Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 275

உன் ரகசிய ரசிகை நான் 275

by Layas Tamil Novel
57 views

EPI 275

வெங்கடாச்சலம், விசாலட்சி, ஆதி, துர்கா, கதிர், கீர்த்தி என அனைவரும் ஹாஸ்பிடலில் எமர்ஜென்சி அறைக்கு வெளியே பதட்டத்தோடு காத்திருந்தனர்.

அபி என் கண்ணாடித் துண்டால் தன் கையை கிழித்துக் கொள்ள, அவளைக் காப்பாற்றுவதற்காக மரகதம் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருந்தார். வந்ததும் முதலில் வெங்கடாச்சலத்திற்குப் போன் செய்து அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்ய, அதுக்கு எதுவும் இருந்து விடுமோ என அவரும் பயந்து கொண்டு கிளம்ப, அவரோட மற்றவர்களும் கிளம்பி வந்திருந்தனர்.

ஆறு பேரும் ஒரு பக்கம் டாக்டர் வருகைக்காகக் காத்திருக்க, மரகதமும் அவர்களைப் போல அபிக்கு என்ன ஆனதோ என நினைத்துப் பதட்டமாகக் காத்திருந்தார்.

நீண்ட நேரம் சிகிச்சை அளித்த பிறகு, எமர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்திருந்த அபியின் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர், அங்கே யாரிடம் பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க, வெங்கடாச்சலம் தானாகவே எழுந்து அவரிடம் வந்து, “டாக்டர்! என் பொண்ணு எப்படி இருக்கா? அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லையே? அவள் நல்லா தானே இருக்கா?” என்றார் பதட்டமாக.

அவர் பேசியதை வைத்து அபியின் அப்பா இவராகத்தான் இருக்கும் என்று முடிவு செய்த டாக்டர், அங்கு, “அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. நல்லவேளை காயம் ரொம்ப ஆழமாக இல்லை. ரத்தம் அதிகமா வெளியேறவில்லை… அவங்க சரியான நேரத்துக்கு கொண்டு வந்து உங்க பொண்ண அட்மிட் பண்ணிட்டாங்க.

அதனாலதான் எங்களால அவங்களைக் காப்பாத்த முடிஞ்சது” என்றவர், “இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களுக்கு மயக்கம் தெரிஞ்சிரும். தெரிஞ்சதும் நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடலாம்” என்றவர் இங்கிருந்து கிளம்பிவிட…

“டாக்டர்!” என்றழைத்த மரகதம் வெங்கடாச்சலத்திடம், “என் பொண்ணு வீட்டுக்கு வந்ததிலிருந்து ரொம்பக் கோபமா இருந்தா. வீட்ல இருக்குற பொருளை எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்சு ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா. ‘ஏன்டி இப்படி எல்லாம் பண்றே?’ன்னு கேக்குறப்போ, ‘அப்பா எனக்குப் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளையை எப்படி அந்த சங்கவி கல்யாணம் செய்து கொள்ள? என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்று சொல்லி ரொம்பக் கோபப்பட்டா.

இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுற? உன் அப்பாகிட்ட சொன்னா இவன விட நல்ல வசதியான மாப்பிள்ளையைப் பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாரு. அதைப் பத்தி எல்லாம் நீ கவலைப்படாதே’ என்று அவகிட்ட எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஆனா என்னவோ அபி உன்கிட்ட, திரும்ப திரும்ப ‘அது என் அப்பா எனக்காகப் பார்த்த மாப்பிள்ளை. என் அப்பா முதல் முதலில் எனக்காகச் செய்த விஷயம். அது எனக்குக் கிடைக்காமல் போயிடுச்சு’ன்னு சொல்லி ரொம்ப அழுதா.

என்னால் அவளைச் சமாளிக்கவே முடியல. கோபமா பேசிட்டு இருந்தவள் போல திடீர்னு கீழே விழுந்து கிடந்த ஒரு கண்ணாடித்துண்டை எடுத்து அவ கையைக் கிழிச்சிட்டா. உடனே அவளைக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டேன். அதனால அவளுக்கு எந்த ஆபத்தும் இல்ல. ஆனா மறுபடியும் இப்படி எதுவும் பண்ணிடுவாள் என்று எனக்குப் பயமா இருக்கு. அவ கண்ணு முழிச்சதும் நீங்க அவகிட்ட பேசி புரிய வையுங்கள்” என்றால் மரகதம் அழுது கொண்டே.

மரகதம் கண்ணீர் வடித்து அழுவதைப் பார்த்துட்டு விசாலட்சிக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்ட விசாலட்சி, “நீங்க கவலைப்படாதீங்க. அபி கண் முழிச்சதும் அவர விட்டு அவகிட்டப் பேச சொல்றேன். உனக்கு சங்கவிக்கு பார்த்ததைவிட நல்ல வரனா பார்த்துச் சீக்கிரத்திலேயே கல்யாணம் செய்து வைக்கலாம். நான் பொறுப்பு” என்று விசாலட்சி மரகதத்திடம் வாக்குக் கொடுக்க.

மரகதம் விசாலட்சியின் கையைப் பிடித்துக் கொண்டு, “என்னை மன்னித்துவிடு விசாலா. உனக்கு நான் எவ்வளவோ இடைஞ்சல் பண்ணி இருக்கேன். உன்னையும் அவரையும் ரொம்பத் திட்டி இருக்கேன். அதை எல்லாம் மனசுல வச்சுக்காம என் பொண்ணுக்கு ஒன்னுன்னு சொன்னதும் குடும்பத்தோட இங்கே அவளைப் பாக்குறதுக்காக வந்துட்டீங்க.

உங்க நல்ல மனசு எல்லாம் புரிஞ்சுக்காம நான் உங்களைத் தப்பு தப்பா பேசி ரொம்ப நோகடிச்சுட்டேன். என்னை மன்னிச்சிருங்க” என்று மரகதம் விசாலட்சியைப் பார்த்து கைக்கூப்பி மன்னிப்புக் கேட்க.

“என்ன இது? நீங்க என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? அதெல்லாம் எதுவும் வேண்டாம். நம்ம அபி நல்லபடியா குணமாகி வந்தாலே போதும்” என்ற விசாலட்சி.

அனைவரும் சேர்ந்து அபியைப் பார்ப்பதற்காக அவள் அறைக்குச் செல்ல, அவள் இன்னமும் மயக்கம் தெளியாமல் கண்கள் மூடிப் படுத்திருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் மரகதம் ஓடி வந்து அபியின் கையைப் கட்டிக்கொண்டு, “இப்படி ஒரு காரியத்தை செஞ்ச. உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா இந்த அம்மா என்னடி பண்ணுவேன்? நான் உயிரோட இருக்குறதுக்குக் காரணமே நீ தானே. நீ இல்லாம நான் இங்கே இருந்து என்னடி பண்ணப் போறேன்?” என்று அவர் அழுது கொண்டிருக்க, அவர் தோளைத் தொட்டுச் சமாதானம் செய்த விசாலட்சி மரகதத்தை எழுப்பி அருகில் இருந்த சேரில் அமர வைத்தவர், “கவலைப்படாதீங்க. டாக்டர் தான் கொஞ்ச நேரத்துல அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்னாங்களே. நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க? அமைதியா இருங்க” என்று அவரைச் சமாதானம் செய்தார்.

ஒரு அரை மணி நேரம் போல மயக்கத்தில் இருந்து மெல்லக் கண் விழித்தாள் அபி. அவள் கண் விழித்ததைப் பார்த்ததும் மரகதம் அவசரமாக எழுந்து அபியின் முன்பு வந்தவர், அவள் கண் விழித்ததும் சந்தோஷமானவர். “ஒரு வழியா கண்ணு முழிச்சிட்டியா? இப்பதான்டி எனக்கு நிம்மதியா இருந்துச்சு. உனக்கு என்ன ஆச்சு, ஏதாச்சுன்னு ரொம்பப் பயந்து போயிட்டேன்” என்று அழுதார்.

மரகதத்தைப் பார்த்ததும், “அம்மா, என்னை ஏன் காப்பாத்துனீங்க? அப்படியே சாகட்டும் என்று விட்டுட்டுப் வேண்டியதுதானே? நான் எதுக்காக உயிரோட இருக்கணும்? என் அப்பா எனக்காக ஆசை ஆசையாப் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளையை அந்தச் சங்கவி கல்யாணம் பண்ணிக்கிட்டா. நான் எதுக்குமே கொடுத்து வைக்கல. நான் ராசி இல்லாதவள். அப்பா கூடச் சந்தோஷமா ஒரே வீட்டில் வாழக் கொடுத்து வைக்கல. அவர் எனக்காகச் செய்த எதையும் அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கல. எத்தனை வருஷம் கழிச்சு அப்பா எனக்காக ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய வந்தாரு. ஆனா அதையும் அந்தச் சங்கவி என்கிட்ட இருந்து தட்டிப் பறிச்சுக்கிட்டா. கூடப் பழகின பாவத்துக்கு எனக்கு இந்தக் தண்டனை தேவைதான். இனி எந்த மூஞ்சியும் வச்சுக்கிட்டு நான் அப்பாவை போய் பார்ப்பேன்? அப்பா என்னைப் பத்தி என்ன நினைப்பாரு?” என அழுதால்.

அவளுக்கு இந்த பக்கம் அமர்ந்திருந்த வெங்கடாச்சலம், விசாலட்சி, அபி பேசுவது எல்லாம் கேட்டுவிட்டு மிகவும் மனம் வருந்தினர். எழுந்து வந்த வெங்கடாச்சலம் அபியின் தலையை வருட, அவர் கை பட்டதும் சட்டெனத் திரும்பி அவரைப் பார்த்தால் அபி.

வெங்கடாச்சலத்தை அங்கு எதிர்பார்த்திறாத அபி அதிர்ச்சியானவள், பின்பு முகத்தைத் திருப்பிக் கொண்டு மரகதத்திடம், “அம்மா, இவரை எதுக்கு இங்கே வரச் சொன்னீங்க? இவர்கிட்ட என்ன நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன விஷயத்தைச் சொன்னீங்க? எனக்கு அப்பா முகத்தைப் பார்க்கவே வெட்கமா இருக்கு. எந்த முகத்தை வச்சுக்கிட்டு நான் அவரைப் பார்ப்பேன்? ஒழுங்கா அவரு மேடையில ‘எனக்கு இந்த பையனைப் பார்த்து இருக்கே’ன்னு சொன்னப்பவே கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருக்கணும். சொத்து பத்து, அது இதுன்னு வம்பு பிடிச்சு என் வாழ்க்கையை நானே வீணா கெடுத்து விட்டேன்” என்று அழுதால்.

வெங்கடாச்சலம் அபியின் கையைப் பிடித்துக் கொண்டு, “அபி, இந்த அப்பாவைப் பாருமா” என்றார்.

அவரைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு இருக்க… “நீ கவலைப்படாதம்மா. உனக்கு கபிலனை விட நல்ல, அழகான, அந்தஸ்தான் பையனா பார்த்து நானே சீக்கிரத்துல கல்யாணம் செய்து வைக்கிறேன். இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுட்டு நீ உன் கையைக் கிழிச்சுக்குவியா? உனக்கு எதுவும் ஆகி இருந்தால் இந்த அப்பாவோட என் நிலைமையை நினைத்துப் பார்த்தியா? நீ? இந்த அப்பா உனக்கு எதுவும் ஆகி இருந்தா நிம்மதியா இருப்பேன்னு நீ நெனச்சியா?” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

அவர் அப்படிச் சொன்னதும் வெங்கடாச்சலத்தைப் பார்த்தவள், “அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. நான் ஏதோ அவசரத்துல இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டேன். உங்கள அத்தனை பேர் முன்னாடியும் அவமானப்பட வைத்துவிட்டேன் என்று சொல்லி தான் நான் ரொம்ப வருத்தப்பட்டு இப்படி ஒரு விஷயத்தை செஞ்சுட்டேன். நீங்க யாரைக் காட்டி கல்யாணம் செய்து சொல்றீங்களோ, அவரையே நான் கண்டிப்பாகக் கல்யாணம் செய்து கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா. இனிமேல் இந்த மாதிரி காரியத்தை எல்லாம் நான் செய்ய மாட்டேன்” என்று சொல்லி அழ…

அவளிடம் வந்த துர்கா, “தயவு செய்து அழாதே. இப்படி உடம்புக்கு முடியாத நேரத்துல நீ அழுதா அது இன்னும் தான் உனக்குப் பிரச்சினையா முடியும். உன் அப்பா தான் உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொல்லிட்டாரே? அப்புறம் ஏன் மறுபடியும் அழற? கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு” என்றாள்.

வெங்கடாச்சலத்தைத் தாண்டி நின்றிருந்த அவர் குடும்பத்தைப் பார்த்த அபி, “உங்க எல்லார்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். என்னை மன்னிச்சிடுங்க. ஏதோ ஆத்திரத்துல மூல மழுங்கிப் போய் இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டேன். உங்களையும் ரொம்ப வருத்தப்பட வைத்துவிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று காயம் ஆன கையைத் தூக்கி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டாள்.

அபி மன்னிப்புக் கேட்டதும் அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் அவள் மீது பரிவு ஏற்பட்டது.

அனைவரும் அவளுக்குத் தைரியம் சொல்லி சமாதானம் செய்தவர்கள், அவளிடம் சிறிது நேரம் பேசி சகஜமான மனநிலைக்குக் கொண்டு வந்த பின்பு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அவர்கள் அனைவரும் அவள் அறையை விட்டு கிளம்பி ஏகதேசம் சிறிது நேரம் கழித்து அபியும் மரகதமும் அமைதியாக அங்கே இருந்தனர். அவள் அருகில் இருந்த ஜன்னல் வழியே மரகதம் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்க, அபியும் அவரையே பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“மரகதம்மா!” என அபி அழைக்க, அவர் எதுவும் பேசாமல் அப்படியே நின்று இருந்தார். அவள் மீண்டும் அழுத்தி “அம்மா” என்று அழைத்தாள்.

“ஒரு நிமிஷம் இருடி. அது அந்த வீணா போனதெல்லாம் போயிடுச்சான்னு பாத்துட்டு வரேன்” என்றவர், வெங்கடாச்சலம், விசாலட்சி, ஆதி என அனைவரும் வந்த கார் அங்கிருந்து கிளம்பி வரை பார்த்துவிட்டுத் திரும்பி அபியிடம் வந்தவர், “நீ சொன்ன பிளான் சரியா ஒர்க் அவுட் ஆகுது டி.

அவங்க எல்லாம் உண்மையாவே நீ உன் கையைக் கிழிச்சுக்கிட்டேன்னு நம்பிட்டாங்க. இப்போ நீ நினைச்ச மாதிரியே உங்க அப்பா இல்ல அந்த குடும்பமே சேர்ந்து உனக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். என் மகள் பிளான் போட்டதெல்லாம் வீண் போகவில்லை” என்று அபியைக் கட்டிக்கொள்ள…

“நான் சொன்னேன் இல்லமா? இந்த குடும்பத்துக்கிட்ட நல்லவங்க மாதிரி நடிச்சு நாடகம் போட்டால் மட்டும்தான் நம்மளோட காரியத்தை சாதிக்க முடியும். இவங்க கிட்ட நம்ம உண்மையான குணத்தையும் முகத்தையும் காட்டினா அவங்களை நம்ம வழிக்குக் கொண்டு வர முடியாதுன்னு” என்றவள்.

அபி ஹாஸ்பிடலில் வந்து அட்மிட் ஆவதற்கு முன்பு அவள் வீட்டில் நடந்ததை அசை போட்டாள்.

வெங்கடாச்சலத்தை நம்ப வைத்து, அவரையே தனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கச் சொல்வதாகப் பேசிக் கொண்டிருந்த அபி, திடீரென அங்கே உடைந்துக் கிடந்த கண்ணாடியை எடுத்துத் தன் கையைக் கிழித்துக் கொண்டாள். அதைப் பார்த்த மரகதம் பதறி அடித்துக் கொண்டு அவளிடம் வர…

“ஐயோ அபி! என்ன காரியம் செய்து வச்சிருக்க? இப்ப எதுக்குடி கையை அறுத்த… உனக்கு ஏதாவது ஆயிடப் போகுது” எனப் பதறியபடி அவள் கையைப் பிடித்துக் காயம் ஏற்படுத்திய இடத்தைப் பார்க்க…. அவள் கிழித்துக் கொண்ட இடத்தில் லேசான ஒரு சிறு கீறல் மட்டுமே இருந்தது. இதைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தவர். “நல்லவேளை! ஆழமா எதுவும் காயம் ஏற்படல. அப்படி ஆயிருந்தா இந்த நேரம் எவ்வளவு இரத்தம் வீணா போயிருக்கும்” என்று மரகதம் சற்று நிம்மதி அடைய.

“அம்மா! உடனே அப்பாவுக்குப் போன் போட்டு நான் கையை அறுத்துகிட்டேன்னு, என் கையில் இருந்து இரத்தம் அதிகமா போகுதுன்னு சொல்லி அழுங்க” என்றால்.

“அதுதான் காயம் இல்லையே? அப்புறம் எதுக்கு தேவையில்லாம உன் அப்பாக்குப் போன் பண்ணி சொல்ல சொல்ற?” என்று மரகதம் புரியாமல் கேட்டார்.

“நான் எதுக்கு வீணா கையை அறுத்துக்கிட்டு இரத்தத்தை வீண் பண்ணனும்? அவரை நம்ப வைக்க ஒரு சின்ன டிராமா அவ்வளவுதான்” என்று, “சரி வாங்க நம்ம ஹாஸ்பிடலுக்குப் போலாம்” என்றாள்.

“சரிடி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தக் கையில இருக்குற கட்டைக் கழட்டிடாதே… அப்புறம் அந்த துர்கா, அவ டிடெக்டிவ் மூளையை வைத்து நீ பொய் சொன்னேன்னு கண்டுபிடிச்சிடப் போறா” என்ற மரகதம் காயம் பட்டிருந்த அபியின் கையைப் பிடித்து ஆட்ட…

“ஷ்… ஐயோ அம்மா! வலிக்குது” என அது உண்மையாகவே அலற ஆரம்பித்தாள். அதைக் கண்டதும் மரகதம், “என்னடி ஆச்சு? லேசா தானே காயம் மாதிரி இருந்துச்சு. அது உனக்கு இவ்வளவு வலிக்குதா? நான் வேணா போய் டாக்டர் கூட்டிட்டு வரட்டுமா?” என்று மரகதம் பதற.

டாக்டரை அழைக்கச் செல்ல இருந்த மரகதத்தின் கையைப் பிடித்துத் தன்னருகில் நிற்க வைத்த அபி, “டாக்டர் எல்லாம் எதுவும் கூப்பிட வேண்டாம்மா. எனக்கு ஒன்னும் இல்ல” என்றால்.

“ஏய் என்னடி ஒன்னும் இல்லன்னு சொல்ற? லேசா ஆன காயத்தைத் தொட்டதுக்கு இப்படி உயிர் போற மாதிரி அலற. இது உனக்கு ஒன்னும் இல்லையா? நீ பேசாம இரு. நான் போய் டாக்டர் கூட்டிட்டு வரேன்” என்றார்.

“ஐயோ அம்மா! கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. ஏற்கனவே என் கையைக் கிழிச்சுத் தையல் போட்டதுக்கு எனக்கு என்னவோ போல இருக்கு. இதுல நீ வேற என்னை டென்ஷன் பண்ணி டயர்ட் ஆக்கிடாத” என்றாள்.

“என்னடி சொல்ற? உன் கையில தையல் போட்டு இருக்கா? அவ்வளவு ஆழமாக் காயம் ஆகுற மாதிரி நான் பாக்குறப்போ லேசா தானே கிழிச்சு இருந்தது?” என்று அவர் பதற.

“அம்மா, நீ பார்த்தது சரிதான். என் கையில லேசா தான் காயம் ஆகி இருந்துச்சி. ஆனா நான் ஹாஸ்பிடல் வர வழியில தான் யோசிச்சேன். நாளைக்கே காயம் நல்லாகி கட்டைப் பிரிக்கணும்னா எப்படியும் அந்தக் காயத்தோட தழும்பு என் கையில இருக்கணுமே. எவ்வளவு நாளைக்கு பொய்யா தழும்பு வரைஞ்சுகிட்டு சுத்திக்கிட்டு இருக்க முடியும்? ஒரு நேரம் போல ஒரு நேரம் நான் நடிக்கிறோன்னு அந்தத் தழும்பு காட்டிக் கொடுத்துடும். அதனாலதான் இந்தக் டாக்டர்கிட்ட பேசி கத்தை கத்தையாப் பணத்தைத் தூக்கிக் கொடுத்து கன்வின்ஸ் பண்ணி என் கையில மறத்துப் போற ஊசி போட வச்சு, கொஞ்சம் ஆழமா கையை அறுத்து உண்மையாவே என் கையைக் கிழிச்சுக்கிட்டேன்மா. அதை கிழிச்சுட்டு அவரே திரும்பவும் தையல் போட்டுக் கிட்டார். இனி காயம் மாறி கட்டு பிரிச்சாலும் எந்த சந்தேகமும் அவங்களுக்கு வராது” என்றால்.

அபியின் இவ்வளவு துணிச்சலான முடிவைப் பார்த்த மரகதத்திற்கு அவளை நினைத்துப் பெருமையாக இருந்தது. உடனே தன் மகளைக் கட்டிக்கொண்டு, “நீ எங்கே இருந்தாலும் பொழைச்சுக்குடி” என்று சொல்லிச் சிரித்தார்.

இங்கே காபி ஷாப்பில் நர்மதாவும் ராகவும் எதிரெதிரே அமர்ந்து கொண்டு எதுவும் பேசாமல் உம் என்று இருந்தனர்.

அவர்கள் டேபிளுக்கு வந்த வெய்ட்டரை, “இன்னும் ஆர்டர் வேண்டுமா?” எனப் பணிவாக வந்து கேட்டுவிட, சிறிது நேரம் கழித்து வரச் சொல்லிவிட்டு அந்த வெய்ட்டரை அனுப்பியவர்கள், ஒருவரை ஒருவர் வெறித்தபடி அமர்ந்திருந்தனர்.

“இப்போ நீ முடிவா என்ன தான் சொல்ல வர்ற?” என்றான் ராகவ்.

“இனி சொல்றதுக்கு என்ன இருக்கு… எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். இந்தாங்க பிடிங்க பத்திரிக்கையை” என்று அவன் முன்பு தன் திருமணப் பத்திரிகையை நீட்டினாள் நர்மதா.

அவள் கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தவன் கோபமாக அவளை முறைத்து, “அப்போ உன் பின்னாடி நான் உன்ன லவ் பண்றேன்னு நாய் மாதிரி சுத்திட்டு இருந்தேனே? என்ன பாத்தா உனக்கு எப்படித் தெரியுது?” என்றான்.

“நான் அப்போவே சொன்னேனே, ‘இதெல்லாம் எனக்குச் செட் ஆகாது தயவு செய்து என் பின்னாடி சுத்தாதீர்கள்’ என்று. நான் சொன்னதைக் கேட்காம நீங்க என் பின்னாடி சுத்திக்கிட்டே இருந்தா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. எனக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. இனியாவது என் பின்னாடி சுத்துறது நிறுத்திட்டுப் போய் உங்க வேலையப் பாக்குற வழியப் பாருங்க” என்று அவன் முன்பு அந்தப் பத்திரிக்கையை வைத்துவிட்டு எழுந்தவள் அவனைத் தாண்டி வெளியே செல்லப் போக…

அவள் பேசியதைக் கேட்டுக் கோபமான ராகவ், சட்டென தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தவன், தன்னைத் தாண்டி செல்ல இருந்த நர்மதாவின் கையைப் பிடித்து இழுத்தவன், அங்கே காபி ஷாப்பில் அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை இழுத்து வைத்து அவள் இதழில் முத்தம் வைத்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்த்து விடாத நர்மதா, கடினப்பட்டு அவனிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டவள், ராகவன் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்து, “உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்னை இருக்கு இன்னொருத்தருக்கு மனைவியாகப் போகிறவளை இப்படிப் பொதுவில் எத்தனை பேர் முன்னாடி வச்சு முத்தம் கொடுப்பீங்க? நான் நல்லவருன்னு நினைச்சிருந்தேனே. ஆனா இப்படி கீழ்த்தரமான புத்தியுடன் இருப்பீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தயவுசெய்து இனிமே என் வாழ்க்கையில் குறுக்க வந்துறாதீங்க” என்று அவனை கையெடுத்துக் கும்பிட்டால் நர்மதா.

“இங்க பாரு நர்மதா. உன்கிட்ட நான் பலமுறை எடுத்து நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னேன்.

ஆனா நீ அதையெல்லாம் நான் காதலிக்கவே வாங்கிக்காம உன் இஷ்டத்துக்கு எவனையோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று சொல்லிப் பத்திரிக்கை கொண்டு வந்து என் முன்னாடி நீட்டினா, அதை நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. உனக்கு இவனைக் கல்யாணம் பண்ணிக்கத் தான் விருப்பம்னா அது ஒரு காலம் நடக்காது. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் உன்னை வேறு எவனையும் கல்யாணம் பண்ணிக்க விட மாட்டேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள். “பாருங்க, நான் சொல்றதக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. எங்க வீட்டில எனக்கு ஏற்கனவே என் அம்மாவோட தம்பி பையனைப் பேசி முடிச்சிட்டாங்க. எனக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்க வேண்டியது. ஆனால் நான் சிவு மேடம் கிட்ட அசிஸ்டென்டா வேலைக்குச் சேர்ந்ததால் தான் இந்தக் கல்யாணத்தை இத்தனை நாள் தள்ளி வைத்து இருந்தேன்.

இந்தக் கல்யாணத்தை அவசரமா நான் பண்ணிக்கக் காரணமே நீங்கதான். வீணா நீங்க என் பின்னாடி சுத்தி சுத்தி உங்க வேலை எல்லாம் விட்டுட்டு வர்றதுல எனக்கு விருப்பமில்லை. அதனாலதான் என் வீட்ல சொல்லி நானே இந்தக் கல்யாணத்தை சீக்கிரமா ஏற்பாடு பண்ணச் சொன்னேன்” என்றால். தயவு செய்து இனிமேல் என் வாழ்க்கையில் குறுக்க வந்திடாதீங்க என்று அவன் கையெடுத்துக் கும்பிட்டு அங்கிருந்து செல்லக் கிளம்பினால்.

தன்னுடைய டார்ச்சர் தாங்காமல் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னதாக நர்மதா சொல்லிவிட்டுச் சென்றதும் அதைக் கேட்டவனின் மனம் கனத்தது போல உணர்ந்தான். அப்போது அவன் மனதில் ‘இத்தனை நாளாகத் தன்னை டார்ச்சர் ஆகத்தான் நர்மதா நினைத்திருந்தாளா? தன்னைப் பற்றிச் சிறிதும் அவள் மனதில் காதல் வரவில்லையா?’ என நினைத்தவன், அவளை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற நினைப்போடு அந்த காபி ஷாப்பை விட்டுக் கிளம்பினான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured