Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 6

வல்லவனின் வன்முத்தம் 6

by Layas Tamil Novel
64 views

வன்முத்தம் 6

மெடிக்கலில் இருந்து மருந்துடன் நடந்து வந்த வெற்றி அவன் பின்னால் ஒளிந்து ஒளிந்து நடந்து வந்த தாராவை கவனிக்கவில்லை. 

அவன் பின்னால் வந்தவள் “என்ன இவன் திரும்பியே பார்க்க மாட்டேங்குறான்” என்று அவன் அருகில் வந்தவள் பின்னாலிருந்து அவன் முதுகில் அடித்துவிட்டு ஓடிச்சென்று அங்கிருந்த தூணின் பின்னால் ஒளிந்து கொண்டாள் .

யார் என்று திரும்பி பார்த்தவன் பின்னால் யாரும் இல்லாதது கண்டு யோசித்தவர் திரும்ப.. “ஹாய்! செல்லோ!.. ” என்று அவன் முன் வந்து நின்றவள் “அச்சோ யாராவது நம்ம ரெண்டு பேரையும் ஒண்ணா வெச்சு பாத்துரப்போறாங்க இப்படி வா…” என்று அவன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு அவள் மறைந்து இருந்த அதே தூணுக்கு பின்னால் இழுத்து சென்றவள் போன வேகத்தில் அவனை தன் உயரத்திற்கு கீழே இழுத்து பச்சக் என்று பச்சை முத்தம் வைத்தாள் அவள் இதழில்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத வெற்றி அவளை அதிர்ந்து பார்க்க..

அவ்ளோ கண்கள் மூடி மிகத்தீவிரமாக அவனுக்கு முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்.

சட்டென சுதாரித்தவன் தாராவின் தோளில் கை வைத்து அவளை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டான்.

“ம்ம்..ம்ம்… ” என்று இன்னமும் முத்தம் கொடுக்கும் மூடில் உதடு குவித்து இருந்தவள். அவனை முறைத்துவிட்டு “ப்பா.. எப்படி இருக்கு தெரியுமா கிஸ்ஸு… இப்படி பதிலையே ஸ்டாப் பண்ணிட்டியே செல்லோ.. வா.. வந்து இன்னொரு வாட்டி முத்தம் கொடு” என்று மீண்டும் உதடு குவித்து அவன் பக்கம் முகத்தை கொண்டு சென்றாள்.

“ஹேய்! ஹேய்! என்ன டி பண்ணிட்டு இருக்க?” என்று அவள் நெற்றியில் ஒற்றை விரலை  வைத்து தன் பக்கம் வரவிடாமல் தடுத்தவன். “இங்க பாரு நீ என்ன பண்ணி வெச்சிருக்க தெரியுமா? எதுக்கு டி எனக்கு முத்தம் கொடுத்த ” என்று சீறினான்.

“ஹும்… உன்னை பிடிச்சிருக்கு அதான் முத்தம் கொடுத்தேன்” என்றாள் கொஞ்சலாக சிரித்துக்கொண்டே.

அதை கண்டு மெய் மறந்தவன் பின் தலையை சிலுப்பிக்கொண்டு “ஹேய்! இங்க பாரு இவ்ளோ நாளா என்னை லவ் பண்றேன்னு டோர்சேர் பண்ணினது போதலையா? இப்போ இது என்ன டி காரியம்” என்று  எரிந்து விழுந்தான் அவளிடம்.

“இல்ல செல்லோ… முதல்ல இருந்து உன்னை லவ் பண்ண சொல்லி டோர்சேர் பண்ணினேன். ஏன்னா அப்போ உன் குடும்பமும், என் குடும்பமும் ஜஸ்ட் பேமிலி பிரெண்ட்ஸ். சோ ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணிட்டு லவ் பன்றேன்னு உன்னை டோர்சேர் பண்ணினேன். ஆனா இப்போதான் என் அக்காவுக்கும், உன் அண்ணாவுக்கும் கல்யாணம் ஆகிருச்சே.. நீயும் நானும் இப்போ சொந்தம் ஆகிட்டோம்  செல்லோ.. அதனால இனிமேல் நான் உன்னை லவ் டோர்சேர் பண்றதை விட்டுட்டு முத்த டோர்சேர் பண்ண நினைச்சேன். அதுக்கு இன்னிக்கு தான் வாய்ப்பு கிடைச்சுது. அதான் டப்புனு பிடிச்சு பட்டுனு ஒரு கிஸ்ஸை போட்டுட்டேன் மாமே… எப்படி நம்ம கிஸ்ஸு… ” என்று தோளை குலுக்கினாள்.

அவளை அதிசயமென பார்த்தவன் “ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிட்டு இருக்காத சரியா. ஏதோ பைத்தியம் மாதிரி பண்ணிட்டேன்னு உன்னை சும்மா விடறேன். இன்னொரு தடவை லவ் டார்ச்சர், முத்த டோர்சேர்ன்னு கிட்ட வா உன் பல்லை உடைக்கிறேன்” என்றவன் திரும்பி நடக்க போக..

“ஹா! பல்லை உடைப்பியா? எங்க இப்போ நான் மறுபடி உனக்கு ஒரு கிஸ்ஸ போடுறேன். என் பல்லை உடை பாப்போம்” என்று தாமதிக்காமல் அவன் சட்டையை பிடித்து தன் பக்கம் இழுத்து மூச்சை இழுத்துக்கொண்டு அவன் இதழை தன் இதழால் பறித்து இருந்தாள்.

கையில் வைத்திருந்த மருந்து நழுவி கீழே விழப்போக.. அதை முத்தம் கொடுத்துக்கொண்டே லாவகமாக கேட்ச் பிடித்த தாரா அவன் இதழை விட்டுவிட்டு “ஈஈஈ… எங்க என் பல்லை உடைடா செல்லோ ” என்று 32 பல்லும் தெரியும்படி காட்டினாள்,

வெற்றியின் காது மடல் சிவந்து போயிருந்தது. அவளை எதுவும்  சொல்லாமல் அவள் முத்தம் வைத்த அழகில் மயங்கிப் போய் நின்று இருந்தான்.

“ஹஹா! டேய் லூசு! ஒரு ரெண்டு கிஸ்ஸ போட்டதுக்கே நீ இப்படி ஸ்டன் ஆகி நிப்பேன்னு தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாள் லவ் பண்ணுறேன்னு சொல்லி உன் பின்னாடி டோர்சேர் பண்ணி சுத்திட்டு இருந்ததுக்கு. பேசாம உன்னை மேட்டர் பண்ணி நான் அம்மாவாகிட்டு அப்பறோம் உன்னையே கல்யாணம் பண்ணிருப்பேனே டா” என்று அவன் இரு கன்னத்தையும் கிள்ளி முத்தம் வைத்தாள்.

அவள் கிள்ளியதில் உணர்வு வந்தவனாக “ஹேய்! இப்போ என்ன டி சொன்ன?”  என்றான்.

“ஹும்.. ஒன்னும் சொல்லலையே ” என்றவள் “என்ன வெற்றி இது பொறுப்பில்லாம இருக்க.. இந்த நேரம் நான் மட்டும் வரலையின்னா இவ்ளோ மருந்தும் கீழ விழுந்து நாஸ்தி ஆகியிருக்கும்” என்றாள்.

“ஹேய்! நானா டி மருந்தை கீழ போட்டேன். நீ வந்து எனக்கு முத்… ” என்று அவன் சொல்லவும்.

“அப்பா! நான் இங்க இருக்கேன் ” என்று தூரத்தில் வந்த ஆறுமுகத்தை நோக்கி வேகமாக நடந்தவள் .

“வெற்றி நீ ஏதோ மருந்தை மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னியே அதை போய் வாங்கிட்டு வந்திரு. நான் அத்தைக்கு இந்த மருந்தை எல்லாம் கொடுத்துறேன்” என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து நகர..

அப்போது தான் ஆறுமுகம் வருவதை பார்த்த வெற்றி “இவை சரியான கேடிபில்லா! கில்லாடி ரங்காவா இருப்பா போலையே.. ஒரு நிமிசத்துல எவ்ளோ உல்ட்டா பண்ணி பேசுறா , எப்படி சமாளிக்குறா ” என்று நினைத்தவன் அவள் தந்தையை பார்க்க…

“என்ன வெற்றி எதுவும் வாங்காம விட்டுட்டியா தாரா சொல்லிட்டு இருந்தா” என்றார்.

“இல்ல அங்கிள் .. சாரி ஆமா அங்கிள் ஒரு மருந்தை மெடிக்கல்லையே மிஸ் பண்ணிட்டேன் அதை போய் எடுத்துட்டு வரேன்” என்றவன் அவர் அருகில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில்  நின்று இருந்த தாராவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “அங்கிள் அதுவும் வாங்கணுமா?” என்றான்.

“ஆமா வெற்றி, அத்தைக்கு ஹாஸ்பிடல் வாடையே ஆகாது. அவ இந்த ஸ்மெல்லாள ரொம்ப அவதிப்படுறா அதான் அவளுக்கு மாஸ்க் வாங்கிட்டு போலாம்னு வந்தேன் ” என்றார்.

“ஓஹ்! ஓகே அங்கிள், நீங்க போங்க நானே வாங்கிட்டு வரேன்’ என்று  அவரை அனுப்பி வைத்தான் .

இங்கே முன்னமே வீட்டுக்கு வந்து சேர்ந்த நிலாவினி வளவன் காரை நிறுத்தவும் அதில் இருந்து இறங்கு வேகமாக வீட்டிற்குள் ஓடினாள் .

காரில் ஏறியதால் இருந்து இப்பொது வீட்டிற்கு வந்தது வரை அவள் ஒரு வார்த்தை பேசவில்லை. வளவனும் அவன் பேசியதற்கு நிலாவிடம் சாரி கேட்க நினைத்தான் , ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை அவனுக்கு கொடுக்கவில்லை அவள். ஏசியில் இருந்த கார் ஜன்னலை திறந்து விட்டு வெளிக்காற்றை மிக தீவிரமாக ரசித்துக் கொண்டிருந்தவளை அதிசயம் என பார்த்தான்.

இங்கே வீட்டிற்கு வந்ததும் இறங்கி ஓடுபவளை புரியாமல் பார்த்தவன் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே செல்ல.. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாள் வந்து “தம்பி இந்த சுடுதண்ணியும் ஓமத்தையும் கொண்டு போய் பாப்பாகிட்டே கொடுக்கிறிங்களா?” என்றார்.

“அக்கா எதுக்கு ஓமம் “என்றான்.

“இல்ல தம்பி பாப்பாவுக்கு ஆஸ்பத்திரி வாடையே சுத்தமா ஆகாது, எங்காவது ஆஸ்பத்திரி போயிட்டு வந்துச்சுன்னா வாந்தி எடுத்துட்டே இருக்கும். அப்பறோம் சோர்ந்து போயிரும். அதுக்கு தான் இந்த சூடு தண்ணியும், ஓமமும். நீங்க இதை போய் முன்னாடி கொடுங்க. நான் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்” என்றார்.

“அப்பறோம் எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருந்தா ?” என்று அவன் யோசிக்க..

“இன்னிக்கு வேற பாப்பா காலையில் இருந்து ஆஸ்பத்திரியில இருந்திருக்கு. இதுல அம்மாவும், பொண்ணும் வேறா ஒன்னாவே ஹோட்ப்பிட்டள்ள இவ்ளோ நேரம் இருந்திருக்காங்க. அவுங்க என்ன நிலைமையில்  வரப்போறாங்களோ தெரியல “என்றவர் “தம்பி நீங்க கொஞ்சம் வெரசா போறிங்களா.. ” என்று அந்த டம்பளரை அவன் கையில் திணித்தார் .

தண்ணீருடன் மேலே எறியவன் அவர்கள் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் கண்களில் கண்ட காட்சி அவனை உறைய வைத்து இருந்தது. அங்கே டவலுடன் அப்படியே தரையில் சுருண்டு விழுந்திருந்த நிலாவினியை பார்த்ததும் பதறிவிட்டான்

அவசரமாக உள்ளே வந்தவன் கையில் இருந் ட்ரேயை கீழே வைத்துவிட்டு தரையில் மயங்கி விழுந்து இருந்திருந்தவளை தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் “மேடம்! மேடம் .. நிலா நான் பேசுறது கேக்குதா?” என்றவன் அவள் கன்னத்தை தட்டினான்.

ம்ஹும் அவள் எழுந்த பாடில்லை, அந்த நேரம் வேலையாள் உள்ளே வர.. “அக்கா! இங்க பாருங்க நிலா மயங்கி விழுந்துட்டா என்றான் பதட்டமாக.

“ஐயோ! தம்பி மயங்கிருச்சா ” என்றவர் வேகமாக வந்து நிலாவின் கன்னத்தில் தட்டி பாப்பா பாப்பா எழுந்திருப்பா என்றார்,

நிலாவினி மெல்ல கண் திறந்து பார்க்க அவள் முன் வெற்றி தான் ,

அவனோ ஒரு ஹாஸ்பிடல் வந்ததுக்கு இவளுக்கு என்ன இப்படி மயக்கம் வரும் அளவுக்கு ஆகிருச்சா  என்று நமபமுடியாமல் நின்று இருந்தான்.

“பாப்பா! இந்தாங்க இந்த ஜூஸை குடிங்க”என்று அவளை கை தாங்களாக கட்டிலில் சாய்ந்து அமர வைத்து அவளுக்கு ஜூசை கொடுத்தார். “தேங்க்ஸ்  அக்கா “என்று கொஞ்சம் கொஞ்சமாக ஜூஸ் மொத்தமும் குடித்தவள். “அக்கா எனக்கு கசகசன்னு இருக்கு நான் போய் குளிக்குறேன் . இதே போல ஜூஸ் மட்டும் போட்டு மேல கொடுத்துவிட்ருங்க, நான் போய் குளிக்கிறேன் ” என்றாள்.

“நிலா இப்போதான் மயங்கி விழுந்திருக்க. இப்போ போய் குளிக்க போறேன்னு சொல்ற.. ” என்று இடைமறித்தான்.

“அதெல்லாம் எதுவும் ஆகாது. நீங்க போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோங்க” என்றவள் அக்கா நீங்க ஜூஸ் கொடுத்து விடுங்க என்றாள்.

அவரும் ஜூஸை அவளிடம் நீட்டிவிட்டு கீழே செல்ல.. நிலாவினி மெல்ல படுக்கையை விட்டு எழுந்தவள் பாத்ரூமிற்கு குளிக்க சென்று கதவை தாழிட்டதால்.

சிறிது நேரத்தில் தண்ணீர் திறந்து விடும் சத்தம் கேட்டது. அதனூடே திடீர் என்று ஏதோ உடைந்து விழும் சத்தம் கேட்டது.

உடை மாற்றி விட்டு வெளியே வந்த வளவன் பாத்ரூமில் இருந்து வந்து சத்தம் கேட்டு வேகமாக பாத்ரூம் அருகில் சென்றவன் மேடம் , மேடம் ஏதாவது உடைஞ்சிருச்சா உள்ள என்றான்.

உள்ளே இருந்து நிலா எந்த பதிலும் சொல்லாமல் போகவே கடைசியில் ஒரு முடிவோடு பாத்ரூம் கதவை திறந்து உள்ளே பார்க்க. . நிலா பிறந்த மேனியாய் தரையில் விழுந்து கிடந்தாள்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured