வன்முத்தம் 9
அப்போது தான் தூங்கி எழுந்து காபி குடித்துக்கொண்டிருந்தான் வளவன். அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நிலா வளவனை கண்டும் காணாமல் உள்ளே வந்தாள்.
அதை கண்டவன் காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு எழுந்து அவள் எதையோ தேடிக்கொண்டிருக்க.. அவள் அருகே வந்து நின்றவன் “ம்கூம்..” என்று செருமினான்.
அவனை திரும்பி பார்த்தாள் நிலா.
அவள் பார்வையில் தடுமாறியவன் “மே.. மேடம் உடம்பு எப்படி இருக்கு?” என்றான்.
“தாங்க்ஸ் பார் யுவர் கன்செர்ன் வளவன், ஐயம் மச் பெட்டெர்” என்றாள் சற்று அதிகார தோரணையில்.
“ஏன் இப்படி வெடுக்குன்னு பேசுறா?” என்று புருவம் சுருகியவன். “மேடம், இன்னிக்கு ஹாஸ்பிடல் போலாமா?” என்றான்.
தேடி வந்த பொருள் கிடைத்துவிட அதை எடுத்துவிட்டு திரும்பியவள் அவன் கேட்டதில் நின்றாள். பின் அவனை ஏறிட்டு “எதுக்கு வளவன்” என்றாள்.
“இல்ல.. நேத்து உங்களை டெஸ்ட் பண்ண டாக்டர் உங்க உடம்பு கண்டிஷன் எப்படி இருக்குன்னு செக் பண்ணனும், இதுக்கு எதுவும் டிரீட்மென்ட் இருக்கு அதை எடுத்தா இந்த ப்ரோப்லேம் வராதுன்னு சொன்னார்” என்றான்.
“அப்படியா?” என்று அவனை அழுந்த பார்த்தவள் “நான் ஏற்கனவே டாக்டர் பாத்திருக்கேன் வளவன், எனக்கு இது எல்லாம் பிரச்சனை இல்லை” என்றாள்.
தான் சொன்னதை அவள் கேட்கவில்லை என்று அவனுக்கு இருந்தது. ஒரு பக்கம் கோபம் வந்தது. இன்னோரு பக்கம் அவளை எப்படி ஹாஸ்பிடல் அழைத்து செல்வது என்று யோசித்தான்,
“இல்ல பரவால்ல மேடம் , இந்த டாக்டரையும் ஒரு முறை பாத்துடலாம் ” என்றான்.
“உங்க அக்கரைக்கு நன்றி” என்றவள் “ஒரு பியேவா என்மேல நீங்க அக்கறை காட்ட வேண்டியதில்லை வளவன்” என்றாள்.
அவள் அப்படி பேசியதும் “நேத்து நான் அவகிட்டே சொன்னதையே இப்போ சரி எனக்கு குத்தி காட்டுறாளே, அந்த கோபத்துல தான் பேசுறாளோ ” என்று நினைத்தவன்.
“என் அம்மாவை பார்க்க வந்து தான் உங்களுக்கு உடம்பு முடியாம இருக்கு. அந்த அக்கரையில் தான் ஹாஸ்பிடல் கூபிட்றேன்”என்றான்.
“ஓஹோ! ” என்றவள். “ஒரு குற்ற உணர்ச்சியில் என்னை ஹாஸ்பிடல் கூப்டு போகணும்னு தான் நினைக்கிறீங்க, உண்மையாவே என் மேல உங்களுக்கு அக்கறை இல்லை அபப்டித்தானே” என்று அவனை வலியோடு பார்த்தாள்.
“இல்ல அப்படி இல்ல, நேத்து நீங்க ரொம்ப கஷ்டப்படிங்க அதான்” என்றான் வளவன்.
“வளவன் இன்னமும் என்னை நீங்க ,வாங்க,போங்கன்னு கூப்டு கஷ்டப்படுத்தாதீங்க. உங்க மனைவி நான், உங்க குடும்பத்துல நானும் ஒருத்தி தான் அது உங்களுக்கு புரியலையா?”என்றாள் சற்று கோபத்தோடு.
“அப்போ என்னை வீட்டோட மாப்பிளையா நீங்க டிமாண்ட் பண்ணி கல்யாணம் செய்திருக்க கூடாது மேடம். அப்பறோம் எப்படி எனக்கு உங்க மேல அக்கறை வரும். நீங்க எப்பவும் எனக்கு முதலாளிங்குற நினைப்பு தான் வந்தது” என்றான் வளவன் ஆதங்கத்தோடு.
“ஐயோ! வளவன் நான் தான் சொல்றேனே என் அப்பா இப்படி எல்லாம் பேசி தான் உங்களை எனக்கு கல்யாணம் செய்து வெச்சிருக்காருனு சாத்தியமா தெரியாது” என்று அழுத விழிகளில் அவனை பார்த்தாள்.
“சரி மேடம் அவர் சொன்னதாவே இருக்கட்டும் . ஆனா நான் வீட்டோட மாப்பிள்ளையா வர விஷயம் உங்களுக்கு தெரியாமலா போய் இருக்கும்.. நீங்க கல்யாணம் ஆனதும் என் வீட்டுக்கு வரணும்னு சொல்லி இருக்கணுமா? வேணாமா? அப்படி நீங்க என் வீட்டுக்கு என் பொண்டாட்டியா வந்திருந்தா நானும் உரிமையோடு உங்ககிட்ட பேசி இருப்பேனே..” என்றான்.
அந்த கேள்வியில் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணமான தன் அப்பாவை தான் நினைத்தாள். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் இருக்கிறது என்று அவளுக்கு தெரியும் ஆனால் அதை வளவனிடம் சொல்ல அவள் விரும்பவில்லை.
“ம்ம் ஏன் மேடம் பதில் பேசாம இருக்கீங்க சொல்லுங்க” என்றான் .
“இப்போ என்னை என்ன பண்ண சொல்றிங்க. நான் உங்க வீட்டுக்கு வரணுமா சொல்லுங்க வரேன். வாங்க இப்பவே போலாம் ” என்று அவன் கையை பிடித்து தன்னோடு அழைக்க..
“எதுக்கு மேடம் இப்படி ஸீன் போடறீங்க. உங்களுக்கு இந்த சமூகத்துல ஒரு அந்தஸ்து இருக்கு. என் வீடு உங்களுக்கு சரிப்பட்டு வராது. அதனால தான் உங்க அப்பா என்னை இங்க வர வெச்சுட்டார். அவர் பொண்ணு சமூகத்துல ஒரு அந்தஸ்தோட பார்க்கணும். அதுக்கு உங்களுக்கு ஒரு புருஷன் வேணும் , அதுக்காக தானே ரெண்டாந்தாரமா என்னை அதுவும், உங்ககிட்டே வேலை பார்த்த என்னை உங்களுக்கு கல்யாணம் செய்து வெச்சிருக்கார்.” என்றவன் அதற்கு அவள் பதிலை எதிர்பார்க்கத்தவன் “இதுல நேத்து உங்களை செக் அப் செய்த டாக்டரோட நம்பர் இருக்கு , அவரை போய் பார்க்குறதும் , பாக்காதவாங்க உங்க விருப்பம் ” என்று பாத்ரூம் நுழைந்து கொண்டான்.
நிலாவினிக்கு அவன் வார்த்தைகள் குத்தி கிழித்தது போல இருந்தது. அவன் பேசிய விதமும், வார்த்தைகளும் அவளை நிலை குழைய வைத்தன.
அப்படியே தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
குளித்துவிட்டு வந்த வளவன் இன்னமும் நிலாவினி அங்கேயே அமர்ந்து இருப்பதை பார்த்தான். அவளிடம் தான் அதிகம் பேசிவிட்டோமோ , அவள் அப்பா செய்த காரியத்துக்கு இவளை தண்டித்து என்ன ஆகப்போகிறது என்று தோன்ற அவனாகவே அவளிடம் வந்தவன். “மேடம் சாரி, நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல , நீங்க என்கிட்டே பேசின விதத்தையும், ஹாஸ்பிடல் வரமாட்டேன்னு சொன்னதும் கொஞ்சம் கோபம் வந்திருச்சு. அதான் யோசிக்காம பேசிட்டேன்” என்று சொல்லி முடித்தான்.
“வளவன் நான் ஒன்னு மட்டும் கேட்கட்டுமா உங்ககிட்ட ” என்று ஒருவித எதிர்பார்ப்போடு அவனை பார்த்தாள்.
“ம்ம்ம் சொல்லுங்க” என்றான்.
“நிஜமாவே என்னை பிடிச்சு நீங்க கல்யாணம் செய்துக்கலையா?” என்றாள்.
அதற்கு பதில் சொல்லாமல் வளவன் அவளையே பார்க்க… எழுந்து அவனிடம் வந்தவள் “எனக்கு இது ரெண்டாவது கல்யாணம் தான் வளவன் . அப்போ நான் எவ்ளோ யோசிச்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பேன்னு என் பக்கம் இருக்க நியாயத்தையும் நீங்க புரிஞ்சுக்கோங்க. அப்படி நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு ஒரே காரணம் நீங்க தான் வளவன்” என்று அவன் கண்களை ஏறிட்டாள்.
அவனோ அவள் பேசியதில் ஆச்சர்யமாக அவளை பார்க்க..
“ஆமா வளவன், உங்களை எனக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும் . உங்க குணம் பொறுமை உங்க அமைதி இது எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது, அதனால தான் என் அப்பா எனக்கும், உங்களுக்கும் கல்யாணம்னு சொன்னதும் யோசிக்காம சரின்னு சொன்னேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு வளவன் அதனால தான் இந்த கல்யாணத்தையே நான் பண்ணிக்கிட்டேன். நீங்க என்கிட்டே உரிமையா பேசணும் பழகணும் , என்கிட்டே சகஜமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். ஆனா இந்த ரெண்டு நாளில் நீங்க என்கிட்டே நடந்துகிறது எனக்கே புரியாம இருக்கு” என்று அவனை பார்த்தாள்.
தன்னை பிடிக்கும் என்று நேரடியாக நிலா சொன்னது வளவனால் நம்ப முடியவில்லை. அவளையே ஆழமாக பார்த்துக்கொண்டிருந்தான் .
“நான் மயங்கி விழுந்ததும் பதறினீங்க, என் பேரை சில சமயம் உரிமையா கூபிடறிங்க, ஹோச்பிடல்ல நான் வஜ்ரவேல்கிட்டே பிரெண்ட்லியா பேசினதை கூட உங்களால் தாங்கிக்க முடியல. சரி என் மேல உங்களுக்கு பொசெசிவ் இருக்குனு நான் நினைக்குற அப்போ , என்கிட்டே யாரோ மாதிரி பேசுறீங்க , இப்போ சொல்லுங்க நீங்க ஹாஸ்பிடல் போலாம் வான்னு எந்த அக்கரையில் கேக்குறீங்கன்னு தெரியாம நான் எப்படி உங்க கூட வரது ” என்று மனதில் இருந்தது மொத்தமும் கேட்டு முடித்திருந்தாள் .
அவள் சொன்னது எதுவும் தப்பில்லை. யாரோ மேல் இருக்கும் கோபத்தை இவள் மீது காட்டுவதில் என்ன லாபம் என்று அவனுக்கு தோன்றியது.
இவ்வளவு பேசியும் இன்னமும் பதில் சொல்லாமல் நின்றவனை அழுந்த பார்த்தவள் “நான் ஈவினிங் நீங்க சொன்ன டாக்டர பார்க்க போறேன்.” என்றவள் “நான் இவ்ளோ பேசினத்துக்காக நீங்க என்கிட்டே உரிமை எடுத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. அது நான் சொல்லியும் வரக்கூடாது . உங்களுக்கா தோணனும்” என்று உடை மாற்ற சென்று விட்டால்.
வளவனுக்கு தான் இப்போது தர்ம சங்கடமாக இருந்தது. தேவை இல்லாமல் நிலாவை காயப்படுத்தி விட்டோமோ என்று அவனுக்கு தோன்றியது.
ஆஃபீஸிற்கு ரெடியாகி வந்தவள் ” இன்னிக்கு ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு உங்களுக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்குறேன் . நான் கிளம்பறேன் வளவன் , நீங்க ஹாஸ்பிடல் போய் அத்தையை பார்த்துட்டு ஆபீஸ் வந்திருங்க ” என்று அங்கிருந்து நகர.
“நிலா ஒரு நிமிஷம் ” என்று அவன் குரலில் அபப்டியே நின்றாள்.
அவளிடம் நெருங்கி வந்தவன். வந்தவன் அவள் விழிகளை நேருக்கு நேராக ஏறிட்டு “என்னை மன்னிச்சிரு, உன் அப்பா மேல இருக்க கோபத்தை நான் உன்கிட்டே காட்டியிருக்கக் கூடாது” என்று மட்டும் சொன்னான் .
தன்னை மேடம் என்று சொல்லாமல் நிலா என்று அழைத்ததே அவளுக்கு சற்று நிம்மதியை கொடுத்திருக்க.. “ம்ம்ம் .. தட்ஸ் ஓகே ” என்று கிளம்பிவிட்டாள்.
சொன்னது போலவே ஹாஸ்பிடல் சென்றவன் விஜியை பார்த்துவிட்டு மீட்டிங்கிற்கு நேரமே வந்திருந்தான். அவன் தான் இந்த மீட்டிங்கிற்கான அர்ரேனேஜ்மெண்ட் எல்லாம் செய்திருக்கிறான் , அதை சரிபார்க்க வந்தான்.
அவன் உள்ளே நுழைந்ததும் “ஹே! மச்சி ! வாடா புது மாப்பிள்ளை. ‘ என்று அவனை வரவேற்று இருந்தான் வளவனின் நண்பன் அருண்.
“டேய் சும்மா இருடா ” என்று தன் கேபினுக்கு வந்தவன். மீட்டிங்கிற்கு வேண்டிய பைல்ஸ்களை எடுத்துக்கொண்டு இருந்தான்.
“ஹேய்! இரு டா வந்ததும் என்ன வேலை செய்ய ஆரம்பிச்சுட்ட.. ” என்று அவன் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து வந்தவன். சுற்றிலும் யாரும் இருக்காங்களா என்று பார்க்க ஒருவரும் அங்கில்லை என்று உறுதி செய்தவன் “என்ன டா மச்சி , பஸ்ட் நைட் எல்லாம் முடிஞ்சிருச்சா. மேடம் எப்படி உனக்கு அடங்கி போனாங்களா? இல்ல அங்கையும் அவங்க தான் ..” என்று அவனை நக்கலாக பார்க்க..
“அருண்.. என்ன பேச்சு டா இது” என்று அங்கிருந்து செல்லபோனான் வளவன்.
“டேய் இரு டா.” என்று அவனை இழுத்து நிறுத்தியவன் “சொல்லு டா கேக்குறேன் இல்ல.,”என்றான் அருண்.
ஒரு பெருமூச்சை எடுத்தவன் “எங்களுக்குள்ள எதுவும் நடக்கல டா. எனக்கு இந்த கல்யாணமே பிடிக்கல. அதனால நான் மேடம்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கேன்” என்றான்,
“டேய் என்ன டா சொல்ற?? அறிவிருக்கா டா உனக்கு. கல்யாணம் பிடிக்கலையின்னா வேணாம்னு சொல்லிருக்க வேண்டியது தானே. தேவை இல்லாம ஏற்கனவே முதல் கல்யாணத்துல அடிபட்டவங்களை கல்யாணம் செய்துட்டு , இப்படி நீயும் கஷ்டப்படுத்திருக்க.. என்ன டா நீ “என்றான் அருண்.
அவன் சொல்வதை புரியாமல் கேட்டான் வளவன்.
அவன் பார்வையிலேயே அதை புரிந்து கொண்ட அருண் “அவங்க பஸ்ட் மேரேஜ் நல்லா இல்ல, அவங்க எக்ஸ் ஹஸ்பண்ட் நிலா மேடமை பிஸிகளாவும் , மென்டலாவும் டார்ச்சர் பண்ணிருக்கான். எனக்கு இது மட்டும் தான் தெரியும். அதனாலேயே செகண்ட் மேரேஜ் வேணாம்னு சொல்லிருக்காங்க, இவ்ளோ வருசமா வேணாம்னு சொன்னவங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னத கேட்டு எனக்கு ஆச்சர்யம் தான் . நீ என்ன டான்ன பிடிக்கல, ஒதுங்கி இருக்கேன்னு சொல்ற” என்று அவனை எரிச்சலாக பார்த்தவன் “என்னவோ போ ..” என்று அங்கிருந்து அருண் கிளம்பி விட..
அவன் சொன்னது கேட்டு அதிர்ந்த வளவன் பார்வை நேராக கேபினுக்குள் இருந்த நிலாவை தான் பார்த்தது.
உள்ளே மீட்டிங்கிற்காக அவளும் பைல்களை தீவிரமாக புரட்டிக்கொண்டிருக்க.. அவள் முகத்தை ஏறிட்டான். அதில் ஏதோ ஒரு சோகம், ஏக்கம் குடிகொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தான்.
தான் அவளை ஒதுக்கி வைத்து தப்பு செய்துவிட்டோமோ என்று தோன்றியது அவனுக்கு
