Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2

by Layas Tamil Novel
138 views

EPISODE 17

ஓவியாவையும், திகழினியையும் உள்ளே பத்திரமாக அனுப்பி வைத்த ராகவ் அடுத்த நொடி அவனை குறிபார்த்திருந்தவனை நோக்கி ஓடினான்.

ராகவ் தன்னை நோக்கி வருவதை பார்த்த துப்பாக்கியை குறி பார்த்து பிடித்திருந்தவன் தாமதிக்காமல் சைலென்சர் மாட்டி இருந்த துப்பாக்கியால் அவனை நோக்கி சுட ஆரம்பித்தான்.

அந்த தோட்டங்களில் இருந்து லாவகமாக தப்பித்த ராகவ் பீஸ் மணலில் சரிந்தவன் உருண்டு சென்று அங்கிருந்த ஒரு குப்பை தொட்டியின் பின்னால் தன்னை மறைக்க முயன்றான்.

இரண்டு நிமிடங்கள் தான் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதன் பின் வேறு திசையில் இருந்து மீண்டும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க.. மணலில் குப்புற படுத்திருந்த ராகவ் நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே ராகவ்வை சுட்டுக்கொண்டிருந்தவனை தன் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொண்டிருந்தான் ராக்கி. அவன் காலடியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான் அந்த ஆள்.

அவனை அங்கு பார்த்ததும் தான் பெருமூச்சு வந்தது ராகவ்வுக்கு, எழுந்து ராக்கியை நோக்கி நடக்க..

அதற்குள் சத்தம் கேட்டு அந்த ஹோட்டலில் இருந்தவர்கள் வெளியே வந்திருந்தார்கள். அவர்களோடு ரதி, திகழ், ஓவியா, வேலு என்று அனைவரும் வெளியே வந்திருக்க..

துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக நின்று இருந்த ராக்கியை பார்த்து மிரண்டு போனாள் ரதி.

ராகவ்வுக்கு எதுவுமில்லை என்று நிம்மதியான ஓவியா அவனை நோக்கி ஓடி வர…

ராக்கியை நோக்கி சென்றவன் ஓவியா ஓடி வருவதை பார்த்துவிட்டு “ஏய் மெதுவா டி.. ” என்று அவளுக்கு முன்னே அவள் அருகில் போய் இருந்தான் ராகவ்.

“ராகவ்! உனக்கு எதுவும் ஆகளையே? ” என்று அவனை கட்டிக்கொண்டு அழுதாள் ஓவியா.

“இல்ல டி எதுவும் ஆகல. நீ டென்ஷன் ஆகாத பாரு நான் நல்லா தான் இருக்கேன் ” என்று  அவளை சமாதானம் செய்தான் .

திகழும், ரதியும் அவர்களிடம் வர.. “இவ கூட இருங்க நான் வரேன் ” என்று ஓவியாவை விட்டுவிட்டு நேராக ராக்கியை நோக்கி நடந்தான் ராகவ்.

வேலுவும் ராக்கியுடன் தான் இருந்தான்.

பிணமாக கிடந்தவனிடம் கால் ஊன்றி அமர்ந்த ராக்கி அவன் சட்டை, பேண்ட் பாக்கெட்டில் துழாவினான். ஒரு செல் போனை தவிர வேறு எதுவும் இல்லை அவனிடம் . அதை ஆன் செய்தான் . லாக் செய்யப்பட்டு இருக்க.. இறந்தவனின் கட்டை விரலி எடுத்து பிங்கர் ப்ரிண்டில் வைத்து அன்லாக் செய்தவன் நேராக கால் ஹிஸ்டரிக்கு சென்று பார்த்தான்.

அதில் பிரைவேட் நம்பர் என்று கடைசி கால் வந்திருக்க.. அதற்கு அழைத்து பார்த்தான். ஆனால் லைன் போகவில்லை, அது போகாது என்று அவனுக்கும் தெரியும். ஒரு சந்தேகத்திற்காக தான் அழைத்து பார்த்தான் ராக்கி.

“யாருன்னு தெரிஞ்சுதா மச்சான்” என்றான் ராகவ்.

“ம்ஹும்.. இல்ல போன் மட்டும் தான் இருக்கு” என்று பெருமூச்சோடு எழுந்தான் ராக்கி.

“எவ்ளோ செக்கியூரிட்ஸ் இருந்தும் ஒருத்தன் ராகவ்வை அதுவும் CM மருமகனை சுட்டு தள்ள தைரியமா இங்க வந்திருக்கான் , இதை முதல்ல நான் மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன்”என்றான் வேலு.

“இல்ல வேணாம் வேலு, அப்பா இங்க எல்லாரும் சந்தோசமா இருப்போம்னு நினைச்சிருப்பார். இப்போ சொல்ல வேணாம். எதுவா இருந்தாலும் நாம ஊருக்கு போய் பார்த்துக்கலாம்” என்றான் ராக்கி.

தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான் ராக்கி சொல்ல வேண்டிய விஷயத்தை அவன் சொல்லி முடிக்க..  அங்கே வேடிக்கை பார்த்த அனைவரையும் அங்கு வந்த சில குண்டாஸ் ஆட்கள் உள்ளே அனுப்பி வைத்தனர்.

அடுத்து ரதி, ஓவியா, திகழை சுற்றி ஒரு பாதுகாப்பது வளையம் போல வந்து நின்றார்கள் சில கார்ட்ஸ்கள்.

“பாடியை டிஸ்போஸ் பண்ற வேலையை அவங்க பாத்துப்பாங்க” என்றவன் ராகவ் தோளில் கையை போட்டு தன்னோடு அழைத்து சென்றவன் “உனக்கு யாரும் எதிரிங்க இருக்காங்களா?” என்றான்.

ராகவ்வோ “இல்ல மச்சான் ”  என்றான்.

“வேற யாரு உன்னை கொல்லணும்னு திட்டம் போட்டு இங்க ஹனிமூன் வரைக்கும் ஆள் அனுப்பி இருப்பாங்க” என்று யோசித்தான் ராக்கி.

ராகவ்வுக்கும் அதே கேள்வி தான் .

“சரி அதை நான் பாத்துக்கிறேன் ஓவியா ரொம்ப பயந்து போயிருக்கா அவளை கூப்டு போய் சமாதானம் பண்ணு . நான் நம்ம வேற ஹோட்டல் போறதுக்கான வேலையை செய்ய சொல்லிட்டு வரேன்” என்றான் ராக்கி .

“சரி மச்சான் ” என்று ஓவியாவிடம் செல்ல..

அவர்களிடம் வந்த ராக்கி “தினக்ஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடியா இருங்க நாம வேற ஹோட்டல் போலாம்” என்றான் ராக்கி.

“வேற ஹோட்டல் எல்லாம் வேண்டாம் அண்ணா. நாம ஊருக்கே போகலாம் . எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள் ஓவியா.

“எதுக்கு டி பயப்படுற , அதான் அவனை கொன்னுட்டாங்க இல்ல” என்றாள் திகழ்.

“அவனை கொன்னுட்டா வேற யாரும் வராமலா போய்டுவாங்க” என்று கண்ணீரோடு திகழை பார்த்தாள் ஓவியா.

“அப்படி யாராவது வந்த உன் அண்ணன் அவனையும் கொன்னு புதைச்சிடுவேன். எனக்கு நீ ரொம்ப முக்கியம் ஓவி, நீ கஷ்டப்படுற அளவுக்கு நான் விடமாட்டேன். ராகவ் தான் உனக்கு எல்லாமேன்னு எனக்கு தெரியும் , அவன் மேல கையை வெக்கணும்னா அது என்னை தாண்டி தான் நடக்கும் ” என்ற ராக்கி  “ரதியிடம் வந்தவன் “நீ ஓகேவா பீடா” என்று அவள் தோளில் கை போட்டான்.

அவன் கையை தட்டி விட்ட ரதி திரும்பி விறுவிறுவென்று அங்கிருந்து சென்று விட… அவளை புரியாமல் மற்றவர்கள் பார்க்க..

“அவள நான் பாத்துக்கிறேன் . நீங்க பேக் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணுங்க , நான் சொன்ன பிறகு நீங்க எல்லாரும் ரூமை விட்டு வந்தா போதும்” என்றான்..

சரி என்று தலையாட்டிவிட்டு நால்வரும் அவரவர் ரூமிற்கு செல்ல..

இங்கே ரதியை தேடி தன் ரூமிற்கு  வந்தான் ராக்கி.

திகழினி அறைக்கு வந்தவள் “சீக்கிரமா உன்னோட தினக்ஸ் எல்லாம் பேக் பண்ணிடு, நான் பிரெஷ் அப் ஆகிட்டு வரேன் ” என்று அவள் பாத்ரூம் நுழைந்து விட..

வேலுவும் வந்து தன் திங்க்ஸை லக்கேஜில் எடுத்து வைத்தான்.

இங்கே ரூமிற்குள் வந்த ஓவியாவோ ராகவ்வை இழுத்து அணைத்து அவன் இதழில் தன் இதழை பதித்து இருந்தாள்.

ராகவ்வுக்கு அவள் முத்தம் தந்ததும் அவள் எவ்வளவு பயந்திருக்கிறாள் என்று புரிந்தது. அவனை அவளை கட்டி அணைத்து அவள் முத்தத்திற்கு பதில் முத்தம் தந்தான்.

மூச்சு வாங்க முத்தம் தந்து அவனை விட்டு பிரிந்தவள் “ராகவ் எனக்கு உயிரே போயிருச்சு . அந்த துப்பாக்கியோட நின்ன ஆளை பார்த்ததும் ரொம்ப பயந்துட்டேன் ” என்றாள்.

அவளை அணைத்து அவள் தலையை வருடிக்கொடுத்தான் ராகவ்.

அவன் மார்பில் தலை சாய்த்தவள் “உனக்கு இந்த போலீஸ் வேலை வேணாம் ராகவ் , யாரு எந்த நேரத்துல வந்து உன்னை எதுவும் செய்வாங்களோன்னு எனக்கு இப்போ பயமா இருக்கு ” என்றாள்.

“ஹேய் ஓவியா, எதுக்கு இப்படி எல்லாம் பேசுற.. இந்த ஒரு இன்சிடெண்ட்டை வெச்சு நீ கண்டதை யோசிக்காத சரியா” என்று அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு நிமிர்த்தினான்.

“இல்ல ராகவ் , மறுபடியும் இந்த மாதிரி” என்று அவள் பேச…

அதற்கு மேலும் அவளை பேசாவிட்டால் சரியாக இருக்காது என்று அவள் இதழை தன் இதழால் பேசவிடாமல் முத்தம் வைத்து மூடி இருந்தான்.

ஓவியாவின் பயம், பதட்டம் என்று புரிந்திருந்தவன் தன் கண் முன்னே நடந்ததை கண்டு தான் அவள் இப்படி பேசுகிறாள் என்று நினைத்து அவளை சமாதானம் செய்தான்.

இங்கே ராக்கியின் அறையில் ஹாங்கரில் இருந்த உடைகளை எல்லாம் எடுத்து பெட்டிக்குள் கோபத்தோடு திணித்துக்கொண்டிருந்தாள் ரதி.

அவள் கோபம் கண்டு புரியாமல் அவளையே பார்த்திருந்தவன் “ஏய் பீடா என்ன டி ஆச்சு? எதுக்கு இப்படி கோபமா இருக்க?” என்றான்.

“நான் ஏன் கோபமா இருக்கேன்னு சொன்னா நீ கொன்னவனை திருப்பி உயிரோட கொண்டு வந்திருவியா?” என்றாள்.

“ஹேய்! என்ன டி பேசுற.. அவன் ராகவ்வை சுட்டுட்டு இருக்கும்போது நான் வேடிக்கையா பார்த்துட்டு இருக்க முடியும். லூசு மாதிரி பேசுற” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டே.

“ஆமா டா நான் லூசு தான். கண்ணு முன்னாடியே என் புருஷன் ஒருத்தனை சுட்டு கொன்னதை பார்த்தும் போலீஸ்க்கு போகாம அமைதியா வந்து தினக்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்கேன் பாரு நான் லூசு தான்” என்று  பெட்டியை அடித்து மூடினாள்.

“ஹே! மெதுவா டி.. ” என்றவன். “கொஞ்சமாவது யோசிச்சு பேசு டி , நான் மட்டும் அவனை சுடலையின்னா இந்த நேரம் ராகவ் உயிர் போயிருக்கும் ” என்றான்.

“நீ என்ன வேணா சொல்லு அவனை நீ கொன்னது தப்பு , ஒரு உயிரை எடுக்குற உரிமையை உனக்கு யார் கொடுத்தது” என்று அவனிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசினாள்.

“ரதி ராகவ் மேல உனக்கு அக்கரை இல்லையா? அவன் உன்னோட ஒட்டி பிறந்தவன் டி.. அவனோட உயிருக்கு ஆபத்துனு இருக்க அப்போ நான் தான் அவனை காப்பாத்தி இருக்கேன். நீ அத நினைச்சு சந்தோசப்படணும். அதை விட்டுட்டு என்னை திட்டுற” என்றான்.

“அம்மா ராகவ் என் கூடப் பிறந்தவன் தான் , நான் இல்லேன்னு செல்லலையே, ஒருத்தனை கொன்னு தான் ராகவ்வை காப்பாத்தணுமா? வேற எதாவது செஞ்சு அவனை காப்பித்திருக்கலாம்” என்றாள் கோபம் இன்னமும் குறையாமல்.

“அந்த நேரத்துல எனக்கு என் தங்கச்சி புருஷனை எந்த ஆபத்தும் இல்லாம காப்பாத்தணும்னு மட்டும் தான் தோணுச்சு. இப்படி நீ சொன்ன மாதிரி வேற யோசிச்சிட்டு இருந்தா, வந்தவன் அவனை மட்டும் இல்ல உன்னைய எண்ணெய்ன்னு அங்கிருந்த ஒருத்தர் விடாம சுட்டிருந்தா என்ன டி பண்றது” என்று அவளை பார்த்தவன் “ம்ம் சொல்லு அவன் யாரை சுட்டாலும் பரவால்லன்னு நான் நின்னிருந்தா, அவனுக்கு ஏதாவது ஆகிருந்தா என்ன டி பண்றது” என்றான்,

அதற்கு மேல் ரதி எதுவும் பேசவில்லை . பேசாமல் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள்.

அதன் பின் ராக்கி அவளிடம் பேசவில்லை. அவள் கோபம் கொஞ்சம் தனியட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று  விட்டுவிட்டான் .

சற்று நேரத்தில் கார்ட்ஸ்கள் வந்து இவர்கள் அறுவரும் தங்க பாதுகாப்பான ஒரு இடத்தை பிடித்துவிட்டதாக வந்து ராக்கியிடம் கூற..

மற்றவர்களிடம் தகவல் சொன்னவன் அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்த ஹோட்டலை விட்டு கிளம்பி இருந்தான்.

வரும்போது இருந்த சந்தோசமான மனநிலை இப்பொது யாருக்கும் இல்லை. ரதியின் கோபம் , ஓவியாவின் பயம் இவை இரண்டும் தான் ராக்கி, ஓவியா வாழ்விலும், ரதி ராக்கி வாழ்விலும் விளையாடப்போகிறது.

வேலு, திகழோ வழக்கம் போல எனக்கு என்ன என்ற ரீதியில் தான் இருந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured