Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 16

வல்லவனின் வன்முத்தம் 16

by Layas Tamil Novel
61 views

வன்முத்தம் 16

“நிலா! சீக்கிரம் கிளம்பு டி மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு இவ்ளோ மெதுவா சாப்பிட்டு இருக்க”என்று தேன்மொழி அவளுக்கு தட்டில் உணவை வைத்துக்கொண்டிருந்தார்.

“ம்மா.. இன்னும் 1 ஹௌர் இருக்கு ” என்றவள் அவள் அருகில் இருந்த வளவனை பார்த்தாள்.

அவன் தன் மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருக்க.. “வளவன் சாப்பிடும்போது ஏன் போன் யூஸ் பண்றிங்க, ரிலாக்ஸ்சா சாப்பாட்டை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுங்க” என்றாள்.

“ம்ம்ம்..” என்று மட்டும் சொன்னவன் போனை வைத்துவிட்டு சாப்பிட்டான்.

“ஹாய்! நான் சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கேன், ஆன்டி எனக்கும் பசிக்குது” என்று வயிற்றை தடவியபடி அங்கு வந்தான் வஜ்ரவேல்.

“இவனா? இவன் எதுக்கு இங்க வரான்” என்ற ரீதியில் வளவன் வஜ்ரனை பார்த்தான்.

“அடடே வாப்பா! வஜ்ரா ” என்று ஆறுமுகம் அவனை சிரித்தபடி வரவேற்றார்.

“வந்து உக்காரு வஜ்ரா” என்று அவனுக்கும் தட்டை எடுத்துவைத்து உணவை பரிமாறினார் தேன்மொழி,

நிலாவினிக்கு எதிரே அவனுக்கு தட்டை வைத்து உணவை அவர் பரிமாற…

“ஆன்டி நான் நிலா பக்கத்துல உக்காந்துகிறேன்” என்று அவள் அருகில் வந்தவன் எட்டி தட்டை எடுத்துக்கொண்டே வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

“ஏன் நிலாகிட்டே உக்கார்ந்தா தான் இவனுக்கு சாப்பாடு இறங்குமா?” என்று உள்ளுக்குள் இருந்த கடுப்பை காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் வளவன்.

“அப்பறோம் நிலா எப்படி போகுது லைப்” என்று இட்லியை பிட்டு வாயில் போட்டுக்கொண்டே கேட்டான்.

“ம்ம்ம்… செம்மையா போகுது” என்று சிரித்தவள் வளவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவன் வஜ்ரனையே முறைத்துக்கொண்டிருப்பதை கண்டவள் “ஹையோ! அன்னிக்கு ஹாஸ்பிடல்ல இவருக்கு ஹேண்ட் ஷேக் பண்ணினத்துக்கே என்கிட்டே கோபமா பேசினார். இப்போ இவன் வேற எதிர்ல வெச்ச தட்டை தூக்கிட்டு வந்து இங்க உக்காந்து சாப்பிடறானே” என்று யோசித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

“அப்பறோம் வளவன் நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா ஹெல்த் எப்படி இருக்கு?” என்றான்.

“ம்ம்ம் நல்லா இருக்காங்க” என்று மட்டும் சொன்னவன் சாப்பிட்டுவிட்டு கைகழுவ எழுந்தவன். “நிலா நான் வெய்ட் பண்றேன், சாப்பிட்டு வா..” என்று எழுந்து சென்றான்.

“ஆஹா! பொசெசிவ் கிங்குக்கு கோபம் வந்திருச்சு போலையே” என்று நினைத்தவள். வஜ்ரனை தவிர்க்க முடியாமல் அவனுடன் பேசினாள்.

“ஹேய்! நிலா, அப்பறோம் எனக்கு வளவனோட வீட்டு அட்ரெஸ் வேணும்” என்றான்.

“எதுக்கு டா.. ” என்றாள்.

“எதுக்கு கேப்பாங்க. அவங்க அம்மா எப்படி இருக்காங்கனு போய் பார்க்க தான்” என்று சமாளித்தான்.

“டேய்! உண்மையை சொல்லு , நிஜமாவே அவர் அம்மாவை செக் பண்ண தான் போறியா? இல்ல வேற எதுவும்…” என்று கிண்டலாக கேட்டாள்.

“ஹே! வேற என்ன டி இருக்கு அங்க. அவங்க அம்மா என்கிட்டே ரொம்ப நல்லா பேசினாங்க. அதுவும் இல்லாம உன்னோட அத்தை வேற.. அந்த கன்செர்ன்ல கேட்டேன்” என்றவன் “சொல்லையின்னா விடு ” என்று அவன் எழப்போக..

“டேய் இரு டா.. சொல்றேன். உடனே கோபம் வந்திருமே உனக்கு” என்று வஜ்ரனின் கையை பிடித்து மீண்டும் அவள் அருகில் அமர வைத்தவள் “சாப்பிட்டு முடிச்சிட்டு உனக்கு அவங்க டிரெஸ்ஸை வாட்ஸாப்ப் பண்றேன்”என்றாள்.

“வஜ்ரா! அப்பா, அம்மா எல்லாம் எப்போ இந்தியா வராங்க , இல்ல ஆல்ரெடி வந்துட்டாங்களா?” என்றார் ஆறுமுகம்.

“அவங்க வந்தாச்சு அங்கிள் . நேத்து நைட் தான் வந்தாங்க” என்றான்.

“ஓகே ப்பா , நான் பிரீயா இருக்கும்போது வீட்டுக்கு வரேன்” என்று எழுந்து கைகழுவ சென்றார்.

தேன்மொழியும் கிச்சனுக்குள் சென்றுவிட.. இப்பொது டைனிங் டேபிளில் வஜ்ரனும், நிலாவும் தான் அமர்ந்து இருந்தார்கள்.

ஹாலில் டிவியை பார்ப்பது போல அமர்ந்து இருந்த வளவன் இவர்கள் இருவர் மட்டும் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு “பேசாம நான் அங்கையே இருந்திருக்கலாம், இப்போ பாரு அந்த ஜொள்ளு பயன் நிலாகிட்டே சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கான்” என்று பொறாமைத் தீயில் வெந்து கொண்டு இருந்தான்.

“ஹேய்! நிலா இங்க வாயேன்” என்று அவளை தன் பக்கம் அழைத்தான் வஜ்ரன்.

நிலாவோ “என்ன டா” என்று சாப்பிட்டுக்கொண்டே  அவன் பக்கம் லேசாக சாய்ந்தாள்.

“உன் புருஷங்கிட்டே க்ளோஸ்ஸா தான் இருக்கியா? இல்ல பழைய லைப் பத்தி யோசிச்சிட்டு அவர்கிட்டே இருந்து விலகி இருக்கியா? ” என்றான்.

“அதெல்லாம் இல்ல டா வஜ்ரா, அப்போ நான் அவனை வேணாம்னு சொல்லிட்டு வந்தேனோ அதோட அவன் சேப்டர் முடிஞ்சிருச்சு, அவனை விட்டு வந்தும் அவனால நான் பட்ட கஷ்டம் எல்லாம் மறக்க எனக்கு கொஞ்சம் டைம் எடுத்தது உண்மைதான் . பேட் ஐயம் கம்ப்ப்ளீட்ல்லி பைன் நொவ். ஆனா…” என்று நிலாவினி நிறுத்த..

“என்ன டி ஆனா” என்றான்.

“இல்ல டா என் அப்பா பண்ணின வேலையால அவர் கொஞ்சம் அப்செட்டா இருக்கார். அதனால அவர் என்கிட்டே இருந்து தள்ளியே இருக்கார் டா” என்றாள் சற்று வருத்தமாக.

“என்ன டி சொல்ற! அங்கிள் என்ன பண்ணினார். நான் வேணா உன் ஹஸ்பண்ட் கிட்டே எதுவும் பேசட்டுமா?” என்றான் வஜ்ரன்.

“ஐயோ! நீ கொஞ்சம் சும்மா இருக்கியா. அவருக்கு நான் உன்கூட ஜோவியலா பேசுறதே பிடிக்கல. இதுல நான் உன்கிட்டே சொன்னதை நீ மட்டும் போய் அவர்ட்ட கேட்டேன்னு வை அப்பறோம் அவ்ளோ தான்” என்றாள்.

“ஏன் டி , இதுல என்ன இருக்கு?” என்றான்.

“தெரியல டா, உன்கூட ஹாண்ட்ஷேக் பண்ணினத்துக்கே அவர் டென்ஷன் ஆகிட்டார். இதுல நீ வந்ததுல இருந்து என்கிட்டேயே பேசிட்டு இருக்க , இனி இதுக்கு என்ன சொல்லப்போறாரோ தெரியல” என்றவள் அப்படியே தலையை நிமிர்த்தி ஹாலில் இருந்த வளவனை பார்த்தாள்.

அவனோ “என்ன ரெண்டு பேரும் ரொம்ப நேரமா ரகசியம் பேசிக்குறாங்க” என்று இருவரையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

நிலா சொன்னதைக் கேட்டு வஜ்ரனும் திரும்பி வளவனை பார்க்க..

இருவரும் தன்னை தான் பார்க்கிறார்கள் என்றதுமே சட்டென திரும்பி டிவியின் கவனம் செலுத்தியது போல பாசாங்கு செய்தான் வளவன்.

“ஏய் நாம ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் டி, நீ உன் புருஷங்கிட்டே அதை சொன்னியா?” என்று வளவனை பார்த்த பிறகு புரிந்து கொண்டு கேட்டான் வஜ்ரன்.

“ஹே என்கிட்டேயே அவர் ஒன்னு ரெண்டு வார்த்தை தான் பேசறார். என்னை கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நிலான்னு கூப்பிடமா மேடம்னு தான் சொல்லிட்டு இருந்தார். நான் தான் திரும்ப திரும்ப இன்சிஸ்ட பண்ணி என்னை பேர் சொல்லி கூப்பிட வெச்சேன். இதுல எங்கிருந்து நம்ம பிரென்ஷிப் பத்தி அவர்கிட்டே நான் பேசுறது, அவருக்கு என்னை பிடிக்கலையின்னு நினைக்குறேன்” என்று சோகமாக பேசினாள் நிலா.

“இங்க பாரு உன் புருஷனுக்கு உன்னை பிடிச்சிருக்கு ” என்றான் வஜ்ரன்.

“எப்படி டா சொல்ற!” என்று ஆச்சர்யமாக கேட்டாள் நிலா.

“நான் உன்கூட பேசுறது அவருக்கு பிடிக்கலையின்னா என்ன அர்த்தம் , அவருக்கு உன் மேல லவ் இருக்குன்னு தான் அர்த்தம் ” என்றான்.

“ஹே! அதெல்லாம் இல்ல டா.. அவருக்கு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி இருக்குன்னு நினைக்கிறேன். ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்குறது இல்ல. நீ சொல்றது எல்லாம் வாய்ப்பே இல்ல” என்றாள் சலிப்பாக.

“ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. அவருக்கு முழுக்க முழுக்க நாம பேசுறது பிடிக்கலையினா அது பொறாமை . அவருக்கு பிடிச்ச பொண்ணோட நான் ஜாலியா,, க்ளோசா பேசுறேன்னு பொறாமை” என்றான் வஜ்ரான்.

நிலா உண்மையா என்ற ரீதியில் வளவனைப் பார்க்க..

“இப்போ நான் சொல்லும்போது நீ புரை ஏறுற மாதிரி நடிக்குற.. அப்பறோம் நான் சொன்னதுக்கு அப்பறோம் உன் புருஷனை பாரு , அவர் எனக்கு என்னனு அங்கே டிவியை பாத்து உக்காந்திட்டு இருந்தா, நீ சொல்றது போல அவருக்கு உன்னை பிடிக்கலையினு சொல்லலாம். ஆனா அபப்டி செய்யாம அவர் வேகமா இங்க எழுந்து வந்து உனக்கு தண்ணி எதுவும் ஊத்தி கொடுத்தா நான் சொன்னது தான் நடக்கும்” என்றான்.

“டேய் போடா.. இது என்ன சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடிட்டு, ம்ஹும்.. முடியாது” என்றாள்.

“நான் சொல்றதை முதல்ல செய் டி” என்று அவளை அதட்டினான்.

“சரி இரு திட்டாத” என்று ஓரக்கண்ணால் வளவனை ஏறிட்டாள். அவனும் அவர்கள் அறியா வண்ணம் அவர்களை தான் நோட்டம்விட்டுக் கொண்டிருந்தான்.

நிலா தட்டில் இருந்த உணவை எடுத்து வாயில் போட்டுவிட்டு புரை ஏறியது போல பாவனை செய்து இரும ஆரம்பித்தாள்.

“ஹே! நிலா! பாத்து சாப்பிடு” என்று வஜ்ரன் அவள் தலையை தட்டிவிட்டு தண்ணீரை எடுத்து அவளுக்கு கொடுக்க..

“டேய் அவர் தானே தண்ணி எடுத்து கொடுக்க வருவாருன்னு சொன்ன. நீ எதுக்கு இப்போ தண்ணி கொடுக்கிற.. ” என்று இருமுவது போல நடித்துக்கொண்டே கேட்டாள் .

“அவர் உள்ளே இருக்க பொறாமையை தூண்டி விட்டா தான் உன்மேல அவருக்கு இருக்க லவ் எவ்ளோனு தெரிஞ்சுக்க முடியும்” என்றவன் தண்ணீர் கிளாஸை எடுத்து அவள் வாய் அருகே கொண்டு செல்லப்போனான் வஜ்ரன்.

அப்போது “நிலா சாப்பிடும்போது என்ன பேச்சு, பாரு இப்போ” என்று அக்கறையாக கேட்டுக்கொண்டே தண்ணீர் கிளாஸை அவள் வாயில் வைத்து குடிக்க வைத்தான் வளவன். ஒரு கை  அவள் தலையை தடவிக்கொண்டே , மற்றொரு கையில் அவளுக்கு தண்ணீர் கொடுக்க..

அவளோ அதிர்ந்து வளவனின் இந்த செயலைப் பார்த்தவள் அப்படியே விழிகளை மட்டும் உருட்டி வஜ்ரனை பார்த்தாள் .

அவனோ தன் விரலில் ஒட்டி இருந்த உணவை வாயில் வைத்து ரசித்துக்கொண்டே நிலாவை பார்த்து எப்படி என்ற ரீதியில் கேட்டுவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட..

அவள் தண்ணீரை குடித்துவிட்டு போதும் என்று சொன்ன பிறகு அவளை பார்த்த வளவன் “இப்போ ஓகேவா?” என்றான்.

அவளும் ம்ம் என்று தலையை ஆட்ட..

“மீட்டிங் டைம் ஆச்சு போலாமா? இல்ல இன்னொரு நாள் போஸ்ட்போன்ட் பண்ணிரட்டுமா?” என்றான்.

“எதுக்கு போஸ்ட்போன்ட்?” என்றாள்.

“உனக்கு ஓகேன்னா போலாம் இல்ல, வீட்ல ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றான்.

“சாதாரணமா புரை ஏறினதுக்கு ஆபீஸ் போக வேணாம்னு சொல்றாரா? ” என்று நினைத்தவள் “ஐயம் ஆல்ரைட் ” என்றவள் எழுந்து கை கழுவ செல்ல..

அங்கே வந்த வஜ்ரன் “வளவன் பொண்டாட்டி மேல ரொம்ப அக்கறை போல.. கிட்ட இருந்து நான் தண்ணி கொடுக்கிறதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்றான்.

வளவன் பதில் ஏதும் பேசவில்லை, மாறாக அவனை முறைத்துவிட்டு வெளியே செல்ல..

“ஐயோ! ஆளு பாக்க  தான் டி அமைதி, ஆனா முறைச்சு தள்ளியே என்னை ஒரு வழி ஆக்கிருவார் போல” என்று சிரித்தவன் “நீ ஆட்ட்ர்ஸ் சென்ட் பண்ணிரு  நான் கிளம்புறேன்” என்று கிளம்பினான்.

நிலாவும் தன் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு “அம்மா கிளம்பறேன்” என்று ஆபிஸிற்கு வளவனுடன் கிளம்பி இருந்தாள்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured