Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 14

வல்லவனின் வன்முத்தம் 14

by Layas Tamil Novel
54 views

வன்முத்தம்  14

“ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க முதல்ல உங்களுக்கு தான் ஆரத்தி சுத்தி போடணும்” என்று விஜயலட்சுமி சொல்ல..

அவரை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்திருந்த நிலாவும், வளவனும் வாசலிலேயே நிற்க.. உமையாள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தாள்.

“அம்மா, எங்களுக்கு எதுக்கு இதெல்லாம் . உங்களுக்கு தான் ஆபரேஷன் பண்ணிருக்கு. நீங்க வாங்க ” என்றான் வளவன்.

“டேய்! நீ கல்யாணம் ஆனதுக்கு அப்பறோம் இப்போ தான் என் மருமகளோட இந்த வீட்டுக்கு வந்திருக்க.. உங்களுக்கு தான் முதல்ல ஆரத்தி எடுக்கணும். நீ பேசாம நில்லு டா” என்று அவனை அதட்டினார்.

“அத்தை நீங்களும் வந்து நில்லுங்க மூணு பேருக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்கட்டும்” என்று விஜியிடம் வந்த நிலா அவரை மெல்ல கை பிடித்து அழைத்து வந்து இருவருக்கும் நடுவில் நிறுத்தினாள்.

“நீங்க நில்லுங்க முதல்ல ” என்று இருவரையும் பிடித்து இழுத்து இழுத்து விட இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு சென்றனர் வளவன் திரும்பி நிலாவையும் நிலா வளவனையும்  ஏறிட..

இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொண்டது. 

இருவரும் அப்படியே நின்று இருக்க…

அவர்கள் முன் ஆரத்தி தட்டுடன் வந்து நின்ற உமையாள் “ம்க்கும்..” என்று கணைத்தாள்.

அவள் குரலில் சட்டென இருவரும் திரும்பியவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திரும்பிவிட்டனர்.

 அவர்கள் இருவருக்கும் உமையாள் ஆரத்தி எடுத்து முடிக்க.

 “உமையாள் வெயிட் வெயிட் வெயிட் ஒரு நிமிஷம் நில்லு “என்று ஆர்த்தி கீழே ஊற்ற சென்றுவளிடம் வந்த நிலாவினி. அவளிடம் ஆரத்தி தட்டை வாங்கி  விஜயலட்சுமியை வந்து நிற்கச் சொல்லி அவருக்கு தன் கையாலேயே ஆரத்தி எடுத்தாள்.

பிறகு மூவரும் ஒன்றாக வீட்டினுள் நுழைந்தார்கள். திருமணத்திற்கு பின் இது தான் நிலாவினி வளவனின் வீட்டிற்குள் முதல் முறை வருகிறாள்.

அதற்கு முன் எப்போதாவது அவர்கள் வீட்டிற்கு வருவாள் அதுவும் அவள் அம்மாவுடனோ, அல்லது தாரா இங்கு தனியே விளையாட வரும்போதோ அவளுடன் துணைக்கு வந்திருக்கிறாள்.

இன்று அவர்கள் வீட்டில் மருமகளாக காலடி எடுத்து வைக்கிறாள் அவள்.

விஜயலட்சுமியை அவர் ரூமில் கொண்டு படுக்க வைத்தான் வளவன்.

வெற்றியோ ஹாஸ்பிடலில் இருந்து கொண்டு வந்த பொருட்களை உள்ளே எடுத்து வந்து வைத்தான்.

உமையாள் கிச்சனில் டீ வைக்கப்போக.. ஹாலில் நிலாவினி மட்டும் தனித்து இருந்தாள். மெல்ல இருந்த இடத்தில இருந்து அந்த இடத்தை சுற்றி பார்த்தாள். அப்போதைய பழமையான வீடு மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்தது. உள்ளேயே தூண்கள் வைத்து சுற்றிலும் நிறைய ஜன்னல்கள் ஆங்காங்கே மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்களும் இருந்தது.

அதை அருகில் சென்று ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே நடந்தாள்.

வளவன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் , பின் குடும்பத்தோடு எடுத்துக்கொண்டது. வெற்றி, உமையாளுடன் விளையாடுகையில் எடுத்தது என்று அவர்களுடைய சிறு வயது தருணங்களை அழகாக புகைப்படமாக எடுத்து மாட்டி இருந்தனர்.

அதில் இடையே ஒரு புகைப்படம் இருந்தது அதை உற்று நோக்கியவள் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது. அதில் வளவன் அமர்ந்து இருக்க அவன் மடியில் அவன் வயதை ஒத்த ஒரு சிறு பெண்  அமர்ந்து இருந்தாள், அவளிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பது போலவும், கையில் உணவை அவளுக்கு ஊட்ட முயற்சித்தது போலவும் அந்த புகைப்படம் இருக்க. அந்த பெண்ணோ அழுதுகொண்டு இருந்தாள்.

அந்த பெண்ணை மேலும் நெருங்கி பார்த்தவளுக்கு ஆச்சர்யமாகிப்போனது. “அந்த குழந்தையே நான் தான் .. ” என்ற ரீதியில் அவன் மடியில் அமர்ந்து ங்கே என்று அழுது கொண்டிருந்தது சாட்சாத் நம்ம நிலாவினி தான்.

“ஹா!”என்று அவள் அந்த புகைப்படத்தையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டு இருக்க..

“ம்கூம்.. என்ன பாத்துட்டு இருக்க நிலா “என்று அவள் அருகில் வந்தான் வளவன்.

“வளவன் இது நீங்கன்னு தெரியும் , இது.. இது நான் தானே.. ” என்றாள்.

“ஏன் உன்னையே உனக்கு அடையாளம் தெரியலையா?” என்றான்.

“இல்ல தெரியாம இல்ல , அது நான் தான்னு எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா உண்மையாவே நானா உங்க மடியில் உக்காந்திருக்கேன் .இது எப்போ எங்கேன்னு எனக்கு நியாபகம் இல்லையே” என்றாள். அவனிடம் பேசினாலும் அவள் பார்வை முழுதும் அந்த போட்டோவில் இருக்கும் தன் மீதே படிந்து இருந்தது.

அவளையே பார்த்திருந்தான் வளவன் “உன் வீட்ல அம்மாவும், அப்பாவும் உன்னையும் , தாராவையும் இங்க கொண்டு வந்து விட்டுட்டு வெளிய போயிருந்தாங்க. அவங்க நைட் வர ரொம்ப லேட்டாகிருச்சு. அவங்களை காணோம்னு நீ அழ ஆரம்பிச்சுட்ட. சாப்பிடவும் இல்ல. உன் அப்பா போன கார் பாதியில நின்னு போயிருச்சு, அதை சரி செஞ்சுட்டு வர வரைக்கும் உங்க ரெண்டு பேரையும் பாத்துக்க சொல்லி என் அப்பாவுக்கு உன் அப்பா கால் பண்ணி சொல்லிட்டாரு. தாரா சின்ன பொண்ணு அவள சீக்கிரமே சாப்பிட வெச்சு என் அம்மா தூங்க வெச்சுட்டாங்க, நீ தான் ரொம்ப அடம் பண்ணின” என்றான்.

“சரி அழுதேன், அடம் பிடிச்சேன் ஓகே, ஆனா உங்க மடியில நான் ” என்று அவள் திரும்பி வளவனை பார்க்க.

“உனக்கு எதுவுமே நியாபகம் இல்லையா?” என்றான்.

“ம்ஹும்… இல்ல” என்று உதடு பிதுக்கினாள் நிலா.

அவள் சிவந்த இதழ்களில் அவன் பார்வை படிய.. அதில் இருந்து மீண்டு கஷ்டப்பட்டு அவள் கண்களை ஏறிட்டவன். ” நீ பிடிவாதம் பண்ணிட்டே இருந்த , என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் சமாதானம் செய்து பார்த்தாங்க ஆனா நீ அவங்க பேச்சை கேக்கவே இல்ல. அப்போ உன்ன சொல் பேச்சு கேக்க வைக்க என்னால தான் முடியும் . என்னை பார்த்தா நீ கொஞ்சம் பயப்படுவ. உன்னை கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்ய முடியாம அவங்க திணறின அப்போ நான் உன்னை அதட்டி மிரட்டி என் மடியில் உக்கார வெச்சு ஊட்டினேன். அப்போ என் அப்பா தான் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு போட்டோ எடுத்தார்” என்றான்.

“என்னை மிரட்டுனிங்களா வளவன், எனக்கு என்னவோ இந்த போட்டோவை பார்த்தா என் அம்மா, அப்பாவைக் காணோம்னு நான் அழுத மாதிரி தெரியல. நீங்க தான் என்னை அழவெச்ச மாதிரி தெரியுது” என்று அவனை சந்தேகமாக பார்த்தாள்.

அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் வளவன் அங்கிருந்து செல்ல..

“என்ன வளவன் சொல்லுங்க நான் சொன்னது தானே சரி” என்றாள்.

வளவனோ எந்த பதிலும் பேசவில்லை. அவன் அவள் கேள்வியை தவிர்த்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றான். அவளும் அவனை கேட்டுக்கொண்டே பின்னால் செல்ல.. அவள் நடந்த வேகத்தில் புடவை  தடுக்கி வளவன் மீதே விழப்போனாள் நிலாவினி .

“ஹா! ஐயோ! ” என்று அவள் அலறிக்கொண்டு கீழே விழ..

வளவனோ திரும்பி பார்த்தான். அவள் தன் மீது விழ வருவதை பார்த்ததும் வேகமாக வந்து அவளை இடையோடு சேர்த்து கீழே விழாமல் பிடித்து இருந்தான்.

அவன் கைக்குள் கீழே விழவில்லை என்று பெருமூச்சோடு அவளை நிமிர்ந்து பார்க்க.. இருவரின் முகமும் முத்தமிடும் தூரத்தில் நெருங்கி இருந்தது. இருவரின் சுவாசமும் இருவரின் நுரையீரலில் இடம் மாறியது. சட்டென நிலாவினி சுதாரித்துக்கொண்டு அவனை பார்த்தவள் “தேங்க்ஸ் வளவன், என் சேலை தட்டிருச்சு” என்று அவள் சொல்லிக் கொண்டே அவள் எழ..

அவளை நிமிர்த்தி விட்ட வளவன் இன்னமும் அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளும் எழுந்து நின்றவள் அங்கிருந்து செல்வதற்காக மீண்டும் காலை எடுத்து வைக்க.. சேலை அவள் காலுக்கு கீழே மீண்டும் மாட்டிக்கொண்டு தடுக்கி அவன் மீதே விழுந்தாள்.

அவளை மீண்டும் பிடித்துக்கொண்டவன் “கவனமா இரு நிலா”என்றவன் அவள் இடையில் இருந்து கையை எடுத்துக்கொண்டான்.

“சாரி வளவன் ” என்றவள் தன் காலுக்கு கீழே இருந்த புடவையை அப்போது தான் குனிந்து பார்த்தாள்.

அது அவள் மிதித்ததில் முன் கொசுவம் முழுதும் கழண்டு இருந்ததை அப்போது தான் பார்த்தாள். வளவனும் அதை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை சேலையில் இல்லை. அவள் பள்ளமான வயிற்றில் உயிர் சுழியில் மாட்டி இருந்த வளையத்தில் நிலைத்து இருந்தது.

அதையே அவன் விடாமல் பார்க்க..

அப்போது நிலாவினியும் அவன் பார்வை சென்ற இடத்தை கண்டு கொண்டாள். உடனே சேலையை இழுத்து மேலே கட்டப் போக.

அப்போது “சிபி ” என்று குரல் கொடுத்தப்படி வெற்றி அங்கு வர..

“ஹையோ! வெற்றி இங்க ஏன் வரார்” என்று பதறியவள் அவசரமாக சேலையை தூக்கி சொருக முயல.. இடையில் சுற்றி இருந்த சேலை மடிப்புகள் களைந்து இருக்க.. அவளால் சரியாக சேலையை கட்ட முடியவில்லை. ஒரு பக்கம் வளவன் பார்க்கிறானே  என்று வெட்கத்தில் மறைக்க முயல.. மறுபக்கம் வெற்றி வந்து தன்னை இந்த கோலத்தில் பார்த்துவிடுவானோ என்ற பதட்டமும் அவளை சேர்ந்து கொள்ள..

நிலாவினியின் கண்களில் இப்பொது கண்ணீரே வந்துவிட்டது பதட்டத்தில்.

அவளிடம் வந்த வளவன் அவள் கையில் இருந்த சேலையை வாங்கியவன் “நிலா ரிலாக்ஸ்” என்றவன் அந்த சேலையை சுருட்டி அவள் கையில் நீட்டி பிடிக்க செய்தவன் வெற்றி அங்கு வருவதை பார்த்துவிட்டு அவளை அப்படியே தூக்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றான் .

அங்கே வந்த வெற்றியோ இந்த காட்சியை கண்டுவிட்டு ” தப்பான நேரத்தில வந்துட்டேனே.. ” என்று வந்த வேகத்தில் திரும்பி அங்கிருந்து சென்றுவிட,

இங்கே அறைக்குள் வந்த வளவனோ நிலாவினியை கீழே இறக்கி விட மனமில்லாமல் அவளை கையில் ஏந்திய படியே நின்றிருந்தான்.

அவளும் அவன் விழிகளில் தொலைந்துவிட்டு அவன் கழுத்தை கட்டிக்கொண்திருந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured