்படிப் பேசியதும் தன் மீது கதிர் கோபத்தில் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷப்பட்ட கீர்த்திகா, தன் கால்களை உயர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட… “ஏய்… என்ன இங்க கொடுக்கிற?” என்று கதிர் கேட்க… “வேற எங்க?” என்றால் கீர்த்திகா.

அவன் தன் உதட்டைக் குவித்துத் தன் உதட்டைக் காட்ட… அவன் உதட்டில் தன் விரலால் அடித்தவள், “என்ன ஆனாலும் காரியத்திலேயே கண்ணா இருக்கேடா… ராஸ்கல் நீ…” என்றவள் அவன் கீழ் உதட்டைத் தன் விரலால் கிள்ள… “ஷ்… வலிக்குதுடி….” என்றவன், “இப்போ நீ எனக்குக் கிஸ் கொடுக்கப் போறியா இல்லையா?” என்று பொய்யாக கோபத்துடன் கேட்க…

“விட மாட்டியே,” என்றவள் மெல்ல எக்கி அவன் உதட்டில் லேசாகத் தன் உதடு கொண்டு ஒற்றி எடுக்க… “இதுக்கு பேருதான் கிஸ்ஸா?” என்றவன், அவள் முகத்தைப் பிடித்து அவள் உதட்டில் நீண்ட ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு, “கிஸ் என்றால் இப்படித்தான் இருக்கணும்,” என்றவன் திரும்பவும் அவள் உதட்டில் ‘பச்சக்’ என்று ஒரு முத்தத்தை வைத்தவன், “சரி, லேட் ஆச்சு. நீ தூங்கு. நானும் ரூமுக்குப் போறேன்,” என்றவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்ல… அவன் செல்லும் வரை பார்த்துவிட்டு, ரூம் கதவைச் சாற்றிவிட்டு வந்து படுத்தாள் கீர்த்திகா.

கதிர் கீர்த்திகாவின் அறையில் இருந்து வெளியே வரவும், அவனைப் பார்த்துக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்த கீர்த்திகாவையும், அங்கு இருந்த கர்டைனின் பின்னால் நின்றிருந்த ஒரு உருவம் பார்த்துக் கொண்டு இருந்தது.

*****

பிள்ளையார் சென்றதும் தன் மொபைலில் மெசேஜ் டோன் கேட்க, அதை எடுத்துப் பார்த்த விக்கிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நிலானிதான் மெசேஜ் அனுப்பி இருந்தாள். வேகமாக அதை ஓபன் செய்து பார்த்த விக்கி அவள் அனுப்பி இருந்த மெசேஜைப் பார்த்து முகம் மலர்ந்தான்.

நிலானி அனுப்பிய மெசேஜில் “சாரி” என்று மட்டும் அனுப்பி இருந்தாள்.

அதைப் பார்த்துச் சந்தோஷப்பட்ட விக்கி, உடனே மேலே பார்த்து “பிள்ளையாரப்பா, யூ ஆர் கிரேட்! சொன்ன மாதிரியே செஞ்சுட்டியே! ரொம்ப தேங்க்ஸ் பிள்ளையாரே!” என்று அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டவன்.

நிலானியின் மெசேஜைப் படித்துவிட்டு “எதுக்கு சாரி?” என்று அனுப்பினான். மெசேஜை அனுப்பிவிட்டு அவள் மெசேஜைப் பார்த்துவிட்டாளா என்று பார்க்க… அனுப்பிய வேகத்தில் விக்கி அனுப்பிய மெசேஜைப் படித்துவிட்டாள் என்று காட்டியது. பிறகு அவள் ஏதோ டைப் செய்கிறாள் என்று காட்ட, இன்னொரு செய்தி வந்தது நிலானியிடம் இருந்து.

“உங்களைத் திட்டிவிட்டு ப்ளாக் பண்ணினதுக்கு தான் சாரி கேட்டேன்,” என்று அனுப்பினால்.

“பரவாயில்லை. நான் எதுவும் நினைக்கவில்லை. நானும் கொஞ்சம் உன்னிடம் ஓவராகத்தான் பேசிவிட்டேன். நானும் சாரி,” என்றான்.

அவன் அனுப்பிய செய்தியைப் படித்துவிட்டுச் சிரித்தவள், “ஆமாம், கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவராத்தான் பேசுறீங்க. கீர்த்திகாவோட அண்ணா அப்படிங்குறதுனால நான் உங்களை மன்னிச்சு விடுறேன்,” என்றாள். கூடவே ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பினால்.

அவள் அனுப்பிய செய்தியைப் படித்தவன் சிரித்துக்கொண்டே, “என்னை மன்னித்ததற்கு நன்றி தாயே!!” என்றான்.

அதைப் படித்தவள், “தாயே எல்லாம் சொல்லி என்னைப் பெரியவள் ஆக்கிடாதீங்க. நான் சின்னப் பொண்ணு,” என்றாள்.

“ஓஹோ… சின்னப் பொண்ணு நீ… அப்போ என்னை மன்னிச்சிரு நிலாக்குட்டி….” என்று அனுப்பினான்.

“நான் என்ன நிலாக்குட்டின்னு சொல்லாதீங்கன்னு காலையிலேயே சொன்னேனே. மறுபடியும் இதே போல சொல்றிங்களே,” என்று சோகமாக இருப்பது போல ஸ்மைலி அனுப்பினால்.

“ஏன் நான் உன்னை அப்படி கூப்பிடக் கூடாதா?” என்று கேட்டான்.

“கீர்த்திகா போன் பண்ணி, ‘நான் உங்களை ப்ளாக் பண்ணிட்டேன்னு நீங்க வருத்தப்பட்டீங்க’ அப்டின்னு சொன்னதுனால தான் இப்போ உங்களுக்கு மெசேஜ் பண்ணினேன். மறுபடியும் இப்படிக் கேட்டால் நான் என்ன செய்றது?” என்றவள், “நான் உங்களை அப்படி கூப்பிடக் கூடாதான்னு கேக்குறீங்களே… நீங்க ஏன் என்னை அப்படி கூப்பிடணும்னு நான் கேட்குறேன் உங்ககிட்ட. இதுக்குப் பதில் சொல்லுங்க. நானும் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்,” என்றால்.

அவள் அப்படி கேட்டால், அதற்கு மேல் தன்னை நிலாக்குட்டி என்று கூப்பிட மாட்டான் என்று நினைத்து இந்தச் செய்தியை அவனுக்கு அனுப்ப…

அதைப் படித்த மறுநிமிடமே அவனிடம் இருந்து பதில் வந்தது.

“நான் உன்னை நிலாக்குட்டி அப்படின்னு கூப்பிடுறேன்னா, நீன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னோட அழகான முகம் இப்பவும் நான் கண்மூடி உன்னை நினைத்தால் அப்படியே உன் முகம் எனக்கு நினைவில் வரும். உன் முகத்தையும் அந்தக் கண்ணாடி போட்ட கண்ணையும் பார்க்க ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவைதான் நான் உன்னை நேரில் பார்த்திருக்கேன் என்றாலும், நீ என்னோட மனசுல ஆழமாப் பதிஞ்சுட்டே.

எனக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே கிடையாது. எனக்கு என்று ஒரு குடும்பம் எண்டது எதுவும் கிடையாது. என்னோட ஃபிரெண்ட்ஸ் தான் என்னோட சொந்தம். ஆனா, உன்னை நேரில் பார்த்ததும், நீதான் என்னோட குடும்பம்னு தோணுச்சு. உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதுதான். ஆனால், நீ என் வாழ்க்கை முழுக்க என்கூட வரணும் என்று உன்னைப் பார்த்ததும், ‘நீதான் எனக்கு எல்லாமே’ என்று எனக்குத் தோன்றியது.

எனக்கு மட்டும் தான் உன் மேல எல்லா உரிமையும் இருக்கு என்று தோன்றியது. உன்னை என்னால் மட்டுமே நல்லா பாத்துக்க முடியும். உனக்கு எல்லாமாக நான் மட்டும் தான் இருக்கணும் அப்படின்னு உன்னைப் பார்த்த அடுத்த நிமிஷமே எனக்குத் தோணிருச்சு. அதனால தான்…. அந்த உரிமையில் தான்…. நான் மட்டும் தான்…. உன்னை நிலாக்குட்டி… என்று கூப்பிடுவேன்,” என்று அனுப்பியவன்,

பின் மறுபடியும், “நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் அனுப்பிட்டேன். நான் கேட்டதுக்கு நீ என்ன பதில் சொல்லப் போற நிலாக்குட்டி….” என்று அனுப்பி இருந்தான்.

அவன் அனுப்பிய செய்தியைப் படித்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, இப்படித் தன்னைப் பார்த்துக் கொள்ள யாருமே இல்லையே என்று ஏங்கியவளுக்கு விக்கியின் இந்தக் பதில் பிடித்திருந்தாலும், அவனிடம் அதை ஒப்புக்கொள்ள நிலானியின் மனம் சம்மதிக்கவில்லை.

அவன் அனுப்பிய மெசேஜை மீண்டும் மீண்டும் படித்தாளே ஒழிய, விக்கிக்கு ரிப்ளை பண்ணவே இல்லை.

விக்கியும் போனை கையில் வைத்துக்கொண்டே, நிலானி பதில் அனுப்புவாள் என்று வெகு நேரம் அவள் மெசேஜையே பார்த்துக் கொண்டிருந்தவன், கையில் போனை வைத்துக்கொண்டே களைப்பில் தூங்கியும் போனான்.

கீர்த்திகாவின் அறையில் இருந்து வந்த கதிர் நேராக இவர்கள் இருவரும் இருக்கும் அறைக்குள் வர, அங்கே விக்கி கட்டிலில் படுத்துக்கொண்டு, காலை சுவற்றில் தூக்கி வைத்து, கையில் மொபைல் ஆன் ஆகி இருக்க… அது கூடத் தெரியாமல் அப்படியே தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிர், அவன் அருகில் வந்து போனை எடுத்து அணைத்து வைக்கப் போனவன்… அதில் ‘நிலானிக்குட்டி’ என்று நம்பர் சேவ் செய்யப்பட்டு இருந்ததைப் பார்த்தவன், என்ன மெசேஜ் பண்ணி இருக்கிறான்? என்று ஆவல் வர… ‘படிக்கலாமா, வேண்டாமா?’ என்று யோசித்தவன்…

பரவாயில்லை, ஒரு முறைதானே? படிக்கலாம், என்று நினைத்தவன் இருவரும் பேசிக்கொண்டதைப் படிக்க… அப்போது தான் நிலானியின் மேல் உண்மையாகவே விக்கி காதலில் இருக்கிறான் என்று கதிருக்கு புரிந்தது.

சீக்கிரமே ஏதாவது செய்து விக்கியின் காதலுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவன், அவன் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

முத்து தாத்தா பாலைக் கொடுத்து ஆதிக்குக் கொடுக்கச் சொல்லி துர்காவை அவர்கள் அறைக்குப் போகச் சொல்ல…

பால் டம்ளருடன் யோசனையுடனே படிகளில் ஏறி ரூம் வாசல் வரை வந்தவள், உள்ளே செல்ல யோசனையாக அங்கேயே நின்றிருந்தாள்.

இன்று காலையில் இருந்து ஆதி, துர்காவிடம் நடந்துகொள்ளும் விதமே வித்தியாசமாக இருக்க… போதாக்குறைக்கு வீட்டிற்கு வந்த பிறகும் அவன் தன்னிடம் என்றும் இல்லாமல் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதும், தன்னை நெருங்கி வருவதும் அவளுக்குப் புதிதாகத்தான் இருந்தது.

என்னதான் அவனை காதலித்தாலும், ஆதியின் இந்தத் திடீர் மாற்றமும், அவன் அருகாமையும் அவளை ஏதோ செய்தது. உள்ளே செல்லலாமா…. வேண்டாமா…. நேற்று நான் ஆதியைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தது சரியா? தவறா? என்று யோசித்துக்கொண்டே கதவருகே நின்றிருந்த துர்காவை, உள்ளிருந்து கவனித்துக் கொண்டிருந்த ஆதி, “இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நிக்கப் போறீங்க? உள்ள வரப் போறீங்களா இல்லையா?” என்று உள்ளே இருந்து சத்தமிட…

இவ்வளவு நேரம் தான் வெளியில் நின்றிருந்ததை ஆதி கவனித்துக் கொண்டுதான் இருந்தான் என்று நினைத்ததும் துர்காவுக்குப் பக்கென்று இருந்தது.

ஆதியின் குரல் கேட்டதும் துர்காவுக்கு வியர்த்துவிட… தன் சேலைத் தலைப்பைக் கொண்டு முகத்தைத் துடைத்தவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நீண்ட மூச்சை ஒன்று இழுத்துவிட்டவள், கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே வருவதைப் பார்த்துக் கொண்டே, சேரில் அமர்ந்து கையில் புக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்த ஆதி, புக்கைப் படிப்பது போலப் பாவனை செய்துகொண்டு, ஓரக் கண்ணால் துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் உள்ளே வருவது தெரிந்தும், தன்னைத் திரும்பியும் பார்க்காமல் அமர்ந்து தீவிரமாகப் புக்கைப் படித்துக் கொண்டிருக்கும் ஆதியைப் பார்த்த துர்காவுக்கு… நம்ம வரோம்னு தெரிஞ்சும் திரும்பி கூடப் பார்க்க மாட்டேங்குறான். இவனுக்குப் பயந்துட்டா இவ்வளவு நேரம் உள்ள வராம வெளியவே நின்னுட்டு இருந்தோம்? என்று முனகியவள் அவன் அருகில் வந்து, “ஆதி!” என்று அழைத்தாள்.

“என்ன? சொல்லு துர்கா…” என்று அவளை நிமிர்ந்தும் பாராமல் கேட்க… “முத்து தாத்தா இந்தப் பாலை உன்கிட்ட கொடுக்கச் சொல்லி கொடுத்துவிட்டார்,” என்று கையில் இருந்து பாலை அவனிடம் நீட்டினாள்.

அவள் கையில் இருந்த பால் டம்ளரையும் பார்த்தவன் அப்படியே நிமிர்ந்து துர்காவின் முகத்தைப் பார்த்தான்.

பாலை வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க… “என்ன ஆதி அப்படிப் பார்க்கிற? இந்தா குடி. சூடு ஆறிடும்,” என்றாள்.

“சரி குடிக்கிறேன். நீ அங்க வெச்சுட்டுப் போ…” என்றான். “ம்ம்… சரி,” என்றவள் அவன் அருகில் இருந்த மேஜையில் பாலை வைத்துவிட்டு, ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு உடை மாற்றச் சென்றாள்.

அவள் சென்றதும் பாலை எடுத்து குடித்தவன், மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்தான். துர்கா ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வர…

அவளைப் பார்ப்பதற்காகத் தலையை நிமிர்த்திய ஆதி, துர்காவைப் பார்த்ததும் ஃப்ரீஸ் ஆகி அப்படியே நின்றான்.

திருமணம் ஆன புதிதில் அவள் இரவு உடை மாற்றிக்கொண்டு வந்த போது பார்த்தவன், பிறகு ஆபீஸ், ஃபங்ஷன் என பிஸி ஆகிவிட, அவளை இவ்வளவு நாள் சேலையிலேயே பார்த்துக்கொண்டு இருந்தவன்… இப்போது இரவு அவள் எப்போதும் அணியும் பனியனும், குட்டி டிரௌசரும் அணிந்ததைப் பார்த்துத்தான் ஆதி இப்படி அசையாமல் அமர்ந்திருந்தான்.

துர்கா நேராக வந்து அங்கிருந்த கண்ணாடியின் முன் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த க்ரீமில் இருந்து ஒன்றை எடுத்துத் தன் உள்ளங்கையில் ஊற்றி, அதை இரண்டு கைகளாலும் தேய்த்தவள், தன் முகம், கழுத்து எனத் தேய்க்கத் துவங்கினாள்.

அவள் தன் முகத்தைக் க்ரீம் கொண்டு பூசிக்கொண்டு மசாஜ் செய்து கொண்டு இருக்க… ஏற்கனவே அவள் முகம் பளீரென இருக்க, இப்போது இந்த க்ரீமை பூசிக்கொண்டிருக்க அவள் முகம் மேலும் தகதகவென மின்னியது.

முகத்தில் தேய்த்தவள், பின் மறுபடியும் தன் கையில் வேறு ஒரு க்ரீமை ஊற்றியவள், அதைத் தன் கைகள் இரண்டிலும் மாறி மாறிக் தேய்க்க… அவள் கைகளில் க்ரீமைத் தேய்க்கும் போது, கையை மேலே தூக்கவும், கீழே இறக்கவும் என அவள் பூசிக்கொண்டிருக்க… அவள் உடலும் அதற்கு ஏற்ப வளைவதும், குலுங்குவதும் என இருக்க… ஒரு பெருமூச்சோடு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

கைகளில் தேய்த்துவிட்டு, தன் கால்களுக்குத் தேய்பதற்காகக் கீழே குனிந்தவள், எதேச்சையாக ஆதியைப் பார்க்க… அவன் கண் இமைக்காமல் துர்காவையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

துர்கா குனியவும், அவள் குனிந்ததும் பனியன் லூஸாக இருந்ததால் அவள் மென்மைகள் லேசாக மேலிட்டு அவன் கண்களுக்கு விருந்தாக… ஆதியின் மனம் எவ்வளவு முயன்றும் அவள் அழகைப் பார்க்காமலும், ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

ஆதி எவ்வளவு முயன்றும் அவன் கண்களை அவளிடம் இருந்து பிரிக்கவே முடியவில்லை. அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த துர்கா, “ஆதி…” என்று அழைத்தாள்.

எங்கே அவனுக்குக் கேட்டால் தானே? அவன் தான் துர்காவின் அழகில் மயங்கி அப்படியே இருக்கிறானே. தான் அழைத்தும் ஆதி எதுவும் பேசாமல் இருக்க… அவன் எங்கே பார்க்கிறான் என்று அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க… அவன் பார்வை சென்ற இடம் கண்டதும் அதிர்ந்தவள், தன் ஒரு கையால் பனியனை உடலோடு ஒட்டிப் பிடித்தவள் வேகமாக எழுந்து, “ஆதி….” என்று சத்தமாக அவனை அழைத்தாள்.

இவ்வளவு நேரம் எவ்வளவு முயன்றும் வெளிவராதவன், துர்காவின் குரல் கேட்டதும் தெளிவு வந்தவன் போல, எதுவும் நடக்காதவன் போல நிமிர்ந்து துர்காவின் முகத்தைப் பார்த்து, “என்ன துர்கா? ஏன் என்னைக் கூப்பிட்ட?” என்றான்.

அவன் இப்படிப் பேசவும் துர்காவுக்கு என்னப் பேசுவது என்று ஒரு கணம் மறந்து போனது. இப்போ எதுக்காக நான் இவனை அழைத்தேன்? ஆனால் இவன் எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லாதவன் போல எவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறானே! என்று நினைத்தவள்,

“ஆதி, இப்போ… இப்போ… நீ என்ன பண்ணிட்டு இருந்தே?” என்று கேட்டாள். “நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்?” என்று அதே கேள்வியை அவளைப் பார்த்துக் கேட்க… இவன் என்ன இப்படி மாறிவிட்டான்? என்று நினைத்தவள்.

“இப்போ நீ என்னை எங்கே பார்த்துட்டு இருந்தே…” என்று திக்கித் திணறி கேட்டுவிட்டாள். “நான் எங்க பார்த்தேன்னு உனக்குத் தெரியலையா?” என்றான்.

அவள் தான் கேட்ட கேள்விக்கு ஏதாவது சொல்லிச் சமாளிப்பான் என்று நினைத்திருந்தவள், ஆதியின் இந்தக் அதிரடி பதிலில் எதுவும் பேச முடியாமல் நின்றாள்.

ஆதி எதுவும் பேசாமல் இருந்த அவளையே பார்த்தவன், எழுந்து அவள் அருகில் வர….

“க… ஆதி….” என்று பதட்டத்தில் பின்னால் நகர….

“எங்க பின்னாடி போற….” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வர…

“ஆதி… இப்போ எதுக்கு என் கிட்ட வர?” என்று கேட்டுக்கொண்டே பின்னால் நகர…

“எதுக்குக் கிட்ட வருவேன்னு உனக்குத் தெரியலையா?” என்றவன் அவள் அருகில் நெருங்க….

துர்கா பின்னால் நகர… அதற்கு மேல் நகர முடியாமல் பின்னால் இருந்த சுவற்றில் முட்டி நின்றவள், படபடக்கும் விழிகளால் ஆதியைப் பார்க்க…

“இப்படிக் கண்ணு வெச்சுட்டு என்னைப் பார்க்காதேன்னு நான் சொன்னேன் இல்ல….” என்று கூறிக்கொண்டே அவள் அருகில் வந்து, துர்காவின் இருபுறமும் கையை வைத்து அவளை அசைய விடாமல் தன் கைகளால் அணை போட்டவன், துர்காவையே பார்க்க… அவளும் அவனையே பார்த்தாள்.

EPISODE 46

துர்கா உடை மாற்றிவிட்டு வந்து தன் கை கால்களில் க்ரீமை அப்ளை செய்துகொண்டிருக்க… அவள் குனிந்திருப்பதைப் பார்த்த ஆதி, அவளிடம் இருந்து கண்களை விலக்க முடியாமல் தவிக்க… அவன் எங்கே பார்க்கிறான் என்று புரிந்துகொண்ட துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்கவும்… தன்னிலை வந்த ஆதி, மெதுவாக எழுந்து துர்கா அருகில் செல்ல… அவள் பயந்துகொண்டே பின்னால் நகர்ந்தவள், சுவற்றில் மோதி நின்றாள். அவளைத் தன் இருக்கை கொண்டு நகர்விடாமல் அணை கட்டிக்கொண்டு நின்றவன், “நான் எதுக்கு வந்தேன்னு உனக்குத் தெரியாதா துர்கா…?” என்று கேட்டான்.

“எது…. எதுக்கு வந்த ஆதி?” என்று துர்கா திக்கித் திணறி கேட்க… “அதைத்தான் நானும் உன்கிட்ட கேக்குறேன். நான் எதுக்கு வந்தேன் உனக்குத் தெரியாதா?” என்று ஆதி அவள் முகத்தின் அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து கேட்க… அவன் மூச்சுக்காற்றுச் சூடாக அவள் முகத்தில் படவும், அதில் துர்காவின் உடல் சிலிர்க்க… வார்த்தை வராமல் வெறும் தலையை மட்டும் ‘இல்லை’ என்பது போல இடவலமாக ஆட்டினாள்.

“நான் உன்ன எங்க பார்த்துட்டு இருந்தேன்னு நீ என்கிட்ட கேள்வி கேட்டியே, அதுக்குப் பதில் சொல்லத்தான் நான் இப்போ உன் பக்கத்துல வந்தேன்,” என்று ஆதி கூற… துர்காவுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் இதயம் வேகமாகத் துடிக்கும் ஓசை அவள் காதிற்குக் கேட்க…

ஆதி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் விழிவிரித்து அவனைப் பார்க்க… “என்ன அப்படிப் பார்க்கிற? நீதானே கேட்ட, எங்க பார்த்துட்டு இருக்கேன்னு. அதைச் சொல்லத்தான் உன் பக்கத்துல வந்தேன்,” என்றான்.

“அதை நீ அங்கிருந்து சொல்லி இருக்கலாமே ஆதி. இப்படிப் பக்கத்தில் வந்து அதுவும் இவ்வளவு க்ளோஸா நின்னு தான் சொல்லணுமா?” என்று துர்கா தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு மெதுவாக அவனிடம் கேட்க…

“அவ்வளவு தூரத்துல இருந்து ‘நான் எங்க பார்த்தேன்னு’ சத்தமா சொல்லணுமா உன்கிட்ட? நீ கூச்சப்படுவியே! அதனாலதான் உன் பக்கத்துல வந்து சொல்லலாம்னு வந்தேன்,” என்று கூற…

“அ… அது… அது எல்லாம் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ஆதி. நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல,” என்று துர்கா கூற… “எதுவுமே கேக்கலையா துர்கா….. இப்பதானே கேட்ட நீ அங்க இருக்கும் போது? கேட்டேயே…” என்று கூற…

“ம்ஹும்…. இல்ல…. இல்ல…. நான் எதுவுமே கேட்கல. என்னை விடு,” என்று அவன் மார்பில் தன் இரண்டு கைகளையும் வைத்து அவனைப் பின்னுக்குத் தள்ளப் போக… ஆதி அவன் வைத்திருந்த கையை எடுத்து, துர்கா தன் மார்பின் மீது வைத்திருந்த அவள் கைகளைத் தன் மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டவன் அவள் முகத்தைப் பார்க்க… துர்கா படபடக்கும் விழிகளோடு ஆதியையே பார்த்தாள்.

மெல்லக் குனிந்து துர்காவின் காதருகில், “சொல்லட்டுமா….” என்று ஹஸ்கி வாய்ஸில் ஆதி கூற… அவன் சூடான மூச்சுக்காற்று அவள் காதில் பட்டதும், கூச்சத்தில் அவள் முகமும் காதும் சிவந்துவிட… அதை ரசித்துக்கொண்டே, “வெறும் மூச்சுக்காத்து பட்டத்துக்கே உன் முகம் இப்படிச் சிவந்துடுச்சு,” என்று கேட்டவன்…

அவளை விட்டுப் பிரிந்து திரும்பி நடக்க… அவன் தன்னை எதுவும் செய்யாமல் சென்றதை நினைத்து துர்கா “அப்பாடா….” என்று மனதுக்குள் நினைத்து பெருமூச்சு விட…

அவளை விட்டுச் சென்றவன் திடீரென்று நிற்கவும், அவனைப் புரியாமல் பார்த்த துர்காவை ஆதி திரும்பிப் பார்த்தான். “நான் எனக்கு உரிமையானதைத்தான் பார்த்தேன். சொல்லப் போனால், நான் பார்க்கத்தான் எல்லாமே இருக்கிறது,” என்றவன் துர்காவை மேலிருந்து கீழாகத் தன் பார்வையாலேயே தின்று விடுவது போலப் பார்க்க…

அவன் பார்வை சென்ற இடமெல்லாம் துர்காவுக்கு உடல் கூசுவது போல இருக்க… தன்னிச்சையாக அவள் கைகள் அவள் உடலை மறைக்கப் போராட… அவள் கூச்சத்தில் தன் உடலை ஆதியிடம் இருந்து மறைக்க முயற்சிப்பதைப் பார்த்துச் சிரித்த ஆதி, “நீ என்ன வேணா இப்போ செஞ்சுக்கோ. நீ இப்ப மறைக்கணும்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு மட்டும்தான் சொந்தம். நான் உன்னை பார்க்க மட்டும் செய்யணும்னு அவசியம் இல்லை. அதை எடுத்துக்கவும் எனக்கு உரிமை இருக்கு. ஆனா, அதை நான் இப்ப எடுத்துக்க மாட்டேன். நேரம் வரும்போது நானே மொத்தமா எடுத்துக்குவேன். நான் உன்கிட்ட வந்து உன்னை மொத்தமா எடுத்துக்கப் போறேன். அப்போ நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கிறேன்,” என்று ஆதி மென்மையாக அவளைப் பார்த்துச் சிரித்துக் கூறிவிட்டுச் சென்று… துர்கா கொண்டு வந்து வைத்த பாலை எடுத்து, சேரில் அமர்ந்து அவளைப் பார்த்தவாறு அவள் இதழ்களைப் பார்த்தவாறு பாலைக் குடித்துக் கொண்டிருக்க…

துர்காவுக்கு அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவள் உச்சி முதல் பாதம் வரை உடல் கூசச் செய்ய… என்ன செய்வது என்று தெரியாமல் க்ரீம் பூசிக்கொண்டிருந்தவள், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு, வேகமாகச் சென்று பெட்டில் படுத்து, உடல் முழுவதும் மறைக்குமாறு பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

பாலைக் குடித்து முடித்த ஆதி, அவள் தன்னைப் பார்த்து கூச்சப்பட்டு கொண்டுதான் சென்று படுத்துவிட்டாள் என்று புரிந்தவன், சிரித்துக்கொண்டே சென்று அவனும் துர்கா அருகில் பெட்ஷீட்டை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டான்.

அந்த அறையே சத்தமின்றி அமைதியாக இருக்க, இருவரின் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது. துர்கா படுத்த சில நிமிடங்களில் நன்றாக உறங்கிவிட… அவள் சீரான மூச்சுக்காற்றே சொன்னது அவள் உறங்கிவிட்டாள் என்று.

அதுவரை துர்காவுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவன், மெல்ல அவள் புறம் திரும்பிப் படுக்க… துர்காவின் முதுகுதான் அவனுக்குத் தெரிந்தது.

அவள் முதுகையே வெறித்தவன், அவள் முகம் காண ஏக்கம் கொண்டவனாக, தூங்கிக்கொண்டிருக்கும் அவளைத் தன் புறம் திருப்பலாமா, வேண்டாமா என்று அவனுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தான்.

அதற்கு வேலை வைக்காமல் துர்காவே தூக்கத்தில் திரும்பிப் படுத்தாள். அவள் திரும்பியதும் தன்னை அறியாமலேயே ஆதியின் முகத்தில் புன்னகை பூத்தது.

சிறிய விளக்கு ஒளியில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு தூக்கம் மறந்து படுத்திருந்தான். தன் தோழியாக முதன் முதலில் அவளைக் காலேஜில் சந்தித்த ஞாபகங்கள் வந்து போக… அப்போது அவனுடன் பழகிய புதிதில் எப்படி இருந்தாளோ, இன்று வரை அதே போலத் தன் மீது அக்கறையும் பாசத்துடனும் இருக்கிறாள்.

என்னை யாராவது ஏதாவது சொன்னால், என்னை விட இவளுக்குத்தான் கோபம் அதிகமாக வருகிறது. என்னுடைய கோபத்தையும், என்னையும் சமாளிக்க இவள் ஒருத்தியால் மட்டுமே முடியும் என்பது உட்பட பல சிந்தனைகள் அவன் மனதில் ஓட… அவளையே வெறித்திருந்தான் ஆதி.

அப்போது அவன் வயிற்றின் மீது தன் கையைத் தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண்டே போட… முதலில் அதிர்ந்தவன், பின் மெல்லச் சிரித்துவிட்டு, இது வழக்கமாக நடக்கும் ஒன்று தானே, என்று நினைத்தவன்… அவன் வயிற்றின் மீது போட்டிருந்த துர்காவின் கையைப் பார்க்க… அந்தக் விளக்கொளியில் அவள் கையைப் பார்த்தவன்… அது மிகவும் மென்மையாக, பூப்போன்று மிருதுவாக, விரல்கள் எல்லாம் ஒல்லியாக இருந்தது.

அதை கவனித்தவன், “நல்லா சாப்பிட மாட்டியா துர்கா… நீ… பாரு உன் விரல் எல்லாம் எவ்வளவு ஒல்லியாக இருக்கு,” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டவன்… அவள் கையைத் தன் முகத்தருகில் கொண்டு வந்து அவள் உள்ளங்கையில் மிருதுவாக முத்தமிட்டான்.

அவள் கைக்கு முத்தம் வைத்தவன், தன் மார்பில் அவள் கையை வைத்துப் பிடித்துக்கொண்டவன் துர்காவைப் பார்க்க… அவள் நன்றாக ஆழ்ந்து மூச்சி விட்டுக்கொண்டிருந்தாள்.

துர்கா தூக்கத்தில் அமைதியாக ஒரு இடத்தில் படுக்காமல் நெளிய… அவன் உடல் அருகில் வந்து நெருங்கிப் படுத்துக்கொண்டாள். ஆதி அவள் இப்படி வந்து படுத்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்க்க…

துர்கா ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அவன் மீது தன் கைகளையும் காலையும் போட்டுக்கொண்டு, அவன் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு, அவன் உடலோடு தன் உடலை உரசி… அறையில் இருந்த ஏ.சி. குளிரில் உடல் லேசாக நடுங்க… ஆதியின் உடல் சூட்டிற்காக அவன் அருகில் நெருங்கிப் படுத்திருந்தவளை, அவள் இடுப்பில் கைபோட்டு மேலும் அவளைத் தன்னோடு சேர்த்துப் படுக்க வைத்தவன், அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்.

இவ்வளவு நெருக்கமாக அவள் உடல் உரசிக்கொண்டிருக்க… ஆதியின் உடல் சூடு அதிகமானது அவள் நெருக்கத்தால். அவளையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தவன், பின் மெல்ல அவளை விட்டு விலகி… மெத்தையின் அருகில் மேஜையில் வைத்திருந்த அவன் மொபைல் போனை எடுத்தவன்… அதில் கேமராவை ஆன் செய்து… அவள் முகத்தோடு முகம், உடலோடு உடல், மூக்கோடு மூக்கு உரசிக்கொள்ள மிக நெருக்கமாகப் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தான்.

செல்ஃபி எடுத்துக்கொண்டு அந்தக் போட்டோவைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டு, மறுபடியும் இரண்டு மூன்று போட்டோக்களை எடுத்தவன்… போனில் அதில் இருவரும் இருந்த அழகான ஒரு போட்டோவைத் தேர்ந்தெடுத்து, தன் மொபைலில் ஸ்கிரீனில் அந்தப் போட்டோவை வைத்துக்கொண்டான்.

அந்தப் போட்டோவை ஜூம் செய்து பார்க்க… அதில் அவன் முகம் முழுதும் கோபளங்களாக (காயங்களாக) தழும்புகளுடன் இருக்க… அவள் முகத்துடன் தன் முகத்தைப் பார்த்தவன், அவனுக்கே அவன் முகத்தைப் பார்க்க முடியாமல்…

ஸ்கிரீனில் சேவ் செய்த போட்டோவை டெலீட் செய்தவன், ஏதோ யோசித்தவனாகப் படுத்துவிட்டான். அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே சிறிது நேரத்தில் அவனும் உறங்கிப் போனான்.

*****

வெங்கடாச்சலம் காலையில் அந்தப் பெரிய பங்களாவில் இருந்த ஹாலில் சோஃபாவில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டே பேப்பர் படித்துக்கொண்டு இருக்க… விசாலாட்சி பூஜை அறையில் பூஜை செய்துகொண்டிருந்தார்.

பூஜை முடித்துக்கொண்டு வந்தவர், வெங்கடாச்சலத்தின் அருகில் அமர்ந்து அவருடன் காஃபி குடித்துக்கொண்டே, “ஏங்க…. நம்ம ஆதிக்கு நல்லபடியாகக் கல்யாணம் ஆனா, நான் அவனை நம் ஜோசியர் சொன்ன கோவிலுக்கு அழைச்சுட்டுப் போய் பரிகாரத்தைப் பூர்த்தி செஞ்சு கூட்டிட்டு வரலாம்னு இருக்கேங்க,” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும், வெங்கடாச்சலத்தின் முகம் அவ்வளவு நேரம் சாதாரணமாக இருக்க… இப்போதோ விசாலாட்சி சொன்னதைக் கேட்டதும், “அந்தப் பரிகாரத்தை அங்கே சென்று தான் பண்ண வேண்டுமா என்ன? இங்க இருக்கும் ஏதோ ஒரு கோவிலில் வைத்துப் பண்ணக் கூடாதா என்ன? அங்கே எல்லாம் நான் வரமாட்டேன்,” என்று கோபமாகக் கேட்டவர்.

“ஏங்க இப்படி எதுக்கு தேவையில்லாமல் கோச்சுக்கறீங்க. ஜோசியர் என்ன சொன்னார்? நம்ம பையனுக்குக் கல்யாணம் ஆன ஒரு மாசத்தில் கண்டிப்பா இந்தப் பரிகாரம் செய்யணும், அப்போதான் அவன் ஆயுள் பலம் கூடும்னு சொன்னாரில்லையா? அதுக்காகவாவது உங்க கோபத்தைக் குறைச்சுட்டு வரக் கூடாதா?” என்று கேட்டார்.

“அவள் இருக்கும் அந்த ஊருக்கு நான் வரமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா? நான் வரலை. நீங்க வேண்டுமானால் போய்ட்டு வாங்க,” என்றவர் எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே செல்லும் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த விசாலாட்சி, ஒரு பெருமூச்சொன்றை விட்டுவிட்டுத் தன் போனை எடுத்து ஆதிக்குக் கால் செய்தார்.

அப்போதுதான் ஜாகிங் சென்றுவிட்டு அவர்கள் கார்டனில் இளைப்பாறிக்கொண்டு இருந்தவன் கையில் இருந்த போன் அடிக்கவும், அவன் அம்மா தான் அழைத்திருந்ததைப் பார்த்தவன், அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், “அம்மா…. என்ன இவ்வளவு காலையில் கால் பண்ணி இருக்கீங்க? என்ன விஷயம்?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.

“அது ஒண்ணுமில்லைப்பா… சும்மா தான் கால் பண்ணினேன். ஜாகிங் போய்ட்டு வந்துட்டியாப்பா….?” என்றார்.

“ம்ம்ம்… வந்துட்டேன்மா… அப்படியே கார்டனில் கொஞ்சம் இயற்கை காற்றை சுவாசிக்கலாம்னு உட்கார்ந்து இருக்கேன்,” என்றான்.

“சரிப்பா… நாளைக்கு உனக்கு ஆஃபிஸில் ஏதும் முக்கியமான வேலை அல்லது மீட்டிங் எதுவும் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“ஏன்மா சுத்தி வளைச்சுக் கேக்குறீங்க? என்ன சொல்லணுமோ தயங்காம சொல்லுங்கம்மா. எனக்கு உங்களை விட மற்ற வேலை எல்லாம் எதுவும் முக்கியமில்லை,” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு உள்ளம் சந்தோஷத்தில் நிறைய விசாலாட்சி புன்முறுவலுடன், “நாளைக்கு நம்ம கும்பகோணம் போய்ட்டு வரலாமாப்பா…? ஜோசியர் ஒரு பரிகாரம் கண்டிப்பா நீ கல்யாணம் ஆன முப்பது நாளுக்குள்ள செய்யச் சொல்லி இருக்காங்க. அதான் போய்ட்டு வந்துரலாம்னு கேட்டேன்,” என்றார்.

சிறிது யோசித்தவன், “சரிமா… போய்ட்டு வரலாம்,” என்று ஆதி சொல்ல… “சந்தோஷம் ஆதி. நீ துர்காவைக் கூட்டிட்டு இன்னைக்கு நைட் நம்ம வீட்டுக்கு வந்துரு. காலையில் நேரமே கிளம்பணும்,” என்றவர். “அப்பறம் இன்னொரு விஷயம்ப்பா…” என்றார். “என்ன? சொல்லுங்கம்மா,” என்றான் ஆதி.

“உங்க அப்பாவையும் கூட்டிட்டுப் போகணும் அந்த கோவிலுக்கு. தாய், தகப்பன் என்ற முறையில் துர்காவின் அம்மா, அப்பாவும், நாங்க ரெண்டு பேரும் முன்ன இருந்து உங்களுக்கு இந்த பரிகாரம் செய்யணும்பா…. ஆனா உங்க அப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. அவரை எப்படியாவது அழைச்சுட்டுப் போகணும்பா…” என்றார்.

“சரிமா… அதை நான் பார்த்துக் கறேன். நானும் கும்பகோணத்தில் இருக்கும் நம்ம ஆஃபிஸிற்குத் துவங்கிய நாளில் இருந்து அப்பாவை அங்கே வரச் சொல்லி நிறைய முறை கேட்டிருக்கேன். ஆனா அவர் நம்ம வெளிநாட்டில் இருக்கிற ஆஃபிஸிற்கு எல்லாம் போய்விட்டு வருகிறார். ஆனால் இங்கே இருக்கிற கும்பகோணத்திற்கு வர மாட்டேங்குறார். நான் இதைச் சொல்லி எப்படியாவது அவரை வரவழைக்கிறேன் அம்மா…. நீங்க கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்கறேன்,” என்றான்.

“சரிப்பா. நான் துர்காகிட்ட அப்புறம் பேசுறேன். அவங்க அம்மா கிட்ட கூப்பிட்டு நான் விஷயத்தைச் சொல்லணும். நான் போனை வைக்கட்டுமா ஆதி?” என்று கூற… “சரிமா…” என்று போனை கட் செய்தான்.

விசாலாட்சி ஆதியிடம் பேசிவிட்டு வைத்தவர், துர்காவின் அம்மாவிடமும் விஷயத்தைக் கூறிவிட்டுப் போனை வைத்தவர். பூஜை அறையைத் திரும்பிப் பார்த்து, “கடவுளே! இந்த இருபத்தி எட்டு வருசமாப் போகாத ஊருக்கு அவரை கூட்டிட்டு வரேன். எப்படியாவது நான் நினைச்சதை நிறைவேற்றிக் கொடுங்க,” என்று தன் வேண்டுதலைக் கடவுளிடம் வைத்துவிட்டு நாளை செல்வதற்கு வேண்டிய வேலைகளைச் செய்யப் போனார்.

அவர் வேண்டுதல் பலிக்குமா? அப்படி இருபத்தி எட்டு வருடமாக கும்பகோணத்திற்கு மட்டும் ஏன் ஆதியின் அப்பா போகாமல் இருக்கிறார்? 🤔

EPISODE 47

துர்கா உடை மாற்றிவிட்டு வந்து தன் கை கால்களில் க்ரீமை அப்ளை செய்து கொண்டிருக்க… அவள் குனிந்திருப்பதைப் பார்த்த ஆதி, அவளிடம் இருந்து கண்களை விலக்க முடியாமல் தவிக்க… அவன் எங்கே பார்க்கிறான் என்று புரிந்து கொண்ட துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்கவும்… தன்னிலை வந்த ஆதி மெதுவாக எழுந்து துர்கா அருகில் செல்ல… அவள் பயந்துகொண்டே பின்னால் நகர்ந்தவள், சுவற்றில் மோதி நிற்க… அவளைத் தன் இருக்கை கொண்டு நகர்விடாமல் அணை கட்டிக்கொண்டு நின்றவன், “நான் எதுக்கு வந்தேன்னு உனக்குத் தெரியாதா துர்கா…?” என்று கேட்டான்.

“எது…. எதுக்கு வந்த ஆதி?” என்று துர்கா திக்கித் திணறி கேட்க… “அதைத்தான் நானும் உன்கிட்ட கேக்குறேன். நான் எதுக்கு வந்தேன் உனக்குத் தெரியாதா?” என்று ஆதி அவள் முகத்தின் அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து கேட்க… அவன் மூச்சுக்காற்றுச் சூடாக அவள் முகத்தில் படவும், அதில் துர்காவின் உடல் சிலிர்க்க… எதுவும் செய்ய வார்த்தை வராமல், வெறும் தலையை மட்டும் ‘இல்லை’ என்பது போல இடவலமாக ஆட்டினாள்.

“நான் உன்ன எங்க பார்த்துட்டு இருந்தேன்னு நீ என்கிட்ட கேள்வி கேட்டியே? அதுக்குப் பதில் சொல்லத்தான் நான் இப்போ உன் பக்கத்துல வந்தேன்,” என்று ஆதி கூற… துர்காவுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் இதயம் வேகமாகத் துடிக்கும் ஓசை அவள் காதிற்குக் கேட்க…

ஆதி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் விழிவிரித்து அவனைப் பார்க்க… “என்ன அப்படிப் பார்க்கிற? நீ தானே கேட்ட, எங்க பார்த்துட்டு இருக்கேன்னு. அதைச் சொல்லத்தான் உன் பக்கத்துல வந்தேன்,” என்றான்.

“அதை நீ அங்கிருந்து சொல்லி இருக்கலாமே ஆதி. இப்படிப் பக்கத்தில் வந்து, அதுவும் இவ்வளவு க்ளோஸா நின்னு தான் சொல்லணுமா?” என்று துர்கா தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு மெதுவாக அவனிடம் கேட்க…

“அவ்வளவு தூரத்தில் இருந்து ‘நான் எங்க பார்த்தேன்னு’ சத்தமா சொல்லனுமா உன்கிட்ட? நீ கூச்சப்படுவியே! அதனால தான் உன் பக்கத்துல வந்து சொல்லலாம்னு வந்தேன்,” என்று கூற…

“அ… அது… அது எல்லாம் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ஆதி. நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல,” என்று துர்கா கூற… “எதுவுமே கேக்கலையா துர்கா….. இப்பதானே கேட்ட நீ அங்க இருக்கும் போது? கேட்டேயே…” என்று கூற…

“ம்ஹும்….இல்ல…. இல்ல…. நான் எதுவுமே கேட்கல. என்னை விடு,” என்று அவன் மார்பில் தன் இரண்டு கைகளையும் வைத்து அவனைப் பின்னுக்குத் தள்ளப் போக… ஆதி ஹோட்டல் வைத்திருந்த (தடை செய்திருந்த) அவன் கையை எடுத்து, துர்கா தன் மார்பின் மீது வைத்திருந்த அவள் கைகளைத் தன் மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டவன் அவள் முகத்தைப் பார்க்க… துர்கா படபடக்கும் விழிகளோடு ஆதியையே பார்த்தாள்.

மெல்லக் குனிந்து துர்காவின் காதருகில் “சொல்லட்டுமா….” என்று ஹஸ்கி வாய்ஸில் ஆதி கூற… அவன் சூடான மூச்சுக்காற்று அவள் காதில் பட்டதும், கூச்சத்தில் அவள் முகமும் காதும் சிவந்துவிட… அதை ரசித்துக்கொண்டே “வெறும் மூச்சுக்காத்து பட்டத்துக்கே உன் முகம் இப்படிச் சிவந்துடுச்சு,” என்று கேட்டவன்.

அவளை விட்டுப் பிரிந்து திரும்பி நடக்க… அவன் தன்னை எதுவும் செய்யாமல் சென்றதை நினைத்து துர்கா “அப்பாடா….” என்று மனதுக்குள் நினைத்து பெருமூச்சு விட…

அவளை விட்டுச் சென்றவன் திடீரென்று நிற்கவும், அவனைப் புரியாமல் பார்த்த துர்காவை ஆதி திரும்பிப் பார்த்தான். “நான் எனக்கு உரிமையானதைத்தான் பார்த்தேன். சொல்லப் போனால், நான் பார்க்கத்தான் எல்லாமே இருக்கிறது,” என்றவன் துர்காவை மேலிருந்து கீழாகத் தன் பார்வையாலேயே தின்று விடுவது போலப் பார்க்க…

அவன் பார்வை சென்ற இடமெல்லாம் துர்காவுக்கு உடல் கூசுவது போல இருக்க… தன்னிச்சையாக அவள் கைகள் அவள் உடலை மறைக்கப் போராட… அவள் கூச்சத்தில் தன் உடலை ஆதியிடம் இருந்து மறைக்க முயற்சிப்பதைப் பார்த்துச் சிரித்த ஆதி, “நீ என்ன வேணா இப்போ செஞ்சுக்கோ. நீ இப்ப மறைக்கணும்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு மட்டும்தான் சொந்தம். நான் உன்னை பார்க்க மட்டும் செய்யணும்னு அவசியம் இல்ல. அதை எடுத்துக்கவும் எனக்கு உரிமை இருக்கு. ஆனா, அதை நான் இப்ப எடுத்துக்க மாட்டேன். நேரம் வரும்போது நானே மொத்தமா எடுத்துக்குவேன். நான் உன்கிட்ட வந்து உன்னை மொத்தமா எடுத்துக்கப் போறேன். அப்போ நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கிறேன்,” என்று ஆதி மென்மையாக அவளைப் பார்த்துச் சிரித்துக் கூறிவிட்டுச் சென்று… துர்கா கொண்டு வந்து வைத்த பாலை எடுத்து, சேரில் அமர்ந்து அவளைப் பார்த்தவாறு அவள் இதழ்களைப் பார்த்தவாறு பாலைக் குடித்துக் கொண்டிருக்க…

துர்காவுக்கு அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவள் உச்சி முதல் பாதம் வரை உடல் கூசச் செய்ய… என்ன செய்வது என்று தெரியாமல் க்ரீம் பூசிக்கொண்டிருந்தவள், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு, வேகமாகச் சென்று பெட்டில் படுத்து, உடல் முழுவதும் மறைக்குமாறு பெட்ஷீட்டால் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.

***

காலை எழுந்ததும் முதல் வேலையாக ஆதியைப் பார்க்கத்தான் விக்கி சமையல் அறைக்கு வந்தான்.

“என்ன விக்கி! இவ்வளவு காலையில் சீக்கிரமாக எழுந்துட்ட? தூக்கம் வரலையா உனக்கு?” என்று கேட்டாள் துர்கா.

“இல்லை துர்கா. அதெல்லாம் நல்லாத்தான் தூங்கினேன். ஆமா, நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று விக்கி கேட்க… “பார்த்தா தெரியலையா விக்கி? நான் டிபன் ரெடி பண்ணிட்டு இருக்கேன்,” என்றால் துர்கா.

“ஓ, ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கியா? சரி சரி,” என்று சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் துர்கா அருகிலேயே நின்றிருக்க… “சொல்லு விக்கி, ஏதோ கேட்கத்தானே வந்திருக்க? அப்புறம் ஏன் எதுவுமே கேட்காமல் அமைதியா நின்னுட்டு இருக்க? என்ன வேணும்னு சொல்லு,” என்று கேட்க… “அது ஒண்ணும் இல்லை துர்கா, எனக்குக் கொஞ்சம் லட்டு செஞ்சு தரியா?” என்று விக்கி கேட்டான்.

“என்னது லட்டா? ஏன் திடீர்னு லட்டு எல்லாம் கேக்குற?” என்று துர்கா கேட்க… “ஒண்ணும் இல்லை துர்கா… திடீர்னு லட்டு சாப்பிடணும் போல இருந்துச்சு. கொஞ்ச நாள் முன்னாடி நீ கூட ஆபீஸ்ல எனக்கு லட்டு செய்து கொண்டு வந்து தந்தயே. சூப்பரா இருந்துச்சு. திடீர்னு எனக்கு அந்த ஞாபகம் வந்துச்சு. அதனாலதான் எனக்கு சாப்பிடணும் போல இருக்குன்னு உன்கிட்ட வந்து கேட்டேன். ப்ளீஸ் துர்கா…. கொஞ்சமே கொஞ்சமா லட்டு மட்டும் எனக்கு செஞ்சு கொடு,” என்று விக்கி கெஞ்ச…

அவனைத் திரும்பி ஒரு நிமிடம் பார்த்தவள். “சரி, செஞ்சு கொடுக்கிறேன், போ,” என்று சொல்ல… “துர்கானா துர்காதான்… சூப்பர்! நான் போய் குளிச்சிட்டு வர்றேன். அதுக்குள்ள நீ லட்டு செஞ்சி வெச்சிரு,” என்று சொல்லிக்கொண்டு அவன் அறைக்குச் சென்றான் விக்கி.

அங்கே வந்த முத்து தாத்தா, “பாப்பா, நீங்க போய் விக்கி தம்பி கேட்ட மாதிரி லட்டு வேணா செய்யுங்க. நான் மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, துர்காவை லட்டு செய்யச் சொல்லிவிட்டு அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

துர்கா சென்று லட்டு செய்யத் தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து லட்டு செய்ய ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் போல வெளியே போன் பேசிவிட்டு உள்ளே வந்த ஆதி, கிச்சனில் துர்கா இருப்பதைப் பார்க்க… அவளைப் பார்ப்பதற்காகவே ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

ஆதி ஹாலில் இருப்பது கூடத் தெரியாமல் துர்கா வேலை பார்த்துக் கொண்டிருக்க… அவளையே விழுங்குவது போலப் பார்த்த ஆதி, துர்காவை மேலிருந்து கீழாக ரசிக்கத் தொடங்கினான்.

குளித்துவிட்டு ஈரத் தலையுடன் துண்டைக் கட்டிக்கொண்டு, நெற்றி வகுட்டில் குங்குமமும் கழுத்தில் பொன் தாலியும் அணிந்திருந்தவளின் நிறத்திற்கும், தாலியின் ஜொலிப்பிற்கும், அவள் கழுத்துக் குழியில் படிந்திருந்த வியர்வைத் துளியும் அவளை மேலும் அழகாகக் காட்ட… அவள் சங்கு கழுத்தில் இருந்து அவன் கண்கள் ஆதியின் கண்களில் வந்து தஞ்சம் புகுந்தது. அவள் வேலை செய்வதில் மும்முரம் காட்டுவதில் இருக்க… அவள் அசைவிற்கு ஏற்ப அவள் விழிகளும் நடனம் ஆடியது. அவள் செய்த உணவை ருசிபார்க்கக் கையில் எடுத்த லட்டைச் சிறிது பிய்த்து, தலையை மேலே உயர்த்தி வாயைத் திறந்து, பிய்த்த உணவை வாயில் போட்டவள்… தன் சிவந்த உதடுகளை மூடி அதன் ருசியை உணர்ந்து கொண்டே, கண்களை மூடி அதன் சுவையை மெய் மறந்து அனுபவித்தாள்.

அதைப் பார்த்த ஆதிக்கும் சாப்பிடும் எண்ணம் தோன்ற… ச்சே… இவள் சாப்பிடறதைப் பார்த்தால் எனக்குப் பசிக்கிறது, என்று நினைத்தவன் கண்கள் அவள் அங்கங்களை மேய்ந்து கொண்டே கீழே வர… அவள் மெல்லிய இடை அவன் கண்களைக் கவர… அதை இப்பொழுதே தொட்டுப் பார்க்க ஆவல் தோன்ற…

பேப்பர் படிப்பது போல நடித்தவன், கையில் இருந்த பேப்பரைக் கீழே வைத்துவிட்டு எழுந்து கிச்சன் வந்தவன் அவளையே பார்க்க… துர்காவோ ஆதி வந்தது தெரியாமல், கையில் நெய் தடவிப் பூந்தியை எடுத்து, கையில் வைத்து லட்டு செய்துகொண்டு இருந்தாள்.

அவள் கையில் அணிந்திருந்த மெல்லிய தங்க வளையல்கள் அவள் கை அசைவிற்கு ஏற்ப நடனம் ஆடி, லேசாக ஒளி எழுப்பிக்கொண்டு இருக்க… அவள் கையில் வைத்து உருண்டை பிடிக்கும்போது அதற்கு ஏற்ப அவள் உடலும் ஆட… அவள் அங்கங்கள் லேசாக அசைவதைப் பார்த்தவன் மூச்சு நின்று விடும் போல இருக்க… கண்கள் மூடி மூச்சை மெதுவாக இழுக்க… அப்போதும் துர்காவின் வாசம் அவன் நாசியில் ஏற… அவள் அவன் மூளைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.

கிச்சன் வாசலில் நின்றிருந்த ஆதியைப் பார்த்ததும் முத்து தாத்தா அவனை இங்கு பார்த்ததும் அதிர்ச்சியானவர். சமையல் அறை எங்கே இருக்கிறது என்று கேட்பவன் இன்று இங்கு வந்திருக்கிறானே என்று நினைத்தவர், அவனை “தம்பி…” என்று அழைத்தார்.

“சொல்லுங்க தாத்தா,” என்றான் அவரைப் பார்க்காமல், துர்காவைப் பார்த்துக் கொண்டு பேச… அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க அவருக்குப் புரிந்து போனது… சமையல் அறைக்கு ஆதி வந்த காரணம் என்ன என்று. அவன் மனைவியை அப்பட்டமாக ‘சைட்’ அடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவனைப் பார்த்தவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவர், துர்காவின் அருகில் வந்து, “பாப்பா, தம்பிக்கு என்ன வேணுமோ கேட்டு கொடுங்கம்மா. நான் போய் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டு வந்தேன். அதை போய்ப் பார்க்கிறேன்,” என்று கூறிவிட்டு வாசலை நோக்கிச் சென்றார்.

அவர் சென்றதும் திரும்பி வாசலைப் பார்க்க… ஆதி அவளை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான். அவனைப் பார்த்தவள், “ஏதாவது வேணுமா ஆதி?” என்றால்.

“நீ உன்னோட ஒர்க்கைக் கன்டினியு பண்ணு. நான் பார்த்துக்கறேன்,” என்றவன் கிச்சனிற்குள் வர… துர்கா அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக அவன் செல்லும் இடம் அவனைப் பார்க்கத் திரும்ப… “என்னை பார்க்குறது தான் உனக்கு ஒர்க்கா?” என்றான்.

துர்கா வேகமாக ‘இல்லை’ என்று தலையை ஆட்டிவிட்டு திரும்பி லட்டு பிடிக்க ஆரம்பித்தாள். அதுவரை எதையோ எடுப்பது போல சமையல் அறைக்குள் வந்தவன், துர்கா திரும்பி நின்று வேலை பார்க்கவும்… அவள் அருகில் இருந்த டம்ளரை எடுப்பது போல வந்தவன் கையை அவளைத் தாண்டிச் செல்லும்போது அவள் இடுப்பை வருடிவிட்டு கையை கொண்டு செல்ல… அவன் துர்காவின் இடையை வருடியதும், லட்டு பிடித்துக்கொண்டு இருந்தவள் அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிற்க…

அவள் இடுப்பைத் தாண்டி டம்ளரை எடுத்துவிட்டு மீண்டும் அவள் இடுப்பை உரசிக்கொண்டு கையைப் பின்னுக்கு எடுத்துக்கொண்டான். மறுபடியும் அவள் இடுப்பை உரசவும், கூச்சத்தில் துள்ளிக் குதித்துத் திரும்பி நிற்க… அவளைத் தாண்டி எதுவும் நடக்காதவன் போலச் சென்று தண்ணீர் எடுத்து குடித்தான்.

தன் இடுப்பைத் தடவி விட்டு எதுவும் தெரியாதவன் போலச் சென்று தண்ணீர் குடிப்பதைப் பார்த்த துர்காவுக்கு அவன் மீது கோபம் வந்தது.

எவ்வளவு கொழுப்பு இவனுக்கு! ஊருக்குப் போறதுக்கு முன்னால என்னிடம் எப்படி நடந்து கொண்டான். ஊருக்குப் போய் கூட அங்கே என்னிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டான். ஆனால் இப்போ ஊரில் இருந்து வந்ததில் இருந்து இவன் போக்கே சரி இல்லை, என்று இடுப்பை மறைத்தவாறு புடவையை இடுப்பில் சொருகினாள்.

இவனை இப்படியே சும்மா விட்டால் சரி வராது, என்று நினைத்தவள் “ஆ… ஆதி! இப்போ எதுக்கு என் இடுப்பைத் தடவினே?” என்று தைரியத்தை வரவழைத்துக் கேட்டுவிட்டாள்.

“நான் உன் இடுப்பைத் தடவினேனா?” என்று திருப்பிக் கேட்டான் ஆதி. துர்கா, “ஆமா நீதான் என் இடுப்பைத் தடவினே…” என்றவள்.

“இங்கே வந்து என்கிட்ட நின்னு டம்ளர் எடுக்கப் போகும் போது ஒரு தரம், டம்ளரை எடுத்த பிறகு ஒரு தரம்,” என்றால்.

“அப்டியா… எனக்கு ஒண்ணும் தெரியலையே,” என்றவன் அவள் அருகில் வந்து “நான் டம்ளரை எடுக்கும்போது நீ எப்படி நின்னுட்டு இருந்தே?” என்றான்.

“நான் இப்படி திரும்பி நின்னுட்டு இருந்தேன்,” என்றால். “சரி, அப்படி நீ நிக்கிற அப்போ நான் வந்து உன் இடுப்பை உரசினேனா…?” என்று கேட்டான். அவள் “ஆமா நீதான் வந்து என் இடுப்பை உரசினே,” என்று தன் இடுப்பைக் காட்டியவாறு பேசினாள்.

“எப்படி? இப்படி இழுத்து மூடி வெச்சிருக்க உன் இடுப்பை நான் உரசினேனா?” என்றான். அவள் அவனிடம் வாதிட இருந்த வேகத்தில் “இ…இல்ல, அப்போ என் இடுப்பில் சேலை மூடியிருக்கவில்லை,” என்றால்.

“பின்னே எப்படி இருந்துச்சு?” என்று ஆதி கேட்டான். “இதோ இப்படித்தான்,” என்று தன் சேலையை முதலில் இடுப்பு தெரிவது போலக் கட்டி இருந்ததைக் காட்டினாள்.

“ம்ம்ம்…. நீயா சொல்லு. இப்படி நல்லா ‘வழுவழுன்னு கழுவுற மீனுல நழுவுற மீன் மாறி’ வழவழன்னு இடுப்பை வெச்சிட்டு இருக்கிறதும் நீ… இப்படி ஒரு இடுப்பை வெச்சிருக்க…” என்றவன்.

“சரி, டம்ளர் இங்க இருக்குனு வெச்சுக்கோ. நான் அதை எடுக்க வரும்போது என் கை பட்டிருச்சா?” என்றான். துர்காவும் “ஆம்” என்று சொன்னதும் “எங்க நான் பாக்குறேன்,” என்றவன் கையில் இருந்த டம்ளரை மேடை மீது வைத்துவிட்டு அவளை முன்பு நின்றது போல நிற்கச் சொல்லிவிட்டு “இப்போ நான் டம்ளர் எடுக்கிறேன். நீயே பாரு,” என்றவன் கையை அவள் இடையைத் தாண்டிச் கொண்டு செல்ல… அவன் கை முன்பை விட இப்போது துர்காவின் இடையை நெருக்கமாகத் தழுவிச் சென்றது.

அவன் கை தன் இடையை உரசியதும் “பாரு… பாரு… இப்பவும் உன் கை இங்க தடவிட்டுப் போகுது. நான் சரியா தான் சொன்னேன்,” என்றால் துர்கா. “அப்டியே ஆமா… நீ சொன்னது போல என் கை உன் இடுப்பில் உரசுது தான்,” என்றவன். டம்ளரை எடுத்துவிட்டு வரும்போதும் வேண்டுமென்றே அவள் இடையை உரச… இப்போதுதான் துர்காவுக்கு உரைத்தது… அவன் அவளிடம் வேண்டுமென்றே வம்பு செய்து மறுபடியும் தன் இடையை உரசிக்கொண்டு இருக்கிறான் என்று. இதை அறிந்ததும் கோபத்துடன் வேக வேகமாக மூச்செடுத்தவள், “ஆதி….” என்று கத்த… “சொல்லு துர்கா…” என்று எதுவும் அறியாதவன் போல அவள் முகத்தைப் பார்க்க…

“இப்போ… இப்போ…. நீ என்ன பண்றேன்னு தெரியுமா?” என்று திரும்பி நின்று அவனை முறைத்துக்கொண்டு கேட்க… “தெரியுமே….” என்றவன் அவள் அருகில் வந்தவன், துர்காவைச் சமையல் மேடையுடன் சேர்த்து அழுத்தி நிறுத்தியவன்… அவள் உடலோடு தன் உடலை உரசுவது போல நெருக்கமாக நின்றவன்… அவன் இடையில் தன் கையை வைத்து வருடிக்கொண்டே “சொல்லு துர்கா….” என்றான் ஆதி.

“ஆதி, நீ… நீ… எ… என்ன பண்றேன்னு உனக்குத் தெரியுதா?” என்றாள். “ஓ… நல்லாவே தெரியுதே! என் துர்காவுடைய இடுப்பு எப்படி இவ்வளவு வழவழ என்று இருக்கிறது என்று தொட்டுப் பார்த்துட்டு இருக்கேன்,” என்றான்.

அவன் ஏற்கனவே அவள் இடையில் கைவைத்து அவளை உரசிக்கொண்டு இருப்பதே அவளால் கூச்சத்தைத் தாங்க முடியவில்லை. இப்போது இவ்வளவு நெருக்கமாக, உடலோடு உடல் உரசிக்கொண்டு, மூச்சோடு மூச்சு கலந்துவிடுவது போல நின்றிருந்த அவன் நெருக்கமும் அவளை ஏதோ செய்ய… அவள் முகம் சிவந்து இரத்தச் சிவப்பாகத் தெரிய… அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றவள்.

“ஆ… ஆதி… என்னைக் கொஞ்சம் விட்ரியா…” என்று உடல் நடுங்கியபடி கேட்டாள். “ஏன் துர்கா… போகணுமா…” என்றான் அவள் முகத்தைத் தன்னைப் பார்க்குமாறு உயர்த்தி கேட்க… அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் துர்கா கண்களை மூடிக்கொள்ள…

அவள் ரோஜா இதழ் இவனைச் சுண்டி இழுக்க… அவள் இடையை வருடிக்கொண்டு அதன் ஸ்பரிசம் உணர்ந்தவன், அவள் சிவந்த முகமும், ரோஜா இதழும் அவன் உடல் உணர்வுகளைத் தூண்டி விட… பட்டென்று அவள் இதழைச் சிறை செய்தான்.

ஏற்கனவே அவன் நெருக்கம் அவளை நிலை குலையச் செய்ய… இப்போது இப்படி உரிமையாக வந்து அவள் இதழைச் சிறை செய்தவனிடம் இருந்து விடுபடத் தோன்றாமல், அவன் தரும் முத்தத்தைக் கண்மூடி ஏற்றுக் கொள்ள… தன்னைத் தடுக்காமல் அமைதியாக நிற்கும் துர்காவைப் பார்த்தவன், அவளிடம் மேலும் நெருங்கி ஆழமாக, மிக ஆழமாக முத்தத்தை வழங்கிக்கொண்டு இருந்தான்.

துர்காவின் உதடுகளைப் பார்க்கும் போதெல்லாம் எழும் தன் உணர்வுகளை இப்போது கடவிழ்த்து விட்டது போல… ஆதியின் உணர்வுகள் அவனைத் தூண்டி விட… அவள் இதழை அணுஅணுவாக ரசித்து ருசித்துக்கொண்டு இருந்தான். ஒரு கையால் அவள் பின் தலையில் கை கொடுத்து அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டு, மறுகையால் அவள் இடையை வருடிக்கொண்டு என்று அவள் உடலோடு தன் உடல் உரசிட நின்றிருக்க… இங்கே துர்காவின் நிலை அவன் உணர்வுகளோடு போட்டி போட முடியாமல் அவன் கைக்குள் அடங்கிவிட்டாள்.

EPISODE 48

ஆதி சமையல் அறையில் வேலை செய்துகொண்டிருந்த துர்காவைப் பார்த்துவிட்டு அங்கே வர… அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி முத்து தாத்தா கார்டனில் வேலை இருக்கிறது என்று கூறி வெளியே சென்றுவிட்டார். துர்காவைச் சீண்டி அவள் இடையை வருட… அவள் “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டதற்கு, அவளிடம் வார்த்தையால் பதில் கூறாமல் முத்தத்தால் பதிலளித்தான்.

அவள் முத்தத்தில் கரைந்துகொண்டு இருந்தவன், துர்கா மூச்சுக்காற்றுக்குச் சிரமப்படுவதை உணர்ந்தவன்… அவள் இதழை மெல்ல விடுவித்து அவளுக்கு மூச்சுவிட இடம் கொடுத்தவன் அவள் முகத்தைப் பார்க்க… ஏற்கனவே சிவந்திருந்த முகம் மேலும் சிவந்து இருந்தது. அவள் இதழ் அவன் கொடுத்த முத்தத்தில் லேசாகத் தடித்து வீங்கி இருக்க… அவன் பற்கள் பட்டு இதழ் ஓரத்தில் லேசாக இரத்தம் வந்திருந்ததைப் பார்த்தவன், தன்னையே மனதுக்குள் இப்படி காயம் ஆகும் அளவுக்கா முத்தம் கொடுப்பாய்? என்று திட்டிக்கொண்டான்.

அவள் முகத்தைப் பார்க்க அவள் சிவந்த முகம் ஆதி முத்தமிட்டதால் மேலும் சிவந்து இருக்க… அவன் அவளை விட்டுப் பிரிந்து நின்றது கூடத் தெரியாமல் கண்மூடி நின்றிருந்தவளை ரசித்தவன், பின் அவள் இடையில் இவ்வளவு நேரம் வருடிக்கொண்டு இருந்தவன், ‘நறுக்கென்று’ அவள் இடையில் கிள்ளிவிட… “ஷ்….” என்று அவன் கிள்ளியதால் சுயம் வந்தவள், கை தன் இடுப்பைத் தேய்த்துக்கொண்டு அவனைப் பார்த்தவள்… அவனிடம் மறுபடியும் ஏதாவது கேட்டு திரும்பவும் அவன் எதுவும் செய்துவிடுவான் என்று எதுவும் பேசாமல் அவனை முறைத்தாள்.

“என்ன துர்கா…. அப்படிப் பார்க்கிற?” என்றான். “நான் உன்னைப் பார்க்கிறேனா?” என்றால் துர்கா கோபத்துடன். “ஆமாம்,” என்றவன் “ப்பா…. செம்ம டேஸ்ட்….” என்றான் அவள் இதழைப் பார்த்துக் கொண்டு. அவன் அவள் இதழைச் சுவைத்துவிட்டு ‘லட்டு டேஸ்டா இருக்கு’ என்று சொல்கிறானே, எப்படி? என்று யோசித்தவள்… சற்று முன் அவள் லட்டை சுவை பார்த்தது நினைவுக்கு வர அதிர்ந்தவள், இவன் என்ன இவ்வளவு மாறிவிட்டான்? என்று அவனை முறைத்துக்கொண்டே பார்த்தவள், “ஆதி…” என்று அவள் கடுமையாக அவனை அழைக்க…

தான் சொன்னதின் அர்த்தம் அவளுக்குப் புரிந்திருக்கும் என்று அவள் கடுமையான குரலிலேயே தெரிந்துகொண்டவன். “இல்ல, லட்டு செம்ம டேஸ்டா இருக்கு,” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் இதழைப் பார்த்து கூறியவன் குனிந்து அவள் இதழைத் தன் இதழால் ஒற்றி எடுத்தவன், அவளை விட்டு நகர்ந்தவன் “சரி துர்கா… நீ போய் வேலையைப் பாரு. நான் வந்த வேலை முடிந்தது,” என்று சொல்லிவிட்டு, அவள் அவனை வெறிக்கொண்டு முறைப்பதைப் பார்த்தும் கவனிக்காதவன் போலத் திரும்பிச் சென்று சோஃபாவில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

துர்கா அவனையே பார்த்துக் கொண்டு இருக்க… அப்போது அங்கு வந்த கதிரும், விக்கியும் ஹாலில் ஆதியுடன் அமர… கீர்த்திகா கிச்சனில் துர்காவைப் பார்த்துவிட்டு உள்ளே வர… அவள் கைகளில் லட்டு பிடிப்பதற்காகத் தேய்த்த படி எதுவும் செய்யாமல் நின்றிருந்தவளைப் பார்த்த கீர்த்திகா, “அக்கா என்ன செய்ற? கை எல்லாம் எண்ணெய்யா இருக்கு,” என்று கேட்டுக்கொண்டு வந்த கீர்த்திகா அருகில் இருந்த லட்டுகளைப் பார்த்தவள்…

வேகமாக வந்து ஒரு லட்டைக் கையில் எடுக்க… அதைப் பார்த்த விக்கி ஹாலில் இருந்து வந்தவன், “கீர்த்து, அந்த லட்டு நான் செய்யச் சொன்னேன். அது எல்லாம் எனக்கு மட்டும்தான். நீ கையில் இருக்குற லட்டை எடுத்த இடத்திலேயே வை,” என்றான்.

அவன் சொன்னதும் கீர்த்திகாவின் முகம் சோகமாகி விட, “அண்ணா…. ஒரு லட்டு கூட நான் சாப்பிடக் கூடாதா?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

அவளைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் பிள்ளையாருக்குச் செய்த லட்டுவை அவருக்கு மட்டுமே படைக்க வேண்டும் என்று நினைத்தான். அதனால் தான் விக்கி அப்படிச் சொன்னான்.

ஆனால் கீர்த்திகாவைப் பார்க்கப் பாவமாக இருக்க… “சரி, இது ஒண்ணு மட்டும் சாப்பிட்டுக்கோ. நான் அவர் கிட்ட சொல்லி சாரி கேட்டுக்கிறேன்,” என்று விக்கி கூற…

அவனைப் புரியாமல் பார்த்த துர்காவும், கீர்த்திகாவும், “யாருகிட்ட சாரி கேட்கணும் விக்கி?” என்று துர்கா கேட்டாள்.

“அய்யய்யோ…. அவசரத்தில் உளறி விட்டேனே,” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன். “அது… அது… ஒண்ணுமில்ல துர்கா… வேற ஏதோ யோசனையில் சொல்லிவிட்டேன்,” என்றான்.

அதைக் கேட்டதும், “ஆமா ஆமா, எங்க விக்கி அண்ணாவுக்கு நேற்று நைட்டில் இருந்து வேற யோசனை தான்,” என்று கீர்த்திகா கூற… அவளை முறைத்த விக்கி, “சும்மா இரு…” என்று அவளிடம் ஜாடை செய்ய… இதை துர்கா கவனித்துவிட்டாள்.

“ஏய்… இங்க என்ன நடக்குது? நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தெரியாமல் ஏதோ ஜாடை பேசிக்கிறீங்களே. என்னன்னு ஒழுங்கா சொல்லுங்க,” என்று துர்கா கேட்க…

“அதெல்லாம் ஒண்ணுமில்லை துர்கா… சும்மா தான்…” என்று இழுக்க… அதற்குள் ஹாலில் இருந்த கதிர், “நான் சொல்றேன் துர்கா… நேற்று நைட்டில் இருந்து அய்யா ஃபுல் லவ் மூடிலேயே இருக்காரு உனக்குத் தெரியுமா?” என்றான் கதிர்.

“என்னடா… கதிர் சொல்ற? விக்கிக்கு லவ்வா…. என்னால் நம்பவே முடியலையே.. யார்ரா… அந்த லவர்? நம்ம விக்கியை லவ் பண்ற அளவுக்குப் பொறுமைசாலியாக இருக்குறது?” என்று துர்கா கேட்டாள்.

“அக்கா நான் சொல்றேன்… நான் சொல்றேன்,” என்று கீர்த்திகா முந்திக்கொண்டு வர… “ம்ஹூம்… இதுக்கெல்லாம் முதல்ல வா… படிப்புல மட்டும் கோட்டை விட்டிரு,” என்று விக்கி அவளைக் கலாய்க்க…

“அக்கா…. பாரு… என்னைப் எப்படி எல்லாம் டீஸ் பண்றாங்கன்னு,” என்று கீர்த்திகா சிணுங்க… “டேய் விக்கி அவளை ஏன்டா கிண்டல் செய்ற? அவ மெதுவா எல்லா அரியரையும் கிளியர் பண்ணுவா…” என்று மீனுவும் அவர்களோடு சேர்ந்து கீர்த்திகாவைக் கிண்டல் செய்ய… “அக்கா நீயுமா…” என்று சிணுங்கிக்கொண்டே ஹாலில் இருந்த ஆதி அருகில் வந்தவள், “மாமா…. நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க. எல்லாரும் என்னைக் கிண்டல் செய்றாங்க,” என்று அவனிடம் புகார் செய்தால்.

“என்ன சப்போர்ட்? எதுக்கு சப்போர்ட்?” என்று அவன் இதுவரை இவர்கள் பேசியது எதுவும் கவனிக்காதவன் போலக் கேட்க…

“சுத்தம்… உங்க கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன் பாருங்க,” என்றவள். “டேய் விக்கி அண்ணா…. இரு இரு. ஒரு லட்டுவிற்காக என்னைக் எவ்வளவு கிண்டல் செய்றே? உன்னோட லவ்வை நான் ஒண்ணு சேர விடாமப் பிரிக்குறேனா இல்லையா பாரு,” என்று கூற…

“ஐயோ கீர்த்து…. அப்படி எல்லாம் செஞ்சுராதடா… அண்ணா பாவமில்லையா…” என்று விக்கி கெஞ்ச… “பாவமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை போடா….” என்று சொல்லிவிட்டுத் தன் போனை எடுத்து “இரு இரு. நான் போன் போடட்டும்,” என்று “நேற்று நிலானியிடம் உன்னை அன்ப்ளாக் பண்ணச் சொல்லி, உனக்கு சப்போர்ட் பண்ணி அவகிட்ட உன்னைப் பத்தி நிறைய பில்டப் எல்லாம் பண்ணி, அவகிட்ட பேசிப் பேசி சமாதானம் செஞ்சு உன் கூடப் பேச வெச்சேன் இல்ல. இப்பவே அவ கிட்ட போன் பண்ணி இது எல்லாம் எதுவும் வேணாம். எங்க அண்ணா நல்லவன் இல்லை. அவன் ரொம்ப மோசமானவன், பொம்பளைப் பொறுக்கி, தண்ணி நிறைய அடிப்பான், என் அண்ணன் ஒரு செயின் ஸ்மோக்கர், சிகரெட்டை வாயில் வைத்தால் எடுக்கவே மாட்டான் அது இதுன்னு சொல்றேன் பாரு,” என்று கீர்த்திகா சொல்லிக்கொண்டே நிலானிக்கு போன் செய்யப் போக…

வேகமாக வந்து அவள் கையில் இருந்த மொபைலை பிடிங்கியவன் “அண்ணா பாவமில்லையா….” என்று அவளிடம் கெஞ்ச…

அப்போது கையில் தட்டுகளில் லட்டுவுடன் வந்த துர்கா ஒரு லட்டுக்காக உன் அண்ணாவோட காதலை இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லிட்டியே என்று துர்கா கிண்டல் செய்ய…

அப்போதுதான் கீர்த்திகாவும், விக்கியும் “அவசரப்பட்டு உளறி விட்டோமே” என்று உணர்ந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க… துர்கா சிரித்துக்கொண்டே எல்லோருக்கும் லட்டுவைக் கொடுத்தாள்.

“அப்பறோம், சொல்லு விக்கி, யார் அந்த நிலானி?” என்று கதை கேட்பது போல உட்கார்ந்து கேட்க…

“அது… அது வந்து… துர்கா….” என்று தயங்கியவன், இனி மறைப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த விக்கி, முதன் முதலில் நிலானியைச் சந்தித்தது முதல் நேற்று இரவு பேசியது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.

இதை எல்லாம் கேட்டு முடித்த துர்கா, “எப்படியோ உனக்கு ஒரு காதலி கிடைச்சுட்டா…. எடுத்ததும் அவகிட்ட தடாலடியாப் போய் ‘லவ் பண்றேன்’, ‘மாமான்னு கூப்பிடுன்னு’, ‘ரொமான்ஸ் பண்றேன்னு’ எதுவும் பண்ணி வைக்காதே. முதல்ல அவ மனசுல நீ இருக்கியா? உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா…. இல்லை அப்படி அவள் மனசில நீ இல்லைனா… அவ மனசுல இடம் பிடிக்கிற மாதிரி, அவளுக்குப் பிடிச்ச விஷயம் எல்லாம் என்னன்னு தெரிஞ்சுட்டு அவ மனசுல இடம் பிடிக்கிற வழியைப் பாரு. ‘தாட் பூட்னு’ எதுவும் செஞ்சு நார்மலாகப் போற விஷயத்தை நீயே கெடுத்துக்காதே,” என்று துர்கா விக்கிக்கு அறிவுரை வழங்கினாள்.

துர்கா கூறியதை எல்லாம் அவளை ரசித்துக்கொண்டே கேட்டவன். துர்கா சொல்றதும் சரி தான், என்று அவள் சொல்லியதை எல்லாம் யோசித்தவன். முதலில் அவள் மனதில் என்னைப் பற்றிக் என்ன நினைக்கிறாள்? அவள் மனதில் நான் இருக்கிறேனா? அவளுக்கு என்ன எல்லாம் பிடிக்கும், எது எல்லாம் பிடிக்காது என்று கண்டுபிடிக்க வேண்டும். என்று நினைத்தவன், அவளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்வது? யாரிடம் கேட்டால் துர்காவைப் பற்றித் தெரிந்துகொள்வது? என்று நினைத்தவன் நினைவில் கீர்த்திகா தான் முதலில் வந்தாள்.

சரி அப்போ கீர்த்திகாவிடம் நிலானியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதே போலக் கதிருக்கும் விக்கிக்கும் கூடத் துர்காவைப் பற்றி நன்றாகத் தெரியுமே. என்னை விட இவர்கள் மூவரும் தான் துர்காவிடம் நெருக்கமாக இருப்பவர்கள். இவர்களிடம் எப்படி கேட்பது? என்று யோசித்துக் கொண்டிருக்க…

“மாமா… மாமா…” என்று கீர்த்திகா அழைத்தாள். “என்ன கீர்த்து?” என்று ஆதி கேட்டான். “என்ன மாமா? எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க. என்ன ஆச்சு?” என்று கேட்டாள். “ஒன்றுமில்லை கீர்த்து,” என்றவன். “நீ இன்று காலேஜ் போகலையா?” என்றான். “இல்லை மாமா. காலையில் அம்மா நேரமே கால் பண்ணினாங்க. ‘நாளைக்கு நாம் எல்லாரும் கும்பகோணம் கோவில் போகணும்னு சொல்லி கால் பண்ணி இருந்தாங்களாம். அதனால ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து என்னைத் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்காங்க மாமா…’ நான் கடைக்குப் போகணும் மாமா,” என்றாள். உடனே துர்காவும், “ஆனா கீர்த்து, அத்தையும் என்கிட்ட சொன்னாங்க. நீ போகும்போது சொல்லு நானும் வரேன். எனக்கும் கோவிலுக்குக் கொண்டு போக வாங்க வேண்டி இருக்கு,” என்றாள்.

உடனே விக்கி “அண்ணா, நீங்க எங்க கூட வரீங்களா?” என்று கேட்டான். “இல்லை தங்கச்சிமா… இங்க ஒருத்தன் இருக்கான். ஆபீஸ் போகலைனா எங்களை முறைச்சே கொன்னுருவான்,” என்று ஆதியைக் ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“என்ன அண்ணா வரலையா எங்க கூட நீங்க? அப்போ… சரி பரவாயில்லை. நான் ஷாப்பிங் போறேன்னு சொன்னதும், நிலானிக்குக் கால் பண்ணி ஷாப்பிங் போறேன்னு அவளை என்கூட வரச் சொன்னேன். அப்படியே நீங்களும் வந்தீங்கன்னா, உங்களுக்கு அவ கூடப் பழக ஈஸியா இருக்கும்னு நினைச்சேன்,” என்றால்.

கீர்த்திகா நிலானி அவளுடன் ஷாப்பிங் வருவாள் என்றதும் தான் தாமதம், “கீர்த்துமா, இன்னுமா நீ கிளம்பலை? நேரம் ஆகுது. சீக்கிரம் போய் ரெடி ஆகும்மா… நாம போகலாம்,” என்றான்.

“அண்ணா அப்போ ஆபீஸ்…” என்று இழுத்தாள் கீர்த்திகா. “அது கிடக்குதுமா. இன்னைக்கு இல்லைன்னா நாளைக்குப் போய்க்கலாம்,” என்றவன் ஆதியைப் பார்த்துக் கொண்டே…

உடனே கதிர், “நான் இங்க ஒருத்தன் இருக்கேனே. என்னை யாராவது ஒருவராவது நீயும் ஷாப்பிங் வாரியான்னு கேட்டீங்களா?” என்று கீர்த்திகாவைப் பார்த்துக் கொண்டே கேட்க…

“நாங்க கூப்பிடலைன்னா நீ என்ன வர மாட்டேன்னா சொல்லப் போறே…? எப்படியும் எங்க கூட வரத்தானே போறே… அப்பறோம் என்ன?” என்றால் கீர்த்திகா. “கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாரும் கிளம்பிர அப்போ சொல்றோம் வந்து சேரு,” என்றாள் அவனைப் பார்த்து கண்ணடித்து.

“இருடி…. உனக்கு இருக்கு இருக்கு,” என்று அவளைப் பார்த்து ஜாடை செய்ய… “போடா…” என்றாள் அவளைப் பார்த்து.

அனைவரும் ஷாப்பிங் செல்வதால் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள், பிறகு கிளம்பலாம் என்று ரெடியாகச் செல்லப் போக… கீர்த்திகா ஆதியைப் பார்த்து “மாமா… நீங்களும் எங்க கூட வரீங்களா…?” என்று கேட்டாள்.

விக்கி கீர்த்திகாவிடம் “அவன் வர மாட்டான் மா… அவனுக்கு இது எல்லாம் பிடிக்காது,” என்று சொல்ல… அதற்குள் ஆதி, “ஒரு டென் மினிட்ஸ், நான் ரெடி ஆகிட்டு வரேன்,” என்று சொன்னவன் எழுந்து மேலே சென்றான்.

அனைவரும் அவனை ஆச்சர்யமாகப் பார்க்க… சென்ற ஆதி சொன்னபடியே பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவன், “போலாமா?” என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல… அதே அதிர்ச்சியுடன் அனைவரும் அவனுடன் கிளம்பினர்.

❤️

EPISODE 49

அனைவரும் கிளம்பி ஷாப்பிங் செல்ல… துர்காவிடம் லட்டு டப்பாவை வாங்கித் தனியே வைத்துக்கொண்ட விக்கி, “இதில் இருந்து யாரும் எடுக்கக் கூடாது. இது நான் பிள்ளையாருக்காகச் செய்து வாங்கி இருக்கேன். அவருக்கு நான் நிவேதனம் கொடுக்க வைத்திருக்கிறேன்,” என்று சொன்னான்.

நல்லவேளையாக துர்கா லட்டு செய்ததும், முதலில் விக்கிக்காகத் தனியாக ஒரு டிபன் பாக்ஸில் எடுத்து வைத்திருந்ததால், யாருடைய எச்சில் படாமல் எடுத்து வைத்தது ஒருவகையில் நல்லதாகப் போய்விட்டது.

சிட்டியின் பிரபல ஷாப்பிங் மாலுக்கு வந்ததும், டிரைவரிடம் காரைப் பார்க் செய்யச் சொல்லிவிட்டு அனைவரும் இறங்கி மாலுக்குள் சென்றனர்.

அவர்கள் மாலுக்குள் வரவும், கீர்த்திகாவின் மொபைலில் ரிங் வரவும் சரியாக இருந்தது. போனை எடுத்துப் பார்க்க நிலானி தான் கீர்த்திகாவிற்கு அழைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் போனை எடுத்து அட்டென்ட் செய்தவள், “ஏய் நிலானி… எங்கடி இருக்க? நாங்க இப்போதான் மாலில் உள்ள வந்துட்டோம். நீ வந்துட்டியா? எங்கே இருக்கே?” என்று கீர்த்திகா கேட்க… “நான் இப்பதான் மாலுக்கு வெளியே வந்துட்டு இருக்கேன். நீ எங்கே இருக்கேன்னு கேட்டுட்டு வரலாம்னு உனக்குக் கால் பண்ணினேன்,” என்று நிலானி கூற… “சரி, நீ அங்கேயே வெயிட் பண்ணு. நான் இப்ப வந்துடறேன் உன்னைக் கூப்பிடுவதற்கு,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

இவை எல்லாம் அவள் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த விக்கி, கீர்த்திகா செல்வதைக் குறுக்காகத் தன் இரு கைகளையும் நீட்டித் தடுத்து நிறுத்தியவன், “தங்கச்சி….” என்று கீர்த்திகாவை அழைக்க… கீர்த்திகாவும் “அண்ணா….” என்று பதிலுக்கு அவனைப் போலவே அழைத்தாள்.

“ஏன் அண்ணா என் வழியை மறிச்சு நிக்கிறீங்க? வழி விடுங்க. நான் போய் என் ஃப்ரெண்டு வந்துட்டா. அவளைக் கூப்பிட போகணும்,” என்று கீர்த்திகா சொல்ல…

“உனக்கு ஏண்டா சிரமம்? அங்க இருந்து நீ இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கே. உன் கால் எல்லாம் வலிக்கும் இல்லையாடா…. நான் வேணும்னா போய் உன் ஃப்ரெண்டை கூட்டிட்டு வரட்டுமா?” என்று கீர்த்திகாவின் மேல் அக்கறை இருப்பவன் போல விக்கி பேச…

“எனக்குக் கால் எல்லாம் ஒண்ணும் வலிக்கலை அண்ணா. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் போய் அவளைக் கூட்டிட்டு வரேன்,” என்று கீர்த்திகா அவனைத் தாண்டிச் செல்லப் போக…

விக்கி மறுபடியும் வேகமாக ஓடிச் சென்று அவள் குறுக்கே நின்றவன், “அண்ணன் சொன்னா தங்கச்சி கேட்கணும்… சரியா? நீ இங்கேயே இருப்பியா…. நான் ஓடிப்போய் உன் ஃப்ரெண்டை கூட்டிட்டு சீக்கிரமா வந்துடுவேனா….” என்று விக்கி சொல்ல…

உடனே துர்கா சிரித்துக்கொண்டே கீர்த்திகாவின் கைகளைப் பிடித்தவள், “விக்கி, நீ போடா… நீயே போய் உன் ஆளைக் கூட்டிட்டு வா. இவளுக்கு அறிவே இல்லை. நீ எதுக்காக இவள் மேல் அக்கறை இருக்குற மாதிரி நடிக்குறேன்னு அவளுக்குத் தெரியலை,” என்று சொன்னவள்.

“நான் இவளைப் பார்த்துக்கறேன்,” என்று அவள் கை பிடித்துக் கொள்ள… தன்னுடைய எண்ணம் துர்காவுக்குப் புரிந்துவிட்டதை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தவன், “துர்கானா…. துர்கா தான்!” என்று அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வேகமாக நிலானியைக் கூப்பிட வெளியே சென்றான்.

நிலானியைக் கூப்பிட வெளியே செல்லும் ஆவலில் துர்காவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டுச் செல்ல… இங்கே ஒருவனுக்கு விக்கியின் செயலைப் பார்த்து வயிறு எரிந்தது.

வேற யாருங்க? நம்ம ஹீரோவுக்குத்தான்! என் மனைவியிடம் என்னால் இவ்வளவு சகஜமாகப் பேச முடியவில்லை. ஆனால் இங்கு இருப்பவர்கள் எல்லாம் அவளிடம் உரிமை கொண்டாடுகிறார்கள், என்று நினைத்த ஆதி, சீக்கிரமாகவே அந்த அத்தனை உரிமையும் எனக்கு மட்டுமே வரும்படி நான் செய்கிறேன், என்று மனதில் நினைத்தவன் துர்காவை முறைக்க… துர்கா இவன் தன்னை முறைப்பதை அறியாமல் கீர்த்திகாவைக் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்களுடன் பேசிக்கொண்டே கதிரும் சென்றான்.

இன்று எப்படியாவது கீர்த்திகாவிடம் துர்காவைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துதான் ஆதி இவர்களுடன் வெளியில் ஷாப்பிங்கிற்கு வந்தான். ஆனால் இவர்கள் எல்லாம் கீர்த்திகாவைப் பிடித்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்க… அவளிடம் எப்படித் தனியாகப் பேசுவது என்று யோசித்தவாறு, கையில் மொபைலில் நோண்டிக்கொண்டு அவர்கள் பின்னால் சென்றான்.

*****

இங்கே நிலானியைத் தேடி வெளியே வந்த விக்கி அவளைத் தேட… அவள் தூரத்தில் ஷாப்பிங் மாலில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிலானியைத் தூரத்திலிருந்து பார்த்தவன், அவள் முதன் முதலில் பார்த்ததை விட இப்போது இன்னும் அழகாக இருந்தாள். வெள்ளை நிற டீ-ஷர்ட்டும் நீல நிற பேன்ட்டும் அதற்கு ஏற்றார் போல ஷூவையும் மாட்டிக் கொண்டு, தலையில் முடியைக் கொண்டை போட்டு, கண்ணில் எப்போதும் அவள் அணியும் கண்ணாடியும் அணிந்துகொண்டு மிகவும் ஸ்டைலாக நின்றிருந்தாள் நிலானி.

ச்சே… என் ஆள் எவ்வளவு ஸ்டைலாக… அழகாக இருக்கா…. டேய் விக்கி, நீ…. ரொம்பக் கொடுத்து வெச்சவன்டா. இத்தனை நாளா ஒரு பொண்ணு கூட உன்னைத் திரும்பிப் பார்க்காம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப.

ஆனா இன்னைக்கு உனக்குன்னு ஒருத்தி உனக்குப் பிடிச்ச மாதிரி வந்திருக்கா…. நீ ஜமாய்டா…. ஜமாய்டா…. எப்படியாவது அவகிட்ட நல்ல விதமாகப் பேசி, நல்ல விதமா நடந்துட்டு, அவளை உன்னைக் காதலிக்க வச்சிருடா விக்கி. அவள் மனசுல எப்படியாவது இடம் பிடிச்சிருடா… என்று தன் மனதிற்குள் பேசிக்கொள்ள…

“அது நான் நினைச்சா….தான் நடக்கும்,” என்று விக்கியின் பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்க… “யார்?” என்று திரும்பிப் பார்த்தவன், அவன் அருகில் ஒரு சிறுவன், நன்கு கொழுகொழுவென்று இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து, “யாருடா… தம்பி நீ…. நீ எதுக்கு ‘நான் நினைச்சா தான் நடக்கும்’னு சொன்னே?” என்று கேட்டான் விக்கி.

“என்னை நல்லாப் பாரு. நான் யாருன்னு உனக்குத் தெரியலையா?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். அவன் முகத்தையே சற்று உற்றுப் பார்க்க, “பிள்ளையாரப்பா… நீயா… இது என்ன இப்படி வந்திருக்கீங்க?” என்று விக்கி கேட்க…

“அது ஒண்ணுமில்லை விக்கி. சும்மா நானும் உங்க கூட ஜாலியா ஷாப்பிங் வரலாம்னு தான் இந்தக் கெட் அப்பில் வந்திருக்கேன்,” என்றார்.

“உன்னை எப்படி பிள்ளையாரே எங்க கூட கூட்டிட்டு போறது? என்னைப் பார்த்து யாருன்னு கேட்டால் நான் என்ன சொல்லி சமாளிக்குறது பிள்ளையாரே?” என்று கேட்டான் விக்கி.

“அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப் படாதே. நான் பார்த்துக்கறேன் அதை எல்லாம்,” என்று சொன்னவர். “சரி சரி, நீ உன் ஆளைப் போய் கூப்பிடு,” என்றார்.

“நீங்க இங்க இருக்க… அப்போ நான் போய் அவளைக் கூப்பிட்டா, உங்களை யாருன்னு கேட்டால் நான் என்ன சொல்றது பிள்ளையாரே?” என்று விக்கி கேட்க…

“நீ முதல்ல கூட்டிட்டு வா… அதுக்கு அப்பறோம் எல்லாமே நடக்கும்,” என்று பிள்ளையார் சொல்ல… “ஓகே. நீங்க இங்கயே இருங்க. நான் போய் என் ஆளைக் கூட்டிட்டு வரேன்,” என்றான்.

“இன்னும் அவ உன் லவ்வுக்கு ஓகே சொல்லவே இல்லை. அதுக்குள்ள உன்னோட ஆளுன்னு உரிமை கொண்டாடுறே?” என்று அவனை வார… “அய்யா அப்பனே விநாயகா! நீ இருக்கிற தைரியத்துல தான் நான் இப்படி சொல்லிட்டு சுத்திட்டு இருக்கேன். எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பிள்ளையாரே,” என்றவன் திரும்பி நிலானியைப் பார்க்க…

இதுவரை எங்கேயோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலானி, எதேச்சையாகத் திரும்ப… அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் சந்தோஷத்தில் “ஹாய்….” என்று கை அசைத்தாள். என்னடா… இது என் ஆளா? இது என்னைப் பார்த்து கை எல்லாம் அசைக்குது, என்று நினைத்தவன் பதிலுக்கு விக்கியும் கை அசைத்தான்.

“இங்க என்ன பண்ற?” என்று சைகையால் கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்து கொண்டிருந்தாள் நிலானி.

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்,” என்று விக்கியும் சைகையாலேயே கூற… அதற்குள் அவன் அருகில் வந்தவன் தன் கைகளை அகல விரித்து அவனை கட்டிப்பிடிப்பது போல அவன் அருகில் வர… விக்கிக்கு ஆச்சர்யமாகிப்போக… அவனும் தன் கையை விரித்து அவளை வரவேற்பது போல நிற்க… அவன் அருகில் வந்த நிலானி அவனை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தவள், அவன் கையைத் தட்டி விட்டு அவனைத் தாண்டி நின்ற பிள்ளையாரைப் பார்த்து, “டேய் பிள்ளையார்… நீ என்னடா பண்ற இங்கே?” என்று பிள்ளையாரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே வந்து அவரை அணைத்துக்கொள்ள…

அவர்கள் இருவரையும் மாறி மாறி அதிர்ச்சி விலகாமல் பார்த்த விக்கியைப் பார்த்து, “எப்படி?” என்று தன் புருவத்தை உயர்த்தியவாறு பிள்ளையார் கேட்டார்.

“இல்லை… எனக்குப் புரியல,” என்று விக்கி கேட்க… “என்ன புரியலை உங்களுக்கு?” என்று நிலானி விக்கியிடம் கேட்டாள். “இவரை… பிள்ளை…” என்று அவரை யார் என்று சொல்ல வர… பிள்ளையார் தன் கண்ணை அகல விரித்து “சொல்லாதே,” என்று ஜாடை செய்தார்.

அதைப் புரிந்து கொண்ட விக்கி, “இல்லை, இந்தச் சிறுவன் உனக்கு எப்படித் தெரியும்?” என்று விக்கி கேட்க… “ஓ… இவனா… எங்க ஹாஸ்டல் வார்டன் மேம் உடைய பையன்,” என்று பிள்ளையாரைப் பற்றிக் கூற…

ஏதோ புரிந்தவன் போல விக்கி “சரி” என்று தலையை ஆட்டியவன், “சரி, நாம உள்ளே போலாமா? நமக்காகத் தான் அங்கே எல்லாரும் உனக்காகக் காத்துட்டு இருக்காங்க,” என்றவன் தன் கையோடு கொண்டு வந்திருந்த லட்டு டப்பாவை பிள்ளையாரிடம் நிலானிக்குத் தெரியாமல் விக்கி காட்ட…

அதைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே தன் கட்டை விரலை உயர்த்தியவர் திரும்பி நிலானியைப் பார்த்து, “அக்கா… இந்தா… எங்க அம்மா வீட்ல எனக்குச் சாப்பிடறதுக்காகச் செஞ்சு கொடுத்தாங்க. நீயும் சாப்பிடு,” என்று கூறித் தன் கையில் இருந்த லட்டு டப்பாவை அவள் முன்பு நீட்ட…

அதைப் பார்த்த விக்கி, தன் கையில் இருந்த டப்பாவைப் போலவே எப்படி இவர் கையில் என்று யோசித்துக் கொண்டே அவன் கையைப் பார்க்க… அவன் கையில் அந்த டப்பா இல்லை.

அவரை ஆச்சர்யமாகத் திரும்பி விக்கி பார்க்க… “என்ன?” என்று இவனைப் பார்த்துக் கணேஷ் புருவம் உயர்த்த… “ம்ஹும்…. ஒண்ணுமில்லை,” என்று தலையை இடவலமாக ஆட்டினான்.

பிள்ளையார் கொடுத்த லட்டைச் சாப்பிட்ட நிலானி, “சூப்பரா இருக்கு பிள்ளையார்…” என்று ருசிக்க… அவள் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டே எச்சில் விழுங்கியவன், இருவரும் லட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க… அவர்களுக்கு இடையில் தன் கையை நீட்ட… அவனை நிமிர்ந்து பார்த்த இருவரும் “என்ன?” என்று ஒரே நேரத்தில் கேட்க…

“எனக்குக் கொஞ்சம் கொடுத்துட்டுச் சாப்பிடலாமே? ஏன்னா இந்த லட்டுவை நான் என் துர்காகிட்ட சொல்லி ஒருத்தருக்காகச் செஞ்சு கொண்டு வந்தேன். அதை இந்தச் சிறுவன் அவன் வீட்ல இருந்து கொண்டு வந்ததாப் போய் சொல்லி உன்கிட்ட கொடுத்திருச்சு,” என்று பிள்ளையாரை முறைத்துக்கொண்டே கூற…

“அச்சோ… அப்போ இது நீங்க கொண்டு வந்ததா? சாரி. நான் பிள்ளையார் தான் கொண்டு வந்தான் என்று தெரியாமல் சாப்பிட்டுட்டேன்,” என்றால் நிலானி.

“ச்சே… ச்சே… அது எல்லாம் ஒண்ணுமில்லை. நான் யாருக்குக் கொண்டு வந்தேனோ, அவரே உன்கிட்ட கொடுத்துச் சாப்பிடச் சொல்லிட்டாரு,” என்று விக்கி உளறி விட…

“என்ன?” என்று நிலானி புரியாமல் பார்க்க… அதற்குள் பிள்ளையார் இடையில் புகுந்து, “அக்கா இவரு வீட்டுப் பக்கத்திலதான் எங்க வீடு இருக்கு. எனக்குக் கொடுக்கத்தான் கொண்டு வந்தாரு. அதைத்தான் சொல்லறாரு,” என்று பிள்ளையார் கூற…

“அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே தெரியுமா?” என்று நிலானி கேட்க… இருவரும் “ஆம்” என்று தலையை ஆட்டினர்.

“சரி, எனக்குக் கொஞ்சம் கொடுங்க,” என்று விக்கி கையை நீட்ட… “இருங்க நான் வேற எடுத்துத் தரேன்,” என்று சொல்லிவிட்டுத் தன் கையில் இருந்ததை அவள் வாயில் போடப் போக… “வேற எல்லாம் எனக்கு வேண்டாம். உன் கையில் இருப்பதே எனக்குப் போதும்,” என்று சொன்னவன், நிலானியின் கையில் இருந்த லட்டை வாங்கி… இல்லை… இல்லை… பிடுங்கி அவன் வாயில் போட்டுக்கொண்டு, “சரி வாங்க போலாம்,” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க…

நிலானி அவனை முறைத்துக்கொண்டே அவன் பின்னால் பிள்ளையாருடன் மாலுக்குள் சென்றாள்.

EPISODE 50

நிலானி பிள்ளையாருடன் விக்கி மாலுக்குள் செல்ல, இவர்களுக்காகக் காத்திருந்த ஆதி, துர்கா, கீர்த்திகா, கதிர் ஆகியோரிடம் பிள்ளையார் தன்னை அறிமுகம் செய்து வைக்க… கீர்த்திகா நிலானியையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

பின் அனைவரும் சேர்ந்து ஷாப்பிங்கிற்குச் சென்றனர். துர்கா, கீர்த்திகா, நிலானி மூவரும் முதலில் பூஜைக்கானத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்று சொல்லி, அதை வாங்கச் சென்றுவிட…

ஆண்கள் அனைவரும் சேர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர். பூஜைக்கான சாமான்கள் அனைத்தையும் வாங்கிவிட்டுச் சீக்கிரமாக வந்த மூன்று பெண்களை அழைத்துக்கொண்டு, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்க அவர்களுடன் சேர்ந்து சென்றனர்.

அனைவரும் முதலில் ஒரு பெரிய துணிக் கடைக்குச் செல்ல… பெண்கள் அனைவரும் பிஸியாகிவிட… பிள்ளையாருடன் விக்கியும், கதிரும் வம்பு இழுத்துக் கொண்டு இருக்க… கீர்த்திகாவிடம் எப்படித் தனியாகப் பேசுவது என்று ஆதி யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது கீர்த்திகாவிடம் சென்று விக்கி அவளைச் சுரண்டிக் கொண்டே நின்றிருந்தான். அவனைத் திரும்பிப் பார்த்து “என்ன அண்ணா…” என்று கேட்க…

அவளிடம் மெதுவாகக் குனிந்து, “நீயே என் ஆள் கூடச் சுத்திட்டு இருந்தா நான் எப்படித்தான் அவ கூடப் பேசிப் பழகுறது? கொஞ்சம் அண்ணனுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் இல்ல தங்கச்சி?” என்று விக்கி மெதுவாகக் கேட்டான்.

“ஓ அப்படியா? சரி கொஞ்ச நேரம் பொறுங்க. நான் அப்படியே அந்தப் பக்கம் வேற டிரஸ் பார்க்கிற மாதிரி இந்த இடத்தை விட்டு நகர்ந்து போறேன். நீங்க வந்து நிலானிகூட ஜாயின் பண்ணிக்கோங்க,” என்றால் கீர்த்திகா. “தங்கச்சின்னா…. தங்கச்சி தான்! ரொம்ப தேங்க்ஸ்டா….” என்று கீர்த்திகாவின் கன்னம் பிடித்துக் கிள்ளிவிட்டு வேகமாகச் சென்று கதிருடன் அமர்ந்து கொண்டான்.

கதிர் விக்கி இருவரும் பேசிக் கொண்டிருக்க… ஆண்கள் செக்ஷனில் துணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த துர்கா, ஆதிக்கும் மற்ற இருவருக்கும் ஆடைகள் எடுக்கலாம் என்று அங்கு பார்த்துக் கொண்டிருந்தாள். துர்கா தனியாக நிற்பதைப் பார்த்த கதிர்…

ஆதியிடம், “அண்ணா… துர்கா தனியா டிரஸ் பார்த்துட்டு இருக்கா. நீ போய்த் துர்காவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாம் இல்ல,” என்று கேட்க.

அவ்வளவு நேரம் துர்காவை யாருக்கும் தெரியாமல் சைட் அடித்துக் கொண்டிருந்த ஆதி, கதிர் இப்படிச் சொன்னதும் இதுதான் சாக்கு என்று அவளுடன் பேசச் சென்றான்.

ஆதி துர்கா அருகில் சென்று நிற்க… தன் அருகில் யாரோ நிற்பது போல உணர்ந்த துர்கா திரும்பிப் பார்க்க… ஆதி நின்றிருப்பதைப் பார்த்தவள். ஏன் ஆதி வந்து இங்க நிற்குறான்? அவனுக்கு இதெல்லாம் பிடிக்காதே என்று யோசித்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் சட்டென்று திரும்பிக் கொள்ள…

அவள் தன்னைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டதால், தான் அருகில் வந்தது துர்காவுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்ட ஆதி, துர்காவிடம், “ஏன் துர்கா… என்னைப் பார்த்ததும் திருப்பிக்கிட்ட? என்னைப் பார்க்கப் பிடிக்கலையா உனக்கு?” என்று ஆதி கேட்க.

அவன் இப்படி கேட்டதும் “இல்ல… இல்ல… ஆதி. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. திடீர்னு யாரோ வந்து நின்னாங்கன்னு நினைச்சுட்டுத் தான் பார்த்தேன். வேற ஒண்ணும் இல்ல,” என்றால்.

“சரி, பெண்கள் எல்லாம் அவங்களுக்குத் தேவையான டிரஸ்ஸை அங்க எடுத்துட்டு இருக்கும்போது நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று ஆதி கேட்டான்.

“எனக்கு டிரஸ் எல்லாம் எதுவும் வேண்டாம் ஆதி. அத்தை ஏற்கனவே நிறைய எடுத்து கொடுத்திருக்காங்க. அதுவே போடாமல் நிறைய நான் வெச்சிருக்கேன். சும்மா இங்கே வந்தேன், உங்க எல்லாருக்கும் எடுக்கலாம்னு சொல்லிட்டுத் தான்,” என்று கூற… “ஓ… அப்போ எனக்கும் நீ டிரஸ் எடுத்து இருக்கியா?” என்று ஆதி கேட்டான்.

“உனக்கு ஏற்கனவே எடுத்துட்டேன் ஆதி,” என்றவள் ஆதிக்காக தான் தேர்வு செய்து வைத்திருந்த சட்டையைக் காட்டினாள். ஏலக்காய் பச்சை நிறத்தில் ஒரு சட்டை எடுத்து வைத்திருந்தாள். அதை கையில் எடுத்த ஆதி சிறிது நேரம் அந்தச் சட்டையையே பார்த்தவன், பின் அவளிடமே கொடுத்துவிட்டான்.

அவன் சட்டையைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் தன்னிடமே கொடுத்ததும், அவனைப் பார்த்த துர்கா எதுவும் பேசாமல் நின்றிருந்தவள், பின் ஆதியிடம், “ஆதி, இந்தச் சட்டை உனக்குப் பிடிக்கலையா? உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு. இதை கொடுத்துட்டு வேற சட்டை எடுத்துக்கலாம். நான் இன்னும் இந்தச் சட்டைக்கு பில் போடச் சொல்லலை,” என்றாள்.

அவள் வேறு சட்டை மாற்றிக் கொள்ளலாம் என்றதும் ஆதி அவசரமாக “துர்கா…. அதெல்லாம் எதுவும் மாற்ற வேண்டாம். இந்தச் சட்டையே இருக்கட்டும். எனக்கு ஓகே..” என்றான்.

அவன் ஓகே சொன்னாவே அதற்கு மறு பேச்சு கிடையாது என்று துர்காவுக்கு நன்றாகவே தெரியும். அவளும் “சரி” என்று விட்டு விக்கிக்கும், கதிருக்கும் சட்டை எடுத்துக் கொண்டு இருந்தாள். துர்கா தீவிரமாகச் சட்டையைத் தேர்வு செய்துகொண்டிருக்க… அவள் சீரியஸாக ஆடையைத் தேர்ந்தெடுப்பதைப் அவளுக்குத் தெரியாமல் ரசித்துக்கொண்டு இருந்தான் ஆதி.

அவள் அருகில் சென்ற ஆதி, “துர்கா, டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணிட்டியா?” என்றான். “இன்னுமில்லை ஆதி. ஏன்?” என்று கேட்டாள் துர்கா. “சரி, நீ செலக்ட் பண்ணிட்டு இரு. நான் வரேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அதானே! கொஞ்ச நேரம் இங்கே நின்னதே அதிசயம்தான், என்றவள் அங்கிருந்த கதிரை அழைத்து அவனுடன் சேர்ந்து ஆடைகளை எடுத்துக் கொண்டு இருந்தாள்.

****

ஆதி துர்காவிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து வந்தவன், கீர்த்திகா என்ன செய்கிறாள் என்று பார்க்க… அவள் நிலானியுடன் டிரஸ் எடுத்துக்கொண்டு இருந்தாள்.

எப்படி கீர்த்திகாவைத் தனியே அழைத்து பேசுவது என்று ஆதி யோசித்துக் கொண்டிருக்க… சரியாக கீர்த்திகா நிலானியை விட்டுச் சற்றுத் தள்ளிச் சென்று வேறு பக்கம் ஆடைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க… இது தான் சரியான சமயம் என்று நினைத்தவன் நேராக கீர்த்திகா இருந்த ஆடைப் பிரிவிற்குச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த கீர்த்திகா, “மாமா….. வாங்க! என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது? எங்க அக்கா அங்க இருக்காளே…” என்று ஆதியைக் கிண்டல் செய்ய…

அவள் தன்னிடம் உரிமையுடன் கிண்டல் செய்வதைப் பார்த்துக் சிரித்த ஆதி, “சும்மாத் தான் நீ தனியா இருக்கியே. உனக்கு ஏதும் ஹெல்ப் வேணுமோ என்று தான் வந்தேன்,” என்றான் ஆதி.

“ஆமாம் மாமா…. எனக்குக் கொஞ்சம் டிரஸ் செலக்ட் பண்ணிக் கொடுங்க மாமா. எந்த டிரஸ் எடுக்குறதுனே தெரியலை. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு,” என்றால்.

“சரி வா… நான் செலக்ட் செய்றேன்,” என்றவன் அங்கிருந்த புடவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தவன்… ஒரு சேலையை எடுத்துத் திரும்பித் தூரத்தில் இருந்த துர்காவுக்கு நன்றாக இருக்குமா என்று சேலையை உயர்த்திப் பிடித்துப் பார்க்க…

ஆனால் அவன் அருகில் நின்றிருந்த கீர்த்திகாவோ, அவன் தனக்காகத் தான் சேலை செலக்ட் செய்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்த கீர்த்திகா அவனையே பார்க்க… கையில் வைத்திருந்த சேலையைப் பார்த்துவிட்டு துர்காவைப் பார்த்தவன்… அவளுக்கு இது நன்றாக இல்லை என்பது போலத் தனக்குள்ளேயே அவளுக்கு அந்தச் சேலையை வைத்துப் பார்த்து “வேண்டாம்” என்று தலையை ஆட்டிவிட்டு அடுத்த சேலையை எடுத்தான்.

அவன் இப்படியே ஒரு பத்து, பதினைந்து சேலைகளை துர்காவுக்கு வைத்துப் பார்ப்பதும்… பின் நன்றாக இல்லை என்று வேறு புடவையை எடுத்துப் பார்ப்பதுமாக இருக்க… அவன் அருகில் அவன் தனக்காக ஒரு சேலையை எடுப்பான் என்று ஒவ்வொரு முறையும் ஆவலாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்க… ஆதி சேலை எடுப்பது போலத் தெரியவில்லை.

நின்று நின்று கீர்த்திகாவுக்குக் கால் வலிக்கவே… அருகில் இருந்த சேரில் அமர்ந்து, அங்கிருந்த சேலைகளை வைக்கும் மேடை மீது ஒரு கையைத் தன் தலைக்கு முட்டுக் கொடுத்த படி… அவன் தனக்காகச் சேலை செலக்ட் செய்யும் வரை அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து ஒருவழியாகப் புடவையைச் செலக்ட் செய்துவிட… “இதை பேக் பண்ணுங்க,” என்று அங்கிருந்த சேல்ஸ் கேர்ளிடம் கூற… “ஐ… மாமா… சாரீ… சூப்பரா… இருக்கு. நான் செலக்ட் பண்ணி இருந்தால் கூட இவ்வளவு அழகா செலக்ட் பண்ணி இருக்க மாட்டேன்,” என்று கூற…

அப்போது தான் கீர்த்திகாவுக்குச் சேலை செலக்ட் செய்யாமல் விட்டது நினைவில் வர… ஒருவாறு அசடு வழிந்து கொண்டே “கீர்த்து…. இந்தச் சாரீ உனக்கு இல்லை. உன் அக்காவுக்கு,” என்றான்.

“என்னது… அப்போ இவ்வளவு நேரம் நீங்க எனக்குச் செலெக்ட் பண்ணலையா? என் அக்காவுக்குத் தான் செலக்ட் பண்ணிங்களா?” என்று பாவமாகக் கேட்க…

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் கீர்த்து, நான் உனக்கு செலக்ட் பண்றேன்,” என்று திரும்பி கீர்த்திகாவுக்குச் சேலை செலக்ட் பண்ணப் போக… “ஐயோ… மாமா போதும். நீங்க இவ்வளவு நேரம் எனக்குச் செஞ்ச உதவிக்கு. நானே எனக்குச் செலக்ட் பண்ணிக்கிறேன். நீங்க எதுவும் செய்ய வேண்டாம்,” என்று கீர்த்திகா ஆதியைப் பார்த்துக் கை எடுத்து கும்பிட… “சாரி கீர்த்து. கொஞ்சம் வெயிட் பண்ணு. நானே சீக்கிரமா செலக்ட் பண்ணித் தரேன்,” என்று கூறியவன் திரும்பி ஒவ்வொரு சேலையாகப் பார்த்தவன்… பின் அதில் இருந்து ஒரு சேலையை எடுத்துக் கீர்த்திகாவிடம் காட்டி “இது உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

அவன் கையில் வைத்திருந்த சேலையைப் பார்த்தவள், “மாமா…. சூப்பர்! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,” என்று அவன் கையில் இருந்த சேலையை வாங்கி அதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.

பின் அனைத்தையும் சேல்ஸ் கேர்ளிடம் கொடுத்து பில் போடச் சொன்ன ஆதி, கீர்த்திகாவைப் பார்த்து. “கீர்த்து ஒரு நிமிஷம், நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றான்.

“என்ன மாமா… சொல்லுங்க,” என்றால் கீர்த்து. “அது… அது ஒண்ணுமில்லை கீர்த்து. எனக்கு உன்கிட்ட துர்காவைப் பற்றிக் கொஞ்சம் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்,” என்றான்.

“என்ன மாமா… அக்காவைப் பற்றித் தெரிஞ்சுக்க நீங்க அவ கிட்டயே கேட்கலாமே? நீங்க கேட்டா… அவளே சொல்லப் போறா..,” என்றால் கீர்த்து.

“அப்படி இல்லை கீர்த்து. அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் துர்காவிடமே கேட்டு அவளுக்குச் செய்தால் நல்லா இருக்காதில்லையா? அதான் உன்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுட்டு துர்காவுக்குப் பிடித்ததை பார்த்துப் பார்த்துச் செய்யணும்னு நினைக்கிறேன்,” என்றான் ஆதி.

தன் அக்காவை இம்ப்ரஸ் பண்ண ஆதி இவ்வளவு மெனக்கெடுவதைப் பார்த்த கீர்த்துவிற்கு, தன் அக்கா நினைத்தது போல ஆதி மாமாவுக்குத் தன் அக்காவின் மேல் காதல் வர ஆரம்பித்திருக்கிறது போல என்று நினைத்தவள்.

“மாமா… நீங்க கவலையே படாதீங்க. அவளுக்கு என்னா எல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்று எல்லாமே நான் உங்களுக்கு ஒண்ணு விடாம சொல்றேன்,” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு போய் ஓர் இடத்தில் அமர்ந்தவள்… அவனையும் அமரச் சொல்லிவிட்டு, “மாமா அவங்க எல்லாரும் வர்ற வரைக்கும் நான் உங்களுக்குச் சீக்கிரமா அவளுக்குப் பிடிச்சதெல்லாம் சொல்றேன்,” என்றவள் ஆதியிடம் கிடைத்த சிறிது நேரத்தில் துர்காவைப் பற்றிக் கூறினாள்.

அதற்குள் அனைவரும் வந்துவிட… “மாமா மீதியை நான் அப்போ அப்போ… உங்களுக்கு வாட்ஸ்அப் பண்றேன். நீங்க என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க. போன் பண்ணுங்க மாமா…” என்றவள் எழுந்து செல்லப் போனவள்.

“மாமா….” என்று ஆதியை அழைத்தாள். “என்ன கீர்த்து?” என்று நிமிர்ந்து அவளைப் பார்க்க. “நீங்க அக்காவோட டைரியைப் படிச்சிருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“என்ன டைரி…” என்றான் புரியாமல் ஆதி. “சுத்தம்! இவ்வளவு நாளா அக்கா உங்க கூட இருக்கா. அவ என்ன செய்றான்னு கூட உங்களுக்குத் தெரியலையா?” என்று தலையில் அடித்துக் கொண்டவள்.

“முதல்ல வீட்டுக்குப் போனதும் எங்க அக்கா என்ன எல்லாம் செய்றான்னு ஃபர்ஸ்ட் பாருங்க. அவ தினமும் டைரி எழுதாமத் தூங்கவே மாட்டா… அதில் இருக்குறதைப் படிச்சாலே நீங்க துர்காவோட எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கலாம்,” என்றால்.

“துர்கா டைரியைப் படிக்கிறது தப்பில்லையா?…” என்றான் ஆதி. “உங்களுக்குத் துர்காவை இம்ப்ரெஸ் பண்ணனுமா வேணாமா…” என்றால். “கண்டிப்பா இம்ப்ரெஸ் பண்ணனும் கீர்த்து,” என்றான்.

“அப்போ அக்காவோட டைரியைப் படிங்க அவளுக்குத் தெரியாமல். ஒருத்தவங்களோட டைரியை அவங்களுக்குத் தெரியாமல் எடுத்துப் படிச்சுப் பாருங்க. அது தனி ஃபீல் மாமா…” என்றவள் அங்கிருந்து சென்றுவிட…

இன்னைக்கு துர்காவின் டைரியை எப்படியாவது கண்டு பிடித்து எடுத்துப் படித்து விட வேண்டும், என்று நினைத்தவன் அவர்களுடன் சென்றான்.

EPISODE 51

ஆதி, துர்காவிற்கும், கீர்த்திகாவிற்கும் சேலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு, கீர்த்திகாவிடம் துர்காவுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள, துர்காவை இம்ப்ரெஸ் பண்ண அவளிடம் ஐடியா கேட்டான்.

கீர்த்திகாவும் அவனுக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தவள், துர்காவுக்குத் தெரியாமல் அவள் டைரியை எடுத்து ஆதியைப் படிக்கச் சொல்லி அவனுக்கு ஐடியா கொடுத்தாள்.

இன்று எப்படியாவது துர்காவின் டைரியைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்ட ஆதி, அனைவரும் வர அவர்களுடன் எழுந்து சென்றான்.

துர்கா கதிருடன் இவர்கள் இருக்கும் செக்‌ஷனுக்கு வர, அவர்களைப் பார்த்ததும், “அக்கா, மாமா சேலை எடுத்து கொடுத்தார்” என்றாள்.

அவளை ஆச்சர்யமாகப் பார்த்த கீர்த்து, “யாருக்கு?” என்று பொதுவாகவும், “எனக்கும் எடுத்து இருக்கிறாரா?” என்ற ஆவலுடனும் கேட்டாள். துர்கா சிரித்தாள்.

கீர்த்திகா “நம் இருவருக்கும்” என்று சொல்ல வர, அதற்குள் ஆதி கீர்த்திகாவிடம் சொல்ல வேண்டாம் என்று கண் ஜாடை செய்துவிட, கீர்த்திகா துர்காவிடம், “எனக்குத்தான் அக்கா… மாமா எடுத்து கொடுத்தார்” என்றாள்.

“ஓ… உனக்கு மட்டும் எடுத்து கொடுத்தானா ஆதி?” என்று மனதில் நினைத்தவள், “சரி” என்று மட்டும் தலையை ஆட்டினாள்.

கீர்த்திகா நிலானியைத் தனியே விட்டுவிட்டு, ஆதியுடன் சேலைகள் எடுத்துக்கொண்டு இருக்க, இதுதான் சந்தர்ப்பம் என்று விக்கி நிலானியின் அருகில் வந்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் தன்னை குரு குருவென பார்ப்பது நிலானிக்கு சங்கடமாக இருக்க, பொறுக்க முடியாமல் அவனிடம் திரும்பி, “ஹலோ… இப்போ எதுக்கு என்னை இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் கோபமாக.

“அப்போ நான் இவ்ளோ நேரம் உன்னை சைட் அடிச்சது உனக்கு தெரியும்; ஆனாலும் தெரியாத மாதிரியே நின்னுட்டு இருக்கே, அப்படித்தானே?” என்றான் விக்கி.

“அய்யய்யோ…. கண்டு பிடிச்சுட்டானே” என்று நினைத்த நிலானி, “சரி சமாளிப்போம்” என்று தனக்குத்தானே சமாதானம் செய்தவள், “பக்கத்துல ஒருத்தர் வந்து நின்னுட்டு என்னையே பார்க்குறது தெரியாம இருக்க முடியுமா? அதான், ‘என்னைத்தான் பார்க்குறாங்களா?’ன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு கேட்டேன்” என்றாள் நிலானி.

“நம்ம ஆள் பயங்கர உஷாராதான் இருக்கிறாள்” என்று நினைத்த விக்கி. “சரி… சரி. ஏதோ காரணம் சொல்ற, பரவாயில்லை. டிரெஸ் செலக்ட் பண்ணிட்டியா?” என்றான்.

“ஓ…. எடுத்துட்டேனே. கீர்த்திகாவுக்காக வெயிட். அது ‘ஓகே’ சொல்லிட்டான்னா, நான் அதைக் கன்ஃபார்ம் பண்ணி விடுவேன்” என்றாள்.

“கீர்த்திகா வந்து சொன்னால்தான் நீ செலக்ட் பண்ணுவியா? உனக்கு என்ன வேணுமோ நீயே செலக்ட் பண்ண மாட்டியா? இல்லை, உனக்கு செலக்ட் பண்ணத் தெரியாதா?” என்றான் விக்கி.

அவன் அப்படி கேட்டதும், அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நிலானியின் முகம் சுருங்கிவிட்டது.

“ஓய்… நிலாக்குட்டி, என்ன ஆச்சு உனக்கு? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா? நான் சும்மா உன்னைக் கலாய்க்கத்தான் சொன்னேன்” என்றான்.

“நீங்க தப்பா எல்லாம் எதுவும் சொல்லலை. நான் கீர்த்துவை மீட் பண்றதுக்கு முன்னவரை, எனக்கு வேணும் என்பதை நானே எடுத்துப்பேன். என் அக்காவுக்கு என் மேல் கொள்ளைப் பாசம். ஆனா, என் மாமாவுக்குப் பயந்துகிட்டே எனக்கு எதுவும் செய்ய மாட்டா… செய்ய ரொம்பப் பயப்படுவா. அதனால் நான் எப்பவும் யாருக்கும் இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு, எதுவும் யார்கிட்டயும் கேட்க மாட்டேன். எனக்கு வேணும்கிறதை நானே பாத்துப்பேன். ஆனா, கீர்த்து எனக்கு ஃப்ரெண்ட் ஆன பிறகு, அவ எனக்கு எது வேண்டும் என்றாலும் அவளே செலக்ட் பண்ணித் தருவா, அதான் கீர்த்துக்காக வெயிட் பண்றேன்” என்று விக்கியிடம் அவன் கேட்டதும் தன்னிடம் உள்ளதை அப்படியே சொல்லி விட்டாள். பின் ஏன் விக்கி கேட்டதும் எல்லாவற்றையும் சொல்கிறோம் என்று தோன்றியது நிலானிக்கு.

நிலானி கூறியதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட விக்கி, “சரி, இனிமேல் உனக்கு யாரும் இல்லை என்று நினைக்காதே. உனக்கு எந்த நேரத்திலும் என்ன வேண்டும் என்றாலும், நான் இருக்கிறேன், என்னைக் கேள்” என்றான்.

அவன் இப்படி சொன்னதும் நிலானியின் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட, அதை அவனுக்குத் தெரியாமல் துடைத்தவள், பின் அவனிடம், “நான் ஏன் உங்ககிட்ட கேட்கணும்? நீங்க யாரு எனக்கு?” என்றாள்.

“நான் யாரா…. நீதான் என்னோட பொண்டாட்டி ஆகப்போறவ. சோ… என்னைத்தான் நீ கேட்கணும். இனிமேல் யார்கிட்டயும் நீ கேட்கக் கூடாது” என்றான் ஸ்ட்ரிக்ட்டாக.

அவன் இவ்வாறு மிரட்டுவது போலச் சொல்லவும், நிலானி ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், “என்ன சொன்னீங்க? நான் உங்களுக்குப் பொண்டாட்டி ஆகப் போறேன்னு யார் சொன்னது உங்களுக்கு? இப்படி எல்லாம் பேசக் கூடாதுனு நேத்தே சொன்னேனா இல்லையா உங்ககிட்ட?” என்றால் நிலானி.

“நானும் பேசக் கூடாதுனுதான் பார்த்தேன், ஆனால் உன்கிட்ட உரிமை எடுத்துக்காம என்னால இருக்க முடியலை. உன்னை இப்பவே என் கூட வெச்சு பார்த்துக்கணும்னு தோணுது. உன்னோட ஆசை எல்லாம் கேட்டு கேட்டு செய்யணும்னு எனக்கு தோணுது. நான் என்ன செய்வேன்?” என்றான் விக்கி.

விக்கியின் இந்த அதிரடியாலும், அன்பான பதிலாலும் அவனிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்த நிலானியைப் பார்த்து சிரித்தவன்.

“சரி வா, நான் உனக்கு டிரெஸ் செலக்ட் பண்ண ஹெல்ப் பண்றேன்” என்று கூறி அவள் அருகில் செல்ல, “இல்லை, ஒன்றும் வேண்டாம். நான் கீர்த்திகா வந்ததுக்கு அப்புறமே டிரெஸ் செலக்ட் பண்றேன்” என்று நிலானி சொல்ல.

“நான் தான் சொல்றேன் இல்ல…. நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று கூறியவன், அவளை சட்டை செய்யாமல் நிலானி தேர்ந்தெடுத்து வைத்த ஆடைகளில் இருந்து அவளுக்குப் பொருத்தமாக இருக்கும் ஆடைகளாகப் பார்த்து எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அது போதாது என்று வேறு சில ஆடைகளையும் எடுத்து கொடுக்க, “இதெல்லாம் எதுக்கு?? இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு இதுவே போதும்” என்று தான் கையில் இருக்கும் ஆடையைக் காட்டி அவனிடம் சொன்னாள்.

அவள் கையில் இருந்த ஆடைகளைப் பார்த்து, “இது நீ உனக்காக செலக்ட் பண்ணது. என் கையில் இருக்கிற இந்த டிரெஸ் எல்லாம் நான் உனக்காக செலக்ட் பண்ணது. ‘இது வேண்டாம்’ என்று சொல்லாமல் மாமா கொடுக்கிறதை வாங்கி போட்டுக்கனும் ஏன் நிலாக்குட்டி…. ஓகேவா….” என்று விக்கி அவளைப் பார்த்து சொல்ல.

“இங்க பாருங்க, நீங்க கீர்த்திகாவுடைய அண்ணா அப்படிங்கறனால தான் உங்ககிட்ட சண்டை போடாம நான் பொறுமையா போய்க்கொண்டு இருக்கிறேன். சும்மா என்ன ‘நிலாக்குட்டி’ன்னு கூப்பிடாதீங்க. உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது?” என்று அவனைப் பார்த்து முறைத்தவள்.

“எனக்கு நீங்க வாங்கி கொடுத்த டிரெஸ் எல்லாம் ஒன்னும் வேண்டாம். என்கிட்ட இருக்குற பணத்துக்கு நான் டிரெஸ் எடுத்துட்டேன். உனக்கு யாரோட அக்கறையும் தேவை இல்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் தான் எடுத்துக் கொடுத்த ஆடையை வாங்க மறுத்துவிட்டுச் சென்றதும் விக்கிக்கு முகம் சுருங்கிப் போய்விட, அப்போது அவன் அருகில் வந்த கணேஷ், “என்ன விக்கி, நீ எடுத்துக் கொடுத்த டிரெஸ் நிலானி வேண்டாம்னு சொல்லிட்டாளா? நான் எல்லாத்தையும் தூரத்துல இருந்து பார்த்துட்டுத்தான் இருந்தேன்” என்று கேட்க.

“ஆமா பிள்ளையாரப்பா! எப்படியாவது என் ஆள் இந்த டிரெஸ் வாங்கிக்க வையேன், ப்ளீஸ்!” என்று கணேஷிடம் கெஞ்ச, “சரி, பொறு பொறு… அந்த டிரெஸ் எல்லாத்தையும் கொடு நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு, விக்கியின் கையில் இருந்து ஆடைகளை வாங்கிக்கொண்டு கணேஷ் வேகமாக நிலானியின் அருகில் சென்று, “இந்தா, இதையும் சேர்த்து பில் போடு” என்று சொன்னான்.

“டேய், இதெல்லாம் அவரு எடுத்தது. அதை ஏண்டா நீ வாங்கிட்டு வந்த? நானே அவர்கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டுத்தானே வந்தேன். நீ… ஏன் அவர்கிட்ட இருந்து இதெல்லாம் வாங்கிட்டு வந்தே?” என்று கணேஷிடம் நிலானி கோவித்துக் கொள்ள.

“கோச்சுக்காத அக்கா. அந்த மாமா ரொம்ப பாவம். நீ இந்த துணி எல்லாம் வாங்கலைன்னு ரொம்ப சோகமா முகத்தை வச்சுட்டு அங்க ஒரு மாதிரியா உட்கார்ந்திருந்தார். அதனாலதான், அவர் பார்த்த பாவமா இருக்கேன்னு வாங்கிட்டு வந்து உன்கிட்ட கொடுத்தேன். பாவம் தானே அந்த மாமா?” என்றான் கணேஷ்.

“அவர் முகத்தைப் பாவமாக வெச்சுக்கிறாருங்கறதுக்காக, அவர் எடுத்துக் கொடுத்ததையும், வாங்கிக் கொடுக்குறதையும் நான் வாங்கிக் முடியுமோ? போட்டுக்க முடியுமா? மத்தவங்க எல்லாம் என்ன பத்தி என்ன நினைப்பாங்க? அவர்தான் அப்படி இருக்காருன்னு உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?” என்று கணேஷைத் திட்ட.

“உனக்கு அந்த மாமாவை பிடிச்சிருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன் முகத்தைப் பார்த்தாலே எனக்குத் தெரியுது, அக்கா” என்றான் கணேஷ்.

அவன் கூறியதைக் கேட்டு ஒரு நிமிடம் பேசாமல் இருந்தவள். “நீ சின்ன பையன், உனக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியாது. நீ பேசாம இருடா” என்று சொன்னவள், அவன் கொடுத்த ஆடைகளையும் சேர்த்து பில் போட்டாள்.

❤️

விசாலாட்சி நாளை கோவிலுக்குச் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்துகொண்டு இருந்தார்.

பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சிலவற்றைத் துர்காவிடம் வாங்கச் சொல்லி இருக்க, மற்ற வேலைகளை அவரே பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது வாசலில் இருந்து “அண்ணி….” என்று குரல் கேட்க. வேலையில் கவனமாக இருந்தவர், திடீர் என்று ‘அண்ணி’ என்று அழைக்கும் சத்தம் கேட்டதும் ஏதோ பழக்கப்பட்ட குரல் போல இருக்க, யார் என்று அடையாளம் கண்டவர் வேகமாக வாசலைத் திரும்பிப் பார்க்க, அங்கே கையில் பெட்டியுடன் நின்றிருந்தார் விசாலாட்சியின் தம்பி, அவர் மனைவியும், அவர்களின் மகள்கள் சிவன்யா என்கிற சிவுவும், ராதாவும் நின்றிருந்தனர்.

சிவு மூத்தவள், ராதா இளையவள். இவர்களைப் பற்றிப் போகப்போகப் பார்க்கலாம் ஃப்ரெண்ட்ஸ்.

இவர்கள் நால்வரும் ஆதியின் திருமணத்திற்கு அழைத்தும் வராமல், ஊரில் முக்கியமான வேலை இருக்கிறது என்று சொந்த அக்கா மகனின் திருமணத்திற்கு வராமல் இருந்து விட்டனர்.

அப்படி ஒன்றும் முக்கியமான காரணம் என்று எதுவும் இல்லை ஃப்ரெண்ட்ஸ். விசாலாட்சியின் தம்பி துரைக்கு, தன் மூத்த மகள் சிவுவை ஆதிக்குத் திருமணம் முடிக்க முடியாமல் வேறு பக்கம் பெண் பார்த்து விட்டார்கள் என்ற கோபம்தான். அதனால் தான் வரவில்லை.

அவர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் விசாலாட்சி வாசலுக்குச் சென்று அனைவரையும் வரவேற்றார்.

துரையின் மனைவி கனகாவும் விசாலாட்சியும் நல்ல உறவில் இருக்கின்றனர். இருவரும் தோழிகள் போல நெருக்கமானவர்கள். இவர்களைப் போலவே கனகாவின் இரண்டாவது மகள் ராதாவும் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவாள்.

ஆனால் விசாலாட்சியின் தம்பி துரையும், மூத்த மகள் சிவுவும் ஒரே குணம் கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் பணம், பணம், பணம்….. ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள். அதற்காக எவ்வளவு எல்லைக்கும் செல்பவர்கள்.

ஆதியின் திருமணம் நின்றுபோய், அதே மணவறையில், அதே முகூர்த்தத்தில் வேறு திருமணம் செய்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதில் இருந்து, துரைக்கும், சிவுவுக்கும் தாங்கள் திருமணத்திற்குப் போகாமல் பெரிய தவறு செய்து விட்டோம் என்று தோன்றியது.

திருமணத்திற்கு வந்திருந்தால், வேறு பெண்ணை ஆதிக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்குப் பதிலாக தன் மகளையே திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று துரைக்கு அடித்துக்கொண்டது. அதேபோலத்தான் சிவுவுக்கும், தான் ஆதியைத் திருமணம் செய்துகொள்ளக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பைத் தாங்களே வராது, கௌரவத்தால் நழுவ விட்டுவிட்டோமே என்று அடித்துக் கொண்டு இருக்கிறது.

“எப்படியும் ஆதிக்குத் திடீர் கல்யாணம் என்பதால், அவன் இப்போது திருமணம் செய்து இருக்கும் பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்காது.”

இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அருகில் இருந்து எப்படியாவது ஆதியின் மனதை மாற்றி அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிவுவும், தன் மகள்கள் இருவரில் யாரேனும் ஒருவரை அல்லது வாய்ப்பு கிடைத்தால் இருவரையும் ஆதிக்கோ அல்லது கதிருக்கோ திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் தான், இப்போது திடீர் என்று சொல்லாமல், கொள்ளாமல் துரை தன் குடும்பத்துடன் இங்கு வந்து விட்டார்.

அவர்களை அழைத்துக்கொண்டு வந்து ஹாலில் அமர வைத்தவர், அனைவருக்கும் சாப்பிட ஜூஸ் கொடுத்துவிட்டு அவர்களுடன் அமர்ந்து கொண்டார்.

“கனகா, எப்படி இருக்க? தம்பிதான் கல்யாணத்துக்கு வராம, சொந்த அக்கா பையன் கல்யாணம் கூட நினைக்காம வராம இருந்துட்டான். ஆனா, நீயாவது அவன்கிட்ட எப்படியாவது சொல்லி சமாதானப்படுத்தி ஆதி கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று வருத்தப்பட்டார். தாய்மாமன் என்ற உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு அவன் தான் வராமல் விட்டுவிட்டான் என்றால், நீயாவது அவனிடம் சொல்லி புரிய வைத்திருக்கலாமே என்றார்.

இவர்கள் பேசுவதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துரை, “அப்படித் தாய் மாமன் என்ற உரிமை இருந்திருந்தால், உன் பையனை என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும். அதை விட்டுட்டு வேற பக்கம் தானே பொண்ணு எடுத்தீங்க? தாய் மாமன் உரிமை இல்லாமல் நீங்கள் எங்களை நினைக்கும்போது, நாங்க எதுக்குத் தாய் மாமன் உறவைக் கொண்டாடிட்டு உங்க பையன் கல்யாணத்துக்கு வரணும்?” என்று வெட்டுக்கென்று கேட்டார் துரை.

அவர் அப்படி கேட்டதும் விசாலாட்சியின் முகம் வாடி விட, அதைக் கவனித்த கனகா, “ஏங்க! கொஞ்சம் சும்மா இருங்க. இப்பத்தான வந்திருக்கீங்க. அதுக்குள்ள அண்ணியைக் கஷ்டப்படுத்தாதீங்க. அவங்க என்னன்னு பார்ப்பாங்க. பையனோட விருப்பம் என்னவோ அவங்க அதுப்படிதானே செய்வாங்க. நீங்க சும்மா அதை இதையும் சொல்லி அண்ணியை சங்கடப்படுத்தாதீங்க” என்று கனகா சொல்ல.

“எங்க அவங்க பையனோட விருப்பப்படியா கல்யாணம் நடந்துச்சு? வேற பொண்ணுதானே அப்பவும் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க? அப்பவாவது நம்மளோட நினைப்பு அவங்களுக்கு இருந்திருக்கனுமே! நம்ம தம்பி பொண்ணு இருக்கா, அவளை நம்ம பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கொஞ்சமாவது நம்மைப் பற்றி நினைப்பு இருந்திருக்கணும். அது என் அக்காவுக்குத் தோணியிருக்கனுமே” என்று துரை விடாமல் பேச.

“ஏங்க……” என்று கனகா பேச வர, அவரின் கைப்பிடித்து தடுத்த விசாலாட்சி, “விடு கனகா. அவன் பேசிட்டு போகட்டும். அவன் பேசுவதிலும் நியாயம் இருக்கத்தானே செய்யுது? தம்பி வீட்டில் ஒன்றுக்கு இரண்டு பொண்ணு இருக்கிறப்போ, நாங்க வேற பக்கம் பொண்ணு எடுக்கும்போது அவனுக்கு அது கஷ்டமாத்தானே இருக்கும்? அவனோட உரிமை அவன் கேட்கிறான். அவன் கேட்டதுலயும் எந்தத் தப்பும் இல்ல கனகா. விடு பரவால்ல. சரி வாங்க, நீங்க ஊர்ல இருந்து வந்து ரொம்ப நேரமா உங்களை ரெஸ்ட் எடுக்க விடாமல் நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன். களைப்பா இருக்கும். முதல்ல போய் எல்லாரும் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க. உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறேன், சாப்பிடலாம்” என்று கூறி அவர்களே அனுப்பி வைத்துவிட்டு, அவர்களுக்காகச் சாப்பாடு எடுத்து வைக்கச் சென்றார் விசாலாட்சி.

EPISODE 52

ஷாப்பிங் முடித்துவிட்டு அனைவரும் கிளம்ப, கீர்த்திகா, நிலானி இருவரையும் அழைத்துக் கொண்டு போய் அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, பின் தாங்கள் இருவரும் அப்படியே ஆஃபீஸிற்கு வருவதாகக் கதிரும், விக்கியும் கூறினர்.

துர்காவும் ஆதியும், “அம்மா இன்று இரவு அங்கே தங்க வரச் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் ஆஃபீஸில் சிறு வேலை இருப்பதாக, இருவரும் சென்று அதைப் பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு வருகிறோம்” என்று ஆதி கூறிவிட்டுத் துர்காவை அழைத்துக்கொண்டு செல்ல, கணேஷ் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லி நிலானியுடன் வர மறுத்துவிட்டு அங்கிருந்த விக்கியிடம் சிக்னல் செய்துவிட்டுச் சென்றான்.

அனைவரும் ஷாப்பிங் மாலில் இருந்து ஆளுக்கு ஒரு திசையில் கிளம்ப, ஆதி கார் ஓட்டிக்கொண்டு வர, அவன் அருகில் அமர்ந்து வந்த துர்கா எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

தன்னோடு வரும்போது தன்னைக் கவனிக்காமல், தன்னுடன் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வரும் துர்காவைப் பார்த்து காண்டானது ஆதிக்கு.

அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே காரைச் செலுத்தியவன், அவளிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே வந்தவன், எதிரில் வரும் வண்டியை கவனிக்காமல் காரைச் செலுத்த, ஏதேச்சையாக வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள் திரும்ப, எதிரில் வந்த காரைப் பார்த்துப் பயந்தவள், “ஆதி…” என்று தன் காதை மூடிக்கொண்டு கத்த.

அவள் கத்தியதில், துர்காவைப் பார்ப்பதை விட்டு, ரோட்டைத் திரும்பிப் பார்த்து, தனக்கு எதிரே வேகமாக வந்த காரைப் பார்த்ததும், தன் காரைச் சட்டெனத் திருப்பி, ஒரு இடத்தில் ரோட்டை விட்டு இறக்கி காரை நிறுத்தினான்.

அவன் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திய வேகத்தில், துர்கா சீட்டில் இருந்து தடுமாறி இடித்துக்கொண்டு, வலியில் “ஷ்…. ஆ…” என்று கத்திக்கொண்டு ஒரு நிலையில் அமர்ந்தாள்.

அவள் சத்தம் கேட்டு வேகமாக சீட் பெல்ட்டைக் கழட்டி விட்டு துர்காவைத் திரும்பிப் பார்க்க, அவள் நெற்றியில் அடிபட்டு சிவந்து இருந்தது.

அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், “துர்கா… நல்லா அடிபட்டுருச்சா? ரொம்ப வலிக்குதா?” என்று அவள் நெற்றியை லேசாகத் தன் விரலால் தடவிக்கொண்டே கேட்க, “இல்லை ஆதி, லேசாத்தான் வலிக்குது” என்று அவன் அருகாமையில் நெளிந்துகொண்டே கூறினாள்.

“லேசாத்தான் வலிக்குதுன்னு சொல்றே, ஆனா இவ்ளோ பெருசா வீங்கி இருக்கு” என்று ஆதி அவள் நெற்றியைப் பார்த்துக் கொண்டே சொன்னவன், அவள் நெற்றியில் இருந்த வீக்கத்தைத் தன் விரல்களால் தடவிக்கொடுக்க, அவளுக்கு லேசாக வலிக்கவும், “ஷ்….” என்று வலியுடன் துர்கா முகம் சுழிக்க, அவள் வலியில் முகம் சுழிப்பதைப் கவனித்த ஆதி, காரில் முதலுதவிப் பெட்டி எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான். காரில் எதுவும் இல்லாமல் போகவே, “கொஞ்சம் பொறுத்துக்கோ துர்கா…. சீக்கிரம் வீட்டுக்குப் போயிரலாம். அங்கே போய் நான் இதுக்கு மருந்து போட்டு விடுறேன்” என்றான்.

துர்கா உடனே, “வேணாம் ஆதி, எனக்கு அவ்வளவா வலிக்கல. லேசா ஐஸ் வெச்சு தடவினாலே போதும், சரியாகிடும். இதுக்காக நீ வீட்டுக்குப் போக வேணாம், நாம ஆஃபீஸ்க்கே போலாம் ஆதி” என்றாள்.

“இல்லை, இல்லை துர்கா… அப்படி ஒன்னும் முக்கியமான மீட்டிங் இல்லை இன்று. அதை நான் விக்கியையும் கதிரையும் கவனித்துக் கொள்ளச் சொல்லிக்கிறேன். நாம வீட்டுக்கே போகலாம்” என்றவன், துர்கா சொல்ல சொல்லக் கேட்காமல் காரை வீட்டிற்குச் செலுத்தினான்.

செல்லும் வழியில் கதிரிடம் போன் செய்து விவரம் சொன்னவன், பின் அவர்கள் வீட்டிற்கு வந்தான். காரை நிறுத்தி விட்டு துர்கா இறங்குவதற்குள் வந்து அவளுக்குக் கார் கதவைத் திறந்து விட்டான் ஆதி.

அவன் இப்படி வந்து தனக்குக் கார் கதவைத் திறந்து விடுவதைக் கவனித்த துர்கா, ஒருவித சங்கடத்துடன் காரை விட்டு இறங்க, அவள் இறங்கியதும் கார் கதவைச் சாற்றி விட்டு முன்னே நடந்தான் ஆதி.

துர்கா செல்லும் அவனையே அதிசயம் போல பார்த்துக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள். அவனைப் பார்த்துக் கொண்டே இரண்டு அடி எடுத்து வைத்து இருப்பாள், துர்கா “அம்மா….” என்று கத்திக்கொண்டு அப்படியே கீழே சரிய, அவள் கத்தும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்ட ஆதி திரும்பி துர்காவைப் பார்க்க, அவள் தன் காலைப் பிடித்துக்கொண்டே கீழே விழப் போவதைக் கவனித்த ஆதி, வேகமாகச் சென்று அவளைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்தான்.

எங்கே கீழே விழப் போகிறோமோ என்று கண்களை இருக்க மூடி இருந்த துர்கா, தான் கீழே விழாமல் இருப்பதை உணர்ந்து கண்களைத் திறந்து பார்க்க, ஆதியின் முகம் அவள் முகத்திற்கு மிக அருகில் இருந்தது.

இதயம் படபடக்க அவனையே பார்த்துக் கொண்டு இருந்த துர்காவைப் பார்த்து, “ஏன் துர்கா கத்தினே? உனக்கு வேற எங்கேயும் வலிக்குதா… உடம்புல? வேற எங்கேயும் அடி பட்டுருச்சா?” என்று கேட்டான்.

அவன் கேட்டது அவள் காதுகளுக்குக் கேட்டாலும், அவள் மூளையைச் சென்று அடையவில்லை. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் துர்காவை அப்போது ஆதி தன் கவனிக்க, மெல்லப் புன்னகை செய்து அவள் தன்னை ரசிப்பதை உணர்ந்து, அவள் விழிகளையே பார்த்தவன், மாஸ்க் அணிந்த முகத்தில் தெரிந்த அவன் கண்களை மட்டும் ரசித்துக் கொண்டே மெய் மறந்து இருக்கும் துர்காவை அப்படியே தன் கைகளில் ஏந்தியவன், அவளைத் தூக்கிக்கொண்டு பெட்ரூம் வந்தான்.

ரூமிற்கு வந்தவன் தன் கால்களாலேயே கதவைத் தள்ள, கதவு திறந்துகொள்ள, இரண்டு கதவுகளையும் தன் கால்களாலேயே திறந்தவன், துர்காவை உள்ளே தூக்கிக்கொண்டு வந்து அவளைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டுத் துர்காவையே பார்க்க, அவள் இன்னமும் அவன் கண்களையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இப்படி இமைக்காமல் தன்னையே பார்க்கும் தன் மனைவியை ரசித்தவன், அவள் காலுக்கு அருகில் அமர்ந்து அவளுக்கு எங்கே அடி பட்டு இருக்கிறது என்று பார்க்க, அவள் புடவையை மேலே தூக்கினான்.

துர்கா இப்போதும் அமைதியாகவே அவன் கண்களையே பார்த்துக் கொண்டு இருக்க, அவள் கால்களைத் தழுவி இருந்த அவள் சேலையை மேலே தூக்கி அவள் கால்களைப் பார்த்தவன், அவள் உள்ளே அணிந்திருந்த ஸ்கர்ட் அவள் கால்களை மறைத்துக்கொண்டு இருந்தது.

“இந்த வெண் சங்கு நிற காலைத் தரிசிப்பதற்கு எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டி இருக்கிறது” என்று பெருமூச்சு விட்டவன். தன் மாஸ்க்கைக் கழட்டி வைத்துவிட்டு அவள் ஸ்கர்ட்டை மேலே மெதுவாகத் தூக்க, அதுவரை இது எதுவும் அறியாமல் இருந்த பெண்ணவளின் பெண்மை விழித்துக் கொள்ள, தன்னிச்சையாக அவள் கைகள் இரண்டும் ஆதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவனையே பார்க்க.

“துர்கா… ப்ளீஸ், கையை எடு. உனக்கு எங்கேயும் அடி பட்டு இருக்கிறதா என்று நான் பார்க்கிறேன்” என்றான். அவள் எதுவும் கூறாமல் அவன் கண்களையே பார்க்க, அவனும் பார்வையாலேயே அவளிடம் ‘ப்ளீஸ்’ என்று கெஞ்ச, துர்காவின் கை அவன் பார்வைக்கு கட்டுப்பட்டது போலத் தன் பிடியை லேசாகத் தளர்த்தினாள். மென்மையாகப் புன்னகை செய்த ஆதி, அவள் கைகளை மெல்லத் தன் கைகளில் இருந்து விலக்கி விட்டவன், அவள் ஸ்கர்ட்டை மேலே உயர்த்த.

அவள் வெண் சங்கு நிறக் கால் வாழைத்தண்டு போலப் பளபளவென இருக்க, அதை ரசிக்க முடியாமல், அவளுக்கு அங்கே ஏதும் காயம் பட்டு இருக்கிறதா என்று கவனித்தான்.

அங்கே எதுவும் காயம் இல்லாததால் மேலும் கொஞ்சம் அவன் கைகளை உயர்த்தி அவள் ஸ்கர்ட்டை மேலே தூக்க, அவள் வலது முட்டியில் அடிபட்டுச் சிவந்து நன்றாக வீங்கி இருந்தது.

அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னுடைய கவனக்குறைவால் துர்காவுக்கு இப்படி நெற்றியிலும் முட்டியிலும் காயம் பட்டு விட்டதே என்று வருத்தப்பட்ட ஆதி, தன்னையே திட்டிக்கொண்டவன், உடனே தன் போனை எடுத்துத் தங்கள் குடும்ப டாக்டரை வரச் சொல்லிவிட்டுத் துர்காவைப் பார்க்க, அவள் இப்போது கொஞ்சம் நிஜ உலகிற்கு வந்தவள் போல இருந்தாள். அவள் முகத்தில் அப்பட்டமாக வலி தெரிந்தது.

“துர்கா… கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. டாக்டர் சீக்கிரமே வந்திருவார். நீ பதட்டப்படாமல் இரு” என்று அவளுக்கு ஆறுதல் கூறினாலும், அவனால் துர்காவின் நிலைக்காக வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

அவள் எதுவும் பேசாமல் வலியால் அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தால். டாக்டர் வருவதற்குள் ஆதி துர்காவுக்கு ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்துக்கொண்டு இருந்தான். துர்கா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவளுக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அவன் போன் செய்த அரை மணி நேரத்திற்குள் டாக்டர் அங்கு வந்துவிட்டார். அவரை வாசல் வரை சென்று அழைத்துக்கொண்டு மேலே தங்கள் அறைக்கு வந்த ஆதி, துர்காவிடம் டாக்டரை அழைத்துச் சென்றான்.

அவர் வந்து துர்காவின் காலைப் பார்த்தவர், அவள் நெற்றியையும், முட்டியையும் பரிசோதனை செய்தவர், “உங்களுக்கு உடம்பில் வேறு எங்கேயாவது அடி பட்டு இருக்கிறதா மிஸ்ஸஸ் ஆதி?” என்று கேட்டார்.

அவள் ‘ஆம்’ என்று தலையை ஆட்ட, அதைக் கவனித்த ஆதி, “எங்கே அடி பட்டுருக்கு துர்கா? சொல்லு, டாக்டர் அதையும் பார்த்திருவாங்க. எங்கென்னு காட்டு” என்று ஆதி கேட்க, அவனைச் சங்கடமாகத் துர்கா பார்க்க, அதைப் புரிந்து கொண்ட பெண் டாக்டர், “சார், நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா? நான் அவங்களுக்கு உடம்பில் எங்கே எல்லாம் காயம் ஆகி இருக்கு என்று பார்த்து சொல்றேன்” என்றார்.

ஆதி துர்காவையே பார்க்க, அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் கண்களைத் தாழ்த்தி, தலையைக் குனிந்து கொண்டு, தன் சேலைத் தலைப்பைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு சேலையைக் கசக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளை இப்படிப் பார்க்கும்போதே ஆதிக்குப் புரிந்து விட்டது, அவளுக்கு உடலில் தனக்குத் தெரியாமல் வேறு இடங்களில் அடி பட்டு இருக்கிறது என்று.

ஆதி சூழ்நிலையைப் புரிந்து கொண்டு துர்காவையும், டாக்டரையும் மாறி மாறிப் பார்த்தவன், “சரி” என்று தலையை ஆட்டி விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

அவன் அறையை விட்டு வெளியே சென்றதும் டாக்டர் துர்காவைத் திரும்பிப் பார்த்து, “இப்போ சொல்லுங்கம்மா, உங்க உடம்புல வேற பக்கம் எங்கே அடிபட்டு இருக்கு?” என்று கேட்டார்.

டாக்டர் இவ்வாறு கேட்டதும் எதுவும் கூறாமல் துர்கா அமைதியாகத் தலை குனிந்து இருப்பதைப் பார்த்த டாக்டர், “என்கிட்ட சொல்ல எதுக்குமா இவ்வளவு கூச்சப்படுறீங்க…. நானும் உங்களை மாதிரி ஒரு பொண்ணு தானே? சும்மா கூச்சப்படாம, பயப்படாம சொல்லுங்க. அப்பத்தானே நான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியும்? இல்லன்னா, இப்போ சின்ன வலியா இருக்கிறது நாளைக்குப் பெருசா ஏதாவது பின்னாடி பிரச்சினை பண்ணலாம் இல்லையா?” என்று சொன்னார் டாக்டர்.

அவர் அப்படிச் சொன்னதும் வேறு வழி இல்லாமல், துர்கா டாக்டரிடம் தயங்கிக் கொண்டு தன் கையை உயர்த்தி, அவள் இடுப்பையும் இடுப்புக்குக் கீழே உள்ள இடத்தையும் காட்டி, “இங்கே வலிக்கிறது” என்று சொன்னாள்.

அவளை லேசாகத் திரும்பிப் படுக்கும்படி டாக்டர் கூற, அவர் சொன்னது போலப் படுத்துக்கொண்டாள் துர்கா. அவள் திரும்பி வலி இருக்கும் இடத்தைக் காட்டியவாறு படுத்திருக்க, அவள் முதுகில் இருந்து சேலையை லேசாகக் கீழே இறக்கிய டாக்டர், அவள் சொன்ன இடத்தைப் பார்க்க, துர்காவின் இடுப்பும் இடுப்புக்குச் சற்று கீழே உள்ள இடமும் நன்றாகச் சிவந்து வீங்கி இருந்தது.

அதைப் பார்த்தவர் தன் கைகள் கொண்டு லேசாக அந்தச் சிவந்திருந்த இடத்தை அழுத்திப் பிடித்து அவளிடம், “இங்கே வலிக்கிறதா?” என்று கேட்க, அவர் அழுத்தியதுமே துர்கா வலியில் “ஆ….” என்று கத்த.

அவள் கத்திய சத்தம் கேட்டதும், அறைக்கு வெளியே அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஆதி வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், “என்ன துர்கா? ஏன் கத்தினே? ரொம்ப வலிக்குதா?” என்று பதட்டப்பட்டுக்கொண்டே அவள் அருகில் வர, துர்கா டாக்டரிடம் தன் இடுப்பையும் அதற்கு கீழே லேசாகவும் காட்டிக்கொண்டு படுத்திருந்த கோலத்தைக் கண்டதும், வேகமாக வந்து கொண்டிருந்த ஆதி, நடந்துகொண்டிருந்தவன் அப்படியே நின்று விட, அவனைத் திரும்பிப் பார்த்த டாக்டர் லேசாகச் சிரித்தவர், “உங்க மனைவிக்கு லேசா வலின்னு சொன்னதும் உங்களால தாங்க முடியாம கதவைத் திறந்துட்டு உள்ள வந்துட்டீங்க. நான் இங்கதான் இருக்கேன் மிஸ்டர் ஆதி. அவர்கள் எதுவும் பண்ணிட மாட்டேன். நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன். ப்ளீஸ் கொஞ்ச நேரம் எனக்கு ஒத்துழைச்சு வெளியே வெயிட் பண்றீங்களா?” என்று டாக்டர் கேட்க.

“சாரி டாக்டர். ஏதோ பதட்டத்துல யோசிக்காமல் உள்ள வந்துட்டேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க. நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியே வந்த ஆதி, கதவைச் சாற்றிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றவன், தன் இதயம் வெளியே வந்து விடுவது போலத் துடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், தன் வலது கையைக் கொண்டு தன் இடதுபுற மார்பைத் தடவி கொடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். துர்காவை அந்த நிலையில் பார்த்ததால் தான் அவனுக்கு இப்போது இதயம் இப்படித் துடிக்கிறது.

ஆதி வெளியே சென்று கதவைத் திறந்து சென்றதும், துர்காவிடம் திரும்பிச் சிரித்த டாக்டர், “உங்க ஹஸ்பன்ட் உங்க மேல ரொம்ப பாசம் வெச்சிருக்கார் போல. அதனாலதான் நீங்க ஒரு சின்ன வலிக்குத் தாங்க முடியாம சத்தம் போட்டதும் ரூமுக்குள்ள வேகமாக வந்துவிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார்.

டாக்டர் கூறியதைக் கேட்டு துர்காவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெறுமனே தலையை இங்குமங்கும் ஆட்டி வைத்தாள்.

அவளுக்கு அடிபட்ட இடத்தை பரிசோதித்து விட்டு, அடிபட்ட இடங்களில் ஆயின்மென்ட் கொடுத்துத் தடவச் சொல்லி விட்டு, அவளுக்கு வலி குறைய இன்ஜெக்‌ஷன் போட்டுவிட்டு வெளியே வந்தார்.

அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த ஆதியிடம் வந்த டாக்டர், “அவங்களுக்குப் பெருசா அடி எதுவும் இல்லை மிஸ்டர் ஆதி. ஆனா அவங்க கொஞ்சம் வீக் ஆஹ் இருக்கனால, அடி பட்டதும் அந்த இடம் எல்லாம் சிவந்து வீங்கி இருக்கு. ஒரு ரெண்டு நாள் கம்ப்ளீட் ஆஹ் ரெஸ்ட் எடுத்துட்டு, நான் கொடுத்த ஆயின்மென்டை வலி இருக்க இடத்துல சரியா தடவி வர சொல்லுங்க. ஒரு டூ டேஸ்ல சரியாகிடும். அவங்களுக்கு அதுவரை அவங்களை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம பாத்துக்கோங்க போதும்” என்றவர் அவனிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவர் சென்றதும் அறைக்குள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே ஒருவழியாக உள்ளே வந்து விட்டான்.

உள்ளே வந்த ஆதி, அங்கே துர்கா படுத்திருந்த கோலம் கண்டு அப்படியே நின்றுவிட்டான்.

EPISODE 53

துர்காவை டாக்டர் பார்த்துவிட்டுச் சென்றதும், அறைக்குள் வரத் தயங்கியவன், ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே வந்த ஆதி துர்காவைப் பார்க்க.

அவள் படுத்திருந்த கோலம் கண்டவன் அதிர்ந்து, என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றான்.

அவள் சேலை முட்டிக்கு மேல் தூக்கப்பட்டு, அவள் கால்கள் இரண்டும் தெரிய, அவள் இடுப்பில் இருந்த சேலை விலகி, அவள் மொத்த முதுகும், இடுப்பும் அந்த அறையில் இருந்த நியோன் விளக்கு ஒளியில் மேலும் பிரகாசமாக, பளபளப்பாக அவள் இடுப்பு வெளியே தெரிந்தது.

அவள் இடுப்பு மொத்தமும் வெளியே தெரிய, அதையும், காலில் தூக்கி இருந்த சேலையையும் சரி செய்யத் துர்கா படுத்துக்கொண்டே போர்த்திக் கொள்ளப் போராடிக் கொண்டு இருந்தாள்.

அவள் நிலைமை உணர்ந்த ஆதி, அவளை இந்த நிலையில் ரசிப்பது சரி அல்ல என்று தன் தலையைக் குலுக்கிக்கொண்டவன், நேராக அவள் அருகில் வர, ஆதி தன் அருகில் வருவதை உணர்ந்த துர்கா அவனிடம் தன்னை மறைத்துக்கொள்ளப் போராட வேண்டி, தன் சேலையைச் சரி செய்ய வேகமாக எழுந்தவள், சுளுக்குப் பிடித்த இடத்தில் அசைவு கொடுக்கவும், வலியில் “அம்மா…” என்று கத்திக்கொண்டே மீண்டும் படுத்துக்கொண்டாள்.

அவள் சிரமப்படுவதைக் கவனித்த ஆதி, “துர்கா… இப்போ எதுக்கு ஸ்ட்ரெயின் பண்ற? நான் தான் இருக்கேன்ல, அப்புறம் எதுக்கு இப்படிப் பண்ற? உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்றான்.

“இல்லை ஆதி, பரவாயில்லை, நானே பார்த்துக்கிறேன்” என்று எழப் போக, வலி தாங்காமல் “ஆ…” என்று கத்தியவள் மீண்டும் படுத்துக்கொண்டாள்.

“இப்போ எதுக்கு துர்கா வீணா எழுந்து உன்னை நீயே ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற? இப்போ நான் என்ன புதுசாவா உன்னைப் பார்க்குறேன்? ஏற்கனவே கல்யாணம் ஆன பிறகு நான் தான் உன்னை முழுசாப் பார்த்துட்டேனே” என்றான் ஆதி.

அவன் இவ்வாறு கூறியதும் அதிர்ச்சியில் திரும்பி அவனைப் பார்க்க, அவன், “என்ன, நான் சொல்வது சரி தானே?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்டவன். “உனக்கு இப்போ என்ன வேணும் துர்கா… சொல்லு” என்றான்.

அவள் ‘ஒன்றுமில்லை’ என்று தலையை ஆட்டினாள். “ஒன்றுமில்லாமலா அசைஞ்சுட்டே படுத்திருக்க?” என்றவன், “சொல்லு துர்கா… என்னனு சொல்லு” என்றான்.

“அது… அது… வந்து ஆதி, எனக்கு…. எனக்கு…. பாத்ரூம் போகணும். யாரையாவது வரச் சொல்றியா எனக்கு ஹெல்ப் பண்ண?” என்று கேட்டாள் தயங்கிக் கொண்டே.

“இதற்கு எதுக்கு இவ்ளோ தயங்குற துர்கா… என்கிட்ட சொன்னா நானே கூட்டிட்டு போவேன்ல?” என்றவன் அவளைத் தூக்கப் போக, “ஆதி…. ஆதி, வேண்டாம்… யாரையாவது ஹெல்பிற்கு வரச் சொல்லேன்” என்றாள்.

“ஏன் துர்கா… நான் உனக்கு ஹெல்ப் பண்ணக் கூடாதா?” என்றான் ஏக்கமாக. “அவங்களை எல்லாம் ஹெல்ப்பிற்கு கூப்பிட்டா, அப்புறம் அம்மா கிட்ட போய் நமக்குள்ள ஏதும் பிரச்சினை என்று சொல்லிருவாங்க. அப்புறம் நீயும் நானும் கல்யாணம் ஆகியும் இவ்வளவு நாள் ஆகியும் நீயும் நானும் அன்யோன்யமாக இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்துவிடும். வீணா அவங்க நமக்காக வருத்தப்படுறதை நான் விரும்பலை” என்றான்.

அவன் இப்படிச் சொன்னதும் துர்கா, ‘அவன் நம்மை இன்னும் தள்ளி வைத்துத் தான் பார்க்கிறான் போல’ என்று நினைத்தவள்.

“நாம அன்யோன்யமாக இல்லை என்பது என்றாவது அவர்களுக்குத் தெரியத்தானே போகிறது? தெரிந்தால் எப்படியும் கவலைப்படத்தானே போகிறார்கள். அதை இப்போவே தெரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னவள், “பரவாயில்லை, அவங்களையே வர சொல்லு ஆதி” என்றாள் துர்கா.

“அவங்களுக்கு என்றாவது இல்லை என்றைக்குமே அந்தக் கவலையை நான் தர விரும்பவில்லை” என்றான் ஆதி. அவனைப் புரியாமல் பார்த்த துர்காவை, “என்ன பார்க்கிறே? இவ்வளவு நாள் தான் நமக்குள்ள அன்யோன்யம் இல்லாமல் இருந்தது, இனிமேல் அதற்குப் பஞ்சமே இருக்காது” என்றவன், அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய் பாத்ரூமில் விட்டுவிட்டு வெளியே வந்து கதவைச் சாற்றிக் கொண்டான்.

அவன் சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் திகைப்பிலேயே இருந்த துர்காவுக்கு, ஆதி சொன்னது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் சொன்னதற்கு என்ன அர்த்தம்? ஏன் இப்படிச் சொன்னான்? என்று யோசித்தவளுக்கு ஏதோ புரிந்தது போலத் தோன்ற, அவள் வயிற்றில் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது அவளுக்கு.

சிறிது நேரம் கழித்துக் கதவைத் தட்ட, ஆதி கதவைத் திறக்க, துர்கா தடுமாறிக் கொண்டே நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் உள்ளே இருந்தே சத்தம் போட்டிருக்கலாமே என்றவன், அவளை அப்படியே கையில் தூக்கியவன் நேராகப் பெட்டிற்குப் போக, “ஆதி அங்கே இல்லை, அங்கே” என்று தன் கையை நீட்டினாள். அவள் நீட்டிய திசையைப் பார்க்க, டிரெஸ்ஸிங் ரூம் இருந்தது.

ஆதி “சரி” என்று தலையை ஆட்டியவன், அவளை டிரெஸ்ஸிங் ரூமிற்குள் அழைத்துச் சென்றவன், அங்கிருந்த சோபாவில் அவளை அமர வைத்தவன், “எந்த டிரஸ் வேணும்னு சொல்லு நான் எடுத்துக் தரேன். நீ எழுந்து இங்கேயும் அங்கேயும் நடக்காதே” என்றான்.

அவனை அதிசயம் போலப் பார்த்துவிட்டு, அவள் கையை உயர்த்தி, தான் இரவு அணிவதற்காக எப்போதும் போட்டுக்கொள்ளும் பனியனும், ஷார்ட்ஸும் காட்டி, அதற்குள் இருக்கும் ஒரு செட்டை எடுத்துத் தரச் சொன்னாள்.

அவள் சொன்ன இடத்தில் இருந்த டிரெஸ்ஸில் ஒன்றை எடுத்து அவள் கையில் கொடுத்தான். “நீயே போட்டுக்குவியா இல்லை நான் வேணும்னா உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும், கையில் இருந்த உடையைத் தன் நெஞ்சில் வைத்தவாறு, “நானே போட்டுக்கிறேன். நீ முதல்ல வெளியே போ… ஆதி” என்று துர்கா அவனை விரட்ட.

“நான் இப்போ என்ன சொன்னேன், நீ இப்படிக் கோச்சுக்கறே? உனக்கு நான் ஹெல்ப் பண்ணாம வேற யாரு ஹெல்ப் பண்ணுவா…” என்று ஆதி பாவமாகக் கேட்பது போலத் துர்காவைப் பார்க்க.

“நானே மாத்திக்கிறேன். முதல்ல நீ வெளியே போ ஆதி” என்று கத்தினாள். “சரி சரி… கத்தாதே. நான் வெளியே வெயிட் பண்றேன். நீ டிரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு எனக்குச் சொல்லு. நீயா நடந்து வராதே” என்றவன் வெளியே சென்று கதவைச் சாற்றிக்கொண்டான்.

அவன் சென்றதும், ‘இவனுக்கு என்ன ஆச்சு? கொஞ்ச நாளாகவே ஒரு மார்க்கமாவே இருக்கான்’ என்று யோசித்துக் கொண்டே உடைகளை மாற்ற, சேலையைக் கழட்ட, அதில் குத்தி இருந்த பின்னை அவளால் கழட்ட முடியவில்லை.

இடுப்பை வளைத்துக் கையை உயர்த்தி முதுகில் குத்தி இருக்கும் பின்னை கழட்ட எவ்வளவோ முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை.

வெளியில் நின்றிருந்த ஆதி, ‘என்ன இவ்வளவு நேரம் ஆகியும் இவ இன்னும் கூப்பிடவே இல்லை’ என்று யோசித்தவன். “என்ன துர்கா… ஆச்சா… உள்ளே வரட்டுமா…” என்று வெளியில் இருந்து கத்த.

‘இவன் வேற அவசரப்படுத்துறானே’ என்று நினைத்தவள், வேறு வழி இல்லாமல் அவனைத் தான் கூப்பிட வேண்டும் போல என்று நினைத்தவள். ‘ஆபத்திற்குப் பாவம் இல்லை’ என்று நினைத்தவள் வேறு வழியில்லாமல், “ஆதி” என்று அவனை அழைத்தாள்.

அவனை அழைத்ததும்தான் தாமதம், அடுத்த நிமிடம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான், இதற்காகவே காத்திருப்பவன் போல.

உள்ளே வந்தவன், துர்கா இன்னும் உடை மாற்றாமல் இருப்பதைப் பார்த்தவன், “ஏன் துர்கா… இன்னும் டிரஸ் மாத்தலையா? நீ அப்படியே உட்கார்ந்திருக்கே?” என்று ஆதி கேட்க.

அவனிடம் முதுகு காட்டி லேசாகத் திரும்பி அமர்ந்தவள், தன் முதுகில் இருக்கும் ஹூக்கைக் காட்ட, அதைப் பார்த்தவன், “இதுக்குத் தான் அப்போவே நான் சொன்னே, நானே ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு” என்றவன் பேசிக் கொண்டே அவள் பின்னை கழட்ட, அவன் பின்னை கழட்டியதும் சேலைத் தலைப்புச் சட்டெனச் சரிந்து கீழே விழுந்தது.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத துர்கா, குனிந்து சேலையை எடுக்கப் போக, வேகமாகக் குனிந்ததில் மறுபடியும் பிடித்த இடத்திலேயே இடுப்புப் பிடித்துக் கொண்டது.

“ஆ….” என அவள் கத்த, “இப்போ எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை? நான் பாத்துக்கிறேன், நீ பேசாம இரு” என்று அவளை அதட்டியவன், அவளுக்கு வலிக்காமல் சேலையைக் கழற்றியவன், அவள் பிளவுஸைக் கழட்டக் கையை கொண்டு போக, சட்டெனத் தன் மார்புக்குக் குறுக்கே கையை கொண்டு சென்றவள் அவனை முறைக்க.

தன்னை முறைக்கும் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தவன். “சும்மா சும்மா அந்தக் குட்டி கண்ணை உருட்டி முறைக்காதே துர்கா…. அப்புறம் அந்தக் கண்ணைக் கடிச்சுத் தின்னிருவேன் பார்த்துக்கோ” என்றவன்.

“சரி, நீ டிரெஸ் மாத்து, நான் இங்கேயே இருக்கேன்” என்றான். “நீ வெளிய போ ஆதி. நீ இங்கே இருந்தா நான் எப்படி டிரெஸ் மாத்துறது?” என்று துர்கா அவனை வெளியே போகச் சொல்ல.

“நான் இங்கேயே தான் நிற்பேன்” என்று கையை கட்டிக்கொண்டவன் நிற்க. “உன்னை…” என்று அவனை முறைத்தவளிடம், “நான் வெளியே போன நேரம், நீ மறுபடியும் எதுவும் பண்ணி சுளுக்கு பிடிச்சிட்டா அப்புறம் என்ன செய்றது? நான் இங்கேயே தான் நிற்பேன்” என்றான் ஆதி.

“ஆதி….” என்று அவள் கெஞ்சுவது போல அவனை அழைக்க, “சரி, நீ இவ்ளோ கெஞ்சுறதுனால நான் வேணும்னா திரும்பி நின்னுகிறேன். நீ டிரெஸ் மாத்திக்கோ” என்றான்.

அவள் அவனையே வெறி கொண்டு முறைக்க, “என்ன, வேணாமா? நான் இப்படியே நிற்கவா? நீ இப்படியே டிரெஸ் மாத்திக போறியா?” என்றான்.

“சரி, திரும்பித் தொலை. நான் டிரெஸ் மாத்துற வரை நீ இந்தப் பக்கம் திரும்பக் கூடாது” என்றாள்.

“சரி, டீல். நீ டிரெஸ் மாத்திட்டு என்னைக் கூப்பிடு. அதுவரை நான் திரும்ப மாட்டேன்” என்ற ஆதி திரும்பி நின்று கொண்டான்.

அவன் தன்னைப் பார்க்கிறானா இல்லையா என்று உறுதிப்படுத்தியவள், தன் உடைகளை வேக வேகமாக மாற்ற ஆரம்பித்தாள். அவள் அசைகையில் லேசாக அடிபட்ட இடம் வலித்தாலும், கடகடவென தான் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தையும் கழட்டிப் போட்டவள் இரவு உடைக்கு மாறினாள்.

துர்கா உடை மாற்றிவிட்டு நிமிரவும் ஆதி சரியாக அவள் புறம் திரும்பவும் சரியாக இருந்தது.

அவன் சரியாகத் திரும்பியதும், “ஆதி, நான் கூப்பிடாம எப்படி நான் டிரெஸ் மாற்றினதும் திரும்பினே?” என்று துர்கா கேட்டாள்.

“அதெல்லாம் அப்படிதான் எனக்குத் தெரியும்” என்றவன், அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் அவளை மெத்தையில் படுக்க வைத்தவன். அவளுக்குச் சாப்பிடக் கொண்டு வரச் சொல்லி அவளைச் சாப்பிட வைத்துவிட்டு, அவளுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்தவன், அவள் சொல்ல சொல்லக் கேட்காமல், துர்காவுக்குச் சுளுக்குப் பிடித்த இடத்தில் டாக்டர் கொடுத்த ஆயின்மென்ட்டை அவள் முட்டியிலும் இடுப்பிலும் தடவ, கூச்சத்தில் நெளிந்துகொண்டே ஆதியைப் பார்த்து, “ஆதி….. போதும்ம்…. ப்ளீஸ்” என்று அவள் நெளிந்துகொண்டே கெஞ்ச. ‘சரி, போனால் போகட்டும்’ என்று அவளை விட்டான்.

“சரி, கொஞ்ச நேரம் தூங்கு துர்கா…” என்று அவளுக்குப் போர்த்தி விட்டவன். அருகில் இருந்த சேரில் போய் அமர்ந்தவன் லேப்டாப்பில் வேலையில் மூழ்கி விட்டான்.

வேலையில் மும்முரமாக இருந்த ஆதியையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் துர்கா. அவள் தூங்காமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்த ஆதி, துர்காவை நிமிர்ந்து பார்க்காமல், “என்ன துர்கா, நான் என்ன அவ்ளோ அழகா இருக்கேனா என்ன? என்னையே அப்படிப் பார்க்கிறே?” என்று கேட்டான்.

‘அடப்பாவி! என்னைப் பார்க்காமலேயே நான் என்ன பண்றேன்னு கரெக்ட் ஆஹ்… சொல்றானே’ என்று யோசித்தவள். “அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றாள் துர்கா.

தன்னிடம் அதிசயம் போலப் பேசும் துர்காவை நிமிர்ந்து பார்த்தவன், “என்ன கேட்கணும் துர்கா…?” என்றான்.

“நான் டிரெஸ் மாற்றின உடனே எப்படி நீ திரும்பிச் சரியா என்னைப் பார்த்தே?” என்று கேட்டாள்.

அவள் அப்படி கேட்டதும் லேப்டாப்பை கீழே வைத்தவன், வேகமாக அவள் அருகில் வந்து அவளைத் தூக்கியவன், நேராக டிரெஸ்ஸிங் ரூமிற்கு அழைத்துச் சென்றான்.

“இங்கே எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தே ஆதி?” என்று துர்கா புரியாமல் கேட்க. “நீ கேட்ட கேள்விக்குப் பதில் வேணுமா வேண்டாமா?” என்றான். அவன் அப்படி கேட்டதும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ‘ஆம்’ என்பது போலத் தலையை மேலும் கீழும் அழகாக ஆட்ட.

‘ஐயோ… என்ன ரொம்ப டெம்ட் பண்றாளே! நானே என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாமல் என்னை நானே டைவேர்ட் பண்ணிட்டு இருக்கேன். ஆனா இவ என்னடான்னா இப்படி அழகழகா இந்தக் குட்டி முகத்தை வெச்சுட்டு எத்தனை எக்ஸ்பிரஷன் கொடுக்கிறா!’ என்று நினைத்தவன்.

அவளை முன்பு நிறுத்திய இடத்தில் இறக்கி விட்டவன், “நீ இப்படி திரும்பி நின்னு டிரெஸ் மாத்திட்டு இருந்தியா? நான் உன்னைப் பார்க்காமல் இப்படி திரும்பி நின்னேனா. அப்போ இந்தக் கண்ணாடியைப் பார்த்தேன்” என்று கூறி அவனுக்கு எதிரே இருந்த கண்ணாடியைத் துர்காவிடம் காட்ட.

அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்தவள். “ஆதி….” என்று கோபமாகக் கத்தியவள், “அப்போ…. அப்போ…. நீ… நீ… என்னை….” என்று அவனை முறைத்துக்கொண்டே கேட்க.

“ஆமாம் துர்கா, நான் சொன்ன மாதிரியே உன்னைத் திரும்பிப் பார்க்கவே இல்லை பார்த்தியா?” என்று குறும்பாக அவன் சிரிக்க, அவனை வெறி கொண்டவள் போல முறைத்தவள். ஆதியை அடிக்கக் கையை ஓங்க… அவளுக்குச் சுளுக்குப் பிடித்திருந்த இடம் ‘வின்…’ என்று வலியை உண்டாக்க, அவளால் முடியாமல் “அம்மா….” என்று தன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நின்றவளைப் பார்த்துச் சிரித்தவன், “இதுக்குத்தான் அவசரப்படக் கூடாதுன்னு சொல்றது” என்றவன், அவள் அருகில் வந்து அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய் பெட்டில் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்தி விட, அப்போதும் அவனையே முறைத்துக்கொண்டு படுத்திருந்தவளைப் பார்த்து, “இப்படியே என்னை முறைச்சுட்டு இருந்தேன்னு வை…”

“ஏற்கனவே நான் உன்னைக் கண்ணாடியில் பார்த்ததில் இருந்து என்னை நானே கண்ட்ரோல் பண்ண முடியாமல் இருக்கேன். இப்படி முறைச்சுட்டே இருந்தேன்னா அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை பார்த்துக்கோ” என்றான்.

“என்ன நடக்கும்?” என்றால் கோபமாக துர்கா. “என்ன வேணும்னாலும் நடக்கலாம்” என்றவன் குனிந்து, “சாம்பிள் காட்டவா?” என்றவனைப் புரியாமல் துர்கா பார்த்த துர்காவின் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன், குனிந்து அவள் இதழைச் சிறை செய்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத துர்கா கண்களை அகல விரித்தவள், அவனையே பார்க்க, அவன் கண்கள் மூடி துர்காவுக்கு முத்தம் கொடுப்பதில் முழுமூச்சில் இறங்கி இருந்தான்.

அவனை எவ்வளவு தடுத்தும் அவளால் முடியாமல் போகவே, ஆதியின் நெருக்கம் அவளுக்குப் பிடிக்கும் என்பதாலும், அவன் மீது அவள் கொண்ட காதலினாலும், அவனை அதற்கு மேலும் அவளிடம் இருந்து பிரிக்க மனம் இல்லாமல், அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்துக்கொண்டு அவன் முத்தத்திற்கு இணங்கிப் போனாள்.

அவனும் அவள் இணக்கத்திற்கு ஏற்ப அவளுக்குத் தன் முத்தத்தை அள்ளி இறைத்தான்.

EPISODE 54

துர்காவுக்குக் காலில் அடிபட்டு விட்டதால், இரவு ஆதியின் பெரிய வீட்டிற்குப் போக வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், அங்கு போயே ஆக வேண்டும் என்று துர்கா அடம் பிடிக்க, வேறு வழி இல்லாமல் அவன் வீட்டிற்குச் செல்லச் சம்மதம் சொன்னான்.

அவன் ‘சரி’ என்று சொன்னதும் தான் தாமதம், வலியுடனேயே எல்லா வேலைகளையும் செய்ய, அவன் “இப்படி நீயே அணைத்து வேலைகளையும் செய்வது என்றால் நான் அங்கே வர மாட்டேன்” என்று ஆதி முறுக்கிக் கொள்ள.

வேறு வழி இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை வைத்து வேலை வாங்கினாள். மாலை ஆனதும் அவர்கள் வீட்டிற்குப் போகலாம் என்று, சேலையை வேலை ஆள் உதவியுடன் கட்டிவிட்டு வந்து நின்றவளை ஏகத்திற்கும் முறைத்து வைத்தான் ஆதி.

‘நான் மாற்றி விடுகிறேன் என்று வந்தால், என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு பெண்ணை வைத்துச் சேலை மாற்றிக்கொண்டாள்’ என்று அவளிடம் கோபம் கொள்ள.

அதற்கு அவளோ, “சேலை மாற்றி விடுகிறேன் என்று நீ செய்யும் அலம்பல் எல்லாம் எனக்குத் தெரியும். அதனால் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று ஸ்ட்ரிக்ட்டாக அவனிடம் சொல்லி விட்டாள்.

“சரி ஆதி… நான் ரெடியாகிட்டேன், கிளம்பலாமா?” என்று துர்கா கேட்டாள். “ஓ… எஸ்… போலாமே” என்றவன், அவளைத் தன் கைகளில் தூக்கிக்கொள்ள, “ஆதி, இறக்கி விடு. எனக்கு இப்போ பரவாயில்லை. நான் நல்லா தான் இருக்கேன், என்னால் நடக்க முடியும்” என்று அவனை விட்டு இறங்க முயற்சிக்க.

“துர்கா…. கொஞ்சம் அமைதியா இரு. நானே உன்னைக் கூட்டிக்கொண்டு போய் காரில் விடுகிறேன்” என்று அவள் பதிலுக்குக் காத்திராமல் துர்காவைத் தூக்கி வந்து காரில் அமர வைத்தான்.

அவன் செயல்கள் எல்லாம் முன்பை விட நிறைய மாறி இருப்பதை உணர்ந்த துர்கா எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டாள்.

அவளுக்கும் அவன் இப்படி இருப்பது பிடிக்கத்தான் செய்தது. அவன் மேலான தன் காதலை அவனிடம் இவ்வளவு நாள் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தவள், சில நாட்களுக்கு முன் ஆதியிடம் இருந்து பிரிய வேண்டும் என்று நினைத்த எண்ணத்தை கூட இப்போது முற்றிலுமாக மறந்து போன துர்கா, அவனின் சின்ன சின்னத் தீண்டலும், ஆதியின் அருகாமையும் மேலும் அவனிடம் நெருக்கம் கொள்ளத் தூண்டி விட்டது.

தன்னைத் தூக்கியதில் இருந்து காரில் கொண்டு வந்து அவளை அமர வைக்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை அமர வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்த ஆதி, அவள் இன்னமும் தன்னையே பார்ப்பதைப் பார்த்தவன், அவள் கன்னம் கிள்ளி, “போதும் துர்கா, என்ன சைட் அடிச்சது. மிச்சத்தை அங்க போய் வைத்துக்கொள்ளலாம்” என்று அவன் கூறவும்.

துர்காவுக்கு வெட்கம் வந்திவிட, சிவந்த முகத்தை அவனிடம் காட்டாமல் தலையைக் கீழே குனிந்து கொண்டாள். அவ்வாறு அவள் செய்ததும், “நீ வெட்கப்படுற, அப்போ இன்னும் அழகாக இருக்கே துர்கா…” என்றவன். “ஒரு நிமிஷம் இரு. நான் என்னோட போனை மேலேயே வெச்சிட்டு வந்துட்டேன், போய் எடுத்துட்டு வரேன்” என்றவன் மேலே சென்றான்.

மேலே வந்த ஆதி அறை முழுவதும் ஒரு இடம் விடாமல் தேடினான். எங்கும் இல்லாமல் போகவே டிரெஸ்ஸிங் ரூம் சென்று தேடினான், அங்கேயும் இல்லாமல் போகவே ஸ்டடி ரூம் சென்று தேடினான், அங்கே ஒரு டேபிள் டிராயரைத் திறந்ததும் அவன் கண் பளச்சென்று மின்னியது.

தான் இவ்வளவு நேரம் தேடிய டைரி அதற்குள் தான் இருந்தது. துர்காவின் டைரியைப் பார்த்ததும், அதை கையில் எடுத்து அதன் மேல் பக்கம் பார்த்தவன், கீர்த்திகா சொன்னது போல அது பல வருடமாகத் துர்கா பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

அதை எடுத்துத் தன் கோட் பாக்கெட்டில் மறைத்தவன், துர்காவுக்குத் தெரியாமல் நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டான்.

துர்காவிடம் போனை எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தவன், இந்த டைரியை எடுப்பதற்காகத்தான் போய் சொல்லிவிட்டு மேலே வந்தான்.

கீழே வந்த ஆதி துர்காவிடம், “போலாமா?” என்று கேட்க, அவளும் அவனுக்காகக் காத்திருந்தவள், ‘போகலாம்’ என்று மெதுவாகத் தலையை மட்டும் ஆட்டினாள்.

டிரைவரை காரை எடுக்கச் சொல்லிவிட்டு காரின் மறுபுறம் வந்து கதவைத் திறந்து உள்ளே அமரப் போக, அவன் போன் அடித்தது. போன் சத்தம் கேட்டு அப்படியே நின்றவன், போனை எடுத்துப் பார்த்தான். அதில் வந்திருந்த நம்பரைப் பார்த்ததும் ஆதியின் இரு புருவங்களும் சுருங்கியது. அவனைக் கவனித்த துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்க.

ஒரு நிமிடம் யோசனையில் இருந்த ஆதி, “துர்கா… நீ முதலில் கிளம்பு. எனக்கு ஒரு முக்கியமான வேலை திடீர் என்று வந்து விட்டது” என்றான்.

அவனுக்கு இப்படித் திடீர் திடீர் என்று வேலைகள் அவன் பிசினஸில் சகஜம் என்று துர்காவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், அவன் சொன்னதும் ‘சரி’ என்று சொன்னாள்.

“சரி, நீ பார்த்துப் போய்க்க. அங்க போய் எதுவும் வேலை செய்றேன்னு இழுத்து போட்டுட்டு எதுவும் செய்துட்டு இருக்காதே” என்று அவளிடம் ஒரு முறைக்கு பல முறை சொல்லிவிட்டுத் துர்காவைத் தனியே அனுப்ப மனமில்லாமல் அனுப்பி வைத்தவன், துர்கா சென்றதும் தன் போனை எடுத்துத் தனக்கு வந்திருந்த நம்பருக்குத் திரும்ப அழைத்தவன், எங்கே சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

❤️

துர்காவின் கார் வெங்கடாசலம் வீட்டின் முன் வந்து நின்றதும், அதுவரை துரையுடனும் அவர் குடும்பத்துடனும் பேசிக் கொண்டிருந்த விசாலாட்சியும், வெங்கடாசலமும் துர்கா வந்ததும், அவள் காலில் அடிபட்டு விட்டது என்று ஏற்கனவே அவர்களுக்கு ஆதி சொல்லி விட்டதால், அவளை வாசல் வரை சென்று வரவேற்றனர்.

வாசலுக்கு வந்து பார்த்த விசாலாட்சி, துர்கா காரில் இருந்து இறங்கச் சிரமப்படுவதைக் கவனித்தவர், சக்கர நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி, துர்கா அதில் அமர உதவி செய்தவர், அவளை அவரே தள்ளிக்கொண்டு வந்து ஹாலில் வீல் சேரை நிறுத்தி விட்டுத் துர்காவிடம், “ஏன் மா… பார்த்து இருக்குறதில்லையா நீ… இப்படியா அடிபடுற அளவுக்கு ஜாக்கிரதையாக இல்லாமல் இருப்பே?” என்று துர்காவை உரிமையுடன் கண்டித்துக்கொண்டார்.

“அப்படி இல்லை அத்தை. நான் கவனமாத் தான் உட்கார்ந்து இருந்தேன். எப்படி அடிபட்டது என்று எனக்கே தெரியவில்லை” என்றாளே ஒழிய, ஆதி வண்டியைச் சரியாக ஓட்டவில்லை என்று சொல்லவே இல்லை.

“என்னவோ போ மா…” என்றவர் ஹாலில் அமர்ந்திருந்த அவரது தம்பி குடும்பத்தை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.

கனகாவிற்கும், ராதாவிற்கும் பார்த்ததுமே துர்காவைப் பிடித்து விட்டது. துர்காவுக்கும் அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்துவிட, அதை விட ராதாவைத் தன் தங்கை போலவே எண்ணும் அளவு பிடித்துவிட்டது.

சிவுவையும் அதே அளவு பிடித்திருந்தாலும், அவள் ராதா அளவிற்கு துர்காவுடன் நெருக்கமாகப் பழகாமல் ஒதுங்கியே இருந்தாள்.

துரைக்கும், சிவுவுக்கும் துர்காவைக் கண்டதுமே பிடிக்கவில்லை. ஆதிக்குக் கல்யாணம் நின்ற அதே முகூர்த்தத்தில் வேறு பெண்ணை அவசரமாகத் திருமணம் செய்து வைத்துவிட்டனர் என்று கேள்விப்பட்டதும், ஏதோ கிடைத்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருப்பார்கள் என்று நினைத்தனர். ஆனால் இப்போது துர்காவை நேரில் பார்த்ததும், அவள் அழகாக இருப்பதைப் பார்த்துச் சிவுவுக்குப் பொறாமை வந்து விட்டது.

ஆதியை அவள் வலையில் சுலபமாகச் சிக்க வைத்து விடலாம் என்று நினைத்த சிவுவுக்கு, இப்போது துர்காவைப் பார்த்ததும் அது கொஞ்சம் சிரமம் போல அவளுக்குத் தோன்றவே, துர்காவைப் பார்த்த மாத்திரத்தில் சிவுவுக்கு துர்காவைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில், விக்கியும், கதிரும் உள்ளே வந்தவர்கள், முதலில் துர்காவை விசாரித்துவிட்டுத் தான் மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தனர்.

அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. கதிரைப் பார்த்ததும் துரை தனது இரு மகன்களில் யாரேனும் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார்.

சிவு எப்படியும் ஆதியைத் தன் கைக்குள் போட்டுக்கொள்வாள் என்று அவள் மீது அவருக்கு அதீத நம்பிக்கை இருந்ததினால், அடுத்து ராதா தான் இருக்கிறாள், அவளை எப்படியும் கதிருக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று இப்போதிருந்தே கணக்கு போட ஆரம்பித்து விட்டார்.

இரவு ஆகிவிட்டதால் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் அவர் அறைக்குச் சென்று விட, ஹாலில் கனகா, விசாலாட்சி, ராதா, துர்கா மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

கனகா துர்காவிடம், “ஆதி உன்கிட்ட நல்லா பேசுறானா துர்கா? நீயும் அவனும் நல்லா அன்யோன்யமாக இருக்கீங்களா? உங்களுக்கு நல்லபடியா எல்லாமே நடக்குதா?” என்று அவர் நாசூக்காகக் கேட்க.

அவர் கேட்ட கேள்வியில் துர்காவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க. “ஏன் அத்தை, நானும் துர்காவும் சந்தோசமா இருக்கோமா இல்லையான்னு எங்க அம்மா உங்களை விட்டு கேட்கச் சொன்னாங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஹாலிற்குள் வந்தான் ஆதி.

அவனைப் பார்த்ததும் சந்தோசமாக முகம் மலர்ந்த கனகா, “டேய்…. ராஜாக்குட்டி! எப்படி டா.. இருக்கே? நல்லா இருக்கியா… என்ன டா.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி பெரிய ஆளா வளர்ந்து நிற்குறே” என்று அவர் ஆதியின் கையைப் பிடித்துக்கொண்டு ஆதியை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

“இப்படி என்னை கொஞ்சிட்டு பேச்சை மாற்றலாம் என்று நினைச்சுட்டியா அத்தை? நான் எதையும் அவ்வளவு லேசில் விட மாட்டேன்” என்றான்.

“எனக்குத் தான் உன்னைப் பத்தி நல்லா தெரியுமே டா ராஜாக்குட்டி… உங்க அம்மா எதுவும் என்கிட்ட துர்காவிடம் பேசச் சொல்லி சொல்லலை டா… என்ன இருந்தாலும் துர்காவும் என் பொண்ணு தானே? அவள் மனசுல என்ன இருக்குன்னு பேசித் தெரிஞ்சுக்கிட்டா தானே எனக்கும் தெரியும்? அவளும் இங்க நல்லா வாழணும்னு நினைச்சுத் தாண்டா நான் கேட்டேன்” என்றார் கனகா.

“அதெல்லாம் உங்க பொண்ணை நான் சந்தோசமாத் தான் வெச்சுப்பேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என் பொண்டாட்டி கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க” என்றான் ஆதி.

அவன் இப்படிச் சொன்னதும் பதறிய கனகா, “உன்மேல நம்பிக்கை இல்லாமல எல்லாம் நான் துர்கா கிட்ட கேட்கலை ராஜா குட்டி. சும்மா தெரிஞ்சுக்கலாம்னு சொல்லித் தான் கேட்டேன். நான் இனிமேல் உன் பொண்டாட்டிகிட்ட எதுவுமே கேட்கலைப்பா. உன் பொண்டாட்டியை எதுவும் சொல்லிடக் கூடாது போலவே பாரு, எப்படி மூக்குக்கு மேல என் செல்லத்துக்குக் கோபம் வருது” என்று அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார் கனகா.

அவர் அப்படிச் சொல்லி அவனை கிள்ளியதும் அவரைப் பார்த்துச் சிரித்த ஆதி, “நானும் சும்மாத் தான் அத்தை உன்கிட்ட வம்பு பண்ணினேன். அப்புறம் சொல்லுங்க, எப்படி இருக்கீங்க? மாமா, சிவு எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான். “எல்லாரும் நல்லா இருக்கோம்டா கண்ணு. நீ எப்படி இருக்க?” என்று கேட்டார் கனகா.

பின், “சரி கண்ணா, நீ போய் சாப்பிடு. வந்து ரொம்ப நேரம் ஆகுது பாரு” என்று சொல்ல, “இல்லை அத்தை, நான் வெளியிலேயே சாப்பிட்டு வந்துட்டேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான். “எல்லாரும் சாப்பிட்டோம் கண்ணா” என்றார்.

“சரி அத்தை, நீங்களும் போய் படுத்துத் தூங்குங்க. நானும் துர்காவும் ரூமுக்கு போறோம்” என்றவன், ஒருவரையும் எதிர்பார்க்காமல் துர்காவைத் தன் கையில் தூக்கிக்கொண்டு அவன் ரூமுக்குச் செல்லப் போக, அனைவரும் அவனை வாய் பிளந்து கொண்டு ‘ஆ’வென பார்த்தனர்.

“என்ன எல்லாரும் அப்படிப் பார்க்குறீங்க? என் பொண்டாட்டியைத் தானே நான் தூக்கிட்டுப் போறேன்? நீங்கதானே சொன்னீங்க, நாங்க ரெண்டு பேரும் அன்யோன்யமா இருக்கோமா இல்லையான்னு? உங்களுக்கு எப்படித் தெரியும்? அதனாலதான் நாங்க இங்கிருந்து அன்யோன்யமா இருக்கோம்ன்னு உங்ககிட்ட காமிச்சுக்கறதுக்காகத் தான் என் பொண்டாட்டியை நான் தூக்கிட்டுப் போறேன்” என்று சொல்லிச் சிரித்த ஆதி, துர்காவைத் தூக்கிக்கொண்டு அவன் ரூமிற்குச் சென்றான்.

உள்ளே வந்ததும் துர்காவை நேராக டிரெஸ்ஸிங் ரூமிற்குத் தூக்கிச் சென்றவன், அவளை உடை மாற்றச் சொல்லிவிட்டு, சேலை பின்னை மட்டும் அவளுக்குக் கழட்ட உதவி விட்டு வெளியே வந்து விட்டான்.

ஆதி ஏதோ போல இருக்க, அவனைப் புரியாமல் பார்த்த துர்கா, உடைகளை மாற்றிக்கொண்டு கதவைத் திறக்க, கதவருகே நின்றிருந்த ஆதி, துர்கா கதவைத் திறந்ததும் அவளைத் தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, மருந்தை எடுத்து வந்து அவள் சம்மதம் கேட்காமல் அவள் முட்டியிலும், இடுப்பிலும் மருந்தை தேய்த்து விட்டவன். பின் சென்று மாத்திரையை எடுத்துக்கொண்டு வந்து துர்காவின் கையில் கொடுத்துவிட்டு, தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்து நின்றான்.

அவன் செயல்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருந்த துர்கா, அவன் கையில் கொடுத்த மாத்திரைகளை விழுங்காமல் அவனையே பார்க்க.

“என்ன துர்கா பார்த்துட்டு இருக்க? மாத்திரையைப் போடு” என்றான். அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்க்க, துர்காவை கேள்வியுடன் பார்த்த ஆதி, “உனக்கு ஏதாவது வேணுமா?” என்றான். அவள் ‘ஆம்’ என்பது போல தலையை ஆட்டினாள்.

“என்ன வேணும் துர்கா?” என்றான் ஆதி. “எனக்கு எதுவும் வேணாம் ஆதி. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள். “என்ன கேட்கணும் துர்கா?” என்றான். “நீ வரும்போது கனகா அம்மா கிட்ட நல்லா தானே பேசினே? ஆனா இங்கே ரூமிற்குள் வந்ததும் ஏன் ஏதோ மாதிரி இருக்கே?” என்று கேட்டாள்.

அவள் அப்படி கேட்டதும், “நான் ஒரு மாதிரி இருப்பதற்குக் காரணமே நீதான்” என்றான் ஆதி. அவன் அப்படிச் சொன்னதும் அதிர்ந்து போய் அவனையே பார்த்தால் துர்கா.

“நானா? நான் என்ன செய்தேன் ஆதி?” என்று புரியாமல் கேட்ட துர்காவை முறைத்த ஆதி. “நீயான்னு கேட்கிற? என்ன பண்றேன்னு உனக்குத் தெரியாதா என்ன?” என்றவன் அவளைக் கோபமாக முறைத்துக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

EPISODE 55

துர்காவைத் தனது ரூமிற்குத் தூக்கிக் கொண்டு வந்த ஆதி, அவளிடம் சரியாகப் பேசாமல் இருக்க, ஏன் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்று துர்கா ஆதியிடம் கேட்டாள். அவளால் தான் ஆதி கோபமாக இருப்பதாகச் சொன்னான்.

“என்னாலயா? நான் என்ன செய்தேன் ஆதி?” என்று துர்கா கேட்டதற்கு, “நீ என்ன செய்தாய் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று கோபமாக அவளிடம் குனிந்தவன், “நான் ஏன் கோபமாக இருக்கிறேன் நிஜமாவே உனக்குத் தெரியலையா?” என்று துர்காவிடம் நெருங்கி பெட்டில் அமர்ந்தவன், படுத்திருந்த அவள் இருபுறமும் கையைப் போட்டு கேட்டான்.

துர்கா தன் மிக அருகில் நெருக்கமாக இருந்த ஆதியைப், இமைகள் பட்டாம்பூச்சி போலப் படபடக்கப் பார்த்து, ‘தெரியாது’ என்பது போலத் தலையை இட வலமாக அசைத்தாள்.

“நீதான் இங்கே வீட்டிற்கு வருவதற்கு முன் என்னோட ஹெல்ப் வேணாம் என்று சொல்லி, அங்கே உனக்கு டிரெஸ் மாற்றுவதற்கு உதவி செய்யவிடாமல் வேறு யாரையோ வைத்து மாற்றிக்கொள்ளச் சொல்லி என்னை வெளியே போகச் சொன்னியே. அதனால்தான் நான் இங்கேயும் அதே போல உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருக்க ட்ரை பண்றேன். நீ அப்படி என்னை ஒதுக்கி வைப்பதனால்தான் நான் உன்மேல் கோபமாக இருக்கிறேன்” என்றான் ஆதி.

‘இதற்கெல்லாமா ஒருவன் நம்மிடம் கோபப்படுகிறான்?’ என்று ஆச்சர்யமாக ஆதியைப் பார்க்க. அவனோ நிமிடத்திற்கு ஒரு முறை முகபாவங்களை மாற்றிக்கொண்டு இருக்கும் துர்காவை ரசித்துக் கொண்டு, கோபமாக இருப்பவன் போல நடித்துக் கொண்டு ரசித்துக் கொண்டு இருந்தான் துர்காவை.

ஆதி கூறியதைக் கேட்டு, “நான் அப்படி எல்லாம் உன்னை ஒதுக்கவில்லை ஆதி. அது அது வந்து…. நான் டிரெஸ்…. நீ… என்னை கண்ணாடியில்…. அதனால் தான்….” என்று வார்த்தைகளை விழுங்கி விழுங்கி அவனிடம் பேசினாள்.

அவள் கூற வருவதைப் புரிந்துகொண்ட ஆதி, “அப்போ நீ வேணும்னே அப்படி செய்யலை, அப்படி தானே?” என்றான். அவளும் ‘ஆம்’ என்று தலையை ஆட்ட. “அப்போ என்னை நீ ஒதுக்கி வைக்கவில்லை, அப்படி தானே?” என்று அவன் கேட்க, துர்காவும் வேகமாக ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.

“சரி, அப்போ நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நன்றாக அவள் அருகில் அவளை இடித்துக்கொண்டு அமர்ந்த ஆதி துர்காவையே பார்க்க.

“என்ன பேசணும் ஆதி?” என்றால் துர்கா. “நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறே?” என்று கேட்டான் ஆதி. “என்ன நினைக்கிறேன்னு புரியல ஆதி” என்றாள் துர்கா.

“நமக்குக் கல்யாணம் ஆகுறதுக்கு முன்ன வரை நான் உனக்கு ஒரு ஃப்ரெண்ட் ஆஹ் இருந்தேன். நமக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு. நீ உன்னோட கல்யாணம் இப்படி எல்லாம் நடக்கணும், உன்னை கல்யாணம் பண்ணிக்கிறவங்க இந்த மாதிரி இருக்கணும், இப்படி நடந்துகணும் என்று நிறைய ஆசை இருந்திருக்கும். ஆனால் திடீர் என்று என்னுடன் உனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அப்போ உன்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? நீ என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வழி இல்லாமல் என் அம்மாவின் வற்புறுத்தலினால் என்னை திருமணம் செய்து கொண்டாய். அது சரியோ தவறோ, நாம் இருவரும் திருமணம் என்றால் உறவுக்குள் வந்துவிட்டோம். நானும் நமக்குத் திருமணம் ஆன புதிதில் உன்னிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டேன். ஆரம்பத்தில் உன்னிடம் நானும், என்னிடம் நீயும் ‘இருவருக்கும் ஒத்து வராது, பிரிந்து சென்றுவிடலாம்’ என்றெல்லாம் ஏதோ ஒரு கோபத்தில் பேசிவிட்டோம். இனி அந்த மாதிரி எண்ணங்கள் இருவருக்குமே வேண்டாம் துர்கா… முதலில் நாம எப்படி நண்பர்களாக இருந்தோமோ அப்படியே இருக்க ஆரம்பிப்போம். பிறகு என்னை நீயும், உன்னை நானும் ஒருவர் பற்றி ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகு கணவன் மனைவி என்றால் பந்தத்திற்குள் செல்லலாம். அதுவும் உன் விருப்பம் இருந்தால் மட்டுமே. இல்லை என்றால் நாம் இருவரும் நண்பர்களாகவே இருக்கலாம்” என்றான்.

இவ்வளவு நேரமாக ஆதி பேசியதை எல்லாம் அதிசயம் போலக் கேட்டுக்கொண்டு இருந்த துர்கா. ஆதி கூறியதையெல்லாம் கேட்டவள் தன் மனதிற்குள் ‘அட மக்கு ஆதி, நமக்குக் கல்யாணம் ஆகிருச்சு டா… இன்னமும் நண்பர்கள் மாதிரி இருக்கலாம்னு சொல்ற. அப்புறம் என்கிட்ட ஏன் இவ்வளவு நெருக்கமா வந்து என் உணர்ச்சியைத் தூண்டி விடுறே. என்னைப் பார்த்தால் பாவமாக இல்லையா? நான் மட்டுமே உன்னைக் காதலிக்க வேண்டுமா? நீ எப்போது என் காதலை உணர்ந்து என்னைக் காதலிக்கப் போறே?’ என்று அவனை மனதிற்குள் கேள்விகளால் துளைத்துக்கொண்டு இருந்தாள்.

தான் இவ்வளவு கூறியும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் துர்கா அமைதியாக இருப்பதைப் பார்த்த ஆதி. ‘துர்காவுக்குத் தன்னை முன்பு போல நண்பனாகக் கூற ஏற்றுக்கொள்ள மனமில்லை போல’ என்று எண்ணி வருத்தப்பட்ட ஆதி, அவள் அருகில் இருந்துத் தன் கைகளைப் பிரித்து எழுந்திருக்கப் போனான்.

அப்போது, “ஃப்ரெண்ட்ஸ்…” என்று துர்காவின் குரல் கேட்டது. துர்காவை நிமிர்ந்து பார்த்த ஆதி, துர்கா சிரித்த முகமாக அவனிடம் தன் கையை நீட்டி, “ஃப்ரெண்ட்ஸ்” என்று மறுபடியும் கூற. அவள் தன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் என்று எண்ணிய ஆதி, சந்தோசமாக அவள் கையைப் பிடித்து “ஃப்ரெண்ட்ஸ்” என்று குலுக்கினான்.

“நீ சொன்ன மாதிரியே இனிமேல் நாம ஃப்ரெண்ட்ஸ் ஆஹ் நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணுவோம் ஆதி. எனக்கு டபுள் ஓகே” என்றால் துர்கா சிரித்துக் கொண்டே.

ஆதியும் சந்தோசமாக துர்காவின் கைகளைக் குலுக்கியவன், அவள் தன்னிடம் நட்பாகப் பழக ஒத்துக்கொண்டால் என்று சந்தோசத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், துர்காவின் கன்னத்தில் எட்டி நச்சென்று ஒரு முத்தம் வைத்தான்.

அவன் முத்தம் வைத்ததும் அதிர்ச்சியுடன் பார்த்த துர்காவைப் பார்த்தவன், “என்ன துர்கா அப்படிப் பார்க்குற? ஃப்ரெண்ட்ஸ் தான், ஆனால் இது உன்னோட புருஷன்ங்குற உரிமையில கொடுக்கிறது. அதனால இதெல்லாம் நீ கண்டுக்கக் கூடாது, ஓகேவா?” என்று சிரித்தவனை ஆச்சர்யம் விலகாமல் பார்த்தாள் துர்கா.

அவள் கன்னம் கிள்ளி, “நான் மட்டுமே எப்போதும் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்கிறேன். நீயும் என்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். நீயா உன்னோட உரிமையை என்கிட்ட எடுத்துக்கணும்னு நான் நினைக்கிறேன். டேக் யுவர் டைம்” என்றவன், மறுபடியும் அவள் இதழில் ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு, “சரி, தூங்கு துர்கா. காலையில் சீக்கிரம் கிளம்பனுமில்லையா” என்று அவளைப் படுக்க வைத்து போர்வையைப் போர்த்தி விட்டவன், லைட்டை அணைத்து விட்டு வந்து அவனும் படுத்துக்கொண்டான்.

வெளியில் சென்று வந்ததிலும், துர்காவுடன் செல்லமாக உரையாடியதிலும் துர்கா எழுதிய டைரியைப் படிக்க மறந்தே போனான் ஆதி. அதைப் படித்திருந்தால் இன்னும் அவனுக்குத் துர்காவின் மனம் தெளிவாகப் புரிந்திருக்குமோ என்னவோ… பின்னாளில் ஆதிக்கும் துர்காவுக்கும் இடையில் வரும் மனக்குழப்பத்திற்கும் ஒரு தீர்வாக அந்த டைரி இருந்திருக்கும்.


சங்கவியின் சதிவலை

ஆதி தன் குடும்பத்துடன் நாளை கும்பகோணம் செல்கிறான் என்று சங்கவியின் அப்பா மூலம் அவளுக்குத் தகவல் கிடைக்க.

தன்னை இந்த நிலைக்குத் தள்ளி விட்டு ஆதி மட்டும் அவன் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பது சங்கவிக்கு எரிச்சலாக இருந்தது. அவன் சந்தோசத்தையும், அவன் குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தவளாக, அவள் அப்பாவிடம் சொல்லி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வேதாசலத்துடன் பேசினாள்.

அப்போது அவள் ரூமிற்கு வந்த பங்கஜம், “ம்கூம்…. அப்பாவும் பொண்ணும் ஆரம்பிச்சுட்டாங்களா? அடுத்தவங்க குடும்பத்தை எப்படி எல்லாம் பிளான் போட்டு கெடுக்கலாம் என்றால் இவங்க ரெண்டு பேர் கிட்டத் தான் கேட்கணும். அப்படி என்னதான் கூடிக் கூடிப் பேசுறாங்களோ தெரியலை. நான் வந்தா மட்டும் அப்படியே அமைதி ஆகிட வேண்டியது” என்று முணுமுணுத்தவர், அவர்களுக்குக் கொண்டு வந்த பாலை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார்.

அவர் சென்றதும் சங்கவியும் அவள் அப்பாவும் சிறிது நேரம் பேசிவிட்டு, பாலைக் குடித்துவிட்டுத் தூங்கச் சென்றனர்.

அடுத்த நாள் சூரியன் உதிக்கும் முன்னரே, ஆதியும் ஆசான் குடும்பமும், துரையும் அவர் குடும்பமும் கும்பகோணம் கிளம்பினர். வெங்கடாசலத்தை வழுக்கட்டாயமாகத் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

கீர்த்திகாவும் அவள் குடும்பத்துடன் கும்பகோணம் வருவதற்க்கு விசாலாட்சி காரையும், டிரைவரையும் இரவே அனுப்பி இருக்க, அவர்களும் நேரமே கிளம்பி இருந்தனர்.

அனைவரும் கோவிலுக்கு வந்துவிட, இவர்களுக்காகச் செய்யப்பட்ட பூஜைக்கு நேரத்துடன் கலந்து கொள்ள அனைத்தையும் ஏற்கனவே தயாராக வைத்திருந்தனர், ஏற்கனவே கோவிலுக்கு வந்திருந்த வெங்கடாசலத்தின் வேலை ஆட்கள்.

கோவிலுக்கு வந்ததும் அவரவர் இறங்கி கோவிலுக்குள் செல்ல, துரையுடன் காரில் இருந்து இறங்கிய சிவு, ஆதியைப் பார்த்து கிட்டத்தட்டப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், அவனைக் காணும் ஆவலில், “அப்பா, நீங்க முன்னாடி போங்க. நான் ஆதி மாமாவை பார்த்துவிட்டு அவருடன் வருகிறேன்” என்று சொல்ல.

தன் மகள் வந்த வேலையைக் கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டாள் என்று எண்ணி சிவுவை நினைத்துப் பெருமை கொண்டவர், அவளை அனுப்பி வைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றார்.

ஆதி மாஸ்க் அணிந்து கொண்டு காரை விட்டு இறங்கியவன், துர்காவைச் சக்கர நாற்காலியில் தூக்கி அமர வைத்துக்கொண்டு கொண்டிருக்க, அப்போது சிவு ஆதி வந்த காருக்கு அவனைப் பார்க்க, அவளுடன் வந்தவள் அவன் மாஸ்க் அணிந்திருப்பதைப் பார்த்தவள், ‘என்ன மாமா மாஸ்க் போட்டிருக்காங்க’ என்று யோசித்தபடி அவனை நெருங்கியவள், “மாமா…” என்று துள்ளிக் குதித்து அவன் முன்னாள் வந்து நின்றவள் ஆதியைப் பார்க்க.

துர்காவைச் சக்கர நாற்காலியில் அமர வைத்து விட்டு நிமிர்ந்த ஆதி, சிவுவைப் பார்த்தவன் அவளை அடையாளம் கண்டு கொண்டு தன் மாஸ்க்கைக் கழட்டி விட்டு, அவளைப் பார்த்துச் சிரித்த முகமாகச் “சிவு” என்று ஆதி அழைக்க வர, அப்போது அவன் முகத்தில் தெரிந்த தழும்புகளும் கொப்புளங்களும் பார்த்த சிவு, முகத்தைச் சுளித்தவள், சிரித்த முகமாக இருந்த சிவுவின் முகம் ஆதியின் முகத்தை இப்படிப் பார்த்ததும் அப்படியே சுருங்கி விட்டது.

இதை நன்கு கவனித்த ஆதி, சட்டெனத் தன் முகத்தைச் சிவுவிடம் இருந்து மறைக்க மாஸ்கைப் போட்டுக்கொண்டவன். அவளிடம் தன் முகத்தைக் காட்டி அசிங்கப்பட விரும்பாமல் அவன் தன் முகத்தை மறைக்கத் திரும்பிக்கொள்ள, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த துர்கா ஆதியின் கையை ஆதரவாகப் பிடிக்க.

தன் கையை துர்கா பிடித்ததும் அவளை ஒரு முறை பார்த்தவன், பின் எதுவும் கூறாமல் துர்காவின் சேரைத் தள்ளிக்கொண்டு கோவிலுக்குள் சென்றான்.

உள்ளே செல்லும் ஆதியையே கேவலமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சிவு, “ச்சீ… என்ன இது ஆதி முகம் இப்படி இருக்கு? அவன் கையில் கூட முகத்தில் இருந்தது போலவே இருக்கே” என்று யோசித்தவள். “இவன் என்ன இப்படி இருக்கிறான்? இவனைப் போய் எப்படி இந்த துர்கா கல்யாணம் பண்ணிக்கிட்டா? ஒருவேளை ஆதியிடம் இருக்கும் பணத்திற்காக அவனை கல்யாணம் பண்ணி இருப்பாளோ, இல்லை விசாலாட்சி அத்தை பணத்தைக் காட்டி அவளை விலைக்கு வாங்கி இருப்பாங்களோ. இவ இருக்க அழகுக்கு ஆதியை கல்யாணம் பண்ண எப்படி சம்மதம் சொன்னாள்?” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்க, “நீ சொல்வது, யோசிப்பது எல்லாமே சரி தான். அந்த துர்கா ஆதியின் பணத்திற்காகத் தான் அவனை கல்யாணம் பண்ணி இருக்கா. வேற எந்த ஒரு நல்ல எண்ணத்திலும் இது எல்லாம் நடக்கவில்லை” என்று ஒரு குரல் சிவுவின் அருகில் கேட்டது.

தான் பேசியதைச் ‘சரி’ என்று சொல்வது யார் என்று திரும்பிப் பார்க்க, அவள் அருகில் நின்றிருந்தவரை ‘யார்’ என்று அடையாளம் தெரியாமல் அவரை மேலும் கீழும் பார்த்தாள் சிவு.

“என்ன, என்னைப் அப்படிப் பார்க்குறீங்க? என்னை யார் என்று தெரியாமல் தானே அப்படிப் பார்க்குறீங்க. நான் எதுக்கு நீங்க சொன்னது சரிதான்னு சொன்னேன்னு யோசிச்சுட்டு தானே என்னைப் பார்க்கிறீங்க. உங்களுக்கு எப்படி அந்த துர்காவை பிடிக்கவில்லையோ, எனக்கும் அதே தான். அந்த துர்காவைத் துளியும் பிடிக்கவில்லை. நீ எப்படி அவள் ஆதியின் பணத்திற்காகத் தான் அவனைத் திருமணம் செய்து இருக்கிறாள் என்று நினைக்கிறாயோ…. நானும் அப்படித் தான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

“இதெல்லாம் நீங்க எப்படிச் சரியா சொல்றீங்க? என்னைப் போலவே நீங்க ஏன் துர்காவைக் கண்டாலே பிடிக்கலைனு சொன்னீங்க?” என்று சந்தேகமாகக் கேட்ட சிவுவிடம்.

“சாரி… நான் வந்ததில் இருந்து என்னை நானே இன்ட்ரோட்டியூஸ் பண்ணவில்லை. ஹாய்” என்று சிவுவின் முன் கை நீட்டி, “ஐயம் சங்கவி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured