வன்முத்தம் 4
தூங்கி விழுந்து கொண்டிருந்தாள் நிலாவினி.
அதுவும் வளவனின் தோளில்.
அவளைத் திரும்பிப் பார்த்தான், வளவனின் தோளில் நன்கு சாய்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் பூனை முடிகள் அவன் கன்னத்தில் பட்டு குறுகுறுக்க வைத்தது அவனை.
லேசாக தலை தாழ்த்தி அவள் அமைதியாக தூங்குவதைப் பார்த்தான். சீராக விடும் மூச்சுக் காற்றில் ஏறி இறங்கும் அவள் நெஞ்சுக்கூட்டில் பதிந்தது அவன் பார்வை.
அங்கிருந்து தன் பார்வையை விளக்க முடியாமல் தவித்தது அவன் கண்கள். அங்கே அவனையும் அறியாமல் பார்வை செல்லும்போது எல்லாம் முதல் இரவன்று நடந்தது தான் நினைவுக்கு வந்தது.
ஒரு பெண்மையை, அவள் மென்மையை முதல் முறை உணர்ந்த தருணம். அல்லவா அது. அதை எப்படி அவனாள் எளிதாக கடந்து வந்திருக்க முடியும்.
அந்த உணர்வுகள் எழுந்த அடுத்த நொடி அவன் கைகளை இருக்க மூடிக்கொண்டான். அவன் கைகளில் இன்னமும் அவளை ஸ்பரிசித்ததன் உணர்வு ஒட்டிக்கொண்டிருந்தது போலவே அவனுக்கு தோன்றியது.
தறிகெட்ட மனதை கடிவாளம் போட்டு அடக்க முடியாமல் தான் கைகளை இருக்க மூடிக்கொண்டு விலங்கு போட்டுக் கொண்டான்.
தன் தோளில் தலை சாய்த்து உறங்குபவளை எழுப்ப மனமில்லாமல் இல்லை, எழுப்ப முடியாமல் நிலாவினியை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் குடும்பமும், நிலாவினியின் குடும்பமும் இன்னமும் ஆபரேஷன் தியேட்டரின் முன்னே அமர்ந்து இருந்தனர்.
அவர்களின் முன்னிலையில் நிலாவினி எழுப்ப முடியாமல் அமர்ந்து இருந்தான். “இவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா காலையில அவளுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னு சொல்லிட்டு இப்படி என் மேலையே ஒய்யாரமா சாஞ்சு தூங்குவா.. நானும் எவ்ளோ நேரம் இவ தூங்குறதையே பார்த்துட்டு இருக்குறது” என்று நினைத்தவன் சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டான்,
தேன்மொழி, ஆறுமுகம் இருவரும் தனியே அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க.. தாராவுடன், உமையால் போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள்.
வெற்றியும் தன் மொபைலில் மூழ்கி இருக்க… தங்கள் இருவரையும் யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்த பிறகு திரும்பி நிலாவினியைப் பார்த்தான்.
அவள் தற்போதைக்கு எழுந்திருப்பது போலத் தெரியவில்லை அவனுக்கு. யாரும் பார்க்காத வண்ணம் மெல்ல தன் கையை அவளிடம் கொண்டு சென்றவன் எங்கோ வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்துகொண்டே அவளை நறுக்கென்று கிள்ளி வைத்தான்.
“ஷ்! அம்மா!” என்று சத்தமிட்ட படி கண் விழித்தவள் அப்போதுதான் வளவன் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள்.
சட்டென தலையை நிமிர்த்திக் கொண்டிருந்தவள் அவன் கிள்ளிய மணிக்கட்டை தேய்த்துவிட்டுக்கொண்டே எழ..
” என்ன மா என்ன ஆச்சு?? என்றார் ஆறுமுகம்
“அப்பா, இங்க கொசு அதிகமா இருக்கு அதான் கடிச்சிருக்கும் போல..” என்று தேய்த்துக் கொண்டாள்.
“கொஞ்சம் பொறுத்துக்கோ நிலா சம்மந்திக்கு ஆபரேஷன் முடிஞ்சு வெளிய வரட்டும். அதுக்கு பிறகு போய்க்கலாம்” என்றார்.
“ம்ம்.. சரிப்பா ” என்றவள். ” என்னை எழுப்பணும்னா என் பேரை சொல்லி கூப்டிருக்கலாமே. இப்படி சின்ன பையன் மாதிரி கிள்ளி வெக்குறிங்க..” என்று அவனைப் பார்த்தாள்.
“அப்போ நான் தான் கிள்ளினேன்னு உங்களுக்கு தெரியுமா?”
“தெரியும்”
“அப்போ வேணும்னே தான் என் மேல வந்து விழுந்திங்க.”
“ம்ஹும் இல்ல… என்னை அறியாமையே தூங்கிருப்பேன். அப்படியே உங்க மேல சாஞ்சுட்டேன் போல..” என்றவள். ” நான் உங்க பொண்டாட்டி தானே , எனக்கு உங்ககிட்டே எல்லா உரிமையும் இருக்கு. இப்போ என்ன உங்க தோள் மேல சாஞ்சு தூங்கிட்டேன் அவ்ளோதானே.. அதுக்கு தான் இப்படி சின்ன பிள்ளை மாதிரி கிள்ளி வெச்சிங்களா வளவன்” என்றாள்.
“நீ என்ன? சாரி நீங்க என்ன என்னை அப்போல இருந்து சின்ன பையன், சின்ன பையன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. என்னை பார்த்தா உங்க கண்ணுக்கு சின்ன பையன் மாதிரி தெரியுதா?” என்றான் கோபமாக ஆனால் மற்றவர்களுக்கு கேட்டு விடாத வண்ணம் .
“ம்ம்ம் ஆமா… நீங்க என்னை விட 1 மாசம் சின்ன பையன் தானே.. அப்போ நான் உங்கள சின்ன பையன் என்ன கூப்பிடலாமே” என்று சிரித்தவள் திரும்பிக் கொள்ள..
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன். நிலாவினியைப் பார்க்க..
அவளை வளவனிடம் இருந்து எழுந்து தாரா, உண்மையாளுடன் சென்று அமர்ந்துகொண்டாள்.
“என்ன ஒளறிட்டு போறா இவ.. என்னைவிட வயசுல மூத்தவளா? சான்ஸே இல்ல.. இவங்ககிட்ட பியேவா வேலை பார்த்தா நான் இவங்களை விட சின்னப்பையனா ஆகிடுவேனா? சும்மா என்னைவிட வயசு அதிகம்னு அடிச்சு விட வேண்டியது” என்று தூரத்தில் இருந்தவளை முறைத்தான்.
அவளோ இவனை சட்டை செய்யாமல் அமர்ந்து இருந்தாள்.
ஆபரேஷன் முடிந்து டாக்டர் வெளியே வர.. வேகமாக எழுந்து அவரிடம் சென்றான் வளவன். மற்றவர்களும் செல்ல…
“டாக்டர்! அம்மா! அவங்க எப்படி இருக்காங்க” என்றான் ஒருவித பதைபதைப்புடன்.
“ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிருச்சு. அவங்க அப்செர்வேசனில் இருக்காங்க. மயக்கம் தெளிஞ்சதும் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிருவோம்” என்றார்.
அவர் விஜயலக்ஷ்மிக்கு எதுவுமில்லை என்றதும் தான் எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் வஜ்ரா! நான் கேட்டுகிட்டதும் உன்னோட ஸ்கெடிய்யுள் எல்லாம் விட்டுட்டு என் அத்தைக்கு ஆபரேஷன் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு ” என்று அவன் கையை பிடித்து குலுக்கி நன்றி சொன்னாள் நிலாவினி.
“இதுல என்ன இருக்கு லினி, ஒரு டாக்டரா நான் என் வேலையை தான் செய்தேன்” என்றான்.
“அப்படின்னாலும் நீ கனடாவில் எவ்ளோ பெரிய ஹார்ட் சரிஜியன் என் பொண்ணும் நீயும் ஒரே காலேஜில் படுச்சீங்க அப்போ தான் உங்களுக்கு பழக்கமே ஆரம்பிச்சுது. இவ ஸ்டடீசை பாதியிலேயே ஸ்டாப் பண்ணிட்டு பிசினஸ் பாக்க என்கூட வந்துட்டா… அப்போ பேசிப்பழகின பழக்கதுக்காக நீ இவ்ளோ தூரம் வந்து நல்ல முறையில் ஆபரேஷன் முடிச்சு கொடுத்திருக்க வஜ்ரன் அதுக்காக நானும் உனக்கு நன்றி சொல்றேன்” என்றார் ஆறுமுகம்.
“ஹையோ அங்கிள் என்ன இது? விடுங்க.. எனக்கு எம்பாரசிங்கா இருக்கு” என்றவன். “லினி, நீ பிரீயா இருக்க அப்போ வந்து என்னை மீட் பண்ணு” என்றான்.
“ஷ்யூர் வஜ்ரா வரேன்” என்றாள்.
“ஓகே நான் அப்பறோம் வந்து பேசண்டை பாக்குறேன்” என்றவன் நிலாவினியின் கையை பிடித்து குலுக்கிவிட்டு அங்கிருந்து
கிளம்பி இருந்தான்.
அவர் சென்றதும் “மாப்பிள்ளை, இனி உங்க அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அவங்க சீக்கிரமே குணமாகி வந்திடுவாங்க” என்று அவனை கட்டிப்பிடித்து ஆறுதலாகப் பேசினார் ஆறுமுகம்.
வெற்றியும், உமையாளும் விஜயலக்ஷ்மி ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து விட்டார்கள் என்று சந்தோசமடைந்தவர்கள். சிபியைப் பார்க்க.. அவன் மனநிலையும் அவர்களைப் போலவே தான் இருந்தது.
தன் தாய்க்கு இதயத்தில் இருந்த பெரிய சிக்கலை சரி செய்து அவரை உயிருடன் மீட்டுக்கொடுத்தது ஆறுமுகம் தான். அவர் மட்டும் பேரும் முயற்சி எடுக்கவில்லை என்றாள், ஒற்றை ஆளாக மூவரையும் படிக்க வைத்து, சமூகத்தில் ஒரு நிலைக்கு கஷ்டப்பட்டு கொண்டு வந்த தன் தாயின் நிலைமை என்னவாகி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது.
நேராக ஆறுமுகத்திடம் வந்தவன் ” என் அம்மாவை எனக்கு திருப்பி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்” என்று கையெடுத்து கும்பிட்டேன் அவரிடம்.
“ஆமா அங்கிள் நீங்க மட்டும் இல்லேன்னா எங்க அம்மா என்ன நிலைமையில் இருந்திருப்பாங்கன்னு எங்களால நினைச்சு கூட பார்க்க முடியல… ” என்ற உமையால் ஆறுமுகத்தை பார்த்து கையெடுத்து கும்பிட.. அவள் சொல்வது சரி தான் என்ற ரீதியில் வெற்றியும் அவருக்கு நன்றி சொன்னான்.
” என்னப்பா இது ஆளாளுக்கு எனக்கு நன்றி சொல்லி பெரியமனுஷன் ஆக்குறீங்களே.. அப்டி நீங்க நன்றி சொல்லனும்னா மூணு பேரும் சேர்ந்து என் பொண்ணு நிலாவினிக்கு தான் நன்றி சொல்லணும்” என்றார்.
மூவரும் அவரை பார்க்க..
“என்ன அப்படி பாக்குறீங்க.. ” என்றவர் “மாப்பிளை நீங்க என் பொண்ணை கல்யாணம் செய்துக்க சம்மதம்னு சொன்னதும் நேரா என் பொண்ணுகிட்டே வந்து உங்க சம்மதத்தையும் கூடவே உங்க அம்மாவோட உடல்நிலை குறித்தும் என் பொண்ணுகிட்டே சொன்னேன். அவ தான் வஜ்ரனை காண்டாக்ட் பண்ணி அவன்கிட்ட உங்க அம்மா ஹெல்த் கண்டிஷன் பத்தி எடுத்து சொல்லி அவங்க ரிப்போர்ட்டஸ் எல்லாம் அனுப்பிவெச்சு இந்த ஆபரேஷன் செய்ய அவனை சம்மதிக்க வெச்சா. அதுமட்டும் இல்லாம வஞ்சரன் அங்க இருந்து இங்க வரத்துக்கான ஏற்பாட்டை எல்லாம் அரேன்ஜ் பண்ணினா.. ” என்றார்.
உமையால் ஓடி சென்று நிலாவினியை. கட்டிக்கொண்டு “அண்ணி! ரொம்ப தேங்க்ஸ் என் அம்மாவின் காப்பாத்திக். கொடுத்ததுக்கு”என்று அழுதாள்.
வெற்றியும் அவளிடம் வந்தவன் “தேங்க்ஸ் அண்ணி!” என்றான்.
இருவரையும் பார்த்து லேசாக புன்னகைத்தவள் பார்வை சிபியின் மீதே பதிந்திருந்தது.
அவன். ஏதாவது. பேசுவாம் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால். அவன். எதுவும் பேசவில்லை அமைதியாக நின்றான்.
அவனின் இந்த அழுத்தம் அவளுக்கு சற்று வருத்தமாக இருந்தது. அவன் அம்மாவை காப்பாற்றி இருக்கிறேன். ஒரு ஆறுதலாக்காகவாவது என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தால் என்ன குறைந்துவிடுவானோ என்றிருந்தது…
அப்போது அங்கு வந்த நர்ஸ் “பேசன்ட் உடைய கார்டியன் யாரு? ” என்றார்.
” மேடம் நான் தான்” என்று அவன் செல்ல..
“சார், இதுல சில இன்ஜெக்ஷன்ஸ் வாங்கிட்டு வந்திருங்க கூடவே டேப்லெட்ஸும் சிலது எழுதிருக்கு அதையும் வாங்கிட்டு வந்திருங்க.. ” என்றார்.
அவர் நீட்டிய பைலை வாங்கியவன் அங்கிருந்து செல்லப் போக..
“அண்ணா! நீ இரு நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று வெற்றி சிபியின் கையில் இருந்த பைலை வாங்கியவன் அங்கிருந்து செல்ல..
தாராவும், உமையாளும் அவனோடு பின்னால் சென்றார்கள்.
“சரிம்மா, நீ இங்கையே இரு. நான் வீட்டுக்கு போய்ட்டு சாப்பிட எதுவும் செஞ்சு எடுத்துட்டு வரேன்” என்று தேன் மொழி ஆறுமுகத்தையும் தன்னோடு அழைத்துச் சென்றார்.
இப்போதைக்கு ஆபரேஷன் தியேட்டரின் முன்னால் சிபியும், நிலாவினியும் மட்டும் தான் இருந்தனர்..
சிறிது நேரம் அமர்ந்து இருந்த நிலாவினிக்கு. அடிவயிறு முட்டிக்கொண்டு வர.. எழுந்து விஜயலக்ஷ்மி அட்மிட் செய்திருந்த சூய்ட் ரூம்க்கு சென்றாள்.
அவள் செல்வதைப் பார்த்த வளவன் நிலாவின் பின்னாலேயே எழுந்து சென்றான்.
அவள் அறைக்குள் வந்து கதவை சாற்றப்போக.. அவள் பின்னாலேயே வந்த சிபி வேகமாக வந்து அந்த ரூம் கதவை .சாற்றிவிட்டு திரும்பினான்.
நிலா அவனைப் புரியாமல் பார்க்க.. அவளை இழுத்து சுவற்றோடு அழுத்திப் பிடித்தவன் “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடி அந்த டாக்டர் கையைப் பிடிச்சு பேசுவ..” என்றான்.
வளவன் இப்படி அதிரடியாய் வந்து தன்னைக் கேள்வி கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் உறைந்து போனாள்
