வன்முத்தம் 12
“என்ன டா பேய் அறைஞ்ச மாதிரி இருக்க” என்று நிலாவினியை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து உறைந்து போய் அமர்ந்து இருந்த வேலவனின் தோளை குலுக்கினான் அருண்.
அவனை நிமிர்ந்து பார்த்த வளவன் “ஆஹ் என்னடா கேட்ட..” என்றான் .
“சரியா போயிருச்சு போ, உள்ள மேடமை பார்க்க போனியே அங்க வெச்சு உன்னக்குகிஸ் ஏதும் கொடுத்துட்டாங்களா? என்ன?” என்று கண்ணடித்தான்.
“ம்ஹும்.. இல்ல.. “என்று தலையை ஆட்டினான் வளவன்.
“பின்ன ஏன் டா இப்படி இருக்க “
“இல்ல டா எனக்கு ப்ரோமோஷன் குடுத்தாங்க இல்ல… “
“ஆமா”
“நான் மேடமை பார்த்து பேச கேபினுக்கு போனேன்”
“சரி…”
“அவங்க எனக்கு ரெண்டு கிப்ட் கொடுத்தாங்க”
“பார்ரா! ஆமா பொதுவாவே நம்ம ஆபீஸ் ஹையர் ரேங்க் பொசிசன் வந்தாலே கிப்ட் கொடுக்குறது வழக்கம் தானே, அதுவும் அவங்களுக்கு என்ன தேவை இருக்கோ அதை பார்த்து செஞ்சு கொடுக்க நம்ம ஆபிஸை மிஞ்ச ஆளே இல்ல ” என்ற அருண் “நீ வேற மேடமோட புருஷன் ஆகிட்ட.. உனக்கு ஸ்பெஷலா தான் பரிசு கிடைச்சிருக்கும் என்னடா கிப்ட் கொடுத்தாங்க, நீ வேற முத்தமும் இல்லேன்னு சொல்லிட்டே..” என்று வளவனை ஆர்வமாக பார்த்தான்.
“ஒரு பிராண்ட் நியூ கார், அப்பறோம் ஒரு வீடு”
“அடிசக்க.. அடிச்சது ஜாக்பாட் உனக்கு தான் டா. என்ன கார்? எங்க வீடு?”
“இது தான் கார் ” என்று தன் பாக்கெட்டில் இருந்த ரிமோட் கீயை அருணிடம் கொடுத்தான்.
“டேய் வளவா! செம்ம போ.. இது இப்போ மார்க்கெட்ல புதுசா லான்ச் பண்ணிருக்க கார் ஆச்சே” என்று அந்த ரிமோட் கீயை ஆசையாக வாங்கி பார்த்தவன் “இதுக்கு தான் ஷாக்கா?” என்றான்.
“ம்ஹும் இல்லாத டா , எனக்கு கிப்ட்ஸ் வேணாம்னு சொன்னேன். அவங்க இன்சிஸ்ட் பண்ணினாங்க”
“ஏண்டா வேணாம்னு சொன்ன “
“உனக்கே தெரியும் எனக்கு இந்த ப்ரோமோஷன் கிடைச்சதுக்கே இங்க எவ்ளோ பெரு என் மேல கண்டுல இருப்பாங்கன்னு , இதுல கார் , வீடெல்லாம் கொடுத்தது தெரிஞ்சா அவ்ளோ தான்” என்றான் வளவன்.
“அவனுங்க கிடக்குறானுங்க மயிராண்டிங்க.. நீ விடு டா… சரி சொல்லு இப்போ எதுக்கு மேடம் பாத்துட்டு வந்து ஷாக்கா உக்கார்ந்திருந்த”
“அவங்க இன்சிஸ்ட் பண்ணினதுனால எனக்கு கார் மட்டும் போதும் வீடு வேணாம்னு அந்த கீயை அவங்க கிட்டே கொடுத்தேன் , அதற்கு அவங்க நான் இந்த வீட்டு சாவியை வாங்கிக்கனும்னா அவங்க ஆசைப்படறதை செய்யணும்னு சொன்னாங்க “
“டேய் நிறுத்து , நானும் அப்போ இருந்து பாத்துட்டு இருக்கேன். மேடம்னு சொல்ற, அவங்க இவங்கன்னு சொல்ற.. அவங்களுக்கு நாங்க மரியாதையை கொடுக்கலாம். நீ அவங்க புருஷன் தானே சும்மா பேர் சொல்லி பேசுடா” என்றான் அருண்.
சரி என்று தலையாட்டியவன் “நிலா அந்த வீடு சாவியை வாங்கிக்கனும்னா அவளை என்னோட பைக்ல வெச்சு வீக்லி ஒன்ஸ் லோங் டிரைவ் கூட்டிட்டு போகணும்னு சொன்னா..” என்று நிறுத்தினான்.
“டேய் இதுக்கு என்ன ஷாக் உனக்கு. எல்லா பொண்டாட்டியும் புருஷன் கூட லாங் டிரைவ் போகணும்னு நினைக்குறது நியாயம் தானே..”
“ம்ம்ம் ஆமா, ஆனா ” என்று வளவன் நிறுத்த.
“டேய் என்னை ரொம்ப டென்ஷன் பண்ற ஒழுங்கா என்னனு இப்போ சொல்லப் போறியா? இல்ல நானே மேடம்கிட்ட போய் கேக்கட்டுமா?” என்று இருக்கையை விட்டு எழுந்தான் அருண்.
“டேய் சும்மா இருடா ” என்று அவன் கையை பற்றி தன் அருகே அமரவைத்துவிட்டு சுற்றிலும் யாரும் இருக்கிறீரர்களா?” என்று பார்த்தவன் “நான் அவ கூட ஹனிமூன் வரணும்னு சொன்னா டா” என்றான்.
அதை கேட்டு சத்தமாக சிரித்தவன் “டேய் .. டேய்.. முடியல டா. கல்யாணம் ஆன புதுசுல பொண்டாட்டியே வந்து புருஷன்கிட்ட ஹானிமூன் போகணும்னு கேக்குற அளவுக்கு நீ வெச்சிருக்க ” என்று அவன் மீண்டும் சிரிக்க..
அவனை முறைத்த வளவன் “உன்கிட்டே போய் சொன்னேன் பாரு ” என்றவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
மாலையும் வந்தது நிலா தன் கேபினில் இருந்து வெளியே வந்தவள் நேராக வளவனின் கேபினுக்கு தான் சென்றாள்.
வேளையில் மும்முரமாக இருந்தவன் அவளை கவனிக்கவில்லை
“மே ஐ கம் இன் சார்” என்று சிரித்துக்கொண்டே அவள் குரல் வர..
வேலை மும்முரத்தில் அவள் குரலை அறியாதவன் “கம் இன் “என்று சொல்லிவிட்டு அதன் பின் தான் அவள் குரலை கண்டுகொண்டதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.
“முடிச்சாச்சா வளவன்” என்றாள் சிரித்துக்கொண்டே.
அவள் சிரிப்பில் அத்தனை அந்நியோன்யம், அது அவனுக்கே ஆச்சர்யம் தான் “இன்னும் ஒரு 10 மினிட்ஸ் ஆகும் நிலா” என்றான்.
அவன் நிலா என்று அழைத்ததும் அதில் அவள் இதழ்கள் மேலும் விரிய அவனை பார்த்து “நல்ல இருக்கு” என்றாள்.
அவனோ புரியாமல் பார்க்க..
“நிலான்னு நீங்க என்னை உரிமையா கூப்பிட்டது”
“இல்ல நான் ஏதோ நியாபத்துல ” என்றான்.
“இனி மேடம்னு சொல்லாம நிலான்னே என்னை கூப்பிடுங்க” என்று கட்டளையாக சொன்னாள்.
அவனும் வேறு வழி இன்று சரி என்று சம்மதமாக தலையை ஆடியவன் அவள் இங்கேயே நின்று இருப்பதை பார்த்துவிட்டு “நிலா எதுவும் சொல்லனுமா என்கிட்டே” என்றான்.
“ம்ஹும்.. இல்லையே ” என்றவள் “அத்தையை பார்க்க ஹாஸ்பிடல் போகணும் அப்பறோம் உங்க காரை எல்லாருக்கும் கொண்டு காட்ட வேணாமா?” என்றாள்.
அவனோ அமைதியாக இருக்க
“நீங்க ஒர்க் முடிச்சிட்டு வாங்க நான் இங்கையே வெய்ட் பண்றேன் ” என்று அவன் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“ஹாஸ்பிடல் நீங்க வந்தே ஆகணுமா நிலா”
“நீங்க இல்ல நீன்னே சொல்லுங்க வளவன்” என்று திருத்தியவள் “ஹும்.. ஆமா ஏன்?” என்றாள்.
“இல்ல உங்களுக்கு..” என்று பேச வந்தவன் அவள் அழுத்தமான பார்வையை கண்டு “உனக்கு ஹாஸ்பிடல் வாடையே ஆகாதே அங்க வந்தா மறுபடியும் எதுவும் மயக்கம் போட்டு விழுந்துட்டா என்ன பண்றது அதான்” என்று அவள் மீதிருந்த அக்கரையில் கேட்டாள்.
“ஹும்.. நீ வா போன்னு உரிமையா பேச வைக்க எவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கு ” என்று நினைத்துக் கொண்டவள் “தேங்க்ஸ் வளவன் எனக்காக யோசிச்சதுக்கு ” என்று சிரித்தவள் “நீங்க கொடுத்த டேப்ளெட்ஸ் என் ஹாண்ட் பேக்ல தான் இருக்கு. அதை போட்டுக்கிறேன்” என்றாள்.
அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை. தன் வேளைகளில் மூழ்கியவன் அவள் அவனுக்காக காத்திருக்கிறாள் என்று அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு அவனுடைய புது காரில் அவளோடு முதல் முறை பயணம் செய்தான்.
“ஹேய் வெற்றி எப்போ டா ஹாஸ்பிடல் வருவ உனக்காக நான் இங்க வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் ” என்று வெற்றிக்கு வாட்ஸாப்பில் மெஸேஜ் தட்டிக்கொண்டு இருந்தாள் தாரா.
ஹாஸ்பிடல் செல்வதற்க்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தவன் மெசேஜ் சத்தம் கேட்டு போனை எடுத்து பார்த்தவன் “ஐயோ! ஹாஸ்பிடல்ல இருக்காளா இவ, அங்க போனா இவ சும்மா இருக்க மாட்டாளே ” என்று யோசித்தவன் ஹாஸ்பிடல் போகலாமா? வேண்டாமா?” என்று யோசித்துக்கொண்டிருக்க அவன் மொபைல் அடித்தது.
தாரா தான் அழைத்திருப்பாளோ என்று நினைத்தவன் எடுத்து பார்க்க உமையாள் தான் அழைத்து இருந்தாள். அட்டென்ட் செய்து காட்டில் வைத்தவன் “சொல்லு அம்மு” என்றான்.
“அண்ணா வரும்போது அப்டியே டீயும் கொஞ்சம் பிரோட்ஸும் வாங்கிட்டு வா. இங்க அண்ணியோட அப்பா, அம்மா வந்திருக்காங்க அவங்களுக்கு கொடுக்க எதுவும் இல்ல. நானா வாங்க போறேன்னு சொன்னா அவங்க என்னை விட மாட்டேங்குறாங்க, நானே அவங்ககிட்டே தண்ணி பிடிக்க போறேன்னு பொய் சொல்லிட்டு வெளிய வந்து உனக்கு கால் பண்ணினேன் ” என்றாள்.
“சரி அம்மு நான் வாங்கிட்டு வரேன் ” என்று போனை வைத்தவன் “இன்னிக்கு இவளை சமாளிச்சு தான் ஆகணும்” என்று வண்டியை கிளம்பினான் வெற்றி.
இங்கே போன் பேசிவிட்டு தண்ணீர் பிடிக்கும் இடத்திற்கு சென்றாள் உமையாள். அங்கே அவள் செல்லும் வழியில் வஜ்ரவேல் நின்று தன் சக டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“இவனா? “என்ற ரீதியில் உமையாள் அவனை பார்க்க.
அதை வஜ்ரவேலுவும் பார்த்து இருந்தான்.
அவனை பார்க்கத்தவள் போல அவனை தாண்டி சென்று தண்ணீர் பிடிக்க போனாள்.
“ஷ் அப்பா அவன் பார்வையே சரி இல்ல, அப்படியே விழுங்கிற போல பாக்குறான் ராஸ்கல்” என்று திட்டிக்கொண்டே தண்ணீர் பிடித்துவிட்டு திரும்பியவள் அவளுக்கு மிக அருகில் நின்று இருந்த வஜ்ரவேல்
“என் பார்வையே அப்படித் தான் அம்மு, நான் என்ன செய்றது ” என்றான்.
“இந்த அம்மு கிம்முனு என்னை கூப்பிட்ற வேலை எல்லாம் வேணாம் சார் ” என்றாள்.
“ஏன் அம்மு அப்படி சொல்ற உன் வீட்ல அப்படி தானே உன்னை கூப்பிட்றாங்க” என்றான்.
“என் வீட்டு ஆளுங்களும் நீங்களும் ஒன்னா” என்று அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து அவள் நகர..
அவனும் அவளுடன் நடந்துகொண்டே “சரி தான் அவங்களும் , நானும் ஒன்னா நான் கொஞ்சம் ஸ்பெசல் இல்ல உனக்கு “என்றவன் “சரி அப்போ நான் உன்னை தக்காளின்னு கூப்பிடறேன்” என்றான்.
சட்டென நின்று அவனை திரும்பி முறைத்தவள் “சார் இங்க பாருங்க, நீங்க யாரு எனக்கு எதுக்காக இப்படி எல்லாம் பேசுறீங்க , என் அம்மாவை இங்க அட்மிட் பண்ணிருக்கு. நீங்க அவங்களை பார்த்துக்கிற டாக்டர் அவளோ தான். அதுக்காக என்கிட்டே இப்படி தேவை இல்லாம எதுவும் பேசாதீங்க” என்று விறுவிறுவென அவள் நடக்க..
“என்ன தக்காளி இப்படி சட்டுனு என்னை பிரிச்சு பேசிட்டே.. “என்று அவள் பின்னே செல்ல..
வஜ்ரவேல் பேசியதை காதிலே வாங்காமல் நடந்து கொண்டிருந்தவள் முன்பு “சர்ப்ரைஸ்!..”என்று அவர்கள் வந்த காரிடாரில் மறைந்து நின்று இருந்த அந்த இளைஞன் உமையாளின் முன் வந்து நிற்க..
அவனை பார்த்ததும் இறுகி இருந்த அவள் முகம் பிரகாசமாகி “ஹேய்! ரவி இங்க என்ன டா பண்ணிட்டு இருக்க” என்று அவள் சிரித்த முகமாக பேச.
“ஹாப்பி வேலண்டைன்ஸ் டே ” என்று அவள் கையில் ஒரு ரெட் ரோசை கொடுத்து அவள் கன்னத்தில் பச்சக் என்று முத்தமும் வைத்துவிட..
அதை கண்ட வஜ்ரனோ அதிர்ந்து நின்றான்.
